Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

11th & 12th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

11th & 12th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 11th & 12th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சிறு வணிகங்களை ஆதரிப்பதற்காக SMB சாதி உத்சவத்தை அறிமுகப்படுத்திய சமூக ஊடக தளம் எது?

அ. முகநூல் (Facebook)

ஆ. புலனம் (WhatsApp) 

இ. கீச்சகம் (Twitter)

ஈ. கூ (Koo)

  • வாட்ஸ்அப் இந்தியா, ‘SMBSaathi Utsav’ என்ற பெயரில் ஒரு முன்னெடுப்பை அறிவித்தது. இது வாட்ஸ்அப் பிசினஸ் செயலிபோன்ற டிஜிட்டல் ஊடகங்களைப் பின்பற்றுவதற்கு உதவுவதன்மூலம் சிறு வணிகங்களுக்கு உதவுதலை நோக்கமாகக்கொண்டுள்ளது. ஜெய்ப்பூரில் ஒரு சோதனைத் திட்டமாகத் தொடங்கப்பட்ட, ‘SMBSaathi Utsav’ அங்கு 500 சிறு வணிகங்கள் ஆன்லைனில் தங்கள் வணிகத்தை நடத்துவதற்கு பயிற்சியளித்தது. ஜோஷ் டாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டது.

2. மெட்டாவெர்ஸில் அலுவலக வெளியைப்பெற்ற உலகின் முதல் அங்கீகாரம் பெற்ற அமைப்பு எது?

அ. இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ)

ஆ. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (AICTE) 

இ. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC)

ஈ. இந்திய தர கவுன்சில் (QCI)

  • அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலானது (AICTE) மெட்டாவெர்ஸில் அலுவலக வெளியைப் பெற்ற உலகின் முதல் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக மாறியுள்ளது. மிச்சிகனைச் சார்ந்த இன்ஃபர்மேஷன் டேட்டா சிஸ்டம்ஸ் இன்க் (IDS) AICTEஇன் மெட்டாவேர்ஸ் கண்ணோட்டத்தை வெளியிட்டது. இது ஆக்மென்டட் ரியாலிட்டி அல்லது விர்ச்சுவல் ரியாலிட்டி ஆகியவற்றைப் பயன்படுத்தும் உருவகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் சூழலாகும். IDS, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் பாரத் பிளாக்செயின் நெட்வொர்க் (அகாடமிக் பிளாக்செயின் கன்சோர்டியம்) மற்றும் பாலிவர்சிட்டி (கல்வி மெட்டாவர்ஸ்) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.

3. பிரிட்டிஷ் கவுன்சிலின், ‘India/UK Together 2022, a Season of Culture’ சீசன் தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?

அ. விராட் கோலி

ஆ. A R ரகுமான் 

இ. தீபிகா படுகோன்

ஈ. பா இரஞ்சித்

  • இசையமைப்பாளர் A R ரகுமான், பிரிட்டிஷ் கவுன்சிலின், ‘India/UK Together 2022, a Season of Culture’ சீசன் தூதராக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் 75ஆம் ஆண்டு விழா மற்றும் இருநாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளைக் கொண்டாடும் வகையில் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. திட்டத்தின்கீழ், இந்தியா–இங்கிலாந்தில் இருந்து 1,400 கலைஞர்கள் நடனம், இசை, நாடகம், கவிதை, இலக்கியம், காட்சிக்கலைகள் மற்றும் படைப்பாற்றல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வெளிப்படுத்துவார்கள்.

4. ‘திறந்தநிலை பசுமை அணுகல் விதிகள் – 2022’ஐ அறிமுகப்படுத்திய ஒன்றிய அமைச்சகம் எது?

அ. அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. எரிசக்தி அமைச்சகம் 

இ. மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. MSME அமைச்சகம்

  • இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக, ‘திறந்தநிலை பசுமை அணுகல் விதிகள் – 2022’ஐ மத்திய எரிசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தப் புதிய விதிகளின்படி, எரிசக்தி விநியோக நிறுவனங்களிடம் நுகர்வோர் பசுமை எரிசக்தியைக் கோரலாம். திறந்தநிலை பசுமை அணுகல் அனைத்து நுகர்வோருக்கும் அனுமதிக்கப்படுகிறது. மேலும், பசுமை ஆற்றலுக்கான திறந்தநிலை அணுகல் பரிவர்த்தனையின் வரம்பு 1 மெகாவாட்டிலிருந்து 100 கிலோவாட்டாக குறைக்கப்பட்டுள்ளது.

5. ‘அமெரிக்காவின் உச்சிமாநாடு – 2022’ நடைபெறும் நகரம் எது?

அ. நியூயார்க்

ஆ. வாஷிங்டன் DC

இ. லாஸ் ஏஞ்சல்ஸ் 

ஈ. சிகாகோ

  • அமெரிக்காவின் ஒன்பதாவது உச்சிமாநாட்டிற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் அமெரிக்க அதிபர் பிடனும் பல்வேறு நாட்டின் உலகத்தலைவர்களும் கூடினர். அமெரிக்காவின் உச்சிமாநாடு ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் நடத்தப்படுகிறது. குடியேற்றம், வணிகம் மற்றும் வறுமைபோன்ற பிரச்சினைகளை கையாளுதற்காக மேற்குப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் பிரதிநிதிகளை இது ஒன்றிணைக்கிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், கடந்த 1994ஆம் ஆண்டில் மியாமியில் இதன் முதல் உச்சிமாநாட்டை நடத்தினார்.

6. அண்மையில் விவாதத்திற்குள்ளான, ‘Q–CHAMP’ என்றால் என்ன?

அ. விளையாட்டுத் தொடர்பானது

ஆ. COVID–19 தொடர்பானது

இ. பயங்கரவாத தாக்குதல் தொடர்பானது

ஈ. காலநிலை மாற்றம் தொடர்பானது 

  • காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அவசரத்தேவையை உணர்ந்து, 2022 மே.24 அன்று QUAD (நாற்கர பாதுகாப்பு உரையாடல்) தலைவர்கள் “QUAD Climate Change Adaptation and Mitigation Package (QAAP)” ‘தணிப்பு’ மற்றும் ‘ஏற்பு’ ஆகியவற்றை இரண்டு கருப்பொருள்களாகக் கொண்டு அறிமுகப்படுத்தினர்.
  • ‘Q–CHAMP’இன் வெளியீட்டை பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் கலந்துகொண்ட இரண்டாவது தனிப்பட்ட QUAD உச்சிமாநாட்டின் முடிவில் அறிவித்தனர்.

7. ஒவ்வோர் ஆண்டும் உலக தைராய்டு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. மே.25 

ஆ. மே.27

இ. மே.29

ஈ. மே.30

  • உலக தைராய்டு நாளானது ஒவ்வோர் ஆண்டும் மே.25 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது தைராய்டு நோய், அதன் அறிகுறிகள் மற்றும் அதன் சிகிச்சை தொடர்பான புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக தைராய்டு நாள், முதன்முதலில் கடந்த 2008ஆம் ஆண்டில் ஐரோப்பிய தைராய்டு சங்கத்தின் (ETA) தீர்மானத்தால் அனுசரிக்கப்பட்டது.

8. பேச்சுவார்த்தை மற்றும் மேம்பாட்டிற்கான கலாச்சார பன்முகத்தன்மைக்கான உலக நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. மே.21 

ஆ. மே.22

இ. மே.23

ஈ. மே.24

  • கடந்த 2001ஆம் ஆண்டில், UNESCO ஆனது கலாச்சார பன்முகத்தன்மை குறித்த உலகளாவிய பேரரறிவிப்பை ஏற்றுக்கொண்டது. 2002 டிசம்பரில், ஐநா பொதுச்சபை மே.21 அன்று பேச்சுவார்த்தை மற்றும் மேம்பாட்டிற்கான கலாச்சார பன்முகத்தன்மைக்கான உலக நாளாக அறிவித்தது. இந்த நாள், உலக கலாச்சாரங்களின் மகத்துவத்தை மட்டுமல்ல, அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை அடைவதற்கான கலாச்சார உரையாடலின் பங்கையும் எடுத்துக்காட்டுகிறது. ஐநா பொதுச்சபை, 2015–இல் கலாச்சாரம் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த தீர்மானத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.

9. 2021 – பயண மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது?

