Tnpsc

10th & 11th October 2020 Current Affairs in Tamil & English

10th & 11th October 2020 Current Affairs in Tamil & English

10th & 11th October 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

10th & 11th October 2020 Tnpsc Current Affairs in Tamil

10th & 11th October 2020 Tnpsc Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. ‘ஆபரேஷன் மை சகேலி’யைத் தொடங்கிய அமைப்பு எது?

அ. DRDO

ஆ. இந்திய இரயில்வே

இ. ISRO

ஈ. இந்திய இராணுவம்

 • தென்கிழக்கு இரயில்வே அமைப்பால், ‘ஆபரேஷன் மை சகேலி’ என்றவொன்று தொடங்கப்பட்டுள்ளது. ஏறுமிடத்திலிருந்து இறங்குமிடம் வரை பெண் பயணிகளின் பாதுகாப்பை அதிகரிப்பதை இத்திட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு சோதனைத் திட்டமாக, ஹெளரா – யெஷ்வந்த்பூர் துரந்தோ சிறப்பு இரயில், ஹெளரா – அகமதாபாத் சிறப்பு இரயில் மற்றும் ஹெளரா – மும்பை சிறப்பு இரயிலில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

2.2020 அக்டோபர்.1 அன்று, எந்த ஆப்பிரிக்க நாடு தனது 60ஆவது விடுதலை நாளைக் கொண்டாடியது?

அ. தென்னாப்பிரிக்கா

ஆ. நைஜீரியா

இ. எகிப்து

ஈ. ஜிம்பாப்வே

 • நைஜீரியா தனது 60ஆவது விடுதலை நாளை 2020 அக்.1 அன்று கொண்டாடியது. 1960 அக்.1 அன்று, நைஜீரியா, ஏகாதிபத்திய பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது. அப்போது, 2ஆம் எலிசபத் பேரரசியின் பிரதிநிதி, நைஜீரியாவின் அரசியலமைப்பை அந்நாட்டின் புதிய பிரதமரான அபுபக்கர் தபவா பலேவாவி -டம் ஒப்படைத்தார். அதன்பின் மூன்றாண்டுகளுக்குப்பின், நைஜீரியா ஒரு குடியரசு நாடாக மாறியது.

3. 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்குவதற்காக, பாதுகாப்பு அமைச்சகம், எந்த நிறுவனத்துடனான `400 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?

அ. பொருளாதார வெடிபொருட்கள் நிறுவனம்

ஆ. இராணுவ தளவாட தொழிற்சாலை வாரியம்

இ. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட்

ஈ. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிட்

 • பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் பிரிவு, பத்து இலட்சம் பல்முனை கையெறி குண்டுகளுக்காக நாக்பூரைச் சார்ந்த எக்கனாமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் நிறுவனத்துடனான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (DRDO) / டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தால் இந்தக் கையெறி குண்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முன்னர், இதேபோன்ற தயாரிப்புகளை, ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியமானது இறக்குமதியோ அல்லது தயாரிக்கவோ செய்துகொண்டிருந்தன.

4.காந்தி ஜெயந்தியை நினைவுகூரும் வகையில், திரைப்படப்பிரிவு ஏற்பாடு செய்திருந்த இணையவழி திரைப்படத் திருவிழாவின் பெயர் என்ன?

அ. காந்தி பிலிமோற்சவம்

ஆ. தேசத்தந்தை உற்சவம்

இ. மகாத்மா விழா

ஈ. மகாத்மா பற்றி அறிக

 • மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டு விழாவின் இரண்மாண்டு கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்வின் ஒருபகுதியாக திரைப்படப்பிரிவு, “காந்தி பிலிமோற்சவம்” என்றவொரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. ஒருவாரகாலம் நீண்ட இவ்விணையவழி திரைப்பட விழா, திரைப்படப்பிரிவின் வலைத் தளத்திலும் அதன் யூடியூப் அலைவரிசையிலும் ஒளிபரப்பப்பட்டது. மகாத்மா காந்தியின் பிறந்தநாள் அக்.2 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளும் அதேநாளில் கொண்டாடப்படுகிறது.

5.மூன்றாம் தலைமுறையைச் சார்ந்த எந்த முதன்மை போர் பீரங்கியிலிருந்து, DRDO, பீரங்கி எதிர்ப்பு கட்டளை ஏவுகணையை (anti-tank guided missile) பரிசோதனை செய்தது?

அ. அர்ஜுன்

ஆ. விராத்

இ. கட்டபொம்மன்

ஈ. கருட்

 • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது (DRDO) உள்நாட்டில் உருவாக்கப்பட்ட லேசர் பொருத்தப்பட்ட பீரங்கி எதிர்ப்பு கட்டளை ஏவுகணையை (ATGM) வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணை, மகாராட்டிர மாநிலத்தின் அகமதுநகரிலிருந்து மூன்றாம் தலைமுறையைச் சார்ந்த, ‘அர்ஜூன்’ என்ற முதன்மை போர் பீரங்கியிலிருந்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ATGM, பல் வேறு தளங்களிலிருந்து ஏவுவதற்கான திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

6. 2020 அக்டோபரில் நடத்தப்பட்ட, இந்தியா மற்றும் அயல்நாட்டில் வாழும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்ற உலகளாவிய மெய்நிகர் உச்சிமாநாட்டின் பெயர் என்ன?

அ. வைபவ்

ஆ. அஸ்பையர்

இ. அக்யூமென்

ஈ. ஸ்பார்க்

 • அக்.2 அன்று பிரதமர் நரேந்திர மோடி, Vaishwik Bharatiya Vaigyanik (VAIBHAV) உச்சிமாநாட்டைத் தொடங்கிவைத்தார். இவ்வுச்சிமாநாடு, இந்தியா மற்றும் அயல்நாட்டில் வாழும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான பன்னாட்டு மெய்நிகர் மாநாடாகும். இது, அக்டோபர் 2 முதல் 31 வரை நடத்தப்படவுள்ளது. இந்த உச்சிமாநாடு அறிவியல் மற்றும் தொழினுட்பம் தொடர்பான விவாதங்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கித்தருகிறது.

7.கம்போடியாவுக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அதிகாரி யார்?

அ. தேவயானி உத்தம் கோப்ரகடே

ஆ. தரஞ்சித் சிங் சந்து

இ. ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்களா

ஈ. நவ்தேஜ் சர்னா

 • கம்போடியாவுக்கான இந்தியாவின் அடுத்த தூதராக இந்திய வெளியுறவு சேவை அதிகாரி தேவயானி உத்தம் கோப்ரகடே நியமிக்கப்பட்டுள்ளார். இதை வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. 1999’ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான செல்வி. தேவயானி உத்தம் கோப்ரகடே, தற்போது வெளியுறவு அமைச்சகத்தின் இணைச்செயலாளராக பணியாற்றி வருகிறார். அவர் பெர்லின், இசுலா -மாபாத், ரோம் மற்றும் நியூயார்க்கில் உள்ள இந்தியத்தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.

8. COVID-19 சிகிச்சைக்காக, மிகவும் தூய்மைப்படுத்தப்பட்ட ‘ஆன்டிசீரா’வை உருவாக்கியுள்ள அமைப்பு எது?

அ. ICMR

ஆ. AIIMS

இ. JIPMER

ஈ. CSIR

 • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது (ICMR) COVID-19 தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக மிகவும் தூய்மைப்படுத்தப்பட்ட ‘ஆன்டிசீரா’வை உருவாக்கியுள்ளது. ICMR மற்றும் ஹைதராபாத்தைச் சார்ந்த பயோலாஜிக்கல் E. லிட் ஆகியவை COVID-19 சிகிச்சை மற்றும் நோய்த்தடுப்புக்காக விலங்குகளிடம் இருந்து பெறப்பட்ட மிகவும் தூய்மைப்படுத்தப்பட்ட எதிர்-ஊனீரை உருவாக்கியுள்ளன. இது, முன்னர், பல்வேறு வைரஸ் & பாக்டீரியா தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவ அறிவியலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

