Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

11th September 2020 Current Affairs in Tamil & English

11th September 2020 Current Affairs in Tamil & English

11th September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

11th September Tamil Current Affairs 2020

11th September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. இந்தியா மற்றும் எந்த நாட்டுக்கு இடையேயான தரமான ஜவுளிகள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ. ஜப்பான்

இ. ஆஸ்திரேலியா

ஈ. பிரேசில்

  • ஜப்பான் நாட்டு சந்தைக்கேற்றவாறு இந்திய ஜவுளிகள் மற்றும் ஆடைகளின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் பரிசோதிப்பதற்காக, இந்தியாவின் ஜவுளிகள் ஆணையம் மற்றும் ஜப்பானின் நிசன்கென் தர மதிப்பீடு மையம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால், தொழில்நுட்பத் துறைக்கான ஜவுளிகள் & துணி வகைகளை இந்தியாவில் பரிசோதிக்கும் பணிகளை, நிசன்கென் தர மதிப்பீடு மையத்தின் சார்பாக ஜவுளிகள் ஆணையம் மேற்கொள்ளும்.

2.புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. க்ஷத்திரபதி சிவாஜி

ஆ. கிரிஸ் பாண்டே

இ. லீனா வில்ஜனென்

ஈ. V முரளீதரன்

  • 2020 செப்.1 முதல், இந்தியாவின் தலைமைப் புள்ளியியல் நிபுணராக க்ஷத்ரபதி சிவாஜியை நியமித்து இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 1986ஆம் ஆண்டுத்தொகுதியைச் சார்ந்த IAS அதிகாரியான இவர், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளராக பொறுப்பேற்பார். இந்திய அரசு, அவரை இன்னும் ஒரு முழுநேர தலைமைப் புள்ளியியல் நிபுணராக நியமிக்காத காரணத்தால், க்ஷத்திரபதி சிவாஜி, தொடர்ந்து மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் தலைவராக பணியிலிருப்பார்.

3.உயிரி பல்வகைமையைப் பாதுகாப்பதற்காக, அவை ஒன்றை அமைத்துள்ள மாநில / யூனியன் பிரதேச அரசு எது?

அ. அஸ்ஸாம்

ஆ. மத்திய பிரதேசம்

இ. கர்நாடகா

ஈ. ஜம்மு & காஷ்மீர்

  • ஜம்மு & காஷ்மீர் அரசானது உயிரி பல்வகைமையைப் பாதுகாப்பதற்காக, பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அண்மையில் அமைத்தது. ‘ஜம்மு-காஷ்மீர் உயிரி பல்வகைமை அவை’ என்ற பெயரிலான இப்புதிய அவையில், முதன்மை வனப்பாதுகாவலர் தலைவராகவும், 5 அலுவல்பூர்வமற்ற உறுப்பினர்களும் இருப்பார்கள். இந்த அவை, “ஜம்மு-காஷ்மீர் உயிரி பல்வகைமையை கவுன்சில் நிதியம்” என்று பெயரிடப்பட்ட ஒரு நிதியத்தையும் உருவாக்கும்.

4.தொட்டுணரக்கூடிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ள மாநில அரசு எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. அஸ்ஸாம்

இ. பீகார்

ஈ. கேரளா

  • தொட்டுணரக்கூடிய பாரம்பரியத்தை பாதுகாத்து மீட்டெடுக்கும் மசோதாவை அண்மையில் அஸ்ஸாம் மாநில சட்டமன்றம் நிறைவேற்றியது. அசாம் பாரம்பரிய நினைவுச்சின்னங்கள் & பதிவுச்சட்டம், 1959 உட்பட எந்தவொரு தேசிய / மாநில சட்டத்தின் கீழும் தற்போது இல்லாத, குறைந்தது 75 ஆண்டுகளாக இருந்துவரும் அனைத்து மரபுச்சின்னங்களையும் இந்தச்சட்டம் உள்ளடக்கும்.

5. அமெரிக்க பாதுகாப்புத்துறையின் நடப்பாண்டுக்கான (2020) அறிக்கையின்படி, உலகின் மிகப்பெரிய கடற்படையைக் கொண்டுள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. சீனா

இ. இஸ்ரேல்

ஈ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

  • அமெரிக்க பாதுகாப்புத்துறையானது தனது சீன இராணுவத்தின் ஆற்றல் குறித்த நடப்பாண்டு (2020) அறிக்கையை அமெரிக்க காங்கிரசுக்கு சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின்படி, சுமார் 350 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல்களுடன் சீனா உலகின் மிகப்பெரிய கடற்படையைக் கொண்டுள்ளது. அதே சமயம், அமெரிக்கக் கடற்படையின் போர் படை சுமார் 293 கப்பல்களை மட்டுமே கொண்டுள்ளது.

6.நிறை நிறமாலைமானியைப் பயன்படுத்தி, COVID-19 வைரஸ் தொற்றைக்கண்டறியும் முறையை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?

அ. ICAR

ஆ. IGIB

இ. ICMR

ஈ. AIIMS

  • நிறை நிறமாலைமானியைப்பயன்படுத்தி COVID-19 வைரஸ் தொற்றைக்கண்டறியும் ஒரு முறையை மரபணுத்தொகுதியியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் (IGIB) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • இம்முறையில், வைரஸ் கண்டறிதல் ஆனது 90% உணர்திறன் மற்றும் 100% தனித்தன்மையுடன் மேற்கொள்ளலாம். மொத்த செயல்முறைக்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 30 நிமிடங்களாகும். IGIB என்பது அறிவியல் & தொழிலக ஆராய்ச்சிக்கழகத்தின்கீழ் (CSIR) இயங்கும் ஒரு நிறுவனமாகும்.

7.அமெரிக்க – இந்திய உத்திகள் வகுத்தல் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் நடப்பாண்டுக்கான (2020) உச்சிமாநாட்டின் கருப்பொருள் என்ன?

அ. Navigating New Challenges

ஆ. COVID and the world

இ. Unlocking New Opportunities

ஈ. Make Way for the Future

  • “Navigating New Challenges” என்பது மூன்றாம் அமெரிக்க – இந்திய உத்திகள் வகுத்தல் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் உச்சிமாநாட்டின் கருப்பொருளாகும். பிரதமர் மோடி, இந்த நிகழ்வின் முக்கிய உரையை, மெய்நிகராக நிகழ்த்தினார். USISPF என்பது ஒரு சுயாதீன இலாப நோக்கற்ற அமைப்பாகும்; இது அமெரிக்க-இந்திய கூட்டாண்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

8.மொத்த விற்பனை மருந்துப்பூங்கா அமைப்பதற்காக இந்திய வேதித்தொழினுட்ப நிறுவனத்துடன் (IICT) ஒப்பந்தம் செய்துள்ள மாநிலம் எது?

அ. கேரளம்

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. இராஜஸ்தான்

ஈ. அருணாச்சல பிரதேசம்

  • மாநிலத்தில் மொத்த விற்பனை மருந்துப்பூங்கா அமைப்பதற்காக, ஆந்திர பிரதேச மாநில தொழிலக உட்கட்டமைப்பு கழகமானது (APIIC) CSIR-இந்திய வேதித்தொழினுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, CSIR-IICT ஓர் அறிவுப்பங்காளராக செயல்படுவதோடு, நிதியுதவி கோருவதற்காக, ஆந்திர மாநில அரசு, மத்திய வேதியியல் & உரங்கள் அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்க ஒரு திட்டத்தை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உதவியையும் வழங்கும்.

9.ஹிந்தி, காஷ்மீர் மற்றும் டோக்ரி ஆகிய மூன்றும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தின் அலுவல்பூர்வ மொழிகளாக மாறவுள்ளன?