அ. தென் கொரியா

ஆ. ஜப்பான் 

இ. ஹாங்காங்

ஈ. சிங்கப்பூர்

  • 2021 – பயண மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் குறியீட்டில் ஜப்பான் முதலிடத்திலும், அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் தொடர்ந்துள்ளன. இந்தியா 4.2 மதிப்பெண்களுடன் 54ஆம் இடத்தில் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டின் குறியீட்டைவிட எட்டு இடங்கள் சரிந்துள்ளது.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற மொகிந்தர் கே மிதா சார்ந்த நாடு எது?

அ. ஐக்கிய பேரரசு 

ஆ. பிரான்ஸ்

இ. ஜெர்மனி

ஈ. அமெரிக்கா

  • பிரிட்டனின் எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் இந்திய வம்சாவளி அரசியல்வாதியான கவுன்சிலர் மொகிந்தர் கே மிதா, மேற்கு இலண்டனில் உள்ள ஈலிங் கவுன்சிலின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உள்ளூர் லண்டன் கவுன்சிலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் மேயரானார் அவர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஜூன் 13-இல் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: முதல்வர் தொடக்கி வைக்கிறார்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அன்றைய நாளே, ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெற வேண்டும் என்பதே ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் நோக்கமாகும். இந்தத்திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் எட்டு வயதிற்குள் பொருள்புரிந்து படிக்கும் திறனையும் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும்.

கல்வியில் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் பயனாக அறிவியல் மனப்பான்மை மற்றும் சமூகத் திறன்களுடன் இணைந்த மொழிக் கற்பித்தலில் மாணவா்களின் கற்றல் நிலையை அடிப்படையாகக் கொண்டு (level based) ஒருங்கிணைத்து அளிக்கப்பட வேண்டும் என்பதையே எண்ணும் எழுத்தும் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஒன்று முதல் மூன்று வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்கள் சூழ்நிலையியல் பாடக்கருத்துகளுடன் ஒருங்கிணைந்து கற்பிக்கப்படும்.

இதன்காரணமாக 2025-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் பொருள்புரிந்து படிப்பர், அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை மேற்கொள்வர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1, 2, 3-ஆம் வகுப்புகளுக்கு 2022-2023-ஆம் ஆண்டில் இருந்து ‘எண்ணும் எழுத்தும்’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மாநில அளவிலான பயிற்சி நடைபெற்றது.

2. இன்னுமா இப்படி? | சிசு மரண விகிதம் குறித்த தலையங்கம்

ஒரு தேசத்தின் ஆரோக்கியத்துக்கான குறியீடு, குறைவான குழந்தைகள் மரண விகிதம் என்பது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதை அடிப்படையாக வைத்தே ஒட்டுமொத்த மக்கள்தொகையின் ஆரோக்கியம் பார்க்கப்படுகிறது. இந்தப் பின்னணியில், இந்தியாவின் தலைமைப் பதிவாளர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

2020-ஆம் ஆண்டுக்கான பல்வேறு வளர்ச்சிக் குறியீடுகளும், ஆய்வுகளும் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் சிசு மரணம் குறித்த விவரங்கள் கவலையளிக்கும் விதமாக இருக்கின்றன. 1000 பிரசவங்களில் 28 குழந்தைகள் பிறக்கும்போதோ, பிறந்த ஒரு மாதத்திற்குள்ளோ உயிரிழப்பதாகத் தெரிகிறது. இதைத்தான், ‘சிசு மரண விகிதம்’ என்று கூறுவார்கள்.

கடந்த 10 ஆண்டு புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது இந்தியாவின் சிசு மரண விகிதம் (Infant Mortality Rate) 44-லிலிருந்து 28-ஆகக் குறைந்திருக்கிறது. ஊரகப்புறங்களில் 48-லிருந்து 31-ஆகவும் நகர்ப்புறங்களில் 29-லிருந்து 10-ஆகவும் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கிறது அந்த அறிக்கை.

பத்து ஆண்டுகளில், ‘சிசு மரண விகிதம்’ குறைந்திருக்கிறது என்றாலும், ஊர்ப்புறம், நகர்ப்புறம் என்கிற வேறுபாடு இல்லாமல் தேசிய அளவில், பிறந்த முதலாண்டிலேயே 36 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பதாக 2022 மே மாத அறிக்கை தெரிவிக்கிறது. சிசு மரணம் போலவே குழந்தைகள் மரணமும் கவனத்துக்குரியது, கவலைக்குரியது.