9.சுவச் சுந்தர் சமுதாயிக் செளச்சாலயா பரப்புரையில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. குஜராத்

இ. மகாராஷ்டிரா

ஈ. உத்தர பிரதேசம்

 • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சுவச் பாரத் திவாஸ் – 2020 கொண்டாடப்பட்டது; இதில், சுவச் பாரத் விருதுகள் வழங்கும் நிகழ்வும் அடங்கும். 2019 நவ.1 முதல் 2020 ஏப்ரல்.30 வரை ஏற்பாடு செய்யப்பட்ட சுவச் சுந்தர் சமுதாயிக் செளச்சாலயா பரப்புரையில், குஜராத் மாநிலத்திற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் திருநெல்வேலிக்கு, ‘சிறந்த மாவட்ட விருது’ கிடைத்துள்ளது.

10. “Time Use Survey in India” என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?

அ. பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை

ஆ. தேசிய புள்ளியியல் அலுவலகம்

இ. பிரதம்

ஈ. ஐநா வளர்ச்சித் திட்டம்

 • தேசிய புள்ளியியல் அலுவலகமானது (NSO) 2019 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், “இந்தியாவில் நேரப்பயன்பாட்டு ஆய்வை” நடத்தியது. இந்த ஆய்வின் முடிவு, சமீபத்தில், ஓர் அறிக்கை வடிவில் வெளியிடப்பட்டது. ஊதியம் பெற்ற செயல்பாடுகள், பராமரிப்பு செயல்பாடுகள், ஊதியம் பெறாத செயல்பாடுகள் போன்றவற்றுக்காக செலவிடப்பட்ட நேரத்தை இந்த ஆய்வு அளவிடுகிறது. நகர்ப்புற மற்றும் ஊரகங்களில் உள்ள 1,38,799 வீடுகளை உள்ளடக்கிய இந்த ஆய்வை NSO நடத்தியது.

1. “Operation My Saheli” has been launched by which organization?

[A] DRDO

[B] Indian Railways

[C] ISRO

[D] Indian Army

 • “Operation My Saheli” has been launched by the South Eastern Railway, to boost the safety of women passengers during their entire train journey.
 • The operation protects women from originating point to destination. In a pilot mode, the operation has been introduced in three trains namely trains Howrah–Yeshvantpur Duronto Special, Howrah– Ahmedabad Special and Howrah–Mumbai special trains.

2. Which African Nation is celebrating its 60th Independence Day on Oct 1, 2020?

[A]South Africa

[B] Nigeria

[C] Egypt

[D] Zimbabwe

 • Nigeria is celebrating its 60th Independence Day on Oct 1, 2020. Nigeria gained independence from the imperial Britain on October 1, 1960 and a representative of Queen Elizabeth II handed over Nigeria’s constitution to the country’s new Prime Minister – Abubakar Tafawa Balewa. The African country became a republic three years later.

3. Defence Ministry has signed a Rs 400 crore–contract with which company, for supplying ten lakh hand grenades?

[A] Economic Explosive Limited

[B] Ordnance Factory Board

[C] Hindustan Aeronautical Ltd

[D] Bharat Electronics Ltd

 • The Defence ministry has signed a Rs 400 crore–contract with Economic Explosive Limited (EEL), for the supply of ten lakh hand grenades. Earlier, similar products were either imported or made by the Ordnance Factory Board (OFB). The new grenades called multi–mode hand grenades (MMHG), have been designed by the Terminal Ballistics Research Laboratory of DRDO.

