TnpscTnpsc Current Affairs

10th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

10th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 10th September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

10th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. UNDPஇன் 2021ஆம் ஆண்டுக்கான மனித வளர்ச்சிக்குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 121

ஆ. 125

இ. 129

ஈ. 132

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. 132

  • 2021ஆம் ஆண்டுக்கான மனித வளர்ச்சிக்குறியீட்டில் (HDI) 191 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்தியா 132ஆவது இடத்தைப்பிடித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) அறிக்கையின்படி, ஆயுட்காலம் வீழ்ச்சியடைவதால், நாட்டின் செயல்திறன் அதன் முந்தைய நிலையிலிருந்து சற்றே சரிந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டின் அறிக்கையில், 189 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இந்தியா 131ஆவது இடத்தில் இருந்தது.

2. அண்மையில், ‘டைமண்ட் லீக் சாம்பியன்’ ஆன இந்திய விளையாட்டு வீரர்/வீராங்கனை யார்?

அ. P V சிந்து

ஆ. நீரஜ் சோப்ரா 

இ. H S பிரணாய்

ஈ. ஹிமா தாஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நீரஜ் சோப்ரா

  • நீரஜ் சோப்ரா 88.44 மீ தூரத்துக்கு ஈட்டியெறிந்து, இந்தியாவிலிருந்து ‘டைமண்ட் கோப்பையை’ வெல்லும் முதல் வீரர் என்ற வரலாற்றுச்சாதனையைப் படைத்தார். நீரஜ் சோப்ரா இதற்கு முன், 89.08 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து ‘லொசேன் டைமண்ட்’ லீக்கை வென்றிருந்தார். ஜூலை மாதம் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், அவர், 89.30 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

3. 2022ஆம் ஆண்டிற்கான பார்ச்சூன் இந்தியாவின், ‘இந்தியாவின் செல்வந்தர்கள்’ பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த வணிகர் யார்?

அ. முகேஷ் அம்பானி

ஆ. கௌதம் அதானி

இ. சைரஸ் பூனாவாலா

ஈ. ஆதி கோத்ரெஜ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கௌதம் அதானி

  • பார்ச்சூன் இந்தியாவின் 2022ஆம் ஆண்டிற்கான, ‘இந்தியச் செல்வந்தர்கள்’ பட்டியலின்படி, கௌதம் அதானி `10.29 டிரில்லியன் சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவில் உள்ள 142 பில்லியனர்களின் சொத்து மதிப்பு $832 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (`66.36 டிரில்லியன்) ஆகும். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலின்படி, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கௌதம் அதானி அண்மையில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை விஞ்சி உலகின் மூன்றாவது பெருஞ்செல்வந்தர் ஆனார்.

4. ‘குடியிருப்புப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம்’ என்ற பல்நோக்கு இணையதளத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ. மேற்கு வங்காளம்

ஆ. மேகாலயா

இ. சிக்கிம்

ஈ. ஒடிஸா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மேகாலயா

  • மேகாலயா மாநில அரசு, “மேகாலயா குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம்” என்ற பல்நோக்கு இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையானது மேகாலயா முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் உள்ளாட்சிகளை இந்த இணையதள அமைப்புடன் இணைக்கும். இது குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதை நோக்கமாகக்கொண்டுள்ளது. மேலும், பல்வேறு அரசாங்க சேவைகளை சிறப்பாக வழங்குவதற்காக உளவுத்துறையின் தகவல்களையும் இது பயன்படுத்துகிறது.

5. நாட்டின் முதல், ‘கல்வி நகரத்தை’ உருவாக்கவுள்ள மாநிலம்/UT எது?

அ. கேரளா

ஆ. கர்நாடகா

இ. பஞ்சாப்

ஈ. உத்தர பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. உத்தர பிரதேசம்

  • உத்தரபிரதேச மாநிலத்தில், ‘கல்வி நகரத்தை’ உருவாக்கவுள்ளதாக அம்மாநில அரசு அறிவிப்பு செய்துள்ளது. இந்த நடவடிக்கை இளையோர்க்கு உயர்தர கல்வியை வழங்குவதோடு, ஒரே இடத்தில் பலவிதமான தொழிற்முறை திறன்களுடன் அவர்களை சித்தப்படுத்துகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தங்குமிடம் மற்றும் இதர வசதிகளையும் இந்தக் ‘கல்வி நகரம்’ வழங்கும்.

