11th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

11th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 11th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

11th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. “தியான்ஜோ -2” என்பது எந்த நாட்டின் விண்கலமாகும்?

அ) ஜப்பான்

ஆ) ரஷ்யா

இ) சீனா

ஈ) தென் கொரியா

 • தியான்ஜோ-2 அல்லது “Heavenly Vessel” என்பது சீனாவின் சரக்கு கொண்டுசெல்லும் விண்கலமாகும். அது சீனாவால் உருவாக்கப்பட்டுவ -ரும் விண்வெளி நிலையத்திற்கு பொருட்கள், உபகரணங்கள் போன்ற -வற்றை எடுத்துச்சென்றது. அது, அவ்விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதியாக இருக்கும் டியான்ஹே தொகுதியுடன் வெற்றிகரமாக இணை -க்கப்பட்டது. லாங் மார்ச்-7 Y3 ஏவுகணையைப் பயன்படுத்தி புவியில் இருந்து அவ்விண்கலம் ஏவப்பட்டது.

2. பூஜா இராணி போராவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) டேபிள் டென்னிஸ்

ஆ) குத்துச்சண்டை

இ) தடகளம்

ஈ) வில்வித்தை

 • துபாயில் நடந்துவரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பூஜா இராணி போரா தனது இரண்டாவது கண்ட அளவிலான பட்டத்தை வென்றுள்ளார். உஸ்பெகிஸ்தானின் மவ்லுடா மோவ்லோனோவாவுக்கு எதிராக 75 கிகி பிரிவில் 5-0 என்ற கோல் கணக்கில் அவர் வெற்றியை பதிவுசெய்தார்.

3. ஆண்டுதோறும் உலக நலவாழ்வமைப்பால், ‘உலக புகையிலை ஒழிப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) மே.29

ஆ) மே.30

இ) மே.31

ஈ) ஜூன்.01

 • ஆண்டுதோறும் மே.31ஆம் தேதியை, உலக நலவாழ்வு அமைப்பு (WHO) “உலக புகையிலை ஒழிப்பு நாள்” எனக்கொண்டாடுகிறது. “Commit to quit” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருள் ஆகும். புகையிலை தொற்று மற்றும் புகையிலையைப் பயன்படுத்துவதா -ல் ஏற்படும் இறப்புகள் குறித்து உலகளாவிய கவனத்தை ஈர்க்க, 1987 ஆம் ஆண்டில் WHO உறுப்பினர்களால் இந்த நாள் உருவாக்கப்பட்டது.
 • 1988ஆம் ஆண்டு மே.31 அன்று புகையிலை ஒழிப்பு நாளாக கொண்டாட ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. ECLGS 4.0’இல், பின்வரும் துறைகளுள் எது சேர்க்கப்பட்டுள்ளது?

அ) உள்நாட்டு வான் போக்குவரத்து

ஆ) வேளாண்மை

இ) கட்டுமானம்

ஈ) கப்பல் கட்டுமானம்

 • ஒன்றிய அரசானது அவசரகால கடனுறுதித் திட்டம் 4.0’ஐ அறிமுகப்படுத் -தியுள்ளதுடன், உள்நாட்டு வான் போக்குவரத்துத்துறையையும், உள்ள -க உயிர்வளி உற்பத்திசெய்யும் நலவாழ்வு நிறுவனங்களுக்கு கடனளி -ப்பதையும் திட்டத்தின் நோக்கமாக விரிவுபடுத்தியுள்ளது.
 • ECLGS 4.0’இன்கீழ் நிலுவையில் உள்ள கடனில் அதிகபட்சமாக 40% கடன் அல்லது `200 கோடி எது குறைவாக உள்ளதோ அதனை நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெறுபவர்களால் பெறமுடியும்.

5. ESIC மற்றும் EPFO திட்டங்களைச் செயல்படுத்துகிற ஒன்றிய அமைச்சகம் எது?

அ) நிதி அமைச்சகம்

ஆ) தொழிலாளர் அமைச்சகம்

இ) MSME அமைச்சகம்

ஈ) சமூக நீதி அமைச்சகம்

 • ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமானது ESIC மற்றும் EPFO திட்டங்களின்கீழ் இணைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்களின் குடும்பத்தின் நலவாழ்வுகுறித்த அச்சத்தையும் கவலையை -யும் நீக்கும் விதமாக கூடுதல் பயன்களை அறிவித்துள்ளது.
 • இப்புதிய நன்மைகளின்படி, COVID காரணமாக ஓர் ஊழியர் இறந்தால், பணியின்போதான காயத்தால் ஏற்படும் இறப்பில் கிடைக்கப்பெறும் அதே நன்மைகளைப்போன்று, காப்பீடு செய்யப்பட்ட நபரின் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பயன்கள் வழங்கப்படும்.

6. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் குழந்தைகளுக்கான அவசரகால உதவி எண் என்ன?

அ) 1075

ஆ) 1098

இ) 1091

ஈ) 14567

 • ஒன்றிய அரசின் உதவி எண்கள்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தனியார் பொழுதுபோக்கு அலைவரிசைகளுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
 • ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் உதவி எண் – 1075, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவி எண் – 1098, சமூகநீதித்துறையின் மூத்த குடிமக்களுக்கான உதவி எண் – 14567, நிம்ஹன்ஸ் அமைப்பின் உளவியல் ஆதரவு உதவி எண் – 08046110007 ஆகியவற்றை தனியார் பொழுதுபோக்கு அலைவரிசைகள், தாங்கள் ஒளிபரப்பும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கிடையே ஒளிபரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

7. NASA’இன் கியூரியாசிட்டி ஆய்வூர்தி, எந்த வான்பொருளில் அமைந்துள்ள கேல் பள்ளத்தின் மீதிருந்த மேகங்களைப் படம்பிடித்து உள்ளது?

அ) வியாழன்

ஆ) செவ்வாய்

இ) திங்கள்

ஈ) வெள்ளி

 • NASA’இன் கியூரியாசிட்டி ஆய்வூர்தியானது செவ்வாய் கிரகத்தின் கேல் பள்ளத்திற்கு மேல் காணப்பட்ட மேகங்களைப் படம்பிடித்துள்ளது. 154 கிமீ விட்டம்கொண்ட இப்பள்ளம், சுமார் 3.5-3.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது. கேல் பள்ளத்தின் மீது உலவும் விசித்திரவகை மேகங்கள்குறித்து ஆய்வுசெய்வதற்காக, கியூரியாசிட்டி ஆய்வூர்தியால் சமீபத்தில் எடுக்கப்பட்ட 21 தனித்தனி நிழற்படங்களின் கலவைதான் இந்த நிழற்படம்.

8. உலகின் முதல் ‘நானோ யூரியா’வை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?

அ) IFFCO

ஆ) தேசிய உரங்கள் நிறுவனம்

இ) இராஷ்டிரிய இரசாயனங்கள் மற்றும் உரங்கள்

ஈ) சம்பல் உரங்கள்

 • உலக உழவர்களுக்காக உலகின் முதல் நானோ யூரியா திரவத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக இந்திய உழவர்கள் உர கூட்டுறவு நிறுவனம் (IFFCO) தெரிவித்துள்ளது. கலோலில் உள்ள நானோ பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தில் இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.
 • இது, உழவர்களின் உள்ளீட்டு செலவைக்குறைக்கும் என எதிர்பார்க்கப் -படுகிறது. மேலும் இது, போக்குவரவு மற்றும் கிடங்கிற்கான செலவினத்தை கணிசமாகக் குறைக்கும்.

9. ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியானது NGC 691’இன் விவரமான நிழற்படத்தை எடுத்துள்ளது. NGC 691 என்பது ____?

அ) பேரடை

ஆ) எரிகல்

இ) மேகம்

ஈ) புறக்கோள்

 • NASA / ESA ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியானது NGC 691 எனப்படும் சுழல் பேரடையின் தெளிவான நிழற்படத்தை எடுத்துள்ளது. NGC 691 என்பது மேஷ விண்மீன் மண்டலத்தில், சுமார் 125 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு சுழல் பேரடை ஆகும். இது மாறுபட்ட வடிவங்கள் மற்றும் வண்ணங்கள் கொண்ட ஒன்பது பேரடைகளின் தொகுப்பான NGC 691 குழுவின் மூத்த உறுப்பினராகும்.

10. உலக மூளைக்கட்டி நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜூன் 8

ஆ) ஜூன் 10

இ) ஜூன் 12

ஈ) ஜூன் 14

 • உலக மூளைக்கட்டி நாளானது ஆண்டுதோறும் ஜூன்.8 அன்று உலகம் முழுமைக்கும் அனுசரிக்கப்படுகிறது. மூளைக்கட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அதுகுறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதும் இந்த நாளின் நோக்கமாகும். உலக மூளைக்கட்டி நாளை, தொடக்கத்தில், லீப்ஜிக்கைச்சார்ந்த இலாபநோக்கற்ற அமைப்பான ஜெர்மன் மூளைக்கட் -டி சங்கம் கடந்த 2000ஆம் ஆண்டில் நியமித்து அறிவித்தது.

