12th February 2020 Current Affairs in Tamil & English

12th February 2020 Current Affairs in Tamil & English

12th February 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

12th February 2020 Current Affairs in Tamil

12th February 2020 Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. 13ஆவது ஐ.நா. புலம்பெயர் உயிரினங்களின் பாதுகாப்பு-2020 (UN Convention on the Conservation of Migratory Species) (COP 13) குறித்த மாநாட்டை நடத்தவுள்ள நகரம் எது?

அ. மும்பை

ஆ. மாட்ரிட்

இ. காந்திநகர்

ஈ. டோக்கியோ

 • நடப்பாண்டில் (2020) இந்தியா நடத்தவுள்ள 13ஆவது ஐ.நா. புலம்பெயர் உயிரினங்களின் பாதுகாப்பு குறித்த மாநாடு (COP 13) வரும் பிப்.15-22 வரை குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெறவுள்ளது. இவ்வுச்சிமாநாட்டை பிரதமர் மோடி திறந்துவைப்பார் எனச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. “Migratory species connect the planet and we welcome them home” என்பது நடப்பாண்டில் (2020) நடைபெறும் இவ்வுச்சிமாநாட்டின் கருப்பொருளாகும்.

2.அண்மையில், இந்திய உச்சநீதிமன்றமானது பட்டியல் சாதியினர், பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) திருத்தச் சட்டத்தை உறுதி செய்தது. 1989ஆம் ஆண்டின் இச்சட்டம், முதன்முறையாக எப்போது திருத்தப்பட்டது?

அ. 2016

ஆ. 2017

இ. 2018

ஈ. 2019

 • பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினரை வன்கொடுமைகளிலிருந்து பாதுகாப்பதற்காக கடந்த 1989ஆம் ஆண்டில், பட்டியல் சாதியினர் & பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2018 மார்ச்சில், உச்சநீதிமன்றம் இந்தச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்தது; மேலும் அது, வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுக்கு முன்பிணையும் வழங்கியது.
 • பேரெதிர்ப்பிற்குப்பிறகு, அரசாங்கம் அந்த அசல் சட்டத்தைத்திருத்தி, SC & ST (வன்கொடுமைத் தடுப்பு) திருத்த சட்டம், 2018ஐ நிறைவேற்றியது. இந்தத் திருத்தத்தை உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

3.சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதைவென்ற, ‘அமெரிக்கன் பேக்டரி’ திரைப்படத்தைத் தயாரித்த பிரபல அமெரிக்க ஆளுமை யார்?

அ. டொனால்ட் டிரம்ப்

ஆ. பராக் ஒபாமா

இ. ஹிலாரி கிளிண்டன்

ஈ. டைகர் உட்ஸ்

 • அண்மையில், சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது, ‘அமெரிக்கன் பேக்டரி’ என்ற படத்திற்கு வழங்கப்பட்டது. பராக் ஒபாமா மற்றும் மிச்சேல் ஒபாமாவின் தயாரிப்பு நிறுவனமான, ‘Higher Ground’ வெளியிட்ட முதல் ஆவணப்படமாகும் இது. இந்த ஆவணப்படம், ‘Netflix’ தளத்தில் வெளியிடப்பட்டது.
 • ஒரு சீன முதலீட்டாளரால் நடத்தப்படும் ஓஹியோ ஆட்டோ கண்ணாடி தொழிற்சாலையைப்பற்றியது இந்தத் திரைப்படம். தொழிலாளர்களின் உரிமைகள், உலகமயமாக்கல் மற்றும் தன்னியக்கமாக்கல் போன்ற பல்வேறு உலகளாவிய பிரச்சனைகள் குறித்து இப்படத்தில் கூறப்பட்டுள்ளன.

4.ஐ.நா. புலம்பெயர்ந்த உயிரினங்களின் பாதுகாப்பு குறித்த மாநாட்டுக்கான (COP 13) சின்னம் எது?

அ. கானமயில்

ஆ. வெண் வயிற்று நாரை

இ. வன ஆந்தை

ஈ. வரகுக்கோழி

 • ஐ.நா. புலம்பெயர் உயிரினங்களின் பாதுகாப்பு குறித்த மாநாட்டின் (COP 13) சின்னமாக கானமயில் (Great Indian Bustard) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின்கீழ், ஆசிய யானை, கானமயில் மற்றும் வங்கக்கோழி ஆகிய மூன்று உயிரினங்களை, ‘அழிவின் விளிம்பிலிருக்கும் அச்சுறுத்தலுக்குள்ளான புலம்பெயர் இனங்கள்’ பட்டியலில் சேர்க்க இந்தியா அண்மையில் முன்மொழிந்தது. பறவையினங்கள் மற்றும் அவற்றின் சூழலமைப்புகளைப் பாதுகாப்பதற்காக சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், அண்மையில், தொலைநோக்குப் பார்வை திட்டத்தை (2020-2030) வெளியிட்டது.

5. ‘அஜயா வாரியர்’ என்பது இந்தியாவுக்கும் எந்த நாட்டுக்கும் இடையே நடத்தப்படும் கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

அ. ஜப்பான்

ஆ. ஐக்கியப் பேரரசு (UK)

இ. இஸ்ரேல்

ஈ. பிரான்ஸ்

 • ‘அஜயா வாரியர்’ என்னும் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் (UK) இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியின் ஐந்தாவது பதிப்பு, பிரிட்டனின் சாலிஸ்பரி சமவெளியில் நடத்தப்படவுள்ளது. இந்தப்பயிற்சி வரும் பிப்ரவரி 13-26 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பிரிட்டன் இராணுவத்தைச் சேர்ந்த தலா 120 வீரர்கள் இப்பயிற்சியில் பங்கேற்பார்கள். இக்கூட்டு இராணுவப்பயிற்சி, பிரிட்டனிலும் இந்தியாவிலும் மாறி மாறி நடத்தப்படுகிறது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.

6.மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் குறித்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆய்வை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

அ. நிதி அமைச்சகம்

ஆ. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம்

இ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

ஈ. கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சகம்

 • மத்திய கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை, மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் குறித்து ஆண்டுதோறும் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிடுகிறது.
 • அண்மையில், கடந்த 2018-19ஆம் ஆண்டுக்கான பொதுத்துறை நிறுவனங்கள் குறித்த ஆய்வறிக்கை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், BSNL, ஏர் இந்தியா (AI) மற்றும் MTNL ஆகியவை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மிக அதிக இழப்பை ஏற்படுத்தும் பொதுத்துறை நிறுவனங்கள் எனக் கூறப்பட்டுள்ளது. எண்ணெய் & இயற்கை எரிவாயு கழகம் (ONGC), இந்தியன் ஆயில் நிறுவனம் & NTPC ஆகியவை முதல் 3 இலாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களாக உள்ளன.

7.அண்மையில், மாணாக்கருக்காக, ‘படித்தல் திட்டம்’ என்றவொன்றைத் தொடங்கிய மாநில அரசு எது?

அ. ஒடிசா

ஆ. கேரளா

இ. ஹரியானா

ஈ. மேற்கு வங்கம்

 • ஹரியானா மாநில அரசு, ‘படித்தல் திட்டம் – ஹரியானா’ என்றவொரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இளம் மாணாக்கரிடையே வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், மத்திய அரசால் தொடங்கப்பட்ட, ‘படித்தல் திட்டம் – 2022’ஐ ஒத்துள்ளது.

8.உலக பருப்பு நாள் (World Pulses Day) கடைப்பிடிக்கப்படும் தேதி எது?

அ. பிப்ரவரி 8

ஆ. பிப்ரவரி 9

இ. பிப்ரவரி 10

ஈ. பிப்ரவரி 11

 • கடந்த 2019ஆம் ஆண்டில், ஐ.நா. பொது அவையானது பிப்ரவரி 10ஆம் தேதியை உலக பருப்பு நாளாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தலைமையில், உலகெங்கிலும் உள்ள பருப்பு வகைகளின் சர்வதேச ஆண்டாக கடந்த 2016ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. பருப்பு வகைகளின் ஊட்டச்சத்து மதிப்புகள் மற்றும் பருப்பு வகைகள்மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை கையாளும் வழிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

9.சமீபத்தில், ‘நிலக்கரிச்சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீடு’ தரும் வலைத்தளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்

ஆ. நிலக்கரி அமைச்சகம்

இ. சுரங்க அமைச்சகம்

ஈ. புவி அறிவியல் அமைச்சகம்

 • ‘நிலக்கரிச் சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீடு’ வழங்குவதற்காக, மத்திய நிலக்கரி அமைச்சகமானது அண்மையில், ஒரு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த வலைத்தளத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள அனைத்து செயல்பாட்டில் உள்ள நிலக்கரிச்சுரங்கங்களும் சுயமதிப்பீடு செய்யப்படும்.
 • சுரங்கங்கள், நிலக்கரி அமைச்சகத்தின் துணை அலுவலகமான நிலக்கரி கட்டுப்பாட்டாளர் அமைப்பு மூலம் சரிபார்க்கப்படும். தளத்தில் உள்ள பொறிமுறையானது, சுரங்கங்களுக்கு, 7 தொகுதிகளின்கீழ் சில மதிப்பீட்டு அளவுருக்கள்கொண்ட நட்சத்திர மதிப்பீட்டை (star rating) வழங்கும்.

10. ‘சியாரா’ புயல், அண்மையில், எந்தக் கண்டத்தில் உள்ள நாடுகளைத் தாக்கியது?

அ. ஆசியா

ஆ. ஐரோப்பா

இ. ஆஸ்திரேலியா

ஈ. வட அமெரிக்கா

 • ஐரோப்பிய நாடுகளில் வீசிவரும் சியாரா புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிச்சர்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சியாரா புயல் கடும்பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஐரிஷ் வானிலை மையத்தால், ‘சியாரா – Ciara’ என அழைக்கப்பட்ட இப்புயல், ஜெர்மனியில், ‘சபின் – Sabine’ என அழைக்கப்படுகிறது. வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, நாடுகளுக்கிடையேயான வானூர்திசேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

Image result for tamilnadu map logo

 • தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) தயாரித்திருக்கும், “தமிழ்நாட்டுக்கான வளஞ்சார்ந்த மாநில அறிக்கை 2020-21”ஐ தமிழ்நாடு அரசின் தலைமைச்செயளாளர் K சண்முகம் வெளியிட்டார். அதனடிப்படையில், தமிழ்நாட்டுக்கு 2020-21ஆம் ஆண்டுக்கான NABARDஇன் கடன் மதிப்பீடு `2,45,629 கோடியாக உள்ளது. இது, 2019-20ஆம் ஆண்டுக்கான (`2,26,906 கோடி) மதிப்பீட்டைவிட 8.25% அதிகமாகும். இதில், விவசாயத்துறைக்குக் கடன் 1,33,006 கோடியும் (54%), குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு `46,899 கோடியும் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *