12th & 13th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

12th & 13th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 12th & 13th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

12th & 13th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தம், நியூசிலாந்துக்கும் எந்நிறுவனத்துக்கும் இடையேயான விண்வெளி ஆய்வுக்கான ஒப்பந்தமாகும்?

அ) ROSCOSMOS

ஆ) ISRO

இ) NASA

ஈ) ESA

 • நியூசிலாந்து, NASA உடனான விண்வெளி ஆய்வு ஒப்பந்தத்தில் கையெ -ழுத்திட்டுள்ளது. இதன்மூலம், ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பதினொன்றாவது நாடாக நியூசிலாந்து திகழ்கிறது. வரும் 2024ஆம் ஆண்டளவில் மனிதர்களை நிலவுக்கும், மேலும் செவ்வாய் கோளுக்கும் அனுப்பும் திட்டத்தின் ஒருபகுதியாக NASA உடனான இந்த ஒப்பந்தம் உள்ளது.

2. அண்மையில் அறிவிக்கப்பட்ட H10N3 என்பது எதன் திரிபு?

அ) பறவைக்காய்ச்சல்

ஆ) கொரோனா வைரஸ்

இ) ஆந்த்ராக்ஸ்

ஈ) பன்றிக்காய்ச்சல்

 • H10N3 எனப்படும் அரிய பறவைக்காய்ச்சலின் முதல் மனித நோய்த்தொ -ற்றை சீனா தெரிவித்துள்ளது. இந்தப்பாதிப்பு, 41 வயதுடைய நபருக்கு ஏற்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தால் உறுதிப்படு -த்தியுள்ளது.
 • இப்பறவைக்காய்ச்சல் திரிபானது குறைந்த நோய்ப்பரவல் தன்மையை கொண்டுள்ளது. அதாவது ஒப்பீட்டளவில் கோழிப்பண்ணையில் ஏற்படுத்தும் தொற்றைவிட குறைவான தொற்றையே இது ஏற்படுத்துகிறது. உலகில் வேறெங்கும் இது பாதித்தாக இதுவரை பதிவாகவில்லை.

3.‘Ecowrap’ என்ற பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள வங்கி எது?

அ) பாரத வங்கி

ஆ) பஞ்சாப் தேசிய வங்கி

இ) ஆக்ஸிஸ் வங்கி

ஈ) HDFC வங்கி

 • பாரத வங்கி (SBI) தனது பொருளாதார ஆய்வறிக்கையான ‘Ecowrap’இல் 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.9%ஆக உயரும் எனக் கணித்துள்ளது. முன்னர் இவ்வறிக்கை 10.4% வளர்ச்சி இருக்கும் எனக் கணித்திருந்தது. COVID-19 தொற்றுநோயின் இரண்டாம் அலையின் காரணமாக கணிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது.

4. ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகாவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) பூப்பந்து

ஆ) டென்னிஸ்

இ) வில்வித்தை

ஈ) பளு தூக்குதல்

 • முன்னணி டென்னிஸ் சாம்பியனும், உலகின் நெ.2 வீராங்கனையுமா -ன நவோமி ஒசாகா, பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகுவதாகவும், களத்திலிருந்து சிறிதுகாலம் விலகியிருக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளா -ர். மனநல காரணங்களுக்காக, போட்டிக்கு பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்புகளை புறக்கணிப்பதாக அவர் பதிவிட்டிருந்தார். இதையொட்டி, போட்டி அமைப்பாளர்கள் அவருக்கு அபராதம் விதித்தனர்.

5. நடப்பாண்டின் உலக பால் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Sustainability in the dairy sector

ஆ) Milk for All

இ) Leaving No one Behind

ஈ) Milk and SDG

 • ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.1 அன்று, ஐநா அவையின் உணவு & உழவு அமைப்பு உலக பால் நாளை அனுசரிக்கிறது. உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்கும், பால் தொழிற்துறையை போற்றுவதற்குமாக, இந்நாள், முதன்முதலில் கடந்த 2001ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. “Sustainability in the dairy sector” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

6. கோவா குறித்த அண்மைய செய்திகளின் சூழலில், ‘GIFT’ என்ற சுருக்கம் பின்வரும் எதைக்குறிக்கிறது?

அ) Goa Institution For Future Transformation

ஆ) Goa Institution For Financial Transformation

இ) Goa Institution For Fin Tech

ஈ) Goa Institution For Foreign Affairs

 • கோவா மாநில அரசானது Goa Institution For Future Transformation (GIFT) என்ற பெயரில் ஒரு மதியுரையகத்தை அமைத்துள்ளது. இந்த நிறுவனம், கொள்கைசார்ந்த பல்வேறு விஷயங்கள் மற்றும் நலன்புரி முடிவுகளில் கோவா மாநில அரசுக்கு உதவும், அறிவுறுத்தும் மற்றும் வழிகாட்டும். GIFT’இன் செயல்பாடுகள் NITI ஆயோகின் செயல்பாடுகளுக்கு மிகவும் ஒத்ததாக இருக்கும்.

7. தற்போதைய இரண்டு குழந்தைகள் வரம்பை மீறி, சமீபத்தில், 3 குழந்தைகளுக்கான கொள்கையை கொண்டுவந்துள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ) ஜப்பான்

ஈ) சீனா

 • கடந்த 2016ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தற்போதைய இரண்டு குழந்தைகள் வரம்பைமீறி, தம்பதியினர் மூன்று குழந்தைகளைப் பெற அனுமதிப்பதாக சீனா அறிவித்துள்ளது. நாட்டின் பிறப்பு விகிதங்கள் சரிவை பதிவுசெய்துள்ளதை அடுத்து சீன அரசாங்கத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

8. நடப்பாண்டின் (2021) P4G உச்சிமாநாட்டை நடத்திய நாடு எது?

