Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

12th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

12th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 12th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

12th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. கால்வாய் தீவுகள் என்பது ஆங்கில கால்வாயில் உள்ள ஒரு தீவுக் கூட்டமாகும். எவ்விருநாடுகளுக்கு இடையே அவை அமைந்துள்ளன?

அ) பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து

ஆ) பிரான்ஸ் மற்றும் இத்தாலி

இ) பிரான்ஸ் மற்றும் கனடா

ஈ) இத்தாலி மற்றும் ஜெர்மனி

  • கால்வாய் தீவுகள் என்பது ஆங்கில கால்வாயில் அமைந்துள்ள ஒரு தீவுக் கூட்டமாகும். அது பிரான்சிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே அமைந்து உள்ளது. பிரான்ஸின் நார்மண்டி கடற்கரையிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அது அமைந்துள்ளது. அவற்றில் ஜெர்சியின் பெய்லிவிக் மற்றும் குர்ன்சியின் பெய்லிவிக் ஆகிய இரு தீவுகளும் பிரிட்டிஷ் அரச சார்புநிலையில் உள்ளன. இரண்டாம் எலிசபெத் பேரரசியை அவர்கள் தங்கள் மாகாணத் தலைவராக அங்கீகரிக்கிறார்கள். அந்தத் தீவுகளின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளுக்கும் இங்கிலாந்துதான் பொறுப்பு.
  • அண்மையில், அறுபது பிரெஞ்சு மீன்பிடி படகுகள் ஜெர்சி தீவுகளை முற்றுகையிட்டன. அதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் இருந்து இரண்டு ராயல் கடற்படைக் கப்பல்கள் அங்கு அனுப்பப்பட்டன.

2. அண்மையில் எந்த மாநிலத்தின் வீட்டுவசதி ஒழுங்குமுறை சட்டத்தை அரசியலமைப்பிற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது?

அ) கேரளா

ஆ) மேற்கு வங்கம்

இ) ஒடிஸா

ஈ) ஆந்திர பிரதேசம்

  • மேற்கு வங்க மாநிலத்தின் வீட்டுவசதி ஒழுங்குமுறை சட்டம் – 2017’ஐ நடுவணரசின் நிலைச்சொத்து (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டத்துக்கு (RERA) நேரடி முரணாக இருப்பதால் இது ‘அரசியலமைப்பிற்கு எதிரானது’ என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
  • இந்தத் தீர்ப்பின்படி, RERA’இன் 88 மற்றும் 89 பிரிவுகள், மாநிலங்கள் தங்களுக்கு சொந்தமான மற்றும் நடுவணரசுக்கு இணையான சட்டத்தை உருவாக்க மறைமுகமாக அனுமதிக்கவில்லை.

3. உலகின் மிகப்பெரிய அந்துப்பூச்சியான இராட்சத மர அந்துப்பூச்சி, பொதுவாக கீழ்காணும் எந்த நாட்டில் காணப்படுகிறது?

அ) ஜப்பான்

ஆ) இந்தியா

இ) ஆஸ்திரேலியா

ஈ) சீனா

  • இராட்சத மர அந்துப்பூச்சிதான் உலகின் மிகப்பெரிய அந்துப்பூச்சியாகும். அதன் இறக்கைகள் சுமார் 23 செமீ நீலமுடையது. Endoxyla cinereus என்ற அறிவியல் பெயர்கொண்ட அவை கோசிடே குடும்பத்தைச் சார்ந்த -வையாகும். இவ்வகை அந்துப்பூச்சி பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லா -ந்து பள்ளியில் 25 செமீ வரை இறக்கைகள்கொண்ட ஒரு பெரிய அந்துப்பூச்சி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. மிகக்குறுகிய வாழ்க்கை சுழற்சியைக் கொண்டுள்ள அவை இனச்சேர்க்கை மற்றும் முட்டையிட்ட பிறகு இறப்பெய்துகின்றன.

4. சமீப செய்திகளில் இடம்பெற்ற லார்ட்ஸ் ரெசிஸ்டன்ஸ் ஆர்மியுடன் தொடர்புடைய நாடு எது?

