Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
General Tamil

10th Tamil Questions – Unit 2

10th Tamil Questions – Unit 2

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 10th Tamil Questions – Unit 2 With Answers Uploaded Below.

1. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. உயிரின வாழ்வின் அடிப்படை இயற்கை! நாம் நம்பியிருப்பதும் நம்மில் இருப்பதும் இயற்கையே.

II. மூச்சுக்குக் காற்று, தாகத்திற்கு நீர், உறைவதற்கு நிலம், ஒளிக்குக் கதிரவன் போன்றைவ உயிரினங்களின் முதன்மைத் தேவை.

III. இயற்கையின் கூறுகளில் காற்றின் பங்கு கூடுதலானது; காற்றே எங்கும் நிறைந்திருக்கிறது; மெல்லத் தொட்டுச் சென்றால் தென்றல்; தூக்கிச் சென்றால் புயல்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

2. _________________ என்பவர் உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார்.

A) வள்ளலார்

B) தொல்காப்பியர்

C) சயம் கொண்டார்

D) மாணிக்கவாசகர்

3. திருமூலர் தம் ______________ நூலில் மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளார்.

A) திருமந்திரம்

B) திருமூலர் காவியம்

C) ஆறாதாரம்

D) தீட்சை விதி

4. பிற்கால ஔவையார் தம் குறளில் _______________ எனும் அதிகாரத்தில், “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்று காற்றைச் சிறப்பித்துள்ளார்.

A) காற்றின் உயிர்

B) வாயு

C) காற்றாவி

D) வாயுதாரணை

5. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. காற்றுக்கு இந்தப் பூவுலகில் பல பெயர்கள் உண்டு.

II. காற்று, வளி, தென்றல், புயல், சூறாவளி எனப் பல்வேறு பெயர்களால் காற்று அழைக்கப்படுகிறது.

III. பருவநிலை, சூழல், வீசும் வேகம் ஆகியவற்றிற்கேற்பத் தென்றல்காற்று, பூங்காற்று, கடல்காற்று, பனிக்காற்று, வாடைக்காற்று, மேல்காற்று, கீழ்காற்று, மென்காற்று, இளந்தென்றல், புழுதிக்காற்று, ஆடிக்காற்று, கடுங்காற்று, புயல்காற்று, பேய்க்காற்று, சுழல்காற்று, சூறாவளிக்காற்று எனப் பல்வேறு பெயர்களால் காற்று அழைக்கப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

6. காற்று – பற்றிய சரியான கூற்று எது?

I. கிழக்கு என்பதற்குக் குணக்கு என்னும் பெயருமுண்டு. கிழக்கிலிருந்து வீசும்போது நான் கொண்டல் எனப்படுகிறேன். கொண்டலாக நான் குளிர்ச்சி தருகிறேன்; இன்பத்தைத் தருகிறேன்; மழையைத் தருகிறேன்; கடல் பகுதிக்கு மேலுள்ள மழைமேகங்களைச் சுமந்து வருவதால் மழைக்காற்று எனப்படுகிறேன்.

II. மேற்கு என்பதற்குக் குடக்கு என்னும் பெயருமுண்டு. மேற்கிலிருந்து வீசும்போது நான் கோடை எனப்படுகிறேன்; மேற்கிலிருந்து அதிக வலிமையோடு வீசுகிறேன்; வறண்ட நிலப்பகுதியில் இருந்து வீசுவதால் வெப்பக்காற்றாகிறேன்.

III. வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு. வடக்கிலிருந்து வீசும்போது நான் வாடைக்காற்று எனப்படுகிறேன். நான் பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் மிகவும் குளிர்ச்சியான ஊதைக்காற்று எனவும் அழைக்கப்படுகிறேன்.

IV. தெற்கிலிருந்து வீசும் போது நான் தென்றல் காற்று எனப்படுகிறேன்; மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்கு எனப் பல தடைகளைத் தாண்டி வருவதால் வேகம் குறைந்து இதமான இயல்பு கொள்கிறேன்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

7. தென்றலாகிய நான், பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வரும்பொழுது கூடவே வண்டுகளையும் அழைத்து வருவதால், _____________ என்பவர் என்னை, “வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” என்று கூறுகிறார்.

A) இளங்கோவடிகள்

B) மாணிக்கவாசகர்

C) ஒளவையார்

D) கம்பர்

8. “வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) மணிமேகலை

B) சிலப்பதிகாரம்

C) கம்பராமாயணம்

D) நளவெண்பா

9. “பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது” என்னும் சிற்றிலக்கிய நூலின் ஆசிரியர் யார்?

A) பட்டினத்துப் பிள்ளையார்

B) காளமேகப் புலவர்

C) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

D) காரைக்கால் அம்மையார்

10. “நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) முகில்விடுதூது

B) திருத்தணிகை மயில்விடு தூது

C) சிவஞான பாலைய தேசிகர் நெஞ்சுவிடு தூது

D) பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது

11. “நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே” எனப் பாடியவர்?

A) கண்ணதாசன்

B) வாலி

C) மருதகாசி

D) பட்டுக்கோட்டை

12. சரியாகப் பொருந்தியது எது?

I. கிழக்கு (குணக்கு) – கொண்டல்

II. மேற்கு (குடக்கு) – கோடை

III. வடக்கு – வாடை

IV. தெற்கு – தென்றல்

A) I, II, III மட்டும் சரி

B) I, II, III, IV அனைத்தும் சரி

C) III, IV மட்டும் சரி

D) IV மட்டும் சரி

13. முந்நீர் நாவாய் ஓட்டியாக காற்று (வளி): பழங்காலத்தில் கடல்கடந்த பயணங்கள் அனைத்தும் காற்றினால் இயக்கப்பட்ட பாய்மரக் கப்பல்களால் தான் நிகழ்ந்தன. “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ!” – என்று பாடியவர் யார்?

