Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

10th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

10th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 10th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

10th March 2021 Tnpsc Current Affairs in Tamil

1. ADFOSC என்பதன் விரிவாக்கம் என்ன?

அ) Aries-Devasthal Faint Object Spectrograph & Camera

ஆ) Aries-Devasthal Faint Object Scanning Camera

இ) Aries-Devasthal Faded Object Scanning Camera

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

  • ADFOSC அல்லது Aries-Devasthal Faint Object Spectrograph & Camera என்பது மலிவுவிலை ஆப்டிகல் நிறமாலைகாட்டியாகும். இது, நைனிடா -ல், ARIES அறிவியலாளர்களால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட -தாகும். இந்த நிறமாலைகாட்டி, தொலைதூர குவாசாக்கள், விண்மீன் திரள்கள் போன்றவற்றைக் கண்டறிய தேவஸ்தால் ஆப்டிகல் தொலை -நோக்கிக்கு உதவும்.

2. ‘உலக செவித்திறன் அறிக்கை’யை வெளியிட்ட அமைப்பு எது?

அ) WHO

ஆ) FAO

இ) IMF

ஈ) ADB

  • உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) கேட்புத்திறன் தொடர்பான முதல் அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. இது, மார்ச்.3 அன்று உலக செவித்திறன் நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த அறிக்
    -கையின்படி, உலகளவில் கிட்டத்தட்ட 2.5 பில்லியன் மக்கள், அதாவது நான்கில் ஒருவர், வரும் 2050’க்குள் ஓரளவு செவித்திறன் இழப்புடன் வாழ்வார்கள். அவர்களுள் 700 மில்லியன்பேருக்கு செவிப்புலன் மற்றும் மறுவாழ்வு சேவைகளுக்கான அணுகல் தேவைப்படும்.

3. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக மற்றும் கல்வி நிலைமைகள் குறித்து அதன் முதல் ஆய்வை நடத்தவுள்ள மாநிலம் எது?

அ) ஹரியானா

ஆ) ஒடிஸா

இ) மத்திய பிரதேசம்

ஈ) மகாராஷ்டிரா

  • ஒடிஸா மாநில அரசாங்கம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக மற்றும் கல்வி நிலைமைகள் குறித்த முதல் மாநில ஆய்வைத்தொடங்கவுள்ளது. அம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 209 சமூகத்தினர் சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இனங்காணப்பட்டுள்ளனர். அது, மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 54 சதவீதத்தை உள்ளடக்கிய -தாகும். இதற்கு ஒடிஸா மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

4. WAN IFRAஆல் ‘2020ஆம் ஆண்டின் சாம்பியன் வெளியீட்டாளர்’ என்று அறிவிக்கப்பட்ட வெளியீட்டு நிறுவனம் எது?

அ) தி ஹிந்து

ஆ) எக்ஸ்பிரஸ் வெளியீட்டு நிறுவனம்

இ) தினத்தந்தி

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

  • WAN IFRA’இன் தெற்காசிய டிஜிட்டல் மீடியா விருதுகளில், ‘தி ஹிந்து’ குழுமம் 2 தங்கங்களையும் 2 வெள்ளிகளையும் வென்றது. உலக செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் அல்லது WAN-IFRA என்பது உலகில் உள்ள பத்திரிகைகளின் அமைப்பாகும்.
  • WAN IFRAஆல் ‘2020ஆம் ஆண்டின் சாம்பியன் வெளியீட்டாளர்’ என்று ‘தி ஹிந்து’ குழு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தி ஹிந்து’வின் #KeepTheHabit என்ற பரப்புரை ‘Best Native Advertising/Branded Content Campaign’ பிரிவில் தங்கம் வென்றது. ஸ்போர்ட்ஸ்டாரின் வலைத்தளம் ‘சிறந்த வாழ்க்கை முறை, விளையாட்டு, பொழுதுபோக்கு வலைத்தளம் அல்லது அலைப்பேசி சேவைகள்’ பிரிவில் தங்கம் வென்றது.

5. இந்தியா தலைமையிலான தீர்மானத்தின் அடிப்படையில், UNGA, 2023ஆம் ஆண்டை எந்தச் சிறப்பு ஆண்டாக அறிவித்துள்ளது?

அ) சர்வதேச தினை ஆண்டு

ஆ) சர்வதேச முட்டை ஆண்டு

இ) சர்வதேச பால் ஆண்டு

ஈ) சர்வதேச அரிசி ஆண்டு

  • ஐநா பொது அவையானது வரும் 2023ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக ஒருமனதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐநா பொது அவையில் இந்தியா, வங்கதேசம், நேபாளம், நைஜீரியா, ரஷ்யா மற்றும் செனகல் ஆகிய நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளும் ஆதரித்தன.

