TnpscTnpsc Current Affairs

12th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

12th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 12th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

12th August 2022 Tnpsc Current Affairs in Tamil

1. அண்மையில் காலமான இஸ்ஸி மியாகே என்பாருடன் தொடர்புடை துறை எது?

அ. வேளாண்மை

ஆ. வடிவமைப்பு 

இ. பொருளாதாரம்

ஈ. அறிவியல்

 • மூத்த ஜப்பானிய வடிவமைப்பாளர் இஸ்ஸி மியாகே தனது 84ஆவது வயதில் சமீபத்தில் காலமானார். அவர் தனது புதுமையான தொழில்நுட்பம் சார்ந்த ஆடை வடிவமைப்புகள், கண்காட்சிகள் மற்றும் வாசனை திரவியங்களுக்கு பெயர்பெற்றவர். அவர், சுருக்கங்கள் இல்லாத ஆடைகளின் மடிப்புக்கு பெயர்பெற்றவர். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ஒரு கருப்பு கடலாமைக் கழுத்துப் பட்டை வடிவம் கொண்ட ஆடையை அவர் வடிவைமைத்துத் தந்தார். அவர் 2006–இல் கியோட்டோ பரிசுடன் பல்வேறு விருதுகள் மற்றும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

2. நெசவாளர்கள் பயன்பெறும் வகையில், ‘நெதன்னா பீமா’ திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்திய மாநிலம் எது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. தெலுங்கானா 

இ. மகாராஷ்டிரா

ஈ. ஒடிஸா

 • தேசிய கைத்தறி நாளை முன்னிட்டு, தெலுங்கானா முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவ் நெசவாளர்களுக்கான ‘நெதன்னா பீமா’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தகுதியான பயனாளிகள் எதிர்பாராவசமாக இறந்தால், நெசவாளர்களின் குடும்பங்களுக்கு இந்தத்திட்டம் `5 லட்சம் காப்பீடு வழங்கும். தெலுங்கானா மாநில அரசு, ‘நெதன்னா பீமா’ என்ற திட்டத்திற்காக இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் (LIC) கூட்டிணைந்துள்ளது.

3. பிரான்ஸின் உயரிய குடிமக்கள் விருதான செவாலியர் டி லா லீஜியன் டி’ஹானூர் உடன் கௌரவிக்கப்படவுள்ள இந்திய அரசியல்வாதி யார்?

அ. நரேந்திர மோடி

ஆ. இராகுல் காந்தி

இ. சசி தரூர் 

ஈ. இராம்நாத் கோவிந்த்

 • காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய குடிமக்கள் விருதான செவாலியர் டி லா லீஜியன் டி ஹானூர் விருது வழங்கப்படவுள்ளது. அவரது எழுத்துக்கள் மற்றும் பேச்சுகளுக்காக பிரெஞ்சு அரசாங்கம் அவரைக் கௌரவிக்கிறது. இவ்விருது நேஷனல் ஆர்டர் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் என்றும் அழைக்கப்படுகிறது. இது, 1802–இல் நெப்போலியன் போனபார்ட்டால் நிறுவப்பட்டது.

4. நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக கீழ்க்காணும் எந்த ஒழுங்குமுறை அமைப்புடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ONDC கையெழுத்திட்டுள்ளது?

அ. NABARD

ஆ. SIDBI 

இ. EXIM வங்கி

ஈ. NHB

 • டிஜிட்டல் வர்த்தகத்திற்கான கட்டற்ற வலையமைப்பானது (ONDC) தொடர்புடைய நிறுவனங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக SIDBI உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தக் கூட்டாண்மையின்கீழ், ONDC நெறிமுறை மற்றும் குறைந்தபட்ச சாத்தியமான தயாரிப்பு (MVP) பற்றிய ONDC பேரமர்வுகள் MSME–களுக்கு நடத்தப்படும்.

5. பிரதமர் ஆவாஸ் யோஜனாவை (நகர்ப்புறம்) எந்த ஆண்டு வரை தொடர்வதற்கு நடுவண் அமைச்சரவை (2022 ஆகஸ்ட் நிலவரப்படி) ஒப்புதல் அளித்தது?

