General Tamil

10th Tamil Questions – Unit 5

10th Tamil Questions – Unit 5

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 10th Tamil Questions – Unit 5 With Answers Uploaded Below.

1. மொழிபெயர்ப்புக் கல்வி – பற்றிய சரியான கூற்று எது?

I. ஒவ்வொரு மொழிச் சமூகத்திலும் ஒரு துறையில் இல்லாத செழுமையை ஈடுசெய்ய வேறு துறைகளில் உச்சங்கள் இருக்கும்.

II. மொழிகளுக்கு இடையேயான வேற்றுமைகளை வேற்றுமைகளாகவே நீடிக்கவிடாமல் ஒற்றுமைப்படுத்த உதவுவது மொழிபெயர்ப்பு. கொடுக்கல் வாங்கலாக அறிவனைத்தும் உணர்வனைத்தும் அனைத்து மொழிகளிலும் பரவவேண்டும்.

III. நம்மிடம் எல்லாம் உள்ளது என்ற பட்டை கட்டிய பார்வையை ஒழித்து அகன்ற பார்வையைத் தருவது மொழிபெயர்ப்பு.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) III மட்டும் சரி

2. “ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு” என்கிறார் ________________.

A) மணவை முஸ்தபா

B) மு.கு. ஜகந்நாதர்

C) பரிதிமாற் கலைஞர்

D) உ.வே.சாமிநாதர்

3. ‘ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும்; உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்” என்கிறார் ________________.

A) மணவை முஸ்தபா

B) மு.கு. ஜகந்நாதர்

C) பரிதிமாற் கலைஞர்

D) உ.வே.சாமிநாதர்

4. மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் _______________ என்பவர் மரபியலில் (98) குறிப்பிட்டுள்ளார்.

A) திருவள்ளுவர்

B) வச்சணந்தி முனிவர்

C) குணவீர பண்டிதர்

D) தொல்காப்பியர்

5. ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி யாது?

A) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

B) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

C) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

D) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

6. வடமொழியில் வழங்கி வந்த இராமாயண, மகாபாரதத் தொன்மச் செய்திகள் ________________ நூல்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன.

A) சிற்றிலக்கியம்

B) ஐம்சிறும் காப்பியம்

C) ஐம்பெரும் காப்பியம்

D) சங்க இலக்கியம்

7. கீழ்க்கண்டவற்றுள் வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்பட்டவை எவை?

A) பெருங்கதை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம்.

B) திருக்குறள், நாலடியார், நான்மணிக் கடிகை

C) ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன்

D) இவற்றில் ஏதுமில்லை

8. மொழிபெயர்ப்பு தேவை பற்றிய சரியான கூற்று எது?

I. மொழி பெயர்ப்பு, எல்லாக் காலகட்டங்களிலும் தேவையான ஒன்று.

II. விடுதலைக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளையும் ஒரே ஆட்சியின் கீழ் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தேசிய உணர்வு ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் இந்திய அரசு, மொழிபெயர்ப்பை ஒரு கருவியாகக் கொண்டது;

III. ஒரு மொழியில் இருக்கும் நூல்களைப் பிற மொழியில் மொழிபெயர்த்தது; பல்வேறு மாநிலங்களில் இருந்த இருக்கின்ற எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோரைப் பற்றிய நூல்களையும் வெளியிட்டது.

IV. இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் சாகித்திய அகாதெமி, தேசிய புத்தக நிறுவனம் (NBT), தென்னிந்தியப் புத்தக நிறுவனம் ஆகியவற்றின் மூலம் செய்யப்பட்டன.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) III, IV மட்டும் சரி

9. மொழிபெயர்ப்பின் தேவையை உணர்த்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறார்கள். உலகப் போரின்போது அமெரிக்கா, “சரண் அடையாவிடில் குண்டு வீசப்படும்” என்ற செய்தியை ஜப்பானுக்கு அனுப்பியதாகவும் அதற்கு ஜப்பான், ‘மொகு சாஸ்ட்டு’என்று விடை அனுப்பியதாகவும் கூறுவர். அந்தத் தொடரின் பொருள் தெரியாமையால் அமெரிக்கா, ஹீரோஷிமாவில் குண்டுவீசியது என்று சொல்கிறார்கள். அந்தத் தொடருக்குப் பொருள், ‘_______________’ என்பதாம். ஆனால் அதற்கு அமெரிக்கர்கள், ‘மறுக்கிறோம்’ என்று பொருள் கொண்டதாகவும் கூறுவர்.

A) விடைதர அவகாசம் வேண்டும்

B) போருக்குத் தயார்

C) சமாதானம்

D) போர் வேண்டாம்

10. மொழிபெயர்ப்பு கல்வி – பற்றிய சரியான கூற்று எது?

I. மொழி பெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெறமுடியும்; அறிவுத்துறைகளுக்கும் தொழில் துறைகளுக்கும் வெளி நாட்டாரை எதிர்பார்க்காமல் நாமே நமக்கு வேண்டிய அனைத்தையும் உருவாக்கிக்கொள்ள முடியும்;

II. மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும்; வேலைவாய்ப்புத் தளத்தை விரிவாக்க முடியும்; நாடு, இன, மொழி எல்லைகள் கடந்து ஓருலகத்தன்மையைப் பெறமுடியும்.

III. நாடு விடுதலை பெற்ற பிறகு பல நாட்டுத் தூதரகங்கள் நம்நாட்டில் நிறுவப்பட்டன. அவை தங்களுடைய இலக்கியம், பண்பாடு, தொழில்வளர்ச்சி, கலை போன்றவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் தத்தம் மொழிகளைக் கற்றுக்கொடுக்கின்ற முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதனைச் சார்ந்து பிற மொழிகளைக் கற்றுத்தரும் தனியார் நிறுவனங்களும் உருவாகியுள்ளன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பிறமொழிகளைக் கற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

IV. இவ்வாறாக பல காரணங்கள் இருப்பினும் மொழிபெயர்ப்பு கல்வி தற்காலத்தில் அவசியமற்ற ஒன்றாகவே உள்ளது.

A) I, II மட்டும் சரி

B) I, II, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) II, III, IV மட்டும் சரி

11. பாரதியின் மொழி பெயர்ப்பு – சரியானவை எவை?

I. Exhibition – காட்சி, பொருட்காட்சி

II. East Indian Railways – இருப்புப் பாதை

III. Revolution – புரட்சி

IV. Strike – தொழில் நிறுத்தி இருத்தல், தொழில் நிறுத்தம், வேலை நிறுத்தம்

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II, III மட்டும் சரி

C) II, III, IV மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

12. இலக்கிய இறக்குமதி – சரியான கூற்று எது?

I. பிறமொழி இலக்கியங்களை அறிந்துகொள்ளவும் அவைபோன்ற புதிய படைப்புகள் உருவாகவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.

II. இலக்கியம் என்பது தன் அனுபவத்தை எழுதுவது என்றாலும் அது கலைச்சிறப்புடையதாக இருக்கிறபோது அனைவரது அனுபவமாகவும் பொதுநிலை பெறுகிறது.