பாகிஸ்தான் தவிர்த்த இந்தியாவின் அண்டைநாடுகளில் சிசு மரண விகிதம் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. வங்கதேசத்தின் சிசு மரண விகிதம் 24 என்றால், நேபாளம் 24, பூடான் 23 என்கிற அளவில் இருப்பதை நாம் உணரவேண்டும். பல்வேறு பிரச்னைகளுக்கு இடையிலும் இலங்கையின் ‘சிசு மரண விகிதம்’ ஆயிரத்தில் ஆறு மட்டுமே. பாகிஸ்தான் (56) நம்மைவிட மோசமாக இருக்கிறது என்று மகிழ்ச்சி அடையாமல், ஏனைய அண்டை நாடுகள் இந்தியாவை முந்துகிறது என்பது குறித்து நாம் கவலைப்பட்டாக வேண்டும்.

இந்தியா பெரிய நாடு, கூடுதல் மக்கள்தொகைகொண்ட நாடு என்றெல்லாம் காரணம் கூறி நாம் தப்பித்துவிட முடியாது. ஏனென்றால், நம்மைப் போலவே அதிகமான மக்கள்தொகையும், நிலப்பரப்பும் கொண்ட பிரேஸில், சீனா உள்ளிட்ட நாடுகளில் குறைந்த, ‘சிசு மரண விகிதம்’ காணப்படுகிறது.

பெரிய மாநிலங்களைவிட சிறிய மாநிலங்களில், ‘சிசு மரண விகிதம்’, குழந்தைகள் மரண விகிதம், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை குறைவாகக் காணப்படுகின்றன. பெரிய மாநிலங்களில் இருந்து பிரிக்கப்பட்ட உத்தரகண்ட், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், தெலங்கானா ஆகியவை உதாரணங்கள். இந்தியாவுக்குள்ளே எடுத்துக்கொண்டாலும் சிசு மரண விகிதத்தில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவின் மாநிலங்கள், ஒன்றிய பிரதேசங்கள் அனைத்தையும் சேர்த்துப்பார்க்கும்போது கேரள மாநிலத்தில் சிசு மரண விகிதம் ஒற்றை இலக்கத்தில் (ஆயிரத்துக்கு ஆறு) உள்ளது. இந்தியாவிலேயே குறைந்த சிசு மரண விகிதம், சிறிய மாநிலமான மிசோரத்தில் (3) காணப்படுகிறது என்றால், வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, மணிப்பூர் ஆகியவற்றிலும் குறைவு. அந்தப் பட்டியலில் கோவாவையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

மனிதவளக் குறியீட்டில் பின்தங்கியிருக்கும் மாநிலங்கள் சிசு மரணத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பின்தங்கியே காணப்படுகின்றன. இந்தியாவிலேயே அதிகமான சிசு மரண விகிதம் (43) மத்திய பிரதேசத்தில்தான். அங்கே நகரங்களுக்கும் ஊரகப்புறங்களுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடும் காணப்படுகிறது. உத்தர பிரதேசத்தின் சிசு மரண விகிதம் 38. கடந்த ஐந்தாண்டுகளாக காட்டப்பட்ட முனைப்பின் விளைவாக மருத்துவமனை பிரசவங்கள் அதிகரித்திருக்கின்றன. அதனால், பிறந்த குழந்தைகளுக்கான உடனடி சிகிச்சைக்கு வழிகோலப்படுகிறது. பிறந்து ஓராண்டுக்குள் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை உத்தர பிரதேச மாநிலத்தில் இப்போது கணிசமாகக் குறைந்திருக்கிறது. குழந்தைகள் நலமாகவும், ஊட்டச்சத்துடனும் வளர்வதற்கு மருத்துவமனை பிரசவங்கள் முக்கியமான காரணி என்பதை நாடு தழுவிய அளவில் தாய்மார்கள் உணரத் தொடங்கியிருப்பது வரவேற்புக்குரிய மாற்றம்.