A) அஞ்சில் அஞ்சியார்

B) ஒக்கூர் மாசாத்தியார்

C) வெண்ணிக் குயத்தியார்

D) வெள்ளி வீதியார்

14. “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ!” – என்ற பாடல்வரி _______________ அவர்களைப் புகழ்ந்து பாடிய பாடல்.

A) விசயாலய சோழன்

B) கண்டராதித்தர்

C) உத்தம சோழன்

D) கரிகால் பெருவளத்தான் (கரிகால் சோழன்)

15. சரியானது எது? ஹிப்பாலஸ் பருவக்காற்று:

I. கி. பி. (பொ. ஆ) முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸ் என்னும் பெயர்கொண்ட கிரேக்க மாலுமி, பருவக்காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு நேரே விரைவில் பயணம் செய்ய புதிய வழியைக் கண்டுபிடித்தார்.

II. அதுமுதல், யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்து சென்றன.

III. அந்தப் பருவக் காற்றுக்கு யவனர் (கிரேக்கரும் உரோமானியரும் யவனர் ஆவர்.) அதைக் கண்டுபிடித்தவர் பெயராகிய ஹிப்பாலஸ் என்பதையே சூட்டினார்கள்.

IV. ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று.

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

16. சரியானது எது?

I. கிரேக்க அறிஞர் “ஹிப்பாலஸ்” (Hippalus) என்பவர் பருவக் காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தினார் என்பது வரலாறு.

II. அதற்கும் முன்னரே காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) II மட்டும் தவறு

D) I, II இரண்டுமே சரி

17. காற்று, ______________ வரை தென்மேற்குப் பருவக்காற்றாகவும் ______________ வரை வடகிழக்குப் பருவக்காற்றாகவும் மழைப்பொழிவைத் தருகிறது.

A) ஜூன் முதல் செப்டம்பர், அக்டோபர் முதல் டிசம்பர்

B) அக்டோபர் முதல் டிசம்பர், ஜூன் முதல் செப்டம்பர்

C) மே முதல் டிசம்பர், ஜூன் முதல் செப்டம்பர்

D) அக்டோபர் முதல் டிசம்பர், ஆகஸ்டு முதல் செப்டம்பர்

18. இந்தியாவிற்குத் தேவையான ______________ விழுக்காடு மழையளவினைத் தென்மேற்கு பருவக்காற்று கொடுக்கிறது.

A) 35

B) 60

C) 70

D) 75

19. காற்றின் ஆற்றலை “வளி மிகின் வலி இல்லை” என்று ஐயூர் முடவனார் ___________ நூலில் கூறியுள்ளார்.

A) கலித்தொகை

B) நளவெண்பா

C) அகநானூறு

D) புறநானூறு

20. கடுங்காற்று, மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று காற்றின் வேகத்தைக் கூறும் புறநானூற்று பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) மதுரை இளநாகனார்

B) பூங்குன்றனார்

C) ஒளவையார்

D) கம்பர்

21. காற்றின் ஆற்றல்: கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. உயிர்வளி தந்து உயிர்களைக் காக்கிறது. தாவரங்களின் ஒளிச்சேர்க்கையில் உணவு உற்பத்திக்கு உதவுகிறது.

II. விதைகளைப் பல இடங்களுக்குப் பரப்புகிறது. உயிர்ச் சங்கிலித் தொடர் அறுபடாதிருக்க உதவுகிறது. நவீன தொலைத்தொடர்பின் மையமாக விளங்குகிறது.

III. காற்றாலை மூலம் மின்னாற்றலைப் பெற உதவுகிறது. புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளமான காற்றைப் பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும் போது நிலக்கரியின் தேவை குறைந்து கனிமவளங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

22. உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ______________ இடம் பெற்றுள்ளது. இந்தியாவில், தமிழகம் ______________ வகிக்கிறது.

A) இரண்டாமிடம், ஐந்தாமிடம்

B) மூன்றாமிடம், நான்காமிடம்

C) முதலிடம், இரண்டாமிடம்

D) ஐந்தாம், முதலிடம்

23. உலகிலேயே அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில் _____________ இடம் இந்தியாவுக்கு.

A) முதல்

B) இரண்டாம்

C) மூன்றாம்

D) நான்காம்

24. மனிதன் உணவின்றி _____________ வாரம் உயிர் வாழ முடியும். நீரின்றி ___________ நாள் உயிர் வாழ முடியும்.

A) ஐந்து, ஐந்து

B) நான்கு, நான்கு

C) மூன்று, மூன்று

D) இரண்டு, இரண்டு

25. இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணங்களில் ____________ இடம் பெறுவது காற்று மாசுபாடு.

A) மூன்றாம்

B) நான்காம்

C) ஐந்தாம்

D) ஆறாம்

26. காற்று மாசுபடுவதால், குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக ____________ தெரிவித்துள்ளது.

A) பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு

B) ஐக்கிய நாடுகளின் போதை மருந்துகள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம்

C) ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை

D) ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF)

27. கதிரவனிடமிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களை தடுக்கும் அரண் எது?

A) வானம்

B) ஓசோன்

C) கோள்கள்

D) காற்று

28. புவியை ஒரு போர்வை போலச் சுற்றிக்கிடந்து பரிதியின் கதிர்ச்சூட்டைக் குறைத்துக் கொடுப்பது எது?

A) காற்று

B) ஓசோன்

C) கோள்கள்

D) வானம்

29. குளிர்ப்பதன பெட்டியில் இருந்து வெளிவரும் நச்சுக்காற்று எது?

A) குளோரோ அல்கேன்

B) குளோரோ புளோரோ கார்பன் (சி.எப்.சி.,)

C) அயடோ அல்கேன்

D) தொலுயீன்

30. நச்சுக்காற்று – சரியானது எது?

I. குளோரோ புளோரோ கார்பன் (சி.எப்.சி.,) ஓசோன் படலத்தை ஓட்டை இடுகிறது.

II. இதனால் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக தாக்குகிறது. இதனால் கண்களும், தோலும் அதிக பாதிப்படைகின்றன.