அ. மகாராஷ்டிரா

ஆ. தெலுங்கானா

இ. ஜம்மு–காஷ்மீர்

ஈ. டாமன் மற்றும் டையூ

  • ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீர், டோக்ரி மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிக்கும் அலுவல்பூர்வ மொழித் தகுதி வழங்கும் மசோதாவுக்கு பிரதம அமைச்சர் தலைமையிலான நடுவண் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மொழிகள் தற்போதுள்ள அலுவல்பூர்வ மொழிகளான உருது & ஆங்கிலத்துடன் கூடுதலாக இருக்கும். இந்த மசோதாவை சட்டமாக்குவதற்காக, ஜம்மு-காஷ்மீர் அலுவல்மொழிச்சட்டம், 2020 ஆனது நாடாளுமன்றத்தின் பருவமழை கூட்டத்தின்போது அறிமுகப்படுத்தப்படும்.

10.இந்தியாவிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்தின்கீழ் (MEIS) கிடைக்கப்பெறும் மொத்த வெகுமதிகளுக்கு, அரசாங்கம் விதித்துள்ள வரையறை என்ன?

அ. ரூ. 50 இலட்சம்

ஆ. ரூ. 1 கோடி

இ. ரூ. 2 கோடி

ஈ. ரூ. 5 கோடி

  • இந்தியாவிலிருந்து பொருள்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்தின்கீழ் (MEIS) கிடைக்கப்பெறும் மொத்த வெகுமதிகளுக்கு வரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 01.09.2020 – 31.12.2020 வரை செய்யப்படும் ஏற்றுமதிகளுக்காக இறக்குமதி ஏற்றுமதி குறியீடு (IEC) வைத்திருக்கும் ஒருவருக்கு இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மொத்த வெகுமதி, ஓர் இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டுக்கு `2 கோடியை தாண்டக்கூடாது என்று வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
  • மேலும், இறக்குமதி ஏற்றுமதி குறியீடு வைத்திருக்கும் ஒருவர் 01.09.2020’க்கு முன் ஓராண்டு காலத்துக்கு எந்த ஏற்றுமதியும் செய்யாமல் இருந்தாலோ அல்லது செப்டம்பர்.1 அன்று அல்லது அதற்கு பிறகு புதிய இறக்குமதி ஏற்றுமதி குறியீடு பெற்றிருந்தாலோ, அவர் MEIS’இன்கீழ் எந்தப்பலனையும் கோர தகுதியுடையவர் ஆகமாட்டார். அது மட்டுமல்லாமல், 01.01.2021 முதல் MEIS திட்டம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும்.

1. The Union Cabinet approved the MoU with which country, for cooperation in the field of quality textiles?

[A] United States of America

[B] Japan

[C] Australia

[D] Brazil

  • The Union Cabinet chaired by the Prime Minister Narendra Modi has approved for signing of a Memorandum of Understanding (MoU) between India and Japan for cooperation in the field of quality textiles. Under the MoU, Nissenken Quality Evaluation Centre, Japan would assign Textile Committee as their cooperative Testing and Inspection service provider in India for apparels. Improving quality and testing of Indian textile products for Japanese market is also to be focussed.

2. Who has been appointed as the Secretary of the Ministry of Statistics and Programme Implementation (MoSPI)?

[A] Kshatrapati Shivaji

[B] Kris Panday

[C] Leena Viljanen

[D] V Muraleedharan

  • The Government of India has appointed Kshatrapati Shivaji as the chief Statistician of India from September 1, 2020. The 1986–batch IAS officer will take charge as the Secretary in Ministry of Statistics and Programme Implementation (MoSPI). The Government has not appointed a full–time Chief statistician yet while Kshatrapati Shivaji will continue to head the Ministry of Personnel, Public Grievances and Pensions.

