TnpscTnpsc Current Affairs

12th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

12th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 12th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. தேசிய குடும்பநல ஆய்வின்படி (NFHS-5) இந்தியாவில் புதிய மொத்தக் கருவுறுதல் விகிதம் என்ன?

அ. 2.4

ஆ. 2.2

இ. 2.0 

ஈ. 1.9

  • மத்திய நலவாழ்வு அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வதோதராவில் நடைபெற்ற, ‘சுவஸ்த்ய சிந்தன் சிவிர்’ நிகழ்வில், தேசிய குடும்பநல ஆய்வின் (NFHS-5) 5ஆவது சுற்று தேசிய அறிக்கையை வெளியிட்டார். NFHS-4 மற்றும் 5-க்கு இடையில் தேசிய அளவில் ஒரு பெண் ஈனும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கையாக அளவிடப்படும் மொத்த கருவுறுதல் விகிதம் 2.2 இலிருந்து 2.0ஆகக்குறைந்துள்ளது. 2.1 என்ற ‘Replacement Level of Fertility’ விகிதத்துடன் இந்தியாவில் ஐந்து மாநிலங்கள் மட்டுமே உள்ளன. இதில் பீகார் (2.98), மேகாலயா, உத்தரபிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மணிப்பூர் ஆகியவை அடங்கும்.

2. ஜம்மு & காஷ்மீரின் தேர்தல் வரைபடத்தை மாற்றியமைத்த எல்லை நிர்ணய ஆணையத்தின் தலைவர் யார்?

அ. நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் 

ஆ. நீதிபதி சதாசிவம்

இ. நீதிபதி ரஞ்சன் கோகாய்

ஈ. சுஷில் சந்திரா

  • ஜம்மு மற்றும் காஷ்மீரின் தேர்தல் வரைபடத்தை மறுவடிவமைப்பு செய்த எல்லை நிர்ணய ஆணையம், உச்சநீதி மன்றத்தின் ஓய்வுற்ற நீதிபதியான ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலானது. தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையர் கே கே சர்மா ஆகியோர் இதன் அதிகாரபூர்வ உறுப்பினர்களாக உள்ளனர். காஷ்மீருக்கு 47 இடங்களும், ஜம்முவுக்கு 43 இடங்களும் ஒதுக்கப்பட்டு, எல்லை நிர்ணய ஆணையம் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது.
  • ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் ஒவ்வொன்றும் சமமான எண்ணிக்கையிலான 18 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. அதில 9 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கு (ST) ஒதுக்கப்பட்டன.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற சிந்தியா ரோசன்ஸ்வீக், கீழ்க்காணும் எந்த மதிப்புமிக்க விருதைப் பெற்றார்?

அ. உலக உணவு பரிசு 

ஆ. புக்கர் பரிசு

இ. புலிட்சர் பரிசு

ஈ. ஏபெல் விருது

  • NASAஇன் கோடார்ட் இன்ஸ்டிடியூட் பார் ஸ்பேஸ் ஸ்டடீஸின் (GISS) மூத்த ஆராய்ச்சி அறிவியலாளரான சிந்தியா ரோசன்ஸ்வீக், உலக உணவு பரிசு அறக்கட்டளையின் ‘2022 உலக உணவு பரிசைப்’ பெற்றார். உலக உணவு பரிசு என்பது ‘உணவு மற்றும் உழவிற்கான நோபல் பரிசு’ எனக் கருதப்படும் ஒரு மதிப்புமிக்க விருது. ரோசன்ஸ்வீக், காலநிலை மற்றும் உணவு முறைகளுக்கு இடையேயான உறவைப் புரிந்துகொள்வதற்கும், எதிர்காலத்தில் அவை எவ்வாறு மாறும் என்பதை முன்னறிவிப்பதற்கும் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக இந்தச் சிறப்புமிக்கு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4. இந்தியாவில் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிடும் நிறுவனம் எது?

அ. தேசிய புள்ளியியல் அலுவலகம் 

ஆ. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இ. NITI ஆயோக்

ஈ. உலக வங்கி – இந்தியா

  • காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின்கீழ், தேசிய புள்ளியியல் அலுவலகமானது வேலையின்மை விகிதம், தொழிலாளர் எண்ணிக்கை விகிதம் (WPR), தொழிலாளர் படை பங்கேற்பு விகிதம் (LFPR) போன்ற தொழிலாளர் குறிகாட்டிகளின் மதிப்பீடுகளை வழங்கும் காலாண்டு அறிக்கையை வெளியிடுகிறது. 2021 அக்டோபர்-டிசம்பர் பதிப்பின்படி, நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆட்களுக்கான வேலையின்மை விகிதம் முந்தைய ஆண்டின் காலாண்டில் 10.3 சதவீதத்திலிருந்து 8.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2021 ஜூலை-செப்டம்பரில், நகர்ப்புறங்களில் இது 9.8 சதவீதமாக இருந்தது.

5. இந்தியாவின் முதல் ‘Regional Rapid Transit System (RRTS)’ஐ வடிவமைத்துள்ள நிறுவனம் எது?

அ. DRDO

ஆ. HAL

இ. அல்ஸ்டோம் 

ஈ. சீமென்ஸ்

  • தில்லி மற்றும் மீரட் இடையேயான இந்தியாவின் முதலாவது பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பு (RRTS), ஹைதராபாத்தில் உள்ள அல்ஸ்டாம் வடிவமைத்து குஜராத்தின் சாவ்லியில் தயாரிக்கப்படுகிறது. இந்த அமைப்பின் முதல் இரயில் பெட்டி தில்லி-காசியாபாத்-மீரட் RRTS கட்டம்-1-க்காக தேசிய தலைநகர மண்டலப் போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் அரை அதிவேக பிராந்திய பயணிகள் இரயிலான இது மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும்.

6. நான்காவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுக்கள் – 2022-க்கான சின்னம் என்ன?

அ. அப்பு

ஆ. தாகத் 

இ. வீர்

ஈ. கம்பீர்

  • மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், 4ஆவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியின் அதிகாரப்பூர்வ இலச்சினை, அதிகாரப்பூர்வ ஜெர்சி மற்றும் சின்னமான, ‘தாகத்’ஐ அறிமுகப்படுத்தினார். ஜூன் 4 முதல் ஜூன் 13 வரை பஞ்ச்குலா மற்றும் பிற நகரங்களில் நான்காவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை ஹரியானா நடத்துகிறது. பாரம்பரிய விளையாட்டுகளைப் பாதுகாக்க வலியுறுத்தும் வகையில் கட்கா, களரிபயட்டு, தங்-டா, மல்லகம்பா மற்றும் யோகாசனம் ஆகிய ஐந்து பாரம்பரிய விளையாட்டுகள் வரவிருக்கும் கேலோ இந்தியா போட்டிகளின் ஒருபகுதியாக இருக்கும்.

7. ‘PM மித்ரா’ திட்டத்தைச் செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?

அ. ஜவுளி அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. வெளியுறவு அமைச்சகம்

  • PM Mega Integrated Textile Regions மற்றும் Apparel Park (PM MITRA) மத்திய ஜவுளி அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘PM MITRA Park’ ஆனது ஓர் ஒருங்கிணைந்த ஜவுளி மதிப்புச் சங்கிலியை ஒரே இடத்தில் உருவாக்கி, போக்குவரத்துச் செலவைக் குறைக்கும். PM MITRA பூங்காக்கள் திட்டம்பற்றிய தேசிய மாநாடு ஜவுளி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. 13 மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் PM MITRA பூங்காக்கள் அமைப்பதற்கான தங்களது திட்டங்களை முன்வைத்தன.

8. சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘ராக்கிகர்ஹி’ என்ற ஹரப்ப தளம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. ஜார்கண்ட்

இ. குஜராத்

ஈ. ஹரியானா 

  • இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கூற்றுப்படி, ஹரியானாவின் ஹிசாரில் அமைந்துள்ள ராக்கிகர்ஹியில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய அகழ்வாராய்ச்சியில் தெரு அமைப்பு, பரந்த தளவமைப்புகள்கொண்ட வீடுகள் மற்றும் வடிகால் அமைப்பு ஆகியவை வெளிப்பட்டன. இது 5,000 ஆண்டுகள் பழமையான ஹரப்ப தளமும் 2020 பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்ட ஐந்து தளங்களுள் ஒன்றுமாகும். இத்தளம் ஹரப்ப காலத்தின் மிகப்பெரிய தளமாகவும் கருதப்படுகிறது.