III. இதைக் குறைக்கும் விதமாக ஹைட்ரோ கார்பன் என்னும் குளிர்பதனியை இப்போது பயன்படுத்த தொடங்கியுள்ளோம்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

31. _____________, நைட்ரஜன் டை ஆக்ஸைடு ஆகியவை மழை பெய்யும் போது நீரில் கரைந்து விடுவதால் அமில மழை பெய்கிறது.

A) கந்தக டை ஆக்ஸைடு

B) நைட்ரஸ் ஆக்சைடு

C) கால்சியம் ஆக்சைடு

D) சிலிக்கான் ஈரொக்சைட்டு

32. ஒரு மணித்துளிக்கு _______________ முறை மூச்சுக்காற்றாய் நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு நம் நுரையீரலுக்குத் தேவையான உயிர்வளியை (ஆக்சிஜன்) மரங்கள் தருகின்றன.

A) 10 முதல் 15

B) 12 முதல் 18

C) 15 முதல் 20

D) 07 முதல் 12

33. உலகக் காற்று தினம் எப்போது?

A) ஏப்ரல் 15

B) மே 15

C) ஜூன் 15

D) ஜூலை 15

34. குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு, ____________ ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும்.

A) நூறு

B) ஆயிரம்

C) பத்தாயிரம்

D) ஒரு இலட்சம்

35. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்களைத் தாய் மொழியில் எழுதி வைத்துப் பாடுகின்றனர் – என்ற கூற்றுடன் தொடர்புடையவர் யார்?

A) தனிநாயக அடிகள், (ஒன்றே உலகம்)

B) பாரதியார்

C) திரு.வி.க

D) கே.கே.பிள்ளை

36. மென்துகிலாய் உடல்வருடி வாஞ்சையுடன் மனம் வருடி பகலெரிச்சல் பணக்கவலை பயக்குழப்பம் மொட்டை மாடித் தனியிரவில் நட்சத்திரக் கணக்கெடுப்பில் மறுபடியும் தவறவிட்ட தாளாத தன்னிரக்கம் இவை எல்லாமே எளிதாகக் கரைந்து போகும் – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) ராஜம் கிருஷ்ணன்

B) சி.சு.செல்லப்பா

C) தேவகோட்டை வா.மூர்த்தி

D) சுஜாதா

37. மாயங்கள் செய்கின்ற பூங்காற்றே! இத்தனை நாள் உனைப் பாடாதிருந்து விட்டேன் புதுக்கவிதையில் சிக்கிப் போனேன் – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) சுஜாதா

B) சி.சு.செல்லப்பா

C) ராஜம் கிருஷ்ணன்

D) தேவகோட்டை வா.மூர்த்தி

38. _________ நூற்றாண்டில் வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு இன்றும் உலக விந்தையாகத் திகழும் தாஜ்மகால், இன்றளவில் மஞ்சள், பழுப்பு என நிறம் மாறி காட்சியளிக்கிறது.

A) 13ஆம்

B) 15ஆம்

C) 16ஆம்

D) 17ஆம்

39. காற்றே வா. மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா. இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து, மிகுந்த ப்ராண -ரசத்தை எங்களுக்குக் கொண்டு கொடு – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?

A) பாரதியார் (பாரதியார் கவிதைகள்)

B) பாரதிதாசன் (அழகின் சிரிப்பு)

C) நாமக்கல் கவிஞர் (சங்கொலி)

D) வாணிதாசன் (கொடி முல்லை)

40. காற்றே, வா எமது உயிர்-நெருப்பை நீடித்து நின்ற நல்லொளி தருமாறு நன்றாக வீசு. சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே. பேய்போல வீசி, அதனை மடித்துவிடாதே – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?

A) பாரதிதாசன் (அழகின் சிரிப்பு)

B) பாரதியார் (பாரதியார் கவிதைகள்)

C) நாமக்கல் கவிஞர் (சங்கொலி)

D) வாணிதாசன் (கொடி முல்லை)

41. மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம். உன்னை வழிபடுகின்றோம் – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?

A) நாமக்கல் கவிஞர் (சங்கொலி)

B) பாரதிதாசன் (அழகின் சிரிப்பு)

C) பாரதியார் (பாரதியார் கவிதைகள்)

D) வாணிதாசன் (கொடி முல்லை)

42. சொல்லும் பொருளும் சரியானது எது?

I. மயலுறுத்து – மயங்கச்செய்

II. ப்ராண ரஸம் – உயிர்வளி

III. லயத்துடன் – சீராக

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

43. “நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா”, “சிந்துக்குத் தந்தை” – என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர் யார்?

A) திரு.வி.க

B) பாரதியார்

C) உ.வே.சாமிநாதர்

D) மனோன்மணியம்

44. கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது?

எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர். கவிஞர்; கட்டுரையாளர்; கேலிச்சிச்திரம் – கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்; சிறுகதை ஆசிரியர்; இதழாளர்; சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்;

A) திரு.வி.க

B) உ.வே.சாமிநாதர்

C) பாரதியார்

D) கே.கே.பிள்ளை

45. குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும், பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என, குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்; இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். – இவர் யார்?

A) மனோன்மணியம் சுந்தரனார்

B) நாமக்கல் கவிஞர்

C) பாரதிதாசன்

D) பாரதியார்

46. பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர்?

A) கவிஞர் கண்ணதாசன்

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) நாமக்கல் கவிஞர்

47. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது.

II. ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

III. உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார். இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

48. “திக்குகள் எட்டும் சிதறி – தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது பாயுது பாயுது – தாம்தரிகிட – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) கண்ணதாசன்

D) வாணிதாசன்

49. தக்கத் ததிங்கிட தித்தோம் – அண்டம் சாயுது சாயுது சாயுது – பேய்கொண்டு தக்கை யடிக்குது காற்று – தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) வாணிதாசன்

B) பாரதிதாசன்

C) கண்ணதாசன்

D) பாரதியார்

50. மழையின் சீற்றம் இயல்பு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைச் _________ படம்பிடித்துக் காட்டுகிறது.

