TnpscTnpsc Current Affairs

12th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

12th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 12th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘நிர்பயா கதி’ பிரச்சாரத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ) மேற்கு வங்கம்

ஆ) ஒடிஸா 

இ) கர்நாடகா

ஈ) குஜராத்

 • ஒடிஸா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டம் முதல் குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக தனை அறிவித்துள்ளது. இது ‘நிர்பயா கதி’ (அச்சமற்ற மொட்டு) என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. இந்தப்பிரச்சாரத்தின்மூலம், மாவட்ட நிர்வாகம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இளம் வயதினருக்கு ஆலோசனை வழங்கியது மற்றும் 450’க்கும் மேற்பட்ட சிறார் திருமணங்களை நிறுத்தியுள்ளது.
 • குழந்தை திருமணங்கள் நடப்பதை அறிவித்தால் ஊக்கத் தொகை வழங்குதல், திருமணங்களுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கல்போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அவர்கள் செயல்படுத்தியுள்ளனர்.

2. மாணாக்கர் துளிர் மற்றும் புத்தாக்க கொள்கை (SSIP) 2.0’ஐ அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

அ) தெலுங்கானா

ஆ) குஜராத் 

இ) மகாராஷ்டிரா

ஈ) ஒடிஸா

 • குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், சர்வதேச கல்வி நிறுவனங்களின் மாநாட்டில் (ICAI-2022) மாணாக்கர் துளிர் மற்றும் புத்தாக்க கொள்கை (SSIP) 2.0’ஐ அறிமுகப்படுத்தினார். இது பள்ளி மாணாக்கருக்கு புத்தாக் -கத்தில் நிதியுதவி செய்வதை நோக்கமாகக்கொண்டு உள்ளது. 2027 மார்ச் வரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு வரை செயல்படுத்தப்படும். நிதியுதவி முந்தைய பதிப்பின் `200லிருந்து `500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

3. அண்மையில் எந்த நாட்டின் தலைவராக, ‘ஓலாஃப் ஸ்கோல்ஸ்’ நியமிக்கப்பட்டார்?

அ) அமெரிக்கா

ஆ) ஜெர்மனி 

இ) பிரேசில்

ஈ) ரஷ்யா

 • ஓலாஃப் ஸ்கோல்ஸ் 2021 டிசம்பர் முதல் ஜெர்மனியின் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் மோடி ஜெர்மன் அதிபருடன் கலந்துரையாடினார் மற்றும் அவர் அதிபராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
 • முதலீடு & வர்த்தக இணைப்புகள் உட்பட, தற்போதுள்ள ஒத்துழைப்பு முன்னெடுப்புகளின் திறன்களை அவர்கள் மதிப்பாய்வு செய்தனர். புதிய பகுதிகளில் ஒத்துழைப்பைப் பன்முகப்படுத்துவது மற்றும் பரிமாற்றங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

4. ‘உஜாலா’ திட்டத்தைச் செயல்படுத்துகிற நடுவண் அமைச்சகம் எது?

அ) எரிசக்தி அமைச்சகம் 

ஆ) சுற்றுச்சூழல் அமைச்சகம்

இ) பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகம்

ஈ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

 • உஜாலா திட்டத்தின் கீழ் LED விளக்குகள் விநியோகம் மற்றும் விற்பனையின் 7 ஆண்டுகளை மின்சாரத்துறை அமைச்சகம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
 • குறைந்த செலவில் LED விளக்குகள் வழங்கும் உஜாலா திட்டம் கடந்த 2015 ஜன.5 அன்று தொடங்கப்பட்டது. தற்போது வரை, நாடு முழுவதும் 36.78 கோடி LED விளக்குககள் விநியோகிக்கப்பட்டுள்ளன. Unnat Jyoti by Affordable LEDs for All என்பதன் சுருக்கமே ‘UJALA’.

5. பெகாசஸ் மால்வேர் சிக்கலைக் கண்டறிவதற்காக தொழில்நுட்பக் குழுவை நியமித்த அமைப்பு எது?

அ) மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ) இந்திய உச்சநீதிமன்றம் 

இ) சென்னை உயர்நீதிமன்றம்

ஈ) NITI ஆயோக்

 • பெகாசஸ் மால்வேர் சிக்கலைக் கண்டறிய இந்திய உச்ச நீதிமன்றம் தொழில்நுட்பக் குழுவை நியமித்தது. குடிமக்கள் தங்கள் மொபைல் சாதனங்கள் பெகாசஸ் தீம்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டால், குழுவைத் தொடர்புகொள்ளுமாறு அத்தொழில்நுட்பக்குழு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
 • நியாயமானதாக இருந்தால், சாதனத்தை பரிசோதிக்க அனுமதிக்கும்படி அக்குழு அந்நபரைக் கோரும்.

6. மிகவும் இளவயது உலக ரேபிட் செஸ் சாம்பியனான நோடிர்பெக் அப்துசட்டோரோவ் சார்ந்த நாடு எது?

அ) சுவிட்சர்லாந்து

ஆ) ரஷ்யா

இ) உஸ்பெகிஸ்தான் 

ஈ) உக்ரைன்

 • உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த நோடிர்பெக் அப்துசட்டோ ரோவ், 17 வயது மூன்று மாதங்களில், உலக ரேபிட் செஸ் சாம்பியன் ஆனார். மேக்னஸ் கார்ல்சன் தனது 18 வயதில் 2009ஆம் ஆண்டில் உலக பிளிட்ஸ் பட்டத்தை வென்றார்.
 • போலந்தின் வார்சாவில் நடந்த உலக ரேபிட் சாம்பியன்
  -ஷிப் போட்டியில் முன்னணி வீரர் மேக்னஸ் கால்சனை நோடிர்பெக் தோற்கடித்தார். உலக பிளிட்ஸ் பட்டத்தை பிரான்சின் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ் வென்றார்.

7. இந்தியாவின் மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டத்தை இராஜஸ்தானில் தொடக்கியுள்ள இந்திய நிறுவனம் எது?

அ) அதானி பவர்

ஆ) அஸூர் பவர் 

இ) டாடா பவர்

ஈ) ரினியூ பவர்

 • இந்திய சூரிய மின்னுற்பத்தியாளரான அசூர் பவர் தனது மிகப்பெரிய திட்டமான 600 MW சோலார் பூங்காவை இராஜஸ்தான் மாநிலத்தில் முழுமையாக இயக்கியுள்ளது.
 • இந்தச் சூரிய ஆற்றல் பூங்கா பிகானேரில் அமைந்துள்ளது. இது 25 ஆண்டுகளுக்கு சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுக்கு (SECI) அதன் மின்சாரத்தை வழங்கும்.

8. அண்மையில் அமைக்கப்பட்ட ‘எரிசக்தி மாற்ற ஆலோச -னைக் குழுவின்’ தலைவர் யார்?

அ) தருண் கபூர் 

ஆ) ரமேஷ் சந்த்

இ) V K பால்

ஈ) அமிதாப் காந்த்

 • மத்திய பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகம் முன்னாள் பெட்ரோலிய செயலாளர் தருண் கபூர் தலைமையில் எரிசக்தி மாற்ற ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது. இந்தக்குழுவில் அனைத்து பொதுத்துறை எண்ணெய் & எரிவாயு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளனர்.
 • மேலும் இது எண்ணெய் மற்றும் எரிவாயு துறைக்கான ஆற்றல் மாற்றத்திற்கான செயல் திட்டத்தை உருவாக்கும். 2070ஆம் ஆண்டிற்குள் நிகர சுழிய உமிழ்வை இந்தியா உறுதிசெய்துள்ளது. இந்தக்குழு 2022இன் நடுப்பகுதியில் மாற்றத்திற்கான ஒரு செயல்திட்டத்தை பரிந்துரைக்கும்.

9. ‘மாவட்ட அளவிலான நல்லாட்சிக் குறியீடு’ கொண்ட முதல் மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ) மிசோரம்

ஆ) புதுச்சேரி

இ) திரிபுரா

ஈ) ஜம்மு & காஷ்மீர் 

 • ஜம்மு மற்றும் காஷ்மீர் ‘மாவட்ட அளவிலான நல்லாட்சிக் குறியீட்டைக்’கொண்ட முதல் யூனியன் பிரதேசமாக மாற உள்ளது. நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்க்கும் துறையானது ஜம்மு & காஷ்மீர் அரசுடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொள்ளும்.
 • உழவு, வணிகம் மற்றும் தொழிற்துறை, பொதுப்பாதுகாப்பு, பொது சுகாதாரம் போன்ற வளர்ச்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு அம்சங்களை மதிப்பிடுவதற்கான 58 குறிகாட்டிகள் இந்தக் கட்டமைப்பில் இருக்கும்.

10. சமூக சீர்திருத்தவாதியான சாவித்ரிபாய் பூலே, இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியை எம்மாநிலத்தில் நிறுவினார்?

அ) தமிழ்நாடு

ஆ) மகாராஷ்டிரா 

இ) மத்திய பிரதேசம்

ஈ) கேரளா

 • சமூக சீர்திருத்தவாதி சாவித்ரிபாய் பூலே 1831 ஜனவரி.3 அன்று மகாராஷ்டிராவில் பிறந்தார். இவரது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1848ஆம் ஆண்டில் சாவித்ரிபாய் தனது கணவர் ஜோதிராவ் பூலேவுடன் இணைந்து மகாராஷ்டிராவின் புனேவில் இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளிகளுள் ஒன்றை நிறுவினார்.
 • ஆசிரியையான முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அவர் கைம்பெண்களுக்கான தங்குமிடம் மற்றும் சிசுக்கொலை தடுப்பு இல்லத்தையும் திறந்து வைத்தார். சிறார் திருமணம் மற்றும் சதி முறையை அவர் கடுமையாக எதிர்த்தார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 12-01-2021 – அயலகத் தமிழர் நாள்

2. தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள்: பிரதமர் மோடி காணொலியில் இன்று திறந்து வைக்கிறார்

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் திறந்துவைக்கிறார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன.

இவற்றை இன்று (ஜன.12) பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தமிழகத்துக்கு வந்து திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் கரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் பிரதமர் வருகை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் பிரதமர் மோடி இன்று(ஜன.12) மாலை 4 மணிக்கு தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம்திறந்து வைக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இதன்படி இன்று நடக்கும் இந்தநிகழ்வில், முதல்வர் ஸ்டாலின், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்கின்றனர். மேலும் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூர் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஆட்சியர்கள் உட்பட உயர் அதிகாரிகளும் விழாவில் கலந்துகொள்கின்றனர். இந்த 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் தமிழகத்துக்குக் கூடுதலாக 1,450 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழாய்வு நிறுவனம்

இதேபோல் சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.24.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தையும் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக இன்று திறக்கவுள்ளார்.

3. தேசிய இளையோர் விழா; பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் இன்று தொடங்கி வைக்கிறார்:

புதுச்சேரியில் நடப்பதாக இருந்த தேசிய இளையோர் விழாவை, கரோனா பரவலால் காணொலியில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அத்துடன் `23 கோடியில் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

நாட்டின் 75ஆவது சுதந்திர தின ஆண்டு மற்றும் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி 25ஆவது தேசிய இளையோர் விழா, அரவிந்தரின் 150ஆவது பிறந்தநாள் விழா புதுவையில் கொண்டாடப்படுகிறது.

4. மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றியின் இதயம்: மருத்துவ உலகில் புதிய சாதனை

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சையின்மூலம் மனிதருக்கு பொருத்தப்பட்ட புதிய மருத்துவ சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட் என்பவருக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்தி மேரிலாண்ட் பல்கலைக்கழக மருத்துவர்கள் இந்தச் சாதனை புரிந்துள்ளனர்.

5. இனி சீனாவின் விவோ இல்லை: ஐபிஎல் ஸ்பான்ஸராக டாடா குழுமத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம்

ஐபிஎல் டி20 தொடரின் டைட்டில் ஸ்பான்ஸராக சீனாவின் விவோ நிறுவனத்துக்குப் பதிலாக டாடா குழுமம் அடுத்த இரு ஆண்டுகளுக்கு உரிமத்தைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு 2022 சீசன் மற்றும் 2023ஆம் ஆண்டு சீசனுக்கும் டைட்டில் ஸ்பான்ஸராக டாடா குழுமம் தேர்ந்தெடுக்கப்பட் -டுள்ளதாக IPL நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா குழுமத்துக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த ஒப்பந்தத்தை பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு நேற்று வழங்கியுள்ளது.

6. சரிவிலிருந்து மீளும் இந்திய பொருளாதாரம்: ஏற்றுமதி, வேலை வாய்ப்பு, டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிப்பு

கரோனா தொற்றினால் ஏற்பட்டபாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை காக்கும் வகையில் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் (2021-22) முதல் 9 மாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 30 ஆயிரம் கோடி டாலரை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் எட்டியதைவிட 22 சதவீதம் அதிகமாகும். நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தபோதிலும் ஒட்டுமொத்தமாக ஏற்றுமதி அதிகரித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 40,000 கோடி டாலர் என ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை எளிதில் எட்டிவிட முடியும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

2020-21ஆம் நிதிஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் $35,400 கோடியாகும். முந்தைய நிதியாண்
-டைவிட 5,700 கோடி டாலர் கூடுதலாக வர்த்தகமானது. இறக்குமதி 51,300 கோடி டாலராக இருந்தது.

நடப்பாண்டில் அமெரிக்காவுக்கான வர்த்தகம் அதிகரித்து உள்ளது. 5,870 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதியாகி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சீனாவுக்கான ஏற்றுமதி வர்த்தகம் 42% அதிகரித்துள்ளது. இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் வங்கதேசமும் இடம்பெற்றுள்ளது. வங்கதேசத்துக்கான இந்திய ஏற்றுமதி 67% அதிகரித்து உள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதற்கு பல நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) போடப்பட்டதும் முக்கிய காரணமாகும். இந்தியா முதலில் தாராள வர்த்தக ஒப்பந்தம் ஐக்கிய அரபு அமீரகத்துடன்தான் போட்டது. ஆனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்ததைத் தொடர்ந்து அமீரகத்துடனான வர்த்தக அளவு கடந்த சில ஆண்டுகளாக குறைந்துவிட்டது. இங்கிலாந்துடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறியதால் ஏற்பட்டுள்ள வர்த்தக பாதிப்பைஈடுகட்டுவதற்காக இங்கிலாந்துடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுகிறது. ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

டிசம்பர் மாதத்தில் மட்டும் 3,700 கோடி அளவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். முந்தைய ஆண்டு இதே காலத்தில் எட்டப்பட்ட ஏற்றுமதி அளவைக் காட்டிலும் 37 சதவீதம் அதிகமாகும்.

நடப்பு நிதி ஆண்டு முடிவடைய 3 மாதங்கள் உள்ள நிலையில் இத்தகைய ஏற்றுமதி வருமானத்தை இந்தியா இதுவரை எட்டியது இல்லை.

மின்னுற்பத்தி

2015-ம் ஆண்டில் பாரீஸில் நடைபெற்ற மாநாட்டில் மரபு சாரா எரிசக்தி இலக்கை எட்ட இந்தியா கையெழுத்திட்டது. இதன்படி 2030-ம் ஆண்டு எட்ட வேண்டிய இலக்கு 8 ஆண்டுகளுக்கு முன்ன தாகவே 2021-ம் ஆண்டிலேயே இந்தியா எட்டிவிட்டது குறிப்பிடத் தக்க சாதனையாகும். 40 சதவீதமின்னுற்பத்தியை மரபுசாரா மின்னுற்பத்தி மூலம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காற்றாலை, சூரிய மின்னுற்பத்தி மற்றும் அணு மின்னுற்பத்தி மூலம் இதை எட்ட முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவின் மொத்த மின்னுற் பத்தி 392 கிகாவாட் ஆகும். மரபுசாரா உற்பத்தி மூலமாக உற்பத்தி செய்ய வேண்டிய மின்னுற்பத்தி 157 கிகாவாட்டாகும். அரசு தனியார் பங்கேற்பு மூலம் இந்த இலக்கை எட்டப்பட்டுள்ளது. மரபு சாரா எரிசக்தித் துறையில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடு (2014-19) 6,400 கோடி டாலராகும்.

வேலைவாய்ப்பு

ஐஐடி உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களில் அதிக அளவில் அதிக சம்பளத்துக்கு இந்திய மாணவர்கள் முன்னணி நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மும்பை ஐஐடி-யில் மட்டும் 1,400 மாணவர் களுக்கு வளாகத் தேர்வில் வேலை கிடைத்துள்ளது. ஐஐடி-டெல்லி கல்வி மையத்தில் 1,250 மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.

இதேபோல சென்னை ஐஐடி-யில் கடந்த ஆண்டை விட 73 சதவீதம் கூடுதலான எண்ணிக்கையில் மாணவர்களுக்கு வேலை கிடைத் துள்ளது. அத்துடன் ஊதியமும் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகமாகும்.

கரோனா காலகட்டத்தில் வேலையிழந்தவர்களில் 60 சதவீதம் பேருக்கு மீண்டும் வேலை கிடைத்துள்ளது. தொழில்நுட்பப் பொறியாளர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனை

இந்தியாவின் டிஜிட்டல் மூலமான வர்த்தக பரிவர்த்தனை கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. 30,000 கோடி டாலர் அளவுக்கு வர்த்தக பரிவர்த்தனை நடைபெற் றுள்ளது. இது சீனாவை விட 60 சதவீதம் அதிகமாகும்.

1. Which state is associated with ‘Nirbhaya Kadhi’ campaign?

A) West Bengal

B) Odisha 

C) Karnataka

D) Gujarat

 • Odisha’s Ganjam has declared itself the state’s first child marriage free district. It has undertaken a campaign named Nirbhaya Kadhi (Fearless bud). Through the campaign, the district administration has counselled over one lakh teen–agers and stopped over 450 child marriages. They implemented various steps like providing incentives for informing child marriages, making Aadhaar card mandatory for marriages etc.

2. Which state launched the Student Startup and Innovation Policy (SSIP) 2.0?

A) Telangana

B) Gujarat 

C) Maharashtra

D) Odisha

 • Gujarat Chief Minister Bhupendra Patel launched the Student Startup and Innovation Policy (SSIP) 2.0, at the International Conference of Academic Institutions (ICAI–2022). It aims to financially support school students in innovation and will be implemented for the next five years till March, 2027. The financial support has been increased from Rs 200 of the previous edition to Rs 500 crore.

3. ‘Olaf Scholz’ is the recently appointed head of which country?

A) USA

B) Germany 

C) Brazil

D) Russia

 • Olaf Scholz has been appointed as the Chancellor of Germany from December 2021. The Indian Prime Minister Narendra Modi had a discussion with his German counterpart and congratulated on his appointment as Chancellor. They reviewed the capacities of ongoing cooperation initiatives, including investment and trade links. They also discussed to diversify cooperation and exchanges in new areas.

4. Which Union Ministry implements the ‘UJALA’ programme?

A) Ministry of Power 

B) Ministry of Environment

C) Ministry of Petroleum and Natural Gas

D) Ministry of Housing and Urban Affairs

 • The Power Ministry successfully completed seven years of distributing LED lights under its flagship UJALA programme. It is one of the world’s largest zero subsidy domestic lighting programmes with more than 36 crore LEDs distributed across the country. Launched in 2015, UJALA stands for Unnat Jyoti by Affordable LEDs for All.

5. Which institution appointed the technical committee to look into the Pegasus malware issue?

A) Ministry of Electronics and IT

B) Supreme Court of India 

C) Madras High Court

D) NITI Aayog

 • The Supreme Court of India appointed the technical committee to look into the Pegasus malware issue. The technical committee issued a public notice asking citizens to contact the panel if they suspected that their mobile devices are infected by Pegasus malware. The committee would request the person to allow examination of the device, if reasonable.

6. Nodirbek Abdusattorov, the youngest ever World Rapid Chess champion, is from which country?

A) Switzerland

B) Russia

C) Uzbekistan 

D) Ukraine

 • Nodirbek Abdusattorov from Uzbekistan became the youngest ever World Rapid Chess champion, at 17 years three months. Magnus Carlsen had won the 2009 World Blitz Title at the age of 18.
 • He also defeated the Ace player Magnus Carlsen to win the World Rapid championship in Warsaw, Poland. France’s Maxime Vachier–Lagrave won the World Blitz title.

7. Which Indian company has commissioned India’s largest solar power project at Rajasthan?

A) Adani Power

B) Azure Power 

C) TATA Power

D) ReNew Power

 • Indian solar power producer Azure Power has fully commissioned its largest project, a 600–MW solar park in the state of Rajasthan. The solar park is located in Bikaner. It will supply its power to Solar Energy Corporation of India (SECI) over 25 years.

8. Who is the head of the ‘Energy Transition Advisory Committee’, which was recently set up?

A) Tarun Kapoor 

B) Ramesh Chand

C) V K Paul

D) Amitabh Kant

 • The Ministry of Petroleum and Natural Gas has set up Energy Transition Advisory Committee headed by former petroleum secretary Tarun Kapoor. The panel includes representatives of all public–sector oil and gas companies and it will energy transition roadmap for the oil and gas sector. India has committed for net–zero emissions by the year 2070. The committee will recommend a transition roadmap by middle of 2022.

9. Which is the first state/UT to have ‘District–level Good Governance Index’?

A) Mizoram

B) Puducherry

C) Tripura

D) Jammu & Kashmir 

 • Jammu and Kashmir is set to become the first Union Territory to have a district–level Good Governance Index. The Department of administrative reforms and public grievances will carry out this task in association with the Jammu and Kashmir government.
 • The framework will have 58 indicators to assess different aspects of development and district administration such as agriculture, commerce and industry, public safety, public health among others.

10. The Social reformer Savitribai Phule, founded India’s first girls’ school in which state?

A) Tamil Nadu

B) Maharashtra 

C) Madhya Pradesh

D) Kerala

 • Social reformer Savitribai Phule was born on January 3, 1831 in Maharashtra. Her birth anniversary was observed across the country. In 1848.Savitribai along with her husband Jyotirao Phule, founded one of India’s first girls’ schools in Pune, Maharashtra.
 • She also became the first Indian woman to become a teacher. She also opened women’s shelter for widows and Home for Prevention of Infanticide. She strongly opposed child marriage and Sati tradition.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button