Tnpsc

12th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

12th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 12th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

12th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. இந்தியாவின் மிகவும் ஒருங்கிணைந்த இரயில் திட்டம் என்று பெயரிடப்பட்ட எந்த நகரத்தின் புறநகர் இரயில் திட்டம், விரைவில் தொடங்கப்பட உள்ளது?

அ) தில்லி

ஆ) கொல்கத்தா

இ) சென்னை

ஈ) பெங்களூரு

  • பெங்களூரு புறநகர் இரயில் திட்டமானது முதன்முதலில் கடந்த 1983ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டது. இந்தத் திட்டம் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்தது.
  • இது, பெங்களூருவை அதன் துணை நகரங்கள், புறநகர்ப்பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள கிராமப் புறங்களுடன் ஒரு இரயில் அடிப்படையிலான விரைவுப் போக்குவரத்து அமைப்புமூலம் இணைக்கும். கர்நாடகாவின் இரயில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் இந்த திட்டத்துக்கான பொறுப்பில் உள்ளது. இது, `15,767 கோடி செலவில் 2026’க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. ‘பழங்குடி மக்களின் உணவுமுறை’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ) உணவு மற்றும் உழவு அமைப்பு

ஆ) ஐக்கிய நாடுகள் அவை

இ) உலக உணவுத் திட்டம்

ஈ) ஐநா வளர்ச்சித் திட்டம்

  • உணவு மற்றும் உழவு அமைப்பானது பயோவர்சிட்டி இன்டர்நேஷனல் கூட்டணி மற்றும் வெப்பமண்டல உழவுக்கான சர்வதேச மையம் (CIAT) ஆகியவற்றுடன் இணைந்து, பழங்குடி மக்களின் உணவு முறைமை பற்றிய புதிய அறிக்கையை வெளியிட்டது.
  • உணவை நிலையான முறையில் உற்பத்தி செய்வதற்கும், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதற்குமாக உலகெங்குமுள்ள பழங்குடியின மக்கள் தாங்கள் சார்ந்துள்ள நூற்றுக்கணக்கான மாறுபட்ட தாவர மற்றும் விலங்கு இனங்களை இது அடையாளம் கண்டுள்ளது. இந்த உணவுமுறைகளுக்கு அச்சுறுத்தல்கள் அதிகரிப்பதாகவும் இவ்வறிக்கை எச்சரித்துள்ளது.

3. இந்தியாவில் பட்டய கணக்காளர்கள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஜூலை.1

ஆ) ஜூலை.2

இ) ஜூலை.3

ஈ) ஜூலை.4

  • இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் உருவாக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை.1 ஆம் தேதி பட்டய கணக்காளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய பட்டய கணக்காளர் நிறுவனமானது கடந்த 1949ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தால் ஒரு சட்டத்தின்கீழ் நிறுவப்பட்டது.

4. அண்மையில், இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தால் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட செயலியின்பெயரென்ன?

அ) ICAI-BOS

ஆ) ICAI-COS

இ) ICAI-DOS

ஈ) ICAI-FOS

  • இந்திய பட்டய கணக்காளர் நிறுவனமானது துளிர்நிலை, இடைநிலை மற்றும் இறுதிநிலை மாணாக்கர்களுக்கான திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது. “ICAI-BOS” எனப் பெயரிடப்பட்ட இந்தச் செயலி, மாணாக்கருக்கு தரமான சேவைகளை மேம்படுத்துதற்கு புதுமையான வழிகளை வழங்கும்.

5. 2019-2020ஆம் ஆண்டிற்கான UDISE+’ஐ அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ) கல்வி அமைச்சகம்

ஆ) சுகாதார அமைச்சகம்

இ) உள்துறை அமைச்சகம்

ஈ) நிதி அமைச்சகம்

  • கல்வி+ (UDISE+) 2019-20ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மாவட்ட தகவல் அமைப்பு குறித்த அறிக்கையை மத்திய கல்வியமைச்சர் இரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் வெளியிட்டார். இது நாட்டில் உள்ள பள்ளிக்கல்வி நிலவரத்தை தெரிவிக்கிறது.

6. 149 ஆண்டுகள் பழமையான ‘தர்பார் நகர்வு’ நடைமுறையை சமீபத்தில் முடிவுக்குக் கொண்டுவந்த மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) ஜம்மு-காஷ்மீர்

ஆ) லடாக்

இ) உத்தரபிரதேசம்

ஈ) மத்திய பிரதேசம்

  • ஜம்மு-காஷ்மீர் அரசு சமீபத்தில் 149 ஆண்டுகள் பழமையான ‘தர்பார் நகர்வு’ நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவந்தது. செயலகம் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரு தலைநகரில் இருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றப்படுவதற்கு வழங்கப்படுகிற பெயர் ‘தர்பார் நகர்வு’ ஆகும்.

7. Good-Neighborliness and Friendly Cooperation ஒப்பந்தம் என்பது எந்த இருநாடுகளுக்கிடையேயான ஒப்பந்தமாகும்?

அ) இந்தியா-ரஷ்யா

ஆ) சீனா-ரஷ்யா

இ) இந்தியா-ஆஸ்திரேலியா

ஈ) சீனா-ஆஸ்திரேலியா

  • சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக சீன-ரஷ்ய Good-Neighborliness and Friendly Cooperation ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக அறிவித்தனர். இது, கடந்த 2001ஆம் ஆண்டில் இருநாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட நட்பு & ஒத்துழைப்பு தொடர்பான இருபதாண்டு கால இருதரப்பு ஒப்பந்தமாகும். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இருநாடுகளுக்கும் எதிராக மனிதவுரிமைகள் மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து அழுத்தம் கொடுத்துவருகின்றன.

8. சமீபத்தில், உலகக்கோப்பையில் தங்கம் வென்ற ரகி சர்னோபத், எந்த விளையாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்?

அ) வில்வித்தை

ஆ) துப்பாக்கிச்சுடுதல்

இ) குத்துச்சண்டை

ஈ) பளு தூக்குதல்

  • குரோஷியாவின் ஒசிஜெக்கில் நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் உலகக் கோப்பையில் ரகி சர்னோபத் 25 மீ பிஸ்டல் பிரிவில் தங்கம்வென்றார். இந்த உலகக்கோப்பையில் இது இந்தியா பெறும் முதல் தங்கமாகும். ரகி சர்னோபத், துப்பாக்கிச்சுடுதலுக்கான அர்ஜுனா விருதையும் வென்றார்.

9. டிஜிட்டல் கிரீன் பாஸ் என்பது எந்தக் கூட்டணி நாடுகளால் வழங்கப்படும் COVID சான்றிதழாகும்?

அ) ASEAN

ஆ) BRICS

இ) ஐரோப்பிய ஒன்றியம்

ஈ) BASIC

  • டிஜிட்டல் கிரீன் பாஸ் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் COVID சான்றிதழாகும். இது, தடுப்பூசி போடப்பட்ட மக்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பொது மற்றும் சுற்றுலா நோக்கங்களுக்காக சென்றுவர அனுமதிக்கிறது. ஒரு நபர் COVID-19 தொற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றாக இது செயல்படுகிறது.
  • இந்தியாவின் கோவிஷீல்டு ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆதலால், கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு டிஜிட்டல் கிரீன் பாஸ் மறுக்கப்படுகிறது.

10. லூசியானா டெல்டா அமைப்பு அமைந்துள்ள நாடு எது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) அமெரிக்கா

இ) பிரான்ஸ்

ஈ) ரஷ்யா

  • NASA மற்றும் சில பல்கலைக்கழகங்களைச் சார்ந்த அறிவியலாளர்கள் லூசியானாவின் அருகிலுள்ள பகுதிகளில் $15 மில்லியன் டாலர் மதிப்பிலான, ஐந்தாண்டுகால ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.
  • செயற்கைக்கோள் தரவுகளுடன் பயன்படுத்தக்கூடிய கணினிசார் மாதிரிகளை உருவாக்குவதை இக்குழு நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு அவற்றின் டெல்டாக்களின் எந்ததெந்தப் பகுதிகளை நவீனப்படுத்த முடியும் என்பதை அறிய உதவும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 20 கிராண்ட்ஸ்லாம்: ஜோகோவிச்சும் இணைந்தார்; விம்பிள்டனில் சாம்பியனாகி சாதனை படைத்தார்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியனானார். இது விம்பிள்டனில் அவரது ஆறாவது பட்டமாகும். ஒட்டுமொத்தமாக இது அவரது இருபதாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதன்மூலம் ஓப்பன் எராவில் இருபது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற 3ஆவது வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றுள்ளார்.

முன்னதாக அத்தகைய சாதனையை முதல் வீரராக சுவிச்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 2018’இல் எட்ட, அதை ஸ்பெயினின் ரபேல் நடால் 2020’இல் எட்டி சமன் செய்தார். தற்போது அந்த 20 கிராண்ட்ஸ்லாம் வரிசையில் ஜோகோவிச்சும் இணைந்துள்ளார்.

நடப்பு சீசனில் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன் ஆகிய கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சாம்பியனாகியுள்ளார். எதிர்வரும் அமெரிக்க ஓப்பனிலும் சாம்பியனாகும் பட்சத்தில் டான் பட்ஜ் (1938), ராட் லேவர் (1962, 1969) ஆகியோர் வரிசையில் காலண்டர் கிராண்ட்ஸ்லாம் வென்ற 3ஆவது வீரராக இணைவார். ஒருவேளை அதன்பிறகு டோக்கியோ ஒலிம்பிக்கிலும் அவர் சாம்பியனாகும் பட்சத்தில், அது ‘கோல்டன் கிராண்ட்ஸ்லாம்’ எனப்படும். அதைச்செய்தால், அத்தகைய சாதனை படைத்த முதல் வீரராக ஜோகோவிச் இருப்பார்.

ஜூனியர் பிரிவு:

இந்திய வம்சாவளி வீரர் சாம்பியன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஜூனியர் பிரிவில் இந்திய வம்சாவளி அமெரிக்கரான சமீர் பானர்ஜி சாம்பியனானார். இறுதிச்சுற்றில் அவர் சக அமெரிக்கரான விக்டர் லிலோவை 7-5, 6-3 என்ற செட்களில் வீழ்த்தினார்.

குரோஷிய ஜோடிக்கு பட்டம்

ஆடவர் இரட்டையர் பிரிவில் குரோஷியாவின் நிகோலா மெக்டிச் / மேட் பாவிச் இணை பட்டம் வென்றது. போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்த ஜோடி இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் நான்காம் இடத்திலிருந்த ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் / ஹொராசியோ ஜெபாலோஸ் ஜோடியை 6-4, 7-6 (7/5), 2-6, 7/5 என்ற செட்களில் வென்றது.

2. கோபா அமெரிக்கா: கோப்பை வென்றது ஆர்ஜென்டீனா

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் ஆர்ஜென்டீனா 1-0 என்ற கோல் கணக்கில், நடப்புச்சாம்பியனாக இருந்த பிரேஸிலை வீழ்த்தி புதிய சாம்பியனானது. இப்போட்டியில் ஆர்ஜென்டீனா 15ஆவது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. எனினும், கடந்த 1993ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த அணி கால்பந்து போட்டியில் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். அந்த ஆண்டில் கோபா அமெரிக்கா மற்றும் இன்டர்கான்டினென்டல் கோப்பை ஆகிய போட்டிகளில் ஆர்ஜென்டீனா சாம்பியன் ஆகியிருந்தது.

1. Which city’s Suburban Rail Project, named India’s most integrated rail project, is set to commence?

A) Delhi

B) Kolkatta

C) Chennai

D) Bengaluru

  • The Bengaluru Suburban Rail Project (BSRP) was first proposed in 1983. The state government announced that the project is set to commence soon. It will connect Bengaluru to its satellite townships, suburbs, and surrounding rural areas, by a rail–based rapid–transit system.
  • Rail Infrastructure Development Company, Karnataka, (K–RIDE) is in charge of the project. It is expected to be completed by 2026 at an estimated cost of Rs 15,767 crore.

2. Which organisation released the report titled ‘Indigenous Peoples’ Food System’?

A) FAO

B) UN

C) WFP

D) UNDP

  • The Food and Agriculture Organization (FAO), along with the Alliance of Bioversity International and the International Center for Tropical Agriculture (CIAT) released a new report, titled Indigenous Peoples’ Food System, Insights of sustainability and resilience from the front line of climate change.
  • It identified hundreds of diverse plant and animal species that Indigenous people around the world depend on, to generate food sustainably and enhance biodiversity. The report also warned of increasing threats to these sophisticated food systems.

3. On which date, ‘Chartered Accountants (CA) Day is celebrated in India?

A) July 1

B) July 2

C) July 3

D) July 4

  • Charted Accountants Day is celebrated on July 1 every year to commemorate the finding of the Institute of Chartered Accountants of India (ICAI). The Institute of Chartered Accountants of India (ICAI) was established by the parliament of India in 1949 under an Act.

4. Recently Institute of Chartered Accountants of India has announced to launch which mobile application for students?

A) ICAI–BOS

B) ICAI–COS

C) ICAI–DOS

D) ICAI–FOS

  • Institute of Chartered Accountants of India, ICAI will launch a mobile app for students of foundation, intermediate and final course students. The mobile app named, “ICAI–BOS” will provide next–generation interactive learning and innovative ways to improve quality services to the students.

5. Which ministry recently launched UDISE+ for 2019–2020?

A) Ministry of Education

B) Ministry of Health

C) Ministry of Home Affairs

D) Ministry of Finance

  • Union minister of education, Ramesh Pokhriyal Nishank released Unified District Information System for Education Plus report (UDISE+) for 2019–2020.
  • UDISE+ report highlighted some interesting facts, both positive and negative about Indian school education system.

6. Which state/UT recently ended 149–year–old practice of ‘darbar move’?

A) Jammu and Kashmir

B) Ladakh

C) Uttar Pradesh

D) Madhya Pradesh

  • The Government of Jammu & Kashmir recently ended 149–year–old practice of ‘darbar move’. Darbar Move is the name given to the bi–annual shift of the secretariat and all other government offices of Jammu and Kashmir from one capital city to another.

7. Treaty of Good–Neighborliness and Friendly Cooperation (TGNFC) is a treaty between which two countries?

A) India–Russia

B) China–Russia

C) India–Australia

D) China–Australia

  • Leaders of China and Russia officially announced to extend the China–Russia Treaty of Good–Neighbourliness and Friendly Cooperation. It is a 20–year–old bilateral agreement on friendship and cooperation signed between the two countries in 2001.
  • The US and the EU have been pushing against both the countries over human rights and a set of other issues.

8. Rahi Sarnobat, who won gold in World Cup recently, represents Indian in which sports?

A) Archery

B) Shooting

C) Boxing

D) Weight Lifting

  • Rahi Sarnobat clinched the 25m pistol gold medal at the shooting World Cup, being held in Osijek, Croatia. It is India’s first gold at the tournament. Rahi Sarnobat also won the Arjuna Award for Shooting.

9. Digital Green Pass, is the Covid Certificate of which group of nations?

A) ASEAN

B) BRICS

C) European Union

D) BASIC

  • The Digital Green Pass is the EU’s Digital COVID Certificate (EUDCC), which permits movement of vaccinated people into the European Union countries for general and tourist purposes. It acts as an evidence of a person being vaccinated against COVID–19 disease.
  • India’s Covishield is not in the European Medicines Agency (EMA) approved vaccine list and hence people vaccinated with Covishield are denied Digital Green Pass.

10. Louisiana delta system is located in which country?

A) Australia

B) USA

C) France

D) Russia

  • Scientists from NASA and some universities are undertaking a $15 million, five–year study on adjacent areas of Louisiana. The team aims to create computer models that can be used with satellite data. This will let countries around the world know which parts of their deltas can be shored up.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!