A) சிறு கதைகள்

B) புதினங்கள்

C) காப்பியங்கள்

D) சங்க இலக்கியம்

51. நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை நீர் செல நிமிர்ந்த மாஅல் போல, பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) முல்லைப் பாட்டு, நப்பூதனார்

B) நெடுநல்வாடை, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்

C) குறிஞ்சிப்பாட்டு, கபிலர்

D) மதுரைக்காஞ்சி, மாங்குடி மருதனார்

52. பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை அருங்கடி மூதூர் மருங்கில் போகி, யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு நாழி கொண்ட நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது, பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்பச் – என்ற பாடல்வரி எந்த “பா” வால் இயற்றப்பட்டது?

A) வஞ்சிப்பா

B) ஆசிரியப்பா

C) கலிப்பா

D) இவற்றில் ஏதுமில்லை

53. சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் நடுங்குசுவல் அசைத்த கையள், “கைய கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர, இன்னே வருகுவர், தாயர்” என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம் – இந்த முல்லைப்பாட்டு _________ நூல்களுள் ஒன்று. இது ___________ அடிகளைக் கொண்டது.

A) எட்டுத்தொகை, 100

B) ஐம்பெரும்காப்பியம், 500

C) பத்துப்பாட்டு, 103

D) அறநூல்கள், 1000

54. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. நனந்தலை உலகம் – அகன்ற உலகம்

II. நேமி – சக்கரம்

III. கோடு – மலை

IV. கொடுஞ்செலவு – விரைவாகச் செல்லுதல்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) III, IV மட்டும் சரி

55. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. நறுவீ – நறுமணமுடைய மலர்கள்

II. தூஉய் – தூவி

III. விரிச்சி – நற்சொல்

IV. சுவல் – தோள்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

56. கீழ்க்கண்ட கூற்று எதனுடன் தொடர்புடையது?

அகன்ற உலகத்தையே வளைத்துப் பெருமழை பொழிகிறது. வலம்புரிச் சங்கு பொறித்த கைகளை உடைய திருமால், குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்பொழுது, மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது.

A) சூரியன்

B) தலை

C) கைகள்

D) மழைமேகம்

57. கீழ்க்கண்ட கூற்று எதனுடன் தொடர்புடையது?

ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெரும்தோற்றம் கொண்டு, வலமாய் எழுந்து, மலையைச் சூழ்ந்து, விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிகிறது.

A) மேகம்

B) காற்று

C) கைகள்

D) திருமாலின் அருள்

58. துன்பத்தைச் செய்கின்ற அம்மாலைப்பொழுதில், முதிய பெண்கள் மிகுந்த காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள்; அந்த மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் சேர்த்துத் தெய்வத்தின் முன் தூவினர். பிறகு தெய்வத்தைத் தொழுது, தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர் – இந்த கூற்று கீழ்க்கண்ட எந்த நூலுடன் தொடர்புடையது?

A) புறநானூறு

B) முல்லைப்பாட்டு

C) குறிஞ்சிப்பாட்டு

D) அகநானூறு

59. சிறுதாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள். குளிர்தாங்காமல் கைகளைக் கட்டியபடி நின்ற அவள், “புல்லை மேய்ந்து உன் தாய்மார் வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓட்டிவர இப்போது வந்துவிடுவர், வருந்தாதே” என்றாள். இது நல்ல சொல் எனக்கொண்டு முதுபெண்கள் தலைவியிடம் நற்சொல்லை நாங்கள் கேட்டோம் என்று கூறினர். இவ்வாறு தலைவன் வருகை குறித்து முதுபெண்டிர் விரிச்சி கேட்டு நின்றனர். நின் தலைவன் பகைவரை வென்று திறைப்பொருளோடு வருவது உறுதி. தலைவியே, மனத்தடுமாற்றம் கொள்ளாதே! என ஆற்றுப்படுத்தியவர் யார்?

A) முதுபெண்டிர்

B) தோழி

C) தலைவன்

D) இவர்களில் யாருமில்லை

60. இலக்கணக்குறிப்பு தருக – மூதூர்

A) உரிச்சொல்தொடர்

B) மூன்றாம் வேற்றுமைத்தொகை

C) வினைத்தொகை

D) பண்புத்தொகை

(குறிப்பு – பண்புத்தொகை: நிறம், வடிவம், சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவிநிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் “மை” என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும். மூதூர் – முதுமை + ஊர், செங்காந்தள் – செம்மையாகிய காந்தள், வட்டத்தொட்டி – வட்டமான தொட்டி, இன்மொழி – இனிமையானமொழி)

61. இலக்கணக்குறிப்பு தருக – உறுதுயர்

A) உரிச்சொல்தொடர்

B) மூன்றாம் வேற்றுமைத்தொகை

C) வினைத்தொகை

D) பண்புத்தொகை

(குறிப்பு – வினைத்தொகை: காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப்பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது “வினைத்தொகை” எனப்படும். காலம் கடந்த பெயரெச்சமே வினைத்தொகையாகும்.

எ.கா. வீசுதென்றல், கொல்களிறு, வீசு, கொல் என்பவை வினைப்பகுதிகள். இவை முறையே தென்றல், களிறு என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலத்தை வெளிப்படுத்தாத பெயரெச்சங்களாயின. மேலும் இவை வீசிய காற்று, வீசுகின்ற காற்று, வீசும் காற்று எனவும் கொன்ற களிறு, கொல்கின்ற களிறு, கொல்லும் களிறு எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள் தருகின்றன. காலம்காட்டும் இடைநிலைகள் இப்பெயரெச்சங்களில் தொக்கி இருக்கின்றன. வினைப்பகுதியும் அடுத்துப் பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும்.)

