Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

10th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

10th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 10th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘லோகதந்திரா கே சுவர்’ மற்றும் ‘குடியரசு நெறிமுறைகள்’ ஆகியன கீழ்காணும் எந்த இந்திய ஆளுமையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளாகும்?

அ. நரேந்திர மோடி

ஆ. இராம்நாத் கோவிந்த் 

இ. வெங்கையா

ஈ. S ஜெய்சங்கர்

  • குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் நான்காம் தொகுதியை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஆகியோர் வெளியிட்டனர். தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் உள்ள வெளியீடுகள் பிரிவால் இந்தப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2. உயிரி மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் துறையில் கீழ்காணும் எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ. ஜப்பான்

ஆ. பிரான்ஸ்

இ. அமெரிக்கா 

ஈ. ஆஸ்திரேலியா

  • மத்திய அரசின் உயிரித்தொழில்நுட்பத்துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், அமெரிக்காவின் சர்வதேச AIDS தடுப்பூசி முன்னெடுப்பு, இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. உயிர்க்கொல்லி நோய், காசநோய், COVID உள்ளிட்ட நோய்களைத்தடுப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும், தேவையான புதிய உயிரி மருத்துவக்கருவிகள் & தொழில்நுட்பங்களை கண்டறிவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3. இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) எந்த வகை வங்கிகளுக்கு வாடிக்கையாளரின் வீடுகளுக்கேச்சென்று வங்கிச் சேவைகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது?

அ. உள்ளூரக வங்கிகள்

ஆ. நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 

இ. ஊரக கூட்டுறவு வங்கிகள்

ஈ. கொடுப்பனவு வங்கிகள்

  • இந்திய ரிசர்வ் வங்கி கூட்டுறவு வங்கிகள்மூலம் வழங்கப்படும் வீட்டுக்கடன் வரம்பை இருமடங்காக உயர்த்தியது. அது முதல் நிலை நகரங்களுக்கு `30 முதல் `60 இலட்சமாகவும், இரண்டாம் நிலை நகரங்களுக்கு `70 இஇலட்சம் முதல் `1.40 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்ளடக்கிய வளர்ச்சியை ஆதரிப்பதற்காக மலிவு விலை வீடுகள் மற்றும் குடியிருப்புத் திட்டங்களுக்கு ஊரக கூட்டுறவு வங்கிகள் நிதியளிக்கவும் RBI அனுமதியளித்துள்ளது.
  • வாடிக்கையாளர்களின், குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வங்கிச்சேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் அவர்களின் வீடுகளுக்கேச் சென்று வங்கிச் சேவைகளை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

4. தொழில்நுட்ப வளர்ச்சி நிதிய திட்டத்துடன் தொடர்புடைய ஒன்றிய அமைச்சகம் எது?

அ. அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம் 

இ. மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. MSME அமைச்சகம்

  • தொழில்நுட்ப வளர்ச்சி நிதிய (TDF) திட்டத்தின்கீழ் ஒரு திட்டத்திற்கு `10 கோடி முதல் `50 கோடி வரை உயர்த்த பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். 2022-23 ஒன்றிய அரசு பட்ஜெட்டில், பாதுகாப்பு R&D பட்ஜெட்டின் 25 சதவீதம் தனியார் தொழிற்துறை, துளிர் நிறுவனங்கள் மற்றும் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டது. TDF திட்டமானது MSME-கள் மற்றும் துளிர் நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் தொழினுட்பங்களின் உள்நாட்டு வளர்ச்சியை ஆதரிக்கிறது.

5. OECD-இன் சமீபத்திய அறிக்கையின்படி (2022 ஜூன்) FY23இல் இந்தியாவின் GDP வளர்ச்சிக் கணிப்பு என்ன?

அ. 8.2%

ஆ. 7.5%

இ. 7.2%

ஈ. 6.9% 

  • பொருளியல் கூட்டுறவு & வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) இந்தியாவின் வளர்ச்சியை 2022-23 நிதியாண்டிற்கு 8.1%-லிருந்து 6.9%-ஆகக் குறைத்துள்ளது. 2023ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் 7.2% வளர்ச்சி மதிப்பீட்டைக் காட்டிலும் குறைவாகவுள்ளது. உலக வங்கியானது தனது ஏப்ரல் மாத மதிப்பாய்வில் இந்தியாவின் 2022-23 நிதியாண்டிற்கான முன்கணிப்பை 8.5%-இலிருந்து 7.5%-ஆகக் குறைத்தது.

6. அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய சாதனை ஆய்வு – 2021-இல் கீழ்காணும் எந்தெந்த வகையான பள்ளிகள் சேர்க்கப்பட்டிருந்தன?

அ. அரசுப் பள்ளிகள்

ஆ. அரசு உதவி பெறும் பள்ளிகள்

இ. உதவி பெறாத தனியார் பள்ளிகள்

ஈ. மேற்கண்ட அனைத்தும் 

  • பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையானது தேசிய சாதனை ஆய்வு (NAS) 2021 அறிக்கையை வெளியிட்டது. இது நாட்டில் 3, 5, 8 மற்றும் 10ஆம் வகுப்புகளில் உள்ள மாணாக்கரின் கற்றல் திறன்பற்றிய விரிவான மதிப்பீட்டை வழங்குகிறது. கடைசியாக தேசிய சாதனை ஆய்வு 2017-இல் நடத்தப்பட்டது. அதேசமயம் NAS 2021 ஆனது 2021 நவ.12 அன்று அகில இந்திய அளவில் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உதவிபெறாத தனியார் பள்ளிகளை உள்ளடக்கியதாக நடத்தப்பட்டது.
  • NAS 2021-இல் 720 மாவட்டங்களில் உள்ள 1.18 இஇலட்சம் பள்ளிகளில் இருந்து சுமார் 34 இஇலட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணாக்கரின் முன்னேற்றம் மற்றும் கற்றல் திறனைக் கல்வி முறையின் திறமையின் குறிகாட்டியாக மதிப்பீடு செய்வதே 2021 – NASஇன் நோக்கமாகும்.

7. பிரதமர் மோடி அண்மையில் `1430 கோடி மதிப்பிலான பல்முனை சரக்குப் போக்குவரத்துப் பூங்காவிற்குக் கீழ்காணும் எந்தப் பெருநகரில் அடிக்கல் நாட்டினார்?

அ. மும்பை

ஆ. தில்லி

இ. சென்னை 

ஈ. கொல்கத்தா

  • சென்னையில் `1430 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் பல்முனை சரக்குப் போக்குவரத்துப் பூங்காவிற்கு பிரதமர் சமீபத்தில் அடிக்கல் நாட்டினார். இதர தனித்துவமான பல்செயல்பாடுகொண்ட பூங்காக்களுக்கு இடையே தடையற்ற சரக்குப் போக்குவரவை வழங்கும் வகையில் இப்பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. 31,530 கோடி மதிப்பிலான 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.

8. கீழ்காணும் எந்த நகரத்தில், இராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார்?

அ. அலிகார் 

ஆ. புனே

இ. குவாலியர்

ஈ. டேராடூன்

  • அலிகாரில் உள்ள இராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். விடுதலைப்போராட்ட வீரர், கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான இராஜா மகேந்திர பிரதாப் சிங்கின் நினைவாக உத்தர பிரதேச அரசு இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவுகிறது. இப்பல்கலைக்கழகம் அலிகார் பிரிவின் 395 கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கும்.

9. அண்மையில் இராணுவ வான்படையில் உலங்கூர்திகளை இயக்குவதற்காக போர் விமானியாகப் பதவியேற்ற முதல் பெண் அதிகாரி யார்?

அ. அபிலாஷா பராக் 

ஆ. பாட்ரிசியா யாப்

இ. நிலோபர் ரஹ்மானி

ஈ. பாவனா காந்த்

  • கேப்டன் அபிலாஷா பராக் உலங்கூர்திகளை இயக்கும் போர் விமானியாக இராணுவ வான்படையில் சேர்ந்த முதல் பெண் அதிகாரி ஆனார். 2022 மே.25 அன்று நாசிக்கில் உள்ள காம்பட் ஆர்மி ஏவியேஷன் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற விழாவின்போது, டைரக்டர் ஜெனரல் மற்றும் கர்னல் கமாண்டன்ட் ஆர்மி ஏவியேஷன் அவர்களால் 36 இராணுவ விமானிகளுடன் அவர் கௌரவிக்கப்பட்டார்.

10. சமீபத்தில் “Abha” என்ற திறன்பேசிச் செயலியை அறிமுகப்படுத்திய ஆணையம் எது?

அ. இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

ஆ. உணவுப் பாதுகாப்பு ஆணையம்

இ. தேசிய நலவாழ்வு ஆணையம் 

ஈ. இந்திய விளையாட்டு ஆணையம்

  • ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின்கீழ் சுகாதார பதிவுகளை நிர்வகிக்க தேசிய சுகாதார ஆணையம் (NHA) திருத்தப்பட்ட ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் (ABHA) திறன்பேசிச்செயலியை அறிமுகப்படுத்தியது. ‘ABHA’ என்பது ஒரு தனிநபரின் உடல்நலப் பதிவுகளை எந்த நேரத்திலும் எங்கும் செயலியின்மூலம் அணுக உதவுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. பாரத்நெட் திட்டத்தில் கண்ணாடி இழை கம்பிவடம் பதிக்கும் பணி: முதல்வர் தொடக்கிவைத்தார்

பாரத்நெட் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

இந்தத் திட்டம்மூலம் மாநிலத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் பாதுகாப்பான, விரைவான இணைய சேவையை பெறமுடியும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், முத்தலகுறிச்சி ஊராட்சியில் கண்ணாடி இழை கம்பி வடத்தை பதிக்கும் பணியை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் மு க ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் உள்ள 12,525 ஊராட்சிகளையும் கண்ணாடி இழை கம்பி வடம்மூலம் இணைத்து, அதிவேக இணைய இணைப்பு வழங்குவதே பாரத்நெட் திட்டமாகும். இந்தத் திட்டமானது, தமிழ்நாடு அரசின், கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலமாகச்செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நான்கு தொகுப்புகள்: ‘பாரத்நெட்’ திட்டம் நான்கு தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

தொகுப்பு ஏ-வில், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, சென்னை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களும், தொகுப்பு பி-யில், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களும் வருகின்றன.

தொகுப்பு சி-யில், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களும், தொகுப்பு டி-யில், கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களும் வருகின்றன.

இந்தத்திட்டம்மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மின்னணு சேவைகள், இணையவழி கல்வி, தொலை மருத்துவம், தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் இணையம் ஆகிய சேவைகளை வழங்க முடியும். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் ஆகியன அதிவேக இணையதள சேவையைப் பெறுவதன்மூலம் கிராம அளவில் அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும்.

2. மனிதக்கழிவுகளை அகற்றும் பணிக்கு, ‘ஹோமோசெப்’ ரோபோ தயார்: சென்னை ஐஐடி தகவல்

மனிதக்கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை ஒழிக்கும் பொருட்டு, ‘ஹோமோசெப்’ என்ற ரோபோ சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டு தற்போது களப்பணிக்கு முழுமையாகத் தயார்நிலையில் உள்ளது.

சென்னை ஐஐடி பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையில், சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறை ஆசிரியர்களைக்கொண்ட குழுவினர் பல்லாண்டுகளாகப் பணியாற்றி இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

3. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு: உறுதிசெய்ய உயர்நிலைக்குழு

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டுள்ள நான்கு சதவீத இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய உயர்நிலைக்குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலர் பிறப்பித்துள்ளார்.

ஆணை விவரம்:

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்க தலைமைச் செயலாளரின் தலைமையில் உயர்நிலைக்குழு 2012-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த உயர்நிலைக்குழுவில் மேலும் 3 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இதனிடையே, 2016-ஆம் ஆண்டின் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டப்படி, அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென கூறப்பட்டது. இதனைச்செயல்படுத்தும் வகையிலான அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது.

அதன்படி, அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீட்டை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிட ஏதுவாக உகந்த பதவியிடங்கள் கண்டறியப்பட்டு பணிநியமனம் செய்வதை கண்காணிக்க உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஏற்கெனவே அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவை மறுசீரமைப்பு செய்து கண்காணிப்புக்குழுவை அமைக்கலாம் என தமிழ்நாடு அரசை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநரகம் கேட்டுக்கொண்டது. இயக்குநரகத்தின் கோரிக்கையை ஏற்று, உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது.

குழுவின் தலைவராக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச்செயலாளர் இருப்பார். உறுப்பினர்களாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு, மனிதவள மேலாண்மை ஆகிய துறைகளின் செயலாளர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச்செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர், மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத் தலைவர், வேலைவாய்ப்பு & பயிற்சித்துறை இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் இருப்பர்.

பணிகள் என்ன? அனைத்து அரசுத்துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் வழங்கப்படும் வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதை உயர்நிலைக்குழு கண்காணிக்கும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள், மாற்றுத்திறனாளிகளைக்கொண்டு நிரப்பப்படாத பட்சத்தில், அந்தப்பணியிடங்கள் அடுத்த ஆண்டுக்கு முறையாக முன்கொண்டு வரப்படுகிறதா? என்பது கண்காணிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் பணிபுரிய உகந்த பதவியிடங்கள் கண்டறியப்படுவதையும், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்வதையும் கண்காணிக்கும்.

4. மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்: இலச்சினை, சின்னம் வெளியீடு

மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை.28 தொடங்கி ஆகஸ்ட்.10 வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னத்தைச் சென்னை ரிப்பன் மாளிகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

மேலும் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஐம்பது நாட்கள் கவுன்ட்-டௌனையும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார். அதேபோல், #ChessChennai2022 என்ற ஹாஷ் டாகையும் முதலமைச்சர் வெளியிட்டார். குதிரை வடிவிலான வெளியிடப்பட்ட சின்னத்துக்குத் ‘தம்பி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

5. தமிழ்நாட்டில் இரண்டாவது ஆண்டாக அதிகரித்த மகப்பேறு உயிரிழப்புகள்

தமிழ்நாட்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மகப்பேறு உயிரிழப்பு அதிகரித்துள்ளது. கர்ப்ப காலங்களிலும், பிரசவத்தின்போதும் கர்ப்பிணிகள் உயிரிழப்பு என்பது பரவலாக காணப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த தேசிய சுகாதார இயக்கம் சார்பில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் மகப்பேறு உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பத்தைப் பதிவு செய்தது முதல் பிரசவம் வரை கர்ப்பிணிகள் சுகாதார செவிலியர்கள்மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.

தவிர சிக்கலான பிரசவங்களுக்கு வாய்ப்புள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கென தனி வாட்ஸ் ஆப் குழு அமைத்து கண்காணிக்கப்படுவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் முந்தைய ஆண்டைக் காட்டிலும் மகப்பேறு உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய சுகாதார இயக்கம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மகப்பேறு உயிரிழப்புகள் 1 லட்சத்துக்கு கணக்கிடப்பட்டு சராசரியில் குறிப்பிடப்படுகிறது. அதன்படியே மகப்பேறு உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்திய மாவட்டங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு மகப்பேறு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த 2020-21-ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் பேருக்கு சராசரியாக 73 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு (2021-22) ஒரு இலட்சம் கர்ப்பிணிகளில் சராசரியாக 90 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவே கடந்த 2019-20 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்தில் 53 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து மகப்பேறு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த 2020-21 ஆம் ஆண்டில் 9 லட்சத்து 8 ஆயிரத்து 623 கர்ப்பிணிகள் குழந்தை பெற்றனர். அதேவேளை பிரசவத்தின்போதும், கர்ப்பகாலங்களிலும் 664 தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், கடந்த 2021-22 ஆம் ஆண்டில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 436 பேர் குழந்தை பெற்றெடுத்த நிலையில், 827 மகப்பேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு 163 உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக மகப்பேறுகால உயிரிழப்பு அதிகரித்து வருவது கர்ப்பகால கண்காணிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளதை வெளிக்காட்டுகிறது.

வளர்ந்த மாவட்டங்களைப் பின்னுக்குத் தள்ளிய தருமபுரி: தமிழ்நாட்டில் சுகாதாரத் துறையின் வசதிக்காக 38 வருவாய்த் துறை மாவட்டங்கள் 46 சுகாதார மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மாவட்ட அளவில் குறைந்த மகப்பேறு உயிரிழப்புகள் பதிவான சுகாதார மாவட்டங்களில் பழனி, பரமக்குடி, தருமபுரி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன. அதிக உயிரிழப்புகள் பதிவான மாவட்டங்களில் விருதுநகர், நாகப்பட்டினம், திருப்பூர், பெரம்பலூர், திருவள்ளூர் மாவட்டங்கள் கடைசி 5 இடங்களில் உள்ளன.

சுகாதார மாவட்ட அளவில் பழனி முதலிடத்தில் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக வருவாய்த் துறை மாவட்டங்கள் அளவில் கணக்கிடும்போது தருமபுரி மாவட்டமே முதலிடத்தில் உள்ளது.

மாநிலத்தில் மகப்பேறு உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்துவதில் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் போன்ற வளர்ந்த மாவட்டங்களைப் பின்னுக்குத்தள்ளி தருமபுரி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. முந்தைய ஆண்டு மகப்பேறு உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்துவதில் முதல் மூன்று இடங்களில் இருந்த புதுக்கோட்டை, தூத்துக்குடி, கோவை ஆகிய மாவட்டங்கள் தற்போது முறையே 27, 34 மற்றும் 6-ஆவது இடத்தில் உள்ளன.

6. விலங்குகளுக்கான இந்தியாவின் முதல் கரோனா தடுப்பூசி: மத்திய அரசு அறிமுகம்

விலங்குகளுக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கரோனா தடுப்பூசியை மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகஞ்செய்தார்.

‘அனோகோவாக்ஸ்’ என்ற அத்தடுப்பூசி ஹரியாணாவிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) தேசிய குதிரைகளுக்கான ஆராய்ச்சி மையம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ICAR வெளியிட்ட அறிக்கையில், ‘அனோகோவாக்ஸ்’ தடுப்பூசியானது விலங்களுக்கான வீரியம் அழிக்கப்பட்ட சார்ஸ்-கோவிட் டெல்டா வகை தடுப்பூசியாகும். டெல்டா வகை தீநுண்மி எதிர்ப்புத்திறனும், துணை மருந்துப்பொருளாக அல்ஹைட்ரோஜெல்லையும் இந்தத் தடுப்பூசி பெற்றிருக்கும். கரோனாவின் டெல்டா மற்றும் ஒமைக்ரான் ஆகிய இருதிரிபுகளையும் நடுநிலைப்படுத்தக்கூடிய வகையில் நோய் எதிர்ப்புத்திறனை அனோகோவாக்ஸ் பெற்றுள்ளது. நாய்கள், சிங்கம், சிறுத்தை, எலிகள் மற்றும் முயல்களுக்கு இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனோகோவாக்ஸ் தடுப்பூசியோடு, ICAR-NRC சார்பில் உருவாக்கப்பட்ட, விலங்குகளுக்கான நோய் கண்டறியும் உபகரணங்களையும் மத்திய அமைச்சர் தோமர் அறிமுகஞ்செய்தார்.

அதில் ‘கேன்-கோவிட் எலிசா கிட்’ என்ற உபகரணம் நாய்களில் கரோனாவுக்கு எதிரான எதிர்பொருளை கண்டறிய உதவுவதாகும். தற்போது சந்தையில் விலங்குகளில் எதிர்பொருளைக் கண்டறிவதற்கான எந்தவொரு உபகரணமும் இல்லை. அவ்வகையில் ‘கேன்-கோவிட் எலிசா கிட்’ உபகரணத்துக்கு காப்புரிமை பெறவும் இந்தியா விண்ணப்பித்துள்ளது.

அதுபோல, பலதரப்பட்ட விலங்களில் ரத்த ஒட்டுண்ணி நோய் பாதிப்பைக் கண்டறிய உதவும் ‘சுரா எலிசா கிட்’ என்ற உபகரணமும் அறிமுகஞ்செய்யப்பட்டது. இந்தச் சுரா ரத்து ஒட்டுண்ணி நோய் தாக்கம் காரணமாக, கால்நடை உற்பத்தியில் ஆண்டுக்கு `4,474 கோடி அளவுக்கு இழப்பை இந்தியா சந்தித்து வருகிறது.

1. ‘Loktantra Ke Swar’ and ‘Republican Ethics’ are the selected speeches of which Indian personality?

A. Narendra Modi

B. Ramnath Kovind 

C. Venkaiah

D. S Jaishankar

  • Volume–IV of selected speeches of President Ram Nath Kovind named ‘Loktantra Ke Swar’ and ‘Republican Ethics’ was released by Union Education Minister Dharmendra Pradhan and Information and Broadcasting Minister Anurag Singh Thakur. The books have been published by the Publications Division under the Ministry of Information and Broadcasting.

2. Union Cabinet has approved signing of MoU with which country in the field of biomedical tools and technologies?

A. Japan

B. France

C. USA 

D. Australia

  • The Union Cabinet approved signing of MoU among the Department of Biotechnology, Government of India and the Indian Council of Medical Research (ICMR) and International AIDS Vaccine Initiative IAVI, USA. The MoU aims to contribute towards the development of improved biomedical tools and technologies to prevent and treat HIV, TB, COVID–19 and other infectious and neglected diseases.

3. The Reserve Bank of India (RBI) approved which category of banks to provide doorstep banking services?

A. Local Area Banks

B. Urban Cooperative Banks 

C. Rural Cooperative Banks

D. Payment Banks

  • The Reserve Bank of India doubled the limit on housing loans from cooperative banks from Rs. 30 to Rs. 60 lakhs for Tier I cities and from Rs. 70 lakhs to Rs. 1.40 crore in case of Tier II cities.
  • RBI also permitted Rural Cooperative Banks (RCB) to finance residential real estate projects to support affordable housing and inclusive growth. Urban cooperative banks (UCBs) were allowed to provide doorstep banking services to meet the needs of customers, especially senior citizens and differently–abled persons.

4. Technology Development Fund (TDF) scheme is associated with which Union Ministry?

A. Ministry of Science and Technology

B. Ministry of Defence 

C. Ministry of Electronics and IT

D. Ministry of MSME

  • Defence Minister Rajnath Singh has approved the enhancement of funding under Technology Development Fund (TDF) scheme to 50 crore rupees per project from 10 crore rupees. In Union Budget 2022–23, 25 percent of defence R&D budget was earmarked for private industry, start–ups and academia. The TDF scheme supports indigenous development of products and technologies by MSMEs and start–ups.

5. What is the GDP Growth projection for India in FY23, as per OECD’s recent report (June 2022)?

A. 8.2%

B. 7.5%

C. 7.2%

D. 6.9% 

  • The Organisation for Economic Cooperation and Development (OECD) sharply cut the growth for India to 6.9% growth in FY23 from 8.1% estimated earlier. The GDP growth was forecast to be 6.2 percent in 2023. This is below the Reserve Bank of India’s estimate of a 7.2% growth. The World Bank also sharply slashed India’s FY23 forecast to 7.5% from 8.5% in the April review.

6. Which of the following types of schools were included in the recently released National Achievement Survey (NAS) 2021?

A. Government Schools

B. Government Aided Schools

C. Private Unaided Schools

D. All of the above 

  • The Department of School Education and Literacy has released the National Achievement Survey (NAS) 2021 report which provides a comprehensive assessment of the learning ability of children in classes 3, 5, 8 and 10 in the country by conducting a comprehensive assessment survey. The last National Achievement Survey was conducted in 2017.
  • Whereas NAS 2021 was conducted on November 12, 2021 at all India level which included government schools, government aided schools and private unaided schools. Around 34 lakh students from 1.18 lakh schools in 720 districts, both rural and urban, had participated in NAS 2021. The objective of NAS 2021 is to evaluate children’s progress and learning ability as an indicator of the efficiency of the education system, to take appropriate remedial actions at various levels.

7. In which metropolis, PM Narendra Modi recently laid the foundation stone of a multi–modal logistics park worth Rs 1430 crore?

A. Mumbai

B. Delhi

C. Chennai

 D. Kolkata

  • The Prime Minister recently laid the foundation stone of a multi–modal logistics park in Chennai with an estimated cost of Rs 1430 crore. The park is being designed to offer seamless intermodal freight movement apart from other unique multifunctionalities. PM Modi was recently in Chennai to lay the foundation stone for 11 projects worth Rs 31,530 crore.

8. In which city, PM Modi has laid foundation stone of Raja Mahendra Pratap Singh University?

A. Aligarh

 B. Pune

C. Gwalior

D. Dehradun

  • Prime Minister Narendra Modi has laid the foundation stone of Raja Mahendra Pratap Singh State University in Aligarh. The university is being established by the Uttar Pradesh government in the memory and honour of Raja Mahendra Pratap Singh, freedom fighter, educationist and social reformer. The university will provide affiliation to 395 colleges of the Aligarh division.

9. Recently who has become the first woman officer to be inducted as a fighter aviator to fly a fleet of helicopters in the Army Aviation Corps (AAC)?

A. Abhilasha Barak

B. Patricia Yapp

C. Nilofer Rahmani

D. Bhawana Kanth

  • Captain Abhilasha Barak became the first woman officer to join the Army Aviation Corps (AAC) as a fighter aviator to fly a fleet of helicopters. He was honored with the prestigious Wing along with 36 Army pilots by the Director General and Colonel Commandant Army Aviation during a ceremony held at Combat Army Aviation Training School in Nashik on May 25, 2022.

10. Which authority has recently launched “Abha” mobile application?

A. Unique Identification Authority of India

B. Food Safety Authority

C. National Health Authority 

D. Sports Authority of India

  • National Health Authority (NHA) has launched revised Ayushman Bharat Health Account (Abha) mobile application to manage health records under Ayushman Bharat Digital Mission. ABHA enables an individual to access their health records anytime and anywhere through the app.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!