Tnpsc

11th November 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. மனிதர்கள் மீது கிருமிநாசினிகள் பயன்படுத்துப்படுவதை ஒழுங்குபடுத்துமாறு இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ள அமைப்பு எது?

அ. தேசிய மனித உரிமைகள் ஆணையம்

ஆ. தேசிய நலவாழ்வு ஆணையம்

இ. இந்திய உச்சநீதிமன்றம்

ஈ. இந்திய மருத்துவ ஆணையம்

  • கிருமிநீக்க சுரங்கங்களில், மனிதர்கள் மீது கிருமிநாசினியைப் பயன்படுத்துவது தொடர்பாக அல்லது கட்டுப்படுத்துவது குறித்து ஒரு மாதத்திற்குள் உத்தரவுகளை பிறப்பிக்குமாறு இந்திய உச்சநீதிமன்றம் இந்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மனித உடலில் கிருமிநாசினியைத் தெளிப்பது பரிந்துரைக்கப் -படவில்லை என நடுவணரசு ஆலோசனை வழங்கியுள்ள போதிலும், அதைத்தடுக்க (அ) கட்டுப்படுத்த அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

2. முன்னுரிமைத் துறை கடன் வழங்கலுக்காக, இணை-கடன் வழங்கல் முறையை உருவாக்கியுள்ள அமைப்பு எது?

அ. சிறு உழவர்கள் உழவுத் தொழில் கூட்டமைப்பு

ஆ. இந்திய ரிசர்வ் வங்கி

இ. NABARD

ஈ. பாரத வங்கி

  • முன்னுரிமைபெற்ற துறைகளுக்கு கடன் வழங்குவதற்காக இணை-கடன் வழங்கல் மாதிரி (Co-Lending Model-CLM) திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. புதிய திட்டத்தின்கீழ், வங்கிகள், முன்னுரிமை பெற்ற துறை கடன்களுக்கு இணை-கடன் வழங்குவதற்காக வங்கி சாரா நிதி நிறுவன -ங்களுடன் முன் ஒப்பந்தம் செய்யலாம். CLM என்பது 2018 செப்டம்பரில் இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட கடன் திட்டத்தின் இணை-தோற்றம் குறித்த முன்னேற்றமாகும்.

3. இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், 2020 டிசம்பர்.1 அன்று ஒரு கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ள பன்னாட்டு அமைப்பு எது?

அ. உலக வங்கி

ஆ. அனைத்துலக நீதிமன்றம்

இ. ஐநா பொதுச்சபை

ஈ. UNESCO

  • இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவுகூரும் வகையில் வரும் 2020 டிச.1 அன்று ஒரு கூட்டத்தை நடத்த ஐநா பொதுச்சபை முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பான தீர்மானம் இரஷ் -யாவால் தயாரிக்கப்பட்டு வாக்களிப்பின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • இரண்டாம் உலகப்போர் என்பது 1939 முதல் 1945 வரை நீடித்த ஓர் உலகளாவிய யுத்தமாகும். இது, உலகின் பெரும்பான்மையான நாடுகளை உள்ளடக்கியது; நேச நாடுகள் மற்றும் அச்சு நாடுகள் ஆகிய இரண்டு எதிரெதிர் இராணுவ கூட்டணிகளை அது உருவாக்கியது.

4. ‘சதாவதானம்’ என்பது கீழ்க்காணும் எந்தத் துறையுடன் தொடர்புடைய ஒரு நிகழ்வாகும்?

