Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

11th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

11th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 11th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

11th February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. பிரதமர் உர்ஜா கங்கை திட்டத்தின் ஒருபகுதியான தோபி–துர்கா -பூர் இயற்கை எரிவாயு குழாய் திட்டம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) அஸ்ஸாம்

ஆ) மேற்கு வங்கம்

இ) ஒடிஸா

ஈ) பீகார்

  • பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின் ஒருபகுதியாக, 348 கிமீட்டர் நீளம் கொண்ட தோபி – துர்காபூர் இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், ஹால்தியா தூய்மைப்படுத்துதல் வளாகத்தில் இரண்டாம் கேட்டலிடிக் ஐசோவேக்ஸ் பிரிவுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
  • ஏற்றுமதி-இறக்குமதியின் முக்கிய முனையமாக ஹால்தியா வளர்ச்சி அடைவதற்கு இந்தத் திட்டங்கள் உதவிகரமாக இருக்கும்.

2. கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் ‘அஸ்ஸாம் மாலா’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது?

அ) அருணாச்சல பிரதேசம்

ஆ) அஸ்ஸாம்

இ) சிக்கிம்

ஈ) பீகார்

  • பிரதமர் மோடி, அஸ்ஸாம் மாநிலத்தில், ‘அஸ்ஸாம் மாலா’ என்ற பெயரில் ஒரு திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இது, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் ஊரக சாலைகளுக்கும் இடையில் தரமான இணைப்புச் சாலைகளை வழங்குவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அஸ்ஸாமில் பன்-முறை போக்குவரத்தை ஊக்குவிப்பது இத்திட்டத்தின் மற்றொரு நோக்கமாகும்.

3. இந்தியாவின் முதல் புவிவெப்ப கள மேம்பாட்டுத் (geothermal field development) திட்டம் நிறுவப்படவுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) ஹிமாச்சல பிரதேசம்

ஆ) லடாக்

இ) பஞ்சாப்

ஈ) இராஜஸ்தான்

  • இந்தியாவின் முதல் புவிவெப்ப கள மேம்பாட்டுத் திட்டம் லடாக் யூனியன் பிரதேசமான லேவில் நிறுவப்படவுள்ளது. லடாக் யூனியன் பிரதேச நிர்வாகம், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில், லே மற்றும் எண்ணெய் & இயற்கை எரிவாயு கழகம் ஆகியவற்றுக்கு இடையே இந்தத் திட்டம் தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

4. 2021 சன்டான்ஸ் திரைப்பட விழாவில், ‘பார்வையாளர்கள் விருது’ வென்ற இந்திய ஆவணப்படம் எது?

அ) Writing with Fire

ஆ) The Pink Cloud

இ) I was a simple Man

ஈ) The Changing same

  • 2021ஆம் ஆண்டு சன்டான்ஸ் திரைப்பட விழாவில், “Writing with Fire” என்ற இந்திய ஆவணப்படம், ஆவணப்பட பிரிவில், ‘பார்வையாளர்கள் விருதை’ வென்றது. இந்தப் படம் தலித் பெண்கள் நடத்தும் இந்தியாவின் ஒரே செய்தித்தாளான, ‘கபர் லஹாரியா’ உருவானதை விவரிக்கிறது.
  • உலகெங்குமுள்ள தன்னெழுச்சிக் கலைஞர்களை அங்கீகரித்து வரும், அமெரிக்காவைச் சார்ந்த சன்டான்ஸ் இலாப நோக்கற்ற நிறுவனம் இந்த விழாவை நடத்துகிறது.

5. சமக்ர சிக்ஷா திட்ட நிதியுதவி பெற்ற உறைவிடப் பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு யாருடைய பெயரைச் சூட்ட கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது?

அ) மகாத்மா காந்தி

ஆ) ‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோஸ்

இ) சர்தர் வல்லபபாய் படேல்

ஈ) பீ ரா அம்பேத்கர்

  • சமக்ரிக்ஷா திட்டத்தின்கீழ் நிதியுதவிபெறும் 383 உறைவிடப் பள்ளிகள் மற்றும் 680 விடுதிகளுக்கு, ‘‘நேதாஜி’ சுபாஸ் சந்திரபோஸ் உறைவிடப் பள்ளிகள்’ என்று கல்வி அமைச்சகம் பெயரிடவுள்ளது.
  • குறைவான மக்கள்தொகைகொண்ட பகுதிகள் மற்றும் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளில் பள்ளிப்படிப்பை மேம்படுத்துவதற்காக சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ், உறைவிடப்பள்ளிகளைத்தொடங்கி நடத்துதற்கு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கல்வி அமைச்சகம் நிதி உதவி அளித்து வருகிறது.

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘வணிக நம்பிக்கைக் குறியீட்டை’ வெளியிடுகிற நிறுவனம் எது?

அ) RBI

ஆ) NABARD

இ) NCAER

ஈ) SEBI

  • வணிக நம்பிக்கைக்குறியீட்டை (Business Confidence Index) தில்லியைச் சார்ந்த பொருளாதார மதியுரையகமான தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (NCAER) உருவாக்கியுள்ளது. இதன் சமீப பதிப்பின் படி, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது & மூன்றாம் காலாண்டுகளுக்கு இடையே இக்குறியீடு, 29.6% அதிகரித்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள், 500 நிறுவனங்களின் பதில்களை அடிப்படையாகக் கொண்டவை.

7. சமீப செய்திகளில் இடம்பெற்ற, “அல்-அமல்” என்பது பின்வரும் எந்த நாட்டின் ஆளில்லா விண்வெளி ஆய்வுக்கலமாகும்?

அ) இஸ்ரேல்

ஆ) ஐக்கிய அரபு அமீரகம்

இ) கத்தார்

ஈ) ஓமான்

  • ‘அல்-அமல்”, (அரபியில் ‘நம்பிக்கை’), என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆளில்லா விண்வெளி ஆய்வுக்கலமாகும். இவ்விண்வெளித்திட்டம் அரபு நாடுகளின் முதல் விண்வெளித் திட்டமாகும். இது, செவ்வாய்க் கோளின் சுற்றுப்பாதையை அடைந்து, அதன் வானிலை குறித்து ஆய்வுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஆண்டு ஜப்பானிலிருந்து இந்த ஆய்வுக் கலத்தை ஏவியது. 2024ஆம் ஆண்டுக்குள் ஆளில்லா ஊர்தி ஒன்றை திங்களுக்கு அனுப்பவும் ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது.

8. ATP கோப்பைக்கான டென்னிஸ் போட்டியை வென்ற நாடு எது?

அ) இத்தாலி

ஆ) இரஷ்யா

இ) சுவிச்சர்லாந்து

ஈ) பிரான்ஸ்

  • அண்மையில் மெல்போர்னில் நடந்த ATP கோப்பைக்கான டென்னிஸ் போட்டியில், இரஷ்யா இத்தாலியை தோற்கடித்தது.
  • டேனியல் மெட்வெடேவ் மற்றும் ஆண்ட்ரி ரூப்லெவ் ஆகியோர் ஒற்றையர் போட்டிகளில் நேர் செட்களில் வென்றனர். இந்த வெற்றியின் மூலம், இரண்டு ரஷ்ய வீரர்களும் ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டிக்கு முன்னேறினர். யர்ரா வேலி கிளாசிக் இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் ஆஷ்லீ பார்ட்டி தனது ஒன்பதாவது WTA ஒற்றையர் பட்டத்தை வென்று ஆஸ்திரேலிய ஓப்பனில் நுழைகிறார்.

