TnpscTnpsc Current Affairs

11th & 12th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

11th & 12th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 11th & 12th September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

11th & 12th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘EU–இந்தியா பசுமை ஹைட்ரோஜன் கருத்துக்களத்தை’ ஏற்பாடு செய்த நடுவண் அமைச்சகம் எது?

அ. எரிசக்தி அமைச்சகம்

ஆ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

இ. வெளியுறவு அமைச்சகம்

ஈ. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

  • முதலாவது EU–இந்தியா பசுமை ஹைட்ரஜன் கருத்துக்களமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது. இது இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) மற்றும் ஹைட்ரஜன் ஐரோப்பாவின் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டது. ஹைட்ரஜன் மற்றும் பன்னாட்டு ஹைட்ரஜன் வர்த்தகம் தொடர்பான கூட்டுத்திட்டங்களைப்பற்றி விவாதிக்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய–இந்திய வணிகங்களை இந்த நிகழ்வு ஒன்றிணைத்தது.

2. நீதிபதி இரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் சீரான உரிமையியல் நடைமுறைத் தொகுப்பு (Uniform Civil Code) குழுவை அமைத்துள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. உத்தர பிரதேசம்

இ. உத்தரகாண்ட்

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. உத்தரகாண்ட்

  • சீரான உரிமையியல் நடைமுறைத் தொகுப்பைத் தயாரிப்பதற்காக, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் குழுவொன்றை உத்தரகாண்ட் மாநில அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு சமீபத்தில் மக்களிடமிருந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற ஓர் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநில மக்கள், இந்த இணையதளத்தில் உள்நுழைந்து தங்கள் ஆலோசனைகள், குறைகள் மற்றும் புகார்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.

3. Qimingxing–50 என்பது கீழ்க்காணும் எந்த நாட்டின் முதல் முழுவதும் சூரிய ஆற்றலில் இயங்கும் ஆளில்லா வான்வழி வாகனத்தின் பெயராகும்?

அ. ஜப்பான்

ஆ. இஸ்ரேல்

இ. சீனா

ஈ. தென் கொரியா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. சீனா

  • சீனா தனது முதல் முழுவதும் சூரிய ஆற்றலில் இயங்கும் ஆளில்லா வான்வழி வாகனத்தை (UAV) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. ‘Qimingxing–50’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த UAV பல மாதங்கள் பறக்கக்கூடியது ஆகும் மற்றும் தேவைப்பட்டால் செயற்கைக்கோளாக கூட செயல்படும். இது சூரிய ஆற்றலால் மட்டுமே இயக்கப்படும் முதல் பேரளவிலான UAV ஆகும். இந்தத் தொழில்நுட்பம் சீனாவின் தற்காப்புத் திறமையை ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளது. இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் வானூர்தி பொறியியல் துறையிலும் பயன்படுத்தப்படலாம்.

4. இந்தியாவில் நிலையான கடலோர மேலாண்மை குறித்த முதல் தேசிய மாநாட்டை நடத்தும் மாநிலம் எது?

அ. கோவா

ஆ. மகாராஷ்டிரா

இ. ஒடிஸா

ஈ. கேரளா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஒடிஸா

  • நடுவண் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், ஒடிஸா மாநிலத்தின் புவனேசுவரத்தில் இந்தியாவில் நிலையான கடலோர மேலாண்மை குறித்த முதல் தேசிய மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாடு இந்தியாவின் கடலோர சமூகங்களின் காலநிலை நெகிழ்தன்மையை மேம்படுத்துவதில் கவனஞ்செலுத்தியது. கடலோர மற்றும் கடல்சார் பல்லுயிர், காலநிலை தணிப்பு மற்றும் தழுவல் மற்றும் கடலோர மாசுபாடு ஆகிய மூன்று ஒன்றோடொன்று தொடர்புடைய கருப்பொருள்களை மையமாகக்கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவின் 13 கடலோர மாநிலங்களிலிருந்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

5. இந்தியாவின் மிக நீளமான இரப்பர் அணையான, ‘கயாஜி அணை’ திறக்கப்பட்ட மாநிலம்/UT எது?

அ. சிக்கிம்

ஆ. ஒடிஸா

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. பீகார்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. பீகார்

  • ஃபல்கு ஆற்றின்மீது கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகநீளமான இரப்பர் அணையான, ‘கயாஜி அணை’யை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைத்தார். இது ஒரு பரந்த மணல் திட்டு ஆகும். பித்ரிபக்ஷ மேளாவின் போது வருகைதரும் பார்வையாளர்களின் வசதிக்காக ஸ்டீல் ஃபுட் ஓவர் பாலத்தையும் அவர் திறந்து வைத்தார். ஐஐடியின் (ரூர்க்கி) வழிகாட்டுதலுடன் `324 கோடி மதிப்பீட்டில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

6. உலகின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் பயணிகள் இரயில்களை அறிமுகப்படுத்திய நாடு எது?