அ) இந்தியா

ஆ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ) தென் கொரியா

ஈ) வட கொரியா

 • P4G – Partnering for Green Growth and the Global Goals – 2030 உச்சிமாநாட்டை கொரிய குடியரசு / தென் கொரியா நடத்தியது. அது சியோலில் நடத்தப்பட்டது.
 • நீடித்த மற்றும் நெகிழ்வான பொருளாதாரங்களை உருவாக்குவதற்காக சந்தை அடிப்படையிலான கூட்டாண்மைகளை மேம்படுத்துவதற்கான நிகழ்வு இதுவாகும். “Inclusive Green Recovery Towards Carbon Neutrality” என்பது இந்த நிகழ்வின் கருப் பொருளாகும்.

9. “தோட்டக்கலை தொகுதி மேம்பாட்டு திட்டத்தை” செயல்படுத்தும் நிறுவனம் எது?

அ) உணவு மற்றும் உழவு அமைப்பு

ஆ) தேசிய தோட்டக்கலை வாரியம்

இ) NABARD

ஈ) உணவுப்பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

 • மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “தோட்டக்கலை தொகுதி மேம்பாட்டு திட்டத்தை” தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம், 11 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 12 தொகுதிகளில் முன்னோட்ட அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இனங்காணப்பட்ட தோட்டக்கலை தொகுதிகளை உலகளாவிய போட்டிக்கு உட்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ள இந்தத் திட்டம் தேசிய தோட்டக்கலை வாரியத்தால் செயல்படுத்தப்படுகிற ஒரு மத்திய துறை திட்டமாகும்.

10. COVID-19 பின்னணியில், ‘கப்பா’ & ‘டெல்டா’ என்றால் என்ன?

அ) COVID பரவலுக்கு எதிரான புதிய நடவடிக்கை

ஆ) COVID திரிபுகளுக்கான புதிய பெயர்கள்

இ) COVID பாதிப்பு விகிதத்தில் புதிய வகைப்பாடு

ஈ) புதிய உலகளாவிய தடுப்பூசி முன்னெடுப்பு

 • COVID-19 தொற்றின் பல்வேறு திரிபுகளுக்கு கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி புதிய பெயர்களை உலக நலவாழ்வு அமைப்பு அறிவித்துள் -ளது. உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் முதன்மு -தலில் காணப்பட்ட COVID திரிபு (B.1.617.2) டெல்டா என குறிப்பிடப்படும், அதேசமயத்தில் நாட்டில் முன்னர் காணப்பட்ட திரிபு (B.1.617.1) கப்பா என அறியப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. எழும்பூர் இரயில்நிலையத்தின் 113ஆவது பிறந்தநாள்

சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தின் 113ஆவது ஆண்டு பிறந்தநாள் ஜூன்.11 அன்று கொண்டாடப்பட்டது.

தென்மாவட்டங்களை இணைக்கும்: சென்னை நகரத்தில் 4 நகரங்களுக்கு இடையேயான இரயில்வே முனையங்களில் ஒன்றாக எழும்பூர் இரயில் நிலையம் திகழ்கிறது. சென்னையை தமிழ்நாட்டின் தென் மாவ -ட்டங்களை இணைக்கும் முனையமாக இது உள்ளது.

தென்தமிழ்நாட்டின் நுழைவு வாயிலாக திகழும் இந்த இரயில் நிலையம் ஒரு நூற்றாண்டு கடந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து, தற்போது கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது.

நிலையத்தின் வரலாறு:

இந்நிலையத்தின் கட்டடப்பணி முடிந்து, 1908 ஜூன்.11 அன்று திறக்கப்ப -ட்டது. இந்தக் கட்டடத்தின் பொறியாளராக ஹென்றி இர்வின் இருந்தார். இக்கட்டடம் கட்டுவதற்கான ஒப்பந்ததாரராக சாமிநாத பிள்ளை என்பவர் செயல்பட்டார். `17 இலட்சம் செலவில் 300 அடி நீளம், 71 அடி அகலத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தின் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டது. தரைத்தளம், முதல்தளத்துடன் இந்தக்கட்டடம் அமைக்கப்பட்டது.

இந்நிலைய கட்டடம் முடிந்த பிறகு, எழும்பூரிலிருந்து தனுஷ்கோடிக்கு போர்ட் மெயில் இரயில் இயக்கப்பட்டது. இந்த இரயில் நிலையத்தில் 3 நடைமேடைகளும், ஒரு நடைமேம்பாலமும் இருந்தது. இதன்பிறகு, பல்வேறு காலகட்டத்தில் வளர்ச்சியடைந்து, இப்போது 11 நடைமேடைகள் இருக்கின்றன. இரயில் நிலையத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, மீண்டும் நன்னீராக மாற்றி, நடைமேடை உள்பட பல்வேறு இடங்களில் சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள 70 இரயில் நிலையங்களுக்கு பயணிகள் வசதிகளுக்காக தலா `20 கோடி ஒதுக்கீடு செய்ய இரயில்வே வாரியம் அறிவித்தது.

இதில், எழும்பூர் இரயில் நிலையமும் ஒன்றாகும். பயணிகளின் வசதிக் -காக பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாக, பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளன.

