Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

10th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

10th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 10th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘சீமா பவானி’ என்பது எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) எந்தக் குழுவின் பெயர்?

அ) ஒட்டகக் குழு

ஆ) கிரீக் குரோகடைல்

இ) அனைத்து பெண்கள் பைக்கர் அணி 

ஈ) அனைத்து பெண்கள் கிரீக் குரோகடைல்

  • ‘சீமா பவானி’ என்பது எல்லைப் பாதுகாப்புப் படையின் அனைத்து பெண்கள் பைக்கர் அணியாகும்.
  • குடியரசு நாளன்று இந்த அணியினர் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். இதில் பல்வேறு நிலைகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண் இராணுவத்தினர் கலந்துகொள்கின்றனர். 2016ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘சீமா பவானி’ அணி, கடந்த 2018ம் ஆண்டு குடியரசு நாள் அணிவகுப்பில் முதன்முறையாக பங்கேற்றது.

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற அடல் சுரங்கப்பாதை அமைந்துள்ள மாநிலம் / யூடி எது?

அ) ஹிமாச்சல பிரதேசம் 

ஆ) அருணாச்சல பிரதேசம்

இ) சிக்கிம்

ஈ) உத்தரகாண்ட்

  • அடல் சுரங்கப்பாதையானது மலைப்பாங்கான ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. இது லே-மனாலி நெடுஞ்சாலையில் ரோஹ்தாங் கணவாய்க்கு அடியில் 9 கிமீ நீளத்தில் அமைந்துள்ள அனைத்து காலநிலைக்கும் ஏற்ற சாலையாகும். 2022ஆம் ஆண்டின் முதல் நாளில் இந்தச் சுரங்கப்பாதை அதிகபட்ச எண்ணிக்கையிலான வாகனங்களைச் சந்தித்தது.
  • அதிகாரிகளின் கூற்றுப்படி, 2022 ஜன.1 அன்று மொத்தம் 7,515 வாகனங்கள் சுரங்கப்பாதையைக் கடந்தன. இது, 2020 அக்.3ஆம் அன்று திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இந்திரா காந்தி இராஷ்ட்ரிய உரன் அகாதமி அமைந்துள்ள மாநிலம் எது?

அ) உத்தர பிரதேசம் 

ஆ) உத்தரகாண்ட்

இ) பீகார்

ஈ) மேற்கு வங்காளம்

  • இந்திரா காந்தி இராஷ்ட்ரிய உரன் அகாதமி (IGRUA) இந்திய அரசாங்கத்தால் 1986ஆம் ஆண்டு பர்சத்கஞ்ச் விமான நிலையத்தில் நிறுவப்பட்டது. இது உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது.
  • ஒரு தன்னாட்சிமிக்க அமைப்பான IGRUA, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின்கீழ் ஓர் ஆளுங்குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் இந்திரா காந்தி தேசிய உரன் அகாடமி, 18 பயிற்சி விமானங்கள் மூலம் 19,000 மணிநேரம் விமானப்பயிற்சி அளித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் பயிற்சி விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்து 121 பேருக்கு 25,000 மணி நேரம் பயிற்சியளிக்க இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

4. சமீப செய்திகளில் இடம்பெற்ற, “புளூ புக்” என்பது எந்த ஆயுதப்படை / குழுவின் கையேடாகும்?

அ) மத்திய ரிசர்வ் போலீஸ் படை

ஆ) சிறப்பு பாதுகாப்புக் குழு 

இ) தேசிய பாதுகாப்புப் படை

ஈ) இந்திய கடலோர காவல்படை

  • “Blue Book” என்பது சிறப்பு பாதுகாப்புக் குழுவின் (Special Protection Group) கையேட்டின் பெயராகும். இது இந்தியப் பிரதமரை சிறப்புற பாதுகாக்கிறது. இந்தியப் பிரதமர் மோடி, பஞ்சாப் போராட்டவாதிகளின் மறியல் காரணமாக ஒரு பா -லத்தில் சுமார் 20 நி காத்திருக்க வேண்டியதாகி விட்டது.
  • வழக்கமாக, பிரதமரின் நிரல்கள் முதலமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறைத் தலைவர் உள்ளிட்ட மாநிலத்தின் உயர்மட்டத் தலைமையுடன் பகிரப்படும். SPG, பாதுகாப்புத் திட்டத்திற்காக மாநிலக் காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளுடன் ஒருங்கிணையும்.

