Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

12th October 2020 Current Affairs in Tamil & English

12th October 2020 Current Affairs in Tamil & English

12th October 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

12th October 2020 Tnpsc Current Affairs in Tamil

12th October 2020 Tnpsc Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.எந்த அமைப்பின்கீழ், ‘E Way Bill’ செயல்படுத்தப்படுகிறது?

அ. மத்திய நேரடி வரிகள் வாரியம்

ஆ. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கங்கள் வாரியம்

இ. அமலாக்க இயக்குநரகம்

ஈ. நிதி ஆணையம்

  • ‘E Way Bill’ முறையை மத்திய மறைமுக வரிகள் & சுங்கங்கள் வாரியம் (CBIC) செயல்படுத்துகிறது. GST’இல் பதிவு செய்த ஒருவர் `50,000’க்கு மேல் மதிப்புள்ள பொருட்களை ‘E Way Bill’ இல்லாமல் கொண்டு செல்லமுடியாது. 2020 செப்டம்பர் மாதத்தில் 5.74 கோடிக்கும் அதிகமான ‘E Way Bill’கள் உருவாக்கப்பட்டுள்ளதாக நிதிச்செயலாளர் Dr. அஜய் பூஷன் பாண்டே அண்மையில் தெரிவித்தார். இது, நாட்டில் வணிக நடவடிக்கைகள் புத்துயிர் பெற்றுள்ளதன் அடையாளமாகக் கருதப்படுகிறது.

2.எவ்வமைப்பால், தரவு ஆளுகை தரக்குறியீடு (Data Governance Quality Index) ஆய்வு நடத்தப்படுகிறது?

அ. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்

ஆ. உலக பொருளாதார மன்றம்

இ. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு

ஈ. NITI ஆயோக்

  • தரவு ஆளுகைத் தரக் குறியீடு ஆய்வினை நாட்டின் மதியுரைகமான NITI ஆயோக், அதன் வளர்ச்சிக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகத்தால் நடத்துகிறது. மத்திய துறைசார் திட்டங்கள் மற்றும் மத்திய நிதியுதவி திட்டங்களைச் செயல்படுத்துவதில் பல்வேறு அமைச்சகங்கள் அல்லது துறைகளின் செயல்திறனை மதிப்பீடு செய்வதை இந்த ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. தரவு ஆளுகைத் தரக் குறியீட்டு ஆய்வின்கீழ், 65 துறைகளுள் உரங்கள் துறை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

3.எந்த வங்கியை நடத்துவதற்கு இயக்குநர்கள் குழுமத்தை நியமிக்க, இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது?

அ. YES வங்கி

ஆ. தனலக்ஷ்மி வங்கி

இ. PMC வங்கி

ஈ. லக்ஷ்மி விலாஸ் வங்கி

  • தனலக்ஷ்மி வங்கியை நடத்துவதற்கு இயக்குநர்கள் குழுமத்தை நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒப்புதல் அளித்துள்ளது. வங்கியை நடத்துவதற்கு ஜி சுப்பிரமணிய ஐயர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட இடைக்கால இயக்குநர்கள் குழுமத்திற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக, பங்குதாரர்கள் அனைவரும், வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக சுனில் குர்பாக்சானியைத் தெரிவு செய்வதற்காக வாக்களித்தனர்.

4.ஆண்டுதோறும் பன்னாட்டு அகிம்சை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. அக்டோபர் 01

ஆ. அக்டோபர் 02

இ. அக்டோபர் 03

ஈ. அக்டோபர் 04

  • மகாத்மா காந்தியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அக்டோபர்.2ஆம் தேதியை ஐநா அவை ஆண்டுதோறும் பன்னாட்டு அகிம்சை நாளாகக் கொண்டாடுகிறது. 2007 ஜூன்.15 அன்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதன்மூலம் ஐநா பொது அவை இந்நாளை அறிவித்தது. கல்வி & விழிப்புணர்வு மூலம் அகிம்சையின் சாராம்சத்தை பரப்புவதே இந்த நாளின் நோக்கமாகும். மகாத்மா காந்தி தனது அகிம்சை இயக்கமான, ‘சத்யாகிரகத்தின்’ மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவராவார்.

5.செய்திகளில் இடம்பெற்ற மாதாபி பூரி புச், எந்த அமைப்பின் முதலாவது முழுநேர பெண் உறுப்பினராக உள்ளார்?

அ. RBI

ஆ. SEBI

இ. IRDAI

ஈ. PFRDA

  • இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) முதல் முழுநேர பெண் உறுப்பினர் மாதாபி பூரி புச் ஆவார். தனியார் துறையிலிருந்து SEBI வாரியத்திற்கு உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் நபரும் இவராவார். 2020 அக்டோபர் 4 முதல் மேலும் ஓராண்டுக்கு அவரது பதவிக்காலத்தை நீட்டித்து அமைச்சரவையின் நியமனக்குழு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.

6.ஒடிசா சோதனை தளத்திலிருந்து பரிசோதனை செய்யப்பட்ட, அணுவாயுதங்களை தாங்கிச் செல்லும் திறன்கொண்ட மீஉயர் ஏவுகணையின் பெயர் என்ன?

அ. வீர்

ஆ. செளரியா

இ. அக்னி VII

ஈ. தேஜஸ்

  • ‘செளரியா’ என்ற பெயரிலான உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அணுவாயுதங்களை தாங்கிச் செல்லும் திறன்கொண்ட மீஉயர் ஏவுகணையை இந்தியா தனது ஒடிசா சோதனை தளத்திலிருந்து சோதனை செய்தது. இந்த ஏவுகணை 1000 கிமீ தொலைவுக்கு அப்பாலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன் பெற்றது. ‘செளரியா’, இந்தியாவின் K-15 ஏவுகணையின் தரை வகையினதாகும். 200 கிலோ முதல் 1000 கிலோ வரையிலான எடையைத் தாங்கிச் செல்லும் திறன்கொண்டதாகும் இது.

7.எந்தத் தலைவரின் பிறந்தநாளின்போது, ‘உலக பண்ணை விலங்குகள் நாள்’ கொண்டாடப்படுகிறது?

அ. ‘மகாத்மா’ காந்தி

ஆ. ‘பெருந்தலைவர்’ காமராஜர்

இ. ஆபிரகாம் லிங்கன்

ஈ. வ. உ. சிதம்பரனார்

  • மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்.2 அன்று ‘உலக பண்ணை விலங்குகள் நாள்’ கொண்டாடப்ப -டுகிறது. ‘உலக விலங்குப்பாதுகாப்பு & விலங்குகளுக்கான ஆசியக்கூட்டணி’ உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு அமைப்புகளால் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில், ‘Pledge to #FastAgainstSlaughter’ என்ற பரப்புரை நடைபெற்றது.

8.எந்நகரின் வனப்பரப்பை அதிகரிப்பதற்காக இந்தியக்கடற்படை ‘வான்வழி விதைப்பு’ செயல்முறையை மேற்கொண்டது?

அ. சென்னை

ஆ. மும்பை

இ. விசாகப்பட்டினம்

ஈ. திருவனந்தபுரம்

  • இந்தியக்கடற்படையானது பெருநகர விசாகப்பட்டின மாநகராட்சியுடனிணைந்து விசாகப்பட்டினத்தில் ‘வான்வழி விதைப்பை’ மேற்கொண்டது. இம்முயற்சி, விசாகப்பட்டினம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கம் கொண்டது. கடற்படை உலங்கூர்திகளில் இருந்து ஐந்து இடங்களில் கிட்டத்தட்ட 6.25 டன் விதைப்பந்துகள் வீசப்பட்டுள்ளன.

9.பெண்கள் குறித்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நான்காவது உலக மாநாட்டை நடத்திய நாடு எது?

அ. இந்தியா

ஆ. சீனா

இ. ஐக்கிய அமெரிக்கா நாடுகள்

ஈ. ஜப்பான்

  • பெண்கள் தொடர்பான நான்காவது உலக மாநாட்டை ஐநா அவை கடந்த 1995 செப்டம்பரில் சீனாவின் பெய்ஜிங்கில் நடத்தியது. இம்மாநாட்டின் 25ஆவது ஆண்டுவிழா அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இம்மாநாட்டில் மத்திய பெண்கள் மற்றும் சிறார்கள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்றார். தேசிய ஊட்டச்சத்து இயக்கம் உட்பட இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெடுப்புகள் குறித்து அவர் அப்போது எடுத்துரைத்தார்.

10.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘P-8A’ என்னும் கடல்சார் ரோந்து வானூர்தி சார்ந்த நாடு எது?

அ. சீனா

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ. ஜப்பான்

ஈ. இஸ்ரேல்

  • ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) கடற்படையைச் சார்ந்த ‘P-8A’ என்ற கடல்சார் ரோந்து வானூர்தி, அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேரில் தரையிறங்கியது. இருதரப்பு தளவாடங்கள் ஆதரவு ஒப்பந்தத்தின்கீழ் எரிபொருள் நிரப்புவதற்காக USA P-8A வானூர்தி போர்ட் பிளேரில் தரையிறங்கியது இதுவே முதன்முறையாகும். இந்த ஒப்பந்தம், ‘Logistics Exchange Memorandum of Agreement (LEMOA)’ என்றும் அழைக்கப்படுகிறது.

1. The E Way Bill is implemented under the aegis of which body?

[A] Central Board of Direct Taxes

[B] Central Board of Indirect Taxes and Customs

[C] Enforcement Directorate

[D] Finance Commission

  • The E Way bill system is being implemented by the Central Board of Indirect Taxes and Customs (CBIC). It is an Electronic Way bill for movement of goods to be generated on the eWay Bill Portal. A GST registered person cannot transport goods more than Rs.50,000 without an e way bill. Finance Secretary Dr Ajay Bhushan Pandey has recently stated that more than 5.74 crore e–way bills have been generated in the month of September 2020 which is seen as a sign of revival of business activities in the country.

2. The Data Governance Quality Index (DGQI) survey is conducted by which organization?

[A] UNDPTop of Form

UNDP

[B] WEF

[C] OEDC

[D] NITI Aayog

  • The Data Governance Quality Index (DGQI) survey is conducted by the nation’s think tank NITI Aayog, by its Development Monitoring and Evaluation Office. The survey aims to evaluate the performance of different Ministries / Departments in implementing Central Sector Schemes (CS) and Centrally Sponsored Schemes (CSS). Department of Fertilizers has been ranked 2nd among 65 departments under the Data Governance Quality Index survey.

3. The Reserve Bank of India (RBI) approved the appointment of Committee of Directors (CoD) to run which bank?

[A] Yes Bank

[B] Dhanlaxmi Bank

[C] PMC Bank

[D] Lakshmi Vilas Bank

  • The Reserve Bank of India (RBI) approved the appointment of Committee of Directors to run Dhanlaxmi Bank. RBI is said to have approved a three–member interim committee of directors, headed by G Subramonia Iyer, to run the bank. Earlier, the shareholders voted out the bank’s MD and CEO Sunil Gurbaxani.

4. When is International Day of Non–Violence observed annually?

[A] October 01

[B] October 02

[C] October 03

[D] October 04

  • October 2 is observed as the International Day of Non–Violence every year by the United Nations, to commemorate the birth anniversary of Mahatma Gandhi. The UN General Assembly in a resolution on 15 June 2007 declared this day. The objective of this day is to spread the message of non–violence through education and public awareness. Gandhi is known across the world for his non–violence movement ‘Satyagraha’.

5. Madhabi Puri Buch, who was seen in news, is the first woman whole–time member of which organisation?

[A] RBI

[B] SEBI

[C] IRDAI

[D] PFRDA

  • Madhabi Puri Buch is the first woman Whole–time member (WTM) of Securities and Exchange Board of India (SEBI). She is also the first from the private sector to be appointed a SEBI Board member. The Appointments Committee of the Cabinet (ACC) has recently approved the extension of her appointment as WTM for one year beginning October 4, 2020.

6. What is the name of the nuclear capable hypersonic missile that was test–fired from Odisha test range?

[A] Veer

[B] Shaurya

[C] Agni VII

[D] Tejas

  • India has successfully test fired its indigenously developed nuclear capable hypersonic missile ‘Shaurya’. The surface–to–surface tactical missile, with a strike range of around 1,000 km, has been test fired from a test range in Odisha. ‘Shaurya’ is the land variant of India’s K–15 missile and is capable of carrying payloads of 200 kg to 1000 kg.

7. ‘World Day for Farmed Animals’ is celebrated on the birth anniversary of which leader?

[A] ‘Mahatma’ Gandhi

[B] ‘Perunthalaivar’ Kamarajar

[C] Abraham Lincoln

[D] V.O. Chidambaranar

  • The ‘World Day for Farmed Animals’ is celebrated on October 2, the birth anniversary of Mahatma Gandhi. The Day is being observed since 1983 by various international organisations including ‘World Animal Protection and Asia for Animals coalition’. In this year, a campaign of ‘Pledge to #FastAgainstSlaughter’ was held.

8. Indian Navy undertook the process of ‘Aerial Seeding’ to increase green cover in which city?

[A] Chennai

[B] Mumbai

[C] Vishakhapatnam

[D] Hyderabad

  • The Indian Navy along with Greater Vishakhapatnam Municipal Corporation had undertaken Aerial Seeding in Vishakhapatnam. This initiative is aimed to increase green cover in and around Vishakhapatnam. Over 6.25 tonnes of seed balls were air dropped in five locations from the Naval helicopters.

9. Which country hosted the historic fourth World Conference on Women?

[A] India

[B] China

[C] United States of America

[D] Japan

  • The fourth World Conference on Women was convened by the United Nations during in September 1995 in Beijing, China. The 25th anniversary of the fourth World Conference on Women was recently organised. Union Women and Child Development Minister Smriti Irani participated in the conference. She highlighted about the initiatives undertaken in India including the National Nutrition Mission.

10. The Maritime Patrol Aircraft ‘P–8A’, that was seen in news recently, belongs to which country?

[A] Israel

[B] China

[C] United States of America

[D] Japan

  • A United States Navy P–8A long range Maritime Patrol Aircra landed at Port Blair in the Andaman and Nicobar Islands. This is seen as a significant incident as this is the first time a U.S. P–8 aircraft landed at Port Blair for refuelling under the bilateral logistics support agreement. The agreement is called the Logistics Exchange Memorandum of Agreement (LEMOA).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!