TnpscTnpsc Current Affairs

10th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

10th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 10th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகராக (2022-இல்) நியமிக்கப்பட்டவர் யார்?

அ. அஜை குமார் சூட் 

ஆ. K சிவன்

இ. மயில்சாமி அண்ணாதுரை

ஈ. கிரிஸ் கோபாலகிருஷ்ணன்

  • இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகராக மூத்த இயற்பியலாளர் அஜை குமார் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பணியாளர் அமைச்சகத்தின் ஆணையின்படி, பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க ஆலோசனைக்குழுவின் உறுப்பினரான சூட், 3 ஆண்டுகாலத்திற்கு அந்தப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர், தற்போதைய முதன்மை அறிவியல் ஆலோசகராக இருந்து வரும் புகழ்பெற்ற உயிரியலாளர் K விஜய இராகவனைத் தொடர்ந்து இந்தப் பதவிக்கு வரவுள்ளார்.

2. ‘சர்மத்’ என்னும் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பரிசோதித்த நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. சீனா

இ. ரஷ்யா 

ஈ. பிரான்ஸ்

  • ரஷ்யா சமீபத்தில் தனது புதிய கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான ‘Sarmat’ஐ பரிசோதனை செய்தது. RS-28 சர்மத் (சதன்-II என்றும் அழைக்கப்படுகிறது) 10 அல்லது அதற்கு மேற்பட்ட வெடியுளைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது 11,000 முதல் 18,000 கிமீ வரம்பில் பூமியின் இரு துருவங்களிலும் இயங்கும் திறன்கொண்டது. தற்போதைய தெற்கு ரஷ்யா, உக்ரைன் மற்றும் கஜகஸ்தானில் வாழ்ந்த நாடோடிப் பழங்குடியினரின் நினைவாக ‘சர்மத்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

3. விஸ்டனின் 2022ஆம் ஆண்டுக்கான, ‘ஆண்டின் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள்’ பட்டியலில் எத்தனை இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்?

அ. ஒன்று

ஆ. இரண்டு 

இ. மூன்று

ஈ. ஒருவருமில்லை

  • இந்திய அணியின் அணித்தலைவர் ரோகித சர்மாவும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் விஸ்டனின் 2022 ஆம் ஆண்டுக்கான ‘சிறந்த 5 கிரிக்கெட் வீரர்களுள் இருவராக’க் கௌரவிக்கப்பட்டனர். நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணியின் அணித்தலைவி டேன் வான் நீகெர்க் ஆகியோரும் அந்தப்பட்டியிலில் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ஜோ ரூட், 2022ஆம் ஆண்டு விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் பதிப்பில் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக தேர்வுசெய்யப்பட்டார்.

4. ஆண்டுதோறும், ‘உலக படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஏப்ரல்.18

ஆ. ஏப்ரல்.21 

இ. ஏப்ரல்.23

ஈ. மே.05

  • உலக படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஏப்.21 அன்று கொண்டாடப்படுகிறது. மனித வளர்ச்சியின் அனைத்து அம்சங்களிலும் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்தின் பங்குபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது. ஐநா பொதுச்சபையானது கடந்த 2017ஆம் ஆண்டில் இந்த நாளைக் கொண்டாடுவாதற்கான ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. மேலும் 2018ஆம் ஆண்டில் முதல் உலக படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க நாள் கொண்டாடப்பட்டது. ‘Collaboration’ என்பது இந்த ஆண்டு உலக படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க நாளுக்கானக் கருப்பொருள் ஆகும்.

5. ‘போபோஸ்’ என்பது கீழ்காணும் எந்தக் கோளின் இயற்கையான துணைக்கோள்/நிலவு ஆகும்?

அ. வெள்ளி

ஆ. செவ்வாய் 

இ. வியாழன்

ஈ. சனி

  • NASAஇன் செவ்வாய் ஆய்வூர்தியான, ‘பெர்ஸிவெரன்ஸ்’ செவ்வாய்க்கோள் சம்பந்தப்பட்ட கிரகணத்தை படம் பிடித்துள்ளது. இது செவ்வாய்க்கோளின் உருளைக்கிழங்கு வடிவ நிலவு அல்லது துணைக்கோளான ‘போபோஸ்’, சூரியனுக்கு நேரெதிராகக் கடந்தபோது படம் பிடித்தது. இக்கிரகணம், ‘பெர்ஸிவரன்ஸி’ன் Mastcam-Z கேமராமூலம் படம்பிடிக்கப்பட்டது. பூமியின் நிலவைக் காட்டிலும் 157 மடங்கு சிறியது ‘போபோஸ்’ என்பதால், 40 வினாடி நேரத்திற்கு மேல் அக்கிரகணம் நீடித்தது.

6. யாருக்கு, UNEP, ‘புவியின் சாம்பியன்’ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது?

அ. டேவிட் அட்டன்பரோ 

ஆ. வங்காரி மாத்தாய்

இ. கிரேட்டா துன்பெர்க்

ஈ. ஜோ பிடன்

  • ஐநா சுற்றுச்சூழல் திட்டமானது (UNEP) டேவிட் அட்டன்பரோவுக்கு, ‘புவியின் சாம்பியன்’ வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளது. மூத்த ஆங்கில ஒலிபரப்பாளரும் உயிரியலாளருமான டேவிட் அட்டன்பரோ, இயற்கையின் பாதுகாப்பு மற்றும் அதன் மறுசீரமைப்புக்கான ஆராய்ச்சி, ஆவணங்கள் மற்றும் வாதிடுவதற்கான அர்ப்பணிப்புக்காக கௌரவிக்கப்பட்டார். BBC-இன் நேச்சுரல் ஹிஸ்டரி அலகில் பணியாற்றியதற்காக அவர் அறியப்படுகிறார்.

7. நோபல் பரிசாளரான ஜோஸ் ராமோஸ்-ஹோர்டா, கீழ்காணும் எந்த நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்?

அ. மங்கோலியா

ஆ. திமோர்-லெஸ்டே 

இ. புருனே

ஈ. பப்புவா நியூ கினி

  • திமோர்-லெஸ்டே அல்லது கிழக்கு திமோர் என்பது ஒரு தென்கிழக்காசிய நாடாகும். அது திமோரின் சரிபாதியாகும். திலி அதன் தலைநகராகும். நோபல் பரிசு பெற்ற ஜோஸ் ராமோஸ்-ஹோர்டா அந்நாட்டின் அதிபர் தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ளார். அந்நாட்டுச் செயலகத்தின் இணையதளத்தின்படி, எழுபத்திரு வயதான அவர் தற்போதைய அதிபர் பிரான்சிஸ்கோ குட்டெரெஸுக்கு எதிராக 62.09% வாக்குகளைப் பெற்றார்.

8. முதலாவது, ‘இன்க்ரெடிபிள் இந்தியா இன்டர்நேஷனல் குரூஸ் கான்பரன்ஸ் – 2022’ நடைபெறும் நகரம் எது?

அ. சென்னை

ஆ. மதுரை

இ. விசாகப்பட்டினம்

ஈ. மும்பை 

  • மே மாதத்தில், ‘இன்க்ரெடிபிள் இந்தியா இன்டர்நேசனல் குரூஸ் மாநாடு-2022’ஐ இந்தியா நடத்தவுள்ளது. மும்பை துறைமுக ஆணையமானது மே 14-15 ஆகிய தேதிகளில் இந்தியாவின் நிதித்தலைநகரில் இந்நிகழ்வை நடத்தும். இதன் வகையில் முதலான தனித்துவம்மிக்க, ‘கடல் பயண முனையம்’ 2024 ஜூலை மாதத்துக்குள் மும்பையால் தொடங்கப்படும். மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால், நிகழ்வின் இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். மேலும் நிகழ்வின் இலச்சினை மற்றும் ‘கேப்டன் குரூஸோ’ என்ற சின்னத்தையும் அவர் வெளியிட்டார்.

9. மரபணு மாற்றப்பட்ட கொசுக்களின் முதல் திறந்தவெளி சோதனையை நடத்திய நாடு எது?

அ. சீனா

ஆ. அமெரிக்கா 

இ. ஜெர்மனி

ஈ. இத்தாலி

  • தொடக்கத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட UK-ஐச் சார்ந்த உயிரித்தொழில்நுட்ப நிறுவனமான, ‘ஆக்ஸிடெக்’, காட்டுக்கொசுக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை திறந்த வெளியில் பறக்கவிட்டது. ‘Oxitec’ ஏற்கனவே பிரேசில், பனாமா, கேமன் தீவுகள் மற்றும் மலேசியாவில் உள்ள வயலில் மரபணு மாற்றப்பட்ட கொசுக்களைப் பரிசோதித்துள்ளது. இது, அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட கொசுக்களின் முதல் திறந்தவெளி பரிசோதனையாகும்.

10. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2020-இல் ஒரு நாளளவில் அதிக உயிரி மருத்துவக்கழிவுகளை உருவாக்கிய மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. கேரளா 

இ. மத்திய பிரதேசம்

ஈ. கர்நாடகா

  • 2020ஆம் ஆண்டில் நாடு நாளொன்றுக்கு 651.23 டன் உயிரி மருத்துவக்கழிவுகளை (BMW) உற்பத்தி செய்ததாக சுற்றுச்சூழல் அமைச்சகத் தரவு காட்டுகிறது. COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு, தினசரி BMW உற்பத்தி இரண்டு ஆண்டுகளில் சுமார் 962.31 டன்கள் உயர்ந்துள்ளது. இக்காலகட்டத்தில் தினசரி உற்பத்தி செய்யப்படும் BMW-இல் 60% COVID தொடர்பானதாகும். கேரளாவில், 2020ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு சுமார் 40.41 டன் BMW மற்றும் 2020-2022 வரை 178.37 டன் COVID தொடர்பான BMW உற்பத்தி செய்யப்பட்டது.
  • மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை BMW உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு வசதிகள் (30) உள்ளன. கேரள மாநிலத்தின் ஒன்றே ஒன்றுதான் (1) உள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. சிறந்த சேவைக்காக அஸ்ஸாம் காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கலர்ஸ் கொடி விருதை உள்துறை அமைச்சர் அமித்ஷா வழங்கினார்

சிறந்த சேவைக்காக அஸ்ஸாம் காவல்துறைக்கு குடியரசுத்தலைவரின் கலர்ஸ் கொடி விருதை மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா வழங்கினார்.

நாட்டின் உயரிய காவல்துறை விருதைப்பெறும் பத்தாவது காவல்படையாக அஸ்ஸாம் காவல்துறை திகழ்வது குறித்து பெருமிதமடைவதாக உள்துறை அமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார். கடந்த 1826ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியால் இந்த காவல்துறை ஏற்படுத்தப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

2. தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு: மயிலாடும்பாறை ஆய்வு முடிவை வெளியிட்டு முதல்வர் பேச்சு

தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பின் பயன்பாடு இருந்து வந்துள்ளதை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக முதல்வர் மு க ஸ்டாலின் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி 110இன்கீழ் அவர் படித்தளித்த அறிக்கை:

அகழாய்வுகளில் கிடைக்கக்கூடிய தொல்பொருள்களை ஆய்வுசெய்திட தொல் தாவரவியல், தொல் விலங்கியல், தொல் மரபணு ஆய்வு, சுற்றுச்சூழல் தொல்லியல், மண் பகுப்பாய்வு, உலோகவியல், கடல்சார் ஆய்வுபோன்ற பல்துறை வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றிட புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அறிவியல்வழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் கிடைத்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

அதன்படி, கீழடிக்கு அருகேயுள்ள அகழாய்வுத் தளத்தில் சேகரிக்கப்பட்ட மண்மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் அங்கே நெற்பயிர்கள் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. சிவகளை வாழ்விடப்பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அங்கே நீர்செல்லும் செங்கல் வடிகாலில் நன்னீர் சென்றுள்ளதும், தேக்கிவைக்கப்பட்ட நீர்நிலையிலிருந்து இந்த நீர் கொண்டுவரப்பட்டதும் ஆய்வில் தெரிய வருகிறது.

மயிலாடும்பாறை ஆய்வு:

தமிழ்நாடு தொல்லியல் துறையால் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை என்ற இடத்தில் ஈமச்சின்னங்கள், வாழ்விடப்பகுதிகளில் ஆய்வுகள் செய்யப்பட்டன. பாறை ஓவியங்கள், புதிய கற்காலக்கருவிகள் என அரியவகை தொல்லியல் அடையாளங்களைக் கொண்ட மயிலாடும்பாறையின் வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

இந்த ஆய்வின் மூலம், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்தது உறுதியாகியுள்ளது. இரும்பின் பயனை உணரத்தொடங்கிய பிறகே, அடர்ந்த வனங்களை அழித்து வேளாண்மை செய்திடும் போக்கு உருவாகியுள்ளது. அந்த வகையில், வேளாண்மைச் சமூகம் தொடங்கிய காலம் குறித்தான கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது.

மயிலாடும்பாறையில் ஆய்வு முடிவுகள் 4,200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது பெருமைதரத்தக்க செய்தியாகும். இதேபோன்று, கருப்பு-சிவப்புப் பானை வகைகளும் 4,200 ஆண்டுகளுக்கு முன்புடையது.

புதிய இடங்களில் ஆய்வு: தமிழ்நாட்டின் தொல்லியல் அகழாய்வுப் பணிகள் இத்துடன் நின்றுவிடாது. கேரளத்தின் பட்டணம், கர்நாடக மாநிலம் தலைக்காடு, ஆந்திரத்தின் வேங்கி, ஒடிஸாவின் பாலூர் பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றார் முதல்வர் மு க ஸ்டாலின்.

3. சேதி தெரியுமா?

ஏப்.29: தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழக வேந்தராகத் தமிழக முதல்வர் இருப்பதற்கான சட்ட மசோதா தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேறியது.

ஏப்.29: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப் பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மே.2: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இறந்த உடலிலிருந்து கல்லீரல் எடுக்கப்பட்டு உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்டது.

மே.2: மணிலாவில் நடைபெற்ற ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப்பில் சிந்து வெல்லும் இரண்டாவது பதக்கம் இது.

மே.3: சென்னையில் உள்ள கிழக்குக் கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை’ என்று அழைக்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.

மே.4: பேரறிவாளன் வழக்கில், ‘20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளவர்களின் வழக்கில் நகர்வுகள் இல்லாதபட்சத்தில் நீதிமன்றமே அந்த நபர்களின் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மே.5: தமிழக சட்டப்பேரவையில் இரண்டாம் முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை நிலுவையில் வைத்திருந்த ஆளுநர் ஆர் என் ரவி அதைக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பினார்.

1. Who has been appointed as the Principal Scientific Advisor (PSA) to the Indian Government (in 2022)?

A. Ajay Kumar Sood 

B. K Sivan

C. Mayilsamy Annadurai

D. Kris Gopalakrishnan

  • Veteran physicist Ajay Kumar Sood has been appointed as the principal scientific advisor (PSA) to the Government of India.
  • As per the Personnel ministry order, Sood, a member of the Science, Technology and Innovation Advisory Council to the Prime minister, has been appointed to the post for a period of three years. He will succeed the incumbent PSA and renowned biologist K Vijay Raghavan.

2. Which country tested the Intercontinental Ballistic Missile (ICBM) ‘Sarmat’?

A. USA

B. China

C. Russia 

D. France

  • Russia recently tested its new Intercontinental Ballistic Missile (ICBM) Sarmat. The RS–28 Sarmat (also called as Satan–II) is claimed to be able to carry ten or more warheads and decoys.
  • It has the capability of firing over either of the earth’s poles with a range of 11,000 to 18,000 km. Sarmat is named after nomadic tribes who were in the present–day Southern Russia, Ukraine and Kazakhstan.

3. How many Indians featured in the 2022 edition of Wisden ‘Five Cricketers of the Year’ list?

A. One

B. Two 

C. Three

D. None

  • India’s captain Rohit Sharma and ace pacer Jasprit Bumrah have been honoured by Wisden as two of their Five Cricketers of The Year. They were named along with New Zealand opener Devon Conway, England pacer Ollie Robinson and South Africa Women captain Dane van Niekerk. England skipper Joe Root was named Leading Cricketer in the World in the 2022 edition of Wisden Cricketers’ Almanack.

4. When is the ‘World Creativity and Innovation Day’ celebrated every year?

A. April 18

B. April 21 

C. April 23

D. May 05

  • World Creativity and Innovation Day is celebrated every year on April 21. It is marked to raise the awareness of the role of creativity and innovation in all aspects of human development. United Nations General Assembly adopted a resolution to celebrate the day in 2017, and the first World Creativity and Innovation Day was celebrated in 2018. The theme of World Creativity and Innovation’s Day this year is ‘Collaboration’.

5. Phobos is the natural satellite/moon of which planet?

A. Venus

B. Mars 

C. Jupiter

D. Saturn

  • The Perseverance Mars rover of National Aeronautics and Space Administration (NASA) has captured the eclipse involving Mars. It captured Phobos, Mars’ potato–shaped moon or satellite, crossing the face of the Sun. The eclipse was captured with Perseverance’s Mastcam–Z camera. It lasted a little above 40 seconds, shorter than a solar eclipse involving Earth’s Moon, as Phobos is about 157 times smaller than Earth’s Moon.

6. Who has been conferred the UNEP ‘Champions of the Earth’ Lifetime Achievement Award?

A. David Attenborough 

B. Wangari Maathai

C. Greta Thunberg

D. Joe Biden

  • The United Nations Environment Programme (UNEP) has awarded David Attenborough the Champions of the Earth Lifetime Achievement Award.
  • The Veteran English broadcaster and biologist has been honoured for his dedication to research, documentation and advocacy for the protection of nature and its restoration. He is known for his work with the BBC’s Natural History Unit.

7. Nobel Prize winner José Ramos–Horta has won the Presidential Election of which country?

A. Mongolia

B. Timor–Leste 

C. Brunei

D. Papua New Guinea

  • Timor–Leste, or East Timor is a Southeast Asian nation occupying half the island of Timor, with Dili as its Capital. Nobel Prize winner José Ramos–Horta has scored a landslide victory in the country’s presidential election. The 72–year–old secured 62.09% votes against incumbent Francisco Guterres, as per the secretariat’s website.

8. Which city is the venue of first–ever ‘Incredible India International Cruise Conference 2022’?

A. Chennai

B. Madurai

C. Visakhapatnam

D. Mumbai 

  • India would host the first–ever ‘Incredible India International Cruise Conference 2022’ in May. The Mumbai Port Authority (MPA) would host the event in India’s financial capital on May 14–15. The first–of–its–kind of iconic sea cruise terminal would be commissioned by Mumbai by July 2024. Union Minister for Ports, Shipping, and Waterways Sarbananda Sonowal also launched the event’s website and unveiled the event logo and mascot named ‘Captain Cruzo’ for the event.

9. Which country conducted the first open–air trial of genetically modified mosquitoes?

A. China

B. United States of America 

C. Germany

D. Italy

  • Oxitec, a UK–based biotech firm initially founded at Oxford University, released genetically modified mosquitoes in an effort to curb wild mosquito populations. Oxitec had already tested the genetically modified mosquitoes in the field in Brazil, Panama, the Cayman Islands and Malaysia, but this was the first open–air trial of genetically modified mosquitoes in the United States.

10. As per the official data, which state generated the most Bio–medical waste per day in 2020?

A. Uttar Pradesh

B. Kerala 

C. Madhya Pradesh

D. Karnataka

  • The Ministry of Environment data shows that the country generated 651.23 tonnes of BMW per day in 2020. After the Covid–19 pandemic outbreak, the daily BMW output rose by about 962.31 tonnes in two years. 60 per cent of BMW generated daily during this period was Covid–related.
  • Kerala generated about 40.41 tonnes of BMW per day in 2020 and 178.37 tonnes of Covid–related BMW from 2020 to 2022. Maharashtra, Karnataka, Tamil Nadu, Gujarat and Uttar Pradesh also lead in BMW generation. Maharashtra has the highest number of Common Bio–Medical Waste Treatment Facilities (30), while Kerala has 1 facility.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!