4. What is the name of the Online film festival organised by Films Division, to commemorate Gandhi Jayanti?

[A] Gandhi Filmotsav

[B] Father of Nation Utsav

[C] Mahatma Festival

[D] Learn about Mahatma

 • The Films Division has organized ‘Gandhi Filmotsav’, as a part of the final event of two years celebration of Mahatma Gandhi’s 150th Birth Anniversary. The week–long online film festival was streamed on its Website and YouTube Channel. The birth anniversary of Mahatma Gandhi is celebrated on October 2 across the world. The birth anniversary of former Prime Minister Lal Bahadur Shastri is also celebrated on the same day.

5. What is the name of the 3rd generation main battle tank, from which the anti–tank guided missile was test fired by DRDO?

[A] Arjun

[B] Virat

[C] Kattabomman

[D] Garud

 • The Defence Research and Development Organisation (DRDO) has successfully test fired an indigenously developed laser–guided anti–tank guided missile (ATGM). The missile was test fired from the third–generation main battle tank, Arjun from a range at Ahmednagar, Maharashtra. The ATGM has been developed with a capability to launch from multiple platforms.

6. What is the name of the global virtual summit of overseas and resident Indian Researchers to be conducted in October 2020?

[A] VAIBHAV

[B] ASPIRE

[C] ACCUMEN

[D] SPARK

 • The Prime Minister Narendra Modi inaugurated Vaishwik Bharatiya Vaigyanik (VAIBHAV) Summit on October 2. The summit is a global virtual summit of overseas and resident Indian Researchers and Academicians. It is to be organised from October 2 to October 31. The summit creates a single platform for Science and Technology (S&T) related discussions.

7. Which Indian bureaucrat has been appointed as India’s next ambassador to Cambodia?

[A] Devyani Uttam Khobragade

[B] Taranjit Singh Sandhu

[C] Harsh Vardhan Shringla

[D] Navtej Sarna

 • Indian Foreign Service officer Devyani Uttam Khobragade has been appointed as India’s next ambassador to Cambodia. This has been announced by the Ministry of External Affairs. Ms Khobragade is a 1999–batch Indian Foreign Service officer, currently serving as a joint secretary in the External Affairs Ministry. She has served in Indian missions in Berlin, Islamabad, Rome and New York.

8. Which organisation has developed highly purified ‘Antisera’, for COVID–19 treatment?

[A] ICMR

[B] AIIMS

[C] JIPMER

[D] CSIR

 • The Indian Council of Medical Research (ICMR) has developed highly purified ‘Antisera’ for prevention and treatment of COVID–19. ICMR along with Hyderabad–based Biological E. Limited have developed highly purified antisera, which was raised in animals, for prophylaxis and treatment of COVID–19. This was previously used in medical science to treat many viral and bacterial infections.

9. Which state has topped in the Swachh Sundar Samudayik Shauchalaya (SSSS) campaign?

[A] Tamil Nadu

[B] Gujarat

[C] Maharashtra

[D] Uttar Pradesh

 • On the occasion of Gandhi Jayanti, the Swachh Bharat Diwas 2020 was celebrated which included the distribution of Swachh Bharat Puraskar. In the Swachh Sundar Samudayik Shauchalaya (SSSS) campaign organized from 1st Nov 2019 to 30th April 2020, Gujarat state has been conferred with the first prize. Tirunelveli (Tamil Nadu) won the best district award.

10. Which institution has released the “Time Use Survey in India” report?

[A] Bill and Melinda Gates Foundation

[B] National Statistical Office

[C] Pratham

[D] UNDP

 • The National Statistical Office (NSO) conducted the first of its kind “Time Use Survey in India” during the period from January to December 2019. The result of the survey has been released recently in the form of a report. The survey measures the time spent on paid activities, care activities, unpaid activities, etc. NSO conducted the survey covering 1,38,799 households in both urban and rural areas.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!