Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
General Tamil

10th Tamil Questions – Unit 7

10th Tamil Questions – Unit 7

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 10th Tamil Questions – Unit 7 With Answers Uploaded Below.

1. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் _____________ ஆம் ஆண்டு, மிகவும் சிறப்புடைய ஆண்டாகக் கருதப்படுகிறது. அந்த ஆண்டில்தான் காந்தியடிகள் சத்தியாக்கிரகம் என்ற அறப்போர் முறையைத் _____________ ல் தொடங்கி வைத்தார்.

A) 1906, தென்னாப்பிரிக்கா

B) 1910, இந்தியா

C) 1915, இங்கிலாந்து

D) 1920, ரஷ்யா

2. வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய ஆண்டு?

A) 1900

B) 1906

C) 1910

D) 1925

3. 1906 ஆம் ஆண்டில் ஜூன் 26 ஆம் நாள், சென்னை ஆயிரம்விளக்கு வட்டம் சால்வன் குப்பம் என்னும் பகுதியில் பிறந்த தலைவர் யார்?

A) சுத்தானந்த பாரதியார்

B) உ.வே. சாமிநாதர்

C) ம.பொ.சிவஞானம்

D) ஆனந்தரங்கர்

4. கீழ்க்கண்ட கூற்றுடன் தொடர்புடையவர் யார்? தந்தையார் பெயர் பொன்னுசாமி. அன்னையின் பெயர் சிவகாமி. பெற்றோர் இட்ட பெயர் ஞானப்பிரகாசம்.

A) சுத்தானந்த பாரதியார்

B) உ.வே. சாமிநாதர்

C) ம.பொ.சிவஞானம்

D) ஆனந்தரங்கர்

5. “ஏர் புதிதா” எனும் கவிதை _______________ என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

A) பாரதியார் கவிதைகள்

B) தாயுமானவர் பாடல்கள்

C) கு.ப.ரா. படைப்புகள். (கு.ப.ராஜகோபாலன்)

D) பாரதிதாசன் கவிதைகள்

6. கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்று பட்டங்கள் கொண்ட மன்னன் யார்?

A) கணைக்கால் இரும்பொறை

B) இரண்டாம் இராசராச சோழன்

C) சுந்தர பாண்டியன்

D) கரிகாலன்

7. “மெய்க்கீர்த்திகள்” பற்றிய சரியான கூற்று எது?

I. மெய்க்கீர்த்தி பகுதியின் இலக்கிய நயம் நாட்டின் வளத்தையும் ஆட்சி சிறப்பையும் ஒருசேர உணர்த்துவதாக உள்ளது.

II. இரண்டாம் இராசராச சோழனுடைய மெய்க்கீர்த்திகள் இரண்டு. அதில் ஒன்று 91 அடிகளைக் கொண்டது. அதில் 16-33 வரையான அடிகள் பாடப்பகுதியில் தரப்பட்டுள்ளன.

III. முதலாம் இராசராசன் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. மெய்க்கீர்த்திகளே கல்வெட்டின் முதல்பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகள்.

IV. மெய்க்கீர்த்திகள் புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை.

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

8. ம.பொ. சிவஞானம் பற்றிய சரியான கூற்று எது?

I. சரபையர் என்ற முதியவர் ஒருவர் “ம.பொ. சிவஞானம்” அவர்களின் பெயரை மாற்றி ‘சிவஞானி’ என்றே அழைத்தார். பின்னாளில் அவர் எனக்கிட்டு அழைத்த சிவஞானி என்னும் பெயரே சிறிது திருத்தத்துடன் சிவஞானம் என்று நிலைபெற்றது.

II. நான் பள்ளியில், மூன்றாம் வகுப்பில் நுழைந்த ஏழாம் நாளில், பகல் நேரத்தில் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுத் திரும்பவும் பள்ளிக்குப் போனேன். காலையிலேயே பாடப் புத்தகங்களோடு வராததற்காக ஆசிரியர் என்னைக் கண்டித்தார். அன்றோடு என் கல்வி முற்றுப் பெற்றது.

III. அன்னையார் இளமையிலே எனக்குப் பயிற்றுவித்த பாக்கள் எனது இலக்கியப் பயிற்சிக்கான பாலபாடங்களாக அமைந்தன. அல்லி அரசாணி மாலை, பவளக் கொடி மாலை ஆகிய அம்மானைப் பாடல்களைப் பாடுவார். அந்த நேரத்தில் என்னையும் சிறிது நேரம் அந்த நூல்களைப் படிக்க வைப்பார். அதனால், சந்த நயத்தோடும் எதுகை மோனையோடும் உள்ள அம்மானைப் பாடல்களை அடிக்கடி பாடிப்பாடிப் பிள்ளைப் பருவத்திலேயே இலக்கிய அறிவை வளர்த்து வந்தேன். சித்தர் பாடல்களை நானாகவே விரும்பிப் படித்து மனனம் செய்வேன்.

IV. சொற்பொழிவுகளைக் கேட்பதன் மூலமாகவும் நான் இலக்கிய அறிவு பெற்றேன். அப்போது அவர்கள் வெளியிடும் சிறந்த கருத்துகளை ஏடுகளில் குறித்து வைத்துக் கொள்வேன். ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள. ஒன்று கல்வி; மற்றொன்று கேள்வி. யான் முறையாக ஏட்டுக்கல்வி பெற இயலாமல் போனதால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யக் கேள்வி ஞானத்தைப் பெறுவதிலே மிகுந்த ஆர்வம் காட்டினேன். எனது கேள்வி ஞானத்தைப் பெருக்கிய பெருமையிலே திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளுக்கே மிகுந்த பங்குண்டு.

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

9. கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது?

இவர் ஒரு புத்தகப்பித்தன். நூல் வாங்குவதற்குப் போதிய பணமில்லாத குறையால் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று, தமக்கு விருப்பமான புத்தகங்களை, மிக மிகக் குறைந்த விலைக்கு வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு, பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார். குறைந்த விலைக்கு நல்ல நூலொன்று கிடைத்துவிட்டால் பேரானந்தம் அடைவார். அவர் வாழ்நாளில் அவராக முயன்று சேர்த்துவைத்துள்ள சொத்துகள் அவரிடமுள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களைத் தவிர வேறில்லை என்று உறுதியாகக் கூறலாம்.

A) சுத்தானந்த பாரதியார்

B) உ.வே. சாமிநாதர்

C) ம.பொ.சிவஞானம்

D) ஆனந்தரங்கர்

10. காந்தி – இர்வின் ஒப்பந்தம் எந்த ஆண்டு நடைபெற்றது?

A) 1929

B) 1930

C) 1931

D) 1932

11. 30.09.1932இல் ‘தமிழா! துள்ளி எழு’ என்னும் தலைப்புடைய துண்டறிக்கை ஒன்றைக் கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடையே வழங்கியதற்காக, சிறையிலிடப்பட்டவர் யார்?

A) பாரதியார்

B) சத்திய மூர்த்தி

C) பெரியார்

D) ம.பொ. சிவஞானம்

12. _______________ ஆம் நாள், இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க புனித நாளாகும். அன்றுதான் ‘இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானத்தை _______________ இல் கூடிய அகில இந்திய பேராயக்கட்சி (காங்கிரஸ் கட்சி) ஒரு மனதாக நிறைவேற்றியது.

A) 1942 ஆகஸ்டு 8, பம்பாய்

B) 1940 ஆகஸ்டு 8, கொல்கத்தா

C) 1938 ஆகஸ்டு 8, சென்னை

D) 1936 ஆகஸ்டு 8, பஞ்சாப்

13. ம.பொ.சிவஞானம் அவர்கள் ஆகஸ்டு 13 ஆம் நாள் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அப்போது அந்த சிறையில் அவர் சந்தித்த தென்னகத்தின் முன்னணித் தலைவர்கள் யார்?

A) வ.உ.சி, சுப்ரமணிய சிவா, பாரதியார்

B) காமராசர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம்

C) பெரியார், அயோத்திதாச பண்டிதர்

D) திரு.வி.க, ராஜாஜி

14. ம.பொ.சிவஞானம் அவர்கள் ஆகஸ்டு 13 ஆம் நாள் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சில நாள்களுக்குப் பின் அங்கிருந்து _______________ சிறைக்கு மாற்றப்பட்டார்.

A) சென்னை

B) வேலூர்

C) அமராவதி

D) அந்தமான்

15. 1947, ஆகஸ்டு பதினைந்தாம் நாளன்று சென்னை மாநகரில் விடுதலை விழாக் கொண்டாடி முடிந்ததும் மறுநாள் காலை ம.பொ. சிவஞானம் அவர்கள் ஒரு குழுவாக வடக்கெல்லைக்குச் சென்றார்கள். இதுவே வடக்கெல்லை மீட்சிக்கான முதல் முயற்சியாக அமைந்தது. ஆசிரியர் _______________ என்ற சுமார் 55 வயதுடைய பெரியாரின் அழைப்பின் மீதே நாங்கள் வடக்கெல்லைக்குச் சென்றார்கள். அவர் சிறந்த தமிழறிஞர்.

A) சுத்தானந்த பாரதியார்

B) ஈசான தேசிகர்

C) மீனாட்சி சுந்தரனார்

D) மங்கலங்கிழார்

16. இந்திய விடுதலைக்குப் பிறகு மாநிலங்களை மொழிவாரியாகப் பிரித்தனர் – இதனைப் பற்றிய சரியான காற்று எது?

I. ஆந்திரத் தலைவர்கள் சித்தூர் மாவட்டம் முழுவதையும் புதிதாக அமையவிருக்கும் ஆந்திர மாநிலத்துடன் இணைக்க விரும்பினர். அச்சூழலில் வடக்கெல்லைத் தமிழ்மக்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர் தமிழாசான் மங்கலங்கிழார். அவருடன் இணைந்து, தமிழரசுக் கழகம் சென்னையிலும் திருத்தணியிலும் தமிழர் மாநாடு நடத்தியது.

II. சித்தூர், புத்தூர், திருத்தணி ஆகிய இடங்களிலும் வடக்கெல்லைப் போராட்டத்தைத் தொடங்கியது. போராட்டத்தில் ஈடுபட்ட ம.பொ.சிவஞானம், மங்கலங்கிழார், விநாயகம், ஈ.எஸ். தியாகராஜன், ரஷீத் என ஏராளமானோர் சிறைப்பட்டார்கள்.

III. போராட்டத்தில் ஈடுபட்டு இராஜமுந்திரி சிறையிலிருந்த திருவாலங்காடு கோவிந்தராசன், பழநி சிறையிலிருந்த மாணிக்கம் ஆகிய இருவரும் சிறையிலேயே உயிர் துறந்தனர். சர்தார் கே.எம். பணிக்கர் தலைமையில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட மொழிவாரி ஆணையம், சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிற்குக் கொடுத்துவிட்டது. அதனை எங்களால் ஏற்க முடியவில்லை. ‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ என்று முழங்கினோம்.

IV. மீண்டும் பெரும் போராட்டம் தொடங்கியது. அதன் விளைவாக, படாஸ்கர் ஆணையம் அமைக்கப்பட்டு, திருத்தணிவரையுள்ள தமிழ் நிலங்கள் மீட்கப்பட்டன.

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

17. நான் சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டுசெல்ல விரும்பியதற்குக் காரணமுண்டு; திருக்குறளையோ, கம்பராமாயணத்தையோ விரும்பாதவனல்லன்; ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடில்லாத வகையில், தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென்றால், அது சிலப்பதிகாரத்தைத் தவிர வேறில்லையென்று உறுதியாகக் கூறுவேன். இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொதுச்சொத்து. எனவேதான் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினோம் – என்று கூறியவர் யார்?

A) சிலம்புச் செல்வர் ம.பொ.சி

B) மு. வரதராசனார்

C) காமராஜர்

D) சத்தியமூர்த்தி

18. ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர். அந்நாள் முதல்வர் _______________ அவர்களுக்கு நிலைமையின் தீவிரத்தை உணர்த்திய போது, தலைநகர் காக்கத் தன் முதலமைச்சர் பதவியைத் துறக்கவும் அவர் முன்வந்தார். சென்னை மாகாணத்திலிருந்து பிரித்து ஆந்திரம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த நீதிபதி _______________ தலைமையிலான ஒரு நபர் ஆணையம், ஆந்திரத்தின் தலைநகராகச் சென்னை இருக்க வேண்டும் என்ற இடைக்கால ஏற்பாட்டினைப் பரிந்துரைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துகள் நிலவின.

A) ஏ. சுப்பராயலு, கோகா சுப்பாராவ்

B) பனகல் ராஜா, வெங்கடாசலய்யா

C) சி. இராஜகோபாலாச்சாரி, வாஞ்சு

D) காமராஜர், கமல்நாராயண் சிங்

19. ஆந்திர மாநிலம் பிரியும் போது சென்னை தான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர். இதையொட்டி, சென்னை மாநகராட்சியின் சிறப்புக் கூட்டமொன்றை அப்போதைய மாநகரத் தந்தை _______________ என்பவரின் தலைமையில் கூட்டி, சென்னை பற்றிய தீர்மானமொன்றை முன்மொழிந்து, அப்போது “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று முழங்கியவர் ________________?

A) பனகல் ராஜா, மு.வரதராசனார்

B) பி. முனுசுவாமி நாயுடு, பெரியார்

C) பி. டி. இராஜன், காமராஜர்

D) செங்கல்வராயன், ம.பொ.சிவஞானம்

20. ________________ அன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு நடுவணரசின் சார்பில் அதிகாரப்பூர்வமான உறுதிமொழியொன்றை வெளியிட்டார். அதன்படி ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர நாட்டின் எல்லைக்குள்ளேயே அமையும் என்று உறுதியளிக்கப்பட்டது. சென்னை தமிழருக்கே என்பதும் உறுதியானது.

A) 25.03.1953

B) 25.03.1952

C) 25.03.1951

D) 25.03.1950

21. தாய்த்தமிழக மக்களில் பலர் தெற்கெல்லைக் கிளர்ச்சியோடு எனக்குள்ள தொடர்பை அறியமாட்டார்கள். நான் முதன்முதலில் ஈடுபட்டது தெற்கெல்லைக் கிளர்ச்சியில்தான். _______________ இல் ________________ நகரின் ஒரு பகுதியான வடிவீசுவரத்தில் வடிவை வாலிபர் சங்கத்தின் ஆண்டு விழாவில் பேசினேன். அதுதான் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றிய எனது முதல் பேச்சு. அந்நாளில் திருவிதாங்கூர் சமஸ்தானம் தனி அரசாக இருந்தது, என்று ம.பொ.சிவஞானம் அவர்கள் கூறினார்.

A) 1945 ஆகஸ்டு 25, திருப்பூர்

B) 1946 அக்டோபர் 25, நாகர்கோயில்

C) 1947 மே 25, செங்கல்பட்டு

D) 1948 ஜூன் 25, சாத்தூர்

22. தமிழக வடக்கு – தெற்கு எல்லைக் கிளர்ச்சிகள், தொடர்பாக ம.பொ.சிவஞானம் அவர்கள் கூறியவற்றுள் சரியானது எது?

I. 1953–54ஆம் ஆண்டுகளில் தெற்கெல்லைப் பகுதிகளைக் கேரள (திருவிதாங்கூர்) முடியாட்சியிலிருந்து மீட்கவும் போராடினோம்.

II. தமிழக வடக்கு – தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளைத் தமிழகம் தழுவிய அளவில் தொடங்கிவைத்தது தமிழரசுக் கழகம்தான் என்றாலும் அதனை நடத்துகின்ற பொறுப்பை எல்லைப்பகுதி மக்களிடமே விட்டுவைத்திருந்தேன். அவர்களுள் பி.எஸ்.மணி, ம.சங்கரலிங்கம், நாஞ்சில் மணிவர்மன், பி.ஜே.பொன்னையா ஆகியோர் முதன்மையானவர்கள்.

III. தெற்கெல்லைக் கிளர்ச்சியில் திருவிதாங்கூர் ஆட்சி நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக உயிர்நீத்த தமிழரசுக் கழகத் தோழர்களான தேவசகாயம், செல்லையா ஆகிய இருவரையும் நாம் மறந்துவிடக் கூடாது.

IV. நதானியல், தாணுலிங்கம், காந்திராமன் போன்ற முதியவர்களும் என்பால் நம்பிக்கை வைத்திருந்தனர். இயற்கையாகவே போர்க்குணம்கொண்ட நேசமணி, தென் திருவிதாங்கூரில் மிகுந்த செல்வாக்குடையவர். அவருடைய வருகைக்குப் பிறகு போராட்டம் மேலும் வலுப்பெற்றது.

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

23. கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது?

இளம்வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர்; வழக்கறிஞர். நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்; 1956 நவம்பர் 1ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து, தமிழகத்தின் தென் எல்லையாக மாறியது. இவருடைய நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு இவருக்கு நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது.

A) மார்ஷல் நேசமணி

B) ம.சங்கரலிங்கம்

C) நாஞ்சில் மணிவர்மன்

D) பி.ஜே.பொன்னையா

24. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியனது எது?

I. திருவிதாங்கூர் ஆட்சி அகன்று, கேரள மாநிலம் உருவானது.

II. அப்போது தமிழர்கள் மிகுதியாக வாழக்கூடிய தேவிகுளம், பீர்மேடு, தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நாகர்கோவில் ஆகிய பகுதிகள் தமிழகத்தோடு சேர வேண்டும் என்று தமிழரசுக் கழகம் போராட்டத்தைத் தொடங்கியது.

III. ஆனால் மேற்சொன்ன பகுதிகளோடு தமிழகத்திலிருந்த கோவை மாவட்டத்தின் மேற்குப்பகுதி, நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர், உதகமண்டலம் ஆகியவற்றையும் பிரித்தெடுத்துக் கேரளத்துடன் இணைக்க வேண்டுமென்று கேரளத்தவர், பசல் அலி ஆணையத்திடம் விண்ணப்பித்தனர்.

A) I, III மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

25. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியனது எது?

I. பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை 1955 அக்டோபர் 10 ஆம் நாள் வெளியானது.

II. அந்தப் பரிந்துரையில், மாநிலங்களை மொழிவாரியாகப் பிரித்து அமைக்கும் கொள்கை ஒப்புக்கொள்ளப்பட்டதோடு சென்னை மாநிலத்தில் உள்ள மலபார் மாவட்டத்தைக் கேரளத்தோடும் திருவிதாங்கூர் – கொச்சி இராஜ்யத்திலிருந்த கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகத்தீசுவரம், செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டோடும் இணைய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

III. தேவிகுளம், பீர்மேடு நம் கைவிட்டுப் போயின.

IV. புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கட மலையாகவும் தெற்கெல்லை குமரிமுனையாகவும் கூறப்படுவதனைப் படித்தபோது எனது நெஞ்சம் இறும்பூது எய்தியது. மலையும் கடலும் ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக அமைவதென்பது அந்த நாட்டின் தவப்பயனாகும். அந்தத் தெய்வீக எல்லைகளை ஓரளவேனும் தமிழகம் திரும்பப் பெற்றது என்பதே என் வாழ்நாள் மகிழ்ச்சியாகும், என்று ம.பொ.சிவஞானம் கூறினார்.

