Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

11th February 2020 Current Affairs in Tamil & English

11th February 2020 Current Affairs in Tamil & English

11th February 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

11th February 2020 Current Affairs in Tamil

11th February 2020 Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.மானியவிலையில் உணவுப்பண்டங்களை வழங்குவதற்காக, ‘குடும்பஸ்ரீ’ எனப்படும் உணவகங்களை நிறுவுவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. தெலுங்கானா

ஈ. கேரளா

  • கேரள மாநில அரசானது அண்மையில், ‘குடும்பஸ்ரீ’ உணவகங்கள் எனப்படும் மானியவிலையில் உணவுப்பண்டங்களை வழங்கும் உணவகங்களை நிறுவுவதற்கான திட்டத்தை வெளியிட்டது. மாநில பட்ஜெட்டை அறிவிப்புசெய்யும்போது இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. 1034 உள்ளாட்சி அமைப்புகளில், ஒவ்வொன்றிலும் இவ்வகையான உணவகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில், `25 என்ற மானியவிலையில் கேரள உணவுகள் கிடைக்கப்பெறும். ‘குடும்பஸ்ரீ’ என்பது கேரள மாநில அரசின் வறுமை ஒழிப்பு மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் திட்டமாகும்.

2.இந்தியாவில் எந்த மெட்ரோ இரயில் சேவை, நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மெட்ரோ இரயில் வலையமைப்பாக மாறியுள்ளது?

அ. தில்லி மெட்ரோ

ஆ. கொச்சி மெட்ரோ

இ. ஹைதராபாத் மெட்ரோ

ஈ. சென்னை மெட்ரோ

  • ஹைதராபாத் மற்றும் அதன் சகோதரி நகரமான செகந்திராபாத் இடையே ஹைதராபாத் மெட்ரோவின் விரிவுபடுத்தப்பட்ட சேவையை தெலுங்கானா முதலமைச்சர் அண்மையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன்மூலம், தில்லி மெட்ரோ இரயில் சேவைக்குப்பிறகு ஹைதராபாத் மெட்ரோ இரயில் சேவை நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மெட்ரோ இரயில் வலையமைப்பாக மாறியுள்ளது.
  • `20,000 கோடி மதிப்பில், பொது-தனியார் கூட்டாண்மை முறையில் கட்டமைக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய மெட்ரோ இரயில் திட்டமாகவும் ஹைதராபாத் மெட்ரோ இரயில் திட்டம் உள்ளது. இதனை லார்சன் & டூப்ரோ நிறுவனம் கட்டமைத்துள்ளது.

3.அண்மையச் செய்திகளில் இடம்பெற்ற அனூப் மிஸ்ரா வகிக்கும் பணி என்ன?

அ. அரசியல்வாதி

ஆ. இராணுவப்படைத்தலைவர்

இ. விளையாட்டு வீரர்

ஈ. இசைக்கலைஞர்

  • இந்திய இராணுவத்தில் படைத்தலைவராக பணிபுரிபவர் அனூப் மிஸ்ரா. பொறியியல் பட்டதாரியான இவர், லக்னோவில் உள்ள இராணுவக் கல்லூரியிலும் பகுதிநேரமாக பணியாற்றி வருகிறார். மேலும், இராணுவ வீரர்களுக்கு பயன்படக்கூடிய உபகரணங்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளிலும் அவர் தனது பங்களிப்பை அளித்துவருகிறார். அவ்வகையில், ‘ஸ்னைப்பர்’ இரக துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்க முடியாத கவச உடையை கடந்த ஆண்டு அனூப் மிஸ்ரா தயாரித்திருந்தார்.
  • இந்நிலையில், AK 47 இரக துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்க முடியாத தலைக்கவசத்தினை அனூப் மிஸ்ரா அண்மையில் தயாரித்துள்ளார். இது, உலக அளவில் முதல் குண்டு துளைக்காத தலைக் கவசம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்திய இராணுவத்தின் இராணுவ பொறியியல் கல்லூரி ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து, ‘பார்த் – Parth’ என்னும் இந்தியாவின் முதல் மற்றும் உலகின் மலிவான துப்பாக்கிச் சூடு இருப்பிடங்காட்டியை உருவாக்கியுள்ளது. இதால், 400 மீட்டர் தொலைவிலுள்ள குண்டுகளைக் கண்டுபிடிக்க இயலும்.

4.ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு `6000 நிதியுதவி வழங்கும், “முதலமைச்சர் பரிவார் சம்ரிதி யோஜனா” என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?

அ. ஒடிசா

ஆ. ஹரியானா

இ. மத்திய பிரதேசம்

ஈ. பஞ்சாப்

  • ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால், சமீபத்தில், “முதலமைச்சர் பரிவார் சம்ரிதி யோஜனா”வை அறிமுகப்படுத்தினார். இந்தத்திட்டத்தின்கீழ், ஆண்டுவருமானம் `1.80 இலட்சம் வரையிலும் மற்றும் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு `6000 நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
  • மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கான காப்பீட்டுத் தொகைகள், ஓய்வூதியத் திட்டம் மற்றும் பயிர்க்காப்பீடு ஆகியவை, தாமாகவே, தேவைப்படும் குடும்பங்களின் வங்கிக்கணக்குகளுக்கு செலுத்த -ப்படுவதை இது உறுதிசெய்கிறது.

5.அருண்-III என்பது இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்டுவரும் எந்த நாட்டின் நீர்மின் திட்டமாகும்?

அ. இலங்கை

ஆ. வங்கதேசம்

இ. நேபாளம்

ஈ. பூடான்

  • அருண்-III என்னும் நேபாளத்தின் மிகப்பெரிய நீர்மின் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் நேபாளமும் அண்மையில் கையெழுத்திட்டன. 900 MW நீர்மின்னுற்பத்தித் திறன்கொண்ட இத்திட்டம் நேபாளத்தில் கட்டுமானத்தில் உள்ளது. இதற்கான மொத்தா செலவு $1.04 மில்லியன் டாலராகும்.
  • இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்படவுள்ள இத்திட்டம் 5 ஆண்டுகளில் முடிக்கப்படவுள்ளது. இதை இந்திய அரசு மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநில அரசின் கூட்டு நிறுவனமான சத்லுஜ் ஜல் வித்யுத் நிகாம் அருண்-III மின் மேம்பாட்டு நிறுவனம் கட்டி வருகிறது.

6.எம்மாநிலத்தின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சமீபத்தில், மின்னாளுகை 2019-20ஆம் ஆண்டுக்கான தேசிய விருதைப் பெற்றது?

அ. ஒடிசா

ஆ. கேரளா

இ. தெலுங்கானா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • மும்பையில் நடைபெற்ற மின்னாளுகை தொடர்பான 23ஆவது தேசிய மாநாட்டின்போது, ஆந்திர பிரதேச மாநில அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதன் நிகழ்நேர மாசு கண்காணிப்பு அமைப்பு (Real –Time Pollution Monitoring System) திட்டத்திற்காக மின்னாளுகைக்கான 2019-20ஆம் ஆண்டுக்கான தேசிய விருதைப்பெற்றது. RTPMS திட்டத்தின்கீழ், ஒரு தொழிற்சாலை குறிப்பிட்ட மாசளவை மீறினால், அது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கையாக அனுப்பப்படும்.

7.மனித-விலங்கு மோதலைச் சமாளிப்பதற்காக யானைகளை வேட்டையாடுவதற்கான உரிமங்களை ஏலம்விட்ட நாடு எது?

அ. ஜிம்பாப்வே

ஆ. நமீபியா

இ. போட்ஸ்வானா

ஈ. மொசாம்பிக்

  • தென்னாப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான யானைகள் உள்ளன. அண்மையில், மனித-விலங்கு மோதலைச் சமாளிப்பதற்காக வேழங்களை வேட்டையாடுவ -தற்கான உரிமங்களை ஏலம்விட்டதால் இந்நாடு செய்திகளில் இடம்பெற்றது. நாட்டின் தலைநகரான கபோரோனில், எழுபது யானைகளை வேட்டையாடுவதற்கான உரிமங்கள் ஏலம்விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஐந்து ஆண்டுகளாக நடைமுறையிலிருந்த வனவுயிரிகளை வேட்டையாடுவதற்கான தடையை போட்ஸ்வானா அரசாங்கம் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

8.அண்மையில், இந்திய குடியரசுத்துணைத்தலைவரால் வெளியிடப்பட்ட, ‘A Child of Destiny’ என்ற நூல் எந்த இந்திய கல்வியாளரின் தன்வரலாறு ஆகும்?

அ. K இராமகிருஷ்ண ராவ்

ஆ. கிரிஷ்வர் மிஸ்ரா

இ. அமித் ஆபிரகாம்

ஈ. தேவேந்திர சிங்

  • புகழ்பெற்ற இந்திய தத்துவஞானியும் கல்வியாளருமான பேராசிரியர் K இராமகிருஷ்ண ராவ், ‘A Child of Destiny: An Autobiography’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார். இதனை, விசாகப்பட்டினத்தில் வைத்து இந்திய குடியரசுத்துணைத்தலைவர் M வெங்கையா வெளியிட்டார். GITAM பல்கலையின் துணைவேந்தரும் பேராசிரியருமான இவர், மதிப்புமிக்க, ‘பத்மஸ்ரீ’ விருதைப் பெற்றுள்ளார். இந்திய தத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின் தேசிய பெல்லோசிப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

9.தானி ஓட்டுநர்களின் அடையாளத்தை சரிபார்ப்பதற்காக, எந்த நகரத்தின் காவல்துறை, அண்மையில், ‘ஆபரேஷன் நகைல் – Operation Nakail’ என்ற முயற்சியைத் தொடங்கியது?

அ. மும்பை

ஆ. காசியாபாத்

இ. ஹைதராபாத்

ஈ. லக்னோ

  • காசியாபாத் நகர தானி (auto) ஓட்டுநர்களின் அடையாளத்தை சரிபார்ப்பதற்காக, அந்நகரத்தின் காவல் துறை அண்மையில், ‘ஆபரேஷன் நகைல்’ என்றவொன்றை அறிமுகப்படுத்தியது. இம்முயற்சியின்கீழ், நகரத்தில் ஓடும் ஒவ்வொரு தானிக்கும் ஒரு தனித்துவமான 4 இலக்க எண் ஒதுக்கப்படும். தானியின் உரிமையாளர், தானியில் தானி எண், அவரது பெயர் மற்றும் அவரது அலைபேசி எண் ஆகியவற்றை தெளிவாக அடையாளங்காண எளிதாக இருக்கும் வகையில் எழுதியிருத்தல் வேண்டும். தானிகளில் பல்வேறு குற்றங்கள் நடப்பதாகக் கூறப்பட்டதையடுத்து, இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

10.எந்த அமைப்பு / அமைச்சகத்தால், அண்மையில், நகராட்சி செயல்திறன் குறியீடு தொடங்கப்பட்டது?

அ. NITI ஆயோக்

ஆ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. தேசிய மேம்பாட்டுக் கழகம்

  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகமானது அண்மையில், எளிதாக வாழ்க்கை நடத்துவதற்கான குறியீடு (Ease of Living Index) மற்றும் நகராட்சி செயல்திறன் குறியீடு (Municipal Performance Index) 2019 என்ற 2 மதிப்பீட்டு கட்டமைப்பை வெளியிட்டது. இவ்விரண்டு குறியீடுகளும், பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகைகொண்ட 100 பொலிவுறு நகரங்கள் மற்றும் 14 பிற நகரங்களில் குடிமக்களின் வாழ்க்கைத்தரத்தை மதிப்பிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • சேவை, நிதி, திட்டமிடல், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் ஆகிய 5 அளவுருக்களின் அடிப்படையில் நகராட்சிகளின் செயல்திறனை MPI மதிப்பிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!