Tnpsc

11th August 2020 Current Affairs in Tamil & English

11th August 2020 Current Affairs in Tamil & English

11th August 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

11th August 2020 Current Affairs Pdf Tamil

11th August 2020 Current Affairs Pdf English

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. Who was the Chairperson of the All India Handicrafts Board, which has been abolished?

[A] Prime Minister

[B] Ministry of Textiles

[C] Ministry of MSME

[D] Ministry of Culture

  • The Government of India has abolished All India Handicrafts Board, as per the recent notification of the Textiles Ministry. The Board was constituted on January 23, 1992 under the chairmanship of the Union Textiles Minister. It has Secretaries in Ministries of Rural development and Micro small & medium enterprises and various states as members. It had been advising the Government on creation of development programmes in the handicrafts and handloom sectors.

2. Where is the Headquarters of the Insolvency and Bankruptcy Board of India (IBBI) located?

[A] Chennai

[B] New Delhi

[C] Mumbai

[D] Hyderabad

  • The Insolvency and Bankruptcy Board of India (IBBI) is the apex institution to implement the Insolvency and Bankruptcy Code. It is headquartered at New Delhi.
  • IBBI has recently amended regulations related to liquidation process and provided clarifications on fee payable to liquidators. At present, the Committee of Creditors (CoC) fixes the fee payable to the liquidator. The liquidator is entitled to the fee corresponding to the amount realised or distributed by him.

3. Which organisation signed an MoU with IIT Delhi to set up a Centre of Excellence (CoE) for using Artificial Intelligence in Decision making?

[A] Airports Authority of India

[B] National Highways Authority of India

[C] NHPC Ltd

[D] Union Public Service Commission

  • The National Highways Authority of India (NHAI), an organisation under the Ministry of Road Transport and Highways signed a Memorandum of Understanding (MoU) with the Indian Institute of Technology, Delhi.
  • The MoU seeks to set up a Centre of Excellence (CoE) for using Artificial Intelligence in Decision making and Advance Data Management System for Highways. IIT Delhi will develop simulation models in this regard and provide space and infrastructural facility for the CoE.

4. Genoa San Giorgio Bridge, which was seen in news, is located in which country?

[A] France

[B] Italy

[C] Germany

[D] Brazil

  • The San Giorgio Bridge, that has been found in news, was inaugurated in Genoa, one of the largest cities in Italy. Designed by the world–famous architect Renzo Piano, the bridge is the replacement for the Morandi Bridge that collapsed in a storm two years ago in Italy. The 1,100–metre–long motorway bridge was inaugurated by the Italian prime minister.

5. What is the name of the new interactive centre on the Swachh Bharat Mission, located near Raj Ghat, Delhi?

[A] Rashtriya Swachhata Kendra

[B] SBM Kendra

[C] Swachhata Kranti

[D] SBM House

  • Prime Minister Narendra Modi is to inaugurate the ‘Rashtriya Swachhata Kendra’, an interactive experience centre on the Swachh Bharat Mission (SBM). It was first announced by the Prime Minister Narendra Modi in the year 2017, on the occasion of the centenary celebrations of Gandhiji’s Champaran Satyagraha. The Rashtriya Swachhata Kendra complex comprises of audio–visual show explaining the journey of the country in implementing the SBM.

6. ‘Conclave on Transformational Reforms in Higher Education’ was organised by Education Ministry along with which institution?

[A] UGC

[B] AICTE

[C] National Testing Agency

[D] NITI Aayog

  • The Union HRD Ministry organised ‘Conclave on Transformational Reforms in Higher Education under National Education Policy’ along with the University Grants Commission (UGC).
  • The Prime Minister Narendra Modi delivered the inaugural address at the Conclave through video conferencing. He also highlighted various aspects of the National Education Policy. Union Education Minister Ramesh Pokhriyal also participated in the event.

7. Who has been appointed as the Comptroller and Auditor General (CAG) of India?

[A] G.C. Murmu

[B] Vinod Rai

[C] N K Singh

[D] Ranjan Gogoi

  • As per the recent notification of the Department of Economic Affairs, Girish Chandra Murmu has been appointed as the next Comptroller and Auditor General of India. G C Murmu was the former Lieutenant Governor of Jammu & Kashmir. He was replaced by Manoj Sinha. The 60–year–old Indian Administrative Service Officer has replaced the previous Comptroller and Auditor General of India, Rajiv Mehrishi.

8. Which Indian state/UT has launched its own Electric Vehicle Policy?

[A] Andhra Pradesh

[B] New Delhi

[C] Karnataka

[D] Telangana

  • The Delhi government has launched the UT’s own Electric Vehicle Policy that aims to boost the economy and reduce the pollution level.
  • The Government will also introduce financial incentives for people to buy e–vehicles in the range of Rs 30000 for two–wheelers and auto–rickshaws and Rs 150,000 for cars. The policy also offers subsidies and waive road tax and registration fee for electric vehicles.

9. What is the corpus offered by the Reserve Bank of India (RBI) to NABARD and NHB, to boost rural lending and affordable housing?

[A] Rs.10,000 Crore

[B] Rs.20,000 Crore

[C] Rs.30,000 Crore

[D] Rs.40,000 Crore

  • The Reserve Bank of India (RBI) has offered a credit facility of Rs 10000 crore to the National Bank for Agriculture and Rural Development (NABARD) and the National Housing Bank (NHB).
  • The fund of Rs 5,000 crore each is provided at policy lending rate to the banks, its will be deployed to boost rural lending and affordable housing across the country. Under this facility, small NBFCs and micro–lenders will extend small loans to the poor. Earlier, NABARD got a refinance support of Rs 35,000 crore and NHB got Rs 10,000 crore.

10. Which Indian organisation releases Business Confidence Index (BCI)?

[A] National Council of Applied Economic Research

[B] NITI Aayog

[C] National Development Council

[D] Centre for Policy Research

  • The National Council of Applied Economic Research (NCAER) releases the Business Confidence Index (BCI) and Business Expectation Survey (BES). As per the recent survey conducted by NCAER, the Business Confidence Index fell to 62% from the last year’s level. The index recorded in the first quarter of this fiscal is the lowest index since 1991. During the period, the BCI for North India increased by 25.1% and decreased by 89.3% and 68.1% for East and West India.

நடப்பு நிகழ்வுகள்

1. ஒழிக்கப்பட்ட அகில இந்திய கைவினைப்பொருள் வாரியத்தின் தலைவர் யார்?

அ. பிரதமர்

ஆ. ஜவுளித்துறை அமைச்சகம்

இ. MSME அமைச்சகம்

ஈ. கலாச்சார அமைச்சகம்

  • ஜவுளி அமைச்சகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, இந்திய அரசு, அகில இந்திய கைவினைப்பொருள் வாரியத்தை ஒழித்துள்ளது. 1992 ஜனவரி.23 அன்று மத்திய ஜவுளி அமைச்சரின் தலைமையில் இந்த வாரியம் அமைக்கப்பட்டது. இது ஊரக வளர்ச்சி மற்றும் குறு, சிறு & நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் அமைச்சகங்களின் செயலாளர்களையும், பல்வேறு மாநிலங்களையும் அதன் உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி துறைகளில் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவது குறித்து அரசுக்கு அறிவுறுத்துவது இதன் நோக்கமாகும்.

2. நொடித்துப்போதல் மற்றும் திவாலாதலுக்கான இந்திய வாரியத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ. சென்னை

ஆ. புது தில்லி

இ. மும்பை

ஈ. ஹைதராபாத்

  • நொடித்துப்போதல் மற்றும் திவாலாதலுக்கான இந்திய வாரியம் (IBBI) என்பது திவால் நிலை மற்றும் திவால்நிலைக்குறியீட்டை செயல்படுத்துவதற்கான தலைமை நிறுவனமாகும். இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. IBBI ஆனது அண்மையில், பணப்புழக்க செயல்முறை தொடர்பான விதி முறைகளை திருத்தியது. இந்த விதிமுறைகளின்படி, கட்டுப்பாட்டாளர்களுக்கு செலுத்தவேண்டிய கட்டணத்தைக் கடனாளர்களின் குழு நிர்ணயிக்க வேண்டும் என்று அது கோருகிறது.
  • சில தருணங்களில், ஒரு பணப்புழக்க அலுவலர் ஒரு குறிப்பிட்ட தொகையை உணர்ந்த நிகழ்வுகளும், மற்றொரு பணப்புழக்க அலுவலர் அதைப்பயனர்களுக்கு விநியோகிக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன. திருத்தஞ்செய்யப்பட்ட விதிமுறைப்படி, ஒரு பணப்புழக்க அலுவலர் எந்தத் தொகையை உணர்ந்தாலும், அதை விநியோகிக்கவில்லை என்றால், அவர் உணர்ந்த தொகைக்கு ஒத்த கட்டணத்திற்கு அவருக்கு உரிமை உண்டு.

3. முடிவெடுத்தலில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்காக சிறப்பு மையம் ஒன்றை அமைக்க தில்லி IIT’உடன் ஒப்பந்தித்துள்ள அமைப்பு எது?

அ. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்

ஆ. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்

இ. NHPC லிட்

ஈ. மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம்

  • மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது, செயற்கை நுண்ணறிவைப்பயன்படுத்துவதற்கான உயர் தர மையம் ஒன்றை நிர்மாணிக்க புது தில்லி இந்திய தொழில்நுட்ப பயிலகத்துடன் (IIT) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. நெடுஞ்சாலைகளுக்கான தரவு அடிப்படையில் முடிவெடுத்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட தரவு மேலாண்மை அமைப்பு ஆகியவற்றைக் கையாள இந்த மையம் உதவும்.
  • நகலிய மாதிரிகளை உருவாக்குதல், தரவு அடிப்படையில் முடிவெடுப்பதற்கான திறன்களை NHAI மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான தரவைச்சேகரித்தல் & திரும்பப்பெறுதல்போன்ற அம்சங்களும் இணைந்து உருவாக்கப்படும்.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ஜெனோவா சான் ஜார்ஜியோ பாலம் அமைந்துள்ள நாடு எது?

அ. பிரான்ஸ்

ஆ. இத்தாலி

இ. ஜெர்மனி

ஈ. பிரேசில்

  • இத்தாலியின் பெருநகரங்களுள் ஒன்றான ஜெனோவாவில், சான் ஜார்ஜியோ பாலம் திறக்கப்பட்டது. உலகப்புகழ்பெற்ற கட்டடக்கலைஞர் ரென்சோ பியானோவால் வடிவமைக்கப்பட்ட இப்பாலம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இத்தாலியில், புயல் தாக்கி இடிந்து விழுந்த மொராண்டி பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்டதாகும். 1,100 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலத்தை, இத்தாலிய பிரதமர் திறந்துவைத்தார்.

5. தில்லி இராஜ்காட் அருகே, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட புதிய கலந்தாடல் அனுபவ மையத்தின் பெயரென்ன?

அ. ராஷ்ட்ரிய ஸ்வச்தா கேந்திரா

ஆ. SBM கேந்திரா

இ. ஸ்வச்சதா கிரந்தி

ஈ. SBM இல்லம்

  • தூய்மையான பாரதம் திட்டத்தில் அனுபவங்களை கலந்தாடல் செய்யும் மையமான ராஷ்ட்ரிய ஸ்வச்தா கேந்திராவை புது தில்லி இராஜ்காட்டில் காந்தி ஸ்மிருதி & தரிசன சமிதியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் இதற்கான திட்டத்தை 2017 ஏப்ரல் 10 அன்று அவர் அறிவித்தார். காந்திஜியின் சம்பரண் சத்யாகிரகத்தின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் போது இதுகுறித்து அவர் அறிவிப்பு வெளியிட்டார். RSK எனப்படும் இந்த மையத்தில், தூய்மையான பாரதம் திட்டத்தின் பல்வேறு நிலைகள்பற்றிய தகவல்கள் உள்ளன.

6. “உயர்கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள்” குறித்த மாநாட்டை எந்த நிறுவனத்துடன் இணைந்து கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது?

அ. பல்கலைக்கழக மானியக்குழு (UGC)

ஆ. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE)

இ. தேசிய பரிசோதனை முகமை

ஈ. NITI ஆயோக்

  • தேசிய கல்விக்கொள்கையின்கீழ், “உயர்கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள்” குறித்த மாநாட்டை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக்குழுவும் (UGC) இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, காணொளிவழியில் தொடக்கவுரையாற்றினார். தேசிய கல்விக் கொள்கையின்கீழ் இடம்பெற்றுள்ள பல்வேறு முக்கியமான அம்சங்கள் குறித்து, பல தொடர்கள் இந்த மாநாட்டில் இடம்பெற்றன. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலும் இந்த மாநாட்டில் பங்கேற்றார்.

7. இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக (CAG) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. G C முர்மு

ஆ. வினோத் ராய்

இ. N K சிங்

ஈ. இரஞ்சன் கோகோய்

  • கிரிஷ் சந்திர முர்மு, இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக (Comptroller and Auditor General of India – CAG) பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தப் பதவியிலிருந்து விலகிய இராஜீவ் மெஹ்ரிசியின் இடத்தில் G C முர்மு பொறுப்பேற்றார். G C முர்மு, இதற்குமுன் ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணைநிலை ஆளுநராகப் பணிபுரிந்தார். மனோஜ் சின்ஹா, தற்போது ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ளார்.

8. தனது சொந்த மின்சார வாகனக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசு எது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. புது தில்லி

இ. கர்நாடகம்

ஈ. தெலுங்கானா

  • பொருளாதாரத்தை உயர்த்துவதையும் மாசின் அளவைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, தில்லி அரசு தனக்கென ஒரு சொந்த மின்சார வாகனக்கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் தானிகளுக்கு `30000 மற்றும் மகிழுந்துகளுக்கு `150,000 என்கிற வரம்பில் மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களை வாங்குவதற்கான நிதி சலுகைகளையும் தில்லி அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
  • மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களுக்கான மானியங்கள் மற்றும் சாலைவரி மற்றும் பதிவுக் கட்டணத்தை தள்ளுபடி செய்வதுபோன்ற அம்சங்களும் இக்கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

9. கிராமப்புறக்கடன் & மலிவு விலையிலான வீட்டுவசதிகளை ஊக்கப்படுத்துவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) NABARD மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கிக்கு வழங்கிய தொகை எவ்வளவு?

அ. ரூ. 10,000 கோடி

ஆ. ரூ. 20,000 கோடி

இ. ரூ. 30,000 கோடி

ஈ. ரூ. 40,000 கோடி

  • இந்திய ரிசர்வ் வங்கியானது `10,000 கோடி கடனுதவியை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கி ஆகியவற்றிற்கு வழங்கியுள்ளது. தலா `5 ஆயிரம் கோடி நிதியை இவ்விரு வங்கிகளுக்கும் கொள்கை அடிப்படையிலான கடன் விகிதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. இது, நாடு முழுவதும், கிராமப்புறக்கடன் & மலிவு விலையிலான வீட்டுவசதிகளை ஊக்கப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.
  • இவ்வசதியின்கீழ், சிறு NBFC மற்றும் நுண்கடன் வழங்குநர் ஆகியோர் ஏழைகளுக்கு சிறுகடன்களை வழங்குவார்கள். முன்னதாக, NABARD’க்கு மறுநிதியளிப்பு உதவியாக `35,000 கோடியும், NHB’க்கு மறுநிதியளிப்பு உதவியாக `10,000 கோடியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

10. வணிக நம்பிக்கை குறியீட்டை (Business Confidence Index) வெளியிடுகிற இந்திய அமைப்பு எது?

அ. தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் கழகம்

ஆ. NITI ஆயோக்

இ. தேசிய வளர்ச்சிக் கழகம்

ஈ. கொள்கை ஆராய்ச்சி மையம்

  • தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கழகமானது (NCAER) வணிக நம்பிக்கை குறியீடு மற்றும் வணிக எதிர்பார்ப்பு ஆய்வு ஆகியவற்றை வெளியிடுகிறது. இதன் அண்மைய ஆய்வின்படி, வணிக நம்பிக்கைக் குறியீடானது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 62% குறைந்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட குறியீடு, கடந்த 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவாகும் மிகக் குறைந்த குறியீடாகும். இந்தக்காலகட்டத்தில், வட இந்தியாவுக்கான வணிக நம்பிக்கை குறியீடு 25.1% என அதிகரித்தும் கிழக்கு மற்றும் மேற்கிந்தியாவுக்கான வணிக நம்பிக்கை குறியீடு முறையே 89.3% மற்றும் 68.1% என குறைந்தும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!