விரைவு இரயில்கள்: எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து தினமும் 50’க்கும் அதிகமான விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதுதவிர, தாம்பரம்-கடற்கரை மற்றும் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் 250 மின்சார இரயில்கள் எழும்பூர் இரயில் நிலையம் வழியாக செல்லும்.

விரைவு மற்றும் மின்சார இரயில்களில் பயணம் செய்வதற்காக தினமும் சுமார் 1,20,000 பயணிகள் வந்து செல்வார்கள். இந்த எண்ணிக்கை பண்டிகை காலங்கள், விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் வேளைகளில் அதிகமாக இருக்கும். தற்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாக, மின்சார இரயில்கள் மற்றும் சிறப்பு இரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன.

2. வேளாண் இயந்திரமயமாக்கல்: தமிழ்நாடு, ஆந்திரம் முன்னிலை

வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் பயன்பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடும் ஆந்திரமும் முன்னிலையில் உள்ளன. இந்தத் திட்டத்தின்மூலம் உழவர்களின் வருமானம் பெருகி, வேளாண் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளித்துள்ளது என மத்திய வேளாண் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வேளாண்துறை கூறியுள்ளதாவது: சிறு, குறு விவசாயிகளின் வேளாண்மைகளில் இயந்திரமயமாக்கலின் வரம்பை அதிகரிக்கும் நோக்கில் மத்திய வேளாண்துறை 2014-15 நிதி ஆண்டில் ‘வேளாண் இயந்திரமயமாக்கல்’ என்கிற துணைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நிலங்களின் பயன்பாடு, நீர்வளங்கள் போன்றவற் -றைத் திறம்பட பயன்படுத்தி வேளாண் தொழிலை ஒரு இலாபகரமாக மாற்றுவதிலும் ஊரகப்பகுதி இளைஞர்கள் இந்தத் தொழிலார்வத்துடன் பங்கேற்கவும் இயந்திரமயமாக்கல் முக்கியத்துவம் பெறுகிறது.

வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள், நவீன வேளாண்மைக்கு உரிய உள்ளீடுகள், உயர்தொழில்நுட்பம் மையங்கள், வேளாண் எந்திர வங்கிகள் ஆகியவற்றிற்கு மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு நிதியுதவிகளை வழங்கியது. இதன்மூலம் மனித துயரங்கள், சாகுபடிச் செலவுகள் குறைந்து பயிர்களின் உற்பத்தித்திறன் மேம்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தால் விவசாயிகள் வருமானம் அதிகரித்து வேளாண் பொருளாதார வளர்ச்சி ஊக்கவிக்கப்பட்டுள்ளன.

2014-15 முதல் 2020-21ஆம் ஆண்டு வரை ஆந்திரத்திற்கு `621.23 கோடி, தமிழகத்துக்கு `421.65 கோடி வேளாண் கூட்டுறவு மற்றும் உழவர்கள் நலத்துறைமூலம் நிதி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு 2021-22 நிதியாண்டில் முதல்தவணையாக `21.74 கோடி வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத்திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 269 வேளாண் இயந்திரங்கள் மற்றும் சாதனங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், 115 வேளாண் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்படும். 10 உயர்தொழில்நுட்ப மையங்கள் மற்றும் 100 விவசாய இயந்திர வங்கிகள் கிராம அளவில் அமைக்கப்படுகின்றன.

இந்த நிதியைப் பெற்ற 11 மாநிலங்களில் கேரளம் `89.94 கோடி, உத்தர பிரதேசம் `294.74 கோடி பெற்றுள்ளன. குறைவாக பெற்ற மாநிலமாக மேற்கு வங்கம் (`53.81 கோடி) உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. வண்டலூர் பூங்காவில் குட்டி ஈன்றது சிம்பன்ஸி

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட் -டு வரும் சிம்பன்ஸி குட்டி ஈன்றது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானை, சிங்கம், புலி உள்ளிட்ட 2,500’க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், கடந்த 2005ஆம் ஆண்டு, சிங்கப்பூர் உயிரியல் பூங்காவிலிருந்து இணை சிம்பன்ஸிகள் வாங்கப்பட்டன. அவ்வாறு வாங்கப்பட்ட கோம்பி (28) என்ற ஆண் சிம்பன்ஸியும், கெளரி (23) என்ற பெண் சிம்பன்ஸியும் நன்முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன.

ஆப்பிரிக்க கண்டத்தில் வாழும் இவ்வகை சிம்பன்ஸியானது அழியும் நிலையில் உள்ளதாக பன்னாட்டு வனவுயிரின பாதுகாப்பு அமைப்பு வரையறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

4. கருப்புப் பூஞ்சை மருந்துக்கு GST இரத்து:

கருப்புப்பூஞ்சை தொற்றுக்குப் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின் பி மருந்துக்கு GST ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். நிர்மலா சீதாராமன் தலைமையிலான GST கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு மருத்துவப்பொருள்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. ஆம்போடெரிசின் பி மற்றும் டோசிலிசுமாப் மருந்து -களுக்கு விதிக்கப்பட்டு வந்த 5% GST இரத்து செய்யப்பட்டுள்ளது.

ரெம்டெசிவிர் மற்றும் ஹெபரின் போன்ற மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவத் -துக்குப் பயன்படுத்தப்படும் உயிர்வளி, உயிர்வளி செறிவூட்டிகள், செயற் -கை சுவாச வழங்கி உள்ளிட்ட சாதனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பல்ஸ் ஆக் -சிமீட்டர், சானிடைசர்ஸ், வெப்பபரிசோதனை கருவி உள்ளிட்டவற்றின் ஜிஎஸ்டியும் 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

5. கரோனாவால் உயிரிழந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு நிதியுதவி: வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகள் சிறப்பு நிதித்திட்டத்தின்கீழ் பயன்பெற முடியாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மற்றவர்கள் இந்த உதவியைப் பெறுவதற்கா -ன வயது வரம்பு 18’க்குக் கீழே இருக்க வேண்டும். கரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவிகள் வழங்கு -வது தொடர்பான தனித்த வழிகாட்டு நெறிமுறைகளை சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறைக்கான முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்டார். அதன் விவரம்:

கரோனா நோய்த்தொற்றால் பெற்றோர் அல்லது தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைக்கு `5 லட்சம் வைப்பீடு செய்யப்படும். இந்தத் தொகை அவர்கள் 18 வயது நிறைவடையும்போது வட்டியோடு சேர்த்து திருப்பித் தரப்படும். ஏற்கெனவே, தாய் அல்லது தந்தையை இழந்து, இப்போது கரோனா நோய்த்தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்திருந்தால் அவர்களுக்கும் `5 இலட்சம் வைப்பீடு செய்யப்படும். 18 வயது பூர்த்தியா -னவுடன் வட்டியுடன் தொகை அளிக்கப்படும்.

அத்தகைய குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் இல்லங்கள், விடுதிகளில் சேருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். குழந்தைகள் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரையிலும் அவர்களுக்கான கல்வி மற்றும் விடுதிச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திட நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் குழு அண்மையில் கூடி ஆலோசித்தது. அதன்படி, வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

என்னென்ன நடைமுறைகள்? கரோனா நோய்த்தொற்று காரணமாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் முதலில் அடையாளம் காணப்படுவர். இதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனியாகக்குழு அமைக்கப்படு -ம். மாவட்டங்களில் உள்ள சுகாதாரத்துறைமூலமாக இறப்புச்சான்றிதழ் போன்ற ஆவணங்கள் சரிபார்க்கப்படும். சம்பந்தப்பட்ட ஆவணங்களை வைத்து குடும்பத்தாரிடம் நேரிலும் விசாரணை நடத்தப்படும். கரோனா காரணமாக வீட்டிலேயே பெற்றோரின் இறப்புநேரிடலாம். அப்போது, சம்பந்தப்பட்ட குழந்தையின் பாதுகாவலர் அல்லது தாய் அல்லது தந்தை ஆகியோரில் ஒருவர், தங்களிடம் இருக்கும் மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் இறப்புச்சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்.

கரோனா காரணமாகத்தான் இறந்தார் என்பதற்கான சான்று ஆவணங் -களாக அவை இருக்கவேண்டும். குறிப்பாக, RT-PCR பரிசோதனை, ஸ்கேன், X-கதிர் பரிசோதனை ஆகியவையாக இருக்கலாம்.

18 வயதுக்குள் இருக்க வேண்டும்: கரோனா காரணமாக பெற்றோர், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளின் வயது 18 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டும். பெற்றோரை இழந்திருக்கும் பட்சத்தில் ஆண்டுவருமானம் ஏதும் கணக்கில் கொள்ளப்படாமல் சம்பந்தப்பட்ட குழந்தைக்கு அரசு நிதி அளிப்பதுடன், கல்விச்செலவும் ஏற்கப்படும்.

பெற்றோரில் தாய் அல்லது தந்தை இறந்திருக்கும் பட்சத்தில், அந்த நபர் வருமானம் ஈட்டியவராக இருந்தால் அவரது பெயர் வறுமைக் கோட்டுக் -குக்கீழ் உள்ளவர்களின் பட்டியலில் இருக்கிறாரா என ஆராயப்படும். இந்தப் பட்டியல் தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகத்திடம் உள்ளது. அந்தப் பட்டியலில் பெயர் இல்லாத பட்சத்தில் வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களின் பட்டியலில் இடம்பெறுவதற்கான தகுதி இருக்கிறதா என ஆராயப்பட்டு பட்டியலில் சேர்க்கப்படும்.

அரசு ஊழியர் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி கிடையாது: பெற்றோர், தாய் அல்லது தந்தை அரசு ஊழியராகவோ, பொதுத்துறை நிறுவன பணியாளராகவோ இருப்பின் அந்தக் குழந்தை அரசின் சிறப்பு நிதி மற்றும் கல்விச் செலவு சலுகையைப் பெற முடியாது.

தனியார் பள்ளி: குழந்தைகள் எந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கி -றார்களோ அதே பள்ளியில் தொடர்ந்து படிக்கலாம். அது, அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளியாக இருக்க வேண்டும். தனியார் பள்ளியாக இருந்தால், கல்வி உரிமைச்சட்ட விதியின்கீழ் அப்பள்ளிக்கு கல்விக்கான கட்டணத்தொகை அளிக்கப்படும். இந்தத்தொகையானது PM-CARES அல்லது மாநில அரசின் நிதியிலிருந்து கொடுக்கப்படும். குழந்தைகளுக்கு உரிய பள்ளிச்சீருடைகள், நூல்கள் ஆகியனவும் அதே நிதியின் வழியாக அளிக்கப்படும். பள்ளிப்படிப்பு முடிந்ததும் இளநிலை பட்டப்படிப்பு வரையி -லான அனைத்து செலவையும் அரசே ஏற்கும். அரசு வழங்கும் இலவச கல்வியை ஏற்காத பட்சத்தில், இளநிலை கல்விக்கான செலவினை வங் -கிக்கடனை வழியாகப் பெற்று படிக்கலாம். இதற்கான வட்டித் தொகை -யை அரசே ஏற்றுக்கொள்ளும்.

