Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

12th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

12th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 12th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

12th January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. பிரபல இராசாங்க அமைச்சரும் – துறவியுமான ‘பசவேஸ்வரா’ சார்ந்த மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) தில்லி

ஆ) கர்நாடகா

இ) மகாராஷ்டிரா

ஈ) தெலங்கானா

  • 12ஆம் நூற்றாண்டைய கல்யாணி சாளுக்கிய வம்சத்தின் ஆட்சிக் காலத்தில், அமைச்சரும் லிங்காயத் துறவியுமாக இருந்தவர் ‘பசவேஸ்வரர்’ என்னும் ‘பசவண்ணா’. அவர் கர்நாடகாவில் உள்ள லிங்காயத் சமூகத்தின் பிரபல ஆளுமையாக கருதப்படுகிறார். சமீபத்தில், கர்நாடக முதல்வர் B S எடியுரப்பா, பசவகல்யாணில் `500 கோடி மதிப்பீட்டில், ‘புதிய அனுபவ மண்டபம்’ நிறுவுவதற்காக அடிக்கல் நாட்டினார். இது அவரின் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது.

2. புதிய ‘பள்ளிப்பை கொள்கை’யை அறிமுகப்படுத்திய மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) தில்லி

ஆ) கர்நாடகா

இ) மகாராஷ்டிரா

ஈ) தெலங்கானா

  • தேசிய கல்விக்கொள்கைக்கு இணங்க, மாணவர்களின் பள்ளிப்பைகளின் எடையை குறைக்க தில்லி அரசு ஒரு புதிய “பள்ளிப்பை கொள்கையை” அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கொள்கையை விரைவில் செயல்படுத்துமாறு தேசிய தலைநகர பிராந்தியத்தில் உள்ள பள்ளிகளுக்கு தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. இக்கொள்கையின்படி, 1-10 வகுப்புகளுக்கு இடையில் உள்ள மாணவர்களுக்கான பள்ளிப் பைகளின் எடை அவர்களின் உடல் எடையில் 10 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘மெலிபோனிகல்ச்சர்’ என்றால் என்ன?

அ) கொடுக்கற்ற தேனீ வளர்ப்பு முறை

ஆ) விதைகளற்ற பழங்கள் உற்பத்தி முறை

இ) இறகற்ற கோழி வளர்ப்பு முறை

ஈ) விதைகளற்ற காய்கள் உற்பத்தி முறை

  • காசர்கோடை தலைமையிடமாகக்கொண்ட உழவர்கள் பல்கலைக் கழகமான கர்ஷகா வித்யாபீடம், சம்பேரியில் ஒரு ‘மெலிபோனி கல்ச்சர்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மெலிபோனிகல்ச்சர் குறித்த 4 மாத பயிற்சி வகுப்பு (அதாவது கொடுக்கற்ற தேனீ வளர்ப்பு) தொடங்கப்பட்டது. அடுத்தகட்ட உதவியுடன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மன்றத்தால் வடிவமைக்கப்பட்ட, ‘சுதேச தேன்கூடுகளும்; இந்தப் பயிற்சியின் வழங்கப்படும்.

4. மக்களவை சபாநாயகரின் சமீபத்திய அறிவிப்பின்படி, பள்ளிகள் & கல்லூரிகளில், எந்தப் பரப்புரை மேற்கொள்ளப்பட உள்ளது?

அ) Know your MLA

ஆ) Know your MP

இ) Know your constituency

ஈ) Know your Constitution

  • மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சமீபத்தில் உத்தரகண்ட் பஞ்சாயத்து ராஜ் துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இந்த நிகழ்வின்போது, நாடு முழுவதுமுள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், “உங்கள் அரசியலமைப்பை அறிந்துகொள்ளுங்கள்” என்ற பெயரில் ஒரு பரப்புரையை மத்திய அரசு விரைவில் மேற்கொள்ளும் என்று அவர் அறிவித்தார். இது அரசியலமைப்பின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, வர்த்தக கொள்கை மீளாய்வுடன் தொடர்புடைய நிறுவனம் எது?

அ) உலக வங்கி

ஆ) WTO

இ) IMF

ஈ) FAO

  • வர்த்தக கொள்கை மீளாய்வு (Trade Policy Review) என்பது உலக வர்த்தக அமைப்பின் (WTO) கீழ் உள்ள ஒரு பொறிமுறையாகும். இதில், உறுப்பினர்களின் வர்த்தகம் மற்றும் அது தொடர்புடைய கொள்கைகள் ஆராயப்படுகின்றன. அதன் விதிகளுக்கு இணங்குவதை மேம்படுத்துகின்றன.
  • அண்மையில், இந்தியாவின் ஏழாவது வர்த்தக கொள்கை ஆய்வு உலக வர்த்தக அமைப்பில் ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பில் முடிந்தது. இந்தியாவின் முந்தைய TPR, கடந்த 2015ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. COVID-19’க்கான புதிய நோயறிமுறைகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தித்திறன் மற்றும் அவை சரியான நேரத்தில் கிடைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா ஆதரித்தது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற IREDA என்பது பின்வரும் எந்த அமைச்சகத்தின் கீழ்வரும் ஓர் அமைப்பாகும்?

அ) எரிசக்தி அமைச்சகம்

ஆ) புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

இ) தகவல் தொடர்பு அமைச்சகம்

ஈ) MSME அமைச்சகம்

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘மினி இரத்னா’ நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (IREDA), புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குவதற்காக தேசிய நீர்மின்சார கழகத்துடன் (NHPC) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தேசிய நீர்மின்சார கழகத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எரிசக்தி சேமிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப நிதி சேவைகளை இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை வழங்கும்.

7. அடிப்படை வாழ்வுக்கான ஊதியத்தை பரிந்துரைத்த, மத்திய தொழிலாளர் அமைச்சக ஆணையத்தின் தலைவர் யார்?

அ) சந்தோஷ் குமார் கங்வார்

ஆ) C V ஆனந்த போஸ்

இ) அபூர்வ சந்திரா

ஈ) அலோக் குமார் மாத்தூர்

  • COVID-19 தொற்றுநோய்களின்போது ஒப்பந்தத்தொழிலாளர்களின் நலன் மற்றும் மேம்பாட்டுக்கான செயல்திட்டத்தைத் தயாரிப்பதற்காக தொழிலாளர் அமைச்சின் மத்திய ஆலோசனை ஒப்பந்த தொழிலாளர் வாரியத்தின்கீழ் உறுப்பினர் ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டது.
  • இவ்வாணையத்தின் பொறுப்பாளராக இருந்த மூத்த IAS அதிகாரி C V ஆனந்த போஸ், வேலையிழப்பு ஏற்பட்டால் அடிப்படை வாழ்வுக்கான ஊதியத்தை செலுத்த பரிந்துரைத்துள்ளார். இந்திய தொழிலாளர் ஆணையத்தை ஒரு மைய அமைப்பாக நிறுவவும் அவர் முயன்றார்.

8. ‘Pioneers’ என்பது எந்த விண்வெளி மையத்தின் திட்டமாகும்?

அ) இந்தியா

ஆ) அமெரிக்கா

இ) பிரிட்டன்

ஈ) ஜெர்மனி

  • ‘Pioneers’ திட்டமானது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA’ஆல் கடந்த 2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அது, சிறிய வன்பொருளைப்பயன்படுத்தி வானியற்பியல் அறிவியல்பற்றி ஆராய்ச்சி மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அண்மையில், இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக, NASA, நான்கு சிறிய அளவிலான வானியற்பியல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அஸ்பெரா, பண்டோரா மற்றும் ஸ்டார்பர்ஸ்ட் என்ற சிறிய செயற்கைக் கோள்கள் & PUEO என்ற பலூன் திட்டம் ஆகியவை இதில் அடங்கும். இத்திட்டங்கள் அண்ட நிகழ்வுகளைப்பற்றி ஆய்வுசெய்ய உதவும்.

9. நாட்டின் முதல் சூரிய மின்சார RO-RO சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள மாநிலம் எது?

அ) கேரளா

ஆ) மேற்கு வங்கம்

இ) மகாராஷ்டிரா

ஈ) ஆந்திர பிரதேசம்

  • நாட்டின் முதல் சூரிய மின்சார ரோ-ரோ சேவை, 2021-2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று கேரள ஆளுநர் சட்டமன்றத்தில் அறிவித்தார். மாநிலத்தின் முதல் நீர்-நில இயக்க பேருந்து சேவை தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். சரக்குகள் இயக்கம் மற்றும் அதிவேக சுற்றுலா சேவைகளுக்காக படகு சேவையை தொடங்கவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

10. பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் எந்த மாநகராட்சி, ‘பீரியட் ரூம்’ என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளது?

அ) திருவனந்தபுரம் மாநகராட்சி

ஆ) தானே மாநகராட்சி

இ) விசாகப்பட்டிணம் மாநகராட்சி

ஈ) பெங்களூரு மாநகராட்சி

  • மாநகராட்சியில் அமைந்துள்ள கழிப்பறைத் தொகுதிகளில், “பீரியட் ரூம்” ஒன்றை தானே மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. பத்துக்கு ஒரு கழிப்பறையில், தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய “பீரியட் ரூம்” ஆக மாற்றப்பட்டுள்ளது. மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1. ‘Basaveshwara’ is a famous statesman–saint of which Indian state/UT?

