Tnpsc

10th August 2020 Current Affairs in Tamil & English

10th August 2020 Current Affairs in Tamil & English

10th August 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

10th August 2020 Current Affairs Pdf Tamil

10th August 2020 Current Affairs Pdf English

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

10th August 2020 Current Affairs in English

1. Which Indian film won the best film award at the New York Indian Film Festival 2020 (NYIFF)?

[A] Moothon

[B] Kumbalangi Nights

[C] Uyare

[D] Unda

  • Malayalam movie ‘Moothon’ has won the best film award at the New York Indian Film Festival 2020 (NYIFF). In addition to the best film award, Malayalam star Nivin Pauly won the best actor award and Sanjana Dipu won in the best child artist category. The Malayalam–Hindi bilingual movie was directed by Geetu Mohandas and was released in the year 2019.

2. The Electronic Vaccine Intelligence Network (eVIN) is being implemented under which programme?

[A] PM Swasthya Suraksha Yojana

[B] Ajeevika

[C] Indra Dhanush

[D] National Health Mission

  • The Union Ministry of Health and Family Welfare is implementing the Electronic Vaccine Intelligence Network (eVIN) under the National Health Mission (NHM). It is an innovative technological solution that aims to strengthen immunization supply chain system across the country. It aims to provide real–time information on vaccine stocks and storage temperatures. At present the network has been used in 22 states and will be rolled out in all states.

3. Which country successfully launched an intercontinental ballistic missile named ‘Minuteman 3’?

[A] China

[B] United States of America

[C] India

[D] Russia

  • The United States has successfully launched an intercontinental ballistic missile named Minuteman 3 from California. The missile was test flighted from the Vandenberg Air Force Base to a target in the Pacific Ocean. The unarmed missile and its three vehicles travelled over 6750 kilometers to the Marshall Islands as a part of the test.

4. The ‘COVID19BWM’ mobile app that was seen in news recently, has been developed by which organisation?

[A] Central Pollution Control Board

[B] National Green Tribunal

[C] National Institute of Virology

[D] Bureau of Indian Standards

  • The Central Pollution Control Board (CPCB) has recently developed a mobile application named ‘COVID19BWM’. Municipal corporations and state pollution boards are directed to upload data regarding collection and disposal of Covid–19 biomedical waste from residences and quarantine centres, in the app. This was also mandated by the Supreme Court.

5. Which technology company has partnered with Prasar Bharati for AI–enabled Independence Day celebration?

[A] Microsoft

[B] Google

[C] Facebook

[D] Twitter

  • Technology Giant Google India has collaborated with Prasar Bharati and Virtual Bharat for AI–enabled Independence Day celebration of India. It seeks to recreate the feeling of singing the National Anthem in schools by using Artificial Intelligence Technology. Participants can download the mentioned application and record themselves singing the anthem. It would convert the voice into traditional instrumental music.

6. The 75th anniversary of which event was observed on August 6, 2020 across the world?

[A] First Atomic Bomb attack

[B] First World War

[C] Second World War

[D] First Landing on Moon

  • On August 6, seventy–five years ago, the world’s first nuclear weapon used in wartime was dropped over the Japanese city of Hiroshima. The world joined hands with Japan to observe the 75th anniversary of the first Atomic Bomb attack. Due to the COVID–19 pandemic, the event was broadcast online. The bomb attack killed around 1,40,000 people and caused severe injuries. The second bomb was dropped by the US three days later.

7. Which financial institution has announced to set up an ‘Innovation Hub’ for financial inclusion

[A] SEBI

[B] RBI

[C] NABARD

[D] SIDBI

  • The Reserve Bank of India (RBI) has recently announced that it will establish an innovation hub to assist start–ups to tackle the challenges of financial inclusion. The hub seeks to provide solutions for efficient banking transactions. This has been introduced in the bi–monthly monetary policy statement released by the RBI. The funds allocated for the project and its location will be disclosed by the Central Bank.

8. India extended a Line of Credit of USD 18 million to which country, to expand fishing facilities?

[A] Malaysia

[B] Maldives

[C] Sri Lanka

[D] Bangladesh

  • Indian Government has recently extended a Line of Credit worth 18 million US dollars to the Government of Maldives. LoC has been extended for expanding fishing facilities at Maldives Industrial Fisheries Company (MIFCO). This is a part of the Line of credit worth USD 800 million Line of credit offered by India to the country.

9. Which Indian Armed Police Force took over security of the Leh Airport?

[A] Central Industrial Security Force (CISF)

[B] Central Reserve Police Force (CRPF)

[C] Border Security Force (BSF)

[D] Indo–Tibetan Border Police Force (ITBP)

  • The Central Industrial Security Force (CISF) took over the security at the strategic Leh airport from local Police. The Kushok Bakula Rimpochee Airport is one among the country’s highest–altitude commercial aerodromes. It is also the 64th civil airport to be brought under the security cover of the CISF. Around 185 CISF personnel will provide round–the–clock armed security in the airport.

10. Who is the Chairperson of the Expert Committee on Debt resolution, constituted by the Reserve Bank of India (RBI)?

[A] Usha Thorat

[B] Urjit Patel

[C] K V Kamath

[D] N K Singh

  • The Reserve Bank of India has constituted an expert group on Debt resolution under the chairmanship of KV Kamath. The committee would recommend to the RBI on the financial parameters and their sector–specific benchmark ranges, for deploying in Debt resolution plans. RBI will provide a window under the ‘Prudential Framework on Resolution of Stressed Assets’.

10th August 2020 Current Affairs in Tamil

1. நடப்பாண்டு (2020) நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில், ‘சிறந்த திரைப்பட’ விருதை வென்ற இந்திய திரைப்படம் எது?

அ. மூத்தோன்

ஆ. கும்பலாங்கி நைட்ஸ்

இ. உயரே

ஈ. உண்டா

  • நடப்பாண்டு (2020) நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில், ‘சிறந்த திரைப்பட’ விருதை மலையாள திரைப்படமான ‘மூத்தோன்’ வென்றுள்ளது. இவ்விருதோடு, சிறந்த நடிகருக்கான விருதை மலையாள நடிகர் நிவின் பாலியும், சிறந்த குழந்தை நடிகருக்கான விருதை சஞ்சனா திப்புவும் இத்திரைப்படத்தில் நடித்தமைக்காக வென்றனர். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் மலையாளம்-இந்தி ஆகிய மொழிகளில் கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தத் திரைப்படம் வெளியானது.

2. எந்தத் திட்டத்தின்கீழ், மின்னணு புலனறிதல் நெட்வொர்க் தடுப்பூசி (eVIN) செயல்படுத்தப்படுகிறது?

அ. பிரதமர் ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா

ஆ. ஆஜீவிகா

இ. இந்திரா தனுஷ்

ஈ. தேசிய சுகாதார இயக்கம்

  • நாடு முழுக்க தடுப்பூசி வழங்கலைப் வலுப்படுத்தும் நோக்கில் புதுமையான தொழில்நுட்பத் தீர்வாக, மின்னணு புலனறிதல் நெட்வொர்க் தடுப்பூசி (eVIN) முறை உள்ளது. மத்திய நலவாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்கத்தின்மூலம் (NHM) இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. நாடு முழுக்க பல்வேறு இடங்களில் இருப்புவைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகள், அவற்றின் பாதுகாப்பு வெப்பநிலைகள்பற்றிய தகவல்கள் இதன்மூலம் உடனுக்குடன் கிடைக்கும். தற்போது 22 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில், ‘eVIN’மூலம் தடுப்பூசி மருந்துகள்வைத்து பராமரிக்கப்படுகின்றன.

3. ‘மினிட்மேன்-3’ என்ற பெயரில் ஒரு கண்டம்விட்டு மறு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த நாடு எது?