அ) UK

ஆ) உகாண்டா

இ) நைஜீரியா

ஈ) ஈரான்

  • லார்ட்ஸ் ரெசிஸ்டன்ஸ் ஆர்மி என்பது ஒரு கிளர்ச்சிக் குழுவாகும். வடக்கு உகாண்டா, தென் சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு & காங்கோ மக்களாட்சிக் குடியரசு உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் அது செயல்படுகிறது.
  • அண்மையில் ஒரு முக்கிய தீர்ப்பில், உகாண்டாவைச்சேர்ந்த முன்னாள் போராளித் தலைவரையும், லார்ட்ஸ் ரெசிஸ்டன்ஸ் ஆர்மி தளபதியையும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அவர்களுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

5. மாதாந்திர ‘உணவு விலைக்குறியீடை’ வெளியிடுகிற நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) நிதி அமைச்சகம்

இ) உணவு மற்றும் உழவு அமைப்பு

ஈ) ஆசிய வளர்ச்சி வங்கி

  • ஐநா அவையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உணவு விலைக் குறியீட்டை வெளியிடுகிறது. அது தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் மாதாந்திர விலை ஏற்ற இறக்கங்களை அளவிடுகிறது. சமீபத்திய உணவு விலைக் குறியீட்டில், உலக உணவு விலைகள், ஏப்ரல் மாதத்தில் தொடர்ச்சியாக 11ஆவது மாதமாக 120.9 புள்ளிகளாக அதிகரித்தன. இது 2014 மே முதல் இந்தக் குறியீட்டின் மிகவுயர்ந்த ஏற்றமாகும். இந்த நிறுவனத்தின்படி, சர்க்கரையின் விலை உயர்வே மற்றவைகளின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

6. அண்மையில் தெலங்கானா அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட ‘கிளைபோசேட்’ என்றால் என்ன?

அ) களைக்கொல்லி

ஆ) உரம்

இ) பூச்சிக்கொல்லி

ஈ) பூஞ்சைக்கொல்லி

  • ‘கிளைபோசேட்’ என்பது ஒரு களைக்கொல்லியாகும். இது களைகளைக் கொல்லவும், குறிப்பாக பருத்தி பண்ணைகளில் பயன்படுத்தப்படுகிறது. பயிர்களுக்கு இணையாக வளரும் அகன்ற களைகள் மற்றும் புற்களை கொல்லவும் இது பயன்படுகிறது. இந்த இரசாயனத்தின் பரவலான பயன்பாடு (குறிப்பாக பருத்தியில்) மண்ணை மாசுபடுத்துவதோடு, மனித -ர்களுக்கு உடல்நலக்கேடுகளையும் ஏற்படுத்துவதால், சர்ச்சைக்குரிய களைக்கொல்லியான ‘கிளைபோசேட்’ மீது தெலங்கானா மாநில அரசு மொத்தத் தடைவிதித்துள்ளது.

7. கீழ்காணும் எந்தத் தொழில்நுட்ப நிறுவனம், மிகச்சிறிய மற்றும் ஆற்றல்வாய்ந்த 2 நானோ மீ நுண்சில்லை உருவாக்கியுள்ளது?

அ) குவால்காம்

ஆ) IBM

இ) AMD

ஈ) சாம்சங்

  • IBM, 2-நானோ மீ நுண்சில்லை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அது இதுவரையில் உருவாக்கப்பட்ட நுண்சில்லுகளிலேயே மிகச்சிறிய மற்றும் ஆற்றல்வாய்ந்த நுண்சில்லாகும். கணினி சில்லுகளை அடிப்படையாகக்கொண்டு இயங்கிவரும் தற்கால சாதனங்கள், பெரும்பாலும் 10-நானோ மீ அல்லது 7-நானோ மீ செயல்முறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. சில நிறுவனங்கள் 5-நானோமீட்டர் சில்லுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. குறைந்த எண்ணானது சில்லின் மேம்பட்ட தன்மையைக் குறிக்கின்றது.

8. குறைந்த ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உள்ளடக்கிய இரத்தக்கோளாறின் பெயர் என்ன?

அ) இரத்தசோகை

ஆ) தாலசீமியா

இ) லுகேமியா

ஈ) ஹீமோபிலியா

  • ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் தாலசீமியா. ஆண்டுதோறும் மே.8 அன்று உலக தாலசீமியா நாள் அனுசரிக்கப்படுகி -றது. இந்த மரபணுக்கோளாறு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அல்லல்களை நினைவுகூருவதே இந்நாளின் நோக்கமாகும்.
  • “Addressing Health Inequalities Across the Global Thalassemia Community” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

9. நடப்பாண்டின் பன்னாட்டு செவிலியர் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Nurses: A Voice to Lead – Safe Motherhood

ஆ) Nurses A Voice to Lead – Health is a Human Right

இ) Nurses: Working with the Poor; Against Poverty

ஈ) Nurses: A Voice to Lead – A vision for future healthcare

  • 1974 ஜனவரி மாதத்தில் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் மே.12 அன்று பன்னாட்டு செவிலியர் நாள் கொண்டாடப்படுகிறது. செவிலியர்கள், சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறந்த முறையில் நினைவுகூருவதற்காக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

10. 1998’இல் பொக்ரானில் நடத்தப்பட்ட அணுசக்தி சோதனைகளின் சாதனையைக் குறிக்கும் வகையில், மே.11 அன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிற சிறப்பு நாள் எது?

