General Tamil

11th Tamil Unit 6 Questions

11th Tamil Unit 6 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 11th Tamil Unit 6 Questions With Answers Uploaded Below.

1. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

1. தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுரங்களில் உயரமானது கோளாந்தகன் கோபுரம்.

2. இராசராசன் 988 ஆம் ஆண்டு சேர நாட்டை வெற்றிக் கொண்டார்.

3. இதனை போற்றும் வகையில் இக்கோபுரத்திற்கு ” கேரளாந்தகன் வாயில் கோபுரம் ” என பெயரிடப்பட்டுள்ளது.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 1, 3 சரி

ஈ) 2, 3 சரி

2. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க

1. கோபுரமென்பது அகநாழிகையின் மேல் அமைக்கப்படுவது.

2. விமானம் என்பது வாயில்களின் மேல் அமைக்கப்படுவது.

3. அகநாழிகை என்பது கருவறையின் மற்றொரு பெயர்.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 1, 2 தவறு

ஈ) அனைத்தும் தவறு

3. இரண்டு நுழைவாயில் கோபுரங்கள் யாருடைய தனிச் சிறப்பாக விளங்குகின்றன.

அ) முற்கால சோழர்கள்

ஆ) இடைக்கால சோழர்கள்

இ) பிற்கால சோழர்கள்

ஈ) நாயக்கர்கள்

4. நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதுமான கோயில் எது?

அ) மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்

ஆ) பனைமலைக் கோயில்

இ) தஞ்சைப் பெரியக் கோயில்

ஈ) காஞ்சி கைலாசநாதர் கோயில்

5. இராசராச சோழனால் ‘தட்சிண மேரு ‘ என்று அழைக்கப்பட்ட கோவில் எது?

அ) மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்

ஆ) பனைமலைக் கோயில்

இ) தஞ்சைப் பெரியக் கோயில்

ஈ) காஞ்சி கைலாசநாதர் கோயில்

6. தஞ்சைப் பெரிய கோவில் விமானம் எத்தனை அடி உயரம் உடையது?

அ) 126

ஆ) 216

இ) 612

ஈ) 200

7. செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவது போல, கருங்கற்களை அடுக்கிக் கட்டுவது ____ எனப்படும்.

அ) கற்றளி

ஆ) கல்லடுக்கு

இ) கருங்கற்றளி

ஈ) கருங்கல்லடுக்கு

8. தஞ்சைப் பெரியக் கோவில் விமானம் எத்தனை தளங்களை உடையது?

அ) 12

ஆ) 13

இ) 14

ஈ) 15

9. கற்றளி என்னும் அமைப்பை வடிவமைத்தது யார் மற்றும் எக்காலத்தில் வடிவமைத்தார்?

அ) இரண்டாம் மகேந்திரவர்மன் – 7ம் நூற்றாண்டு

ஆ) இரண்டாம் நரசிம்மவர்மன் – 7ம் நூற்றாண்டு

இ) இரண்டாம் மகேந்திரவர்மன் – 9 ம் நூற்றாண்டு

ஈ) இரண்டாம் நரசிம்மவர்மன் – 9ம் நூற்றாண்டு

10. கீழ்க்கண்டவற்றுள் கற்றளி கோவில் அல்லாதது எது / எவை?

1. மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்

2. பனைமலைக் கோயில்

3. தஞ்சைப் பெரியக் கோயில்

4. காஞ்சி கைலாசநாதர் கோயில்

5. திருச்சி மலைக்கோட்டை

அ) எதுவுமில்லை

ஆ) 1 மட்டும்

இ) 3 மட்டும்

ஈ) 5 மட்டும்

11. கீழ்க்கண்டவற்றுள் மண்ணால் கட்டி, மேலே மரத்தால் சட்டகமிட்டு கட்டப்பட்ட கோவில்கள் எது?

1. பனைமலைக்கோயில் 2. தில்லைக் கோயில்

3. குற்றாலநாதர் கோயில் 4. காஞ்சி கைலாசநாதர் கோயில்

அ) அனைத்தும்

ஆ) 2, 3

இ) 1, 2, 3

ஈ) 1, 4

12. செங்கற்களை அடுக்கி கோவில் கட்டும் முறையில் சோழன் செங்கணான் 78 கோவில்களை கட்டியிருப்பதாக யாருடைய பதிகம் கூறுகிறது

அ) திருஞானசம்பந்தர்

ஆ) திருநாவுக்கரசர்

இ) சுந்தரர்

ஈ) மாணிக்கவாசகர்

13. செங்கல், சுண்ணம், மரம், உலோகம் இல்லாமலே பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு குடைவரைக் கோயில்களை அமைத்தவர் யார்?

அ) முதலாம் மகேந்திரவர்மன்

ஆ) இரண்டாம் மகேந்திரவர்மன்

இ) மூன்றாம் மகேந்திரவர்மன்

ஈ) நான்காம் மகேந்திரவர்மன்

14. விசித்திர சித்தன் என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?

அ) முதலாம் மகேந்திரவர்மன்

ஆ) இரண்டாம் மகேந்திரவர்மன்

இ) மூன்றாம் நரசிம்மவர்மன்

ஈ) இரண்டாம் நரசிம்மவர்மன்

15. செங்கல், சுண்ணம், மரம், உலோகம் இல்லாமலே பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு குடைவரைக் கோயில்களை விசித்திர சித்தன் என்பவர் அமைத்தார் எனக் கூறும் கல்வெட்டு

அ) அரிக்கமேடு கல்வெட்டு

ஆ) மண்டகப்பட்டு கல்வெட்டு

இ) மகாபலிபுரம் கல்வெட்டு

ஈ) சித்தன்னவாசல் கல்வெட்டு

16. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலை கட்டியவர் யார்?

அ) முதலாம் மகேந்திரவர்மன்

ஆ) இராசராச சோழன்

இ) இராசசிம்மன்

ஈ) நரசிம்மவர்மன்

17. எப்போது தஞ்சை பெரியக் கோவிலின் 1000வது ஆண்டு நிறைவடைந்தது

அ) 2007

ஆ) 2008

இ) 2009

ஈ) 2010

18. முதலாம் இராசராச சோழன் தஞ்சைப் பெரிய கோவிலை எக்காலக்கட்டத்தில் கட்டினார்?

அ) 1000 – 1010

ஆ) 1003 – 1010

இ) 1005 – 1012

ஈ) 1005 – 1010

19. இராசசிம்மேச்சுரம் என்று அழைக்கப்பட்ட கோவில் எது?

அ) மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்

ஆ) பனைமலைக் கோயில்

இ) தஞ்சைப் பெரியக் கோயில்

ஈ) காஞ்சி கைலாசநாதர் கோயில்

20. ” கட்டடக்கலை என்பது உறைந்து போன இசை” என்று கூறியவர்

அ) பிரடிரிகா வொன்ஸ்லீவிங்

ஆ) முதலாம் நரசிம்மவர்மன்

இ) கோவிந்தசாமி

ஈ) இராசசிம்மன்

21. இராசராசனுக்கு தஞ்சை பெரிய கோவிலை கட்ட வேண்டுமென்ற எண்ணத்தை தூண்டியது எக்கோயில்

அ) மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்

ஆ) பனைமலைக் கோயில்

இ) திருச்சி மலைக்கோட்டை

ஈ) காஞ்சி கைலாசநாதர் கோயில்

22. கீழ்க்கண்டவற்றுள் இந்தியக் கட்டடக் கலையின் வகைகள் யாவை?

1. நாகரம் 2. வேசரம் 3. திராவிடம் 4. ஆரியம் 5. முகலாயம்

அ) 1, 2, 4

ஆ) 1, 2, 3

இ) 2, 3, 4

ஈ) 1, 2, 5

23. தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் இராசராச சோழன் என்று உறுதி செய்தவர் யார்?

அ) பிரடிரிகா வொன்ஸ்லீவிங்

ஆ) ஷூல்ஸ்

இ) கோவிந்தசாமி

ஈ) லீவிஸ்

24. தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் இராசராச சோழன் என்று உறுதி செய்யப்பட்ட ஆண்டு

அ) 1885

ஆ) 1886

இ) 1887

ஈ) 1888

25. தஞ்சை பெரிய கோவில் கருவறையின் இரு தளங்களில் உள்ள சுற்றுக்கூடம், சாந்தார நாழிகை பகுதிச் சுவர்களில் ஓவியங்கள் காணப்பட்டதை முதன் கண்டறிந்தவர்

அ) பிரடிரிகா வொன்ஸ்லீவிங்

ஆ) ஷூல்ஸ்

இ) எஸ்.கே.கோவிந்தசாமி

ஈ) லீவிஸ்

(Note: தட்சிணாமூர்த்தி ஓவியம், சுந்தரர் வரலாறு, திரிபுராந்தகர் ஓவியம் முதலியன இருந்தன)

26. ஃப்ரெஸ்கோ என்பது எம்மொழிச் சொல் மற்றும் அதன் பொருள் என்ன?

அ) ஆங்கிலம், புதுமை

ஆ) ஸ்பானிஷ், ஓவியம்

இ) இத்தாலி, புதுமை

ஈ) ஸ்பானிஷ், புதுமை

27. சுண்ணாம்புக் காரைப் பூச்சு மீது அதன் ஈரம் காயும் முன் வரையப்படும் பழைமையான ஓவியக் கலை நுட்பம் _____ எனப்படும்.

அ) ஃபாஸ்ட் ஓவியங்கள்

ஆ) ஃப்ரெஸ்கோ ஓவியங்கள்

இ) ஃப்ரஷ் ஓவியங்கள்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

28. ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்கள் காணப்படும் இடங்கள் யாவை?

1. பனைமலை 2. அஜந்தா 3. எல்லோரா 4. சித்தன்னவாசல்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3

இ) 2, 3, 4

ஈ) 1, 3, 4

29. தஞ்சைப் பெரியக் கோவிலில் நாயக்கர் கால மற்றும் சோழர் கால நந்திகள் முறையே எங்கெங்கு காணப்படுகின்றன

அ) தென்புறத்திருச்சுற்று, வடபுறத் திருச்சுற்று

ஆ) பெரிய நந்தி, தென்புறத்திருச்சுற்று

இ) வடபுறத் திருச்சுற்று, பெரிய நந்தி

ஈ) தென்புறத் திருச்சுற்று, பெரிய நந்தி

30. கீழ்க்கண்டக் கூற்றுகளில் எது சரியானது?

1. தஞ்சைப் பெரியக் கோவிலின் சிகரத்திலுள்ள பிரமந்திரக் கல் ஒற்றைக் கல்லால் ஆனது.

2. 13 தளங்களை உடைய கருவறை விமானத்தின் மேல் எண்பட்டை அமைப்பில் ஆரஞ்சுப் பழச் சுளை போன்று எட்டுக்கற்கள் நெருக்கமாக வைத்து ஒட்டப்பட்டன.

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) அனைத்தும் தவறு

31. கோபுரங்கள் எந்த நூற்றாண்டிலிருந்து தனிச் சிறப்புப் பெற்றன.

அ) 10ம் நூற்றாண்டு

ஆ) 11 ம் நூற்றாண்டு

இ) 12ம் நூற்றாண்டு

ஈ) 13ம் நூற்றாண்டு

32. வெளிக் கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரங்களைக் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவர் யார்?

அ) முதலாம் மகேந்திரவர்மன்

ஆ) இராசராச சோழன்

இ) இராசசிம்மன்

ஈ) நரசிம்மவர்மன்

33. வெளிக் கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரங்களைக் கொண்ட அமைப்பு ___ எனப்படும்.

அ) நுழைவு வாயில்

ஆ) கோவில்வாயில்

இ) திருவாயில்

ஈ) ஆலய வாயில்

34. இரண்டு வாயில்களை கொண்ட அமைப்பு கீழ்க்கண்ட எந்த கோயில்களில் காணப்படுகிறது.

1. காஞ்சி கைலாசநாதர் கோயில்

2. கங்கைகொண்ட சோழபுரம்

3. தாராசுரம்

4. திரிபுவனம்

அ) 1, 2, 3

ஆ) 2, 3

இ) 2, 3, 4

ஈ) 1, 2, 4

35. கோவில்களில் நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பப் பெறும் மரபு யாருடைய காலத்திலிருந்து தொடங்கியது.

அ) முதலாம் மகேந்திரவர்மன்

ஆ) இராசராச சோழன்

இ) இராசசிம்மன்

ஈ) இரண்டாம் குலோத்துங்கச் சோழன்

36. புகழ் பெற்ற கோவில்கள் பலவற்றிலும் மிகவுயர்ந்த கோபுரத்தை எழுப்பியது யாருடைய காலத்தில்

அ) சோழ அரசு

ஆ) நாயக்கர்கள்

இ) விஜய நகர அரசு

ஈ) பாண்டியர்கள்

37. கீழ்க்கண்டவற்றில் 150 அடிக்கு மேல் உயரமுள்ள கோபுரங்கள் எந்த இடங்களில் காணப்படுகின்றன.

1. காஞ்சி 2. தில்லை 3. திருவண்ணாமலை 4. திருவரங்கம் 5. மதுரை

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3 சரி

இ) 2, 3, 4 சரி

ஈ) 1, 2, 5 சரி

38. இராசராசனின் பட்டத்தரசி ஒலோகமாதேவி கட்டிய ஒலோகமாதேவீச்சுரம் எங்கு காணப்படுகிறது.

அ) தஞ்சாவூர்

ஆ) சிதம்பரம்

இ) கும்பகோணம்

ஈ) திருவையாறு

39. ” உடன் கூட்டத்து அதிகாரம் செய்கிற

கோவலூர் உடையான் காடன்

நூற்றென்மரையும் அதிகாரிச்சி

எருதந் குஞ்சர மல்லியையும் ”

– இந்த வரிகளைக் கொண்ட கல்வெட்டு எங்கு காணப்படுகிறது

அ) தஞ்சாவூர்

ஆ) சிதம்பரம்

இ) கும்பகோணம்

ஈ) திருவையாறு

40. ” உடன் கூட்டத்து அதிகாரம் செய்கிற

கோவலூர் உடையான் காடன்

நூற்றென்மரையும் அதிகாரிச்சி

எருதந் குஞ்சர மல்லியையும் ”

– இவ்வரிகள் யாரை பற்றி கூறுகின்றன.

அ) இராசராச சோழன் பற்றி

ஆ) மகேந்திரவர்மன் பற்றி

இ) எருதந் குஞ்சர மல்லி என்ற பெண் அதிகாரிப் பற்றி

ஈ) எருதந் குஞ்சர மல்லி என்ற ஆண் அதிகாரிப் பற்றி

41. தஞ்சை பெரிய கோவிலில் முதலாம் இராசாதிராசன் காலத்தில் ___ என்ற அதிகாரிச்சியை பற்றிய குறிப்பு இருக்கிறது.

அ) எருதந் குஞ்சர மல்லி

ஆ) சோமயன் அமிர்தவல்லி

இ) சோமவல்லி

ஈ) மேற்கண்ட யாருமில்லை

42. இராசராச சோழனின் தமக்கையின் பெயர் ____.

அ) எருதந் குஞ்சர மல்லி

ஆ) சோமயன் அமிர்தவல்லி

இ) சோமவல்லி

ஈ) குந்தவை தேவி

43. கீழ்க்கண்டவர்களுள் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய தச்சர்கள் யாவர்?

1. வீரசோழன் குஞ்சரமல்லன் இராசராசப் பெருந்தச்சன்

2. மதுராந்தகனான நித்த வினோதப் பெருந்தச்சன்

3. இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 1, 2 தவறு

ஈ) அனைத்தும் தவறு

44. கவிதை என்ற கலை வடிவத்தின் அழகியல் ஊடாக மானுடத்தின் விழுமியங்களை உரத்த குரலில் கூறியவர்

அ) மதுசூதனன்

ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்

இ) மீரா

ஈ) பாரதியார்

45. “சிறு பிள்ளைக் கைகளுடன்

அனுபவித்து உண்ணும் இவை

தங்களைப் பற்றி என்ன கனவு காணும்

உணவையும் உறக்கத்தையும் தவிர”

– இவ்வரிகளை இயற்றியவர் யார்?

அ) ஆத்மாநாம்

ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்

இ) மீரா

ஈ) பாரதியார்

46. “காகிதத்தில் ஒரு கோடு” என்ற கவிதைத் தொகுப்பை இயற்றியவர் யார்?

அ) மதுசூதனன்

ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்

இ) மீரா

ஈ) பாரதியார்

47. ஆத்மாநாம் குறித்த கூற்றுகளில் தவறானது எது?

அ) மதுசூதனன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் தமிழ்க் கவிதை ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர்.

ஆ) இவர் ‘ழ’ என்னும் சிற்றிதழை நடத்தினார்.

இ) கவிதை, கட்டுரை மொழிபெயர்ப்பு என்று 3 தளங்களிலும் இயங்கியவர்.

ஈ) இவருடைய கவிதைகள் மதுசூதனன் கவிதைகள் என்னும் பெயரில் ஒரே தொகுப்பாக வெளிவந்துள்ளன.

48. ” என் தமக்கையின் மடியில் அயர்ந்து போனாய்

அப்போது குளிர்ந்த காற்றை வீசினேனே

உன் முகத்தில் உடலில் எங்கும்

வா எப்படியும் என் மடிக்கு”

– இவ்வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை

அ) ஆத்மாநாம் கவிதைகள்

ஆ) புளியமரம்

இ) மதுசூதனன் கவிதைகள்

ஈ) கேள்வி

49. இயற்றமிழின் செழுமையையும், இசைத் தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கே கொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது ____.

அ) முக்கூடற் பள்ளு

ஆ) குற்றாலக் குறவஞ்சி

இ) நாலடியார்

ஈ) புறநானூறு.

50. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது / எவை?

1. சங்க இலக்கியங்கள் வீரர்களை, அரசர்களை, வள்ளல்களை, தனி மனிதர்களைப் பாடின.

2. சமய நூல்கள் கடவுளரைப் பாடின.

3. சிற்றிலக்கியங்கள் கடவுளரோடு மனிதர்களையும் பாடின.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

51. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது / எவை?

1. குறவஞ்சி என்பது ஒரு வகை நாடக இலக்கிய வடிவமாகும்.

2. இது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.

3. பாட்டுடைத் தலைவன் உலாவரக்கண்ட தலைவி, அத்தலைவன் மீது காதல் கொள்ள, குறவர் குலத்தை சேர்ந்த பெண்ணொருத்தி தலைவிக்குக் குறி கூறிப் பரிசில் பெறும் செய்திகளை கூறுகிறது.

4. இது குறத்திப் பாட்டு என்றும் வழங்கப்படுகிறது.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 3, 4 சரி

இ) 1, 2, 4 சரி

ஈ) 2, 3, 4 சரி

52. பொருத்துக

1. கொத்து – i) கூந்தல்

2. குழல் – ii) பூமாலை

3. நாங்கூழ் – iii) சன்மானம்

4. கோலத்து நாட்டார் – iv) கலிங்க நாட்டார்

5. வரிசை – v) மண்புழு

அ) iv iii i ii v

ஆ) ii i v iv iii

இ) v iv iii ii i

ஈ) v iv iii ii i

53. இலக்கணக குறிப்புத் தருக – மாண்ட தவளை

அ) வினையெச்சம்

ஆ) வினையாலணையும் பெயர்

இ) பெயரெச்சம்

ஈ) வினை முற்று

54. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பெற்ற

அ) பெற்று + அ

ஆ) பெறு + அ

இ) பெறு (பெற்று) + அ

ஈ) பெறு + ற் + அ

55. “பெறு (பெற்று) + அ –> பெற்ற “ இதில் ‘ பெற்று’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) ஒற்று இரட்டித்து நிகழ்காலம் காட்டியது

ஆ) ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது

இ) ஒற்று இரட்டித்து எதிர்காலம் காட்டியது

ஈ) பகுதி

56. “பயம் + இல்லை –> பயமில்லை” என்பதில் வரும் புணர்ச்சி விதி

அ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் க ச த ப மிகும்.

ஆ) உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே

இ) இன மிகல்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

57. குற்றாலக் குறவஞ்சி என்னும் நூலை நூலை இயற்றியவர் யார்?

அ) ஆசிரியர் பெயர் தெரியவில்லை

ஆ) திரிகூட ராசப்பக் கவிராயர்

இ) முத்து விசயரங்க சொக்கலிங்கனார்

ஈ) முத்துவடுகநாதர்

58. குற்றாலக் குறவஞ்சி திரிகூடராசப்பக் கவிராயரின் ______ என்று போற்றப்பட்டது.

அ) மொழிக் கிரீடம்

ஆ) மணிமகுடம்

இ) கவிதைக் கிரீடம்

ஈ) செய்யுள் கிரீடம்

59. குற்றாலக் குறவஞ்சி என்னும் நூல் யாருடைய விருப்பத்திற்கு இணங்கப் பாடி அரங்கேற்றப்பட்டது.

அ) மதுரை சொக்கநாதர்

ஆ) திரிகூட ராசப்பக் கவிராயர்

இ) முத்து விசயரங்க சொக்கலிங்கனார்

ஈ) முத்துவடுகநாதர்

60. திரிகூடராசப்பக் கவிராயர் குறித்த கூற்றுகளில் எது தவறானது?

அ) இவர் திருநெல்வேலியில் பிறந்தவர்.

ஆ) குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் வைணவ சமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார்.

இ) திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான் என்று சிறப்புப் பட்டப்பெயர் பெற்றவர்.

ஈ) குற்றாலத்தின் மீது தலப்புராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களை இயற்றியிருக்கின்றார்.

(Note: குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார்.)

61. மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் செய்யுள் வகை _____.

அ) முக்கூடற்பள்ளு

ஆ) குற்றாலக் குறவஞ்சி

இ) திருச்சாழல்

ஈ) மொழிச்சாழல்

62. ஒரு பெண் இறைவனைப் பழிப்பது போலவும் இன்னொருத்தி இறைவனது செயலை நியாயப்டுத்துவது போலவும் பாடப்படுவது ___ எனப்படும்

அ) முக்கூடற்பள்ளு

ஆ) குற்றாலக் குறவஞ்சி

இ) திருச்சாழல்

ஈ) மொழிச்சாழல்

63. திருச்சாழல் முறையில் மாணிக்கவாசகர் எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்.

அ) 10

ஆ) 20

இ) 25

ஈ) 30

64. “ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்

வானுந்து தேவர்கட்கோர் வான் பொருள்காண் சாழலோ ”

– இவ்வரிகளை இயற்றியவர்.

அ) ஞானசம்பந்தர்

ஆ) நாவுக்கரசம்

இ) சுந்தரர்

ஈ) மாணிக்கவாசகர்

65. சரியான பொருளைத் தேர்ந்தெடு.

அயன், மால்

அ) விஷ்ணு, இறத்தல்

ஆ) பிரமன், விஷ்ணு

இ) பிரமன், இறத்தல்

ஈ) இறத்தல், விஷ்ணு

66. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை தேர்ந்தெடு

1. காயில் – வெகுண்டால்

2. அந்தம் – முடிவு

3. ஆலாலம் – நஞ்சு

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

67. இலக்கணக் குறிப்பு தருக.

சுடுகாடு, குரை கடல்

அ) பண்புத்தொகைகள்

ஆ) வினையெச்சங்கள்

இ) வினைத் தொகைகள்

ஈ) வினைமுற்று

68. இலக்கணக் குறிப்பு தருக.

கொல்புலி, நல்லாடை

அ) வினையெச்சம், வினையெச்சம்

ஆ) வினைத் தொகை, பண்புத்தொகை

இ) பண்புத்தொகை, வினைத் தொகை

ஈ) வினை முற்று, பண்புத்தொகை

69. பகுபத உறுப்புக்களாக பிரித்து எழுதுக – உண்டான்

அ) உண்டு + ஆன்

ஆ) உண் + டு + ஆன்

இ) உண் + ட் + ஆன்

ஈ) உண்டு + ட் + ஆன்

70. “உண் + ட் + ஆன் ” என்பதில் ‘ட்’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) சந்தி

ஆ) எதிர்கால இடைநிலை

இ) இறந்த கால இடைநிலை

ஈ) சாரியை

71. “கற்பொடி = கல் + பொடி” இதில் இடம்பெறும் புணர்ச்சி விதி

அ) இனமிகல்

ஆ) ல ள வேற்றுமையில் வலி வரின் றடவும்

இ) ஏனை உயிர் வழி வவ்வும்

ஈ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசடதபற மிகும்.

72. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்கள்

1. சாழல் என்பது சிறுவர்கள் விளையாடும் ஒரு வகையான விளையாட்டு.

2. ஒருத்தி வினா கேட்க, மற்றொருத்தி விடை கூறுவதாக அமைந்திருக்கும்.

3. இறைவன் செயல்களையும் அவற்றால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவது திருச்சாழல் வடிவமாகும்.

அ) அனைத்தும் சரி

ஆ) 2, 3 சரி

இ) 1, 3 சரி

ஈ) 3 மட்டும் சரி

73. கீழ்க்கண்டவர்களுள் சாழல் வடிவத்தை தனது பாடல்களில் பயன்படுத்தியவர்கள் யாவர்?

அ) அப்பர், திருமங்கையாழ்வார்

ஆ) மாணிக்கவாசகர், பேயாழ்வார்

இ) மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார்

ஈ) அப்பர், பேயாழ்வார்

74. பெரிய திருமொழி என்னும் நூலை இயற்றியவர் யார்?

அ) மாணிக்கவாசகர்

ஆ) ஆண்டாள்

இ) பேயாழ்வார்

ஈ) திருமங்கையாழ்வார்

75. சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு – உலகனைத்தும்

அ) உலகு + அனைத்தும் –> உல + அனைத்தும் –> உல + க + அனைத்தும்

ஆ) உலகு + அனைத்தும் –> உலக் + அனைத்தும் –> உலகனைத்தும்

இ) உலகம் + அனைத்தும் –> உலக + அனைத்தும் –> உலகனைத்தும்

ஈ) உலகம் + அனைத்தும் –> உலகு + அனைத்தும் –> உலக் + அனைத்தும் –> உலகனைத்தும்

76. சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு – திருவடி

அ) திருவு + அடி –> திருவ் + அடி –> திருவடி

ஆ) திரு + அடி –> திரு + வ் + அடி –> திருவடி

இ) திருவ + டி –> திருவடி

ஈ) திரு + அடி –> திருவடி

77. ” திரு + அடி –> திரு + வ் + அடி ” இதில் இடம்பெறும் புணர்ச்சி விதி

அ) ஏனை உயிர் வழி வவ்வும்

ஆ) இ ஈ ஐ வழி யவ்வும்

இ) ஏ முன் இவ்விருமையும்

ஈ) பூப்பெயர் முன் இன மென்மையுந் தோன்றும்

78. திருவாசகம் என்பது ____ கடவுளின் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.

அ) திருமால்

ஆ) சிவபெருமான்

இ) சேயோன்

ஈ) மாயோன்

79. திருவாசகம் என்னும் பாடல் தொகுப்பை இயற்றியவர் யார்?

அ) மாணிக்கவாசகர்

ஆ) ஆண்டாள்

இ) பேயாழ்வார்

ஈ) திருமங்கையாழ்வார்

80. சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் திருவாசகம் அமைந்துள்ள திருமுறை ____.

அ) 7

ஆ) 8

இ) 9

ஈ) 12

81. திருவாசகத்தில் அமைந்துள்ள திருப்பதிகங்கள் மற்றும் மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை முறையே ______, ______.

அ) 38, 658

ஆ) 38, 645

இ) 51, 658

ஈ) 51, 654

82. திருவாசகத்தில் பாடப்பெற்றுள்ள சிவத்தலங்களின் எண்ணிக்கை ____.

அ) 51

ஆ) 38

இ) 58

ஈ) 85

83. திருவாசகம் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார்?

அ) கால்டுவெல்

ஆ) ஆறுமுகநாவலர்

இ) ஜி. யு.போப்

ஈ) கொண்டல் போப் பெஸ்கி

84. மாணிக்கவாசகர் ____ மன்னரிடம் தலைமையமைச்சராக பணியாற்றினார்,

அ) விசயரங்க சொக்கநாதர்

ஆ) அரிமர்த்தன பாண்டியன்

இ) இராணி மங்கம்மாள்

ஈ) இராசராசன்

85. கீழ்க்கண்டவற்றுள் மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் எவை?

1. திருக்கோவையார் 2. திருப்பாவை

3. காவியப் பாவை 4. திருவாசகம்

அ) 1, 2, 4

ஆ) 1, 4

இ) 1, 2, 3

ஈ) 2, 3, 4

86. மாணிக்கவாசகர் பிறந்த ஊர் ____

அ) தேரழுந்தூர்

ஆ) திருவாதவூர்

இ) திருவதிகை

ஈ) திருவீரட்டானம்

87. மாணிக்கவாசகர் இயற்றிய திருச்சாழல் எந்தக் கோவிலில் பாடப்பெற்றது.

அ) ஐராவதீஸ்வரர் கோவில்

ஆ) ஸ்ரீரங்கம் கோவில்

இ) தில்லைக் கோவில்

ஈ) திருவண்ணாமலைக் கோவில்.

88. “கோயில் சுடுகாடு கொல் புலித்தோல் நல்லாடை

தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ”

– இவ்வரிகள் இடம்பெற்றுள்ள பாடல்

அ) திருக்கோவை

ஆ) திருவாசகம்

இ) திருச்சாழல்

ஈ) பெரிய திருமொழி

89. இளையராஜா அவர்கள் _____இசைக் குழுவுக்கு சிம்பொனி இசைக்கோலத்தை அமைத்துக் காட்டினார்.

அ) ராயல்

ஆ) ஹார்மோனிக்

இ) அன்னக்கிளி

ஈ) ராயல் ஃபில்ஹார்மோனிக்

90. மாஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் பிறந்த ஊர் ____

அ) பண்ணைப்புரம் – மதுரை

ஆ) பண்ணைப்புரம் – தேனி

இ) பண்ணைப்புரம் – கோவை

ஈ) பண்ணைப்புரம் – விருதுநகர்

91. கீழ்க்கண்டவர்களுள் இராசையா என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?

அ) இளையராஜா

ஆ) அழகிய பெரியவன்

இ) பெரியவன் கதிராயர்

ஈ) முத்துலிங்கம்

92. இளையராஜா அவர்கள் இசையமைப்பாளராக அறிமுகமான திரைப்படம் எது?

அ) ரோஜா

ஆ) தென்றல்

இ) அன்னக்கிளி

ஈ) அரண்மனைக்கிளி

93. திரையிசையில் கர்நாடக இசை என்னும் பழந்தமிழிசையின் உன்னதத்தை உணர வைத்தவர் யார்?

அ) ஆஸ்கர் தமிழர்

ஆ) சிம்பொனித்தமிழர்

இ) பியானோ தமிழர்

ஈ) ஆஸ்கர் தமிழன்

94. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது?

அ) 1970களின் தொடக்கத்தில் பிறமொழிப் பாடல்களை சுமந்து திரிந்த தமிழ்ச் செவிகள் விடுதலைப் பெற்று, தமிழ்ப் பாடல்களை நோக்கி திரும்பியதற்கு இளையராஜாவே காரணம்.

ஆ) 70, 80 களில் மெல்லத் தோன்றி புது வேகம் கொண்ட சமூக மாற்றங்களின் குறியீடாக இளையராஜாவின் இசை திகழ்ந்தது.

இ) அவர், தமிழ்ச் செய்யுளின் யாப்போசைக் கட்டமைப்புக்குள் இருக்கின்ற இசை ஒழுங்கை புரிந்து கொண்டு திரைப்பாடல்களை செவியுணர்கனிகளாகவும் பண்பாட்டு வெளிப்பாடாகவும் மாற்றிய பெருமைக்குரியவர்.

ஈ) அவருடைய இசை மலைகளை மட்டும் காட்சிப்படுத்தும் மெட்டுகளைக் கொண்டது.

(Note: அவருடைய இசை ஐவகை நிலப்பரப்புகளையும் காட்சிப்படுத்தும் மெட்டுகளைக் கொண்டது.)

95. பஹார் இன மக்கள் இந்தியாவின் எப்பகுதியில் வாழ்கின்றனர்?

அ) அஸ்ஸாம்

ஆ) மேகாலயா

இ) ஜம்மு காஷ்மீர்

ஈ) நீலகிரி

96. இசையுலகின் புதிய முயற்சிகள் என கொண்டாடப்படுபவை எவை?

1. எப்படிப் பெயரிடுவேன்?

2. இந்தியா 24 மணி நேரம்

3. காற்றைத் தவிர ஏதுமில்லை

அ) அனைத்தும்

ஆ) 1, 2

இ) 1, 3

ஈ) 2, 3

97. “காற்றைத் தவிர ஏதுமில்லை” என்னும் இசைத் தொகுப்பை இளையராஜா யாருடன் இணைந்து வெளியிட்டார்

அ) ஏ.ஆர்.ரஹ்மான்

ஆ) ஹரிபிரசாத் சௌராஸியா

இ) கங்கை அமரன்

ஈ) யாருமில்லை

98. மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம், வலி போன்ற மனித உணர்வுகளுக்கும் இசை வடிவம் கொடுக்க முடியும் என்பதை இளையராஜா ______ என்னும் ஆவணக் குறும்படததின் பின்னணி இசையில் வெளிப்படுத்தினார்.

அ) எப்படிப் பெயரிடுவேன்?

ஆ) இந்தியா 24 மணி நேரம்

இ) காற்றைத் தவிர ஏதுமில்லை

ஈ) உலகம் 24 மணி நேரம்.

99. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப் பாடல்களுக்கு ______ என்னும் இசை வடிவில் இளையராஜா இசையமைத்துள்ளார்.

அ) பஞ்சமுகி

ஆ) பஹாடி

இ) ஆரட் டோரியா

ஈ) ஆனந்த பைரவி

100. கீழ்க்கண்டவற்றுள் இளையராஜா வெளியிட்ட தமிழ் இசைத் தொகுப்புகள் எவை?

1. இராஜாவின் ரமணமாலை

2. இளையராஜாவின் கீதாஞ்சலி

3. மூகாம்பிகை

அ) 1, 2, 3

ஆ) 1, 2

இ) 1, 3

ஈ) 2, 3

101. கீழ்க்கண்டவற்றுள் இளையராஜா வெளியிட்ட கன்னட இசைத் தொகுப்புகள் எவை?

1. இராஜாவின் ரமணமாலை

2. இளையராஜாவின் கீதாஞ்சலி

3. மூகாம்பிகை

அ) 2, 3

ஆ) 3 மட்டும்

இ) 1 மட்டும்

ஈ) 3 மட்டும்

102. இளையராஜா அவர்கள் ஆதி சங்கரர் எழுதிய ____ என்ற பக்திப் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

அ) சிவபெருமான் ஸ்தோத்திரம்

ஆ) திருமால் ஸ்தோத்திரம்

இ) மீனாட்சி ஸ்தோத்திரம்

ஈ) முருகன் ஸ்தோத்திரம்

103. இளையராஜா உருவாக்கிய கர்நாடக செவ்வியல் ராகம் எது?

அ) பஞ்சாட்சரம்

ஆ) பஞ்சமம்

இ) பஞ்சலோகம்

ஈ) பஞ்சமுகி

104. இளையராஜா அவர்களுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கிய மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) மத்தியப் பிரதேசம்

இ) கேரளம்

ஈ) கர்நாடகம்

105. இளையராஜா அவர்களுக்கு நிஷாகந்தி சங்கீத விருது வழங்கிய மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) மத்தியப் பிரதேசம்

இ) கேரளம்

ஈ) கர்நாடகம்

106. இளையராஜா அவர்களுக்கு இந்திய அரசு அளித்த உயரிய விருது எது?

அ) பத்ம பூஷண்

ஆ) பத்ம விபூஷண்

இ) பத்மஸ்ரீ

ஈ) துரோணாச்சார்யா விருது

107. இளையராஜா அவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்த மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) மத்தியப் பிரதேசம்

இ) கேரளம்

ஈ) கர்நாடகம்

108. மூன்றே மூன்று சுரங்களைக் கொண்டு இளையராஜா அவர்கள் எம் மொழி பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

அ) கர்நாடகம்

ஆ) தமிழ்

இ) தெலுங்கு

ஈ) மலையாளம்

109. இளையராஜா அவர்கள் முழுத் திரைப்படத்துக்கும் அரை நாளில் பின்னணி இசை அமைத்துக் கொடுத்தத் திரைப்படம் எது?

அ) அரண்மனைக்கிளி

ஆ) நூறாவது நாள்

இ) ஆயிரம் விளக்கு

ஈ) பொங்கல் பரிசு

110. இளையராஜா அவர்கள் கீழ்க்கண்ட எந்த நூல்களை இயற்றியுள்ளார்.

1. பால்நிலாப் பாதை 2. வெட்டவெளிதனில் கொட்டிக் கிடக்குது.

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) எதுவுமில்லை

111. இளையராஜா அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஆற்றல்களைப் பெற்றிருந்தார்

1. ஒளிப்படக் கலைஞர் 2. கவிஞர் 3. பாடகர் 4. எழுத்தாளர்

5. இசைக் கலைஞர்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3, 5 சரி

இ) 2, 3, 4, 5 சரி

ஈ) 1, 3, 4, 5 சரி

112. நோதிரம், பாலையாழ், காந்தாரம் முதலிய பண்கள் எந்நூலில் காணப்படுகின்றன.

அ) நற்றிணை

ஆ) பரிபாடல்

இ) ஐங்குறுநூறு

ஈ) பதிற்றுப்பத்து

113. சைவத் திருமுறைகளில் ____ என்பவர் நட்ட பாடையிலும் இந்தளத்திலும் பாடியுள்ளார்.

அ) மாணிக்கவாசகர்

ஆ) அப்பர்

இ) காரைக்கால் அம்மையார்

ஈ) சுந்தரர்

114. தேவாரத்தில் எத்தனை பண்களில் பாடல்கள் உள்ளன.

அ) 21

ஆ) 22

இ) 23

ஈ) 24

115. கீழ்க்கண்டவற்றில் தேவாரத்தில் இல்லாது திவ்ய பிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்கள் எவை?

1. நைவளம் 2. தோடி 3. பியந்தை

4. சாளரபாணி 5. ஆனந்த பைரவி

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 3

இ) 4, 5

ஈ) 1, 3, 4

116. ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் காணப்படும் பண் எது?

அ) நைவளம்

ஆ) கல்வாணம்

இ) சாளர பாணி

ஈ) குறண்டி

117. “நம்ரதா கே சாகர் ” என்னும் பாடலை எழுதியவர் யார்?

அ) இளையராஜா

ஆ) ஏ.ஆர்.ரஹ்மான்

இ) நேரு

ஈ) மகாத்மா காந்தி

118. இளையராஜா இசையமைத்த ” நம்ரதா கே சாகர் “ என்னும் பாடலை பாடியவர்

அ) ஏ.ஆர்.ரஹ்மான்

ஆ) ஹரிபிரசாத் சௌராஸியா

இ) கங்கை அமரன்

ஈ) அஜொய் சக்கரபர்த்தி

119. ஆசியாவிலேயே முதன் முதலில் சிம்பொனி என்னும் மேர்கத்திய செவ்வியல் வடிவ இசைக் கோவையை உருவாக்கியவர் யார்?

அ) இளையராஜா

ஆ) ஏ.ஆர்.ரஹ்மான்

இ) மாணிக்கவாசகர்

ஈ) திருமங்கையாழ்வார்

120. சிம்பொனி இசைப் பணியை எழுத குறைந்தது எத்தனை மாதங்களாகும்?

அ) 5

ஆ) 6

இ) 7

ஈ) 8

121. சிறந்த திரைப்படப் பின்னணி இசை மற்றும் சிறந்த திரையிசைப் பாடலுக்கான ஆஸ்கர் விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆண்டு

அ) 2006

ஆ) 2007

இ) 2008

ஈ) 2009

122. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தந்தை பெயர் ஆர்.கே.சேகர்.

2. இவர் மலையாள திரைப்பட உலகில் புகழுடன் விளங்கியவர்

3. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது நான்கு வயதிலேயே ஹார்மோனியம் இசைப்பதில் திறமை பெற்றிருந்தார்.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

123. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைப்பாளராகத் திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய படம் மற்றும் ஆண்டு

அ) ரோஜா – 1990

ஆ) ரோஜா – 1991

இ) ரோஜா – 1992

ஈ) ரோஜா – 1993

124. பிங்கல நிகண்டு என்னும் நூலில் எத்தனைப் பண்கள் காணப்படுகின்றன.

அ) 23

ஆ) 103

இ) 33

ஈ) 101

125. பிங்கல நிகண்டு நூலில் பண்கள் எத்தனை வகைகளாக வகுக்கப்பட்டுள்ளன.

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

(Note: பகல் பண், இரவுப் பண், பொதுப் பண் என வகுக்கப்பட்டிருந்தன.)

126. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு ஆவாத் அம்மான் விருது வழங்கி கெளரவித்த மாநிலம் எது?

அ) உத்திரப் பிரதேசம்

ஆ) மத்தியப் பிரதேசம்

இ) கேரளம்

ஈ) கர்நாடகம்

127. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு தேசிய இசை விருதுகளை வழங்கிய நாடுகள் எவை?

அ) இலங்கை, மொரீஷியஸ்

ஆ) மலேசியா, மொரீஷியஸ்

இ) இலங்கை, சிங்கப்பூர்

ஈ) மலேசியா, சிங்கப்பூர்

128. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு சர்வதேச இசை விருதை வழங்கிய பல்கலைக்கழகம் எது?

அ) ஆக்ஸ்ஃபோர்ட்

ஆ) சென்னை பல்கலைக்கழகம்

இ) ஸ்டான்ஃபோர்ட்

ஈ) அண்ணாமலை பல்கலைக்கழகம்

129. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு இந்திய அரசு அளித்த உயரிய விருது எது?

அ) பத்ம பூஷண்

ஆ) பத்ம விபூஷண்

இ) பத்மஸ்ரீ

ஈ) துரோணாச்சார்யா விருது

130. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு மத்தியப் பிரதேச மாநிலம் _____ விருது வழங்கியது.

அ) ஆவாத் சம்மன் விருது

ஆ) லதா மங்கேஷ்கர் விருது

இ) தேசிய இசை விருது

ஈ) கலைமாமணி விருது

131. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு _____ விருது வழங்கி சிறப்பித்தது.

அ) ஆவாத் சம்மன் விருது

ஆ) லதா மங்கேஷ்கர் விருது

இ) தேசிய இசை விருது

ஈ) கலைமாமணி விருது

132. திரையிசையில் சூஃபி இசையை அறிமுகப்பித்திய சிறப்பு யாருடையது?

அ) இளையராஜா

ஆ) ஏ.ஆர்.ரஹ்மான்

இ) மாணிக்கவாசகர்

ஈ) திருமங்கையாழ்வார்

133. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் ” ஸ்லம்டாக் மில்லியனர் ” என்ற திரைப்பட இசைக்காக _____ விருது பெற்று உலகளாவிய புகழ் பெற்றார்.

அ) சர்வதேச விருது

ஆ) தேசிய இசை விருது

இ) கோல்டன் குளோப்

ஈ) தங்கப் பதக்கம்

134. கீழ்க்கண்டவற்றுள் ஏ.ஆர். இரஹ்மான் அவர்கள் இசையமைத்த இசைத் தொகுதிகள் எவை?

1. மூகாம்பிகை 2. வந்தே மாதரம் 3. ஜன கண மன

4. தமிழ்த்தாய் வாழத்து

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3

இ) 2, 3

ஈ) 3, 4

135. Cellphone என்னும் ஆங்கிலச் சொல்லிற்குரிய தமிழ்ச் சொல் எது?

1. கைபேசி 2. செல்லிடப் பேசி 3. அலைபேசி

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும்

இ) 2, 3

ஈ) 1, 3

136. ஒரு மொழியில் காலத்திற்கேற்ப, துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக, உருவாக்கிப் பயன்படுத்தப்படும் சொற்களை ____ என்கிறோம்.

அ) மொழிப்பெயர்ப்பு

ஆ) கலைச்சொற்கள்

இ) மொழிமாற்றம்

ஈ) பெயர்ப்புச் சொற்கள்

137. சரியான கலைச்சொற்களைத் தேர்ந்தெடு – Website, blog

அ) இணையம், வலைப்பூ

ஆ) வலைப்பூ, இணையம்

இ) சொடுக்கி, இணையம்

ஈ) வலைப்பூ, சொடுக்கி

138. கலைச்சொற்கள் பெரும்பாலும் ____பெயர்களாக வரும்.

அ) தொழிற்பெயர்

ஆ) பண்புப் பெயர்

இ) காரணப் பெயர்

ஈ) காலப் பெயர்

139. பொருத்துக.

1. CLINIC – i) மருத்துவமனை

2. BLOOD GROUP – ii) குருதிப் பிரிவு

3. PHARMACIST – iii) மருந்தாளுநர்

4. X – RAY – iv) ஊடுகதிர்

அ) iv iii i ii

ஆ) iii i ii iv

இ) i ii iii iv

ஈ) ii i iv iii

140. சரியான இணையை தேர்ந்தெடு.

1. TYPHOID – குடற் காய்ச்சல்

2. OINTMENT – மருந்து

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) இரண்டும் தவறு

(Note: OINTMENT – களிம்பு)

141. பொருத்துக

1. NOTEBOOK – i) விடைச்சுவடி

2. ANSWER BOOK – ii) எழுது சுவடி

3. ROUGH NOTE BOOK – iii) பொதுக் குறிப்புச் சுவடி

4. PROSPECTUS – iv) விளக்கச் சுவடி

அ) iv iii i ii

ஆ) ii i iii iv

இ) i ii iii iv

ஈ) ii i iv iii

142. தவறான இணையை தேர்ந்தெடு.

அ) இ – மெயில் – மின்னஞ்சல்

ஆ) ஸ்மார்ட்போன் – அலைபேசி

இ) விண்டோஸ் 10 – சாளரம் 10

ஈ) 8 G – 8 ஆம் தலைமுறை

143. பொருத்துக

1. Touch screen – i) தொடு திரை

2. Bug – ii) பிழை

3. Gazette – iii) அரசிதழ்

4. Despatch – iv) அனுப்புகை

5. Subsidy – v) மானியம்

அ) iv iii i ii v

ஆ) iii v ii iv i

இ) i ii iii iv v

ஈ) ii i v iii iv

144. பொருத்துக

1. Ceiling – i) சுற்றறிக்கை

2. Circular – ii) உச்சவரம்பு

3. Sub Junior – iii) மேல் மூத்தோர்

4. Super Senior – iv) மிக இளையோர்

5. Carrom – v) நாலாங்குழி ஆட்டம்

அ) iv iii i ii v

ஆ) iii v ii iv i

இ) i ii iiii iv v

ஈ) ii i iv iii v

145. பொருத்துக

1. Salestax – i) விற்பனை வரி

2. Customer – ii) வாடிக்கையாளர்

3. Consumer – iii) நுகர்வோர்

4. Account – iv) பற்று வரவுக் கணக்கு

5. Referee – v) நடுவர்

அ) iv iii i ii v

ஆ) iii v ii iv i

இ) i ii iii iv v

ஈ) ii i v iii iv

146. கீழ்க்கண்டவற்றுள் அறிவியல் கலைச்சொற்களைத் தமிழாக்குவதில் உள்ள முறைகள் குறித்து வார.செ.குழந்தைசாமி கூறுவனவற்றுள் தவறானது எது?

அ) பிறமொழித் துறை சொற்களை மொழிப்பெயர்த்தல் – ஒளிச்சேர்க்கை

ஆ) பிற மொழி செல்லினைக் கடன் பெறல் – எக்ஸ் கதிர்

இ) ஒலிப்பெயர்த்து பயன்படுத்தும் சொற்கள் – மீட்டர், ஓம்

ஈ) பேச்சு சொல்லை பயன்படுத்துதல் – அம்மை

(Note: பிற மொழி செல்லினைக் கடன் பெறல் – தசம முறை)

147. Antibiotics என்னும் சொல்லுக்குரிய கலைச்சொற்கள் எவை?

1. எதிர் உயிர்ப்பொருள் 2. நுண்ணுயிர்க் கொல்விகள்

3. உயிர் எதிர் நச்சுகள் 4. கேடுயிர்க் கொல்லிகள்

5. நச்சுயிர்க்கொல்லிகள்

அ) அனைத்தும் சரி

ஆ) 2, 3, 5

இ) 1, 3, 5 சரி

ஈ) 1, 3, 4 சரி

148. கூற்று 1: தஞ்சை பெரிய கோவிலுள்ள ஓவியங்களை எஸ்.கே.கோவிந்தசாமி கண்டறிந்தார்.

கூற்று 2: அங்குள்ள சோழர் காலத்து ஓவியங்கள் ஃபிரெஸ்கோ வகையைச் சேர்ந்தவைர்

அ) கூற்று 1 சரி கூற்று 2 தவறு

ஆ) கூற்று இரண்டும் தவறு

இ) கூற்று 1 தவறு கூற்று 2 சரி

ஈ) கூற்று இரண்டும் சரி

149. கீழுள்ளவற்றை பொருத்தி விடை தேர்கள்

1. விரியன் – i) தண்டை

2. திருகு முருகு – ii) காலாழி

3. நாங்கூழ்ப் புழு – iii) சிலம்பு

4. குண்டலப் பூச்சி – iv) பாடகம்

அ) iii iv ii i

ஆ) iii i iv ii

இ) iv iii ii I

ஈ) iv i iii ii

150. ‘ழ்’ என்னும் பெயரில் கவிஞர் ஆத்மாநாமால் வெளியிடப்பட்டது: ‘கவிதைக் கிரீடம்‘ என்று போற்றப்படுவது.

அ) சிற்றிதழ், குற்றாலக் குறவஞ்சி

ஆ) கவிதை நூல், திருச்சாழல்

இ) நாளிதழ், நன்னகர் வெண்பா

ஈ) கட்டுரை நூல், குற்றாலக் கோவை

151. நாடகங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் முதல்வராகவும் விளங்கியவர் ______.

அ) இளையராஜா

ஆ) ஏ.ஆர்.ரஹ்மான்

இ) சங்கரதாசு சுவாமிகள்

ஈ) ஆத்மாநாம்

152. சங்கரதாசு சுவாமிகள் கவியாற்றல் பெற்று வெண்பா, கலித்துறை இசைப் பாடல்களை இயற்றத் தொடங்கிய வயது ____.

அ) 14

ஆ) 15

இ) 16

ஈ) 17

153. சங்கரதாசு சுவாமிகள் தமது 24 வயதில் நடித்த நாடகங்கள் எவை?

1. இரணியன் 2. இராவணன்

3. எமதருமன் 4. இராமன்

அ) அனைத்தும்

ஆ) 2, 3

இ) 1, 2, 3

ஈ) 1, 3, 4

154. கீழ்க்கண்டவற்றுள் சங்கரதாஸ் சுவாமிகள் உருவாக்கிய நாடகக் குழு எது?

அ) சமரச சுத்த சன்மார்க்க சங்கம்

ஆ) சமரச சன்மார்க்க சபை

இ) சன்மார்க்க சபை

ஈ) ஞான சபை

155. நாடகக் கலைத்துறையில் பெரும் புகழ் ஈட்டிய எஸ்.ஜி. கிட்டப்பா எக்குழுவில் பயிற்சிப் பெற்றவர்

அ) சமரச சுத்த சன்மார்க்க சங்கம்

ஆ) சமரச சன்மார்க்க சபை

இ) சன்மார்க்க சபை

ஈ) தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை

156. சங்கரதாசு சுவாமிகள் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை என்னும் நாடக அமைப்பை உருவாக்கி ஆசிரியராக பொறுப்பேற்ற ஆண்டு

அ) 1916

ஆ) 1917

இ) 1918

ஈ) 1919

157. நாடகக் கலைத்துறையில் பெரும் புகழ் ஈட்டிய டி.கே.எஸ். சகோதர்கள் எக்குழுவில் பயிற்சிப் பெற்றவர்கள்

அ) சமரச சுத்த சன்மார்க்க சங்கம்

ஆ) சமரச சன்மார்க்க சபை

இ) சன்மார்க்க சபை

ஈ) தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை

158. “தமிழ் நாடக தலைமை ஆசிரியர் ” என்று போற்றப்படுபவர் யார்?

அ) சங்கரதாசு சுவாமிகள்

ஆ) பாஸ்கர சேதுபதி.

இ) டி.கே.எஸ் சகோதரர்கள்

ஈ) எஸ்.ஜி. கிட்டப்பா

159. பொருள் மாறா எதிர்மறைத் தொடராக மாற்றுக.

”நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்வேன்”

அ) நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்ல மாட்டேன்

ஆ) நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லேன்

இ) நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லாமல் இலன்.

ஈ) நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லாமல் இருப்பேன்

160. செய்தித் தொடராக்குக.

என்னே! மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பக் கலை

அ) மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பக் கலை வியப்பிற்குரியது.

ஆ) மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பங்கள் எப்படிப்பட்டவை?

இ) மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பங்கள் அழகு வாய்ந்தவையா?

ஈ) மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பங்கள் சிறந்தவை.

161. ” தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,

கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளைகண் விழித்து நோக்க”

இவ்வரிகளை இயற்றியவர்

அ) கபிலர்

ஆ) கம்பர்

இ) மாணிக்கவாசகர்

ஈ) பேயனார்

162. தேர் வடிவத்தினுள் சொற்களை அமைத்துப் ____ எனப்படும்.

அ) சித்திரக் கவி

ஆ) ஆசுகவி

இ) மதுரகவி

ஈ) இரதபந்தம்

163. பொருத்துக

1. Fine arts – i) நுண்கலைகள்

2. Grain ware house – ii) தானியக் கிடங்கு

3. Documentary – iii) ஆவணப் படம்

4. Disaster – iv) பேரழிவு

அ) iv iii i ii

ஆ) iii i ii iv

இ) i ii iii iv

ஈ) ii i iv iii

164. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. Epigraph – கல்வெட்டு

2. Myth – தொன்மம்

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) அனைத்தும் தவறு

165. “சிவானந்த நடனம்” என்னும் நூலை இயற்றியவர் யார்?

அ) ஆத்மாநாம்

ஆ) மாணிக்கவாசகர்

இ) ஆனந்த குமாரசுவாமி

ஈ) பாலசுப்பிரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!