முதலாவது பிறந்த நாளை காண முடியாமல் குழந்தைகள் உயிரிழப்பதற்கும் பிரசவகால மரணத்துக்கும், சிசு மரணத்துக்கும் தொடர்புண்டு. அடித்தட்டு மக்கள் நிலையில் காணப்படும் படிப்பறிவின்மையும், வறுமையும், விழிப்பு உணர்வு இல்லாமையும் அனைவருக்கும் தெரிந்த காரணங்கள். சாலை வசதிகள் மேம்பட்டிருந்தாலும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் அருகில் இல்லாமையும் மிக முக்கியமான காரணம் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஊட்டச்சத்தின்மை இன்னொரு காரணம். கடுமையான ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக வயிற்றுப்போக்கு, நிமோனியா, மலேரியா உள்ளிட்ட குழந்தைப்பருவ உடல்நிலை பாதிப்புகளால் சிசு மரணம், குழந்தைகள் மரணம் ஏற்படுகின்றன என்று தெரிவிக்கிறது உலக சுகாதார அமைப்பு.

கடுமையான ஊட்டச்சத்துக் குறைவு, குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாமல் செய்துவிடுகிறது. போதாக்குறைக்கு பிரசவ காலத்தில் தாய்மார்கள் ஊட்டச்சத்துள்ள உணவு உட்கொள்ளாததால் எடை குறைவான குழந்தைகள் பிறக்கின்றன. இவையிரண்டும் சேர்ந்துகொள்ளும்போது எதிர்ப்பு ஆற்றலே இல்லாத நிலையில் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

3. அரசுப்பணியாளர் தேர்வாணைய பொறுப்பு தலைவராக சி முனியநாதன் நியமனம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) பொறுப்புத் தலைவராக, தேர்வாணைய உறுப்பினர் சி முனியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வாணையத்தின் தலைவராக இருந்த க பாலச்சந்திரன், வயதடிப்படையில் கடந்த 9 அன்று ஓய்வுற்றார். இதைத்தொடர்ந்து, தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவராக, அதில் ஏற்கெனவே உறுப்பினராக உள்ள ஓய்வுற்ற முன்னாள் இ ஆ ப அதிகாரி சி முனியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

4. இந்தியாவின் 4-ஆவது பெரிய வர்த்தகக் கூட்டாளி ஆப்பிரிக்க ஒன்றியம்

இந்தியாவின் 4-ஆவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக ஆப்பிரிக்க ஒன்றியம் திகழ்கிறது என்று தென் ஆப்பிரிக்காவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமைச் செயல் அதிகாரி சியாம் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு பெட்ரோலியம் பொருள்கள், மருந்துப் பொருள்கள், ரசாயனம், நூல் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேவேளையில், ஆப்பிரிக்காவில் இருந்து காய்கறிகள், கச்சா எண்ணெய், விலை உயா்ந்த கற்கள் உள்ளிட்டவை இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆப்பிரிக்க ஒன்றியத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் மொத்த இறக்குமதியில் நைஜீரியா, அங்கோலா, அல்ஜீரியா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் 61 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.

கானா, தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானாவில் இருந்து விலை உயர்ந்த கற்கள் மற்றும் கண்ணாடிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இது ஆப்பிரிக்க ஒன்றியத்தில் இருந்து செய்யப்படும் இறக்குமதியில் 20 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. இதுதவிர பெனின், சூடான், ஸாம்பியா, மொரோக்கோ, கோட் டிவார்போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து காய்கறிகள், உலோகங்கள், தாதுக்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. கடந்த 2019-20-ஆம் ஆண்டில் இந்தியா-ஆப்பிரிக்கா இடையிலான வர்த்தக மதிப்பு 68.33 பில்லியன் டாலராக (சுமார் `5.33 இலட்சம் கோடி) இருந்தது. உலக வர்த்தகத்தில் அதன் பங்கு 8.52 சதவீதம் ஆகும்.

1. Which social media platform launched SMBSaathi Utsav to support small businesses?

A. Facebook

B. WhatsApp 

C. Twitter

D. Koo

  • WhatsApp India announced an initiative named SMBSaathi Utsav that aims to support small businesses by helping them adopt digital mediums such as the WhatsApp Business App. SMBSaathi Utsav commenced with a pilot in Jaipur where over 500 small businesses are being trained on running their business online. The initiative was launched in collaboration with Josh Talks.

2. Which is the world’s first accreditation body to have its office space in the metaverse?

A. Medical Council of India (MCI)

B. All–India Council for Technical Education (AICTE) 

C. National Assessment and Accreditation Council (NAAC)

D. Quality Council of India (QCI)

  • All–India Council for Technical Education (AICTE) has become the first accreditation body in the world to have its office space in the metaverse. Michigan–based Information Data Systems Inc (IDS) unveiled the outlook of the AICTE in the metaverse. It is a simulated digital environment that uses augmented reality (AR) or virtual reality (VR).
  • IDS launched Bharat Blockchain Network (Academic Blockchain Consortium) and Polyversity (Educational Metaverse) in the presence of Education Minister Dharmendra Pradhan.

3. Which Indian personality has been named the season ambassador of British Council’s ‘India/UK Together 2022, a Season of Culture’?

A. Virat Kohli

B. A R Rahman 

C. Deepika Padukone

D. Pa Ranjith

  • Ace Music Director A R Rahman was named the season ambassador of the British Council’s ‘India/UK Together 2022, a Season of Culture’. The initiative was launched to celebrate India’s 75th anniversary and bilateral relations between the two nations. Under the program, over 1,400 artists from India–UK will showcase collaborations in dance, music, theatre, poetry, literature, visual arts and creative technology.

4. Which Union Ministry launched the ‘Green Open Access Rules 2022’?

A. Ministry of Science and Technology

B. Ministry of Power 

C. Ministry of Electronics and IT

D. Ministry of MSME

  • The Union Ministry of Power has notified the Green Open Access Rules 2022 to accelerate India’s renewable energy programmes. Under the new rules, consumers can demand green power from power distribution companies (Discoms). The green open access is allowed to all consumers and the limit of open access transaction has been reduced from 1 MW to 100 kW for green energy.

5. Which city is the host of the ‘Summit of the Americas – 2022’?

A. New York

B. Washington DC

C. Los Angeles 

D. Chicago

  • US President Biden and dozens of other world leaders gathered at Los Angeles for the ninth Summit of the Americas.
  • The Summit of the Americas is organised about every three years and brings together representatives from countries in the Western region to tackle issues such as immigration, trade and poverty. Former President Bill Clinton hosted the first summit in 1994 in Miami.

6. What is Q–CHAMP that was in discussion recently?

A. Related to sports

B. Related to COVID–19

C. Related to terror attack

D. Related to climate change 

  • Recognizing the urgent need to address climate change, on May 24, 2022, the leaders of the Quad (Quadrilateral Security Dialogue) launched the “Quad Climate Change Adaptation and Mitigation Package (QAAP)” with ‘mitigation’ and ‘adaptation’ as two themes. The launch of Q–CHAMP was announced by Prime Minister Narendra Modi, US President Joe Biden, Japanese Prime Minister Fumio Kishida and his Australian counterpart Anthony Albanese at the end of the second individual QUAD summit that was attended.

7. When is World Thyroid Day observed every year?

A. May 25

 B. May 27

C. May 29

D. May 30

  • World Thyroid Day is observed every year on 25 May. It aims to promote understanding related to thyroid disease, its symptoms and treatment. World Thyroid Day was first observed in the year 2008 by resolution of the European Thyroid Association (ETA).

8. When is the ‘World Day for Cultural Diversity for Dialogue and Development’ celebrated?

A. May.21 

B. May.22

C. May.23

D. May.24

  • In 2001, UNESCO adopted the Universal Declaration on Cultural Diversity. In December 2002, the UN General Assembly declared May 21 to be the World Day for Cultural Diversity for Dialogue and Development. The Day highlights not only the greatness of the world’s cultures, but also the role of intercultural dialogue for achieving peace and sustainable development. The UN General Assembly unanimously adopted the resolution on Culture and Sustainable Development in 2015.

9. Which country has topped the Travel and Tourism Development Index 2021?

A. South Korea

B. Japan 

C. Hong Kong

D. Singapore

  • Japan has topped the Travel and Tourism Development Index 2021, followed by the United States, Spain, France and Germany. India is ranked 54th with a score of 4.2 which is eight less than 2019.

10. Mohinder K Midha, who was in news recently, belongs to which country?

A. United Kingdom 

B. France

C. Germany

D. USA

  • Councilor Mohinder K Midha, an Indian–origin politician of Britain’s opposition Labor Party, has been elected mayor of Ealing Council in west London. She has become the first woman mayor of a local London council belonging to the Dalit community.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!