Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

10th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

10th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 10th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

10th February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. ‘தேசிய பாதுகாப்புக் குழு’வை அமைத்துள்ள அமைச்சகம் எது?

அ) சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

ஆ) தொழிலாளர் அமைச்சகம்

இ) வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஈ) கனரக தொழிற்துறை அமைச்சகம்

  • தேசிய பாதுகாப்பு குழுவானது தொழிலாளர் அமைச்சகத்தால் 1966ஆம் ஆண்டில், தேசிய அளவில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த இலாப நோக்கற்ற அமைப்பாக அமைக்கப்பட்டது.
  • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில், L & T நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான S N சுப்பிரமணியனை தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவராக நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. இப்பதவியை அவர் 3 ஆண்டுகளுக்கு வகிப்பார்.

2. 1.75 கோடி பயனாளிகளைத் தாண்டிய பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா, எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது?

அ) சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

ஆ) பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

இ) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

ஈ) சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

  • பிரதமர் மாத்ரு வந்தனா திட்டம் என்பது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு திட்டமாகும். இது, 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் முதல் குழந்தையின் பிறப்பின் போது, மூன்று தவணைகளில் `5,000 பெறுகின்றனர். இந்தத் திட்டம், 2020ஆம் ஆண்டு வரை, 1.75 கோடி பயனாளிகளை தாண்டிவிட்டதாக அவ்வமைச்சகம் அண்மையில் அறிவித்தது.

3. அண்மையில் இந்தியாவிடமிருந்து COVID-19 தடுப்பூசிகளைப் பெற்ற பார்படோஸின் தலைநகரம் எது?

அ) பிரிட்ஜ்டவுன்

ஆ) சர்ச்டவுன்

இ) ஓஸ்டின்ஸ்

ஈ) பாத்ஷெபா

  • பார்படோஸ் என்பது வட அமெரிக்காவின் கரீபியன் பகுதியில் அமைந்து உள்ள ஒரு தீவு நாடாகும். இது ஒரு தன்னாட்சிமிக்க பிரிட்டிஷ் காமன் வெல்த் நாடாகும். அதன் தலைநகராக பிரிட்ஜ்டவுன் உள்ளது. COVID-19 தடுப்பூசிகளை வழங்கியமைக்காக, பார்படோஸ் பிரதமர் மியா மோட்லி இந்திய அரசுக்கு நன்றிதெரிவித்துள்ளார். 2.87 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை உடைய இந்நாட்டில், 1641 பேர் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

4. ICMR’இன் செரோ ஆய்வின் மூன்றாம் சுற்றின்படி, இந்தியர்களில் ஒவ்வொரு ஐந்துபேருக்கு எத்தனை பேர் COVID-19 (கொரோனா) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்?

அ) 0.5

ஆ) 1

இ) 2

ஈ) 5

  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நடத்திய செரோலாஜிகல் ஆய்வின் மூன்றாம் சுற்றின்படி, ஐந்தில் ஒரு இந்தியர் SARS-CoV-2 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறிந்து உள்ளது. நாடு தழுவிய இந்த ஆய்வு 2020 டிசம்பர் வரை பாதிக்கப்பட்ட பாதிப்புகளைக் கண்டறிந்தது.
  • ஒரு நபருக்கு SARS-CoV-2 கொரோனா வைரஸை எதிர்க்கும் பிறபொருளெதிரிகள் (antibody) உள்ளதா என்பதை செரோலாஜிக்கல் சோதனை கண்டறிகிறது.

5. வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த முதல் உயர்மட்ட பேச்சுவார்த்தையை இந்தியா எந்த சங்கத்துடன் நடத்தியது?

அ) ஐரோப்பிய ஒன்றியம்

ஆ) BRICS

இ) ASEAN

ஈ) BIMSTEC

  • இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த முதல் உயர்மட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இப்பேச்சுவார்த்தை
    -க்கு வர்த்தக & தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை தாங்கினார். இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் குறித்து அமைச்சர்கள் அளவிலான ஆலோசனைகளை வலியுறுத்தி, கடந்த 2020 ஜூலை மாதம் நடைபெற்ற 15ஆவது இந்திய – ஐக்கிய ஐரோப்பிய தலைவர்களின் உச்சிமாநாட்டின் முக்கிய வெளிப்பாடாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

6. அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட திருவில்லிப்புத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளம்

இ) தெலங்கானா

ஈ) கர்நாடகா

  • திருவில்லிப்புத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்தை தமிழ்நாட்டில் உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது, தமிழ்நாட்டின் 5ஆவது புலிகள் காப்பகமாகும். இதில் மேகமலை & திருவில்லிப்புத்தூர் சாம்பல் அணில் வனவுயிரி சரணாலயங்கள் அடங்கும்.
  • நடுவணரசின் ஒப்புதலுக்குப் பிறகு, மாநில அரசு தனது ஐந்தாவது புலிகள் காப்பகம் குறித்த அறிவிப்பை வெளியிடும்.