6. சிமிலிபால் உயிர்க்கோள இருப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) ஒடிஸா

ஆ) உத்தரகண்ட்

இ) இராஜஸ்தான்

ஈ) கோவா

  • சிமிலிபால் உயிர்க்கோள இருப்பகம் என்பது சிமிலிபால் தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை உள் -ளடக்கியதாகும். இது, கிழக்குத்தொடர்ச்சிமலையின் கிழக்கு முனையில் ஒடிஸாவில் அமைந்துள்ளது. ‘சிமிலிபால்’ என்ற பெயர் இலவம்பஞ்சு மரம் என்று பொருள்படும் ‘சிமுல்’ என்பதிலிருந்து உருவானதாகும்.
  • சமீபத்தில், இந்தத் தேசிய பூங்காவில் காட்டுத்தீ ஏற்பட்டு தொடர்ந்து ஒரு வாரகாலமாக எரிந்துவருகிறது.

7. 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை பிரிவில், ‘Ease of Living Index-2020’இன்படி, சிறந்த நகரமாக உருவெடுத்த நகரம் எது?

அ) புனே

ஆ) சண்டிகர்

இ) சென்னை

ஈ) பெங்களூரு

  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள, ‘Ease of Living Index-2020’இன்படி பெங்களூரு சிறந்த நகரமாக உருவெடுத்துள்ளது. 2020ஆம் ஆண்டில், மதிப்பீட்டுப் பயிற்சி நடத்தப்பட்ட நகரங்களுக்கான தரவரிசை அறிவிக்கப்பட்டது. மதிப்பீட்டுப் பயிற்சியில் சுமார் 111 நகரங்கள் பங்கேற்றன. இப்பட்டியலில், தமிழ்நாட்
    -டைச்சார்ந்த சென்னை நான்காவது இடமும், கோயம்புத்தூர் ஏழாவது இடமும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
  • பத்து லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகைகொண்ட நகரங்களின் பிரிவில் சிம்லா முதலிடத்தில் உள்ளது.

8. பாவோ தான் என்பது கீழ்க்காணும் எந்த இந்திய மாநிலத்தில் பயிரிடப்படுகிற அரிசி வகையாகும்?

அ) மேற்கு வங்கம்

ஆ) அஸ்ஸாம்

இ) ஒடிஸா

ஈ) கர்நாடகா

  • ‘பாவோ தான்’ என்பது இரும்புச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி வகைகளுள் ஒன்றாகும். இது, அஸ்ஸாம் மாநிலத்தில், பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் உள்ள வண்டல் மண்ணில் பயிரிடப்படுகிறது. சமீபத்தில், இந்தச் ‘சிவப்பு அரிசி’யின் முதல் சரக்கு அமெரிக்காவிற்கு (USA) அனுப்பப்பட்டது. இவ்வ -ரிசியின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், இது எந்த இரசாயன உரத்தையும் பயன்படுத்தாமல் வளர்க்கப்படுகிறது.

9. சமீபத்தில் வெளியிடப்பட்ட நகராட்சி செயல்திறன் குறியீட்டின்படி, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகைகொண்ட நகரங்களின் பிரிவில், முதலிடத்தைப் பிடித்த நகரம் எது?

அ) இந்தூர்

ஆ) லக்னோ

இ) சூரத்

ஈ) போபால்

  • மத்திய அரசானது அண்மையில் நகராட்சி செயல்திறன் குறியீட்டை வெளியிட்டது. இந்தக் குறியீட்டில், 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகைகொண்ட நகரங்களின் பிரிவில், இந்தூர் நகரம் முதலிடத்தைப் பிடித்தது. அதைத்தொடர்ந்து சூரத் மற்றும் போபால் ஆகிய நகரங்கள் உள்ளன. பத்து இலட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகைகொண்ட நகரங்களின் பிரிவில் புது தில்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து திருப்பதி மற்றும் காந்திநகர் ஆகிய நகரங்கள் உள்ளன.