A) Delhi

B) Karnataka

C) Maharashtra

D) Telangana

  • Basavanna also called as ‘Basaveshwara’ was a 12th century statesman, Lingayat saint during the reign of the Kalyani Chalukya dynasty. He is considered a famous icon of the Lingayat community in Karnataka.
  • Recently, the Karnataka CM B.S. Yediyurappa laid the foundation stone for the Rs 500–crore project ‘New Anubhava Mantapa’ in Basavakalyan. It is considered as the place where the philosopher lived.

2. Which Indian state/UT has introduced a new “School–bag Policy”?

A) Delhi

B) Karnataka

C) Maharashtra

D) Telangana

  • The Delhi Government has introduced a new “School bag policy”, to reduce the weight of school bags of the students, in line with the National Education Policy. The Government also directed the schools in the National Capital Region to implement the policy soon.
  • As per the policy, the weight of school bags for students between classes 1–10 should not be more than 10 per cent of their body weight.

3. What is ‘Meliponiculture’, which was making news recently?

A) Stingless Honeybee Farming

B) Seedless Fruits Production Method

C) Featherless Poultry Farming

D) Seedless Vegetables Production Method

  • Karshaka Vidyapeedam, a farmers’ university headquartered in Kasaragod, has launched a meliponiculture project in Champeri. A four–month training course on meliponiculture, which means stingless honeybee farming, was also launched.
  • ‘Indigenous beehives’ designed by the research forum of the University will also be provided in the course along with follow–up assistance.

4. As per the recent announcement of the Lok Sabha speaker, which campaign is to be undertaken in schools and colleges?

A) Know your MLA

B) Know your MP

C) Know your Constituency

D) Know your Constitution

  • The Lok Sabha Speaker Om Birla recently chaired the event organised by the Uttarakhand Panchayati raj department.
  • During the occasion, he announced that the Central Government would soon undertake a campaign named “Know your Constitution” in schools, colleges and universities across the country. It aims to create awareness about various aspects of the Constitution.

5. Trade Policy Review (TPR), which was making news recently, is associated with which organisation?

A) World Bank

B) WTO

C) IMF

D) FAO

  • Trade Policy Review (TPR) is a mechanism under the World Trade Organisation (WTO), in which trade and related policies of members are examined, to improve compliance to its rules. Recently, India’s seventh Trade Policy Review (TPR) at the WTO concluded in Geneva.
  • India’s previous TPR was conducted in the year 2015. India backed a set of measures to increase manufacturing capacity and timely availability of new diagnostics and vaccines for Covid–19.

6. IREDA, which was making news recently, is an organisation under which Ministry?

A) Ministry of Power

B) Ministry of New and Renewable Energy

C) Ministry of Communication

D) Ministry of MSME

  • Indian Renewable Energy Development Agency Limited (IREDA) is a Mini Ratna company under the administrative control of Ministry of New and Renewable Energy.
  • Recently, IREDA has signed an agreement with the Power Ministry’s PSU, NHPC Limited, to collaborate in renewable energy (RE) projects. IREDA will also provide knowledge and technology transfer, and consultancy services.

7. Who is the head of the Labour Ministry’s commission, which recommended a basic living wage?

A) Santosh Kumar Gangwar

B) C V Ananda Bose

E) Apoorva Chandra

D) Alok Kumar Mathur

  • A one–member commission was created under the Labour Ministry’s Central Advisory Contract Labour Board (CACLB), to prepare an action plan for the welfare and development of guest and contract workers during the COVID–19 pandemic.
  • Veteran IAS officer C V Ananda Bose, who was in–charge of the commission, has recommended payment of a basic living wage in the event of employment loss. He also sought to establish Labour Authority of India as a nodal body.

8. ‘Pioneers’ is a programme of which country’s space agency?

A) India

B) USA

C) Britain

D) Germany

  • The Pioneers Program was started by US space agency NASA in 2020, which aims to research on astrophysics science using smaller hardware. Recently, NASA has approved four small–scale astrophysics missions as a part of the Pioneers Program.
  • The concepts include small satellites named Aspera, Pandora and StarBurst and a balloon mission named PUEO. These missions will help study about cosmic phenomena.

9. Which state has announced to launch the country’s first Solar Electric RO–RO service?

A) Kerala

B) West Bengal

C) Maharashtra

D) Andhra Pradesh

  • The country’s first Solar Electric RORO service will be introduced during the year 2021–2022, the Kerala Governor announced in the Assembly. He also announced that the state’s first amphibious water bus will also be launched. The state has planned to launch barge service for cargo movement and high–speed tourist services.

10. Which civic body of India has launched the ‘Period room’ initiative, for improving menstrual hygiene of women?

A) Tiruvananthapuram Municipal Corporation

B) Thane Municipal Corporation

C) Visakhapatnam Municipal Corporation

D) Bengaluru Municipal Corporation

  • The Thane Municipal Corporation has taken a step and introduced a ‘period room’ in a toilet block located in the corporation. One out of the ten stalls of the toilet block has been converted into a ‘period room’ with all required amenities. This step is taken to improve menstrual hygiene.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!