அ. சீனா

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ. இந்தியா

ஈ. இரஷ்யா

  • ‘Minuteman-3’ என்ற பெயரிலான ஒரு கண்டம்விட்டு மறு கண்டம் பாயும் திறன்கொண்ட ஓர் ஏவுகணையை கலிபோர்னியாவிலிருந்து ஐக்கிய அமெரிக்க நாடுகள் வெற்றிகரமாக ஏவியது.
  • இந்த ஏவுகணை, வாண்டன்பெர்க் விமானப்படைத் தளத்திலிருந்து, பசிபிக் பெருங்கடலில், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி ஏவப்பப்பட்டது. நிராயுதபாணியான இந்த ஏவுகணையும் அதன் 3 வாகனங்களும், சோதனையின் ஒருபகுதியாக, 6750 கிமீட்டருக்கு அப்பாலுள்ள மார்ஷல் தீவுகளுக்கு பயணித்தன.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘COVID19BWM’ என்ற திறன்பேசி செயலியை உருவாக்கிய அமைப்பு எது?

அ. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

ஆ. தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

இ. தேசிய நச்சுயிரியியல் நிறுவனம்

ஈ. இந்திய தர நிர்ணய அமைவனம்

  • மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமானது அண்மையில், ‘COVID19BWM’ என்ற திறன்பேசி செயலியை உருவாக்கியது. இந்தச் செயலியில், குடியிருப்புகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து COVID-19 உயிரி-மருத்துவக்கழிவுகளை சேகரித்து அகற்றுவது தொடர்பான தரவுகளை பதிவேற்ற நகராட்சிகள் மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

5. செயற்கை நுண்ணறிவுவழி (AI) விடுதலை நாள் கொண்டாட்டத்திற்காக, பிரஸார் பாரதியுடன் கூட்டு சேர்ந்துள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?

அ. மைக்ரோசாப்ட்

ஆ. கூகிள்

இ. பேஸ்புக்

ஈ. டுவிட்டர்

  • செயற்கை நுண்ணறிவுவழி (AI) விடுதலை நாள் கொண்டாட்டத்திற்காக, கூகிள் இந்தியா நிறுவனம் ‘பிரஸார் பாரதி’ மற்றும் ‘மெய்நிகர் பாரத்’ ஆகியவற்றுடன் ஒத்துழைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பள்ளிகளில் தேசிய கீதம் பாடும் உணர்வை மீண்டும் உருவாக்க இது முற்படுகிறது. பங்கேற்பாளர்கள், ஒரு குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கஞ்செய்து, தாங்கள் பாடும் தேசிய கீதத்தை பதிவுசெய்யலாம். அது, பங்கேற்பாளரின் குரலை பாரம்பரிய இசையாக மாற்றித்தரும்.

6. 2020 ஆக.6 அன்று, உலகம் முழுவதும், எந்த நிகழ்வின் 75ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது?

அ. முதல் அணுகுண்டு தாக்குதல்

ஆ. முதலாம் உலகப்போர்

இ. இரண்டாம் உலகப்போர்

ஈ. நிலவில் முதன்முதலாக தரையிறங்கியது

  • 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆக.6 அன்று, போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட உலகின் முதல் அணு ஆயுதம், ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது போடப்பட்டது. இந்த முதல் அணுகுண்டு தாக்குதலின் 75ஆவது நினைவை அனுசரிப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் ஜப்பானுடன் கைகோர்த்தன. COVID-19 தொற்றுநோய் காரணமாக, இந்த நிகழ்வு இணையத்தில் ஒளிபரப்பப்பட்டது. குண்டுவெடிப்பு தாக்குதலில், சுமார் 140,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் பலத்த காயமடைந்தனர்.

7. நிதிசார் சேர்ப்புக்காக, ‘புத்தாக்க மையம்’ ஒன்றை அமைப்பதாக அறிவித்துள்ள நிதி நிறுவனம் எது?