அ. இந்தியா

ஆ. அமெரிக்கா

இ. சீனா

ஈ. ஜெர்மனி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. ஜெர்மனி

  • மின்மயமாக்கப்படாத தடங்களில் இயக்கப்பட்ட 15 டீசல்பொறி இரயில்களுக்குப் பதிலாக, ஜெர்மனி உலகின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் பயணிகள் இரயிலை அறிமுகப்படுத்தியது. $92 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்தத் திட்டத்தின்கீழ், 14 இரயில்கள் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலங்களைப் பயன்படுத்தி தனக்கான எரிசக்தி முழுவதையும் தயாரிக்கின்றன. பிரெஞ்சு நிறுவனமான அல்ஸ்டாமால் தயாரிக்கப்பட்ட இந்த இரயில்கள் பிராந்திய இரயில் நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன.

7. இந்தியாவின் முதல் 3D முறையில் அச்சிடப்பட்ட அஞ்சல் அலுவலகம் அமைக்கப்படவுள்ள நகரம் எது?

அ. சென்னை

ஆ. பெங்களூரு

இ. கொச்சின்

ஈ. ஹைதராபாத்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பெங்களூரு

  • இந்தியாவின் முதல் முப்பரிமாண (3D) முறையில் அச்சிடப்பட்ட அஞ்சல் அலுவலகமானது ஒருமாத காலத்திற்குள் பெங்களூரு நகரத்தில் அமையவுள்ளது. 3D முறையில் அச்சிடப்பட்ட இந்த அஞ்சல் அலுவலகம், கட்டுமானச்செலவை ¼ ஆகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகமானது இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் கட்டுமானத்தை லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனம் மேற்கொள்ளும்.

8. இந்தியா தூய காற்று உச்சிமாநாட்டின் நான்காவது பதிப்பு நடைபெறும் இடம் எது?

அ. புது தில்லி

ஆ. காந்தி நகர்

இ. பெங்களூரு

ஈ. ஜெய்ப்பூர்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. பெங்களூரு

  • இந்தியா தூய காற்று உச்சிமாநாட்டின் (India Clean Air Summit) நான்காவது பதிப்பு பெங்களூருவில் தொடங்கியது. காற்று மாசுபாடு குறித்த ஆய்வுகளுக்கான மதியுரையக மையம் (CAPS) மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுமையம் ஆகியவற்றால் இந்த உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த பல்வேறு வல்லுநர்கள் வளி மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றத்திற்குத் தீர்வுகாண்பதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பற்றி இதன்சமயம் விவாதிக்கவுள்ளனர்.

9. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் (BPCL) எந்தத் துணை நிறுவனம் BPCLஉடன் இணைக்கப்பட்டுள்ளது?

அ. பாரத் எரிவாயு வளங்கள் நிறுவனம்

ஆ. பாரத் பெட்ரோலிய வளங்கள் நிறுவனம்

இ. பெட்ரோநெட் LNG நிறுவனம்

ஈ. இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. பாரத் எரிவாயு வளங்கள் நிறுவனம்

  • பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் (BPCL) 100 சதவீத துணை நிறுவனமான பாரத் எரிவாயு வளங்கள் நிறுவனம் (BGRL) அதன் தாய் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகமானது இந்த நிறுவன இணைப்புக்கு ஒப்புதலளித்து ஆணை பிறப்பித்துள்ளது. இவ்விணைப்புத்திட்டமானது கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, அர்ஜுன் எரிகைசி என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. கபடி

ஆ. டென்னிஸ்

இ. சதுரங்கம்

ஈ. கூடைப்பந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. சதுரங்கம்

  • இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் பட்டத்தை இரண்டு தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று வென்றுள்ளார். நிகழ்நேரத் தரவரிசையின்படி, அர்ஜுன் எரிகைசி அவர்கள் விஸ்வநாதன் ஆனந்த் (12ஆவது) மற்றும் D குகேஷ் (20ஆவது) ஆகியோருக்கு அடுத்தபடியாக 24ஆம் இடத்திலும், இந்தியர்களில் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. IIT மெட்ராஸ் IBM IBM நிறுவனத்தின் குவாண்டம் நெட்வொர்க்கில் இணைந்து செயல்படுகிறது

இந்தியாவில் குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் திறன்மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (IIT மெட்ராஸ்) முதலாவது இந்தியக் கல்வி நிறுவனமாக IBM குவாண்டம் நெட்வொர்க்கில் இணைந்திருப்பதாக IBM அறிவித்துள்ளது.