5. சீக்கியர்களின் 5வது தக்தாக தக்த் தம்தாமா சாகிப்பை அங்கீகரித்துள்ள மாநிலம் / யூடி எது?

அ) பஞ்சாப்

ஆ) தில்லி 

இ) பீகார்

ஈ) உத்தர பிரதேசம்

  • தக்த் தம்தாமா சாகிப்பை சீக்கியர்களின் ஐந்தாவது தக்த் ஆக அங்கீகரிப்பதற்காக, தில்லி சீக்கிய குருத்வாரா சட்டம், 1971’இல் திருத்த மசோதாவை தில்லி சட்டமன்றம் நிறைவேற்றியது. ‘தக்த்’ அல்லது ‘சிம்மாசனம்’ என்பது சீக்கியர்களுக்கான தற்காலிக அதிகாரத்தின் இடமாகும்.
  • பஞ்சாபில் மூன்று மற்றும் மகாராஷ்டிரா மற்றும் பீகாரில் தலா 1 என மொத்தம் ஐந்து சீக்கிய தக்த்துகள் உள்ளன.

6. 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த பால்கன் தடகள வீரராக அறிவிக்கப்பட்ட நோவக் ஜோகோவிச் சார்ந்த நாடு எது?

அ) பல்கேரியா

ஆ) சைபீரியா

இ) செர்பியா 

ஈ) கிரேக்கம்

  • செர்பியாவைச் சார்ந்த முன்னணி டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் 2021ஆம் ஆண்டின் சிறந்த பால்கன் தடகள வீரராக ஏழாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
  • உலகின் நெ.1 இடத்தைப் பிடித்துள்ள அவர் இந்த ஆண்டு நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றார். இந்த வாக்கெடுப்பில் கிரேக்க கூடைப்பந்து வீரர் ஜியானிஸ் அன்டெட்டோகவுன்ம்போ 2ஆவது இடத்தைப் பிடித்தார். அதைத் தொடர்ந்து மற்றொரு கிரேக்க நீளம் தாண்டுதல் வீரர் மில்டியாடிஸ் டென்டோக்லு உள்ளார்.

7. ஆராய்ச்சி சாதனங்களுடன் ‘சிமோர்க்’ செயற்கைக் கோள் தாங்கி ஏவுகலத்தை ஏவிய நாடு எது?

அ) வங்காளதேசம்

ஆ) ஈரான் 

இ) இஸ்ரேல்

ஈ) ஐக்கிய அரபு அமீரகம்

  • ஈரான் 3 ஆராய்ச்சி சாதனங்களைக் கொண்ட ‘சிமோர்க்’ என்ற செயற்கைக்கோள் தாங்கி ஏவுகலத்தை ஏவியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
  • ‘சிமோர்க்’ என்பது ஈரான் மொழியில் ‘பீனிக்ஸ்’ என பொருள்கொள்ளப்படுகிறது. அந்த நாடு 470 கிமீட்டர் (290 மைல்) உயரத்தில் அந்தச் சாதனங்களை ஏவியது. 2018 மே மாதத்தில் அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகி ஈரானுக்கு எதிராக மீண்டும் பொருளாதாரத்தடைகளை விதித்தது.

8. கடந்த 2021ஆம் ஆண்டில் அதிக புலிகள் இறப்பைப் பதிவு செய்த மாநிலம் எது?

அ) கர்நாடகா

ஆ) மத்திய பிரதேசம் 

இ) மகாராஷ்டிரா

ஈ) குஜராத்

  • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் இணைய தளத்தில் உள்ள தரவுகளின்படி, கடந்த 2021ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 126 புலிகள் இறந்துள்ளன.
  • 126 புலிகளுள், 60 புலிகள் வேட்டையாலும் விபத்தாலும் இறந்ததாக கூறப்படுகிறது. இதில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் (44), மகாராஷ்டிராவில் (26), கர்நாடகாவில் (14) புலிகள் இறந்துள்ளன.

9. உலகிலேயே மிகநீளமான மெட்ரோ ரயில் நெட்வொர்க் உள்ள நகரம் எது?

அ) சென்னை

ஆ) புது தில்லி

இ) ஷாங்காய் 

ஈ) டோக்கியோ

  • அண்மையில் செயல்பாட்டுக்கு வந்த இரண்டு புதிய வழித் தடங்களுடன் சீனாவின் ஷாங்காய் உலகின் மிக நீளமான மெட்ரோ இரயில் நெட்வொர்க்கைக் கொண்ட தனது நிலையைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
  • இந்தப் புதிய பாதைகள் நகரின் மெட்ரோ நெட்வொர்க்கின் மொத்த நீளத்தை 831 கிமீஆக உயர்த்தியது. ஷாங்காய் மெட்ரோ ரயில் நெட்வொர்க்கிற்கு அடுத்தபடியாக பெய்ஜிங் உள்ளது. தில்லி மூன்றாவது இடத்தில் உள்ளது.

10. ‘அட்டகாமா லார்ஜ் மில்லிமீட்டர் / சப்மில்லிமீட்டர் அரே (ALMA)’ அமைந்துள்ள நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) சிலி 

இ) ஆஸ்திரேலியா

ஈ) ரஷ்யா

  • சிலியில் உள்ள ‘Atacama Large Millimeter/submillimeter Array (ALMA)’ஐ அறிவியலாளர்கள் குழு WB89-789 பகுதியில் புதிதாக உதித்த விண்மீனை (புரோட்டோ ஸ்டார்) கண்காணிக்கப் பயன்படுத்தியது. இது தீவிர வெளிப்புற கேலக்ஸியில் அமைந்துள்ளது.
  • அறிவியலாளர்கள் கரிமம்-, உயிர்வளி-, நைட்ரஜன்-, சல்பர்- மற்றும் சிலிக்கான்-தாங்கி மூலக்கூறுகளை அதில் கண்டறிந்துள்ளனர். புரோட்டோஸ்டாரின் வேதி செறிந்த வளி மற்றும் அதனுடன் தொடர்புடைய கூடு முதன்முறையாக நமது அண்டத்தின் விளிம்பில் கண்டறியப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பத்திரிகையாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் இன்று தொடக்கம்

ஊதிய உச்சவரம்பின்றி அனைத்து பத்திரிகையாளர்களையும் அரசின் காப்பீட்டில் சேர்ப்பதற்கான திட்டம் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கப்படுகிறது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.

பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் இப்போது `72 ஆயிரமாக உள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் குடும்பங்கள் வருமான உச்சவரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்த்துக் கொள்ளப்படுவர் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான அரசு உத்தரவும் வெளியாகியுள்ளது.

2. ஒமைக்ரான் ஆழிப்பேரலை! | கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் ஒமைக்ரான் உருமாற்றம் குறித்த தலையங்கம்

உலகம் முழுவதும் அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் ஒமைக்ரான் உருமாற்றம் ஏற்படுத்தும் அச்சுறுத்தல் அதிர்ச்சி அளிக்கிறது. ஆழிப்பேரலையாக மீண்டும் ஒருமுறை கொவைட் 19 தாக்கக் கூடும் என்கிற உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையைப் புறந்தள்ளிவிட முடியாது.

சீனாவின் பல நகரங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருப்பதால் அத்தியாவசியப் பொருள்கள் கூட இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள் என்று செய்திகள் வருகின்றன. அமெரிக்காவிலும், ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இதுவரை இல்லாத அளவிலான பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன.

ஒருபுறம் ஒமைக்ரான் உருமாற்றம் பரவுகிறது என்றால், இன்னொருபுறம் ஏறத்தாழ 40% அளவில் டெல்டா உருமாற்ற பாதிப்பும் காணப்படுகிறது.

பிரிட்டன், துருக்கி, கிரீஸ், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், பின்லாந்து, ஆஸ்திரேலியா என தீநுண்மித் தொற்றின் பரவல் எல்லைகளும் கண்டங்களும் கடந்து காட்டுத்தீ போலப் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

உச்சநீதிமன்றத்தில் 4 நீதிபதிகள், 150 பணியாளர்களை தீநுண்மித் தொற்று பாதித்திருக்கிறது என்றால், மக்களவை – மாநிலங்களவை செயலகங்களில் பணியாற்றும் சுமார் 400 பேரையும் பாதித்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் டெல்டா உருமாற்றம் ஏற்படுத்திய, நிலைகுலைய வைத்த பாதிப்புகளின் பின்னணியில் இப்போதைய ஒமைக்ரான் உருமாற்றப் பரவலை நாம் கவனக்குறைவாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 12,895 பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன.

அவற்றில் ஏறத்தாழ பாதிக்குப் பாதி, அதாவது 6,156 பாதிப்புகள் சென்னையில் மட்டுமாகக் காணப்படுகிறது. பாதிக்கப்பட்டவா்களில் 85% பேருக்கு ஒமைக்ரான் உருமாற்ற பாதிப்பு காணப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவிக்கிறார்.

சர்வதேச அளவில் அதிவிரைவாகப் பரவிக் கொண்டிருக்கும் ஒமைக்ரான் உருமாற்றத்தை எதிர்கொள்வதற்கு உடனடியாக எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்தும் மூன்றாவது தவணை (பூஸ்டர் டோஸ்) போடப்படுவது அவசியம் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் ஒமைக்ரான் உருமாற்றம் பாதிக்கிறது என்றாலும்கூட, பாதிப்பு கடுமையாக இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் பூஸ்டர்டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை தடுப்பூசி அத்தியாவசியமாகிறது.

இந்தியாவில் ஏறத்தாழ 5 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 2.7 கோடி பேர் முன்களப் பணியாளர்களும், இணைய நோய் உள்ளவர்களும், மூத்த குடிமக்களும். இரண்டாவது தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டு ஆறு முதல் 10 மாதங்கள் கழிந்துவிட்ட நிலையில் அவர்களது கொவைட் 19-க்கான எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும். அதனால் உடனடியாக மூன்றாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

தமிழகத்தில் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணி முதல்வர் மு க ஸ்டாலினால் இன்று முதல் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் 5.65 லட்சம் மருத்துவப் பணியாளர்கள், 9.78 லட்சம் முன்களப் பணியாளர்கள், 20.83 லட்சம் மூத்த குடிமக்கள் என 36.26 லட்சம் பேர் மூன்றாவது தவணை தடுப்பூசிக்குத் தகுதி பெற்றவர்கள். தமிழகத்தில் ஏற்கெனவே 71 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் நிலையில், கால தாமதமில்லாமல் 3ஆவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி இருப்பது வரவேற்புக்குரியது.

அகில இந்திய அளவில் சுமார் 1.05 கோடி சுகாதாரப் பணியாளர்கள், 1.9 கோடி முன்களப் பணியாளர்கள், இணை நோய்களும் மூத்த குடிமக்களும் என்று 2.75 கோடி பேர் மூன்றாவது தவணை தடுப்பூசிக்குத் தகுதி பெற்றவர்கள். தமிழகத்தைப் போலவே எல்லா மாநிலங்களும் மூன்றாவது தவணை தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுபடுத்தினால்தான் ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து அவா்களைப் பாதுகாக்க முடியும்.

மூன்றாவது தவணைக்கு எந்தத் தடுப்பூசி மருந்தை பயன்படுத்துவது என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. மூன்றாவது தவணையை செயல்படுத்தும் பல்வேறு நாடுகளில், பைசர் நிறுவனத்தின் எம்ஆர்என்ஏ பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது. இரண்டு தவணைக்கு மேல் கோவிஷீல்டு தடுப்பூசியால் முந்தைய அளவு பாதுகாப்பை வழங்க முடியுமா என்கிற கேள்வி சிலரால் எழுப்பப்படுகிறது. இந்தியாவில் மூன்றாவது தவணையும் போடுவதற்கான கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பு போதுமான அளவு இருக்கிறது.

90% பேர் கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் எழுப்பப்பட்டிருக்கும் ஐயப்பாடு, சற்று கவலை அளிக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன. அவற்றில் கோவாக்ஸினும், சைகோவ் டி 2 மட்டுமே அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி பெற்றிருக்கின்றன.

இந்தியாவில் சீரம் இன்ஸ்டியூட்டால் தயாரிக்கப்படும் கோவாவேக்ஸ் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் பயன்பாட்டில் இல்லை. இப்பின்னணியில் அனைவருக்கும் இன்னும் கூட முதல் 2 தவணை தடுப்பூசி போடாமல் இருக்கிறோம் என்பதும், மூன்றாவது தவணை தடுப்பூசிக்கு ஐந்து கோடிக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள் என்பதும் நாம் நினைவில் கொள்ளவேண்டிய எதார்த்தங்கள்.

போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி போடுவதன்மூலம் தான் கொவைட் 19-இன் அடுத்த ஆழிப்பேரலையை எதிர்கொள்ள முடியும்!

3. ஆழ்கடல் சோதனை ஓட்டத்தில் ஐஎன்எஸ் விக்ராந்த்

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கிப் போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மீண்டும் ஆழ்கடல் சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலானது ரூ.23,000 கோடி செலவில் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இதன் மூலமாக விமானம் தாங்கிக் கப்பலை சொந்தமாகக் கட்டும் திறன் கொண்ட வெகுசில நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது.

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் முதலாவது சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் 5 நாள்களுக்கு நடைபெற்றது. பின்னர் கடந்த ஆண்டு அக்டோபரில் 10 நாள்களுக்கு அக்கப்பல் சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், அக்கப்பலின் சோதனை ஓட்டம் மீண்டும் நடைபெற்று வருகிறது.

4. சாகிப்சாதா ஸோராவர் சிங், சாகிப்சாதா பத்தே சிங் தியாகத்தைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 26-ம் தேதியை வீர் பால் தினமாக பிரதமர் அறிவித்தார்

ஶ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் பர்காஷ் புரப் புனிதமான தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, சாகிப்சாதா ஸோராவர் சிங், சாகிப்சாதா பத்தே சிங் தியாகத்தைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 26-ம் தேதியை வீர் பால் தினமாக அறிவித்தார்.

5. சீனாவில் செயல்படும் ஆசிய உள்கட்டமைப்பு வங்கி துணை தலைவரானார் உர்ஜித்

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேல், ஆசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கியின் (ஏஐஐபி) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு ரகுராம் ராஜன் ஓய்வு பெற்ற பிறகு, ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்றவர் உர்ஜித் படேல்.

இவர் தனது பதவிக்காலம் முடியும் முன்பாக கடந்த 2018ம் ஆண்டு. சொந்தகாரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், உர்ஜித் படேல் தற்போது ஆசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கியின் துணைத் தலைவராாக நியமிக்கப்பட்டுள்ளார்.

துணைத் தலைவராக இருந்த டி.ஜே. பாண்டியனின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து, அந்த பதவியில் உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள். அடுத்த மாதம் அவர் பொறுப்பேற்க உள்ளார்.

ஏஐஐபி வங்கி சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கடன் வழங்கி வருகிறது. இந்த வங்கியை உருவாக்கிய உறுப்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த வங்கியில் சீனா 26.06 சதவீத பங்குகளையும், இந்தியா, 7.5 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.

