Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

12th December 2020 Current Affairs in Tamil & English

12th December 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

12th December 2020 Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “Go for Zero” என்ற கொள்கையுடன் தொடர்புடைய நாடு எது?

அ. ஐக்கியப் பேரரசு

ஆ. நியூசிலாந்து

இ. ஆஸ்திரேலியா

ஈ. ஜெர்மனி

  • “சுழியத்திற்கு செல்” என்பது அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் இலாப நோக்கற்ற சிந்தனைக் குழுவான கிரட்டன் நிறுவனம் வெளியிட்ட ஒரு கொள்கை முன்மொழிவு ஆகும். கொள்கையின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இறுதியாக சுழிய புதிய COVID-19 பாதிப்புகளை எட்டுவதே இதன் நோக்கமாகும். இதன் விளைவாக, COVID-19 தொற்று நோயானது உள்ளூர் அளவில் பரவாமல் மூன்று வாரங்களுக்கு மேல் கடந்துள்ளது.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘வாழ்வுக்கலை’ முறையுடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. ஒடிசா

ஆ. குஜராத்

இ. இராஜஸ்தான்

ஈ. பஞ்சாப்

  • இராஜஸ்தான் மாநில சுற்றுலாத்துறையானது UNESCO’உடன் கூட்டிணைந்து, ‘வாழ்வுக்கலை’ என்ற முறையை பின்பற்றி ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. ஜெய்சால்மர், ஜோத்பூர், பிகானேர் மற்றும் பார்மர் மாவட்டங்களில் சுமார் பத்து கலாச்சார சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படுகின்றன. மேடைக் கலைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களை கலை மற்றும் கலாச்சாரத்தின் அபிமானிகளுடன் இணைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

3. காற்றிலிருந்து நீரை அறுவடை செய்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?

அ. IIT மெட்ராஸ்

ஆ. IIT கெளகாத்தி

இ. NIT திருச்சிராப்பள்ளி

ஈ. NIT வாரங்கல்

  • கெளகாத்தியின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் காற்றிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் புதிய தொழினுட்பத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளனர். ‘ஹைட்ரோபோபிசிட்டி’ என்ற அறிவியல் முறையைப்பயன்படுத்தி அவர்கள் அப்புதிய தொழினுட்பத்தை உருவாக்கியுள்ளனர். வழுக்கும் திரவம்-உட்செலுத்தப்பட்ட நுண்ணிய மேற்பரப்புகள் (அ) SLIPS என்ற பொருள் வேதியியல் முறையில் வடிவமைக்கப்பட்டு இந்தத் தொழினுட்பத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஸ்டார்ஷிப்’ என்பது கீழ்க்காணும் எந்த விண்வெளி நிறுவனம் / அமைப்பின் ஏவுகலமாகும்?

அ. புளூ மூன்

ஆ. ஸ்பேஸ் எக்ஸ்

இ. NASA

ஈ. ISRO

  • ‘ஸ்டார்ஷிப்’ என்பது எலன் மஸ்கிற்கு சொந்தமான தனியார் விண்வெளி நிறுவனமான ‘Space X’இன் எதிர்கால திட்டத்துக்குரிய விண்வெளி ஓடமாகும். இது செவ்வாய் கோளுக்கு மக்களை கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட ‘ஸ்டார்ஷிப்’பின் முதல் சோதனை தானியங்கி எந்திரத்தின் கோளாறு காரணமாக கடைசி வினாடியில் நிறுத்தப்பட்டது. இதற்கு முன்னர் இந்நிறுவனம், ஐந்து ‘ஸ்டார்ஷிப்’ விண்வெளி ஓடங்களை சோதித்துள்ளது.

5. ‘ஒருங்கிணைந்த மருத்துவத்துறை’யை மத்திய AYUSH அமைச்சகமும் கீழ்க்காணும் எந்நிறுவனமும் இணைந்து அமைக்கவுள்ளன?

அ. NITI ஆயோக்

ஆ. AIIMS

இ. IIT பாம்பே

ஈ. தேசிய சித்தா நிறுவனம்

  • மத்திய AYUSH அமைச்சகமும், AIIMS மருத்துவமனையும் இணைந்து, AIIMS மருத்துவமனையில் ‘ஒருங்கிணைந்த மருத்துவத்துறை’யை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளன. மேலும், COVID தொற்றிலிருந்து குணமடைந்தோருக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஆயுர்வேதம், யோகா சார்ந்த ஒருங்கிணைத்த நெறிமுறைகளை வகுப்பது குறித்தும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

6. அண்மைய SIPRI அறிக்கையின்படி, கீழ்க்காணும் எவ்விரு நாடுகளின் நிறுவனங்கள் உலகளாவிய ஆயுத சந்தையில் முன்னணியில் உள்ளன?

அ. இந்தியா & இஸ்ரேல்

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள் & சீனா

இ. ஐக்கிய அமெரிக்க நாடுகள் & இரஷ்யா

ஈ. இரஷ்யா & ஜப்பான்

  • ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) அளித்த அறிக்கையின்படி, அமெரிக்க மற்றும் சீனா நிறுவனங்கள், 2019ஆம் ஆண்டில், உலக ஆயுத சந்தையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. 25 முன்னணி ஆயுத உற்பத்தியாளர்களின் விற்பனையில் கிட்டத்தட்ட 61 சதவீதத்தை அமெரிக்க நிறுவனங்களும், 15.7 சதவீதத்தை சீன நிறுவனங்களும் வாங்கியுள்ளன.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, கோயில்வார் பாலம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. ஒடிசா

ஆ. குஜராத்

இ. பீகார்

ஈ. பஞ்சாப்

  • பீகார் மாநிலத்தில் சோனாற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள `266 கோடி மதிப்பிலான 1.5 கிலோ மீட்டர் நீளமுள்ள முவ்வழி கோயில்வார் பாலத்தை, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி காணொலிமூலம் திறந்துவைத்தார். சாலை & ரயில் போக்குவரவுக்காக ஏற்கனவே உள்ள பாலம் 138 ஆண்டுகள் பழமையானதாகும். அதற்குப் பதிலாக ஆறு வழிப் பாலம் கட்டப்பட்டுவரும் நிலையில், அதில் முவ்வழிகள் தற்போது பொதுமக்களுக்காக திறந்துவிடப்பட்டன. பீகார், உத்தர பிரதேசத்துக்கு இடையேயான போக்குவரத்துக்கு இந்தப்பாலம் ஒரு முக்கிய வழியாகும்.

8. நடப்பாண்டின் (2020) நகர்ப்புற நிர்வாக குறியீட்டில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஒடிசா

ஈ. சத்தீஸ்கர்

  • மும்பையைச் சார்ந்த ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான பிரஜா அறக்கட்டளை, நடப்பாண்டின் (2020) நகர்ப்புற நிர்வாக குறியீட்டை வெளியிட்டது. இக்குறியீட்டின்படி, நகர்ப்புற நிர்வாகத்தில், மாநிலங்கள் அளவில் ஒடிசா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை அடுத்தடுத்த இடங்கில் உள்ளன. இந்த ஆய்வு, 28 மாநிலங்களில் உள்ள நாற்பது நகரங்கள் மற்றும் தில்லி தேசிய தலைநகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

9. போர்ப்ஸின் உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த 100 பெண்களின் தரவரிசையில், இந்தியாவில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்த பெண்மணி யார்?

அ. நிர்மலா சீதாராமன்

ஆ. ரோஷினி நாடார் மல்கோத்ரா

இ. கிரண் மஜூம்தார்-ஷா

ஈ. கிரண் பேடி

  • போர்ப்ஸின் உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த 100 பெண்களின் தரவரிசையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41ஆவது இடத்தில் உள்ளார். HCL நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான ரோஷினி நாடார் மல்கோத்ரா 55ஆவது இடத்திலும், பயோகான் நிறுவனர் கிரண் மஜூம்தார்-ஷா 68ஆவது இடத்திலும் உள்ளனர். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் அவர்கள் இந்தப்பட்டியலின் முதலிடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

10. உலகின் முதல் COVID-19 தடுப்பூசியை உருவாக்கியுள்ள நாடு எது?

அ. ஐக்கியப் பேரரசு

ஆ. நியூசிலாந்து

இ. ஆஸ்திரேலியா

ஈ. ஜெர்மனி

  • COVID-19 தடுப்பூசியைப் பயன்படுத்தத் தொடங்கிய உலகின் முதல் நாடாக ஐக்கியப் பேரரசு ஆனது. பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிக்கு ஒழுங்காற்றுநர்கள் ஒப்புதல் அளித்தனர்.
  • நாடு முழுவதுமுள்ள பல்வேறு மையங்களில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இந்தத் தடுப்பூசி, 21 நாட்கள் இடைவெளியில் 2 ஊசி மருந்தாக வழங்கப்படுகிறது. இரண்டாவது முறைக்கு 7 நாட்களுக்குப் பிறகு முழுமையான நோயெதிர்ப்பு ஆற்றல் எட்டப்படும் எனக் கூறப்படுகிறது.

12th December 2020 Current Affairs in English

1. The “Go for Zero” policy, which was seen in the news recently, is associated with which country?

[A] United Kingdom

[B] New Zealand

[C] Australia

[D] Germany

  • “Go for zero” is a policy proposal released by Grattan Institute, a non–profit think tank that advises the government. As a part of the policy, the Australian Government introduced several measures with the goal of eventually reaching zero new cases and not just to flatten the curve. As a result, the country passed three weeks without any local transmission of Covid–19.

2. ‘Art of Life’ methodology, which was seen in news recently, is associated with which state?

[A] Odisha

[B] Gujarat

[C] Rajasthan

[D] Punjab

  • The Rajasthan state Tourism department has tied up with UNESCO and implementing a project by adopting ‘Art of Life’ methodology. Around 10 cultural tourism hubs are being created in Jaisalmer, Jodhpur, Bikaner, and Barmer districts. The project aims to connect the performing artists and handicraft artists with the admirers of the art and culture.

3. Which institution has created a technology to harvest water from air?

[A] IIT Madras

[B] IIT Guwahati

[C] NIT Tiruchirapalli

[D] NIT Warangal

  • Researchers at Indian Institute of Technology, Guwahati claimed to have developed a new technology to harvest water from the air. The researchers have used the concept of hydrophobicity, which is the property of a material to repel water. Slippery liquid–infused porous surfaces or SLIPS material is chemically patterned and used.

4. ‘Starship’, which was seen in the news recently, is the rocket–ship of which space company/ organisation?

[A] Blue Moon

[B] Space X

[C] NASA

[D] ISRO

  • ‘Starship’ is the futuristic rocket–ship of SpaceX, the private space company owned by billionaire Elon Musk. It is being designed to carry people to Mars. The first high–altitude test flight of the Starship was aborted at the last second, due to an automatic engine abort just ahead of the count–down. SpaceX has conducted five Starship test flights but not at high altitude.

5. The ‘Department of integrated medicine’ is proposed to be setup by Ministry of Ayush and which institution?

[A] NITI Aayog

[B] AIIMS

[C] IIT Bombay

[D] National Siddha Institute

  • The Department of Integrative Medicine has been proposed to be set up by the Union Ministry of AYUSH in association with AIIMS. The department is to be set up at AIIMS. Also, it has been decided to develop a protocol for “Study on Post COVID treatment” with Ayurveda and Yoga, by Centre for Integrative Medicine and Research – AIIMS.

6. Companies of which two countries are leaders in global arms market, as per the recent SIPRI report?

[A] India and Israel

[B] USA and China

[C] Russia and China

[D] USA and Japan

  • The companies of USA and China have dominated the global arms market in the year 2019, as per a report by the Stockholm International Peace Research Institute (SIPRI). The arms industry of USA accounts for nearly 61% of the sales by top 25 arms manufacturers. Chinese firms account for 15.7% of the sales by top 25 arms manufacturers.

7. Koilwar bridge, which was making news recently, is inaugurated in which Indian state?

[A] Odisha

[B] Gujarat

[C] Rajasthan

[D] Bihar

  • Union Road Transport and Highways Minister Nitin Gadkari has recently inaugurated the Koilwar bridge over Sone river in Bihar. This 1.5 km long bridge has been laid in parallel to the 138–year–old two–lane rail–road bridge. A six–lane bridge is being constructed with the outlay of Rs 266 crore. The three–lane carriageway has been opened for public.

8. Which state topped the Urban Governance Index (UGI)–2020?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Odisha

[D] Chhattisgarh

  • The Urban Governance Index–2020 has released by the Mumbai–based non–profit organisation Praja Foundation. As per the index, Odisha tops the list of states in urban governance followed by Maharashtra and Chhattisgarh. The study assessed the urban governance reforms across 40 cities in 28 states and NCT of Delhi.

9. Which Indian grabbed the highest rank in India, in the Forbes’ ranking of 100 most powerful women in the world?

[A] Nirmala Sitharaman

[B] Roshni Nadar Malhotra

[C] Kiran Mazumdar–Shaw

[D] Kiran Bedi

  • Union Finance Minister Nirmala Sitharaman is ranked at 41st rank in the Forbes’ ranking of 100 most powerful women in the world, grabbing the highest place. HCL Corporation CEO and Executive Director Roshni Nadar Malhotra in the 55th spot and Biocon Founder Kiran Mazumdar–Shaw in the 68th rank. German Chancellor Angela Merkel is placed at the first spot.

10. Which country rolled out the first COVID-19 vaccine in the world?

[A] United Kingdom

[B] New Zealand

[C] Australia

[D] Germany

  • The United Kingdom became the first country in the world to start using the COVID–19 vaccine. The vaccine developed by Pfizer and BioNTech was approved by the regulators. Several hubs across the country are vaccinating the people. The vaccine is given as two injections with 21 days apart. The complete immunity is said to be reached seven days after the second dose.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!