62. இலக்கணக்குறிப்பு தருக – கைதொழுது

A) உரிச்சொல்தொடர்

B) மூன்றாம் வேற்றுமைத்தொகை

C) வினைத்தொகை

D) பண்புத்தொகை

63. இலக்கணக்குறிப்பு தருக – தடக்கை

A) உரிச்சொல்தொடர்

B) மூன்றாம் வேற்றுமைத்தொகை.

C) வினைத்தொகை

D) பண்புத்தொகை

64. “பொறித்த” பகுபத உறுப்பிலக்கணம் – சரியானது எது?

I. பொறித்த – பொறி + த் + த் +அ

II. பொறி – பகுதி

III. த் – சந்தி

IV. த் – இறந்தகால இடைநிலை

V. அ – பெயெரச்ச விகுதி

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III, IV மட்டும் சரி

D) I, II, III, IV, V அனைத்தும் சரி

65. விரிச்சி – பற்றிய சரியான கூற்று எது?

I. ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர்ப்பக்கத்தில் போய், தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்;

II. அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியைக் கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II அனைத்தும் சரி

D) I, II அனைத்தும் தவறு

66. முல்லை நிலம் தொடர்பான சரியான கூற்று எது?

I. முல்லை நிலத்துக்குரிய இடம் – (காடும் காடு சார்ந்த இடமும்)

II. முல்லை நிலத்துக்குரிய பெரும்பொழுது – கார்காலம், ஆவணி, புரட்டாசி

III. முல்லை நிலத்துக்குரிய சிறுபொழுது – மாலை

IV. முல்லை நிலத்துக்குரிய உரிப்பொருள் – இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்)

A) I, II, III மட்டும் சரி

B) I, II, III, IV அனைத்தும் சரி

C) II, III, IV மட்டும் சரி

D) IV மட்டும் சரி

67. முல்லை நிலத்துக்குரிய உரிப்பொருள் சரியானது எது?

I. நீர் – குறுஞ்சுனை நீர், காட்டாறு

II. மரம் – கொன்றை, காயா, குருந்தம்

III. பூ – முல்லை, பிடவம், தோன்றிப்பூ

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

68. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது?

A) மதுரைக்காஞ்சி

B) நெடுநல்வாடை

C) குறிஞ்சிப்பாட்டு

D) முல்லைப்பாட்டு

69. முல்லைப்பாட்டு நூலின் ஆசிரியர் யார்?

A) பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்

B) இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்

C) முடத்தாமக் கண்ணியார்

D) கடியலூர் உருத்திரங்கண்ணனார்

70. முல்லைப்பாட்டு _____________ அடிகளைக் கொண்டது?

A) 77

B) 17

C) 97

D) 103

71. புயலிலே ஒரு தோணி என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) சுஜாதா

B) ராஜம் கிருஷ்ணன்

C) ப.சிங்காரம்

D) பூமணி

72. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் எது?

A) பிரதாப முதலியார் சரித்திரம்

B) புயலிலே ஒரு தோணி

C) திசை மாறிய தென்றல்

D) கரையைத் தேடும் கட்டுமரங்கள்

73. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்காசிய நாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறினர். அவ்வாறு குடியேறிய இனங்களில் தமிழினமும் ஒன்று.

II. தமிழ்க்குடிகள் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா நாடுகளில் நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

III. ப.சிங்காரம் அவர்கள் அவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவர். அவர் இந்தோனேசியாவில் மெபின் நகரில் இருந்தபோது இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்தது.

IV. ப.சிங்காரம் அவர்களின் நேரடி அனுபவங்களோடு கற்பனையும் கலந்த ஒரு கதைதான் புயலிலே ஒரு தோணி என்னும் புதினம்.

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

74. ‘கப்பித்தான்’- என்ற சொல்லின் பொருள்?

A) தலைமை மாலுமி (கேப்டன்)

B) சிப்பாய்

C) கப்பல்

D) கயிறு

75. ‘தொங்கான்’ – என்ற சொல்லின் பொருள்?

A) தலைமை மாலுமி (கேப்டன்)

B) சிப்பாய்

C) கப்பல்

D) கயிறு

76. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை _____________ ஆம் ஆண்டில் தொடங்கியது.

A) 1985

B) 1990

C) 1995

D) 2000

77. _____________ இடத்தில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்ககைளப் பட்டியலிட்டுள்ளது.

A) புது தில்லி

B) கொச்சின்

C) சென்னை

D) மைசூர்

78. புயலுக்குப் பெயர் சூட்டல் – சரியான கூற்று எது?

I. வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன.

II. இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), கடைசியாக லெஹர் (அலை). இன்னும் வரவிருப்பவை மேக், சாஹர், வாயு. ‘கஜா’ புயலின் பெயர் இலங்கை தந்தது. அடுத்து வந்த ‘பெய்ட்டி’ புயல் பெயர் தாய்லாந்து தந்தது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II அனைத்தும் தவறு

D) I, II அனைத்தும் சரி

79. வங்கக் கடலில் வீசும் புயலும், அமெரிக்காவை, ஜப்பானை, சீனாவைத் தாக்கும் புயல்கள் _________ என அழைக்கப்படுகின்றன.

A) இடம்புரிப் புயல்கள்

B) வலம்புரிப் புயல்கள்

C) ஒருதிசைப் புயல்கள்

D) இவற்றில் ஏதுமில்லை

80. ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயல்கள் _________ என அழைக்கப்படுகின்றன.

A) இடம்புரிப் புயல்கள்

B) வலம்புரிப் புயல்கள்

C) ஒருதிசைப் புயல்கள்

D) இவற்றில் ஏதுமில்லை

81. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணித வல்லுநர் காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ் இந்த வலம்புரிப் புயல்கள், இடம்புரிப் புயல்கள் விளைவை __________ இல் கண்டுபிடித்தார். புயலின் இந்த இருவகைச் சுழற்சிக்குக் கொரியாலிஸ் விளைவு என்று பெயர்.

