Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

10th December 2020 Current Affairs in Tamil & English

10th December 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

10th December 2020 Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1. நடப்பாண்டில் (2020) ஐக்கிய நாடுகள் அவையால் கீழ்க்காணும் எந்தத் தேதியில் முதன்முறையாக ‘பன்னாட்டு வங்கிகள் நாள்’ கொண்டாடப்பட்டது?

அ. டிசம்பர் 2

ஆ. டிசம்பர் 4

இ. டிசம்பர் 6

ஈ. டிசம்பர் 8

  • கடந்த 2019ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை டிச.4ஆம் தேதியை பன்னாட்டு வங்கிகளின் நாளாக அறிவித்தது. அது, நடப்பாண்டில் (2020) முதன்முறையாக கொண்டாடப்பட்டது. நீடித்த வளர்ச்சிக்கு நிதியளிப்பதில் பன்முக வளர்ச்சி வங்கிகள் மற்றும் சர்வதேச வளர்ச்சி வங்கிகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் வங்கி அமைப்புகளின் பங்கையும் இந்த நாள் அங்கீகரிக்கிறது.

2. இந்தியாவின் தனியார் தொலையுணரி செயற்கைக்கோளை ஏவுவதற்காக நியூஸ்பேஸ் இந்தியா லிட் உடன் கூட்டு சேர்ந்துள்ள துளிர் நிறுவனம் எது?

அ. பிக்செல்

ஆ. பெல்லாட்ரிக்ஸ் ஸ்பேஸ்

இ. அக்னிகுல்

ஈ. வெஸ்டா ஸ்பேஸ்

  • நாட்டின் முதல் தனியார் தொலையுணரி செயற்கைக்கோளை ஏவுவதற்காக விண்வெளித் துறையில் முன்னணியில் இருக்கும் துளிர் நிறுவனமான பிக்செல், நியூஸ்பேஸ் இந்தியா லிட் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளை எதிர்வரும் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ISRO, PSLV ஏவுகலத்தின் மூலமாக செலுத்தப்படவுள்ளது. முன்னதாக, விண்வெளித்துறையின்கீழ் ‘IN-SPACe’ எனப்படும் ஒழுங்குமுறை அமைப்பு, இந்தியாவில் விண்வெளிசார் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக தனியார் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் நிறுவப்பட்டது.

3. இணையவழி விளையாட்டுகள் மற்றும் பந்தயம் குறித்து தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு ஆலோசனை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள அமைச்சகம் எது?

அ. விளையாட்டு மற்றும் இளையோர் விவகாரங்கள் அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஈ. தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

  • தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் எந்த விளம்பரங்களும் ஒளிபரப்பப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அனைத்து தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளுக்கும் அண்மையில் ஓர் ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
  • இணையவழி விளையாட்டுகள், பந்தயங்கள் மற்றும் கற்பனை விளையாட்டு குறித்த விளம்பரங்கள் தவறானவை என்றும் அவை அமைச்சகத்தின் விளம்பர நெறிமுறைக்கு முரணானவை என்றும் அந்த ஆலோசனை குறிப்பிடுகிறது.

4. வக்ஃப் வாரியங்களும் வக்ஃப் கவுன்சிலும் எந்த அமைச்சகத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன?

அ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஆ. வெளியுறவு அமைச்சகம்

இ. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • வக்ஃப் வாரியங்கள் மற்றும் வக்ஃப் கவுன்சில் ஆகியன சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின்கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் விரைவில் வக்ஃப் வாரியங்கள் அமைக்கப்படும் என்று மத்திய வக்ஃப் கவுன்சில் முடிவுசெய்துள்ளது. இந்தியாவின் J & K மற்றும் லே-கார்கில் பகுதிகளில் வக்ஃப் வாரியங்கள் நிறுவப்படுவது இதுவே முதல்முறையாகும்.

5. 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் எந்த உயர்நீதிமன்றத்தில் அதிக பெண் நீதிபதிகள் உள்ளனர்?

அ. மெட்ராஸ்

ஆ. பாம்பே

இ. அகமதாபாத்

ஈ. திருவனந்தபுரம்

  • இந்திய உயர்நீதிமன்றங்களிலேயே தமிழ்நாட்டின் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில்தான் அதிக பெண் நீதிபதிகள் உள்ளனர். அண்மையில் பதவியேற்ற கூடுதல் 13 நீதிபதிகளுள் நால்வர் பெண்களாவர். தற்போதைய நிலவரப்படி, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மொத்த பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை பதிமூன்றாக உள்ளது. நீதியரசர் AP சாஹி அவர்கள் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ளார்.

6. முதன்முதலாக விண்வெளியில் முள்ளங்கியை வளர்த்து அறுவடை செய்துள்ள அமைப்பு எது?

