Science Questions

12th Std Science Lesson Wise Questions in Tamil – Part 2

12th Science Lesson 7 Questions in Tamil

7] மின்னோட்டவியல்

1. நாம் மின்சாரத்தை மிக மிக விலை குறைந்ததாக ஆக்குவோம்; அதனால் இனிமேல், பணக்காரர்கள்தான் மெழுகுவர்த்திகளை ஏற்றுவார்கள் என கூறியவர்____________

A) நியூட்டன்

B) ஸ்டீபன் ஹாங்கிங்

C) நீல்ஸ் போர்

D) எடிசன்

விளக்கம்: நாம் மின்சாரத்தை மிக மிக விலை குறைந்ததாக ஆக்குவோம்; அதனால் இனிமேல், பணக்காரர்கள்தான் மெழுகுவர்த்திகளை ஏற்றுவார்கள் – தாமஸ் ஆல்வா எடிசன்

2. ____________ என்பது மின்துகள்களின் இயக்கத்தைப்பற்றிய பிரிவு ஆகும்.

A) மின்னூட்டவியல்

B) மின்னோட்டவியல்

C) நிலைமின்னியல்

D) காந்தவியல்

விளக்கம்: மின்னோட்டவியல் என்பது மின்துகள்களின் இயக்கத்தைப்பற்றிய பிரிவு ஆகும்.

3. கட்டுறா எலக்ட்ரான்களை அதிகம் கொண்டுள்ள பொருட்களை____________ என்கிறோம்.

A) காப்பான்கள்

B) கடத்திகள்

C) அரிதிற் கடத்திகள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: கட்டுறா எலக்ட்ரான்களை அதிகம் கொண்டுள்ளபொருட்களை கடத்திகள் (conductors) என்கிறோம்.

4. மின்னோட்டம் என்பது____________ அளவாகும்.

A) வெக்டர்

B) ஸ்கேலார்

C) வழி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மின்னோட்டம் என்பது ஸ்கேலர் அளவாகும்.

5. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] ஒரு கூலூம் மின்னூட்டம் கொண்ட மின்துகள்கள் ஒரு வினாடி நேரத்தில் செங்குத்தான குறுக்குவெட்டுப்பரப்பைக் கடந்தால் ஏற்படும் மின்னோட்டமே ஒரு ஆம்பியர் மின்னோட்டம் ஆகும்.

2] கட்டுறா எலக்ட்ரான்களை அணுவிலிருந்துபிரித்தெடுக்க முடியாது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஒரு கூலூம் மின்னூட்டம் கொண்ட மின்துகள்கள் ஒரு வினாடி நேரத்தில் செங்குத்தான குறுக்குவெட்டுப்பரப்பைக் கடந்தால் ஏற்படும் மின்னோட்டமே ஒரு ஆம்பியர் மின்னோட்டம் ஆகும். கட்டுறா எலக்ட்ரான்களை அணுவிலிருந்து எளிதில் பிரித்தெடுக்கலாம்.

6. மின்னோட்டத்தின் SI அலகு____________

A) ஜூல்

B) ஆம்பியர்

C) வோல்ட்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் (A) ஆகும்.

7. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மரபுப்படி, மின்சுற்றில் மின்னோட்டம் நேர்மின் வாயிலிருந்து எதிர்மின்வாயுக்கு பாயும்.

2] இந்த மின்னோட்டமே மரபு மின்னோட்டம் அல்லது மின்னோட்டம் எனப்படும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மரபுப்படி, மின்சுற்றில் மின்னோட்டம் நேர்மின் வாயிலிருந்து எதிர்மின்வாயுக்கு பாயும். இந்த மின்னோட்டமே மரபு மின்னோட்டம் அல்லது மின்னோட்டம் எனப்படும்.

8. ____________ மிகக்குறுகிய காலத்தில் மிக அதிக மின்னோட்டத்தை ஏற்படுத்தும்.

A) இடி

B) மின்னல்வெட்டு

C) சூரிய வெப்பம்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: இயற்கையில் ஏற்படும் மின்னல்வெட்டு மிகக்குறுகிய காலத்தில் மிக அதிக மின்னோட்டத்தை ஏற்படுத்தும்.

9. கடத்திகளில் இருக்கும்____________ மின்னூட்டத்தை எடுத்துச்செல்லும் ஊர்திகளாகும்.

A) கட்டுறும் எலெக்ட்ரான்

B) கட்டுறா எலெக்ட்ரான்

C) எலெக்ட்ரான்கள்

D) புரோட்டான்கள்

விளக்கம்: கடத்திகளில் இருக்கும் கட்டுறா எலக்ட்ரான்களே மின்னூட்டத்தை எடுத்துச்செல்லும் ஊர்திகளாகும்.

10. இயக்க எண்ணின் SI அலகு____________

A) M2V-1s-1

B) m2v-1s-1

C) M2V-1S-1

D) m2V-1s-1

விளக்கம்: இயக்க எண்ணின் SI அலகு m2V-1s-1

11. ஒரு கடத்தியில் இழுப்பு திசைவேகத்தின் பொதுவான மதிப்பு ____________

A) 104ms-1

B) 10-4Ms-1

C) 10-4m-1

D) 10-4ms-1

விளக்கம்: ஒரு கடத்தியில் இழுப்பு திசைவேகத்தின் பொதுவான மதிப்பு 10-4ms-1 ஆகும்.

12. ஒரு கடத்தியில்____________ இல்லாத நிலையில் நிகர மின்னோட்டமும் இருக்காது.

A) உள்புற மின்புலம்

B) வெளிப்புற மின்புலம்

C) உள்புற மின்னோட்டம்

D) வெளிப்புற மின்னோட்டம்

விளக்கம்: ஒரு கடத்தியில் வெளிப்புற மின்புலம் இல்லாத நிலையில் நிகர மின்னோட்டமும் இருக்காது.

13. ____________ கட்டுறா எலக்ட்ரான்களை போன்று சுதந்திரமாக இயங்க இயலாது.

A) எதிர்மின் அயனிகள்

B) நேர்மின் அயனிகள்

C) புரோட்டான்கள்

D) எலக்ட்ரான்கள்

விளக்கம்: நேர்மின் அயனிகள் கட்டுறா எலக்ட்ரான்களை போன்று சுதந்திரமாக இயங்க இயலாது.

14. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] இழுப்புத்திசைவேகம் என்பது கடத்தியில் உள்ள எலக்ட்ரான்களை மின்புலத்திற்கு உட்படுத்தும்போது அவை பெறும் சராசரி திசைவேகம் ஆகும்.

2] இயக்க எண் என்பது ஓரலகு மின்புலத்தினால் ஏற்படும் இழுப்புத்திசைவேகத்தின் எண்மதிப்பு ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இழுப்புத்திசைவேகம் என்பது கடத்தியில் உள்ள எலக்ட்ரான்களை மின்புலத்திற்கு உட்படுத்தும்போது அவை பெறும் சராசரி திசைவேகம் ஆகும். இயக்க எண் என்பது ஓரலகு மின்புலத்தினால் ஏற்படும் இழுப்புத்திசைவேகத்தின் எண்மதிப்பு ஆகும்.

15. மின்னோட்ட அடர்த்தியின் SI அலகு____________

A) Am-1

B) Am-2

C) AM-2

D) am-2

விளக்கம்: மின்னோட்ட அடர்த்தியின் SI அலகு Am-2 ஆகும்.

16. மின்னோட்ட அடர்த்தி____________ அளவாகும்.

A) வெக்டர்

B) ஸ்கேலார்

C) வழி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மின்னோட்ட அடர்த்தி ஒரு வெக்டர் அளவாகும்.

17. மின்கடத்து எண்ணின் தலைகீழ் மதிப்பு____________ ஆகும்.

A) மின்புலம்

B) மின்தடை

C) மின்தடை எண்

D) மின்தடையாக்கி

விளக்கம்: மின்கடத்து எண்ணின் தலைகீழ் மதிப்பு மின்தடை எண் (ρ) ஆகும்.

18. கூற்று(A): மின்னோட்டம் ஒரு ஸ்கேலர் அளவு ஏன் ?

காரணம்(R): பொதுவாக மின்னோட்டம் I என்பது மின்னோட்ட அடர்த்தி மற்றும் மின்துகள்கள் பாயும் பரப்பு வெக்டர் ஆகியவற்றின் புள்ளிப்பெருக்கம் ஆகும். பொதுவாக மின்னோட்டம் I என்பது மின்னோட்ட அடர்த்தி மற்றும் மின்துகள்கள் பாயும் பரப்பு வெக்டர்ஆகியவற்றின்புள்ளிப்பெருக்கம் ஆகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: மின்னோட்ட அடர்த்தி ஒரு வெக்டர் அளவு. ஆனால் மின்னோட்டம் ஒரு ஸ்கேலர் அளவு. ஏன் ? பொதுவாக மின்னோட்டம் I என்பது மின்னோட்ட அடர்த்தி மற்றும் மின்துகள்கள் பாயும் பரப்பு வெக்டர்ஆகியவற்றின்புள்ளிப்பெ ருக்கம் ஆகும். மேற்பரப்பு A வின் செங்குத்து வெக்டரின் திசையைப் பொறுத்து மின்னோட்டம் I ஆனது நேர்க்குறி அல்லது எதிர்க்குறியைப் பெறும்.

19. ஒரு கடத்தியின் மின்தடையானது கடத்தியின் நீளத்திற்கு____________ அக்கடத்தியின் குறுக்குவெட்டுப் பரப்பிற்கு____________ அமைகிறது.

A) எதிர் தகவு, சுழி

B) நேர்தகவு, சுழி

C) எதிர்த்தகவு, நேர்தகவு

D) நேர்தகவு, எதிர்த்தகவு

விளக்கம்: ஒரு கடத்தியின் மின்தடையானது கடத்தியின் நீளத்திற்கு நேர்த்தகவிலும், அக்கடத்தியின் குறுக்குவெட்டுப் பரப்பிற்கு எதிர்த்தகவிலும் அமைகிறது.

20. மின்தடையின் SI அலகு____________

A) ஜூல்

B) ஆம்பியர்

C) வோல்ட்

D) ஓம்

விளக்கம்: மின்தடையின் SI அலகு ஓம் (Ω).

21.கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டிற்கான வரைபடம் நேர்கோடாக அமையாமல் சிக்கலான வடிவில் இருந்தால் இவ்வகை பொருட்கள் அல்லது கருவிகள் ஓம் விதிக்கு உட்படுவதில்லை.

2] மேலும் இவ்வகை பொருட்களுக்கு மின்தடை மாறிலி ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டிற்கான வரைபடம் நேர்கோடாக அமையாமல் சிக்கலான வடிவில் இருந்தால் இவ்வகை பொருட்கள் அல்லது கருவிகள் ஓம் விதிக்கு உட்படுவதில்லை. மேலும் இவ்வகை பொருட்களுக்கு மின்தடை மாறிலியாகவும் அமையாது.

22. மின்தடை SI அலகு____________

A) ஜூல்

B) ஆம்பியர்

C) ஓம்-மீட்டர்

D) ஓம்

விளக்கம்: மின்தடை SI அலகு ஓம்-மீட்டர் (Ω m).

23. ____________ மிகக் குறைந்த மின் தடை எண்ணை பெற்றிருக்கும்.

A) குறைக்கடத்திகள்

B) காப்பான்கள்

C) கடத்திகள்

D) மின்கடத்தா பொருள்கள்

விளக்கம்: கடத்திகள் மிகக் குறைந்த மின் தடை எண்ணை பெற்றிருக்கும்.

24. ____________ மிக அதிக மின்தடை எண்ணை பெற்றிருக்கும்.

A) குறைக்கடத்திகள்

B) காப்பான்கள்

C) கடத்திகள்

D) மின்கடத்தா பொருள்கள்

விளக்கம்: மின்கடத்தாப்பொருட்கள் மிக அதிக மின்தடை எண்ணை பெற்றிருக்கும்.

25. ____________ மின்தடை எண் கடத்திகளை விட அதிகமாகவும் ஆனால் மின்கடத்தாப் பொருட்களை விட குறைவாகவும் அமையும்.

A) குறைக்கடத்திகள்

B) காப்பான்கள்

C) கடத்திகள்

D) மின்கடத்தா பொருள்கள்

விளக்கம்: குறைகடத்திகளின் மின்தடை எண் கடத்திகளை விட அதிகமாகவும் ஆனால் மின்கடத்தாப் பொருட்களை விட குறைவாகவும் அமையும்.

26. ____________ பொருத்து பொருட்களை கடத்திகள், குறைக்கடத்திகள், மின் கடத்தாப்பொருட்கள் (Insulators) என வகைப்படுத்தலாம்.

A) மின்புலம்

B) மின்தடை

C) மின்தடை எண்

D) மின்தடையாக்கி

விளக்கம்: மின்தடை எண்ணைப் பொருத்து பொருட்களை கடத்திகள், குறைக்கடத்திகள், மின் கடத்தாப்பொருட்கள் (Insulators) என வகைப்படுத்தலாம்.

27. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] கடத்தியின் மின்தடை என்பது கடத்தியின் முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கும் கடத்தியின் வழியே மின்னோட்டத்திற்கும் உள்ள தகவாகும்.

2] பொருளின் மின்தடை எண் என்பது ஓரலகு நீளமும் ஓரலகு குறுக்கு வெட்டு பரப்பும் கொண்ட கடத்தியானது மின்னோட்டத்திற்கு அளிக்கும் மின்தடை ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: கடத்தியின் மின்தடை என்பது கடத்தியின் முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கும் கடத்தியின் வழியே மின்னோட்டத்திற்கும் உள்ள தகவாகும். பொருளின் மின்தடை எண் என்பது ஓரலகு நீளமும் ஓரலகு குறுக்கு வெட்டு பரப்பும் கொண்ட கடத்தியானது மின்னோட்டத்திற்கு அளிக்கும் மின்தடை ஆகும்.

28. கீழ்க்கண்டவற்றுள் குறைக்கடத்திகள் எவை?

A) வெள்ளி

B) தாமிரம்

C) தூய நீர்

D) ஜெர்மானியம்

விளக்கம்: சிலிக்கான், ஜெர்மானியம் போன்றவை குறைக்கடத்திகள் ஆகும்.

29. கீழ்க்கண்டவற்றுள் கடத்திகள் அல்லாதது எவை?

A) வெள்ளி

B) தாமிரம்

C) இரும்பு

D) சோடியம் குளோரைடு

விளக்கம்: வெள்ளி, தாமிரம், இரும்பு, டங்ஸ்டன், அலுமினியம் போன்றவை கடத்திகள் ஆகும்.

30. கீழ்க்கண்டவற்றுள் மின் கடத்தாப்பொருட்கள் அல்லாதது எவை?

A) கடின இரப்பர்

B) உருகிய குவார்ட்ஸ்

C) தூய நீர்

D) டங்ஸ்டன்

விளக்கம்: கடின இரப்பர், உருகிய குவார்ட்ஸ், தூய நீர், சோடியம் குளோரைடு போன்றவை மின் கடத்தாப்பொருட்கள் ஆகும்.

31. ஜெர்மானியம் மின்தடை எண்____________

A) 0.47

B) 0.68

C) 0.46

D) 0.49

விளக்கம்: ஜெர்மானியம் மின்தடை எண் 0.46 ஆகும்.

32. சிலிக்கான் மின்தடை எண்____________

A) 641

B) 642

C) 640

D) 643

விளக்கம்: சிலிக்கான் மின்தடை எண் 640 ஆகும்.

33. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] வெள்ளி மின்தடை எண் 1.7× 10-8

2] தாமிரம் மின்தடை எண் 1.6× 10-8

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: வெள்ளி மின்தடை எண் 1.7 ×10-8 ஆகும். தாமிரம் மின்தடை எண் 1.6×10-8 ஆகும்.

34. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] அலுமினியம் மின்தடை எண் 2.8 × 10-8

2] டங்ஸ்டன் மின்தடை எண் 4.6× 10-8

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: அலுமினியம் மின்தடை எண் 2.7 × 10-8 ஆகும். டங்ஸ்டன் மின்தடை எண் 5.6× 10-8 ஆகும்.

35. இரும்பு மின்தடை எண்____________

A) 11× 10-8

B) 10× 10-8

C) 12× 10-8

D) 13× 10-8

விளக்கம்: இரும்பு மின்தடை எண்10× 10-8 ஆகும்.

36. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] தூய நீர் மின்தடை எண் 2.3× 10-5

2] கண்ணாடி மின்தடை எண்1011- 1012

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: தூய நீர் மின்தடை எண் 2.5 × 10-5 ஆகும். கண்ணாடி மின்தடை எண்1010- 1014 ஆகும்.

37. கடின இரப்பர் மின்தடை எண்____________

A) 1011- 1012

B) 1013- 1014

C) 1013- 1016

D) 1013- 1015

விளக்கம்: கடின இரப்பர் மின்தடை எண்1013- 1016 ஆகும்.