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

26. _______________ நாட்டுத் தலைநகரமான _______________ இல் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இச்சுவடி சேர நாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம். இது கி.பி. _______________ நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

A) ஆஸ்டிரியா, வியன்னா, 2 ஆம்

B) ரஷ்யா, மாஸ்கோ, 3 ஆம்

C) தென் ஆப்பிரிக்கா,கேப்டவுன், 4 ஆம்

D) இங்கிலாந்து, லண்டன், 5 ஆம்

27. ம.பொ.சிவஞானத்தின் ‘_______________’ என்னும் தன்வரலாற்று நூலில் இருந்து இக்கட்டுரை (பாடப்பகுதி) தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

A) மக்கள் போராட்டம்

B) எனது போராட்டம்

C) நம் போராட்டம்

D) மாநிலப் போராட்டம்

28. _______________ செல்வர் என்று போற்றப்படும் ம.பொ.சிவஞானம் அவர்களின் காலம் _______________. இவர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்;

A) இசைச், 1904 – 1993

B) போராட்ட, 1905 – 1994

C) சிலம்பு, 1906 – 1995

D) கவி, 1907 – 1996

29. ம.பொ.சிவஞானம் அவர்கள் _______________ வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் _______________ வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்;

A) 1949 முதல் 1951; 1969 முதல் 1975

B) 1950 முதல் 1952; 1970 முதல் 1976

C) 1951 முதல் 1953; 1971 முதல் 1977

D) 1952 முதல் 1954; 1972 முதல் 1978

30. ம.பொ.சிவஞானம் அவர்கள், தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர். ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் இவருடைய நூலுக்காக _______________ ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார். தமிழக அரசு திருத்தணியிலும் சென்னை _______________ லும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.

A) 1966, தியாகராய நகர்

B) 1970, எழும்பூர்

C) 1972, ராயபுரம்

D) 1974, அண்ணா நகர்

31. ‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே _______________?

A) திருப்பதியும் திருத்தணியும்

B) திருத்தணியும் திருப்பதியும்

C) திருப்பதியும் திருச்செந்தூரும்

D) திருப்பரங்குன்றமும் பழனியும்

32. ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர் _______________?

A) சிவஞானம்

B) ஞானப்பிரகாசம்

C) பிரகாசம்

D) பொன்னுசாமி

33. சிவஞானி என்ற பெயரே _______________ என நிலைத்தது.

A) சிவஞானம்

B) சிவப்பிரகாசம்

C) ஞானப்பிரகாசம்

D) பிரகாசம்

34. ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் _______________?

A) பொன்னுசாமி

B) சரவணன்

C) சரபையர்

D) சிவஞானி

35. ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள் _______________?

A) கல்வி, கேள்வி

B) கல்வி, ஓவியம்

C) கலை, பண்பாடு

D) கலை, மேடைப்பேச்சு

36. பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான நாள் _______________?

A) 1955 அக்டோபர் 10

B) 1957 ஆகஸ்டு 10

C) 1957 ஆகஸ்டு 10

D) 1949 அக்டோபர் 15

37. ‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல் _______________?

A) என் பாதை

B) என் பயணம்

C) என் விருப்பம்

D) எனது போராட்டம்

38. சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல் _______________?

A) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

B) வள்ளலாரும் பாரதியும்

C) வள்ளலார் வகுத்த வழி

D) வள்ளலார் கண்ட சாகாக் கலை

39. மா.பொ.சி பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் கண்டிக்க காரணம் _______________?

A) தாமதமாக வந்தது

B) பாடப் புத்தகம் கொண்டுவராமை

C) படிக்காமை

D) வீட்டுப் பாடம் எழுதாமை

40. மா.பொ.சியின் பள்ளி வாழ்க்கை முடிவுற்ற வகுப்பு _______________?

A) ஐந்தாம் வகுப்பு

B) இரண்டாம் வகுப்பு

C) ஆறாம் வகுப்பு

D) மூன்றாம் வகுப்பு

41. மா.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர் _______________?

A) அன்னை

B) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

C) மங்கலங்கிழார்

D) மார்சல் ஏ.நேசமணி

42. தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் _______________?

A) மா.பொ .சி

B) செங்கல்வராயன்

C) மங்கலங்கிழார்

D) மார்சல் ஏ.நேசமணி

43. சரியானதைத் தேர்ந்தெடு.

I. வாஞ்சு – 1. மாநகரத் தந்தை

II. செங்கல்வராயன் – 2. நீதிபதி

III. தேவசகாயம், செல்லையா – 3. மொழிவாரி ஆணையத் தலைமை

IV. சர்தார் கே.எம்.பணிக்கர் – 4. தமிழரசுக் கழகத் தோழர்கள்

A) I – 1; II – 2; III – 3; IV – 4

B) I – 3; II – 1; III – 4; IV – 2

C) I – 2; II – 1; III – 4; IV – 3

D) I – 4; II – 3; III – 2; IV – 1

44. முதல்மழை விழுந்ததும் மேல்மண் பதமாகிவிட்டது. வெள்ளி முளைத்திடுது, விரைந்துபோ நண்பா! காளைகளை ஓட்டிக் கடுகிச்செல், முன்பு! பொன் ஏர் தொழுது, புலன் வழிபட்டு மாட்டைப் பூட்டி காட்டைக் கீறுவோம். ஏர் புதிதன்று, ஏறும் நுகத்தடி கண்டது, காடு புதிதன்று, கரையும் பிடித்ததுதான் கை புதிதா, கார் புதிதா? இல்லை. நாள்தான் புதிது, நட்சத்திரம் புதிது! ஊக்கம் புதிது, உரம் புதிது! – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) வாணிதாசன்

D) கு.ப.ராஜகோபாலன்

45. மாட்டைத் தூண்டி, கொழுவை அமுத்து மண்புரளும், மழை பொழியும், நிலம் சிலிர்க்கும், பிறகு நாற்று நிமிரும். எல்லைத் தெய்வம் எல்லாம் காக்கும்; கவலையில்லை! கிழக்கு வெளுக்குது பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில் நல்லவேளையில் நாட்டுவோம் கொழுவை – என்ற பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) ஏர் புதிதா, கு.ப.ராஜகோபாலன் படைப்புகள்

B) வாணிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி

C) அழகின் சிரிப்பு, பாரதிதாசன்

D) குயில், பாரதியார் கவிதைகள்

46. கு.ப.ராஜகோபாலன் _______________ ஆம் ஆண்டில் பிறந்தார்?

A) 1901

B) 1902

C) 1903

D) 1904

47. கு.ப.ராஜகோபாலன் _______________ என்ற ஊரில் பிறந்தார்?

A) கோவில்பட்டி

B) மன்னார்குடி

C) கும்பகோணம்

D) மானாமதுரை

48. கு.ப.ராஜகோபாலன் அவர்கள் பற்றிய சரியான கூற்று எது?

I. மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்.

II. தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரின் மறைவுக்குப் பின்னர் இவரது படைப்புகளுள் அகலிகை, ஆத்மசிந்தனை ஆகியன நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

III. இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது கொடுத்து, கு.ப.ராஜகோபாலன் அவர்களைச் சிறப்பித்துள்ளது.

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) II, III மட்டும் சரி

49. சங்கத்தமிழரின் திணை வாழ்வு எதை அடிப்படையாகக் கொண்டது?

A) நெசவை

B) போரினை

C) வேளாண்மையை

D) கால்நடையை

50. தமிழரின் தலையான தொழிலாகவும், பண்பாடாகவும் திகழ்வது _______________?

A) கல்வி

B) உழவு

C) நெசவு

D) போர்

51. தமிழர் பண்பாட்டின் மகுடமாகத் திகழ்வது _______________?

A) நாகரிகம்

B) கலை

C) உழுதல்

D) பொன் ஏர் பூட்டுதல்

52. பொன்ஏர் பூட்டுதல் நடத்தப்படும் மாதம் _______________?

A) சித்திரை

B) ஆனி

C) ஆடி

D) தை

53. ‘கடுகி செல்’ – இதில் ‘கடுகி’ என்பதன் பொருள் _______________?

A) செல்லுதல்

B) மெதுவாக

C) விரைவாக

D) இயல்பாக

54. ஊக்கம் புதிது, உரம் புதிது – இதில் உரம் என்ற சொல் குறிப்பது _______________?

A) வலிமை

B) பயிர் உரம்

C) சத்து

D) வித்து

55. மெய்க்கீர்த்தி – சரியான கூற்று எது?

I. அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்; அழியாத வகையில் அதனைக் கல்லில் செதுக்கினார்கள்.

II. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்துப் பாடல்களின் இறுதியிலுள்ள பதிகங்கள் இதற்கு முன்னோடி! பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம், சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது.

III. செப்பமான வடிவம் பெற்றது; கல் இலக்கியமாய் அமைந்தது.

IV. தமிழ் கல்வெட்டுகள் பெரும்பாலும், தென் இந்தியாவை விட வட இந்தியாவிலேயே அதிகம் காணப்படுகிறது.

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) I, II, III மட்டும் சரி

56. இந்தி ரன்முதற் திசாபாலர் எண் மரும் ஒரு வடிவாகி வந்தபடி யென நின்று மனுவாணை தனி நடாத்திய படியானையே பிணிப்புண்பன வடிமணிச்சிலம்பே யரற்றுவன செல்லோடையே கலக்குண்பன வருபுனலே சிறைப்படுவன மாவே வடுப்படுவன மாமலரே கடியவாயின காவுகளே கொடியவாயின கள்ளுண்பன வண்டுகளே பொய்யுடையன வரைவேயே போர்மலைவன எழுகழனியே மையுடையன நெடுவரையே மருளுடையன இளமான்களே கயற்குலமே பிறழ்ந்தொழுகும் – இந்தப் பாடல்வரிகள் யாருடன் தொடர்புடையது?