6. அடிலெய்ட் டென்னிஸ்: போபண்ணா/ராம்குமாா் ஜோடி சாம்பியன்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அடிலெய்ட் டென்னிஸ் போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ராம்குமாா் ராமநாதன் இணை சாம்பியன் ஆகி அசத்தியுள்ளது.

ஏடிபி டூா் போட்டிகளில் இருவரும் ஜோடி சோ்ந்த முதல் போட்டியிலேயே இவ்வாறு பட்டம் வென்றுள்ளனா். ஏடிபி இரட்டையா் போட்டியில் போபண்ணாவுக்கு இது 20-ஆவது பட்டமாக இருக்கும் நிலையில், ராம்குமாருக்கு இது முதல் பட்டமாகும்.

வெற்றிக் கோப்பையுடன் இருவரும், தலா 250 ஏடிபி புள்ளிகள் பெறுகின்றனா். அத்துடன், மொத்த ரொக்கப் பரிசான ரூ.13.88 லட்சத்தையும் அவா்கள் பகிா்ந்துகொள்கின்றனா். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் ஒற்றையா் பிரிவு தகுதிச் சுற்றில் களம் காண இருக்கும் நிலையில், ராம்குமாருக்கு இந்த சாம்பியன் பட்டம் நல்லதொரு உத்வேகத்தை அளிப்பதாக இருக்கும்.

முன்னதாக, இப்போட்டியின் இறுதிச் சுற்றில் போபண்ணா/ராம்குமாா் ஜோடி 7-6 (8/6), 6-1 என்ற செட்களில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த குரோஷியாவின் இவான் டோடிக்/பிரேஸிலின் மாா்செலோ மெலோ இணையை 1 மணி நேரம் 21 நிமிஷங்கள் போராடி வென்றது.

ஆட்டத்தில் இந்திய இணை தான் சந்தித்த 4 பிரேக் பாய்ண்ட்களையும் தக்க வைத்துக் கொண்டதுடன், எதிா் ஜோடியின் பிரேக் பாய்ண்ட்களை இரு முறை பிரேக் செய்தனா். இரு செட்களிலும் எதிா் தரப்பு வீரா்களின் சா்வ்களை போபண்ணா திறம்பட எதிா்கொண்டதும், ராம்குமாா் ஆல்-ரவுண்ட் அசத்தல் காட்டியதும் ஆட்டத்தை அவா்களுக்கு சாதகமாக மாற்றியது.

வாகை சூடினாா் மான்ஃபில்ஸ்

இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில், பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ் சாம்பியன் ஆனாா். இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த மான்ஃபில்ஸ் 6-4, 6-4 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த ரஷியாவின் காரென் கசானோவை தோற்கடித்தாா். இது மான்ஃபில்ஸின் 11-ஆவது ஒற்றையா் பிரிவு பட்டமாகும்.

பா்ட்டிக்கு இரு கோப்பை

அடிலெய்ட் இன்டா்னேஷனல் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பா்ட்டி கோப்பை வென்றாா்.

உலகின் முதல்நிலை வீராங்கனையாக இருக்கும் பா்ட்டி தனது இறுதிச் சுற்றில் 6-3, 6-2 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆவது இடத்திலிருந்த கஜகஸ்தானின் எலனா ரைபாகினாவை தோற்கடித்தாா். ஒற்றையா் பிரிவில் பா்ட்டிக்கு இது 14-ஆவது பட்டமாகும். இந்த வெற்றியுடன் அவா் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

பா்ட்டி/சாண்டா்ஸ் வெற்றி: மகளிா் இரட்டையா் பிரிவிலும் ஆஷ்லி பா்ட்டி, சக நாட்டவரான ஸ்டோா்ம் சாண்டா்ஸுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றாா். பா்ட்டி/சாண்டா்ஸ் இணை இறுதிச் சுற்றில் 6-1, 6-4 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆவது இடத்திலிருந்த ஸ்லோவேனியாவின் ஆண்ட்ரியா கிளெபாக்/குரோஷியாவின் டரியா ஜுராக் ஷ்ரிபா் ஜோடியை தோற்கடித்தது.