III. அத்தகைய பொது நிலை பெற்ற இலக்கியத்தை மொழிவேலி சிறையிடுகிறது. மொழிவேலியை அகற்றும் பணியை மொழிபெயர்ப்பு செய்கிறது.

A) I, II, III அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) III மட்டும் சரி

13. _______________ மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ஷேக்ஸ்பியர், அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டார்.

A) பிரெஞ்சு

B) ஆங்கிலம்

C) மலாய்

D) ஜெர்மன்

14. _______________ ஆம் நூற்றாண்டுவரை வடமொழி நூல்கள் பல தமிழில் ஆக்கப்பட்டன. ஆங்கிலேயர் வருகைக்குப் பின் ஆங்கில நூல்களும் ஆங்கிலம் வழியாகப் பிற ஐரோப்பிய மொழி நூல்களும் அறிமுகமாயின.

A) 15

B) 16

C) 17

D) 18

15. ________________ வங்க மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

A) இரவீந்திரநாத தாகூர்

B) காசி நஸ்ருல்

C) கவிஞர் வித்யாபதி

D) அக்னிஹோத்ரி

16. ஒரு நாடு எவ்வளவு _______________ பயன்படுத்துகிறது என்பதைக் கொண்டு அதன் தொழில் வளர்ச்சியை மதிப்பிடுவார்கள். அதுபோல, ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடுவார்கள்.

A) காற்று ஆற்றல்

B) மின்னாற்றல்

C) சூரிய ஆற்றல்

D) நீர் ஆற்றல்

17. எங்கோ தொலைதூரத்தில் வாழும் மனிதர்கள் தங்களின் மொழியில் சொன்னவற்றை, எழுதியவற்றை இன்னொரு மொழியில் தமக்குத் தெரிந்த மொழியில் மொழிபெயர்த்து அறிந்து கொள்கிறார்கள். அதுதான் மொழிபெயர்ப்பு. எப்பொழுது உலகத்தில் நான்கைந்து மொழிகள் உருவாயினவோ அப்பொழுதே மொழி பெயர்ப்பும் வந்துவிட்டது. கருத்துப்பரிமாற்றம், தகவல் பகிர்வு, அறநூல் அறிதல், இலக்கியம், தத்துவம் என்பன எல்லாம் மொழிபெயர்ப்பு வழியாகவே சர்வதேசத்தன்மை பெறுகின்றன – என்ற கூற்று யாருடன் தொடர்புடையது?

A) ராஜம் கிருஷ்ணன்

B) சுஜாதா

C) சா. கந்தசாமி

D) பெருஞ்சித்திரனார்

18. ராகுல் சாங்கிருத்யாயன் 1942 ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்தபோது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை _______________ மொழியில் எழுதினார். ______________ ஆம் ஆண்டு இந்நூலை கணமுத்தையா என்பவர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இன்றுவரையில் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ ஒவ்வொரு தமிழரும் விரும்பிப் படிக்கும் நூலாக இருக்கிறது.

A) மலையாளம், 1943

B) இந்தி, 1949

C) சமஸ்கிருதம், 1950

D) பஞ்சாபி, 1955

19. ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை மொழிபெயர்த்த வருடம் மற்றும் ஆசிரியர் – சரியானது எது?

I. 1949 – கணமுத்தையா மொழி பெயர்ப்பு

II. 2016 – டாக்டர் என்.ஸ்ரீதர் மொழி பெயர்ப்பு

III. 2016 – முத்து மீனாட்சி மொழி பெயர்ப்பு

IV. 2018 – யூமா வாசுகி மொழி பெயர்ப்பு

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

20. மொழிபெயர்ப்பு செம்மை – பற்றிய சரியான கூற்று எது?

I. Hundred railsleepers were washed away என்பதை, தொடர்வண்டியில் உறங்கிக் கொண்டிருந்த நூறு பேர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள் என்று ஒரு செய்தித்தாள் வெளியிட்டது. Railsleeper என்பது தொடர்வண்டியின் போக்குவரத்துப் பாதையான தண்டவாளத்தில் உள்ள குறுக்குக் கட்டைகளைக் குறிக்கும். அதனை உறங்கிக் கொண்டிருந்தோர் என மொழிபெயர்த்தது பெரும்பிழையே.

II. Camel என்பதற்கு வடம் (கயிறு), ஒட்டகம் என இருபொருள் உண்டு. ஊசி காதில் வடம் நுழையாது என்னும் வேற்றுமொழித் தொடரை ‘ஊசி காதில் ஒட்டகம் நுழையாது’ என்று மொழிபெயர்த்துப் பயன்படுத்துகிறோம். இத்தொடரில் வடம் என்பதே பொருத்தமான சொல்லாக அமையும் (அதாவது ஊசி காதில் நூல் நுழையுமே அன்றிக் கயிறு நுழையாது என்பதே). மொழிபெயர்ப்புகள் கழிவின்றி, சிதறலின்றி மூலமொழியின் கருத்துகளை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும்.

III. ‘Underground drainage’ என்ற தொடரை மொழிபெயர்ப்பதில் தடுமாற்றம் வந்தது. பாதாளச் சாக்கடை என்பது போன்றெல்லாம் மொழிபெயர்த்தனர். தமிழோடு தொடர்புடைய மலையாள மொழியில் பயன்படுத்திய புதைசாக்கடை என்ற சொல் பொருத்தமாக இருப்பதைக் கண்டனர். அதையே பயன்படுத்தவும் தொடங்கினர்.

A) I, II, III அனைத்தும் சரி

B) I, II, III அனைத்தும் தவறு

C) I, II மட்டும் சரி

D) II, III மட்டும் சரி

21. மொழிபெயர்ப்பு செம்மை – பற்றிய சரியான கூற்று எது?

I. Tele என்பது தொலை என்பதைக் குறிக்கிறது. ஆகவே Telegraph, Television, Telephone, Telescope, Telemetry முதலிய சொற்கள் மொழிபெயர்க்கப்படுகிற போது தொலைவரி, தொலைக்காட்சி, தொலைபேசி, தொலை நோக்கி, தொலை அளவியல் என்றவாறு முன் ஒட்டுகளுடன் மொழி பெயர்க்கப்பட்டன.

II. இதற்கு மாறாக, Transcribe, Transfer, Transform, Transact ஆகியவற்றை மொழிபெயர்க்கும் போது படியெடுத்தல், மாறுதல், உருமாற்றுதல், செயல்படுத்துதல் என்றவாறு மொழிபெயர்க்கப்படுகின்றன. இங்கு Trans என்ற முன்ஒட்டை வைத்து மொழிபெயர்க்கவில்லை.

III. இன்றைக்குப் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழி பெயர்ப்பு தேவைப்படவில்லை.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

22. மொழிபெயர்ப்பு – பல்துறை வளர்ச்சி பற்றிய சரியான கூற்று எது?

I. இன்றைக்குப் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழி பெயர்ப்பு தேவைப்படுகிறது. மொழிபெயர்ப்பு இல்லை எனில் உலகை எல்லாம் வலையாகப் பிடித்திருக்கிற ஊடகத்தின் வளர்ச்சி இல்லை.

II. தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம், இதழ்கள் போன்ற ஊடகங்கள் மொழி பெயர்ப்பால்தான் வளர்ச்சி பெறுகின்றன.

III. விளம்பர மொழிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. திரைப்படங்கள் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியன வேற்று மொழிமாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழி பேசும் மக்களையும் அடைகின்றன. இதனால் புதுவகையான சிந்தனைகள் மொழிக்கூறுகள் பரவுகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

23. மொழிபெயர்ப்பு பயன் – சரியான கூற்று எது?

I. இன்றைய வளரும் நாடுகளில் அறிவியலை உருவாக்க – அரசியலை உருவாக்க – பொருளியலை உருவாக்க – சமூகவியலை உருவாக்க – இலக்கியத்தை உருவாக்க மொழிபெயர்ப்பே உதவுகிறது.

II. மொழிபெயர்ப்பு, மனிதர்களையும் நாடுகளையும் காலங்களையும் இணைக்கிற நெடுஞ்சாலையாக இருக்கிறது; காலத்தால் இடத்தால் மொழியால் பிரிக்கப்பட்ட மானுடத்தை இணைக்கிறது;

III. கடந்த காலத்தை எதிர்காலத்துடன் இணைக்கும் அது மனித வாழ்வின் ஒரு பகுதியாகவே இருக்கிறது; பல மொழிகளிலும் காணப்படும் சிறப்புக் கூறுகளை எல்லாம் ஒருங்கு சேர்த்து அனைவருக்கும் பொதுமையாக்குகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

24. _______________ நாட்டில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன. புள்ளி விவரப்படி அதிகமான தமிழ் நூல்கள் பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவ்வரிசையில் முதலிடம் ஆங்கிலம்; இரண்டாமிடம் மலையாளம்; அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளில் முறையே தெலுங்கு, இந்தி, கன்னடம், வடமொழி, ரஷ்யமொழி, வங்கமொழி, மராத்தி மொழி போன்றவை இடம்பெறுகின்றன.

A) அமெரிக்கா

B) ஜெர்மனி

C) ரஷ்யா

D) இங்கிலாந்து

25. கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப் _______________ என்று குறிப்பிடுவார்கள். மொழிபெயர்ப்பு மூலம் ஒரு நாட்டின் வரலாற்றிலும் இலக்கியத்திலும் பண்பாட்டிலும் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

A) அறிவுசார் வளம்

B) இலக்கியப் பயன்

C) பயன்கலை

D) இவற்றில் ஏதுமில்லை

26. _______________ தன் வெளியீட்டு வடிவமாகக் கொண்டிருந்த தமிழ், அச்சு இயந்திரத்தின் வருகையை ஒட்டி மொழிபெயர்ப்பை எதிர்கொண்டபோது உரைநடை வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

A) செய்யுளையே

B) இலக்கணத்தையே

C) இலக்கியத்தையே

D) இவற்றில் ஏதுமில்லை

27. ஒரு குறிப்பிட்ட சிறு குழுவில் பேசப்படும் மொழியில் இருப்பவையும் கூட நம்மை வந்தடைய வேண்டும். சிறு குழுவினர் பேசும் _______________ மொழிகளின் படைப்பாளர்கள் நோபல் பரிசு பெறுகிறார்கள். ஆனால் அந்தப் படைப்புகள் நம்மை எட்டுவதில்லை.

A) ஜப்பானிய

B) இலத்தீன்

C) ஐரோப்பிய

D) ஆப்பிரிக்க

28. தமிழின் தொன்மையான இலக்கியங்கள் முன்னரே மொழி பெயர்க்கப்பட்டு அறிமுகமாகியிருந்தால் தமிழின் பெருமை உலகெங்கும் முறையாகப் பரவியிருக்கும். _______________ பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை அத்தகைய பணிகளில் ஈடுபட வேண்டும்.

A) ஹார்வர்ட்

B) ஆக்ஸ்போர்டு

C) ஸ்டான்போர்டு

D) நாளந்தா

29. தமிழுக்கு அத்தனை அறிவுச் செல்வங்களும் கிடைக்க வேண்டும். இதனை _______________, “காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும்” என்று குறிப்பிடுகிறார்.

A) இராஜராஜன்

B) குலோத்துங்கன்

C) கரிகாலன்

D) இரும்பொறை

30. “சென்றிடுவீர் எட்டுதிக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”, “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” – என்ற பாடல் வரிகளின் ஆசிரியர் யார்?

A) வாணிதாசன்

B) திரு.வி.க

C) பாரதிதாசன்

D) பாரதியார்

31. பிரான்சு “தேசிய நூற்கூடத்தில் (Bibliothque Nationale) ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள. இவற்றுள் சில இந்தியாவிலேயே கிடைக்காத படிகளும் ஏடுகளுமாம். பண்டைக் காலத்தில் முதன் முதலாக ஐரோப்பியர் யாத்த இலக்கணங்களும் கையெழுத்துப் பிரதிகளும் இந்நூற்கூடத்தில் இருக்கின்றன. அங்கிருக்கும் தமிழ் நூல்களின் பட்டியலைப் படித்தபொழுது இன்றும் அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்பைக் கண்டேன். “மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத் தமிழ்” முதலிய நூல்களும் அங்கு உள.” – என்று கூறியவர் யார்?

A) மனோன்மணியம்

B) தனிநாயக அடிகள்

C) திரு.வி.க

D) உ.வே.சாமிநாதர்

32. கற்றவர் வழி அரசு செல்லும் என்கிறது _______________?

A) சங்க இலக்கியம்

B) காவியம்

C) ஐம்சிறும் காப்பியம்

D) ஐம்பெரும் காப்பியம்

33. தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும், என்கிறது _______________?

A) நளவெண்பா

B) ஆத்திச்சூடி

C) திருக்குறள்

D) ஆசாரக் கோவை

34. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம் பொருத்துவதும் கல்வியென்றே போற்று – என்ற பாடலின் ஆசிரியர் யார்?

A) திரு.வி.க

B) உ.வே.சாமிநாதர்

C) சச்சிதானந்தன்

D) கா.ப. செய்குதம்பிப் பாவலர்

35. நீதிவெண்பா நூலின் ஆசிரியர் யார்?

A) கா.ப. செய்குதம்பிப் பாவலர்

B) ஆறுமுக நாவலர்

C) பரிதிமாற் கலைஞர்

D) திரு.வி.க

36. அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது _______________ ஆகும். எனவே அதைப் போற்ற வேண்டும் – என்று கூறுபவர் யார்?

A) பக்தி, திரு.வி.க

B) செல்வம், மாணிக்கவாசகர்

C) கல்வி, கா.ப.செய்குதம்பிப் பாவலர்

D) இவற்றில் ஏதுமில்லை

37. அருந்துணை என்பதைப் பிரித்தால் _______________?

A) அருமை + துணை

B) அரு + துணை

C) அருமை + இணை

D) அரு + இணை

38. ‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி’ – இவ்வடியில் பயின்று வரும் தொடை நயம் யாது?

A) எதுகை

B) மோனை

C) இயைபு

D) முரண்

39. ‘சதம்’ என்றால் நூறு என்று பொருள். ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண் அறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே _______________ ஆகும்.

A) சதக்ரட்சகன்

B) சதபிராமணம்

C) சதாவதானம்

D) இவற்றில் ஏதுமில்லை

40. கீழ்க்கண்டவர்களுள் ‘சதாவதானம்’ என்னும் கலையில் சிறந்து விளங்கியவர் யார்?

I. நா. கதிரைவேற்பிள்ளை

II. செய்குதம்பிப் பாவலர்

III. சாரண பாஸ்கரன்

IV. கவி. கா. மு. ஷெரீப்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

41. செய்குதம்பிப் பாவலர் அவர்களின் காலம்?

A) 1874- 1950

B) 1884- 1960

C) 1894- 1970

D) 1904- 1980

42. கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது?

கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர். பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்; சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்.

A) செய்குதம்பிப் பாவலர்

B) தனிநாயக அடிகள்

C) திரு.வி.க

D) உ.வே.சாமிநாதர்

43. _______________ ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி ‘சதாவதானி’ என்று பாராட்டுப் பெற்றார், செய்குதம்பிப் பாவலர்.

A) 1905 மார்ச் 05

B) 1906 மார்ச் 08

C) 1907 மார்ச் 10

D) 1908 மார்ச் 12

44. கீழ்க்கண்டவற்றுள் யாருடைய நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் உள்ளன?

A) நா. கதிரைவேற்பிள்ளை

B) செய்குதம்பிப் பாவலர்

C) சாரண பாஸ்கரன்

D) கவி. கா. மு. ஷெரீப்

45. கீழ்க்கண்டவற்றுள் யாருடைய அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன?

A) சுஜாதா

B) கல்கி

C) சாரண பாஸ்கரன்

D) செய்குதம்பிப் பாவலர்

46. சதாவதானி என்பது _______________?

A) நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது

B) ஆயிரம் யானைகளைப் போரில் கொல்வது

C) நூறு படைவீரர்களை கொன்று குவிப்பது

D) ஆயிரம் பேருக்கு உணவிடுவது

47. செய்குதம்பிப் பாவலர் சதாவதானி என்று பாராட்டுப் பெற்ற இடம் _______________ நாள் _______________?

A) சென்னை விக்டோரியா அரங்கம், 1907 மார்ச் 10

B) சென்னை தீவுத் திடல், 1909 மார்ச் 8

C) தஞ்சாவூர் திலகர் திடல், 1908 பிப்ரவரி 8

D) திருச்சி அண்ணா மைதானம், 1906 மார்ச் 6

48. செய்குதம்பிப் பாவலரின் நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் கீழ்க்கண்டவற்றுள் எவை உள்ளன?

A) தெரு, நீர்தொட்டி

B) திருமண மண்டபம், கோவில்

C) பள்ளிவாசல், நூலகம்

D) மணிமண்டபம், பள்ளி

49. திருவிளையாடற் புராணம் நூலின் ஆசிரியர் யார்?

A) பரஞ்சோதி முனிவர்

B) சயம் கொண்டார்

C) சேக்கிழார்

D) நாகுத்தனார்

50. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் – பற்றிய சரியான கூற்று எது?

I. பாண்டிய நாட்டை ஆட்சிபுரிந்த குலேசபாண்டியன் என்னும் மன்னன் தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கினான்.

II. கபிலரின் நண்பரான இடைக்காடனார் என்னும் புலவர், தாம் இயற்றிய கவிதையினை மன்னன் முன்பு பாட, அதைப் பொருட்படுத்தாமல் மன்னன் புலவரை அவமதித்தான்.

III. மனம் வருந்திய இடைக்காடனார், இறைவனிடம் முறையிட்டார். மன்னனின் பிழையை உணர்த்துவதற்காக இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி, வடதிரு ஆலவாயில் சென்று தங்கினார்.

IV. இதை அறிந்த மன்னன் தன் பிழையைப் பொறுத்தருளுமாறு இறைவனை வேண்டி, இடைக்காடனாருக்குச் சிறப்புச் செய்தான். இறைவனும் கோவிலுக்குத் திரும்பினார்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

51. கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட் டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல் மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென் சொல் மொழிந்து அரசன் தனைக் காண்டும் எனத் தொடுத்த பனுவலொடு மூரித் தீம் தேன் வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு தொடுத்து உரைப்பனுவல் வாசித்தான் ஆல் – இந்த பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) திருவிளையாடற் புராணம்

B) பாஞ்சாலி சபதம்

C) மணிமேகலை

D) சிலப்பதிகாரம்

52. சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே தன்னைச் சார்ந்தோர் நல் நிதியே திரு ஆலவாய் உடைய நாயகனே நகுதார் வேம்பன் பொன் நிதி போல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன் என்று புகலக் கேட்டுச் சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிது முடி துளக்கான் ஆகி – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) சயம் கொண்டார்

B) பரஞ்சோதி முனிவர்

C) சேக்கிழார்

D) நாகுத்தனார்

53. என்னை இகழ்ந்தனனோ சொல் வடிவாய் நின்இடம் பிரியா இமையப் பாவை தன்னையும் சொல் பொருளான உன்னையுமே இகழ்ந்தனன் என் தனக்கு யாது என்னா முன்னை மொழிந்து இடைக்காடன் தணியாத முனிவு ஈர்ப்ப முந்திச் சென்றான் அன்ன உரை திருச்செவியின் ஊறுபாடு என உறைப்ப அருளின் மூர்த்தி – கீழ்க்கண்டவற்றுள் இந்த பாடல் வரியுடன் தொடர்புடைய ஒன்று உள்ளது. அது எது?

A) அரிமர்த்தன பாண்டியன், மாணிக்கவாசகர்

B) சுந்தர பாண்டியன், இறைவன்

C) குலேசபாண்டியன், இடைக்காடனார்

D) இவற்றில் ஏதுமில்லை

54. போனஇடைக் காடனுக்கும் கபிலனுக்கும் அகத்துவகை பொலியுமாற்றான் ஞானமய மாகியதன் இலிங்கவுரு மறைத்துஉமையாம் நங்கை யோடும் வானவர்தம் பிரானெழுந்து புறம்போய்த்தன் கோவிலின்நேர் வடபால் வையை ஆனநதித் தென்பாலோர் ஆலயங்கண்டு அங்கு இனிதின் அமர்ந்தான் மன்னோ – இந்த பாடல்வரியுடன் தொடர்புடைய கூற்றைத் தேர்ந்தெடுக்க.

A) இறைவன் கோவிலைவிட்டு நீங்குதல்

B) இறைவனின் பதில்

C) மன்னன், புலவருக்கு மரியாதை செய்தல்

D) மன்னன், புலவரிடம் மன்னிப்பை வேண்டுதல்

55. அல்லதை என் தமரால் என் பகைஞரால் கள்வரால் அரிய கானத்து எல்லை விலங்கு ஆதிகளால் இடையூறு இன் தமிழ் நாட்டில் எய்திற்றாலோ தொல்லை மறையவர் ஒழுக்கம் குன்றினரோ தவம் தருமம் சுருங்கிற்றாலோ இல்லறனும் துறவறனும் பிழைத்தனவோ யான் அறியேன் எந்தாய்! எந்தாய்! – இந்த பாடல்வரியுடன் தொடர்புடைய கூற்றைத் தேர்ந்தெடுக்க.

A) இறைவன் கோவிலைவிட்டு நீங்குதல்

B) கோவிலைவிட்டு நீங்கிய காரணம் அறியாது மன்னன் இறைவனை வேண்டுதல்

C) மன்னன், புலவருக்கு மரியாதை செய்தல்

D) மன்னன், புலவரிடம் மன்னிப்பை வேண்டுதல்

56. ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும் நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் வந்தேம் என்னா – இந்தப் பாடலில் “இடைக்காடனார் மீது கொண்ட அன்பினால் இவ்வாறு இங்கு வந்தோம்” – என்று மன்னனிடம் கூறுபவர் யார்?

A) வாயிற்காவலன்

B) மன்னர்

C) அமைச்சர்

D) இறைவன்

57. பெண்ணினைப் பாகம் கொண்ட பெருந்தகைப் பரமயோகி விண்ணிடை மொழிந்த மாற்றம் மீனவன் கேட்டு வானோர் புண்ணிய சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை அன்றோ எண்ணிய பெரியோர்க்கு என்னா ஏத்தினான் இறைஞ்சினானே – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) திருவிளையாடற் புராணம்

B) பாஞ்சாலி சபதம்

C) சீறாப்புராணம்

D) கலிங்கத்துப்பரணி

58. விதிமுறை கதலி பூகம் கவரிவால் விதானம் தீபம் புதியதோர் நிறைநீர்க் கும்பங் கதலிகை புனைந்த மன்றல் கதிர்மணி மாடத் தம்பொற் சேக்கைமேற் கற்றோர் சூழ மதிபுனை காடன் தன்னை மங்கல அணிசெய் தேற்றி – கீழ்க்கண்டவற்றுள் இந்தப் பாடல் வரியுடன் தொடர்புடையது எது?

A) 5 காண்டங்கள், 100 படலங்கள்

B) 133 காண்டங்கள், 8 படலங்கள்

C) 30 காண்டங்கள், 112 படலங்கள்

D) 3 காண்டங்கள், 64 படலங்கள்

59. புண்ணியப் புலவீர்யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப் பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான் நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா – இந்த பாடல்வரியின் ஆசிரியர் யார்?

A) சயம் கொண்டார்

B) பரஞ்சோதி முனிவர்

C) சேக்கிழார்

D) நாகுத்தனார்

60. ‘குலேசபாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் மிகுந்த கல்வியறிவு மிக்கவன்’ எனக் கற்றோர் கூறக் கேட்டார் இடைக்காடனார் என்னும் புலவர். கலைகளை முழுவதும் உணர்ந்த நண்பர் _______________ மேல் அன்புகொண்ட அப்புலவர், மிகவும் இனிய தேன் ஒழுகும் _______________ யினை அணிந்த பாண்டியனின் அவைக்குச் சென்று, தான் இயற்றிய கவிதையைப் படித்தார்.

A) காக்கைப் பாடியனார், மல்லிகைப்பூ மாலை

B) பிசிராந்தையார், ஆத்தி பூ மாலை

C) ஒளவையார், பனம் பூ மாலை

D) கபிலர், வேப்பமாலை

61. இடைக்காடனார் இறைவன் திருமுன் விழுந்து வணங்கி எழுந்து, “தமிழறியும் பெருமானே! அடியார்க்கு நல் நிதி போன்றவனே! _______________ இல் உறையும் இறைவனே! அழகிய வேப்ப மலர் மாலையை அணிந்த பாண்டியன், பொருட்செல்வத்தோடு கல்விச் செல்வமும் மிக உடையவன் எனக் கூறக்கேட்டு, அவன் முன் சொற்சுவை நிரம்பிய கவிதை பாடினேன். அவனோ சிறிதேனும் சுவைத்துத் தலை அசைக்காமல் புலமையை அவமதித்தான்” என்றார்.

A) திருவாரூர்

B) தஞ்சாவூர்

C) திருஆலவாய்

D) திருநெல்வேலி

62. “பாண்டியன் என்னை இகழவில்லை, சொல்லின் வடிவாக உன் இடப்புறம் வீற்றிருக்கும் பார்வதி தேவியையும், சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான்” – என்று கூறியவர் யார்?

A) இறைவன்

B) இடைக்காடனார்

C) மன்னன்

D) அமைச்சர்

63. கோவிலை விட்டு வெளியேறிய இடைக்காடனாருக்கும் அவர் நண்பராகிய கபிலருக்கும் மனமகிழ்ச்சி உண்டாக்க நினைத்தார் இறைவன். ஞானமயமாகிய தம்முடைய இலிங்க வடிவத்தை மறைத்து உமாதேவியாரோடும் திருக்கோவிலைவிட்டு வெளியேறி நேர் _______________ ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோவிலை ஆக்கி அங்குச் சென்று இருந்தார்.

A) வடக்கே வைகை

B) தெற்கே காவிரி

C) கிழக்கே அர்ச்சுனா

D) மேற்கே தாமிரபரணி

64. “உமையை ஒரு பாகத்திற்கொண்ட மேலான பரம்பொருளே, புண்ணியனே, சிறியவர்களின் குற்றம் பொறுப்பது பெரியவருக்குப் பெருமையல்லவா” – என்று கூறியவர் யார்?

A) அமைச்சர்

B) புலவர்

C) மன்னன்

D) இவர்களில் யாருமில்லை

65. கேள்வியினான் – இலக்கணக்குறிப்பு தருக?

A) வினையாலணையும் பெயர்

B) வினையெச்சம்

C) வினைமுற்று

D) வினைத்தொகை

66. காடனுக்கும் கபிலனுக்கும் – இலக்கணக்குறிப்பு தருக?

A) முற்றும்மை

B) எண்ணும்மை

C) உம்மைத்தொகை

D) உவமைத்தொகை

67. தணிந்தது – பகுபத உறுப்பிலக்கணம் சரியானது எது?

I. தணிந்தது – தணி + த்(ந்) + த் + அ + து

II. தணி – பகுதி; த் – சந்தி;

III. த் (ந்) – ந் ஆனது விகாரம்; த் – இறந்தகால இடைநிலை

IV. அ – சாரியை; து – படர்க்கை வினைமுற்று விகுதி

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

68. சொல்லேருழவனுக்குக் கவரி வீசிய வில்லேருழவன் – சரியான கூற்று எது?