A) முதலாம் இராசராசன்

B) இரண்டாம் இராசராசன்

C) நன்னன்

D) கரிகாலன்

57. கைத்தாயரே கடிந்தொறுப்பார் இயற்புலவரே பொருள்வைப்பார் இசைப் பாணரே கூடஞ்செய்வார் என்று கூறி இவன்காக்கும் திருநாட்டி னியல் இதுவென நின்றுகாவல் நெறிபூண்டு நெறியல்லது நினையாது தந்தையில்லோர் தந்தையாகியுந் தாயரில்லோர் தாயராகியும் மைந்தரில்லொரு மைந்தராகியும் மன்னுயிர்கட்குயிராகியும் விழிபெற்ற பயனென்னவும் மெய்பெற்ற அருளென்னவும் மொழிபெற்ற பொருளென்னவும் முகம்பெற்ற பனுவலென்னவும் எத்துறைக்கும் இறைவனென்னவும் யாஞ்செய் – இந்தப் பாடல்வரிகளுடன் தொடர்புடைய மன்னனின் சிறப்புப் பெயரைத் தேர்வு செய்க?

A) கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி

B) சிங்களாந்தகன், பாண்டிய குலசனி

C) சுங்கம் தவிர்த்த சோழன்

D) இவற்றில் ஏதுமில்லை

58. _______________ இந்திரன் முதலாகத் திசைபாலர் எட்டு பேரும் ஒருவரும் பெற்றதுபோல் ஆட்சி செய்தவன்.

A) இளஞ்சேரலாதன்

B) இரண்டாம் இராசராசன்

C) இராஜேந்திர சோழன்

D) முதலாம் இராசராசன்

59. சங்க இலக்கியமான _______________ பாடல்களின் இறுதியிலுள்ள பதிகங்கள், மெய்க்கீர்த்திகளுக்கு முன்னோடி.

A) குறுந்தொகை

B) பரிபாடல்

C) கலித்தொகை

D) பதிற்றுப்பத்து

60. பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம், சோழர் காலத்தில் _______________ எனப் பெயர் பெற்றது.

A) மெய்க்கீர்த்தி

B) நூல்சாவடி

C) ஏடு

D) இவற்றில் ஏதுமில்லை

61. யாருடைய காலந்தொட்டு மெய்க்கீர்த்தி கல்லில் வடிக்கப்பட்டது?

A) பல்லவர்

B) பாண்டியர்

C) முதலாம் இராசராசன்

D) இராஜேந்திர சோழன்

62. சரியாகப் பொருந்தியவற்றைத் தேர்ந்தெடு.

I. யானைகள் – 1. புலம்புகின்றன

II. சிலம்புகள் – 2. பிணிக்கப்படுவன

III. ஓடைகள் – 3. அடைக்கப்படுகின்றது

IV. புனல் – 4. கலக்கமடைகின்றன

A) I – 2; II – 1; III – 4; IV – 3

B) I – 1; II – 2; III – 3; IV – 4

C) I – 3; II – 4; III – 1; IV – 2

D) I – 4; II – 3; III – 2; IV – 1

63. சரியாகப் பொருந்தியவற்றைத் தேர்ந்தெடு.

I. மாங்காய்கள் – 1. வடுப்படுகின்றன

II. மலர்கள் – 2. பறிக்கப்படுகின்றன

III. காடுகள் – 3. கொடி உடையனவாக உள்ளன

IV. வண்டுகள் – 4. கள் (தேன்) உண்ணுகின்றன

A) I – 2; II – 1; III – 4; IV – 3

B) I – 1; II – 2; III – 3; IV – 4

C) I – 3; II – 4; III – 1; IV – 2

D) I – 4; II – 3; III – 2; IV – 1

64. சரியாகப் பொருந்தியவற்றைத் தேர்ந்தெடு.

I. மலை மூங்கில் – 1. இருள் சூழ்ந்தவையாயிருக்கின்றன

II. நெற்கதிர்கள் – 2. மருள்கின்றன

III. நீண்ட மலைகள் – 3. வெறுமையாய் இருக்கின்றது

IV. இள மான்களின் கண்கள் – 4. போராக எழுகின்றன

A) I – 2; II – 1; III – 4; IV – 3

B) I – 1; II – 2; III – 3; IV – 4

C) I – 3; II – 4; III – 1; IV – 2

D) I – 4; II – 3; III – 2; IV – 1

65. சரியாகப் பொருந்தியவற்றைத் தேர்ந்தெடு.

I. குளத்து மீன்கள் – 1. ஆடிப்படுவர்

II. செவிலித்தாய் – 2. பொருள் (பொதிந்து) இருக்கின்றது

III. புலவர் பாட்டு – 3. சினங் காட்டுவர்

IV. இசைப்பாணர் – 4. பிறழ்ந்து செல்கின்றன

A) I – 2; II – 1; III – 4; IV – 3

B) I – 1; II – 2; III – 3; IV – 4

C) I – 3; II – 4; III – 1; IV – 2

D) I – 4; II – 3; III – 2; IV – 1

66. சரியாகப் பொருந்தியவற்றைத் தேர்ந்தெடு.

I. யானைகள் பிணிக்கப்படுவன – 1. மக்கள் புலம்புவதில்லை

II. சிலம்புகள் மட்டுமே புலம்புகின்றன – 2. மக்கள் பிணிக்கப்படுவதில்லை

III. ஓடைகள் மட்டுமே கலக்கமடைகின்றன – 3. மக்கள் அடைக்கப்படுவதில்லை

IV. புனல் மட்டுமே அடைக்கப்படுகின்றது – 4. மக்கள் கலக்கமடைவதில்லை

A) I – 2; II – 1; III – 4; IV – 3

B) I – 1; II – 2; III – 3; IV – 4

C) I – 3; II – 4; III – 1; IV – 2

D) I – 4; II – 3; III – 2; IV – 1

67. சரியாகப் பொருந்தியவற்றைத் தேர்ந்தெடு.

I. மாங்காய்கள் மட்டுமே வடுப்படுகின்றன – 1. மக்கள் வடுப்படுவதில்லை

II. மலர்கள் மட்டுமே பறிக்கப்படுகின்றன – 2. மக்கள் உரிமைகள் பறிக்கப்படுவதில்லை

III. காடுகள் மட்டுமே கொடியவனாய் (கொடி உடையனவாக) – 3. மக்கள் கொடியவராய் இல்லை

IV. வண்டுகள் மட்டுமே கள் (தேன்) உண்ணுகின்றன – 4. மக்கள் கள் உண்பதில்லை

A) I – 2; II – 1; III – 4; IV – 3

B) I – 1; II – 2; III – 3; IV – 4

C) I – 3; II – 4; III – 1; IV – 2

D) I – 4; II – 3; III – 2; IV – 1

68. சரியாகப் பொருந்தியவற்றைத் தேர்ந்தெடு.

I. மலை மூங்கில் வெறுமையாய் இருக்கின்றது – 1. நாட்டில் வறுமை இருள் இல்லை

II. வயலில் நெற்கதிர்கள் மட்டுமே போராக எழுகின்றன – 2. மக்கள் கண்களில் மருட்சியில்லை

III. நீண்ட மலைகளே இருள் சூழ்ந்தவை – 3. மக்களிடையே வெறுமை இல்லை

IV. இளமான்களின் கண்களே மருள்கின்றன – 4. வேறு போர் இல்லை

A) I – 2; II – 1; III – 4; IV – 3

B) I – 1; II – 2; III – 3; IV – 4

C) I – 3; II – 4; III – 1; IV – 2

D) I – 4; II – 3; III – 2; IV – 1

69. சரியாகப் பொருந்தியவற்றைத் தேர்ந்தெடு.

I. குளத்து மீன்களே பிறழ்ந்து செல்கின்றன – 1. வேறு யாரும் அவ்வாறு செய்வதில்லை

II. செவிலித்தாயரே சினங் காட்டுவர் – 2. யாரும் பொருளை மறைப்பதில்லை

III. புலவர் பாட்டில் பொருள் (பொதிந்து) இருக்கின்றது – 3. வேறு யாரும் சினம் கொள்வதில்லை

IV. இசைப்பாணரே தெருவில் கூடி ஆடிப்பாடுவர் – 4. மக்கள் நிலை பிறழ்வதில்லை

A) I – 2; II – 1; III – 4; IV – 3

B) I – 1; II – 2; III – 3; IV – 4

C) I – 3; II – 4; III – 1; IV – 2

D) I – 4; II – 3; III – 2; IV – 1

70. அவன் நெறியோடு நின்று காவல் காக்கின்றான். தந்தையில்லாதோருக்குத் தந்தையாய் இருக்கின்றான். தாயில்லாதோருக்குத் தாயாய் இருக்கின்றான். மகனில்லாதோருக்கு மகனாக இருக்கின்றான். உலகில் உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கின்றான். விழிபெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ் பெற்ற நூல் போலவும் அவன் திகழ்கிறான்; புகழ் அனைத்திற்கும் தலைவனாகி யாதும் புரிகின்றான் – இந்த கூற்று யாரைப்பற்றியது?

A) இராசராச சோழன்

B) கரிகாலன்

C) கணைக்கால் இரும்பொறை

D) இரண்டாம் இராசராச சோழன்

71. 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இராசராசன் காலத் தமிழ் கல்வெட்டு, கீழ்க்கண்டவற்றுள் எங்கு உள்ளது?

A) கீழடி

B) மதுரை திருமலை நாயக்கர் மகால்

C) பெரிய கோயில், தஞ்சாவூர்

D) இவற்றில் ஏதுமில்லை

72. இந்திரன் முதலாகத் திசைபாலகர் _______________ பேரும் ஓருருவம் பெற்றதுபோல் ஆட்சி செலுத்தினான் _______________.

A) எட்டு, சோழன்

B) ஒன்பது, பாண்டியன்

C) பத்து, பல்லவ மன்னன்

D) ஆறு, சேரன்

73. சிலப்பதிகாரம் நூலின் ஆசிரியர் யார்?

A) ஒட்டக்கூத்தர்

B) சேக்கிழார்

C) இளங்கோவடிகள்

D) கம்பர்

74. இன்று ‘எங்கும் வணிகம் எதிலும் வணிகம்’! பொருள்களை உற்பத்தி செய்வதைவிட சந்தைப்படுத்துவதில்தான் உலக நாடுகளும் தொழில் முனைவோரும் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். இன்று நேற்றல்ல; பண்டைக் காலந்தொட்டே வாணிகமும் தொழிலும் ஒழுங்கு முறையுடன் சிறந்திருந்ததை இலக்கியங்கள் காட்சிப்படுத்துகின்றன! அவற்றுள் ஒன்றே _______________.

A) கடைதெருக் காட்சி

B) வணிகம்பூர் காட்சி

C) மருவூர்ப்பாக்கக் காட்சி

D) இவற்றில் ஏதுமில்லை

75. வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும் பூவும் புகையும் மேவிய விரையும் பகர்வனர் திரிதரு நகர வீதியும்; பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்; தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும் – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) ஒட்டக்கூத்தர்

B) சேக்கிழார்

C) கம்பர்

D) இளங்கோவடிகள்

76. பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும்; காழியர், கூவியர், கள்நொடை ஆட்டியர், மீன்விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர், பாசவர், வாசவர், பல்நிண விலைஞரோடு ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்; கஞ்ச காரரும் செம்புசெய் குநரும் மரம்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும் – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) பெரிய புராணம்

C) நாலடியார்

D) கலிங்கத்துப்பரணி

77. கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும் பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும் துன்ன காரரும் தோலின் துன்னரும் கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப் பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்; குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும் அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்; சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும் – இந்தப் பாடல் வரியுடன் தொடர்புடைய காதை எது?

A) வழக்குரை காதை

B) இந்திரவிழா ஊரெடுத்த காதை

C) வரம் தரு காதை

D) ஊர்காண் காதை

78. சொல்லும் பொருளும் சரியானது எது?

I. சுண்ணம் – நறுமணப்பொடி

II. காருகர் – நெய்பவர் (சாலியர்)

III. தூசு – பட்டு

IV. துகிர் – பவளம்

V. வெறுக்கை – செல்வம்

A) I, II, III மட்டும் சரி

B) I, II, III, IV மட்டும் சரி

C) I, II, III, IV, V அனைத்தும் சரி

D) I, II, V மட்டும் சரி

79. சொல்லும் பொருளும் சரியானது எது?

I. பாசவர் – வெற்றிலை விற்போர்

II. ஓசுநர் – எண்ணெய் விற்போர்

III. மண்ணுள் வினைஞர் – ஓவியர்

IV. மண்ணீட்டாளர் – சிற்பி

V. கிழி – துணி

VI. நொடை – விலை

A) I, II, III, IV, V, VI அனைத்தும் சரி

B) I, II, III, IV மட்டும் சரி

C) I, II, III, IV, V மட்டும் சரி

D) I, II, V, VI மட்டும் சரி

80. _______________ நகர மருவூர்ப்பாக்கத்தின் வணிக வீதிகளில் வண்ணக்குழம்பு, சுண்ணப்பொடி, குளிர்ந்த மணச்சாந்து, பூ, நறுமணப் புகைப்பொருள்கள், அகில் முதலான மணப்பொருள்கள் விற்பவர்கள் வீதிகளில் வணிகம் செய்து கொண்டிருக்கின்றனர்.

A) மதுரை

B) புகார்

C) தஞ்சை

D) அயோத்தி

81. சரியாகப் பொருந்தியது எது?

I. கள் விற்கும் – 1. உமணர்

II. மீன் விற்கும் – 2. வலைச்சியர்

III. வெண்மையான உப்பு விற்கும் – 3. பரதவர்

IV. எண்ணெய் விற்போர் – 4. ஓசுநர்

A) I – 2; II – 3; III – 1; IV – 4

B) I – 4; II – 3; III – 2; IV – 1

C) I – 3; II – 4; III – 1; IV – 2

D) I – 1; II – 2; III – 3; IV – 4

82. குழலிலும் யாழிலும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, __________, __________, தாரம் என்னும் ஏழு இசைகளைக் (ச, ரி, க, ம, ப, த, நி என்னும் ஏழு சுரங்களை) குற்றமில்லாமல் இசைத்துச் சிறந்த திறமையைக் காட்டும் பெரும் _______________ இருப்பிடங்களும் புகார் நகர மருவூர்ப்பாக்கத்தின் வணிக வீதிகளில் உள்ளன.

A) சாகி, விது, வலைச்சியர்

B) வினி, யோகி, உமணர்

C) தவ, யாழி, செறுநர்

D) இளி, விளரி, பாணர்கள்

83. புகார் நகர மருவூர்ப்பாக்கத்தின் வணிக வீதிகளில் _______________ வகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்களும் உள்ளன.

A) எட்டு

B) ஏழு

C) ஆறு

D) ஐந்து

84. இலக்கணக் குறிப்பு தருக? வண்ணமும் சுண்ணமும்

A) உவமைத் தொகை

B) எண்ணும்மை

C) முற்றும்மை

D) உம்மைத்தொகை

85. இலக்கணக் குறிப்பு தருக? பயில்தொழில்

A) உவமைத் தொகை

B) எண்ணும்மை

C) வினைத்தொகை

D) உம்மைத்தொகை

86. பகுபத உறுப்பிலக்கணம் – சரியானது எது?

I. மயங்கிய – மயங்கு + இ(ன்) + ய் + அ

II. மயங்கு – பகுதி

III. இ(ன்) – இறந்தகால இடைநிலை; ‘ன்’ புணர்ந்து கெட்டது;

IV. ய் – உடம்படுமெய்; அ – பெயரெச்ச விகுதி;

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

87. “சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான் கந்தா மணிமே கலைபுனைந்தான் – நந்தா வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான் திளையாத குண்டலகே சிக்கும்” – ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு. இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) திருத்தணிகையுலா, கந்தப்ப தேசிகர் (19 ஆம் நூற்றாண்டு)

B) நல்லூர்ப் புராணம், வைத்திய நாத தேசிகர்

C) பிரயோக விவேகம், சுப்பிரமணிய தீட்சிதர்

D) இவற்றில் ஏதுமில்லை

88. பெருங்குணத்துக் காதலாள் நடந்த பெருவழி – பற்றிய சரியான கூற்று எது?

I. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் உறையூர் மற்றும் திருவரங்கம் வழியாகக் கொடும்பாளூர் என்னும் இடத்தை அடைந்தனர். தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாகச் சென்றால் மதுரையை அடையலாம்.

II. சிறுமலையின் இடப்பக்க வழியாகச் சென்றால் திருமால் குன்றம் (அழகர் மலை) வழியாக மதுரை செல்லலாம். இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியில், சோலைகள் மிகுந்த ஊர்களும் காடுகளும் உள்ளன.

III. அவ்வழியாகச் சென்றால் மூன்று வழிகளும் சந்திக்கும் மதுரைப் பெருவழியை அடைந்து, மதுரை செல்லலாம். கோவலனையும் கண்ணகியையும் கவுந்தியடிகள் இடைப்பட்ட வழியிலேயே அழைத்துச் சென்றார்.

IV. மதுரையில் கணவனை இழந்த கண்ணகி, மதுரையிலிருந்து வைகையின் தென்கரை வழியாக நெடுவேள் குன்றம் (சுருளி மலை) சென்று வேங்கைக் கானல் என்னுமிடத்தை அடைந்தாள்.

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

89. உரைப்பாட்டு மடை (உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்). உரைப்பாட்டு மடை என்பது _______________ நூலில் வரும் தமிழ்நடை. இது உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு. வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை. உரை என்பது பேசும் மொழியின் ஓட்டம், இதனைச் செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது உரைப்பாட்டு மடை.

A) பெரிய புராணம்

B) திருக்குறள்

C) சிலப்பதிகாரம்

D) மணிமேகலை

90. சிலப்பதிகாரத்தில் _______________ காண்டத்தில் இந்திரவிழா ஊரெடுத்த காதை உள்ளது.

A) மதுரை காண்டம்

B) புகார் காண்டம்

C) வஞ்சிக் காண்டம்

D) யுத்த காண்டம்

91. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இது முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. _______________ பற்றிய செய்திகளைக் கூறுகிறது. இது புகார்க் காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களையும், _______________ காதைகளையும் உடையது; கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது. _______________ காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டிருப்பதால் இவையிரண்டும் இரட்டைக்காப்பியங்கள் எனவும் அழைக்கப்பெறுகின்றன.

A) மூவேந்தர், முப்பது, மணிமேகலை

B) தேவர்கள், ஐம்பது, வளையாபதி

C) முனிவர்கள், நூறு, குண்டலகேசி

D) இயற்கை, அறுபது, கலிங்கத்துப்பரணி

92. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள். _______________ மரபைச் சேர்ந்தவர். மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார், _______________ கதையைக் கூறி, ‘அடிகள் நீரே அருளுக’ என்றதால் இளங்கோவடிகளும் ‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்’ என இக்காப்பியம் படைத்தார் என்பர்.

A) சோழ, மாதவி

B) சேர, கோவலன் கண்ணகி

C) பாண்டிய, ஆதிரை

D) பல்லவ, கவுந்தியடிகள்

93. தமிழரின் பெருமையை உலக அரங்கான ஐ.நா. அவையில் பரப்பும் வகையில் அங்குத் தமிழ்நாட்டின் செவ்வியல் இசையைப் பாடியவர், ‘காற்றினிலே வரும் கீதமாய்’ மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்றவர். இசைப்பேரரசி என்று நேரு பெருமகனாரால் அழைக்கப்பட்டவர் யார்?

A) எம். எஸ். சுப்புலட்சுமி

B) சித்ரா

C) லதா மங்கேஷ்கர்

D) ஜானகி

94. பொது வெளியில் ஆடுவது தண்டனைக்குரிய குற்றம் எனும் சட்டம் இயற்றப்பட்டிருந்த காலத்தில் நடன வாழ்வைத் தொடங்கியவர்; நாட்டியம் ஆடுவது கீழ்மையானது என்ற எண்ணம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பரவலாக இருந்து வந்த நிலையை மாற்றியவர்; இவர் இந்திய அரசின் தாமரைச் செவ்வணி விருது பெற்றவர்; இவர் யார்?

A) பத்மினி

B) பாலசரசுவதி

C) மோகனாம்பாள்

D) ராஜலட்சுமி

95. தமிழில் எழுதிய பெண்களில் முதன்முதலில் களத்திற்குச் சென்று மக்களிடம் செய்திகளைத் திரட்டிக் கதைகள் எழுதியவர்; புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், குறுநாவல், குழந்தை இலக்கியம், வரலாற்று நூல் என எழுத்துலகின் எல்லாத் தளங்களிலும் தடம் பதித்தவர்; வேருக்கு நீர் என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர். இவர் யார்?

A) அநுத்தமா

B) முத்துலட்சுமி ரெட்டி

C) ராஜம் கிருஷ்ணன்

D) கிருத்திகா

96. மதுரையின் முதல் பட்டதாரிப் பெண்; இந்திய அரசின் தாமரைத்திரு விருது, சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருது, சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது எனப் பல உயரிய விருதுகளைப் பெற்றுப் பெண்குலத்திற்குப் பெருமை சேர்த்தவர் – இவர் யார்?

A) அநுத்தமா

B) முத்துலட்சுமி ரெட்டி

C) விஜயதாரணி

D) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

97. நம் இந்திய நாட்டு நடுவண் முதன்மை அமைச்சராக இருந்த மாண்புமிகு. வாஜ்பாய் அவர்களின் கைகளால் பெண் ஆற்றல் விருது (ஸ்திரீ சக்தி புரஸ்கார்) பெற்றதோடு தமிழக அரசின் “ஔவை விருதையும்” தூர்தர்ஷனின் “பொதிகை விருதையும்” பெற்றுள்ளார். அண்மையில் “தாமரைத்திரு விருதையும்” பெற்றுத் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் – இவர் யார்?

A) சின்னப்பிள்ளை

B) எம். சாரதா மேனன்

C) சாந்தி ரங்கநாதன்

D) திருமதி. ஒய். ஜி. பார்த்தசாரதி

98. நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள் என்றவர் _______________?

A) பாரதியார்

B) கம்பர்

C) இளங்கோவடிகள்

D) உமறுப்புலவர்

99. கண்ணகியும் கோவலனும் சென்று அடைந்த ஊர் _______________?

A) காவிரிப்பூம்பட்டினம்

B) திருவரங்கம்

C) உறையூர்

D) கொடும்பாளூர்

100. அழகர் மலை என்பது _______________?

A) திருவரங்கம்

B) திருமால்குன்றம்

C) திருப்பரங்குன்றம்

D) குன்றக்குடி

101. கோவலனையும் கண்ணகியையும் அழைத்துச் சென்றவர் _______________?

A) கவுந்தியடிகள்

B) மாதரி

C) மாதவி

D) ஆதிரை

102. பெருங்குணத்துக் காதலாள் என்று குறிப்பிடப்படுபவர் யார்?

A) கண்ணகி

B) மாதவி

C) ஆதிரை

D) மணிமேகலை

103. எம்.எஸ்.சுப்புலட்சுமி – என்பதன் விரிவாக்கம்?

A) மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி

B) மன்னார்குடி சண்முகி சுப்புலட்சுமி

C) மதுரை சந்தியா சுப்புலட்சுமி

D) மதுரை செல்லம்மாள் சுப்புலட்சுமி

104. நான் இசைச் சூழலில் வளர்ந்தேன். வீணைக் கலைஞரான என் தாயே எனக்கு முதல் குரு. பத்து வயதில் இசைத்தட்டுக்காகப் பாடலைப் பாடிப் பதிவு செய்தேன். இசை மேதைகளின் வழிகாட்டுதல்களில் என்னை வளர்த்துக்கொண்டேன் – இந்த கூற்றுடன் தொடர்புடையவர் யார்?

A) லதா மங்கேஷ்கர்

B) சித்ரா

C) எம். எஸ். சுப்புலட்சுமி

D) ஜானகி

105. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களுக்கு _______________ வகுப்பு வரைதான் கல்வி பயிலும் வாய்ப்புக் கிட்டியது.

A) பன்னிரண்டாம்

B) பத்தாம்

C) எட்டாம்

D) ஐந்தாம்

106. _______________ வயதில் சென்னை மியூசிக் அகாதெமியில் மேதைகள் பலர் முன்பு கச்சேரி செய்து பாராட்டைப் பெற்றார், எம்.எஸ்.சுப்புலட்சுமி.

A) பதினேழு

B) பதினைந்து

C) பன்னிரண்டு

D) பத்து

107. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அவருக்கு _______________ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. அதுவே அவரது கடைசித் திரைப்படமாகவும் அமைந்தது.

A) பராசக்தி

B) மீரா

C) சரஸ்வதி சபதம்

D) இவற்றில் ஏதுமில்லை

108. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் தில்லியில் யாரைச் சந்தித்தபோது, ‘இரகுபதி இராகவ இராஜாராம்’ என்ற பாடலைப் பாடினார்?

A) பெரியார்

B) நேரு

C) காந்தியடிகள்

D) அம்பேத்கர்

109. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களிடம், மீரா எழுதிய பாடல் ஒன்றைக் குறிப்பிட்டுப் பாடச் சொன்னவர் யார்?

A) பெரியார்

B) நேரு

C) அம்பேத்கர்

D) காந்தியடிகள்

110. _______________ வானொலி, ______________ இல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று, சிறிது நாள்களில் முனைந்து கற்று எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய, ‘ஹரி தும் ஹரோ’ என்னும் மீரா பஜன் பாடலை ஒலிபரப்பியது.

A) சென்னை, 1947

B) தில்லி, 1946

C) கல்கத்தா, 1945

D) குஜராத், 1944

111. _______________ இல் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் _______________ விருது பெற்றபோது, அவரைத் தொட்டுத் தடவிப் பாராட்டிய பார்வையிழந்த ஹெலன் கெல்லரை அவரால் மறக்கமுடியவில்லை.

A) 1952, நோபல்

B) 1954, தாமரையணி

C) 1956, பாரத ரத்னா

D) 1958, பத்ம ஸ்ரீ

112. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் _______________ இல் இங்கிலாந்திலும் _______________ இல் ஐ.நா.அவையிலும் பாடியுள்ளார். இதே ஆண்டில் இவரின் குரலில் பதிவு செய்யப்பட்ட வெங்கடேச சுப்ரபாதம் திருப்பதியில் ஒலிக்கத்தொடங்கியது.

A) 1961, 1964

B) 1962, 1965

C) 1963, 1966

D) 1964, 1967

113. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் _______________ இல் நோபல் பரிசுக்கு இணையான _______________ விருது பெற்றார். இவரின் இசைக்குக் கிடைத்த மகுடம் அது. இவ்விருது பெறும் முதல் இசைக் கலைஞரும் இவரே.

A) 1971, அமெரிக்க அதிபர்

B) 1973, ஆஸ்கர்

C) 1975, மேன் புக்கர்

D) 1974, மகசேசே

114. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பற்றிய சரியான கூற்று எது?

I. தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் கூடப் பாடியுள்ளார்.

II. இந்தியா, மிக உயரிய விருதான ‘இந்திய மாமணி’ விருதளித்து எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களைச் சிறப்பித்துள்ளது.

III. என்னுடைய பல இசைக் கச்சேரிகள் ஏதாவது ஒரு அமைப்பின் நன்கொடைக்காக நடந்தவை என்பது எனக்குப் பெரும் மகிழ்வை அளிக்கிறது. ஒரு பெண் நினைத்தால், முயன்றால், முன்னேறலாம், வெல்லலாம். நீங்களும் முயலுங்கள்; முன்னேறுங்கள்; வெல்லுங்கள்.

IV. குறையொன்று மில்லை மறை மூர்த்தி கண்ணா குறையொன்று மில்லை கோவிந்தா – இந்த பாடல் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய பாடல்.

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

115. இந்தியா முழுவதிலும் உள்ள பலரின் பாராட்டுகளையும் பெற்றேன். காற்றினிலே வரும் கீதம், பிருந்தாவனத்தில் கண்ணன் முதலிய பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்தது. ஜவகர்லால் நேரு, சரோஜினி நாயுடு போன்ற பெரியோர் பாராட்டியதைப் பெருமையாகக் கருதுகிறேன் – என்று கூறியவர் யார்?

A) லதா மங்கேஷ்கர்

B) சித்ரா

C) எம். எஸ். சுப்புலட்சுமி

D) ஜானகி

116. பாலசரசுவதி அவர்கள் _______________ வயதாக இருக்கும்போது _______________ பரதநாட்டிய அரங்கேற்றத்திற்காக முதன்முதலில் மேடை ஏறினார்கள்.

A) பத்து, மதுரையில்

B) எட்டு, சென்னையில்

C) ஆறு, தஞ்சாவூரில்

D) ஏழு, காஞ்சிபுரத்தில்

117. பாலசரசுவதி அவர்களின் _______________ ஆம் வயதில் சென்னையில் உள்ள சங்கீத சமாஜம் என்னும் அரங்கில் நடன நிகழ்ச்சி நடந்தது. இவரின் நடனத்தைப் பார்த்த பிறகே மரபுசார் நாட்டியத்தைப் பலரும் தீவிரமாக வரவேற்கத் தொடங்கினர்.

A) பதினைந்து

B) பதினாறு

C) பதினேழு

D) பதினெட்டு

118. சென்னையில் பாலசரசுவதி அவர்களின் நாட்டியக் கச்சேரியைப் பார்த்த _______________ அவர்கள் மிகவும் பாராட்டினார். அவரது தம்பியின் மூலமாக வட இந்தியாவின் பல இடங்களில் நடனமாடும் வாய்ப்பு பாலசரசுவதி அவர்களுக்கு கிடைத்தது.

A) பங்கிம் சந்த்ர சட்டர்ஜி

B) பண்டிட் இரவிசங்கர்

C) அம்பேத்கர்

D) இரவீந்திரநாத் தாகூர்

119. பாலசரசுவதி அவர்கள் கல்கத்தாவிலும் காசியில் நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும் _______________ யில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப் பண்ணாகிய “ஜன கண மன” பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடினார்கள். நாட்டுப்பண்ணுக்கு நடனமாடியது அதுவே முதலும் இறுதியுமாகும்.

A) பஞ்சாப்

B) பனராசு (பனாரஸ்)

C) சென்னை

D) மும்பை

120. பாலசரசுவதி அவர்கள் ஐரோப்பா, _______________ முதலிய வெளிநாடுகளிலும் நடன நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். _______________ -ல் உள்ள ‘கிழக்கு மேற்குச் சந்திப்பு’ நிகழ்வில் இந்தியாவின் சார்பாகக் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடியுள்ளார். இந்நிகழ்வு பரதநாட்டியத்திற்கு உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்தது. பரதநாட்டியக் கலையை முறையாக அணுகினால் ஆன்மிகப் பட்டறிவை நடனத்தால் வழங்க முடியும். இதை பாலசரசுவதி அவர்கள் உணர்ந்து உலகிற்கும் உணர்த்தியுள்ளார்.

A) ஆஸ்திரேலியா, சிட்னி

B) தென் கொரியா, சியோல்

C) மேற்கு இந்திய தீவுகள், கேப்டவுன்

D) அமெரிக்கா, டோக்கியோ

121. தமிழகத்தில் ஒரு காலத்தில் புறக்கணிக்கப்பட்ட கலைக்கு இந்திய அரங்கிலும் உலக அரங்கிலும் மதிப்பையும் ஏற்பையும் பெற்றுத் தந்தவர்; தமிழகத்தின் பெருமைக்குரிய கலைகளில் ஒன்றாகச் செவ்வியல் நடனம் திகழக் காரணமானவர் – இந்த கூற்று யாரைப்பற்றியது?

A) பாலசரசுவதி

B) பத்மினி

C) சரோஜா தேவி

D) மோகனாம்பாள்

122. பெண்கள் என்றால் குடும்பக்கதை எழுதவேண்டும் என்ற படிமத்தை உடைத்துச் சமூகச் சிக்கல்களைக் கதைகளாக எழுதியவர். இவர் கற்பனையாக எழுத விரும்பவில்லை. சமூகத்தில் இடர்ப்பட்ட மக்களைப் பற்றி எழுதும் முன்பு அந்த மக்கள் வாழும் பகுதிக்குள் சென்று களப்பணியாற்றிக் கதைகளாக உருவாக்கியவர் – இந்த கூற்று யாரைப்பற்றியது?

A) அநுத்தமா

B) ராஜம் கிருஷ்ணன்

C) லட்சுமி ஹோம்ஸ்ட்ராம்

D) குட்டி ரேவதி

123. கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது? இவர் எழுதிய ‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்னும் பாரதியின் வரலாற்றுப் புதினம் அனைவராலும் பாராட்டப் பெற்ற ஒன்றாகும். தூத்துக்குடியில் பல மாதம் தங்கியிருந்து உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையைக் “கரிப்பு மணிகள்” புதினமாக ஆக்கினார்.

A) சுஜாதா

B) சி.சு.செல்லப்பா

C) ராஜம் கிருஷ்ணன்

D) கி. வீரமணி

124. நாட்டின் விடுதலைக்கு முன்பு கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் போராடிக் கற்றேன். கல்லூரிப் பருவத்தில் காந்தியச் சிந்தனையில் கவரப்பட்டேன். அவரது சர்வோதய இயக்கத்தில் களப்பணி ஆற்றினேன். ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் பங்கு பெற்றேன். நாட்டின் விடுதலைக்குப் பின் கணவருடன் இணைந்து “பூதான” இயக்கத்தில் பணிபுரிந்தேன். நான் காந்தியடிகளுடனும், வினோபா பாவேயுடனும் பணியாற்றியுள்ளேன் – இந்த கூற்று யாருடையது?

A) அம்புஜத்தம்மாள்

B) கடலூர் அஞ்சலையம்மாள்

C) தில்லையாடி வள்ளியம்மை

D) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

125. “உழுபவருக்கே நில உரிமை இயக்கம்” (LAND FOR THE TILLER’S FREEDOM – LAFTI) தொடங்கி வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறுபணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தவர் யார்?

A) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

B) தாளமுத்து நடராசன்

C) வே.ஆனைமுத்து

D) பசும்பொன் முத்துராமலிங்கம்

126. “உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள். உங்களால் எதையும் சாதிக்க இயலும்” – என்று கூறியவர் யார்?

A) பெரியார்

B) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

C) விவேகானந்தர்

D) காமராஜர்

127. ராஜம் கிருஷ்ணன் – அவர்களின் புதினங்கள். சரியாகப் பொருந்தியவை எவை?

I. அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவது – “குறிஞ்சித்தேன்”

II. கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்கள் – “கரிப்பு மணிகள்”

III. நீலகிரி, படுகர் இன மக்களின் வாழ்வியல் – 3. “சேற்றில் மனிதர்கள்”, “வேருக்கு நீர்”

IV. தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கை – 4. “அலைவாய்க் கரையில்”

A) I – 2; II – 1; III – 4; IV – 3

B) I – 1; II – 2; III – 3; IV – 4

C) I – 3; II – 4; III – 1; IV – 2

D) I – 4; II – 3; III – 2; IV – 1

128. உங்களைப் போன்ற குழந்தைகளைத் தீப்பெட்டித் தொழிலில் முடக்கி, தீக்குச்சிகளை அந்தப் பெட்டியில் அடைப்பதைப் போன்று, குழந்தைகளின் உடலையும் மனத்தையும் நொறுக்கும் அவல உலகைக் “கூட்டுக் குஞ்சுகள்” புதினமாக அளித்தேன். கூட்டுக் குஞ்சுகள் என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?

A) பூமணி

B) சுஜாதா

C) சி.சு. செல்லப்பா

D) ராஜம் கிருஷ்ணன்

129. பெண் குழந்தைக் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதியதே “மண்ணகத்துப் பூந்துளிகள்”. இப்படிச் சமூக அவலங்களை உற்று நோக்கி எழுத்தின் வழியாகக் கட்டவிழ்த்து உலகிற்குக் காட்டியிருக்கிறேன். எழுத்துகளில் நேர்மையான சினம், அறச் சீற்றம் இருக்கவேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இந்த கூற்று யாருடையது?

A) ராஜம் கிருஷ்ணன்

B) சுஜாதா

C) சி.சு. செல்லப்பா

D) பூமணி

130. முதல்ல பெண்கள் எல்லாம் குழுவாச் சேர்ந்தோம். விவசாய நிலத்தக் குத்தகைக்கு எடுத்தோம். கூலி வேலைக்கு ஆளுகளைச் சேர்த்து, நடவு, களையெடுப்பு, அறுவடை போன்ற வேலைகளைச் செய்தோம். வர்ற கூலிய சரிசமமா பிரிச்சுக்கொடுத்தோம். இதுல வயசானவங்களையும் மாற்றுத் திறனாளிகளையும் சேர்த்து வேலை கொடுத்து அவங்க குடும்பத்துக்கும் உதவியா இருந்தோம். இதைப்பத்திக் கேள்விப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் கண்மாய்ல மீன் பிடிக்கிற குத்தகைய எங்களுக்குக் கொடுத்தாரு – இந்த கூற்றுடன் தொடர்புடையவர் யார்?

A) மாதங்கி ராமகிருஷ்ணன்

B) சின்னப் பிள்ளை

C) வி. சாந்தா

D) விஜயதாரணி

131. காசு சேர்த்துக் குழு ஒண்ணு ஆரம்பிச்சு “களஞ்சியம்” னு பேர் வெச்சோம். பத்துப் பேரோட ஆரம்பிச்ச மகளிர் குழு இன்னக்கிப் பல மாநிலங்களுக்குப் போய் பல லட்சம் பேரோட வேலை செய்யுது. பொறப்புக்கு ஒரு பொருள் கிடைக்கிற மாதிரி வேலை செஞ்சாச்சு – இந்த கூற்றுடன் தொடர்புடையவர் யார்?

A) மாதங்கி ராமகிருஷ்ணன்

B) வி. சாந்தா

C) சின்னப் பிள்ளை

D) விஜயதாரணி

132. சரியாகப் பொருந்தியவற்றைத் தேர்ந்தெடு.

I. எம்.எஸ்.சுப்புலட்சுமி – 1. மகசேசே விருது, தாமரையணி விருது, இந்திய மாமணி விருது

II. பாலசரசுவதி – 2. தாமரைத்திரு விருது, வாழ்வுரிமை விருது, காந்தி அமைதி விருது

III. ராஜம் கிருஷ்ணன் – 3. சாகித்திய அகாதெமி விருது

IV. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் – 4. தாமரைச் செவ்வணி விருது

V. சின்னப் பிள்ளை – 5. பெண் ஆற்றல் விருது (ஸ்திரீ சக்தி புரஸ்கார்), ஔவை விருது

A) I – 2; II – 1; III – 4; IV – 3; V – 5

B) I – 5; II – 4; III – 3; IV – 2; V – 1

C) I – 1; II – 4; III – 3; IV – 2; V – 5

D) I – 4; II – 3; III – 5; IV – 1; V – 2

133. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் – அவர்களுக்கு ‘வாழ்வுரிமை விருது’ வழங்கிய நாடு எது?

A) சுவீடன் அரசு

B) சுவிட்சர்லாந்து

C) அமெரிக்கா

D) இங்கிலாந்து

134. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் – அவர்களுக்கு ‘காந்தி அமைதி விருது’ வழங்கிய நாடு எது?

A) சுவீடன் அரசு

B) இங்கிலாந்து

C) அமெரிக்கா

D) சுவிட்சர்லாந்து

135. கீழ்க்கண்டவர்களுள், பூதான இயக்கத்தில் பணிபுரிந்தவர் யார்?