அ. ISRO

ஆ. NASA

இ. ஐரோப்பிய விண்வெளி முகமை

ஈ. இரஷ்ய விண்வெளி முகமை

  • NASA விண்வெளி வீரர் கேட் ரூபின்ஸ் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் முதன்முறையாக முள்ளங்கியை அறுவடை செய்துள்ளார். இது, NASA’இன் Plant Habitat-02 (PH-02) என்ற கோள் பரிசோதனையின் ஒருபகுதியாகும்.
  • இந்தப் பரிசோதனை நுண்ணீர்ப்பு நிலைகளில் தாவர வளர்ச்சியைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 27 நாட்களில் முள்ளங்கிப்பயிர் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

7. இந்திய அதிகாரமளித்தல் நிதியத்தை (India Empowerment Fund) தொடங்கவுள்ள அமைப்பு எது?

அ. NABARD

ஆ. RBI

இ. IIT முன்னாள் மாணவர்கள் பேரவை

ஈ. பொறியாளர்கள் நிறுவனம்

  • இந்திய ஆராய்ச்சி அமைப்பில் `50,000 கோடியை முதலீடு செய்வதற்காக IIT முன்னாள் மாணவர்கள் பேரவையால் இந்தியா அதிகாரமளித்தல் நிதியம் தொடங்கப்படவுள்ளது. இந்த நிதியானது பத்தாண்டு காலப்பகுதியில் முதலீடு செய்யப்படும். இந்த நிதி, IIT ஏஞ்சல் நிதியமாக இயக்கப்படும் மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர் நிதியங்களின்கீழ் ஒழுங்குபடுத்தப்படும்.

8. பிரதமரால் தொடங்கி வைக்கப்படவுள்ள, “சிக்கந்திரா முதல் தாஜ் வாயில்” வரையிலான வழித்தடம் என்பது கீழ்க்காணும் எந்த மெட்ரோ இரயில் சேவையின் ஒருபகுதியாகும்?

அ. தில்லி மெட்ரோ

ஆ. நொய்டா மெட்ரோ

இ. மீரட் மெட்ரோ

ஈ. ஆக்ரா மெட்ரோ

  • ஆக்ரா மெட்ரோவின் முதற்கட்ட கட்டுமானத்தை இந்திய அரசு தொடங்கிவைக்கவுள்ளது. இந்த மெட்ரோ இரயில் சேவையின் முதற்கட்டம் சிக்கந்திராவை தாஜ் வாயிலோடு இணைக்கும். இதன் முதற்கட்ட கட்டுமானத்திற்கான மதிப்பிடப்பட்ட திட்ட செலவு `8379 கோடியாகும். இந்தத் திட்டம் மொத்தம் ஆறு மெட்ரோ இரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும்.

9. இந்திய மொபைல் மாநாட்டின் அமைப்பாளராக உள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. கல்வி அமைச்சகம்

ஆ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

இ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. தகவல் தொடர்பு அமைச்சகம்

  • இந்திய மொபைல் மாநாட்டை தொலைத்தொடர்புத்துறை, தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர்கள் சங்கம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி தொடக்கவுரையை நிகழ்த்தினார். இந்த நிகழ்வு, டிசம்பர்.8-10 வரை மெய்நிகராக நடத்தப்பட்டது. “Inclusive Innovation – Smart, Secure, Sustainable” என்பது இந்த மாநாட்டுக்கான கருப்பொருளாகும்.

10. UNESCO’இன் உலக பாரம்பரிய தளமான ஹம்பி தேர் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கேரளம்

ஈ. ஆந்திர பிரதேசம்

  • UNESCO உலக பாரம்பரிய தளமான ஹம்பியின் விஜய விட்டலா கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ள புகழ்பெற்ற கல் தேர், இந்திய தொல்லியல் ஆய்வுமையத்தால் (ASI) ஒரு பாதுகாப்பு வளையம் கொண்டு மூடப்பட்டுள்ளது. இத்தேர், இந்தியாவில் அமைந்துள்ள மூன்று பிரபலமான கல் தேர்களுள் ஒன்றாகும். தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ஒரு கல் தேரும், ஒடிசா மாநிலத்தின் கொனார்க்கில் அமைந்துள்ள ஒரு கல் தேரும் பிற இரு தேர்களாகும். ஹம்பி தேர், பொ ஆ 14 முதல் 17ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த விஜயநகர ஆட்சியாளர்களால் கட்டப்பட்டதாகும்.

10th December 2020 Current Affairs in English

1. When is the ‘International Day of Banks’ celebrated by the UN for the first time in 2020?

[A] December 2

[B] December 4

[C] December 6

[D] December 8

  • In 2019, the United Nations General Assembly designated December 4 as the International Day of Banks. It is celebrated for the first time in 2020. The day is celebrated to recognise the importance of multilateral development banks and international development banks in financing sustainable development. It also recognises the role of the banking systems in improving the standard of living.

2. Which start–up has partnered with NewSpace India Limited (NSIL) to launch India’s private remote–sensing satellite?

[A] Pixxel

[B] Bellatrix Aerospace

[C] Agnikul

[D] Vesta Space

  • Leading space start–up Pixxel has signed an agreement with the NewSpace India Limited (NSIL) to launch the country’s first private remote–sensing satellite. The satellite is to be launched on an ISRO PSLV rocket in early 2021. Earlier, regulatory body under the Department of Space called ‘IN–SPACe’ was established to enable private players undertake space activities in India.

3. Which Ministry has issued advisory guideline to private satellite channels on online gaming and betting?

[A] Ministry of Sports and Youth Affairs

[B] Ministry of Home Affairs

[C] Ministry of Information and Broadcasting

[D] Ministry of Information Technology

  • The Union Ministry of Information and Broadcasting has recently issued an advisory to all the private satellite channels to ensure that no advertisements that promote prohibited activities are telecasted. The advisory mentioned that advertisements on online gaming, betting and fantasy sports were misleading and are inconsistent with the Ministry’s Advertising Code.

4. Waqf Boards and Waqf Council are administered under which Ministry?

[A] Ministry of Women and Child Development

[B] Ministry of External Affairs

[C] Ministry of Minority Affairs

[D] Ministry of Home Affairs

  • Waqf Boards and Waqf Council is administered under the Ministry of Minority Affairs. The central Waqf council has decided recently that the Waqf Boards will be set up in the Union Territories of Jammu and Kashmir and Ladakh, soon. This is the first time, Waqf Boards will be established in the J&K and Leh–Kargil areas of India.

5. Which High Court in India has the highest number of Women Judges, as of 2020?

[A] Madras

[B] Bombay

[C] Ahmedabad

[D] Thiruvananthapuram

  • The Madras High Court has the highest number of women Judges among all the High Count of India. Among the additional 13 Judges who sworn in recently, 4 were women. As of now, the total number of women judges in Madras High Court stands at 13. Justice AP Sahi is the present Chief Justice of Madras High Court.

6. First ever radish crop has been grown in space by which organisation?

[A] ISRO

[B] NASA

[C] European Space Agency

[D] Russian Space Agency

  • NASA astronaut Kate Rubins has for the first–time harvested radish crop at the International Space Station. This is a part of NASA’s planet experiment named Plant Habitat–02 (PH–02), which is aimed to understand the plant growth in micro gravity conditions. The crops have been harvested in a time of 27 days.

7. India Empowerment Fund is set to be launched by which body?

[A] NABARD

[B] RBI

[C] IIT Alumni Council

[D] Institute of Engineers

  • India Empowerment Fund is set to be launched by the IIT Alumni Council for investing a sum of Rs.50,000 crore in India’s research system. The fund would be invested in a period of 10 years. The fund will be operated as IIT Angel Fund and would be regulated under Angel Investor Funds.

8. The “Sikandra to Taj Gate” corridor, which is to be inaugurated by the Prime Minister, is a part of which Metro Rail service?

[A] Delhi Metro

[B] Noida Metro

[C] Meerut Metro

[D] Agra Metro

  • The Government of India is set to inaugurate the construction of 1st phase of Agra Metro. The first phase of the metro would connect Sikandra to Taj Gate. The estimated project cost for the first phase construction is Rs.8379 crore. This project would have 6 stations.

9. Which Union Ministry is the organiser of the India Mobile Congress?

[A] Ministry of Education

[B] Ministry of Science and Technology

[C] Ministry of Electronics and IT

[D] Ministry of Communication

  • The India Mobile Congress (IMC) is organised by the Department of Telecommunications, Communication Ministry and the Cellular Operators Association of India (COAI). Prime Minister Narendra Modi delivered the inaugural address at the Mobile Congress. The event is to be held in virtual mode from December 8 to 10. The theme for IMC 2020 is “Inclusive Innovation – Smart, Secure, Sustainable”.

10. Hampi Chariot is a UNESCO World Heritage Site, located in which state?

[A] Tamil Nadu

[B] Karanataka

[C] Kerala

[D] Andhra Pradesh

  • The famous stone chariot in front of the Vijaya Vittala Temple in the UNESCO World Heritage site of Hampi, has been covered by a protective ring by the Archaeological Survey of India (ASI). This chariot is among three famous stone chariots in India while the other two are in Konark, Odisha, and Maamallapuram, Tamil Nadu. Hampi chariot, was built during the dynasty of Vijayanagara rulers who ruled from 14th to 17th century CE.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!