I. ஏடாளும் புலவரொருவர் நாடாளும் மன்னரைக் காண அரண்மனை சென்றார்.

II. களைப்பு மிகுதியால் முரசுக் கட்டிலில் கண்ணயர்ந்தார்;

III. அரச குற்றமான அச்செயலைச் செய்த புலவருக்குத் தண்டனை வழங்காமல் கவரி வீசினார் மன்னர்.

IV. உறங்கிய புலவர் மோசிகீரனார். கவரி வீசிய மன்னர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. கண்விழித்த புலவர் மன்னரின் செயலைக் கண்டு வியந்து பா மழை பொழிந்தார்.

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) III, IV மட்டும் சரி

69. சொல்லேருழவனுக்குக் கவரி வீசிய வில்லேருழவன் – என்பதைப் பற்றிய பாடல் இது. “மாசற விசித்த வார்புறு வள்பின் …” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) நற்றிணை

B) குறுந்தொகை

C) அகநானூறு

D) புறநானூறு

70. திருவிளையாடற் கதைகள் சிலப்பதிகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்தாலும் _______________ என்பவர் இயற்றிய திருவிளையாடற்புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது.

A) பெருஞ்சித்திரனார்

B) பரஞ்சோதி முனிவர்

C) ஒளவையார்

D) ஆறுமுக நாவலர்

71. திருவிளையாடற்புராணம் மதுரைக் காண்டம், கூடற் காண்டம், _______________ காண்டம் என்ற மூன்று காண்டங்களும், _______________ படலங்களும் உடையது;

A) திருக்கழுக்குன்றம், 105

B) திருமறைக்காடு, 55

C) திருவாவடுதுறை, 100

D) திருவாலவாய், 64

72. பரஞ்சோதி முனிவர் _______________ (வேதாரண்யம்) என்னும் ஊரில் பிறந்தவர்.

A) திருக்கழுக்குன்றம்

B) திருமறைக்காடு

C) திருவாவடுதுறை

D) திருவாலவாய்

73. பரஞ்சோதி முனிவர் _______________ நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

A) பதிநாறாம்

B) பதினேழாம்

C) பதினெட்டாம்

D) பத்தொன்பதாம்

74. இவர் சிவபக்தி மிக்கவர். வேதாரண்யப் புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி முதலியன இவர் இயற்றிய வேறு நூல்களாகும் – இந்த கூற்றுடன் தொடர்புடையவர் யார்?

A) பெருஞ்சித்திரனார்

B) பரஞ்சோதி முனிவர்

C) ஒளவையார்

D) ஆறுமுக நாவலர்

75. சொல்லும் பொருளும் சரியானது எது?

I. நுவன்ற – சொல்லிய

II. என்னா – அசைச் சொல்

III. கவரி – சாமரை (கவரிமாவின் முடியில் செய்த விசிறியாகிய அரசச் சின்னம்)

IV. மீனவன் – பாண்டிய மன்னன்

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) III, IV மட்டும் சரி

76. சொல்லும் பொருளும் சரியானது எது?

I. நீபவனம் – கடம்பவனம்

II. தமர் – உறவினர்

III. முனிவு – சினம்

IV. நவ்வி – கரடி

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) III, IV மட்டும் சரி

77. சொல்லும் பொருளும் சரியானது எது?

I. அகத்து உவகை – மனமகிழ்ச்சி

II. தார் – மாலை

III. முடி – தலை

IV. கேள்வியினான் – நூல் வல்லான்

V. கேண்மையினான் – நட்பினன்

A) I, II, III, V மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, II, III, IV மட்டும் சரி

D) I, II, III, IV, V அனைத்தும் சரி

78. வேப்ப மாலை அணிந்த மன்னன்?

A) சேரன்

B) சோழன்

C) பாண்டியன்

D) பல்லவன்

79. இடைக்காடனார் பிணக்குத் தீர்த்த படலம் இடம் பெறும் காண்டம் _______________?

A) மதுரைக் காண்டம்

B) கூடற் காண்டம்

C) திரு ஆலவாய்க் காண்டம்

D) சுந்தர காண்டம்

80. இடைக்காடனார் பிணக்குத் தீர்த்த படலம் திருவிளையாடற்புராணத்தில் எத்தனையாவது படலம்?

A) 64

B) 56

C) 46

D) 48

81. சொல்லின் வடிவாக இறைவனின் இடப்புறம் வீற்றிருப்பவள் _______________?

A) பார்வதி

B) திருமகள்

C) கலைமகள்

D) அலைமகள்

82. வினா எத்தனை வகைப்படும்?

A) 6

B) 7

C) 8

D) 9

83. சிறந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த கடம்ப வனத்தை விட்டு ஒருபோதும் நீங்கமாட்டோம், என்று கூறியவர் _______________?

A) குலேச பாண்டியன்

B) இறைவன்

C) இடைக்காடனார்

D) கபிலர்

84. மன்னன் இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து _______________ இருக்கையில் விதிப்படி அமர்த்தினான்?

அ) மரகத

ஆ) பொன்

இ) தன்

ஈ) வைர

85. ‘மாசற விசித்த வார்புறு வள்பின்’ என்று _______________ புலவர் _______________ மன்னனைப் பாடினார்.

அ) மோசிகீரனார், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.

ஆ) ஔவையார், அதியமான்

இ) பரணர், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

ஈ) கபிலர், வல்வில் ஓரி

86. இலக்கணக் குறிப்பு தருக? சரியானது எது?

I. கற்றோர் – வினையாலணையும் பெயர்

II. உணர்ந்த கபிலன் – பெயரெச்சம்

III. தீம்தேன், நல்நிதி, பெருந்தகை – பண்புத்தொகை

IV. ஒழுகுதார் – வினைத்தொகை

V. மீனவன் – ஆகுபெயர்

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) III, IV, V மட்டும் சரி

D) I, II, III, IV, V அனைத்தும் சரி

87. மேரிஜேன் (மேரி மெக்லியோட் பெத்யூன்) – அவர்களைப் பற்றிய சரியானவற்றைத் தேர்ந்தெடு.

I. மேரிஜேன் (மேரி மெக்லியோட் பெத்யூன்) அவர்கள் சாமுவேல் (சாம் மெக்லியோட்) – பார்ட்சி(பாட்ஸி) என்ற ‘அமெரிக்க வாழ் ஆப்பிரிக்க’ தம்பதிக்கு 15வது குழந்தையாகப் பிறந்தார்.

II. உன்னைப் போன்ற குழந்தைகள் படித்தாக வேண்டும். உன்னுடைய இந்தப் பருத்தி எடுப்பு வேலைகள் முடிந்த உடனேயே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு வரவேண்டும், என்று மேரிஜேன் (மேரி மெக்லியோட் பெத்யூன்) கல்வி கற்க உதவியவர் மிஸ் வில்ஸன்.

III. ஒரு புத்தகம், மேலட்டை ஓவியத்தையும் அச்சிடப்பட்ட புத்தகத் தலைப்பையும் பார்த்து ஆர்வமுற்ற மேரி அதைத் தன் கையில் எடுத்துக்கொண்டாள். அதைப் புரட்டத் துவங்கிய போது வில்ஸனின் இரு பெண் குழந்தைகளுள் சிறுமியாக இருந்தவள், “புத்தகத்தை என்னிடம் கொடு! நீ இதை எடுக்கக்கூடாது! உன்னால் படிக்க முடியாது!’’ என்று மேரியிடமிருந்து புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள். “உனக்குப் படிக்கத் தெரியாது” என்ற வார்த்தை மேரிஜேன் (மேரி மெக்லியோட் பெத்யூன்) உள்ளத்தில் பொதிந்து பள்ளி செல்ல உந்தியது.