9. சமீப செய்திகளில் இடம்பெற்ற ஜான் லீ, எந்த நாட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அ. ஹாங்காங் 

ஆ. தைவான்

இ. தென் கொரியா

ஈ. மலேசியா

  • ஜான் லீ என்பவர் ஹாங்காங்கின் அடுத்த தலைவராக, இரகசிய வாக்கெடுப்பில் வாக்களித்த தேர்தல் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்குழுமத்தில் சுமார் 1,500 பேர் பெய்ஜிங்கிற்கு ஆதரவான உறுப்பினர்கள் இருந்தனர். முன்னதாக ஹாங்காங்கின் தலைமைச் செயலாளராக இருந்த லீ, ஓய்வுறும் தலைமை நிர்வாகி கேரி லாம்க்கு அடுத்து தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தைத் தொடங்குவார். ஹாங்காங் என்பது சீனாவின் ஒரு சிறப்பு நிர்வாகப் பகுதியாகும்; இது 1997-இல் இங்கிலாந்தின் வசமிருந்து சீன ஆட்சியின் வசம் வந்தது.

10. ‘தலசீமியா’ என்பது உடலின் எதனுடன் தொடர்புடைய நோயாகும்?

அ. நுரையீரல்

ஆ. கல்லீரல்

இ. இரத்தம் 

ஈ. இதயம்

  • உலக தலசீமியா நாளானது ஆண்டுதோறும் மே.8 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது, இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் போராட்டத்தை உணர்த்தவுமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. தலசீமியா என்பது ஒரு மரபணு இரத்தக்கோளாறு ஆகும்; இது உடலைப் போதுமான ஹீமோகுளோபினை உருவாக்க அனுமதிப்பதில்லை.
  • “Be Aware.Share. Care: Working with the global community as one to improve thalassemia knowledge” என்பது இந்த ஆண்டு (2022) உலக தலசீமியா நாளுக்கானக் கருப்பொருள் ஆகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. கேன்ஸ் படவிழாவில் ‘ராக்கெட்ரி’ தமிழ்ப்படம் திரையிடப்படுகிறது. மலையாளம், மராத்தி, இந்தி, மிஷிங் மொழித் திரைப்படங்களும் திரையிடப்படவுள்ளன.

கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்படவுள்ள திரைப்படங்களின் பட்டியலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் மாதவன் இயக்கி நடித்துள்ள ‘ராக்கெட்ரி’ என்னும் படமும் ஒன்றாகும். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள ‘ராக்கெட்ரி – தி நம்பி எபெக்ட்’ என்னும் திரைப்படம் உலக பிரீமியர் காட்சியாக நடைபெறும். மராத்தி மொழிப்படமான கோதாவரி, இந்தி மொழியைச் சேர்ந்த ஆல்பா பீட்டா காமா, மிஷின் மொழியைச் சேர்ந்த பூம்பா ரைட், இந்தி, மராத்தி, மொழியைச் சேர்ந்த துயின், மலையாள மொழிப்படமான ‘ட்ரீ புல் ஆப் பேரட்ஸ்’ ஆகிய படங்களும் கேன்ஸ் படவிழாவில் திரையிடப்படவுள்ளன.

2. நாட்டின் முதலாவது ‘அமிர்த நீர்நிலை’யை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நாளை தொடங்கிவைப்பார்

நாட்டின் முதலாவது ‘அமிர்த நீர்நிலை’யை 2022 மே.13 அன்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியும், உத்தரபிரதேச ஜல்சக்தி அமைச்சர் ஸ்வதந்த்ர தேவ் சிங்கும் ராம்பூரின் (உபி) பட்வாய் என்ற இடத்தில் தொடங்கிவைப்பார்கள். பட்வாயின் இந்த ‘அமிர்த நீர்நிலை’ சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மற்றும் தண்ணீர் சேமிப்புக்கு உதவுவது மட்டுமின்றி அருகிலுள்ள பகுதி மக்களுக்கான ஈர்ப்பு சக்தியாகவும் இருக்கும் என்று நக்வி தெரிவித்தார்.

3. தேசத்துரோக சட்டத்துக்கு இடைக்கால தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

தேசத்துரோக சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிய இடைக்காலத்தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தச் சட்டத்தின்கீழ் விசாரணைகள் தொடர்வதையும், கடும் நடவடிக்கைகள் எடுப்பதையும் மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசத் துரோக சட்டப் பிரிவை மறு ஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்ததையடுத்து, இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

உத்தரவின் முக்கிய அம்சங்கள்

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124ஏ என்ற தேசத் துரோக சட்டப் பிரிவு தற்போதைய சமூக சூழலுக்கு ஏற்றதாக இல்லை; அந்தக் கடுமையான சட்டப்பிரிவு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் கருத்தை ஏற்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

– ஒருபுறம் அரசின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் ஒருமைப்பாடு; மறுபுறம் குடிமக்களின் சிவில் உரிமைகளைக் கவனத்தில்கொண்டு இரண்டையும் சமநிலைப்படுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

– இந்த உத்தரவைப் பிறப்பிக்கும்போது, மகாராஷ்டிரத்தில் ஹனுமன் சாலீசா ஓதும் விவகாரத்தில் எடுக்கப்பட்டது போன்று, இச்சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படும் உதாரணங்களை அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் சுட்டிக்காட்டியது கவனத்தில் கொள்ளப்பட்டது.

– சட்டப்பிரிவின் மீதான மறு ஆய்வு முடியும் வரை, மத்திய – மாநில அரசுகள் இந்தச் சட்டப்பிரிவைப் பயன்படுத்தாது என எதிர்பார்க்கிறோம்.

– இந்த விவகாரத்தில் கடந்த 2021 மே 31-ஆம் தேதி சில மனுதாரர்களுக்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு, அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தொடரும்.

– 124ஏ சட்டப்பிரிவு மறு ஆய்வு செய்யப்படும் வரை தேசத் துரோக சட்டப் பிரிவின் கீழ் புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், விசாரணையைத் தொடரவும், கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய அரசுக்கு தடை விதிக்கப்படுகிறது.

– ஒருவேளை இந்தச்சட்டப்பிரிவின்கீழ் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், பாதிக்கப்படும் நபர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற சுதந்திரம் அளிக்கப்படுகிறது.

– இந்தச் சட்டப்பிரிவின்கீழ் நிலுவையில் உள்ள விசாரணைகள், மேல்முறையீடு மற்றும் வழக்குகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.

– குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எந்தவித பாரபட்சமும் ஏற்படாது என்று நீதிமன்றங்கள் கருதினால், பிற பிரிவுகள் தொடர்பான வழக்கு விசாரணையைத் தொடரலாம்.

– தேசத்துரோக சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் முன்மொழியப்பட்ட உத்தரவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்க மத்திய அரசுக்கு அனுமதிக்கப்படுகிறது என்றும் தனது உத்தரவில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

4. 12 ஊராட்சிகளுக்கு மத்திய அரசு விருதுகள்: முதல்வர் மு க ஸ்டாலின் பாராட்டு

மத்திய அரசு விருதுகளைப்பெற்ற தமிழகத்தைச்சேர்ந்த 12 ஊராட்சிகளின் தலைவர்களை முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவில் சிறப்பாகச் செயல்படும் ஊராட்சிகளுக்கு மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் மூன்றடுக்கு ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய விருது திருச்சி மாவட்டம்-மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், ராமநாதபுரம் மாவட்டம்-மண்டபம் ஊராட்சி ஒன்றியங்களுக்கும், கிராம ஊராட்சிக்கான விருது திண்டுக்கல் மாவட்டம் அக்கரைப்பட்டி, கரூர் மாவட்டம் மண்மங்கலம், மதுரை மாவட்டம் சின்னப்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் அத்திக்காட்டுவிளை, கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கலேரி, புதுக்கோட்டை மாவட்டம் கட்டாத்தி ஆகிய ஊராட்சிகளுக்கும், சிறந்த கிராம சபைக்கான விருது ராமநாதபுரம் மாவட்டம், சாத்தனூர் கிராம ஊராட்சிக்கும், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்துக்கான விருது சிவகங்கை மாவட்டம் துவார் கிராம ஊராட்சிக்கும், குழந்தைகள் நேய கிராம ஊராட்சிக்கான விருது நீலகிரி மாவட்டம் குஞ்சப்பனை கிராம ஊராட்சிக்கும் விருதுகள் அளிக்கப்பட்டன.

5. ஆசிய தேர்தல் ஆணையங்கள் சங்கத்தின் தலைமையாக இந்தியா ஒருமனதாக தேர்வு

2022 -24-ஆம் ஆண்டுகளுக்கான ஆசிய தேர்தல் ஆணையங்கள் சங்கத்தின் தலைமையாக இந்திய தேர்தல் ஆணையம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக இந்தியா இந்தத் தலைமைப் பொறுப்பை ஏற்கிறது. 2011-13-ஆம் ஆண்டுகளில் இந்த அமைப்பின் துணைத் தலைமைப் பொறுப்பையும் இந்தியா ஏற்றிருந்தது.

20 ஆசிய நாடுகளின் தேர்தல் நிர்வாக அமைப்புகள் உறுப்பினர்களாகக் கொண்ட இந்த சங்கத்தின் நிர்வாகக் குழு, பொதுக்குழுக் கூட்டம் கடந்த மே 7- ஆம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தியா தேர்வு செய்யப்பட்டது. இந்தச் சங்கத்துக்கு தற்போதைய தலைமை ஏற்று இருந்த மணிலா தேர்தல் ஆணையம், இப்பொறுப்பிலிருந்து விலகிச் செல்கிறது. மேலும், இந்தச் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், இலங்கை, மாலத்தீவுகள், தைவான் ஆகிய நாடுகள் சங்கத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

மணிலாவில் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகளாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் நிதிஷ் வியாஸ், மணிப்பூர் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் அகர்வால், ராஜஸ்தான் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா ஆகிய 3 உறுப்பினர் பிரதிநிதிகள் குழு பங்கேற்றது. மணிலா கூட்டத்தில் 2022- 23-ஆம் ஆண்டுக்கான பணித் திட்டத்தையும், 2023 -24-ஆம் ஆண்டுக்கான எதிர்கால செயல்திட்டங்களையும் நிர்வாகக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும், இக்கூட்டத்தில் இந்தியா சார்பில் தேர்தல்களில் பாலின பிரச்னைகள் என்பதற்கான அறிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டது.

அனைவரையும் உள்ளடக்கிய, பங்கேற்புமிக்க தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், அரசியல் நடைமுறைகளில் உள்ள தடைகளை நீக்குவதற்கு இந்தியா மேற்கொண்ட பல்வேறு ஒருங்கிணைந்த இலக்குகள் ஆகியவை இந்த அறிக்கையில் உறுப்பு நாடுகள் பயனடையும் வகையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்களில் கூறப்பட்டது. பிலிப்பைன்சின் மணிலாவில் 1997 ஜனவரி 26 – 29-இல் நடைபெற்ற 21-ஆம் நூற்றாண்டில் ஆசிய தேர்தல்கள் குறித்த கருத்தரங்கில் இதுபோன்ற ஆசிய சங்கம் அமைப்பதற்கான யோசனைகள் உருவாகி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில், 1998-இல் ஆசிய தேர்தல் ஆணையங்களின் சங்கம் அமைக்கப்பட்டது.

ஆசிய நாடுகளில் தேர்தல்கள் சிறப்பான செயல் முறையைக் கொண்டதாக உருவாக்கும் நோக்கத்துடனும், வெளிப்படையான தேர்தல்களை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்து செயல்பட, நாடுகளுக்கிடையேயான சிறந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஒரு கட்சி சார்பற்ற ஜனநாயக மன்றத்தை வழங்குவதற்காக இது ஏற்படுத்தப்பட்டது. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் உள்ள ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேச நிறுவனத்தின் (ஐஐஐடிஇஎம்) மூலம் பல்வேறு ஆசிய தேர்தல் ஆணையங்களின் சங்க உறுப்பு நாடுகளுக்கு அவ்வப்போது திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டங்களை நடத்தப்பட்டு வரப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1. What is the new Total Fertility Rate (TFR) in India as per the National Family Health Survey (NFHS–5)?

A. 2.4

B. 2.2

C. 2.0 

D. 1.9

  • Union Health Minister Mansukh Mandaviya released the National Report of the 5th round of National Family Health Survey (NFHS–5) at the ‘Swasthya Chintan Shivir’ held at Vadodara. The Total Fertility Rate (TFR) which is measured as the average number of children per woman has come down from 2.2 to 2.0 at the national level between NFHS–4 and 5. There are only five states in India, which are above the replacement level of fertility of 2.1. This includes Bihar (2.98), Meghalaya, Uttar Pradesh, Jharkhand, and Manipur.

2. Who is the head of the Delimitation Commission, which redrew the electoral map of Jammu and Kashmir?

A. Justice Ranjana Prakash Desai 

B. Justice Sadasivam

C. Justice Ranjan Gogoi

D. Sushil Chandra

  • The Delimitation Commission, which redrew the electoral map of Jammu and Kashmir, was headed by Justice Ranjana Prakash Desai, a retired judge of the Supreme Court. Chief Election Commissioner Sushil Chandra and state election commissioner K K Sharma are its ex–officio members. The Delimitation Commission released its final report, with 47 seats assigned for Kashmir and 43 for Jammu. There will be five parliamentary constituencies, each with an equal number of 18 Assembly seats while 9 seats were reserved for the Scheduled Tribes (ST).

3. Cynthia Rosenzweig, who was seen in the news, is the recipient of which prestigious award?

A. World Food Prize 

B. Booker Prize

C. Pulitzer Prize

D. Abel Award

  • Cynthia Rosenzweig, a senior research scientist at NASA’s Goddard Institute for Space Studies (GISS), received the 2022 World Food Prize from the World Food Prize Foundation. World Food Prize is a prestigious award conceived as the ‘Nobel Prize for Food and Agriculture’. Rosenzweig was selected for the award for her research to understand the relationship between climate and food systems and forecast how they will change in the future.

4. Which institution releases the Periodic Labour force survey (PLFS) results in India?

A. National Statistics Office 

B. Ministry of Labour and Employment

C. NITI Aayog

D. World Bank – India

  • Under the periodic labour force survey (PLFS), a quarterly bulletin is released by the National Statistical Office (NSO), giving estimates of labour force indicators namely unemployment rate, Worker Population Ratio (WPR), Labour Force Participation Rate (LFPR) etc.
  • As per the October–December 2021 edition, the unemployment rate for persons of 15 years and above in urban areas slipped to 8.7 per cent from 10.3 per cent in the quarter year–ago. In the July–September 2021, it was 9.8 per cent in urban areas.

5. Which company has designed India’s first Regional Rapid Transit System (RRTS)?

A. DRDO

B. HAL

C. Alstom 

D. Siemens

  • India’s first Regional Rapid Transit System (RRTS) between Delhi and Meerut, is being designed by global mobility provider Alstom in Hyderabad and manufactured in Savli, Gujarat. The first trainset of the system was handed over to the National Capital Region Transport Corporation for the Delhi–Ghaziabad–Meerut RRTS Phase 1. India’s first semi high–speed regional train can move passengers at 180 km/hour.

6. What is the mascot of the Fourth Khelo India Youth Games 2022?

A. Appu

B. Dhakad 

C. Veer

D. Ghambhir

  • Union Sports Minister Anurag Thakur launched the mascot ‘Dhakad’ along with official logo and official jersey of the Fourth Khelo India Youth Games. Haryana is hosting the fourth edition of the Khelo India Youth Games from June 4 to June 13 at Panchkula and other cities. Five traditional games like gatka, thang–ta, kalarippayattu, mallakhamb and yogasana have been introduced for the first time in Khelo India Youth Games.

7. Which Union Ministry implements the ‘PM MITRA’ Scheme?

A. Ministry of Textiles

B. Ministry of Home Affairs

C. Ministry of Defence

D. Ministry of External Affairs

  • PM Mega Integrated Textile Regions and Apparel Park (PM MITRA) is being implemented by Union Ministry of Textiles. PM MITRA Park creates an Integrated Textiles Value Chain at one location and will reduce logistics cost. A National Conference on PM Mega Integrated Textile Regions and Apparel Park (PM MITRA) Parks Scheme was organized by Ministry of Textiles. 13 State Governments presented plans for setting up of PM MITRA Parks in their respective states.

8. Rakhigarhi, which was seen in the news recently, is a Harappan site located in which state?

A. Madhya Pradesh

B. Jharkhand

C. Gujarat

D. Haryana 

  • As per the Archaeological Survey of India, the latest round of excavations at the Rakhigarhi in Haryana’s Hisar has revealed street system on raised platforms, houses with extensive layouts, and a drainage system. It is a 5,000–year–old Harappan site and was one of the five iconic sites announced in the 2020 Budget Speech. The site is also considered the biggest Harappan–era site.

9. ‘John Lee’, who was in the news recently, is the newly elected leader of which country?

A. Hong Kong 

B. Taiwan

C. South Korea

D. Malaysia

  • John Lee was elected as Hong Kong’s next leader by an Election committee who cast their votes in a secret ballot. The committee included around 1,500 largely pro–Beijing members. Lee, who was formerly Hong Kong’s Chief Secretary, will begin his five–year term replacing outgoing Chief Executive Carrie Lam. Hong Kong is a special administrative region of China which returned to Chinese rule in 1997 from the UK.

10. ‘Thalassemia’ is the disease associated with which part of the body?

A. Lungs

B. Liver

C. Blood

D. Heart

  • Every year World Thalassemia Day is observed on May 8 across the world, to create awareness about the disease and to sensitise about the struggle of patients suffering from the disease. Thalassemia is a genetic blood disorder that doesn’t let the body to create enough haemoglobin. The theme for this year’s World Thalassemia Day is ‘Be Aware.Share. Care: Working with the global community as one to improve thalassemia knowledge.’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!