அ. விளையாட்டு

ஆ. இலக்கியம்

இ. தொழில்நுட்பம்

ஈ. கல்வி

  • பன்னாட்டு ‘சதாவதானம்’ நிகழ்வை குடியரசுத்துணைத்தலைவர் M வெங்கையா மெய்நிகர் முறையில் தொடங்கி வைத்தார். திருப்பதியில் ஸ்ரீ கிருஷ்ணதேவராய சத்சங்கின் அனுசரணையில் Dr. மெதசானி மோகன் ஏற்பாடு செய்துள்ள ஓர் இலக்கிய நிகழ்வுதான் இச்’சதாவதானம்’. திகைப்பூட்டும் இலக்கியப் புதிர்களுக்கு தீர்வுகாண்பது, கவிதைகளை மேம்படுத்துவது போன்ற இலக்கிய செயல்திறன்கள் இந்த இலக்கிய நிகழ்வில் அடங்கும்.

5. நிலக்கரி குறித்த ஐந்தாவது கூட்டு செயற்குழுவை இந்தியா எந்த நாட்டோடு இணைந்து நடத்தியது?

அ. மாலத்தீவுகள்

ஆ. ஆஸ்திரேலியா

இ. ஜப்பான்

ஈ. இந்தோனேசியா

  • இந்தியா-இந்தோனேஷியா இடையே நிலக்கரி வர்த்தகம் குறித்த 5ஆவது கூட்டு செயற்குழுகூட்டம், காணொலிக்காட்சி வாயிலாக நடந்தது. இதில் இருதரப்பு வர்த்தகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், இந்தியா சார்பில் நிலக்கரித்துறை அமசை்சகத்தின் கூடுதல் செயலாளர் வினோத் குமார் திவாரி கலந்துகொண்டார். இந்தோனேசியா சார்பில் அந்நாட்டு எரிசக்தித்துறை அமைச்சகத்தின் நிலக்கரி சுரங்கத்துறை இயக்குனர் கலந்துகொண்டார்.
  • இந்த கூட்டத்தில், இந்தியாவின் நிலக்கரி கொள்கை சீர்திருத்தங்கள், நிலக்கரி ஆய்வு மற்றும் வர்த்தக நடவடிக்கைகள்குறித்து இக்கூட்டத்தில் நிலக்கரி அமைச்சகம் விளக்கியது. இதேபோல் இந்தோனேசி -யா, தங்கள் நாட்டு நிலக்கரி வர்த்தக கொள்கைகளை விளக்கியது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற யஷ்வர்தன் குமார் சின்ஹா, கீழ்க்காணும் எந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்?

அ. தலைமை தேர்தல் ஆணையர்

ஆ. தலைமை தகவல் ஆணையர்

இ. தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர்

ஈ. இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்

  • குடியரசுத்தலைவர் மாளிகையின் அறிக்கையின்படி, யஷ்வர்தன் குமார் சின்ஹா அண்மையில் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு முன்னர், ஆகஸ்ட் மாதம் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்த பிமல் ஜூல்கா, தலைமை தகவல் ஆணையராக பதவி வகித்து வந்தார். ஹீராலால் சமாரியா, சரோஜ் புன்ஹாணி மற்றும் உதய் மஹூர்க்கர் ஆகியோருக்கு தகவல் ஆணையர்களாக தலைமை தகவல் ஆணையர் Y K சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர்களுடன் சேர்த்து தலைமை தகவலாணையர் உட்பட தகவலாணையர்களின் மொத்த எண்ணி -க்கை எட்டாக உயர்ந்துள்ளது.

7. பயிர் எச்சங்களை எரிப்பது குறித்த விழிப்புணர்வு பரப்புரையத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ. பஞ்சாப்

ஆ. உத்தர பிரதேசம்

இ. ஹரியானா

ஈ. பீகார்

  • மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர் எச்சங்களை எரிப்பது குறித்த விழிப்புணர்வு பரப்புரையை உத்தரபிரதேச மாநிலம் தொடங்கியுள்ளது. மாநிலத்து உழவர்களிடம் தங்கள் பயிர்களின் எச்சங்களை (பராலி எனப்படுகிறது) எரிக்க வேண்டாம் என்றும், ஆனால் அதற்கு பதிலாக அவற்றை பயன்படுத்தி உரம் தயாரிக்க வேண்டும் என்றும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார். மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பல தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தின் பயனாளிகள் யார்?

