Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Science Questions

11th Std Science Lesson Wise Questions in Tamil – Part 1

11th Std Science Lesson Wise Questions in Tamil

11th Science Lesson 1 Questions in Tamil

1] இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்

1. ‘Science’ எனும் சொல் கீழ்க்கண்ட எந்த மொழிச்சொல்லிலிருந்து உருவானது.

A) கிரேக்கம்

B) இலத்தீன்

C) ஸ்பானிஷ்

D) அரேபிய

விளக்கம்: ‘Science’ எனும் சொல் “அறிந்து கொள்ளுதல்” எனும் பொருளுடைய “சைன்சியா”[Scientia] எனும் இலத்தீன் மூலச் சொல்லிலிருந்து உருவானதாகும். தமிழ்மொழியில் Science என்பது ‘அறிவியல்’ எனப் பொருள் கொள்ளப்படுகிறது. உண்மைகளை அறிந்து ஆராய்தலே அறிவியலாகும்.

2. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியற்றதைக் கண்டறி:

1) உயிரற்ற பொருட்களைப் பற்றிப் பயிலும் அறிவியல், இயல் அறிவியல் என்றும், உயிருள்ள பொருட்களைப் பற்றிப் பயிலும் அறிவியல் உயிர் அறிவியல் என்றும் அழைக்கப்படுகிறது.

2) அறிவியலின் ஆரம்பமாக கருதப்படுவது இயற்கை நிகழ்வுகளை ஆர்வமாக உற்றுநோக்குதலும், அறிந்து கொள்வதுமேயாகும்.

3) முற்காலத்தில் இயற்கை தத்துவயியலே அறிவியல் என அழைக்கப்பட்டது.

4) எழுத்துமுறை வளர்ச்சி பெறுவதற்கு முன்பு சைகைவழி மூலமே அறிவு பரிமாறிக் கொள்ளப்பட்டது.

விளக்கம்: எழுத்துமுறை வளர்ச்சி பெறுவதற்கு முன்பு வாய்வழி மூலமே அறிவு பரிமாறிக் கொள்ளப்பட்டது.

3. பண்டைய காலத்தில் வானியல் முதல் மருத்துவம் வரை அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்திலும் முன்னோடிகளாகச் சிறந்து விளங்கியவர்கள்______________

A) கிரேக்கர்கள்

B) ரோமானியர்கள்

C) எகிப்தியர்கள்

D) சீக்கியர்கள்

விளக்கம்: பண்டைய காலத்தில் வானியல் முதல் மருத்துவம் வரை அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்திலும் எகிப்தியர்களே முன்னோடிகளாகச் சிறந்து விளங்கினார்கள்.

4. இந்தியர்கள் கீழ்க்கண்ட எந்த காலத்திலிருந்து அறிவியல் மற்றும் கணிதப் பயன்பாட்டில் சிறந்து விளங்கினார்கள்.

A) எகிப்து நாகரிகம்

B) நைல் நதி நாகரிகம்

C) சிந்து சமவெளி நாகரிகம்

D) மொஹஞ்சதோரா நாகரிகம்

விளக்கம்: சிந்து சமவெளி நாகரிக காலந்தொட்டே (3300 – 1300 BCE), இந்தியர்கள் அறிவியல் மற்றும் கணிதப் பயன்பாட்டில் சிறந்து விளங்கினார்கள்.

5. இயற்பியல் (Physics) என்ற பெயர் கீழ்க்கண்ட யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

A) ஐன்ஸ்டீன்

B) அரிஸ்டாட்டில்

C) ஆல்வா எடிசன்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: பொ.ஆ.மு (BCE) 350 இல் இயற்பியல் (Physics) என்ற பெயர் அரிஸ்டாட்டில் (Aristotle) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

6. இயற்பியல் என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது.

A) கிரேக்கம்

B) இலத்தீன்

C) ஸ்பானிஷ்

D) அரேபிய

விளக்கம்: (Physics) இயற்பியல் என்ற சொல்லானது இயற்கை என்ற பொருளுடைய ஃபியுசிஸ் (Fusis) எனும் கிரேக்கச் சொல்லில் இருந்து தருவிக்கப்பட்டது. இயற்பியல் என்பது இயற்கை மற்றும் இயற்கையின் நிகழ்வுகளைப் பற்றி பயிலுவதாகும். எனவே இயற்பியலே அறிவியலின் அனைத்துப் பிரிவுகளுக்கும் அடிப்படையானதாகக் கருதப்படுகிறது.

7. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் பற்றி குறிப்படும் பிரிவு________________

A) III பிரிவு

B) IV A பிரிவு

C) V பிரிவு

D) VI பிரிவு

விளக்கம்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51A(h) அடிப்படைக் கடமைகள் பிரிவு IV A இல் “அறிவியல் மனப்பான்மையையும், மனித நேயத்தையும், சீர்திருத்தத்தையும், ஆய்வு மனப்பான்மையையும் போற்றி வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்” என்று கூறப்பட்டுள்ளது. இதுவே நமது அறிவியல் கல்வியின் நோக்கமாகும்.

8. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் பற்றி குறிப்பிடும் விதி______________

A) 51A(b) விதி

B) 51A(c) விதி

C) 51A(f) விதி

D) 51A(h) விதி

விளக்கம்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51A(h) அடிப்படைக் கடமைகள் பிரிவு IV A இல் “அறிவியல் மனப்பான்மையையும், மனித நேயத்தையும், சீர்திருத்தத்தையும், ஆய்வு மனப்பான்மையையும் போற்றி வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்” என்று கூறப்பட்டுள்ளது. இதுவே நமது அறிவியல் கல்வியின் நோக்கமாகும்.

9. இயற்பியல் பயிலுவதில் உள்ள அணுகுமுறைகள்______________

A) ஒன்றிணைத்துப் பார்த்தல்

B) பகுத்துப்பார்த்தல்

C) வேறுபடுத்தி அறிதல்

D) A,B இரண்டும்

விளக்கம்: இயற்பியல் பயிலுவதில் ஒன்றிணைத்துப் பார்த்தல் மற்றும் பகுத்துப்பார்த்தல் ஆகிய இரு அணுகுமுறைகள் உள்ளன. ஒன்றினைத்துப் பார்த்தல் என்பது வேறுபட்ட இயற்பியல் நிகழ்வுகளை ஒரு சில தத்துவங்கள் மற்றும் விதிகளைப் பயன்படுத்தி விளக்க முயற்சித்தலாகும் மற்றும் பெரிய அமைப்பினை அல்லது பொருளை அதனுள் அடங்கிய நுண்ணியதுகள்களின் மூலம் விளக்க முயற்சிப்பதே பகுத்துப் பார்த்தலாகும்.

10. பொருத்துக:

A) சைன்சியா – 1. ஒலி அலைகள் உருவாதல் (ம) பரவுதல்

B) ஃபியுசிஸ் – 2. கணிதவியல்

C) இயற்பியலின் மொழி – 3. அறிந்து கொள்ளுதல்

D) ஒலியியல் – 4. இயற்கை

A) 1 2 3 4

B) 3 4 2 1

C) 4 3 2 1

D) 3 1 2 4

விளக்கம்:

A) சைன்சியா – 1. அறிந்து கொள்ளுதல்

B) ஃபியுசிஸ் – 2. இயற்கை

C) இயற்பியலின் மொழி – 3. கணிதவியல்

D) ஒலியியல் – 4. ஒலி அலைகள் உருவாதல் (ம) பரவுதல்

11. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முன் வளர்ச்சியடைந்த மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை இயற்பியல்____________

A) மரபு இயற்பியல்

B) மரபு எந்திரவியல்

C) வெப்ப இயக்கவியல்

D) மின்னோட்டவியல்

12. ஓய்வு அல்லது இயக்கநிலையில் உள்ள பொருட்களின் மீது செயல்படும் விசைகளைப் பற்றிய அறிவியல் பிரிவு_____________

A) மரபு இயற்பியல்

B) வான் இயற்பியல்

C) சார்பியல்

D) மரபு எந்திரவியல்

13. பொருத்துக:

A) குவாண்டம் எந்திரவியல் – 1. துகள்களின் இயல்பு

B) அணு இயற்பியல் – 2. அணுவின் பண்புகள்

C) உயர் ஆற்றல் இயற்பியல் – 3. அணுக்கரு அமைப்பு

D) அணுக்கரு இயற்பியல் – 4. அணு (ம) அணு உட்துகள் நிகழ்வு

A) 1 2 3 4

B) 3 4 2 1

C) 4 2 1 3

D) 3 1 2 4

விளக்கம்:

A) குவாண்டம் எந்திரவியல் – 1. அணு (ம) அணு உட்துகள் நிகழ்வு

B) அணு இயற்பியல் – 2. அணுவின் பண்புகள்

C) உயர் ஆற்றல் இயற்பியல் – 3. துகள்களின் இயல்பு

D) அணுக்கரு இயற்பியல் – 4. அணுக்கரு அமைப்பு

14. கூற்று (i): 1905 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் கருத்தியல் ரீதியாக கண்டறியப்பட்ட மிகவும் பிரபலமான சமன்பாடு E =mc2 ஆகும்.

கூற்று (ii): இக்கருத்து 1932 இல் காக்ராஃப்ட் மற்றும் வால்டன் அவர்களால் சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டது.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் தவறு

D) கூற்று i, ii இரண்டும் சரி

15. மனித உடலுக்கு ஊறு விளைவிக்காத பொருட்களைக் கொண்டு மாற்று உறுப்புகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் இயற்பியல்___________

A) மரபு இயற்பியல்

B) மரபு எந்திரவியல்

C) குவாண்டம் இயற்பியல்

D) சார்பியல்

விளக்கம்: மனித உடலுக்கு ஊறு விளைவிக்காத பொருட்களைக் கொண்டு மாற்று உறுப்புகள் தயாரிப்பதற்கு குவாண்டம் இயற்பியல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஆய்வுக் கூட ஆராய்ச்சி செயல்முறையில் ஆராயும் முன், குவாண்டம் இயற்பியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி பொருத்தமான பொருட்களை முன்னறியும் முறை நவீன சிகிச்சை முறையில் பயன்படுத்தப்படுகிறது.

16. எலக்ட்ரானின் நிறை_____________

A)9.11 × 1031 kg

B) 9.11 × 10-31 kg

C) 8.11 × 10-31 kg

D) 6.11 × 10-31 kg

17. வேதியியல் ஆய்வாளர்கள் தனிம வரிசை அட்டவணையில் கீழ்க்கண்ட எதன் அடிப்படையில் அணுக்களை வரிசைப்படுத்தினர்.

A) தனிமம்

B) அணுஎண்

C) நிறை எண்

D) சேர்மம்

விளக்கம்: வேதியியல் ஆய்வாளர்கள் தனிம வரிசை அட்டவணையில் அணு எண் அடிப்படையில் அணுக்களை வரிசைப் படுத்துகின்றனர். இது மேலும் அணுக்களின் இணைதிறனின் இயல்புகள், வேதியியல் பிணைப்பு பற்றி அறியவும், சிக்கலான வேதியியல் அமைப்புகளை புரிந்து கொள்ளவும் உதவுகிறது.

18. செல்லின் கட்டமைப்பை பார்க்க உதவும் நுண்ணோக்கி_____________

A) கூட்டு நுண்ணோக்கி

B) எலக்ட்ரான் நுண்ணோக்கி

C) மின்னணு நுண்ணோக்கி

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: எலக்ட்ரான் நுண்ணோக்கி கண்டுபிடிப்பு ஒரு செல்லின் கட்டமைப்பைக்கூட பார்க்க உதவுகிறது. X- கதிர் மற்றும் நியூட்ரான் விளிம்பு விளைவு நுணுக்கங்கள் நியூக்ளிக் அமிலங்களின் அமைப்புகளைப் புரிந்து கொள்ளவும் அதன்மூலம் அடிப்படையான வாழ்க்கை செயல்முறைகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

19. உடலை பகுப்பாய்வு செய்ய உதவும் கதிர்_____________

A) X – கதிர்

B) காமாக் கதிர்

C) ரேடியோ கதிர்

D) புற ஊதாக் கதிர்

விளக்கம்: X -கதிர் மற்றும் நியூட்ரான் விளிம்பு விளைவு நுணுக்கங்கள் நியூக்ளிக் அமிலங்களின் அமைப்புகளைப் புரிந்து கொள்ளவும் அதன்மூலம் அடிப்படையான வாழ்க்கை செயல்முறைகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. X – கதிர்கள் உடலைப் பகுப்பாய்வு செய்ய உதவுகிறது.

20. பொருத்துக:

A) புற்றுநோய் – 1. பாறைகளின் வயதை அறிய

B) கோள்களின் இயக்கம் – 2. ரேடியோ சிகிச்சை முறை

C) ரேடியோ தொலை நோக்கி – 3. அண்டத்தின் தொலைதூரத்தை அறிய

D) கதிரியக்கம் – 4. வானியல் தொலைநோக்கி

A) 2 4 3 1

B) 3 4 2 1

C) 4 2 1 3

D) 3 1 2 4

விளக்கம்:

A) புற்றுநோய் – 1. ரேடியோ சிகிச்சை முறை

B) கோள்களின் இயக்கம் – 2. வானியல் தொலைநோக்கி

C) ரேடியோ தொலை நோக்கி – 3. அண்டத்தின் தொலைதூரத்தை அறிய

D) கதிரியக்கம் – 4. பாறைகளின் வயதை அறிய

21. கூற்று (i): நீங்கள் எதைப்பற்றி பேசுகிறீர்களோ, அதனை அளவீடு செய்து பின்பு அதனை எண்களால் வெளிப்படுத்த முடியும் என்றால் மட்டுமே உங்களுக்கு அதனைப் பற்றி ஓரளாவாவது தெரிந்துள்ளது எனலாம். ஆனால் எண்கள் மூலம் அதனை விளக்க முடியாது எனில், உங்களுக்கு மிகக்குறைவான மற்றும் போதுமற்றதான அளவே அதனைப் பற்றிய அறிவு உள்ளது என்றுறைத்தவர்- லார்டு பிரிட்டன்

கூற்று (ii): அளவீட்டியல் என்பது எந்த ஒரு இயற்பியல் அளவையும் அதன் படித்தர அளவுடன் ஒப்பிடுவது ஆகும்.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் தவறு

D) கூற்று i,ii இரண்டும் சரி

விளக்கம்: நீங்கள் எதைப்பற்றி பேசுகிறீர்களோ, அதனை அளவீடு செய்து பின்பு அதனை எண்களால் வெளிப்படுத்த முடியும் என்றால் மட்டுமே உங்களுக்கு அதனைப் பற்றி ஓரளாவாவது தெரிந்துள்ளது எனலாம். ஆனால் எண்கள் மூலம் அதனை விளக்க முடியாது எனில், உங்களுக்கு மிகக்குறைவான மற்றும் போதுமற்றதான அளவே அதனைப் பற்றிய அறிவு உள்ளது என்றுறைத்தவர்- லார்டு கெல்வின்

22. வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிடப்பட இயலாத அளவுகள்___________அளவுகள் ஆகும்.

A) அடிப்படை அளவுகள்

B) வழி அளவுகள்

C) பன்னாட்டு அளவுகள்

D) படித்தர அளவுகள்

விளக்கம்: இயற்பியல் அளவுகள் இரு வகைப்படும். ஒன்று அடிப்படை அளவுகள், மற்றொன்று வழி அளவுகள். வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிடப்பட இயலாத அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும்.

23. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைக் கண்டறி.

A) மின்னோட்டம்

B) ஒளிச்செறிவு

C) பொருளின் அளவு

D) பரப்பு

விளக்கம்: நீளம், நிறை, காலம், மின்னோட்டம், வெப்பநிலை, ஒளிச்செறிவு மற்றும் பொருளின் அளவு ஆகியவை அடிப்படை அளவுகளாகும்.

24. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைக் கண்டறி.

A) நிறை

B) கனஅளவு

C) திசை வேகம்

D) முடுக்கம்

விளக்கம்: அடிப்படை அளவுகளால் குறிப்பிடக்கூடிய அளவுகள் வழி அளவுகள் எனப்படும். எ.கா. பரப்பு, கனஅளவு, திசை வேகம், முடுக்கம், விசை மற்றும் பல

25. பொருத்துக:

A) அடி, பவுண்ட், வினாடி – 1. c.g.s

B) சென்டிமீட்டர், கிராம், வினாடி – 2. m.k.s

C) மீட்டர், கிலோகிராம், வினாடி – 3. பன்னாட்டு அலகு முறை (SI)

D) கிலோகிராம் – 4. f.p.s

A) 2 4 3 1

B) 3 4 2 1

C) 4 1 2 3

D) 3 1 2 4

விளக்கம்:

A) அடி, பவுண்ட், வினாடி – 1. f.p.s

B) சென்டிமீட்டர், கிராம், வினாடி – 2. c.g.s

C) மீட்டர், கிலோகிராம், வினாடி – 3. m.k.s

D) கிலோகிராம் – 4. பன்னாட்டு அலகு முறை (SI)

26. கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி.

i) cgs,mks மற்றும் SIஅலகு முறைகள் மெட்ரிக் அல்லது தசம அலகு முறையாகும்.

ii) fps அலகு முறை மெட்ரிக் அலகு முறை அல்ல.

A) i சரி,ii தவறு

B) i தவறு,ii சரி

C) i,ii இரண்டும் சரி

D) i,ii இரண்டும் தவறு

27. பன்னாட்டு அலகு முறை அல்லது SIஅலகு முறையானது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு__________

A) 1960

B) 1971

C) 1981

D) 1976

விளக்கம்: அறிவியல் அறிஞர்கள் மற்றும் பொறியியல் வல்லுனர்களால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட அலகு முறை மெட்ரிக் முறை என அழைக்கப்பட்டது. 1960க்கு பிறகு இது பன்னாட்டு அலகு முறை அல்லது SIஅலகு முறையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

28. SIஅலகு முறை என்பது ஒரு____________மொழிச் சொல்லாகும்.

A) இலத்தின்

B) கிரேக்கம்

C) அரேபிய

D) பிரெஞ்சு

29. பொருட்களின் எடைகள் மற்றும் அளவீடுகள் குறித்து மாநாடு நடைபெற்ற ஆண்டு___________

A) 1960

B) 1967

C) 1971

D) 1977

விளக்கம்: உலகளாவிய அறிவியல், தொழில்நுட்பம், தொழில் துறை மற்றும் வணிகப் பயன்பாட்டிற்காக,1971 இல் நடைபெற்ற எடைகள் மற்றும் அளவீடுகள் பொதுமாநாட்டில் SIஅலகு முறையின் நிலையான திட்டக் குறியீடுகள், அலகுகள் மற்றும் சுருக்கக்குறியீடுகள் உருவாக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

30. SIஅலகு முறையின் சிறப்பியல்புகளுல் பொருந்தாததைக் கண்டறி.

1) இம்முறையில் ஒரு இயற்பியல் அளவிற்கு ஒரே ஒரு அலகு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதாவது இம்முறை ஓர் பங்கீட்டு, பகுத்தறிவுக்கிசைந்த முறையாகும்.

2) இம்முறையில் அனைத்து வழி அலகுகளும், அடிப்படை அலகுகளில் இருந்து எளிதாக தருவிக்கப்படுகின்றன. எனவே இது ஓர் பன்மையியல் அலகு முறையாகும்.

3) இது ஓர் மெட்ரிக் அலகு முறையாதலால் பெருக்கல் மற்றும் துணைப்பெருக்கல் ஆகியன 10 இன் மடங்குகளாக நேரடியாக தரப்படுகின்றன.

A) 1, 2 மட்டும் தவறு

B) 3 மட்டும் தவறு

C) 2 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: இம்முறையில் அனைத்து வழி அலகுகளும், அடிப்படை அலகுகளில் இருந்து எளிதாக தருவிக்கப்படுகின்றன. எனவே இது ஓர் ஓரியல் அலகு முறையாகும்.

31. பொருத்துக:

அடிப்படை அலகு SIஅலகு

A) நீளம் – 1. ஆம்பியர்

B) நிறை – 2. வினாடி

C) காலம் – 3. கிலோகிராம்

D) மின்னோட்டம் – 4. மீட்டர்

A) 1 2 3 4

B) 3 4 2 1

C) 4 3 2 1

D) 3 1 2 4

விளக்கம்:

அடிப்படை அலகு SI அலகு

A) நீளம் – 1. மீட்டர்

B) நிறை – 2. கிலோகிராம்

C) காலம் – 3. வினாடி

D) மின்னோட்டம் – 4. ஆம்பியர்

32. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைக் கண்டறி:

A) வெப்பநிலை – கெல்வின்

B) பொருளின் அளவு – மோல்

C) ஒளிச்செறிவு – கேண்டிலா

D) திண்மக்கோணம் – ரேடியன்

விளக்கம்:

A) வெப்பநிலை – கெல்வின்

B) பொருளின் அளவு – மோல்

C) ஒளிச்செறிவு – கேண்டிலா

D) திண்மக்கோணம் – ஸ்டிரேடியன்

33. நீரின் முப்புள்ளி என்பது கீழ்க்கண்ட எவற்றின் வெப்பநிலைச் சமநிலையாகும்.

A) தெவிட்டு நீராவி

B) தூயநீர்

C) பனிக்கட்டி

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: நீரின் முப்புள்ளி என்பது தெவிட்டு நீராவி, தூயநீர் மற்றும் பனிக்கட்டி ஆகிய மூன்றும் சமநிலையில் உள்ளபோது உள்ள வெப்பநிலை ஆகும். நீரின் முப்புள்ளி வெப்பநிலை 273.16 K

34. பொருத்துக:

A) நீரின் முப்புள்ளி – 1. J kg-1 K-1

B) தளக்கோணம் – 2. ஸ்டிரேடியன்

C) திண்மக்கோணம் – 3. ரேடியன்

D) தன்வெப்ப ஏற்புத்திறன் – 4. (273.16 K)

A) 1 2 3 4

B) 4 3 2 1

C) 3 4 2 1

D) 3 1 2 4

விளக்கம்:

A) நீரின் முப்புள்ளி – 1. (273.16 K)

B) தளக்கோணம் – 2. ரேடியன்

C) திண்மக்கோணம் – 3. ஸ்டிரேடியன்

D) தன்வெப்ப ஏற்புத்திறன் – 4. J kg-1 K-1

35. கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி.

i) ஸ்டிரேடியன்: வட்டத்தின் ஆரத்திற்கு சமமான நீளம் கொண்ட வட்டவில் வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணம், ஒரு ஸ்டிரேடியன் ஆகும்.

ii) ரேடியன்: ஆரத்தின் வர்க்கத்திற்கு சமமான பரப்பு உடைய கோளப்பரப்பின் ஒரு பகுதி, கோளத்தின் மையத்தில் ஏற்படுத்தும் திண்மக்கோணம் ஒரு ரேடியன் ஆகும்.

A) i சரி,ii தவறு

B) i தவறு,ii சரி

C) i,ii இரண்டும் சரி

D) i,ii இரண்டும் தவறு

விளக்கம்:

ரேடியன்: வட்டத்தின் ஆரத்திற்கு சமமான நீளம் கொண்ட வட்டவில் வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணம், ஒரு ரேடியன் ஆகும்.

ஸ்டிரேடியன்: ஆரத்தின் வர்க்கத்திற்கு சமமான பரப்பு உடைய கோளப்பரப்பின் ஒரு பகுதி, கோளத்தின் மையத்தில் ஏற்படுத்தும் திண்மக்கோணம் ஒரு ஸ்டிரேடியன் ஆகும்.

36. பொருத்துக:

A) பீட்டா – 1. (1021)

B) எக்ஸா – 2. (1015)

C) ஜீட்டா – 3. (1018)

D) யோட்டா – 4. (1024)

A) 1 2 3 4

B) 4 3 2 1

C) 2 3 1 4

D) 3 1 2 4

விளக்கம்:

A) பீட்டா – 1. (1015)

B) எக்ஸா – 2. (1018)

C) ஜீட்டா – 3. (1021)

D) யோட்டா – 4. (1024)

37. பொருத்துக:

A) ஃபெம்டோ – 1. (10-15)

B) ஆட்டோ – 2. (10-18)

C) செப்டோ – 3. (10-21)

D) யோக்டோ – 4. (10-24)

A) 1 2 3 4

B) 4 3 2 1

C) 2 3 1 4

D) 3 1 2 4

விளக்கம்:

A) ஃபெம்டோ – 1. (10-15)

B) ஆட்டோ – 2. (10-18)

C) செப்டோ – 3. (10-21)

D) யோக்டோ – 4. (10-24)

38. பொருத்துக:

A) மில்லி – 1. (10-12)

B) மைக்ரோ – 2. (10-3)

C) நானோ – 3. (10-9)

D) பிக்கோ – 4. (10-6)

A) 1 2 3 4

B) 4 3 2 1

C) 3 1 2 4

D) 2 4 3 1

விளக்கம்:

A) மில்லி – 1. (10-3)

B) மைக்ரோ – 2. (10-6)

C) நானோ – 3. (10-9)

D) பிக்கோ – 4. (10-12)

39. கீழ்க்கண்டவற்றுள் சரியாண இணையற்றதைக் காண்க.

A) கிலோ – 103

B) மெகா – 106

C) ஜிகா – 109

D) டெரா – 1024

விளக்கம்:

A) கிலோ – 103

B) மெகா – 106

C) ஜிகா – 109

D) டெரா – 1012

40. கீழ்க்கண்டவற்றுள் சரியாண இணையைக் கண்டறி.

1) டெகா – 101

2) டெசி – 10-1

3) ஹெக்டா – 10-2

4) சென்டி – 102

A) 1, 2 மட்டும் சரி

B) 1, 3 மட்டும் சரி

C) 2, 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

1) டெகா – 101

2) டெசி – 10-1

3) ஹெக்டா – 102

4) சென்டி – 10-2

41. துணை அளவுகளான தளக்கோணம் மற்றும் திண்மக்கோணம் ஆகியவை வழிமுறை அளவுகளாக மாற்றப்பட்ட ஆண்டு_____________

A) 1975

B) 1985

C) 1990

D) 1995

42. கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமற்றதைக் காண்க.

A) திருகு அளவியின் மீச்சிற்றளவு – 0.01mm

B) வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு – 0.1mm

C) புவியின் ஆரம் – 6.4 × 106 m

D) தேசிய இயற்பியல் ஆய்வகம் – மும்பை

விளக்கம்:

A) திருகு அளவியின் மீச்சிற்றளவு – 0.01mm

B) வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு – 0.1mm

C) புவியின் ஆரம் – 6.4 × 106 m

D) தேசிய இயற்பியல் ஆய்வகம் – டெல்லி

43.கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் காண்க.

1) அண்டத்தின் எல்லையின் அறிந்த தொலைவு – 1026 m

2) நமது விண்மீன்திரளின் அளவு – 1021 m

3) புளுட்டோவின் சராசரி சுற்றுப் பாதையின் ஆரம் – 1012 m

4) பூமியில் இருந்து சூரியனின் தொலைவு – 1011 m

A) 1 2 3 மட்டும் சரி

B) 1 2 4 மட்டும் சரி

C) 1 3 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

44. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் காண்க.

1) பூமியின் ஆரம் – 107 m

2) கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் – 10-4 m

3) கால்பந்தாட்ட மைதானத்தின் நீளம் – 10-2 m

4) தாளின் தடிமன் – 10-4 m

A) 1, 4 மட்டும் தவறு

B) 1, 3 மட்டும் தவறு

C) 2, 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

1) பூமியின் ஆரம் – 107 m

2) கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் – 104 m

3) கால்பந்தாட்ட மைதானத்தின் நீளம் – 102 m

4) தாளின் தடிமன் – 10-4 m

45. பொருத்துக: ( மீட்டரில் )

A) இரத்த சிவப்பணுக்களின் விட்டம் – 1. (10-10)

B) ஒளியின் அலைநீளம் – 2. (10-7)

C) வைரஸின் நீளம் – 3. (10-5)

D) ஹைட்ரஜன் அணுவின் விட்டம் – 4. (10-8)

A) 1 2 3 4

B) 4 3 2 1

C) 2 3 1 4

D) 3 2 4 1

விளக்கம்:

A) இரத்த சிவப்பணுக்களின் விட்டம் – 1. (10-5)

B) ஒளியின் அலைநீளம் – 2. (10-7)

C) வைரஸின் நீளம் – 3. (10-8)

D) ஹைட்ரஜன் அணுவின் விட்டம் – 4. (10-10)

46. பூமிக்கும் ஆன்ட்ரோமோடா விண்மீன் திரளுக்கும் இடையே உள்ள தொலைவு___________

A) 10-22

B) 1022

C) 10-24

D) 1026

47. பூமிக்கும் அருகில் உள்ள விண்மீனுக்கும் இடையேயான தொலைவு(சூரியனைத் தவிர)___________

A) 10-22

B) 1022

C) 10-24

D) 1016

48. நிறையை அளவிடப் பயன்படும் உருளை கீழ்க்கண்ட எதனால் உருவாக்கப்பட்டவை____________

A) பிளாட்டினம்

B) வெள்ளீயம்

C) இரிடியம்

D) A, C இரண்டும்

விளக்கம்: நிறையை அளவிடப் பயன்படும் உருளை பிளாட்டினம் – இரிடியம் உலோகக்கலவையால் ஆனது. ஏனெனில் சுற்றுச்சூழலாலும், காலத்தின் மாற்றத்தினாலும் பிளாட்டினம் – இரிடியம் உருளை மிகக் குறைந்த அளவே பாதிக்கப்படும்.

49. நிறையின் மிகப்பெரிய செயல்முறை அலகு______________

A) கிலோகிராம்

B) குவிண்டால்

C) மெட்ரிக் டன்

D) சந்திரசேகர் எல்லை

விளக்கம்: நிறையின் மிகப்பெரிய செயல்முறை அலகு சந்திரசேகர் எல்லை(CSL)யாகும்.

1CSL = சூரியனின் நிறையைப் போன்று 1.4 மடங்கு.

50. காலத்தின் மிகக் குறைந்த நடைமுறை அலகு____________

A) வினாடி

B) மில்லி வினாடி

C) மைக்ரோ வினாடி

D) ஸேக்

51. கீழ்க்கண்டவற்றுள் சரியானதைக் கண்டறி:

1) அணுக்கருவின் அளவு – 10-14

2) புரோட்டானின் விட்டம்(தடிமன்) – 10-15

3) 1 ஸேக் – 10-8 s

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

52. அணு மற்றும் அணுக்கருத் துகள் போன்ற சிறிய துகள்களின் நிறைகளை கண்டறியப் பயன்படுவது_____________

A) ரேடியோ கதிர்வீச்சு முறை

B) புற ஊதாக்கதிர் முறை

C) நிறை நிறமாலைமானி முறை

D) மேற்கண்ட எதுமில்லை

53. நிறைகளைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் பொதுவான தராசுகள்___________

A) சாதாரண தராசு

B) சுருள்வில் தராசு

C) எலக்ட்ரானியல் தராசு

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: சாதாரண தராசு, சுருள்வில் தராசு, எலக்ட்ரானியல் தராசு போன்ற சில தராசுகள் பொதுவாக நிறையினைக் கண்டறியப் பயன்படும் தராசுகள் ஆகும்.

54. பொருத்துக:

பொருள் நிறையின் வரிசை(kg)

A) எலக்ட்ரான் – 1. (10-30)

B) புரோட்டான் (அ) நியூட்ரான் – 2. (10-27)

C) யுரேனியம் அணு – 3. (10-25)

D) இரத்தசிவப்பு அணுக்கள் – 4. (10-14)

A) 4 3 2 1

B) 2 3 1 4

C) 3 2 4 1

D) 1 2 3 4

விளக்கம்:

பொருள் நிறையின் வரிசை(kg)

A) எலக்ட்ரான் – 1. (10-30)

B) புரோட்டான் (அ) நியூட்ரான் – 2. (10-27)

C) யுரேனியம் அணு – 3. (10-25)

D) இரத்தசிவப்பு அணுக்கள் – 4. (10-14)

55. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் கண்டறி:

பொருள் நிறையின் வரிசை(kg)

A) செல் – 10-10

B) தூசித்துகள் – 109

C) மழைத்துளி – 10-6

D) கொசு – 10-5

விளக்கம்:

பொருள் நிறையின் வரிசை(kg)

A) செல் – 10-10

B) தூசித்துகள் – 10-9

C) மழைத்துளி – 10-6

D) கொசு – 10-5

56. கீழ்க்கண்டவற்றுள் சரியானதைக் கண்டறி:

1) திராட்சைப்பழம் – 10-3

2) தவளை – 10-1

3) மனிதன் – 102

4) கார் – 10-3

A) 1, 2, 3 மட்டும் சரி

B) 1, 2, 4 மட்டும் சரி

C) 1, 3, 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

1) திராட்சைப்பழம் – 10-3

2) தவளை – 10-1

3) மனிதன் – 102

4) கார் – 103

57. கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:

1) கப்பல் – 105

2) சந்திரன் – 10-23

3) பூமி – 10-25

4) சூரியன் – 1030

A) 1, 2 மட்டும் தவறு

B) 2, 3 மட்டும் தவறு

C) 3, 4 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

1) கப்பல் – 105

2) சந்திரன் – 1023

3) பூமி – 1025

4) சூரியன் – 1030

58. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) பால்வழித்திரள் – 1041

2) காணக்கூடிய அண்டம் – 1055

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

59. காலம் சீராக முன்னோக்கி செல்கின்றது என்றவர்?

A) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

B) தாமஸ் ஆல்வா எடிசன்

C) தாமஸ் அடிசன்

D) சர் ஐசக் நியூட்டன்

60. கடிகாரம் காட்டுவதே காலம் என்றவர்?

A) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

B) தாமஸ் ஆல்வா எடிசன்

C) தாமஸ் அடிசன்

D) சர் ஐசக் நியூட்டன்

61. இந்தியாவில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகம்____________

A) மும்பை

B) கல்கத்தா

C) டெல்லி

D) சென்னை

விளக்கம்: இந்தியாவில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகம் (NPL) புதுதில்லி உள்ளது. நீளம், நிறை, காலம் போன்ற இயற்பியல் படித்தரங்களை, பராமரித்தல் மற்றும் தரம் உயர்த்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறது.

62. முக்கிய எண்ணுருக்களை கணக்கிடுவதற்கான விதிகளுல் பொருந்தாதது.

1) சுழியற்ற அனைத்து எண்களும் முக்கிய எண்ணுருக்கள் ஆகும்.

2) சுழியுள்ள இரு எண்களுக்கு இடைப்பட்ட சுழிகள் முக்கிய எண்ணுருக்கள் ஆகும்.

3) சுழியற்ற எண்களுக்கு வலது புறமும் ஆனால் தசம புள்ளிக்கு இடது புறமும் உள்ள சுழிகள் முக்கிய எண்ணுருக்கள் ஆகும்.