3. Which Indian state/UT has set up a council for conservation of biological diversity?

[A] Assam

[B] Madhya Pradesh

[C] Karnataka

[D] Jammu & Kashmir

  • The Jammu and Kashmir Government has recently set up a 10–member council for conservation of biological diversity.
  • A new council named the Jammu and Kashmir Biodiversity Council will be constituted, which will have the Principal Chief Conservator of Forests as the Chairman and five non–official members. The council shall constitute a fund named as “Jammu and Kashmir Biodiversity Council Fund”.

4. Which Indian state assemble has passed a bill to protect Tangible Heritage?

[A] Madhya Pradesh

[B] Assam

[C] West Bengal

[D] Andhra Pradesh

  • The state Assembly of Assam has recently passed a bill to protect and restore Tangible Heritage in the state. This act will cover all those heritages that have been in existence for at least 75 years, which are currently not covered under any national or state law including the Assam Ancient Monuments and Records Act, 1959.

5. As per the U.S. Department of Defense’s 2020 report, which country has the largest navy in the world?

[A] India

[B] China

[C] Israel

[D] United States of America

  • The United States Department of Defense released its 2020 annual report to the US Congress, on Chinese military power. As per the DoD report, China has the largest navy in the world, with a battle force of around 350 ships and submarines including over 130 major surface combatants. Whereas, the U.S. Navy’s battle force is approximately 293 ships.

6. Which institution has developed a method to detect corona virus infection using mass spectrometer?

[A] ICAR

[B] IGIB

[C] ICMR

[D] AIIMS

  • Researchers of the Institute of Genomics and Integrative Biology (IGIB) have developed a method to detect corona virus infection using mass spectrometer.
  • In this method, the virus detection can be done with sensitivity of 90 % and specificity of 100 %. The time taken from sample to result is 30 minutes. IGIB is an institute under the Council for Scientific and Industrial Research (CSIR).

7. What is the theme of this year’s US India Strategic and Partnership Forum?

[A] Navigating New Challenges

[B] COVID and the world

[C] Unlocking New Opportunities

[D] Make Way for the Future

  • The theme of the 3rd US India Strategic and Partnership Forum (USISPF) was “Navigating New Challenges”. Prime Minister Narendra Modi delivered the keynote address of the event in a virtual mode. The USISPF is an independent not for profit organization aimed to strengthen the US India partnership.

8. Which state has entered into an agreement with CSIR–Indian Institute of Chemical Technology, for setting up Bulk Drug Park?

[A] Tami Nadu

[B] Karnataka

[C] Andhra Pradesh

[D] Uttar Pradesh

  • The Andhra Pradesh Industrial Infrastructure Corporation Ltd (APIIC) has entered into a MoU with CSIR–Indian Institute of Chemical Technology for setting up of Bulk Drug Park in the state. As per the MoU, CSIR–IICT will act as a knowledge partner and provide technical assistance to prepare a proposal to be submitted by the Andhra Pradesh Government to the Union Ministry of Chemicals and Fertilizers, for seeking financial assistance.

9. Hindi, Kashmiri and Dogri are set to become the official languages of which State / UT?

[A] Maharashtra

[B] Telangana

[C] Jammu and Kashmir

[D] Daman and Diu

  • The Union Cabinet, headed by the Prime Minister has approved a bill which gives official language status to Kashmiri, Dogri and Hindi in the UT of Jammu and Kashmir.
  • These languages are apart from the existing official languages Urdu and English. Jammu and Kashmir Official Languages Bill, 2020 would be introduced in the Monsoon session of the Parliament to legislate this bill.

10. What is the cap imposed by the government on the incentives under Merchandise Export from India Scheme (MEIS)?

[A] Rs. 50 lakh

[B] Rs. 1 crore

[C] Rs. 2 crore

[D] Rs. 5 crore

  • The Union Government has capped export incentives under Merchandise Export from India Scheme (MEIS), at Rs.2 crore per exporter. This incentive cap is applicable for exporters who have made outbound from September 1 to December 31, 2020. This has been announced by Directorate General of Foreign Trade (DGFT) though its notification. The DGFT also stated that MEIS scheme would be withdrawn from 1st January 2020.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!