10. மத்திய தொழிலகங்கள் பாதுகாப்புப்படையின் (CISF) உதய நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) மார்ச் 5

ஆ) மார்ச் 8

இ) மார்ச் 10

ஈ) மார்ச் 11

  • மத்திய தொழிலகங்கள் பாதுகாப்புப்படையின் உருவாக்க நாளானது ஆண்டுதோறும் மார்ச்.10 அன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 1969ஆம் ஆண்டு இதே நாளில், இந்திய நாடாளுமன்ற சட்டத்தின்கீழ் 2,800 படைவீரர்களுடன் CISF உருவாக்கப்பட்டது. இது நேரடியாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கி வருகிறது. CISF’இன் தலைமை -யகம் புது தில்லியில் அமைந்துள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

TNPSC MARCH 10TH CURRENT AFFAIRS IN TAMIL

1. உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் (டி.எஸ்.ராவத்) ராஜினாமா

உத்தரகாண்டின் அடுத்த முதல்வராகிறார் தீரத் சிங் ராவத். டேராடூனில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை (09.03.2021), அடுத்த முதல்வர் யார் என்பது தொடர்பாக அம்மாநில எம்எல்ஏக்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் தீரத் சிங் ராவத்தை முதல்வராக்குவது என முடிவு செய்யப்பட்டது.

2. தொலைதூரம், திறந்தவெளி, இணையவழி மேலாண் படிப்பு தொடங்க நெறிமுறை: ஏஐசிடிஇ வெளியிட்டது

கல்வி நிறுவனங்களில் மேலாண்மை உள்ளிட்ட படிப்புகளை தொலைதூரம், திறந்தநிலை மற்றும் இணையவழியில் தொடங்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏஐசிடிஇ வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு:

மேலாண்மை, கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொறியியலில் உள்ள தகவல் அறிவியல், தொழில்நுட்ப களம்,தளவாடங்கள் மற்றும் சுற்றுலா ஆகிய பிரிவுகளில் உள்ள படிப்புகளை தொலைதூரம், திறந்தவெளி மற்றும் இணைய வழி முறையில் வழங்க ஏஐசிடிஇ ஒப்புதல் வழங்கிஉள்ளது.

தகுதிகள் நிர்ணயம்:

அதன்படி, மேற்கண்ட படிப்புகளை வழங்க கல்வி நிறுவனங்களுக்கு சில தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நாக் அங்கீகாரம் 3.26 (4),என்பிஏ-வில் 1,000-க்கு 700 மதிப்பெண்கள், தேசிய தரவரிசைபட்டியலில் (என்ஐஆர்எஃப்) முதல் 100 இடம் ஆகிய 3-ல் ஏதேனும் 2 தகுதிகளை பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே தொலைதூரம், திறந்தவெளி, இணையவழியில் படிப்புகளை தொடங்க அனுமதி வழங் கப்படுகிறது.

3. சித்திக் குழு:

அரசு ஊழியர் ஊதிய உயர்வில் உள்ள குறைபாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு அளித்த பரிந்துரைப்படி சில பிரிவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.இதில் முரண்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தின.இதையடுத்து ஊதிய உயர்வில் உள்ள குறைபாடுகளை களைய நிதித்துறை செலவினங்கள் முதன்மை செயலர் சித்திக் தலைமையில் ஒரு நபர் குழுவை தமிழக அரசு நியமித்தது.

4. நாட்டில் 42 தீவிரவாத அமைப்புகளுக்கு தடை: மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்து மூலம் அளித்த பதில்: நாட்டில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட 42 தீவிரவாத அமைப்புகளுக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967-ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் பல, நாட்டின் எல்லைப் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 2018 முதல் 2020-ம் ஆண்டு வரை ஜம்மு-காஷ்மீரில் 635 தீவிரவாதிகள் நமது பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மட்டும் 115 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் அப்பகுதியில் தீவிரவாதத் தாக்குதல் குறைந்துள்ளது.காஷ்மீரில் 2019-ல் 594 முறை தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இது 2020-ல் 244-ஆகக் குறைந்துள்ளது. 2019-ல் 157 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2020-ல் 221 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

5. இந்தியா- வங்கதேசம் இடையிலான மைத்ரி சேது பாலத்தை (நட்பு பாலம்) திறந்து வைத்தார் மோடி (09.03.2021)

வடகிழக்கு மாநிலமான திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே பெனி ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே இரு நாடுகளையும் இணைக்கும் வகையில் மைத்ரி சேது பாலம் கட்டப்பட்டது. 1.9 கி.மீ. நீளமுள்ள இந்த பாலம் திரிபுராவின் சப்ரூம் நகரையும் வங்கதேசத்தின் ராம்கரையும் இணைக்கிறது. இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், திரிபுராவில் முடிக்கப்பட்ட மேலும் சில உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்ததுடன் சில புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

மைதிரி சேது பாலம் திறக்கப்பட்டதையடுத்து, சர்வதேச கடல் துறைமுகத்துக்கு அருகில் உள்ள நகரமாக அகர்தலா உருவெடுத்துள்ளது. ‘மைத்ரி சேது’ என்ற பெயர் இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே வளர்ந்து வரும் இருதரப்பு உறவுகளையும் நட்பு உறவுகளையும் குறிக்கிறது என்று பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான மக்கள் போக்குவரத்திற்கும், வர்த்தகம் மேம்பாட்டிற்குமான ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளது.

இந்த பாலத்தின் மூலம், திரிபுரா இப்போது சப்ரூமில் இருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகத்தை எளிதில் அணுகக்கூடிய ‘வடக்கு கிழக்கின் நுழைவாயில்’ ஆகிவிட்டது என்று பிரதமர் அலுவலக அறிக்கை கூறியுள்ளது.

பிரதமர் மோடி (PM Narendra Modi), சப்ரூமில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைப்பதற்கான அடிக்கலலையும் நாட்டினார்.

கைலாஷாஹரில் உள்ள யூனகோட்டி மாவட்ட தலைமையகத்தை கோவாய் மாவட்ட தலைமையகத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை (NH) -208 திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இது NH-44 க்கு மாற்று வழியாக இருக்கும். 80 கி.மீ NH-208 திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் 1,078 கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ளது.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா.

6. சர்வதேச தீர்ப்பாய உத்தரவின்படி மத்திய அரசிடமிருந்து 140 கோடி டாலர் வரி நிலுவையை வசூலிக்க கெய்ர்ன் நிறுவனம் தீவிரம்.

பிரிட்டனைச் சேர்ந்த எண்ணெய், எரிவாயு நிறுவனமான கெய்ர்ன் பிஎல்சி நிறுவனத்துக்கு ஆதரவாக சர்வதேச தீர்ப்பாயம் அளித்த 140 கோடி டாலர் வரி நிலுவையை இந்திய அரசிடமிருந்து வசூலிக்க தீவிர நடவடிக்கைகளில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளது.

கெய்ர்ன் நிறுவனம் 1999-ம்ஆண்டில் இந்தியாவில் எண் ணெய், எரிவாயு அகழ்வுப் பணிக்கான ஒப்பந்தத்தைப் பெற் றது. ராஜஸ்தான் மாநிலத்தில் ராவா எனுமிடத்தில் எண்ணெய் அகழ்வைக் கண்டுபிடித்து 2002-ம்ஆண்டிலிருந்து உற்பத்தியைத் தொடங்கியது.

2007-ம் ஆண்டு இந்நிறுவனப் பங்குகள் கெய்ர்ன் இந்தியா நிறுவனமாகத் தொடங்கப்பட்டு பட்டியலிடப்பட்டன. 2006-2007-ம்ஆண்டு கெய்ர்ன் இந்தியா நிறுவனம் 10 சதவீத பங்குகளை தாய்நிறுவனமான கெய்ர்ன் பிஎல்சி நிறுவனத்துக்கு மாற்றியது. மூலதனம் மூலம் கிடைத்த ஆதாயத்துக்கு வரி செலுத்துமாறு வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர்.

இதன்படி ரூ.24,500 கோடி தொகையை வரியாக செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

இது தொடர்பாக இந்திய உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராத சூழலில் சர்வதேச மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் கெய்ர்ன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. முதலீட்டு ஆதாயம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது.

2011-ம் ஆண்டு கெய்ர்ன் நிறுவனத்தை வேதாந்தா குழுமத்துக்கு விற்பனை செய்தது. வரி நிலுவை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் 10 சதவீத பங்குகளை விற்பதற்கு வரித்துறை தடை விதித்தது. இந்த 10 சதவீத பங்குகள் முடக்கி வைக்கப்பட்டன.

2007-2008-ம் ஆண்டு பங்கு பரிமாற்றம் செய்தபோது விதிக்கப்படாத மூலதன ஆதாய வரித் தொகையை முன்தேதியிட்டு விதிக்க முடியாது என்று சர்வதேச தீர்ப்பாயத்தில் 3 பேரடங்கியஅமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் வரி நிலுவையை வசூலிக்க இந்திய அரசு எத்தகைய முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அமெரிக்கா, லண்டன், நெதர்லாந்து, கனடா, பிரான்ஸ், சிங்கப்பூர், ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம், கேமன் தீவுகளில் உள்ள நீதிமன்றங்களையும் கெய்ர்ன் நாடியுள்ளது.

சொத்துகளை முடக்கலாம்: இந்திய அரசு நிலுவைத் தொகையை திரும்ப அளிக்காவிடில், இங்குள்ள அரசுக்குச் சொந்தமான சொத்துகளை கெய்ர்ன் நிறுவனம் முடக்கலாம் என சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள தால், இந்நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் சர்வதேச தீர்ப்பாய உத்தரவை சுட்டிக்காட்டி மனு தாக்கல் செய்துள்ளது கெய்ர்ன்.