4) a) தசம புள்ளி அற்ற ஒரு எண்ணில் இறுதியாக வரும் சுழிகள் முக்கிய எண்ணுருக்கள் ஆகாது.

b) அலகுடன் எழுதப்படும் இயற்பியல் அளவீடுகளில் வரும் எல்லா சுழிகளும் முக்கிய எண்ணுருக்களே.

A) 1, 2 மட்டும் தவறு

B) 1, 3 மட்டும் தவறு

C) 2 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: சுழியற்ற இரு எண்களுக்கு இடைப்பட்ட சுழிகள் முக்கிய எண்ணுருக்கள் ஆகும்.

63. முக்கிய எண்ணுருக்களை கணக்கிடுவதற்கான விதிகளுல் பொருந்தாதது.

1) ஒன்றைவிடக் குறைவான தசம எண்ணில், தசமபுள்ளிக்கு வலது புறமும் ஆனால் முதல் சுழியற்ற எண்ணுக்கு இடதுபுறமும் வரும் சுழிகள் முக்கிய எண்ணுருக்கள் ஆகாது.

2) தசமபுள்ளிக்கு வலதுபுறம் உள்ள சுழிகளும், தசம எண்ணில் சுழியற்ற எண்ணின் வலது புறமும் உள்ள சுழிகள் முக்கிய எண்ணுருக்கள் ஆகும்.

3) முக்கிய எண்ணுருக்கள் அலகிடும் முறையை பொருத்தது ஆகும்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: முக்கிய எண்ணுருக்கள் அலகிடும் முறையை பொருத்தது அல்ல

64. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் கண்டறி:

A) கண்ணுறு ஒளியின் அலைவு நேரம் – 10-15

B) ரேடியோ அலைகளின் அலைவு நேரம் – 10-6

C) செவி உணர் ஒலியின் அலைவு நேரம் – 10-3

D) கண் சிமிட்டும் நேரம் – 101

விளக்கம்:

A) கண்ணுறு ஒளியின் அலைவு நேரம் – 10-15

B) ரேடியோ அலைகளின் அலைவு நேரம் – 10-6

C) செவி உணர் ஒலியின் அலைவு நேரம் – 10-3

D) கண் சிமிட்டும் நேரம் – 10-1

65. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) X – கதிரியன் அலைவு நேரம் – 10-19

2) நியூட்ரானின் அரை ஆயுட்காலம் – 103

3) செயற்கைக் கோளின் சுற்றுக் காலம் – 104

4) மனிதனின் சராசரி ஆயுட்காலம் – 109

A) 1, 2 மட்டும் சரி

B) 1, 2, 4 மட்டும் சரி

C) 1, 2, 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

66. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) எகிப்து பிரமிடுகளின் வயது – 1011

2) அண்டத்தின் வயது – 1027

3) நிலைத்தன்மை அற்ற துகளின் ஆயுட்காலம் – 1036

4) சூரிய ஒளி புவியை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் – 102

A) 1, 4 மட்டும் சரி

B) 2, 3 மட்டும் சரி

C) 1, 2, 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

1) எகிப்து பிரமிடுகளின் வயது – 1011

2) அண்டத்தின் வயது – 1017

3) நிலைத்தன்மை அற்ற துகளின் ஆயுட்காலம் – 1026

4) சூரிய ஒளி புவியை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் – 102

67. நிலவில் இருந்து ஒளியானது புவியை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம்______________

A) 100

B) 102

C) 104

D) 106

68. இரு அடுத்தடுத்த இதய துடிப்புகளுக்கிடையேயான நேர இடைவெளி____________

A) 102

B) 104

C) 100

D) 106

69. கீழ்க்கண்டவற்றைக் கவனி. தவறானதைக் கண்டறி:

1) புவி தன் அச்சைப் பொருத்து சுழல எடுத்துக் கொள்ளும் காலம் (ஒரு நாள்) – 107

2) புவி சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் (ஒரு வருடம்) – 105

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 1, 2 இரண்டும் தவறு

D) 1, 2 இரண்டும் சரி

விளக்கம்:

1) புவி தன் அச்சைப் பொருத்து சுழல எடுத்துக் கொள்ளும் காலம் (ஒரு நாள்) – 105

2) புவி சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் (ஒரு வருடம்) – 107

70. அடிப்படை அலகுகளின் எண்ணிக்கை_____________

A) ஐந்து

B) ஆறு

C) ஏழு

D) எட்டு

விளக்கம்: அனைத்து இயற்பியல் வழி அளவுகளும், ஏழு அடிப்படை அளவுகளின் சில தொகுப்புகளைக் கொண்டே விவரிக்கப்படுகின்றது. இந்த ஏழு அடிப்படை அளவுகளும் இயற்பியல் உலகின் பரிமாணங்களாகும்.

71. பொருத்துக:

இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு

A) அடர்த்தி – 1. [L2]

B) திசைவேகம் – 2. [L3]

C) பரப்பு – 3. [ML-3]

D) பருமன் – 4. [LT-1]

A) 4 3 2 1

B) 2 3 1 4

C) 3 2 4 1

D) 1 2 3 4

72. கீழ்க்கண்டவற்றுள் சரியாண இணையற்றதைக் காண்க:

இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு

A) முடுக்கம் – [LT-2]

B) உந்தம் – [MLT-2]

C) விசை – [MLT-2]

D) வேலை – [ML2T-2]

விளக்கம்:

இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு

A) முடுக்கம் – [LT-2]

B) உந்தம் – [MLT-1]

C) விசை – [MLT-2]

D) வேலை – [ML2T-2]

73. பொருத்துக:

இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு

A) திறன் – 1. [L]

B) ஆற்றல் – 2. [MLT-1]

C) கணத்தாக்கு விசை – 3. [ML2T-2]

D) சுழற்சி ஆரம் – 4. [ML2T-3]

A) 4 3 2 1

B) 2 3 1 4

C) 3 2 4 1

D) 1 2 3 4

விளக்கம்:

இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு

A) திறன் – 1 [ML2T-3]

B) ஆற்றல் – 2. [ML2T-2]

C) கணத்தாக்கு விசை – 3. [MLT-1]

D) சுழற்சி ஆரம் – 4.[L]

74. கீழ்க்கண்டவற்றுள் சரியாண இணையற்றதைக் காண்க:

இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு

A) அழுத்தம் அல்லது தகைவு – [ML-1T-2]

B) பரப்பு இழுவிசை – [ML-3]

C) அதிர்வெண் – [T-1]

D) நிலைமத்திருப்புத்திறன் – [ML2]

விளக்கம்:

இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு

A) அழுத்தம் அல்லது தகைவு – [ML-1T-2]

B) பரப்பு இழுவிசை – [ML-2]

C) அதிர்வெண் – [T-1]

D) நிலைமத்திருப்புத்திறன் – [ML2]

75. பொருத்துக:

இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு

A) விசையின் திருப்புத்திறன் – 1. [ML2T-2]

B) கோணத் திசைவேகம் – 2. [T-2]

C) கோண முடுக்கம் – 3. [T-1]

D) கோண உந்தம் – 4. [ML2T-1]

A) 4 3 2 1

B) 2 3 1 4

C) 3 2 4 1

D) 1 3 2 4

விளக்கம்:

A) விசையின் திருப்புத்திறன் – 1. [ML2T-2]

B) கோணத் திசைவேகம் – 2. [T-1]

C) கோண முடுக்கம் – 3. [T-2]

D) கோண உந்தம் – 4. [ML2T-1]

76. பொருத்துக:

இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு

A) மீட்சிக் குணகம் – 1. [ML2T-2K-1]

B) பாகியல் எண் – 2. [ML-1T-1]

C) பரப்பு ஆற்றல் – 3. [MT-2]

D) வெப்ப ஏற்புத்திறன் – 4. [ML-1T-2]

A) 4 3 2 1

B) 4 2 3 1

C) 3 2 4 1

D) 1 2 3 4

விளக்கம்:

இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு

A) மீட்சிக் குணகம் – 1. [ML-1T-2]

B) பாகியல் எண் – 2. [ML-1T-1]

C) பரப்பு ஆற்றல் – 3. [MT-2]

D) வெப்ப ஏற்புத்திறன் – 4. [ML2T-2K-1]

77.கீழ்க்கண்டவற்றுள் சரியாண இணையற்றதைக் காண்க:

இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு

A) மின்னூட்டம் – [AT]

B) காந்தத் தூண்டல் – [MT-2A-1]

C) விசை மாறிலி – [MT-2]

D) ஈர்ப்பு மாறிலி – [M-1L3T-1]

விளக்கம்:

இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு

A) மின்னூட்டம் – [AT]

B) காந்தத் தூண்டல் – [MT-2A-1]

C) விசை மாறிலி – [MT-2]

D) ஈர்ப்பு மாறிலி – [M-1L3T-2]

78. கீழ்க்கண்டவற்றுள் சரியாண இணையற்றதைக் காண்க:

இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு

A) பிளாங்க் மாறிலி – [ML2T-1]

B) ஃபாரடே மாறிலி – [AT mol-1]

C) போல்ஸ்டன்மென் மாறிலி – [ML2T-2K-1]

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 1, 2 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

79. அடிப்படை மாறிலிகளில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு.

A) Kg2

B) m2

C) s‑

D) m

80. ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை 2% எனில், அதன் கனஅளவைக் கணக்கிடுதலின் பிழையானது.

A) 8 %

B) 2 %

C) 4 %

D) 6 %

81. அலைவுறும் ஊசலின் நீளம் மற்றும் அலைவு நேரம் பெற்றுள்ள பிழைகள் முறையே 1 % மற்றும் 3 % எனில் ஈர்ப்பு முடுக்கம் அளவிடுதலில் ஏற்படும் பிழை.

A) 4 %

B) 5 %

C) 6 %

D) 7 %

82. பொருளொன்றின் நீளம் 3.51m என அளவிடப்பட்டுள்ளது. துல்லியத்தன்மை 0.01m எனில், அளவீட்டின் விழுக்காட்டுப் பிழை.

A) 351 %

B) 1 %

C) 0.28 %

D) 0.035 %

83. கீழ்கண்டவற்றுள் அதிக முக்கிய எண்ணுறுக்களைக் கொண்டது எது?

A) 0.007 m2

B) 2.64 1024 kg

C) 0.0006032 m2

D) 6.3200 J

84. πஇன் மதிப்பு 3.14 எனில் π2 இன் மதிப்பு_____________

A) 9.8596

B) 9.860

C) 9.86

D) 9.9

85. கீழ்க்கண்ட இணைகளில் ஒத்த பரிமாணத்தை பெற்றுள்ள இயற்பியல் அளவுகள்.

A) விசை மற்றும் திறன்

B) திருப்புவிசை மற்றும் ஆற்றல்

C) திருப்புவிசை மற்றும் திறன்

D) விசை மற்றும் திருப்பு விசை

86. பிளாங்க் மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு_____________

A) [ML2T-1]

B) [ML-1T-1]

C) [MT-2]

D) [ML-1T-2]

87. t என்ற கணத்தில் ஒரு துகளின் திசைவேகம் v = at + bt2 எனில் b-இன் பரிமாணம்

A) [L]

B) [LT-1]

C) [LT-2]

D) [LT-3]

88. ஈர்ப்பியல் மாறிலி G யின் பரிமாண வாய்ப்பாடு

A) [ML2T-1]

B) [M-1L3T-2]

C) [MT-2]

D) [ML-1T-2]

89. CGS முறையில் ஒரு பொருளின் அடர்த்தி 4g cm-3ஆகும். நீளம் 10 cm, நிறை 100g கொண்டிருக்கும் ஓர் அலகு முறையில் அப்பொருளின் அடர்த்தி

A) 0.04

B) 0.4

C) 40

D) 400

90. விசையானது திசைவேகத்தின் இருமடிக்கு நேர்விகிதப் பொருத்தமுடையது எனில் விகித மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு

A) [ML2T-1]

B) [M-1L3T-2]

C) [MT-2]

D) [ML-1T0]

91. (µ0ε0) -1/2ன் பரிமாணத்தைக் கீழ்கண்டவற்றுள் எது பெற்றிருக்கும்?

A) நீளம்

B) காலம்

C) திசைவேகம்

D) விசை

92. பிளாங் மாறிலி (h) வெற்றிடத்தின் ஒளியின் திசைவேகம் (c) மற்றும் நியூட்டனின் ஈர்ப்பு மாறிலி (G) ஆகிய மூன்று அடிப்படை மாறிலிகள் கொண்டு பெறப்படும் கீழ்காணும் எந்த தொடர்பு நீளத்தின் பரிமாணத்தைப் பெற்றிருக்கும்.

A)

B)

C)

D)

93. பொருத்துக:

இயற்பியல் அளவு சமன்பாடு

A) அடர்த்தி – 1. நிறை / பருமன்

B) திசைவேகம் – 2. நீளம் × அகலம்

C) பரப்பு – 3. பரப்பு ×உயரம்

D) பருமன் – 4. இடப்பெயர்ச்சி / காலம்

E) முடுக்கம் – 5. திசைவேகம் / காலம்

A) 4 3 2 1 5

B) 2 3 1 4 5

C) 3 2 4 1 5

D) 1 4 2 3 5

விளக்கம்:

இயற்பியல் அளவு சமன்பாடு

A) அடர்த்தி – 1. நிறை / பருமன்

B) திசைவேகம் – 2. இடப்பெயர்ச்சி / காலம்

C) பரப்பு – 3. நீளம் × அகலம்

D) பருமன் – 4. பரப்பு ×உயரம்

E) முடுக்கம் – 5. திசைவேகம் / காலம்

94. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க.

A) உந்தம் – நிறை×திசைவேகம்

B) விசை – நிறை × முடுக்கம்

C) வேலை – விசை ×தூரம்

D) திறன் – வேலை / முடுக்கம்

விளக்கம்:

A) உந்தம் – நிறை×திசைவேகம்

B) விசை – நிறை × முடுக்கம்

C) வேலை – விசை ×தூரம்

D) திறன் – வேலை / காலம்

95. பொருத்துக:

இயற்பியல் அளவு சமன்பாடு

A) ஆற்றல் – 1. வேலை

B) கணத்தாக்குவிசை – 2. விசை ×காலம்

C) சுழற்சி ஆரம் – 3. தொலைவு

D) அழுத்தம் அல்லது தகைவு – 4. விசை / பரப்பு

E) பரப்பு இழுவிசை – 5. விசை / நீளம்

A) 1 2 3 4 5

B) 2 3 1 4 5

C) 3 2 4 1 5

D) 1 4 2 3 5

விளக்கம்:

இயற்பியல் அளவு சமன்பாடு

A) ஆற்றல் – 1. வேலை

B) கணத்தாக்குவிசை – 2. விசை ×காலம்

C) சுழற்சி ஆரம் – 3. தொலைவு

D) அழுத்தம் அல்லது தகைவு – 4. விசை / பரப்பு

E) பரப்பு இழுவிசை – 5. விசை / நீளம்

96. கீழ்க்கண்டவற்றுள் தவறானதைக் கண்டறி:

1) அதிர்வெண் – 1 / அலைவு காலம்

2) நிலைமத்திருப்புத்திறன் – நிறைவு ×(தொலைவு)2

3) விசையின் திருப்புத்திறன் – முடுக்கம் ×தொலைவு

4) கோணத் திசைவேகம் – கோண இடப்பெயர்ச்சி / காலம்

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்:

1) அதிர்வெண் – 1 / அலைவு காலம்

2) நிலைமத்திருப்புத்திறன் – நிறைவு ×(தொலைவு)2

3) விசையின் திருப்புத்திறன் – விசை ×தொலைவு

4) கோணத் திசைவேகம் – கோண இடப்பெயர்ச்சி / காலம்

97. கீழ்ககண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

A) கோண முடுக்கம் – கோணத்திசைவேகம் / காலம்

B) கோண உந்தம் – நேர்க்கோட்டு உந்தம் × தூரம்

C) மீட்சிக் குணகம் – தகைவு / திரிபு

D) பாகியல் எண் – (விசை × தூரம்) / (பரப்பு ×திசைவேகம்)

A) 1, 2 மட்டும் சரி

B) 1, 3 மட்டும் சரி

C) 1, 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:

A) கோண முடுக்கம் – கோணத்திசைவேகம் / காலம்

B) கோண உந்தம் – நேர்க்கோட்டு உந்தம் × தூரம்

C) மீட்சிக் குணகம் – தகைவு / திரிபு

D) பாகியல் எண் – (விசை × தூரம்) / (பரப்பு ×திசைவேகம்)

98. பொருத்துக:

இயற்பியல் அளவு சமன்பாடு

A) பரப்பு ஆற்றல் – 1. வேலை / பரப்பு

B) வெப்ப ஏற்புத்திறன் – 2. வெப்ப ஆற்றல் / வெப்பநிலை

C) மின்னூட்டம் – 3. விசை / (மின்னோட்டம் × நீளம்)

D) காந்தத் தூண்டல் – 4. மின்னோட்டம்× காலம்

A) 1 2 4 3

B) 4 3 2 1

C) 2 3 1 4

D) 3 2 4 1

விளக்கம்:

இயற்பியல் அளவு சமன்பாடு

A) பரப்பு ஆற்றல் – 1. வேலை / பரப்பு

B) வெப்ப ஏற்புத்திறன் – 2. வெப்ப ஆற்றல் / வெப்பநிலை

C) மின்னூட்டம் – 3. மின்னோட்டம்× காலம்

D) காந்தத் தூண்டல் – 4. விசை / (மின்னோட்டம் × நீளம்)

99. பொருத்துக:

இயற்பியல் அளவு சமன்பாடு

A) விசை மாறிலி – 1. [விசை ×(தொலைவு)2] / (நிறை)2

B) ஈர்ப்பு மாறிலி – 2. விசை / இடப்பெயர்ச்சி

C) பிளாங்க் மாறிலி – 3. அவகட்ரோ மாறிலி மின்னூட்டம்

D) ஃபாரடே மாறிலி – 4. ஆற்றல் / வெப்பநிலை

E) போல்ஸ்ட்மென் மாறிலி – 5. ஆற்றல் / அதிர்வெண்

A) 1 2 3 4 5

B) 2 1 5 3 4

C) 3 2 4 1 5

D) 1 4 2 3 5

விளக்கம்:

இயற்பியல் அளவு சமன்பாடு

A) விசை மாறிலி – 1. விசை / இடப்பெயர்ச்சி

B) ஈர்ப்பு மாறிலி – 2. [விசை ×(தொலைவு)2] / (நிறை)2

C) பிளாங்க் மாறிலி – 3. ஆற்றல் / அதிர்வெண்

D) ஃபாரடே மாறிலி – 4. அவகட்ரோ மாறிலி மின்னூட்டம்

E) போல்ஸ்ட்மென் மாறிலி – 5. ஆற்றல் / வெப்பநிலை

100. பொது ஈர்ப்பியல் மாறிலியின் மதிப்பு____________

A) 6.67 × 10-11 N m2 kg-2

B) 5.67 × 10-11 N m2 kg-2

C) 7.67 × 10-11 N m2 kg-2

D) 8.87 × 10-11 N m2 kg-2

101. கூற்று (i): ஓர் அளவீட்டில் பெறப்படும் அளவுகளின் துல்லியமான மதிப்பைக் குறிப்பதற்குத் தேவைப்படும் இலக்கங்களின் சிறும எண்ணிக்கையே அதன் முக்கிய எண்ணுருக்கள் எனப்படும்.

கூற்று (ii): தரப்பட்ட எண் மதிப்பில் மாறாநிலை கொண்ட எண்களும் அதனை தொடர்ந்து முதலில் வரும் நிலையில்லா இலக்கமும் அவ்வெண்ணின் முக்கிய எண்ணுறு ஆகும்.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

11th Science Lesson 2 Questions in Tamil

2] வணிக விலங்கியலின் போக்குகள்

1. கூற்று (i): விலங்குகளைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவிற்கு விலங்கியல் என்று பெயர்.

கூற்று (ii): விலங்குகளின் கருவளர்ச்சி நிலைகளைப் பற்றி படிக்கும் அறிவியலறிஞர்களுக்கு கருவியலாளர்கள் என்று பெயர்.

A) கூற்று i சரி ii தவறு

B) கூற்று i தவறு ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

2. விலங்குகளை மனித நலனுக்காகப் பயன்படுத்தும் அறிவியல் பிரிவிற்கு__________என்று பெயர்.

A) விலங்கியல்

B) வணிக விலங்கியல்

C) பொருளாதார விலங்கியல்

D) சார்பு விலங்கியல்

விளக்கம்: வணிக விலங்கியல் என்பது விலங்குகளை மனித நலனுக்காகப் பயன்படுத்தும் அறிவியல் ஆகும். பொருளாதார நிலையை மேம்படுத்துவது மட்டுமின்றி உணவுப் பாதுகாப்புக்கும் வேலைவாய்ப்பு அளிப்பதற்கும் விலங்கியல் தேவைப்படுகிறது.

3. பொருளாதார முக்கியத்துவத்தைப் பொறுத்து விலங்குகள்____________வகைகளாக பிரிக்கப்படுகிறது.

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

விளக்கம்: பொருளாதார முக்கியத்துவத்தைப் பொறுத்து விலங்குகளை நான்கு வகைகளாக பிரிக்கலாம். அவை

அ. உணவாகப் பயன்படும் விலங்குகளும் விலங்குப் பொருட்களும்.

ஆ. பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விலங்குகள்.

இ. அழகிற்காகவும் மனமகிழ்ச்சிக்காகவும் வளர்க்கப்படும் விலங்குகள்.

ஈ. அறிவியல் ஆராய்ச்சிகளுக்காகப் பயன்படும் விலங்குகள்.

4. மண்புழு வளர்ப்புப் பற்றிய கூற்றுகளுல் பொருந்தாததைக் கண்டறி.

A) மண்புழு வளர்ப்பு என்பது, மண்புழுக்களைக் கொண்டு கரிமக்கழிவுகளைச் சிதைவுறச் செய்து, தாவர வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்து நிரம்பிய பொருட்களாக மாற்றும் முறையாகும்.

B) தொடர் பயன் தரும் வகையில், அடுத்தடுத்த தலைமுறைப் புழுக்களை உருவாக்குவது இதன் நோக்கம் ஆகும்.

C) அதிகப்படியாக உருவாகும் புழுக்களை, மண்புழு உரமாக்கத்திற்கோ அல்லது வாடிக்கையாளர்களுக்கு விற்பதற்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

D) மண்புழு வளர்ப்பின் முதன்மை நோக்கம் மண்புழு தயாரித்தல் ஆகும்.

விளக்கம்: மண்புழு வளர்ப்பின் முதன்மை நோக்கம் மண்புழு உரம் தயாரித்தல் ஆகும்.

5. மண்ணில் உள்ள கரிமக்கழிவுகள் மண்புழுவால் சிதைக்கப்பட்டு, ஊட்டச்சத்து மிகுந்த உடல் கழிவாக, வெளியேற்றப்படும் பொருட்களுக்கு_______என்று பெயர்.

A) மண்புழு கட்டிகள்

B) கரிமக் கட்டிகள்

C) கனிமக் கட்டிகள்

D) நாங்கூழ் கட்டிகள்

விளக்கம்: தொழில் நுட்பரீதியாகப் பார்த்தால், நாங்கூழ் கட்டிகள் என்பவை. மண்ணில் உள்ள கரிமக்கழிவுகள் மண்புழுவால் சிதைக்கப்பட்டு, ஊட்டச்சத்து மிகுந்த உடல் கழிவாக, வெளியேற்றப்படும் பொருட்கள் ஆகும்.

6. மண்புழு உரம் என்பது கீழ்க்கண்ட எவற்றுடன் சேர்ந்த கலவை?

A) நாங்கூழ் கட்டிகள்

B) மண்புழுக்களின் தளப்பொருள் சிதைவுகள்

C) கரிமபொருட்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: மண்புழு உரம் என்பது, நாங்கூழ் கட்டிகள், மண்புழுக்களின் தளப்பொருள் சிதைவுகள், மற்றும் இதர கரிமப்பொருட்கள் ஆகியவை அடங்கிய ஒரு கலவை ஆகும்.

7. வெர்மிடெக் எனப்படும் மண்புழு உரத்தை முதன் முதலில் 1992-இல் கண்டறிந்தவர்______________

A) சுல்தான் பேகம்

B) சுல்தான் அஸ்ரப்

C) சுல்தான் இஸ்மாயில்

D) சுல்தான் நஸ்ரீப்

விளக்கம்: மண்புழுக்களைப் பயன்படுத்தி உரம் தயாரிப்பதில், மண்ணின் உயரித்தீர்வாக்கம் மற்றும் பிற செல்பாடுகளைக் கொண்ட தொழில்நுட்பங்கள் வெர்மிடெக் (சுல்தான் இஸ்மாயில்) எனப்படும்.

8. மண்வளத்தைப் பராமரிப்பதில்________முக்கியப் பங்கு வகிக்கிறது.

A) எலி

B) பாம்பு

C) மண்புழு

D) வெட்டுக்கிளி

விளக்கம்: பெரும்பாலான நாடுகளில் திடக்கழிவுகளை முழுமையாகக் களைதல் என்பது ஒரு பெரும் சவாலாக உள்ளது. மண்வளத்தைப் பராமரிப்பதில் மண்புழுக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

9. பொருத்துக:

A) உழவனின் நண்பன் – 1. வெட்டுக்கிளி

B) உழவனின் எதிரி – 2. மண்புழு

C) ஆக்டோகீடோனா செர்ரேட்டா – 3. வெளிநாட்டு வகை மண்புழு

D) ஐசீனியா ஃபெட்டிடா – 4. இந்திய உள்நாட்டு மண்புழு

A) 2 1 4 3

B) 2 1 3 4

C) 1 2 3 4

D) 1 4 3 2

விளக்கம்:

A) உழவனின் நண்பன் – 1. மண்புழு

B) உழவனின் எதிரி – 2. வெட்டுக்கிளி

C) ஆக்டோகீடோனா செர்ரேட்டா – 3. இந்திய உள்நாட்டு மண்புழு

D) யூடிரிலஸ் யூஜீனியே – 4. வெளிநாட்டு வகை மண்புழு

10. மண்ணைத் தொடர்ச்சியாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உயிரிகள்____________

A) பாக்டீரியா

B) பூஞ்சை

C) ஒரு செல் உயிரி

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: மண்ணைத் தொடர்ச்சியாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உயிரிகளான பாக்டீரியா, பூஞ்சை, ஒரு செல் உயிரிகள் போன்றவற்றை ஆதரித்து வளரச் செய்வதில் மண்புழுக்கள் முக்கியமானவை ஆகும்.

11. கீழ்க்கண்டவற்றுள் “உயிரிய மண்வள அடையாளங்காட்டிகள்” என்று அழைக்கப்படுவது எது.

A) எலி

B) தவளை

C) பாம்பு

D) மண்புழு

விளக்கம்: மண்வளத்தைப் பராமரிப்பதில் மண்புழுக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. எனவே இவை உழவனின் நண்பர்கள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும், இவை உயிரிய மண்வள அடையாளங்காட்டிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

12. கூற்று (i): மண்புழுக்கள் கனிமப் பொருட்களைச் சிதைத்த பின்னர் அவற்றின் உடலிலிருந்து வெளியேறும் பொருளே மண்புழு கழிவு எனப்படுகிறது.

கூற்று (ii): நுண்ணிய துகள்களையுடைய இக்கழிவுப் பொருளானது நுண் துளைகள், காற்றோட்டம், நீர்வடிகால், மற்றும் ஈரப்பதத்தை தக்க வைக்கும் திறன் போன்ற குறிப்பிடத்தகுந்த பண்புகளுடன் சிறந்த கரிம உரமாக பயன்படுகிறது.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: மண்புழுக்கள் கரிமப் பொருட்களைச் சிதைத்த பின்னர் அவற்றின் உடலிலிருந்து வெளியேறும் பொருளே மண்புழு கழிவு எனப்படுகிறது.

13. கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் உள்ள உள்நாட்டு மண்புழு இனங்களுடன் பொருந்தாதது எது.

A) பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டஸ்

B) ஆக்டோகிடோனா செர்ரேட்டா

C) ஐசீனியா ஃபெட்டிடா

D) லேம்பிட்டோ மாரிட்டீ

விளக்கம்: இந்தியாவில் உள்நாட்டு மண்புழு இனங்களான பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டஸ், லேம்பிட்டோ மாரிட்டீ, ஆக்டோகீட்டோனா செர்ரேட்டா போன்ற வேறுபட்ட சிற்றினங்கள் மண்புழு உரத் தயாரிப்பிற்குப் பயன்படுகின்றன.

14. கீழ்க்கண்டவற்றுள் வெளிநாட்டு வகை மண்புழு___________

A) பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டஸ்

B) ஆக்டோகிடோனா செர்ரேட்டா

C) லேம்பிட்டோ மாரிட்டீ

D) யூடிரிலஸ் யூஜீனியே

விளக்கம்: ஐசினியா ஃபெட்டிடா மற்றும் யூடிரிலஸ் யூஜீனியே போன்றவை வெளிநாட்டு வகை மண்புழுக்களாகும்.

15. கீழ்க்கண்டவற்றுள் மண்புழு உரமாக்கல் நிகழ்வுகளுடன் பொருந்தாதது எது.

A) மண்புழுவானது பிற உயிரிகளுடன் சேர்ந்து உரக்குழியினுள் உற்பத்தி செய்யும் உரமே மண்புழு உரம் எனப்படும்.

B) உயரமான அல்லது மேடான இடங்களில் மண்புழு உரப் படுக்கைகள் உருவாக்கப்பட வேண்டும். இதனால் நீர் தேங்குவது தவிர்க்கப்படும். தரைக்கு மேல், செங்கற்களைக் கொண்டு 3 மீ நீளம் × 2 மீ அகலம் ×1 மீ ஆழம் அளவில் ஒரு சிமெண்ட் தொட்டி ஏற்படுத்த வேண்டும்.

C) அதிகப்படியான நீரை வெளியேற்றுவதற்குரிய வழிகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மண்புழு படுக்கைகளை நேரடியாக சூரிய ஒளி படுமாறு அமைத்தல் வேண்டும்.

D) மண்புழுப்படுக்கையின் முதல் அடுக்கு 5செ.மீ உயரத்திற்கு சரளைக்கற்களும், அதன் தொடர்ச்சியாக 3.5 செ.மீ உயரத்திற்கு மணலும் நிரப்பப்பட்டு உருவாக்கப்படுகிறது. இது அதிகப்படியான நீரை வெளியேற்றப் பயன்படுகிறது.

விளக்கம்:அதிகப்படியான நீரை வெளியேற்றுவதற்குரிய வழிகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மண்புழு படுக்கைகளை நேரடியாக சூரிய ஒளி படுமாறு அமைத்தல் கூடாது.

16. மண்புழுக்களுக்கு தேவையான சூழல் அமைப்பு____________

A) நீர் தேங்கிய நிலை

B) வறண்ட நிலப்பரப்பு

C) ஈரப்பதமான சூழல்

D) அறை வறண்ட நிலப்பரப்பு

விளக்கம்: மண்புழுக்கள் ஈரப்பதமான சூழலை விரும்புவதால், அவை உயிர்வாழ்வதற்கு நீர் மேலாண்மை மிக முக்கியமானதாகும். அதிகப்படியான நீரோ மிகக்குறைந்த நீரோ மண்புழுக்களுக்கு உகந்ததல்ல.

17. கீழ்க்கண்டவற்றுள் மண்புழுக்களின் வளர்ச்சியையும் மகசூலையும் அதிகரிக்கச் செய்வது___________

A) மண்புழு கழிவு நீர்

B) மண்புழு உமிழ் நீர்

C) மண்புழு குளியல் நீர்

D) மண்புழு உர நீர்

விளக்கம்: மண்புழுப்படுக்கையிலிருந்து வெளியேறும் நீரானது சேகரிக்கப்படுகிறது. இது மண்புழுக்களியல் நீர் என்னும் திரவமாகும். இத்திரவத்தை இலைகளின் மீது தெளித்து தாவர வளர்ச்சியையும் மகசூலையும் அதிகரிக்கலாம்.

18. வீணாகும் உணவுப் பொருட்கள் இலை, குப்பை மற்றும் உயிர்த்திரள் போன்றவற்றை மண்புழு மூலம் மறு சுழற்சி செய்து நல்ல தரமான உரத்தைச் சிறுகலன்களில் தயாரிக்கும் முறைக்கு__________என்று பெயர்.

A) சிறுகலன் புழு வளர்ப்பு

B) வாம்பின்

C) A,B இரண்டும்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: வீணாகும் உணவுப் பொருட்கள் இலை, குப்பை மற்றும் உயிர்த்திரள் போன்றவற்றை மண்புழு மூலம் மறு சுழற்சி செய்து நல்ல தரமான உரத்தைச் சிறுகலன்களில் சேகரிக்கும் முறைக்கு சிறுகலன் புழு வளர்ப்பு (அ) வாம்பின் ஆகும்.

19. கீழ்கண்டவற்றுள் மண்புழுவின் எதிரி அல்லாதது எது.

A) எறும்புகள்

B) தௌளுப்பூச்சிகள்

C) கொசு

D) பூரான்கள்

விளக்கம்: எறும்புகள், தௌளுப்பூச்சிகள், பூரான்கள், நத்தைகள், உண்ணிகள், சில வண்டுகளில் இளவுயிரிகள், பறவைகள், எலிகள், பாம்புகள் போன்றவை மண்புழுவை இரையாக உண்ணும் விலங்குகள் ஆகியவை மண்புழுவின் எதிரிகள் ஆகும்.

20. கீழ்க்கண்டவற்றுள் மண்புழுக்களின் அக ஒட்டுண்ணிகளாக செயல்படுவது எது.

A) நெமட்டோட் புழுக்கள்

B) லார்வாக்கள்

C) ஒரு செல் உயிரிகள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: எண்ணற்ற ஒரு செல் உயிரிகள் சில நெமட்டோட் புழுக்கள், சிலவகைப் பூச்சிகளின் லார்வாக்கள் போன்றவை மண்புழுக்களில் அக ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன.

21. கீழ்க்கண்ட எந்த உயிரிகளின் தாக்கமானது மண்புழு உரக்குழியில் அதிகமாக உள்ளது.

A) வெட்டுக்கிளி

B) கருப்பு எறும்பு

C) சிவப்பு எறும்பு

D) பாம்பு

22. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைக் கண்டறி.

A) மண்புழு உரமானது தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெரும் அளவில் கொண்டுள்ளது.

B) மண்ணின் இயல்புத் தன்மை, காற்றோட்டம், நீரைத்தேக்கி வைக்கும் பண்பு ஆகியவற்றை மேம்படுத்தி மண் அரிப்பைத் தடுக்கிறது.

C) அதிக ஊட்டச்சத்து கொண்ட சூழல் நட்பு முறை சீர்த்திருத்தத்தை மண்ணுக்கு அளிக்கும் பொருளாக மண்புழு உரம் உள்ளது. மாடித் தோட்டம் அமைப்பதற்கும் உதவுகிறது.

D) விதை முளைத்தலை கட்டுப்படுத்தி தாவர வளர்ச்சியையும் உறுதி செய்கிறது.

விளக்கம்: விதை முளைத்தலை தூண்டி தாவர வளர்ச்சியையும் உறுதி செய்கிறது.

23. மனித குலத்திற்கு கிடைத்த இயற்கைக் கொடையாக, வணிக இழையாக விளங்குவது_________

A) பட்டு

B) கம்பளி

C) நைலான்

D) ரேயான்

விளக்கம்: விலங்கிலிருந்து கிடைக்கும் கம்பளியைத் தவிர மனித குலத்திற்கு கிடைத்த இயற்கை கொடையாக வணிக இழையாக விளங்குவது பட்டு ஆகும். சூழல் நட்பு முறையான, உயிரிய சிதைவடையக் கூடிய தன்னிறைவு உள்ள பொருளாக இருப்பதால் பட்டானது தற்கால உலகில் ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது.

24. பட்டுப்புழு வளர்ப்பு தொழில்நுட்ப முறை இத்தனை ஆண்டு காலமாக இரகசியமாக பாதுகாக்கபட்டு வந்தவர்கள்

A) சீனர்கள்

B) அமெரிக்கர்கள்

C) இந்தியர்கள்

D) திபெத்தியர்கள்

விளக்கம்: பட்டுப்புழு வளர்ப்பு முறை மிக நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே சீனாவில் புழக்கத்தில் இருந்துள்ளது என்பதை வரலாற்று ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. 3000 ஆண்டுகளாக அதன் தொழில்நுட்பம் அவர்களால் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது.

25. மல்பெரி சாகுபடியானது பொ.ஆ.மு.140ல்___________லிருந்து திபெத் வழியாக இந்தியாவிற்கு பரவியுள்ளது.

A) அமெரிக்கா

B) ஜப்பான்

C) சீனா

D) திபெத்

விளக்கம்: மேலைநாட்டு வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி மல்பெரி சாகுபடியானது பொ.ஆ.மு.140ல் சீனாவிலிருந்து திபெத் வழியாக இந்தியாவிற்கும் பரவியுள்ளது.

26. பட்டுச்சாலையானது கீழ்க்கண்ட எந்த பகுதியின் வழியே சென்று பட்டுப் போக்குவரத்தை வளர்த்தது.

A) பாக்தாத்

B) தாஷ்கன்ட்

C) டமாஸ்கஸ்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: வரலாற்று ரீதியாக பட்டுச்சாலை என்று அழைக்கப்பட்ட 7000 மைல் நீளமுள்ள மிக நீண்ட சாலை பாக்தாக், தாஷ்கன்ட், டமாஸ்கஸ் மற்றும் இஸ்தான்புல் வழியே சென்று பட்டுப் போக்குவரத்தை வளர்த்தது.

27. பட்டு உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் உள்ள நாடு.

A) திபெத்

B) பிரேசில்

C) அமெரிக்கா

D) இந்தியா

28. பொருத்துக:

A) சீனா – 1. பட்டு வளர்ப்பு

B) செரிகல்சர் – 2. பட்டுபுழுவிற்கு உணவாக பயன்படுவது

C) விவசாயத் துறை – 3. பட்டு நூல் சுற்றுதல்

D) தொழில் துறை – 4. பட்டு உற்பத்தியில் முதலிடம்

A) 2 1 4 3

B) 2 1 3 4

C) 1 2 3 4

D) 4 1 2 3

A) சீனா – 1. பட்டு உற்பத்தியில் முதலிடம்

B) செரிகல்சர் – 2. பட்டு வளர்ப்பு

C) விவசாயத் துறை – 3. பட்டுபுழுவிற்கு உணவாக பயன்படுவது

D) தொழில் துறை – 4. பட்டு நூல் சுற்றுதல்

29. பொருத்துக:

பட்டுப்பூச்சி இனங்கள் இலைகள்

A) பாம்பிக்ஸ் மோரி – 1. சம்பா

B) ஆந்தரேபியா அஸ்ஸாமென்சிஸ் – 2. அர்ஜீன்

C) ஆந்தரேபியா மைலிட்டா – 3. மல்பரி

D) அட்டாகஸ் ரிசினி – 4. ஆமணக்கு

A) 2 1 4 3

B) 2 1 3 4

C) 3 1 2 4

D) 4 1 3 2

விளக்கம்:

பட்டுப்பூச்சி இனங்கள் இலைகள்

A) பாம்பிக்ஸ் மோரி – 1. மல்பரி

B) ஆந்தரேபியா அஸ்ஸாமென்சிஸ் – 2. சம்பா

C) ஆந்தரேபியா மைலிட்டா – 3. அர்ஜீன்

D) அட்டாகஸ் ரிசினி – 4. ஆமணக்கு

30. பொருத்துக:

பட்டுப்பூச்சி இனங்கள் பட்டு வகைகள்

A) பாம்பிக்ஸ் மோரி – 1. மல்பரி பட்டு

B) ஆந்தரேபியா அஸ்ஸாமென்சிஸ் – 2. டஸர் பட்டு

C) ஆந்தரேபியா மைலிட்டா – 3. முகா பட்டு

D) அட்டாகஸ் ரிசினி – 4. எரி பட்டு

A) 1 3 2 4

B) 2 1 3 4

C) 3 1 2 4

D) 4 1 3 2

விளக்கம்:

பட்டுப்பூச்சி இனங்கள் பட்டு வகைகள்

A) பாம்பிக்ஸ் மோரி – 1. மல்பரி பட்டு

B) ஆந்தரேபியா அஸ்ஸாமென்சிஸ் – 2. முகா பட்டு

C) ஆந்தரேபியா மைலிட்டா – 3. டஸர் பட்டு

D) அட்டாகஸ் ரிசினி – 4. எரி பட்டு

31. பாம்பிக்ஸ் மோரியின் வாழ்க்கை சுழற்சிப் பற்றிய கருத்துக்களில் பொருந்தாததைக் காண்க.

A) முதிர்ந்த பாம்பிக்ஸ் மோரி பட்டுப்பூச்சியானது 2.5 செ.மீ நீளத்துடன் வெளிறிய நிறத்துடன் கூடிய வெண்மை நிறத்தில் காணப்படுகிறது.

B) இது தடித்த உடலையும் மெலிந்த இறகுகளையும் பெற்றிருப்பதால், பெண் பட்டுப்பூச்சியால் பறக்க இயலாது.

C) இயற்கையில் ஆண், பெண் உயிரிகள் தனித்தனியே காணப்படுகிறது.

D) இவற்றின் வாழ்நாளானது 23 நாட்கள் மட்டுமே.

விளக்கம்: இவற்றின் வாழ்நாளானது 2-3 நாட்கள் மட்டுமே.

32. பட்டுப்பூச்சியானது ஒரு நாளைக்கு தோராயமாக இடப்படும் முட்டைகளின் எண்ணிக்கை____________

A) 200 – 300

B) 300 – 400

C) 400 – 500

D) 500 – 600

விளக்கம்: 1 முதல் 24 மணி நேரத்திற்கு முட்டையிடுதல் நடக்கிறது. தட்ப வெப்ப நிலைகளைப் பொறுத்து பெண் பூச்சியானது 400 முதல் 500 முட்டைகளை இடுகின்றது. இரு வகையான முட்டைகள் உள்ளன. அவை மெதுவாகப் பொரியும் முட்டைகள் மற்றும் விரைவில் பொரியும் முட்டைகள் ஆகியன ஆகும்.

33. இந்தியாவில் மெதுவாக பொரியும் முட்டைகள் இடும் பட்டுப்பூச்சிகள் வாழும் பகுதி_____________

A) வெப்ப மண்டலம்

B) அயன மண்டலம்

C) மித வெப்ப மண்டலம்

D) குளிர் மண்டலம்

விளக்கம்: இரு வகையான முட்டைகள் உள்ளன. அவை மெதுவாகப் பொரியும் முட்டைகள் மற்றும் விரைவில் பொரியும் முட்டைகள் ஆகியன ஆகும். மிதவெப்ப மண்டலப்பகுதிகளில் வாழும் பட்டுப்பூச்சிகள் மெதுவாகப் பொரியும் முட்டைகளை இடுகின்றன.

34. இந்தியாவில் விரைவாக பொரியும் முட்டைகள் இடும் பட்டுப்பூச்சிகள் வாழும் பகுதி____________

A) வெப்ப மண்டலம்

B) அயன மண்டலம்

C) மித வெப்ப மண்டலம்

D) குளிர் மண்டலம்

விளக்கம்: இரு வகையான முட்டைகள் உள்ளன. அவை மெதுவாகப் பொரியும் முட்டைகள் மற்றும் விரைவில் பொரியும் முட்டைகள் ஆகியன ஆகும். மிதவெப்ப மண்டலப்பகுதிகளில் வாழும் பட்டுப்பூச்சிகள் மெதுவாகப் பொரியும் முட்டைகளை இடுகின்றன. இந்த முட்டைகள் பத்து நாட்கள் அடைக் காத்தலுக்கு பிறகு இளம் உயிரியாக வெளிவருகின்றன.

35. முழுமையாக வளர்ச்சியடைந்த ஒரு பட்டுப்பூச்சியின் நீளம்____________

A) 5.5செ.மீ

B) 6.5செ.மீ

C) 7.5செ.மீ

D) 8.5செ.மீ

விளக்கம்: முழுமையாக வளர்ச்சியடைந்த பட்டுப்புழுவானது 7.5 செ.மீ நீளத்துடன் உள்ளது. இப்புழுவின் உமிழ்நீர் சுரப்பிகள் நன்கு வளர்ந்தபின், கூட்டுப்புழுவாக மாறத்தயாகிறது, இதற்காக உணவு உண்பதை நிறுத்திவிட்டு இலையின் ஒரு மூலைக்குச் சென்று அவற்றின் உடலில் உள்ள பட்டுச்சுரப்பியின் மூலம் ஒட்டும் தன்மையுள்ள திரவத்தைச் சுரக்கிறது.

36. பொருத்துக:

A) கக்கூன் – 1. பட்டுப்பூச்சிக் கூடு

B) வோலிடினிசம் – 2. இனப்பெருக்க தலைமுறை

C) நொசீமா பாம்பிசிஸ் – 3. பாக்டீரியா

D) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் – 4. புரோட்டாசோவா தொகுதி

A) 1 3 2 4

B) 2 1 3 4

C) 3 1 2 4

D) 1 2 4 3

விளக்கம்:

A) கக்கூன் – 1. பட்டுப்பூச்சிக் கூடு

B) வோலிடினிசம் – 2. இனப்பெருக்க தலைமுறை

C) நொசீமா பாம்பிசிஸ் – 3. புரோட்டாசோவா தொகுதி

D) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் – 4. பாக்டீரியா

37. பட்டுப்புழுவானது தன் கூட்டைக் கட்டி முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம்_____________

A) இரண்டு நாட்கள்

B) மூன்று நாட்கள்

C) நான்கு நாட்கள்

D) ஐந்து நாட்கள்

விளக்கம்: பட்டுப்பூச்சியானது தன் கூட்டினைக் கட்டி முடிக்க மூன்று நாட்கள் ஆகிறது. கூட்டுப்புழுப் பருவமானது 10 முதல் 12 நாட்கள் வரை நீடிக்கிறது. பின் கூட்டை உடைத்துக்கொண்டு முதிர்ந்த பட்டுப்பூச்சியாக வெளியேறுகிறது.

38. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் கண்டறி,

1) யூனிவோல்டைன் – ஆண்டுக்கு ஒரு தலைமுறை

2) பைவோல்டைன் – ஆண்டுக்கு இரு தலைமுறை

3) மல்டிவோல்டைன் – ஆண்டுக்கு மூன்று தலைமுறை மட்டுமே

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

1) யூனிவோல்டைன் – ஆண்டுக்கு ஒரு தலைமுறை

2) பைவோல்டைன் – ஆண்டுக்கு இரு தலைமுறை

3) மல்டிவோல்டைன் – இரண்டுக்கு மேற்பட்ட தலைமுறை

39. பட்டுப்புழு வளர்த்தலின் முதல் கூறாக____________விளங்குகிறது.

A) கக்கூன் அமைத்தல்

B) தோலுரித்தல்

C) உணவுத் தாவரம் பயிரிடல்

D) மண் சேகரித்தல்

விளக்கம்: பட்டுப்புழு வளர்த்தலின் முதல் கூறாக, பட்டுப்புழுக்களில் உணவுத் தாவரம் பயிரிடல் விளங்குகிறது.

40. பாம்பிக்ஸ் மோரி வகை பட்டுப்புழுக்களுக்கு உணவாக விளங்கும் மல்பெரி தாவரத்தைப் பயிரிடும் முறைக்கு_________என்று பெயர்.

A) செரி கல்சர்

B) மோரிகல்சர்

C) விட்டிகல்சர்

D) ஒலரிகல்சர்

விளக்கம்: பிக்ஸ் மோரி வகை பட்டுப்புழுக்களுக்கு உணவாக விளங்கும் மல்பெரி தாவரத்தைப் பயிரிடும் முறைக்கு மோரிகல்சர் என்று பெயர். தற்காலத்தில் பயிரிடக்கூடிய மேம்பட்ட ரகங்களான விக்டரி 1,S 36,G2 மற்றும் G4 ஆகியவை பலவித விவசாய – பருவ கால நிலைகள் மற்றும் வேறுபட்ட மண் நிலைகளைத் தாங்கி வளரக்கூடியவை ஆகும்.

41. மல்பரி வளர்ப்புக்கு உகந்த காலம்___________

A) ஜீன்

B) ஜீலை

C) நவம்பர்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: மல்பெரி வளர்ப்பிற்கு உகந்த காலம் ஜீன், ஜீலை, நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகும்.

42. பட்டுப்புழுக்களை வளர்ப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய நிகழ்வுகளுல் பொருந்தாததைக் கண்டறி.

A) நிலத்தைத் தயார் செய்தல்

B) பதியன்களைத் தயாரித்தல்

C) உரமிடுதல்

D) நாற்றாங்கால் பராமரித்தல்

விளக்கம்: நிலத்தைத் தயார் செய்தல், பதியன்களைத் தயாரித்தல், நடவுத்தொழில் நுட்பங்கள், மல்பெரி நாற்றங்கால் பராமரித்தல், நோய் மற்றும் தீங்குயிரி மேலாண்மை பழைய மல்பெரி தாவரங்களைப் பிடுங்கிய பின் புதிய மல்பரி தோட்டம் அமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

43. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பட்டுக்களின் வகைகள்___________

A) இர்ணடு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

விளக்கம்: இந்தியாவில் நான்கு வகை பட்டுகளை உற்பத்தி செய்யப்படுகிறது. அவை மல்பெரி பட்டு, டஸர் பட்டு, எரிபட்டு, முகா பட்டு போன்றவையாகும். இவை வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த பட்டுப்புழுக்களால் உருவாக்கப்படுகிறது.

44. பொருத்துக:

A) மல்பரி பட்டு – 1. (91.7 %)

B) டஸர் பட்டு – 2. (6.4 %)

C) எரி பட்டு – 3. (1.4 %)

D) முகா பட்டு – 4. (0.5 %)

A) 1 3 2 4

B) 2 1 3 4

C) 3 1 2 4

D) 4 1 3 2

விளக்கம்:

A) மல்பரி பட்டு – 1. (91.7 %)

B) டஸர் பட்டு – 2. (1.4 %)

C) எரி பட்டு – 3. (6.4 %)

D) முகா பட்டு – 4. (0.5 %)

45. பட்டுப்புழு வளர்ப்புப் பற்றியக் கூற்றுகளில் தவறானதைக் கண்டறி.

A) ஒரு மேடான, நிழலான இடத்தில் 6 மீ ×4 மீ ×3.5 மீ பரிமாணங்களுடன் 100 நோயற்ற முட்டைத் தொகுதிகளை வைத்து வளர்க்கும் வகையில், பட்டுப்புழு வளர்ப்பகம் கட்டப்படுகிறது.

B) இவ்வளர்ப்பகத்தைச் சுற்றிலும் 1 மீ அகல இடைவெளி விட வேண்டும்.

C) போதுமான அளவு சாளரங்களும் காற்றோட்டமும் வளர்ப்பகத்தில் இருக்க வேண்டும்.

D) யூசி ஈக்கன் மற்றும் பிற பூச்சிகள் நுழையாதவாறு ரேயான் வலை கொண்டு சாளரங்களும் காற்றோட்ட இடைவெளிகளும் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

விளக்கம்: யூசி ஈக்கன் மற்றும் பிற பூச்சிகள் நுழையாதவாறு நைலான் வலை கொண்டு சாளரங்களும் காற்றோட்ட இடைவெளிகளும் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

46. கீழ்க்கண்டவற்றுள் ஈரப்பதத்தை அளவிட பயன்படும் கருவி__________

A) பாதோம் மீட்டர்

B) பாரோ மீட்டர்

C) ஹைக்ரோ மீட்டர்

D) ரெய்னோ மீட்டர்

47. கீழ்க்கண்டவற்றுள் பட்டுப்புழு வளர்ப்பின் முக்கிய படிநிலைகளுடன் பொருந்தாதது எது.

A) கிருமி நீக்கம் செய்தல்

B) முட்டைகளை அடைகாத்தல்

C) இளம் லார்வாக்கள் வளர்ப்பு

D) முதிர் லார்வாக்கள் அழிப்பு

விளக்கம்: பட்டுப்புழு வளர்ப்பின் முக்கிய படிநிலைகளாக வளர்ப்பகத்தைக் கிருமி நீக்கம் செய்தல், முட்டைகளை அடைகாத்தல், வளமற்றவைகளை நீக்குதல், இளம் லார்வாக்கள் மற்றும் முதிர் லார்வாக்கள் வளர்ப்பு ஆகியவை உள்ளன.

48. கீழ்க்கண்டவற்றுள் பட்டுப்புழு வளர்ப்புக்கு இன்றியமையாதக் கருவிகளுல் பொருந்தாதது எது.

A) வெப்பநிலைமானி

B) ஈரப்பதம் காட்டி

C) விசைத்தெளிப்பான்

D) மெழுகு தடவப்பட்ட பாராஃபின் காகிதங்கள்

விளக்கம்: பட்டுப்புழு வளர்ப்புக்கு ஈரப்பதம் காட்டி, விசைத்தெளிப்பான்கள், வளர்ப்பு சட்டகங்கள், நுரைத்திண்டுகள், மெழுகு தடவப்பட்ட பாரஃபின் காகிதங்கள் நைலான் வலைகள், இலைகள், வைப்பதற்கான கூடைகள், கோணிப்பைகள், மூங்கில் தட்டுகள், உலர்திகள் ஆகியவையும் பட்டுப்புழு வளர்ப்பதற்கு இன்றியமையாததாகும்.

49. பட்டுப்புழுக்களின் அடைகாக்கும் காலம்______________

A) 4 முதல் 7 நாட்கள்

B) 5 முதல் 7 நாட்கள்

C) 7 முதல் 10 நாட்கள்

D) 10 முதல் 15 நாட்கள்

விளக்கம்: தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரோக்கியமான பட்டுப்பூச்சிகள் 4 மணி நேரம் இனச்சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுகின்றன. பின்னர், பெண் பூச்சியானது அடர் நிறமுள்ள பிளாஸ்டிக் படுக்கையில் வைக்கப்படுகிறது. 24 மணி நேரத்தில் 400 முட்டைகளைப் பெண்பூச்சி இடுகிறது. 7 முதல் 10 நாட்கள் அடைக்காத்தலுக்குப்பின் சிறிய இளம் புழுக்கள் வெளிவருகின்றன. 200C முதல் 250C வெப்பநிலை உள்ள வளர்ப்பகத்தில் ஒரு தட்டில் அவை விடப்படுகின்றன.

50. பட்டுப்பூச்சிக்களின் லார்வாக்கள் முதிர்ச்சியடைய எடுத்துக்கொள்ளும் காலம்________

A) 35 நாட்கள்

B) 40 நாட்கள்

C) 45 நாட்கள்

D) 50 நாட்கள்

விளக்கம்: முழுமையாக வளர்ந்த புழுக்கள் கூடு கட்ட ஆரம்பிக்கின்றன. 45 நாட்களில் லார்வாக்கள் முதிர்ச்சியடைகின்றன. இந்நிலையில், அவற்றின் உமிழ்நீர் சுரப்பி (பட்டுப்பூச்சி) யானது கூடு கட்டுவதற்குரிய பட்டு இழையை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கிறது.

51. பட்டுப்பூச்சிகளில் பட்டுஇழையானது____________மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

A) தோல் சுரப்பி

B) கழிவு நீர்

C) உமிழ்நீர் சுரப்பி

D) வியர்வை சுரப்பி

விளக்கம்: முழுமையாக வளர்ந்த புழுக்கள் கூடு கட்ட ஆரம்பிக்கின்றன. 45 நாட்களில் லார்வாக்கள் முதிர்ச்சியடைகின்றன. இந்நிலையில், அவற்றின் உமிழ்நீர் சுரப்பி (பட்டுப்பூச்சி) யானது கூடு கட்டுவதற்குரிய பட்டு இழையை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கிறது.

52. மூலப்பொருள் ஆராய்ச்சி மற்றும் பொறியியல் நிறுவனம் கீழ்க்கண்ட எந்த நாட்டில் அமைந்துள்ளது.

A) சீனா

B) சிங்கப்பூர்

C) அமெரிக்கா

D) சுவிட்சர்லாந்து

விளக்கம்: ஒரு புதுவகையான, நிறமுள்ள பட்டை உருவாக்க சிங்கப்பூரிலுள்ள மூலப்பொருள் ஆராய்ச்சி மற்றும் பொறியியல் நிறுவனம், வழக்கமான பட்டுநூல் சாயமேற்றும் நடைமுறைகளுக்கு பதிலாக புதிய வழிமுறையை உருவாக்கியது.

53. கூற்று (i): பட்டுக்கூட்டினுள் இருக்கும் புழுவினைக் கொல்லும் செயல்பாடுகளுக்கு ரீலிங் என்று பெயர்.

கூற்று (ii): கொல்லப்பட்ட கக்கூனில் இருந்து பட்டு இழையை பிரித்தெடுத்தல் முறைக்கு ஸ்டிஃப்ளிங் என்று பெயர்.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: பட்டுக்கூட்டினுள் இருக்கும் புழுவினைக் கொல்லும் செயல்பாடுகளுக்குஸ்டிஃப்ளிங் என்று பெயர். கொல்லப்பட்ட கக்கூனில் இருந்து பட்டு இழையை பிரித்தெடுத்தல் முறைக்கு ரீலிங் என்று பெயர்.

54. பட்டுக்கழிவிலிருந்து தயாரிக்கப்படும் பட்டு__________

A) எரி பட்டு

B) டஸர் பட்டு

C) ஸ்பன் பட்டு

D) முகா பட்டு

விளக்கம்: ஒவ்வொரு பட்டுக்கூட்டிலிருந்தும் ஏறத்தாழ பாதி அளவுதான் பின்னுவதற்கு உகந்த இழையாக உள்ளன. மீதமுள்ள இழைகள் பட்டுக்கசிவு ஆகும். இதிலிருந்து ஸ்பன் பட்டு தயாரிக்கப்படுகிறது. கச்சாப்பட்டானது பல விதங்களில் பதப்படுத்தப்பட்டு அதன் பரப்பளவு அதிகரிக்கப்படுகிறது.

55. கீழ்க்கண்டவற்றுள் பட்டின் பயன்களுல் சரியானதைக் கண்டறி.

1) பட்டு நூல்கள் பட்டுத் துணிகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. தற்பொழுது, பட்டு நூலினை இயற்கை மற்றும் செயற்கை இழைகளுடன் இணைந்து டெரிபட்டு, காட்டன்பட்டு போன்றவை தயாரிக்கப்படுகின்றன.

2) தொழிற்சாலைகளிலும் இராணுவத் துறையிலும் பட்டு பயன்படுத்தப்படுகிறது.

3) மீன்பிடி வலைகள், பாராசூட்டுகள், கார்ட்ரிட்ஜ் பைகள், தொலை தொடர்பு கம்பிகளின் மேலுறைகள் மற்றும் கம்பியில்லா தொலைபேசிக் கருவிகள், பந்தய காரின் டயர்கள், வடிகட்டி இழைகள், மருத்துவத் துறையில் காயக்கட்டுத் துணிகள் மற்றும் தையலிடுவதற்கும் பட்டு பயன்படுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

56. ____________என்னும் உயிரி பெப்ரின் என்ற அபாயகரமான நோயை பட்டுப்புழுக்களுக்கு ஏற்படுத்துகிறது.

A) நொசீமா பாம்பிசிஸ்

B) பாக்டிரியாபேஜ்

C) ஸ்ட்ரெப்டோகாக்கஸ்

D) ஸ்டெஃபைலோகாக்கஸ்

விளக்கம்: புரோட்டோசோவா தொகுதியைச் சார்ந்த நொசீமா பாம்பிசிஸ் என்னும் உயிரி, பெப்ரின் என்ற அபாயகரமான நோயை பட்டுப்புழுக்களுக்கு ஏற்படுத்துகின்றன. இந்நோயானது பெண் பட்டுப்பூச்சி இடும் முட்டைகளிலிருந்தும், பட்டுப்புழு மாசுப்பட்ட உணவை உண்பதன் மூலமும் பரவுகிறது.

57. பட்டுப்பூச்சிகளுக்கு ஃப்ளாச்சேரி என்னும் நோயை ஏற்படுத்தும் நோய்க் காரணி____________

A) ஸ்ட்ரெப்டோகாக்கஸ்

B) ஸ்டெஃபைலோகாக்கஸ்

C) நொசீமா பாம்பிசிஸ்

D) A,B இரண்டும்

விளக்கம்: முதிர்ந்த லார்வாக்களில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ், ஸ்டெஃபைலோகாக்கஸ் போன்ற பாக்டீரியங்களால் ஃப்ளாச்செரி என்னும் நோய் ஏற்படுகிறது.

58. பட்டுப்பூச்சிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோயான கிராசரி என்ற நோயை ஏற்படுத்தும் நோய் காரணி.

A) ஸ்ட்ரெப்டோகாக்கஸ்

B) ஸ்டெஃபைலோகாக்கஸ்

C) நொசீமா பாம்பிசிஸ்

D) பாகுலோவைரஸ்

விளக்கம்: பெரிய அளவில் பாதிக்கும் மற்றொரு நோய் கிராசரி ஆகும். இது, பாம்பிக்ஸ் மோரி நியூக்ளியார் பாலிஹெட்ரோசிஸ் வைரஸ் என்ற பாகுலோவிரிடே குடும்பத்தின் துணைத்தொகுப்பு Aயில் உள்ள பாகுலோவைரஸ் மூலம் ஏற்படுகிறது.

59. பட்டுப்புழுக்களுக்கு பூஞ்சையால் ஏற்படும் நோயான வெள்ளை மஸ்கார்டைன் கீழ்க்கண்ட எந்த பூஞ்சையால் ஏற்படுகிறது.

A) பாலிஹெட்ரோசிஸ்

B) ஸ்ட்ரெப்டோகாக்கஸ்

C) பெவேரியா பேசியானா

D) ஸ்டெஃபைலோகாக்கஸ்

விளக்கம்: பூஞ்சை நோய்களுள், வெள்ளை மஸ்கார்டைன் பொதுவாகக் காணப்படும் நோயாகும். இந்நோயானது பெவேரியா பேசியானா எனும் பூஞ்சையால் ஏற்படுகிறது.

60. கூற்று (i): அதிக தேன் கூடுகளை கொண்ட தேன்வளர்ப்பிடம் ஏபியரிகள் எனப்படும்.

கூற்று (ii): ஏப்பிகல்ச்சர் என்னும் சொல் Apis என்னும் கிரேக்க சொல்லிலிருந்து வந்தது. இதற்கு தேனீ என்று பொருள்

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: அதிக தேன் கூடுகளை கொண்ட தேன்வளர்ப்பிடம் ஏபியரிகள் எனப்படும். ஏப்பிகல்ச்சர் என்னும் சொல் Apis என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது. இதற்கு தேனீ என்று பொருள்.

61. தேனீ வளர்ப்பிற்கு பயன்படுத்தப்படும் பொதுவான இனங்களின் எண்ணிக்கை_____________

A) மூன்று

B) நான்கு

C) ஐந்து

D) ஆறு

62. பொருத்துக:

A) ஏபிஸ் டார்செட்டா – 1. சின்ன தேனீ

B) ஏபிஸ் ஃப்ளோரியா – 2. பாறைத் தேனீ

C) ஏபிஸ் இன்டிகா – 3. ஐரோப்பிய தேனீ

D) ஏபிஸ் மெல்லிபெரா – 4. இந்தியத் தேனீ

A) 1 3 2 4

B) 2 1 4 3

C) 3 1 2 4

D) 4 1 3 2

விளக்கம்:

A) ஏபிஸ் டார்செட்டா – 1. பாறைத் தேனீ

B) ஏபிஸ் ஃப்ளோரியா – 2. சின்ன தேனீ

C) ஏபிஸ் இன்டிகா – 3. இந்தியத் தேனீ

D) ஏபிஸ் மெல்லிபெரா – 4. ஐரோப்பிய தேனீ

63. ஏபிஸ் ஆடம்சோனி என்பது ஒரு வகையான___________தேனி.

A) இந்திய தேனீ

B) ஐரோப்பிய தேனீ

C) ஆஸ்திரிய தேனீ

D) ஆப்பிரிக்க தேனீ

64. கீழ்க்கண்டவற்றுள் நன்கு வளர்ச்சிபெற்ற தேன் கூட்டில் காணப்படும் தேனீக்கள்____________

A) இராணி தேனீ

B) ஆண் தேனீ

C) வேலைக்காரத் தேனீ

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: நன்கு வளர்ச்சி பெற்ற தேனீக் கூட்டில் இராணீ தேனீ, ஆண் தேனீக்கள், மற்றும் வேலைக்காரத்தேனீக்கள் என மூன்று வகைகள் உள்ளன. இம்மூன்று வகைகளும் தாம் வாழ்வதற்காக ஒன்றையொன்று சார்ந்துள்ளன.

65. ஒரு கூட்டில் காணப்படும் இராணித் தேனீக்களின் எண்ணிக்கை___________

A) ஒரே ஒரு இராணி தேனீ

B) 100 க்கு மேற்ப்பட்டவை

C) 1000 க்கு மேற்ப்பட்டவை

D) 10 க்கு மேற்ப்பட்டவை

விளக்கம்: பொதுவாக ஒரு கூட்டில் ஒரேஒரு இராணி தேனியும் 10000 முதல் 30000 வேலைக்கார தேனீக்களும் சில நூறு ஆண் தேனீக்களும் உள்ளன.

66. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைக் கண்டறி.

A) பொதுவாக, ஒவ்வொரு தேன் கூட்டிலும் இராயல் ஜெல்லியை உணவாக உட்கொள்ளும் ஒரு இராணி தேனீ (செயல்படும் பெண் தேனீ) காணப்படும்.

B) வாழ்நாள் முழுமையும் முட்டையிடுதலே இதன் முக்கியப் பணியாகும்.

C) இந்த கன்னி இராணித் தேனீயானது ஒரேயொரு முறை மட்டும் ஆண்தேனீயுடன் இனச்சேர்க்கையில் ஈடுபடும்.

D) இனவெருத்திக் காலமான கோடைகாலத்தில் இராணி தேனீயானது பல ஆண் தேனீக்களுடன் கூட்டமாக பறந்து செல்லும். இது கலவிப்பறப்பு எனப்படும்.

விளக்கம்: இனவெருத்திக் காலமான குளிர்காலத்தில் இராணி தேனீயானது பல ஆண் தேனீக்களுடன் கூட்டமாக பறந்து செல்லும். இது கலவிப்பறப்பு எனப்படும்.

67. கீழ்க்கண்டகூற்றுகளில் சரியானதைக் கண்டறி.

1) இராணி தேனீ சுரக்கும் பெரமோன்கள் எனப்படும் வேதிப்பொருளால் கவரப்பட்ட ஆண் தேனீயுடன் இனச்சேர்க்கையில் ஈடுபடும் அப்பொழுது ஆண் தேனீயானது கருவுருதலுக்கு தேவையான அளவு எண்ணற்ற விந்துக்களை வெளியிடுகிறது.

2) ஒரு இராணி தேனீயானது தனது வாழ்நாளான 2 முதல் 4 மாதங்களில் 13 லட்சம் முட்டைகளை இடுகின்றது.

3) இராணி தேனீ முட்டைகளை இடும் திறனை இழக்கும் பொழுது மற்றொரு ஆண்தேனீயானது இராயல் ஜெல்லியை உண்டு புதிய இராணி தேனீயாக மாறும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: ஒரு இராணி தேனீயானது தனது வாழ்நாளான 2 முதல் 4 வருடங்களில் 13 லட்சம் முட்டைகளை இடுகின்றது. இராணி தேனீ முட்டைகளை இடும் திறனை இழக்கும் பொழுது மற்றொரு வேலைக்காரத் தேனீயானது இராயல் ஜெல்லியை உண்டு புதிய இராணி தேனீயாக மாறும்.

68. கீழ்க்கண்டவற்றுள் மலட்டுத்தேனீ என்றழைக்கப்படுவது.

A) ஆண் தேனீ

B) டிரோன் தேனீ

C) வேலைக்காரத் தேனீ

D) இராணி தேனீ

விளக்கம்: வேலைக்கார தேனீயானது மலட்டு தன்மையுடைய சிறிய பெண் தேனீயாகும். ஒரு இயந்திரத்தின் முக்கிய கம்பிச்சுருள் போல அமைந்து அனைத்துவிதமான பணிகளையும் மேற்கொள்ளும் வேலைக்கார தேனீ வாழும் அறை வேலைக்காரத்தேனீ அறை எனப்படும்.

69. வேலைக்காரத் தேனீக்களின் ஆயட்காலம்_________

A) 6 நாள்கள்

B) 6 வாரங்கள்

C) 6 மாதங்கள்

D) 6 வருடங்கள்

விளக்கம்: இத்தேனீக்கள் முட்டையிலிருந்து முதிர் உயிரியாக மாற 21 நாட்கள் ஆகும். இதன் வாழ்நாள் 6 வாரங்கள் ஆகும். இவை தனது வாழ்நாளில் பலவகைப்பட்ட பணிகளைச் செய்கின்றன. தன் வாழ்நாளில் முதல் பகுதியில் இராயல் ஜெல்லி சுரத்தல், இளம் உயிரிகளுக்கு உணவூட்டதல், இராணீ தேனீயை உணவுண்ண செய்தல், இராணி தேனீயையும் ஆண் தேனீயையும் பாதுகாத்தல், தேன்மெழுகைச் சுரந்து தேன் கூட்டினை உருவாக்குதல், தேன் கூட்டினை சுத்தப்படுத்துதல், குளிரூட்டுதல், படைவீரராக செயல்பட்டு தேன்கூட்டினை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்யும் செவிலித் தேனியாக பணியாற்றுகின்றன.

