Tnpsc

12th March 2020 Current Affairs in Tamil & English

12th March 2020 Current Affairs in Tamil & English

12th March 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

12th March 2020 Current Affairs Tamil

12th March 2020 Current Affairs English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. ‘I am also digital’ என்ற தலைப்பில், அண்மையில், டிஜிட்டல் கல்வியறிவு குறித்த ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?

அ. ஒடிசா

ஆ. கேரளா

இ. ஜார்க்கண்ட்

ஈ. பீகார்

  • கேரள மாநிலம், ‘I am also digital’ என்ற பேரளவிலான டிஜிட்டல் கல்வியறிவு குறித்த பரப்புரையைத் தொடங்கவுள்ளது. அது, மாநிலத்தின் திட்டங்களால் விளையும் பல்வேறு நன்மைகளை பொதுமக்கள் அறிந்துகொள்வதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
  • இந்தப் பரப்புரையை, தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் இயங்கிவரும் கேரள எழுத்தறிவு திட்டம் மற்றும் கேரள மாநில தகவல் தொழினுட்பத்திட்டம் ஆகியவை இணைந்து தொடங்கியுள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதற்காக இப்பரப்புரை பொதுமக்கள் பங்கேற்கும் விதத்தில் தொடங்கப்படும். இப்பரப்புரை, திருவனந்தபுரம் மாநகராட்சியில் முன்னோட்ட அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.

2.அண்மையில் எந்நகரத்தில், புதுப்பிக்கப்பட்ட, ‘விலங்குமூலம் பொருட்களைக் கொண்டுசெல்வது குறித்த நினைவுச்சின்னம்’ இந்திய இராணுவத்தால் திறந்து வைக்கப்பட்டது?

அ. புது தில்லி

ஆ. மும்பை

இ. நாக்பூர்

ஈ. பெங்களூரு

  • இந்திய இராணுவத்தின் விநியோகம் மற்றும் போக்குவரத்துப் படையின் தலைமை இயக்குநரால் அண்மையில், பெங்களூருவில், புதுப்பிக்கப்பட்ட, ‘விலங்குமூலம் பொருட்களைக் கொண்டுசெல்வது குறித்த நினைவுச்சின்னம்’ திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவுச்சின்னம், இந்திய இராணுவத்தின் கழுதைகள் மற்றும் குதிரைகளின் பங்களிப்பு மற்றும் சேவையை (குறிப்பாக இமயமலையில் நடந்த போரின்போது) குறிக்கிறது.
  • இந்த நினைவுச்சின்னம், இந்திய இராணுவத்தில் விலங்குகள் வகித்த பங்கை எடுத்துக்காட்டுகிறது. மேலும், ஒவ்வோர் ஆண்டும் செப்.26 அன்று விலங்குமூலம் பொருட்களைக் கொண்டுசெல்வது குறித்த நினைவுநாளாக (Animal Transport Remembrance Day) அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

3.அண்மையில் வெளியிடப்பட்ட, ‘Adventures of a Daredevil Democrat’ என்ற நூல், எந்த முன்னாள் முதலமைச்சரின் கதையை விவரிக்கிறது?

அ. செல்வி.ஜெ.ஜெயலலிதா

ஆ. மு.கருணாநிதி

இ. பிஜூ பட்நாயக்

ஈ. C அச்சுத மேனன்

  • ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பிஜு பட்நாயக்கின் வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்த சித்திர நூல் ஒன்றை அம்மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சரும், பிஜு பட்நாயக்கின் மகனுமான நவீன் பட்நாயக்கால் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நூல் வெளியீட்டு நிகழ்வில், பல கட்சிகளின் மூத்த அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர். பிஜு பட்நாயக்கின் 104ஆவது பிறந்தநாளை ஒடிசா மாநில அரசு கொண்டாடியது. ஒடிசா மாநில அரசாங்கம், பிஜு பட்நாயக்கின் பிறந்தநாளான மார்ச்.5ஆம் தேதியை, ‘பஞ்சாயத்து ராஜ் வெற்றிநாள்’ எனக் கொண்டாடுகிறது.

4.தீவிர மோசடிப்புலனாய்வு அலுவலகத்திற்கான விசாரணைக் கையேட்டை தயாரிப்பதற்காக, சமீபத்தில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழுவின் தலைவர் யார்?

அ. N K சிங்

ஆ. U K சின்ஹா

இ. இஞ்செட்டி சீனிவாஸ்

ஈ. தபன் ரே

  • தீவிர மோசடிப்புலனாய்வு அலுவலகத்திற்கான விசாரணைக் கையேட்டை தயாரிப்பதற்காக, சமீபத்தில் 12 உறுப்பினர்கள்கொண்ட ஓர் உயர்மட்டக்குழுவை அரசாங்கம் அமைத்தது. பெருநிறுவன விவகார அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட உத்தரவின்படி, பெருநிறுவன விவகாரச் செயலாளர் இஞ்செட்டி சீனிவாஸ் இக்குழுவின் தலைவராக இருப்பார். செல்வாக்காளர் குற்றங்களுக்கு எதிராக பயனுள்ள விசாரணைகள் மற்றும் ஆய்வுகள் செய்வதற்கான விரிவான கையேட்டை இந்தக் குழு உருவாக்கும்.

5.சமீபத்தில், ‘நாரி சக்தி புரஸ்கர்’ விருதைப்பெற்ற அவனி சதுர்வேதி, பாவனா காந்த் மற்றும் மோகனா சிங் ஜிதர்வால் ஆகியோர் எந்தத் தொழிற்துறையுன் தொடர்புடையவர்கள்?

அ. விளையாட்டு வீராங்கனைகள்

ஆ. போர் விமானிகள்

இ. இராணுவ அதிகாரிகள்

ஈ. கடற்படை மீகாமன்கள்

  • சர்வதேச பெண்கள் நாளை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த், அண்மையில், இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானிகளான அவனி சதுர்வேதி, பவானா காந்த் மற்றும் மோகனா ஜிதர்வால் உள்ளிட்ட மொத்தம் 15 பேருக்கு, “பெண்கள் சக்தி விருது“ வழங்கினார்.
  • விமானப்படையின் போர்ப்பிரிவில் சோதனை அடிப்படையில் பெண்களை சேர்த்துக்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்த பிறகு, இவர்கள் மூவரும் இந்திய விமானப்படையின் போர் விமானப்படைப்பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இவர்கள், கடந்த 2018ஆம் ஆண்டில் MIG-21 இரக விமானத்தை தனியாக இயக்கியதன்மூலம் இந்தியாவின் முதலாவது பெண் போர் விமானிகள் என்ற சிறப்பைப்பெற்றனர்.

6.குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, ‘பெண் தொழில்முனை -வோர்களை மேம்படுத்துவது குறித்த மாநாடு’ நடைபெற்ற இடம் எது?

அ. கொச்சின்

ஆ. சென்னை

இ. ஹைதராபாத்

ஈ. புது தில்லி

  • FICCI-flo, CII மற்றும் இந்தியா SME மன்றம் போன்ற பல்வேறு தொழிற்துறை அமைப்புகளுடன் இணைந்து குறு, சிறு & நடுத்தர நிறுவனங்கள் (MSME) அமைச்சகம், ‘பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவது குறித்த மூன்று நாள் மாநாட்டை நடத்தியது. மத்திய MSME அமைச்சர் நிதின் கட்கரி, இந்தமாநாட்டையும், ‘பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கான உகந்த வணிகச்சூழல் அமைப்பை உருவாக்குதல்’ குறித்த குழு விவாதத்தையும் தொடங்கிவைத்தார். இதில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் 300’க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர்கள் பங்கேற்றனர்.

7.பெண் அறிவியலாளர் திட்டம் C (KIRAN IPR) மற்றும் அறிவியல் ஜோதி ஆகிய இரண்டும், எந்த மத்திய அமைச்சகத்தின் திட்டங்களாகும்?

அ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஆ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

இ. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

ஈ. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்

  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன், 011-26565285 என்றவொரு புதிய உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார். அது, மாணவிகள், பெண் ஆராய்ச்சியாளர்கள், பெண் தொழில்முனைவோர்கள் மற்றும் அறிவியலாளர்களுக்கு அவர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் திட்டங்கள் தொடர்பான கேள்விகளுக்கு விடைபெற உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பெண் அறிவியலாளர் திட்டம் சி (KIRAN IPR) மற்றும் புதிதாக தொடங்கப்பட்ட அறிவியல் ஜோதி திட்டம் ஆகிய இரண்டும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் திட்டங்களாகும். அறிவியல் ஜோதி திட்டத்தின்கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்டிர்க்கு IIT’கள், NIT’கள் & பிற முன்னணி நிறுவனங்களில் நடக்கும் அறிவியல் முகாம்களில் கலந்துகொள்ள உதவிகள் வழங்கப்படும்.