அ. 2023

ஆ. 2024 

இ. 2027

ஈ. 2030

 • பிரதமர் ஆவாஸ் யோஜனாவை (நகர்ப்புறம்) 2024 டிசம்பர் வரை தொடர நடுவணமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. ‘அனைவருக்கும் வீடு’ திட்டமானது 2015 ஜூனில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான அசல் காலக்கெடு, 2022 மார்ச் மாதத்திற்குள் அனைத்து தகுதியுள்ள நகர்ப்புற பயனாளிகளுக்கும் வீடுகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

6. ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்காக ‘முகத்தை அடையாளம் காணும் வசதியை’ அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

அ. LIC

ஆ. EPFO 

இ. PFRDA

ஈ. IRDAI

 • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியமானது ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய, ‘முகத்தை அடையாளம் காணும் வசதி’யின்கீழ், ஓய்வூதியம் பெறுவோர் தற்போது நாட்டில் எங்கிருந்தும் EPFO இணையதளத்தில் தங்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம். நடுவண் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் இந்த ‘முக அங்கீகார தொழில்நுட்பத்தைத்’ தொடங்கி வைத்தார்.

7. 2022–இல் வரும் ‘ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாளுக்கானக்’ கருப்பொருள் என்ன?

அ. Use and abuse of technology 

ஆ. Leaving no one trafficked

இ. Rehabilitation of the trafficked

ஈ. Fellow Human Beings

 • ‘ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள்’ ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.30 அன்று அனுசரிக்கப்படுகிறது. “Use and abuse of technology” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும். “புளூ ஹார்ட்” பிரச்சாரமும் தொடங்கப்பட்டது. ‘நீல இதயம்’ என்பது ஆட்கடத்தலுக்கு ஆளாவோரின் துயரத்தையும், சக மனிதர்களை வாங்கும் மற்றும் விற்பவர்களின் உணர்ச்சியற்ற மனத்தையும் குறிக்கிறது.

8. இந்தியாவில், ‘தேசியக்கொடி நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.22 

ஆ. ஆகஸ்ட்.15

இ. ஜனவரி.26

ஈ. அக்டோபர்.02

 • ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.22 அன்று இந்தியாவில் ‘தேசியக்கொடி நாள்’ கொண்டாடப்படுகிறது. கடந்த 1947ஆம் ஆண்டு இதே நாளில், இந்திய அரசியல் நிர்ணய சபை தேசியக்கொடியை ஏற்றுக்கொண்டது. 1947 ஜூலை.22 அன்று இந்திய அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்கள் தில்லியில் உள்ள அரசியலமைப்பு மண்டபத்தில் கூடிய போது, சுதந்திர இந்தியாவுக்கான தேசியக்கொடியை ஏற்றுக்கொள்வதற்கான ஜவஹர்லால் நேருவின் தீர்மானம் முதன்முதலாக விவாதிக்கப்பட்டது.

9. ‘VINBAX–2022’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடத்தப்படும் ஓர் இருதரப்பு இராணுவப் பயிற்சியாகும்?

அ. பிரான்ஸ்

ஆ. ஜப்பான்

இ. வியட்நாம் 

ஈ. ஓமன்

 • இந்தியாவும் வியட்நாமும் இணைந்து வியட்நாம்–இந்தியா இருதரப்பு இராணுவப்பயிற்சியான ‘VINBAX–2022’இன் 3ஆவது பதிப்பைத்தொடங்கியுள்ளன. ஹரியானாவில் உள்ள சண்டிமந்திரில் இருபது நாள் நடைபெறும் இராணுவப் பயிற்சி நடைபெறவுள்ளது. ஒரு பொறியாளர் நிறுவனம் மற்றும் ஒரு மருத்துவக் குழுவை அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான ஐநா குழுவின் ஒரு பகுதியாகப் பயன்படுத்துவதே இந்தப் பயிற்சியின் கருப்பொருளாகும்.

10. NHA–இன் சமீபத்திய அறிவிப்பின்படி, CoWIN செயலி, எந்தத் திட்டத்திற்காக மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது?

அ. PM மாத்ரு வந்தனா யோஜனா

ஆ. PM சுவஸ்திய சுரக்ஷா யோஜனா

இ. PM சுரக்ஷித் மாத்ரித்வா அபியான்

ஈ. உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டம் 

 • தற்போது, உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்திற்காக (Universal Immunisation Programme) CoWIN செயலி மீண்டும் உருவாக்கப்படுகிறது. CoWIN தலைவரும், தேசிய நலவாழ்வு ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான டாக்டர் ஆர் எஸ் சர்மா, தாய்மார்கள் மற்றும் சிசுக்களுக்குத் தடுக்கக்கூடிய நோய்களுக்கான தடுப்பூசி மையங்கள் மற்றும் அடுத்தடுத்த தடுப்பூசிகளுக்கான நினைவூட்டல்களைக் கண்டறிய இந்தச் செயலி உதவும் என அறிவித்தார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. 12-08-2022 – உலக யானைகள் நாள்

2. நல் ஆளுமை விருது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான நல்ஆளுமை விருதுக்கு தேர்வாகியுள்ளோர் விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் விடுதலை நாள் விழாவையொட்டி, அரசுத்துறைகள், அரசு ஊழியர்கள், அரசு சார்பு அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் சிறந்த செயல்பாடுகளைப் பாராட்டி நல் ஆளுமை விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இதுபோன்று, நிகழாண்டிலும் விடுதலை நாளின்போது நல்ஆளுமை விருதுகள் வழங்கப்படவுள்ளன.