70. கீழ்க்கண்டவற்றுள் எது வேலைக்காரத் தேனீயின் பணியாக கருதப்படுகிறது.

A) இராயல் ஜெல்லி சுரத்தல்

B) இளம் உயிரிகளுக்கு உணவூட்டதல்

C) இராணீ தேனீயை உணவுண்ண செய்தல்

D) மேற்கண்ட அனைத்தும்

71. கீழ்க்கண்டவற்றுள் செவிலித் தேனீ என்றழைக்கப்படுவது________

A) ஆண் தேனீ

B) வேலைக்காரத் தேனீ

C) டிரோன் தேனீ

D) இராணி தேனீ

72. தேன் கூட்டின் படைவீரராக செயல்பட்டு கூட்டினைப் பாதுகாப்பது_________

A) ஆண் தேனீ

B) டிரோன் தேனீ

C) இராணி தேனீ

D) வேலைக்காரத் தேனீ

73. கீழ்க்கண்டவற்றுள் வேலைக்காரத்தேனீயின் பணிகளுல் சரியானதைக் கண்டறி.

1) இதன் வாழ்நாள் 9 வாரங்கள் ஆகும்.

2) தன் வாழ்நாளில் முதல் பகுதியில் இராயல் ஜெல்லி சுரத்தல், இளம் உயிரிகளுக்கு உணவூட்டதல், இராணீ தேனீயை உணவுண்ண செய்தல், இராணி தேனீயையும் ஆண் தேனீயையும் பாதுகாத்தல், தேன்மெழுகைச் சுரந்து தேன் கூட்டினை உருவாக்குதல், தேன் கூட்டினை சுத்தப்படுத்துதல், குளிரூட்டுதல், படைவீரராக செயல்பட்டு தேன்கூட்டினை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்யும் செவிலித் தேனியாக பணியாற்றுகின்றன.

3) மறுபாதியான கடைசி 3 வாரத்தில் தேன், மகரந்தம், புரோபோலிஸ் மற்றும் நீர் போன்றவற்றைத் தேடி சேகரிக்கின்றன.

A) 1 மட்டும் சரி

B) 1, 3 மட்டும் சரி

C) 2, 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: இதன் வாழ்நாள் 6 வாரங்கள் ஆகும்.

74. கீழ்க்கண்டவற்றுள் செவிலித் தேனீ என்றழைக்கப்படுவது____________

A) ஆண் தேனீ

B) மலட்டு தேனீ

C) இராணி தேனீ

D) வேலைக்காரத் தேனீ

விளக்கம்: கருவுறா முட்டையில் இருந்து உருவாகும் ஆண் தேனீயானது ட்ரோன் எனப்படும். இதன் அறை ட்ரோன் செல் எனப்படும். இவை தேனுக்காக முழுமையாக வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்திருக்கின்றன.

75. தேன் கூட்டின் அரசன் என்றழைக்கப்படுவது_____________

A) ஆண் தேனீ

B) ட்ரோன் தேனீ

C) இராணி தேனீ

D) A,B இரண்டும்

விளக்கம்: ட்ரோன்களின் ஒரே பணி இராணித் தேனீயை கருவுறச் செய்வதாகும். இதனால், அவை தேன்கூட்டின் அரசன் எனப்படுகிறது. புதிய தேன்கூட்டை உருவாக்குவதற்காக இராணி தேனீயானது எண்ணற்ற வேலைக்கார தேனீக்களுடன் பழைய கூட்டத்திலிருந்து பிரிந்து செல்லுதல் ஸ்வார்மிங் அல்லது மொய்த்திரள் எனப்படும். மொய்த்திரளின் போது இராணித்தேனீயை பின்தொடரும் ஆண் தேனீ இராணி தேனீயுடன் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட பின் இறந்து விடும்.

76. புதிய தேன்கூட்டை உருவாக்குவதற்காக இராணி தேனீயானது எண்ணற்ற வேலைக்கார தேனீக்களுடன் பழைய கூட்டத்திலிருந்து பிரிந்து செல்லுதல் முறைக்கு___________என்று பெயர்.

A) ஸ்விம்மிங்

B) ஸ்வார்மிங்

C) மொய்த்திரள்

D) A,C இரண்டும்

விளக்கம்: புதிய தேன்கூட்டை உருவாக்குவதற்காக இராணி தேனீயானது எண்ணற்ற வேலைக்கார தேனீக்களுடன் பழைய கூட்டத்திலிருந்து பிரிந்து செல்லுதல் ஸ்வார்மிங் அல்லது மொய்த்திரள் எனப்படும். மொய்த்திரளின் போது இராணித்தேனீயை பின்தொடரும் ஆண் தேனீ இராணி தேனீயுடன் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட பின் இறந்து விடும்.

77. கீழ்க்கண்டவற்றுள் தேன்கூட்டின் அமைப்பு பற்றிய தகவல்களுல் தவறானதைக் கண்டறி.

A) தேனீயின் இருப்பிடம் தேன் கூடு எனப்படும்

B) தேன்கூடானது வேலைக்காரத் தேனீக்களின் வயிற்றிலிருந்து சுரக்கும் மெழுகால் கட்டப்பட்ட எண்கோண வடிவ அறைகளால் ஆனது.

C) இந்த அறைகள் ஒரு பொதுவான அடிப்பகுதியில் எதிர்எதிர் வரிசையில் அமைந்துள்ளன.

D) தேன்கூடுகள் பாறைகள், கட்டிடங்கள் மற்றும் மரக்கிளைகளில் செங்குத்தாகத் தொங்கிக் கொண்டிருக்கும்.வளரிளம் பருவத்தில் உள்ள தேனீக்களானது தேன்கூட்டின் கீழ் பகுதியிலோ மையப்பகுதியிலோ உள்ள அறைகாப்பறைகளில் காணப்படும்.

விளக்கம்: தேன்கூடானது வேலைக்காரத் தேனீக்களின் வயிற்றிலிருந்து சுரக்கும் மெழுகால் கட்டப்பட்ட அறுங்கோண வடிவ அறைகளால் ஆனது.

78. கீழ்க்கண்டவற்றுள் தேன்கூட்டின் அமைப்பு பற்றிய தகவல்களுல் சரியானதைக் கண்டறி.

1) தேன்கூடுகள் பாறைகள், கட்டிடங்கள் மற்றும் மரக்கிளைகளில் செங்குத்தாகத் தொங்கிக் கொண்டிருக்கும்.வளரிளம் பருவத்தில் உள்ள தேனீக்களானது தேன்கூட்டின் கீழ் பகுதியிலோ மையப்பகுதியிலோ உள்ள அடைகாப்பறைகளில் காணப்படும். பாறை தேனீக்களில் இத்தகைய அடைகாப்பு அறைகள் அளவிலும், அமைப்பிலும் ஒரே மாதிரியாக காணப்படும்.

2) மற்ற இனங்களில் இராணி தேனீ, ஆண் தேனீ வேலைக்காரத் தேனீ என ஒவ்வொரு வகைக்கும் தனித்தனி அடைகாப்பு அறைகள் காணப்படும்.

3) தேன்கூட்டின் கீழ்பகுதி தேனீக்கள் வளர்வதற்கும் மேற்புறப்பகுதியானது தேன், மகரந்தம் போன்றவற்றை சேமிக்கவும் பயன்படுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

79. இந்தியாவில் காணப்படும் தேன்கூடுகளின் வகை____________

A) லாங்ஸ்ட்ரோக் வகை

B) நியூட்டன் வகை

C) பெர்சீலியஸ் வகை

D) A,B இரண்டும்

விளக்கம்: இந்தியாவில் இரண்டு வகை தேன்கூடுகள் புழக்கத்தில் உள்ளன. அவை: 1. லாங்ஸ்ட்ரோத் வகை 2. நியூட்டன் வகை இதில் காட்டியுள்ளபடி லாங்ஸ்ட்ரோத் தேன்கூடானது 6 பகுதிகளைக் கொண்ட மரத்தலான அமைப்பு ஆகும்.

80. ஒரு தேனீ 453.5மி.லி தேனைச் சேகரிக்க அது மேற்கொள்ளவேண்டிய பயணத்தின் தொலைவு_____________

A) புவியின் சுற்றளவை போன்று நான்கு மடங்கு

B) புவியின் சுற்றளவை போன்று இரண்டு மடங்கு

C) புதனின் சுற்றளவை போன்று நான்கு மடங்கு

D) புதனின் சுற்றளவை போன்று இரண்டு மடங்கு

விளக்கம்: தேனீக்கள் கூட்டாக சேர்ந்து வாழ்வது எப்படி என்ற படிப்பினை நமக்கு கொடுக்கின்றன. ஒரு தேனீ 453.5 மி.லி தேனைச் சேகரிக்க நமது புவியின் சுற்றளவை போன்று இரண்டு மடங்கு தூரம் பயணிக்க வேண்டியுள்ளதன் மூலம் அதன் கடின உழைப்பை அறிந்து கொள்ளலாம்.

81. கீழ்க்கண்டவற்றில் தேனில் காணப்படும் முக்கிய உட்கூறுகளாக கருதப்படுபவை____________

A) லெவுலோஸ்

B) டெக்ஸ்ட்ரோஸ்

C) மால்டோஸ்

D) மேற்கண்ட அனைத்தும்

82. கீழ்க்கண்டவற்றுள் தேனின் மருத்துவபயன்களுல் வேறுபட்டதைக் கண்டறி.

A) நோய் தடுப்பானாகவும்

B) மலமிலக்கியாகவும்

C) தூக்க கட்டுபடுத்தியாகவும்

D) தூக்கத்தை உண்டாக்கவும்

விளக்கம்: நோய் தடுப்பானாகவும், மலமிளக்கியாகவும், தூக்கத்தை உண்டாக்கவும் பயன்படுத்தப்படும் தேன் ஆயூர்வேத மற்றும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

83. தேனீக்களின் வயிற்றுப் புறத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் பொருள்____________

A) உமிழ்நீர் சுரப்பி

B) தேன் மெழுகு

C) ஜெல்லி

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: இரண்டு வார காலம் வளர்ச்சியடைந்த வேலைக்கார தேனீக்களின் வயிற்றுப் புறத்திலிருந்து இத்தேன் மெழுகு சுரக்கப்படுகிறது. தேன் மெழுகானது நன்கு அரைக்கப்பட்டு, தலை சுரப்பிகள் சுரக்கும் சுரப்பு நீருடன் கலக்கப்பட்டு பிளாஸ்டிக் போன்ற பிசுபிசுப்பு தன்மையுள்ள பொருளாக மாற்றப்படுகிறது.

84. தேன்மெழுகிலுள்ள பிசுபிசுப்பான வேதிப்பொருள்­­­­­­­­­­­­­_________எனப்படுகிறது.

A) சுக்ரோஸ்

B) பயோலிஸ்

C) புரோபோலிஸ்

D) மேற்கண்ட அனைத்தும்

85. தேன் மெழுகினைக் கொண்டு தயாரிக்கப்படுபவை__________

A) மெழுகுவர்த்திகள்

B) நீர் ஒழுகாமல் தடுக்கக் கூடிய நீர்காப்புப் பொருட்கள்

C) மரத்தளவாடப் பொருட்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

86. பொருத்துக:

A) டிரோன் – 1. இனப்பெருக்கம்

B) மலட்டுத் தேனீ – 2. டக்கார்டியா லேக்கா

C) அரக்குப்பூச்சி – 3. வேலைக்கார தேனீ

D) இராணி தேனீ – 4. ஆண் தேனீ

A) 1 3 2 4

B) 2 1 4 3

C) 3 1 2 4

D) 4 3 2 1

விளக்கம்:

A) டிரோன் – 1. ஆண் தேனீ

B) மலட்டுத் தேனீ – 2. வேலைக்கார தேனீ

C) அரக்குப்பூச்சி – 3. டக்கார்டியா லேக்கா

D) இராணி தேனீ – 4. இனப்பெருக்கம்

87. தேனை கெடாமல் பாதுகாத்து அதை மருத்துவ முக்கியத்துவமுடையதாக மாற்றும் நொதி_____________

A) இன்டர்மீடியேட்

B) இன்வர்டேஸ்

C) இன்டர்பெரான்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: தேனீயானது மலரிலிருந்து தனது நீண்ட குழல்போன்ற நாக்கினால் இனிப்புச் சுவையுடைய பூந்தேனை உறிஞ்சி வயிற்றில் சேகரித்து இன்வர்டேஸ் என்ற நொதியுடன் சேர்த்து தேனை உருவாக்குகிறது. இது தேனைக் கெடாமல் பாதுகாத்து, அதை மருத்துவ முக்கியத்துவமுடையதாக மாற்றுகிறது.

88. அரக்கு கீழ்க்கண்ட எந்த பூச்சியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

A) டக்கார்டியா லேக்கா

B) ஸ்காண்டியா லேக்கா

C) லேக்சிஃபர் லேக்கா

D) A,C இரண்டும்

விளக்கம்: அரக்குப்பூச்சிகளை வளர்த்து அதிகளவில் அரக்கினை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அரக்கு வளர்ப்பு எனப்படும். டக்கார்டியா லேக்கா எனும் பூச்சியிலிருந்து அரக்கு தயாரிக்கப்படுகிறது. இப்பூச்சி முன்னர் லேக்சிஃபர் லேக்கா என்று அழைக்கப்பட்டது. இப்பூச்சி மிகச்சிறிய பிசுபிசுப்பான ஊர்ந்து செல்லும் செதில் பூச்சி வகையை சார்ந்தது.

89. பின்வருவனவற்றுள் அரக்குப் பூச்சியின் ஒம்புயிரித் தாவரங்களுல் அல்லாதது எது.

A) கருங்காலி

B) அரசமரம்

C) கும்பாதிரி

D) கருவேலை

விளக்கம்: கருங்காலி, கருவேலை, கும்பாதிரி ஆகியவை அரக்குப் பூச்சிகளின் ஓம்புயிரி தாவரங்களாகும். அரக்கின் தரமானது ஓம்புயிரி தாவரத்தின் தரத்தை சார்ந்தது. பெண் அரக்குப் பூச்சிகள் ஆண் பூச்சிகள் விட பெரியவை.

90. அரக்கின் பயன்களுல் சரியானதைக் கண்டறி.

A) முத்திரை மெழுகு தயாரிக்க

B) ஒளியியல் கருவிகள் தயாரிக்க

C) மின்சாரத் துரை

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: முத்திரை மெழுகு தயாரிக்கவும் ஒளியியல் கருவிகளில் ஒட்டும் பொருளாகவும் அரக்கு பயன்படுகிறது. மேலும், இது சிறந்த மின் கடத்தாப் பொருளாக செயல்படுவதால் மின்சாரத் துறையிலும் அதிகம் பயன்படுகிறது.

91. அரக்கின் பயன்களுல் சரியானதைக் கண்டறி.

A) காலணி தயாரிப்பு

B) தோல் பொருட்கள் தயாரிப்பு

C) மரப்பூச்சு தயாரிப்பு

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: காலணி தயாரிப்பிலும், தோல் பொருட்களை பளபளப்பாக்கவும், மரப்பூச்சு தயாரிக்கவும் பயன்படுகிறது.

92. ஹைபர் பாரசைட்டிசம் எனப்படுவது__________

A) ஒரு ஒட்டுண்ணி மேல் மற்றொரு ஒட்டுண்ணி வாழ்தல்

B) ஒரு சாறுண்ணி மேல் மற்றொரு சாறுண்ணி வாழ்தல்

C) ஒரு மட்குண்ணி மேல் மற்றொரு மட்குண்ணி வாழ்தல்

D) ஒரு பூஞ்சை மேல் மற்றொரு பூஞ்சை வாழ்தல்

93. நீர் உயிரி பயிர் வளர்ப்பு தொழில்நுட்பத்துடன் தொடர்புடையவை____________

A) நீர்வாழ் உயிரி வளர்ப்பு

B) தாவரவாழ் உயிரி வளர்ப்பு

C) மண்ணில்லா தாவர வளர்ப்பு

D) A,B இரண்டும்

விளக்கம்: நீர் உயிரி பயிர் வளர்ப்பு தொழில்நுட்பமானது. நீர்வாழ் உயிரி வளர்ப்பு மற்றும் மண்ணில்லா தாவர வளர்ப்பு ஆகியன இணைந்த முறையாகும். இம்முறையால் நச்சு நீர் வெளியேற்றம் தடுக்கப்படுகிறது.

94. இந்திய நாட்டில் நீர் உயிரி பயிர் வளர்ப்பு முறை தொடங்கப்பட்ட ஆண்டு____________

A) 2007

B) 2009

C) 2011

D) 2013

விளக்கம்: இம்முறையில் மீன்களால் உண்டாகும் கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் சூழ்நிலை மண்டலத்தின் சமநிலை பராமரிக்கப்படுகின்றது. இத்தொழில் நுட்பம் நம் நாட்டில் 2013-ல் தொடங்கப்பட்டது.

95. தற்போது நடைமுறையில் உள்ள நீர் உயிரி பயிர் வளர்ப்பு முறைகள்______________

A) ஆழ்நீர் உயிரி பயிர் வளர்ப்பு

B) ஊடக அடிப்படை முறை

C) ஊட்டப்பொருள் படல தொழில் நுட்பம்

D) மேற்கண்ட அனைத்தும்

96. கீழ்க்கண்டவற்றுள் வேகமாக வளரும் தாவரங்களுக்கு ஏற்ற நீர் உயிரி பயிர் வளர்ப்பு முறை_____________

A) ஆழ்நீர் உயிரி பயிர் வளர்ப்பு

B) ஊடக அடிப்படை முறை

C) ஊட்டப்பொருள் படல தொழில் நுட்பம்

D) செங்குத்து நீரோட்ட வளர்ப்பு

97. வீடுகளில் பொழுதுபோக்குக்காக வளர்க்கப்டும் நீர் உயிரி பயிர் வளர்ப்பு முறை___________

A) ஆழ்நீர் உயிரி பயிர் வளர்ப்பு

B) ஊடக அடிப்படை முறை

C) ஊட்டப்பொருள் படல தொழில் நுட்பம்

D) செங்குத்து நீரோட்ட வளர்ப்பு

98. நீர்வாழ் உயிரி வளர்ப்பு கீழ்க்கண்ட எந்த காலம் முதல் புழக்கத்தில் உள்ளது.

A) கிரேக்கர்க்ள்

B) எகிப்தியர்கள்

C) போனிசியன்கள்

D) சீக்கயர்கள்

99. தமிழகத்தில் மீன் வளர்ப்பு குறிப்பிடும்படியான கவனத்தைப் பெற்ற ஆண்டு________

A) 1905

B) 1907

C) 1911

D) 1913

100. ஆதார வளங்கள் அடிப்படையில் நீர்வாழ் உயிரி வளர்ப்பின் வகைகளுல் வேறுபட்டதைக் காண்க,

A) நன்னீர் உயிரி வளர்ப்பு

B) கழிமுக நீர் உயிரி வளர்ப்பு

C) கடல்நீர் உயிரி வளர்ப்பு

D) குளத்துநீர் உயிரி வளர்ப்பு

101. மீன் வளர்ப்பு முறைக்கு____________என்று பெயர்.

A) ஒலரிகல்சர்

B) விட்டிகல்சர்

C) ஃபிஸிகல்சர்

D) ஃப்ளோரிகல்சர்

102. இந்திய துணைக்கண்டத்தில் உள்ள கடற்கரைகளின் நீளம்___________?

A) 5000கி.மீ

B) 5200கி.மீ

C) 5400கி.மீ

D) 5600கி.மீ

103. கூற்று (i): 30 – 35 ppt உப்புத்தன்மையுள்ள நீரில் மீன்களும் பிற விலங்குகளும் வளர்க்கப்படுதல் கடல் வாழ் உயிரிகள் வளர்த்தல் எனப்படுகிறது.

கூற்று (ii): 36 – 40 ppt உப்புத்தன்மை கொண்ட நீரில் உயிரிகள் வளர்க்கப்படுதல் மிகை உப்பு நீர் உயிரிகள் வளர்தல் எனப்படுகிறது.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

104. கீழ்க்கண்டவற்றுள் வளர்ப்பு மீன்களின் பண்புகளுல் பொருந்தாதது எது.

A) குறைந்த வளர்ப்பு காலத்தில் குறைவான வளர்ச்சி வீதம் கொண்டவை.

B) வழங்கும் துணை உணவை ஏற்றுக்கொள்பவை.

C) சில பொதுவான நோய்களை தாங்கும் திறன் மற்றும் ஒட்டுண்ணிகள் தாக்கத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்டவை.

D) வழங்கப்படும் உணவை உடல் பொருளாக மாற்றும் திறன் மிகுதியாக இருத்தல் அவசியம்.

விளக்கம்: குறைந்த வளர்ப்பு காலத்தில் அதிக வளர்ச்சி வீதம் கொண்டவை.

105. கீழ்க்கண்டவற்றுள் வளர்ப்பு மீன்களின் வகைகளுல் பொருந்தாதது எது.

A) குளத்தில் வாழும் தன்மை கொண்ட குளத்து நீர் மீன்கள்

B) உள்நாட்டு (அ) உள்ளுர் நன்னீர் மீன் வகைகள்

C) நன்னீரில் வாழும் தன்மை கொண்ட உவர் நீர் மீன்கள்

D) வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்கள்

106. கீழ்க்கண்டவற்றுல் இந்தியாவில் வளர்க்க மிகப் பொருத்தமான இனங்களாக கருதப்படக்கூடியவை.

A) லேபியா

B) பால்மீன்

C) பெருங்கெண்டைகள்

D) கெழுத்திமீன்

107. இந்தியாவில் பெருங்கெண்டைகள் அதிக அளவு வளர்ப்பதற்கான முக்கிய காரணிகளுல் அல்லாதது.

A) விலங்கு மிதவை உயிரிகள், தாவர மிதவை உயிரிகள், அழுகும் களைச்செடிகள், கழிவுகள் மற்றும் நீர்த் தாவரங்களை உண்ணும் தன்மை.

B) கலங்கள் தன்மை அதிகமுள்ள, சிறிதளவு உயர் வெப்ப நிலையுடைய நீரிலும் வாழும் தன்மை.

C) நீரிலுள்ள O2 மாறுபாட்டை தாங்கும் திறன்.

D) ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்வது மிகக் கடினம்.

விளக்கம்: ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்வது எளிது.

108. மீன் வளர்ப்பை பாதிக்கும் புறக் காரணிகளுல் சரியானதைக் கண்டறி.

A) வெப்பநிலை

B) ஒளி

C) மழை நீர்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: வெப்பநிலை, ஒளி, மழை நீர், வெள்ளம், நீரோட்டம், நீரின் கலங்கல் தன்மை, அமில-காரத்தன்மை, உப்புத்தன்மை மற்றும் கரைந்துள்ள O2 போன்ற காரணிகள் மீன்வளர்ப்பை பாதிக்கும் புறக் காரணிகள் ஆகும்.

109. கீழ்க்கண்டவற்றுள் மீன் இனப்பெருக்கத்தில் முக்கிய பங்களிப்பது_______

A) ஒளி

B) வெப்பநிலை

C) மழைநீர்

D) A,B இரண்டும்

110. மீன் வளர்ப்பின் முதல் படி நிலை__________

A) குளம் வெட்டுதல்

B) நீர் பாய்ச்சதல்

C) சேகரித்தல்

D) இனப்பெருக்கம்

விளக்கம்: மீன் வளர்ப்பின் முதல்படி நிலை இனப்பெருக்கம் ஆகும். இனப்பெருக்கம் சரியாக நடைபெற இனப்பெருக்க குளம் தேவைப்படுகிறது. இவ்வகைக் குளங்கள் ஆறு அல்லது இயற்கை நீர் வளங்களின் அருகில் உருவாக்கப்படுகின்றன.

111. மீன்களின் இனப்பெருக்க முறைகள் பற்றிய கருத்துக்களில் சரியற்றதைக் கண்டறி.

A) மீன்களின் இனப்பெருக்க முறையானது இயற்கை இனப்பெருக்க முறை மற்றும் செயற்கை இப்பெருக்க முறை என அழைக்கப்படுகிறது.

B) தூண்டப்பட்ட இனப்பெருக்கம் ஹைபோஃபைசேஷன் முறையிலும் செய்யலாம்.

C) இம்முறையில் பிட்யூட்டரி ஹார்மோனான கொனடோட்ரோபின் ஹார்மோனைப் பயன்படுத்துவதால் மீன்களின் இனவுறுப்புகளின் முதிர்ச்சி மற்றும் முட்டை வெளிப்படுதல் தூண்டப்படுகின்றது.

D) முதிர்ந்த ஆரோக்கியமான மீனில் இருந்து தைராய்டு சுரப்பி எடுக்கப்படுகிறது.

விளக்கம்: முதிர்ந்த ஆரோக்கியமான மீனில் இருந்து பிட்யூட்டரி சுரப்பி எடுக்கப்படுகிறது.

112. இனப்பெருக்க குளத்தில் இருந்து__________எனும் எறி வலையைக் கொண்டு மீன் கருமுட்டைகள் அல்லது மீன் விதைகள் சேகரிக்கப்படுகிறது.

A) பென்சிலான்

B) பென்சிடால்

C) பென்சிஜால்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: இனப்பெருக்கக் குளத்தில் இருந்து பென்சிஜால் எனும் எறி வலையைக் கொண்டு மீன் கருமுட்டைகள் அல்லது மீன் விதைகள் சேகரிக்கப்பட்டு பொரிப்புக் குளத்திற்கு மாற்றப்படுகிறது.

113. கீழ்க்கண்டவற்றுள் மீன்களின் வளர்ப்புக்காக பயன்படுத்தப்படும் குளங்களில் பொருந்தாததைக் கண்டறி.

A) நாற்றங்கால் குளம்

B) பராமரிப்புக் குளம்

C) இருப்புக்குளம்

D) நன்னீர் குளம்

114. மீன்களின் வளர்ப்பு நிளைகல் குறித்தத் தகவல்களுல் பொருந்தாததைக் கண்டறி.

A) பொரித்த இளம் மீன்குஞ்சுகள் ஹாப்பாவில் இருந்து நாற்றாங்கால் குளத்திற்கு அனுப்பப்படுகிறது. இங்கு இவை வளர்ந்து மீன்களாக மாறுகின்றன.

B) விரலிகள் நாற்றாங்கால் குளத்தில் இருந்து பராமரிப்புக் குளத்திற்கு மாற்றப்படுகின்றன. குறுகலான நீண்ட பராமரிப்புக்குளத்தில் விரலிகள் நீண்ட தூரம் நீந்த இயலும்.

C) இருப்புக்குளத்தில் களைகளும் கொன்றுண்ணி மீன்களும் இருக்கலாகாது. மாட்டுச்சாணம் கொண்டு உற்பத்தித் திறன் மேம்படுத்தப்படுகிறது. வேதி உரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

D) அறுவடை செய்தல் என்பது நீர்நிலையில் இருந்து மீன்களை பிடித்தல் ஆகும். நன்கு வளர்ந்த மீன்களை அறுவடை செய்து சந்தை படுத்துகின்றனர். சிறிய மீன்கள் மேலும், வளர்ச்சியடைய, இருப்புக் குளத்திற்குள் மீண்டும் விடப்படுகின்றன.

விளக்கம்: பொரித்த இளம் மீன்குஞ்சுகள் ஹாப்பாவில் இருந்து நாற்றாங்கால் குளத்திற்கு அனுப்பப்படுகிறது. இங்கு இவை வளர்ந்து விரலியாக மாறுகின்றன.

115. கீழ்க்கண்டவற்றுள் மீன்பிடி வகைகளுல் பொருந்தாததைக் கண்டறி.

A) துரத்திப் பிடித்தல்

B) சுண்ட வைத்து பிடித்தல்

C) தூண்டில் போட்டு பிடித்தல்

D) கண்ணிவைத்து பிடித்தல்

விளக்கம்: பல்வேறு மீன்பிடிப்பு வகைகள் பயன்பாட்டில் உள்ளன. அவை துரத்திப் பிடித்தல், தூண்டில் போட்டு பிடித்தல், கண்ணிவைத்து பிடித்தல், மூழ்கு வலை, வீச்சு வலை, செவுள் வலை, இழுவலை மற்றும் பர்ஸ் வலை ஆகியவற்றை பயன்படுத்துதல் போன்றவையாகும்.

116. கீழ்க்கண்டவற்றுள் மீன்களை பதப்படுத்தப்படும் முறைகளுல் அல்லாதது எது.

A) குளிர்பதனம்

B) வெப்பப்படுத்துதல்

C) ஆழ் உறை நிலை முறை

D) உறைவு உலர்த்தல்

விளக்கம்: பிடிக்கப்பட்ட மீன்கள் குளிர்பதனம், ஆழ் உறை நிலை முறை, உறைவு உலர்த்தல், சூரிய ஒளியில் உலர்த்தல், உப்பிடல், புகையூட்டல், பெட்டிகளில் அடைத்தல் ஆகிய முறைகளில் பதப்படுத்தப்படுகிறது.

117. கீழ்க்கண்டவற்றுள் கூட்டு மீன்வளர்ப்பு பற்றியக் கருத்துகளில் தவறானதைக் கண்டறி.

1) கிடைக்கக் கூடிய சூழ்நிலைக்கூறுகள் முழுவதையும் பயன்படுத்துதல்.

2) பொருத்தமான சிற்றினங்கள் ஒன்றை ஒன்று பாதிக்கும்.

3) இவ்வளர்ப்பில் உள்ள சிற்றினங்களுக்கிடையே போட்டி இருக்கும்.

4) கட்லா கட்லா, லேபியோ ரோஹிட்டா மற்றும் சிர்ரைனா மிர்காலா போன்றன கூட்டு மீன் வளர்ப்பு முறையில் வளர்க்கும் மீன்கள் ஆகும்.

A) 1, 2 மட்டும் தவறு

B) 2, 3 மட்டும் தவறு

C) 3, 4 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: பொருத்தமான சிற்றினங்கள் ஒன்றை ஒன்று பாதிக்காது. இவ்வளர்ப்பில் உள்ள சிற்றினங்களுக்கிடையே போட்டி இருக்காது.

118. கீழ்ககண்டவற்றுள் சரியற்றதை காண்க.

1) மீன் வளர்ப்புக்காக பிற நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மீன்கள் வெளிநாட்டு மீன்கள் எனப்படும்.

2) வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மீன்களை உள்நாட்டில் வளர்க்கும் முறைக்கு உள்நாட்டு மீன் வளர்ப்பு என்று பெயர்.

3) சிப்ரினஸ் கார்பியோ, ஓரியோகுரோமிஸ் மொசாம்பிகஸ் போன்றன இந்தியாவில் வளர்க்கப்படும் சில வெளிநாட்டு மீன் வகைகள் ஆகும்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மீன்களை உள்நாட்டில் வளர்க்கும் முறைக்கு வெளிநாட்டு மீன் வளர்ப்பு என்று பெயர்.

119. மீன்கள்___________உணவிற்கான உயர்ந்த ஆதாரமாகும்.

A) விட்டமின்கள்

B) கொழுப்பு

C) புரதம்

D) தாது உப்புக்கள்

விளக்கம்: மீன்கள் புரத உணவிற்கான உயர்ந்த ஆதாரமாகும். இது மனிதனின் உணவூட்டத் தேவைக்கான பிரதான உணவாகவும் உள்ளது.

120. கீழ்க்கண்டவற்றுள் அதிக அமினோ அமிலங்களை கொண்ட மீன் எது.

A) சார்டைன்

B) மாக்கெரல்

C) டூனா

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: மீன்கள் புரத உணவிற்கான உயர்ந்த ஆதாரமாகும். இது மனிதனின் உணவூட்டத் தேவைக்கான பிரதான உணவாகவும் உள்ளது. சார்டைன், மாக்கெரல் டூனா மற்றும் ஹெர்ரிங் போன்ற மீன் இனங்கள் அதிக அமினோ அமில செறிவைக் கொண்டுள்ளன.

121. மீனின் மணத்திற்கு காரணமானது ஹிஸ்டிடின் எனும்__________ஆகும்.

A) விட்டமின்கள்

B) அமினோ அமிலங்கள்

C) புரதம்

D) தாது உப்புக்கள்

விளக்கம்: மீன்கள் புரத உணவிற்கான உயர்ந்த ஆதாரமாகும். இது மனிதனின் உணவூட்டத் தேவைக்கான பிரதான உணவாகவும் உள்ளது. சார்டைன், மாக்கெரல் டூனா மற்றும் ஹெர்ரிங் போன்ற மீன் இனங்கள் அதிக அமினோ அமில செறிவைக் கொண்டுள்ளன. குறிப்பாக மீனுக்கு மணமளிக்கும் ஹிஸ்டிடின் என்னும் அமினோ அமிலத்தைக் கொண்டுள்ளன.

122. மீன்களில் நிறைந்துள்ள கொழுப்பு அமிலங்கள்_____________

A) ஒமேகா – 1

B) ஒமேகா – 2

C) ஒமேகா – 3

D) ஒமேகா – 4

123. கீழ்க்கண்ட கூற்றுக்களில் சரியற்றதைக் கண்டறி.

A) மீன் எண்ணெய் என்பது ஒரு மிக முக்கிய மீன் உப பொருளாகும்.

B) இது மீனின் மண்ணீரல் மற்றும் உடலில் இருந்து பெறப்படுகிறது.

C) இதில் வைட்டமின் A மற்றும் D மிகுந்துள்ளது.

D) மீன் உடல் எண்ணெயில் அயோடின் அதிகம் உள்ளதால் நாம் உட்கொள்ள இயலாது.

விளக்கம்: இது மீனின் கல்லீரல் மற்றும் உடலில் இருந்து பெறப்படுகிறது.

124. மீனின் உடலில் இருந்து எண்ணெய் எடுத்தபிறகு உள்ள கழிவுகளில் இருந்து உருவாக்கும் பொருள்____________

A) மீன் மாவு

B) மீன் கொழுப்பு

C) மீன் தூள்

D) A,C இரண்டும்

விளக்கம்: மீனின் உடலில் இருந்து எண்ணெய் எடுத்தபிறகு உள்ள கழிவுகளில் இருந்து உருவாக்கும் பொருள் மீன் மாவு ஆகும். உலர்த்தப்பட்ட இக்கழிவுகளில் இருந்து பன்றி, பறவைகள் மற்றும் கால்நடைகளுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது.

125. இசின்கிளாஸ் என்பது ஒரு உயர்தர_________ஆகும்.