8.அண்மையில் காலமான ஹன்ஸ் ராஜ் பரத்வாஜ், எந்த இலாக்காவின் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தார்?

அ. பாதுகாப்பு

ஆ. சட்டம் மற்றும் நீதி

இ. நிதி

ஈ. வெளியுறவு

  • இந்திய தேசிய காங்கிரஸைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியான ஹன்ஸ் ராஜ் பரத்வாஜ், சமீபத்தில் காலமானார். அவர், 5 ஆண்டுகாலத்திற்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும், ஒன்பது ஆண்டுகாலத்திற்கு இணையமைச்சராகவும் இருந்தார். அவர், இந்தியாவில் கிராமப்புற நீதிமன்றங்கள் (கிராம நியாயாலயங்கள்) என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார். கர்நாடகம் & கேரள மாநிலத்தின் ஆளுநராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

9. 150 ரஞ்சிக்கோப்பைப் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

அ. தினேஷ் கார்த்திக்

ஆ. பார்த்திவ் படேல்

இ. வாசிம் ஜாபர்

ஈ. இர்பான் பதான்

  • 150 ரஞ்சிக்கோப்பைப் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் – முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர் ஆவார். ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் அதிக இரன்கள் எடுத்த வீரர் ஆவார். அனைத்து வகையான விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்த காரணத்தால், ஜாபர் சமீபத்திய செய்திகளில் இடம்பெற்றார். அவர், 50.67 சராசரியுடன் 19,410 இரன்கள் எடுத்துள்ளார். ஜாபர் தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையில், 57 சதங்களையும் 91 அரைசதங்களையும் அடித்தார்.

10. Business Line Changemaker விருதுகளில், ‘ஆண்டின் சேஞ்ச்மேக்கர்’ என அறிவிக்கப்பட்ட இந்திய விளையாட்டு ஆளுமை யார்?

அ. P V சிந்து

ஆ. மேரி கோம்

இ. டூட்டி சந்த்

ஈ. ஹிமா தாஸ்

  • புது தில்லியில் நடைபெற்ற நடப்பாண்டு (2020) ‘Business Line Changemaker’ விருதுகள் வழங்கும் விழாவின்போது, சமுதாயத்தில் பெருமாற்றத்தைக்கொண்டுவந்ததற்காக, இந்திய தடகள வீராங்கனை டூட்டீ சந்த், ISRO (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) உடன் இணைந்து நடப்பாண்டுக்கான (2020) ‘Changemaker’ விருதைப் பெற்றுக்கொண்டார்.
  • 100 மீ., ஓட்டப்பந்தயத்தை வெறும் 11.22 வினாடிகளில் முடித்து தேசிய சாதனை படைத்தவராவார் டூட்டீ சந்த். தற்போது, டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான பயிற்சியை டூட்டீ சந்த் மேற்கொண்டுவருகிறார்.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

Image result for tamilnadu map logo

  • தமிழ்நாட்டில் ஏப்.1 முதல் செப்.30 வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இக்கணக்கெடுப்பின்போது 31 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்களை பதிவுசெய்யவேண்டும். அதில், முதல் 5 கேள்விகள் வீடு தொடர்புடையதாக இருக்கும். 6 மற்றும் 7ஆவது கேள்விகள், அந்த வீடு, வசிப்பதற்கு பகுதியாக அல்லது முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பது பற்றியும், 8-10ஆவது கேள்விகள் வீட்டின் தலைவரை பற்றியும், 11-31ஆவது கேள்விகள் வீட்டிலிருக்கும் வசதிகள், பொருட்கள், சாதனங்கள் பற்றியதாகவும் இருக்கும்.
  • தமிழ்நாட்டில் உள்ள கடைகள், நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் முதன்மையாக இருக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
  • தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களின் பெயர்ப்பலகை தமிழில் இருக்கவேண்டும் என அரசாணைகள் எண் – 3312, நாள் 29.12.1983 மற்றும் அரசாணை எண் 499, நாள் 29.12.1984ஆம் ஆண்டிலிருந்து முறையே 1948ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளிலும், 1959ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவகங்கள் விதிகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைபடுத் -தப்பட்டு வருகிறது.
  • மேற்படி அரசாணைகளின்படி கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களின் பெயர்ப்பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்கவேண்டும். பிற மொழிகள் பெயர்ப்பலகையில் பயன்படுத்தப்பட்டால், ஆங்கில மொழி இரண்டாவது இடத்திலும் பிற மொழிகள் மூன்றாவது இடத்திலும் இருக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!