TnpscTnpsc Current Affairs

11th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

11th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 11th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. டிஜிட்டல் வணிகத்திற்கான திறந்தவெளி வலையமைப்பின் (Open Network for Digital Commerce) சோதனை கட்டத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் 

ஆ. MSME அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

 • வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகமானது டிஜிட்டல் வணிகத்திற்கான திறந்தவெளி வலையமைப்பின் சோதனை கட்டத்தை அறிமுகப்படுத்தியது. நாட்டில் டிஜிட்டல் வணிகத்தின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு டிஜிட்டல் வணிகத்தை மக்கள்மயப்படுத்துவதற்கு வழிவகுக்கும் முயற்சியாகும் இது. மின்னணு வலையமைப்புகள் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பரிமாற்றஞ்செய்வதற்கான திறந்த தளத்தை மேம்படுத்துவதை இந்த முயற்சி தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. ‘நாணயம் மற்றும் நிதி’ குறித்த அறிக்கையை (Report on Currency and Finance) வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. நிதி அமைச்சகம்

ஆ. இந்திய ரிசர்வ் வங்கி 

இ. இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம்

ஈ. NITI ஆயோக்

 • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) 2021–22ஆம் ஆண்டிற்கான, ‘நாணயம் மற்றும் நிதி’ குறித்த அறிக்கையை வெளியிட்டது. வலுவான மற்றும் நிலையான வளர்ச்சிக்கு விலை நிலைப்புத்தன்மை அவசியமான முன்நிபந்தனை ஆகும் என இந்த அறிக்கை கூறுகிறது. சீர்திருத்தங்களுக்கான ஏழு அம்ச வரைபடத்தையும் அது முன்மொழிந்தது COVID–19 தொற்றுநோயால் ஏற்பட்ட சுமார் `52 இலட்சம் கோடி இழப்பைச் சமாளிக்க இந்தியப் பொருளாதாரத்திற்கு 12 ஆண்டுகள் ஆகலாம் எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. பெட்ரோலுடன் 15% மெத்தனால் கலந்து ‘M15 பெட்ரோலை’ அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

அ. இந்திய எண்ணெய் நிறுவனம் 

ஆ. பாரத் பெட்ரோலியம்

இ. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்

ஈ. GAIL லிட்

 • இந்திய எண்ணெய் நிறுவனமானது (IOC) M15 பெட்ரோலை அஸ்ஸாமின் டின்சுகியா மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியது. இதில் பெட்ரோலுடன் 15% மெத்தனால் கலக்கப்பட்டுள்ளது. திக்பாய் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகில் அஸ்ஸாம் பெட்ரோ கெமிக்கல் லிமிடெட்மூலம் மெத்தனால் தயாரிக்கப்படுகிறது. எத்தனால் தொடர்பான கடன்களை வழங்குதற்கும், திட்டங்களை நிறைவேற்றுதற்கும் அரசாங்கம் முன்னதாக காலக்கெடுவை நீட்டித்திருந்தது. வட்டி மானிய முறையில் அரசு நிதியுதவியும் வழங்குகிறது.

4. ‘RSF 2022 உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில்’ இந்தியாவின் தரநிலை என்ன?

அ. 87

ஆ. 104

இ. 150 

ஈ. 176

 • RSF 2022 உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டின்படி, கடந்த ஆண்டு 142ஆவது இடத்திலிருந்த இந்தியா, இந்த ஆண்டு 150ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது. இந்த ஆண்டு, நார்வே (1ஆவது) டென்மார்க் (2ஆவது) மற்றும் சுவீடன் (3ஆவது) ஆகியவை முதல் மூன்றிடங்களைப் பிடித்தன. 180 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் வடகொரியா கடைசி இடத்தில் உள்ளது. ரிப்போர்ட்டர்ஸ் சான்ஸ் பிராண்டியர்ஸ் (RSF) அல்லது ரிப்போர்ட்டர்ஸ் வித் பார்டர்ஸ் என்ற உலகளாவிய ஊடக கண்காணிப்பு நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் இந்த அறிக்கையை வெளியிடுகிறது.

