Tnpsc

10th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

10th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 10th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

10th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. COVID-19 பாதிப்புக்குள்ளான ஆசிய சிங்கங்கள் உள்ள நேரு விலங்கியல் பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ) ஆந்திர பிரதேசம்

ஆ) தெலங்கானா

இ) ஒடிஸா

ஈ) இராஜஸ்தான்

 • ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள எட்டு ஆசிய சிங்கங்கள் COVID-19 பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இதுபோன்று இந்தியாவில் நடைபெறுவது இது முதன்முறையாகும். அதன் மாதிரிகள், செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டன. மேலும், RT-PCR பரிசோதனைகளின்போதும் அவை COVID-19 பாதிப்புக்கு உள்ளாகியிருந்தன. இருப்பினும், விலங்குகள் மனிதர்களுக்கு இந்நோயை பரப்புகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை.

2. வெண்பல்கொண்ட மூஞ்சூறு இனம் முதன்முறையாக எரிமலை தீவான நார்கொண்டாம் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தீவு அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) அந்தமான் & நிகோபார் தீவுகள்

ஆ) மேற்கு வங்கம்

இ) ஒடிஸா

ஈ) நாகாலாந்து

 • அந்தமான் & நிகோபார் தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவான நார்கொண்டாம் தீவில், ஒரு புதிய வகை பூச்சுண்ணும் பாலூட்டி வகையைச் சார்ந்த வெண்பல்கொண்ட மூஞ்சூறு இனத்தை அறிவியலாளர்கள் க
  -ண்டுபிடித்துள்ளனர். சுண்டெலிகள் போன்ற இந்த மூஞ்சூறு இனம், பூச்சிகளை முதன்மை உணவாகக்கொண்ட ஒரு சிறிய உயிரினமாகும்.
 • இந்த எரிமலை தீவில் கண்டறியப்பட்ட முதல் மூஞ்சூறு இனம் இதுவாகும். மேலும் இது, இந்தியாவில் கண்டறியப்பட்ட 12ஆவது வெண்பல் கொண்ட மூஞ்சூறு இனமாகும்.

3. இந்தியாவில் 5G தொழில்நுட்பத்திற்கான சோதனைகளை நடத்த தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கின்ற அமைப்பு எது?

அ) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஆ) தொலைதொடர்புத்துறை

இ) TRAI

ஈ) NITI ஆயோக்

 • இந்தியாவில் 5G தொழில்நுட்பத்திற்கான சோதனைகளை நடத்துதற்கு, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு, இந்திய அரசின் தொலைதொடர்பு துறை அனுமதியளித்துள்ளது. இந்நிறுவனங்கள் ஆறு மாத காலத்திற்கு கிராமப்புற, புறநகர்ப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சோதனைகளை நடத்துகின்றன. இதில் உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கும் அமைப்பதற்குமான 2 மாத கால அவகாசமும் அடங்கும்.

4. UCO அடிப்படையிலான உயரி-டீசல் கலந்த டீசலின் முதல் விநியோகம் அண்மையில் தொடங்கிவைக்கப்பட்டது. UCO என்றால் என்ன?

அ) Unused Cooking Oil

ஆ) Used Cooking Oil

இ) Unutilized Cooking Oil

ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை

 • பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் அடிப்படையிலான உயிரி டீசல் கலந்த டீசலின் முதல் விநியோகம் அண்மையில் புது தில்லியில் உள்ள இந்தியன் ஆயிலின் திக்ரிக்கலன் விற்பனை முனையத்திலிருந்து தொ -டங்கிவைக்கப்பட்டது. இவ்விழாவுக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார். முன்னதாக 2019ஆம் ஆண்டில், பெட்ரோலிய மற்றும் சுகாதார அமைச்சகங்கள், “பயன்படுத்திய சமையல் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் உயரி டீசலை கொள்முதல் செய்தல்” என்பதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தின. IOCL, 2021 மார்ச் வரை 51 KL UCO-உயிரி டீசலைப் பெற்றுள்ளது.