அ) தேசிய அணுவாற்றல் நாள்

ஆ) தேசிய தொழில்நுட்ப நாள்

இ) தேசிய அணுவாயுத நாள்

ஈ) பொக்ரான் நாள்

  • கடந்த 1998ஆம் ஆண்டில் இராஜஸ்தானின் பொக்ரானில் இந்தியா தனது அணுசக்தி சோதனைகளை நடத்திய நாளைக் குறிக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மே.11 அன்று இந்தியாவில் தேசிய தொழில்நுட்ப நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியா தனது முதல் அணுசக்தி பரிசோதனையை 1974’இல் “சிரிக்கும் புத்தர்” என்ற பெயரில் நடத்தியது.
  • கடந்த 1998’இல் ‘ஆபரேஷன் சக்தி’ என்ற பெயரில், அடுத்த அணுசக்தி திட்டம் மேற்கொள்ளப்பட்டது. Dr. APJ அப்துல் கலாம், மே.11 அன்று அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்ட அறிவியல் குழுவுக்கு தலைமைதாங்கினார். தற்போது, அணுவாயுத திட்டத்தை வைத்திருக்கும் உலகின் எட்டு நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நாள்தோறும் 1 லட்சம் உணவுப் பொட்டலங்கள்

இந்துசமய அறநிலையத்துறை சார்பில் அரசு மருத்துவமனைகளில் COVID நோயாளிகள் உள்ளிட்டோருக்கு நாள்தோறும் 1 இலட்சம் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர் பாபு தெரிவித்தார். இந்துசமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 38,661 கோவில்களுள் 754’இல் அன்னதானத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2. நாடு முழுவதும் 9 மருத்துவமனைகளில் NLC சார்பில் உயிர்வளி ஆலைகள்

இந்தியா முழுவதும் 9 அரசு மருத்துவமனைகளில் உயிர்வளி (ஆக்சிஜன்) உற்பத்தி ஆலைகளை நிறுவவுள்ளதாக NLC இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக, NLC தனது மின் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு, இராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஒடிஸா போன்ற மாநில -ங்களில், சமூக பொறுப்புணர்வுத்திட்டத்தின்கீழ் இந்த ஆலைகளை அமைக்கிறது.

3. அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதர வளர்ச்சி 10.1%ஆக இருக்கும்: ஐநா

அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 10.1 சதவீதமாக இருக்கும் என்று ஐநா தெரிவித்துள்ளது. ஐநா’இன் உலக பொருளாதார சூழல் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் அறிக்கை புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டு அதன் பொருளாதார வளர்ச்சி 10.1%ஆக இருக்கும். இந்த ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சி 8.2%ஆக இருக்கும். வரும் 2022ஆம் ஆண்டு அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பின்னடைவைச் சந்தித்து 5.8 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டு சீனாவை முந்திச்சென்று வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும்.

இந்தியாவில் இதுவரை 100’இல் 10 பேர் என்ற விகிதத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் 100’இல் 68.2ஆகவும், ரஷியாவில் 100’இல் 12.4ஆகவும் உள்ளது என்று உள்ளது.

4. கேரள ‘இரும்புப் பெண்மணி’ கே ஆர் கௌரி காலமானார்

கேரளத்தில் ‘இரும்புப்பெண்மணி’ என்று அறியப்பட்டவரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான கே ஆர் கௌரி (102) திருவனந்தபுரத்தில் காலமானார். ‘கௌரியம்மா’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட அவர் கேரளத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவர்.

1. Channel Islands are an archipelago in the English Channel, located between which two countries?

A) France and the UK

B) France and Italy

C) France and Canada

D) Italy and Germany

  • Channel Islands are an archipelago in the English Channel, located between France and the UK, 22 kilometres from the coast of Normandy, France. They include two Crown dependencies: The Bailiwick of Jersey and the Bailiwick of Guernsey.
  • They recognise Queen Elizabeth II as their head of state and the UK is responsible for the defence and international relations of the islands. Recently, 60 French fishing boats made a blockade in the Jersey islands, which followed a deployment of two Royal Navy vessels from the UK.

