Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

10th & 11th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

10th & 11th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 10th & 11th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற கர்பி அமைதி ஒப்பந்தத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ) ஹரியானா

ஆ) அஸ்ஸாம் 

இ) மேகாலயா

ஈ) மிசோரம்

  • நடுவணரசு, அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் கர்பி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு இடையேயான “கர்பி அமைதி ஒப்பந்தத்தில்” இந்திய அரசு கையெழுத்திடவுள்ளது. வடகிழக்கு இந்தியாவில், குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள முக்கிய இனங்களில் கர்பிகள் ஒன்றாகும்.
  • அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 1980’களிலிருந்து கர்பிகள் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் வரலாறு உள்ளது. சமீபத்தில், இக்குழுவின் 5 கிளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த 1040 பயங்கரவாதிகள் கௌத்தியில் நடந்த ஒரு நிகழ்வில் ஆயுதங்களுடன் சரணடைந்தனர்.

2. ‘வதன் பிரேம் யோஜனா’வை தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) குஜராத் 

இ) ஹரியானா

ஈ) பஞ்சாப்

  • குஜராத் மாநில அரசு ‘வதன் பிரேம் யோஜனா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்கீழ் தங்கள் சொந்த கிராமத்தின் வளர்ச்சி -க்கு நன்கொடை அளிக்க விழையும் NRI குஜராத்திகளுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்கும். இந்தத்திட்டத்தின்கீழ், கிராமப்புறங்களில் பள்ளிகள், வடிகால், விளையாட்டு வளாகம்போன்ற சமூக உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நன்கொடைகளை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.

3. ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமையை வகிக்கின்ற நாடு எது?

அ) பெல்ஜியம்

ஆ) ஸ்லோவேனியா 

இ) செக் குடியரசு

ஈ) டென்மார்க்

  • ஸ்லோவேனியா தற்போது ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமை பொறுப்பை வகித்துவருகிறது. வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், ஸ்லோவேனிய அதிபர் போரட் பாஹோரை சந்தித்து இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதித்தார்.
  • ஸ்லோவேனியா, குரோஷியா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்குச் சென்று இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியாவின் ஒத்துழைப்பை அவர் வலுப்படுத்த உள்ளார். ஸ்லோவேனியாவில் நடக்கும் ‘Bled Strategic’ கூட்டத்திலும் ஜெய்சங்கர் கலந்துகொள்வார்.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “eNaira” என்ற டிஜிட்டல் நாணயத்துடன் தொடர்புடைய நாடு எது?

அ) நைஜீரியா 

ஆ) சூடான்

இ) நமீபியா

ஈ) எகிப்து

  • நைஜீரியாவின் மத்திய வங்கி “eNaira” என்ற பெயரில் தனது சொந்த டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்தது. மத்திய வங்கி அதன்சொந்த கிரிப்டோகரன்சியை வெளியிட ‘பிட் இங்க்’ஐ தொழினுட்பப்பங்காளியாக கொண்டிருக்கும். eNaira ஒரு பணப்பையாக செயல்படும்; அதில் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் உள்ள நிதியை வைத்திருக்க முடியும்.

5. கஜகஸ்தானில் நடைபெறும் இந்தியா – கஜகஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சியின் பெயர் என்ன?

அ) இந்திரதனுஷ்-V

ஆ) KAZIND-21 

இ) யுத் அபியாஸ்

ஈ) சம்பிரிதி IX

  • KAZIND-21 என்பது இந்தியா-கஜகஸ்தான் கூட்டு இராணுவப்பயிற்சி ஆகும். இது கஜகஸ்தானில் நடக்கிறது. இந்த ஆண்டு நடைபெறுவது KAZIND’இன் 5ஆம் ஆண்டு இருதரப்பு கூட்டுப் பயிற்சியாகும். இந்தியா சார்பாக 90 படைவீரர்களும் கஜகஸ்தான் சார்பாக 120 துருப்புக்களும் பங்கேற்கின்றன. இப்பயிற்சி, 48 மணிநேர கூட்டு சரிபார்ப்பு பயிற்சியை உள்ளடக்கியது.

6. செப்டம்பர்.17’ஐ சமூக நீதி நாளாகக் கொண்டாட முடிவுசெய்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு 

ஆ) மேற்கு வங்கம்

இ) கர்நாடகா

ஈ) கேரளா

  • சீர்திருத்தவாதி ஈ வெ ராமசாமி பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர்.17 அன்று சமூக நீதி நாளாகக் கொண்டாட தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. பெரியார் (1879 செப்.17 – 1973 டிச.24), முதல் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை (பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டைப் பாதுகாத்தது) இயற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

7. அண்மையில், ஆன்லைன் சூதாட்டம் அல்லது பந்தயத்தை தடை செய்ய முடிவுசெய்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ) மகாராஷ்டிரா

ஆ) கோவா

இ) கர்நாடகா 

ஈ) சிக்கிம்

  • கர்நாடக மாநில அரசு ஆன்லைன் சூதாட்டம் அல்லது பந்தயத்தை தடை செய்ய முடிவுசெய்துள்ளது. மேலும் கர்நாடக காவலர் சட்டம், 1963’ஐ திருத்துவதும் இதிலடங்கும். சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் J C மதுஸ்வாமி குறிப்பிட்டுள்ளபடி குதிரைப் பந்தயங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது. கர்நாடக உயர்நீதிமன்றம் ஆன்லைன் பந்தயம் குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுக்குமாறு அம்மாநில அரசை பலமுறை கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

8. நிரந்தர வதிவிட சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே “குடியுரிமைச்சான்றிதழ்” வழங்க முடிவுசெய்துள்ள மாநில/யூனியன் பிரதேசம் எது?

அ) ஜம்மு காஷ்மீர்

ஆ) லடாக் 

இ) சிக்கிம்

ஈ) தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி

  • 2021 செப்டம்பர்.4 அன்று நிறைவேற்றப்பட்ட லடாக் குடியுரிமைச்சான்று ஆணை-2021’இன்படி, லடாக் நிர்வாகமானது ஜ & கா போலல்லாமல் அப்பகுதியில் நிரந்தர வதிவிட சான்றிதழ் வைத்திருப்போர்க்கு மட்டுமே “குடியிருப்புச்சான்று” வழங்க முடிவுசெய்துள்ளது. இப்புதிய குடியுரிமைச் சட்டங்கள் அயல்மாநிலத்தவர்களும் அங்கு வேலைக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்குகிறது.

9. யாருக்கு 7ஆவது யாமின் ஹசாரிகா வுமன் ஆப் சப்ஸ்டேன்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது?

அ) சுதா மூர்த்தி

ஆ) அருந்ததி ராய்

இ) கிரண் தேசாய்

ஈ) நமீதா கோகலே 

  • எழுத்தாளர் நமிதா கோகலேவுக்கு 7ஆவது யாமின் ஹசாரிகா வுமன் ஆப் சப்ஸ்டேன்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. பெண் தொழில் வல்லுநர் -களின் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது, 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1977’இல் தில்லி மற்றும் யூனியன் பிரதேசங்களை நிர்வகித்த மத்திய காவல் சேவையான DANIPS’க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வடகிழக்கு இந்தியாவின் முதல் பெண் யாமின் ஹசாரிகாவை இவ்விருது கௌரவித்துள்ளது.

10. பெஹ்லர் ஆமை பாதுகாப்பு விருது யாருக்கு வழங்கப்பட்டது?

அ) ஜோசப் L கோல்ட்ஸ்டீன்

ஆ) ஷைலேந்திர சிங் 

இ) ரிச்சர்ட் டாக்கின்ஸ்

ஈ) பிரியம்பதா மொஹந்தி ஹெஜ்மாடி

  • அழிவின் விளிம்பில் உள்ள 3 ஆமை இனங்களை மீட்டதற்காக இந்திய உயிரியலாளர் ஷைலேந்திர சிங், ‘பெஹ்லர் ஆமை பாதுகாப்பு’ விருது வழங்கப்பட்டது. ஆமை உயிர்வாழ் கூட்டணி, IUCN/SSC ஆமை மற்றும் நன்னீர் ஆமை நிபுணர் குழு, ஆமை பாதுகாப்பு நிதியம்போன்ற ஆமை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பல உலகளாவிய அமைப்புகளால் இந்த விருது வழங்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர் என் ரவி நியமனம்

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர் என் இரவியை நியமனம் செய்து குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநிலத்தின் முழு நேர ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, நாகாலாந்து ஆளுநராகப் பொறுப்பு வகித்து வரும் ஆர் என் இரவி, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரகண்ட் ஆளுநராக இருந்த பேபி இராணி மயூராவின் ராஜிநாமா கடிதத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து உத்தரகண்ட் ஆளுநராக லெப்டினெண்ட் ஜெனரல் குர்மித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஆர் என் ரவி வகித்துவந்த நாகாலாந் -து ஆளுநர் பொறுப்பினை அஸ்ஸாம் மாநில ஆளுநர் ஜெக்தீஷ் முகி கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2. தமிழ்ப்பண்பாட்டின் வேர்களைத் தேட இந்தியா – வெளிநாடுகளில் ஆய்வுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவதற்கான ஆய்வுகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்திய துணைக் கண்டத்திலும், கடல் கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித்தடம் பதித்த வெளிநாடுகளிலும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தென் மாநிலங்கள்: முதல் கட்டமாக, சங்ககாலத் துறைமுகமான முசிறி, இப்போது பட்டணம் என்ற பெயரில் கேரளத்தில் அமைந்துள்ளது. சேர நாட்டின் தொன்மையையும், பண்பாட்டையும் அறிந்து கொள்ளும் வகையில் கேரள மாநிலத் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து அங்கு ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும். ஆந்திர மாநிலம் வேங்கி, கர்நாடக மாநிலம் தலைக்காடு, ஒடிஸா மாநிலம் பாலூர் ஆகிய வரலாற்றுச் சிறப்புடைய இடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ள உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ரோமப் பேரரசின் ஒருபகுதியாக விளங்கிய எகிப்து நாட்டிலுள்ள குசிர் அல் காதிம் மற்றும் பெர்னிகா, ஓமன் நாட்டின் கோர் ரோரி ஆகிய இடங்களில் பழந்தமிழகத்தோடு இருந்த வணிகத் தொடர்பை உறுதி செய்யும் வகையில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அந்தப் பகுதிகளில் அந்தந்த நாட்டின் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தென்கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, வியத்நாம் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அந்தந்த நாட்டுத் தொல்லியல் வல்லுநர்கள் துணையுடன் உரிய அனுமதி பெற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ் நிலப்பரப்பு: யாதும் ஊரே யாவரும் கேளிர் என உலகுக்கு அறிவித்த தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி இனி உலகெங்கும் பயணம் செய்வோம். இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப் பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும். இதனை சான்றுகளின் அடிப்படையில், அறிவியல் வழிநின்று நிறுவுவதே அரசின் தலையாய கடமை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

3. பயங்கரவாதத்துக்கு எதிராக செயல் திட்டம்

உலகை அச்சுறுத்தி வரும் பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த பிரிக்ஸ் நாடுகள் உறுதியேற்றுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா, பிரேஸில், ரஷியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அக்கூட்டமைப்பின் 13-ஆவது மாநாடு இந்தியா தலைமையில் காணொலி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த மாநாட்டுக்கு பிரதமா் மோடி தலைமை வகித்தாா்.

சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், பிரேஸில் அதிபா் ஜெயிா் போல்சனேரோ, தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசா ஆகியோா் மாநாட்டில் பங்கேற்றனா். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இடைக்கால அரசை அமைத்துள்ள சூழலில் நடைபெற்ற இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றது.

மாநாட்டின் கரு: ‘15-ஆவது ஆண்டில் பிரிக்ஸ்: நீடித்த நிலையான ஒருமித்த ஒத்துழைப்பு’ என்பதே இந்த மாநாட்டின் கருப்பொருளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

4. தேசிய நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களுக்கு அவசரகால இறங்குதளம்

ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், இந்திய விமானப் படையின் விமானங்கள் தரையிறங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள இறங்குதளம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று இறங்குதளத்தை திறந்து வைத்தனர். பார்மரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை என்எச்-925 முதல் முறையாக, அவசரகால தரையிறக்கத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.

ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் ஆகியோருடன் ஹெர்குலிஸ் சி-130ஜே ரக போர் விமானம், இந்த இறங்குதளத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டு, ஒத்திகை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏ.என்.-32 ராணுவ போக்குவரத்து விமானம், எம்.ஐ.-17வி5 ஹெலிகாப்டர் ஆகியவையும் அந்த இறங்குதளத்தில் தரையிறங்கின.

தமிழகத்திலும்…

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 19 இடங்களில் நெடுஞ்சாலைகளில் போர் விமானங்கள் தரையிறங்குவதற்கு அவசரகால இறங்குதளம் அமைக்கப்படும் என்று அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

5. ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நலன் காக்க தனி ஆணையம்: மசோதாவை தாக்கல் செய்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலன்களைக் காக்க தனி ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையம் என்ற தனி அமைப்பை உருவாக்க மசோதா வழி செய்கிறது. இந்த ஆணையத்தின் தலைவராக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தொடா்பான விஷயங்களில் சிறந்த நிபுணத்துவம் கொண்ட ஓய்வு பெற்ற உயா் நீதிமன்ற நீதிபதி இருப்பாா். ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலனுக்காக பணியாற்றியுள்ள ஒருவா் துணைத் தலைவராகச் செயல்படுவாா்.

ஆதிதிராவிடா் சமுதாயத்தைச் சோ்ந்த மூன்று உறுப்பினா்கள், பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த ஒருவா் மற்றும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் துறையில் சிறந்த நிபுணத்துவம் கொண்ட ஒருவா் என மொத்தம் 5 போ் உறுப்பினா்களாக இருப்பா். மகளிா் ஒருவரும் உறுப்பினராக இருப்பாா். அரசு கூடுதல் செயலாளரின் படிநிலைக்குக் குறையாத ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளில் இருந்து ஒருவா் உறுப்பினா் செயலாளராக செயல்படுவாா். தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா் ஆகியோா் மூன்று ஆண்டுகளுக்கு பொறுப்பில் இருப்பா். தலைவருக்கான வயது வரம்பு 70 ஆண்டுகள் வரையிலும், துணைத் தலைவா், உறுப்பினா்களுக்கான வயது வரம்பு 65 ஆண்டுகள் வரையிலும் இருக்கும்.

ஆணையச் செயல்பாடுகள்: பாதிக்கப்பட்ட ஒருவா் அல்லது அவரின் சாா்பில் நபா் ஒருவரால் அளிக்கப்பட்ட மனுவின் புகாரை ஆணையம் விசாரிக்கும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் அவற்றில் வழங்கப்பட்ட உரிமைகள் மீறப்படுவதை கண்காணிக்கும் பணியில் ஈடுபடும். அரசு ஊழியா் ஒருவரால் உரிமை மீறலைத் தடுப்பதில் கவனக் குறைவு ஏற்பட்டால் அதன்மீதும் நடவடிக்கை எடுக்கும். ஒழுங்குமுறை நடவடிக்கைக்கு பரிந்துரை: அரசு ஊழியா் ஒருவா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலன்களைக் காப்பது தொடா்பான கடமைகளில் கவனக் குறைவாக இருந்தால் அதனை விசாரித்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளைத் தொடங்க அரசுக்குப் பரிந்துரை செய்யும்.

ஆணையத்தின் அதிகாரங்கள்: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல ஆணையத்துக்கு, ஒரு உரிமையியல் நீதிமன்றத்துக்கான அதிகாரங்கள் அனைத்தும் வழங்கப்படும். எவா் ஒருவருக்கும் விசாரணைக்கான அழைப்பாணை விடுத்தல் மற்றும் அவரது வருகையை கட்டாயப்படுத்துதல் மற்றும் அவரை உறுதிமொழியின் பேரில் விசாரணை செய்தல், ஆவணம் எதையும் கண்டறிதல் மற்றும் முன்னிலைப்படுத்துமாறு கோருதல், உறுதிமொழி ஆவணங்களின் பேரில் சான்றினைப் பெறுதல், சாட்சிகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக உரிய உத்தரவுகளை அளித்தல், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா்களை பாதிக்கும் முக்கியமான கொள்கைகள் குறித்து ஆணையத்திடம் அரசு ஆலோசனை செய்யலாம் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. ‘பொருநை – ஆற்றங்கரை நாகரிகம்’ நூல் வெளியீடு

தென்னிந்தியாவின் நாகரிகத் தொட்டில் என அழைக்கப்படும் பொருநை ஆற்றங்கரை பெயரிலான புத்தகம் தமிழக அரசின் தொல்லியல் துறை சாா்பில் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை வைக்கப்பட்டது. தமிழகச் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் 110-ஆவது விதியின் கீழ் தமிழ்ப் பண்பாட்டின் வோ்களைத் தேடி இந்தியாவிலும் கடல் கடந்து அயல்நாடுகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் அறிவித்தாா்.

மேலும், ஆதிச்சநல்லூா், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் கிடைத்த அரிய பொருள்களைக் காட்சிப்படுத்தும் விதமாக திருநெல்வேலியில் நவீன வசதிகளும் பொருநை அருங்காட்சியம் அமைக்கப்படும் என அறிவித்தாா். இந்த பொருநை நதியின் சிறப்பைக் குறிக்கும் வகையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சாா்பில் 76 பக்கங்களைக் கொண்ட பொருநை – ஆற்றங்கரை நாகரிகம் என்ற தலைப்பில் வண்ணப் புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் பேரவையில் வைக்கப்பட்டது.

7. தென் தமிழக பொக்கிஷங்களை காட்சிப்படுத்த நெல்லையில் ரூ.15 கோடியில் நவீன அருங்காட்சியகம்

தென் தமிழகத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட அரிய பொக்கிஷங்களை காட்சிப்படுத்த நெல்லையில் ரூ.15 கோடியில் நவீன அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் வியாழக்கிழமை அவர் படித்தளித்த அறிக்கை:- தமிழ்நாடு தொல்லியல் துறையால் இப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வின் போது ஆதிச்சநல்லூருக்கு அருகே சிவகளைப் பறம்புப் பகுதியில் முதுமக்கள் தாழி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதிலிருந்த நெல்மணிகள் அமெரிக்க நாட்டின் மியாமி நகரத்தில் அமைந்திருக்கும் உலகப் புகழ்பெற்ற பீட்டா பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டன. இதன் ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளன.

கி.மு.1,155-ஆம் ஆண்டு: முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு.1,155 எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தண்பொருநை என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3, 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிசெய்ய முடிகிறது. இதனை அறிவிப்பில் அளவிட முடியாத பெருமிதமும், மனமகிழ்ச்சியும் கொள்கிறேன். பண்டைய தமிழர்களின் செழுமையான பண்பாடு, கடல்வழி வணிகம், நீர் மேலாண்மை, இரும்பு உருக்குதல், அரிய மணிகள் தயாரித்தல், முத்துக் குளித்தல் போன்ற தொழில்நுட்பங்களை உலகம் அறிந்து கொள்ளத் தேவையான சான்றுகளைச் சேகரிக்கும் வகையில், இந்தியாவில் வேறெந்த மாநிலத்தை விடவும் அதிகளவு நிதியாக ரூ.5 கோடி நிகழ் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் போது கிடைத்த அரிய பொருள்களை அழகுறக் காட்சிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலி நகரில் ரூ.15 கோடியில் நவீன வசதிகளுடன் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

கீழடி நாகரிகம்: கீழடியில் தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு அண்மையில் சூரியன், நிலவு மற்றும் வடிவியல் குறியீடுகள் கொண்ட முத்திரைகளுடன் கூடிய வெள்ளிக் காசு கண்டெடுக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த தலைசிறந்த நாணயவியல் அறிஞரும், கொல்கத்தா பல்கலைக்கழகப் பேராசிரியருமான சுஷ்மிதா பாசு மஜூம்தார், வெள்ளிமுத்திரைக் காசானது கி.மு.நான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, கரிம பகுப்பாய்வு முடிவுகளின்படி, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தமிழி எழுத்துகளின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை வலுப்படுத்தும் விதமாக இப்போது பெறப்பட்ட இரண்டு கரிம மாதிரிகளின் பகுப்பாய்வு முடிவுகளிலும் கீழடி நாகரிகம் கி.மு.ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரிய வந்துள்ளது.

கொற்கையிலும் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் இப்போது கருப்பு வண்ணப்பூச்சு பெற்ற கங்கை சமவெளியைச் சேர்ந்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இதன்மூலம், கொற்கைத் துறைமுகமானது, கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பே வெளிநாடுகளுடனும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது என்பது உறுதியாகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

8. தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடம்

2021-ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் சென்னை ஐஐடி ஒட்டுமொத்தப் பிரிவிலும், பொறியியல் பிரிவிலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதில், பல்வேறு பிரிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 10 கல்வி நிறுவனங்கள் (பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள்) முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளன. நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்த தேசிய கல்வி நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு (என்ஐஆர்எஃப்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 2015-ஆம் ஆண்டுமுதல் கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வியாழக்கிழமை காணொலி வழியில் வெளியிட்டார். கல்வித் துறை இணையமைச்சர்கள் அன்னபூர்ணா தேவி, டாக்டர் சுபாஷ் சர்க்கார், டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோரும் பங்கேற்று தரவரிசைப் பட்டியலை வெளியிட்டனர்.

ஒட்டுமொத்தப் பிரிவிலும், பொறியியலிலும் சென்னை ஐஐடி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. பல்கலைக்கழகப் பிரிவிலும், ஆராய்ச்சி நிறுவனப் பிரிவிலும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்) முதலிடம் பெற்றுள்ளது. பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் கோவை அமிர்தா விஷ்வ வித்யா பீடம் மூன்றாவது இடத்தையும், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் 9 -ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. மேலாண்மைப் பிரிவில்ஆமதாபாத் ஐஐஎம் முதலிடத்தில் வந்துள்ளது.

மருத்துவக் கல்லூரிகளில் தில்லி எய்ம்ஸ் முதலிடம்: கல்லூரிகள் பிரிவில் முதல், இரண்டாம் இடங்களை முறையே தில்லியின் மிரண்டா ஹவுஸ், லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி பெற்றுள்ளன. மூன்றாம் இடத்தில் சென்னை லயோலா கல்லூரியும், ஆறாவது, ஏழாவது இடங்கள் முறையே கோவை பிஎஸ்ஜி, ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. மருத்துவக் கல்லூரியில் நான்காவது முறையாக தில்லி எய்ம்ஸ் முதலிடத்தைப் பெற்றது. வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) 3-ஆவது இடம் பெற்றுள்ளது. பல் மருத்துவத்தில் சென்னை சவிதா இன்ஸ்டிடியூட் மருத்துவத் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆராய்ச்சி நிறுவனப் பிரிவில் பெங்களூரு ஐஐஎஸ் முதலிடமும், சென்னை ஐஐடி 2-ஆம் இடமும் பெற்றுள்ளன. மற்ற பிரிவுகளில் மருந்தியலில் தொடர்ந்து நான்காவது முறையாக ஜாமியா ஹம்தார்த்தும், கட்டடவியலில் ஐஐடி ரூர்கி, சட்டப் படிப்பில் தொடர்ந்து நான்காவது முறையாக பெங்களூரு தேசிய சட்டப் பள்ளி ஆகியவை முதலிடத்தில் உள்னன. இந்தத் தரவரிசையில் பல்வேறு பிரிவுகளில் முதல் 10 இடங்களில் தமிழக நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 44 தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தரவரிசைப்பட்டியலில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளன.

9. இந்தியாவில் காா் தயாரிப்பு நிறுத்தம்: ஃபோா்டு அறிவிப்பு

அமெரிக்காவைச் சோ்ந்த ஃபோா்டு நிறுவனம் இந்திய ஆலைகளில் காா் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் ஃபோா்டு நிறுவனத்துக்குச் சொந்தமாக உள்ள இரண்டு ஆலைகளில் காா் உற்பத்தி பணிகள் நிறுத்தப்படவுள்ளன. அதன்படி, சென்னை (தமிழ்நாடு), சனந்த் (குஜராத்) ஆகிய இடங்களில் ரூ.18,750 கோடி (250 கோடி டாலா்) மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இரண்டு ஆலைகளில் தயாரிக்கப்படும் எக்கோஸ்போா்ட், ஃபிகோ, ஆஸ்பயா் உள்ளிட்ட காா்களின் விற்பனை நிறுத்தப்படும். அதற்கு பதிலாக, மஸ்தங் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் காா்களின் விற்பனையை இந்தியாவில் தொடர நிறுவனம் முடிவெடுத்துள்ளது. மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதின் ஒரு பகுதியாகவே இந்த முடிவை ஃபோா்டு எடுத்துள்ளது.

சனந்த் ஆலையில் 2021 நான்காம் காலாண்டிலிருந்தும், சென்னை ஆலையில் 2022 இரண்டாவது காலாண்டிலிருந்தும் காா் தயாரிக்கும் பணிகள் முற்றிலும் கைவிடப்படும். இருப்பினும், சனந்த் ஆலையிலிருந்து என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு நிறுவனத்தின் சா்வதேச செயல்பாடுகளுக்காக ஏற்றுமதி செய்யப்படும் என ஃபோா்டு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 30 ஆண்டுகால செயல்பாட்டைக் கொண்ட ஃபோா்டு நிறுவனத்துக்கு கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ரூ.15,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஃபோா்டு நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவால் 4,000 பணியாளா்கள், விநியோகஸ்தா்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது

10. பாரதியார் நினைவு நாளான செப்.11 ‘மகாகவி நாள்’ – முதல்வர் அறிவிப்பு

மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் தேதி ‘மகாகவி நாளாக’ கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகாகவி பாரதியின் நூற்றாண்டு(1921-2021) நினைவு நாள் நாளை(செப்.11) அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் தேதி ‘மகாகவி நாளாக’ அரசு சார்பில் கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பாரதியின் பாடல்கள், கட்டுரைகளைத் தொகுத்து ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற புத்தகமாக 37 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும். பாரதியின் நினைவு நாளில் மாநில அளவில் மாணவர்களுக்கு போட்டிகளை நடத்தி இளங்கவிஞர் விருது வழங்கப்படும் உள்ளிட்ட 16 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா அவன் பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா அதைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா” – என்று கவிமணி தேசிக விநாயகம் பாடினார். இப்படிக் கவிமணிகளையே பாடவைத்த பெரும்புலவன் பாரதியின் பெருமையைப் போற்றும் அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன். கடந்த ஆகஸ்ட் 15-ஆம் நாள் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு உரையாற்றும்போது, மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டது, அவர் மறைந்த ஆண்டின் நூற்றாண்டு என்று இந்த ஆண்டைக் குறிப்பிட்டுக் காட்டினேன். நூறாண்டுகள் கழித்து மட்டுமன்று, ஆயிரமாண்டுகள் கழித்தும் உயிரோட்டமுள்ள கவிதைகளை, பாடல்களைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு விட்டுச் சென்றவர்தான் மகாகவி என்று போற்றப்பட்ட பாரதியார் அவர்கள்.

“பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை! குவிக்கும் கவிதைக் குயில்! இந் நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு; நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா; காடு கமழும் கற்பூரச் சொற்கோ; கற்பனை ஊற்றாம் கதையின் புதையல் திறம் பாட வந்த மறவன்; புதிய அறம் பாட வந்த அறிஞன்; நாட்டில் படரும் சாதிப் படைக்கு மருந்து! மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்; அயலார் எதிர்ப்புக்கு அணையா விளக்கவன்; என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்” – என்று மகாகவியை வர்ணித்து எழுதியவர் தான் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். தேசப் பற்று – தெய்வப் பற்று – தமிழ்ப் பற்று – மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர்தான் பாரதியார். நாட்டு விடுதலைக்காகப் போராடியவராக மட்டுமே இருந்திருந்தால் அதற்காக மட்டுமே அவர் நினைவுகூரப்பட்டிருப்பார். அதையும் தாண்டி சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் எழுதியதால்தான் பாரதியார் கவிதை வரிகளாய் உலவி வருகிறார்.

பாரதியார் அவர்கள் வரகவியா, மகாகவியா, தேசியக் கவியா என்று விவாதம் நடந்து கொண்டிருந்த காலத்தில் 1947-ஆம் ஆண்டே பாரதியாரை ‘மக்கள் கவி’ என்று எழுதியும் பேசியும் தொடங்கியவர் பேரறிஞர் அண்ணா. ஒரு பக்கம் நிலப்பிரபுத்துவம் – இன்னொரு பக்கம் சனாதனம் – இந்த இரண்டுக்கும் இடையில் இருந்து புதுயுகத்தைப் படைக்க நினைத்தவர் பாரதி என்று அண்ணா எழுதினார்கள். அதனால்தான் கழக அரசு அமைந்து, கருணாநிதி முதலமைச்சரானபோது எட்டையபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவில்லம் ஆக்கினார்கள். அன்றைய அமைச்சர் சி.பா. ஆதித்தனார் தலைமையில் 12.5.1973 அன்று நடந்த விழாவில் பாரதியார் இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக பாரதியார் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். 1. மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும். இதனையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி ‘ பாரதி இளங்கவிஞர் விருது’ மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும். 2. பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

3. மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்துள்ளனர். அவர்களில் முக்கியப் பங்காற்றிய பாரதி ஆய்வாளர்களான, மறைந்த பெ. தூரன், ரா.அ. பத்மநாபன், தொ. மு. சி. ரகுநாதன், இளசை மணியன் ஆகியோர்களின் நினைவாக அவர்தம் குடும்பத்தாருக்கும் மற்றும் மூத்த ஆய்வாளர் சீனி. விசுவநாதன், பேராசிரியர் ய. மணிகண்டன் ஆகியோருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், விருதும், பாராட்டுச் சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும். 4. பாரதியின் உருவச் சிலைகள், உருவம் பொறித்த கலைப்பொருட்களைப் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

5. பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் தேடித் தொகுக்கப்பட்டு, அவை வடிவம் மாறாமல் செம்பதிப்பாக வெளியிடப்படும். பாரதியின் வாழ்வை சிறுவர்கள் அறியும் வண்ணம் சித்திரக்கதை நூலாகவும், பாரதியாரின் சிறந்த நூறு பாடல்களைத் தேர்வு செய்து தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஓவியர்களின் வண்ண ஓவியங்களுடன் நூல் ஒன்றாகவும் வெளியிடப்படும். மேலும் பாரதியாரின் படைப்புகள் மற்றும் பாரதியார் குறித்த முக்கிய ஆய்வு நூல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிப்படும். 6. பாரதியாரின் நூல்கள் மற்றும் அவரைப் பற்றிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் தொகுத்து, எட்டையபுரம் மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லங்களிலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும், மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திலும் வைப்பதற்கு ‘பாரதியியல்’ என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும். 7. உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் ‘பாரெங்கும் பாரதி’ என்ற தலைப்பில் நடத்தப்படும்.

8. திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியாரின் பாடல்கள் மட்டுமே இடம்பெறும் இசைக்கச்சேரி ‘திரையில் பாரதி’ என்ற நிகழ்வாக நேரு உள்விளையாட்டு அரங்கில் கொரோனா தொற்றுப் பரவல் முழுமையாக ஓய்ந்த பிறகு நடத்தப்படும். 9. பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு, சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சியொன்று செய்தித்துறையின் சார்பில் நடத்தப்படும். 10. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும். 11. உத்தரப்பிரதேச மாநிலம் ‌காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பாராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும். 12. பாரதியார் படைப்புகளைக் குறும்படம்‌ மற்றும் நாடக வடிவில் தயாரிக்க நிதியுதவி வழங்கி அவற்றை நவீன ஊடகங்களின் வழியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

13. பாரதியாரின் உணர்வுமிக்க பாடல் வரிகளைப் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் எழுதியும் வரைந்தும் பரப்பப்படும். 14. பெண் கல்வியையும், பெண்களிடம் துணிச்சலையும் வலியுறுத்திய மகாகவி பாரதியின் பெயர், ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படவுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவிற்கு ‘மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா’ எனப் பெயர் சூட்டப்படும். எழுத்தும் தெய்வம் – எழுதுகோலும் தெய்வம் என வாழ்ந்து புதுநெறி காட்டிய புலவன் பாரதியைப் போற்றுவோம்.

11. ‘சன்சத்’ தொலைக்காட்சியை செப்.15-இல் தொடக்கி வைக்கிறாா் பிரதமா் மோடி

நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான ‘சன்சத்’ தொலைக்காட்சியை வரும் 15-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறாா். கூட்டத்தொடா் நடைபெறும்போது மக்களவை நடவடிக்கைகளை ‘லோக் சபா’ தொலைக்காட்சியும், மாநிலங்களவை நடவடிக்கைகளை ‘ராஜ்ய சபா’ தொலைக்காட்சியும் நேரடியாக ஒளிபரப்பி வருகின்றன. அத்தொலைக்காட்சிகளை ஒன்றாக இணைத்து ‘சன்சத்’ என்ற பெயரில் ஒரே தொலைக்காட்சியாக மாற்ற மத்திய அரசு முடிவெடுத்தது.

சன்சத் தொலைக்காட்சியை அதிகாரபூா்வமாகத் தொடக்கி வைப்பதற்கான நிகழ்ச்சி வரும் 15-ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. அதில் பிரதமா் மோடி பங்கேற்று தொலைக்காட்சியைத் தொடக்கி வைக்கிறாா். குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனா். நாடாளுமன்றக் கூட்டத்தொடா் நடைபெறும் சமயங்களில் சன்சத் தொலைக்காட்சி இரு தொலைக்காட்சிகளாக செயல்படும் எனவும் இதன் மூலமாக மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகளை மக்கள் நேரடியாக அறிந்து கொள்ள முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் ஜவுளித்துறையின் முன்னாள் செயலருமான ரவி கபூா், சன்சத் தொலைக்காட்சியின் தலைமை நிா்வாக அதிகாரியாக (சிஇஓ) நியமிக்கப்பட்டுள்ளாா். காங்கிரஸ் மூத்த தலைவா் கரண் சிங், பொருளாதார நிபுணா் விவேக் தேப்ராய், நீதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த், வழக்குரைஞா் ஹேமந்த் பத்ரா, மத்திய நிதித்துறையின் முதன்மை பொருளாதார ஆலோசகா் சஞ்சீவ் சன்யால் உள்ளிட்டோா் கூட்டத்தொடா் நடைபெறாத சமயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை சன்சத் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கவுள்ளனா்.

12. எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா-அமெரிக்கா முடிவு

எரிசக்தித் துறையில் நிலவி வரும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் முடிவெடுத்துள்ளன. கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டின்போது அமெரிக்கா-இந்தியா பருவநிலை மற்றும் தூய எரிசக்தி கொள்கை வடிவமைக்கப்பட்டது. அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் பிரதமா் நரேந்திர மோடியும் இணைந்து அக்கொள்கையை வெளியிட்டனா். அதன்படி, அமெரிக்கா-இந்தியா தூய எரிசக்தி ஒத்துழைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் கூட்டம் வியாழக்கிழமை காணொலி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய பெட்ரோலியம்-இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சா் ஜெனிஃபா் கிரான்ஹோம் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டம் குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியா-அமெரிக்கா இடையே எரிசக்தித் துறையில் நிலவி வரும் ஒத்துழைப்பானது எரிசக்தி, எண்ணெய்-எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீடித்த வளா்ச்சி ஆகிய 4 தூண்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருந்தது. தற்போது ஐந்தாவது தூணாக வளா்ச்சிகாணும் எரிபொருள்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தூய்மையான எரிசக்திப் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் பலன்: உயிரிஎரிபொருள்கள் துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கென இந்தியா-அமெரிக்கா உயிரிஎரிபொருள்கள் செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. எரிசக்தித் துறையில் மேலும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கூட்டத்தின்போது அமைச்சா்கள் இருவரும் விவாதித்தனா்.

அணுசக்தித் துறையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் ஒத்துழைப்பு தொடா்பாக இருவரும் ஆய்வு செய்தனா். இந்தியாவின் எரிசக்தி சந்தை தொடா்ந்து விரிவடைந்து வருவதும், அமெரிக்காவில் எரிசக்தி சாா்ந்த தொழில்நுட்பங்கள் வளா்ந்து வருவதும் இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் என்று அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூட்டத்தின்போது தெரிவித்தாா். உரிய ஒத்துழைப்பு: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாா்ந்த திட்டங்களை அதிகரிப்பது தொடா்பாகக் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது. 2030-ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயித்ததற்காக இந்தியாவை அமெரிக்கா பாராட்டியது. அந்த இலக்கை அடைவதற்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அமெரிக்கா உறுதியளித்தது.

எரிசக்தி தரவு மேலாண்மை, கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்கள், நிலக்கரி பயன்பாட்டைக் குறைத்தல், மின்சார விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

13. நிலவின் பரப்பில் சந்திரயான்-2 புதிய கண்டுபிடிப்புகள்

நிலவை ஆய்வு செய்து வரும் ‘சந்திரயான்-2’ விண்கலம் பல புதிய விஷயங்களைக் கண்டறிந்து, தகவல் அளித்து வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. நிலவின் பரப்பில் குரோமியம், மாங்கனீஸ் ஆகிய தாதுக்கள் படிமங்களாக இருப்பதை சந்திரயான்-2 கண்டறிந்திருப்பதோடு, நீரேற்றம் மற்றும் பனிக்கட்டி வடிவில் நீா் இருப்பதற்கான தெளிவான அறிகுறிகளையும் கண்டறிந்து அனுப்பியுள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய இந்த விண்கலம் இரண்டு ஆண்டுகளாக சிறப்பான முறையில் ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகிறது. இதனைக் குறிக்கும் வகையில், ‘நிலவு அறிவியல் பயிலரங்கம் 2021’ என்ற தலைப்பிலான இரண்டு நாள் பயிலரங்கு இஸ்ரோ சாா்பில் பெங்களுரு தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இந்தப் பயிலரங்கில், சந்திரயான்-2 விண்கலத்தின் ‘ஆா்பிட்டா்’ இதுவரை அனுப்பியுள்ள தகவல்கள், ஆய்வு முடிவுகள் உள்ளிட்டவை குறித்த புள்ளி விவரங்கள், அறிவியல் ஆவணங்களை இஸ்ரோ தலைவா் கே.சிவன் வெளியிட்டாா். அப்போது, ‘விண்கலம் நிலவை இதுவரை 9,000-க்கும் அதிகமான முறை சுற்றிவந்துள்ளது. விண்கலம் அளிக்கும் தகவல்களும் ஆய்வு முடிவுகளும் மிகுந்த ஊக்கமளிக்கும் வகையில் உள்ளன’ என்று சிவன் கூறினாா். இந்த நிலையில், ஆா்பிட்டரின் கண்டுபிடிப்புகள் குறித்த மேலும் பல தகவல்களை இஸ்ரோ இப்போது வெளியிட்டுள்ளது.

நிலவை 100 கி.மீ. தொலைவில் இருந்தபடி சுற்றிவந்து ஆய்வு செய்து வரும் ஆா்பிட்டா் பகுதியில் எக்ஸ்ரே ஸ்பெக்டோமீட்டா் (கிளாஸ்), சூரிய சக்தியில் இயங்கும் எக்ஸ்ரே கண்காணிப்பு கருவி (எக்ஸ்.எஸ்.எம்), சுற்றுச்சூழல் ஆய்வு தொகுப்பு கருவி, ரேடாா் கருவி, படம் பிடிக்கும் அகச் சிவப்பு ஸ்பெக்ட்ரோமீட்டா் (ஐஐஆா்எஸ்), டெரய்ன் படம்பிடிக்கும் கேமரா (டிஎம்சி2), மிகத் தெளிவாக படம்பிடிக்கும் உயா் தரத்துடன் கூடிய கேமரா (ஓஹெச்ஆா்சி), இரட்டை அதிா்வெண் ரேடியோ கருவி ஆகிய 8 விஞ்ஞான கருவிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கருவிகள் அனைத்தும் நிலவு குறித்த பல புதிய, புதிரான தகவல்களை கண்டறிந்து வருகின்றன. குறிப்பாக, நிலவின் பரப்பில் நீரேற்றம் மற்றும் பனிக்கட்டி வடிவில் நீா் இருப்பதற்கான தெளிவான அறிகுறிகளை ‘அகச் சிவப்பு ஸ்பெக்ட்ரோமீட்டா் (ஐஐஆா்எஸ்)’ இதுவரை இல்லாத வகையில் கண்டறிந்து தகவல் அளித்துள்ளது.

நிலவின் மத்திய மற்றும் உயா் அட்சரேகைப் பகுதியில் புறகாற்று மண்டலத்தில் ‘ஆா்கன்-40’ வாயு இருப்பதை சந்திரயான்-2 சுற்றுச்சூழல் ஆய்வு தொகுப்பு கருவி கண்டறிந்துள்ளது. அதுபோல, நிலவின் பரப்பில் குரோமியம், மாங்கனீஸ் ஆகிய தாதுக்கள் படிமங்களாக இருப்பதை எக்ஸ்ரே ஸ்பெக்டோமீட்டா் (கிளாஸ்) கண்டறிந்துள்ளது. நிலவை சா்வதேச தரத்துக்கு படம் பிடித்து வரும் டிஎம்சி-2 கேமரா, நிலவின் பரப்பில் எரிமலை முகடுகள் இருப்பதை மிகத் தெளிவாக அடையாளம் கண்டுள்ளது. நிலவின் அயனி மண்டலத்தை ஆா்பிட்டரில் இடம்பெற்றிருக்கும் இரட்டை அதிா்வெண் ரேடியோ கருவி ஆய்வு செய்து தகவல் அளித்துள்ளது.