5. WHO ஆதரவு அமைப்பான GINA உடன் தொடர்புடைய நோய் எது?

அ) இரத்த சோகை

ஆ) ஆஸ்துமா

இ) காசநோய்

ஈ) புற்றுநோய்

 • உலக ஆஸ்துமா நாளானது ஆஸ்துமாவிற்கான உலகளாவிய முன்னெ -டுப்பால் (GINA) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது, உலக நலவாழ்வு அமைப்பின் ஆதரவில், 1993ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். உலகளவில் ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற் -காக ஆண்டுதோறும் உலக ஆஸ்துமா நாள் மே.5ஆம் தேதியன்று ஏற்பாடு செய்யப்படுகிறது.
 • “Uncovering Asthma Misconceptions” என்பது நடப்பாண்டு வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும. உலகளவில் 339 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஆஸ்துமா இருப்பதாக WHO மதிப்பிடுகிறது.

6. அண்மையில் எந்தத் தேதியில், பன்னாட்டு தீயணைப்பு வீரர்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது?

அ) மே 04

ஆ) மே 05

இ) மே 06

ஈ) மே 07

 • மனித சமூகமும் சுற்றுச்சூழலும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் தீயணைப்பு வீரர்களின் தியாகங்களை அங்கீகரிக்கவும் கெளரவிப்பதற்காகவுமாக ஒவ்வோர் ஆண்டும் மே.4 அன்று பன்னாட்டு தீயணைப்பு வீரர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.
 • 1999 ஜன.4 அன்று ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் உயிரிழந்த ஐந்து தீயணைப்பு வீரர்களை நினைவுகூருவதற்கு ஆதரவாக உலகெங்கும் மின்னஞ்சல் மூலமாக இடம்பெற்ற பரப்புரையினை அடுத்து மே.4ஆம் தேதியை உலகெங்கும் தீயணைப்பு வீரர்கள் நாளாக நினைவுகூர முடிவுசெய்யப்பட்டது.

7. கிழக்கிந்திய கம்பெனியால் முதன்முதலில் நிலக்கரி சுரங்கப்பணி மேற்கொள்ளப்பட்ட இராணிகஞ்ச் நிலக்கரி வயல் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) ஜார்க்கண்ட்

ஆ) ஒடிஸா

இ) மேற்கு வங்கம்

ஈ) பீகார்

 • கிழக்கிந்திய கம்பெனியானது மேற்கு வங்க மாநிலத்தின் தாமோதர் ஆற்றின் மேற்குக்கரையில் அமைந்துள்ள இராணிகஞ்ச் நிலக்கரி சுரங்கத்தில், கடந்த 1774’இல் முதன்முறையாக நிலக்கரி சுரங்கப்பணியைத் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மே.4 அன்று நிலக்கரி சுரங்கத்தொழிலாளர்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

8. பன்னாட்டு உணவு கட்டுப்பாடற்ற நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) மே 04

ஆ) மே 06

இ) மே 08

ஈ) மே 10

 • நலமான வாழ்க்கை முறையை வளர்த்தெடுப்பதற்கும், உணவு கட்டுப்பாட்டால் ஏற்படும் இடர்கள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவத ற்குமாக ஒவ்வோர் ஆண்டும் மே.6 அன்று பன்னாட்டு உணவு கட்டுப்பாடற்ற நாள் அனுசரிக்கப்படுகிறது. இதன் சின்னம் வெளிர் நீலநிற நாடா ஆகும்.

9. புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான சத்யஜித் ரே சார்ந்த மாநிலம் எது?

அ) ஒடிஸா

ஆ) அஸ்ஸாம்

இ) மேற்கு வங்கம்

ஈ) மகாராஷ்டிரா

 • சத்யஜித் ரே, ஓர் இந்திய திரைப்பட இயக்குநரும் எழுத்தாளரும் கவியும் இதழாசிரியரும் இசையமைப்பாளருமாவார். மேற்கு வங்காள மாநிலத்தைச் சார்ந்த அவர், 1965ஆம் ஆண்டில் ‘பத்ம பூஷண்’, 1985’இல் ‘தாதாசாகேப் பால்கே’ விருது மற்றும் ‘பாரத இரத்னா’ ஆகியவற்றைப் பெற்றார். அவரது சாதனையை நினைவுகூரும் வகையில், இந்தியாவி -லும் வெளிநாட்டிலும் அவரின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

