Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

10th November 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. மாநிலத்தில் உள்ள ஏதிலிகளுக்கு 25,000 நில பட்டாக்களை வழங்கியுள்ள மாநிலம் எது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. மேகாலயா

இ. அஸ்ஸாம்

ஈ. மேற்கு வங்கம்

  • ஏதிலிகள் மற்றும் பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியின (ST) மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கு வங்க மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று ஏதிலிகள் வசித்துவரும் குடியிருப்புகளுக்கு நில பட்டாக்களை வழங்குவதாகும். ஏதிலிகளுக்கு மொத்தம் 1,25,000 நில பட்டாக்களை வழங்க அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது. அதில் 25,000 பட்டாக்கள் அண்மையில் முதலமைச்சரால் வழங்கப்பட்டன.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “பினாகா Mk-1” என்றால் என்ன?

அ. செவ்வாய் சுற்றுக்கலன்

ஆ. புவிநிலை துணைக்கோள்

இ. ஏவுகணை அமைப்பு

ஈ. பிராந்திய வழிகாட்டுதல் அமைப்பு

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (DRDO), ஒடிசா சந்திப்பூரிலிருந்து, நவ.4ஆம் தேதி நடத்திய மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. முந்தைய பினாகா ஏவுகணையைவிட அதிக தூரம் சென்று இலக்கை எட்டும் வகையில் இந்த மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.
  • பூனாவை தலைமையிடமாகக்கொண்ட DRDO, இந்த ஏவுகணையை வடிவமைத்து தயாரித்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை, தற்போது தயாரிக்கப்பட்டு வரும் பினாகா மார்க்-I வகை ஏவுகணைக்கு மாற்றாக செயல்படும்.

3. UPI சந்தையில் நுழைவதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ள சமூக ஊடக தளம் எது?

அ. டெலிகிராம்

ஆ. வாட்ஸ்அப்

இ. வீ சாட்

ஈ. பேஸ்புக் மெசஞ்சர்

  • ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகத்தில் (UPI) படிப்படியாக நுழைவதற்காக தேசிய கொடுப்பனவு கழகத்தின் ஒப்புதலை வாட்ஸ்அப் பெற்றுள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான இந்நிறுவனம், இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. தொடக்கத்தில் 2 கோடி வாட்ஸ்அப் பயனர்களுக்கு UPI வழியாக பணஞ்செலுத்தும் சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4. 120 ஆண்டுகளில் முதன்முறையாக 500 மீ., உயரமுள்ள பவளப்பாறையைக் கண்டறிந்துள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஆஸ்திரேலியா

இ. ஜப்பான்

ஈ. பிரேசில்

  • ஷ்மித் பெருங்கடல் நிறுவனத்தின் அறிக்கையின்படி, அதன் ஆராய்ச்சி கப்பலான ‘பால்கோர் – Falkor’ ஆஸ்திரேலியாவில் உள்ள பெருந்தடுப்புப் பவளத்திட்டில், பெரிய பவளப்பாறை ஒன்றை கண்டுபிடித்து -ள்ளது. இந்த ஆய்வுக் கப்பல் ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள கடலில், பன்னிரண்டு மாத காலமாக ஆய்வுப்பணியை மேற்கொண்டு வருகிறது. 500 மீ., உயரமுள்ள அப்பவளப்பாறை 120 ஆண்டுகளில் முதல்முறையாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற புதிய பாறைகளை ஆராய்வதற்காக அந்நிறுவனத்தின் நீருக்கடியில் செயல்படும் ‘SuBastian’ என்ற எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

5. நார்டிக் – பால்டிக் ஒத்துழைப்பு கட்டமைப்போடு தொடர்புடைய நாடுகளின் எண்ணிக்கை என்ன?

அ. ஐந்து

ஆ. எட்டு

இ. பன்னிரண்டு

ஈ. பதினைந்து

  • வெளியுறவு அமைச்சர் Dr S ஜெய்சங்கர் சமீபத்தில் முதலாவது இந்தியா-நார்டிக்-பால்டிக் மாநாட்டில் உரையாற்றினார். நார்டிக்-பால்டிக் எட்டு (NB8) ஒத்துழைப்பு கட்டமைப்பில் டென்மார்க், சுவீடன், எசுடோனியா, பின்லாந்து, ஐசுலாந்து, லத்வியா, லித்துவேனியா & நார்வே ஆகிய 8 நாடுகள் உள்ளன.

6. “பத்னா லிக்னா அபியான்” திட்டத்தின் ஒருபகுதியாக மாறியுள்ள மாநிலம் எது?

அ. கர்நாடகா

ஆ. பீகார்

இ. கேரளா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • கேரள மாநிலம் அண்மையில், “பத்னா லிக்னா அபியான்” திட்டத்தின் ஒருபகுதியாக மாறியுள்ளதுடன், பத்தாண்டுகளுக்குப் பிறகு, கல்வியறிவு திட்டங்களுக்கான மத்திய நிதியைப் பெற தயாராகவுள்ளது. “பத்னா லிக்னா அபியான்” என்பது நடுவணரசால் தொடங்கப்பட்ட வாசிப்பு மற்றும் எழுதுதலுக்கான திட்டமாகும். அது, வரும் 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் முழுமையான கல்வியறிவு என்ற இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

7. ஒரே ஏவுகணையின்மூலம் 13 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவிய நாடு எது?

அ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ. சீனா

இ. இரஷ்யா

ஈ. இஸ்ரேல்

  • தையுவான் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்து லாங் மார்ச்-6 என்ற ஒற்றை ஏவுகணையிலிருந்து சீனா 13 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியுள்ளது. இதில் அர்ஜென்டினாவின் பத்துச் செயற் -கைக்கோள்களும் அடங்கும். இந்த ஏவுதல், லாங் மார்ச் ஏவுகணையின் 351ஆவது நிகழ்வாகும். 90 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை ஏவவும் சீனா திட்டமிட்டுள்ளது.

8. தில்லி காற்றின் தர மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. A K சிக்ரி

ஆ. N K சிங்

இ. M M குட்டி

ஈ. V K பால்

  • பணியாளர் அமைச்சகத்தின் அண்மைய உத்தரவின்படி, தில்லியின் முன்னாள் தலைமைச் செயலாளர் M M குட்டி, தேசிய தலைநகர மண்டலம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றின் தர மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். IIT-தில்லி, IMD & சுற்றுச்சூழல் அமைச்சகத்தைச் சேர்ந்த பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களும் இந்த ஆணையத்தின் முழுநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

9. எந்த நாட்டைச்சார்ந்த விண்வெளி ஆய்வு மையம், பால்வீதியில் முதன்முறையாக ரேடியோ வெடிப்பை கண்டறிந்துள்ளது?

அ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ. சீனா

இ. இரஷ்யா

ஈ. இந்தியா

  • பால்வீதியில் இதற்குமுன் கண்டிராத X கதிர் மற்றும் ரேடியோ சமிக்ஞைகளின் கலவையை சமீபத்தில் கண்டதாக தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA) சமீபத்தில் தெரிவித்துள்ளது.
  • விண்மீன் மண்டலத்திற்குள் முதலாவது விரைவான ரேடியோ வெடிப்பு (FRB) காணப்படுவதாகவும் அது அறிவித்தது. ‘FRB’ எனப்படும் இந்நிகழ்வு குறித்த தகவல்கள் ‘நேச்சர்’ என்ற இதழில் அண்மையில் வெளியிடப்பட்டது.

10. போர் மற்றும் ஆயுதமோதல்களின்போது சுற்றுச்சூழலைச் சுரண்டுவதைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாள் (International Day for Preventing the Exploitation of the Environment in War and Armed Conflict) அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. நவம்பர் 4

ஆ. நவம்பர் 6

இ. நவம்பர் 8

ஈ. நவம்பர் 10

  • போர் மற்றும் ஆயுதமோதல்களின்போது சுற்றுச்சூழலைச் சுரண்டுவதைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாளானது ஒவ்வோர் ஆண்டும் நவ.6 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஐநா பொதுச்சபையானது 2001ஆம் ஆண்டில் இந்நாளைக்கடைப்பிடிப்பது குறித்து அறிவித்தது. ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின்படி, அனைத்து உள்நாட்டு மோதல்களிலும் குறைந்தது 40% இயற்கை வளங்கள் சுரண்டப்படுகிறது.

1. Which state has awarded 25,000 land pattas to refugee population of the state?

[A] Andhra Pradesh

[B] Meghalaya

[C] Assam

[D] West Bengal

  • A number of welfare schemes for the refugee and the Scheduled Caste (SC) and Scheduled Tribe (ST) population have been announced by the state Government of West Bengal. One among them is providing land pattas to refugee colonies. The state has decided to give a total 1,25,000 land pattas to the refugees, of which 25,000 pattas were given by the Chief Minister recently.

2. What is “Pinaka Mk–1”, that is seen in news recently?

[A] Mars Rover

[B] Geo Stationary Satellite

[C] Missile System

[D] Regional Navigation System

  • Enhanced PINAKA rocket, developed by Defence Research and Development Organisation (DRDO) has been successfully flight tested from Integrated Test Range, Chandipur off the coast of Odisha. The design and development have been carried out by Pune based DRDO laboratories. Enhanced version of the Pinaka rocket would replace the existing Pinaka Mk–I rockets.

3. Which social media platform has received approval from the National Payments Corporation of India (NPCI), to enter UPI market?

[A] Telegram

[B] WhatsApp

[C] WeChat

[D] Facebook Messenger

  • WhatsApp has received the National Payments Corporation of India’s (NPCI) approval to enter Unified Payment Interface (UPI) in phased manner. WhatsApp, owned by Facebook has over 400 million users in India. The UPI payments service is expected to be launched to 2 crore WhatsApp users initially.

4. In which country, a 500–meter–high coral reef has been discovered for the first time in 120 years?

[A] India

[B] Australia

[C] Japan

[D] Brazil

  • As per the Schmidt Ocean Institute, its research vessel ‘Falkor’ has discovered a massive coral reef in Great Barrier Reef in Australia. The research vessel has been undertaking a 12–month exploration mission of the ocean surrounding Australia. The 500–meter–high reef has been discovered for the first time in 120 years. ‘SuBastian’, the underwater robot of the institute is deployed to explore the new reef.

5. How many countries are associated with the Nordic–Baltic co–operation framework?

[A] Five

[B] Eight

[C] Twelve

[D] Fifteen

  • External Affairs Minister Dr S Jaishankar recently virtually addressed the first India –Nordic – Baltic Conclave. The Nordic–Baltic Eight (NB8) co–operation framework includes eight countries namely Denmark, Estonia, Finland, Iceland, Latvia, Lithuania, Norway, and Sweden.

6. Which state has recently become a part of the “Padhna Likhna Abhiyan” programme?

[A] Karnataka

[B] Bihar

[C] Kerala

[D] Andhra Pradesh

  • Kerala has recently become a part of the “Padhna Likhna Abhiyan” programme and is ready to receive the central funds for literacy programmes, after ten years. Padhna Likhna Abhiyan is the reading and writing campaign launched by the Central Government. IT aims to achieve the goal of complete literacy in the country by 2030.

7. Which country has successfully sent 13 satellites from a single rocket?

[A] United States of America

[B] China

[C] Russia

[D] Israel

  • China has successfully sent 13 satellites from the single rocket named Long March–6 carrier rocket from the Taiyuan Satellite Launch Centre. It includes ten satellites from Argentina. This launch was also the 351st by the Long March rocket series. China has also planned to launch ninety earth observation satellites.

8. Who has been appointed as the Chairman of commission on Delhi air quality management?

[A] A K Sikri

[B] N K Singh

[C] M M Kutty

[D] V K Paul

  • According to the recent order by the Personnel Ministry, former Chief Secretary of Delhi M M Kutty has been appointed as the Chairperson of the Commission for Air Quality Management in National Capital Region and Adjoining Areas. Several technical experts from IIT–Delhi, IMD and the Environment Ministry have also been appointed as the full–time members of the commission.

9. The Space Research organisation of which country has spotted Radio burst for the first time in Milky Way?

[A] United States of America

[B] China

[C] Russia

[D] India

  • The National Aeronautics and Space Administration (NASA) has recently reported that it has recently observed a mix of X–ray and radio signals that were never observed before in the Milky Way. It also announced that the first fast radio burst (FRB) was also observed within the galaxy. The detection of the phenomenon called FRB was recently published in the journal ‘Nature’.

10. When is the ‘International Day for Preventing the Exploitation of the Environment in War and Armed Conflict’ observed?

[A] November 4

[B] November 6

[C] November 8

[D] November 10

  • ‘International Day for Preventing the Exploitation of the Environment in War and Armed Conflict’ is observed every year on November 6. The UN General Assembly declared the observance of this day, in the year 2001. As per the United Nations Environment Programme (UNEP), at least 40 percent of all internal conflicts are linked to the exploitation of natural resources.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!