5. ‘பசுமை ஹைட்ரஜன் பணிக்குழு’ என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதோடு எந்த நாட்டுடனான AI–துளிர் நிறுவல்களில் பணியாற்ற இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது?

அ. UK

ஆ. அமெரிக்கா

இ. ஜெர்மனி 

ஈ. பிரான்ஸ்

 • இந்தியாவும் ஜெர்மனியும் சமீபத்தில் இந்தோ–ஜெர்மன் பசுமை ஹைட்ரஜன் பணிக்குழுவின் கூட்டுப்பிரகடனத்தில் கையெழுத்திட்டன. இந்தியாவும் ஜெர்மனியும் செயற்கை நுண்ணறிவு (AI) துளிர் நிறுவல்கள் மற்றும் AI ஆராய்ச்சி மற்றும் நிலைத்தன்மை மற்றும் சுகாதாரப்பாதுகாப்பில் அதன் பயன்பாடு ஆகியவற்றில் கவனஞ்செலுத்தி இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டன. இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனி சென்றார்.

6. இந்தியாவின் முதல் பசுமை வயல் தானிய அடிப்படையிலான எத்தனால் ஆலை தொடங்கப்பட்டுள்ள மாநிலம் / UT எது?

அ. குஜராத்

ஆ. ஒடிசா

இ. பீகார் 

ஈ. தெலுங்கானா

 • பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், நாட்டின் முதல் பசுமை வயல் தானிய அடிப்படையிலான எத்தனால் ஆலையை பூர்னியாவில் திறந்து வைத்தார். பீகாரின் எத்தனால் உற்பத்தி & ஊக்குவிப்புக்கொள்கை – 2021–க்கு நடுவணரசு ஒப்புதலளித்த பிறகு, `105 கோடி செலவில் கிழக்கிந்தியா உயிரி–எரிபொருள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் ஆலை இதுவாகும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது 17 எத்தனால் ஆலைகளை திறக்க பீகார் மாநில அரசு முன்மொழிந்துள்ளது.

7. உலகின் காடுகளின் நிலை (State of the World’s Forests) என்ற அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?

அ. NABARD

ஆ. சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்

இ. உணவு மற்றும் உழவு அமைப்பு 

ஈ. இயற்கைக்கான உலகளாவிய நிதியம்

 • ‘உலகின் காடுகளின் நிலை’ அறிக்கை என்பது உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) முதன்மையான வெளியீடாகும். உலக வனவியல் மாநாட்டின்போது வெளியிடப்பட்ட இவ்வறிக்கையின் 2022 பதிப்பின்படி, உலகம் கடந்த 30 ஆண்டுகளில் 420 மில்லியன் ஹெக்டேர்களை (mha) இழந்துள்ளது; அதன் மொத்த காட்டுப்பகுதியில் சுமார் 10.34 சதவீதமாகும். வளர்ந்து வரும் 250 தொற்றுநோய்களில் 15% காடுகளுடன் தொடர்புடையது என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

8. எம்மாநிலத்தால் இந்தியாவின் முதல் ‘பழங்குடியினர் சுகாதார கண்காணிப்பகம் (TriHOb)’ அறிவிக்கப்பட்டுள்ளது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. ஜார்கண்ட்

இ. குஜராத்

ஈ. ஒடிஸா 

 • ஒடிஸா மாநில ST மற்றும் SC மேம்பாட்டுத்துறையானது புவனேசுவரில் உள்ள பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து பழங்குடியினர் சுகாதார கண்காணிப்பகத்தை (TriHOb) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஒடிஸாவில் பழங்குடியினரின் ஆரோக்கியத்தில் சமத்துவத்தை உறுதிசெய்வதில் இது நாட்டிலேயே முதன்முறையான வசதியாகும். ஒடிசாவின் பழங்குடியின மக்களின் நலங்குறித்த களஞ்சியத்தை ‘TriHOb’ நிறுவும். ஒடிஸா பழங்குடியினர் குடும்ப நலக்கணக்கெடுப்பும் தொடங்கப்பட்டுள்ளது.

