Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

11th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

11th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 11th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

11th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. துவரை, உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகியவை எந்த வகை முதன்மை பயிர்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்?

அ) முன்பட்டப்பயிர்

ஆ) பின்பட்டப்பயிர்

இ) பங்குனிப்பட்டப்பயிர்

ஈ) மேற்கூறிய எதுவுமில்லை

  • மழைக்காலத்தில் விதைக்கப்படும் பயிர்களை இந்தியாவில் முன்பட்டப் பயிர்கள் என்று அழைக்கிறார்கள். அவை கோடை அல்லது பருவமழை காலப்பயிர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. தென்மேற்கு பருவமழை காலத்தில் ஜூலை மாத முதல் மழையின் தொடக்கத்தோடு முன்பட்டப் பயிர்கள் விதைக்கப்படுகின்றன.
  • துவரை, உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகியவை இந்தப் பருவத்தில் விதைக்கப்படுகிற முதன்மை பருப்பு வகைகளாகும். பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவுபெற வேளாண் அமைச்சகம் அண்மையில் ஒரு சிறப்பு முன்பட்டப் பயிர்கள் உத்தியை வகுத்துள்ளது.

2. காலநிலை நடவடிக்கை தடமியின் பகுப்பாய்வின்படி, 2100’க்குள் உலக வெப்பநிலை எவ்வளவுக்கு அதிகரிக்கும்?

அ) 0.5%

ஆ) 1.5%

இ) 2.4%

ஈ) 3.0%

  • 2100ஆம் ஆண்டளவில் உலகம் 2.4°C வெப்பமடையும் என காலநிலை நடவடிக்கை தடமியின் பகுப்பாய்வு கூறியுள்ளது. இது உலகளாவிய நடவடிக்கை அல்லாத வெப்பநிலையைவிட 0.2°C மட்டுமே குறைவாகும். ஆனால், கடந்த 2016’இல் கையெழுத்திடப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட 1.5°C இலக்கைவிட இம்மதிப்பீடு மிக அதிகமாக உள்ளது.
  • 1.5°C இலக்கானது இன்னமும் சாத்தியமே என்று அதன் அறிக்கை பரிந்துரைத்துள்ளது; ஆனால் அதற்கு முக்கிய நாடுகளின் நடவடிக்கை தேவைப்படுகிறது.

3. COVID-19 தடுப்பூசிகளுக்கான அறிவுசார் சொத்து பாதுகாப்பைத் தள்ளுபடி செய்வதில் தொடர்புடைய அமைப்பு எது?

அ) WHO

ஆ) UNICEF

இ) WTO

ஈ) FAO

  • COVID தடுப்பூசிகளுக்கு அறிவுசார் சொத்துக்கள் பாதுகாப்பைத் தள்ளுபடி செய்வது குறித்து பல நாடுகள் உலக வர்த்தக அமைப்பை (WTO) அணுகியுள்ளன. அண்மையில், COVID-19 தடுப்பூசிகளுக்கு அறிவுசார் சொத்துக்கள் பாதுகாப்பைத் தள்ளுபடி செய்வதற்கான ஆதரவை ஐக்கிய அமெரிக்க நாடுகள் அறிவித்தது. உலக வணிக அமைப்பில் தள்ளுபடி தொடர்பான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா தொடரும். அனைத்து 164 உலக வணிக அமைப்பின் உறுப்பினர்களும் வரைவுக்கு உடன்பட வேண்டும், மேலும் எந்த ஒரு உறுப்பினரும் அதை மறுக்கலாம்.

4. சமீப செய்திகளில் இடம்பெற்ற DDoS தாக்குதலுடன் தொடர்புடைய துறை எது?