IV. மேரிஜேன் (மேரி மெக்லியோட் பெத்யூன்) பள்ளியில் சேருவதற்கு முன், தன் தந்தையுடன் சேர்ந்து பருத்தி வயல்களில் வேலை செய்தார்.

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) III, IV, V மட்டும் சரி

D) I, II, III, IV, V அனைத்தும் சரி

88. மேரி மெக்லியோட் பெத்யூன் – பற்றிய சரியான கூற்று எது?

I. புத்தகம் ஒன்று ஒரு சிறு பெண்ணுடன் வாழ்க்கை நெடுகப் பேசிக்கொண்டே வருகிறது. “உனக்குப் படிக்கத் தெரியாது” என்ற கூற்றால் உள்ளத்தில் பெற்ற அடி, பிற்காலத்தில் சமையல் செய்தும் தோட்டமிட்டும் பொது இடங்களில் பாட்டுப்பாடியும் சிறுகச்சிறுகப் பணம் சேர்த்துக் குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிடக் காரணமானது.

II. உலகெங்கும் மூலை முடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர் அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன். இம் மாபெரும் கல்வியாளரின் வாழ்க்கை “உனக்குப் படிக்கத் தெரியாது” என்ற தலைப்பில் நூலாக வந்துள்ளது.

III. “உனக்குப் படிக்கத் தெரியாது” என்ற நூலின் ஆசிரியர் கருணாகரன். இவரின் இயற்பெயர் வே. குணசேகரன்.

A) I, II மட்டும் சரி

B) I, II, III மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

89. “கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை” (தூத்துக்குடி மாவட்டத்தின் கொற்கை) – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) கலித்தொகை

B) பதிற்றுப்பத்து

C) ஐங்குறுநூறு

D) புறநானூறு

90. கல்விக்கண் திறந்தவர்களுக்கிடையில் கைவிடப்பட்ட பெண்களுக்காக உழைத்த தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?

A) சாரதா அம்மையார்

B) முத்துலெட்சுமி

C) அம்புஜத்தம்மாள்

D) இவர்களில் யாருமில்லை

91. “உனக்குப் படிக்கத் தெரியாது” – என்ற நூலின் ஆசிரியர் இவர். வயதுவந்தோர் கல்வித்திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இவரின் இயற்பெயர் வே. குணசேகரன். – இவர் யார்?

A) கமலாலயன்

B) சுஜாதா

C) ராஜம் கிருஷ்ணன்

D) பிச்சமூர்த்தி

92. மொழியின் வளர்ச்சி என்பது வினவுவதிலும் விடையளிப்பதிலும் கூட இருக்கிறது. அவற்றைப் பற்றி _______________ விளக்கியிருக்கிறார்.

A) திருவள்ளுவர்

B) ஆறுமுக நாவலர்

C) தொல்காப்பியர்

D) நன்னூலார்

93. இடைக்காடனாரின் சொல் _______________ போல் இறைவனின் திருச்செவியில் சென்று தைத்தது.

A) கூரிய அம்பு

B) வேற்படை

C) தீ

D) விடமுள்

94. வினா பற்றிய சரியான கூற்று எது?

I. வினா எட்டு வகைப்படும்.

II. அறிவினா, தெரி வினா, அறியா வினா, ஐயவினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா, சுட்டு வினா என்று வினா எட்டு வகைப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

95. வினா பற்றிய சரியான கூற்று எது?

I. வினா ஆறு வகைப்படும்.

II. அறிவினா, அறியா வினா, ஐயவினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா என்று வினா எட்டு வகைப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

96. தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது. மாணவரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று ஆசிரியர் கேட்டல் – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?

A) கொளல் வினா

B) ஐயவினா

C) அறியா வினா

D) அறிவினா

97. தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது. ஆசிரியரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று மாணவர் கேட்டல் – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?

A) கொளல் வினா

B) ஐயவினா

C) அறியா வினா

D) அறிவினா

98. ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது. ‘இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?’ என வினவுதல் – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?

A) கொளல் வினா

B) ஐயவினா

C) அறியா வினா

D) அறிவினா

99. தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது. ‘ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?’ என்று நூலகரிடம் வினவுதல் – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?

A) கொளல் வினா

B) ஐயவினா

C) அறியா வினா

D) அறிவினா

100. பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது. ‘என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?’ என்று கொடுப்பதற்காக வினவுதல் – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?

A) கொளல் வினா

B) கொடை வினா

C) அறியா வினா

D) அறி வினா

101. ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது. “வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா? என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல் – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?

A) கொளல் வினா

B) கொடை வினா

C) ஏவல் வினா

D) அறி வினா

102. அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார் – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) நன்னூல்

B) தொல்காப்பியம்

C) பரிபாடல்

D) கலித்தொகை

103. “சுட்டு மறைநேர் ஏவல் வினாதல் உற்ற(து) உரைத்தல் உறுவது கூறல் இனமொழி எனும்எண் இறையுள் இறுதி நிலவிய ஐந்தும்அப் பொருண்மையின் நேர்ப” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) நன்னூல்

B) தொல்காப்பியம்

C) பரிபாடல்

D) கலித்தொகை

104. விடை வகை – பற்றிய சரியான கூற்று எது?

I. சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை என்று விடை எட்டு வகைப்படும்.

II. முதல் மூன்று வகையும் (சுட்டு விடை, மறை விடை, நேர் விடை) நேரடி விடைகளாக இருப்பதால் வெளிப்படை விடைகள் எனவும் அடுத்த ஐந்து விடைகளும் (ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை) குறிப்பாக இருப்பதால் குறிப்பு விடைகள் எனவும் கொள்ளலாம்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே தவறு

D) I, II இரண்டுமே சரி

105. ‘கடைத்தெரு எங்குள்ளது?’ என்ற வினாவிற்கு, ‘வலப்பக்கத்தில் உள்ளது’ எனக் கூறல் – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?

A) ஏவல் விடை

B) நேர் விடை

C) மறை விடை

D) சுட்டு விடை

106. ‘கடைக்குப் போவாயா?’ என்ற கேள்விக்குப் போகமாட்டேன்’ என மறுத்துக் கூறல் – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?

A) ஏவல் விடை

B) நேர் விடை

C) மறை விடை

D) சுட்டு விடை

107. உடன்பட்டுக் கூறும் விடை. ‘கடைக்குப் போவாயா?’ என்ற கேள்விக்குப் போவேன்’ என்று உடன்பட்டுக் கூறல் – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?

A) ஏவல் விடை

B) நேர் விடை

C) மறை விடை

D) சுட்டு விடை

108. மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை. இது செய்வாயா?” என்று வினவியபோது, “நீயே செய்” என்று ஏவிக் கூறுவது – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?

A) ஏவல் விடை

B) நேர் விடை

C) மறை விடை

D) சுட்டு விடை

109. வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது. ‘என்னுடன் ஊருக்கு வருவாயா?’ என்ற வினாவிற்கு ‘வராமல் இருப்பேனா?’ என்று கூறுவது – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?

A) ஏவல் விடை

B) நேர் விடை

C) மறை விடை

D) வினா எதிர் வினாதல் விடை

110. வினாவிற்கு விடையாக ஏற்கெனவே நேர்ந்ததைக் கூறல். ‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கிறது’ என்று உற்றதை உரைப்பது – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?

A) ஏவல் விடை

B) நேர் விடை

C) உற்றது உரைத்தல் விடை

D) சுட்டு விடை

111. வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல். ‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கும்’ என்று உறுவதை உரைப்பது – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?

A) ஏவல் விடை

B) உறுவது கூறல் விடை

C) மறை விடை

D) சுட்டு விடை

112. வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல். “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?

A) இனமொழி விடை

B) நேர் விடை

C) மறை விடை

D) சுட்டு விடை

113. சொல்லரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல் மெல்லவே கரு இருந்து ஈன்று மேலலார் செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) சீவகசிந்தாமணி

B) புறநானூறு

C) தொல்காப்பியம்

D) மணிமேகலை

114. மற்றைய நோக்காது அடிதொறும் வான் பொருள் அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப் புனலே.’ – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) சீவகசிந்தாமணி

B) புறநானூறு

C) நன்னூல்

D) மணிமேகலை

115. யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) சீவகசிந்தாமணி

B) நன்னூல்

C) புறநானூறு

D) மணிமேகலை

116. ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு – என்ற பாடலுடன் தொடர்புடையதைத் தேர்ந்தெடு.

A) ஆறுமுக நாவலர் உரை

B) மயிலைநாதர் உரை

C) திரு.வி.க உரை

D) உ.வே. சாமிநாதர் உரை

117. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் – இக்குறளில் முதல் அடியில் விலங்கு, மக்கள் என்று எழுவாய்களை வரிசைப்படுத்திவிட்டு, அடுத்த அடியில் பயனிலைகளாகக் கற்றார், கல்லாதார் (ஏனையவர்) என வரிசைப்படுத்தியுள்ளார். அவற்றைக் கற்றார் மக்கள் என்றும், கல்லாத ஏனையவர் விலங்குகள் என்றும் எதிர் எதிராகக் கொண்டு பொருள்கொள்ள வேண்டும். எனவே, இக்குறள் எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும் – என்று விளக்கம் தரும் நூல் எது?

A) கலிங்கத்துப்பரணி

B) குறுந்தொகை

C) நற்றிணை

D) நன்னூல்

118. வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி யாரம் படை த்த தமிழ்நாடு (செந்தமிழ்) – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) வாணிதாசன்

D) நாமக்கல் கவிஞர்

119. அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன்; பேத்தி, நெட்டுருப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) வாணிதாசன்

D) நாமக்கல் கவிஞர்

120. It gave Valluva the Great For all the world to have; And the fame rose sky high Of our Tamil – Land It made a necklace of gems, Named ‘The Lay of the Anklet’ Which grips enraptured hearts In our Tamil – Land – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) வாணிதாசன்

D) நாமக்கல் கவிஞர்

121. Wondering at the lute music Coming from the chamber Entered I to look up to in still My grand-daughter Learning by rote the verses Of a didactic compilation – என்ற பாரதிதாசன் அவர்கள் தமிழில் எழுதிய “அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன்; பேத்தி, நெட்டுருப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே” – இந்தப்பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

A) திரு.வி.க

B) கமலாலயன்

C) வாணிதாசன்

D) கவிஞர் தேசினி

122. யாழிசை – என்பதன் ஆங்கில வார்த்தை என்ன?

A) GUITAR MUSIC

B) LUTE MUSIC

C) LIGHT MUSIC

D) BRIGHT MUSIC

123. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. Emblem – சின்னம்

II. Intellectual – அறிவாளர்

III. Thesis – ஆய்வேடு

IV. Symbolism – குறியீட்டியல்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

124. நூல்கள் மற்றும் நூல்களின் ஆசிரியர் சரியானது எது?

I. சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று – தமிழில் வல்லிக்க ண்ணன்

II. குட்டி இளவரசன் – தமிழில் வெ.ஸ்ரீராம்

III. அக்னிச் சிறகுகள் – பாரதியார்

IV. ஆசிரியரின் டைரி – தமிழில் எம்.பி. அகிலா

A) I, II மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, II, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

125. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) வெற்றி வேக்கை

B) புதிய ஆத்திச்சூடி

C) கொன்றை வேந்தன்

D) ஆத்திச்சூடி

126. ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு – சரியான கூற்று எது?

I. ஐ.நா. அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (translation) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது;

II. ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது (Interpreting) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார்.

III. ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்துகொள்வார்.

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் தவறு

D) I, II, III அனைத்தும் சரி

127. அருந்துணை என்பதைப் பிரித்தால் _______________?

A) அருமை + துணை

B) அரு + துணை

C) அருமை + இணை

D) அரு + இணை

128. “இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது _______________ வினா. “அதோ, அங்கே நிற்கும்.” என்று மற்றொருவர் கூறியது _______________ விடை.

A) ஐயவினா, வினா எதிர் வினாதல்

B) அறிவினா, மறை விடை

C) அறியா வினா, சுட்டு விடை

D) கொளல் வினா, இனமொழி விடை

129. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை” – என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

A) தமிழ்

B) அறிவியல்

C) கல்வி

D) இலக்கியம்

130. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் _______________. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் _______________?

A) அமைச்சர், மன்னன்

B) அமைச்சர், இறைவன்

C) இறைவன், மன்னன்

D) மன்னன், இறைவன்

131. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. “காமராசர் நகர் எங்கே இருக்கிறது?” “இந்த வழியாகச் செல்லுங்கள்.” – என்று விடையளிப்பது – சுட்டுவிடை

II. “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு, “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடையளிப்பது – வினா எதிர்வினாதல் விடை.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

132. வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறுவது _______________?

A) உறுவது கூறல் விடை

B) உற்றது உறைத்தல் விடை

C) இனமொழி விடை

D) வினா எதிர் வினாதல் விடை

133. உடன்பட்டுக் கூறும் விடை _______________?

A) சுட்டுவிடை

B) மறைவிடை

C) நேர்விடை

D) ஏவல்விடை

134. வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது _______________?

அ) ஏவல் விடை

ஆ) வினா எதிர்வினாதல் விடை

இ) மறைவிடை

ஈ) நேர்வினா

135. ஆடத்தெரியுமா என்ற வினாவிற்குப் பாடத்தெரியும் என்று கூறுவது _______________?

அ) வினாஎதிர் வினாதல்

ஆ) உற்றது உரைத்தல்

இ) உறுவது கூறல்

ஈ) இனமொழி விடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!