A) 1825

B) 1835

C) 1845

D) 1855

82. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. பறவை மீன், அவுலியா மீன் – மீன் வகை

II. பிலவான் – இந்தோனேசியாவிலுள்ள இடம்

III. கப்பித்தான் – தலைமை மாலுமி (கேப்டன்)

IV. தொங்கான் – கப்பல்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) III, IV மட்டும் சரி

83. ‘தமிரோ’ என்பதற்கு ________ என்று பொருள்.

A) அமெரிக்கர்கள்

B) மலேசியர்கள்

C) ஜப்பானியர்கள்

D) தமிழர்கள்

84. புயலிலே ஒரு தோணி – என்னும் புதினத்தின் ஆசிரியர் ப.சிங்காரம் அவர்களின் காலம்?

A) 1900 – 1977

B) 1910 – 1987

C) 1920 – 1997

D) 1930 – 2007

85. ப.சிங்காரம் அவர்களைப் பற்றிய சரியான கூற்று எது?

I. இவர் இந்தோனேசியாவில் இருந்தேபாது, தென்கிழக்காசியப் போர் மூண்டது.

II. அச்சூழலில், மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு புயலிலே ஒரு தோணி என்னும் இப்புதினம்.

III. அதில் கடற்கூத்து என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதியே கடல் காட்சி.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) III மட்டும் சரி

86. ப.சிங்காரம் ______________ மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர்.

A) விருதுநகர்

B) சிவகங்கை

C) இராமநாதபுரம்

D) மதுரை

87. ப.சிங்காரம் அவர்கள் வேலைக்காக எந்த நாட்டிற்குச் சென்றார்?

A) இந்தோனேசியா

B) வியட்நாம்

C) மலேசியா

D) சிங்கப்பூர்

88. ப.சிங்காரம் அவர்கள் மீண்டும் இந்தியா வந்து _________ நாளிதழில் பணியாற்றினார்.

A) தி இந்து

B) தினமலர்

C) தினத்தந்தி

D) தினமணி

89. ப.சிங்காரம் அவர்கள் அன்றைய சூழலில் அவருடைய சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை ______________ வழங்கினார்.

A) மாணவர்களின் மருத்துவ செலவுக்காக

B) மாணவர்களின் உணவுத் திட்டத்துக்காக

C) மாணவர்களின் இருப்பிட வசதிக்காக

D) மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக

90. கொல்லிமலை எந்த மாவட்டத்தில் உள்ளது?

A) நாமக்கல்

B) ஈரோடு

C) கோவை

D) தருமபுரி

91. பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) புறநானூறு

B) கலித்தொகை

C) அகநானூறு

D) கலிங்கத்துப்பரணி

92. பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனை _____________ என்று கூறுவர். எ.கா. கரும்பு தின்றான்.

A) பொருள்கோள்

B) வழு

C) தொகைநிலைத் தொடர்

D) தொகாநிலைத் தொடர்

93. கரும்பு தின்றான் – இத்தொடரில் உள்ள இரண்டு சொற்களுக்கு நடுவில் ____________ என்னும் உருபு மறைந்து நின்று, அப்பொருளைத் தருகிறது. எனவே, இது தொகைநிலைத் தொடர் எனப்படும்.

A) ஐ

B) ஆல்

C) கு

D) இன்

94. தொகைநிலைத் தொடர் ____________ வகைப்படும்.

A) 5

B) 6

C) 7

D) 8

95. வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத் தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை – இவற்றுடன் தொடர்புடையது எது?

A) பொருள்கோள்

B) வழு

C) தொகைநிலைத் தொடர்

D) தொகாநிலைத் தொடர்

96. மதுரை சென்றார் – இத்தொடர் மதுரைக்குச் சென்றார் என விரிந்து நின்று பொருள் தருகிறது. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களுக்கு இடையில் “கு” என்னும் வேற்றுமை உருபு இல்லை. அது தொக்கி நின்று பொருளை உணர்த்துகிறது. இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது _____________ எனப்படும்.

A) அன்மொழித்தொகை

B) உவமைத்தொகை

C) பண்புத்தொகை

D) வேற்றுமைத்தொகை

97. தமிழ்த்தொண்டு – இலக்கணக்குறிப்பு தருக?

A) அன்மொழித்தொகை

B) உவமைத்தொகை

C) பண்புத்தொகை

D) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

98. வேற்றுமை உருபுகள் – தொடர்புடையது எது?

A) சால, தவ

B) நனி, கூர், கழி

C) ஐ, ஆல், கு, இன், அது, கண்

D) இவற்றில் ஏதுமில்லை

99. உருபும் பயனும் உடன்தொக்க தொகை – சரியானது எது?

I. தேர்ப்பாகன் – இத்தொடர் “தேரை ஓட்டும் பாகன்” என விரிந்து பொருளை உணர்த்துகிறது.

II. கொடுக்கப்பட்டுள்ள தேர், பாகன் என்னும் சொற்களுக்கிடையில் “ஐ” என்னும் வேற்றுமை உருபும் “ஓட்டும்” என்னும் பொருளை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன.

III. இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும். இதுவும் வேற்றுமைத் தொகையே ஆகும்.

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II, III, IV அனைத்தும் தவறு

C) I, II, III மட்டும் சரி

D) II, III, IV மட்டும் சரி

100. காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது __________ எனப்படும்.

A) வேற்றுமைத்தொகை

B) வினைத்தொகை

C) பண்புத்தொகை

D) அன்மொழித்தொகை

101. காலம் கரந்த பெயரெச்சம் _________ எனப்படும்.

A) வேற்றுமைத்தொகை

B) பண்புத்தொகை

C) வினைத்தொகை

D) அன்மொழித்தொகை

102. வீசுதென்றல், கொல்களிறு – இலக்கணக்குறிப்பு தருக.

A) வேற்றுமைத்தொகை

B) பண்புத்தொகை

C) அன்மொழித்தொகை

D) வினைத்தொகை

(குறிப்பு – வீசு, கொல் என்பவை வினைப்பகுதிகள். இவை முறையே தென்றல், களிறு என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலத்தை வெளிப்படுத்தாத பெயரெச்சங்களாயின. மேலும் இவை வீசிய காற்று, வீசுகின்ற காற்று, வீசும் காற்று எனவும் கொன்ற களிறு, கொல்கின்ற களிறு, கொல்லும் களிறு எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள் தருகின்றன. காலம்காட்டும் இடைநிலைகள் இப்பெயரெச்சங்களில் தொக்கி இருக்கின்றன. வினைப்பகுதியும் அடுத்துப் பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும்.)

103. நிறம், வடிவம், சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் ___________ என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

A) மை

B) ஐ

C) ஆல்

D) கண்

104. இவற்றுடன் தொடர்புடையது எது?

I. செங்காந்தள் – செம்மையாகிய காந்தள்

II. வட்டத் தொட்டி – வட்டமான தொட்டி

III. இன்மொழி – இனிமையானமொழி

A) வேற்றுமைத்தொகை

B) பண்புத்தொகை

C) அன்மொழித்தொகை

D) வினைத்தொகை

105. சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ‘ஆகிய’ என்னும் பண்பு உருபு தொக்கி வருவது _________________ ஆகும்.

A) வேற்றுமைத்தொகை

B) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

C) அன்மொழித்தொகை

D) வினைத்தொகை

106. இலக்கணக்குறிப்பு தருக? மார்கழித் திங்கள், சாரைப்பாம்பு.

A) வேற்றுமைத்தொகை

B) வினைத்தொகை

C) அன்மொழித்தொகை

D) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

(குறிப்பு – திங்கள், பாம்பு ஆகிய பொதுப் பெயர்களுக்கு முன் மார்கழி, சாரை எனும் சிறப்புப் பெயர்கள் வந்து மார்கழி ஆகிய திங்கள் என்றும் சாரை ஆகிய பாம்பு என்றும் இருபெயரொட்டாக வந்துள்ளன.)

107. உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது _________ எனப்படும்.

A) உவமைத்தொகை

B) உம்மைத் தொகை

C) அன்மொழித்தொகை

D) பண்புத்தொகை

108. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. மலர்க்கை – இலக்கணக்குறிப்பு உவமைத்தொகை.

II. மலர்க்கை – (மலர் போன்ற கை)

III. மலர் – உவமை, கை – உவமேயம் (பொருள்) இடையே ‘போன்ற’ என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

109. இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வருவது ________________?

A) உவமைத்தொகை

B) உம்மைத் தொகை

C) அன்மொழித்தொகை

D) பண்புத்தொகை

110. _______________ என்பது எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்.

A) உவமைத்தொகை

B) அன்மொழித்தொகை

C) உம்மைத் தொகை

D) பண்புத்தொகை

111. கீழ்க்கண்ட கூற்றுடன் தொடர்புடையது எது?

அண்ணன் தம்பி, தாய்சேய் – அண்ணனும் தம்பியும், தாயும் சேயும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன.

A) உவமைத்தொகை

B) அன்மொழித்தொகை

C) பண்புத்தொகை

D) உம்மைத் தொகை

112. வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது ______________ ஆகும்.

A) உவமைத்தொகை

B) உம்மைத் தொகை

C) அன்மொழித்தொகை

D) பண்புத்தொகை

113. கீழ்க்கண்ட கூற்றுடன் தொடர்புடையது எது?

சிவப்புச் சட்டை பேசினார்; முறுக்கு மீசை வந்தார் – இவற்றில் சிவப்புச் சட்டை அணிந்தவர் பேசினார், முறுக்கு மீசையை உடையவர் வந்தார் எனத் தொகை நிலைத்தொடர் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருகின்றன.

A) உவமைத்தொகை

B) உம்மைத் தொகை

C) பண்புத்தொகை

D) அன்மொழித்தொகை

114. “உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) வாணிதாசன்

D) நாமக்கல் கவிஞர்

115. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.

செய்தி 3 – காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.

A) செய்தி 1 மட்டும் சரி

B) செய்தி 1, 2 ஆகியன சரி

C) செய்தி 3 மட்டும் சரி

D) செய்தி 1, 3 ஆகியன சரி

116. “பாடுஇமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

A) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

B) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

C) கடல் நீர் ஒலித்தல்

D) கடல் நீர் கொ ந்தளித்தல்

117. ‘பெரிய மீசை’ சிரித்தார் – இந்தச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

A) பண்புத்தொகை

B) உவமைத் தொகை

C) அன்மொழித்தொகை

D) உம்மைத்தொகை

118. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.

I. கொண்ட ல் – 1. மேற்கு

II. கோடை – 2. தெற்கு

III. வாடை – 3. கிழக்கு

IV. தென்றல் – 4. வடக்கு

A) 1, 2, 3, 4

B) 3, 1, 4, 2

C) 4, 3, 2, 1

D) 3, 4, 1, 2

119. “உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்; உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

A) உருவகம், எதுகை

B) மோனை, எதுகை

C) முரண், இயைபு

D) உவமை, எதுகை

120. மாஅல் (திருமால்) – இலக்கணக்குறிப்பு தருக?

A) அன்மொழித்தொகை

B) பண்புத்தொகை

C) உரிச்சொல்தொடர்

D) செய்யுளிசை அளபெடை

121. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல வளரும் விழி வண்ணமே – வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந் தென்றலே – வளர் பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?

A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

B) வாலி

C) கவிஞர் கண்ணதாசன்

D) வைரமுத்து

122. அந்த இடம் காற்றே! வா உன்னைப் பாடாமல் இருக்க முடியாது ஏனெனில் பாட்டின் மூல ஊற்றே நீதான் – இந்த பாடல்வரியின் ஆசிரியர் யார்?