அ) இராணுவம்

ஆ) இணையவெளி பாதுகாப்பு

இ) கடல்சார் பயிற்சி

ஈ) உளவியல்

  • சேவை மறுப்பு தாக்குதல் (DDoS) என்பது ஒரு கணினியோ அல்லது வலையமைப்போ தரும் சேவையை / வளங்களை அதன் மெய்யான பயனர்கள் அணுகாவண்ணம் முடக்க மேற்கொள்ளப்படும் தீயமுயற்சி ஆகும். அரசாங்கம், நாடாளுமன்றம், பல்கலைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உட்பட பெல்ஜியம் முழுவதும் இருநூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளின் வலைத்தளங்களை ஒரு பெரிய DdoS தாக்குதல் பாதித்த -து.
  • மே.4 அன்று தொடங்கிய இந்த DDoS தாக்குதல், நாட்டின் கல்வி நிறுவ -னங்கள் மற்றும் அரசாங்க சேவைகளுக்கான இணைய சேவையை வழங்கும் பெல்னெட் நிறுவனத்தை குறிவைத்தது.

5. NASA’இன் பார்க்கர் சூரிய ஆய்வுக்கலமானது எந்தக்கோளின் வளிமண்டலத்தில் இயற்கையான ரேடியோ சமிக்ஞையைக் கண் -டறிந்தது?

அ) செவ்வாய்

ஆ) வெள்ளி

இ) பூமி

ஈ) வியாழன்

  • NASA’இன் பார்க்கர் சோலார் ஆய்வுக்கலமானது வெள்ளியின் மேல் வளிமண்டலத்தில் பறக்கும்போது இயற்கையான ரேடியோ சிக்னலைக் கண்டறிந்தது. ஏறக்குறைய கடந்த முப்பது ஆண்டுகளில் வெள்ளியின் வளிமண்டலத்தின் அளவீடு செய்யப்பட்ட முதல் முதல் நேரடி அளவீடு இதுவாகும். இது, அந்தக்கோளின் கடந்தகால சித்தரிப்பிலிருந்து மிகவும் வித்தியாசமாக தெரிகிறது. வெள்ளியின் மேல் வளிமண்டலம் நிறைய மாற்றங்களுக்குள்ளாகிறது, எனவே இது பூமியிலிருந்து மாறுபடுகிறது.

6. இந்திய அரசு மற்றும் LIC’க்கு சொந்தமான எந்த வங்கியின் உத்தி -சார் முதலீட்டிற்கு CCEA ஒப்புதல் அளித்தது?

அ) லட்சுமி விலாஸ் வங்கி

ஆ) IDBI வங்கி

இ) HDFC வங்கி

ஈ) பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி

  • பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு (CCEA) IDBI வங்கியில் நிர்வாகக் கட்டுப்பாட்டை மாற்றுவதோடு உத்திசார் முதலீடு செய்வதற்கான அதன் கொள்கை ரீதியான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், இந்திய அரசு மற்றும் LIC ஆகியவற்றால் ஒதுக்கப்பட வேண்டிய பங்குதாரர்களின் அளவானது இந்திய ரிசர்வ் வங்கியுடன் (RBI) கலந்தாலோசித்து பரிவர்த்தனை சமயத்தில் தீர்மானிக்கப்படும்.

7. மானஸ் பிஹாரி வர்மா யார்?

அ) அரசியல்வாதி

ஆ) வானூர்தி அறிவியலாளர்

இ) சமூக ஆர்வலர்

ஈ) மருத்துவர்

  • புகழ்மிக்க வானூர்தி அறிவியலாளரான ‘பத்மஸ்ரீ’ மானஸ் பிஹாரி வர்மா, அண்மையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78. நாட்டின் முதல் இலகு இரக போர் வானூர்தியான ‘தேஜாஸின்’ மூளையாகச் செயல்பட்டவர் இவர். முன்னாள் குடியரசுத்தலைவர் Dr APJ அப்துல் கலாமுடன் இவர் நெருக்கமாக பணியாற்றியுள்ளார்.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “செயல் திட்டம் – 2030” என்பதை எந்த நாட்டோடு இணைந்து இந்தியா ஏற்றுக்கொண்டது?

அ) சீனா

ஆ) USA

இ) UK

ஈ) ஜப்பான்

  • இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோருக்கு இடையிலான ஒரு மெய்நிகர் இருதரப்பு சந்திப்பின்போது, இந்தியாவும், இங்கிலாந்தும் கூட்டாக ‘செயல் திட்டம் – 2030’ஐ ஏற்றுக்கொண்டன. இந்தச் செயல் திட்டத்தை ஒரு விரிவான உத்திசார் கூட்டாண்மைக்கு உயர்த்துவதாக 2 நாட்டு தலைவர்களும் உறுதியளித்தனர். ஓர் ஒருங்கிணைந்த கட்டற்ற வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ஒரு விரிவான வர்த்தக கூட்டாண்மையை மேற்கொள்வதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

9. 2020-21 நிதியாண்டில் MGNREGA திட்டத்தின்கீழ் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலை வழங்கிய மாநிலம் எது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) மேற்கு வங்கம்

இ) பீகார்

ஈ) மத்திய பிரதேசம்

  • மேற்கு வங்க மாநிலமானது 11.8 மில்லியன் மக்களுக்கு, MGNREGA திட்டத்தின்கீழ், 2020-21 நிதியாண்டில் வேலை வழங்கியுள்ளது. இது, நாட்டிலேயே மிகவுயர்ந்த எண்ணிக்கையாகும். இதனை செயல்படுத்த சுமார் `10,403.13 கோடி நிதியை அம்மாநிலம் பயன்படுத்தியுள்ளது.
  • இத்திட்டத்திற்கு நிதி செலவழிப்பதில், உத்தர பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசத்திற்கு அடுத்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் உள்ளது. 2021 ஏப்ரலில் சுமார் 27.3 மில்லியன் குடும்பங்கள் MGNREGA திட்டத்தின் கீழ் வேலை பெற்றுள்ளன.

10.“உணவு நெருக்கடிகள்-2020” குறித்த சர்வதேச அறிக்கையை தயாரித்துள்ள அமைப்பு எது?

அ) UNCTAD

ஆ) UNEP

இ) UNWTO

ஈ) GNAFC

  • “உணவு நெருக்கடிகள்-2020” குறித்த சர்வதேச அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அது, உணவு நெருக்கடிகளுக்கு எதிரான உலகளாவி -ய வலையமைப்பால் தயாரிக்கப்பட்டதாகும். இது, தீவிர பசியின் மூல காரணங்களுக்கு தீர்வுகாண்பதற்காக செயல்பட்டுவரும் ஒரு சர்வதேச கூட்டணியாகும். இந்த அறிக்கை, உலகெங்கிலும் உள்ள உணவு நெரு -க்கடிகளுக்கு பங்களிக்கும் காரணிகளை பகுப்பாய்வு செய்கிறது.
  • மேலும், COVID தொற்றுநோய் எவ்வாறு நெருக்கடியை மோசமாக்கும் என்பதையும் இந்த அறிக்கை விளக்குகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஒரு கோடி பேர் பயன்படுத்திய தேசிய டிஜிட்டல் நூலகம்: மத்திய கல்வி அமைச்சகம் தகவல்

தேசிய டிஜிட்டல் நூலகத்தில் உள்ள நூல்கள், ஒலி, காணொலி பாடங்கள் உள்ளிட்டவற்றை ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள் பயன்படுத்தியுள்ளனர். புத்தகங்கள், காணொலி பாடங்கள் என சுமார் 4.89 கோடி தரவுகளுடன், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக மத்திய அரசு தேசிய டிஜிட்டல் நூலகத்தை அமைத்தது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் இந்த நூலகம் செயல்படுகிறது.

பள்ளிக்கல்வி, CBSE தேர்வுகளுக்கான தயாரிப்பு, பொறியியல், அறிவியல், மானுடவியல், இலக்கியம், சட்டம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பாடங்கள், ஆராய்ச்சியாளர்களின் ஆய்வறிக்கை உள்ளிட்ட 60’க்கும் மேற்பட்ட பிரிவுகளாக டிஜிட்டல் நூலகத்தில் தரவுகள் உள்ளன. இந்த டிஜிட்டல் நூலகத்தை ஐஐடி காரக்பூர் வடிவமைத்தது.

இந்நிலையில், தேசிய டிஜிட்டல் நூலகத்தில் உள்ள புத்தகம், ஆய்வறிக்கை, ஆடியோ மற்றும் காணொலி பாடங்கள் உள்ளிட்டவற்றை ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள், ஆயாச்சியாளர்கள் பார்வையிட்டுப் பயனடைந்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மின்னணு நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் https://ndl.iitkgp.ac.in/ என்ற இணைய முகவரிக்குள் நுழைந்து, தங்களை டிஜிட்டல் உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர், அவர்களுக்கான பயனர் ஐடி, கடவுச்சொல் வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி, மின்னணு புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2. உலகப் பட்டியலில் மூன்று தமிழகப் பல்கலைக்கழகங்கள்

QS உலகப்பல்கலைக்கழகப் பட்டியலில் 29 இந்தியக்கல்லூரிகள் இடம் பிடித்துள்ளன. இதில் பம்பாய் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் தேசிய அளவில் முதலிடத்தையும் உலக அளவில் 172ஆவது இடத்தையும் பிடித்து உள்ளது.

பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் தேசிய அளவில் இரண்டாம் இடத்தையும் தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகம் மூன்றாம் இடத்தையும் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் நான்காம் இடத்தையும் (உலக அளவில் 275ஆமிடம்) பிடித்துள்ளன.

தமிழ்நாட்டைச்சார்ந்த அண்ணா பல்கலைக்கழகமும் வேலூர் தொழில்நுட் -பக் கல்லூரியும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

3. சேதி தெரியுமா?

மே.2: டொரண்டோ பல்கலையில் தமிழிருக்கை உறுதியானதை கனடா நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மே.4: ஊடகங்களில் பணிபுரிவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப் -படுவார்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருந்த மு க ஸ்டாலின் அறிவித்தார்.

மே.4: மகாத்மா காந்தியின் தனிச்செயலாளராக இருந்த வி கல்யாணம் (98), சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி (87) ஆகியோர் காலமானார்கள்.

மே.5: இந்தியாவில் முதன்முறையாக ஹைதராபாத் விலங்குக்காட்சியகத் -தில் எட்டுச்சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதியானது.

மே.5: மேற்குவங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாம் முறையாகப் பதவியேற்றார்.

மே.5: கரோனா பரவலையடுத்து IPL கிரிக்கெட் தொடரை ஒத்திவைப்பதா -க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.

மே.6: உலக அளவில் தற்போது ஏற்படும் கரோனா பாதிப்பில் 46 சதவீதம் இந்தியாவைச் சார்ந்தது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

மே.6: ICC டெஸ்ட் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமையை ரிஷப் பந்த் பெற்றார்.

மே.7: தமிழ்நாட்டின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், அவரோடு 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். புதுச்சேரி யூனியன் பிரதேச முதலமைச்சவராக NR காங்கிரஸ் தலைவர் N ரங்கசாமி நான்காம் முறையாகப் பதவியேற்றார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி (91) – மே 1, முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகனும் மத்திய முன்னாள் அமைச்சருமான அஜித் சிங் (82) – மே 6, நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் பாண்டு (74) – மே 6 ஆகியோர் உயிரிழந்தனர்.

1. Pigeon pea, Black Matpe and Greengram are examples of which type of major crop?

A) Kharif

B) Rabi

C) Zaid

D) None of the above

  • The crops that are sown in the rainy season are called kharif crops in India. They are also known as the summer or monsoon crop. Kharif crops are usually sown with the beginning of the first rains in July, during the south–west monsoon season.
  • Tur/arhar (pigeon pea), urad (black matpe) and moong (green gram) are the major pulses in this season. The Ministry of Agriculture has recently formulated a special Kharif strategy to attain self–sufficiency in the production of pulses.

2. As per the Climate Action Tracker analysis, what would be the rise in global temperature by 2100?

A) 0.5%

B) 1.5%

C) 2.4%

D) 3.0%

  • The Climate Action Tracker analysis said that the world will warm by 2.4C by the year 2100. This is only 0.2C less than the temperature without global action. But the estimate is much higher than the 1.5C goal agreed under the Paris Agreement on climate change, signed in 2016. Its report also suggested that the 1.5C target is still possible, but it requires action from major nations.

3. Which organisation is associated with waiving intellectual property protection for COVID–19 vaccines?

A) WHO

B) UNICEF

C) WTO

D) FAO

  • Several countries have approached the World Trade Organization (WTO) regarding the waiver of intellectual property (IP) protection for Covid–19 vaccines. Recently, the United States announced support for waiving IP protection for COVID–19 vaccines. US will pursue negotiations on the waiver at the WTO. All 164 WTO members must agree on the draft, and any one member can veto it.

4. DDoS attack, which was making news recently, is associated with which field?

A) Defence

B) Cyber security

C) Maritime Exercise

D) Psychology

  • A Distributed Denial of Service (DDoS) attack is an attempt to make an online service unavailable by overwhelming it with traffic from multiple sources. A massive DDoS attack affected the websites of over 200 organisations across Belgium, including government, parliament, universities and research institutes.
  • The DDoS attack started on 4 May and targeted Belnet, the government–funded ISP provider for the country’s educational institutions and government services.

5. NASA’s Parker Solar Probe detected a natural radio signal in the atmosphere of which planet?

A) Mars

B) Venus

C) Earth

D) Jupiter

  • NASA’s Parker Solar Probe detected a natural radio signal, while flying through the upper atmosphere of Venus. This was the first direct measurement of the atmosphere of Venus in nearly 30 years. This recent glimpse looks very different from the past portrayal of the planet. The upper atmosphere of Venus undergoes a lot of changes and hence is different from the Earth.

6. The CCEA approved the strategic disinvestment of which bank, owned by the Government of India and LIC?

A) Lakshmi Vilas Bank

B) IDBI Bank

C) HDFC Bank

D) Punjab and Maharashtra Cooperative Bank

  • The Cabinet Committee on Economic Affairs (CCEA), chaired by Prime Minister Narendra Modi, has given its in–principle approval for strategic disinvestment along with transfer of management control in IDBI Bank. However, the extent of shareholding to be divested by the Government of India and LIC shall be decided at the time of the transaction in consultation with Reserve Bank of India (RBI).

7. Who was Manas Bihari Verma?

A) Politician

B) Aeronautical Scientist

C) Social Activist

D) Doctor

  • Manas Bihari Verma – a reputed aeronautical scientist and Padma Shri Awardee died recently of suffering a massive heart attack. He was 78 years old. He has been the man behind the country’s first Light Combat Aircraft (LCA) ‘Tejas’ and has closely worked with former president Dr.APJ Abdul Kalam.

8. “Road Map 2030”, which was in the news recently, has been adopted by India with which country?

A) China

B) USA

C) UK

D) Japan

  • India and UK have jointly adopted ‘Roadmap 2030’, during a virtual bilateral between Indian Prime Minister Narendra Modi and British counterpart Boris Johnson. The two leaders pledged to elevate this road map into a comprehensive strategic partnership. An Enhanced Trade Partnership was also announced by the two leaders along with an intent to form a comprehensive Free Trade Agreement (FTA).

9. Which state provided work to the highest number of people in MGNREGA during FY21?

A) Uttar Pradesh

B) West Bengal

C) Bihar

D) Madhya Pradesh

  • West Bengal provided work to 11.8 million people through MGNREGA in FY21, which is the highest in the country. It utilised around Rs 10,403.13 crore for implementing the scheme and stands third in spending the funds after only to Uttar Pradesh and Andhra Pradesh. Around 27.3 million households demanded work under MGNREGA in April 2021.

10. Which organization has produced the “The Global Report on Food Crises 2020”?

A) UNCTAD

B) UNEP

C) UNWTO

D) GNAFC

  • “The Global Report on Food Crises 2020” has been released recently, which is produced by the Global Network against Food Crises. It is an international alliance working to address the root causes of extreme hunger.
  • The report analyses the factors which contribute to food crises across the globe, and explains how COVID pandemic could worsen the crisis.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!