6. எந்த மாநிலம்/UTஇல், ஆசியாவின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைத்தார்?

அ. ஆந்திரப் பிரதேசம்

ஆ. ஹரியானா

இ. கர்நாடகா

ஈ. மேற்கு வங்கம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஹரியானா

  • ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் அமைந்துள்ள அமிர்தா மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இது மாதா அமிர்தானந்தமயி மடத்தின் நிதியுதவியுடன் ஆறாண்டு காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 81 சிறப்புத்துவங்களைக் கொண்ட இந்த மருத்துவமனை, இந்தியா மற்றும் ஆசியாவிலேயே மிகப்பெரிய தனியார் மருத்துவமனை என்ற சிறப்பை கொண்டுள்ளது. இது ஒரு பிரத்யேக ஏழு–அடுக்கு ஆராய்ச்சித்தொகுதி மற்றும் எட்டுச் சிறப்பு மையங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

7. ‘சைலிட்டால்’ என்ற சர்க்கரை மாற்றீட்டை உற்பத்தி செய்வதற்கான நொதித்தல் முறையை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?

அ. IISc பெங்களூரு

ஆ. ஐஐடி கௌகாத்தி

இ. ஐஐடி மெட்ராஸ்

ஈ. NIT வரங்கல்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஐஐடி கௌகாத்தி

  • ஐஐடி கௌகாத்தியைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் மீயொலி உதவியுடனான நொதித்தல் முறையை உருவாக்கி ‘சைலிட்டால்’ என்ற சர்க்கரை மாற்றீட்டை உருவாக்கியுள்ளனர். கரும்புகளை பிழிந்த பின் எஞ்சியிருக்கும் கரும்புச் சக்கையிலிருந்து இது உருவாக்கப்படுகிறது. இந்தத் தயாரிப்பு இரசாயன தொகுப்பு முறைகளின் வரம்புகள் மற்றும் பாரம்பரிய நொதித்தல் முறையுடன் தொடர்புடைய நேர தாமதங்களையும் சமாளிக்கிறது. இது நீரழிவு எதிர்ப்பு மற்றும் உடற்பருமன் எதிர்ப்பு விளைவுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

8. தனது, ‘பாதணிகள் மற்றும் தோல் பொருட்கள் கொள்கை – 2022’ஐ வெளியிட்டுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மேற்கு வங்காளம்

இ. ஒடிஸா

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தமிழ்நாடு

  • தமிழ்நாடு தனது, ‘பாதணிகள் மற்றும் தோல் தயாரிப்புக்கொள்கை – 2022’ஐ பாதணி மற்றும் தோல் தொழிற்துறை மாநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய தோல் தொழிற்துறை உற்பத்தியில் 26 சதவீதமும், ஏற்றுமதியில் 48 சதவீதமும் தமிழ்நாட்டின் பங்காகும். இக்கொள்கையானது பாதணி மற்றும் தோல் பொருட்கள் (FLP) உற்பத்திக்கான சிறப்புப் பொதியையும் FLP வடிவமைப்பு அரங்குகளுக்கான ஊக்கத்தொகையையும் வழங்கும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், இராணிப்பேட்டையில், `400 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பாதணி உற்பத்திப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.

9. சமீபத்தில் வெளியிடப்பட்ட, “New India: Selected Writings 2014–19” என்பது கீழ்க்காணும் எந்தத் தலைவருடைய கட்டுரைகளின் தொகுப்பு நூலாகும்?

அ. சுஷ்மா சுவராஜ்

ஆ. அருண் ஜெட்லி

இ. மனோகர் பாரிக்கர்

ஈ. அடல் பிஹாரி வாஜ்பாய்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அருண் ஜெட்லி

  • இந்தியாவின் முன்னாள் துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா, “New India: Selected Writings 2014–19” என்ற நூலை வெளியிட்டார். 2014 முதல் 2019 வரை இந்திய அரசின் நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சராக பணியாற்றிய அருண் ஜெட்லி எழுதிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்த நூல், அருண் ஜெட்லியின் மூன்றாவது நினைவு நாளின்போது வெளியிடப்பட்டது.

10. அகதிகளை வரவேற்கும் முனைவுகளை அங்கீகரிக்கும் வகையில், 2022ஆம் ஆண்டுக்கான UNESCOஇன் அமைதிப்பரிசைப் பெற்றவர் யார்?