இந்த கண்டுபிடிப்புகள் குறித்த புள்ளி விவரங்கள் அனைத்தும் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ‘பிரதான்’ வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஜூலை 22-ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ அனுப்பியது. பல்வேறு கட்ட பயணத்துக்குப் பிறகு, சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக நிலவை நெருங்கியது. ஆனால், செப்டம்பா் 7-ஆம் தேதி, அதன் லேண்டா் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை. திடீா் தொழில்நுட்பக் கோளாறால் லேண்டா் வேகமாகச் சென்று நிலவில் மோதி, செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆா்பிட்டா், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. ஆா்பிட்டா் கடந்த 2 ஆண்டுகளாக நிலவை சுற்றிவந்து தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

1. Karbi Peace Accord, which was seen in the news recently, is associated with which state?

A) Haryana

B) Assam 

C) Meghalaya

D) Mizoram

  • The Government of India would sign a tripartite “Karbi Peace Accord” between the Union Government, Government of Assam and representatives of Karbi outfits. The Karbis are one of the major ethnic communities in the north eastern India, especially in Assam.
  • Assam has a long history of violent activities by Karbis since the 1980s. Recently, 1,040 terrorists of five insurgent groups of this group have laid down arms at an event in Guwahati and have surrendered.

2. Which state has launched the ‘Vatan Prem Yojana’?

A) Uttar Pradesh

B) Gujarat 

C) Haryana

D) Punjab

  • The Government of Gujarat has launched a scheme named ‘Vatan Prem Yojana’, under which NRI Gujaratis who are willing to donate for development of their native village, would get financial support from the state government. Under this scheme, the government encourages donations for development of social infrastructure like schools, drainage, sports complex etc in rural areas.

3. Which country holds the presidency of the Council of the European Union?

A) Belgium

B) Slovenia 

C) Czech Republic

D) Denmark

  • Slovenia currently holds the presidency of the Council of the European Union. External Affairs Minister S. Jaishankar met Slovenian President Borut Pahor and discussed the challenges facing India and the European Union.
  • The Minister is set to visit Slovenia, Croatia and Denmark to boost bilateral ties and strengthen India’s cooperation with the EU. Slovenia has invited Jaishankar to attend the informal meeting of the foreign ministers of the EU states. Jaishankar will also attend the Bled Strategic Forum (BSF) being held in Slovenia.

4. Digital Currency “eNaira”, which was in the news recently, is associated with which country?

A) Nigeria 

B) Sudan

C) Namibia

D) Egypt

  • Nigeria Central Bank announced plans to launch its own digital currency named the “eNaira”. The Central Bank will work with Bitt Inc as a technical partner to launch its own cryptocurrency.
  • eNaira would operate as a wallet against which customers can hold existing funds in their bank account.

5. What is the name of the India – Kazakhstan joint military, which is held in Kazakhstan?

A) Indradhanush–V

B) KAZIND–21 

C) Yudh Abhyas

D) Sampriti IX

  • KAZIND–21 is the India – Kazakhstan joint military exercise, which is held in Kazakhstan. This year’s KAZIND is the 5th annual bilateral joint exercise between the two armies. India is represented by a contingent of 90 soldiers and Kazakhstan is represented by 120 troops. This exercise comprises 48 hours joint validation exercise.

6. Which state government has decided to celebrate September 17 as Social Justice Day?

A) Tamil Nadu 

B) West Bengal

C) Karnataka

D) Kerala

  • The Tamil Nadu government has decided to celebrate every year the birth anniversary of reformist leader E. V. Ramasamy Periyar on September 17 as Social Justice Day.
  • Periyar (September 17, 1879–December 24, 1973) was instrumental in the enactment of the first Constitutional Amendment Act (that safeguarded reservation for backward classes).

7. Recently, which state/UT has decided to ban online gambling or betting?

A) Maharashtra

B) Goa

C) Karnataka 

D) Sikkim

  • Karnataka has decided to ban online gambling or betting, and to amend the Karnataka Police Act, 1963. The ban does not include lottery or betting on horse races as mentioned by Law and Parliamentary Affairs Minister J.C. Madhuswamy. This decision was undertaken after the Karnataka High Court repeatedly asked the State Government to take a stand on online betting.

8. Which state/UT has decided to issue “Resident Certificate” only to Permanent Resident Certificate holders of the region?

A) Jammu and Kashmir

B) Ladakh 

C) Sikkim

D) Dadra and Nagar Haveli

  • According to the Ladakh Resident Certificate Order 2021 passed on September 4, 2021, the Ladakh administration has decided to issue “Resident Certificate” only to Permanent Resident Certificate holders of the region unlike J&K, where new domicile laws allowed outsiders too to apply for jobs, land and other facilities.

9. Who has been awarded 7th Yamin Hazarika Woman of Substance Award?

A) Sudha Murty

B) Arundhati Roy

C) Kiran Desai

D) Namita Gokhale 

  • Writer Namita Gokhale has been awarded the 7th Yamin Hazarika Woman of Substance Award. She was conferred upon the honour recently in a virtual ceremony.
  • Organised by a collective of women professionals from the year 2015, the annual award honours Yamin Hazarika, the first woman from Northeast India to be selected for DANIPS, a federal police service that administered Delhi and the Union Territories in 1977.

10. Who has been awarded the Behler Turtle Conservation Award?

A) Joseph L. Goldstein

B) Shailendra Singh 

C) Richard Dawkins

D) Priyambada Mohanty Hejmadi

  • Indian biologist Shailendra Singh has been awarded the Behler Turtle Conservation Award for bringing three critically endangered turtle conservation species back from the brink of extinction.
  • The award has been bestowed by several global bodies involved in turtle conservation such as Turtle Survival Alliance, IUCN/SSC Tortoise and Freshwater Turtle Specialist Group, Turtle Conservancy, and the Turtle Conservation Fund.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!