Tnpsc

11th December 2020 Current Affairs in Tamil & English

11th December 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

11th December 2020 Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1. உலக பாரம்பரியம் குறித்த IUCN’இன் ஓர் அண்மைய அறிக்கையின்படி, இந்தியாவின் கீழ்க்காணும் எந்தப்பகுதி மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது?

அ. சுந்தரவனக்காடுகள்

ஆ. இந்திய கங்கைச் சமவெளி

இ. மேற்குத்தொடர்ச்சி மலைகள்

ஈ. வடகிழக்கு மலைகள்

 • இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியமானது (IUCN) ‘IUCN உலக பாரம்பரிய கண்ணோட்டம் 3’ஐ வெளியிட்டுள்ளது. இந்தக் கண்ணோட்டம், உலகின் 252 இயற்கை உலக பாரம்பரிய தளங்களின் பாதுகாப்பு முயற்சிகள் சரியான பாதையில் செல்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்காக, 2014-2017 ஆண்டுகளின் தரவைப்பயன்படுத்தியுள்ளது. மேற்குத்தொடர்ச்சிமலையின் பாதுகாப்புக் கண்ணோட்டம் மிகுந்த கவலையளிப்பதாக இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

2. மேம்பட்ட இழுவை பீரங்கி துப்பாக்கி அமைப்பை (ATAGS) உருவாக்கியுள்ள அமைப்பு எது?

அ. BHEL

ஆ. DRDO

இ. OFB

ஈ. ISRO

 • இராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது மேம்பட்ட இழுவை பீரங்கி துப்பாக்கி அமைப்பை (Advanced Towed Artillery Gun System) உருவாக்கியுள்ளது. ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இப்பீரங்கிகள், தற்போது மகாராட்டிராவில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. DRDO’இன் கூற்றுப்படி, 18-24 மாதங்களுக்குள் இதுபோன்ற இருநூறு துப்பாக்கிகள் இராணுவத்திற்கு வழங்கப்படவுள்ளன.

3. Gaofen-14 என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை கீழ்க்காணும் எந்த ஏவுகலத்தைப் பயன்படுத்தி சீனா விண்ணில் ஏவியது?

அ. PSLV C51

ஆ. GSLV Mark 3

இ. Long March 3B

ஈ. Fat Boy 1A

 • சீன விண்வெளி முகமையானது அண்மையில் காபென்-14 என்ற பெயரில் ஆப்டிகல் ஸ்டீரியோ மேப்பிங் எர்த் அப்சர்வேஷன் செயற்கைக்கோளை ஏவியது. லாங் மார்ச்-3B ஏவுகலத்தைப்பயன்படுத்தி அந்தச் செயற்கைக்கோள் அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்தச் செயற்கைக்கோளால், உலகெங்கிலும் உள்ள தரை பொருட்களை உயர் தெளிவுத்திறனுடன் படங்களை எடுக்க முடியும்.

4. நடப்பாண்டில் (2020) முதன்முறையாக ‘புலம்பெயர்ந்த பறவைகள் திருவிழா’வை ஏற்பாடு செய்துள்ள மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. மேகாலயா

இ. சிக்கிம்

ஈ. பீகார்

 • பீகார் மாநிலமானது இவ்வாண்டில் முதன்முறையாக புலம்பெயர்ந்த பறவைகள் திருவிழாவை ஏற்பாடு செய்யவுள்ளது. மூன்று நாள் நீடிக்கும் இத்திருவிழா, பொதுமக்களிடையே புலம்பெயர்ந்த பறவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விழாவை பாகல்பூர் வனப் பிரிவு, பம்பாய் இயற்கை வரலாற்றுச்சங்கம் மற்றும் பீகார் மந்தர் இயற்கை சங்கம் இணைந்து நடத்தும்.

5. கீழ்க்காணும் எந்தத் தேசியத்தலைவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, ‘மகாபரிநிர்வாணா திவாஸ்’ அனுசரிக்கப்படுகிறது?

அ. மகாத்மா காந்தி

ஆ. B R அம்பேத்கர்

இ. ஜவகர்லால் நேரு

ஈ. சர்தார் வல்லபாய் படேல்

 • ஒவ்வோர் ஆண்டும் டிச.6 அன்று டாக்டர் B R அம்பேத்கரின் நினைவு நாள் ‘மகாபரிநிர்வாணா திவாஸ்’ என அனுசரிக்கப்படுகிறது. அவர், 1956ஆம் ஆண்டு இந்தத் தேதியில் மறைந்தார். நடப்பாண்டு (2020) 64ஆவது நினைவு நாளைக் குறிக்கிறது. மரணத்திற்குப் பிறகு விடுதலை அல்லது விடுவிப்பு எனப் பொருள்படும், ‘பரிநிர்வாணா’ என்பது பெளத்த மதத்தின் முக்கியமான கொள்கைகளுள் ஒன்றாகும்.

6. உலக பொருளாதார மன்றத்தின் 2021ஆம் ஆண்டு கூட்டத்திற்கான தொகுப்பாளராக தேர்ந்தெடுக்கப்ப -ட்டுள்ள நாடு எது?

அ. மலேசியா

ஆ. சிங்கப்பூர்

இ. இந்தியா

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

 • உலக பொருளாதார மன்றம் தனது வழமையான இடமான சுவிச்சர்லாந்தின் தாவோசுக்கு பதிலாக சிங்கப்பூரில் வரும் 2021ஆம் ஆண்டுக்கான கூட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளது. சுவிச்சர்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், நிகழ்விடம் மாற்றப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் வருடாந்திர கூட்டம், மீண்டும் சுவிச்சர்லாந்திலேயே நடத்தப்படும்.

7. 8848.86 மீட்டரை எந்தப் புகழ்பெற்ற சிகரத்தின் திருத்தப்பட்ட உயரமாக நேபாளம் அறிவித்துள்ளது?

அ. எவரெஸ்ட் சிகரம்

ஆ. கஞ்சஞ்சங்கா சிகரம்

இ. மக்காலு சிகரம்

ஈ. K2 சிகரம்

 • உலகின் மிகவுயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை நேபாளம் மீண்டும் அளந்துள்ளது. சீனாவுடன் சேர்ந்து உச்சத்தின் எவரெஸ்ட் சிகரத்தின் திருத்தப்பட்ட உயரத்தை 8,848.86 மீட்டர் என அது அறிவித்தது. இவ்வுயரம், 1954ஆம் ஆண்டில் இந்திய நில அளவைத்துறை மேற்கொண்ட முந்தைய அளவீட்டைவிட கிட்டத்தட்ட .86 செமீ அதிகமாகும். இப்புதிய உயரம் சீனாவின் அண்மைய அளவீட்டை விட 4 மீ அதிகமாகும். நேபாளம்-சீனா எல்லையானது இந்தச் சிகரத்தின் வழியாக செல்கிறது.

8. 2020 டிசம்பர் மாத பிட்ச் மதிப்பீடுகளின்படி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி என்னவாக இருக்கும்?

அ. -4.4

ஆ. -6.4

இ. -9.4

ஈ. -11.4

 • ஃபிட்ச் மதிப்பீடுகள் அதன் உலகளாவிய பொருளாதார பார்வையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணிப்பை -9.4 சதவீதமாக உயர்த்தியுள்ளது. முன்னதாக, நடப்பு 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 10.5% ஆக சுருங்கும் என்று பிட்ச் மதிப்பிட்டிருந்தது. தற்போது, வரும் 2021ஆம் ஆண்டில் தடுப்பூசிகள் எதிர்பார்க்கப்படுவதால், கண்ணோட்டம் பிரகாசமாக இருப்பதாக அந்நிறுவனம் கூறுகிறது.

9. ஐநா’இன் நீடித்த வளர்ச்சிக்கான தீர்வுகள் வலையமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ. நியூயார்க்

ஆ. ஜெனீவா

இ. பாரிஸ்

ஈ. பெய்ஜிங்

 • நீடித்த வளர்ச்சி இலக்குகளில் உலகின் முயற்சிகளை அணிதிரட்டுவதற்காக ஐக்கிய நாடுகளின் நீடித்த வளர்ச்சிக்கான தீர்வுகள் வலையமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது. UN SDSN மற்றும் ஐரோப்பிய சுற்றுச்சூழல் கொள்கை நிறுவனம் ஆகியவை இணைந்து ஐரோப்பிய நீடித்த வளர்ச்சி அறிக்கை-2020’ஐ வெளியிட்டன. இது ஐரோப்பிய ஒன்றியம் அதன் உறுப்பு நாடுகள் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் நீடித்த வளர்ச்சி இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை தெரிவிக்கிறது.

10.ஐக்கிய அரபு அமீரகம் & சவுதி அரேபியாவுக்கு விஜயம் செய்யும் முதல் இந்திய இராணுவத் தலைவர் யார்?

அ. M M நரவனே

ஆ. பிபின் இராவத்

இ. V K சிங்

ஈ. அஜித் தோவால்

 • இந்தியாவின் இராணுவத் தளபதி (COAS) மனோஜ் முகுந்த் நரவனே ஐக்கிய அரபு அமீரகம் (UAE) & சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு ‘வரலாற்று’ச்சிறப்புவாய்ந்த 6 நாள் பயணத்தை மேற்கொண்டுள் -ளார். இரு வளைகுடா நாடுகளுக்கும் இந்திய இராணுவத்தலைவர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்த விஜயம், இருநாடுகளுக்கும் இடையிலான உத்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சவுதி அரேபியா, இந்தியாவின் நான்காவது பெரிய வர்த்தக பங்காளராகும்.

11th December 2020 Current Affairs in English

1. As per the IUCN’s latest report on World Heritage, which region of India is of great concern?

[A] Sundarbans

[B] Indo–Gangetic Plain

[C] Western Ghats

[D] Northeastern Mountains

 • The International Union for Conservation of Nature (IUCN) released the IUCN World Heritage Outlook 3. It uses the data of the previous reports from 2014 and 2017 to track whether the conservation efforts of the world’s 252 natural world heritage sites are on track. The report revealed that the conservation outlook of mountain chain of the Western Ghats is of great concern.

2. Which organisation developed the Advanced Towed Artillery Gun System (ATAGS)?

[A] BHEL

[B] DRDO

[C] OFB

[D] ISRO

 • The Defence Research and Development Organisation has developed the Advanced Towed Artillery Gun System (ATAGS). The indigenously made Howitzer, which was developed in partnership with a private sector industry, is undergoing trails in Maharashtra. As per DRDO, over 200 of these guns can be delivered to the Army within 18–24 months of the order.

3. Gaofen–14 earth observation satellite has been sent to space by China using which launch vehicle?

[A] PSLV C51

[B] GSLV Mark III

[C] Long March 3B

[D] Fat Boy 1A

 • The Chinese space agency has recently launched an optical stereo mapping Earth Observation satellite named Gaofen–14. The satellite was placed in its designated orbit using Long March–3B carrier rocket. The satellite can capture high resolution images of ground objects across the globe.

4. Which state is set to organise first ever migratory bird festival this year?

[A] Assam

[B] Meghalaya

[C] Sikkim

[D] Bihar

 • Bihar state is set to organise the first ever migratory bird festival this year. This three–day long festival is aimed to enhance the awareness about migratory birds among common public and to check cases of poaching in the region. The festival would be jointly organised by Bhagalpur forest division, Bombay Natural History Society and Mandar Nature Club of Bihar.

5. Mahaparinirvana Diwas is observed to mourn the death of which national leader?

[A] Mahatma Gandhi

[B] B R Ambedkar

[C] Jawaharlal Nehru

[D] Sardar Vallabhbhai Patel

 • Every year 6th December is observed as Mahaparinirvana Diwas, which marks the death anniversary of Dr BR Ambedkar. He died in this date in the year 1956 and this year marks the 64th death anniversary. Parinirvana is one of the important principles of Buddhism which means release or freedom after death.

6. Which country is selected as the host of the World Economic Forum 2021 annual meeting?

[A] Malaysia

[B] Singapore

[C] India

[D] United Arab Emirates

 • The World Economic Forum has announced that it will hold its 2021 annual meeting in Singapore instead of its traditional venue of Davos, Switzerland. As there is a surge in coronavirus infections observed in the country of Switzerland, the venue has been shifted. In the year 2022, the annual meeting will return to Davos–Klosters, Switzerland.

7. Nepal has announced the revised height of which famous peak, as 8848.86 metres?

[A] Mount Everest

[B] Mount Kanchenjunga

[C] Mount Makalu

[D] Mount K2

 • Nepal has recalculated the height of the world’s highest peak Mount Everest. The country along with China announced the revised height of the peak as 8,848.86 metres. This height is almost 86 centimetres higher than the previous measurement done by the Survey of India in 1954. The new height is also four metres higher than the China’s recent measurement. The Nepal–China border passes through the summit.

8. What would be the GDP growth of India in the current fiscal year FY21, as per the Fitch ratings in December 2020?

[A] –4.4

[B] –6.4

[C] –9.4

[D] –11.4

 • In its Global Economic Outlook, the Fitch ratings has raised India’s GDP forecast to –9.4 per cent in the current fiscal year. Earlier, Fitch had estimated that Indian economy would contract by 10.5 per cent in current fiscal 2020–21. Now, the firm says that the outlook is brighter due to an expected rollout of vaccines in 2021.

9. What is the headquarters of the UN Sustainable Development Solutions Network?

[A] New York

[B] Geneva

[C] Paris

[D] Beijing

 • The United Nations Sustainable Development Solutions Network (SDSN) works under the UN to mobilise the global efforts in SDGs. It is headquartered in New York. UN SDSN and the Institute for European Environmental Policy (IEEP) published the Europe Sustainable Development Report 2020. It reports the progress of the European Union, its member states, and other European countries towards the Sustainable Development Goals (SDGs).

10. Who is the first Indian Army Chief to visit the United Arab Emirates (UAE) and Saudi Arabia?

[A] M M Naravane

[B] Bipin Rawat

[C] V K Singh

[D] Ajit Doval

 • India’s Chief of Army Staff (COAS) Manoj Mukund Naravane has undertaken a “historic” six–day visit to the United Arab Emirates (UAE) and Saudi Arabia. This is first such visit by the Indian Army Chief to the two Gulf countries. This visit aims to strengthen the strategic and defence cooperation between the two countries. Saudi Arabia is India’s fourth–largest trading partner.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button