செங்கல் சூளையில் பணிபுரிந்தவர்களை மீட்டெடுத்து தொழில்முனைவோராக வாழ்க்கைத்தரத்தை உயர்த்திய பணிக்காக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரும், திருநங்கைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகளை எடுத்தமைக்காக செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலரும் நல்ஆளுமை விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி நிலத்தடி நீரை செறிவூட்டும் பணிகளைச் செய்தமைக்காக, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் பேறுகால நலனை தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் கண்காணித்து சிறப்பான சுகாதார திட்டத்தை முன்னெடுத்த காரணத்துக்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும் நல்ஆளுமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வேளாண் இயந்திரங்களை கைப்பேசி செயலி வழியாக வாடகைக்குவிடும் திட்டத்தை அமல்படுத்தியதற்காக தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் முதன்மைப் பொறியாளரும், சென்னையில் ஆதரவற்ற, மனநிலை பாதித்தோரை மீட்டு பராமரிக்கும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளருக்கு நல் ஆளுமை விருது அளிக்கப்படவுள்ளது. நல் ஆளுமை விருதானது, விருதும், தலா `2 லட்சம் பரிசுத்தொகையும் அடங்கியதாகும்.

3. குடியரசுத்துணைத்தலைவரின் பணிகள்

குடியரசுத் தலைவர் பதவிக்கு அடுத்து நாட்டின் இரண்டாவது மிகவுயரிய பதவி குடியரசுத்துணைத்தலைவர் பதவியாகும். புதிய குடியரசுத் துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர் பல்வேறு முக்கிய பணிகளை மேற்கொள்ளவுள்ளார். அவருக்கான பணிகள் மற்றும் அதிகாரங்கள் குறித்த பார்வை:

மாநிலங்களவைத் தலைவர்:

குடியரசுத் துணைத் தலைவரின் முக்கிய பணி, மாநிலங்களவைத் தலைவராகச் செயல்படுவது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது அவையை வழிநடத்தும் அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையின் மாண்பை முறையாகக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்வார்.

அவை நடவடிக்கைகள் முறையாக இருப்பதை உறுதிசெய்யும் அவர், நடுவண் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே தோன்றும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துவைப்பதிலும் முக்கிய பங்காற்றுவார். அவைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதை தீர்மானிக்கும் முழு பொறுப்பும் அவைத் தலைவருக்கே உள்ளது.

தற்காலிக குடியரசுத்தலைவர்:

நாட்டின் குடியரசுத் தலைவரின் இறப்பு, ராஜிநாமா, பதவிநீக்கம் உள்ளிட்ட சமயங்களில் தற்காலிக குடியரசுத் தலைவராகத் துணை குடியரசுத்தலைவரே செயல்படுவார். அடுத்த குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் அப்பொறுப்பில் நீடிப்பார். தற்காலிக குடியரசுத்தலைவராக அவர் பதவி வகித்தாலும்கூட, குடியரசுத் தலைவருக்கு உண்டான அனைத்து அதிகாரங்களும் அவருக்கு உண்டு.

அத்தகைய சமயங்களில் குடியரசுத்தலைவருக்கு உண்டான அனைத்து சலுகைகளும் குடியரசுத் துணைத் தலைவருக்குக் கிடைக்கும். அவர் குடியரசுத்தலைவராகப் பணியாற்றும் சூழலில், மாநிலங்களவையை வழிநடத்த இயலாது. அத்தகைய சமயங்களில் அவையின் துணைத்தலைவரோ அல்லது குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படும் நபரோ அவையை வழிநடத்துவார்.

பதவியில் நீடிக்கலாம்:

பொதுவாக குடியரசுத் துணைத்தலைவர் ஐந்து ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார். அவருடைய பதவிக்காலம் நிறைவடைந்தபோதிலும், புதிய குடியரசுத் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் அவர் பதவியில் தொடர்ந்து நீடிக்கலாம். அதற்குத் தடை ஏதுமில்லை. புதிய குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பேற்கும் வரை அவர் அப்பதவியில் தொடரலாம்.

ராஜிநாமா:

குடியரசுத் துணைத் தலைவர் தனது பதவிக்காலம் நிறைவடையும் முன்பே ராஜிநாமா செய்ய விரும்பினால், அதற்கான கடிதத்தைக் குடியரசுத்தலைவரிடம் வழங்கவேண்டும். ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்ட நாளில் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்.

பதவிநீக்கம்:

குடியரசுத் துணைத் தலைவரைப் பதவிநீக்கம் செய்ய விரும்பினால், மாநிலங்களவையில் 14 நாள்களுக்கு முன்பே அதற்கான தீர்மானத்தைத் தாக்கல் செய்யவேண்டும். அத்தீர்மானத்துக்கு அவைக்கு வருகை தந்துள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும், அத்தீர்மானத்துக்கு மக்களவை உறுப்பினர்களில் பாதி பேர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்குப் பிறகே குடியரசுத் துணைத் தலைவரைப் பதவிநீக்கம் செய்யவியலும். நாட்டில் இதுவரை எந்தக் குடியரசு துணைத்தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டது கிடையாது.

4. தாதாபாய் நௌரோஜியின் லண்டன் இல்லத்துக்கு ‘புளூ பிளேக்’ அந்தஸ்து

விடுதலைப் போராட்ட வீரரும் பொருளாதார நிபுணருமான தாதாபாய் நௌரோஜி தெற்கு இலண்டனில் வாழ்ந்த இல்லத்துக்கு ‘நீலத்தகடு’ (புளூ பிளேக்) அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள ‘இங்கிலீஷ் ஹெரிடேஜ் சாரிட்டி’ (ஆங்கில பாரம்பரிய அறக்கட்டளை) என்ற அமைப்பானது இலண்டனில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களுக்கு ‘நீலத்தகடு’ என்ற அந்தஸ்தை வழங்கி வருகிறது. அத்தகைய கட்டடங்களின் முக்கியத்துவம் குறித்தும் அதில் வாழ்ந்த நபர்களின் விவரங்கள் குறித்தும் நீலத்தகடில் பொறிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைபடும்படி கட்டடத்தில் பொருத்தப்படும்.

இந்நிலையில், விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த பொருளாதார நிபுணருமான தாதாபாய் நௌரோஜி 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தெற்கு இலண்டனில் வசித்த இல்லத்துக்கு ‘புளூ பிளேக்’ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, அந்தக் கட்டடத்தில் நீலத்தகடானது புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

அந்தத்தகட்டில், “இந்தியாவின் தேசியவாதியும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினருமான தாதாபாய் நௌரோஜி (1825-1917) வசித்த வீடு இது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமை தாதாபாய் நௌரோஜியையே சேரும். தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோர் இலண்டனில் வசித்த இல்லங்களுக்கு ஏற்கெனவே ‘புளூ பிளேக்’ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

5. 2023-இலிருந்து 20% எத்தனால் பெட்ரோல்

இந்தியாவில் வரும் அடுத்த ஆண்டிலிருந்து எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்று நடுவண் அரசு அறிவித்துள்ளது. இது குறித்து எண்ணெய் வளத்துறை அமைச்சர் ஹர்தீப் புரி கூறியதாவது:

20% எத்தனால் கலந்த பெட்ரோல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் விநியோகிக்கப்படும். எஞ்சிய பகுதிகள் முழுவதும் எத்தனால் பெட்ரோல் விநியோகம் 2025-ஆம் ஆண்டுக்குள் விரிவுபடுத்தப்படும் என்றார் அவர். கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் சுற்றுசூழலைப் பாதுகாக்கவும் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுகிறது. ஏற்கெனவே, கடந்த மாதத்துக்குள் 10 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோக்கப்பட வேண்டும் என்ற இலக்கை இந்தியா அதற்கு முன்னரே நிறைவேற்றியுள்ளது.

12th August 2022 Tnpsc Current Affairs in English

1. Issey Miyake, who passed away recently, was associated with which field?

A. Agriculture

B. Design 

C. Economics

D. Science

 • Veteran Japanese designer Issey Miyake passed away recently at the age of 84. He was known for his innovative technology–driven clothing designs, exhibitions and fragrances. The Japanese designer was known for his pleated style of clothing without wrinkles. His flagship product was a black turtleneck for Apple Inc founder Steve Jobs. He was a recipient of many other awards and accolades, along with Kyoto prize in 2006.

2. Which Indian state launched ‘Nethanna Bima’ scheme for benefitting weavers?

A. Andhra Pradesh

B. Telangana 

C. Maharashtra

D. Odisha

 • Telangana Chief Minister K Chandrashekhar Rao launched the Nethanna Bima scheme for the weavers on the occasion of National Handloom Day. This scheme will provide ₹5 lakh insurance cover to the weavers’ families in case of the unfortunate demise of an eligible beneficiary. Telangana government has partnered with Life Insurance Corporation (LIC) of India for the ‘Nethanna Beema’ scheme.

3. Which Indian politician was conferred with France’s highest civilian award Chevalier de la Legion d’Honneur?

A. Narendra Modi

B. Rahul Gandhi

C. Shashi Tharoor 

D. Ramnath Govind

 • Senior Congress leader Shashi Tharoor is set to be conferred with France’s highest civilian award Chevalier de la Legion d’Honneur. The French government is honouring the politician for his writings and speeches. The award is also called as the National Order of the Legion of Honour. It was established in 1802 by Napoleon Bonaparte.

4. ONDC has signed MoU with which regulatory body for coordination of functions of institutions?

A. NABARD

B. SIDBI 

C. EXIM Bank

D. NHB

 • Open Network for Digital Commerce (ONDC) has signed a Memorandum of Understanding (MoU) with SIDBI for coordination of functions of related institutions. Under the partnership, sessions to educate MSMEs about ONDC master–class sessions on ONDC protocol and Minimum Viable Product (MVP) will be held for MSMEs.

5. The Union Cabinet (in August 2022) approved to continue Pradhan Mantri Awas Yojana (Urban) till which year?

A. 2023

B. 2024 

C. 2027

D. 2030

 • The Union Cabinet recently approved continuation of Pradhan Mantri Awas Yojana (Urban) till December, 2024. The ‘Housing for All’ Mission was launched in June 2015. The original deadline for the scheme, which aimed at providing pucca houses to all eligible urban beneficiaries, was March 2022.

6. Which institution launched ‘Face recognition facility’ for pensioners to submit their life certificate?

A. LIC

B. EPFO 

C. PFRDA

D. IRDAI

 • Employees’ Provident Fund Organisation (EPFO) introduced a new facility for pensioners to submit their digital life certificate.
 • Under the new ‘Face recognition facility’, pensioners can now submit their digital life certificate on the EPFO portal from anywhere in the country. Union Minister of Labour and Employment Bhupender Yadav launched the face authentication technology.

7. What is the theme of the ‘World Day Against Trafficking in Persons’ in 2022?

A. Use and abuse of technology 

B. Leaving no one trafficked

C. Rehabilitation of the trafficked

D. Fellow Human Beings

 • ‘World Day Against Trafficking in Persons’ is observed every year on 30 July. This year the theme of the event is “Use and abuse of technology”. The Blue Heart Campaign was also launched where the blue heart represents the sadness of those who are trafficked, as well as the cold–heartedness of those who buy and sell fellow human beings.

8. The ‘National Flag Day’ is celebrated in which day in India?

A. July.22 

B. August.15

C. January.26

D. October.02

 • Every year, India celebrates the National Flag Day on July 22. On the same day in the year 1947, the Constituent Assembly of India adopted the National Flag. When the members of the Indian Constituent Assembly met in the Constitution Hall in Delhi on July 22, 1947, the first thing the Assembly discussed was a motion by Jawaharlal Nehru to adopt the national flag for free India.

9. ‘Ex VINBAX 2022’ is a bilateral army exercise conducted between India and which country?

A. France

B. Japan

C. Vietnam 

D. Oman

 • India and Vietnam have commenced the 3rd edition of Vietnam–India bilateral army exercise ‘Ex VINBAX 2022’. The 20–day military exercise is scheduled to be conducted at Chandimandir in Haryana. The theme of the exercise is deployment of an Engineer Company and a Medical Team as part of United Nations Contingent for Peacekeeping Operations.

10. As per NHA’s recent announcement, CoWIN app is repurposed for which program?

A. PM Matru Vandana Yojana

B. PM Swasthya Suraksha Yojana

C. PM Surakshit Matritva Abhiyan

D. Universal Immunisation Program 

 • CoWIN is being repurposed for the universal immunisation program (UIP), at present. CoWIN head and CEO of the National Health Authority Dr RS Sharma announced that the app will help in discovery of vaccination centres and reminders for subsequent vaccinations for preventable diseases for mothers and the newly born.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!