அ. ஜோ பிடன்

ஆ. நரேந்திர மோடி

இ. ஏஞ்சலா மேர்க்கல்

ஈ. வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஏஞ்சலா மேர்க்கல்

  • ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல், நடப்பு 2022ஆம் ஆண்டுக்கான UNESCO அமைதிப்பரிசைப் பெற்றார். “அகதிகளை வரவேற்பதில் அவர் மேற்கொண்ட முனைவுகளை அங்கீகரிக்கும் வகையில்” அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில், 1.2 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரை, குறிப்பாக சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் எரித்திரியாவைச் சேர்ந்தோரை வரவேற்கும், ‘துணிச்சலான’ முடிவிற்காக ஃபெலிக்ஸ் ஹூப்ஹவுட்–போய்க்னி–யுனெஸ்கோ அமைதிப்பரிசை அவர் பெற்றார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. டைமண்ட் லீக்: வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக் போட்டியில் ஈட்டியெறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப்பிரிவில் இந்திய ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். இறுதிச்சுற்றில் அவர் 87.58 மீ. தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். அமெரிக்காவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டியெறிதல் இறுதிச்சுற்றில் 88.13 மீ தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2ஆம் இடம்பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 2ஆவது இந்தியர் நீரஜ் சோப்ரா. 2003இல் பாரிஸில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்றார். பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் நீரஜ் சோப்ரா காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை.

கடந்த மாத இறுதியில் ஸ்விட்சர்லாந்தின் லுசானேவில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் பங்கேற்றார் நீரஜ் சோப்ரா. இந்தப் போட்டியில் 89.08 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பெற்றார். இந்தப் போட்டியின் முடிவில் முதல் ஆறு இடங்களைப் பிடித்த வீரர்கள், ஜூரிச்சில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் பங்கேற்றார்கள். டைமண்ட் லீக் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றதுடன் 2023இல் ஹங்கேரியில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதியடைந்தார் நீரஜ் சோப்ரா.

இந்நிலையில் ஜூரிச்சில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்தப்போட்டியில் 88.44 மீ தூரத்துக்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பெற்றார். டைமண்ட் லீக் போட்டியில் முதல்முறையாக சாம்பியன் ஆகியுள்ளார் 24 வயது நீரஜ் சோப்ரா. 2017இல் 7ஆவது இடமும் 2018இல் 4ஆவது இடமும் பெற்றார். முதலிடம் பெற்ற நீரஜ் சோப்ராவுக்கு `23.85 லட்சம் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஆண்டர்சன் பீட்டர்ஸ் காயம் காரணமாக இப்போட்டியில் கலந்துகொள்ளவில்லை.

டைமண்ட் லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக்ஸ், உலக சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகளுக்கு அடுத்ததாகப் பெரிய போட்டியாக டைமண்ட் லீக் கருதப்படுகிறது. கடந்த 13 மாதங்களில் ஒலிம்பிக்ஸில் தங்கம், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி, டைமண்ட் லீக் சாம்பியன் என மூன்று சாதனைகளை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார்.

10th September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. What is the rank of India in the UNDP’s Human Development Index 2021?

A. 121

B. 125

C. 129

D. 132

Answer & Explanation

Answer: D. 132

  • India ranked 132nd among 191 countries and territories in the 2021 Human Development Index (HDI). As per a report by the United Nations Development Program (UNDP), decline in the country’s performance from its previous level due to a fall in life expectancy. In the 2020 report, India had ranked 131st among 189 countries and territories.

2. Which sportsperson of India recently became ‘Diamond League Champion’?

A. P V Sindhu

B. Neeraj Chopra

C. H S Prannoy

D. Hima Das

Answer & Explanation

Answer: B. Neeraj Chopra

  • Neeraj Chopra created history when he became the first Diamond Trophy winner from India, with a throw of 88.44 metre. Chopra had earlier won the Lausanne Diamond League with an 89.08–meter throw. He recorded 89.30m at Paavo Nurmi Games, while he clinched a historic silver medal at the World Championships in July.

3. Which businessperson was ranked first in the Fortune India’s list of ‘India’s Richest’ for 2022?

A. Mukesh Ambani

B. Gautam Adani

C. Cyrus Poonawala

D. Adi Godrej

Answer & Explanation

Answer: B. Gautam Adani

  • According to a Fortune India’s list of ‘India’s Richest’ for 2022, Gautam Adani was ranked first with the wealth of Rs 10.29 trillion. The wealth of 142 billionaires based in India is collectively worth USD 832 billion (Rs 66.36 trillion). Asia’s richest man Gautam Adani recently overtook Amazon founder Jeff Bezos to become the third richest person in the world, according to Forbes real–time billionaires list.

4. Which state launched a multi–purpose online portal called ‘Residents Safety and Security Act’?

A. West Bengal

B. Meghalaya

C. Sikkim

D. Odisha

Answer & Explanation

Answer: B. Meghalaya

  • The Meghalaya Government launched a multi–purpose online portal ‘Meghalaya Residents Safety and Security Act (MRSSA)’. The digitisation process would connect more than 6,000 villages and localities across Meghalaya to the online system. This aims to ensure the safety and security of the residents, gathering intelligence inputs for better delivery of numerous government services.

5. Which state/UT is set to build the country’s first ‘Education Township’?

A. Kerala

B. Karnataka

C. Punjab

D. Uttar Pradesh

Answer & Explanation

Answer: A. Kerala

  • The Uttar Pradesh government has announced that it is set to build an education township in the state. The move will provide high–quality education to the youth and equip them with a variety of professional skills in a single place. It will also provide accommodation and other facilities to students and teachers.

6. Prime Minister inaugurated Asia’s biggest private hospital in which state/UT?

A. Andhra Pradesh

B. Haryana

C. Karnataka

D. West Bengal

Answer & Explanation

Answer: B. Haryana

  • Prime Minister Narendra Modi inaugurated the Amrita hospital in Haryana’s Faridabad. It has been constructed over a period of six years with funding from the Mata Amritanandmayi Math. The hospital with 81 specialities is claimed to be the largest private hospital in the country and Asia, when completed. It has a dedicated seven–storey research block and eight centres of excellence.

7. Which institution has developed a fermentation method to produce a sugar substitute called ‘Xylitol’?

A. IISc Bengaluru

B. IIT Guwahati

C. IIT Madras

D. NIT Warangal

Answer & Explanation

Answer: B. IIT Guwahati

  • IIT Guwahati researchers have developed an ultrasound–assisted fermentation method to produce a sugar substitute called ‘Xylitol’. It is developed from sugarcane bagasse, the residue left after crushing of sugar cane. The product also overcomes the limitations of chemical methods of synthesis and the time delays associated with traditional method of fermentation. It also has potential anti–diabetic and anti–obesogenic effects.

8. Which state has launched its ‘Footwear & Leather Products Policy 2022’?

A. Tamil Nadu

B. West Bengal

C. Odisha

D. Karnataka

Answer & Explanation

Answer: A. Tamil Nadu

  • Tamil Nadu has launched its Footwear & Leather Products Policy 2022 at the Footwear & Leather Sector Conclave. The state accounts for 26 per cent of national leather manufacturing output and 48 per cent of exports. The policy will offer a special package for footwear and leather products (FLP) manufacture and incentives for FLP Design Studios. Chief Minister M.K. Stalin also laid the foundation stone for a 400–crore Mega Footwear Manufacturing Park at Ranipet.

9. ‘New India: Selected Writings 2014–19’, which was released recently, is a book of compiled writings of which leader?

A. Sushma Swaraj

B. Arun Jaitley

C. Manohar Parrikar

D. Atal Bihari Vajpayee

Answer & Explanation

Answer: B. Arun Jaitley

  • Former Vice President Venkaiah Naidu launched a book titled ‘New India: Selected Writings 2014–19. It has articles penned by Arun Jaitley, who served as the Minister of Finance and Corporate Affairs of the Government of India from 2014 to 2019. The book was launched on the BJP leader’s third death anniversary.

10. Who received the 2022 UNESCO Peace Prize in recognition of efforts to welcome refugees?

A. Joe Biden

B. Narendra Modi

C. Angela Merkel

D. Volodymyr Zelensky

Answer & Explanation

Answer: C. Angela Merkel

  • German Chancellor Angela Merkel received the 2022 UNESCO Peace Prize ‘in recognition of her efforts to welcome refugees’. Merkel received the Félix Houphout–Boigny–UNESCO Peace Prize for her ‘courageous’ decision to welcome more than 1.2 million migrants in 2015, particularly those from Syria, Iraq, Afghanistan, and Eritrea.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!