அ. SEBI

ஆ. RBI

இ. NABARD

ஈ. SIDBI

  • இந்திய ரிசர்வ் வங்கியானது, அண்மையில், நிதிசார் சேர்ப்பு ரீதியான சவால்களை கையாளுவதற்கு துளிர் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ஒரு புத்தாக்க மையத்தை நிறுவப்போவதாக அறிவித்தது. திறமையான வங்கி பரிவர்த்தனைகளுக்கு தீர்வுகளை வழங்க இம்மையம் முற்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியால் இருமாதத்திற்கு ஒரு முறை வெளியிடப்படும் நாணயக்கொள்கை அறிக்கையில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அதன் இருப்பிடம் குறித்த மேற்கொண்ட தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும்.

8.மீன்பிடி வசதிகளை விரிவுபடுத்துவதற்காக, இந்தியா, எந்த நாட்டிற்கு $18 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் தவணையை வழங்கியுள்ளது?

அ. மலேசியா

ஆ. மாலத்தீவு

இ. இலங்கை

ஈ. வங்கதேசம்

  • இந்திய அரசானது அண்மையில் மாலத்தீவு அரசுக்கு $18 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடன் தவணையை வழங்கியது. மாலத்தீவு மீன்வள நிறுவனத்தில் (MIFCO) மீன்பிடி வசதிகளை விரிவுபடுத் -துவதற்காக இக்கடன் தவணை வழங்கப்பட்டுள்ளது. $800 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் தொகுப்பின் ஒருபகுதியாகும் இந்தக் கடன் தவணை.

9. லே வானூர்தி நிலைய பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்திய ஆயுதக்காவல்படை எது?

அ. மத்திய தொழிலகங்கள் பாதுகாப்புப் படை (CISF)

ஆ. மத்திய சேமக்காவல்படை (CRPF)

இ. எல்லைப் பாதுகாப்புப் படை (BSF)

ஈ. இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை (ITBP)

  • மத்திய தொழிலகங்கள் பாதுகாப்புப்படையானது (CISF) உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த லே விமான நிலைய பாதுகாப்புப் பணியை, உள்ளூர் காவல்துறையினரிடமிருந்து தன்வசமாக்கிக் கொண்டது.
  • குஷோக் பாகுலா ரிம்போச்சி வானூர்தி நிலையம் என்பது நாட்டின் மிகவுயரமான, வணிக ரீதியில் இயங்கக்கூடிய வானூர்தி நிலையங்களுள் ஒன்றாகும். இது, CISF’இன் பாதுகாப்புப் பிரிவின்கீழ் கொண்டுவரப்படும் 64ஆவது உள்நாட்டு வானூர்தி நிலையமாகும். சுமார் 185 CISF பணியாளர்கள், இவ்வானூர்தி நிலையத்தில், 24×7 ஆயுதமேந்திய பாதுகாப்பை வழங்குவார்கள்.

10. இந்திய ரிசர்வ் வங்கி அமைத்த, கடன் தீர்மானத்திற்கான வல்லுநர் குழுவின் தலைவர் யார்?

அ. உஷா தோரத்

ஆ. உர்ஜித் படேல்

இ. K V கமத்

ஈ. N K சிங்

  • K V கமத் அவர்களின் தலைமையில் கடன் தீர்மானம் குறித்த வல்லுநர் குழுவை இந்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது. கடன் தீர்வுத் திட்டங்களில் ஈடுபடுவதற்கு நிதியியல் அளவுருக்கள் மற்றும் அவற்றின் துறைசார்ந்த அளவுகோல் வரம்புகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கிக்கு இந்தக் குழு பரிந்துரைக்கும். ‘அழுத்தப்பட்ட சொத்துக்களுக்கு தீர்வுகாண்பதற்கான புத்திசாலித்தனமான கட்டமைப்பின்’கீழ் ஒரு சாளரத்தை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும்.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

  • தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வாழும் ஈழுவா, தீயா வகுப்பினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கான உத்தரவினை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டை மற்றும் திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தில் இந்தச் சமூகத்தினர் பெருவாரியாக வாழ்ந்துவந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!