கண்காணிப்புக் குழு: இந்தத் திட்டத்தை மாவட்டங்களில் கண்காணித்து செயல்படுத்த ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினர் செயலாளராக, மாவட்ட குழந்தைகள்நல அலுவலர் இருப்பார். முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், குழந்தைகள் நல குழுவின் உறுப்பினர், தன்னார்வ தொண்டு நிறுவனத் -திலிருந்து ஒருவர் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக இருப்பர் என்று தனது உத்தரவில் ஷம்பு கல்லோலிகர் தெரிவித்துள்ளார்.

6. இந்திய கடலோரக் காவல்படையில் Mk-3 அதிநவீன இலகு இரக ஹெலிகாப்டர்கள் சேர்ப்பு

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர் Mk-3, இந்திய கடலோரக் காவல்படையில் சேர்க்கப்பட்டது. “தற்சார்பு இந்தியா” திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டவை இந்த ஹெலிகாப்டர்கள். இந்த நவீன ஹெலிகாப்டர்களை பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த இலகு ரக ஹெலிகாப்டர்கள் படையில் இணைக்கப்பட்டிருப்பதன் மூலம் கப்பல் சார்ந்த நடவடிக்கைகள், கண்காணிப்புப்பணிகளில் புதிய மாற்றம் ஏற்படும். விமானங்கள் மற்றும் கப்பல்களுடன் ஒருங்கிணைந்து குறிப்பிட்ட பகுதிகளில் சேவைகளின் திறனை வலுப்படுத்துவதற்காக இந்த ஹெலிகாப்டர்கள் பணியில் அமர்த்தப்படும் என்றார் அவர்.

சென்னை, புவனேசுவரம், கொச்சி மற்றும் போர்பந்தரில் உள்ள இந்திய கடலோரக் காவல்படை பிரிவுகளில் 16 Mk-3 ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்படவுள்ளன.

7. 1,50,000 ஆரம்ப, துணை சுகாதார நிலையங்கள் ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களாக மாற்றப்படும்: மத்திய அரசு

அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் 1,50,000 துணை சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள் ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நல மையங்களாக மாற்றப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது: கடந்த மார்ச்.31ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் கிராமப்புறங்களில் 1,55,404 துணை சுகாதார மையங்களும், 24,918 ஆரம்ப சுகாதார மையங்களும், நகர்ப்புறங்களில் 5,895 ஆரம்ப சுகாதார மையங்களும் உள்ளன.

அம்மையங்களில் விரிவான மருத்துவ சேவைகள் அளிக்கப்படும். துணை சுகாதார மையங்களில் 14 நோய் கண்டறிதல் பரிசோதனைகளு -ம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 63 நோய் கண்டறிதல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. துணை சுகாதார மையங்களில் 105 அத்தியாவசிய மருந்துகள், ஆரம்ப சுகாதார மையங்களில் 172 அத்தியாவசிய மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. சஞ்சீவனி தளம்மூலம் 60 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனைகள் பெற்றுள்ளனர். அவர்களில் 26.42 இலட்சம் பேருக்கு சுகாதார மற்றும் நல மையங்கள்மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. இந்திய வம்சாவளி செய்தியாளர்களுக்கு புலிட்ஸர் பரிசு

இந்த ஆண்டுக்கான அமெரிக்காவின் புலிட்ஸர் பரிசுக்கு, இந்திய வம்சா -வளியைச் சேர்ந்த இரு செய்தியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஊடகத் துறைக்கான அமெரிக்காவில் மிக உயரிய விருதான புலிட்ஸர் விருதை, இந்திய வம்சாவளியைச்சேர்ந்த இருவர் இந்த ஆண்டு வென்றுள்ளனர்.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் தடுப்பு முகாம் குறித்து புதுமையான முறையில் செய்திகள் சேகரித்து வெளிப்படுத்திய இந்திய வம்சாவளி செய்தியாளர் மேகா ராஜகோபாலன் இப்பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ‘புஸ்பீட் நியூஸ்’ இணைய தள செய்தி ஊடகத்தில் அவர் பணியாற்றி வருகிறார். இதுதவிர, டம்பா பே டைம்ஸ் இதழில் பணியாற்றிவரும் நீல் பேடியும் இந்த ஆண்டுக்கான புலிட்ஸர் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர், சக செய்தியாளரான கேதலீன் மெக்கிரோரியுடன் சேர்ந்து இந்தப்பரிசை வென்றுள்ளார்.

எதிர்காலத்தில் குற்றவாளிகளாகக்கூடியவர்கள் என்று சந்தேகிக்கப்படுவர்கள்குறித்து கணனி முறையில் கண்டறியும் உள்ளூர் காவல் அலுவலகத்தின் சர்ச்சைக்குரிய முயற்சிகள்குறித்து செய்திகள் வெளியிட்டமைக்காக அவர்களுக்கு புலிட்ஸர் விருது வழங்கப்படுகிறது என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

8. சமூக செயல்பாட்டுக்காக TNPL ஆலைக்கு தங்கமயில் விருது

கரூர் மாவட்டம் புகழூர் TNPL ஆலைக்கு தங்கமயில் விருது கிடைத்துள்ளது. இன்ஸ்டிட்யூட் ஆப் டைரக்டர்ஸ் நியு தில்லி என்ற அமைப்பானது ஒவ்வோர் ஆண்டும் வேளாண்மை, எண்ணெய் உற்பத்தி, பொறியியல், புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் உற்பத்தி, வங்கித்துறை, சிமெண்ட், காகித உற்பத்தி, சுரங்கம் மற்றும் உலோகம் போன்ற நிறுவனங்களில் சமுதாய பொறுப்புணர்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் நிறுவனத்தை உலக அளவிலும், தேசிய அளவிலும் தேர்வுசெய்து தங்கமயில் விருதை வழங்கி வருகிறது.

இந்நிலையில், கரூர் மாவட்டம் புகழூர் TNPL ஆலையானது, ஆலையை சுற்றியுள்ள கிராமங்களைச்சேர்ந்த நலிவுற்ற சமுதாய குழந்தைகளுக்கு இலவசக்கல்வி வழங்குதல், அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆங்கி -லம் பேச்சுத்திறன் பயிற்சி அளித்தல், இலவச மருத்துவ முகாம்கள், கண் மருத்துவ முகாம்கள் நடத்தி தேவையான உதவிகள் வழங்குதல், அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குதல், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல், கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குதல், ஏரி குளங்கள், கால்வாய்கள் தூர்வாரல், மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் போன்ற எண்ணற்ற சமுதாய நலப்பணித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

2020ஆம் ஆண்டுக்கான சமுதாய பொறுப்புணர்வுக்காக வழங்கப்படும் தங்கமயில் விருதுக்கு தேசிய அளவில் புகழூர் காகித (TNPL) ஆலை தேர்வு செய்யப்பட்டது.

9. தடுப்பூசி செலுத்தினாலும் தற்காப்பு அவசியம்!

கரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்கள் அலட்சியத்துடன் செயல்படாமல் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும் என்று மருத்து -வர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருமுறை தடுப்பூசி செலுத்தினாலும் கூட தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இருந்தபோதிலும் தடுப்பூசிகள் செலுத்தியவர்களுக்கு கரோனா பாதிப்பு குறைவாக இருப்பதும், இறப்புநேரிடுவதில்லை என்பதும் ஆதாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தடுப்பூசிகள்…

கோவிஷீல்ட்: பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் மற்றும் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தால் கண்டறியப்பட்டது கோவிஷீல்ட் தடுப்பூசி. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் உள்நாட்டுத் தேவைக்காக அவை உற்பத்தி செய்யப்படுகின்றன. மாதந்தோறும் 6 கோடி தடுப்பூசிகள் அங்கு தயாரிக்கப்படுகின்றன.

சிம்பன்ஸியிலிருந்து பெறப்பட்ட வீரியம் குறைக்கப்பட்ட தீநுண்மியை (அடினோ வைரஸ்) மரபணுரீதியாக சில மாற்றங்கள் செய்து அதனை மனித உடலுக்குள் செலுத்தும் நுட்பத்தில் உருவாக்கப்பட்டது கோவி ஷீல்ட் தடுப்பூசி. முதல் தடுப்பூசிக்கும் இரண்டாவது தடுப்பூசிக்கும் இடையேயான கால இடைவெளி 12 வாரங்கள்.

கோவேக்ஸின்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூலம் இத்தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. செயலிழந்த கரோனா தீநுண்மியை மருத்துவ நுட்பத்தில் உரிய மாற்றங்கள் செய்து உடலில் செலுத்தும் வகையில் இந்த தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. முதல் தடுப்பூசிக்கும் இரண்டாவது தடுப்பூசிக்குமான கால இடைவெளி 4 வாரங்கள்.

ஸ்புட்னிக் வி: ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த வகை தடுப்பூசியும் அடினோ வைரஸ் தொழில்நுட்பத்திலானவைதான். இந்தியாவைப் பொருத்தவரை ஹைதராபாதில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகத்தில் இத்தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அத்தடுப்பூசிகள் இருப்பில் இருந்தாலும் அவற்றின் பயன்பாடு இன்னமும் பரவலாக்கப்படவில்லை.

ஏன் தேவை தடுப்பூசி? பொதுவாக மனித உடலுக்குள் எந்த வகை கிருமி நுழைந்தாலும், அதனை விரட்டக்கூடிய எதிர்ப்புசக்தி தானாக உருவாகு -ம். அதுபோலத்தான் கரோனாவுக்கு எதிரான எதிர்ப்பாற்றலும் உருவா -கின்றன. பொதுவாக எவருக்கும் வாழ்நாள் முழுவதும் நிரந்தரமாக எதி -ர்ப்பாற்றல் உடலில் இருந்துகொண்டே இருப்பதில்லை. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அது மறைந்துவிடும்.

அதேவேளையில், உடலில் உள்ள பி-செல்கள் மற்றும் டி-செல்கள் அந்த எதிர்பாற்றலை நினைவில் வைத்திருக்கும். மீண்டும் அத்தகைய தீ நுண்மி உடலுக்குள் நுழைந்தால் உடனடியாக அவை செயல்பட்டு எதிர் -ப்பாற்றலை உருவாக்கிவிடும். அவ்வகையில் தடுப்பூசிகள் செலுத்துவத -ன்மூலம் நோய் பாதிப்பின்றி உடலில் எதிர்ப்பாற்றல் உருவாகிவிடும். அதன்பின்னர் தீநுண்மி தாக்கினாலும்கூட எதிர்ப்பாற்றல் தூண்டப்பட்டு நோய்வராமல் காக்கும்.

எப்போது எதிர்ப்பாற்றல் உருவாகும்? பொதுவாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திய 3 வாரங்களுக்குப்பிறகு உடலில் நோய் எதிர்ப்பாற்றல் உருவாகும். கரோனாவுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் உருவாகியுள்ள -தா என்பதை IGG என்ற இரத்தப்பரிசோதனைமூலம் கண்டறியலாம். ஒரு மில்லி ரத்தத்தில் எத்தனை ஆர்ப்பிட்டரி யூனிட்ஸ் (AU) எனப்படும் எதிர்ப்பாற்றல் உள்ளது என்பதை அதில் அறியலாம்.

தடுப்பூசிக்குப் பிறகும் அவசியம் தேவை

முகக்கவசம், கைகள் தூய்மை, தனி நபர் இடைவெளி, ஊட்டச்சத்துமிக்க உணவுகள், குறைந்தது 7 மநேர தூக்கம் உடற்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி, இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தக்கட்டுப்பாடு மற்றும் மது, புகைப்பழக்கங்கள் இல்லாமை.

எவருக்கெல்லாம் தடுப்பூசி கூடாது? கரோனா சிகிச்சையிலிருப்போர், கரோனா அறிகுறிகள் காணப்படுவோர், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், தடுப்பூசியால் கடுமையான ஒவ்வாமைக்குள்ளாவோர் மற்றும் குழந்தைகள்.

தடுப்பூசிகள் செயல்திறன்

1) கோவிஷீல்ட் – 70 சதவீதம்.

2) கோவேக்ஸின் – 81 சதவீதம்.

3) ஸ்புட்னிக் வி – 90 சதவீதம்.

10. அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையத்தில் பயின்றால் போதும் ஓட்டுநர் உரிமம் பெறலாம்: ஜூலை 1 முதல் புதிய விதி அமல்

ஜூலை.1 முதல் ஓட்டுநர் உரிமம்பெற அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் முறையாகப் பயிற்சியை முடித்தாலே போதுமானது என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தப்புதிய விதிமுறை வரும் ஜூலை.1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத்தெரிகிறது.

புதிய விதிமுறையால், சிறப்புப்பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் கிடைப்பார்கள் இதனால் சாலை விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டார் வாகன திருத்தச் சட்டம், 2019’இன் 8ஆம் பிரிவின்படி ஓட்டுநர் பயிற்சிப்பள்ளிகளின் அங்கீகார விதிகளை மாற்ற முடியும். அதன்படியே இந்தப் புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்தப்புதிய விதிமுறையின்படி அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையங்களின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

1. இத்தகைய மையங்களில் பயிற்சியாளார்களுக்கு உயர்தர பயிற்சி அளிக்கும் வகையில் பிரத்யேக ஓடுதளங்கள் இருக்கும். இதனால், சிறப்பான பயிற்சி உறுதிசெய்யப்படும்.

2. இந்த மையங்கள் மூலம் மோட்டார் வானச் சட்டம் 1988ன் படி, ஒரு வாடிக்கையாளர் தனது வண்டி ஓட்டும் திறனை புதுப்பித்துக் கொள்ளும் வகையிலும் பயிற்சிகளை வடிமைக்கலாம்.

3. இத்தகைய அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுபவர்கள் RTO அலுவலகத்தில் உரிமம் வழங்கப்படும்போது நடத்தப் -படும் தேர்வுகளில் பங்கேற்கத் தேவையில்லை. இதனால், பயிற்சி முடிந்தவுடனேயே வாகன ஓட்டிகளுக்கு உரிமம் கிடைத்துவிடும்.

4. அதேபோல் இந்த மையங்களில் தொழிற்சாலைகளுக்கான வாகனங் -களை இயக்கும் வகையிலும் பிரத்யேக பயிற்சியளிக்கப்படும். இதனால், பிரத்யேக, சிறப்பு வாகனங்களை இயக்குவோரின் பற்றாக்குறை தீரும். இதனால், சாலை விபத்துகள் தவிர்க்கப்படும்.

11. இந்திய கடலோரக் காவல்படை புதிய ஐ.ஜி. பொறுப்பேற்பு

இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்திய புதிய IGஆக ஆனந்த் பிரகாஷ் படோலா பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்கு முன்பு IGஆக இருந்த எஸ் பரமேஷ், இந்திய கடலோரக் காவல் படையின் மேற்கு பிராந்திய கமாண்டராக மாற்றப்பட்டார். புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆனந்த் பிரகாஷ், இந்திய கடலோரக் காவல் படை பணியில் 1990’இல் சேர்ந்தார். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் பிரகாஷ், கடலோரக்காவல்படையில் சிறப்பாக பணியாற்றியதற் -காக, குடியரசுத்தலைவரின் தட்ரக்‌ஷக் விருதை பெற்றார். இத்தகவலை பாதுகாப்புத் துறை பத்திரிகை அலுவலகம் தெரிவித்துள்ளது.

12. மருத்துவ கல்வி சேர்க்கை 51% அதிகரிப்பு: பொறியியல் சேர்க்கை 13% சரிந்தது

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மருத்துவக் கல்வி சேர்க்கை 51% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் பொறியியல் கல்விச்சேர்க்கை 13.4% சரிந்திருக்கிறது என மத்திய கல்வி அமைச்சக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் அகில இந்திய உயர்கல்வி ஆய்வுப்பிரிவு, நாடு முழுவதும் செயல்படும் உயர்கல்வி நிறுவனங்கள் குறித்து ஆய்வுசெய்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டுவருகிறது. அதன்படி 2019-20 ஆண்டுக்கான ஆய் -வறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 1,043 பல்கலைக்கழங்கள், 42,434 கல்லூரிகள், 11,779 சுயநிதி கல்வி நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. கடந்த 2019-20 கல்வியாண்டில் 3.85 கோடிபேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ள -னர். இதில் 1.96 கோடிபேர் மாணவர்கள், 1.89 கோடிபேர் மாணவிகள்.

உத்தர பிரதேசம் முதலிடம்

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 2ஆவது இடத்திலும் தமிழ்நாடு 3ஆவது இடத்தி -லும் உள்ளன. ராஜஸ்தான், கர்நாடகம், மத்திய பிரதேச மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில் 15,03,156 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 57.5 சதவீதம் பேர் ஆண்கள். 42.5 சதவீதம் பேர் பெண்களாவர்.

நாட்டின் உயர்கல்விநிறுவனங்களில் 78.6% நிறுவனங்கள் தனியாரை சேர்ந்தவை அதிகபட்சமாக ஆந்திராவில் 81%, தெலங்கானாவில் 80%, உத்தர பிரதேசத்தில் 78.5%, தமிழ்நாட்டில் 77.6 சதவீத தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை 51.1% அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கை 13.4% சரிந்திருக்கிறது.

1. The Artemis Accord, that was recently making news, an agreement for space exploration of New Zealand and which agency?

A) ROSCOSMOS

B) ISRO

C) NASA

D) ESA

 • New Zealand has entered into an agreement for space exploration with NASA. With this, New Zealand becomes the eleventh country to sign the Artemis Accord, which is an agreement with NASA to be a part of its plans to send humans to the moon by 2024 and further to Mars.

2. The recently reported H10N3 is a strain of ___?

A) Bird Flu

B) Corona virus

C) Anthrax

D) Swine Fever

 • China has reported the first human infection of a rare strain of bird flu known as H10N3. The case has been confirmed in a 41–year–old man, by China’s National Health Commission.
 • This bird flu variant is supposed to be low pathogenic, which means it causes relatively less severe disease in poultry. No other case of this infection has been reported in the world.

3. Which bank has recently published the economic research report “Ecowrap”?

A) State Bank of India

B) Punjab National Bank

C) Axis Bank

D) HDFC Bank

 • The State Bank of India, in its economic research report “Ecowrap” has predicted India’s GDP to grow at 7.9% for the FY 2021–22.
 • Earlier the report had predicted a growth of 10.4%, and it has now been downgraded due to the large impact of the second wave of Covid–19 pandemic in the country.

4. Japanese player Naomi Osaka plays which sports?

A) Badminton

B) Tennis

C) Archery

D) Weight Lifting

 • Leading Tennis champion and world number two Naomi Osaka has announced that she would withdraw from the French Open and would spend some time away from the court.
 • She had posted that she would boycott the mandatory post–match press conferences on the grounds of mental health reasons. In turn, the organisers imposed a penalty on the player.

5. What is the theme of World Milk Day, 2021?

A) Sustainability in the dairy sector

B) Milk For All

C) Leaving No one Behind

D) Milk and SDG

 • Every year, on 1st of June, the Food and Agriculture Organisation of the United Nations observes World Milk Day. This day was first established in the year 2001 to recognize the importance of milk as a global food and to cherish the dairy sector. This year, the theme / prime focus would be on Sustainability in the dairy sector.

6. In context with recent news of Goa, what does the abbreviation GIFT stand for?

A) Goa Institution For Future Transformation

B) Goa Institution For Financial Transformation

C) Goa Institution For Fin Tech

D) Goa Institution For Foreign Affairs

 • The State Government of Goa has constituted a Think Tank named Goa Institution For Future Transformation (GIFT). This institution would assist, advise and guide the state government on various policy matters and welfare decisions. The functions of GIFT would be very similar to that of NITI Aayog.

7. Which country has recently come up with a policy for three children, as against the present two children limit?

A) India

B) USA

C) Japan

D) China

 • China has announced that it would permit couples to have three children as against the present two children limit, which was brought in 2016. This decision has been made by the Chinese government, since the country’s birth rates have registered a steep decline as per the latest census release.

8. Which country has hosted the P4G summit 2021?

A) India

B) USA

C) South Korea

D) North Korea

 • P4G – Partnering for Green Growth and the Global Goals 2030 summit is hosted by the Republic of Korea / South Korea and was organised at Seoul. It is an acceleration event for promoting market–based partnerships to build sustainable and resilient economies. The theme of the event is “Inclusive Green Recovery Towards Carbon Neutrality”.

9. Which institution implements the “Horticulture Cluster Development Programme”?

A) Food and Agricultural Organization

B) National Horticulture Board

C) NABARD

D) Ministry of Food Processing Industries

 • The Union Agriculture Minister Narendra Singh Tomar has launched the Horticulture Cluster Development Programme. The programme has been launched on a pilot basis in 12 clusters covering 11 States / UTs. This is a central sector programme implemented by the National Horticulture Board (NHB), which aims to make identified horticulture clusters globally competitive.

10. With reference to Covid, what are ‘Kappa’ and ‘Delta’?

A) New Measure of COVID spread

B) New Labels for COVID Variants

C) New Category in COVID Postive Rate

D) New Global Vaccine Initiatives

 • The World Health Organization (WHO) has announced new labels, using Greek alphabets, for various variants of the coronavirus disease (Covid–19). As per the WHO, Covid variant first found in India (B1.617.2) will be referred to as Delta, while earlier found variant in the country (B.1.617.1) will be known as Kappa.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *