Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

11th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

11th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 11th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. எந்த இந்திய நிறுவனத்தின் துணை நிறுவனம் திருகோணமலை எண்ணெய் சேமிப்புக் கிடங்கை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது?

அ) இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 

ஆ) பாரத் பெட்ரோலியம்

இ) இந்துஸ்தான் பெட்ரோலியம்

ஈ) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்

  • இலங்கா IOC, இலங்கை பெட்ரோலியக் கார்ப்பரேஷன் மற்றும் இலங்கை அரசாங்கம் திருகோணமலை எண்ணெய் சேமிப்புக் கிடங்கை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான குத்தகை ஒப்பந்தங்களில் கைச் சாத்திட்டன. இதற்கேற்ப 14 கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கும், 24 கச்சா எண்ணெய் சேமிப்பு தொட்டிகள் இலங்கை பெட்ரோலிய கார்ப்பரேஷனுக்கும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.
  • எஞ்சிய 61 கச்சா எண்ணெய் சேமிப்புக்கிடங்குகள் இந்திய எண்ணெய் நிறுவனம் மற்றும் இலங்கை பெட்ரோலியக் கார்பரேஷன் ஆகிய கூட்டிணைந்த நிறுவனத்திற்கும் கூட்டாக குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்நிறுவனத்தின் 51% பங்குகள் இலங்கை பெட்ரோலிய நிறுவனத்திற்கும் 49 வீத பங்குகள் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘குண்ட்கட்டி’ சட்டம், எந்த இந்திய மாநிலம்/யூடியில் நடைமுறையில் உள்ளது?

அ) ஹிமாச்சல பிரதேசம்

ஆ) ஜார்கண்ட் 

இ) சிக்கிம்

ஈ) உத்தரகாண்ட்

  • சட்டத்துக்குப் புறம்பாக மரங்களை வெட்டி விற்பனை செய்ததாகக் கூறி ஒருவரை கிராம மக்கள் சிலர் தாக்கி உள்ளனர். ‘குண்ட்கட்டி’ சட்டத்தை மீறியதற்காக அந்நபர் காவல்துறையின் முன்னிலையில் உயிருடன் எரிக்கப்பட் -டார். ‘குண்ட்கட்டி’ அமைப்பு என்பது பழங்குடியினரின் பரம்பரை அடிப்படையிலான நிலத்தை கூட்டாக வைத்திருக்கும் ஒரு முறையாகும்.
  • இந்த முறையின்படி, முண்டா பழங்குடியினர் மரங்களை வெட்டி விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்வார்கள், அது ஒரு தனி நபருக்கு பதிலாக முழு இனத்திற்கும் சொந்தமானதாக பார்க்கப்படும்.

3. ஜப்பான் சமீபத்தில் எந்த நாட்டுடன், ‘பரஸ்பர அணுகல் ஒப்பந்தம்’ கையெழுத்திட்டது?

அ) அமெரிக்கா

ஆ) ஆஸ்திரேலியா 

இ) பிரேசில்

ஈ) ரஷ்யா

  • பாதுகாப்பான மற்றும் நிலையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதற்காக, ஜப்பான் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடனான ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ மற்றும் பொருளாதார செல்வாக்கு விரிவாக்கத்தின் மத்தியில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. “Reciprocal Access Agreement” என அழைக்கப்படும் இது, ஜப்பானின் இரண்டாவது இத்தகைய ஒப்பந்தமாகும். ஜப்பானின் மற்றொரு இராணுவ ரீதியிலான ஒப்பந்தம் அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

4. ‘Integrated Approach in S&T for Sustainable Future’ என்பது எந்த நாளுக்கானக் கருப்பொருளாகக் அறிவிக்கப்பட்டுள்ளது?

அ) உலக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நாள்

ஆ) தேசிய அறிவியல் நாள் 

இ) உலக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நாள்

ஈ) தேசிய புத்தாக்க நாள்

  • இந்த ஆண்டு (2021) தேசிய அறிவியல் நாளுக்கான கருப் பொருள் “Integrated Approach in S&T for Sustainable Future” என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம் சமீபத்தில் இதனை அறிவித்தது.
  • அறிவியல்சார் விஷயங்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக இக்கருப்பொருள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய இயற்பியலாளர் சர் CV ராமன் ‘இராமன் விளைவைக்’ கண்டுபிடித்ததைக் குறிக்கும் வகையில் பிப்.28 அன்று இந்தியாவில் தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது.

5. APEDA’இன் கூற்றுப்படி, 2020-21’இல் இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்பட்ட முதன்மைப் பொருள் எது?

அ) பாஸ்மதி அல்லாத அரிசி 

ஆ) தக்காளி

இ) பருத்தி

ஈ) பால்

  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டாணையத்தின் (APEDA) கூற்றுப்படி, 2020-21ஆம் ஆண்டில், பாஸ்மதி அல்லாத அரிசி, பாசுமதி அரிசி மற்றும் எருமை இறைச்சி ஆகியவை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட முதல் 3 தயாரிப்புகளாகும்.
  • APEDA’இன் கூற்றுப்படி, மொத்த ஏற்றுமதி மதிப்பு 2011-12’இலிருந்த `83,000 கோடியுடன் ஒப்பிடுகையில் 2020 -21’இல் `15 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

6. இரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?

அ) ஷோபித் திரிபாதி

ஆ) வினை குமார் திரிபாதி 

இ) இராஜேஷ் அரோரா

ஈ) குமார் வர்மா

  • இரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக வினைகுமார் திரிபாதியை நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது அவர் வடகிழக்கு இரயில்வே பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். அவர், 1983 பேட்ச் இந்திய இரயில்வே சர்வீஸ் ஆஃப் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்ஸ் (IRSEE) ஆவார்.

7. கீழ்காணும் எவ்வமைச்சகத்தால் ‘பதே பாரத் பிரச்சாரம்’ தொடங்கப்பட்டது?

அ) பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஆ) கல்வி அமைச்சகம் 

இ) உள்துறை அமைச்சகம்

ஈ) பாதுகாப்பு அமைச்சகம்

  • மத்திய கல்வி அமைச்சகம் 2022 ஜனவரி.1 தொடர்ந்து 100 நாட்களுக்கு ‘பதே பாரத் பிரச்சாரம்’ என்ற பெயரில் வாசிப்பு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
  • இந்தப்பிரச்சாரம் பாலர் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வாசிப்புத்திறன், சொல்லகராதி மற்றும் சிந்தனை திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

8. 2021-22’இல் விஜய் ஹசாரே கோப்பையை வென்ற மாநில அணி எது?

அ) தமிழ்நாடு

ஆ) ஹிமாச்சல பிரதேசம் 

இ) ஒடிஸா

ஈ) கர்நாடகா

  • ஜெய்ப்பூரில் நடைபெற்ற 2021-22 பதிப்பில், ஹிமாச்சலப் பிரதேசம் VJD முறையில் தமிழ்நாட்டு அணியை வீழ்த்தி, அதன் முதல் விஜய் ஹசாரே கோப்பையை வென்றது.
  • தமிழ்நாடு அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி ஆகும். ரஞ்சி ஒருநாள் டிராபி என்று அழைக்கப்படும் விஜய் ஹசாரே கோப்பை 2002-03’இல் தொடங்கப்பட்டது. புகழ் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் ஹசாரேவின் நினைவாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

9. சீனா சமீபத்தில் எந்த இந்திய மாநிலத்தில் உள்ள 15 இடங்களுக்கான ‘பெயர்களின்’ பட்டியலை வெளியிட்டது?

அ) மிசோரம்

ஆ) நாகாலாந்து

இ) திரிபுரா

ஈ) அருணாச்சல பிரதேசம் 

  • அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 15 இடங்களின் “தரப்படுத்தப்பட்ட” பெயர்களை சீன சிவில் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் 90,000 சகிலோமீட்டர் பரப்பளவை சீனா தனது சொந்தப் பகுதி எனக்கூறிவருகிறது. அது 2017இல் அம்மாநிலத்தை “தெற்கு திபெத்” என்று அழைத்தது.
  • மறுபெயரிடுவது இந்தியாவின் இறையாண்மையை அம் மாநிலத்திலிருந்து விலக்காது என்று இந்தியா, சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

10. நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகம் எத்தயாரிப்புக்கு ‘நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு – Extended Producer Responsibility’ குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது?

அ) உயிரி மருத்துவக் கழிவுகள்

ஆ) கழிவு டயர்கள் 

இ) நெகிழிக்கழிவுகள்

ஈ) மின்னணு கழிவுகள்

  • சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சகம், கழிவு டயர்களுக்கான “நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு” குறித்த விதிமுறைகளின் வரைவு அறிவிப்பை வெளியிட்டது. இறுதி செய்யப்பட்டால், புதிய நிதியாண்டு முதல் இந்த வரைவு அமலுக்கு வரும். இந்தியா ஒவ்வோர் ஆண்டும் சுமார் 275,000 டயர்களை நிராகரிக்கிறது; ஆனால் அதற்கான விரிவான திட்டம் நாட்டிடம் இல்லை.
  • கழிவு டயர்கள் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானதாக மேலாண்மை செய்யப்படுவதை உறுதிசெய்வது டயர் உற்பத்தியாளரின் பொறுப்பாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சென்னை ஐஐடி’க்கு புதிய இயக்குநர் நியமனம்

சென்னை ஐஐடி இயக்குநராக இருந்த பாஸ்கர் ராமமூர்த்தி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அந்த பணியிடம் காலியாக இருந்தது.

இதைத்தொடர்ந்து சென்னை ஐஐடி’இன் புதிய இயக்குநராக பேராசிரியர் காமகோடி நியமிக்கப்பட்டு உள்ளார். இதைப்போல தில்லி ஐஐடி இயக்குநராக மும்பை ஐஐடி பேராசிரியர் ரங்கன் பானர்ஜி, மாண்டி ஐஐடி இயக்குநராக கான்பூர் ஐஐடி பேராசிரியர் லட்சுமிதர் பெகேரா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் மும்பை ஐஐடி பேராசிரியர் சுகாஸ் ஜோஷி, இந்தூர் ஐஐடி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

2. அஞ்சல்தலை கண்காட்சி

தமிழக அஞ்சல்துறை சார்பில், ‘டிஎன் டிஜிபெக்ஸ்-2022’ என்ற மாநில அளவிலான மெய்நிகர் அஞ்சல்தலை கண்காட்சி ஜன.7ஆம் தேதி தொடங்கி ஜனவரி.10 வரை நடைபெற்றது. ‘அஞ்சல்தலை சொல்லும் கலை’ என்ற பெயரில் நடைபெற்ற இதன் நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது.

3. மின் கட்டணத்தைக் கணக்கிட விரைவில் செயலி

மின் கட்டணத்தைக் கணக்கிட விரைவில் கைப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சேவைகளை எண்ம வடிவில் வழங்கும் முயற்சியை மின்வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது நுகர்வோரே மின் கட்டணத்தைக் கணக்கிடும் வகையில் கைப்பேசி செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து, கட்டணத்தை கணக்கீடு செய்யலாம். மேலும், அச்செயலியில் மீட்டர் நிழற்படத்தை பதிவேற்றம் செய்த ஒரு சில நிமிஷங்களில் மின் கட்டண ரசீது, குறுஞ்செய்தி வாயிலாக நுகர்வோருக்கு அனுப்பப்படும்.

4. சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அரசு கல்லூரியாக அறிவிப்பு

ஈரோடு மக்களின் இருபதாண்டு கால கோரிக்கையை ஏற்று சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

5. தமிழ்ப்பல்கலையில் அரிய தாள் ஆவணங்கள் – மரபு சார் பாதுகாப்பு ஆய்வகம் தொடக்கம்

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அரிய தாள் ஆவணங்கள் – மரபுசார் பாதுகாப்பு ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப்பல்கலைக்கழக அரிய கையெழுத்துச் சுவடித் துறையில் உள்ள கையெழுத்துச் சுவடிகளும், பல்கலைக் கழகப் பொது நூலகத்தில் உள்ள காலத்தால் பழமையான நூல்களும் இந்த ஆய்வகத்தின் வழியாகப் பாதுகாக்கப்படும். இந்த ஆய்வகப் பணியின் வழியாகத் தமிழ்மரபில் உள்ள மரபுசார்ந்த பாதுகாப்பு முறைகளுக்கா -ன காப்புரிமை பெறுவதற்கு ஆவன செய்யப்படும்.

1. The subsidiary of which Indian company signed agreements on jointly developing the Trincomalee oil tank farm?

A) Indian Oil Corporation 

B) Bharat Petroleum

C) Hindustan Petroleum

D) Oil and Natural Gas Corporation

  • Lanka IOC, Ceylon Petroleum Corporation and the Government of Sri Lanka signed lease agreements on jointly developing the Trincomalee oil tank farm. Indian Oil Corporation’s subsidiary Lanka IOC is set to run the 14 oil storage tanks while CPC would run 24 tanks. Trinco Petroleum Terminal Pvt. Ltd would develop the remaining 61 tanks, in a joint venture where 51% stakes will be held by CPC and 49% by Lanka IOC.

2. ‘Khuntkatti’ law, which was seen in the news recently, is practised in which Indian state/UT?

A) Himachal Pradesh

B) Jharkhand 

C) Sikkim

D) Uttarakhand

  • A man was beaten by some villagers for allegedly cutting off trees illegally and selling them. The man was burned alive in front of police, for violating the ‘Khuntkatti’ law. The ‘Khuntkatti’ system is a tribal lineage–based system of joint holding of land.
  • According to the system, the Munda tribals would clear the trees and prepare the land for farming, which would then belong to the entire clan instead of a single person.

3. Japan recently signed ‘Reciprocal Access Agreement (RAA)’ with which country?

A) USA

B) Australia 

C) Brazil

D) Russia

  • Japan recently signed a historic Defence Agreement with Australia, to ensure a secure and stable Indo–Pacific region. This agreement has been signed amidst the expansion of China’s military and economic influence in the region. Called the Reciprocal Access Agreement (RAA)’, this is Japan’s second such agreement. Japan’s only other military pact is with the United States.

4. ‘Integrated Approach in S&T for Sustainable Future’ has been declared as the theme of which special day?

A) World Science and Technology Day

B) National Science Day 

C) World Research and Development Day

D) National Innovation Day

  • The theme for this year’s National Science Day is announced as ‘Integrated Approach in S&T for Sustainable Future’. Union Science and technology Ministry has announced this recently. The theme has been chosen for raising public awareness of the scientific issues. National Science Day is celebrated in India on 28 February to mark the discovery of the Raman effect by Indian physicist Sir C. V. Raman.

5. As per APEDA, which is the top exported commodity in India in 2020–21?

A) Non–Basmati Rice

B) Tomato

C) Cotton

D) Milk

  • As per Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA), Non–Basmati Rice, Basmati Rice and Buffalo Meat are the top 3 exported products from India in the year 2020–21. As per APEDA, the total export basket has increased more than Rs.15 lakh crore in 2020–21 in comparison to Rs.83 thousand crore in 2011–12.

6. Who has been appointed as the Chairman and Chief Executive Officer of the Railway Board?

A) Shobhit Tripathi

B) Vinay Kumar Tripathi 

C) Rajesh Arora

D) Kumar Verma

  • The Appointments Committee of Union Cabinet has approved the appointment of Vinay Kumar Tripathi as the Chairman and Chief Executive Officer of Railway Board. Presently, he is serving as the General Manager, North Eastern Railway. He is a 1983 batch Indian Railway Service of Electrical Engineers (IRSEE).

7. Padhe Bharat campaign is launched by which ministry?

A) Ministry of Women and Child Development

B) Ministry of Education 

C) Ministry of Home Affairs

D) Ministry of Defense

  • The Union Ministry of Education has launched a reading campaign named Padhe Bharat campaign for 100 days starting from January 1, 2022. This campaign is aimed to improve the reading capabilities, vocabulary and thinking abilities of students studying between Balvatika and Class 8. The Government has released a comprehensive guideline on Reading Campaign for the states / UTs to follow.

8. Which State team clinched the Vijay Hazare Trophy title in 2021–22?

A) Tamil Nadu

B) Himachal Pradesh 

C) Odisha

D) Karnataka

  • Himachal Pradesh defeated Tamil Nadu by VJD method to clinch their maiden Vijay Hazare Trophy title in 2021–22 edition, held at Jaipur. Tamil Nadu has been the most successful team with 5 title wins. Vijay Hazare Trophy, also known as the Ranji One–Day Trophy, was started in 2002–03. It is named after the legendary Indian cricketer Vijay Hazare.

9. China has recently released a list of “standardised names” for 15 places in which Indian state?

A) Mizoram

B) Nagaland

C) Tripura

D) Arunachal Pradesh 

  • China’s Ministry of Civil Affairs announced the “standardised” names of 15 places in Arunachal Pradesh. China has been claiming around 90,000 sq km of Arunachal Pradesh as its own territory. It had even called the state as “South Tibet” back in 2017.
  • India, in response announced that the renaming does not take away the sovereignty of India from the state.

10. Environment Ministry released Guidelines on ‘Extended producer responsibility (EPR)’ for which product?

A) Bio–medical Waste

B) Waste Tyres 

C) Plastic Waste

D) e–waste

  • The Ministry of Environment, Forests and Climate Change released the draft notification for regulations for the extended producer responsibility (EPR) for Waste Tyres. If finalised, the draft will be effective from the new fiscal year.
  • India discards around 275,000 tyres each year but the country does not have a comprehensive plan for that. Producer of tyres to ensure environmentally safe management of waste tyres.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!