10. ‘உலகளாவிய மின்னணு வணிக அறிக்கை – 2019’இன் மதிப்பீடுகளை’ வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ) IMF

ஆ) ADB

இ) UNCTAD

ஈ) WTO

 • சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட ஐநா வர்த்தக மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு (UNCTAD) ’உலகளாவிய மின்னணு வணிக அறிக்கை – 2019’இன் மதிப்பீடுகளை’ வெளியிட்டு உள்ளது. COVID-19 கட்டுப்பாடுகள் காரணமாக, மின்னணு வணிகம் மற்றும் இணையவழி சில்லறை விற்பனையில் வியத்தகு உயர்வு ஏற்பட்டதாக அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
 • ஐக்கிய அமெரிக்க நாடுகளைத்தொடர்ந்து ஜப்பான் & சீனா ஆகியவை உலகின் ஒட்டுமொத்த மின்னணு வணிக சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது என்று அவ்வறிக்கை மேலும் கூறியுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா இன்று பதவியேற்பு:

அஸ்ஸாம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஹிமந்த விஸ்வ சர்மா பதவியேற்கிறார். அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. அதில் மொத்தமுள்ள 126 இடங்களில் பாஜக தலைமையிலா -ன தேசிய ஜனநாயகக் கூட்டணி 75 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. பாஜக மட்டும் 60 தொகுதிகளைக் கைப்பற்றியது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த அஸ்ஸாம் கண பரிஷத் 9 தொகுதிகளிலும், ஐக்கிய மக்கள் லிபரல் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

2. தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக R சண்முகசுந்தரம் பொறுப்பேற்பு

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக R சண்முகசுந்தரம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்ற பிறகு மாநில அளவில் முக்கிய பதவிகளில் மாற்றம் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்னதாகவே தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த விஜய நாராயணன் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரத்தை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக R சண்முகசுந்தரம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

3. தேவை அவசர சிகிச்சை! | மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்த தலையங்கம்

பிரிட்டனுக்கு ஜி7 நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள நான்கு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர். அங்கே இந்தியத் தூதரகம் ஒருங்கிணைத்த கருத்தரங்கில் பேசும்போது, கடந்த 75 ஆண்டுகளாக இந்தியா மருத்துவக் கட்டமைப்புக்கு போதுமான அளவு முதலீடு செய்யவில்லை என்கிற எதார்த்தத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்போதாவது இது குறித்த விழிப்புணர்வும், நிஜ நிலையும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு புரியத் தொடங்கியிருக்கிறதே என்கிற அளவில் சற்று ஆறுதல்.

மருத்துவமும், சுகாதாரமும் மாநிலப் பட்டியலில் இடம் பெறுவதால், சில மாநில அரசுகள் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தாமல் விட்டதன் விளைவை கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்தில் நாம் எதிர்கொள்கிறோம். பொது சுகாதாரத்துக்கு எல்லா மாநில அரசுகளும் முன்னுரிமை வழங்கி கிராமப்புறங்கள் வரை முறையான மருத்துவப் பாதுகாப்பை மக்களுக்கு வழங்கியிருந்தால், கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் இந்த அளவிலான இடர்பாடுகளை இந்தியா சந்தித்திருக்கத் தேவையில்லை.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்த விவாதம் தொடங்கிவிட்டது. 2017-இல் தேசிய சுகாதாரக் கொள்கை உருவாக்கப்பட்டு, 2025-க்குள் மருத்துவத்துக்கான நிதி ஒதுக்கீடு ஜிடிபி-யில் 2.5%-ஆக அதிகரிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கி பல்வேறு மருத்துவத் தேவைகளுக்கான கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதுதான் இலக்கு. பின்தங்கிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதன் மூலம், சிகிச்சை வசதிகளை அதிகப்படுத்துவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதும் 2017 தேசிய சுகாதாரக் கொள்கையின் இலக்குகள்.

செவிலியர்கள், தடுப்பூசி வழங்குபவர்கள், தொற்றுநோய் கண்காணிப்பாளர்கள், பரிசோதனைக்கூடப் பணியாளர்கள் உள்ளிட்ட துணை மருத்துவப் பணியாளர்கள் மிக அதிகமாக தேவைப்படுகிறார்கள் என்று தேசிய சுகாதாரக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவசர சிகிச்சைப் படுக்கைகள், தீவிர சிகிச்சைக் கட்டமைப்புகள் ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியிருந்தும்கூட, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கொள்ளை நோய் தாக்கியபோது எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்கிற நிலையில்தான், 2017 தேசிய சுகாதாரக் கொள்கை காணப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் சுகாதாரத் தேவைக்கான அரசின் நிதி ஒதுக்கீடு ஜிடிபி-யில் 1.5%-க்கும் கீழாகவே இருந்து வருகிறது. பிரேஸில் (4%), சீனா (2.9%), ஈரான் (4.4%), அமெரிக்கா (8.6%) ஆகிய நாடுகள் சுகாதாரத்துக்கு வழங்கும் முக்கியத்துவத்தை நாம் கவனத்தில் கொள்ளாமல் போனது துரதிருஷ்டம். கடந்த ஆண்டு கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று பரவத் தொடங்கியபோது இந்தியாவின் 410 மாவட்டங்களில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தேசிய அளவிலான ஆய்வை மேற்கொண்டனர். கொவைட் 19-ஐ எதிர்கொள்ள எந்த அளவுக்கு மாவட்டங்கள் தயாராக இருக்கின்றன என்பதை அந்த ஆய்வு முன்னிலைப்படுத்தியது.

தீவிர சிகிச்சைக்கான வசதிகள், உயிர் காக்கும் உபகரணங்கள், மாவட்ட – தாலுகா மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள், அவசர ஊர்திகள் உள்ளிட்ட கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கான அனைத்து மருத்துவ தேவைகள் குறித்தும் அந்த ஆய்வில் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன. அப்படியிருந்தும்கூட போதிய படுக்கை வசதிகள் இல்லாமலும், தேவைக்கேற்ற மருந்துகள் இல்லாமலும், குறைந்தபட்ச ஆக்சிஜன் வசதியை உறுதிப்படுத்தாமலும் இருந்திருக்கிறோம் என்றால் அதற்கு கவனக்குறைவும், மெத்தனமும்தான் காரணம்.

தமிழகத்தைத் தவிர, இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகள் பெரும்பாலும் பெருநகரங்களை சுற்றியே அமைந்திருக்கின்றன, குறைவாகவும் இருக்கின்றன. புதிய மருத்துவக் கல்லூரிகளும், செவிலியர் கல்லூரிகளும் பின்தங்கிய மாவட்டங்களில்தான் தொடங்கப்பட வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய குறைபாடு. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், 2020 ஏப்ரல் மாதம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, இந்திய மருத்துவமனைகளில் 19 லட்சம் படுக்கைகள் உள்ளன. அதில் 12 லட்சம் தனியார் மருத்துவமனையில் காணப்படுகின்றன. 10,000 பேருக்கு 16 மருத்துவமனைப் படுக்கைகள் என்கிற அளவில்தான் இந்தியா இருக்கிறது. சிறிய அண்டை நாடான இலங்கையில்கூட 10,000 பேருக்கு 42 மருத்துவமனைப் படுக்கைகள் காணப்படுகின்றன.

அதேபோல, இந்தியாவிலுள்ள அவசர சிகிச்சை படுக்கைகள் வெறும் 95,000 மட்டுமே. அதில் 59,000 தனியார் மருத்துவமனைகளில் காணப்படுகின்றன. வென்டிலேட்டர்களை எடுத்துக்கொண்டால் 47,000 வென்டிலேட்டர்களில் 29,000 தனியார் மருத்துவனைகளில்தான் காணப்படுகின்றன. முறையான திட்டமிடலும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல் போனதன் விளைவுதான் இது. வீட்டில் இருக்கும் நகை நட்டுகளையும், வங்கியில் இருக்கும் சேமிப்புகளையும், அசையாச் சொத்துகளையும் விற்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பொது மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், கிராமங்கள் வரை மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும் எந்த அளவுக்கு அத்தியாவசியம் என்பதை கொள்ளை நோய்த்தொற்று நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது.

4. இந்திய ராணுவ வரலாற்றில் ‘காலாட் படை போலீஸ்’ பிரிவில் 83 பெண்கள் முதல் முறை சேர்ப்பு

வரலாற்றில் முதன் முறையாக இந்திய ராணுவத்தின் ‘காலாட் படை போலீஸ்’ பிரிவில் (மிலிட்டரி போலீஸ்) 83 பெண்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். இந்திய ராணுவத்தில் காலாட் படை, விமானப்படை, கடற்படை ஆகிய 3 பிரிவுகள் உள்ளன. இந்தப் படைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரிவுகளில் மட்டும் 1990-களில் தொடங்கி பெண்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். எனினும், களப்பணிகளில் அவர்களை ஈடுபடுத்தாமல் ‘அதிகாரி நிலை’ பதவிகளில் மட்டுமே பெண்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் நம் நாட்டின் முப்படைகளில் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில், வரலாற்றில் முதன்முறையாக இந்திய ராணுவத்தின் அதிகாரி நிலை பதவி அல்லாத ‘காலாட்படை போலீஸ்’ பிரிவில் 83 பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 61 வாரங் கள் கடுமையான பயிற்சிக்கு பிறகு பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்கள் முறைப்படி ராணுவத்தில் இணைக்கப்பட்டனர். இனி ஆண்டுக்கு 52 பெண்கள் வீதம் மொத்தம் 800 பேரை ‘காலாட்படை போலீஸ்’ பிரிவில் இணைக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

5. குறைந்த விலையில் திறன்மிக்க வென்டிலேட்டர்: இஸ்ரோ சாதனை

மிகக் குறைந்த விலையில் 3 வகையான வென்டிலேட்டர்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்து சாதனை படைத்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பல மாநிலங்களில் வென்டிலேட்டர், ஆக்சிஜன் செறிவூட்டிகளின் தேவை அதிகரித்து வருகிறது. இவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் இஸ்ரோ நிறுவனம் குறைந்த செலவில் 3 வகை வென்டிலேட்டர்களை வடிவமைத்துள்ளது. இதேபோல குறைந்தவிலை ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் தயாரித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் செயல்படும் இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குனர் சோம்நாத் கூறியதாவது: ஒரு வென்டிலேட்டர் தற்போது ரூ.5 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. நாங்கள் பிராணா, வாயு, ஸ்வாஸ்தா ஆகிய 3 வகையான வென்டிலேட்டர்களை வடிவமைத்துள்ளோம். இவை சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த வென்டிலேட்டரை ஒரு லட்சம் ரூபாயில் வாங்க முடியும்.

வென்டிலேட்டர் தவிர குறைந்த விலை ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் வடிவமைத்துள்ளோம். அடுத்த ஒரு மாதத்துக்குள் வர்த்தகரீதியாக புதிய வென்டிலேட்டர், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உற்பத்தி துவங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1. Nehru Zoological Park, where Asiatic Lions were tested Covid positive, is situated in which state?

A) Andhra Pradesh

B) Telangana

C) Odisha

D) Rajasthan

 • Eight Asiatic lions at Hyderabad’s Nehru Zoological Park have tested positive for Covid–19. This is the first case of lions or any other animals testing positive for the coronavirus infection in an Indian zoo.
 • The samples were tested by Centre for Cellular and Molecular Biology (CCMB) and the RT–PCR tests turned out to be positive for COVID–19. However, there is no factual evidence that animals can transmit the disease to humans.

2. A white–toothed shrew species has been discovered for the first time in a volcanic island– Narcondam Island, located in which state?

A) Andaman & Nicobar Islands

B) West Bengal

C) Odisha

D) Nagaland

 • Scientists have discovered a new species of insectivorous mammal, a white–toothed shrew, from Narcondam Island of the Andaman and Nicobar group of islands. Shrews are small and mouse–like mammals with insects as the primary diet. This is the first discovery of a shrew from this volcanic island (Narcondam Island) and it increases the number of White–toothed shrew species in India from 11 to 12.

3. Which body permits Telecommunication companies to conduct trials for 5G technology in India?

A) Department of Science and Technology

B) Department of Telecommunications

C) TRAI

D) NITI Aayog

 • The Government of India’s Department of Telecommunications (DoT), has permitted telecommunication companies to conduct trials for 5G technology in India. These companies would conduct trials in rural, semi–urban and urban regions for a period of six month, which includes a 2 months’ time for procurement and setting up of equipment.

4. The first supply of UCO–based Biodiesel blended Diesel was flagged off recently. What is UCO?

A) Unused Cooking Oil

B) Used Cooking Oil

C) Unutilized Cooking Oil

D) None of the Above

 • The First supply of UCO (Used Cooking Oil) based Biodiesel blended Diesel was flagged off recently from Indian Oil’s Tikrikalan Terminal, New Delhi. The flagging off ceremony was presided over by Minister of Petroleum & Natural Gas and Steel, Shri Dharmendra Pradhan. Earlier in 2019, petroleum and health ministries had initiated Expressions of Interest for “Procurement of Biodiesel produced from Used Cooking Oil”. IOCL has received 51KL of UCO–Biodiesel till March 2021.

5. GINA, a WHO collaborative organisation, is associated with which disease?

A) Anaemia

B) Asthma

C) Tuberculosis

D) Cancer

 • World Asthma Day (WAD) is organized by the Global Initiative for Asthma, (GINA). It is a World Health Organization collaborative organization founded in 1993.
 • Every year World Asthma Day is organised on May 5, every year, to raise awareness of Asthma worldwide. This year’s World Asthma Day theme is “Uncovering Asthma Misconceptions”. WHO estimates that over 339 million people had Asthma globally.

6. On which date, the 2019 edition of International Firefighters’ Day is observed recently?

A) May 04

B) May 05

C) May 06

D) May 07

 • The International Firefighters’ Day (IFFD) is observed every year on May 4 to recognize and honour the sacrifices that firefighters make to ensure that our communities and environment are as safe as possible. It was instituted after a proposal was emailed out across the world on January 4, 1999 due to the deaths of five firefighters in tragic circumstances in a bushfire in Australia.

7. Raniganj coalfield, the first field where the East India Company began coal mining, is located in which state?

A) Jharkhand

B) Odisha

C) West Bengal

D) Bihar

 • The East India Company exploited the Raniganj coalfield along the western bank of Damodar River, West Bengal, thereby starting the Coal mining in India in 1774. Every year, Coal Miners Day is observed on May 4 in solidarity with the miners working in coal fields.

8. The International No diet day is observed on which date?

A) May 04

B) May 06

C) May 08

D) May 10

 • The International No Diet Day is observed every year on May 6 to promote a healthy life style and to raise awareness of the potential dangers of dieting and the unlikelihood of success. Its symbol is a light blue ribbon.

9. Satyajit ray, the legendary film maker and author, was from which state?

A) Odisha

B) Assam

C) West Bengal

D) Maharashtra

 • Satyajit Ray was an Indian film maker, author, lyricist, magazine editor, illustrator and music composer. He belonged to West Bengal and was recipient of Padma Bhushan in 1965, Dadasaheb Phalke Award in 1985, and the Bharat Ratna.
 • To commemorate his achievement, Union information and broadcasting ministry has announced that it will organize year long centenary celebrations of the filmmaker in India and abroad.

10. Which organization has released the “Estimates of Global e– commerce Report 2019”?

A) IMF

B) ADB

C) UNCTAD

D) WTO

 • The “Estimates of Global E Commerce Report 2019” has been released by the United Nations Conference on Trade and Development (UNCTAD), which is headquartered at Geneva, Switzerland. The report has noted that, due to COVID restrictions, there was a dramatic rise in in e–commerce and online retail sales.
 • The report further stated that The United States, followed by Japan and China, continues to dominate the overall e–commerce market in the globe.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!