A) கோ. சுவாமிநாதன்

B) அப்துல் ரஹ்மான்

C) மீ. ராசேந்திரன்

D) பெருஞ்சித்திரனார்

123. பொய்கையிடம் போனால் குளிர்ந்து போகிறாய் பூக்களைத் தொட்டால் நறுமணத்தோடு வருகிறாய் புல்லாங்குழலில் புகுந்தால் இசையாகிவிடுகிறாய் எங்களிடம் வந்தால் மட்டுமே அழுக்காகி விடுகிறாய் மரங்களின் ஊமை நாவுகள் உன்னிடம் மட்டுமே பேசுகின்றன – இப்பாடல் வரிகளின் ஆசிரியர் கீழ்க்கண்ட நூல்களையும் எழுதியுள்ளார். அவர் யார் (பால்வீதி, நேயர் விருப்பம், கரைகளே நதியாவதில்லை, அவளுக்கு நிலா என்று பெயர், முட்டைவாசிகள், மரணம் முற்றுப்புள்ளி அல்ல, விலங்குகள் இல்லாத கவிதை, சுட்டுவிரல்)?

A) அப்துல் ரஹ்மான்

B) கோ. சுவாமிநாதன்

C) மீ. ராசேந்திரன்

D) பெருஞ்சித்திரனார்

124. கடல் அலைகள் உன்னோடு மட்டுமே குதித்துக் கும்மாளமிடுகின்றன வயலின் பச்சைப் பயிர்கள் நீ வந்தால் மட்டுமே ஆனந்த நடனம் ஆடுகின்றன நீ என்ன குதூகலமா? கொண்டாட்டமா? கோலாகலமா? நெடுநாட்களாகவே எனக்கொரு சந்தேகம் விளக்குகளிலிருந்து பறிக்கும் சுடர்களை பூக்களிலிருந்து திருடும் நறுமணத்தை வீணையிலிருந்து கவர்ந்த இசையை எங்கே கொண்டு போய் ஒளித்து வைக்கிறாய்?

A) பெருஞ்சித்திரனார்

B) கோ. சுவாமிநாதன்

C) மீ. ராசேந்திரன்

D) அப்துல் ரஹ்மான்

125. இலக்கணக்குறிப்பு தருக – சரியானது எது?

I. இன்சொல் – பண்புத்தொகை

II. எழுகதிர் – வினைத்தொகை

III. பூங்குழல் வந்தாள் – அன்மொழித்தொகை

IV. கீரிபாம்பு – உம்மைத்தொகை

A) I, II மட்டும் சரி

B) III, IV மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) I, II, III, IV அனைத்தும் தவறு

126. இலக்கணக்குறிப்பு தருக – சரியானது எது?

I. மலை வாழ்வார் – வேற்றுமைத்தொகை

II. முத்துப்பல் – உவமைத்தொகை

III. பூங்குழல் – அன்மொழித்தொகை

IV. கீரிபாம்பு – உம்மைத்தொகை

A) I, II மட்டும் சரி

B) III, IV மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் தவறு

D) I, II, III, IV அனைத்தும் சரி

127. பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள் எவை?

A) ஆல மலர், பலா மலர்

B) சுள்ளி மலர், பாங்கர் மலர்

C) அத்தி, கொழிஞ்சி

D) நெருஞ்சி, எருக்கு, பூளை

128. மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள் எவை?

A) ஆல மலர், பலா மலர்

B) சுள்ளி மலர், பாங்கர் மலர்

C) அத்தி, கொழிஞ்சி

D) நெருஞ்சி, எருக்கு, பூளை

129. அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள் எவை?

A) அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா

B) சுள்ளி மலர், பாங்கர் மலர்

C) கொன்றை, தாமரை

D) நெருஞ்சி, எருக்கு, பூளை

130. பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவை யாவை?

A) நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை

B) அத்தி, ஆலம், கொழிஞ்சி

C) கொன்றை, தாமரை

D) இவற்றில் ஏதுமில்லை

131. இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும் – இந்த கூற்று யாருடையது?

A) கோவை. இளஞ்சேரன்

B) தாமோதரன்

C) அழ. வள்ளியப்பா

D) இவற்றில் ஏதுமில்லை

132. பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள்: ஆல மலர்; பலா மலர்; மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர். அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா; பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை. – இந்த கூற்று யாருடையது?

A) அழ. வள்ளியப்பா

B) தாமோதரன்

C) கோவை. இளஞ்சேரன்

D) இவற்றில் ஏதுமில்லை

133. அரிய மலர் – இலக்கணக் குறிப்புத் தருக?

A) குறிப்புப் பெயரெச்சம்

B) முற்றெச்சம்

C) பண்புத்தொகை

D) வினைத்தொகை

134. சிறியதானியம் போன்ற மூக்கு; சின்னக்கண்கள்; சின்னத்தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப்போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித்துளிக் கால்கள்; இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்துவிடலாம். இவ்விதமான உடலைச் சுமந்து கொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண் மற்றொன்று பெண் – இந்த கூற்று யாருடையது?

A) அழ. வள்ளியப்பா (குழந்தை)

B) வாணிதாசன் (மயில்)

C) பாரதி தாசன் (குயில்)

D) பாரதியார் (சிட்டுக்குருவி)

135. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. Storm – புயல்

II. Land Breeze – நிலக்காற்று

III. Tornado – சூறாவளி

IV. Sea Breeze – கடல்காற்று

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

136. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. Tempest – பெருங்காற்று

II. Whirlwind – சுழல் காற்று

III. Tornado – சூறாவளி

IV. Sea Breeze – கடல்காற்று

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

137. சரியானது எது?

I. குயில்பாட்டு – பாரதியார்

II. அதோ அந்த பறவை போல – ச. முகமது அலி

III. உலகின் மிகச்சிறிய தவளை – எஸ். ராமகிருஷ்ணன்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!