A) ஜெலாடின்

B) கெலாஜன்

C) கொழுப்புகள்

D) அமினோ அமிலங்கள்

விளக்கம்: இசின்கிளாஸ் என்பது ஒரு உயர்தர கொலாஜன் ஆகும். இது கெண்டை மற்றும் கெழுத்தி போன்ற மீன்களின் உலர்ந்த, பதப்படுத்தப்பட்ட காற்றுப்பைகளில் இருந்து பெறப்படும் பொருளாகும்.

126. மீன்களில் உள்ள காற்றுப்பைகளை கொதிநீரில் கரைக்கும் போது ஒட்டும் தன்மை பெற்ற_____________உருவாகின்றது.

A) ஜெலாடின்

B) கெலாஜன்

C) கொழுப்புகள்

D) அமினோ அமிலங்கள்

விளக்கம்: இசின்கிளாஸ் என்பது ஒரு உயர்தர கொலாஜன் ஆகும். இது கெண்டை மற்றும் கெழுத்தி போன்ற மீன்களின் உலர்ந்த, பதப்படுத்தப்பட்ட காற்றுப்பைகளில் இருந்து பெறப்படும் பொருளாகும். பதப்படுத்தப்பட்ட காற்றுப்பைகளை கொதிநீரில் கரைக்கும் போது ஒட்டும் தன்மை பெற்ற ஜெலாடின் உருவாகிறது.

127. நீர் வாழ் கிரஸ்டேஷியன்களில் மிக முக்கியமானது_________ஆகும்.

A) மீன்

B) நண்டு

C) இறால்

D) தலைப்பரட்டை

விளக்கம்: நீர் வாழ் கிரஸ்டேஷியன்களில் மிக முக்கியமானது இறால் ஆகும். இது உலகம் முழுதும் வளர்க்கப்படுகிறது. இறால் மாமிசம் சுவைமிக்கது. இதில், கிளைக்கோஜன், புரதம் ஆகியன அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் உள்ளது.

128. கீழ்க்கண்டவற்றுள் இறால் சிற்றினங்களுல் அல்லாதது எது.

A) பினேயஸ் இன்டிகஸ்

B) பினேயஸ் மோனோடான்

C) மெட்டாபினேயஸ் டோப்சானி

D) சிப்ரினஸ் கார்பியோ

விளக்கம்: பினேயஸ் இன்டிகஸ், பினேயஸ் மோனோடான், மெட்டாபினேயஸ் டோப்சானி மற்றும் மேக்ரோபிராக்கியம் ரோஸன்பெர்ஜி போன்ற இறால் வகைகள் நீர்நிலைகிளில் காணப்படுகிறன்றன.

129. கீழ்க்கண்ட எந்த வகையில் இறால்கள் பிடிக்கப்படுகின்றன.

A) ஆழம் குறைந்த நீர் பகுதி

B) கழிமுக அல்லது உப்பங்கழிகள்

C) நன்னீர் இறால் பிடிப்பு

D) மேற்கண்ட அனைத்தும்

130. கீழ்க்கண்ட கூற்றுகளில் பொருந்தாததைத் தேர்ந்தெடு.

A) முத்து என்பது சிப்பியின் ஒட்டினுள் உள்ள மிகுந்த பளபளப்புடன் கூடிய உறுதியான கோளவடிவப் பொருள் ஆகும்.

B) முத்துச்சிப்பிகள் நகரும் தன்மையற்றதாகும்.

C) பிங்டேடா பேரினத்தைச் சேர்ந்த சிப்பிகள் உயர்தர முத்துக்களை உருவாக்குகின்றன.

D) முத்துச் சிப்பிகள் கன்னியாகுமரியின் கடற்பகுதி மற்றும் கட்ச் வளைகுடா பகுதிகளில் காணப்படுகின்றன.

விளக்கம்: முத்துச்சிப்பிகள் நகரும் தன்மையுடைதாகும்.

131. நம் நாட்டில் முதன் முதலில் முத்து வளர்ப்பு மேற்கொள்ளப்பட்ட இடம்_____________

A) கன்னியாகுமரி

B) திருவள்ளுர்

C) தூத்துக்குடி

D) நாகப்பட்டினம்

132. நம் நாட்டில் முத்ன் முதலில் முத்து வளர்ப்பு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு_____________

A) 1970

B) 1971

C) 1972

D) 1973

133. செயற்கை முத்து வளர்ப்புக்கு பயன்படும் நன்னீர் மட்டி____________

A) லெமல்லிடென்ஸ்

B) பினேயஸ் மோனோடான்

C) மெட்டாபினேயஸ் டோப்சானி

D) சிப்ரினஸ் கார்பியோ

134. கூற்று (i): முத்துச் சிப்பிகள் பெரும்பாலும் பாறை மடிப்புகள், இறந்த பவளப்பாறைகள் ஆகயவற்றில் வளர்ந்து பரந்த முத்து வங்கிகளாகின்றன.

கூற்று (ii): இவற்றால் உருவாக்கப்படும் உயர் மதிப்பு முத்துக்களுக்கு லிங்கா முத்துக்கள் என்று பெயர்.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

135. பொருத்துக: ( முத்தின் பகுதிப்பொருட்கள் )

A) நீர் – 1. ( 0.8 % )

B) கால்சியம் கார்பனேட் – 2. ( 3.5 – 5.9 % )

C) கரிமப்பொருட்கள் – 3. ( 90 %)

D) கசடுகள் – 4. ( 2 – 4 % )

A) 1 3 2 4

B) 4 3 2 1

C) 2 1 4 3

D) 3 1 2 4

விளக்கம்:

A) நீர் – 1. ( 2 – 4 % )

B) கால்சியம் கார்பனேட் – 2. ( 90 %)

C) கரிமப்பொருட்கள் – 3. ( 3.5 – 5.9 % )

D) கசடுகள் – 4. ( 0.8 % )

136. கீழ்க்கண்டவற்றுள் முத்தின் தரம் பற்றிய கூற்றுகளில் சரியானதைக் கண்டறி.

A) முத்துக்கள் பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் கிடைக்கின்றன.

B) வெண்மை, இளமஞ்சள், வெளிர் சிவப்பு, இளம் சிவப்பு ஆகிய நிறங்களில் உள்ளது.

C) வானவில் நிறத்தையுடைய கோள வடிவ முத்து அரிதாகக் காணப்படுகிறது.

D) கடலில் இருந்து கிடைக்கும் உயர்தர முத்து லிங்கா முத்து ஆகும்.

A) 1, 2, 3 மட்டும் சரி

B) 2, 3, 4 மட்டும் சரி

C) 1, 3, 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

137. கலப்பின உருவாக்கத்தின் முக்கிய நோக்கங்களில் பொருந்தாததைக் கண்டறி.

A) வளர்ச்சி வீதத்தை மேம்படுத்துதல்.

B) பால், உற்பத்தி முட்டை போன்றவற்றின் உற்பத்தியை உயர்த்துதல்.

C) விலங்கு உற்பத்தி பொருட்களில் தரத்தை குறைத்தல்.

D) நோய்களுக்கு எதிரான தடுப்பாற்றலை மேம்படுத்துதல். மற்றும் இனப்பெருக்க வீதத்தைக் குறைத்தல்.

A) 1, 2 மட்டும் தவறு

B) 3, 4 மட்டும் தவறு

C) 1, 4 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: விலங்கு உற்பத்தி பொருட்களில் தரத்தை உயர்த்துதல். நோய்களுக்கு எதிரான தடுப்பாற்றலை மேம்படுத்துதல். மற்றும் இனப்பெருக்க வீதத்தைக் உயர்த்துதல்.

138. கூற்று (i): 4 முதல் 6 தலைமுறைகளுக்கு ஒரே இனத்தின் விலங்குகளுக்கிடையே இனக்கலப்பு செய்வது உள்இனக்கலப்பு எனப்படும்.

கூற்று (ii): ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த சந்ததி தொடர்பில்லாத விலங்குகளுக்கிடையே இனக்கலப்பு செய்வது வெளி இனக்கலப்பு ஆகும்.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

139. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

1) வெளிக்கலப்பு – பொது மூதாதையர்களற்ற, தொடர்பில்லாத ஒரே இனத்தின் வெவ்வேறு விலங்குகளுக்கிடையே கலப்பு செய்வது வெளிக்கலப்பு ஆகும். இதனால் வெளிப்படும் உயிரிகளுக்கு வெளிக்கலப்பு உயிரிகள் என்று பெயர்.

2) குறுக்குக் கலப்பு – இது உயர்தர பண்புகளை உடைய ஒரு இனத்தின் ஆண் விலங்கு மற்றும் உயர்தர பண்புகளை உடைய மற்றொரு இனத்தின் பெண் விலங்கு, இவற்றின் இடையே செய்யப்படும் கலப்பு ஆகும்.

3) சிற்றினங்களுக்கிடையே கலப்பினம் செய்தல் – இம்முறையில் ஒரே சிற்றினங்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் விலங்குகளுக்கு இடையே கலப்பு செய்யப்படுகின்றது.

A) 1, 2 மட்டும் சரி

B) 2, 3 மட்டும் சரி

C) 1, 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: சிற்றினங்களுக்கிடையே கலப்பினம் செய்தல் – இம்முறையில் இருவேறு சிற்றினங்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் விலங்குகளுக்கு இடையே கலப்பு செய்யப்படுகின்றது.

140. கூற்று (i): செயற்கை விந்தூட்டம் என்பது ஆண் உயிரியில் இருந்து சேகரிக்கப்பட்ட விந்துநீர்மம் தேர்வு செய்யப்பட்ட பெண் உயிரியின் இனப்பெருக்கப் பாதையினுள் செலுத்தப்படுகிறது.

கூற்று (ii): இம்முறையில் சில பசுக்கள் மட்டுமே உயர்ந்த பட்ச பயன்பாட்டிற்கு போதுமானது எனவே இது தாராளமான முறையாகும்.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: இம்முறையில் சில காளைகள் மட்டுமே உயர்ந்த பட்ச பயன்பாட்டிற்கு போதுமானது எனவே இது சிக்கனமான முறையாகும்.

141. கூற்று (i): விந்து நீர்மம் செயற்கை விந்தூட்டத்திற்காக நீண்ட தூரம் எடுத்துச் செல்லவும் நீண்ட காலம் சேமித்து வைக்கவும் உறைந்த நிலைக்கு எடுத்துச்செல்லப்படுகின்றது.

கூற்று (ii): இதனை மெதுவாக அறையின் வெப்பநிலைக்கு கொண்டுவருதலுக்கு உறைதல் என்று பெயர்.

A) கூற்று i தவறு,ii சரி

B) கூற்று i சரி,ii தவறு

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: இதனை மெதுவாக அறையின் வெப்பநிலைக்கு கொண்டுவருதலுக்கு உருகுதல் என்று பெயர்.

142. செயற்கை விந்தூட்டத்தினால் ஏற்படும் நன்மைகளுல் தவறானதைக் கண்டறி.

A) இது கருவுறுதல் வீதத்தை குறைக்கிறது.

B) இதனால் இனப்பெருக்க நோய்கள் தவிர்க்கப்படுகின்றன.

C) விரும்பத்தக்க பண்புகள் கொண்ட காளைகள் காயம்பட்டு இருந்தாலும் அவற்றிடமிருந்து விந்து நீர்மம் சேகரிக்கலாம்.

D) உயர்பண்புகள் கொண்ட விலங்குகள் தொலைவில் இருந்தாலும் அவற்றின் விந்து நீர்மத்தைக் கொண்டு கருவுறச் செய்யலாம்.

விளக்கம்: இது கருவுறுதல் வீதத்தை உயர்த்துகின்றது.

143. உலக கின்னஸ் பதிவுகளின் படி மிகச்சிறிய பசுவினம்___________ஆகும்.

A) காங்கேயம்

B) மால்வி

C) வெச்சூர்

D) ஹோல்ஸ்டீன்

விளக்கம்: வெச்சூர் இனம் உலக கின்னஸ் பதிவுகளின் படி மிகச்சிறிய புசுவினம் ஆகும். சராசரி நீளம் 124 செ.மீ. சராசரி உயரம் 87 செ.மீ.

தோற்றம்: வெச்சூர் கிராமம், கோட்டயம் மாவட்டம், கேரள மாநிலம் இவை உண்ணும் உணவை விட அதிக அளவு பால் தருவன.

144. வெச்சூர் கிராமம் கீழ்க்கண்ட எந்த மாநிலத்தை சார்ந்தது_____________

A) கேரளா

B) குஜராத்

C) பஞ்சாப்

D) தமிழ்நாடு

145. உலக அளவில் அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் நாடு____________

A) சீனா

B) கியூபா

C) பாட்னா

D) இந்தியா

விளக்கம்: உலக அளவில் அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியாவாகும். இந்தியாவில் பல பிரபலமான பசு மற்றும் எருமை இனங்கள் உள்ளன.

146. ஓங்கோல் இனக் காளைகள் கீழ்க்கண்ட எந்த மாநிலத்தைச் சேர்ந்தது.

A) கேரளா

B) குஜராத்

C) பஞ்சாப்

D) ஹரியானா

147. பால் பொருட்களின் பயன்கள் பற்றியக் கூற்றுகளுல் பொருந்தாதது எது.

A) பாலில் உள்ள நொதிகளானது பாலைக் காய்ச்சி தூய்மைப்படுத்தும் போது அழிக்கப்படுகிறது.

B) பாலில் வைட்டமின் A,B1,B2 ஆகியன அதிக அளவுகளில் உள்ளன.

C) வைட்டமின் C மிக அதிகமாக உள்ளது

D) இதன் மிகைவூட்ட மதிப்பால் இது குழந்தைகளின் முழுமையான உணவாகக் கருதப்படுகிறது.

விளக்கம்: வைட்டமின் C குறைவாக உள்ளது.

148. இறைச்சியில் அதிகமாக உள்ள ஊட்டச்சத்துப் பொருள்_________

A) தாது உப்புகள்

B) வைட்டமின்கள்

C) கொழுப்பு

D) புரதம்

விளக்கம்: இறைச்சியில் புரதம் அதிகம் உள்ளது. மேலும், இதில் இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும் உள்ளன. மனித உணவிற்குத் தேவையான வைட்டமின்களும் இதில் உள்ளன.

149. கோழிகள், வாத்துகள் மற்றும் கினி கோழிகள் போன்றவற்றை வளர்த்தல் மற்றும் பெருக்குதலைக் குறிக்கும் Poultry எனும் சொல்லானது கீழ்க்கண்ட எம்மொழிச்சொல்.

A) இலத்தீன்

B) கிரேக்கம்

C) ஆங்கிலம்

D) ஸ்பானிஷ்

150. பயன்பாட்டினைப் பொறுத்து கோழியினங்கள் கீழ்க்கண்ட எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

A) மூன்று

B) நான்கு

C) ஐந்து

D) ஆறு

விளக்கம்: நூற்றுக்கும் மேற்பட்ட கோழிஇனங்கள் உள்ளன. அவற்றின் பயன்பாட்டினைப் பொறுத்து கோழிகளை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். அவை, முட்டையிடுபவை, கறிக்கோழி அல்லது இறைச்சி வகை, இரு பயன்பாட்டு வகை, விளையாட்டு வகை மற்றும் அலங்கார வகை.

151. லெக்ஹார்ன் கோழியினம் ஒரு___________இனமாகும்.

A) அமெரிக்கா

B) இத்தாலி

C) இந்தியா

D) சைனா

விளக்கம்: இத்தாலியிருந்து தோன்றிய கோழியினம் லெஹார்ன் ஆகும். இது இந்தியாவில் வணிக ரீதியில் புகழ்பெற்ற இனமாகும். அளவில் சிறியதாகவும், அடக்கமான உருவத்துடன் ஒற்றைக் கொண்டை மற்றும் கீழ்த்தாடையில் தசைத்தொங்கலுடனும் காணப்படும்.

152. மேற்கு வங்கத்தில் முதன்மையாகக் காணப்படும் கோழி இனம்___________

A) பிராய்லர்

B) சிட்டகாங்

C) லெக்ஹார்ன்

D) முட்டைக் கோழி

விளக்கம்: மேற்கு வங்கத்தில் முதன்மையாகக் காணப்படும் ஒரு இனம். இவை பொன்னிற அல்லது வெளிர் மஞ்சள் நிறத்துடன் உள்ளன. அலகு நீண்டும் மஞ்சள் நிறத்துடன் உள்ளது. காது மடல்களும் கீழ்த்தாடை தசைத்தொங்கலும் சிவப்பு நிறத்துடன் சிறியதாகக் காணப்படும்.

153. வெள்ளை பிளிமத் ராக் ரக கோழியினம் ஒரு_________இனமாகும்.

A) அமெரிக்கா

B) இத்தாலி

C) இந்தியா

D) சைனா

விளக்கம்: இவை உடல் முழுவதும் வெண்ணிற இறகுகளைக் கொண்டவை. இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு அமெரிக்க இன வகை. இது வேகமாக வளரக்கூடியது. பண்ணை வளர்ப்பிற்கு ஏற்றது.

154. கோழிகள் அடைகாத்தலுக்கான கால அளவு_____________

A) 11 – 21 நாட்கள்

B) 21 – 22 நாட்கள்

C) 15 – 20 நாட்கள்

D) 10 – 20 நாட்கள்

விளக்கம்: புதிதாக இடபட்ட முட்டைகளிலிருந்து குஞ்சு பொரித்து வெளிவரும் வரை அவற்றை உகந்த சூழ்நிலையில் வைத்து பாராமரித்தல் அடைகாத்தல் எனப்படும். முழு வளர்ச்சியடைந்த கோழிக்குஞ்சானது அடைகாத்தல் காலமான 21 – 22 நாட்கள் கழித்து முட்டையிலிருந்து வெளிவருகின்றன.

155. கூற்று (i): இயற்கை அடைகாத்தல் முறையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முட்டைகளை பெண் கோழி அடை காக்கிறது.

கூற்று (ii): செயற்கை அடைகாத்தலில் இன்குபேட்டர் என்னும் கருவியின் மூலம் அதிக எண்ணிக்கையிலான முட்டைகளை அடை காக்கலாம்.

A) கூற்று i தவறு,ii சரி

B) கூற்று i சரி,ii தவறு

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

156. கீழ்க்கண்டவற்றுள் பறவைகளைத் தாக்கும் நோய்களுல் பொருந்தாததைக் காண்க.

A) ராணிகெட்

B) காக்சிடையோசிஸ்

C) கோழி அம்மை

D) வெள்ளை அழுகல்

157. பறவை வளர்ப்பின் பயன்களுல் பொருந்தாதது எது.

A) பறவை வளர்ப்பகம் உருவாக்கவும் மேலாண்மை செய்யவும் அதிக மூலதனம் தேவையில்லை.

B) அதிகளவிலான இடப்பரப்பு தேவை.

C) குறைந்த காலத்தில் அதிகளவு லாபம் தரக்கூடியது.

D) புதிய ஊட்ட சத்து மிக்க பொருட்களை தருகின்றன. இதற்கு உலக அளவிலான தேவை அதிகம் உள்ளது.

விளக்கம்: அதிகளவிலான இடப்பரப்பு தேவையில்லை.

158. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியற்றதைக் காண்க.

A) வாத்து நீரில் வாழக்கூடிய பறவையாகும்.

B) இது நம்நாட்டு பறவைகளில் 60 வளர்ப்பின் உயிர்தொகையைப் பெற்றுள்ளது.

C) 20 வகைப்பட்ட வாத்து இனங்கள் இவ்வளர்ப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

D) இந்தியன் ரன்னர் மற்றும் சைலட்மெட்டா போன்றவை நாட்டு இனங்களைச் சார்ந்தவை ஆகும்.

விளக்கம்: இது நம்நாட்டு பறவைகளில் 6 வளர்ப்பின் உயிர்தொகையைப் பெற்றுள்ளது.

159. கீழ்க்கண்டவற்றுள் வாத்தின் தனிப் பண்புகளுல் தவறானதைக் காண்க.

A) உடல் முழுமையும் நீர் ஒட்டும் தன்மையுள்ள இறகுளால் மூடப்பட்டுள்ளது.

B) தோலின் கீழுள்ள ஓரடுக்கு கொழுப்புபடலம் இறகுகளை ஈரத்தன்மை அடையாமல் பாதுகாக்கிறது.

C) இவை காலையிலோ அல்லது இரவிலோ முட்டையிடுபவை.

D) இவை அரிசித் தவிடு, சமையலறை கழிவுகள், மீன் மற்றும் நத்தைகளை உட்கொள்ளக் கூடியவை.

விளக்கம்: உடல் முழுமையும் நீர் ஒட்டாதன்மையுள்ள இறகுளால் மூடப்பட்டுள்ளது.

160. நீர் உயிரி வளர்ப்பியலும் நீர்தாவர வளர்ப்பியலும் சேர்ந்த தொழில் நுட்பத்திற்கு____________என்று பெயர்.

A) ஹைட்ரோ போனிக்ஸ்

B) அக்குவா போனிக்ஸ்

C) அக்குவா டைனிக்ஸ்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: அக்குவா போனிக்ஸ் (நீர் உயிரி – பயிர் வளர்ப்பு) என்பது நீர் உயிரி வளர்ப்பியலும் நீர்தாவர வளர்ப்பியலும் சேர்ந்த தொழில் நுட்பமாகும். இது மீன்களின் கழிவுபொருட்களை மறுசுழற்சி செய்து சூழ்நிலை மண்டலத்தைச் சமநிலைப்படுத்தவும். நீரோட்டத்தின் நச்சுத்தன்மையை குறைக்கவும் பயன்படுகிறது.

161. மண்புழுக்கள் புவியின் குடல் ஆகும் என்று கூறியவர்­­­­­­­­­­­­­­­___________

A) எட்வர்ட ஜென்னர்

B) சார்லஸ் டார்வின்

C) அரிஸ்டாடில்

D) கரோலஸ் லின்னேயஸ்

162. தான் உருவாக்கும் நன்மைகளைப் பற்றி அறியாத இந்த எளிய உயிரி, மனித இனத்திற்கும் விவசாயத்திற்கும் செய்யும் அளப்பறிய பணிகளை. இந்த கடினமான செயலை அவைகள் இல்லை எனில் முன்றிலும் முடியாது என்பதை நாம் அறிவோம் என்று கூறியவர்

A) எட்வர்ட ஜென்னர்

B) சார்லஸ் டார்வின்

C) அரிஸ்டாடில்

D) கரோலஸ் லின்னேயஸ்

163. கீழ் வருவனவற்றுள் மண்புழு உர உற்பத்தியில் தொடர்பற்றது எது?

1) மண் வளத்தைப் பாதுகாத்தல்

2) கனிமப் பொருட்களை சிதைத்தல்

3) துளைகள், காற்றோட்டம் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைத்தல் தன்மை போன்றவற்றை அளிக்கின்றது.

4) உயிரியல் சிதைவுக்குட்படாத கரிமங்களை சிதைக்கின்றது.

A) 1 மற்றும் 2 சரி

B) 3 மற்றும் 4 சரி

C) 2 மற்றும் 3 தவறு

D) 1 மற்றும் 3 தவறு

164. கீழ் வருவனவற்றுள் எது உள்நாட்டு இன மண்புழு அல்ல.

A) பெரியோனிக்ஸ்

B) லேம்பிட்டோ

C) யூட்ரிலஸ்

D) ஆக்டோ கீடோனா

165. கீழ்வருவனவற்றைப் பொருத்துக:

1) பாம்பிக்ஸ் மோரி A) சாம்பா i) முகா

2) ஆந்ரேயா அஸ்ஸமென்சிஸ் B) மல்பெரி ii) எரி

3) ஆந்ரேயா மைலிட்டா C) அர்ஜீன் iii) டஸ்ஸார்

4) அட்டாகஸ் ரிசினி D) ஆமணக்கு iv) மல்பெரி

சரியான ஒன்றை தேர்ந்தெடு

A) 1 – B – iv

B) 2 – A – i

C) 3 – C – iii

D) 4 – D – ii

166. எரிபட்டு__________லிருந்து பெறப்படுகின்றது.

A) லேஸ்ஸிஃபெர் லேக்கா

B) நொசிமா பாம்பிசிஸ்

C) அட்டாகஸ் ரிசினி

D) அட்டாகஸ் மைலிட்டா

167. கூற்று : கலவிப்பறப்பு ஒரு இராணித்தேனியுடன் பல ஆண்தேனீக்கள் பறந்து செல்லும் ஒரு சிறப்பான பறத்தல் நிகழ்வு ஆகும்.

காரணம்: இராணித்தேனீ ஃபெரோமோன் எனும் ஹார்மோன் வேதிப்பொருளை உற்பத்தி செய்கின்றது. அவ்விடத்தில் உள்ள ஆண் தேனீக்கள் ஃபெரோமோனால் கவரப்பட்டு புணர்ச்சி நடைபெறுகின்றது.

A) கூற்றும் காரணமும் சரி, ஆனால் ஒன்றுடன் ஒன்று சரியாக தொடர்புபடுத்தப்பட வில்லை.

B) கூற்றும் காரணமும் தவறு, ஆனால், சரியாக தொடர்பு படுத்தபட்டுள்ளன.

C) கூற்றும் காரணமும் சரி மற்றும் சரியாக தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.

D) கூற்றும் காரணமும் தவறு மற்றும் சரியாக தொடர்பு படுத்தப்படவில்லை.

168. தேனீ வளர்ப்பு இவ்வாறு அழைக்கப்படுகின்றது.

A) செரிகல்சர்

B) லேக் கல்சர்

C) வெர்மிகல்சர்

D) ஏபிகல்சர்

169. அரக்குப் பூச்சியைப் பற்றிய கூற்றுகளில் எது தவறு?

A) நுண்ணிய, ஒட்டும் தன்மையுள்ள, ஊர்ந்து செல்லும் செதில்களுடைய பூச்சி

B) தன்னுடைய உறிஞ்சுகுழலை தாவரத்திசுவினுள் நுழைத்து சாற்றை உறிஞ்சி வளர்கின்றன.

C) அரக்கை தன் உடலின் பின் பகுதியில் இருந்து சுரக்கின்றது.

D) ஆண் அரக்குப் பூச்சி அதிக அளவில் அரக்கு உற்பத்திக்குக் காரணமாகிறது.

170. அக்குவாபோனிக்ஸ் என்ற தொழில் நுட்பமானது_____________

A) மீன்வளர்ப்பு மற்றும் நீர் உயிரி வளர்ப்பு இணைந்ததாகும்.

B) நீர் உயிரி வளர்ப்பு மற்றும் மண்ணில்லா தாவர வளர்ப்பும் இணைந்தது ஆகும்.

C) மண்புழு வளர்ப்பும் நீர் உயிரி வளர்ப்பும் இணைந்தது.

D) இறால் வளர்ப்பு மற்றும் நீர் உயிரி வளர்ப்பும் இணைந்ததாகும்.

171. இறால் சார்ந்துள்ள வகை.

A) கிரஸ்டேஷியா

B) அன்னலிடா

C) சீலன்டிரேட்டா

D) எக்கினோடெர்மேட்டா

172. உள்நாட்டு மீன்வளர்ப்பு என்பது

A) ஆழ்கடலில் மீன்பிடித்தல்

B) நன்னீரில் மீன்வளர்ப்பு மற்றும் மீன்பிடித்தல்

C) கடற்கரை ஓர மீன்பிடித்தல்

D) மீனிலிருந்து மீன் எண்ணெய் பிரித்தெடுத்தல்

173. தூண்டப்பட்ட இனப்பெருக்க தொழில் நுட்பம் இதில் பயன்படுகிறது.

A) கடல் மீன் வளர்ப்பு

B) மீன்பிடித்தலில்

C) மீன் வளர்ப்பில்

D) உள்நாட்டு மீன்வளர்ப்பில்

174. இஸின்கிளாஸ் எதில் பயன்படுத்தப்படுகிறது.

A) ஒயின் தயாரித்தல்

B) ஒயினை சுத்திகரிக்க

C) ஒயினைப் பதப்படுத்தல்

D) ஒயினை வடிகட்டிப்பிரித்தல்

175. சரியாக பொருத்தப்பட்டுள்ள இணையை தேர்வு செய்.

A) முட்டையிடுபவை – பிரம்மா

B) கறிக்கோழி வகை – லெக்ஹார்ன்

C) இருவகை – வெள்ளை பிளிமத் ராக்

D) அலங்கார வகை – சில்க்கி

176. கூற்று: மிகச் சிறந்த முத்து “லிங்கா முத்து” எனப்படும். இது கடற்சிப்பியிலிருந்து கிடைக்கிறது.

காரணம்: மேண்டிலின் எபிதிலிய அடுக்கிலிருந்து தொடர்ந்து சுரக்கும் நேக்ரி உள்நுழையம் அயல் பொருளை சுற்றி படிகிறது.

A) கூற்று சரியானது, காரணம் தவறு

B) கூற்றும் காரணமும் தவறானது.

C) கூற்று தவறானது ஆனால், காரணம் சரியாக உள்ளது.

D) கூற்றும், காரணமும் சரியானது

177. கூற்று (i): மண்புழு உழவர்களின் சிறந்த நண்பன் மண்புழுக்கள் ஒரு ஆண்டில் ஒரு குவிண்டால் அளவு மண்ணை மேலும் கீழும் இடமாற்றம் செய்கின்றது.

கூற்று (ii): இது 100 லிட்டர் புதை படிவ எரிபொருளுக்குச் சமம்.

A) கூற்று i தவறு,ii சரி

B) கூற்று i சரி,ii தவறு

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: மண்புழு உழவர்களின் சிறந்த நண்பன் மண்புழுக்கள் ஒரு ஆண்டில் ஒரு மெட்ரிக் டன் அளவு மண்ணை மேலும் கீழும் இடமாற்றம் செய்கின்றது.

11th Science Lesson 3 Questions in Tamil

3] அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள்

1. ஒரு நபரின் உடல் நலத்தைப் பரிசோதிக்க பயன்படுத்தப்படும் பாரம்பரிய மருத்துவக் கருவிகளுல் அல்லாதது எது?

A) வெப்பநிலைமானி

B) ஸ்டெத்தஸ்கோப்

C) அனிமோமீட்டர்

D) ஸ்பிக்மோமானோமீட்டர்

விளக்கம்: ஒரு நபரின் உடல் நலத்தைப் பரிசோதிக்க வெப்பிநிலைமானி, ஸ்டெத்தஸ்கோப், ஸ்பிக்மோமானோமீட்டர் போன்ற சில எளிய கருவிகளை மருத்துவர்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வருகின்றார்கள். கடந்த சில ஆண்டுகளாக மருத்துவத் தொழில் நுட்பமானது நன்கு வளர்ச்சிடைந்து மருத்துவத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

2. கீழ்க்கண்டவற்றுள் நவீன மருத்துவக்கருவிகளுல் அல்லாதது எது.

A) ஸ்டெத்தஸ்கோப்

B) எலக்ட்ரோ என்செஃபாலோகிராம்

C) அல்ட்ராசவுண்ட் ஸ்கேனர்கள்

D) சி.டி. ஸ்கேனர்கள்

விளக்கம்: ஆட்டோ அனலைசர், எலக்ட்ரோ கார்டியோகிராம், எலக்ட்ரோ என்செஃபாலோகிராம், அல்ட்ராசவுண்ட் ஸ்கேனர்கள், சி.டி. ஸ்கேனர்கள் போன்ற பல்வேறுவகை, நோயறியும் மற்றும் சிகிச்சையளிக்கும் நவீன மருத்துவமனைகள் அதிகரித்துள்ளன.

3. கூற்று (i): மருத்துவ சிகிச்சையில், நோயறிதல் மற்றும் சிகிச்சையளித்தல் என இரு முக்கியக் கூறுகள் உள்ளன.

கூற்று (ii): நோயை அடையாளம் கண்டு நோயின் தன்மையைத் தீர்மானிக்கும் முறை ‘நோயறிதல்’ எனப்படும். பின்பு அந்நோய் காரணியை அகற்றிக் குணமடைய வைக்கும் செயல்பாடுகள் சிகிச்சை எனப்படும்.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

4. இரத்தம் தொடர்பான நோய்களைக் கண்டறிதல், முன்கணித்தல், சிகிச்சையளித்தல் மற்றும் தடுப்பு முறைகள் தொடர்பான மருத்துவத்துறையின் ஒரு பிரிவு______________

A) ஹெமட்டாலஜி

B) டாக்ஸிகோலஜி

C) ஹாராலஜி

D) பெமட்டோலஜி

விளக்கம்: ஹெமட்டாலஜி(Haemotology) – இரத்தம் தொடர்பான நோய்களைக் கண்டறிதல், முன்கணித்தல், சிகிச்சையளித்தல் மற்றும் தடுப்பு முறைகள் தொடர்பான மருத்துவத்துறையின் ஒரு பிரிவு ஆகும்.

5. உயிரினங்கள் மேல் வேதிப்பொருட்கள் ஏற்படுத்தும் அபாயகரமான பாதிப்புகளையும், அதைக்கண்டறியும் முறைகளையும், நச்சுப் பொருட்களிலிருந்தும் ஏற்படும் தாக்கங்களுக்கு சிகிச்சையளிக்கும் முறைகளையும் கொண்ட அறிவியல் பிரிவு_________________

A) ஹெமட்டாலஜி

B) டாக்ஸிகோலஜி

C) ஹாராலஜி

D) பெமட்டோலஜி

விளக்கம்: நச்சு இயல் (Toxicology) – உயிரினங்கள் மேல் வேதிப்பொருட்கள் ஏற்படுத்தும் அபாயகரமான பாதிப்புகளையும், அதைக்கண்டறியும் முறைகளையும், நச்சுப் பொருட்களிலிருந்தும் ஏற்படும் தாக்கங்களுக்கு சிகிச்சையளிக்கும் முறைகளையும் கொண்ட அறிவியல் பிரிவு ஆகும்.

6. இரத்தச் செல்களை எண்ணுவதற்கு பயன்படுத்தப்படும் அளவுக்கருவி__________________

A) பாதோம் மீட்டர்

B) ஓடோ மீட்டர்

C) ஸ்பீடோமீட்டர்

D) ஹீமோசைட்டோமீட்டர்

7. கீழ்க்கண்டவற்றுள் ஸ்டெத்தஸ்கோப் பற்றியக் கூற்றுகளுல் தவறானதைத் தேர்ந்தெடு

A) மனித உடலுக்குள் கேட்கும் ஒலிகளான, இதயத்துடிப்பு, உட்சுவாசம் மற்றும் வெளிச்சுவாசத்தின் போது நுரையீரலில் ஏற்படும் ஒலி, இரைப்பை, குடல் அலைவு ஒலிகள் மற்றும் கருப்பையினுள் கருவின் அசைவினால் ஏற்படும் ஒலி போன்றவற்றைக் கேட்டு உணர ஸ்டெத்தஸ்கோப் பயன்படுகிறது.

B) தற்போது உள்ள நவீன மின்னனு ஸ்டெத்தஸ்கோப் மூலம் இரைச்சலான சூழ்நிலையிலும் அதிக ஆடைகள் உடுத்தியிருக்கும் நிலையிலும் கூடத் தெளிவான, துல்லியமான உடல் உள் ஒலிகளைத் கேட்க இயலும்.

C) ஸ்டெத்தஸ்கோப் ஒரு வட்டு போன்ற அதிர்வு உணர்வுப் பகுதி உள்ளது. இதனுடன் ஒரு இரும்பு குழாய் இணைக்கப்பட்டுள்ளது. இக்குழாயை இரு காதிலும் பொருத்திக் கொள்ள ஏதுவாக இரு குமிழிகள் இணைக்கப்பட்டுள்ளன.

D) இதில் உள்ள தட்டுப்போன்ற பகுதியை மார்பின் மீது வைத்து குமிழிகளைக் காதில் வைத்துக் கேட்கும் போது உள்ளுறுப்புகளின் ஒலி தெளிவாகக் கேட்கிறது.

விளக்கம்: ஸ்டெத்தஸ்கோப் ஒரு வட்டு போன்ற அதிர்வு உணர்வுப் பகுதி உள்ளது. இதனுடன் ஒரு இரப்பர் குழாய் இணைக்கப்பட்டுள்ளது. இக்குழாயை இரு காதிலும் பொருத்திக் கொள்ள ஏதுவாக இரு குமிழிகள் இணைக்கப்பட்டுள்ளன.

8. நம் உடலில் உள்ள பிரச்சனைகளை இனம் காணவும், நோயைக் கண்டறியவும் பயன்படும் ஒரு எளிய, பயனுள்ள கருவி_____________

A) ஸ்டெத்தஸ்கோப்

B) எலக்ட்ரோ கார்டியோகிராம்

C) அல்ட்ராசவுண்ட் ஸ்கேனர்கள்

D) சி.டி. ஸ்கேனர்கள்

விளக்கம்: உடலினுள் உள்ள பிரச்சனைகளை இனம் காணவும், நோயைக் கண்டறியவும் பயன்படும் ஒரு எளிய, பயனுள்ள கருவியாக ஸ்டெத்தஸ்கோப் விளங்குகிறது.

9. ஸ்டெத்தஸ்கோப்பின் மருத்துவ முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களில் தவறானதைக் கண்டறி.

A) இதயத்தில் ஏற்படும் சாதாரண மற்றும் அசாதாரண ஒலிகளையும் இதய வால்வுகள் செயல்படும் விதத்தையும் கண்டறியப் பயன்படுகிறது.

B) நுரையீரல் நோய்களான சளிக்காய்ச்சல், நுரையீரல் வீக்கம், மூச்சுக்குழல் வீக்கம், நுரையீரல் உறை வீக்கம் போன்றவற்றைக் கண்டறியலாம்.

C) இரத்த அழுத்தமானியோடு இணைந்து இரத்த ஓட்டத்தைக் கண்டறிய உதவுகிறது.

D) இதய, சுவாச மற்றும் குடல் தொடர்பான குறைபாடுகளின் நிலைமையைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.

விளக்கம்: இரத்த அழுத்தமானியோடு இணைந்து இரத்த அழுத்தத்தைக் கண்டறிய உதவுகிறது.

10. கீழ்க்கண்டவற்றில் இரத்த அழுத்தத்தை அளக்க பயன்படும் கருவி______________

A) ஸ்பிக்மோமானோமீட்டர்

B) இரத்த அழுத்த அளவீட்டுக்கருவி

C) இரத்த அழுத்தக் கண்காணிப்புக்கருவி

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: ஸ்பிக்மோமானோமீட்டர் இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் கருவியாகும். எனவே, இது இரத்த அழுத்தமானி அல்லது இரத்த அழுத்தக் கண்காணிப்புக்கருவி அல்லது இரத்த அழுத்த அளவீட்டுக்கருவி என அழைக்கப்படுகிறது. இதில் உள்ள இரப்பர் பட்டையானது மேற்கையில் சுற்றப்படும். இக்கைப்பட்டையோடு இணைந்த இரப்பர் குழாயின் மறுமுனை பாதரச அளவு கோலுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இரத்த அழுத்தத்தை நேரடியாக ஒரே சீராக பகுக்கப்பட்ட அளவுகோல் வழியாக அளவிட முடிகிறது.

11. கீழ்க்கண்ட கூற்றுக்களில் சரியானதைக் கண்டறி. (ஸ்பிக்மோமானோமீட்டர்)

1) ஸ்பிக்மோமானோமீட்டர் இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் கருவியாகும். இதில் உள்ள இரப்பர் பட்டையானது மேற்கையில் சுற்றப்படும். இக்கைப்பட்டையோடு இணைந்த இரப்பர் குழாயின் மறுமுனை வெபர் அளவு கோலுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இரத்த அழுத்தத்தை நேரடியாக ஒரே சீராக பகுக்கப்பட்ட அளவுகோல் வழியாக அளவிட முடிகிறது.

2) மேற்கையில் முழங்கை மடிப்பிற்கு 3செ.மீ மேல் அமையும்படி ஸ்பிக்மோமானோமீட்டரின் இரப்பர் கைப்பட்டையை மென்மையாகச் சுற்றி காற்றை ஏற்றி இரத்த அழுத்தத்தை கணக்கிடலாம்.

3) கைத்தமனியில் இரத்தம் பாயும் ஒலியை முழங்கை மடிப்பில் ஸ்டெத்தஸ்கோப்பின் அதிர்வு உணர்வு வட்டுப் பகுதி வைத்துக் கண்டறியலாம்.

A) 1 மட்டும் சரி

B) 2, 3 மட்டும் சரி

C) 1, 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: ஸ்பிக்மோமானோமீட்டர் இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் கருவியாகும். இதில் உள்ள இரப்பர் பட்டையானது மேற்கையில் சுற்றப்படும். இக்கைப்பட்டையோடு இணைந்த இரப்பர் குழாயின் மறுமுனை பாதரச அளவு கோலுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இரத்த அழுத்தத்தை நேரடியாக ஒரே சீராக பகுக்கப்பட்ட அளவுகோல் வழியாக அளவிட முடிகிறது.

12. ஸ்பிக்மோமானோமீட்டரின் அளவுகோளில் பயன்படுத்தப்படுவது____________

A) ஆல்கஹால்

B) பாதரசம்

C) தாமிரம்

D) துத்தநாகம்

13. கூற்று (i): வென்ட்ரிக்கிள் சுருக்கத்தின் போது ஏற்படும் அதிகப்படியான தமனி அழுத்தம் ‘டயஸ்டோலிக்’ அழுத்தம்’ எனப்படுகிறது.

கூற்று (ii): வென்ட்ரிக்கிள் தளர்வடையும்போது காணப்படும் அழுத்தம் ‘சிஸ்டோலிக்’ அழுத்தம் எனப்படுகிறது.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: வென்ட்ரிக்கிள் சுருக்கத்தின் போது ஏற்படும் அதிகப்படியான தமனி அழுத்தம் ‘சிஸ்டோலிக்’ அழுத்தம்’ எனவும் வென்ட்ரிக்கிள் தளர்வடையும்போது காணப்படும் அழுத்தம் ‘டயஸ்டோலிக்’ அழுத்தம் எனவும் அழைக்கப்படும்.

14. கீழ்க்கண்டவற்றில் சரியான இணையற்றதைக் காண்க.

A) இயல்பான இரத்த அழுத்த அளவு =120/80மி.மீ பாதரசம்

B) சிஸ்டோலிக் அழுத்தம் =120மி.மீ பாதரசம்

C) டயஸ்டோலிக் அழுத்தம் =100மி.மீ பாதரசம்

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

A) இயல்பான இரத்த அழுத்த அளவு =120/80மி.மீ பாதரசம்

B) சிஸ்டோலிக் அழுத்தம் =120மி.மீ பாதரசம்

C) டயஸ்டோலிக் அழுத்தம் =80மி.மீ பாதரசம்

15. கீழ்க்கண்டவற்றுள் ஸ்பிக்மோமானோமீட்டரின் வகைகளுல் அல்லாதது எது.

A) கைமுறை இரத்த அழுத்தமானி

B) பாதரச இரத்த அழுத்தமானி

C) வெப்ப இரத்த அழுத்தமானி

D) அனிராய்டு இரத்த அழுத்தமானி

16. வெள்ளை மேல் சட்டை இரத்த அழுத்த விளைவு என்பது கீழ்க்கண்ட எந்த சூழலில் ஏற்படுகிறது.

A) வெள்ளை சட்டை அணிந்திருக்கும் பிற நோயாளியைப் பார்க்கும்போது

B) வெள்ளை சட்டை அணிந்த மருத்துவர்களைப் பார்க்கும்போது

C) வெள்ளை சட்டை அணிந்த செவிலியர்களை பார்க்கும்போது

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: சில நோயாளிகள், வெள்ளைமேல் சட்டை அணிந்த மருத்துவர்களைக் காணும்போது பயந்து, அதனால் இரத்த அழுத்தம் அதிகரித்துக் காணப்படுவார்கள். எனவே, இது “வெள்ளை மேல் சட்டை விளைவு” எனப்படுகிறது. இவர்களது இரத்த அழுத்தமானது மருத்துவமனைச் சூழலில் அதிகரித்தும் மற்ற சூழலில் இயல்பாகவும் காணப்படும்.

17. எவ்வித பயிற்சியும் இன்றி பயன்படுத்தப்படும் இரத்த அழுத்தமானி_____________

A) கைமுறை இரத்த அழுத்தமானி

B) பாதரச இரத்த அழுத்தமானி

C) இலக்கமுறை இரத்த அழுத்தமானி

D) அனிராய்டு இரத்த அழுத்தமானி

விளக்கம்: இலக்கமுறை இரத்த அழுத்தமானி இதில் சிஸ்டோலிக் மற்றும் டயஸ்டோலிக் அழுத்தமானது அலைவு கணக்கீட்டு கருவியின் மூலம் அளக்கப்படுகிறது. எவ்விதப் பயிற்சியும் இன்றி இக்கருவியைக் கையாளலாம்.

18. ஸ்பிக்மோமானோமீட்டரின் மருத்துவ முக்கியத்துவம் பற்றிய கருத்துகளில் சரியானதைக் கண்டறி.

A) மிகையழுத்தம், குறையழுத்தம் போன்ற அபாயகரமான இரத்த அழுத்த நிலைகளைக் கண்டறிய உதவுகிறது.

B) இரத்த ஓட்ட நிலைமையை மதிப்பிட உதவுகிறது.

C) இதயச் செயல்பாடு பற்றிய விளக்கத்தை அளிக்கிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

19. இரத்த குளுக்கோஸ் அளவைத் தோராயமாக அளவிட பயன்படும் கருவி_________

A) ஸ்பிக்மோமானோமீட்டர்

B) குளுக்கோமீட்டர்

C) எலக்ட்ரோ கார்டியோகிராம்

D) எலக்ட்ரோ என்செஃபலோகிராம்

விளக்கம்: இரத்த குளுக்கோஸ் அளவைத் தோராயமாக அளவிட மற்றும் எங்கும் எடுத்துக் செல்லக்கூடிய எளிய, கையடக்கமான மருத்துவக்கருவி குளுக்கோமீட்டர் ஆகும்.

20. குளுக்கோமீட்டர் பற்றிய கருத்துக்களில் தவறானதைக் கண்டறி.

A) இது ஒரு சிறிய மின் கலத்தின் உதவியுடன் இயங்கும் இலக்க முறை கருவி ஆகும்.

B) விரலிலிருந்து ஒரு மி.லி இரத்தம் எடுக்கப்பட்டு ஒரு சோதனைப் பட்டையில் வைக்கப்படுகிறது. இப்பட்டை குளுக்கோமீட்டரில் சொருகப்படுகிறது.

C) குளுக்கோமீட்டரானது இரத்த குளுக்கோஸ் அளவைக் கணக்கிட்டு இலக்கங்களாக மி.கி/ டெ.லி அலகுடன் திசையில் காண்பிக்கிறது.

D) பெரும்பாலான குளுக்கோமீட்டர்கள் மின்வேதி வினைத் தொழில் நுட்பத்திலோ அல்லது நிறப்பிரதிபலிப்புக் கொள்கையின் அடிப்படையிலோ செயலாற்றுகின்றன.

விளக்கம்: விரலிலிருந்து ஒரு துளி இரத்தம் எடுக்கப்பட்டு ஒரு சோதனைப் பட்டையில் வைக்கப்படுகிறது. இப்பட்டை குளுக்கோமீட்டரில் சொருகப்படுகிறது.

21. கீழ்க்கண்டவற்றுள் குளுக்கோமீட்டரின் முக்கியத்துவங்களில் பொருந்தாதது எது.

A) கையடக்கமானது, எளிதில் தூக்கிச் செல்லக் கூடியது.

B) நாற்பது வினாடிகளுக்குள் முடிவு தெரியும் வகையில் இயங்குகின்றன.

C) கணக்கீடு தேவையில்லை.

D) கருவியைப் பயன்படுத்த பயிற்சி அவசியம்.

விளக்கம்: கருவியைப் பயன்படுத்த பயிற்சி தேவையில்லை.

22. பொருத்துக: (இரத்த சர்க்கரை அளவுகள்)

A) இயல்பான அளவு – 1. (110 – 140மி.கி/டெ.லி)

B) தொடர்பின்றி (எப்போதாவது) – 2. (70 – 110மி.கி/டெ.லி)

C) உணவுண்ணா நிலை – 3. (80 – 120மி.கி/டெ.லி)

D) உணவுண்ட பின்(2 மணி நேரம் கழித்து) – 4. (70 – 100மி.கி/டெ.லி)

A) 1 2 3 4

B) 1 2 4 3

C) 4 3 2 1

D) 4 3 1 2

விளக்கம்:

A) இயல்பான அளவு – 1. (70 – 100மி.கி/டெ.லி)

B) தொடர்பின்றி (எப்போதாவது) – 2. (80 – 120மி.கி/டெ.லி)

C) உணவுண்ணா நிலை – 3. (70 – 110மி.கி/டெ.லி)

D) உணவுண்ட பின்(2 மணி நேரம் கழித்து) – 4. (110 – 140மி.கி/டெ.லி)

23. உயிர் வேதிப்பொருட்களான, குளுக்கோஸ், யூரியா, கொலஸ்ட்டிரால், நொதிகள் மற்றும் உடல் திரவத்தினுள் காணப்படும் இதர வகை புரதங்களை அளவிட பயன்படும் கருவி____________

A) குளுக்கோமீட்டர்

B) ஆட்டோ அனலைசர்

C) ஸ்பிக்மோமானோமீட்டர்

D) எலக்ட்ரான் என்செஃபலோகிராம்

விளக்கம்: ஆட்டோ அனலைசர் என்பது கணினி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு கருவி ஆகும். பல்வேறு வகை உயிர்-வேதிப் பொருட்களான, குளுக்கோஸ், யூரியா, கொலஸ்ட்டிரால், நொதிகள் மற்றும் உடல் திரவத்தினுள் காணப்படும் இதர வகை புரதங்கள் ஆகியவற்றை உடனடியாக அளவிட இக்கருவி பயன்படுகிறது.

24. கூற்று (i): உயிரி – வேதிப்பொருட்களான புரதங்களை அளவிட குளுக்கோமீட்டர் பயன்படுகிறது.

கூற்று (ii): இக்கருவியைக் கொண்டு குறிப்பிட்ட மாதிரியிலிருந்து பலவிதச் சோதனைகளைச் செய்யும் திறன்மிக்க அதிநவீன தானியங்கி பகுப்பாய்விகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: உயிரி – வேதிப்பொருட்களான புரதங்களை அளவிட ஆட்டோ அனலைசர் பயன்படுகிறது.

25. மூளையின் மின்னோட்டச் செயல்பாடுகளை மதிப்பீடு உதவும் கருவி____________

A) ஆட்டோ அனலைசர்

B) குளுக்கோமீட்டர்

C) எலக்ட்ரோ கார்டியோகிராம்

D) எலக்ட்ரோ என்செஃபாலோசிராம்

விளக்கம்: மூளையில் மின்னோட்டச் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் ஒரு கருவி இ.இ.ஜி ஆகும். மூளை செல்கள் ஒவ்வொன்றும் மின் தூண்டல்கள் மூலம் தங்களுக்குள் தொடர்பு கொள்கின்றன. இக்கருவி மூளையின் மின்னோட்ட அலைப்பதிவுகளைத் தடம் கண்டு பதிவு செய்யும் பணியைச் செய்கிறது. மூளையின் புறணி மற்றும் கீழ்ப்புறணி பகுதிகளில் ஏற்படும் மின்னோட்டச் செயல்பாடுகளைப் பொருத்தி இப்பதிவுகள் பெறப்படுகின்றன.

26. கீழ்க்கண்டவற்றுள் இ.இ.ஜி யின் செயல்பாடுகளுல் தவறானதைக் கண்டறி,

A) மூளையில் மின்னோட்டச் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் ஒரு கருவி இ.இ.ஜி ஆகும்.

B) இக்கருவி மூளையின் மின்னோட்ட அலைப்பதிவுகளைத் தடம் கண்டு பதிவு செய்யும் பணியைச் செய்கிறது.

C) மூளையின் தலாமஸ் மற்றும் ஹைபோதலாமஸ் பகுதிகளில் ஏற்படும் மின்னோட்டச் செயல்பாடுகளைப் பொருத்தி இப்பதிவுகள் பெறப்படுகின்றன.

D) மின்வாய்கள், மூளையிலிருந்து உருவாகும் மின் தூண்டல்களைப் பெற்றுக் கணினிக்கு அனுப்பி முடிவுகள் பதிவு செய்யப்படுகின்றன.

விளக்கம்: மூளையின் புறணி மற்றும் கீழ்ப்புறணி பகுதிகளில் ஏற்படும் மின்னோட்டச் செயல்பாடுகளைப் பொருத்தி இப்பதிவுகள் பெறப்படுகின்றன.

27. 1929-ல் முதன் முதலில் இ.இ.ஜி யை பகுத்தாய்ந்தவர்____________

A) ஹேன்ஸ் பெர்ஜர்

B) ஹேன்ஸ் வில்லியம்

C) ஹேன்ஸ் மேஜர்

D) ஹேன்ஸ் டார்க்னர்

விளக்கம்: 1929-.ல் ஜெர்மானிய அறிவியலாளரான ஹேன்ஸ் பெர்ஜர் என்பவர் முதன் முதலில் இ.இ.ஜி யை பகுத்தாய்ந்தவர் ஆவார். எனவே இ.இ.ஜி யில் காணப்படும் அலைவடிவப் பதிவுகள் பெர்ஜர் அலைகள் என அழைக்கப்படுகின்றன. இந்த அலைகள் ஒத்திசைவானதாகவோ அல்லது ஒத்திசைவு அற்றதாகவோ இருக்கலாம்.

28. எலக்ட்ரோ என்செஃபாலோகிராமில் காணப்படும் அதிர்வெண் அலைகளுல் பொருந்தாதது எது.

A) ஆல்ஃபா

B) பீட்டா

C) டெல்டா

D) ஈட்டா

விளக்கம்: 1929-ல் ஜெர்மானிய அறிவியலாளரான ஹேன்ஸ் பெர்ஜர் என்பவர் முதன் முதலில் இ.இ.ஜி யை பகுத்தாய்ந்தவர் ஆவார். எனவே இ.இ.ஜி யில் காணப்படும் அலைவடிவப் பதிவுகள் பெர்ஜர் அலைகள் என அழைக்கப்படுகின்றன. இந்த அலைகள் ஒத்திசைவானதாகவோ அல்லது ஒத்திசைவு அற்றதாகவோ இருக்கலாம். இதில் நான்கு வகை அதிர்வெண் அலைகள் / இசைவுகள் (ஆல்ஃபா, பீட்டா, டெல்டா மற்றும் தீட்டா) காணப்படுகின்றன.

29. இ.இ.ஜி யின் மருத்துவ முக்கியத்துவங்களில் பொருந்தாதது எது.

A) மூளையின் செயல்பாடுகளையும் அது மற்ற உறுப்புகளோடு கொண்டுள்ள ஒருங்கிணைப்பையும் அறிந்து கொள்ள இ.இ.ஜி பயன்படுகிறது.

B) நரம்பியல் மற்றும் உறக்கம் தொடர்பான குறைபாடுகளைக் கண்டறிய உதவுகிறது.

C) அபாயகரமான தலைக்காயங்கள், மூளைக்கட்டிகள், மூளை நோய்த்தொற்றுகள் போன்றவற்றை அறிய உதவும் பயனுள்ள கருவியாக விளங்குகிறது.

D) கால் கை வலிப்பு, நரம்பு மண்டலச் சிதைவு நோய் போன்றவற்றைக் கண்டறிய உதவுகிறது. மேலும் நோயாளிகள் மூளைச்சாவு அடைந்துள்ளதை மதிப்பீடு செய்யும் கருவியாகப் பயன்படுகிறது.

A) 1, 2, 3 மட்டும் சரி

B) 2, 3, 4 மட்டும் சரி

C) 1, 2, 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

30. ஒரு நோயாளியின் உடல் உள்ளமைப்புகளைக் கண்டறிய உதவுவது_____________

A) X– கதிர்

B) ரேடியொ அலைகள்

C) சி.டி.ஸ்கேனர்

D) இ.இ.ஜி

விளக்கம்: எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பதிவானது ஒரு நோயாளியின் உடல் உள்ளமைப்புகளைக் கண்டறிய உதவுகிறது. எக்ஸ்-கதிர் குழாயிலிருந்து உருவாக்கப்படும் ஒருவகையான மின்காந்தக் கதிர்வீச்சு ஆகும்.

31. கீழ்க்கண்டவற்றுள் X– கதிரின் செயல்பாடுகள் பற்றியக் கருத்துக்களில் பொருத்தமற்றதைக் கண்டறி.

1) நோயாளியின் உடல் வழியாக எக்ஸ் – கதிர் செலுத்தப்பட்டுப் பின்புறமாக, நிழற்படத்தகட்டின் மூலமாகவோ அல்லது இலக்கமுறை பிடிப்பான் வாயிலாகவோ பெறப்படுகிறது.

2) ஒவ்வொரு திசுவும் வேறுபட்ட அளவுகளில் எக்ஸ் – கதிர்களை உறிஞ்சுகின்றன. அடர்த்தியான எலும்புகள் அதிக அளவு எக்ஸ் – கதிர்களை ஊடுருவ விடுகின்றன. அதே நேரம் மென்மையான திசுக்கள் அதிகப்படியான கதிர்வீச்சை உறிஞ்சுகின்றன.

3) இந்தப் பரப்பு வேறுபடுத்தலினால் இரு பரிமாண பிம்பமானது தோற்றுவிக்கப்படுகிறது. மேலும் X– கதிர் ஊடுறுவும் தன்மையற்றது.

4) இவ்வகை கருவி தற்போது எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வடிவத்தில் கிடைக்கிறது.

A) 1, 2 மட்டும் தவறு

B) 2, 3 மட்டும் தவறு

C) 3, 4 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: ஒவ்வொரு திசுவும் வேறுபட்ட அளவுகளில் எக்ஸ் – கதிர்களை உறிஞ்சுகின்றன. அடர்த்தியான எலும்புகள் அதிகப்படியான கதிர்வீச்சை உறிஞ்சுகின்றன. அதே நேரம் மென்மையான திசுக்கள் அதிக அளவு எக்ஸ் – கதிர்களை ஊடுருவ விடுகின்றன. இந்தப் பரப்பு வேறுபடுத்தலினால் இரு பரிமாண பிம்பமானது தோற்றுவிக்கப்படுகிறது. மேலும் X– கதிர் ஊடுறுவும் தன்மையுடையது.

32. சரி வில்ஹெம் கொனார்டு ரான்ட்ஜென் என்பவரால் X– கதிர் கண்டறியப்பட்ட ஆண்டு_____________

A) 1890

B) 1892

C) 1895

D) 1896

விளக்கம்: 1895-ல் ஜெரிமானிய இயற்பியலாளரான சர் வில்ஹெம் கொனார்டு குரூக்கரின் குழாய் வழியே அதிக மின்னழுத்தத்தை வெளியேறச் செய்யும் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தபோது. X– கதிர்களைக் கண்டறிந்து பெயரிட்டார். அவர் ஆய்வு செய்த அதே அரையில் பல அடிதூரம் தள்ளி இருந்த பேரியம் பிளாட்டினோசயனைடு திரையானது ஒளிர்வதைக் கண்டார்.

33. இதய, நுரையீரல் நோய்களையும் எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் முறிவுகளையும் கண்டறிய உதவுவது_____________

A) ரேடியோ அலைகள்

B) X– கதிர்

C) சி.டி. ஸ்கேனர்

D) எம்.ஆர்.ஐ ஸ்கேனர்

விளக்கம்: இதய, நுரையீரல் நோய்களையும் எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் முறிவுகளையும் நிழலுரு வாயிலாகக் கண்டறிய உதவுகிறது.

34. மார்பகத்திசுக்களில் சிறப்பு எக்ஸ்-கதிர் கொண்டு ஆய்வு செய்து அத்திசுக்களின் நிழலுருக்களை தோற்றுவித்தலுக்கு__________என்று பெயர்

A) ஃபுளுரோஸ்கோப்பி

B) மம்மோகிராஃபி

C) ரேடியோகிராஃபி

D) மேற்கொண்ட எதுமில்லை

விளக்கம்: மார்பகத்திசுக்களில் சிறப்பு எக்ஸ்-கதிர் கொண்டு ஆய்வு செய்து அத்திசுக்களின் நிழலுருக்களை தோற்றுவித்தல் மம்மோகிராஃபி என்று பெயர்

35. திசுக்களின் நேரடி நிழலுருக்களை___________மூலம் கண்டறியலாம்.

A) ஃபுளுரோஸ்கோப்பி

B) மம்மோகிராஃபி

C) ரேடியோகிராஃபி

D) மேற்கண்ட எதுமில்லை

36. கீழ்க்கண்டவற்றுள் X– கதிரின் மருத்துவ முக்கியத்துவத்துள் சரியானதைக் கண்டறி.

1) பேரியம், அயோடின் போன்ற வேதிப்பொருள்கள் அடங்கிய கூட்டுப் பொருளை உள்ளீடற்ற உறுப்புகள் மற்றும் இரத்தக் குழல்களில் நிரப்பி அவற்றின் நிழலுறுக்களையும் X– கதிர்கள் மூலம் தோற்றுவிக்கப் பயன்படுகிறது.

2) பல்லின் X– கதிர் வரைபடம் வாயில் தோன்றும் பிரச்சனைகளுக்கு காரணமான நோய்களைக் கண்டறிய உதவுகிறது.

3) கதிர்வீச்சு சிகிச்சை மூலமாக புற்றுநோய்க் கட்டிகளின் மீது X– கதிர் கதிர்களைச் செலுத்தி புற்றுக்கட்டிகளை சுருங்கச் செய்யலாம்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

37. கூற்று (i): மனிதச் செவிகளால் கேட்க இயலும் அளவுகளைக் கொண்ட ஒலி மீயொலி எனப்படுகிறது.

கூற்று (ii): மீயொலி அலைகள் பீஸோ-மின்னோட்ட விளைவு என்னும் இயற்பிய நிகழ்வு மூலம் உருவாக்கப்படுகிறது.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: மனிதச் செவிகளால் கேட்க இயலாத அளவுகளைக் கொண்ட ஒலி மீயொலி எனப்படுகிறது.

38. கருவில் வளரும் குழந்தையின் பல்வேறு வளர்ச்சி நிலைகளை கண்டறிய பயன்படுவது_______________

A) குற்றொலி

B) மீயொலி

C) ரேடியோ அலைகள்

D) மேற்கண்ட அனைத்தும்

39. மீயொலின் மருத்துவ முக்கியத்துவம் பற்றியக் கருத்துக்களுல் சரியானதைக் கண்டறி.

1) வளரும் கருவின் இதய ஒலி இரத்தம் பாய்தல் போன்றவற்றைக் கேட்க இக்கருவி உதவுகிறது.

2) இதய எதிரொலி வரைபடத் தயாரிப்பின் மூலம் இதய பாதிப்புகளை அறிய முடியும்.

3) கட்டிகள், பித்தப்பை கற்கள், சிறுநீரகக் கற்கள். இனப்பெருக்க நாளங்களில் உள்ள தடைகள் போன்றவற்றை அறியப் பயன்படுகிறது,

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

40. கீழ்க்கண்ட இணைகளில் சரியற்ற இணையைத் தேர்ந்தெடு.

A) டோமாஸ் – 1. எழுதுதல்

B) கிராஃபி – 2. துண்டங்கள்

C) டோமாகிராஃபி – 3. மருத்துவ நிழலுறு தொழில்நுட்பம்

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 1, 2 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: கம்ப்யூட்டட் டோமோகிராஃபி என்பது கம்ப்யூட்டட் ஆக்சியல் டோமோகிராஃபி என்றும் அறியப்படும். கிரேக்க வார்த்தையான டோமாஸ் என்பதற்கு துண்டங்கள் என்றும் கிராஃபி என்பதற்கு எழுதுதல் என்றும் பொருள். இது மருத்துவ நிழலுறு தொழில்நுட்பம் ஆகும். இதில் இலக்க முறை வடிவச் செயலாக்கம் மூலம் உள்ளுறுப்புகளின் முப்பரிமாணத்தோற்றம் உருவாக்கப்படுகிறது.

41. கம்ப்யூட்டட் டோமோகிராஃபியின் மருத்துவ முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களுல் சரியானதைக் கண்டறிய.

1) எலும்புகள், மென்மையான திசுக்கள் மற்றும் இரத்தக் குழல்கள் ஆகியவற்றின் தெளிவான நிழலுருக்களைத் தருகிறது.

2) உட்காதில் ஏற்படும் காயங்களையும், உட்குழிகளையும் அறிய உதவுகிறது.

3) புற்றுநோய், இதய மற்றும் நுரையீரல் குறைபாடுகளைக் கண்டறியப் பயன்படுகிறது.

4) எலும்புகளின் தனிம அடர்த்திகளை அளவிட உதவுகிறது.

A) 1, 2 மட்டும் சரி

B) 1, 3 மட்டும் சரி

C) 1, 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

42. முதுகு முள்ளெலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் எலும்பில் ஏற்படும் காயங்கள் ஆகியவற்றைக் கண்டறிய பயன்படுவது____________

A) ஆட்டோ அனலைசர்

B) குளுக்கோமீட்டர்

C) எலக்ட்ரோ கார்டியோகிராம்

D) சி.டி. ஸ்கேனர்

43. பக்கவாதத்தை ஏற்படுத்தும் இரத்தக் குழாய் அடைப்புகள் மற்றும் இரத்தக் கசிவுகள் மூளையில் உள்ளதா எனக் கண்டறியப் பயன்படுவது______________

A) ஆட்டோ அனலைசர்

B) சி.டி. ஸ்கேனர்

C) குளுக்கோமீட்டர்

D) எலக்ட்ரோ கார்டியோகிராம்

44. PET ஸ்கேனிங் முறைப் பற்றிய கருத்துகளில் சரியானதைக் கண்டறி.

1) PET எனும் ஸ்கேனிங் முறையானது CT யைப் போன்றே கணினி மூலம் நிழலுறு ஏற்படுத்தும் தொழில்நுட்பம் ஆகும். CT யைப் போலல்லாமல் பாஸிட்ரான் வெளிவிடும் டோமோகிராஃபியானது, கதிரியக்கக் குறியீடு செய்யப்பட்ட தடங்காண் மூலக்கூறுகளிலிருந்து வெளியேறும் பாஸிட்ரான் அளவை அடிப்படையாகக் கொண்டு கண்டறியும் அணுக்கரு மருத்துவச் செய்முறையாகும்.

2) உடலினுள் நடைபெறும் உயிரியல் வினைகளை அளவிட, உடலுக்குள் தடங்காண் மூலக்கூறுகள் செலுத்தப்பட்டு முழு உடல் நிழலுறுக்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.

3) இதன் மூலம் எந்தெந்த இடங்களில் அந்தத் தடங்காண் மூலக்கூறுகள் சேகரமாகியுள்ளன எனக் கண்டறியலாம்.

4) PET ஸ்கேனிங் மூலம் கிடைக்கும் இந்தப் பிம்பங்களைக் கொண்டு உடலின் எந்தெந்தப் பாகங்களில் எந்த அளவிற்கு வளர்சிதை மாற்றங்கள் மற்றும் உடற்செயல் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன என்பதைப் பற்றிய தகவல்களை அறியலாம்.

A) 1, 2, 3 மட்டும் சரி

B) 1, 3, 4 மட்டும் சரி

C) 1, 2, 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

45. கூற்று (i): PET கருவியானது சைக்ளோட்ரானிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பாஸிட்ரான் வெளிவிடும் கதிர்வீச்சு ஐசோடோப்களைப் பயன்படுத்துகிறது.

கூற்று (ii): இன்றைய காலகட்டத்தில் 15f – ஃப்ளுரோ டி ஆக்ஸி குளுக்கோஸ் எனும் கதிர்வீச்சு தடங்காண் மூலக்கூறு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கதிரியக்கம் செய்யப்பட்ட குளுக்கோஸ் மூலக்கூறு ஆகும்.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: இன்றைய காலகட்டத்தில் 18f – ஃப்ளுரோ டி ஆக்ஸி குளுக்கோஸ் எனும் கதிர்வீச்சு தடங்காண் மூலக்கூறு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கதிரியக்கம் செய்யப்பட்ட குளுக்கோஸ் மூலக்கூறு ஆகும்.

46. பெருமூளை பகுதிகளின் இரத்த அளவு, இரத்தம் பாய்தல், குளுக்கோஸ் மற்றும் ஆக்ஸிஜனின் வளர்சிதை மாற்ற வீதங்களைக் கணக்கிட உதவும் முறை______________

A) CT ஸ்கேனிங்

B) PET ஸ்கேனிங்

C) MRIஸ்கேனிங்

D) மீயொலி ஸ்கேன்

விளக்கம்: PET நிழலுரு தொழில் நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்தி பெருமூளை பகுதிகளின் இரத்த அளவு, இரத்தம் பாய்தல், குளுக்கோஸ் மற்றும் ஆக்ஸிஜன் வளர்சிதை மாற்ற வீத்ங்களைக் கணக்கிடலாம்.

47. உடலினுள் உள்ள திசுக்களின் நிலை அறிய பயன்படுத்தப்படும் பரிசோதனை முறை_______________

A) CT ஸ்கேனிங்

B) MRIஸ்கேனிங்

C) மீயொலி ஸ்கேன்

D) PET ஸ்கேனிங்

விளக்கம்: உடலினுள் உள்ள திசுக்களின் நிலை அறிய, உடலை ஊடுருவாத மருத்துவ பரிசோதனையான காந்த ஒத்திசைவு நிழலுருவாக்கம் மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

48. பாதிப்படைந்த திசுக்களைப் பாதிப்படையாத திசுக்களிலிருந்து தெளிவாக வேறுபடுத்தி அறிய உதவும் மிகச்சிறந்த பரிசோதனை முறை______________

A) CT ஸ்கேனிங்

B) PET ஸ்கேனிங்

C) MRI ஸ்கேனிங்

D) மீயொலி ஸ்கேன்

விளக்கம்: X –கதிர், CT ஸ்கேன், மீயொலி ஸ்கேன் போன்ற நிழலுரு உருவாக்க முறைகளை விட MRIஸ்கேன் முறையானது பாதிப்படைந்த திசுக்களைப் பாதிப்படையாத திசுக்களிலிருந்து தெளிவாக வேறுபடுத்தி அறிய உதவுகிறது.

49. மார்பு, இனப்பெருக்க உறுப்புகள் போன்ற பகுதிகளை ஆய்வு செய்யப் பயன்படும் மருத்துவ முறை______________

A) CT ஸ்கேனிங்

B) PET ஸ்கேனிங்

C) MRIஸ்கேனிங்

D) மீயொலி ஸ்கேன்

விளக்கம்: மார்பு, வயிறு, இடுப்புப்பகுதி, சிறுநீர்ப்பை, இனப்பெருக்க உறுப்புகள், இரத்தக் குழல்கள் மற்றும் நிணநீர் முடிச்சுகள் போன்ற பகுதிகளை ஆய்வு செய்யப் பயன்படுகிறது.

50. கல்லீரல் தொடர்பான நோய்கள், இரைப்பை மற்றும் பரம்பரை வகை இதய நோய்களைக் கண்டறிய பயன்படும் மருத்துவ முறை____________

A) CT ஸ்கேனிங்

B) MRIஸ்கேனிங்

C) மீயொலி ஸ்கேன்

D) PET ஸ்கேனிங்

விளக்கம்: கல்லீரல், தொடர்பான நோய்கள், இரைப்பை வீக்க நோய், இதய நோய்கள் குறிப்பாகப் பரம்பரை வகை இதய நோய்கள் போன்றவற்றைக் கண்டறியலாம்.

51. கருவுற்ற பெண்ணின் கருப்பையில் வளரும், குழந்தையின் வளர்நிலையைக் கண்டறியப் பயன்படும் பரிசோதனை முறை________________

A) CT ஸ்கேனிங்

B) PET ஸ்கேனிங்

C) MRIஸ்கேனிங்

D) மீயொலி ஸ்கேன்

52. MRIஸ்கேனிங் செயல்பாடுகளில் சரியானதைக் கண்டறி.

1) மார்பு, வயிற்றுப்பகுதி மற்றும் இடுப்புப்பகுதி கட்டிகளைக் கண்டறியப்பயன்படுகிறது.

2) இரத்தக்குழாய் குறைபாடுகள், இரத்தக்குழாய் வீக்கங்கள் போன்றவற்றைக் கண்டறியப் பயன்படுகிறது.

3) காயங்கள், முழங்கை, முழங்கால் மணிக்கட்டு போன்ற பகுதிகளில் ஏற்படும் தசை நாண் கிழிசல்கள் ஆகியவற்றைக் கண்டறியப் பயன்படுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

53. மெல்லிய திசுக்களையும் இரத்தக் குழல்களையும் ஆய்வு செய்ய பயன்படுத்துப்படும் மருத்துவ முறை__________________

A) CT ஸ்கேனிங்

B) MRIஸ்கேனிங்

C) PET ஸ்கேனிங்

D) மீயொலி ஸ்கேன்

விளக்கம்:மெல்லிய திசுக்களையும், இரத்தக் குழல்களையும் ஆய்வு செய்ய, காந்த ஒத்ததிர்வு நிழலுருவாக்கம் பயன்படுத்தப்படுகிறது.

54. மின்வாய்கள் வழியாக மின்தூண்டல்களைச் செலுத்தி இதயத்தசைகளைச் சுருங்கச்செய்து இதயத்துடிப்பை ஒழுங்குபடுத்தும் ஒரு மருத்துவக்கருவி_______________

A) கார்டியோகிராம்

B) பேஸ்மேக்கர்

C) என்செஃபலோகிராம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: மின்வாய்கள் வழியாக மின்தூண்டல்களைச் செலுத்தி இதயத்தசைகளைச் சுருங்கச்செய்து இதயத்துடிப்பை ஒழுங்குபடுத்தும் ஒரு மருத்துவக்கருவி பேஸ்மேக்கர் ஆகும்.

55. சிக் சைனஸ் சின்ட்ரோம் என்பது_____________

A) சைனு ஏட்ரியல் கணுவானது சரியாகச் செயல்படாத நிலை

B) சைனு ஆரிக்கில் கணுவானது சரியாகச் செயல்படாத நிலை

C) சைனு வென்ட்ரிக்குளார் கணுவானது சரியாகச் செயல்டாத நிலை

D) சைனு ஏட்ரியல் கணுவானது சரியாகச் செயல்படும் நிலை

56. மனிதனில் இதய துடிப்பு மிகவும் குறைந்து காணப்படும் நிலைமைக்கு____________என்று பெயர்

A) பிராடி கார்டியா

B) டேக்கிகார்டியா

C) A,B இரண்டும் சரி

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: பொதுவாக நாம் ஓய்வில் இருக்கும்போது இதயத்துடிப்பு குறைவாகக் காணப்படுகிறது. இது நல்ல உடல் நலத்தைக் குறிக்கிறது. ஆனால் இதயத்துடிப்பு மிகவும் குறைந்து காணப்பட்டால் அந்த நிலைமைக்கு ‘பிராடிகார்டியா’ என்று பெயர். சாதாரணமாக இதயமானது நிமிடத்திற்கு 60 முதல் 100 முறை துடிக்கிறது.

57. மனிதனில் இதயத்துடிப்பு மிக அதிகமாக நிமிடத்திற்கு 100 க்கும் மேல் காணப்பட்டால் அதன் பெயர்________________

A) பிராடி கார்டியா

B) டேக்கிகார்டியா

C) A,B இரண்டும் சரி

D) மேற்கண்ட எதுவுமில்லை

58. குறைந்த ஆற்றல் கொண்ட மின்துடிப்புகளை உருவாக்கி இதயத்துடிப்பை இயல்பான வீதத்தில் வைக்க உதவுவது.

A) பேஸ்மேக்கர்

B) செயற்கை பேஸ்மேக்கர்

C) டேக்கிகார்டியம்

D) பிராடிகார்டியம்

விளக்கம்: செயற்கை பேஸ்மேக்கர் கருவியானது குறைந்த ஆற்றல் கொண்ட மின்துடிப்புகளை உருவாக்கி இதயத்துடிப்பை வீதத்தில் வைக்கிறது. இதயதுடிப்பு உற்பத்தி அமைப்பு நோயாளியின் உடலில் காரை எலும்பின் அடியில் பொருத்தப்படுகிறது.

59. செயற்கை பேஸ்மேக்கர் இதயதுடிப்பு உற்பத்தி செய்யும் அமைப்பு நோயாளியின் உடலில்___________இன் அடியில் பொருத்தப்படுகிறது.

A) விலா எலும்பு

B) காரை எலும்பு

C) உதரவிதானம்

D) மார்பெலும்பு

விளக்கம்: இதயதுடிப்பு உற்பத்தி அமைப்பு நோயாளியின் உடலில், காரை எலும்பின் அடியில் பொருத்தப்படுகிறது. இதன் ஆயுட்காலம் முடிந்துவிட்டால் மீண்டும் திரும்பவும் புதிய வெப்பநிலை, சுவாசம், மற்ற சில காரணிகள் ஆகியவற்றைக் கண்காணிக்கவும் இதயத்துடிப்பு வீதத்தைச் சரிசெய்யவும் பயன்படுகின்றன.

60. இரத்த செல்களை எண்ணுவதற்கு பயன்படும் முறை____________

A) ஹீமோசைட்டோமீட்டர்

B) ஸ்பிக்மோமானோமீட்டர்

C) ஓடோமீட்டர்

D) மேற்கண்ட அனைத்தும்

61. இரத்த சிவப்பணுக்கள் சிதைவடையாமல் இருக்க காரணமான திரவம்____________

A) டர்க்ஸ் திரவம்

B) பெரியாஸ்டியம் திரவம்

C) ஹேயம்ஸ் திரவம்

D) புளுரல் திரவம்

விளக்கம்: சில குறிப்பிட்ட திரவங்களைச் சேர்ந்து இரத்தச் செல்களானது உடையாமல் பாதுகாக்கப்படுதிறது. ‘ஹேயம்ஸ் திரவம்’ எனப்படும் RBC க்களை நீர்க்கச் செய்யும் திரவம் இரத்தத்துடன் சம அடர்வோடு காணப்படுவதால் இரத்தச் சிவப்பணு சிதைவு ஏற்படுவதில்லை.

62. கீழ்க்கண்டவற்றுள் இரத்த வெள்ளையணுக்களை எண்ணுவதற்கு உதவுவது_______________

A) ஹேயம்ஸ் திரவம்

B) டர்க்ஸ் திரவம்

C) பெரியாஸ்டியம் திரவம்

D) பெரிகார்டியல் திரவம்

விளக்கம்: WBC நீர்க்கச் செய்யும் திரவமான ‘டர்க்ஸ் திரவம்’ வெள்ளைஅணுக்களை எண்ணுவதற்கு உதவுகிறது. இதில் கிளேசியஸ் அசிட்டிக் அமிலமும் ஜென்ஷியன் வயலட் திரவமும் கலந்துள்ளது. கிலேசியல் அசிட்டிக் அமிலமானது சிவப்பணுக்களை மட்டும் சிதைவடையச் செய்கிறது.

63. பொருத்துக:

A) இயோசினோஃபில் – 1. (20 – 30 %)

B) பேசோஃபில் – 2. (1 – 4 %)

C) மோனோசைட் – 3. (0.1 %)

D) லிம்போசைட் – 4. (0.5 – 3 %)

A) 4 3 2 1

B) 1 2 3 4

C) 2 3 4 1

D) 2 3 1 3

விளக்கம்:

A) இயோசினோஃபில் – 1. (0.5 – 3 %)

B) பேசோஃபில் – 2. (0.1 %)

C) மோனோசைட் – 3. (1 – 4 %)

D) லிம்போசைட் – 4. (20 – 30 %)

64. இரத்த வெள்ளையணுக்களில் அதிக அளவு உள்ள இரத்த செல்கள்_______________

A) இயோசினோஃபில்

B) பேசோஃபில்

C) நியூட்ரோஃபில்

D) லிம்ஃபோசைட்

65. இரத்த வெள்ளையணுக்களில் உள்ள நியூட்ரோஃபில்களின் அளவு_____________

A) 60 – 70 %

B) 0.5 – 3 %

C) 0.1 %

D) 1 – 4 %

66. ஹீமோசைட்டோமீட்டரில் காணப்படும் பிப்பெட் வகை_________

A) RBC பிப்பெட்

B) WBC பிப்பெட்

C) இரத்ததட்டு வகை பெப்பெட்

D) A,B இரண்டும்

விளக்கம்: ஹீமோசைட்டோமீட்டரில் RBC மற்றும் WBC பிப்பெட் என்னும் இரு வகை பிப்பெட்டுகள் உள்ளன.

67. இரத்தப் பூச்சி ஏற்படும் நன்மைகளுல் பொருந்தாததைக் கண்டறி,

A) இரத்தத்தில் உள்ள செல் வகைகளைக் கண்டறியலாம்

B) அவற்றின் புற அமைப்பைக் கண்டறியலாம்

C) இரத்தத்தில் ஏதேனும் சாறுண்ணிகள் உள்ளனவா எனக் கண்டறியலாம்

D) வேறுபட்ட நோய்களுக்கு ஏற்றவாறு நமது உடல் செய்யும் பிரதி வினைகளைக் கண்டறியலாம்.

விளக்கம்: இரத்தத்தில் ஏதேனும் ஒட்டுண்ணிகள் உள்ளனவா எனக் கண்டறியலாம்.

68. இரத்தப்பூச்சு இதை அறிய உதவுகிறது.

A) மொத்த RBC

B) மொத்த வெள்ளையணு

C) ஹீமோகுளோபின்

D) வகைக் கணக்கெடுப்பு

69. இயல்பான டயஸ்டோலிக் இரத்த அழுத்தம்___________

A) 80மி.மீ பாதரசம்

B) 100மி.மீ பாதரசம்

C) 120மி.மீ பாதரசம்

D) 140மி.மீ பாதரசம்

70. இதயத்தில் மின் தூண்டல் சரியாக உருவாகாத போது____________பயன்படுத்தப்படுகிறது.

A) EEG

B) பேஸ்மேக்கர்

C) தானியங்கி பகுப்பாய்வி

D) குளுக்கோமீட்டர்

71. PET ஸ்கேன் உபயோகிப்பது

A) கதிர்வீச்சு ஐசோடோப்புகள்

B) புற ஊதாக் கதிர்கள்

C) மீயொலி

D) அகச்சிவப்பு கதிர்கள்

72. கருவளர்ச்சியைக் கீழ்க்காணும் முறையில் கண்டறியலாம்.

A) அல்ட்ராசோனோகிராம்

B) x கதிர்கள்

C) ECG

D) EEG

11th Science Lesson 4 Questions in Tamil

4] வேலை, ஆற்றல் மற்றும் திறன்

1. இயற்பியல் ஆற்றலின் பல்வேறு வடிவங்கள் யாவை?

A) இயந்திர ஆற்றல்

B) மின் ஆற்றல்

C) வெப்ப ஆற்றல்

D) இவை அனைத்தும்

விளக்கம்: இயற்பியலில் ஆற்றலானது இயந்திர ஆற்றல், மின் ஆற்றல், வெப்ப ஆற்றல், அணுக்கரு ஆற்றல் போன்ற பல்வேறு வடிவங்களில் உள்ளன.

2. வேலை செய்யப்படும் வீதம்____________

A) ஆற்றல்

B) திறன்

C) இயக்கம்

D) விசை

விளக்கம்: வேலை செய்யப்படும் வீதம் திறன் எனப்படும்.

3. இரு வெக்டர்களின் ஸ்கேலர் பெருக்கல் பலன் ஒரு____________ மதிப்பாகும்.

A) வெக்டர்

B) ஸ்கேலர்

C) பரிணாமம்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: இரு வெக்டர்களின் ஸ்கேலர் பெருக்கல் பலன் ஒரு ஸ்கேலர் மதிப்பாகும்.

4. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] செய்யப்பட்ட வேலை ஒரு வெக்டர் அளவாகும்.

2] இது எண்மதிப்பை மட்டும் பெற்றுள்ளது மற்றும் திசையற்றது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: செய்யப்பட்ட வேலை ஒரு ஸ்கேலர் அளவாகும். இது எண்மதிப்பை மட்டும் பெற்றுள்ளது மற்றும் திசையற்றது.

5. SI அலகு முறையில் செய்யப்பட்ட வேலையின் அலகு ____________

A) NJ

B) N m

C) N

D) J v

விளக்கம்: SI அலகு முறையில் செய்யப்பட்ட வேலையின் அலகு N m அல்லது ஜுல் (J) ஆகும்.

6. செய்யப்பட்ட வேலையின் பரிமாண வாய்ப்பாடு____________

A) ML2 T-2

B) ML2 T2

C) M2 T-2

D) M2 T2

விளக்கம்: பரிமாண வாய்ப்பாடு [ML2 T-2] ஆகும்.

7. உராய்வற்ற ஒரு கிடைத்தளப் பரப்பில் மாறா திசைவேகத்தில் நகரும் (உராய்வு இல்லாததால்) ஒருபொருள் ____________ ஆக இருக்கும்.

A) இயக்கமற்றதாக

B) இயங்கி கொண்டே

C) சுழியாகும்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: உராய்வற்ற ஒரு கிடைத்தளப் பரப்பில் மாறா திசைவேகத்தில் நகரும் (உராய்வு இல்லாததால்) ஒருபொருள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்.

8. திடமாக உள்ள ஒரு சுவரின் மீது விசை செலுத்தப்பட்டால் விசையானது எந்த____________ ஏற்படுத்தாது.

A) இடப்பெயர்ச்சி

B) ஆற்றல்

C) திறன்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: திடமாக உள்ள ஒரு சுவரின் மீது விசை செலுத்தப்பட்டால் விசையானது எந்த இடப்பெயர்ச்சியையும் ஏற்படுத்தாது.

9. கூற்று(A): ஒரு பொருளானது கிடைத்தளத் திசையில் நகரும்போது புவியீர்ப்புவிசை (mg) பொருளின் மீது வேலை ஏதும் செய்யாது,

காரணம்(R): ஏனெனில் அது இடப்பெயர்ச்சிக்கு செங்குத்தாக செயல்படுகிறது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு பொருளானது கிடைத்தளத் திசையில் நகரும்போது புவியீர்ப்புவிசை (mg) பொருளின் மீது வேலை ஏதும் செய்யாது, ஏனெனில் அது இடப்பெயர்ச்சிக்கு செங்குத்தாக செயல்படுகிறது.

10. கூற்று(A): வட்ட இயக்கத்தில் உள்ள பொருளின்மீது செயல்படும் புவியீர்ப்பு விசையானது வேலை ஏதும் செய்யாது.

காரணம்(R): ஏனெனில் அது எப்போதும் இடப்பெயர்ச்சிக்கு செங்குத்தாக உள்ளது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வட்ட இயக்கத்தில் உள்ள பொருளின்மீது செயல்படும் மையநோக்கு விசையானது வேலை ஏதும் செய்யாது. ஏனெனில் அது எப்போதும் இடப்பெயர்ச்சிக்கு செங்குத்தாக உள்ளது.

11. பொருத்துக

a) θ = 0° – 1] 0 < cosθ < 1

b) 0 <θ< 90° (குறுங்கோணம்) – 2] 0

c) θ = 90° (செங்கோணம்) – 3] 1

d) θ = 180° – 4] -1 < cosθ < 0

e) 90° <θ< 180° – 5] -1

a b c d e

A) 3 1 2 4 5

B) 4 1 5 3 2

C) 2 4 3 1 5

D) 3 1 2 5 4

12. பொருத்துக

a) θ = 0° – 1] நேர்க்குறி

b) 0 <θ< 90° (குறுங்கோணம்) – 2] நேர்க்குறி, பெருமம்

c) θ = 90° (செங்கோணம்) – 3] சுழி

d) θ = 180° – 4] எதிர்க்குறி

e) 90° <θ< 180° – 5] எதிர்க்குறி, பெருமம்

a b c d e

A) 3 1 2 4 5

B) 4 1 5 3 2

C) 2 1 3 5 4

D) 3 1 2 5 4

13. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] பொருள் மேல்நோக்கி எறியப்படும்போது புறக்காரணிகளால் பொருளுக்கு ஆற்றல் அளிக்கப்படுகிறது.

2] பொருள் திரும்ப வந்து தரையில் மோதும்போது பொருள் பெற்ற ஆற்றலானது புவிப்பரப்பிற்கு மாற்றப்படுகிறது.(தரையினுள் செல்கிறது)

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பொருள் மேல்நோக்கி எறியப்படும்போது புறக்காரணிகளால் பொருளுக்கு ஆற்றல் அளிக்கப்படுகிறது. பொருள் திரும்ப வந்து தரையில் மோதும்போது பொருள் பெற்ற ஆற்றலானது புவிப்பரப்பிற்கு மாற்றப்படுகிறது.(தரையினுள் செல்கிறது)

14. ஒரு வடிவில் மறையும் ஆற்றல் மற்றொரு வடிவில் வெளிப்படும். இதுவே ஆற்றல் ___________ எனப்படும்.

A) மாறும் விதி

B) மாறா விதி

C) ஆற்றல் விதி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: ஒரு வடிவில் மறையும் ஆற்றல் மற்றொரு வடிவில் வெளிப்படும். இதுவே ஆற்றல் மாறா விதி எனப்படும்.

15. இயந்திர ஆற்றல் எத்தனை வகைப்படும்?

A) 3

B) 2

C) 4

D) 5

விளக்கம்: இயந்திர ஆற்றல் இரு வகைப்படும். 1. இயக்க ஆற்றல் 2. நிலை ஆற்றல்

16. கூற்று(A): ஒரு பொருள் தனது இயக்கத்தினால் ஆற்றல் கொண்டுள்ளது.

காரணம்(R): இதுவே இயக்க ஆற்றல் எனப்படும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு பொருள் தனது இயக்கத்தினால் கொண்டுள்ள ஆற்றல் இயக்க ஆற்றல் எனப்படும்.

17. கூற்று(A): ஒரு பொருள் தனது நிலைப்பாட்டினால் ஆற்றல் கொண்டுள்ளது.

காரணம்(R): இதுவே நிலை ஆற்றல் ஆகும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு பொருள் தனது நிலைப்பாட்டினால் கொண்டுள்ள ஆற்றல் நிலை ஆற்றல் ஆகும்.

18. ஆற்றலின் SI அலகு ___________

A) A) NJ

B) N m

C) N

D) J v

விளக்கம்: SI அலகு முறையில் செய்யப்பட்ட ஆற்றலின் அலகு N m அல்லது ஜுல் (J) ஆகும்.

19. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] 1 எர்க் (CGS அலகு) 10-6 J.

2] 1 எலக்ட்ரான் வோல்ட் (eV) 1.6 x 10-17 J

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: 1 எர்க் (CGS அலகு) 10-7 J ஆகும். 1 எலக்ட்ரான் வோல்ட் (eV) 1.6 x 10-19 J ஆகும்.

20. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] 1 கலோரி (cal) = 4.187 J

2] 1 கிலோவாட் மணி (kW h) 3.6×106 J

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: 1 கலோரி (cal) = 4.186 J ஆகும். 1 கிலோவாட் மணி (kW h) 3.6×106 J ஆகும்.

21. இயங்கும் பொருளின் இயக்கத்திற்காக செய்யப்பட்ட வேலையின் அளவானது பொருளின்____________ மற்றும் திசைவேகத்தின் எண்மதிப்பு ஆகியவற்றைச் சார்ந்தது.

A) எடை

B) நிறை

C) ஆற்றல்

D) திசைவேகம்

விளக்கம்: இயங்கும் பொருளின் இயக்கத்திற்காக செய்யப்பட்ட வேலையின் அளவானது பொருளின் நிறை மற்றும் திசைவேகத்தின் எண்மதிப்பு ஆகியவற்றைச் சார்ந்தது.

22. பொருளின் மீது விசையினால் செய்யப்பட்ட வேலை____________ இருந்தால் அதன் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது.

A) எதிர்குறி

B) நேர்குறி

C) நடுநிலை

D) சுழி

விளக்கம்: பொருளின் மீது விசையினால் செய்யப்பட்ட வேலை நேர்க்குறியாக இருந்தால் அதன் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது.

23. பொருளின் மீது விசையினால் செய்யப்பட்ட வேலை____________ இருந்தால் அதன் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது.

A) எதிர்குறி

B) நேர்குறி

C) நடுநிலை

D) சுழி

விளக்கம்: பொருளின் மீது விசையினால் செய்யப்பட்ட வேலை எதிர்க்குறியாக இருந்தால் அதன் இயக்க ஆற்றல் குறைகிறது.

24. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] பொருளின் மீது விசையினால் வேலை ஏதும் செய்யப்பட வில்லை எனில் அதன் இயக்க ஆற்றல் மாறாது.

2] பொருளின் நிறை மாறாதபோது விசையினால் பொருளானது மாறா வேகத்தில் இயங்கியது என்பதைக் குறிக்கிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பொருளின் மீது விசையினால் வேலை ஏதும் செய்யப்பட வில்லை எனில் அதன் இயக்க ஆற்றல் மாறாது. இது, பொருளின் நிறை மாறாதபோது விசையினால் பொருளானது மாறா வேகத்தில் இயங்கியது என்பதைக் குறிக்கிறது.

25. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] இயக்க ஆற்றல் வெக்டர் அளவாகும்.

2] நிறை ஸ்கேலர் அளவாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இயக்க ஆற்றல் மற்றும் நிறை ஆகியவை ஸ்கேலர் அளவுகளாகும்.

26. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] இயக்க ஆற்றல் மற்றும் நிறை கொடுக்கப்பட்டால் உந்தத்தின் திசையைக் மட்டுமே கணக்கிட இயலும்.

2] இயக்க ஆற்றல் மற்றும் நிறை கொடுக்கப்பட்டால் உந்தத்தின் எண் மதிப்பை கணக்கிட இயலாது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இயக்க ஆற்றல் மற்றும் நிறை கொடுக்கப்பட்டால் உந்தத்தின் எண் மதிப்பை மட்டுமே கணக்கிட இயலும். ஆனால் உந்தத்தின் திசையைக் கணக்கிட இயலாது என்பதை அறியவும்.

27. இருபொருட்களும் சம உந்தத்தைப் பெற்றிருந்தாலும் அவற்றின் இயக்க ஆற்றல் ____________

A) சமமாகும்

B) சமமல்ல

C) சுழியாகும்

D) நடுநிலையாகும்

விளக்கம்: இருபொருட்களும் சம உந்தத்தைப் பெற்றிருந்தாலும் அவற்றின் இயக்க ஆற்றல் சமமல்ல.

28. கனமான பொருள் இலேசான பொருளை விட____________ இயக்க ஆற்றலைப் பெற்றுள்ளது.

A) அதிகமான

B) குறைவான

C) மிக அதிகமான

D) மிக குறைவான

விளக்கம்: கனமான பொருள் இலேசான பொருளை விட குறைவான இயக்க ஆற்றலைப் பெற்றுள்ளது.

29. உந்தத்தின் சமன்பாடு ____________

A) p = m

B) p = mg

C) p = mv

D) p = mj

விளக்கம்: உந்தத்தின் சமன்பாடு p = mv ஆகும்.

30. புவிஈர்ப்பு விசையினால் பொருள் பெற்றுள்ள ஆற்றலானது____________

A) மீட்சியழுத்த ஆற்றல்

B) மின்னழுத்த ஆற்றல்

C) வெப்ப ஆற்றல்

D) ஈர்ப்பு அழுத்த ஆற்றல்

விளக்கம்: புவிஈர்ப்பு விசையினால் பொருள் பெற்றுள்ள ஆற்றலானது ஈர்ப்பு அழுத்த ஆற்றல் ஆகும்.

31. சுருள்வில் விசை மற்றும் இதுபோன்ற ஒத்த விசைகளினால் பெறப்படும் ஆற்றலானது____________

A) மீட்சியழுத்த ஆற்றல்

B) மின்னழுத்த ஆற்றல்

C) வெப்ப ஆற்றல்

D) ஈர்ப்பு அழுத்த ஆற்றல்

விளக்கம்: சுருள்வில் விசை மற்றும் இதுபோன்ற ஒத்த விசைகளினால் பெறப்படும் ஆற்றலானது மீட்சியழுத்த ஆற்றல் ஆகும்.

32. நிலை மின்னியல் விசையால் பெறப்படும் ஆற்றல்____________

A) மீட்சியழுத்த ஆற்றல்

B) மின்னழுத்த ஆற்றல்

C) வெப்ப ஆற்றல்

D) ஈர்ப்பு அழுத்த ஆற்றல்

விளக்கம்: நிலை மின்னியல் விசையால் பெறப்படும் ஆற்றல் மின்னழுத்த ஆற்றல் ஆகும்.

33. கூற்று(A): ஒரு பொருளின்மீது புறவிசை செயல்படும் போது அப்பொருள் சுழி முடுக்கத்துடன்(மாறாதிசைவேகத்தில்) இயங்கும்.

காரணம்(R): செயல்படுத்தப்படும் புறவிசைக்கு சரியாக எதிர்திசையில் மற்றொரு விசை சமமான எண்மதிப்பைக் கொண்டு, ஒன்றுக்கொன்று எதிர் திசையில் செயல்படுவதால், பொருளின் மீது செயல்படும்நிகரவிசைசுழியாகும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு பொருளின்மீது புறவிசை செயல்படும்போது அப்பொருள் எவ்வாறு சுழிமுடுக்கத்துடன் (மாறா திசைவேகத்தில்) இயங்கும்?

செயல்படுத்தப்படும் புறவிசைக்கு சரியாக எதிர்திசையில் மற்றொரு விசை செயல்பட்டால் இது சாத்தியமே. அவை இரண்டும் சமமான எண்மதிப்பைக் கொண்டு, ஒன்றுக்கொன்று எதிர் திசையில் செயல்படுவதால், பொருளின் மீது செயல்படும் நிகரவிசை சுழியாகும். எனவே பொருளானது சுழி முடுக்கத்துடன் இயங்கும்.

34. பொருளில் சேமிக்கப்பட்டுள்ள நிலையாற்றலானது புறவிசையினால் செய்யப்பட்ட____________ மதிப்புள்ள வேலையின் மூலம் வரையறுக்கப்படுகிறது

A) எதிர்குறி

B) நேர்குறி

C) சுழி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: பொருளில் சேமிக்கப்பட்டுள்ள நிலையாற்றலானது புறவிசையினால் செய்யப்பட்ட நேர்க்குறி மதிப்புள்ள வேலையின் மூலம் வரையறுக்கப்படுகிறது.

35. புறவிசையைச் செயல்படுத்தும் அமைப்பு பொருளுக்கு ஆற்றலை மாற்றுகிறது மற்றும் அது ____________ ஆற்றலாக சேமிக்கப்படுகிறது.

A) இயக்க ஆற்றல்

B) ஈர்ப்பு ஆற்றல்

C) நிலை ஆற்றல்

D) வெப்ப ஆற்றல்

விளக்கம்: புறவிசையைச் செயல்படுத்தும் அமைப்பு பொருளுக்கு ஆற்றலை மாற்றுகிறது மற்றும் அது நிலையாற்றலாகச் சேமிக்கப்படுகிறது.

36. பொருளானது h உயரத்திலிருந்து விழுந்தால் சேமிக்கப்பட்டுள்ள நிலையாற்றல் ____________ ஆற்றலாக மாற்றப்படுகிறது.

A) இயக்க ஆற்றல்

B) ஈர்ப்பு ஆற்றல்

C) நிலை ஆற்றல்

D) வெப்ப ஆற்றல்

விளக்கம்: பொருளானது h உயரத்திலிருந்து விழுந்தால் சேமிக்கப்பட்டுள்ள நிலையாற்றல் இயக்க ஆற்றலாக மாற்றப்படுகிறது.

37. பொருளின் மீது செயல்படும் நிகர விசை____________

A) அதிகமாகும்

B) குறைவாகும்

C) சுழி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: நிலையாற்றலின் வரையறையில் இருந்து, பொருளானது மாறாத் திசைவேகத்தில் நகர்த்தப்பட வேண்டும். எனவே, பொருளின் மீது செயல்படும் நிகர விசை சுழி ஆகும்.

38. ஒரு சுருள்வில் நீட்சியடையச் செய்யப்பட்டால் அதனுள் ஒரு ____________ உருவாகிறது.

A) நேர்விசை

B) எதிர்விசை

C) மீள்விசை

D) மீளா விசை

விளக்கம்: ஒரு சுருள்வில் நீட்சியடையச் செய்யப்பட்டால் அதனுள் ஒரு மீள்விசை உருவாகிறது.

39. மீள் விசைக்கு எதிராகச் செயல்படுத்தப்பட்ட விசையினால் செய்யப்பட்ட வேலை சுருள்வில்லில்____________ நிலை ஆற்றலாகச் சேமிக்கப்படுகிறது.

A) நேர்

B) மீட்சி

C) மீள்

D) மீளா

விளக்கம்: மீள் விசைக்கு எதிராகச் செயல்படுத்தப்பட்ட விசையினால் செய்யப்பட்ட வேலை சுருள்வில்லில் மீட்சி நிலை ஆற்றலாகச் சேமிக்கப்படுகிறது.

40. சுருள்வில்லானது சமநிலையில் இருக்கும் வரை அதன்____________ சுழியாகும்.

A) இயக்க ஆற்றல்

B) ஈர்ப்பு ஆற்றல்

C) நிலை ஆற்றல்

D) வெப்ப ஆற்றல்

விளக்கம்: சுருள்வில்லானது சமநிலையில் இருக்கும் வரை அதன் நிலை ஆற்றல் சுழியாகும்.

41. சுருள்வில்லினுள் சேமிக்கப்பட்டுள்ள நிலை ஆற்றலானது சுருள்வில்லுடன் இணைக்கப்பட்டுள்ள____________ யைச் சார்ந்ததல்ல.

A) எடை

B) திசைவேகம்

C) நிறை

D) இடப்பெயர்ச்சி

விளக்கம்: சுருள்வில்லினுள் சேமிக்கப்பட்டுள்ள நிலை ஆற்றலானது சுருள்வில்லுடன் இணைக்கப்பட்டுள்ள நிறையைச் சார்ந்ததல்ல.

42. ஒரு அமுக்கப்பட்ட அல்லது நீட்டப்பட்ட சுருள்வில் தன்னுள் சேமிக்கப்பட்ட நிலை ஆற்றலை அதனுடன் இணைக்கப்பட்ட நிறையின்____________ ஆற்றலாக மாற்றுகிறது.

A) இயக்க ஆற்றல்

B) ஈர்ப்பு ஆற்றல்

C) நிலை ஆற்றல்

D) வெப்ப ஆற்றல்

விளக்கம்: ஒரு அமுக்கப்பட்ட அல்லது நீட்டப்பட்ட சுருள்வில் தன்னுள் சேமிக்கப்பட்ட நிலை ஆற்றலை அதனுடன் இணைக்கப்பட்ட நிறையின் இயக்க ஆற்றலாக மாற்றுகிறது.

43. கூற்று(A): ஒரு பொருளை நகர்த்தும் போது விசையினால் செய்யப்பட்ட வேலை பொருளின் தொடக்க மற்றும் இறுதி நிலைகளை மட்டும் சார்ந்து இருக்கும்.

காரணம்(R): அவ்விசை, ஆற்றல் மாற்றா விசை எனப்படும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு பொருளை நகர்த்தும் போது விசையினால் அல்லது விசைக்கெதிராக செய்யப்பட்ட வேலை பொருளின் தொடக்க மற்றும் இறுதி நிலைகளை மட்டும் சார்ந்தும், பொருளின் தொடக்க மற்றும் இறுதி நிலைகளுக்கிடையே சென்ற பாதையின் இயல்பைச் சாராமலும் இருப்பின் அவ்விசை, ஆற்றல் மாற்றா விசை எனப்படும்.

44. கூற்று(A): புவியீர்ப்பு விசையானது ஆற்றல் மாற்றா விசை.

காரணம்(R): பாதை எவ்வாறு இருப்பினும் தொடக்க மற்றும் இறுதி நிலைகள் மாறாமல் இருக்கும் வரை புவியீர்ப்பு விசைக்கெதிராக செய்யப்பட்ட வேலை மாறாது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: பாதை எவ்வாறு இருப்பினும் தொடக்க மற்றும் இறுதி நிலைகள் மாறாமல் இருக்கும் வரை புவியீர்ப்பு விசைக்கெதிராக செய்யப்பட்ட வேலை மாறாது. இதுவே புவியீர்ப்பு விசையானது ஆற்றல் மாற்றா விசையாக இருப்பதற்கு காரணமாகும்.

45. ஆற்றல் மாற்றா விசை நிலை ஆற்றலின்____________ சாய்வுக்கு சமமாகும்.

A) எதிர்குறி

B) நேர்குறி

C) சுழி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: ஆற்றல் மாற்றா விசை நிலை ஆற்றலின் எதிர்க்குறி சாய்வுக்கு சமமாகும்.

46. கீழ்க்கண்டவற்றுள் ஆற்றல் மாற்றா விசைகளுக்கு உதாரணங்கள் அல்லாதவை எவை?

A) மீட்சி சுருள்வில் விசை

B) நிலைமின்னியல் விசை

C) காந்த விசை

D) ஈர்ப்பியல் விசை

விளக்கம்: மீட்சி சுருள்வில் விசை, நிலைமின்னியல் விசை, காந்த விசை, புவியீர்ப்பு விசை போன்றவை ஆற்றல் மாற்றா விசைகளுக்கு உதாரணங்கள் ஆகும்.

47. கூற்று(A): ஒரு பொருளை விசையினால் அல்லது விசைக்கெதிராக நகர்த்தச் செய்யப்பட்ட வேலை தொடக்க மற்றும் இறுதி நிலைகளுக்கிடையே உள்ள பாதையைச் சார்ந்துள்ளது.

காரணம்(R): அவ்விசை ஆற்றல் மாற்றும் விசை எனப்படும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு பொருளை விசையினால் அல்லது விசைக்கெதிராக நகர்த்தச் செய்யப்பட்ட வேலை தொடக்க மற்றும் இறுதி நிலைகளுக்கிடையே உள்ள பாதையைச் சார்ந்திருப்பின் அவ்விசை ஆற்றல் மாற்றும் விசை எனப்படும்.

48. கூற்று(A): உராய்வு விசைகள் ஆற்றல் மாற்றும் விசைகள் ஆகும்.

காரணம்(R): உராய்வுக்கு எதிராக செய்யப்பட்ட வேலை பொருள் நகர்ந்த பாதையின் தொலைவைச் சார்ந்தது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: உராய்வு விசைகள் ஆற்றல் மாற்றும் விசைகள் ஆகும். ஏனென்றால் உராய்வுக்கு எதிராக செய்யப்பட்ட வேலை பொருள் நகர்ந்த பாதையின் தொலைவைச் சார்ந்தது.

49. கூற்று(A): காற்றுத்தடையால் ஏற்படும் விசை ஆற்றல் மாற்றும் விசைகள் ஆகும்.

காரணம்(R): இவ்விசையால் அல்லது விசைக்கெதிராக செய்யப்பட்ட வேலை இயக்கத்தின் திசைவேகத்தைச் சார்ந்தது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: காற்றுத்தடையால் ஏற்படும் விசை ஆற்றல் மாற்றும் விசைகள் ஆகும். இவ்விசையால் அல்லது விசைக்கெதிராக செய்யப்பட்ட வேலை இயக்கத்தின் திசைவேகத்தைச் சார்ந்தது.

50. கீழ்க்கண்டவற்றுள் ஆற்றல் மாற்றும் விசைகளுக்கு உதாரணங்கள் அல்லாதவை எவை?

A) மீட்சி சுருள்வில் விசை

B) உராய்வு விசைகள்

C) காற்றுத்தடையால் ஏற்படும் விசை

D) பாகியல்விசை

விளக்கம்: உராய்வு விசைகள், காற்றுத்தடையால் ஏற்படும் விசை, பாகியல்விசை போன்றவை ஆற்றல் மாற்றும் விசைகளுக்கு உதாரணங்கள் ஆகும்.

51. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] ஆற்றல் மாற்றா விசையானது நிலை ஆற்றலின் எதிர்க்குறி சாய்வுக்கு மாறும் சமமல்ல.

2] ஆற்றல் மாற்றா விசைகளில் மொத்த ஆற்றல் மாறும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஆற்றல் மாற்றா விசையானது நிலை ஆற்றலின் எதிர்க்குறி சாய்வுக்கு மாறும் சமமாகும். ஆற்றல் மாற்றா விசைகளில் மொத்த ஆற்றல் மாறாது.

52. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] ஆற்றல் மாற்றா விசைகளில் செய்யப்பட்ட வேலை பாதையைச் சார்ந்ததல்ல.

2] ஆற்றல் மாற்றா விசைகளில் செய்யப்பட்ட வேலை முழுவதும் மீட்கப்படக்கூடியது

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஆற்றல் மாற்றா விசைகளில் செய்யப்பட்ட வேலை பாதையைச் சார்ந்ததல்ல. செய்யப்பட்ட வேலை முழுவதும் மீட்கப்படக்கூடியது

53. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] ஆற்றல் மாற்றும் விசைகளில் செய்யப்பட்ட வேலை பாதையைச் சார்ந்தது.

2] ஆற்றல் மாற்றும் விசைகளில் செய்யப்பட்ட வேலை முழுவதும் மீட்கப்படக் கூடியது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஆற்றல் மாற்றும் விசைகள் விசைகளில் செய்யப்பட்ட வேலை பாதையைச் சார்ந்ததல்ல. செய்யப்பட்ட வேலை முழுவதும் மீட்கப்படக் கூடியது அல்ல.

54. ஆற்றல் மாற்றும் விசைகளில் ஆற்றலானது வெப்ப ஆற்றல், ____________ ஆற்றலாக வெளிப்படுகிறது.

A) இயக்க ஆற்றல்

B) ஈர்ப்பு ஆற்றல்

C) நிலை ஆற்றல்

D) ஒளி ஆற்றல்

விளக்கம்: ஆற்றல் மாற்றும் விசைகளில் ஆற்றலானது வெப்ப ஆற்றல், ஒளி ஆற்றலாக வெளிப்படுகிறது.

55. ஆற்றல் மாற்றும் விசைகளில் ஒரு சுற்றில் செய்யப்பட்ட வேலை____________

A) சுழி

B) சுழியல்ல

C) ஒன்று

D) இரண்டு

விளக்கம்: ஆற்றல் மாற்றும் விசைகளில் ஒரு சுற்றில் செய்யப்பட்ட வேலை சுழியல்ல.

56. ஆற்றல் மாற்றா விசைகளில் ஒரு சுற்றில் செய்யப்பட்ட வேலை ___________

A) சுழி

B) சுழியல்ல

C) ஒன்று

D) இரண்டு

விளக்கம்: ஆற்றல் மாற்றா விசைகளில் ஒரு சுற்றில் செய்யப்பட்ட வேலை ஒரு சுற்றில் செய்யப்பட்ட வேலை சுழியாகும்.

57. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ஒரு பொருளை நாம் மேல்நோக்கி எறிந்தால் அதன் இயக்க ஆற்றல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

2] ஒரு பொருளை நாம் மேல்நோக்கி எறிந்தால் அதன் நிலை ஆற்றல் குறைந்து கொண்டே செல்கிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஒரு பொருளை நாம் மேல்நோக்கி எறிந்தால் அதன் இயக்க ஆற்றல் குறைந்து கொண்டே செல்கிறது மற்றும் அதன் நிலை ஆற்றல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

58. பொருளானது பெரும உயரத்தை அடையும்போது ஆற்றல் முழுவதும் ___________ ஆற்றலாகும்.

A) இயக்க ஆற்றல்

B) ஈர்ப்பு ஆற்றல்

C) நிலை ஆற்றல்

D) வெப்ப ஆற்றல்

விளக்கம்: பொருளானது பெரும உயரத்தை அடையும்போது ஆற்றல் முழுவதும் நிலை ஆற்றலாகும்.

59. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] பொருளானது பெரும உயரத்தில் இருந்து விழுந்தால் அதன் இயக்க ஆற்றல் குறையும்.

2] பொருளானது பெரும உயரத்தில் இருந்து விழுந்தால் அதன் நிலைஆற்றல் அதிகரிக்கும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பொருளானது பெரும உயரத்தில் இருந்து விழுந்தால் அதன் இயக்க ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் நிலைஆற்றல் குறையும்.

60. பொருளானது தரையைத் தொடும்போது அதன் ஆற்றல் முழுவதும்___________ ஆற்றலாகும்.

A) இயக்க ஆற்றல்

B) ஈர்ப்பு ஆற்றல்

C) நிலை ஆற்றல்

D) வெப்ப ஆற்றல்

விளக்கம்: பொருளானது தரையைத் தொடும்போது அதன் ஆற்றல் முழுவதும் இயக்க ஆற்றலாகும்.

61. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல் மொத்த இயந்திர ஆற்றல் ஆகும்.

2] மொத்த இயந்திர ஆற்றல் எப்போதும் மாறும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல் அதாவது மொத்த இயந்திர ஆற்றல் எப்போதும் மாறாது. இதுவே ஆற்றல் மாறா விதியாகும்.

62. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ஆற்றல் மாறா விதியின்படி ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ இயலாது.

2] ஆற்றலானது ஒரு வகையிலிருந்து மற்றொரு வகையாக மாறக்கூடியது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஆற்றல் மாறா விதியின்படி ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ இயலாது. ஆற்றலானது ஒரு வகையிலிருந்து மற்றொரு வகையாக மாறக்கூடியது.

63. ஆற்றல் மாறா விதியின்படி ஒரு தனித்த அமைப்பின் மொத்த ஆற்றல்___________ ஆக இருக்கும்.

A) மாறி

B) மாறிலியாக

C) சுழி

D) சுழியல்ல

விளக்கம்: ஆற்றல் மாறா விதியின்படி ஒரு தனித்த அமைப்பின் மொத்த ஆற்றல் மாறிலியாக இருக்கும்.

64. பொருள் தரையைத் தொட நெருங்கும் போது நிலை ஆற்றல்___________ ஆகும்.

A) மாறி

B) மாறிலியாக

C) சுழி

D) சுழியல்ல

விளக்கம்: பொருள் தரையைத் தொட நெருங்கும் போது நிலை ஆற்றல் சுழியாகும்,

65. பொருள் தரையைத் தொட நெருங்கும் போது மொத்த ஆற்றல்___________ ஆற்றலாக மட்டுமே இருக்கும்.

A) இயக்க ஆற்றல்

B) ஈர்ப்பு ஆற்றல்

C) நிலை ஆற்றல்

D) வெப்ப ஆற்றல்

விளக்கம்: பொருள் தரையைத் தொட நெருங்கும் போது மொத்த ஆற்றல் இயக்க ஆற்றலாக மட்டுமே இருக்கும்.

66. ஆற்றல் மாறா விதியின் படி தொடக்க மற்றும் இறுதி மொத்த ஆற்றல்கள்___________

A) சமமல்ல

B) சமமாகும்

C) சுழியாகும்

D) சுழியல்ல

விளக்கம்: ஆற்றல் மாறா விதியின் படி தொடக்க மற்றும் இறுதி மொத்த ஆற்றல்கள் சமமாகும்.

67. கூற்று(A): இழுவிசையும் பொருள் செல்லும் திசையும் எப்போதும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக உள்ளது.

காரணம்(R): இழுவிசையானது பொருளின்மீது எவ்வித வேலையும் செய்யாது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: இழுவிசையும் பொருள் செல்லும் திசையும் எப்போதும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக உள்ளதால் இழுவிசையானது பொருளின்மீது எவ்வித வேலையும் செய்யாது.

68. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] புவியீர்ப்பு விசையானது பொருளின் மீதுவேலை செய்கிறது.

2] அது ஆற்றல் மாற்றா விசை என்பதால் இயக்கம் முழுவதும் பொருளின் மொத்த ஆற்றல் மாறாது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: புவியீர்ப்பு விசையானது பொருளின் மீதுவேலை செய்கிறது. மேலும் அது ஆற்றல் மாற்றா விசை என்பதால் இயக்கம் முழுவதும் பொருளின் மொத்த ஆற்றல் மாறாது.

69. செய்யப்பட்டமொத்தவேலைக்கும் எடுத்துக்கொண்ட மொத்த நேரத்திற்கும் இடையே உள்ள விகிதம் ____________

A) உடனடித் திறன்

B) மொத்த திறன்

C) சராசரித்திறன்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: செய்யப்பட்டமொத்தவேலைக்கும் எடுத்துக்கொண்ட மொத்த நேரத்திற்கும் இடையே உள்ள விகிதம் சராசரித்திறன் (Pசராசரி) என வரையறுக்கப்படுகிறது.

70. ஒரு கண நேரத்தில் (நேர இடைவெளி சுழியை நெருங்கும்போது) வெளிப்படும் திறன்____________

A) உடனடித் திறன்

B) மொத்த திறன்

C) சராசரித்திறன்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: ஒரு கண நேரத்தில் (நேர இடைவெளி சுழியை நெருங்கும்போது) வெளிப்படும் திறன் உடனடித் திறன் (P உடனடி) என வரையறுக்கப்படுகிறது.

71. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] திறன் ஒரு வெக்டர் அளவாகும்.

2] திறனின் SI அலகு வாட் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: திறன் ஒரு ஸ்கேலர் அளவாகும். திறனின் SI அலகு வாட் ஆகும்.

72. கூற்று(A): ஒரு வினாடியில் ஒரு ஜுல் வேலை செய்யப்படுகிறது

காரணம்(R): இதனை ஒரு வாட் என வரையறுக்கப்படுகிறது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு வினாடியில் ஒரு ஜுல் வேலை செய்யப்பட்டால் திறன் ஒரு வாட் என வரையறுக்கப்படுகிறது.

73. கீழ்க்கண்டவற்றுள் திறனின் உயர் அலகுகள் அல்லாதது எது ?

A) டெகாவாட்

B) கிலோவாட்

C) மெகாவாட்

D) ஜிகாவாட்

விளக்கம்: கிலோவாட் (kW), மெகாவாட் (MW) மற்றும் ஜிகாவாட் (GW) ஆகியவை திறனின் உயர் அலகுகள் ஆகும்.

74. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1]1 kW = 1000 W = 107 வாட்

2] 1 MW = 106 வாட்

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: 1 kW = 1000 W = 103 வாட்ஆகும். 1 MW = 106 வாட் ஆகும்.

75. 1 GW =

A) 108

B) 1010

C) 1011

D) 109

விளக்கம்: 1 GW = 109 வாட் ஆகும்.

76. நீராவி இயந்திரத்தைக் கண்டுபுடித்தவர் ____________

A) நீல்ஸ் வாட்

B) எட்வின் வாட்

C) சார்லஸ் வாட்

D) ஜேம்ஸ் வாட்

விளக்கம்: திறனின் SI அலகு வாட் (W) என்று நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜேம்ஸ் வாட் பெயரால் அழைக்கப்படுகிறது.

77. திறனின் பழைய அலகு____________

A) நீராவி திறன்

B) வேலை திறன்

C) குதிரை திறன்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மோட்டார்கள், இயந்திரங்கள் மற்றும் சில தானியங்கி வாகனங்களுக்கு குதிரைத்திறன் (horse – power) (hp) என்றழைக்கப்படும் திறனின் பழைய அலகானது வணிகரீதியாக இன்னும் பயன்பாட்டில் உள்ளது.

78. 1 hp=

A) 756 W

B) 746 W

C) 766 W

D) 776 W

விளக்கம்: உள்ளது. குதிரைத்திறனை (hp) வாட் (W) என்ற அலகில் மாற்ற 1 hp = 746 W

79. ஒரு 100 வாட் விளக்கு (bulb) ஒரு வினாடியில்____________ மின் ஆற்றலை நுகர்கிறது.

A) 100 ஆம்பியர்

B) 100 வோல்ட்

C) 100 ஜுல்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: ஒரு 100 வாட் விளக்கு (bulb) ஒரு வினாடியில் 100 ஜுல் மின் ஆற்றலை நுகர்கிறது.

80. 1 1 J =

A) 1 W

B) 1 WS

C) 1 Ws

D) 1 ws

விளக்கம்: ஜுல் என்ற அலகால் அளக்கப்படும் ஆற்றலின் திறனை வாட் என்ற அலகிலும் நேரத்தை வினாடி என்ற அலகிலும் குறிப்பிடுவதால் 1 J = 1 Ws என எழுதலாம்.

81. மின் ஆற்றலானது____________ என்ற அலகால் அளவிடப்படுகிறது.

A) டெகாவாட் மணி

B) கிலோவாட் மணி

C) மெகாவாட் மணி

D) ஜிகாவாட் மணி

விளக்கம்: மின் ஆற்றலானது கிலோவாட் மணி (kilowatt hour – kWh) என்ற அலகால் அளவிடப்படுகிறது.

82. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] மின் ஆற்றல் நுகர்வுக்கு kWh என்ற அலகில் மின்கட்டண பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றன.

2] 1 அலகு மின் ஆற்றல் என்பது 1 kWh ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின் ஆற்றல் நுகர்வுக்கு kWh என்ற அலகில் மின்கட்டண பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றன. 1 அலகு மின் ஆற்றல் என்பது 1 kWh ஆகும்.

83. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] kWh என்பது திறனின் அலகு.

2] kWh என்பது ஆற்றலின் அலகு அல்ல.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: kWh என்பது ஆற்றலின் அலகு; திறனின் அலகு அல்ல.

84. மின்னிழை விளக்குகள் ஒளிவீசும் நேரம்____________

A) 2000

B) 3000

C) 5000

D) 1000

விளக்கம்: மின்னிழை விளக்குகள் 1000 மணி நேரம் ஒளிவீசும்.

85. CFL விளக்குகள் ஒளிவீசும் நேரம்____________

A) 7000

B) 6000

C) 5000

D) 1000

விளக்கம்: CFL விளக்குகள் 6000 மணி நேரம் ஒளிவீசும்.

86. LED விளக்குகள் ஒளிவீசும் நேரம்____________

A) 70000

B) 60000

C) 50000

D) 10000

விளக்கம்: LED விளக்குகள் 50000 மணிநேரம் ஒளி வீசும். (ஏறத்தாழ 25 ஆண்டுகள், நாளொன்றுக்கு 5.5 மணி நேரம்)

87. அனைத்து மோதல் செயல்முறைகளிலும்____________ மாறாது.

A) உந்தம்

B) நேர்க்கோட்டு உந்தம்

C) திசைவேகம்

D) நேர்கோட்டு திசைவேகம்

விளக்கம்: அனைத்து மோதல் செயல்முறைகளிலும் நேர்க்கோட்டு உந்தம் மாறாது.

88. மோதலின்போது தனித்தனி பொருட்களின் உந்தத்தைக் காண____________ கூடுதல் பின்பற்றப்பட வேண்டும்.

A) ஸ்கேலர்

B) வெக்டர்

C) உந்தத்தின்

D) திசைவேகத்தின்

விளக்கம்: மோதலின்போது தனித்தனி பொருட்களின் உந்தத்தைக் காண வெக்டர் கூடுதல் பின்பற்றப்பட வேண்டும்.

89. எந்த ஒரு மோதல் செயல்முறையிலும் மொத்த நேர்க்கோட்டு உந்தமும், மொத்த ஆற்றலும் எப்போதும்____________

A) சமமாகும்

B) சமமல்ல

C) மாறும்

D) மாறாது

விளக்கம்: எந்த ஒரு மோதல் செயல்முறையிலும் மொத்த நேர்க்கோட்டு உந்தமும், மொத்த ஆற்றலும் எப்போதும் மாறாது.

90. கூற்று(A): ஒரு மோதலில் பொருட்களின் தொடக்க மொத்த இயக்க ஆற்றலானது (மோதலுக்கு முன்) பொருட்களின் இறுதி மொத்த இயக்க ஆற்றலுக்கு(மோதலுக்குப் பின்) சமம்.

காரணம்(R): இதுவே மீட்சி மோதல் எனப்படும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு மோதலில் பொருட்களின் தொடக்க மொத்த இயக்க ஆற்றலானது (மோதலுக்கு முன்) பொருட்களின் இறுதி மொத்த இயக்க ஆற்றலுக்கு (மோதலுக்குப் பின்) சமமாக இருந்தால் அது மீட்சிமோதல் எனப்படும். அதாவது மோதலுக்கு முன் மொத்த இயக்க ஆற்றல் = மோதலுக்குப் பின் மொத்த இயக்க ஆற்றல்

91. கூற்று(A): ஒரு மோதலில் பொருட்களின் தொடக்க மொத்த இயக்க ஆற்றலானது (மோதலுக்கு முன்) பொருட்களின் இறுதி மொத்த இயக்க ஆற்றலுக்கு (மோதலுக்குப் பின்) சமமாக இல்லை.

காரணம்(R): அது மீட்சியற்ற மோதல் எனப்படும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு மோதலில் பொருட்களின் தொடக்க மொத்த இயக்க ஆற்றலானது (மோதலுக்கு முன்) பொருட்களின் இறுதி மொத்த இயக்க ஆற்றலுக்கு (மோதலுக்குப் பின்) சமமாக இல்லையெனில் அது மீட்சியற்ற மோதல் எனப்படும். அதாவது மோதலுக்கு முன் மொத்த இயக்க ஆற்றல் ≠ மோதலுக்குப் பின் மொத்த இயக்க ஆற்றல்

92. மோதலின்போது இயக்க ஆற்றலில் ஏற்படும் இழப்பு வெப்பம், ____________ போன்ற வேறு வகையான ஆற்றலாக மாற்றமடைகிறது.

A) ஒளி

B) ஒலி

C) துகள்

D) வாயு

விளக்கம்: மோதலின்போது இயக்க ஆற்றலில் ஏற்படும் இழப்பு ஒலி, வெப்பம் போன்ற வேறு வகையான ஆற்றலாக மாற்றமடைகிறது.

93. மோதலுறும் இரு பொருள்களும் மோதலுக்குப் பின் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டால் அவ்வகை____________

A) மீட்சி மோதல்

B) பாதி மீட்சியற்றமோதல்

C) முழு மீட்சியற்றமோதல்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மோதலுறும் இரு பொருள்களும் மோதலுக்குப் பின் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டால் அவ்வகை மோதல்கள் முழு மீட்சியற்றமோதல் அல்லது மீட்சியற்ற மோதல் எனப்படும்.

94. கூற்று(A): ஈரமானஒரு களிமண் உருண்டை (அல்லது பபிள்கம்) ஒரு இயங்கும் வாகனத்தின் மீது எறியப்பட்டால், அது இயங்கும் வாகனத்துடன் ஒட்டிக்கொள்கிறது மற்றும் அவை சம திசைவேகத்துடன் இயங்குகின்றன.

காரணம்(R): இவை முழு மீட்சியற்றமோதல் எனப்படும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஈரமான ஒரு களிமண் உருண்டை (அல்லது பபிள்கம்) ஒரு இயங்கும் வாகனத்தின் மீது எறியப்பட்டால், அது இயங்கும் வாகனத்துடன் ஒட்டிக்கொள்கிறது மற்றும் அவை சம திசைவேகத்துடன் இயங்குகின்றன. இவை முழு மீட்சியற்றமோதல் எனப்படும்.

95. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] மீட்சி மோதலில் தொடர்புடைய விசைகள் ஆற்றல் மாற்றா விசைகள்.

2] இயந்திர ஆற்றலானது வெப்பம், ஒளி, ஒலி போன்றவையாக வெளிப்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மீட்சி மோதலில் தொடர்புடைய விசைகள் ஆற்றல் மாற்றா விசைகள். மீட்சி மோதலில் இயந்திர ஆற்றல் சிதைவடையாது.

96. மீட்சி மோதலில் மொத்த உந்தம்____________

A) மாறும்

B) மாறாது

C) சமமாகும்

D) சமமல்ல

விளக்கம்: மீட்சி மோதலில் மொத்த உந்தம் மாறாது.

97. மீட்சி மோதலில் மொத்த இயக்க ஆற்றல்____________

A) மாறும்

B) மாறாது

C) சமமாகும்

D) சமமல்ல

விளக்கம்: மீட்சி மோதலில் மொத்த இயக்க ஆற்றல் மாறாது.

98. மீட்சியற்ற மோதலில் மொத்த உந்தம்____________

A) மாறும்

B) மாறாது

C) சமமாகும்

D) சமமல்ல

விளக்கம்: மீட்சியற்ற மொத்த உந்தம் மாறாது.

99. மீட்சியற்ற மோதலில் மொத்த இயக்க ஆற்றல்____________

A) மாறும்

B) மாறாது

C) சமமாகும்

D) சமமல்ல

விளக்கம்: மீட்சியற்ற மொத்த இயக்க ஆற்றல் மாறும்.

100. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] மீட்சியற்ற மோதலில் தொடர்புடைய விசைகள் ஆற்றல் மாற்றும் விசைகள்.

2] மீட்சியற்ற மோதலில் இயந்திர ஆற்றலானது வெப்பம், ஒளி, ஒலி போன்றவையாக வெளிப்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: தொடர்புடைய விசைகள் ஆற்றல் மாற்றும் விசைகள். இயந்திர ஆற்றலானது வெப்பம், ஒளி, ஒலி போன்றவையாக வெளிப்படுகிறது.

101. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] பொருளானது எந்த ஒரு நேரடி மீட்சி மோதலிலும், மோதலுக்குப்பின் இரு மீட்சிப் பொருள்களின் ஒப்புமை வேகம் மோதலுக்கு முன் இருந்த அதே எண் மதிப்பைக் கொண்டும் ஆனால் நேர்திசையிலும் இருக்கும்.

2] இந்த முடிவு நிறையைச் சார்ந்ததல்ல.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பொருளானது எந்த ஒரு நேரடி மீட்சி மோதலிலும், மோதலுக்குப்பின் இரு மீட்சிப் பொருள்களின் ஒப்புமை வேகம் மோதலுக்கு முன் இருந்த அதே எண் மதிப்பைக் கொண்டும் ஆனால் எதிர்த்திசையிலும் இருக்கும் என்பதாகும். மேலும் இந்த முடிவு நிறையைச் சார்ந்ததல்ல என்பதை அறியவும்.

102. ஒரு பரிமாண மீட்சி மோதலில் சம நிறையுள்ள இரு பொருள்கள் மோதிக்கொண்டால் மோதலுக்குப் பின் அவற்றின்____________ பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

A) வேகம்

B) திசைவேகம்

C) நிறை

D) எடை

விளக்கம்: ஒரு பரிமாண மீட்சி மோதலில் சம நிறையுள்ள இரு பொருள்கள் மோதிக்கொண்டால் மோதலுக்குப் பின் அவற்றின் திசைவேகங்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

103. முதல் பொருள் மோதலுக்குப் பின் ஓய்வு நிலைக்கு வரும்போது இரண்டாவது பொருள் முதல் பொருளின் தொடக்க____________ ல் இயங்குகிறது.

A) வேகம்

B) திசைவேகம்

C) நிறை

D) எடை

விளக்கம்: முதல் பொருள் மோதலுக்குப் பின் ஓய்வு நிலைக்கு வரும்போது இரண்டாவது பொருள் முதல் பொருளின் தொடக்க திசைவேகத்தில் இயங்குகிறது.

104. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] கனமாக உள்ள பொருளானது மோதலுக்குப் பிறகு அதே திசைவேகத்துடன் தொடர்ந்து இயங்குகிறது.

2] நிறை குறைவாக உள்ள பொருள் முதல் பொருளின் தொடக்க திசைவேகத்தைப்போல இரு மடங்கு திசைவேகத்துடன் இயங்குகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: கனமாக உள்ள பொருளானது மோதலுக்குப் பிறகு அதே திசைவேகத்துடன் தொடர்ந்து இயங்குகிறது. நிறை குறைவாக உள்ள பொருள் முதல் பொருளின் தொடக்க திசைவேகத்தைப்போல இரு மடங்கு திசைவேகத்துடன் இயங்குகிறது.

105. நிறை குறைவாக உள்ள பொருள் மோதலுறும் புள்ளியிலிருந்து____________ செல்கிறது.

A) மெதுவாக

B) வேகமாக

C) மிக வேகமாக

D) மிக மெதுவாக

விளக்கம்: நிறை குறைவாக உள்ள பொருள் மோதலுறும் புள்ளியிலிருந்து வேகமாகச் செல்கிறது.

106. கூற்று(A): இரப்பர் பந்தானது பிளாஸ்டிக் பந்தைவிட அதிக உயரத்திற்கு மேலெழும்பும்.

காரணம்(R): ஒரு மீட்சிப் பண்புள்ள இரப்பர் பந்திற்கு இயக்க ஆற்றலின் இழப்பு பிளாஸ்டிக் பந்திற்கான இழப்பைவிட மிக குறைவாகும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: இரப்பர் பந்தானது பிளாஸ்டிக் பந்தைவிட அதிக உயரத்திற்கு மேலெழும்பும். ஏனென்றால் ஒரு மீட்சிப் பண்புள்ள இரப்பர் பந்திற்கு இயக்க ஆற்றலின் இழப்பு பிளாஸ்டிக் பந்திற்கான இழப்பைவிட மிக குறைவாகும்.

107. மோதலுக்குப் பின் உள்ள விலகும் திசைவேகத்திற்கும் (சார்புத் திசைவேகம்) மோதலுக்கு முன் உள்ள நெருங்கும் திசைவேகத்திற்கும் (சார்புத் திசைவேகம்) இடையே உள்ள விகிதம் ____________

A) மீட்சி குணகம்

B) மீட்சியற்ற குணகம்

C) மீட்சியளிப்பு குணகம்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மோதலுக்குப் பின் உள்ள விலகும் திசைவேகத்திற்கும் (சார்புத் திசைவேகம்) மோதலுக்கு முன் உள்ள நெருங்கும் திசைவேகத்திற்கும் (சார்புத் திசைவேகம்) இடையே உள்ள விகிதம் மீட்சியளிப்பு குணகம் என வரையறுக்கப்படுகிறது.

108. ஒரு மூடிய பாதைக்கு ஆற்றல் மாற்றா விசையினால் செய்யப்பட்ட வேலை ?

A) எப்போதும் எதிர் குறியுடையது

B) சுழி

C) எப்போதும் நேர்க்குறியுடையது

D) வரையறுக்கப்படாதது

விளக்கம்: ஆற்றல் மாற்றா விசையால் ஒரு மூடிய பாதையில் செய்யப்பட்ட வேலை சுழியாகும்

109. k என்ற விசை மாறிலி கொண்ட ஒரு சுருள்வில் ஒரு துண்டு மற்றொன்றை விட இரு மடங்கு நீளம் உள்ளவாறு இரு துண்டுகளாக வெட்டப்படுகிறது. நீளமான துண்டு பெற்றுள்ள விசை மாறிலியானது

A) 2/ 3 k

B) 3/2 k

C) 2k

D) 3K

110. ஒரு இயந்திரம் நீரை தொடர்ச்சியாக ஒரு குழாயின் வழியே இறைக்கிறது. நீரானது v என்ற திசைவேகத்துடன் குழாயை விட்டுச் செல்கிறது மற்றும் இறைக்கப்படும் நீரின் ஓரலகு நீளத்தின் நிறை m என்க. நீருக்கு இயக்க ஆற்றல் அளிக்கப்பட்ட வீதம் யாது?

A) 1/ 2 mv3

B) 3/ 2 mv3

C) 5/ 2 mv3

D) mv3

111. ஒரு அமைப்பின் நிலைஆற்றல் உயருகிறது. எனில்

A) ஆற்றல் மாற்றா விசைக்கெதிராக அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது

B) ஆற்றல் மாற்றும் விசைக்கெதிராக அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது

C) ஆற்றல் மாற்றா விசையினால் அமைப்பின் மீது வேலை செய்யப்படுகிறது

D) ஆற்றல் மாற்றும் விசையினால்

விளக்கம்: ஒரு அமைப்பின் நிலைஆற்றல் உயருகிறது. எனில் ஆற்றல் மாற்றா விசைக்கெதிராக அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது.

112. ஒரு பொருளின் நேர்க்கோட்டு உந்தம் 0.1% உயர்ந்தால் அதன் இயக்க ஆற்றல் உயரும் அளவு

A) 0.1%

B) 0.2%

C) 0.4%

D) 0.01%

113. செங்குத்து வட்ட இயக்கத்தில் வட்டத்தை நிறைவு செய்ய வட்டப்பாதையின் கீழ்புள்ளியில் கொடுக்கத் தேவையான சிறும வேகம்

A) 4gr

B) 3gr

C) 2gr

D) √ 5gr

விளக்கம்: செங்குத்து வட்ட இயக்கத்தில் வட்டத்தை நிறைவு செய்ய வட்டப்பாதையின் கீழ்புள்ளியில் கொடுக்கத் தேவையான சிறும வேகம் √5gr ஆகும்.

114. ஆற்றல் மாற்றும் விசையால் ஒரு மூடிய பாதையில் செய்யப்பட்ட வேலை____________

A) எப்போதும் எதிர் குறியுடையது

B) எப்போதும் நேர்க்குறியுடையது

C) சுழி

D) சுழியல்ல

விளக்கம்: ஆற்றல் மாற்றும் விசையால் ஒரு மூடிய பாதையில் செய்யப்பட்ட வேலை சுழியல்ல.

115. இயக்க ஆற்றலை உந்த மதிப்பின் மூலமாகவும் வரையறை செய்யலாம். அதன்படி K. E =

A) p3 / 2m

B) p2 / 2

C) p3 / m

D) p2 / 2m

விளக்கம்: இயக்க ஆற்றலை உந்த மதிப்பின் மூலமாகவும் வரையறை செய்யலாம். அதன்படி K. E = p2 / 2m

116. காற்றால் இயங்கும் ஒரு மின்னியற்றி காற்று ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது. மின்னியற்றியானது அதன் இறக்கைகளில் படும் காற்று ஆற்றலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மின் ஆற்றலாக மாற்றுவதாகக் கருதுக. v என்பது காற்றின் வேகம் எனில், வெளியீடு மின்திறன் எதற்கு நேர்விகிதத்தில் இருக்கும்?

A) v

B) v2

C) v3

D) v4

117. 1 kg நிறையுள்ள ஒரு பொருள் 20 m s-1 திசைவேகத்துடன் மேல்நோக்கி எறியப்படுகிறது. அது 18 m உயரத்தை அடைந்தவுடன் கணநேர ஓய்வு நிலைக்கு வருகிறது. உராய்வு விசையால் இழக்கப்பட்ட ஆற்றல் எவ்வளவு?

A) 10 J

B) 20 J

C) 30 J

D) 40 J

118. “பருப்பொருளே ஆற்றல், ஆற்றலே ஒளி, நாம் அனைவரும் ஒளி மனிதர்கள்” என கூறியவர்

A) ஜேம்ஸ் வாட்

B) நியூட்டன்

C) நீல்ஸ் போர்

D) ஆல்பர்ட்ஐன்ஸ்டீன்

விளக்கம்: “பருப்பொருளே ஆற்றல், ஆற்றலே ஒளி, நாம் அனைவரும் ஒளி மனிதர்கள்” – ஆல்பர்ட்ஐன்ஸ்டீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!