2. The Supreme Court has recently struck down the Housing Industry Regulation Act of which state, as unconstitutional?

A) Kerala

B) West Bengal

C) Odisha

D) Andhra Pradesh

  • The Supreme Court has struck down West Bengal’s Housing Industry Regulation Act (HIRA) 2017, saying it was ‘unconstitutional’ as it is in direct conflict with the Centre’s Real Estate (Regulation and Development) Act (RERA). As per the verdict, Sections 88 and 89 of the RERA did not implicitly permit the states to create their own legislation creating a parallel regime.

3. Giant wood moth, the heaviest moth in the world, are typically found in which country?

A) Japan

B) India

C) Australia

D) China

  • Giant wood moth is the heaviest moth in the world, with the wingspan of about 23 cm. Their scientific name is ‘Endoxyla cinereus’ and they belong to the family of Cossidae. The moth is typically found in Australia and New Zealand.
  • A giant moth with a wingspan measuring up to 25cm has been recently found at a Queensland school in Australia. They have an extremely short life cycle with only a few days. They die after mating and laying eggs.

4. Lord’s Resistance Army (LRA), which was seen in the news recently, is associated with which country?

A) UK

B) Uganda

C) Nigeria

D) Iran

  • The Lord’s Resistance Army (LRA) is a rebel group which operates in African countries including northern Uganda, South Sudan, the Central African Republic, and the Democratic Republic of the Congo.
  • Recently in a landmark judgment, the international criminal court has sentenced a former militia leader from Uganda and commander in the Lord’s Resistance Army (LRA), to 25 years in prison after he was found guilty of war crimes and crimes against humanity.

5. Which institution releases the monthly ‘Food Price Index’?

A) NITI Aayog

B) Finance Ministry

C) FAO

D) Asian Development Bank

  • The United Nations food agency, the Food and Agriculture Organization releases the Food price index, which measures monthly changes for a basket of cereals, oilseeds, dairy products, meat and sugar. In the recent food price index, World food prices increased for an 11th consecutive month in April at 120.9 points.
  • This is also the highest level of the index since May 2014. The rise in the main indices was led by the price rise of Sugar, as per the United Nations food agency.

6. What is ‘Glyphosate’, which was recently banned by Telangana Government?

A) Herbicide

B) Fertilizer

C) Pesticide

D) Fungicide

  • Glyphosate is an herbicide, which used to kill weeds, especially used in cotton farms and to kill annual broadleaf weeds and grasses that compete with crops. The Telangana Government has imposed a total ban on glyphosate, a controversial herbicide, as the chemical’s rampant use, especially in cotton, is polluting soil and causing health hazards to human beings.

7. Which technology company has created a 2–nanometer chip, the smallest and most powerful microchip?

A) Qualcomm

B) IBM

C) AMD

D) Samsung

  • IBM announced that it has created a 2–nanometer chip, which is the smallest and most powerful microchip ever developed. At present, most of the computer chips powering devices use 10–nanometer or 7–nanometer process technology.
  • Some companies have introduced 5–nanometer chips. The lower the number, more advanced is the processor.

8. What is the name of the blood disorder, which involves lesser haemoglobin and red blood cells?

A) Anemia

B) Thalassemia

C) Leukaemia

D) Haemophilia

  • Thalassemia is an inherited blood disorder characterised by less oxygen–carrying protein– haemoglobin and less red blood cells in the body than normal. May 8 is observed as World Thalassemia Day every year. The day commemorates the struggles of the patients suffering from this genetic disorder.
  • This years’ theme for the day is “Addressing Health Inequalities Across the Global Thalassemia Community”.

9. What is the theme of the 2021 International Nurses Day?

A) Nurses: A Voice to Lead – Safe Motherhood

B) Nurses A Voice to Lead – Health is a Human Right

C) Nurses: Working with The Poor; Against Poverty

D) Nurses: A Voice to Lead – A vision for future healthcare

  • The World Nurses Day is celebrated every year across the world on May 12 to mark the birth anniversary of Florence Nightingale, the founder of modern nursing.
  • The day is also mark to recognize the strong commitment and dedication that nurse’s display in the practice of their profession.

10. Which day is celebrated in India on May 11, to mark the achievement of its nuclear tests made at Pokhran in 1998?

A) National Nuclear Power Day

B) National Technology Day

C) National Nuclear Weapon Day

D) Pokhran Day

  • May 11 is celebrated as National Technology Day in India every year, to mark the day on which India conducted its nuclear tests at Pokhran, Rajasthan in the year 1998. India conducted its 1st nuclear test, code named “Smiling Buddha” in 1974. In 1998, under the code name Operation Shakti, the next nuclear mission was carried out.
  • Dr APJ Abdul Kalam led the scientific team which carried out the nuclear weapon tests on May 11. At present, India is among eight countries in the world that own a nuclear weapons program.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!