7. ஏடிபி கோப்பை வென்றது கனடா

ஏடிபி கோப்பை ஆடவா் அணிகள் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் கனடா 2-0 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியன் ஆனது. கனடா இப்போட்டியில் கோப்பை வென்றது இது முதல் முறையாகும்.

இறுதிச் சுற்றின் இரு ஆட்டங்களுமே ஒற்றையா் பிரிவில் நடைபெற்றது. இதில் கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே 7-6 (7/3), 6-3 என்ற செட்களில் ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டா அகட்டை வென்றாா். மற்றொரு ஆட்டத்தில் கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவ் 6-4, 6-3 என்ற நோ் செட்களில் பாப்லோ கரீனோ பஸ்டாவை வீழ்த்தினாா்.

8. நிலவில் தண்ணீா் ஆதாரம்: சீன விண்கலம் கண்டுபிடிப்பு

நிலவின் தரைப்பரப்பில் தண்ணீா் இருப்பதற்கான ஆதாரங்களை சீனா விண்கலம் கண்டறிந்துள்ளது.

நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சாங்கே-5 என்ற விண்கலத்தை 2020, நவம்பரில் சீனா அனுப்பியது. நிலவின் மத்திய உயா் அட்சரேகை பகுதியில் தரையிறங்கிய அந்த விண்கலத்தின் லேண்டரில் உள்ள ஒரு கருவி, தரைப்பரப்பில் உள்ள பாறையின் நிறமாலை பிரதிபலிப்பை அந்த இடத்திலேயே அளந்தது. பின்னா், 1, 731 கிராம் எடையிலான பாறை மாதிரியுடன் விண்கலம் பூமிக்குத் திரும்பியது.

அந்தப் பாறை மாதிரியை சீன அறிவியல் அகாதெமியைச் சோ்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனா். அதன் முடிவுகள் ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ இதழில் வெளியாகியுள்ளது.

அதன்படி, நிலவின் தரைப்பரப்பில் உள்ள பாறைப் படிவங்களில் ஒரு டன்னுக்கு 120 கிராம் தண்ணீா் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. சந்திரனின் நிலப்பரப்பில் அதிக ஈரப்பதத்துக்கு காரணம் சூரிய காற்று ஆகும். அதுதான் தண்ணீரை உருவாக்கும் ஹைட்ரஜனை கொண்டு வந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

1. ‘Seema Bhawani’ is the name of which team of the Border Security Force (BSF)?

A) Camel Contingent

B) Creek Crocodile

C) All–women Biker Team 

D) All–women Creek Crocodile

  • ‘Seema Bhawani’ is the all–women biker team of the Border Security Force (BSF). The team will showcase their talent on the Republic Day. Over 100 female troops from different ranks are taking part in the event. Seema Bhawani team was formed in the year 2016 and they participated in the Republic Day parade in 2018, for the first time.

2. Atal Tunnel, which was seen in the news recently, is located in which state/UT?

A) Himachal Pradesh 

B) Arunachal Pradesh

C) Sikkim

D) Uttarakhand

  • Atal Tunnel is located in the hilly state of Himachal Pradesh. It is all–weather 9km road under the Rohtang Pass on the Leh–Manali Highway. The Tunnel saw a record number of vehicles crossing on the first day of 2022. As per officials, a total of 7,515 vehicles crossed the tunnel on January 1, 2022. This is the highest ever count since it was inaugurated on October 3, 2020.

3. Indira Gandhi Rashtriya Uran Akademi (IGRUA), which was making news recently, is located at which state?

A) Uttar Pradesh 

B) Uttarakhand

C) Bihar

D) West Bengal

  • Indira Gandhi Rashtriya Uran Akademi (IGRUA) was established by the Government of India in the year 1986 at Fursatganj Airfield. It is located in the state of Uttar Pradesh. IGRUA is an Autonomous Body and it is administered by a Governing Council under Ministry of Civil Aviation.
  • During 2021, IGRUA recorded 19000 hours of flying as against an average yearly flying output of 15000 per year during the previous five years. It also targets 25000 flying hours in 2022.

4. “Blue Book” which was seen in the news, is the manual of which armed force / group?

A) Central Reserve Police Force

B) Special Protection Group 

C) National Security Guard

D) Indian Coast Guard

  • “Blue Book” is the name of the manual of the Special Protection Group (SPG), which exclusively protects India’s Prime Minister. Indian Prime Minister Narendra Modi spent 20 minutes on a Punjab highway blocked by protesting farmers in a security breach.
  • Usually, the PM’s plan is shared with the state’s top leadership including the Chief Minister, Home Minister and police chief. SPG coordinates with State Police and other officers for a security plan.

5. Which state/UT recognised Takht Damdama Sahib, as the fifth Takht of Sikhs?

A) Punjab

B) Delhi 

C) Bihar

D) Uttar Pradesh

  • Delhi Assembly passed an amendment Bill to the Delhi Sikh Gurdwara Act, 1971, to recognise Takht Damdama Sahib as the fifth Takht of Sikhs. A Takht, or a throne, is a seat of temporal authority for Sikhs. There are five Sikh Takhts, three in Punjab and one each in Maharashtra and Bihar.

6. Novak Djokovic, who was named the ‘Best Balkan Athlete of the year’ 2021, is from which country?

A) Bulgaria

B) Siberia

C) Serbia 

D) Greece

  • Ace Tennis Player Novak Djokovic from Serbia was named the Best Balkan Athlete of the year for a record seventh time. The 34–year–old player is ranked No. 1 in the world and won three of the four Grand Slam tournaments this year. Greek basketball player Giannis Antetokounmpo was second in the poll, followed by another Greek long jumper Miltiadis Tentoglu.

7. Which country launched the ‘Simorgh’ satellite carrier rocket with research devices?

A) Bangladesh

B) Iran 

C) Israel

D) UAE

  • Iran has launched a satellite carrier rocket ‘Simorgh’ bearing three research devices into space, as per the country’s media. ‘Simorgh’ translates to ‘Phoenix’ in Iran language. The country has launched the devices at an altitude of 470 kilometres (290 miles). United States unilaterally withdrew from the nuclear deal in May 2018 and re–imposed sanctions against Iran.

8. Which Indian state recorded the highest Tiger deaths in 2021?

A) Karnataka

B) Madhya Pradesh 

C) Maharashtra

D) Gujarat

  • As per the data available in the National Tiger Conservation Authority (NTCA)’s website, a total of 126 tiger deaths were recorded in the country in 2021. It is said that out of 126 reported tiger deaths, 60 were due to poachers, accidents, animal–human conflict outside protected areas. The maximum tiger deaths took place in Madhya Pradesh (44), followed by Maharashtra (26) and Karnataka (14).

9. Which city has the longest metro rail network in the world?

A) Chennai

B) New Delhi

C) Shanghai 

D) Tokyo

  • China’s Shanghai has maintained its position as having the longest metro rail network in the world by adding two new lines that went into operation recently. The new lines took the total length of the city’s metro network to 831 km. Shanghai’s Metro network is followed by Beijing, and Delhi was ranked third.

10. ‘Atacama Large Millimeter/submillimeter Array (ALMA)’ is located in which country?

A) USA

B) Chile 

C) Australia

D) Russia

  • A team of Scientists used the Atacama Large Millimeter / submillimeter Array (ALMA) in Chile to observe a newborn star (protostar) in the WB89–789 region.
  • It is located in the extreme outer Galaxy. Scientists have detected carbon–, oxygen–, nitrogen–, sulfur–, and silicon–bearing molecules were detected. The protostar and the associated cocoon of chemically–rich gas was detected at the edge of our Galaxy, for the first time.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!