இதனிடையே 2017-ம் ஆண்டில்கெய்ர்ன் நிறுவன பங்குகள் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டி யலிடுவதிலிருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் வரி நிலுவையை வசூலிப்பதில் தீவிரமாக உள்ள தாக கெய்ர்ன் நிறுவனம் தனதுமுதலீட்டாளர்களுக்குத் தெரிவித்துள்ளது. இதனிடையே மேல் முறையீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

7. பொருளாதாரத்தை மீட்க 27 லட்சம் கோடி நிதி

மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த பேட்டி: இந்திய பொருளாதாரத்தின் தேசிய வருமான மதிப்பீட்டின்படி முதல் காலாண்டில் 24.4 சதவீதமும், 2ம் காலாண்டில் 7.3ம், 2020-21 நிதியாண்டில் 8 சதவீதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனை ஈடுகட்ட ரிசர்வ் வங்கி சுயசார்பு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் கோடிக்கு பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் , மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழிகளுக்கான நிதி உதவி திட்டம், புதிய மின்சார கட்டண கொள்கை மூலம் பொருளாதாரத்தை மீட்க மத்திய நிதி அமைச்சகம் முயற்சி செய்து வருகிறது.

8. சேஸிங்கில் மந்தனா உலக சாதனை சேஸிங்கில் மந்தனா உலக சாதனை.

தென் ஆப்பிரிக்க அணியுடன் நேற்று (09.03.2021) நடத்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா அட்டமிழக்காமல் 80 ரன்களை விளாசி தள்ளினார். இதன் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் இலக்கை துரத்தும் போது தொடர்ச்சியாக 10 முறை 50+ ஸ்கோர் அடித்த முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இவரது சாதனையை எந்த கிரிக்கெட் வீரரோ அல்லது வீராங்கனையையோ நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

9. ‘இஸ்ரோ’ தயாரிப்பில் அதி நவீன ‘ரேடார்’

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பூமியின் மேற்பகுதியை மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் உள்ள, ‘எஸ்.ஏ.ஆர்., ரேடார்’ சாதனத்தை தயாரித்துள்ளது.

இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, நாசாவுடன் இணைந்து, முதன் முறையாக, ‘நிசார்’ என்ற செயற்கைகோளை, அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த உள்ளது. இதில், முதன் முறையாக, வெவ்வேறு அலைவரிசை திறன் உள்ள, ‘எல் பேண்டு மற்றும் எஸ் பேண்டு’ ரேடார்கள் பொருத்தப்பட உள்ளன.

இத்திட்டத்தில், செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான, ராக்கெட், எஸ் பேண்டு எஸ்.ஏ.ஆர். ரேடார் ஆகியவற்றை, இஸ்ரோ வழங்கும். அறிவியல் சார்ந்த தகவல்களை சேகரிப்பதற்கான, எல் பேண்டு எஸ்.ஏ.ஆர் ரேடார், இருப்பிடத்தை அறிய உதவும், ஜி.பி.எஸ்., ரிசீவர் ஆகியவற்றை, நாசா தயாரித்து அளிக்கும். இந்நிலையில், இஸ்ரோ தயாரித்த, எஸ்.ஏ.ஆர்., ரேடாரை, அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், இஸ்ரோ தலைவர், கே. சிவன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்று, கொடியசைத்து, ரேடார் சாதனத்தை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார். இந்த ரேடார் சாதனத்தை, நாசா, அதன் ரேடார் சாதனத்துடன் பொருத்தி, மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பும். இதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ராக்கெட் வாயிலாக, நிசார் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும்.

10. சிறந்த வீராங்கனை மனு பாகர் – பி.பி.சி., விருது (பிபிசி இந்தியன் ஸ்போர்ட்ஸ் வுமன் ஆஃப் த இயர்)

பி.பி.சி., சார்பிலான சிறந்த வளரும் வீராங்கனை விருது மனு பாகருக்கு வழங்கப்பட்டது.

பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனத்தின் (பி.பி.சி.,) சார்பில் இந்திய விளையாட்டில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்படுகிறது. ரசிகர்கள் ஆன்லைன் வழியாக, ஒட்டுப்பதிவில் பங்கேற்பர். கடந்த ஆண்டு சிறந்த வீராங்கனையாக சிந்து (பாட்மின்டன்) தேர்வானார். இம்முறை உலக ‘ரேபிட்’ செஸ் சாம்பியன் கோனேரு ஹம்பி, சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்ற முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், வாழ்நாள் சாதனையாளராக தேர்வு செய்யப்பட்டார். இம்முறை புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட, சிறந்த வளரும் வீராங்கனை விருதை, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள மனுபாகர் 19, (துப்பாக்கிசுடுதல்) தட்டிச் சென்றார்.

இணையதளம் வழியாக நடந்த விழாவில் இங்கிலாந்து கிரிக்கெட் ‘ஆல் ரவுண்டர்’ ஸ்டோக்ஸ், விருதுகளை அறிவித்தார். மனுபாகர் கூறுகையில்,”எனது கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என நினைக்கிறேன். இதை எல்லோரும் தெரிந்து கொள்வர் என நம்புகிறேன்,” என்றார்.

11. இந்திய பிரதமா் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகாவுடன் செவ்வாய்க்கிழமை (09.03.2021) தொலைபேசியில் உரையாடினாா்.

அப்போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இருவரும் உறுதிபூண்டனா். இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய பிரதமா் மோடி, ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகாவுடன் கலந்துரையாடினாா். அப்போது கடந்த சில ஆண்டுகளாக இந்தியா – ஜப்பான் இடையிலான உறவில் நோ்மறையான உத்வேகம் நிலவுவது குறித்து அவா்கள் திருப்தி தெரிவித்தனா். இருநாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் உருவாகி அடுத்த ஆண்டுடன் 70 – ஆம் ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், அதனை சிறப்பான முறையில் கொண்டாட இருவரும் தீா்மானித்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த உரையாடல் குறித்து ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய பிரதமா் மோடி, ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகா இடையிலான உரையாடல் சுமாா் 40 நிமிஷங்கள் நடைபெற்றது. அப்போது இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும், க்வாட் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா – ஜப்பான் – ஆஸ்திரேலியா – அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பையும் சீராக மேம்படுத்துவது குறித்து இருவரும் தங்கள் கருத்துகளை பகிா்ந்துகொண்டனா்.

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இருவரும் உறுதிபூண்டனா். கிழக்கு மற்றும் தென் சீனக் கடற்பகுதியில் தற்போதுள்ள நிலையை ஒருதலைபட்சமாக மாற்ற சீனா முயற்சிப்பது தொடா்பாக யோஷிஹிடே சுகா கவலை தெரிவித்தாா்.மியான்மா், ஹாங்காங், சீனாவில் உள்ள ஷின்ஜியாங் தன்னாட்சி பிரதேசத்தில் உய்கா் இன மக்கள் மீதான அடக்குமுறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாகவும் அவா்கள் கலந்துரையாடினா் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்புதான் குவாட் (quad).

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து, ‘குவாட்’ என்ற கூட்டணியை கடந்த 2017-ல் உருவாக்கின. இந்தோ பசிபிக் பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவும், இந்தோ பசிபிக் பகுதியில் கடல் வழிகளில் யாரும் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கவும், இந்த கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த கூட்டமைப்பின் வெளிவிவகார மந்திரிகள் மட்டத்திலான பாதுகாப்பு பேச்சுவார்த்தை கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி டோக்கியோவில் நடந்தது. இதன் தொடர்ச்சியாக 4 நாடுகள் தரப்பிலான 3-வது பாதுகாப்பு பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரியில் (2021) நடைபெற்றது. இந்நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகளின் தலைவர்கள் மார்ச் மத்தியில் (2021) தொலைதொடர்பு மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர்.

12. பகவத் கீதையின் 11 தொகுதி கையெழுத்துப் பிரதிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று (மார்ச்சு 9, 2021) வெளியிடுகிறார். (ஸ்ரீமத் பகவத் கீதையின் ஸ்லோகங்கள் பற்றி 21 அறிஞர்களின் வர்ணனைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதியை வெளியிட்டார் பிரதமர்)

பகவத் கீதையின் 11 தொகுதி கையெழுத்துப் பிரதிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று வெளியிடுகிறார். இந்த நூலில் பகவத் கீதையில் உள்ள ஸ்லோகங்களுக்கு 21 அறிஞர்கள் தெரிவித்த விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன.

13. தேசப்பிதா மகாத்மா காந்தியின் வரலாற்று சிறப்புமிக்க தண்டி யாத்திரையை மீண்டும் நினைவுகூறும் வகையில், பிரதமர் மோடி நாளை மறுநாள் யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் வரலாற்று சிறப்புமிக்க தண்டி யாத்திரையை மீண்டும் நினைவுகூறும் வகையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆஸ்ரமத்திலிருந்து பிரதமர் திரு நரேந்திரமோடி நாளை மறுநாள் யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

நாட்டின் 75-வது சுதந்திரதின விழாவை சி;றப்பாக கொண்டாடுவது குறித்து நடைபெற்ற மாநில அளவிலான உயரதிகார குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்த குஜராத் முதலமைச்சர் திரு விஜய் ரூபானி, இதனை தெரிவித்தார்.

மகாத்மாகாந்தி பயணம் மேற்கொண்ட 386 கிலோமீட்டர் தூரம் உள்ள பாதையில் இப்போதும் யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

81 பேர் இந்த பாத யாத்திரையில் பங்கேற்க உள்ளதாகவும், இவர்கள் செல்லும் வழியில் 21 இடங்களில் பல வகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

14. ஜல்ஜீவன் இயக்கத்தின்கீழ், நாடு முழுவதும் இதுவரை 3 கோடியே 77 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது – ஜல்சக்தி அமைச்சகம் தகவல்.

கோவா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஏற்கனவே 100 சதவீத இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் புதிதாக சுமார் ஒரு லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில், பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

15. பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராக அஸ்வின் தேர்வு.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்து விருது வழங்கும் முறையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. ஜனவரி மாதத்தின் சிறந்த வீரருக்குரிய விருதை இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் பெற்றார்.பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரராக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

16. காடலோனியா தலைவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு ரத்து, ஐரோப்பிய நாடாளுமன்றம் உத்தரவு

ஸ்பெயினின் காடலோனியா பிராந்தியத்தைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சட்டப் பாதுகாப்பை ரத்து செய்ய ஐரோப்பிய நாடாளுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17. ஆப்கன் அமைதிக்கான வரைவு ஒப்பந்தம்: குழுக்களிடம் அளித்தது அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான வரைவு ஒப்பந்தத்தை அங்கு சண்டையிட்டு வரும் குழுக்களிடம் அமெரிக்கா அளித்துள்ளது.

இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஆப்கானிஸ்தானில் வன்முறைச் சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், அங்கு அரசுக்கும் பிற குழுக்களுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தையும் முடங்கியுள்ளது. இந்த நிலையில், அமைதிக்கான 8 பக்க வரைவு ஒப்பந்தத்தை சண்டையிட்டு வரும் குழுக்களிடம் பரிசீலனைக்காக அமெரிக்கா அளித்துள்ளது. அந்த வரைவு ஒப்பந்தம் குறித்து விவாதிப்பதற்காக துருக்கி வருமாறு சம்பந்தப்பட்ட குழுக்களிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

குழுக்களிடையே போா் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது, அதனை செல்படுத்துவது, பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினா் உரிமைகளைப் பாதுகாப்பது, 42 ஆண்டுகளாக சண்டையிட்டு வரும் குழுக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான குழுவை அமைப்பது உள்ளிட்ட அம்சங்கள் அந்த வரைவு ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து விரிவான விவரங்களைத் தெரிவிக்க மறுத்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ், இதுபோன்ற தூதரக முயற்சிகளை திரைக்குப் பின்னால் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று தெரிவித்தாா்.

அமெரிக்காவின் வரைவு ஒப்பந்த நகல் தங்களுக்குக் கிடைத்துள்ளதாகவும், அதனை ஆய்வு செய்து வருவதாகவும் தலிபான் அமைப்பின் செய்தித் தொடா்பாளா் முகமது நயீம் கூறினாா்.

எனினும், இதுதொடா்பாக ஆப்கன் அதிபா் அஷ்ரஃப் கனியிடமிருந்து உறுதியான தகவல் எதுவும் வரவில்லை. அவருக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் அந்தோணி பிளிங்கன் இதுகுறித்து எழுதியுள்ள கடிதத்துக்கு அஷ்ரஃப் கனி இன்னும் பதிலளிக்கவில்லை.

அந்தக் கடிதத்தில், அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, வரும் மே மாதம் 1-ஆம் தேதிக்குள் நாட்டிலிருந்து அமெரிக்கப் படையினா் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்ற கெடு தேதி இன்னமும் பரிசீலனையில் உள்ளது. ஆப்கன் படையினருக்காக அமெரிக்கா 400 கோடி டாலா் (சுமாா் ரூ.29,000 கோடி) நிதியுதவி அளித்தாலும், அங்கிருந்து அமெரிக்கப் படையினா் வெளியேறினால் ஏராளமான பகுதிகள் மீண்டும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று பிளிங்கன் குறிப்பிட்டுள்ளாா்.

1. What is the full form of ADFOSC?

A) Aries–Devasthal Faint Object Spectrograph & Camera

B) Aries–Devasthal Faint Object Scanning Camera

C) Aries–Devasthal Faded Object Scanning Camera

D) None of the above

  • ADFOSC or Aries–Devasthal Faint Object Spectrograph & Camera is a low–cost optical spectroscope that was designed and developed by the scientists of ARIES, Nainital.
  • This spectroscope will help the Devasthal Optical telescope use event faint light to locate distant quasars, galaxies, etc.

2. Which organisation has released the report named ‘World Report on Hearing’?

A) WHO

B) FAO

C) IMF

D) ADB

  • The World Health Organisation (WHO) released the first World Report on Hearing recently. It was launched ahead of World Hearing Day on March 3. As per the report, nearly 2.5 billion people worldwide, which is almost 1 in 4 people, will be living with some degree of hearing loss by 2050. The report also warns that at least 700 million of these people will require access to hearing care and rehabilitation services.

3. Which state is to conduct its first survey of the social and educational conditions of people from backward classes?

A) Haryana

B) Odisha

C) Madhya Pradesh

D) Maharashtra

  • The Odisha government is set to begin its first state survey of the social and educational conditions of people from backward classes. In the state there are nearly 209 communities identified as socially and educationally backward classes (SEBCs). The classes comprise around 54 percent of the state’s population. A proposal by the Odisha State Commission for Backward Classes (OSCBC) was approved in this regard.

4. Which publishing company was named as the ‘Champion Publisher of the Year 2020’, by WAN IFRA?

A) The Hindu

B) Express Publications

C) Daily Thanthi

D) None of the above

  • The Hindu Group won two golds and two silvers at WAN IFRA’s South Asian Digital Media Awards. The World Association of News Publishers or WAN–IFRA, is a global organisation of the world’s press.
  • The company was named as the ‘Champion Publisher of the Year’. The Hindu #KeepTheHabit campaign won a gold in ‘Best Native Advertising / Branded Content Campaign’. Sportstar’s website won a gold in ‘Best in Lifestyle, Sports, Entertainment Website or Mobile Services’.

5. UNGA has declared 2023 as which special year, based on the resolution led by India?

A) International Year of Millets

B) International Year of Egg

C) International Year of Milk

D) International Year of Rice

  • The United Nations General Assembly has unanimously declared 2023 as the International Year of Millets. The unanimously adopted resolution was sponsored by India and supported by over 70 nations. The co–sponsors of the declaration include Bangladesh, Kenya, Nepal, Nigeria, Russia and Senegal, and all Member States of the UN.

6. The Simlipal biosphere reserve is located in which Indian state?

A) Odisha

B) Uttarakhand

C) Rajasthan

D) Goa

  • Simlipal biosphere reserve comprises of the Simlipal national park cum tiger reserve along with its adjoining areas. It is located in the eastern end of the Eastern Ghats, in Odisha. The name ‘Simlipal’ is derived from ‘Simul’ meaning silk cotton tree. Recently, there was a wildfire in the National Park and is raging for nearly a week.

7. Which city emerged as the best city according to the “Ease of Living Index–2020”, in the million–plus population category?

A) Pune

B) Chandigarh

C) Chennai

D) Bengaluru

  • Bengaluru emerged as the best city according to the “Ease of Living Index–2020”, released by the Union Housing and Urban Affairs Minister Hardeep Singh Puri. The rankings were announced for cities for which the assessment exercise was conducted in the year 2020. It is noteworthy that Chennai ranks fourth and Coimbatore seventh from Tamil Nadu in this list.
  • Around 111 cities participated in the assessment exercise. Shimla topped the category of cities with population of less than million.

8. Bao dhaan is a variety of rice cultivated in which Indian state?

A) West Bengal

B) Assam

C) Odisha

D) Karnataka

  • ‘Bao dhaan’ is a variety of red rice that is rich in iron. It is cultivated in the alluvial soil in the Brahmaputra Valley in Assam. Recently, the first consignment of ‘red rice’ was flagged off to the United States of America (USA). The unique feature of the rice is that it is grown without the use of any chemical fertilizer.

9. According to recently published Municipal Performance Index, which city ranked 1st in the category of million–plus cities?

A) Indore

B) Lucknow

C) Surat

D) Bhopal

  • The Central govt recently published the Municipal Performance Index (MPI). In this index, Indore was ranked first in the category of Million–plus cities. It is followed by Surat and Bhopal. While in the ‘less–than–million category’, New Delhi Municipal Council (NDMC) has been ranked first and is followed by Tirupati and Gandhinagar.

10. The Central Industrial Security Force (CISF) Raising Day is celebrated on which date?

A) March 05

B) March 08

C) March 10

D) March 11

  • The Central Industrial Security Force (CISF) Raising Day is celebrated every year on March 10. On this day, in 1969, the CISF was set up under an act of the Parliament of India with a strength of 2,800.
  • It is directly under the Union Ministry of Home Affairs and its headquarters are at New Delhi.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!