9. 2022 மே மாத பணவியல் கொள்கைக்குழுவின் கூட்டத்திற்குப் பிறகு, திருத்தப்பட்ட ரெப்போ விகிதம் என்ன?

அ. 3.75%

ஆ. 4.25%

இ. 4.40% 

ஈ. 4.50%

 • 2022 மே மாதத்தில் நடந்த பணவியல் கொள்கைக் குழுவின் திட்டமிடப்படாத கூட்டத்திற்குப்பிறகு, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 4.40 சதவீதமாக மாற்றியது. அடுத்த கூட்டம் ஜூன் 6–8 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது. 6 உறுப்பினர்களும் ஒருமனதாக இவ்விகித உயர்வுக்கு வாக்களித்தனர்; அதே நேரத்தில் இணக்கமான நிலைப்பாட்டை கடைபிடித்தனர். கடந்த மூன்று மாதங்களாக 6 சதவீதத்திற்கு மேல் இருந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். ரொக்க கையிருப்பு விகிதமானது மே.21 முதல் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.5%ஆக உள்ளது.

10. இந்தியாவின் முதல், ‘Flow Chemistry Technology Hub (FCT Hub)’ அமைக்கப்பட்டுள்ள நகரம் எது?

அ. மும்பை

ஆ. ஹைதராபாத் 

இ. பெங்களூரு

ஈ. புது தில்லி

 • இந்தியாவின் முதலாவது ‘Flow Chemistry Technology Hub (FCT Hub)’ ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் லைப் சைன்ஸில் அமைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா அரசு டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் மற்றும் லாரஸ் லேப்ஸுடன் இணைந்து இந்தச் சிறப்பு மையத்தை நிறுவுவதற்கு ஆதரவளித்தது. R&D–இன்போது புளோ வேதியியல் நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையிலான பயிற்சியை வழங்குவதற்கு அதிநவீன புளோ வேதியியல் உபகரணங்களை இந்த மையம் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. மே.11 – தேசிய தொழில்நுட்ப நாள்

கருப்பொருள்: “Integrated Approach in Science and Technology for a Sustainable Future”.

2. 13 பேருக்கு, ‘சௌர்ய சக்ர’ விருதுககள்: குடியரசுத்தலைவர் வழங்கினார்

பாதுகாப்பு படையினருக்கு விருது வழங்கும் விழாவில், 13 பேருக்கு ‘சௌர்ய சக்ர’ விருதுகளை குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

தில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் பாதுகாப்புப் படையினருக்கு முதலாம் கட்ட விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் 13 பேருக்கு (6 பேருக்கு மரணத்துக்குப் பிறகு) ‘சௌர்ய ச்கர’ விருதுகளை பாதுகாப்புப் படைகளின் தலைமைத்தளபதியான குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் வழங்கினார். இதில் பணியின்போது மரணம் எய்திய 6 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. பணிக்காலத்தில் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் வீரதீரத்துடன் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரித்து இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர, தற்போதைய இராணுவத்தலைமைத்தளபதி மனோஜ் பாண்டே உள்பட 14 பேருக்கு ‘பரம் விசிஷ்ட சேவா’ பதக்கங்களையும், 4 பேருக்கு ‘உத்தம் யுத் சேவா’ பதக்கங்களையும், 24 பேருக்கு ‘அதிவிசிஷ்ட சேவா’ பதக்கங்களையும் குடியரசுத்தலைவர் வழங்கினார்.

3. மோடி எழுதிய புத்தகம் கீதை போன்றது

புது தில்லியில் பிரதமர் மோடி எழுதிய ‘மோடி@20 டிரீம்ஸ் மீட் டெலிவரி’ என்ற புத்தகத்தை துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா வெளியிட்டார்.

4. 4 இந்திய புகைப்படக் கலைஞர்களுக்கு ‘புலிட்ஸர்’ விருது

ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட தனிஷ் சித்திக்கி உள்பட இந்தியாவைச் சேர்ந்த 4 புகைப்படக் கலைஞர்களுக்கு ‘புலிட்ஸர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகைத் துறையில் சிறப்பாகச் செயல்படுவோருக்கும், எழுத்து, இசை, நாடக உலகில் முக்கியப் பங்காற்றுவோருக்கும் ‘புலிட்ஸர்’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டுக்கான விருதுப்பட்டியல் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

அதில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படக்கலைஞர்களான 4 இந்தியர்களுக்கு ‘பீச்சர் போட்டோகிராபி’ பிரிவின் கீழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காலத்தில் இந்தியாவின் நிலைமையைப் புகைப்படங்கள் வாயிலாக வெளிக்கொணர்ந்ததற்காக அவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தானிஷ் சித்திக்கி, அத்னான் அபிதி, சன்னா இர்ஷாத் மட்டூ, அமித் தவே ஆகியோர் ‘புலிட்ஸர்’ விருதைப் பெறுகின்றனர். கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நிகழ்ந்த போரைப் பதிவுசெய்வதற்காக அங்கு சென்றிருந்த தானிஷ் சித்திக்கி, தலிபான்களால் கொல்லப்பட்டார். அவர் ‘புலிட்ஸர்’ விருதைப் பெறுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே ரோஹிங்கியா அகதிகள் நிலை குறித்து பதிவு செய்ததற்காகக் கடந்த 2018-ஆம் ஆண்டில் அவர் ‘புலிட்ஸர்’ விருதைப் பெற்றிருந்தார். ஹாங்காங் போராட்டம் உள்ளிட்ட ஆசியா, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் நிகழ்ந்த பல்வேறு விவகாரங்களைத் தனது புகைப்படங்கள் வாயிலாக சித்திக்கி பதிவு செய்துள்ளார்.

சிறப்பு விருது:

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட வன்முறையை சிறப்பாகப் பதிவு செய்ததற்காக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ இதழுக்கு ‘பொது சேவை’ பிரிவின்கீழ் ‘புலிட்சர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்ச்சூழலிலும் மனந்தளராமல் செயல்பட்டுவரும் உக்ரைன் புகைப்படக்கலைஞர்களுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1917-ஆம் ஆண்டு முதல் ‘புலிட்ஸர்’ விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பத்திரிகையுலகின் புகழ்பெற்ற விருதான ‘புலிட்ஸர்’ விருதுகளை ஜோசப் புலிட்ஸர் என்னும் பத்திரிகை வெளியீட்டாளர் உருவாக்கினார். நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் சுதந்திரமான குழு அமைத்து பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து வருகிறது.

1. Which Union Ministry is associated with the pilot phase of the Open Network for Digital Commerce (ONDC)?

A. Ministry of Commerce and Industry 

B. Ministry of MSME

C. Ministry of Home Affairs

D. Ministry of Electronics and IT

 • The Ministry of Commerce and Industry launched the pilot phase of the Open Network for Digital Commerce (ONDC). It is a first–of–its–kind initiative globally to pave way for democratising digital commerce to enhance the penetration of digital commerce in the country. The initiative aims to promote an open platform for exchange of goods and services through electronic networks.

2. Which institution releases the ‘Report on Currency and Finance’?

A. Ministry of Finance

B. Reserve Bank of India 

C. National Payment Corporation of India

D. NITI Aayog

 • The Reserve Bank of India (RBI) released the ‘Report on Currency and Finance (RCF)’ for the year 2021–22. As per the report, price stability is a necessary precondition for strong and sustainable growth. It also proposed a 7–point blueprint for reforms. The Indian economy may take 12 years to overcome the losses emanating from the COVID–19 pandemic, which account to Rs 52 Lakh Crores.

3. Which Company launched M15 Petrol, with 15 per cent blend of methanol with petrol?

A. Indian Oil Corporation 

B. Bharat Petroleum

C. Oil and Natural Gas Corporation

D. GAIL Ltd

 • Indian Oil Corporation (IOC) launched M15 petrol on a pilot basis in Assam’s Tinsukia district. It has a 15 per cent blend of methanol with petrol. Methanol is being manufactured by Assam Petrochemical Ltd near the Digboi refinery. The government had earlier extended the timeline for the disbursement of loans and completion of projects related to ethanol. The Government also provides financial assistance in the form of interest subvention.