7. ‘முதலீடு ஒப்புதல் பிரிவு’ என்ற ஒற்றை சாளர அனுமதி அமைப்பை அமைக்கவுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

ஆ) தொழிலாளர் அமைச்சகம்

இ) வர்த்தகம் & தொழிற்துறை அமைச்சகம்

ஈ) கனரக தொழிற்துறை அமைச்சகம்

  • தொழிற்சாலைகளுக்கு பல்வேறு அனுமதிகள் மற்றும் ஒப்புதல்கள் அளிப்பதற்கு ஒற்றைச் சாளர முறையை அமைப்பதற்காக மத்திய அரசு பணியாற்றி வருகிறது. இதன்மூலம், முதலீட்டாளர்கள் பல்வேறு தளங்கள் / அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது. இந்தப் பிரிவு, கடந்த ஆண்டு முன்மொழியப்பட்டது. இந்த டிஜிட்டல் தளம் தொழிற்சாலைகளுக்கு தேவையான அனைத்து மத்திய மற்றும் மாநில அனுமதிகளையும் ஒப்புதல்களையும் பெறுவதற்கு உதவும்.

8. நூறாவது டெஸ்ட் போட்டியில் இரட்டைசதம் அடித்த முதலாவது கிரிக்கெட் வீரர் யார்?

அ) ஜோ ரூட்

ஆ) விராட் கோலி

இ) M S தோனி

ஈ) பென் ஸ்டோக்ஸ்

  • இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட், 100ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதலாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். சென்னையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது ஜோ ரூட் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். இது, அவரது ஐந்தாவது இரட்டை சதமாகும்.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, Brookesia nana என்பது எந்தக் குடும்பத்தின் மிகச்சிறிய இனங்களுள் ஒன்றாகும்?

அ) பச்சோந்தி

ஆ) தவளை

இ) கீரிப்பிள்ளை

ஈ) கடலாமை

  • ஒரு ஜெர்மன்-மடகாஸ்கன் பயணக்குழு, மடகாஸ்கரில் ஒரு பச்சோந்தி கிளையினத்தைக் கண்டுபிடித்துள்ளது. இது, புவியில் இதுவரை கண்டறியப்பட்ட ஊர்வனங்களிலேயே மிகச்சிறியதுவாக இருக்கலாம். Brookesia nana என்று பெயரிடப்பட்ட இந்த ஆணின ஊர்வனத்தின் உடல் மட்டும் 13.5 மிமீட்டரும், முழு உடலும் (வால் வரை) 22 மிமீட்டரும் உள்ளது. அறிவுயலாளர்களின் கூற்றுப்படி, வட மடகாஸ்கர் மழைக்காடு -களுக்கு சொந்தமான இவ்வினங்கள் அழிவுறு நிலையில் உள்ளன.

10. ‘தோழி’ என்றவொரு திட்டத்தைத்தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளம்

இ) கர்நாடகா

ஈ) மகாராஷ்டிரா

  • பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் – பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலன்காக்க அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று மனரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்க சென்னை காவல்துறையில் ‘தோழி’ என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக நடப்பு நிகழ்வுகள்

  • உத்திரமேரூர் அருகேயுள்ள எடமச்சி சிற்றூரில் உள்ள சின்னமலையில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால வகையைச் சார்ந்த கல்திட்டை, கல்வட்டங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

1. ‘National Safety Council’ was set up by which Union Ministry?

A) Ministry of Health and Family Welfare

B) Ministry of Labor

E) Ministry of Commerce and Industry

D) Ministry of Heavy Industries

  • National Safety Council (NSC) was set up by the Ministry of Labour in 1966 as a not–for–profit body on Safety, Health and Environment (SHE) at the national level. As per a press statement by the Ministry of Labour and Employment, S.N. Subrahmanyan, CEO and Managing Director of L&T Ltd, has been recently appointed as Chairman of the National Safety Council, for a period of three years.

2. Pradhan Mantri Matru Vandana Yojana, which crossed 1.75 crore beneficiaries, is a scheme under which Union Ministry?

A) Ministry of Health and Family Welfare

B) Ministry of Women and Child Development

C) Ministry of Social Justice and Empowerment

D) Ministry of Law and Justice

  • Pradhan Mantri Matru Vandana Yojana is a scheme under Ministry of Women and Child Development. It was launched in the year 2016.
  • Under this scheme, pregnant women and lactating mothers receive Rs 5,000 on the birth of their first child in three instalments. The Ministry recently announced that the scheme has crossed over 1.75 crore beneficiary women till 2020.

3. What is the capital city of Barbados, which recently received COVID–19 vaccines from India?

A) Bridgetown

B) Churchtown

C) Oistins

D) Bathsheba

  • Barbados is an island country located in the Caribbean region of North America. It is an independent British Commonwealth nation with Bridgetown as its capital.
  • Barbados Prime Minister Mia Mottley has thanked the Indian government for donation of COVID–19 vaccine doses. The country has a population of over 2.87 lakhs with 1641 coronavirus cases.

4. As per the third round of the Sero survey by ICMR, how many Indians out of every five were infected by the coronavirus?

A) 0.5

B) 1

C) 2

D) 5

  • As per the third round of the serological survey by the Indian Council of Medical Research (ICMR) finds that nearly one in five Indians were infected by the SARS–CoV–2 coronavirus.
  • This nation–wide survey found the affected cases till December 2020. A serological test detects whether a person has antibodies to the Sars–Cov–2, which indicates the occurrence of past infection.

5. India held its first High Level Dialogue on Trade and Investment with which association?

A) EU

B) BRICS

C) ASEAN

D) BIMSTEC

  • India held its first High Level Dialogue on Trade and Investment with the European Union. The dialogue was co–chaired by the Minister of Commerce and Industry Piyush Goyal.
  • During the 15th India–EU Leader’s Summit held in July 2020, the leaders from both the sides committed to establish this dialogue. It aims to provide ministerial–level guidance for promoting the bilateral trade and investment relations.

6. Srivilliputhur – Megamalai Tiger Reserve, which was recently approved, is located in which state?

A) Tamil Nadu

B) Kerala

C) Telangana

D) Karnataka

  • The Central government has given its approval for the creation of Srivilliputhur – Megamalai Tiger Reserve in Tamil Nadu.
  • This is the fifth tiger reserve in Tamil Nadu and will include the Meghamalai and Srivilliputhur Grizzled Squirrel Wildlife Sanctuaries. The State government will notify its fifth tiger reserve, after the notification from the Centre.

7. Which Union Ministry is to set up ‘Investment Clearance Cell’ single window clearance system?

A) Ministry of Health and Family Welfare

B) Ministry of Labor

C) Ministry of Commerce and Industry

D) Ministry of Heavy Industries

  • As the Union Commerce and Industry, the Central Government is working on establishing a Single Window System for clearances and approvals of industries in the country.
  • A centralized Investment Clearance Cell was proposed last year, to prevent the investors from visiting various IT platforms and offices to obtain clearances. This one–stop digital platform will enable them receive all central and state clearances and approvals required.

8. Who is the first cricket player to score a double century in the 100th test match?

A) Joe Root

B) Virat Kohli

C) M S Dhoni

D) Ben Stokes

  • The England Cricket Team Captain Joe Root has become the first cricket player to score a double century in the 100th test match. Joe Root achieved this feat during the test match against India at Chennai. He scored fifth double century of his career.

9. Brookesia nana, which was making news recently, is one of the smallest species of which family?

A) Chameleon

B) Frog

C) Lizard

D) Turtles

  • A German–Madagascan expedition team has discovered a chameleon subspecies in Madagascar, which might be the smallest reptile on earth. Named as Brookesia nana, the male reptile has a body of only 13.5 mm and top to tail length of 22mm.
  • As per the Scientists, the species native to northern Madagascar rainforest might be threatened by extinction.

10. Which state has launched a project called ‘Thozhi’?

A) Tamil Nadu

B) Kerala

C) Telangana

D) Karnataka

  • A unit called ‘Thozhi’ has been set up at the Chennai Police to provide direct and psychological assistance and counseling to children, women and their families affected by sexual offenses in their place of residence.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!