9. சமீப செய்திகளில் இடம்பெற்ற, தபோவன் ஹைடல் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ) உத்தரகண்ட்

ஆ) ஹிமாச்சல பிரதேசம்

இ) அருணாச்சல பிரதேசம்

ஈ) நாகாலாந்து

  • உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறைச் சரிவு ஏற்பட்டதை அடுத்து நிகழ்ந்த பெருவெள்ளத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் சென்றனர். ரிஷிகங்கா சிறிய நீர்மின்திட்டம் மற்றும் தேசிய அனல்மின் கழகத்தின் தபோவன் திட்டம் ஆகிய இரண்டு நீர்மின் திட்டங்களும் இந்தப் பெருவெள்ளத்தில் சேதமடைந்தன. இத்திட்டங்கள், மாநிலத்தின் தெளலிகங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ளன.

10. உலக பருப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) பிப்ரவரி 8

ஆ) பிப்ரவரி 9

இ) பிப்ரவரி 10

ஈ) பிப்ரவரி 11

  • கடந்த 2019ஆம் ஆண்டில், ஐநா பொது அவை, பிப்.10ஆம் தேதியை உலக பருப்பு நாளாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, உணவு மற்றும் உழவு அமைப்பின் தலைமையில், உலகெங்கிலும் உள்ள பருப்பு வகைகளின் சர்வதேச ஆண்டாக, கடந்த 2016ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
  • பருப்பு வகைகளின் ஊட்டச்சத்து மதிப்புகள் மற்றும் பருப்பு வகைகள் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை சமாளிக்கும் வழிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது. #Love_ Pulses என்ற முழக்க வரியினைக்கொண்டு இந்த ஆண்டுக்கான (2021) உலக பருப்பு நாள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டது.

தமிழக நடப்பு நிகழ்வுகள்

  • சென்னை சர்வதேச திரைப்பட விழாவானது பிப்.18 முதல் பிப்.25 வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் 53 நாடுகளைச் சேர்ந்த 91 திரைப்படங்கள் பங்குபெறவுள்ளன.
  • தொடக்கவிழா திரைப்படமாக பிரான்ஸ் நாட்டின் ‘The Girl with a Bracelet’ படமும், நிறைவுவிழா திரைப் படமாக ஜெர்மனி நாட்டின் ‘I was, I am, I will be’ என்ற திரைப்படமும் திரையிடப்படுகின்றன. தமிழ்ப்படங்களுக்கான பிரிவில் 13 தமிழ்த்திரைப்படங்கள் பங்கேற்கின்றன. இந்த விழாவுக்கு, தமிழ்நாடு அரசு `75 இலட்சம் நிதியுதவி செய்துள்ளது.
  • கிருபானந்த வாரியாரின் பிறந்தநாளான ஆகஸ்ட்.25, அரசு விழாவாக கொண்டாடப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் க பழனிசாமி அறிவித்துள்ளார். காலஞ்சென்ற முன்னாள் முதலமைச்சர் ம கோ இராமச்சந்திரனுக்கு, ‘பொன்மனச்செம்மல்’ என்ற சிறப்புப்பட்டத்தை வழங்கியவர் கிருபானந்த வாரியார் என்பது குறிப்பிடத்தக்கது.

1. Dobhi – Durgapur Natural Gas Pipeline, a part of Pradhan Mantri Urja Ganga project, is located in which state?

A) Assam

B) West Bengal

E) Odisha

D) Bihar

  • The Prime Minister of India Narendra Modi dedicated the 348 km Dobhi – Durgapur Natural Gas Pipeline section. The LPG import terminal is a part of the Pradhan Mantri Urja Ganga project.
  • He also laid the foundation stone of the 2nd Catalytic–Isodewaxing unit of Haldia Refinery in the state.

2. ‘Asom Mala’ programme has been launched in which Indian state?

A) Arunachal Pradesh

B) Assam

C) Sikkim

D) Bihar

  • Prime Minister Narendra Modi launched a programme in the state of Assam named ‘Asom Mala’. It aims to improve state highways and major district roads.
  • The programme also aims to provide quality inter–linking roads between the National Highways and the Rural roads. Another objective of the scheme is to promote ‘Multi–modal transportation’ in the state.

3. India’s first geothermal field development project is to be established in which state?

A) Himachal Pradesh

B) Ladakh

C) Punjab

D) Rajasthan

  • India’s first–ever geothermal field development project is to be established in Leh, Union Territory of Ladakh.
  • A tripartite agreement regarding the project has been signed between Union Territory Administration Ladakh, Ladakh Autonomous Hill Development Council, Leh and Oil and Natural Gas Corporation (ONGC).

4. Which Indian documentary film won the audience award at the Sundance Film Festival 2021?

A) Writing with Fire

B) The Pink Cloud

C) I was a simple Man

D) The Changing same

  • An Indian documentary film titled “Writing with Fire”, won the audience award in the World Cinema Documentary category at the Sundance Film Festival 2021. The film narrates the rise of India’s only newspaper run by Dalit women, the ‘Khabar Lahariya’.
  • The festival is presented by US–based Sundance non–profit institute, which has been recognising independent artists across the world.

5. Education Ministry is to rename Samagra Shiksha Scheme–funded residential schools and hostels after whose name?

A) Mahatma Gandhi

B) ‘Netaji’ Subash Chandra Bose

C) Sardar Vallabhbhai Patel

D) B R Ambedkar

  • The Education Ministry is set to name the 383 residential schools and 680 hostels funded under the Samagra Shiksha Scheme as ‘Netaji Subhas Chandra Bose residential schools.
  • Under the Samagra Shiksha Scheme, the Ministry provides financial assistance to States and UTs to open and run residential schools, to promote schooling in less populated areas and tribal areas.

6. ‘Business Confidence Index’, which was making news recently, is released by which institution?

A) RBI

B) NABARD

C) NCAER

D) SEBI

  • The Business Confidence Index (BCI) is developed by the Delhi–based economic think tank National Council of Applied Economic Research (NCAER). As per the recent edition, the index increased 29.6 percent between second and third quarter of the current financial year. The survey findings are based on the responses from 500 companies.

7. “Al–Amal”, which was making news recently, is the unmanned space probe of the country?

A) Israel

B) UAE

C) Qatar

D) Oman

  • “Al–Amal” (‘Hope’ in Arabic), is the unmanned space probe of the United Arab Emirates. The ambitious space programme is the first interplanetary mission of the Arab countries.
  • It is expected to reach the orbit of Mars and study on its weather. UAE launched the probe from Japan last year. It also has plans to launch an unmanned rover to the moon by 2024.

8. Which country clinched the ATP Cup tennis tournament?

A) Italy

B) Russia

C) Switzerland

D) France

  • Russia defeated Italy to clinch the ATP Cup tennis tournament, held recently in Melbourne. Daniil Medvedev and Andrey Rublev won their singles matches in straight sets. With this win, the two Russian players head into the Australian Open.
  • Ashleigh Barty also enters the Australian Open by winning her ninth WTA singles title by wiining the Yarra Valley Classic final.

9. Tapovan hydel project, which was making news recently, is located in which Indian state

A) Uttarakhand

B) Himachal Pradesh

C) Arunachal Pradesh

D) Nagaland

  • After the Glacier burst occurred in the state of Uttarakhand, over hundred persons are missing in the massive flash flood.
  • The flood washed away two hydel power projects namely the Rishiganga small hydro project and National Thermal Power Corporation’s (NTPC) Tapovan project. The projects are located on the banks of the Dhauliganga river in the state.

10. When is the World Pulses Day observed, across the world?

A) February 8

B) February 9

C) February 10

D) February 11

  • In 2019, the United Nations General Assembly announced 10 February as the World Pulses Day. This was followed by the celebration of the year 2016 as the International Year of Pulses (IYP), across the world, led by the Food and Agriculture Organization.
  • The day is celebrated to raise awareness about the nutritional values of pulses and ways to tackle malnutrition through pulses. In this year 2021, World Pulses Day was celebrated on social media with the hash tag #Love_Pulses.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!