IBM குவாண்டம் நெட்வொர்க்கில் அங்கம் வகிப்பவர் என்ற முறையில், IBM நிறுவனத்தின் அதிநவீன குவாண்டம் கம்ப்யூட்டிங் சிஸ்டம், IBM-ன் குவாண்டம் நிபுணத்துவம் ஆகியவற்றுக்கான கிளவுட் அடிப்படையிலான இணைப்பு IIT மெட்ராஸுக்கு கிடைக்கும். இதன்மூலம் நடைமுறைப் பயன்பாடுகளை ஆராயவும், வணிகம் & சமுதாயத்திற்கு இந்தத் தொழில்நுட்பத்தின் பரந்த நன்மைகளை உணரச் செய்யவும் முடியும்.

குவாண்டம் இயந்திரக்கற்றல், குவாண்டம் மேம்பாடு, நிதி தொடர்பான பயன்பாட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட ஆராய்ச்சிப் பணிகளில் முக்கிய வழிமுறைகளை முன்னெடுக்க IIT மெட்ராஸின் குவாண்டம், தகவல், தொடர்பு மற்றும் கம்ப்யூட்டிங் மையம் (Centre for Quantum Information, Communication and Computing-CQuICC) கவனம் செலுத்தும்.

குவாண்டம் வழிமுறைகள், குவாண்டம் இயந்திரக் கற்றல், குவாண்டம் பிழை திருத்துதல் மற்றும் பிழைகளைக் குறைத்தல், குவாண்டம் டோமோகிராபி, குவாண்டம் வேதியியல் போன்ற அம்சங்களில் IBM குவாண்டம் சேவையுடன், ஓபன் சோர்ஸ் முறையிலான கிஸ்கிட் (Qiskit) கட்டமைப்பையும் ஐஐடி மெட்ராஸ் பயன்படுத்திக் கொள்ளும். நாட்டில் குவாண்டம் கம்ப்யூட்டிங் சுற்றுச்சூழலை மேம்படுத்தி வளர்க்கும் பணியில் ஈடுபடும். குவாண்டம் கம்ப்யூட்டிங் பயன்பாடு தொடர்பான ஆராய்ச்சியை இந்தியாவிற்கு பொருத்தமாக உள்ள களங்களில் IIT மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்ளும் வகையில் IBM ரிசர்ச் இந்தியா தனது ஆதரவை வழங்கும்.

2. 11-09-2022 – ‘மகாகவி’ பாரதியாரின் 101ஆவது நினைவுநாள். 

பாரதியார் நினைவு நாள் மகாகவி நாள்: தமிழ்நாடு அரசு

மகாகவி பாரதியாரின் நினைவு நாள் (செப்டம்பர்.11) ‘மகாகவி’ நாளாக கடைப்பிடிக்கப்பட்டது. ‘மகாகவி’ பாரதியார் கடந்த 1921-ஆம் ஆண்டு செப்டம்பர்.11-ஆம் தேதி மறைந்தார். அவரது மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில், பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர்.11-ஆம் தேதி, ‘மகாகவி’ நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்பதும் ஒன்றாகும்.

3. முதுபெரும் தொல்பொருள் ஆய்வாளர் பி பி லால் காலமானார்

இந்தியாவின் முதுபெரும் தொல்பொருள் ஆய்வாளர் பி பி லால், 10-09-2022 அன்று காலமானார். அவருக்கு வயது 101. கடந்த 1921ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம், ஜான்சி பகுதியில் பிறந்தவர் பிபி லால். 1968ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராகப் பொறுப்பு வகித்தார். அந்தத் துறையின் இளவயது தலைமை இயக்குநர்களில் ஒருவராக இருந்தார். உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் தற்போது இராமர் கோயில் கட்டப்பட்டுவரும் இடத்தில், 1970ஆம் ஆண்டுகளில் அகழ்வாராயச்சி மேற்கொண்டபோது கோவில்போன்ற தூண்களைக் கண்டறிந்தார். ஹரப்பா நாகரிகம் மற்றும் மகாபாரதத்துடன் தொடர்புள்ள தொல் பொருள் தளங்களில் விரிவாகப் பணியாற்றினார். தொல்லியல் துறைக்கு அளித்த பங்களிப்புக்காக அவருக்கு கடந்த 2000ஆம் ஆண்டு ‘பத்ம பூஷண்’ விருதும், கடந்த ஆண்டு ‘பத்ம விபூஷண்’ விருதும் அளிக்கப்பட்டது.

4. யுஎஸ் ஓபன் சாம்பியன் ஸ்வியாடெக்

நியூயார்க்கில் நடந்த US ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்ற போலந்தின் இகா ஸ்வியாடெக். உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் 6-2, 7-6 என்ற நேர்செட்களில் துனிசியாவின் ஆன்ஸ் ஜாபியுரை வீழ்த்தினார். இது அவரது மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

5. ஆசிய சாம்பியன் இலங்கை

பாகிஸ்தானை 23 இரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி T20 ஆசியக்கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக கைப்பற்றியது இலங்கை. துபையில் நடைபெற்ற T20 ஆசியக்கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி 170/6 இரன்களைக் குவித்தது. பானுகா ராஜபட்ச அபாரமாக ஆடி 71 ரன்களை விளாசினார். இரண்டாவதாக ஆடிய பாகிஸ்தான் அணி 147 இரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. பிரமோத் 4, ஹஸரங்க 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

6. ‘தாராகிரி’ போர்க்கப்பல் வெள்ளோட்டம்

இந்திய கடற்படையின், ‘புராஜெக்ட் 17ஏ’ திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட மூன்றாவது போர்க்கப்பலான, ‘தாராகிரி’ மும்பையில் முதல்முறையாக கடலில் இறக்கப்பட்டது.

மும்பையில் உள்ள மஸகான் கப்பல் கட்டும் நிறுவனம் சார்பில் ஒருங்கிணைந்த கட்டுமான முறையின்கீழ் இந்தக் கப்பல் கட்டப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, வரும் 2025-ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கடற்படையின் ‘புராஜெக்ட் 17ஏ’ திட்டத்தின்கீழ் உள்நாட்டிலேயே 4 போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் மொத்த திட்டச் செலவு `25,700 கோடியாகும்.

இந்தத்திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட முதல் போர்க்கப்பலான, ‘நீலகிரி’ கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர்.28-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தக் கப்பலின் கடல் பயணச்சோதனை வரும் 2024-ஆம் ஆண்டு முதல் பாதியில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழான இரண்டாவது போர்க்கப்பல், ‘உதயகிரி’ கட்டி முடிக்கப்பட்டு, கடந்த மே 17-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தக் கப்பலின் கடல் பயணச்சோதனை 2024-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மேற்கொள்ளப்படவுள்ளது.

மூன்றாவதாக உருவாக்கப்பட்ட, ‘தாராகிரி’ தற்போது வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழான நான்காவது மற்றும் கடைசி போர்க்கப்பலுக்கான அடித்தளம் கடந்த ஜூன் 28-ஆம் தேதி அமைக்கப்பட்டு, கப்பல் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றும் மஸகான் கப்பல் கட்டும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

7. SCO மாநாடு: பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் பயணம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் செல்லவுள்ளார். இதுதொடர்பாக நடுவண் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரத்தில் செப்.15, 16-ஆம் தேதிகளில் SCO தலைவர்களின் மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி செப்.15-ஆம் தேதி சமர்கண்ட் செல்கிறார். இந்த மாநாட்டில் SCO உறுப்புநாடுகளின் தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இந்த மாநாட்டின்போது கடந்த இருபது ஆண்டுகளாக SCO அமைப்பின் செயல்பாடு குறித்து தலைவர்கள் ஆய்வு மேற்கொள்வர் எனவும், எதிர்காலத்தில் பலதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிராந்திய மற்றும் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும் என கருதப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11th & 12th September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which Union Ministry organised the ‘EU–India Green Hydrogen Forum’?

A. Ministry of Power

B. Ministry of New and Renewable Energy

C. Ministry of External Affairs

D. Ministry of Commerce and Industry

Answer & Explanation

Answer: B. Ministry of New and Renewable Energy

  • The first EU–India Green Hydrogen Forum was organized jointly by the Delegation of the European Union and the Ministry of New and Renewable Energy. It was launched in cooperation with the Confederation of Indian Industry (CII) and Hydrogen Europe. The event brought together EU–India businesses to discuss joint projects on hydrogen and international hydrogen trade.

2. Which state has set up a Committee on Uniform Civil Code headed by judge Ranjana Prakash Desai?

A. Gujarat

B. Uttar Pradesh

C. Uttarakhand

D. Karnataka

Answer & Explanation

Answer: C. Uttarakhand

  • A committee headed by retired Supreme Court judge Ranjana Prakash Desai was set up by the Uttarakhand government to prepare a draft of Uniform Civil Code. The Committee has recently launched a web portal to invite feedback and suggestions from people. People of the state can log into the portal and share their suggestions, grievances and complaints.

3. Qimingxing–50 is the name of first fully solar–powered unmanned aerial vehicle (UAV) of which country?

A. Japan

B. Israel

C. China

D. South Korea

Answer & Explanation

Answer: C. China

  • China has successfully tested its first fully solar–powered unmanned aerial vehicle (UAV). Named ‘Qimingxing–50’, the UAV can fly for months and can function even as a satellite if required. It is the first large–sized UAV powered only by solar energy. This technology will promote China’s Defence prowess. It can also be used in the field of renewable energy and aeronautical engineering.

4. Which state is the host of first ‘National Conference on Sustainable Coastal Management in India’?

A. Goa

B. Maharashtra

C. Odisha

D. Odisha

Answer & Explanation

Answer: D. Odisha

  • Union Minister of Environment, Forest and Climate Change, Bhupender Yadav inaugurated the first National Conference on Sustainable Coastal Management in India in Bhubaneswar, Odisha. The Conference was focused on enhancing climate resilience of India’s coastal communities. It was attended by officials from all 13 coastal states of India with focus on the three interrelated themes of coastal and marine biodiversity, climate mitigation and adaptation and coastal pollution.

5. India’s longest rubber dam ‘Gayaji Dam’ was inaugurated in which state/UT?

A. Sikkim

B. Odisha

C. Arunachal Pradesh

D. Bihar

Answer & Explanation

Answer: D. Bihar

  • Bihar Chief Minister Nitish Kumar inaugurated India’s longest rubber dam ‘Gayaji Dam’ on the Falgu River. It is a vast stretch of sand dunes. He also inaugurated the steel foot over bridge for the convenience of visitors who visit during Pitripaksha Mela. “The dam has been built at an estimated cost of Rs 324crore with the guidance from IIT (Roorkee).

6. Which country launched the world’s first fleet of hydrogen–powered passenger trains?

A. India

B. USA

C. China

D. Germany

Answer & Explanation

Answer: D. Germany

  • Germany launched the world’s first fleet of hydrogen–powered passenger trains, replacing 15 diesel trains that previously operated on non–electrified tracks. The 14 trains use hydrogen fuel cells to generate electricity under the USD 92 million project. The trains manufactured by French company Alstom are operated by a regional rail company.

7. India’s first 3D–printed post office is set to come up in which city?

A. Chennai

B. Bengaluru

C. Cochin

D. Hyderabad

Answer & Explanation

Answer: B. Bengaluru

  • IIT Guwahati researchers have developed an ultrasound–assisted fermentation method to produce a sugar substitute called ‘Xylitol’. It is developed from sugarcane bagasse, the residue left after crushing of sugar cane. The product also overcomes the limitations of chemical methods of synthesis and the time delays associated with traditional method of fermentation. It also has potential anti–diabetic and anti–obesogenic effects.

8. Which is the venue of the fourth edition of the India Clean Air Summit (ICAS)?

A. New Delhi

B. Gandhi Nagar

C. Bengaluru

D. Jaipur

Answer & Explanation

Answer: C. Bengaluru

  • The fourth edition of the India Clean Air Summit (ICAS) began in Bengaluru. The summit has been organised by think–tanks Centre for Air Pollution Studies (CAPS) and the Centre for Study of Science, Technology and Policy (CSTEP). Several experts from difference parts of the world are set to discuss an integrated approach to resolve air pollution and climate change.

9. Which subsidiary of Bharat Petroleum Corporation Ltd (BPCL) has been amalgamated with BPCL?

A. Bharat Gas Resources Limited

B. Bharat Petroresources Limited

C. Petronet LNG Limited

D. Indraprastha Gas Limited

Answer & Explanation

Answer: A. Bharat Gas Resources Limited

  • Bharat Gas Resources Ltd (BGRL), a 100 per cent subsidiary of Bharat Petroleum Corporation Ltd (BPCL), has been amalgamated with the parent. The order approving the amalgamation was issued by the Corporate Affairs Ministry. The scheme of amalgamation has become effective on August 16.

10. Arjun Erigaisi, who was seen in the news, is associated with which sports?

A. Kabaddi

B. Tennis

C. Chess

D. Basketball

Answer & Explanation

Answer: C. Chess

  • India’s’ Grand Master Arjun Erigaisi won the Abu Dhabi Masters chess title by scoring two back–to–back victories. As per the live ranking, Arjun is placed at a career–best 24th and third among Indians behind Viswanathan Anand (12th) and D Gukesh (20th).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!