அ. ஆசிரியர்கள்

ஆ. ஆயுதப்படை வீரர்கள்

இ. இந்திய குடிமைப்பணி அதிகாரிகள்

ஈ. விளையாட்டு வீரர்கள்

  • ஒரே பதவியில் ஓய்வுபெறும் ஆயுதப்படை வீரர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியத்தை வழங்குவதற் -காக ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டம் தொடங்கப்பட்டது. ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ளதாக பிரதமர் மோடி சமீபத்தில் எடுத்துரைத்தார்.
  • இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபின், இராணுவத்தினருக்கு அவர்கள் ஓய்வுபெறும் தேதியிலிருந்து கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கப்படும் நடைமுறை மாற்றப்பட்டு அவர்கள் வகித்த பதவி, பணிக்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

9. இந்திய வானிலை ஆய்வுத்துறையானது எந்த நோய் பரவவுள்ளததற்கான முன்னறிவிப்பை வெளியிட உள்ளது?

அ. மலேரியா

ஆ. டெங்கு

இ. COVID–19

ஈ. சிக்குன்குனியா

  • புவி அறிவியல் அமைச்சகத்தின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, இந்திய வானிலை ஆய்வுமையம் ஆனது அடுத்த பருவமழைக்காலத்தில் இருந்து மலேரியா பரவல் குறித்த முன்னறிவிப்பை வெளியிட உள்ளது. உயர்செயல்திறன்கொண்ட கம்ப்யூட்டிங் (HPC) வசதியை தற்போதுள்ள 10 பெட்டாப்ளாப்களில் இருந்து 40 பெட்டாப்ளாப்களாக உயர்த்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. தற்போது, HPC’இல் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

10. ‘எட்டா’ என்ற புயல், அண்மையில் எந்த நாட்டில் பெரும் நிலச்சரிவை ஏற்படுத்தியது?

அ. குவாத்தமாலா

ஆ. பிரேசில்

இ. நியூசிலாந்து

ஈ. பிலிப்பைன்ஸ்

  • குவாத்தமாலாவில் ‘எட்டா’ என்ற புயலின் காரணமாக பொழிந்த பெருமழை மற்றும் புயல் காற்றின் காரணமாக ஐம்பதுக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரழந்துள்ளனர். இந்தப் புயல், மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவை தாக்கிய பின்னர், வெப்பமண்டலப் புயலாக மாறியது. இதன் காராணமாக அந்நாட்டின் ஒரு நகரத்தில் நிகழ்ந்த மலைச்சரிவில் பல வீடுகள் சேற்றில் புதைந்தன. இது, அண்டை நாடான நிகரகுவாவிலும் நிலச்சரிவை ஏற்படுத்தியது.

1. Which body has asked the Government of India to regulate use of disinfectants on human beings?

[A] National Human Rights Commission

[B] National Health Authority

[C] Supreme Court of India

[D] Indian Medical Commission

  • The apex court of India, the Supreme Court has asked the Government of India to issue directions within a month regarding or regulating the use of disinfection on humans, in disinfection tunnels. The Supreme Court stated that though the Centre had issued advisory that spraying of disinfectant on human body is not recommended, no steps were not taken in this regard to prevent or regulate it.

2. Which organisation has rolled out the Co–Lending Model (CLM) for priority sector lending?

[A] Small Farmers’ Agri–Business Consortium

[B] Reserve Bank of India

[C] NABARAD

[D] State Bank of India

  • The Reserve Bank of India has announced a Co–Lending Model (CLM) scheme for priority sector lending. Under the new scheme, Banks can enter into a prior agreement with NBFCs for co lending of Priority Sector Loans. The CLM is an improvement over the co–origination of loan scheme announced by the RBI in September 2018.

3. Which international organisation has decided to hold a meeting on December 1, 2020 to commemorate victims of World War II?

[A] World Bank

[B] International Court of Justice

[C] UN General Assembly

[D] UNESCO

  • The United Nations General Assembly (UNGA) has decided to hold a meeting on December 1, 2020 to commemorate all victims of World War II. The resolution in this regard was drafted by Russia and has been adopted based on a voting. Second World War, was a global war that lasted from 1939 to 1945. It involved the vast majority of the world’s countries forming two opposing military alliances namely the Allies and the Axis.

4. ‘Satavadhanam’, which was seen in news recently, is a programme related to which field?

[A] Sports

[B] Literature

[C] Technology

[D] Sports

  • The International ‘Satavadhanam’ program has been launched by the Vice President Venkiah in a virtual mode. Satavadhanam is a literary event that is organized by Dr. Medasani Mohan under the sponsorship of Sri Krishnadevaraya Satsang in Tirupati. It includes literary performance like solving tricky literary posers, improvising poems etc.

5. India has hosted the 5th Joint Working Group on Coal with which country?

[A] Maldives

[B] Australia

[C] Japan

[D] Indonesia

  • The 5th Joint Working Group on Coal between India and Indonesia was hosted by India, through video conference mode. It was co–chaired by Vinod Kumar Tiwari, Additional Secretary, Ministry of Coal and its counterpart of Indonesia. During the meeting, India’s Ministry of Coal made presentations on Indian Coal Policy reforms, Coking Coal Exploration and Commercial Mining which was followed by presentations by the Indonesian side.

6. Yashvardhan Kumar Sinha, who was seen in news recently, has been appointed in which position?

[A] Chief Election Commissioner

[B] Chief Information Commissioner

[C] Chief Vigilance Commissioner

[D] Attorney General of India

  • Yashvardhan Kumar Sinha has been recently appointed as the Chief Information Commissioner (CIC) as per the statement from the Rashtrapati Bhavan. Prior to this appointment the post of CIC was held by Bimal Julka, who completed his term in August. President Ram Nath Kovind has also administered the oath of office to Uday Mahurkar, Heera Lal Samariya and Saroj Punhani as Information Commissioners.

7. Which state has launched an awareness campaign on burning of crop residues?

[A] Punjab

[B] Uttar Pradesh

[C] Haryana

[D] Bihar

  • Uttar Pradesh has launched an awareness campaign regarding the burning of Crop remains in many parts of the state. The Chief Minister Yogi Adityanath has asked the farmers of the state not to burn remains of their crops (known as Parali) but to make compost with it. Several volunteers are also involved in creating awareness about pollution.

8. Who are the beneficiaries of ‘One Rank One Pension’ scheme, which was seen in news recently?

[A] Teachers

[B] Armed Forces Veterans

[C] Bureaucrats

[D] Sportspersons

  • The One Rank One Pension (OROP) scheme was launched to provide uniform pensions for Armed Forces Veterans, who are retiring in the same rank with the same length of service. The Prime Minister has recently highlighted that the One Rank One Pension scheme has completed five years since its implementation. The pension is provided irrespective of the time they retire.

9. The India Meteorological Department (IMD) is to issue forecast for the outbreak of which disease?

[A] Malaria

[B] Dengue

[C] COVID–19

[D] Chikungunya

  • As per the recent statement from the Ministry of Earth Sciences, the India Meteorological Department (IMD) is set to issue forecast for malaria outbreaks from next monsoon. India has also planned to increase the high–performance computing (HPC) facility from the current capacity of 10 petaflops to 40 petaflops. India is at fourth place after the US, the UK and Japan in HPC, at present.

10. A Storm named ‘Eta’ has recently caused massive landslides in which country?

[A] Guatemala

[B] Brazil

[C] New Zealand

[D] Philippines

  • Over 50 people have been killed by landslides in Guatemala after the Storm named ‘Eta’ caused torrential rain and winds. After the storm hit the Central American country, it was later downgraded to a tropical storm. A hillside in a single town of the country collapsed which buried several houses under mud. It also mae landfall in the neighbouring country Nicaragua.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!