A) சின்னப்பிள்ளை

B) ராஜம் கிருஷ்ணன்

C) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

D) பாலசரசுவதி

136. கீழ்க்கண்டவர்களுள், ‘களஞ்சியம் மகளிர் குழுவை’ தொடங்கியவர் யார்?

A) சின்னப்பிள்ளை

B) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

C) ராஜம் கிருஷ்ணன்

D) பாலசரசுவதி

137. கீழ்க்கண்டவர்களுள், “உழுபவருக்கே நில உரிமை இயக்கம்” தொடங்கியவர் யார்?

A) சின்னப்பிள்ளை

B) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

C) ராஜம் கிருஷ்ணன்

D) பாலசரசுவதி

138. புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை. புறத்திணைகள், வெட்சி முதலாகப் _______________ வகைப்படும்.

A) ஐந்து

B) பத்து

C) பன்னிரண்டு

D) பதினைந்து

139. மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த காலத்தில், ஆநிரைகளைச் (மாடுகளை) சொத்தாகக் கருதினர். ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழுவினர் ஆநிரைகளைக் கவர்தல் வழக்கமாக இருந்தது. ஆநிரைகளைக் கவர்ந்துவர _______________ பூவினைச் சூடிக்கொண்டு செல்வர்.

A) வெட்சி

B) காஞ்சி

C) வஞ்சி

D) நொச்சி

140. கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை மக்கள் மீட்கச் செல்வர். அப்போது _______________ பூவைச் சூடிக்கொள்வர்.

A) வெட்சி

B) காஞ்சி

C) கரந்தை

D) நொச்சி

141. மண் (நாடு) சொத்தாக மாறிய காலத்தில் மண்ணைக் கவர்தல் போராயிற்று. மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி _______________ பூவைச் சூடிப் போருக்குச் செல்வர்.

A) வெட்சி

B) காஞ்சி

C) கரந்தை

D) வஞ்சி

142. தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு, _______________ பூவைச் சூடி எதிர்த்துப் போரிடுவர்.

A) வெட்சி

B) காஞ்சி

C) கரந்தை

D) வஞ்சி

143. மண்ணைக் காக்கக் கோட்டைகள் கட்டப்பட்டன. கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு _______________ பூவைச் சூடிப் போரிடுவர்.

A) நொச்சி

B) காஞ்சி

C) கரந்தை

D) வஞ்சி

144. மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்ற _______________ பூவைச் சூடிய தன் வீரர்களுடன் அதனைச் சுற்றி வளைப்பர்.

A) வெட்சி

B) உழிஞை

C) கரந்தை

D) வஞ்சி

145. பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் _______________ பூவைச் சூடிப் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவர். போரிடுகின்ற அரசர்கள் இருவரும் _______________ பூ மாலையையே சூடியிருப்பார்கள். போர்த்திணைகள் படிப்படியாக வளர்ந்த நிலையில், போரைத் தொடங்கும் நிகழ்வாக ஆநிரை கவர்தல் மேற்கொள்ளப்பட்டது.

A) வெட்சி, வெட்சி

B) தும்பை, தும்பை

C) கரந்தை, கரந்தை

D) வஞ்சி, வஞ்சி

146. போரிலே வெற்றிபெற்ற மன்னன் _______________ பூச் சூடி மகிழ்வர். _______________ என்றாலே வெற்றி என்று பொருள்.

A) வெட்சி, வெட்சி

B) தும்பை, தும்பை

C) வாகை, வாகை

D) வஞ்சி, வஞ்சி

147. பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது, _______________ திணை. போரை மட்டும் சொல்லாது பிற மாண்புகளையும் பாடுகிறது இத்திணை.

A) பெருந்திணை

B) கைக்கிளை

C) பொதுவியல்

D) பாடாண் (பாடு + ஆண் + திணை = பாடாண்திணை)

148. வெட்சி முதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது _______________ திணை.

A) பெருந்திணை

B) கைக்கிளை

C) பொதுவியல்

D) பாடாண் (பாடு + ஆண் + திணை = பாடாண்திணை)

149. அழகுச்செடியாக வீட்டுத் தோட்டங்களிலும் பூங்காக்களிலும் வளர்க்கப்படுகிற சிவந்த நிறமுடைய பூ _______________?

A) செவ்வந்தி

B) தும்பை

C) கரந்தை

D) வெட்சி

150. இட்லிப்பூ என்று அழைக்கப்படுகிற, பூ எது?

A) செவ்வந்தி

B) வெட்சி

C) கரந்தை

D) தும்பை

151. சிறிய முட்டை வடிவில் கொத்தாகப் பூக்கக் கூடிய _______________ ஒரு சிறிய செடி. நறுமணம் மிக்க இது செம்மை, நீலம், இளஞ்சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு ஆகிய நிறங்களில் பூக்கின்றது. இதனைக் ‘_______________’ என்றும் கூறுவர்.

A) கரந்தை, கொட்டைக் கரந்தை

B) வெட்சி, கழி வெட்சி

C) தும்பை, வெண் தும்பை

D) வாகை, கனி வாகை

152. பளபளப்பான, மெல்லிய பூவின் இதழ்களில் வெள்ளிய பஞ்சு போன்ற நுண்மயிர் அடர்ந்துள்ளது _______________.

A) வஞ்சி

B) தும்பை

C) கரந்தை

D) வெட்சி

153. கொத்துக் கொத்தாகப் பூக்கும் நீலநிற மலர்கள் கொண்ட அழகான மணமுள்ள _______________ என்பது ஒருவகைக் குறுமரம்.

A) வஞ்சி

B) காஞ்சி

C) கரந்தை

D) வெட்சி

154. மருத நிலத்துக்குரிய _______________, கொத்துக் கொத்தான நீலநிறப் பூக்கள் கொண்டது.

A) வஞ்சி

B) காஞ்சி

C) கரந்தை

D) நொட்சி

155. வேலிகளில் ஏறிப்படரும் நீண்ட கொடியே _______________ கொடி. இதன் கூட்டிலைகளும் மலர்களும் சிறியவை; மலர்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதனை முடக்கத்தான் (முடக்கொற்றான்) எனக் கூறுகின்றனர்.

A) வஞ்சி

B) உழிஞை

C) கரந்தை

D) நொட்சி

156. எல்லா இடங்களிலும் வளரக் கூடிய தூய வெண்ணிற மலர்களைக் கொண்ட சிறிய செடி _______________?

A) வஞ்சி

B) உழிஞை

C) கரந்தை

D) தும்பை

157. மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்துக் கொத்தாக மலரும் _______________ பூ.

A) வாகை

B) உழிஞை

C) கரந்தை

D) தும்பை

158. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. கைக்கிளை என்பது ஒருதலைக் காமம்.

II. பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்.

III. மருத நிலத்துக்குரிய நொச்சி, கொத்துக் கொத்தான நீலநிறப் பூக்கள் கொண்டது. இதில் மணிநொச்சி, கருநொச்சி, மலைநொச்சி, வெண்ணொச்சி எனப் பலவகைகள் உள்ளன.

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II மட்டும் சரி

159. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.

A) உழவு, மண், ஏர், மாடு

B) மண், மாடு, ஏர், உழவு

C) உழவு, ஏர், மண், மாடு

D) ஏர், உழவு, மாடு, மண்

160. ‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே -?

A) திருப்பதியும் திருத்தணியும்

B) திருத்தணியும் திருப்பதியும்

C) திருப்பதியும் திருச்செந்தூரும்

D) திருப்பரங்குன்றமும் பழனியும்

161. ‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள் -?

A) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்

B) மிகுந்த செல்வம் உடையவர்

C) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்

D) நெறியோடு நின்று காவல் காப்பவர்

162. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் _______________?

A) நாட்டைக் கைப்பற்றல்

B) ஆநிரை கவர்தல்

C) வலிமையை நிலைநாட்டல்

D) கோட்டையை முற்றுகையிடல்

163. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது _______________?

A) திருக்குறள்

B) புறநானூறு

C) கம்பராமாயணம்

D) சிலப்பதிகாரம்

164. பழங்காலத்திலே, பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் – இந்த கூற்று யாருடையது?

A) பாரதியார்

B) பெரியார்

C) அண்ணா

D) ம.பொ.சி

165. மெய்க்கீர்த்தி – பற்றிய சரியான கூற்று எது?

I. பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும்.

II. சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.

III. சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை.

IV. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில்தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை; ஏனைய பகுதிகள் உள்ளன. எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியள்ளன.

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II மட்டும்சரி

C) II, III மட்டும் சரி

D) I, III, IV மட்டும் சரி

166. ஏர்பிடிக்கும் கைகளுக்கே வாழ்த்துக் கூறுவோம் – வறுமை ஏகும்வரை செய்பவர்க்கே வாழ்த்துக் கூறுவோம்! – என்றும் ஊர்செழிக்கத் தொழில் செய்யும் உழைப்பாளிகள் – வாழ்வு உயரும் வகை செய்பவர்க்கே வாழ்த்துக் கூறுவோம்! – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) ந. காமராசன்

B) கவி கா.மு ஷெரீப்

C) ரங்க பாஷ்யம்

D) சிற்பி

167. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. Consulate – துணைத்தூதரகம்

II. Patent – காப்புரிமை

III. Document – ஆவணம்

IV. Guild – வணிகக் குழு

V. Irrigation – பாசனம்

VI. Territory – நிலப்பகுதி

A) I, II, IV, V மட்டும் சரி

B) III, IV. V மட்டும் சரி

C) IV, V, VI மட்டும் சரி

D) I, II, III, IV, V, VI அனைத்தும் சரி

168. நூல்கள் மற்றும் ஆசிரியர் – சரியானது எது?

I. நாற்காலிக்காரர் – ந. முத்துசாமி

II. வேருக்கு நீர் – ராஜம் கிருஷ்ணன்

III. என் கதை – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்

IV. அக்னி சிறகுகள் – நேரு

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!