Tnpsc

12th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

12th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 12th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

12th February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. ‘அறிவியல் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான பன்னாட்டு நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) பிப்ரவரி 10

ஆ) பிப்ரவரி 11

இ) பிப்ரவரி 12

ஈ) பிப்ரவரி 13

  • ‘அறிவியல் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான பன்னாட்டு நாள்’ ஆனது ஆண்டுதோறும் பிப்.11 அன்று அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2021) ‘அறிவியல் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான பன்னாட்டு நாளின்’ ஆறாமாண்டு நாளாகும். ஐநா அவை இந்நாளை கடைப்பிடிக்கி -ன்கிறது. “Women Scientists at the forefront of the fight against COVID-19” என்பது 2021’இல் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

2. பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் கவுன்சிலிடமிருந்து உலக ‘வாடிக்கையாளரின் குரல்’ விருதைப் பெற்றுள்ள இந்திய வானூர்தி நிலையம் எது?

அ) பெங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஆ) சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்

இ) கொச்சின் பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஈ) மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையம்

  • பெங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையமானது பன்னாட்டு விமான நிலையங்கள் கவுன்சிலிடமிருந்து உலக ‘வாடிக்கையாளரின் குரல்’ விருதைப் பெற்றுள்ளது.
  • 2020’இல் COVID-19 தொற்றுகாலத்தின்போது வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளித்த வானூர்தி நிலையங்களை இந்த விருது அங்கீக -ரிக்கிறது. இந்தக் கவுன்சிலின்படி, பெங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம், பயணிகளின் கருத்துக்களை சேகரிப்பதில் குறிப்பிடத்தக்க செயற்பாடுகளைக் காட்டியுள்ளது.

3. ‘உலக நீடித்த வளர்ச்சி குறித்த உச்சிமாநாட்டை’ நடத்துகிற நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) ஐநா வளர்ச்சித் திட்டம்

இ) எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனம்

ஈ) உலக பொருளாதார மன்றம்

  • ‘உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாடு’ என்பது எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தின் (TERI) ஒரு முதன்மை நிகழ்வாகும்.
  • சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவை இவ்வுச்சிமாநாட்டின் முக்கிய பங்காளர்களாகும். TERI என்பது புது தில்லியைச் சார்ந்த ஒரு இலாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனமாகும். இவ்வுச்சிமாநாட்டின் இருபதாவது பதிப்பு பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்படவுள்ளது.
  • “Redefining Our Common Future: Safe and Secure Environment for All” என்பது இவ்வுச்சிமாநாட்டின் கருப்பொருளாகும்.

4. எக்கனாமிக் டைம்ஸ் விருதுகளில், ‘ஆண்டின் சிறந்த வணிக சீர்திருத்தவாதி விருதை’ வென்றவர் யார்?

அ) உர்ஜித் படேல்

ஆ) இரகுராம் இராஜன்

இ) சக்திகாந்த தாஸ்

ஈ) அமிதாப் காந்த்

  • நடப்பாண்டுக்கான (2021) எக்கனாமிக் டைம்ஸ் விருதுகளில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு, ‘ஆண்டின் சிறந்த வணிக சீர்திருத்தவாதி’ வழங்கப்பட்டது. இந்தத் தேர்வுக் குழுவுக்கு, ஆல்பாபெட் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தலைமைதாங்கினார்.
  • ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதானது HDFC வங்கியின் முன்னாள் மேலாண்மை இயக்குநர் ஆதித்யா பூரிக்கு வழங்கப்பட்டது. ‘ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர் விருதை’ ஆதார் பூனவல்லா பெற்றார்.

5. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆறாவது இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

அ) ஜஸ்பிரித் பும்ரா

ஆ) இஷாந்த் சர்மா

இ) இரவிச்சந்திரன் அஸ்வின்

ஈ) புவனேஷ்வர் குமார்

  • இந்திய வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆறாவது இந்திய பந்துவீச்சாளர் ஆனார். சென்னையில் இங்கிலாந்துக்கு எதிரான தனது 98ஆம் டெஸ்டில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். முன்னதாக, அனில் கும்ப்ளே, கபில் தேவ், இரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் டெஸ்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

6. ‘இந்திய பொம்மை கண்காட்சி’ தொடங்கப்பட்ட ஆண்டு எது?

அ) 2018

ஆ) 2019

இ) 2020

ஈ) 2021

  • இந்தியாவில் பொம்மை உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கோடும், பன்னாட்டுச் சந்தையில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையிலும் ‘இந்திய பொம்மை கண்காட்சி’ ஏற்பாடு செய்யப்படுகிறது. 2021 பிப்.27 முதல் மார்ச் 2 வரை இணைய முறையில் இக்காண்காட்சி நடைபெறும். இதன்சமயம் மாநில அரசுகளின் வலையரங்குகள், அறிவு அமர்வுகள் மற்றும் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

7. “இந்திய எரிசக்தி கண்ணோட்டம் – 2021” என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ) பன்னாட்டு எரிசக்தி முகமை

ஆ) புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

இ) பன்னாட்டு எரிசக்தி மன்றம்

ஈ) எரிசக்தி திறன் பணியகம்

  • பன்னாட்டு எரிசக்தி முகமையின், ‘இந்திய எரிசக்தி நுகர்வு குறித்த கண்ணோட்டம் – 2021’க்கு இணங்க, இந்தியா, 2030’க்குள் உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வு நாடாக ஐரோப்பிய ஒன்றியத்தை விஞ்சிநிற்கும். அடுத்த 20 ஆண்டுகளில், இந்தியாவின் எரிசக்தி தேவை வளர்ச்சி பங்கு அதிகபட்சமாக 25 சதவீதத்தை எட்டியிருக்கும்.
  • அடுத்த 20 ஆண்டுகளில் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்கு, இந்தியா, கூடுதலாக $1.4 டிரில்லியன் டாலர்களை செலவழிக்க வேண்டும்.

8. பிப்.8-12 வரை கொண்டாடப்பட்ட ரிசர்வ் வங்கியின் நிதியியல் எழுத்தறிவு வாரம் – 2021’இன் கருப்பொருள் என்ன?

அ) KYC, Exercising Credit Discipline, Grievance Redressal & Going Digital

ஆ) Consumer Protection

இ) Credit Discipline and Credit from Formal Institutions

ஈ) Micro, Small and Medium Enterprises

  • நிதியியல் எழுத்தறிவுகுறித்த செய்திகளைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியானது கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நிதியியல் எழுத்தறிவு வாரத்தை அனுசரிக்கிறது.
  • நடப்பாண்டுக்கான நிதியியல் எழுத்தறிவு வாரம் பிப்.8 முதல் 12 வரை கொண்டாடப்பட்டது. “Credit Discipline and Credit from Formal Institutions” என்பது அதன் கருப்பொருளாம். நாட்டில் நிதியியல் குறித்த கல்வியைப் பரப்புவதற்கு, ‘5C’ அணுகுமுறையை அது பரிந்துரைக்கிறது. “Content, Capacity, Community, Communication மற்றும் Collaboration” என்பது அந்த 5C’களாகும்.

9. தேசிய தோட்டக்கலை கண்காட்சி – 2021’இன் கருப்பொருள் என்ன?

அ) Horticulture for Start-up and Stand-up India

ஆ) Making Farming an Enterprise

இ) Feeding the Planet, Energy for Life

ஈ) Horticulture for Promotion of Rural Entrepreneurship

  • 5 நாள் நடைபெறும் தேசிய தோட்டக்கலை கண்காட்சியானது பிப்ரவரி 8 முதல் பெங்களூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது. “Horticulture for Start-up and Stand-up India” என்பது இந்தக் கண்காட்சி -க்கான கருப்பொருளாகும்.

10. ‘By Many a Happy Accident: Recollections of a Life’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ) பிரதிபா பாட்டீல்

ஆ) இராம்நாத் கோவிந்த்

இ) L K அத்வானி

ஈ) ஹமீது அன்சாரி

  • இந்தியாவின் முன்னாள் குடியரசுத்துணைத்தலைவர் முகமது ஹமீது அன்சாரி, ‘By Many a Happy Accident: Recollections of a Life’ என்ற நூலை எழுதியுள்ளார். முகமது ஹமீது அன்சாரியின் வாழ்வில் நிகழ்ந்த எதிர்பாராத நிகழ்வுகளை இந்நூல் விவரிக்கிறது.
  • முகமது ஹமீது அன்சாரி அவர்கள் தொடர்ந்து இருமுறை இந்தியாவின் குடியரசுத்துணைத்தலைவராக பதவி வகித்துள்ளார்.

தமிழக நடப்பு நிகழ்வுகள்

  • சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாங்கட்ட அகழாய்வை முதலமைச்சர் க.பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் பிப்.13 தொடங்கிவைக்கிறார்.

1. When is the ‘International Day of Women and Girls in Science’ observed?

A) February 10

B) February 11

E) February 12

D) February 13

  • International Day of Women and Girls in Science’ is observed every year on February 11, across the world. This year, the day will mark the sixth International Day of Women and Girls in Science Assembly. United Nations leads the observance of the day. This year, the theme is ‘Women Scientists at the forefront of the fight against COVID–19’.

2. Which Indian airport has bagged the World’s ‘Voice of the Customer’ award from the Airports Council International?

A) Bangalore International Airport

B) Chennai International Airport

C) Cochin International Airport

D) Mumbai International Airport

  • The Bangalore International Airport Limited’s (BIAL) has won the World’s ‘Voice of the Customer’ award from the Airports Council International. The award recognises airports which continued to prioritise the customers during the COVID–19 pandemic in 2020. As per the council, the airport showed significant efforts in collecting passenger feedback.

3. ‘World Sustainable Development Summit’ is organised by which institution?

A) NITI Aayog

B) UNDP

C) The Energy and Resources Institute

D) World Economic Forum

  • ‘World Sustainable Development Summit’ is the flagship event of The Energy and Resources Institute’s (TERI). The Ministry of Environment, Forests and Climate Change, the Ministry of New and Renewable Energy and the Ministry of Earth Sciences are key partners of the summit.
  • TERI is a New Delhi–based non–profit research institute. The 20th edition of the summit is to be inaugurated by the PM. The theme of the summit is ‘Redefining Our Common Future: Safe and Secure Environment for All’.

4. Who won the ‘Business reformer of the year award’ at the Economic Times Awards?

A) Urjit Patel

B) Raghuram Rajan

C) Shaktikanta Das

D) Amitabh Kant

  • In this year’s Economic Times Awards for Corporate Excellence, RBI Governor Shaktikanta Das won the Business reformer of the year. The jury was led by the Alphabet CEO Sundar Pichai.
  • Lifetime Achievement Award was won by former HDFC Bank MD Aditya Puri. Entrepreneur of the year award was won by Adar Poonawalla.

5. Which cricket player recently became the 6th Indian to take 300 wickets in test cricket?

A) Jasprit Bumrah

B) Ishant Sharma

C) Ravichandran Ashwin

D) Bhuvaneshwar Kumar

  • India fast bowler Ishant Sharma became the sixth Indian bowler to take 300 wickets in Test cricket. He achieved this feat in his 98th test against England at Chennai. Previously, Anil Kumble, Kapil Dev, Ravichandran Ashwin, Harbhajan Singh and Zaheer Khan are the other Indian bowlers who had taken over 300 wickets in tests.

6. ‘The India Toy Fair’ was launched in which year?

A) 2018

B) 2019

C) 2020

D) 2021

  • The Government of India has launched the ‘The India Toy Fair 2021’, to promote domestic manufacturing of toys. It is to be held as a digitally accessible exhibition and platform to connect various stakeholders of Toy industry. The programme is scheduled from 27th February to 2nd March 2021. Webinars by State Governments, Knowledge sessions and Competitions are being planned.

7. Which organisation released the “India Energy Outlook 2021”?

A) International Energy Agency

B) Ministry of New & Renewable Energy

C) International Energy Forum

D) Bureau of Energy Efficiency

  • In accordance with the International Energy Agency’s (IEA) “India Energy Outlook 2021”, India will surpass European Union as the world’s third–biggest energy consumer by 2030.
  • In this regard, India energy demand growth share will be maximum at 25% in the next two decades. India needs to spend an additional $1.4 trillion, to adopt clean energy technologies over the next 20 years.

8. What is the theme of RBI’s Financial Literacy Week – 2021 that was celebrated from February 8 to 12?

A) KYC, Exercising Credit Discipline, Grievance Redressal and Going Digital

B) Consumer Protection

C) Credit Discipline and Credit from Formal Institutions

D) Micro, Small and Medium Enterprises

  • The Reserve Bank of India observes Financial Literacy Week (FLW) annually since 2016, to promote and spread awareness about financial education messages. ‘FLW 2021’ is being celebrated from Feb.8 to 12.
  • Theme of FLW – 2021 is, “Credit Discipline and Credit from Formal Institutions”. The strategy recommends the ‘5C’ approach to disseminate financial education in the country. 5C – Content, Capacity, Community, Communication and Collaboration.

9. What is the theme of National Horticulture Fair – 2021?

A) Horticulture for Start–up and Stand–up India

B) Making Farming an Enterprise

C) Feeding the Planet, Energy for Life

D) Horticulture for Promotion of Rural Entrepreneurship

  • A 5–day National horticulture fair is to be held here by the Indian Council for Agricultural Research – Indian Institute of Horticultural Research (IIHR), Bangalore from Feb.8. The national fair would be organised under the theme “Horticulture for Startup & Standup India”.

10. Who authored the book, ‘By Many a Happy Accident: Recollections of a Life’?

A) Pratibha Patil

B) Ram Nath Kovind

C) L K Advani

D) Hamid Ansari

  • Former Vice President of India Mohammad Hamid Ansari has authored a book titled ‘By Many a Happy Accident: Recollections of a Life’. It describes the unplanned happenings that took place in the life of Mohammad Hamid Ansari. Mohammad Hamid Ansari has twice served as the Vice President of India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!