Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

11th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

11th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 11th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

11th January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. பின்வரும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில், பறவைக் காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்திய அரசு ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது?

அ) தில்லி

ஆ) கர்நாடகா

இ) இராஜஸ்தான்

ஈ) தெலங்கானா

  • நாட்டின் சில மாநிலங்களில் காகங்கள் & வெளிநாட்டுப்பறவைகளிடம், பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், இவற்றை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை அமல்படுத்தவும், மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படவும் தில்லியில் கட்டுப்பாட்டு உதவி மையத்தை மத்திய கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்தக் கட்டுப்பாட்டு அறை, நிலைமையை கண்காணிப்பதும், மாநில அதிகாரிகள் மேற்கொண்ட தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தினசரி அடிப்படையில் பதிவு செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. சமீபத்தில் ‘திறன்மிகு தொழிலாளர்’ குறித்த எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது?

அ) ஜப்பான்

ஆ) அமெரிக்கா

இ) தென் கொரியா

ஈ) ஆஸ்திரேலியா

  • “குறிப்பிட்ட திறன்மிகு தொழிலாளர்” தொடர்பான அமைப்பு முறையை உருவாக்குவதற்கான அடிப்படை கட்டமைப்பிற்கான இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • செவிலியர் பணி, கட்டிட தூய்மைப் பணி, சரக்கு கையாளும் தொழில், உள்ளிட்ட பதினான்கு தொழில் துறைகளில், தகுதியுள்ள, திறன்மிகு இந்திய தொழிலாளர்கள், ஜப்பான் நாட்டில் பணிபுரிவதற்கு இந்த உடன்படிக்கை வழிவகுக்கும். ஜப்பானில் பணிபுரியப்போகும் இந்திய தொழிலாளர்களுக்கு, “குறிப்பிட்ட திறன்மிகு பணியாளர்” என்ற உறைவிட அந்தஸ்தை ஜப்பான் அரசு வழங்கவுள்ளது.

3. NSO’இன் முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, 2020-21 நிதியாண்டில், இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி / சுருக்கம் என்னவாக இருக்கும்?

அ) + 3.2%

ஆ) + 1.2%

இ) – 6.4%

ஈ) – 7.7%

  • மத்திய புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம், 2020-2021 நிதியாண்டிற்கான ஆண்டு வருமானத்தின் முன்கூட்டிய உத்தேச மதிப்பீடுகளை வெளியிட்டது. 2020-2021ஆம் ஆண்டில் GDP வளர்ச்சி -7.7 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-2020ஆம் ஆண்டில் இது 4.2 சதவீதமாக இருந்தது.
  • நடப்பு நிதியாண்டில் வேளாண்மையைத்தவிர அனைத்து துறைகளிலும் சுருக்கம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் துறையில் சுருக்கம் 9.4% ஆக இருக்கக்கூடும். வேளாண் துறை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 3.4% வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

4. NFHS-5’இன் பாதகங்களை கண்டு ஆராய்வதற்காக சுகாதார அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

அ) ஹர்ஷ் வர்தன்

ஆ) பிரீத்தி பந்த்

இ) இராதாகிருஷ்ணன்

ஈ) அபிநவ் குப்தா

  • தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5’இன் பாதகங்களை கண்டறிவது குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்ப நிபுணர் குழுவை சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் அமைத்துள்ளது. இணைச் செயலாளர் பிரீத்தி பந்த் தலைமையிலான இந்தக் குழு, ஊட்டச்சத்து குறைபாடு, குன்றல் நோய், குருதிச்சோகை மற்றும் C பிரிவு ஆகியவற்றுடன் தொடர்புடைய காரணிகளை மேம்படுத்த கொள்கை தலையீடுகளையும் பரிந்துரைக்கும்.
  • இந்தக் குழுவில் மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மாநில திட்ட அதிகாரிகள் உள்ளனர்.

5. இந்திய-அமெரிக்க மருத்துவர் இராஜ், பின்வரும் எந்த நாட்டின் இராணுவத்தின் முதல் தலைமைத் தகவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்?

அ) சிங்கப்பூர்

ஆ) அமெரிக்கா

இ) ஜப்பான்

ஈ) பிரிட்டன்

  • அமெரிக்க இராணுவத்தின் முதல் தலைமைத் தகவல் அதிகாரியாக இந்திய-அமெரிக்கர் Dr இராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2020 ஜூலையில் உருவாக்கப்பட்ட இப்பதவி 3 நட்சத்திர ஜெனரலுக்கு சமமானதாகும். அமெரிக்க இராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப நடவடிக்கைகளுக்காக, 16 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தை அவர் மேற்பார்வையிடுவார்.
  • அமெரிக்க இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான கொள்கை மற்றும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் அவர் வழிநடத்துவார். அவர் இராணுவ செயலாளரின் முதன்மை ஆலோசகராக பணியாற்றுகிறார்.

6. வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட, ‘Fatah-1’ என்பது பின்வரும் எந்நாட்டின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையாகும்?

அ) ஐக்கிய அரபு அமீரகம்

ஆ) இஸ்ரேல்

இ) பாகிஸ்தான்

ஈ) ஆப்கானிஸ்தான்

  • உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வழிசெலுத்தப்பட்ட பல்-ஏவு ஏவுகணை முறைமையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்துள்ளது. ‘பத்தா-1’ என்று பெயரிடப்பட்ட இந்த அமைப்பு, 140 கி.மீ தூர வரம்பில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது.
  • வழிசெலுத்தப்பட்ட இப்பல்-ஏவு ஏவுகணை முறைமை, வழக்கமான ஏவுகணைகளைவிட மிகத்துல்லியமாக தாக்கும்.

7. லடாக்கின் நிலத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவர் யார்?

அ) அமித் ஷா

ஆ) G கிஷன் ரெட்டி

இ) ராவ் இந்திரஜித் சிங்

ஈ) ஜித்தேந்திர சிங்

  • லடாக்கின் மொழி, கலாச்சாரம் மற்றும் நிலத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு குழுவை அமைக்க இந்திய அரசு முடிவுசெய்துள்ளது. இக்குழுவுக்கு உள்துறை இணையமைச்சர் G கிஷன் ரெட்டி தலைமைதாங்குவார். இதில் லடாக், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில், மத்திய அரசு மற்றும் லடாக் நிர்வாகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அடங்குவர்.

8. உலக உணவுவிலைக்குறியீட்டை வெளியிடுகின்ற அமைப்பு எது?

அ) UNICEF

ஆ) FAO

இ) WWF

ஈ) WFP

  • ஐநா உணவு நிறுவனமான உணவு மற்றும் உழவு அமைப்பு, உலக உணவுவிலைக்குறியீட்டை வெளியிடுகிறது. அண்மைய பதிப்பின்படி, கடந்த நவம்பர் மாதத்தில் 105.2 ஆக இருந்த உலக உணவு விலைகள் தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக தற்போது டிசம்பர் மாதத்தில் 107.5 புள்ளிகளாக உயர்ந்துள்ளன. சர்க்கரையைத் தவிர்த்து உணவுக் குறியீட்டின் அனைத்து முக்கிய வகைகளும் உயர்ந்துள்ளன.

9. உலகின் முதல் இரட்டையடுக்கு மிகநீண்ட பெட்டக இரயிலை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?

அ) ஜப்பான்

ஆ) சீனா

இ) இந்தியா

ஈ) இரஷ்யா

  • சமீபத்தில் இந்தியா உலகின் முதல் இரட்டையடுக்கு மிகநீண்ட தூர பெட்டக இரயிலை அறிமுகப்படுத்தியது. மேற்கு பிரத்யேக சரக்குப் பாதையின் 306 கி.மீ தூர ரெவாரி மதார் பிரிவையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இப்பிரிவு தொடங்கப்படுவதன்மூலம், மேற்கு மற்றும் கிழக்கு சரக்குப் பாதைகள் இடையே தடையற்ற இணைப்பு ஏற்படும்.

10. சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) அமைக்கப்பட்ட கல்வி ஆலோசனைக்குழுவின் தலைவர் யார்?

அ) B P கனுங்கோ

ஆ) R காந்தி

இ) N S விஸ்வநாதன்

ஈ) உர்ஜித் படேல்

  • ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையாளர்கள் கல்லூரியின் முழுநேர இயக்குநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு கல்வி ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவின் தலைவராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் N S விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த நடவடிக்கை அதன் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை ஊழியர்களிடையே மேற்பார்வையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

1. The Indian Government has set up a control room to control the spread of Bird Flu in which state/UT?

A) Delhi

B) Karnataka

C) Rajasthan

D) Telangana

  • The Central Government has set up a control room in the national capital, amidst the spread of the bird flu or avian flu viruses across the country in four states. The control room aims to monitor the situation and record the preventive and control measures undertaken by the state authorities, on a daily basis.

2. India recently signed an MoU with which country regarding the partnership in “Specified Skilled Worker”?

A) Japan

B) USA

C) South Korea

D) Australia

  • The Indian Government has approved the memorandum of cooperation on a framework for partnership related to “Specified Skilled Worker” between India and Japan.
  • As per the agreement, the skilled Indian workers, who have qualified the skill test and Japanese language test, will be granted a new status of residence of ‘Specified Skilled Worker’ by the Government of Japan. They will work in fourteen specified sectors in Japan.

3. As per the NSO’s first advanced estimates, what would be the GDP growth/contraction in India, in FY 2020–21?

A) + 3.2%

B) + 1.2%

C) – 6.4%

D) – 7.7%

  • As per the first advanced estimates of the national income released by the National Statistical Office (NSO), India’s real Gross Domestic Product (GDP) in FY 2020–21 is estimated to contract by 7.7%.
  • This is against the growth rate of 4.2% in the fiscal year 2019–20. There is an estimated contraction in all sectors except the agriculture in the current fiscal. While manufacturing sector is likely contract by 9.4%, Agri sector is estimated to grow by 3.4% compared to the last year.

4. Who is the head of the panel constituted by the Health Ministry, to look into the adverse findings of the NFHS–5?

A) Harsh Vardan

B) Preeti Pant

C) Radha Krishnan

D) Abhinav Gupta

  • The Health and Family Welfare Ministry has set up a technical expert group to study the adverse findings from the National Family Health Survey–5. The committee, chaired by Joint Secretary Preeti Pant, will also recommend policy interventions to improve the factors associated with malnutrition, stunting, anaemia, and C–section.
  • The panel includes experts from medicine and nutrition and State programme officers.

5. Indian–American Dr Raj, has been named the first Chief Information Officer of the Army of which country?

A) Singapore

B) USA

C) Japan

D) UK

  • Indian–American Dr Raj has been named as the first Chief Information Officer of the US Army. The position is equivalent in rank to a three–star General, and it was created in July 2020.
  • He will supervise an annual budget of USD 16 billion for the IT operations of the US Army. He will also direct the execution of policies and programmes to modernise the US Army. He serves as the principal advisor to the Secretary of the Army.

6. ‘Fatah–1’, which was successfully tested, is the indigenous Rocket system of which country?

A) UAE

B) Israel

C) Pakistan

D) Afghanistan

  • Pakistan has successfully conducted the test–flight of an indigenously developed Guided Multi Launch Rocket System.
  • Named as ‘Fatah–1’, the system is capable of hitting targets up to a range of 140 km. The Guided Multi Launch Rocket System can deliver conventional warheads with utmost precision, as per the Army sources of the country.

7. Who is the head of the panel for conserving Ladakh’s land and culture?

A) Amit Shah

B) G Kishan Reddy

C) Rao Inderjit Singh

D) Jitendra Singh

  • The Government of India has decided to form a committee to protect the language, culture and land of Ladakh. The Committee will be headed by the Minister of State for Home G Kishan Reddy.
  • It will also include elected representatives from Ladakh, Ladakh Autonomous Hill Development Council, central government, and the Ladakh administration.

8. Which organisation releases the World Food Price Index?

A) UNICEF

B) FAO

E) WWF

D) WFP

  • The United Nations food agency, the Food and Agriculture Organization releases the World Food Price Index. As per the latest edition, the World food prices increased for a seventh consecutive month in December at 107.5 points against 105.2 in November. All major categories of the food index recorded rise, except sugar.

9. Which country launched the world’s first double stack long–haul container train?

A) Japan

B) China

C) India

D) Russia

  • India recently launched the world’s first double stack long–haul container train. Prime Minister Narendra Modi inaugurated the train on the 306 km–long Rewari–Madar section of the Western Dedicated Freight Corridor (WDFC).
  • One such train carries freight equivalent to 270 high–capacity trailer trucks. The Dedicated Freight Corridor Corporation of India is constructing the Western and Eastern Dedicated Freight Corridor.

10. Who is the Chairperson of the academic advisory council, recently set up by the Reserve Bank of India (RBI)?

A) B P Kanungo

B) R Gandhi

C) N S Vishwanathan

D) Urjith Patel

  • The Reserve Bank of India (RBI) has set up an academic advisory council to advise the full–time director of the RBI’s College of Supervisors (CoS). Former RBI Deputy Governor N S Vishwanathan has been named the chairperson of the council.
  • This move aims to strengthen supervision over regulated entities and supervisory skills among its regulatory and supervisory staff.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!