1. “Tianzhou–2” is a spacecraft of which country?

A) Japan

B) Russia

C) China

D) South Korea

 • Tianzhou–2, or “Heavenly Vessel” is China’s cargo spacecraft which carried supplies, equipment and propellant to the space station which is being developed by China. It has successfully docked itself to the module Tianhe, which is a part of a space station. The spacecraft was launched from earth using the Long March–7 Y3 rocket.

2. Pooja Rani Bohra is associated with which sport?

A) Table Tennis

B) Boxing

C) Athletics

D) Archery

 • Indian woman boxer Pooja Rani Bohra has clinched her second continental title at the Asian boxing championships, being held in Dubai. The Olympic bound boxing champion registered this victory against Mavluda Movlonova of Uzbekistan in the 75kg category with a score of 5–0.

3. When is the “World No Tobacco Day” observed by WHO every year?

A) May 29

B) May 30

C) May 31

D) June 01

 • Every year, 31st May is observed by the World Health Organisation (WHO) as the “World No Tobacco Day”. The theme for this year is “Commit to quit”. This day was created by the WHO members in the year 1987 to draw global attention to the tobacco epidemic and the deaths associated with using tobacco. A resolution was passed in 1988 to observe 31st May as the No Tobacco Day.

4. Which of the following sectors have been included in ECLGS 4.0?

A) Civil Aviation

B) Agriculture

C) Construction

D) Ship Building

 • The Union Government has launched the Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) 4.0 and has expanded the scope of the scheme by including the civil aviation sector and loan to health institutions for on–site oxygen generation. Under ECLGS 4.0 a maximum loan of 40% of the outstanding loan, or Rs 200 crore whichever is lower can be availed by borrowers from financial institutions.

5. ESIC and EPFO schemes are implemented by which ministry?

A) Finance Ministry

B) Labour Ministry

C) MSME Ministry

D) Ministry of Social Justice

 • The Union Ministry of Labour and Employment has announced additional benefits for workers enrolled under ESIC and EPFO schemes, to remove fear and anxiety about the well–being of their family. As per the new benefit, in case of an employee’s death due to COVID, all dependent family members of the insured person would be entitled to receive the same benefits as in the case of death resulting from employment injury.

6. What is the Child helpline number of the Ministry of Women and Child Development?

A) 1075

B) 1098

C) 1091

D) 14567

 • The Ministry of Information and Broadcasting urged the private TV news channels to display four new national helpline numbers to help the citizens during the COVID–19 awareness initiative.
 • In a letter to all private TV news channels, the said these national helpline numbers should be displayed in appropriate way: The National helpline number of Health Ministry –1075, Child helpline of the Ministry of Women and Child Development–1098, Senior citizens helpline of the Social Justice Ministry – 14567 and helpline of NIMHANS for psychological support – 08046110007.

7. NASA’s Curiosity rover captured images of a cloud over the Gale Crater, situated in which astronomical body?

A) Jupiter

B) Mars

C) Moon

D) Venus

 • NASA’s Curiosity rover captured the images of the clouds seen above Gale Crater of the Mars. The crater is 154 km in diameter and estimated to be about 3.5–3.8 billion years old. The image is a combination of 21 individual photographs the rover took recently to study a strange type of cloud over the Gale Crater.

8. Which company has introduced the world’s first ‘Nano Urea’?

A) IFFCO

B) National Fertilizers Ltd

C) Rashtriya Chemical and Fertilizers

D) Chambal Fertilizers

 • Indian Farmers Fertiliser Cooperative Limited (IFFCO) said that it has introduced the world’s first Nano Urea Liquid for farmers across the world. The technology was developed at Nano Biotechnology Research Centre, Kalol. This is expected to reduce the input cost of farmers and will significantly bring down the cost of logistics and warehousing.

9. Hubble Space Telescope has captured a detailed photo of NGC 691, a ………….?

A) Galaxy

B) Meteor

C) Cloud

D) Exoplanet

 • The NASA/ESA Hubble Space Telescope has captured a detailed photograph of a spiral galaxy called NGC 691. NGC 691 is a spiral galaxy located at around 125 million light–years away in the constellation of Aries. It is the foremost member of the NGC 691 group, a collection of nine galaxies of varied shapes and colors.

10. When is World Brain Tumor Day observed across the world, every year?

A) June 08

B) June 10

C) June 12

D) June 14

 • World Brain Tumour Day is observed on 8 June every year, across the world. The objective of the day is to raise awareness and educate general public about brain tumour. The World Brain Tumour Day was initially designated by Leipzig based non–profit organisation German Brain Tumour Association in the year 2000.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *