Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

12th November 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. COVID-19’இன்போது முன்மாதிரியான செயற்பாடுகளை மேற்கொண்டதற்காக, ‘World Travel Mart’ இலண்டனிடமிருந்து விருது வென்ற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஒடிசா

ஈ. குஜராத்

  • இலண்டன் உலக சுற்றுலா சந்தையால் கேரள சுற்றுலாத்துறைக்கு, மதிப்புமிக்க ‘Highly Commended’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. COVID-19 தொற்றின்போது பொறுப்புள்ள சுற்றுலாவை (Responsible Tourism) ஊக்குவிக்கும் நோக்கில் அதன் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளுக்காக அம்மாநிலத்திற்கு இவ் விருது வழங்கப்பட்டுள்ளது. கேரளாவின் பொறுப்புள்ள சுற்றுலா திட்டமானது ‘Meaningful Connections’ என்ற பிரிவில் இவ்விருதைப்பெற்றது.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற திக்ரே பகுதி அமைந்துள்ள நாடு எது?

அ. தென்னாப்பிரிக்கா

ஆ. எத்தியோப்பியா

இ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ. இத்தாலி

  • எத்தியோப்பியாவின் பிரதமரான அபி அகமது, அண்மையில், அந்நாட்டின் திக்ரே பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை தொடங்கினார். எத்தியோப்பியாவின் வான்படையானது சமீபத்தில் வடக்கு திக்ரே பிராந்தியத்தில் இராணுவ பீரங்கிகளை குண்டுவீசி அழித்தது. திக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

3. ஹஜ் 2021 வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. வெளியுறவு அமைச்சகம்

ஆ. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. சுற்றுலா அமைச்சகம்

  • 2021ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்துக்கு விண்ணப்பம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார். COVID-19 நோய்தொற்றைக் கருத்தில்கொண்டு முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டு ஹஜ் பயணத்துக்கு இணைய வழியாகவும், அஞ்சல் வாயிலாகவும், ஹஜ் கைபேசி செயலி வழியாகவும் விண்ணப்பங்களை அனுப்பலாம் என அவ்வமைச்சகம் தெரிவித்துள்ளது.

4. “சிறந்த மாநிலம்” என்ற பிரிவின்கீழ் தேசிய நீர் விருதுகள் 2019’இல் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஒடிசா

ஈ. குஜராத்

  • தேசிய தண்ணீர் விருதுகள் – 2019’இன் ‘சிறந்த மாநிலம்’ என்ற பிரிவின்கீழ் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இவ்விருதுகளை நீர்வளத்துறை, மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஆகியவை நிறுவியுள்ளது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள், ‘சாதாரண’ பிரிவின் கீழ் சிறந்த மாநிலங்களாக தெரிவாகியுள்ளன.

5. அண்மையில் நிறைவடைந்த Gov-Tech-Thon – 2020 போட்டியில் முதல் பரிசைப்பெற்ற அணி எது?

அ. Tech Teamz

ஆ. Tech for India

இ. Fit for Future

ஈ. Nature for India

  • நடுவணரசின் மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நிறுவனங்களால் 36 மணி நேரம் நடத்தப்பட்ட அரசு தொழில்நுட்ப போட்டி (Gov-Tech-Thon 2020) கடந்த நவம்பர்.1ஆம் தேதியன்று நிறைவடைந்தது. ‘இராபர்ட் பாஷ் எஞ்சினியரிங் மற்றும் பிசினஸ் சொல்யூசன்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ‘Fit for Future’ என்ற குழுவுக்கு முதல் பரிசு கிடைத்தது. இவர்கள், வாகனத்தின் தகுதியை பரிசோதிக்கும் மாதிரி கருவியை உருவாக்கியிருந்தனர்.

6. குஜராத்தில் ஹசிரா மற்றும் கோகா இடையே இந்தியப் பிரதமர் எந்த வகையான போக்குவரத்தைத் தொடங்கினார்?

அ. கப்பல் வானூர்தி சேவை

ஆ. தனிப்பயனாக்கப்பட்ட சரக்குக்கப்பல் சேவை

இ. ரோ–பாக்ஸ் படகு சேவை

ஈ. எட்டு வழி விரைவுச்சாலை

  • குஜராத் மாநிலத்தில் ஹசிரா மற்றும் கோகா இடையே ரோ-பாக்ஸ் படகு சேவை இந்தியப் பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்டது. மூன்றடுக்குகள்கொண்ட ரோ-பாக்ஸ் கலன் ‘வாயேஜ் சிம்பொனி’, 2500 -2700 மெட்ரிக் டன்கள் கொள்ளளவுடனும், 12000-15000 ஜிகா டன்கள் இடப்பெயர்வுத் திறனுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.
  • 30 வண்டிகள் சரக்கை முதலடுக்கிலும், 100 பயணிகள் கார்களை மேலடுக்கிலும், 500 பயணிகள் & 34 பணியாளர்கள் மற்றும் உபசரிப்புப் பணியாளர்களை பயணிகள் அடுக்கிலும் இது கொள்ளும்.

7. நிர்வாக மற்றும் வரவு செலவுத்திட்ட கேள்விகள் தொடர்பான ஐநா ஆலோசனைக்குழுவுக்கு (ACABQ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. அஜய் பாவே

ஆ. விதிஷா மைத்ரா

இ. அனில் குமார் ஷர்மா

ஈ. அமிதாப் காந்த்

  • ஓர் இந்திய தூதரான விதிஷா மைத்ரா, நிர்வாக மற்றும் வரவு செலவுத்திட்ட கேள்விகளுக்கான ஐநா ஆலோசனைக்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆசிய-பசிபிக் குழுவில் உள்ள ஒரே பதவிக்கான தேர்தலில் அவர் வெற்றிபெற்றார். 126 ஐநா உறுப்பினர்கள் அவரது வேட்புமனுவை ஆதரித்தனர். அவர், 2008ஆம் ஆண்டுத் தொகுதியைச் சார்ந்த இந்திய வெளியுறவு சேவை அதிகாரியாவார்.

8. PSLV-C49 ஏவுகலத்தைப் பயன்படுத்தி ISRO’ஆல் ஏவப்படவுள்ள புவி கண்காணிப்பு செயற்கைக்கோ -ளின் பெயரென்ன?

அ. ஆரியபட்டா 01

ஆ. EOS 01

இ. கிரையோஸாட்

ஈ. லூனார்ஸாட்

  • இந்தியாவின் அண்மைய புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-01’ஐ இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஏவவுள்ளது. இச்செயற்கைக்கோளும் அதோடு சேர்ந்து பிற 9 வாடிக்கையாளர் செயற்கைக்கோள்களையும் ISRO தனது PSLV-C49 ஏவுகணையைப் பயன்படுத்தி விண்வெளிக்கு கொண்டுசெல்லும். ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்படவுள்ளது.

9. நடப்பாண்டு (2020) வரும் அமைதி & வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாளின் கருப்பொருள் என்ன?

அ. Science for and with Society

ஆ. Science for Global Understanding

இ. Celebrating Science Centres and Science Museums

ஈ. Open Science, Leaving No One Behind

  • பொது மக்களிடையே அறிவியலின் பயன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவ.10 அன்று உலக அமைதி & வளர்ச்சிக்கான அறிவியல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவத்தையும் இந்நாள் சிறப்பித்துக்கூறுகிறது. நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “Science for and with Society” என்பதாகும்.

10. பதினைந்தாம் நிதி ஆணையத்தின் தலைவர் யார்?

அ. இரமேஷ் சந்த்

ஆ. அஜய் நாராயண் ஜா

இ. N K சிங்

ஈ. அசோக் லஹிரி

  • N K சிங் தலைமையிலான பதினைந்தாம் நிதி ஆணையம் சமீபத்தில் தனது அறிக்கையை இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்தது. கடந்த ஆண்டு, இவ்வாணையம், 2020-21ஆம் ஆண்டிற்கான பரிந்துரைகளுடன் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த ஆணையம், 2021-22 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கான பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.

1. Which state has won award from World Travel Mart London for exemplary activities during COVID–19?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Odisha

[D] Gujarat

  • Kerala Tourism has been awarded the prestigious ‘Highly Commended’ Award by World Travel Mart London. The state has been awarded for its remarkable activities aimed to promote Responsible Tourism (RT) during COVID–19. Kerala’s Responsible Tourism (RT) Mission received the award in the category of ‘Meaningful Connections’.

2. Tigray region, which was seen in news recently, is located in which country?

[A] South Africa

[B] Ethiopia

[C] United States of America

[D] Italy

  • The Prime Minister of Ethiopia Abiy Ahmed has recently launched military operations in the region of Tigray, in the country. The Air Force of Ethiopia has recently bombed and destroyed military artillery in the northern Tigray region. The campaign has been launched against the Tigray People’s Liberation Front (TPLF).

3. Which Union Ministry has launched the Haj 2021 guidelines?

[A] Ministry of Foreign Affairs

[B] Ministry of Minority Affairs

[C] Ministry of Home Affairs

[D] Ministry of Tourism

  • Union Minister for Minority Affairs Mukhtar Abbas Naqvi announced the Haj 2021 guidelines to be followed during COVID–19 pandemic. The online application process for Haj 2021 has also been started and interested people can apply online, offline and through Haj Mobile App. Haj 2021 is scheduled during June–July in the year 2021.

4. Which state has topped the National Water Awards 2019 under “Best State” category?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Odisha

[D] Gujarat

  • Tamil Nadu has won the first position under the ‘Best State’ category of National Water Awards (NWAs) 2019. The awards have been constituted by the Department of Water Resources, Union Ministry of Jal Shakti. Tamil Nadu is followed by Maharashtra and Rajasthan as the best states under the normal category.

5. Which team has bagged the first prize in Gov–Tech–Thon 2020 that concluded recently?

[A] Tech Teamz

[B] Tech for India

[C] Fit for Future

[D] Nature for India

  • The Gov Tech Thon 2020 is a virtual hackathon that was organized by IEEE, National Informatics Centre (NIC) and Oracle, under the aegis of the Ministry of Electronics and Information Technology. The team from Robert Bosch Engineering and Business Solutions Private Limited named “Fit for Future” has bagged the first position in the hackathon for demonstrating prototype for automating vehicle fitness checks.

6. What type of transportation would be inaugurated by the Prime Minister of India between Hazira and Ghogha in Gujarat?

[A] Sea Plane Service

[B] Dedicated Freight Service

[C] Ro–Pax Ferry Service

[D] 8 Lane Express Highway

  • A Ro–Pax ferry service between Hazira and Ghogha in Gujarat is going to be inaugurated by the Prime Minister of India. The Ro–Pax Ferry Vessel named ‘Voyage Symphony’ would connect Hazira and Ghogha. It can carry 30 trucks on the main deck, 100 passenger cars on the upper deck and 500 passengers plus 34 crew on the passenger deck.

7. Who has been elected to the UN’s Advisory Committee on Administrative and Budgetary Questions (ACABQ)?

[A] Ajay Bhave

[B] Vidisha Maitra

[C] Anil Kumar Sharma

[D] Amitabh Kant

  • Vidisha Maitra, an Indian Diplomat has been elected to the UN’s Advisory Committee on Administrative and Budgetary Questions (ACABQ). She won the election contesting for the only post in Asia–Pacific group, with 126 UN members supporting her candidature. She is a 2008 batch Indian Foreign Service (IFS) officer.

8. What is the name of the earth observation satellite to be launched by ISRO aboard PSLV–C49?

[A] Aryabhata 01

[B] EOS 01

[C] Cryosat

[D] Lunarsat

  • India’s latest earth observation satellite named EOS–01 will be launched by the Indian Space Research Organisation (ISRO). The satellite along with 9 other customer satellites would be carried to space by ISRO using its PSLV–C49 rocket. The rocket would be launched from the first launch pad of Satish Dhawan Space Centre, Sriharikota in Andhra Pradesh.

9. What is the theme of 2020 edition of World Science Day for Peace and Development?

[A] Science for and with Society

[B] Science for Global Understanding

[C] Celebrating Science Centres and Science Museums

[D] Open Science, Leaving No One Behind

  • The World Science Day for Peace and Development is observed every year on 10th of November to highlight the significant role of science in society and the need to engage the wider public in debates on emerging scientific issues. It also underlines the importance and relevance of science in our daily lives. The theme for 2020 is “Science for and with Society”.

10. Who is the Chairman of the Fifteenth Finance Commission?

[A] Ramesh Chand

[B] Ajay Narayan Jha

[C] N K Singh

[D] Ashok Lahiri

  • The Fifteenth Finance Commission led by the Chairman N K Singh has recently submitted its Report to President of India Ram Nath Kovind. Last year, the Commission submitted its report with recommendations for the year 2020–21 and it was accepted and tabled in the Parliament. Now, the Commission has submitted recommendations for the period 2021–22 to 2025–26.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!