4. What is the rank of India in the ‘RSF 2022 World Press Freedom Index’?

A. 87

B. 104

C. 150 

D. 176

 • According to the RSF 2022 World Press Freedom Index, India’s ranking has fallen down to 150th position from last year’s 142nd place. This year, Norway (1st) Denmark (2nd) and Sweden (3rd) were ranked at the top positions, while North Korea remained at the bottom of the list of 180 countries and territories. Reporters’ Sans Frontieres (RSF) or Reporters without Borders, a global media watch–dog releases the report every year.

5. India signed a pact on ‘Green Hydrogen Task Force’ and agreed to work on AI–startups with which country?

A. UK

B. USA

C. Germany 

D. France

 • India and Germany recently inked a joint declaration of intent on Indo–German Green Hydrogen Task Force. India and Germany also agreed to work together with focus on Artificial Intelligence (AI) startups as well as AI research and its application in sustainability and health care. India’s Science and Technology and Earth Sciences Minister Jitendra Singh visited Germany as part of his official tour.

6. India’s first green–field grain–based ethanol plant has been inaugurated in which state/UT?

A. Gujarat

B. Odisha

C. Bihar 

D. Telangana

 • Bihar Chief Minister Nitish Kumar inaugurated the country’s first greenfield grain–based ethanol plant in Purnea. The 105–crore plant by Eastern India Biofuels is the first one developed since the Centre gave approval to Bihar’s ethanol production and promotion policy–2021. The state government has proposed opening at least 17 ethanol plants over the next two years.

7. Which organisation releases the State of the World’s Forests (SOFO) Report?

A. NABARD

B. Ministry of Environment, Forest and Climate Change

C. Food and Agricultural Organisation

D. World Wide Fund for Nature

 • State of the World’s Forests (SOFO) Report is a flagship publication of Food and Agricultural Organisation (FAO).
 • As per the 2022 edition of the report, released during the World Forestry Congress, the world has lost 420 million hectares (mha), approximately 10.34 per cent of its total forest area in the last 30 years. It also warned that 15% of 250 emerging infectious diseases have been linked to forests.

8. India’s first ‘Tribal health observatory (TriHOb)’ has been announced by which state/UT?

A. Madhya Pradesh

B. Jharkhand

C. Gujarat

D. Odisha 

 • The Odisha State ST and SC development department signed an MoU with the Regional Medical Research Centre (RMRC), Bhubaneswar, to set up a tribal health observatory (TriHOb). This is said to be the first in the country, for ensuring equity in tribal health in Odisha.
 • TriHOb will establish a repository on the health of tribal population of Odisha. Odisha Tribal Family Health Survey was also launched.

9. After the May 2022 Meeting of the Monetary Policy Committee, what is the revised Repo Rate?

A. 3.75%

B. 4.25%

C. 4.40%

D. 4.50%

 • The Reserve Bank hiked the repo rate by 40 basis points (bps) to 4.40 per cent, after an unscheduled meeting of the Monetary Policy Committee (MPC) in May 2022. Next meeting of the MPC is scheduled during June 6–8. All six members unanimously voted for a rate hike while maintaining the accommodative stance. The decision aimed to contain inflation, which remained above 6 per cent for the last three months. Cash reserve ratio was hiked by 50 bps to 4.5% effective May 21.

10. India’s first Flow Chemistry Technology Hub (FCT Hub) has been set up in which city?

A. Mumbai

B. Hyderabad 

C. Bengaluru

D. New Delhi

 • India’s first Flow Chemistry Technology Hub (FCT Hub) has been set up at Dr Reddy’s Institute of Life Sciences (DRILS) at Hyderabad. The Government of Telangana supported the establishment of this Centre of Excellence in partnership with Dr Reddy’s Laboratories and Laurus Labs. The hub has state–of–the–art flow chemistry equipment to provide hands–on training ensure greater incorporation of flow chemistry techniques during R&D.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Adblock Detected

Turnoff the Ad Blocker to view the content