38. சோடியம் குளோரைடு மின்தடை எண் ___________

A) 1011

B) 1013

C) 1014

D) 1015

விளக்கம்: சோடியம் குளோரைடு மின்தடை எண் 1014 ஆகும்.

39. உருகிய குவார்ட்ஸ் மின்தடை எண் ___________

A) 1015

B) 1014

C) 1016

D) 1017

விளக்கம்: உருகிய குவார்ட்ஸ் மின்தடை எண்1016 ஆகும்.

40. மனித உடலில் மின்தடை மதிப்பு ___________

A) 300 Ω

B) 200 Ω

C) 400 Ω

D) 250 Ω

விளக்கம்: மனித உடலில் அதிக அளவு நீர் உள்ளதால் மின்தடை குறைவாக கிட்டத்திட்ட 200 Ω அளவே இருக்கும்.

41. உலர்ந்த தோலின் மின்தடை மதிப்பு ___________

A) 300 Ω

B) 500 Ω

C) 400 Ω

D) 250 Ω

விளக்கம்: உலர்ந்த தோலின் மின்தடை மிக அதிகமாக கிட்டத்தட்ட 500 kΩ அளவு இருக்கும்.

42. தோலானது ஈரமானதாக இருந்தால் மின்தடையின் மதிப்பு ___________

A) 300 Ω

B) 1000 Ω

C) 400 Ω

D) 250 Ω

விளக்கம்: தோலானது ஈரமானதாக இருந்தால் மின்தடையின் மதிப்பு குறைந்து கிட்டத்தட்ட 1000 Ω அளவே இருக்கும். எனவே மின் இணைப்புகளை ஈரமான கைகளுடன் தொடுவது மிகவும் ஆபத்தானதாகும்.

43. தொடரிணைப்பில் அமையப்பெற்ற மின்தடையாக்கி சாதனங்கள் யாவை?

A) மின்விளக்கு

B) வெப்பமேற்றும் சாதனங்கள்

C) எளிய மின்தடையாக்கி

D) இவை அனைத்தும்

விளக்கம்: மின்விளக்கு, வெப்பமேற்றும் சாதனங்கள், எளிய மின்தடையாக்கி போன்றவை தொடரிணைப்பில் அமையப்பெற்ற மின்தடையாக்கி சாதனங்கள் ஆகும்.

44. தொடரிணைப்பில் உள்ள மின்தடையாக்கிகளின் தொகுபயன் மின்தடையானது தனித்தனி மின்தடைகளின் மதிப்புகளை விட___________ அமையும்.

A) குறைவாக

B) அதிகமாக

C) சுழி

D) மிக அதிகம்

விளக்கம்: தொடரிணைப்பில் உள்ள மின்தடையாக்கிகளின் தொகுபயன் மின்தடையானது தனித்தனி மின்தடைகளின் மதிப்புகளை விட அதிகமாக அமையும்.

45. பக்க இணைப்பில் மின்தடையாக்கிகள் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடை தனித்தனி மின்தடைகளின் மதிப்பை விட___________ அமையும்.

A) குறைவாக

B) அதிகமாக

C) சுழி

D) மிக அதிகம்

விளக்கம்: பக்க இணைப்பில் மின்தடையாக்கிகள் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடை தனித்தனி மின்தடைகளின் மதிப்பை விட குறைவானதாக இருக்கும்.

46. வீட்டு உபயோக சாதனங்கள் எப்போதும்___________ இணைக்கப்பட்டிருக்கும்.

A) பக்க இணைப்பு

B) தொடரிணைப்பு

C) பக்க தொடரிணைப்பு

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: வீட்டு உபயோக சாதனங்கள் எப்போதும் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டிருக்கும். அப்போதுதான் ஏதாவது ஒரு சாதனம் பழுதடைந்தால் அதைத்தவிர்த்து மற்ற சாதனங்கள் வேலை செய்யும்.

47. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்தடைகளின் நிறக்குறியீடுகளை காணும்போது மூன்று வளையங்கள் உள்ள பகுதி நமக்கு இடது புறம் இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.

2] மின்தடைகளில் உலோக நிற வளையங்கள் இடது புறமாக இருக்கும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்தடைகளின் நிறக்குறியீடுகளை காணும்போது மூன்று வளையங்கள் உள்ள பகுதி நமக்கு இடது புறம் இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும். மின்தடைகளில் உலோக நிற வளையங்கள் இடது புறமாக இருக்காது.

48. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] வெள்ளி மின்தடை வெப்பநிலை எண் 3.7 × 10-3

2] தாமிரம் மின்தடை வெப்பநிலை எண் 3.6 × 10-3

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: வெள்ளி மின்தடை வெப்பநிலை எண் 3.8 × 10-3 ஆகும். தாமிரம் மின்தடை வெப்பநிலை எண் 3.9 × 10-3 ஆகும்.

49. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] தங்கம் மின்தடை வெப்பநிலை எண் 3.6 × 10-3

2] அலுமினியம் மின்தடை வெப்பநிலை எண் 3.8 × 10-3

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: தங்கம் மின்தடை வெப்பநிலை எண் 3.4 × 10-3 ஆகும். அலுமினியம் மின்தடை வெப்பநிலை எண் 3.9 × 10-3 ஆகும்.

50. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] டங்ஸ்டன் மின்தடை வெப்பநிலை எண் 4.6 × 10-3

2] இரும்பு மின்தடை வெப்பநிலை எண் 5.1 × 10-3

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: டங்ஸ்டன் மின்தடை வெப்பநிலை எண் 5.0 × 10-3 ஆகும். இரும்பு மின்தடை வெப்பநிலை எண் 5.0 × 10-3 ஆகும்.

51. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] பிளாட்டினம் மின்தடை வெப்பநிலை எண் 3.6 × 10-3

2] காரீயம் மின்தடை வெப்பநிலை எண் 4.1 × 10-3

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பிளாட்டினம் மின்தடை வெப்பநிலை எண் 3.92 × 10-3 ஆகும். காரீயம் மின்தடை வெப்பநிலை எண்3.9 × 10-3 ஆகும்.

52. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] நிக்ரோம் மின்தடை வெப்பநிலை எண் 0.5 × 10-3

2] கார்பன் மின்தடை வெப்பநிலை எண் 0.5 × 10-3

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: நிக்ரோம் மின்தடை வெப்பநிலை எண் 0.4 × 10-3 ஆகும். கார்பன் மின்தடை வெப்பநிலை எண் -0.5 × 10-3 ஆகும்.

53. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] ஜெர்மானியம் மின்தடை வெப்பநிலை எண் -49 × 10-3

2] சிலிக்கான் மின்தடை வெப்பநிலை எண் 75 × 10-3

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஜெர்மானியம் மின்தடை வெப்பநிலை எண் -48 × 10-3 ஆகும். சிலிக்கான் மின்தடை வெப்பநிலை எண் -75 × 10-3 ஆகும்.

54. எதிர்க்குறி வெப்பநிலை மின்தடை எண் உடைய குறைக்கடத்தியானது___________ எனப்படும்.

A) வெப்ப குறைகடத்தி

B) வெப்ப தடையகம்

C) வெப்ப காப்பான்

D) வெப்ப கடத்தி

விளக்கம்: எதிர்க்குறி வெப்பநிலை மின்தடை எண் உடைய குறைக்கடத்தியானது வெப்ப தடையகம் (Thermistor) எனப்படும்.

55. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] பொருட்களின் மின்தடை எண் ஆனது எலக்ட்ரான்களின் எண் அடர்த்தி (n) க்கு எதிர்த்தகவில் அமையும்.

2] பொருட்களின் மின்தடை எண் ஆனது மோதலுக்கு இடைப்பட்ட சராசரி காலத்திற்கு (τ) எதிர்த்தகவில் அமையும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பொருட்களின் மின்தடை எண் ஆனது i) எலக்ட்ரான்களின் எண் அடர்த்தி (n) க்கு எதிர்த்தகவில் அமையும். ii) மோதலுக்கு இடைப்பட்ட சராசரி காலத்திற்கு (τ) எதிர்த்தகவில் அமையும்.

56. ஒரு சில பொருட்களின் வெப்பநிலையானது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு கீழே குறையும்போது அதன் மின்தடை எண்___________

A) ஒன்று

B) சுழி

C) இரண்டு

D) மூன்று

விளக்கம்: ஒரு சில பொருட்களின் வெப்பநிலையானது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு கீழே குறையும்போது அதன் மின்தடை எண் சுழியாகும். இந்த வெப்பநிலையானது மாறுநிலை வெப்பநிலை அல்லது பெயர்வு வெப்பநிலை எனப்படும்.

57. மாறுநிலை வெப்பநிலை அல்லது பெயர்வு வெப்பநிலைவெளிப்படுத்தும் பொருட்கள்___________ எனப்படும்.

A) கடத்திகள்

B) காப்பான்கள்

C) குறைக்கடத்திகள்

D) மீக்கடத்திகள்

விளக்கம்: மாறுநிலை வெப்பநிலை அல்லது பெயர்வு வெப்பநிலைவெளிப்படுத்தும் பொருட்கள் மீக்கடத்திகள் (Superconductors) எனப்படும்.

58. முதன் முதலில் மீக்கடத்தும் தன்மையை கண்டறிந்தவர்___________

A) காமர்லிங் ஒன்ஸ்

B) காமர்லிங் எடிசன்

C) காமர்லிங் தாம்சன்

D) காமர்லிங் வில்சன்

விளக்கம்: முதன் முதலில் 1911 ல் காமர்லிங் ஒன்ஸ் என்பவர் மீக்கடத்தும் தன்மையை கண்டறிந்தார்.

59. முதன் முதலில் 1911 ல் காமர்லிங் ஒன்ஸ் என்பவர்___________ வெப்பநிலையில் மீக்கடத்தும் தன்மையை வெளிப்படுத்துவதைக் கண்டறிந்தார்.

A) வெள்ளி

B) பாதரசம்

C) உருகிய குவார்ட்ஸ்

D) டங்ஸ்டன்

விளக்கம்: முதன் முதலில் 1911 ல் காமர்லிங் ஒன்ஸ் என்பவர் பாதரசமானது 4.2 K வெப்பநிலையில் மீக்கடத்தும் தன்மையை வெளிப்படுத்துவதைக் கண்டறிந்தார்.

60. மின்திறனின் SI அலகு___________

A) வாட்

B) ஆம்பியர்

C) ஓம்-மீட்டர்

D) ஓம்

விளக்கம்: மின்திறனின் SI அலகு வாட்

61. மின்தடையில் உருவாக்கப்படும் (வெளியேறும்) மின்திறனின் அளவு___________

A) P= I2 R

B) P= I3 R

C) P= I2 r

D) P= i2 r

விளக்கம்: மின்தடையில் உருவாக்கப்படும் (வெளியேறும்) மின்திறனின் அளவு P= I2 R ஆகும்.

62. மின்திறனானது மின்னோட்டத்தின்___________ பொறுத்தது.

A) மும்மடியை

B) இருமடியை

C) சுழி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மின்திறனானது மின்னோட்டத்தின் இருமடியை பொறுத்தது. எனவே மின்னோட்டத்தை இருமடங்காக்கினால் மின்திறனானது நான்கு மடங்காகும். மின்னழுத்த வேறுபாட்டிற்கும் இந்த விளக்கம் பொருந்தும்.

63. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] தமிழ்நாடு மின்சார வாரியம் நாம் பயன்படுத்தும் மின்திறனுக்கான கட்டணத்தை பெறுகிறதே தவிர மின் ஆற்றலுக்கான கட்டணம் அல்ல.

2] 1V மின்னழுத்த வேறுபாட்டினால் பாயும் மின்னோட்டம் 1 A எனில் உருவாகும் திறன் 1W ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: தமிழ்நாடு மின்சார வாரியம் நாம் பயன்படுத்தும் மின் ஆற்றலுக்கான கட்டணத்தை பெறுகிறதே தவிர மின்திறனுக்கான கட்டணம் அல்ல. 1V மின்னழுத்த வேறுபாட்டினால் பாயும் மின்னோட்டம் 1 A எனில் உருவாகும் திறன் 1W ஆகும்.

64. பெல்டியர் விளைவு ஒரு___________ ஆகும்.

A) மீளா விளைவு

B) மீள் விளைவு

C) நேர் விளைவு

D) எதிர் விளைவு

விளக்கம்: பெல்டியர் விளைவு ஒரு மீள் விளைவு ஆகும்.

65. பெல்டியர் விளைவு கண்டறியப்படட்ட ஆண்டு___________

A) 1834

B) 1835

C) 1833

D) 1836

விளக்கம்: பெல்டியர் 1834 ல் பெல்டியர் விளைவை கண்டறிந்தார்.

66. தாம்ஸன் விளைவு ஒரு___________ ஆகும்.

A) மீளா விளைவு

B) மீள் விளைவு

C) நேர் விளைவு

D) எதிர் விளைவு

விளக்கம்: தாம்ஸன் விளைவும் மீள்விளைவு ஆகும்.

67. நேர்க்குறி தாம்ஸன் விளைவு நடைபெறும் உலோகங்களில் தவறானவை எவை?

A) வெள்ளி

B) குரோமியம்

C) துத்தநாகம்

D) காட்மியம்

விளக்கம்: நேர்க்குறி தாம்ஸன் விளைவு வெள்ளி, துத்தநாகம் மற்றும் காட்மியம் போன்ற உலோகங்களிலும் நடைபெறும்.

68. எதிர்க்குறி தாம்ஸன் விளைவு நடைபெறும் உலோகங்களில் தவறானவை எவை?

A) பிளாட்டினம்

B) நிக்கல்

C) கோபால்ட்

D) குவாட்ர்ஸ்

விளக்கம்: எதிர்க்குறி தாம்ஸன் விளைவு பிளாட்டினம், நிக்கல், கோபால்ட் மற்றும் பாதரசம் போன்ற உலோகங்களிலும் நடைபெறும்.

69. மின்னோட்ட பாய்வின் காரணமாக மின்னோட்டத்தின் திசையில் வெப்பப் பரிமாற்றம் நிகழ்வது ___________

A) தாம்சன் மீளா விளைவு

B) எதிர்குறி தாம்சன் விளைவு

C) நேர்குறி தாம்சன் விளைவு

D) தாம்சன் மீள் விளைவு

விளக்கம்: மின்னோட்ட பாய்வின் காரணமாக மின்னோட்டத்தின் திசையில் வெப்பப் பரிமாற்றம் நடைபெறும். இது நேர்க்குறி தாம்ஸன் விளைவு எனப்படும்.

70. மின்னோட்ட பாய்வினால் மின்னோட்டத்தின் திசைக்கு எதிர் திசையில் வெப்ப பரிமாற்றம் நிகழ்வது ___________

A) தாம்சன் மீளா விளைவு

B) எதிர்குறி தாம்சன் விளைவு

C) நேர்குறி தாம்சன் விளைவு

D) தாம்சன் மீள் விளைவு

விளக்கம்: மின்னோட்ட பாய்வினால் மின்னோட்டத்தின் திசைக்கு எதிர் திசையில் வெப்ப பரிமாற்றம் நடைபெறும். இது எதிர்க்குறி தாம்ஸன் விளைவு எனப்படும்.

71. கூற்று(A): வெப்ப மின்னிரட்டையுடன் கூடிய மின் சுற்றில் மின்னோட்டத்தை செலுத்தும்போது, ஒரு சந்தியில் வெப்பம் வெளிப்படுதலும் மற்றொரு சந்தியில் வெப்பம் உட்கவர்தலும் நடைபெறும்.

காரணம்(R): இவ்விளைவு தாம்சன் விளைவு எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வெப்ப மின்னிரட்டையுடன் கூடிய மின் சுற்றில் மின்னோட்டத்தை செலுத்தும்போது, ஒரு சந்தியில் வெப்பம் வெளிப்படுதலும் மற்றொரு சந்தியில் வெப்பம் உட்கவர்தலும் நடைபெறும். இவ்விளைவு பெல்டியர் விளைவு எனப்படும்.

72. கூற்று(A): ஒரு கடத்தியின் இருபுள்ளிகள் வெவ்வேறு வெப்பநிலைகளில் உள்ளபோது, இந்த புள்ளிகளில் எலக்ட்ரான் அடர்த்தி வேறுபடுவதால் இவ்விரு புள்ளிகளுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு உருவாக்கப்படும்.

காரணம்(R): இவ்விளைவு பெல்டியர் விளைவு எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு கடத்தியின் இருபுள்ளிகள் வெவ்வேறு வெப்பநிலைகளில் உள்ளபோது, இந்த புள்ளிகளில் எலக்ட்ரான் அடர்த்தி வேறுபடுவதால் இவ்விரு புள்ளிகளுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு உருவாக்கப்படும். இவ்விளைவு தாம்சன் விளைவு எனப்படும்.

73. சீபெக் விளைவு ஒரு___________ ஆகும்.

A) மீளா விளைவு

B) மீள் விளைவு

C) நேர் விளைவு

D) எதிர் விளைவு

விளக்கம்: சீபெக் விளைவு ஒரு மீள் விளைவு ஆகும்.

74. வெப்ப மின்னிரட்டை அடுக்குகளில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கிடையே உள்ள வெப்ப நிலை வேறுபாட்டை அளவிட___________ பயன்படுகிறது.

A) பெல்டியர் விளைவு

B) தாம்சன் விளைவு

C) வெப்பமின் விளைவு

D) சீபெக் விளைவு

விளக்கம்: வெப்ப மின்னிரட்டை மற்றும் வெப்ப மின்னிரட்டை அடுக்குகளில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கிடையே உள்ள வெப்ப நிலை வேறுபாட்டை அளவிட சீபெக் விளைவு பயன்படுகிறது.

75. தானியங்கி வெப்ப மின்னியற்றிகளில்___________ பயன்படுத்தப்படுகிறது.

A) பெல்டியர் விளைவு

B) தாம்சன் விளைவு

C) வெப்பமின் விளைவு

D) சீபெக் விளைவு

விளக்கம்: தானியங்கி வாகனங்களில் எரிபொருள் பயனுறு திறனை அதிகரிக்க பயன்படும் தானியங்கி வெப்ப மின்னியற்றிகளில் பயன்படுத்தப்படுகிறது.

76. வெப்ப மின்னியற்றிகளில்___________ பயன்படுகிறது.

A) பெல்டியர் விளைவு

B) தாம்சன் விளைவு

C) வெப்பமின் விளைவு

D) சீபெக் விளைவு

விளக்கம்: சீபெக் விளைவானது வெப்ப மின்னியற்றிகளில் பயன்படுகிறது (சீபெக் மின்னியற்றி).

77. சீபெக் மின்னியற்றி மின் உற்பத்தி நிலையங்களில் வீணாகும் வெப்ப ஆற்றலை___________ஆற்றலாக மாறுகின்றன.

A) நிலை ஆற்றல்

B) மின் ஆற்றல்

C) இயக்க ஆற்றல்

D) மின்னியக்க ஆற்றல்

விளக்கம்: (சீபெக் மின்னியற்றி). இந்த வெப்ப மின்னியற்றிகள், மின் உற்பத்தி நிலையங்களில் வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாறுகின்றன.

78. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] வெப்ப மின்னிரட்டையில் தோன்றும் மின்னியக்கு விசையின் எண்மதிப்பு மின்னிரட்டையில் இடம்பெறும் உலோகங்களின் தன்மையை பொறுத்தது.

2] வெப்ப மின்னிரட்டையில் தோன்றும் மின்னியக்கு விசையின் எண்மதிப்பு சந்திகளின் வெப்பநிலை வேறுபாடு ஆகியவற்றை பொறுத்தது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: வெப்ப மின்னிரட்டையில் தோன்றும் மின்னியக்கு விசையின் எண்மதிப்பு (i) மின்னிரட்டையில் இடம்பெறும் உலோகங்களின் தன்மை மற்றும் (ii) சந்திகளின் வெப்பநிலை வேறுபாடு ஆகியவற்றை பொறுத்தது.

79. கூற்று(A): வெப்ப மற்றும் குளிர் சந்திகளை இடமாற்றம் செய்தால் மின்னோட்டத்தின் திசையும் மாறும்.

காரணம்(R): சீபெக் விளைவு ஒரு மீளா விளைவு ஆகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வெப்ப மற்றும் குளிர் சந்திகளை இடமாற்றம் செய்தால் மின்னோட்டத்தின் திசையும் மாறும். எனவே இந்த விளைவு ஒரு மீள் விளைவு ஆகும்.

80. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] ஒரு மூடிய சுற்றில் இரு வெவ்வேறு உலோகங்களின் இரு சந்திப்புகளை வெவ்வேறு வெப்பநிலைகளில் வைக்கும்போது மின்னழுத்த வேறுபாடு தோன்றுகிறது.

2] இம் மின்னியக்கு விசையினால் ஏற்படும் மின்னோட்டத்தை மின்னழுத்த மின்னோட்டம் என்றழைக்கலாம்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஒரு மூடிய சுற்றில் இரு வெவ்வேறு உலோகங்களின் இரு சந்திப்புகளை வெவ்வேறு வெப்பநிலைகளில் வைக்கும்போது மின்னழுத்த வேறுபாடு (மின்னியக்கு விசை) தோன்றுவதை சீபெக்கண்டறிந்தார். இம் மின்னியக்கு விசையினால் ஏற்படும் மின்னோட்டத்தை வெப்பமின்னோட்டம் என்றழைக்கலாம்.

81. இரு உலோகங்கள் இணைத்து சந்திப்புகளை ஏற்படுத்துவது___________

A) மின்னிரட்டை

B) வெப்பமியற்றி

C) வெப்ப மின்னிரட்டை

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: இரு உலோகங்கள் இணைத்து சந்திப்புகளை ஏற்படுத்துவது வெப்ப மின்னிரட்டை (Thermocouple) எனப்படும்.

82. வெப்பநிலை வேறுபாட்டை மின்னழுத்த வேறுபாடாக மாற்றும் நிகழ்வு___________

A) வெப்ப விளைவு

B) வெப்பமின் விளைவு

C) மின்னிரட்டை விளைவு

D) வெப்ப மின்னிரட்டை விளைவு

விளக்கம்: வெப்பமின் விளைவு என்பது வெப்பநிலை வேறுபாட்டை மின்னழுத்த வேறுபாடாக மாற்றும் நிகழ்வு ஆகும்.

83. மின் விளக்குகளில்___________% மட்டுமே மின் ஆற்றல் ஒளியாக மாற்றப்படுகிறது.

A) 6%

B) 7%

C) 5%

D) 4%

விளக்கம்: மின் விளக்குகளில் (Incandesent lamp) 5% மட்டுமே மின் ஆற்றல் ஒளியாக மாற்றப்படுகிறது.

84. மின்னிறக்க விளக்குகள் மின்னோட்டத்தின்___________ விளைவை பயன்டுத்துகின்றன.

A) மின்

B) இயக்க

C) வெப்ப

D) ஆற்றல்

விளக்கம்: மின்னிறக்க விளக்குகள் (Discharge lamp), மின் பற்றவைத்தல்(வெல்டிங்), மின் வில் போன்றவை மின்னோட்டத்தின் வெப்ப விளைவை பயன்டுத்துகின்றன.

85. டங்க்ஸ்டன் இழைகள் உருகுநிலை___________

A) 3360°C

B) 3370°C

C) 3380°C

D) 3390°C

விளக்கம்: டங்க்ஸ்டன் இழைகள் உருகுநிலை 3380°C ஆகும்.

86. ___________ வெப்பநிலை வரை உருவாக்க மாலிப்டினம் –நிக்கல் கம்பி சுற்றப்பட்ட சிலிக்கா குழாய் பயன்படுகின்றது.

A) 1800°C

B) 1700°C

C) 1600°C

D) 1500°C

விளக்கம்: 1500°C வெப்பநிலை வரை உருவாக்க மாலிப்டினம் –நிக்கல் கம்பி சுற்றப்பட்ட சிலிக்கா குழாய் பயன்படுகின்றது.

87. கார்பன் வில் உலைகள்___________ வெப்பநிலை வரை உருவாக்க பயன்படுகின்றன.

A) 1800°C

B) 2000°C

C) 2600°C

D) 3000°C

விளக்கம்: கார்பன் வில் உலைகள் (Carbon arc furnaces) சுமார் 3000°C வெப்பநிலை வரை உருவாக்க பயன்படுகின்றன.

88. மின் உருகிக் கம்பிகள் என்பது மிகக் குறைந்த நீளமுள்ள குறைவான ___________ கொண்ட பொருளாலானவை.

A) கொதிநிலை

B) வெப்பநிலை

C) உருகுநிலை

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மின் உருகிக் கம்பிகள் என்பது மிகக் குறைந்த நீளமுள்ள குறைவான உருகுநிலை கொண்ட பொருளாலானவை.

89. 15Aக்கு குறைவாக மின்னோட்டம் செல்லும் மின்சுற்றுகளில் காரீயம் (Lead) மற்றும்___________ னால் (Tin) ஆன உலோகக்கலவை மின் உருகு இழையாக பயன்படுத்தப்படுகிறது.

A) வெள்ளி

B) குரோமியம்

C) வெள்ளீயம்

D) காட்மியம்

விளக்கம்: 15Aக்கு குறைவாக மின்னோட்டம் செல்லும் மின்சுற்றுகளில் காரீயம் (Lead) மற்றும் வெள்ளீயத்தினால் (Tin) ஆன உலோகக்கலவை மின் உருகு இழையாக பயன்படுத்தப்படுகிறது.

90. 15Aக்கு அதிகமான மின்னோட்டம் செல்லும் மின்சுற்றுகளில்___________ மின் உருகு இழையாக பயன்படுத்தப்படுகிறது.

A) வெள்ளி

B) குரோமியம்

C) தாமிரக்கம்பிகள்

D) காட்மியம்

விளக்கம்: 15Aக்கு அதிகமான மின்னோட்டம் செல்லும் மின்சுற்றுகளில் தாமிரக்கம்பிகள் மின் உருகு இழையாக பயன்படுத்தப்படுகிறது.

91. தற்போது நமது வீடுகளில் மின் உருகிகளுக்கு பதிலாக___________ பயன்படுகின்றன.

A) மின் துண்டிப்பான்கள்

B) மின் உருகி துண்டிப்பான்கள்

C) மின்சுற்று துண்டிப்பான்கள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: தற்போது நமது வீடுகளில் மின் உருகிகளுக்கு பதிலாக மின்சுற்று துண்டிப்பான்கள் (Trippers) பயன்படுகின்றன.

92. நிக்ரோமின் மின்தடைஎண்___________

A) அதிகம்

B) மிக அதிகம்

C) குறைவு

D) மிக குறைவு

விளக்கம்: நிக்ரோமின் மின்தடைஎண் மிக அதிகம்.

93. மின் சூடேற்றிகளில் சூடேற்றும் கம்பியானது___________ஆல் ஆனது.

A) நிக்ரோம்

B) குரோமியம்

C) தாமிரக்கம்பிகள்

D) காட்மியம்

விளக்கம்: மின் சூடேற்றிகளில் சூடேற்றும் கம்பியானது நிக்கல் மற்றும் குரோமியத்தின் உலோகக் கலவையான நிக்ரோமினால் ஆனது.

94. நிக்ரோமை___________ அடையாமலே மிக அதிக வெப்பநிலைக்கு வெப்பப்படுத்த முடியும்.

A) ஆக்ஸினேற்ற ஒடுக்கம்

B) ஆக்ஸினேற்றம்

C) ஆக்ஸிகரணம்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: நிக்ரோமை ஆக்ஸினேற்றம் அடையாமலே மிக அதிக வெப்பநிலைக்கு வெப்பப்படுத்த முடியும்.

95. ஜுலின் விதிப்படி, ஒரு மின்சுற்றில் மின்னோட்டம் பாய்வதால் உருவாக்கப்படும் வெப்பமானது மின்னோட்டத்தின் இருமடிக்கு___________ அமையும்.

A) மாறிலியாக

B) மாறியாக

C) நேர்தகவில்

D) எதிர்த்தகவில்

விளக்கம்: ஜுலின் விதிப்படி, ஒரு மின்சுற்றில் மின்னோட்டம் பாய்வதால் உருவாக்கப்படும் வெப்பமானது மின்னோட்டத்தின் இருமடிக்கு நேர்த்தகவி ல் அ மையும்.

96. ஜுலின் விதிப்படி, ஒரு மின்சுற்றில் மின்னோட்டம் பாய்வதால் உருவாக்கப்படும் வெப்பமானது மின்சுற்றின் மின்தடைக்கு___________ அமையும்.

A) மாறிலியாக

B) மாறியாக

C) நேர்தகவில்

D) எதிர்த்தகவில்

விளக்கம்: ஜுலின் விதிப்படி, ஒரு மின்சுற்றில் மின்னோட்டம் பாய்வதால் உருவாக்கப்படும் மின்சுற்றின் மின்தடைக்கு நேர்த்தகவிலும் அமையும்.

97. ஜுலின் விதிப்படி, ஒரு மின்சுற்றில் மின்னோட்டம் பாய்வதால் உருவாக்கப்படும் வெப்பமானது மின்னோட்டம் பாயும் நேரத்திற்கு___________ அமையும்.

A) மாறிலியாக

B) மாறியாக

C) நேர்தகவில்

D) எதிர்த்தகவில்

விளக்கம்: ஜுலின் விதிப்படி, ஒரு மின்சுற்றில் மின்னோட்டம் பாய்வதால் உருவாக்கப்படும் வெப்பமானது மின்னோட்டம் பாயும் நேரத்திற்கு நேர்த்தகவிலும் அமையும்.

98. கூற்று(A): ஒரு மின்தடையாக்கியின் வழியாக மின்னோட்டம் பாயும் போது, மின்தடையாக்கிக்கு அளிக்கப்படும் மின்னாற்றலில் சிறிதளவு வெப்ப ஆற்றலாக மாற்றப்பட்டு வீணாகிறது.

காரணம்(R): மின்னோட்டத்தின் இந்த வெப்பவிளைவே ஜுல் வெப்ப விளைவு எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு மின்தடையாக்கியின் வழியாக மின்னோட்டம் பாயும் போது, மின்தடையாக்கிக்கு அளிக்கப்படும் மின்னாற்றலில் சிறிதளவு வெப்ப ஆற்றலாக மாற்றப்பட்டு வீணாகிறது. மின்னோட்டத்தின் இந்த வெப்பவிளைவே ஜுல் வெப்ப விளைவு எனப்படும்.

99. மீட்டர் சமனச் சுற்று என்பது___________ சமனச்சுற்றின் இன்னொரு வடிவம் ஆகும்.

A) கிர்க்காஃப் சமனச் சுற்று

B) DPDT சமனச் சுற்று

C) வீட்ஸ்டோன் சமனச்சுற்று

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மீட்டர் சமனச் சுற்று என்பது வீட்ஸ்டோன் சமனச்சுற்றின் இன்னொரு வடிவம் ஆகும்.

100. ___________ மின்னழுத்த வேறுபாடு, மின்னோட்டம் மற்றும் மின்தடைகளை துல்லியமாக அளவிட பயன்படுகிறது.

A) மின்தடை

B) வோல்ட் மீட்டர்

C) மின்னழுத்தமானி

D) மின்னியற்றி

விளக்கம்: மின்னழுத்தமானியானது மின்னழுத்த வேறுபாடு, மின்னோட்டம் மற்றும் மின்தடைகளை துல்லியமாக அளவிட பயன்படுகிறது.

101. ___________ என்பது மின்னோட்டத்தை கண்டறியவும் அளவிடவும் உதவும் ஒரு சாதனம் ஆகும்.

A) அம்மீட்டர்

B) வோல்ட் மீட்டர்

C) மின்னழுத்தமானி

D) கால்வனா மீட்டர்

விளக்கம்: கால்வனா மீட்டர் என்பது மின்னோட்டத்தை கண்டறியவும் அளவிடவும் உதவும் ஒரு சாதனம் ஆகும்.

102. ஒரு மின்சுற்றின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மின்னழுத்த வேறுபாட்டை ஒப்பிட___________ பயன்படுத்தப்படுகிறது.

A) அம்மீட்டர்

B) வோல்ட் மீட்டர்

C) மின்னழுத்தமானி

D) கால்வனா மீட்டர்

விளக்கம்: ஒரு மின்சுற்றின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மின்னழுத்த வேறுபாட்டை ஒப்பிடவும் கால்வனா மீட்டர் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.

103. கிர்க்காஃப் விதிகளின் முக்கிய பயன்பாடாக___________ அமைகிறது.

A) கிர்க்காஃப் சமனச் சுற்று

B) DPDT சமனச் சுற்று

C) வீட்ஸ்டோன் சமனச்சுற்று

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: கிர்க்காஃப் விதிகளின் முக்கிய பயன்பாடாக வீட்ஸ்டோன் சமனச் சுற்று அமைகிறது.

104. மின்சுற்று வலை அமைப்புகளில்___________ மூலம் தெரியாத மின்தடையாக்கியின் மதிப்பை கண்டறிய முடியும்.

A) கிர்க்காஃப் சமனச் சுற்று

B) DPDT சமனச் சுற்று

C) வீட்ஸ்டோன் சமனச்சுற்று

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மின்சுற்று வலை (electrical networks) அமைப்புகளில் வீட்ஸ்டோன் சமனச்சுற்றின் மூலம் தெரியாத மின்தடையாக்கியின் மதிப்பை கண்டறிய முடியும்.

105. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்சுற்று வலை அமைப்புகளில் வீட்ஸ்டோன் சமனச்சுற்றின் மூலம் மின்தடையாக்கிகளை ஒப்பிடவும் முடியும்.

2] கால்வனா மீட்டர் மிகச்சிறிய அளவு மின்னோட்டங்களை அளவிட இதனை பயன்படுத்த முடியும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்சுற்று வலை அமைப்புகளில் வீட்ஸ்டோன் சமனச்சுற்றின் மூலம் மின்தடையாக்கிகளை ஒப்பிடவும் முடியும். கால்வனா மீட்டர் மிகச்சிறிய அளவு மின்னோட்டங்களை அளவிட இதனை பயன்படுத்த முடியும்.

106. கிர்க்காஃப் இரண்டாவது விதி___________ விதிப்படி அமைகிறது.

A) தனித்த அமைப்பின் ஆற்றல் விதி

B) தனித்த அமைப்பின் ஆற்றல் மாறா விதி

C) தனித்த அமைப்பின் ஆற்றல் மாறும் விதி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: கிர்க்காஃப் இரண்டாவது விதி தனித்த அமைப்பின் ஆற்றல் மாறா விதிப்படி அமைகிறது.

107. மின்னழுத்த வேறுபாட்டு விதி என அழைக்கப்படுவது___________

A) கிர்க்காஃப் சமனச் விதி

B) DPDT சமனச் விதி

C) வீட்ஸ்டோன் சமன விதி

D) கிர்க்காஃப் இரண்டாவது விதி

விளக்கம்: கிர்க்காஃப் இரண்டாவது விதி மின்னழுத்த வேறுபாட்டு விதி மற்றும் சுற்று விதி என அழைக்கப்படுகிறது.

108. எந்த ஒரு சந்தியிலும் சந்திக்கின்ற மின்னோட்டங்களின் குறியியல் கூட்டுத்தொகை___________

A) நேர் மதிப்பாகும்

B) எதிர் மதிப்பாகும்

C) ஒன்றாகும்

D) சுழி

விளக்கம்: கிர்க்காஃப் முதல் விதியின் எந்த ஒரு சந்தியிலும் சந்திக்கின்ற மின்னோட்டங்களின் குறியியல் கூட்டுத்தொகை (Algebraic Sum) சுழியாகும்.

109. மின்னோட்டவிதி என அழைக்கப்படுவது___________

A) கிர்க்காஃப் சமனச் விதி

B) DPDT சமனச் விதி

C) வீட்ஸ்டோன் சமன விதி

D) கிர்க்காஃப் முதல் விதி

விளக்கம்: கிர்க்காஃப் முதல் விதி மின்னோட்டவிதி அல்லது சந்தி விதி என அழைக்கப்படுகிறது.

110. கிர்க்காஃப் முதல் விதி மின்துகள்களில் உள்ள___________ விதியின் அடிப்படையில் அமைகிறது.

A) தனித்த அமைப்பின் ஆற்றல் விதி

B) தனித்த அமைப்பின் ஆற்றல் மாறா விதி

C) மின்னூட்டங்களின் அழிவின்மை விதி

D) மின்னூட்டங்களின் விதி

விளக்கம்: கிர்க்காஃப் முதல் விதி மின்துகள்களில் உள்ள மின்னூட்டங்களின் அழிவின்மை விதியின் அடிப்படையில் அமைகிறது.

111. எளிய மின்சுற்றுகளுக்கு மட்டுமே பயன்படும் விதி___________

A) கிர்க்காஃப் மின்னோட்ட விதி

B) கிர்க்காஃப் மின்னழுத்த வேறுபாட்டு விதி

C) ஓம் விதி

D) கிர்க்காஃப் சமனச் விதி

விளக்கம்: ஓம் விதி எளிய மின்சுற்றுகளுக்கு மட்டுமே பயன்படும்.

112. சிக்கலான மின் சுற்றுகளில் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டை கணக்கிட___________ பயன்படுத்தப்படுகின்றன.

A) கிர்க்காஃப் மின்னோட்ட விதி

B) கிர்க்காஃப் மின்னழுத்த வேறுபாட்டு விதி

C) ஓம் விதி

D) A மற்றும் B

விளக்கம்: சிக்கலான மின் சுற்றுகளில் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டை கணக்கிட கிர்க்காஃப் விதிகள் பயன்படுத்தப்படுகின்றன.

113. கூற்று(A): காரில் முகப்பு விளக்கு எரியும் நிலையில் என்ஜினை இயக்கும்போது, முகப்பு விளக்கின் பொலிவு சிறிது குறையும்.

காரணம்(R): இதற்கு காரணம் காரில் உள்ள மின்கலத்தின் அகமின்தடை ஆகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: காரில் முகப்பு விளக்கு எரியும் நிலையில் என்ஜினை இயக்கும்போது, முகப்பு விளக்கின் பொலிவு சிறிது குறையும். இதற்கு காரணம் காரில் உள்ள மின்கலத்தின் அகமின்தடை ஆகும்.

114. ஒரு மின்கலம் அல்லது மின்கலத்தொகுப்பு என்பது___________ மூலமாகும்.

A) மின் விசை

B) மின்னியக்கு விசை

C) மின்மூலம்

D) மின்தடை

விளக்கம்: ஒரு மின்கலம் அல்லது மின்கலத்தொகுப்பு என்பது மின்னியக்கு விசை (emf) மூலமாகும்.

115. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்னியக்கு விசை என்பது உண்மையில் விசை

2] ஒரு மின்கலம் அல்லது மின்கலத் தொகுப்பில் உள்ள மின்னியக்கு விசை என்பது புறச் சுற்றில் மின்னோட்டம் பாயாத போது அதன் மின்முனைகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டை குறிக்கிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்னியக்கு விசை என்பது உண்மையில் விசையல்ல. ஒரு மின்கலம் அல்லது மின்கலத் தொகுப்பில் உள்ள மின்னியக்கு விசை என்பது புறச் சுற்றில் மின்னோட்டம் பாயாத போது அதன் மின்முனைகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டை குறிக்கிறது.

116. மின்னியக்கு விசையின் அலகு ___________

A) ஜூல்

B) ஓம்

C) ஓம் மீட்டர்

D) வோல்ட்

விளக்கம்: மின்னியக்கு விசை மின்னழுத்த வேறுபாட்டின் அலகான வோல்ட்டிலேயே குறிக்கப்படுகிறது.

117. மின்னியக்கு விசையின் குறியீடு___________

A) µ

B) €

C) Ω

D) ε

விளக்கம்: மின்னியக்கு விசையின் குறியீடு ε ஆகும்.

118. ___________ என்பது வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி மின்னோட்டத்தை ஏற்படுத்தும் சாதனம் ஆகும்.

A) மின் தொகுப்பு

B) மின்கலம்

C) மின்னியக்கு கலம்

D) மின்தடை மூலம்

விளக்கம்: மின்கலம் என்பது வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி மின்னோட்டத்தை ஏற்படுத்தும் சாதனம் ஆகும்.

119. ___________ மின்பல்பு அதிக பொலிவுடன் காணப்படும்.

A) 40 W

B) 35 W

C) 30 W

D) 45 W

விளக்கம்: 30W மின்பல்பு அதிக பொலிவுடன் காணப்படும்.

120. கூற்று(A): 30W மின்பல்பு அதிக பொலிவுடன் காணப்படும்.

காரணம்(R): மின்பல்பின் குறிப்பிட்டுள்ள அதிகத் திறன் அளவு மட்டும் அதிக பொலிவுத்தன்மைக்கு காரணம்

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: மின்பல்பின் குறிப்பிட்டுள்ள அதிகத் திறன் அளவு மட்டும் அதிக பொலிவுத்தன்மைக்கு காரணமாகாது. ஒரு மின்பல்பின் பொலிவுத்தன்மை, மின்பல்புகள் தொடரிணைப்பில் உள்ளனவா அல்லது பக்க இணைப்பில் உள்ளனவா என்பதை பொறுத்தது.

121. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] பொருளின் மின்தடை எண் என்பது மின்னோட்டத்திற்கு அது தரும் மின்தடையின் மதிப்பை நிர்ணயிக்கிறது.

2] மின்திறன் என்பது மின்னாற்றல் அளிக்கப்படும் வீதம் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பொருளின் மின்தடை எண் என்பது மின்னோட்டத்திற்கு அது தரும் மின்தடையின் மதிப்பை நிர்ணயிக்கிறது. மின்திறன் என்பது மின்னாற்றல் அளிக்கப்படும் வீதம் ஆகும்.

122. 1 கிலோவாட்மணிக்குச் சமமான ஆற்றல்___________

A) 3.6 × 10-6 J

B) 36 × 106 J

C) 3.6 × 106 J

D) 3.60 × 106 J

விளக்கம்: 1 கிலோவாட்மணிக்குச் சமமான ஆற்றல் 1kWh = 3.6 × 106 J

123. ஜுலின் வெப்ப விதி___________

A) H = VIt

B) H = VIT

C) H = vIt

D) H = V2It

விளக்கம்: ஜுலின் வெப்ப விதி H = VIt (அல்லது) H = I2Rt.

124. மின்தடையாக்கிகளின்நான்காவது வளையம் இடம் பெறவில்லையெனில் மாறுபடும் அளவு___________

A) 30 %

B) 40%

C) 20 %

D) 35 %

விளக்கம்: மின்தடையாக்கிகளின்நான்காவது வளையம் இடம் பெறவில்லையெனில் மாறுபடும் அளவு 20% ஆகும்.

125. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்தடைகளில் உலோக நிற வளையங்கள் இடது புறமாக இருக்கும்.

2] மின்தடையாக்கிகளின் முதல் இரண்டு வளையங்கள் மின்தடை மாறுபடும் அளவை (Tolerance) குறிக்கும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்தடைகளில் உலோக நிற வளையங்கள் இடது புறமாக இருக்காது. மின்தடையாக்கிகளின் முதல் இரண்டு வளையங்கள் மின்தடையின் முக்கிய எண்ணுருக்களாக அமையும்.

126. மின்தடையாக்கிகளின்___________ வளையங்கள் மின்தடை மாறுபடும் அளவை (Tolerance) குறிக்கும்.

A) முதலாவது

B) இரண்டாவது

C) மூன்றாவது

D) நான்காவது

விளக்கம்: மின்தடையாக்கிகளின் நான்காவது வளையம் மின்தடை மாறுபடும் அளவை (Tolerance) குறிக்கும்.

127. மின்தடைகளில் தங்கம் நிற வளையங்களின் மாறுபடும் அளவு___________

A) 3 %

B) 4%

C) 2 %

D) 5 %

விளக்கம்: மின்தடைகளில் தங்கம் நிற வளையங்களின் மாறுபடும் அளவு 5 % ஆகும்.

128. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்தடைகளில் வெள்ளி நிற வளையங்களின் மாறுபடும் அளவு 20 % ஆகும்.

2] மின்தடைகளில் நிறமற்ற வளையங்களின் மாறுபடும் அளவு 30 % ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்தடைகளில் வெள்ளி நிற வளையங்களின் மாறுபடும் அளவு 10 % ஆகும். மின்தடைகளில் நிறமற்ற வளையங்களின் மாறுபடும் அளவு 20 % ஆகும்.

129. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்தடைகளில் தங்கம் நிற வளையங்களின் பெருக்க அளவு 10-2 ஆகும்.

2] மின்தடைகளில் வெள்ளி நிற வளையங்களின் பெருக்க அளவு 10-1 ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்தடைகளில் தங்கம் நிற வளையங்களின் பெருக்க அளவு 10-1 ஆகும். மின்தடைகளில் வெள்ளி நிற வளையங்களின் பெருக்க அளவு 10-2 ஆகும்.

130. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்தடைகளில் சாம்பல் நிற வளையங்களின் பெருக்க அளவு 109 ஆகும்.

2] மின்தடைகளில் வெள்ளை நிற வளையங்களின் பெருக்க அளவு 108 ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்தடைகளில் சாம்பல் நிற வளையங்களின் பெருக்க அளவு 108 ஆகும். மின்தடைகளில் வெள்ளை நிற வளையங்களின் பெருக்க அளவு 109ஆகும்.

131. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்தடைகளில் நீலம் நிற வளையங்களின் பெருக்க அளவு 107 ஆகும்.

2] மின்தடைகளில் ஊதா நிற வளையங்களின் பெருக்க அளவு 106 ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்தடைகளில் நீலம் நிற வளையங்களின் பெருக்க அளவு 106 ஆகும். மின்தடைகளில் ஊதா நிற வளையங்களின் பெருக்க அளவு 107 ஆகும்.

132. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்தடைகளில் மஞ்சள் நிற வளையங்களின் பெருக்க அளவு 105 ஆகும்.

2] மின்தடைகளில் பச்சை நிற வளையங்களின் பெருக்க அளவு 104 ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்தடைகளில் மஞ்சள் நிற வளையங்களின் பெருக்க அளவு 104 ஆகும். மின்தடைகளில் பச்சை நிற வளையங்களின் பெருக்க அளவு 105 ஆகும்.

133. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்தடைகளில் சிவப்பு நிற வளையங்களின் பெருக்க அளவு 103 ஆகும்.

2] மின்தடைகளில் ஆரஞ்சு நிற வளையங்களின் பெருக்க அளவு 102 ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்தடைகளில் சிவப்பு நிற வளையங்களின் பெருக்க அளவு 102ஆகும். மின்தடைகளில் ஆரஞ்சு நிற வளையங்களின் பெருக்க அளவு 103 ஆகும்.

134. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்தடைகளில் கருப்பு நிற வளையங்களின் பெருக்க அளவு 101 ஆகும்.

2] மின்தடைகளில் பழுப்பு நிற வளையங்களின் பெருக்க அளவு 1 ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்தடைகளில் கருப்பு நிற வளையங்களின் பெருக்க அளவு 1 ஆகும். மின்தடைகளில் பழுப்பு நிற வளையங்களின் பெருக்க அளவு 101 ஆகும்.

135. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] குறைகடத்தியின் அணுக்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரான்கள் விடுபடும்.

2] இதனால் மின்னோட்டமும் குறையும்

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: குறைகடத்தியின் அணுக்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரான்கள் விடுபடும். இதனால் மின்னோட்டமும் அதிகரிக்கும்.

136. குறைகடத்திகளில், வெப்பநிலை அதிகரித்தால் மின்தடை எண்___________

A) அதிகரிக்கும்

B) குறையும்

C) சுழி

D) நடுநிலையாகும்

விளக்கம்: குறைகடத்திகளில், வெப்பநிலை அதிகரித்தால் மின்தடை எண் குறையும்.

12th Science Lesson 8 Questions in Tamil

8] காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள்

1. “காந்தவிசை உயிர்போன்றது அல்லது ஆன்மாவை ஒத்தது ; உயிரோட்டமுள்ள உடலில் ஒருமுகப்படுத்தப்பட்டு வெளிப்படும்போது பல வகைகளில் அது மனித ஆன்மாவையே விஞ்சி விடுகிறது! ” என கூறியவர்____________

A) வில்லியம் கில்பர்ட்

B) ஸ்டீபன் ஹாங்கிங்

C) நீல்ஸ் போர்

D) ஜார்ஜ் கார்லின்

விளக்கம்: “காந்தவிசை உயிர்போன்றது அல்லது ஆன்மாவை ஒத்தது ; உயிரோட்டமுள்ள உடலில் ஒருமுகப்படுத்தப்பட்டு வெளிப்படும்போது பல வகைகளில் அது மனித ஆன்மாவையே விஞ்சி விடுகிறது! ” – வில்லியம் கில்பர்ட்

2. வரலாற்றுப் பூர்வமாக மேக்னட்டிஸம் (Magnetism) என்ற வார்த்தை, ____________ என்ற இரும்புத்தாதுவின் பெயரிலிருந்து உருவானதாகும்.

A) ஹேமடைட்

B) மேக்னடைட்

C) சிட்ரைட்

D) டோலுமைட்

விளக்கம்: வரலாற்றுப் பூர்வமாக மேக்னட்டிஸம் (Magnetism) என்ற வார்த்தை, மேக்னடைட் (Magnetite) (Fe3 O4) என்ற இரும்புத்தாதுவின் பெயரிலிருந்து உருவானதாகும்.

3. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] 1821 இல், மின்னோட்டம் பாயும் கம்பிக்கு அருகே காந்த ஊசிப்பெட்டியை (திசைகாட்டும் கருவி) கொண்டுவரும்போது அது விலகலடையும் என்ற H.C மார்ஸ்டேட் கண்டுபிடித்தார்.

2] இந்த கண்டுபிடிப்பு மின்னியல் மற்றும் காந்தவியல் என்று பிரிந்திருந்த இவ்விரண்டு பிரிவுகளையும் மின்காந்தவியல் என்ற இயற்பியலின் ஒரே பிரிவாக ஒருங்கிணைத்தது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: 1820 இல், மின்னோட்டம் பாயும் கம்பிக்கு அருகே காந்த ஊசிப்பெட்டியை (திசைகாட்டும் கருவி) கொண்டுவரும்போது அது விலகலடையும் என்ற H.C ஆர்ஸ்டேட்டின் கண்டுபிடிப்பு மின்னியல் மற்றும் காந்தவியல் என்று பிரிந்திருந்த இவ்விரண்டு பிரிவுகளையும் மின்காந்தவியல் என்ற இயற்பியலின் ஒரே பிரிவாக ஒருங்கிணைத்தது.

4. நவீன உலகில் காந்தத்தின் பயன்கள் அல்லாதது எது?

A) ஒலிபெருக்கிகள்

B) மின்விளக்குக்குள்

C) குறு ஒலிப்பான்கள்

D) MRI ஸ்கேன்

விளக்கம்: நவீன உலகில் காந்தத்தின் பயன்கள் – (அ) ஒலிபெருக்கிகள் (ஆ) குறு ஒலிப்பான்கள் (இ) MRI ஸ்கேன் (ஈ) மடிக்கணினியின் வன்தகடு

5. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] புவி காந்தப்புலத்தைப் பயன்படுத்தி திசை அறிவதற்காக,பெரும்பான்மையான பறவைகளும், விலங்குகளும் அவற்றின் கண்களில் காந்த நுண் உணர்வுகளைப் பெற்றுள்ளன.

2] பழங்காலத்தில் காந்தங்கள் திசைகாட்டும் கருவிகளை தயாரிக்கவும், காந்த சிகிச்சைக்காகவும் மற்றும் தந்திரக்காட்சிகளை செய்து காட்டவும் பயன்பட்டன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: புவி காந்தப்புலத்தைப் பயன்படுத்தி திசை அறிவதற்காக,பெரும்பான்மையான பறவைகளும், விலங்குகளும் அவற்றின் கண்களில் காந்த நுண் உணர்வுகளைப் பெற்றுள்ளன. பழங்காலத்தில் காந்தங்கள் திசைகாட்டும் கருவிகளை தயாரிக்கவும், காந்த சிகிச்சைக்காகவும் மற்றும் தந்திரக்காட்சிகளை செய்து காட்டவும் பயன்பட்டன.

6. கண்களில் காந்த நுண் உணர்வு கொண்ட பறவை____________

A) ஜீப்ராபின்ச்

B) பிஞ்செஸ்

C) பஸ்ஸேரின்

D) ஹெரோன்ஸ்

விளக்கம்: கண்களில் காந்த நுண் உணர்வு கொண்ட பறவை ஜீப்ராபின்ச் ஆகும்.

7. புவியின் காந்தப்புலம்பற்றி படிக்கும் இயற்பியலின் பிரிவிற்கு____________ என்று பெயர்.

A) நிலை காந்தவியல்

B) பாறை காந்தவியல்

C) காந்தவியல்

D) புவிகாந்தவியல்

விளக்கம்: புவியின் காந்தப்புலம்பற்றி படிக்கும் இயற்பியலின் பிரிவிற்கு புவிகாந்தவியல் (Geomagnetism) அல்லது நில காந்தவியல் (Terrestrial magnetism) என்று பெயர்.

8. சூரியனிடமிருந்து வரும் வெப்பக்கதிர்கள்தான் புவியின் காந்தப்புலத்திற்குக் காரணம் என்று____________ அறிஞர் முன்மொழிந்தார்.

A) வில்லியம் கில்பர்ட்

B) ஸ்டீபன் ஹாங்கிங்

C) கோவர்

D) ஜார்ஜ் கார்லின்

விளக்கம்: சூரியனிடமிருந்து வரும் வெப்பக்கதிர்கள்தான் புவியின் காந்தப்புலத்திற்குக் காரணம் என்று கோவர் (Gover) என்ற அறிஞர் முன்மொழிந்தார்.

9. புவி ஒரு மிகப்பெரிய ஆற்றல் வாய்ந்த சட்டகாந்தம் போன்று செயல்படுகிறது என்ற கொள்கையை முன்மொழிந்தவர்____________

A) வில்லியம் கில்பர்ட்

B) ஸ்டீபன் ஹாங்கிங்

C) கோவர்

D) ஜார்ஜ் கார்லின்

விளக்கம்: 1600 – ஆம் ஆண்டில் வாழ்ந்த வில்லியம் கில்பர்ட் என்ற அறிஞர், புவி ஒரு மிகப்பெரிய ஆற்றல் வாய்ந்த சட்டகாந்தம் போன்று செயல்படுகிறது என்ற கொள்கையை முன்மொழிந்தார்.

10. கூற்று(A): புவி அச்சைப் பொறுத்து, புவி தன்னைத்தானே சுற்றுவதால் இரவு-பகல் ஏற்படுகிறது.

காரணம்(R): இப்புவி அச்சு (Geographic axis) வழியாகச் செல்லும் செங்குத்துத் தளத்திற்கு புவி வெப்பத்தளம் என்று பெயர்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: புவி அச்சைப் பொறுத்து, புவி தன்னைத்தானே சுற்றுவதால் இரவு-பகல் ஏற்படுகிறது. இப்புவி அச்சு (Geographic axis) வழியாகச் செல்லும் செங்குத்துத் தளத்திற்கு புவி துருவத்தளம் என்று பெயர்.

11. இப்புவி அச்சுக்கு செங்குத்தாகக் கருதப்படும் ஓர் மிகப்பெரிய வட்டக்கோட்டிற்கு____________ என்று பெயர்

A) நிலநடுக்கோடு

B) புவி வெப்ப மண்டலம்

C) புவி துருவ மண்டலம்

D) பூமத்தியரேகை

விளக்கம்: இப்புவி அச்சுக்கு செங்குத்தாகக் கருதப்படும் ஓர் மிகப்பெரிய வட்டக்கோட்டிற்கு புவி நடுவரை அல்லது பூமத்தியரேகை என்று பெயர்.

12. புவிகாந்தமுனைகளை இணைக்கும் நேர்க்கோட்டிற்கு, ____________ என்று பெயர்.

A) காந்த துருவத்தளம்

B) காந்த மத்தியரேகை

C) காந்த அச்சு

D) பூமத்தியரேகை

விளக்கம்: புவிகாந்தமுனைகளை இணைக்கும் நேர்க்கோட்டிற்கு, காந்த அச்சு என்று பெயர்.

13. புவியின் காந்த அச்சுக்கு செங்குத்தாகக் கருதப்படும் ஓர் மிகப்பெரிய வட்டக்கோட்டிற்கு____________ என்று பெயர்.

A) காந்த துருவத்தளம்

B) காந்த மத்தியரேகை

C) காந்த அச்சு

D) பூமத்தியரேகை

விளக்கம்: புவியின் காந்த அச்சுக்கு செங்குத்தாகக் கருதப்படும் ஓர் மிகப்பெரிய வட்டக்கோட்டிற்கு காந்த நடுவரை அல்லது காந்த மத்தியரேகை என்று பெயர்.

14. புள்ளி ஒன்றில் காந்த துருவத் தளத்திற்கும், புவி துருவத்தளத்திற்கும் இடையே உள்ள கோணம்____________

A) காந்த துருவத்தளம்

B) காந்த மத்தியரேகை

C) காந்த அச்சு

D) காந்த ஒதுக்கம்

விளக்கம்: புள்ளி ஒன்றில் காந்த துருவத் தளத்திற்கும், புவி துருவத்தளத்திற்கும் இடையே உள்ள கோணம் காந்த ஒதுக்கம் (D) என அழைக்கப்படுகிறது.

15. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] உயர்ந்த குறுக்குகோடுகளுக்கு காந்த ஒதுக்கம் சிறுமமாகும்.

2] புவி நடுவரைக்கு அருகில் இதன் மதிப்பு பெருமமாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: உயர்ந்த குறுக்குகோடுகளுக்கு காந்த ஒதுக்கம் பெருமமாகும். ஆனால் புவி நடுவரைக்கு அருகில் இதன் மதிப்பு சிறுமமாகும்.

16. சென்னையில் காந்த ஒதுக்கம் மதிப்பு____________

A) 1° 16ʹ

B) –1° 17ʹ

C) 1° 15ʹ

D) –1° 16ʹ

விளக்கம்: சென்னையில் காந்த ஒதுக்கம் மதிப்பு –1° 16ʹ

17. புள்ளி ஒன்றில், புவியின் மொத்த காந்தப்புலம் , காந்தத் துருவத்தளத்தின் கிடைத்தளத்திசையுடன் ஏற்படுத்தும் கோணம், ____________ என அழைக்கப்படும்.

A) காந்த துருவத்தளம்

B) காந்தச் சரிவு

C) காந்த அச்சு

D) காந்த ஒதுக்கம்

விளக்கம்: புள்ளி ஒன்றில், புவியின் மொத்த காந்தப்புலம் , காந்தத் துருவத்தளத்தின் கிடைத்தளத்திசையுடன் ஏற்படுத்தும் கோணம், சரிவு அல்லது காந்தச் சரிவு (I) என அழைக்கப்படும்.

18. சென்னையின் சரிவுக்கோணம்____________

A) -14° 28ʹ

B) 15° 28ʹ

C) 14° 29ʹ

D) 14° 28ʹ

விளக்கம்: சென்னையின் சரிவுக்கோணம் 14° 28ʹ ஆகும்.

19. காந்த துருவத்தளத்தின் கிடைத்தளத்திசையில் உள்ள புவிக்காந்தப்புலத்தின் கூறு, புவிகாந்தப்புலத்தின்____________ என்று அழைக்கப்படும்.

A) செங்குத்துக்கூறு

B) கிடைத்தளக்கூறு

C) நேர் கூறு

D) எதிர் கூறு

விளக்கம்: காந்த துருவத்தளத்தின் கிடைத்தளத்திசையில் உள்ள புவிக்காந்தப்புலத்தின் கூறு, புவிகாந்தப்புலத்தின் கிடைத்தளக்கூறு BH என்று அழைக்கப்படும்.

20. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] நடுவரையில், கிடைத்தளக்கூறு சிறுமமாகும்.

2] நடுவரையில், செங்குத்துக்கூறு சுழியாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: நடுவரையில், கிடைத்தளக்கூறு பெருமமாகவும், செங்குத்துக்கூறு சுழியாகவும் உள்ளது.

21. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] காந்தத் துருவங்களில், செங்குத்துக்கூறு சுழியாகும்.

2] காந்தத் துருவங்களில், கிடைத்தளக்கூறு சிறுமமாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: காந்தத் துருவங்களில், செங்குத்துக்கூறு பெருமமாகவும் கிடைத்தளக்கூறு சுழியாகவும் உள்ளது.

22. கூற்று(A): புவியின் வளிமண்டலத்தில் உள்ள வாயுத்துகள்கள், சூரியக்காற்றினால்சூரியனின் வளிமண்டலத்திலிருந்து வெளியிடப்படும் அதிகமாக மின்னூட்டப்பட்ட துகள்களுடன் இடைவினை புரிகிறது.

காரணம்(R): இதனால் வடதுருவ ஒளித்தோற்றம் மற்றும் தென்துருவ ஒளித்தோற்றம் ஏற்படுகிறது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: புவியின் வளிமண்டலத்தில் உள்ள வாயுத்துகள்கள், சூரியக்காற்றினால் (Solar wind) சூரியனின் வளிமண்டலத்திலிருந்து வெளியிடப்படும் அதிகமாக மின்னூட்டப்பட்ட துகள்களுடன் இடைவினை புரிவதால் இந்த ஒளித்தோற்றம் ஏற்படுகிறது.

23. அயனிநிலையில் உள்ள____________ மூலக்கூறுகள் மோதலில் ஈடுபடும்போது பச்சை வண்ணத்துடன் கூடிய வெளிர் மஞ்சள் நிற ஒளி தோன்றும்.

A) நைட்ரஜன்

B) ஆக்ஸிஜன்

C) ஹைட்ரஜன்

D) அம்மோனியா

விளக்கம்: அயனிநிலையில் உள்ள ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் மோதலில் ஈடுபடும்போது பச்சை வண்ணத்துடன் கூடிய வெளிர் மஞ்சள் நிற ஒளி தோன்றும்.

24. அயனிநிலையில் உள்ள____________ மூலக்கூறுகள் மோதலில் ஈடுபடும்போது நீலம் அல்லது ஊதா-சிவப்பு வண்ண ஒளித்தோற்றம் தோன்றுகிறது.

A) நைட்ரஜன்

B) ஆக்ஸிஜன்

C) ஹைட்ரஜன்

D) அம்மோனியா

விளக்கம்: அயனிநிலையில் உள்ள நைட்ரஜன் மூலக்கூறுகள் மோதலில் ஈடுபடும்போது, நீலம் அல்லது ஊதா-சிவப்பு வண்ண ஒளித்தோற்றம் தோன்றுகிறது.

25. காந்தத்தின் முனைவலிமை மற்றும் காந்தநீளம் இவற்றின் பெருக்கற்பலன் ஆனது____________ என வரையறுக்கப்படுகிறது.

A) காந்த திருப்புத்திறன்

B) காந்த இருமுனைதிருப்புத்திறன்

C) காந்த நேர் திருப்புத்திறன்

D) காந்த எதிர் திருப்புத்திறன்

விளக்கம்: காந்தத்தின் முனைவலிமை மற்றும் காந்தநீளம் இவற்றின் பெருக்கற்பலன் ஆனது காந்த இருமுனைதிருப்புத்திறன் என வரையறுக்கப்படுகிறது.

26. காந்த இருமுனைதிருப்புத்திறன்____________ அளவாகும்.

A) வழி

B) அடிப்படை

C) ஸ்கேலார்

D) வெக்டர்

விளக்கம்: காந்த இருமுனைதிருப்புத்திறன் ஒரு வெக்டர் அளவாகும்.

27. காந்த இருமுனைதிருப்புத்திறன் SI அலகு____________

A) Am3

B) am2

C) AM2

D) Am2

விளக்கம்: காந்த இருமுனைதிருப்புத்திறன் SI அலகு Am2 .

28. ஒரு புள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஓரலகு முனைவலிமை கொண்ட சட்டகாந்தம் உணரும் விசையே, அப்புள்ளியில்____________ என்று வரையறை செய்யப்படுகிறது.

A) காந்தப்புலம்

B) காந்தச் சரிவு

C) காந்த அச்சு

D) காந்த ஒதுக்கம்

விளக்கம்: ஒரு புள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஓரலகு முனைவலிமை கொண்ட சட்டகாந்தம் உணரும் விசையே, அப்புள்ளியில் காந்தப்புலம் B என்று வரையறை செய்யப்படுகிறது.

29. காந்தப்புலம் அலகு____________

A) N A-1 M-1

B) N a-1 m-1

C) n A-1 m-1

D) N A-1 m-1

விளக்கம்: காந்தப்புலம் அலகு N A-1 m-1

30. கீழ்க்கண்டவற்றுள் இயற்கை காந்தங்கள் அல்லாதது எது?

A) இரும்பு

B) கோபால்ட்

C) நிக்கல்

D) சிலிக்கா

விளக்கம்: இரும்பு, கோபால்ட், நிக்கல் போன்றவை இயற்கை காந்தங்களாகும்.

31. காந்த நீளத்திற்கும் வடிவியல் நீளத்திற்கும் உள்ள தகவு____________

A) 6/5

B) 5/6

C) 4/5

D) 5/4

விளக்கம்: காந்த நீளத்திற்கும் வடிவியல் நீளத்திற்கும் உள்ள தகவு, 5/6 ஆகும்.

32. சட்டகாந்தம் ஒன்றின் மொத்த நீளம்____________ என்றும், அழைக்கப்படும்.

A) காந்த நீளம்

B) வடிவியல் நீளம்

C) சட்ட நீளம்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: சட்டகாந்தம் ஒன்றின் மொத்த நீளம் அதன் வடிவியல் நீளம் (Geometric length) என்றும், அழைக்கப்படும்.

33. சட்டகாந்தம் ஒன்றின் காந்த முனைகளுக்கு இடையே உள்ள நீளம்____________ என்றும், அழைக்கப்படும்.

A) காந்த நீளம்

B) வடிவியல் நீளம்

C) சட்ட நீளம்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: சட்டகாந்தம் ஒன்றின் காந்த முனைகளுக்கு இடையே உள்ள நீளம் காந்த நீளம் (Magnetic length) என்றும் அழைக்கப்படும்.

34. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] காந்தத்தின் இரண்டு முனைகளும் சமமுனைவலிமையைப் பெற்றிருக்கும்.

2] காந்தநீளம் எப்போதும் வடிவியல் நீளத்தை விடச் சற்றே அதிகமாக இருக்கும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: காந்தத்தின் இரண்டு முனைகளும் சமமுனைவலிமையைப் பெற்றிருக்கும். காந்தநீளம் எப்போதும் வடிவியல் நீளத்தை விடச் சற்றே குறைவாக இருக்கும்.

35. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] ஒரு காந்தம் துண்டுகளாக உடையும்போது, அதன் ஒவ்வொரு துண்டும் வடமுனை மற்றும் தென்முனை கொண்ட ஒரு காந்தம் போன்று செயல்படும்.

2] சட்டகாந்தம் ஒன்றினை இரும்புத்துருவல்களில் தோய்த்து எடுக்கும்போது, அதன் முனைகளில் இரும்புத்துருவல்கள் அதிகமாக ஒட்டிக் கொள்ளும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஒரு காந்தம் துண்டுகளாக உடையும்போது, அதன் ஒவ்வொரு துண்டும் வடமுனை மற்றும் தென்முனை கொண்ட ஒரு காந்தம் போன்று செயல்படும். சட்டகாந்தம் ஒன்றினை இரும்புத்துருவல்களில் தோய்த்து எடுக்கும்போது, அதன் முனைகளில் இரும்புத்துருவல்கள் அதிகமாக ஒட்டிக் கொள்ளும்.

36. கூற்று(A): ஒரு காந்தம் மற்றொரு காந்தத்தை அல்லது காந்தப் பொருட்களை தன்னை நோக்கி ஈர்க்கும் அல்லது விலக்கும்.

காரணம்(R): இந்த ஈர்ப்பு அல்லது விலக்கு விசை சட்டகாந்தத்தின்முனைகளில்வலிமையாகக் காணப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு காந்தம் மற்றொரு காந்தத்தை அல்லது காந்தப் பொருட்களை தன்னை நோக்கி ஈர்க்கும் அல்லது விலக்கும். இந்த ஈர்ப்பு அல்லது விலக்கு விசை சட்டகாந்தத்தின்முனைகளில்வலிமையாகக் காணப்படும்.

37. தடையின்றி தொங்கவிடப்பட்ட சட்டகாந்தம் எப்போதும்____________ திசையை நோக்கியே நிற்கும்.

A) தென் – வட

B) கிழக்கு – மேற்கு

C) மேற்கு – கிழக்கு

D) வட – தென்

விளக்கம்: தடையின்றி தொங்கவிடப்பட்ட சட்டகாந்தம் எப்போதும் வட-தென்திசையை நோக்கியே நிற்கும்.

38. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] இயற்கை காந்தங்கள் மிகவும் வலிமை குறைந்தவை.

2] இயற்கை காந்தங்கள் ஒழுங்கற்ற வடிவத்திலும் உள்ளன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இயற்கை காந்தங்கள் மிகவும் வலிமை குறைந்தவை. அது மட்டுமில்லாமல் ஒழுங்கற்ற வடிவத்திலும் உள்ளன.

39. செவ்வக வடிவிலோ அல்லது உருளை வடிவிலோ உருவாக்கப்பட்ட காந்தங்கள்____________ என்று அழைக்கப்படுகின்றன.

A) செவ்வக காந்தங்கள்

B) உருளை காந்தங்கள்

C) சட்டகாந்தங்கள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: செவ்வக வடிவிலோ அல்லது உருளை வடிவிலோ உருவாக்கப்பட்ட காந்தங்கள் சட்டகாந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

40. காந்தஅச்சு வழியாகச் செல்லும் செங்குத்துத் தளத்திற்கு____________ என்று பெயர்.

A) காந்த துருவத்தளம்

B) காந்த மத்தியரேகை

C) காந்த அச்சு

D) பூமத்தியரேகை

விளக்கம்: காந்தஅச்சு வழியாகச் செல்லும் செங்குத்துத் தளத்திற்கு காந்த துருவத்தளம் என்று பெயர்.

41. முனைவலிமை ஒரு____________ அளவாகும்.

A) வழி

B) அடிப்படை

C) ஸ்கேலார்

D) வெக்டர்

விளக்கம்: முனைவலிமை ஒரு ஸ்கேலர் அளவாகும்.

42. முனைவலிமை பரிமாணம் ____________

A) M0 LT1 a0

B) M1 LT1 a0

C) M0 LT2 a0

D) M0 LT1 A

விளக்கம்: முனைவலிமை பரிமாணம் M0 LT1 A.

43. முனைவலிமை SI அலகு____________

A) Nt-1

B) nT-1

C) NT-1

D) NT-2

விளக்கம்: முனைவலிமை SI அலகு NT-1 (நியூட்டன் / டெஸ்லா) அல்லது A m (ஆம்பியர் – மீட்டர்).

44. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] காந்தப்புலத்தில் உள்ள ஒரு காந்தத்தின் வடமுனை, காந்தப்புலத்தின் திசையிலேயே விசையை உணரும்.

2] காந்தத்தின் தென்முனை காந்தப்புலத்தின் திசைக்கு எதிர்த்திசையில் விசையை உணரும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: நிலைமின்னியலில் உள்ள நேர்க்குறி மற்றும் எதிர்க்குறி மின்துகள்களைப் போன்றே, காந்தப்புலத்தில் உள்ள ஒரு காந்தத்தின் வடமுனை, காந்தப்புலத்தின் திசையிலேயே விசையை உணரும். அதே நேரத்தில் காந்தத்தின் தென்முனை காந்தப்புலத்தின் திசைக்கு எதிர்த்திசையில் விசையை உணரும்.

45. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] முனைவலிமையானது, காந்தப்பொருளின் தன்மை, அதன் குறுக்கு-வெட்டுப்பரப்பு மற்றும் எந்த அளவிற்கு அப்பொருள் காந்தமாக்கப்பட்டுள்ளது என்பவற்றைச் சார்ந்தது.

2] காந்தம் ஒன்றின் நீளத்திற்கு செங்குத்தாக அதனை இருசமதுண்டுகளாக வெட்டினால், அதன் முனைவலிமையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: முனைவலிமையானது, காந்தப்பொருளின் தன்மை, அதன் குறுக்கு-வெட்டுப்பரப்பு மற்றும் எந்த அளவிற்கு அப்பொருள் காந்தமாக்கப்பட்டுள்ளது என்பவற்றைச் சார்ந்தது. காந்தம் ஒன்றின் நீளத்திற்கு செங்குத்தாக அதனை இருசமதுண்டுகளாக வெட்டினால், அதன் முனைவலிமையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

46. காந்தம் ஒன்றினை நீளவாக்கில் இரு சமதுண்டுகளாக வெட்டினால், அதன் முனைவலிமை____________

A) அதிகமாகும்

B) குறையும்

C) சுழி

D) நடுநிலையாகும்

விளக்கம்: காந்தம் ஒன்றினை நீளவாக்கில் இரு சமதுண்டுகளாக வெட்டினால், அதன் முனைவலிமை பாதியாகக் குறையும்.

47. காந்தப் புலக்கோடுகள் தொடர்ச்சியான மூடப்பட்ட____________

A) நேர்கோடு

B) எதிர்கோடு

C) செங்குத்து கோடு

D) வளை கோடு

விளக்கம்: காந்தப் புலக்கோடுகள் தொடர்ச்சியான மூடப்பட்ட வளைகோடுகளாகும்.

48. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] காந்தப்புலத்தின் வலிமைக்குத் தக்கவாறு, காந்தப்புலக்கோடுகள் அமைந்திருக்கும்.

2] வலிமையான காந்தப்புலத்திற்கு கோடுகள் மிக நெருக்கமாகவும், வலிமை குறைந்த காந்தப்புலத்திற்கு கோடுகள் இடைவெளி விட்டும் காணப்படும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: காந்தப்புலத்தின் வலிமைக்குத் தக்கவாறு, காந்தப்புலக்கோடுகள் அமைந்திருக்கும். அதாவது வலிமையான காந்தப்புலத்திற்கு கோடுகள் மிக நெருக்கமாகவும், வலிமை குறைந்த காந்தப்புலத்திற்கு கோடுகள் இடைவெளி விட்டும் காணப்படும்.

49. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] காந்தப்புலக்கோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டும்

2] வெட்டிக்கொண்டால் திசைகாட்டும் கருவியில் உள்ள காந்த ஊசி ஒரே புள்ளியில் இரண்டு வெவ்வேறு திசைகளைக் காட்டும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: காந்தப்புலக்கோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டாது. அவ்வாறு வெட்டிக்கொண்டால் திசைகாட்டும் கருவியில் உள்ள காந்த ஊசி ஒரே புள்ளியில் இரண்டு வெவ்வேறு திசைகளைக் காட்டும். இது நடைமுறையில் சாத்தியமற்றது.

50. மூடப்பட்ட வளைகோட்டின்எந்த ஒரு புள்ளியிலும் உள்ள காந்தப்புலத்தின் திசையை, அப்புள்ளியில் உள்ள காந்தப்புலக்கோட்டிற்கு வரையப்படும்____________ திசையிலிருந்து அறியலாம்.

A) நேர்கோடு

B) எதிர்கோடு

C) தொடு கோடு

D) வளை கோடு

விளக்கம்: மூடப்பட்ட வளைகோட்டின்எந்த ஒரு புள்ளியிலும் உள்ள காந்தப்புலத்தின் திசையை, அப்புள்ளியில் உள்ள காந்தப்புலக்கோட்டிற்கு வரையப்படும் தொடுகோட்டின் திசையிலிருந்து அறியலாம்.

51. குறிப்பிட்ட பரப்பிற்கு செங்குத்தாக செல்லும் காந்தப்புலக் கோடுகளின் எண்ணிக்கைக்கு____________ என்று பெயர்.

A) காந்தப்பாயம்

B) காந்தச் சரிவு

C) காந்த அச்சு

D) காந்த ஒதுக்கம்

விளக்கம்: குறிப்பிட்ட பரப்பிற்கு செங்குத்தாக செல்லும் காந்தப்புலக் கோடுகளின் எண்ணிக்கைக்கு காந்தப்பாயம் என்று பெயர்.

52. காந்தப்பாயம் ஒரு____________ அளவாகும்.

A) வழி

B) அடிப்படை

C) ஸ்கேலார்

D) வெக்டர்

விளக்கம்: காந்தப்பாயம் ஒரு ஸ்கேலர் அளவாகும்.

53. காந்தப்பாயம் SI அலகு____________

A) மேக்ஸ்வெல்

B) வெபர்

C) டெஸ்லா

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: காந்தப்பாயம் SI அலகு வெபர் (weber). இதனை Wb என குறிப்பிட வேண்டும்.

54. காந்தப்பாயத்தின் பரிமாண வாய்ப்பாடு____________

A) ML2 T-1 A-1

B) ML2 T-2 A-1

C) ML2 T-2 a-1

D) ML2 t-2 A-1

விளக்கம்: காந்தப்பாயத்தின் பரிமாண வாய்ப்பாடு ML2 T-2 A-1.

55. காந்தப்பாயத்தின் CGS அலகு____________

A) மேக்ஸ்வெல்

B) வெபர்

C) டெஸ்லா

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: காந்தப்பாயத்தின் CGS அலகு மேக்ஸ்வெல் ஆகும்.

56. 1 வெபர் =____________

A) 109

B) 108

C) 107

D) 106

விளக்கம்: 1 வெபர் = 108மேக்ஸ்வெல்

57. காந்தப்பாய அடர்த்தி அலகு ____________

A) Wb m-1

B) Wb m-2

C) Wb M-2

D) WB M-2

விளக்கம்: காந்தப்பாய அடர்த்தி அலகு Wb m-2அல்லது டெஸ்லா (T).

58. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] கொடுக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து புள்ளிகளிலும் காந்தப்புலத்தின் எண்மதிப்பு மற்றும் திசை ஆகியவை மாறாமல் இருந்தால், அதனை சீரான காந்தப்புலம் என்று அழைக்கலாம்.

2] காந்தப்புலக் கோடுகளுக்கு செங்குத்தாக உள்ள ஓரலகுப் பரப்பின் வழியாகச் செல்லும் காந்தப்புலக் கோடுகளின் எண்ணிக்கையே காந்தப்பாய அடர்த்தியாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: கொடுக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து புள்ளிகளிலும் காந்தப்புலத்தின் எண்மதிப்பு மற்றும் திசை ஆகியவை மாறாமல் இருந்தால், அதனை சீரான காந்தப்புலம் என்று அழைக்கலாம். காந்தப்புலக் கோடுகளுக்கு செங்குத்தாக உள்ள ஓரலகுப் பரப்பின் வழியாகச் செல்லும் காந்தப்புலக் கோடுகளின் எண்ணிக்கையே காந்தப்பாய அடர்த்தியாகும்.

59. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] கொடுக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து புள்ளிகளிலும் காந்தப்புலத்தின் எண்மதிப்பு அல்லது திசை அல்லது இரண்டுமே மாற்றமடைந்தால், அக்காந்தப்புலத்தை சீரற்ற காந்தப்புலம் என்று அழைக்கலாம்.

2] குறிப்பிட்ட சிறிய பகுதியில் புவியின் காந்தப்புலம் சீரற்ற காந்தப்புலமாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: கொடுக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து புள்ளிகளிலும் காந்தப்புலத்தின் எண்மதிப்பு அல்லது திசை அல்லது இரண்டுமே மாற்றமடைந்தால், அக்காந்தப்புலத்தை சீரற்ற காந்தப்புலம் என்று அழைக்கலாம். குறிப்பிட்ட சிறிய பகுதியில் புவியின் காந்தப்புலம் சீரான காந்தப்புலமாகும்.

60. சட்டகாந்தம் ஒன்றின் காந்தப்புலம் எவற்றிற்கு எடுத்துக்காட்டாகும்?

A) சீரான காந்தப்புலம்

B) மாறும் காந்தப்புலம்

C) மாறாத காந்தப்புலம்

D) சீரற்ற காந்தப்புலம்

விளக்கம்: சட்டகாந்தம் ஒன்றின் காந்தப்புலம்சீரற்ற காந்தப்புலத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

61. நடுவரைக்கோட்டில் அமைந்த புள்ளியில் ஏற்படும் காந்தப்புலத்தின் எண்மதிப்பு____________

A) 0.5 × 104 T

B) 0.5 × 10-4 T

C) 0.6 × 10-4 T

D) 0.6 × 104 T

விளக்கம்: நடுவரைக்கோட்டில் அமைந்த புள்ளியில் ஏற்படும் காந்தப்புலத்தின் எண்மதிப்பு = 0.5 × 10-4 T

62. காந்தத்தின் மீது செயல்படும் தொகுபயன்விசை____________

A) மாறாது

B) மாறும்

C) சுழி

D) ஒன்றாகும்

விளக்கம்: காந்தத்தின் மீது செயல்படும் தொகுபயன்விசை சுழியாகும்.

63. கூற்று(A): புவி ஒரு சீரற்ற காந்தப்புலத்தைப் பெற்றிருந்தாலும், உங்கள் ஆய்வுக்கூடத்தில் தடையின்றி தொங்கவிடப்பட்டுள்ள சட்டகாந்தம் இடப்பெயர்ச்சி இயக்கத்தை மேற்கொள்ளாமல், சுழற்சி இயக்கத்தை மட்டுமே (திருப்புவிசை) மேற்கொள்கிறது ஏன்?

காரணம்(R): ஏனெனில், ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் (உங்கள் ஆய்வுக் கூடத்திற்குள்) புவியின் காந்தப்புலம் சீரானது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: புவி ஒரு சீரற்ற காந்தப்புலத்தைப் பெற்றிருந்தாலும், உங்கள் ஆய்வுக்கூடத்தில் தடையின்றி தொங்கவிடப்பட்டுள்ள சட்டகாந்தம் இடப்பெயர்ச்சி இயக்கத்தை மேற்கொள்ளாமல், சுழற்சி இயக்கத்தை மட்டுமே (திருப்புவிசை) மேற்கொள்கிறது ஏன்? ஏனெனில், ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் (உங்கள் ஆய்வுக் கூடத்திற்குள்) புவியின் காந்தப்புலம் சீரானது.

64. கூற்று(A): ஒரு சீரற்ற காந்தப்புலத்தில், சட்டகாந்தமொன்று தடையின்றி தொங்கவிடப்பட்டுள்ளபோது என்ன நிகழும் ?

காரணம்(R): அச்சட்டகாந்தம், இடப்பெயர்ச்சி இயக்கம் (தொகுபயன் விசை மூலமாக) மற்றும் சுழற்சி இயக்கம் (திருப்புவிசை மூலமாக) இவ்விரண்டையும் உணரும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு சீரற்ற காந்தப்புலத்தில், சட்டகாந்தமொன்று தடையின்றி தொங்கவிடப்பட்டுள்ளபோது என்ன நிகழும் ? அச்சட்டகாந்தம், இடப்பெயர்ச்சி இயக்கம் (தொகுபயன் விசை மூலமாக) மற்றும் சுழற்சி இயக்கம் (திருப்புவிசை மூலமாக) இவ்விரண்டையும் உணரும்.

65. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] சட்டகாந்தம் புறகாந்தப்புலத்தின் திசையில் ஒருங்கமையும்போது அதன் நிலையாற்றல் பெருமமாக இருக்கும்.

2] சட்டகாந்தம் புறகாந்தப்புலத்தின் திசைக்கு எதிர்த்திசையில் ஒருங்கமையும்போது அதன் நிலையாற்றல்சிறுமமாக இருக்கும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: சட்டகாந்தம் புறகாந்தப்புலத்தின் திசையில் ஒருங்கமையும்போது அதன் நிலையாற்றல் சிறுமமாகவும், புறகாந்தப்புலத்தின் திசைக்கு எதிர்த்திசையில் ஒருங்கமையும்போது அதன் நிலையாற்றல் பெருமமாகவும் இருக்கும்.

66. காந்தமாக்குப் புலம் ஒரு____________ அளவாகும்.

A) வழி

B) அடிப்படை

C) ஸ்கேலார்

D) வெக்டர்

விளக்கம்: காந்தமாக்குப் புலம் வெக்டர் அளவாகும்.

67. காந்தமாக்குப் புலத்தின்____________

A) A M-1

B) A m-1

C) A m-2

D) A M-1

விளக்கம்: காந்தமாக்குப் புலத்தின் அலகு A m-1 .

68. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] பொருள் ஒன்றினை காந்தமாக்குவதற்குப் பயன்படும் காந்தப்புலமே, காந்தமாக்குப்புலம் எனப்படும்.

2] இதனை H எனக் குறிப்பிடுவார்கள்

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பொருள் ஒன்றினை காந்தமாக்குவதற்குப் பயன்படும் காந்தப்புலமே, காந்தமாக்குப்புலம் எனப்படும். இதனை H எனக் குறிப்பிடுவார்கள்.

69. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] காந்தப்புலக்கோடுகளை தன் வழியே பாய அனுமதிக்கும் பொருளின் திறமை காந்த உட்புகுதிறன் ஆகும்.

2] காந்தமாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளும் பொருளின் திறன் காந்த உட்புகுதிறன் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: காந்தப்புலக்கோடுகளை தன் வழியே பாய அனுமதிக்கும் பொருளின் திறமை அல்லது காந்தமாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளும் பொருளின் திறன் அல்லது பொருள் தன்வழியே காந்தப்புலத்தை உட்புக அனுமதிக்கும் அளவு காந்த உட்புகுதிறன் ஆகும்.

70. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] வெற்றிடத்தில், உட்புகுதிறன் (அல்லது தனி உட்புகுதிறன்) Image எனவும் குறிப்பிடப்படுகிறது.

2] எந்த ஒரு ஊடகத்திலும் உட்புகுதிறன் µ எனவும் குறிப்பிடப்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: வெற்றிடத்தில், உட்புகுதிறன் (அல்லது தனி உட்புகுதிறன்) Image எனவும் குறிப்பிடப்படுகிறது. எந்த ஒரு ஊடகத்திலும் உட்புகுதிறன் µ எனவும் குறிப்பிடப்படுகிறது.

71. ஊடகத்தில் உட்புகுதிறனுக்கும், வெற்றிடத்தில் உட்புகுதிறனுக்கும் உள்ள தகவு____________

A) ஒப்புமை திறன்

B) உட்புகுதிறன்

C) ஒப்புமை உட்புகுதிறன்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: ஊடகத்தில் உட்புகுதிறனுக்கும், வெற்றிடத்தில் உட்புகுதிறனுக்கும் உள்ள தகவே ஒப்புமை உட்புகுதிறன் ஆகும்.

72. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] ஒப்புமை உட்புகுதிறன் பரிமாணமற்ற ஓர் எண்ணாகும்.

2] இதற்கு அலகு இல்லை.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஒப்புமை உட்புகுதிறன் பரிமாணமற்ற ஓர் எண்ணாகும். இதற்கு அலகு இல்லை.

73. வெற்றிடம் அல்லது காற்றில் ஒப்புமை உட்புகுதிறனின் மதிப்பு____________

A) சுழி

B) ஒன்று

C) இரண்டு

D) மூன்று

விளக்கம்: வெற்றிடம் அல்லது காற்றில் ஒப்புமை உட்புகுதிறனின் மதிப்பு ஒன்று ஆகும்.

74. ஓரலகு பருமனுடைய பருப்பொருளின் தொகுபயன் காந்தத்திருப்புத்திறன்__________

A) சுழி

B) ஒன்று

C) இரண்டு

D) மூன்று

விளக்கம்: ஓரலகு பருமனுடைய பருப்பொருளின் தொகுபயன் காந்தத்திருப்புத்திறன் சுழியாகும்.

75. ஓரலகு பருமனுக்கான பொருளின் இந்த தொகுபயன் காந்தத்திருப்புத்திற ன்__________ எனப்படும்.

A) காந்தப்பாயம்

B) காந்த புலச்செறிவு

C) காந்தமாக்கும் வெக்டர்

D) காந்தமாக்கும் புலம்

விளக்கம்: ஓரலகு பருமனுக்கான பொருளின் இந்த தொகுபயன் காந்தத்திருப்புத்திறனே காந்தமாகும் செறிவு அல்லது காந்தமாகும் வெக்டர் அல்லது காந்தமாகுதல் எனப்படும்.

76. காந்தமாகும் செறிவு ஒரு____________ அளவாகும்.

A) வழி

B) அடிப்படை

C) ஸ்கேலார்

D) வெக்டர்

விளக்கம்: காந்தமாகும் செறிவு ஒரு வெக்டர் அளவாகும்.

77. காந்தமாகும் செறிவின்SI அலகு____________

A) ஆம்பியர் மீட்டர்-2

B) ஆம்பியர் மீட்டர்-1

C) ஜூல் மீட்டர்-1

D) ஜூல் மீட்டர்-2

விளக்கம்: காந்தமாகும் செறிவின்SI அலகு ஆம்பியர் மீட்டர்-1 ஆகும்.

78. காந்தமாக்குப் புலத்தினால் பொருளில் தூண்டப்பட்ட காந்தமாகும் செறிவிற்கும் பொருளுக்கு அளிக்கப்பட்ட rகாந்தமாக்குப்புலத்திற்கும் உள்ள விகிதம்____________

A) காந்த திருப்புத்திறன்

B) காந்த ஏற்புத்திறன்

C) காந்த இருமுனை திறன்

D) இவற்றில் எதுஉவமில்லை

விளக்கம்: காந்தமாக்குப் புலத்தினால் பொருளில் தூண்டப்பட்ட காந்தமாகும் செறிவிற்கும் பொருளுக்கு அளிக்கப்பட்ட rகாந்தமாக்குப்புலத்திற்கும் உள்ள விகிதமே காந்த ஏற்புத்திறனாகும்.

79. காந்த ஏற்புத்திறன்____________ அளவாகும்.

A) பரிணாமமுள்ள

B) பரிமாணமற்ற

C) ஸ்கேலார்

D) வெக்டர்

விளக்கம்: காந்த ஏற்புத்திறன் பரிமாணமற்ற அளவாகும்.

80. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] அலுமினியத்தின் காந்த ஏற்புத்திறன் 2.4 × 10-5

2] தாமிர த்தின் காந்த ஏற்புத்திறன் 0.98 × 10-5

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: அலுமினியத்தின் காந்த ஏற்புத்திறன் 2.3 × 10-5 ஆகும். தாமிரத்தின் காந்த ஏற்புத்திறன் -0.98 × 10-5 ஆகும்.

81. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] வைரத்தின் காந்த ஏற்புத்திறன் – 2.3 × 10-5

2] தங்கத்தின் காந்த ஏற்புத்திறன் 3.6 × 10-5

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: வைரத்தின் காந்த ஏற்புத்திறன் -2.2 × 10-5 ஆகும். தங்கத்தின் காந்த ஏற்புத்திறன் -3.6 × 10-5 ஆகும்.

83. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] பாதரசத்தின் காந்த ஏற்புத்திறன் 3.2 × 10-5

2] வெள்ளியின் காந்த ஏற்புத்திறன் 2.6 × 10-5

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பாதரசத்தின் காந்த ஏற்புத்திறன் -3.2 × 10-5 ஆகும். வெள்ளியின் காந்த ஏற்புத்திறன் -2.6 × 10-5 ஆகும்.

84. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] டைட்டேனியத்தின் காந்த ஏற்புத்திறன் -7.06 × 10-5

2] டங்ஸ்டனின் காந்த ஏற்புத்திறன் -6.8 × 10-5

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: டைட்டேனியத்தின் காந்த ஏற்புத்திறன் 7.06 × 10-5 ஆகும். டங்ஸ்டனின் காந்த ஏற்புத்திறன் 6.8 ×

10-5 ஆகும்.

85. கார்பன்டை ஆக்ஸைடு (1 வளிமண்டல அழுத்தத்தில்) காந்த ஏற்புத்திறன்____________

A) 2.3 × 10-9

B) -2.3 × 109

C) 2.3 × 109

D) -2.3 × 10-9

விளக்கம்: கார்பன்டை ஆக்ஸைடு (1 வளிமண்டல அழுத்தத்தில்) காந்த ஏற்புத்திறன் -2.3 × 10-9 ஆகும்.

86. ஆக்ஸிஜன் (1 வளிமண்டல அழுத்தத்தில்) காந்த ஏற்புத்திறன்____________

A) 209 × 109

B) -2090 × 109

C) 2.90 × 109

D) 2090 × 10-9

விளக்கம்: ஆக்ஸிஜன் (1 வளிமண்டல அழுத்தத்தில்) காந்த ஏற்புத்திறன் 2090 × 10-9 ஆகும்.

87. கூற்று(A): அணுக்கருவைச் சுற்றியுள்ள எலக்ட்ரான்களின் சுற்றுப்பாதை இயக்கம், சுற்றுப்பாதையின் தளத்திற்குச் செங்குத்தாக ஒரு காந்தப்புலத்தை உருவாக்கும்.

காரணம்(R): ஒவ்வொரு எலக்ட்ரானும் ஒரு குறிப்பிட்ட அளவு சுற்றுப்பாதை காந்த இருமுனை திருப்புத்திறனைப் (Finite orbital magnetic dipole moment) பெற்றுள்ளது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: அணுக்கருவைச் சுற்றியுள்ள எலக்ட்ரான்களின் சுற்றுப்பாதை இயக்கம், சுற்றுப்பாதையின் தளத்திற்குச் செங்குத்தாக ஒரு காந்தப்புலத்தை உருவாக்கும். எனவே, ஒவ்வொரு எலக்ட்ரானும் ஒரு குறிப்பிட்ட அளவு சுற்றுப்பாதை காந்த இருமுனை திருப்புத்திறனைப் (Finite orbital magnetic dipole moment) பெற்றுள்ளது.

88. காந்த இருமுனை திருப்புத்திறன்களின் வெக்டர் கூடுதல்__________

A) சுழி

B) ஒன்று

C) இரண்டு

D) மூன்று

விளக்கம்: காந்த இருமுனை திருப்புத்திறன்களின் வெக்டர் கூடுதல் சுழியாகும்.

89. __________ விதியின் அடிப்படையில் இருமுனை திருப்புத்திறன்கள் எதிர் – இணையாக உள்ள எலக்ட்ரான்களின் வேகம் அதிகரிக்கும்.

A) கான்ஸ்

B) மான்ஸ்

C) சார்ஸ்

D) லென்ஸ்

விளக்கம்: லென்ஸ் விதியின் அடிப்படையில் இருமுனை திருப்புத்திறன்கள் எதிர் – இணையாக உள்ள எலக்ட்ரான்களின் வேகம் அதிகரிக்கும்.

90. கூற்று(A): சீரற்ற காந்தப்புலத்தில் டயா காந்தப் பொருளொன்றை வைக்கும்போது, தூண்டப்பட்ட காந்த இருமுனை திருப்புத் திறனுக்கும் புறகாந்தப்புலத்திற்கும் இடையே ஓர் இடைவினை நடைபெற்று விசை உருவாகிறது.

காரணம்(R): புறகாந்தப்புலத்தினால் டயா காந்தப்பொருள் விலக்கப்படுகிறது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: சீரற்ற காந்தப்புலத்தில் டயா காந்தப் பொருளொன்றை வைக்கும்போது, தூண்டப்பட்ட காந்த இருமுனை திருப்புத் திறனுக்கும் புறகாந்தப்புலத்திற்கும் இடையே ஓர் இடைவினை நடைபெற்று விசை உருவாகிறது. புறகாந்தப்புலத்தினால் டயா காந்தப்பொருள் விலக்கப்படுகிறது.

91. கீழ்க்கண்டவற்றில் டயாகாந்தப்பொருட்கள் அல்லாதது எது?

A) பிஸ்மத்

B) தாமிரம்

C) தண்ணீர்

D) இரும்பு

விளக்கம்: டயாகாந்தப்பொருட்கள் எடுத்துக்காட்டுகள் : பிஸ்மத், தாமிரம் மற்றும் தண்ணீர் மேலும் சில பொருட்கள்.

92. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] டயாகாந்தப்பொருட்கள் நேர்குறி காந்த ஏற்புத்திறனைப் பெற்றுள்ளன.

2] இவற்றின் ஒப்புமை காந்த உட்புகுதிறன் ஒன்றைவிட சற்றேக் குறைவாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: டயாகாந்தப்பொருட்கள் எதிர்க்குறி காந்த ஏற்புத்திறனைப் பெற்றுள்ளன. இவற்றின் ஒப்புமை காந்த உட்புகுதிறன் ஒன்றைவிட சற்றேக் குறைவாகும்.

93. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] புறகாந்தப்புலத்தில் வைக்கும்போது, காந்தப்புலக் கோடுகள் டயா காந்தப்பொருளினால் விலக்கித் தள்ளப்படுகின்றன.

2] காந்த ஏற்புத்திறன் கிட்டத்தட்ட வெப்பநிலையைச் சார்ந்ததல்ல.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: புறகாந்தப்புலத்தில் வைக்கும்போது, காந்தப்புலக் கோடுகள் டயா காந்தப்பொருளினால் விலக்கித் தள்ளப்படுகின்றன. காந்த ஏற்புத்திறன் கிட்டத்தட்ட வெப்பநிலையைச் சார்ந்ததல்ல.

94. __________ முழுமையான டயாகாந்தப்பொருட்களாகும்.

A) கடத்திகள்

B) குறைக்கடத்திகள்

C) காப்பான்கள்

D) மீக்கடத்திகள்

விளக்கம்: மீக்கடத்திகள் முழுமையான டயாகாந்தப்பொருட்களாகும்.

95. கூற்று(A): டயா காந்தப்பொருட்கள் மீக்கடத்திகளாக மாறும்போது மீக்கடத்தியிலிருந்து காந்தப்பாயம் விலக்கித்தள்ளப்படும்.

காரணம்(R): இந்நிகழ் விற்கு மெய்சனர் (Meissner) விளைவு என்று பெயர்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: டயா காந்தப்பொருட்கள் மீக்கடத்திகளாக மாறும்போது மீக்கடத்தியிலிருந்து காந்தப்பாயம் விலக்கித்தள்ளப்படும். இந்நிகழ் விற்கு மெய்சனர் (Meissner) விளைவு என்று பெயர்.

96. கூற்று(A): சில காந்தப்பொருட்களில் அதன் ஒவ்வொரு அணுவும் அல்லது மூலக்கூறும் நிகர காந்த இருமுனை திருப்புதிறன்களைப் பெற்றுள்ளன.

காரணம்(R): அணுவிலுள்ள எலக்ட்ரான்களின் சுற்றுப்பாதை மற்றும் தற்சுழற்சி காந்த இருமுனை திருப்புத்திறன்களின் வெக்டர் கூடுதலாகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: சில காந்தப்பொருட்களில் அதன் ஒவ்வொரு அணுவும் அல்லது மூலக்கூறும் நிகர காந்த இருமுனை திருப்புதிறன்களைப் பெற்றுள்ளன. இதற்குக் காரணம் அணுவிலுள்ள எலக்ட்ரான்களின் சுற்றுப்பாதை மற்றும் தற்சுழற்சி காந்த இருமுனை திருப்புத்திறன்களின் வெக்டர் கூடுதலாகும்.

97. கீழ்க்கண்டவற்றில் பாராகாந்தப் பொருட்கள் அல்லாதது எது?

A) அலுமினியம்

B) பிளாட்டினம்

C) குரோமியம்

D) வைரம்

விளக்கம்: பாராகாந்தப் பொருட்கள் எடுத்துக்காட்டுகள்: அலுமினியம், பிளாட்டினம், குரோமியம் மற்றும் ஆக்சிஜன் மேலும் சில பொருட்கள்.

98. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] பாராகாந்தப் பொருட்கள் குறைந்த நேர்க்குறி காந்த ஏற்புத்திறன் கொண்டவை.

2] இவற்றின் ஒப்புமை காந்த உட்புகுதிறன் ஒன்றைவிட குறைவு

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பாராகாந்தப் பொருட்கள் குறைந்த நேர்க்குறி காந்த ஏற்புத்திறன் கொண்டவை. இவற்றின் ஒப்புமை காந்த உட்புகுதிறன் ஒன்றைவிட அதிகம்.

99. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] புறகாந்தப்புலத்தில் வைக்கும்போது காந்தப்புலக் கோடுகள் பாரா காந்தப்பொருளுக்குள்ளே ஈர்க்கப்படுகின்றன.

2] காந்த ஏற்புத்திறன் வெப்பநிலைக்கு எதிர்த்தகவாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: புறகாந்தப்புலத்தில் வைக்கும்போது காந்தப்புலக் கோடுகள் பாரா காந்தப்பொருளுக்குள்ளே ஈர்க்கப்படுகின்றன. காந்த ஏற்புத்திறன் வெப்பநிலைக்கு எதிர்த்தகவாகும்.

100. கூற்று(A): வெப்பநிலைஅதிகரிக்கும்போது, வெப்ப அதிர்வின் காரணமாக காந்த இருமுனை திருப்புத்திறன்களின் ஒருங்கமைவு சிதைந்து விடுகின்றது.

காரணம்(R): எனவேவெப்பநிலைஅதிகரிப்பால் காந்த ஏற்புத்திறன் அதிகரிக்கிறது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வெப்பநிலைஅதிகரிக்கும்போது, வெப்ப அதிர்வின் காரணமாக காந்த இருமுனை திருப்புத்திறன்களின் ஒருங்கமைவு சிதைந்து விடுகின்றது. எனவேவெப்பநிலைஅதிகரிப்பால் காந்த ஏற்புத்திறன் குறைகிறது.

101. காந்த மிதப்பு இரயில் வண்டியை, __________ என்றும் அழைக்கலாம்.

A) கியூரி

B) கியூரிவெயிஸ்

C) வெயிஸ்

D) மேக்லீவ்

விளக்கம்: காந்த மிதப்பு இரயில் வண்டியை, மேக்லீவ் (Maglev) இரயில் வண்டி என்றும் அழைக்கலாம்.

102. கீழ்க்கண்டவற்றில் ஃபெர்ரோகாந்தப் பொருட்கள் அல்லாதது எது?

A) இரும்பு

B) நிக்கல்

C) கோபால்ட்

D) மெர்குரி

விளக்கம்: ஃபெர்ரோகாந்தப்பொருட்கள் எடுத்துக்காட்டுகள் : இரும்பு, நிக்கல் மற்றும் கோபால்ட்

103. இந்திய புவிக்காந்தவியல் நிறுவனம் எங்குள்ளது?

A) டெல்லி

B) மும்பை

C) கொல்கத்தா

D) சென்னை

விளக்கம்: மும்பையிலுள்ள இந்திய புவிக்காந்தவியல் நிறுவனம் (Indian Institute of Geomagnetism) கீழடியில் மேற்கொண்ட காந்தமானி அளவியல் ஆய்வின் மூலம் அப்பகுதியின் அடியில் பழங்கால சுவர், மண்பானைகள் உள்ளிட்ட தொல்லியல் அமைப்புகள் புதைந்துள்ளன என்று கண்டறிந்தனர்.

104. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] ஃபெர்ரோகாந்தப் பொருட்கள் காந்த ஏற்புத்திறன் நேர்க்குறி மற்றும் அதிக மதிப்புடையது.

2] ஒப்புமை உட்புகுதிறன் குறைவு

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஃபெர்ரோகாந்தப் பொருட்கள் காந்த ஏற்புத்திறன் நேர்க்குறி மற்றும் அதிக மதிப்புடையது. ஒப்புமை உட்புகுதிறன் அதிகம்.

105. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] புறகாந்தப்புலத்தில் ஃபெர்ரோ காந்தப்பொருளை வைக்கும்போது, காந்தப்புலக் கோடுகள் ஃபெர்ரோ காந்தப்பொருளின் உள்ளே வலிமையாக ஈர்க்கப்படும்.

2] காந்த ஏற்புத்திறன் வெப்பநிலைக்கு எதிர்த்தகவாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: புறகாந்தப்புலத்தில் ஃபெர்ரோ காந்தப்பொருளை வைக்கும்போது, காந்தப்புலக் கோடுகள் ஃபெர்ரோ காந்தப்பொருளின் உள்ளே வலிமையாக ஈர்க்கப்படும். காந்த ஏற்புத்திறன் வெப்பநிலைக்கு எதிர்த்தகவாகும்.

106. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஃபெர்ரோ காந்தப்பொருள் பாரா காந்தப்பொ ருளாக மாறும். இந்த வெப்பநிலை__________ வெப்பநிலை எனப்படும்.

A) கியூரி

B) கியூரிவெயிஸ்

C) வெயிஸ்

D) மேக்லீவ்

விளக்கம்: ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஃபெர்ரோ காந்தப்பொருள் பாரா காந்தப்பொ ருளாக மாறும். இந்த வெப்பநிலையே, கியூரி வெப்பநிலை (TC ) எனப்படும்.

107. நிறை, மின்னூட்டம் போன்றே அடிப்படைத்துகளின் மற்றொரு பண்பே__________ ஆகும்.

A) மின்னோட்டம்

B) மின்பாயம்

C) தற்சுழற்சி

D) குவாண்டம்

விளக்கம்: நிறை, மின்னூட்டம் போன்றே அடிப்படைத்துகளின் மற்றொரு பண்பே தற்சுழற்சி ஆகும்.

108. தற்சுழற்சி என்பது__________ நிகழ்வாகும்.

A) எந்திரவியல்

B) குவாண்டம்

C) மின்னூட்டம்

D) குவாண்டம் எந்திரவியல்

விளக்கம்: தற்சுழற்சி என்பது குவாண்டம் எந்திரவியல் நிகழ்வாகும்.

109. துகளின் தற்சுழற்சி __________ மதிப்பை மட்டுமே பெறும்.

A) எதிர்குறி

B) நேர்க்குறி

C) சுழி

D) நடுநிலையானது

விளக்கம்: துகளின் தற்சுழற்சி நேர்க்குறி மதிப்பை மட்டுமே பெறும்.

110. கூற்று(A): காந்தமாக்குப்புலம் மறைந்த நிலையிலும் காந்தத்தன்மையைத் பொருள் தக்கவைக்கிறது.

காரணம்(R): பொருளின் இத்திறமையை காந்தத்தேக்குதன்மை அல்லது காந்தத்தேக்குதிறன் ஆகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: காந்தமாக்குப்புலம் மறைந்த நிலையிலும் காந்தத்தன்மையைத் தக்கவைக்கும் பொருளின் இத்திறமையை காந்தத்தேக்குதன்மை அல்லது காந்தத்தேக்குதிறன் என்று வரையறுக்கலாம்.

111. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] காந்தப்புலம், காந்தமாக்குப் புலத்திற்குப் பின்தங்கும் இந்நிகழ்ச்சிக்கு காந்தத்தயக்கம் என்று பெயர்.

2] தயக்கம் என்றால் பின்தங்குதல் என்று பொருள்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: காந்தப்புலம், காந்தமாக்குப் புலத்திற்குப் பின்தங்கும் இந்நிகழ்ச்சிக்கு காந்தத்தயக்கம் (Hysteresis) என்று பெயர். தயக்கம் என்றால் பின்தங்குதல் என்று பொருள்.

112. பொருளின் எஞ்சிய காந்தத்தன்மையை முழுவதும் நீக்குவதற்காக, எதிர்த்திசையில் செலுத்தப்பட்ட காந்தமாக்குப் புலத்தின் எண்மதிப்பு__________

A) காந்தத்தேக்குதிறன்

B) காந்தத்தயக்கம்

C) காந்தநீக்குத்திறன்

D) தெவிட்டிய காந்தமாதல்

விளக்கம்: பொருளின் எஞ்சிய காந்தத்தன்மையை முழுவதும் நீக்குவதற்காக, எதிர்த்திசையில் செலுத்தப்பட்ட காந்தமாக்குப் புலத்தின் எண்மதிப்பே காந்தநீக்குத்திறன் (Coercivity) என்று அழைக்கப்படுகிறது.

113. காந்தமாக்குப் புலத்தை செலுத்தும்போது பொருள் அடையும் பெரும காந்தத்தன்மை புள்ளி__________

A) காந்தத்தேக்குதிறன்

B) காந்தத்தயக்கம்

C) காந்தநீக்குத்திறன்

D) தெவிட்டிய காந்தமாதல்

விளக்கம்: காந்தமாக்குப் புலத்தை செலுத்தும்போது பொருள் அடையும் பெரும காந்தத்தன்மை புள்ளியே தெவிட்டிய காந்தமாதல் (Saturated magnetisation) என்று வரையறுக்கப்படுகிறது.

114. கூற்று(A): பொருளொன்றில் காந்தமாக்கும் சுற்றின்போது, வெப்ப வடிவில் ஆற்றல் இழக்கப்படும்.

காரணம்(R): பல்வேறு திசைகளில் மூலக்கூறுகளின் சுழற்சி மற்றும் ஒருங்கமைவாகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: பொருளொன்றில் காந்தமாக்கும் சுற்றின்போது, வெப்ப வடிவில் ஆற்றல் இழக்கப்படும். இவ்வாற்றல் இழப்பிற்குக் காரணம் பல்வேறு திசைகளில் மூலக்கூறுகளின் சுழற்சி மற்றும் ஒருங்கமைவாகும்.

115. அதிக காந்தத்தேக்குத்திறன், அதிக காந்த நீக்குத்திறன் மற்றும் அதிக காந்த உட்புகுதிறன் கொண்ட பொருட்கள்__________ உருவாக்குவதற்கு மிகவும் ஏற்றதாகும்.

A) நிலையான காந்தங்கள்

B) மின்காந்தங்கள்

C) மின்மாற்றி உள்ளகம்

D) நிலையற்ற காந்தங்கள்

விளக்கம்: அதிக காந்தத்தேக்குத்திறன், அதிக காந்த நீக்குத்திறன் மற்றும் அதிக காந்த உட்புகுதிறன் கொண்ட பொருட்கள் நிலையான காந்தங்களை உருவாக்குவதற்கு மிகவும் ஏற்றதாகும்.

116. கீழ்க்கண்டவற்றுள் மின்காந்தங்கள் உருவாக்கும் பொருட்கள் அல்லாதது எவை?

A) அதிக தொடக்க காந்த ஏற்புத்திறன்

B) குறைந்த காந்த தேக்குத்திறன்

C) குறைந்த காந்த நீக்குத்திறன்

D) அதிக காந்த உட்புகுதிறன்

விளக்கம்: அதிக தொடக்க காந்த ஏற்புத்திறன், குறைந்த காந்த தேக்குத்திறன், குறைந்த காந்த நீக்குத்திறன் மற்றும் குறைந்த பரப்புடைய மெல்லிய காந்த தயக்ககண்ணியைப் பெற்றுள்ள பொருட்கள் மின்காந்தங்கள் செய்ய விரும்பத்தக்கவைகளாகும்.

117. கீழ்க்கண்டவற்றுள் மின்மாற்றி உள்ளகங்கள் உருவாக்கும் பொருட்கள் அல்லாதது எவை?

A) அதிக தொடக்க காந்த ஏற்புத்திறன்

B) உயர்ந்த காந்தப்புலம்

C) குறைந்த பரப்பு கொண்ட மெல்லிய தயக்கக்கண்ணியைப் பெற்றுள்ள பொருட்கள்

D) குறைந்த காந்த தேக்குத்திறன்

விளக்கம்: அதிக தொடக்க காந்த ஏற்புத்திறன், உயர்ந்த காந்தப்புலம் மற்றும் குறைந்த பரப்பு கொண்ட மெல்லிய தயக்கக்கண்ணியைப் பெற்றுள்ள பொருட்கள் மின்மாற்றி உள்ளகங்களை வடிவமைக்க பயன்படுகின்றன.

118. தேனிரும்பு எவற்றிற்கு எடுத்துக்காட்டாகும்?

A) நிலையான காந்தங்கள்

B) மின்காந்தங்கள்

C) மின்மாற்றி உள்ளகம்

D) நிலையற்ற காந்தங்கள்

விளக்கம்: மின்மாற்றி உள்ளகத்திற்கு எடுத்துக்காட்டு : தேனிரும்பு

119. மியூமெட்டல் எவற்றிற்கு எடுத்துக்காட்டாகும்?

A) நிலையான காந்தங்கள்

B) மின்காந்தங்கள்

C) மின்மாற்றி உள்ளகம்

D) நிலையற்ற காந்தங்கள்

விளக்கம்: மின்காந்தங்களுக்கு எடுத்துக்காட்டுகள்: தேனிரும்பு மற்றும் மியூமெட்டல் (நிக்கல் இரும்பு உலோகக் கலவை).

120. ஆல்நிக்கோ எவற்றிற்கு எடுத்துக்காட்டாகும்?

A) நிலையான காந்தங்கள்

B) மின்காந்தங்கள்

C) மின்மாற்றி உள்ளகம்

D) நிலையற்ற காந்தங்கள்

விளக்கம்: நிலையான காந்தங்க ளுக்கு எடுத்துக்காட்டுகள்: கார்பன்எஃகு மற்றும் ஆல்நிக்கோ

121. கம்பியின் வழியே பாயும் மின்னோட்டம் அருகே இருந்த திசைகாட்டும் காந்தக் கருவியில் விலகலை ஏற்படுத்துகின்றது என்பதைக் கண்டறிந்தவர்__________

A) மேக்ஸ்வெல்

B) ஸ்டீபன் ஹாங்கிங்

C) ஆர்ஸ்டெட்

D) ஜார்ஜ் கார்லின்

விளக்கம்: 1820 இல் ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆர்ஸ்டெட் கம்பியின் வழியே பாயும் மின்னோட்டம் அருகே இருந்த திசைகாட்டும் காந்தக் கருவியில் விலகலை ஏற்படுத்துகின்றது என்பதைக் கண்டறிந்தார்.

122. கடத்தியில் பாயும் மின்னோட்டத்தின் திசையைக் கொண்டு காந்தப்புலத்தின் திசையை அறிய__________ பயன்படுகிறது.

A) மேக்ஸ்வெல்லின் வலதுகை திருகு விதி

B) பயட் – சாவர்ட் விதி

C) வலதுகை பெருவிரல் விதி

D) A மற்றும் C

விளக்கம்: கடத்தியில் பாயும் மின்னோட்டத்தின் திசையைக் கொண்டு காந்தப்புலத்தின் திசையை அறிய வலதுகை பெருவிரல் விதி பயன்படுகிறது. காந்தப்புலத்தின் திசையை அறிவதற்கு மேக்ஸ்வெல்லின் வலதுகை திருகு விதியும் பயன்படுகிறது.

123. மின்னோட்டம் ஒரு ___________ அளவாகும்.

A) வழி

B) அடிப்படை

C) ஸ்கேலார்

D) வெக்டர்

விளக்கம்: மின்னோட்டம் ஒரு வெக்டர் அளவல்ல. இது ஒரு ஸ்கேலர் அளவாகும்.

124. கடத்தியில் பாயும் மின்னோட்டத்திற்கு திசை உண்டு. எனவே கடத்தியின் சிறு கூறில் பாயும் மின்னோட்டத்தை____________ அளவாகக் கருதலாம்.

A) வழி

B) அடிப்படை

C) ஸ்கேலார்

D) வெக்டர்

விளக்கம்: கடத்தியில் பாயும் மின்னோட்டத்திற்கு திசை உண்டு. எனவே கடத்தியின் சிறு கூறில் பாயும் மின்னோட்டத்தை வெக்டர் அளவாகக் கருதலாம்.

125. மிகக்குறைந்த மின்னோட்டங்களை அளவிடும் ஒரு கருவி____________

A) கால்வனோமீட்டர்

B) வோல்ட் மீட்டர்

C) அம்மீட்டர்

D) டேஞ்சன்ட் கால்வனோமீட்டர்

விளக்கம்: மிகக்குறைந்த மின்னோட்டங்களை அளவிடும் ஒரு கருவி டேஞ்சன்ட் கால்வனோமீட்டர் ஆகும்.

126. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] சுழற்சி காந்த விகிதம் ஒரு விகித மாறிலி.

2] இது எலக்ட்ரானின் கோண உந்தத்தையும், காந்தத்திருப்புத்திறனையும் இணைக்கிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: சுழற்சி காந்த விகிதம் ஒரு விகித மாறிலி என்பதை நினைவில் கொள்ளவும். இது எலக்ட்ரானின் கோண உந்தத்தையும், காந்தத்திருப்புத்திறனையும் இணைக்கிறது.

127. சமச்சீர் கொண்ட மின்னோட்ட அமைப்புகள் உள்ள கணக்குகளில், புள்ளி ஒன்றில் காந்தப்புலத்தைக் கணக்கிட_________ பயன்படுகிறது.

A) மேக்ஸ்வெல்லின் வலதுகை திருகு விதி

B) பயட் – சாவர்ட் விதி

C) வலதுகை பெருவிரல் விதி

D) ஆம்பியரின் சுற்று விதி

விளக்கம்: சமச்சீர் (Symmetry) கொண்ட மின்னோட்ட அமைப்புகள் உள்ள கணக்குகளில், புள்ளி ஒன்றில் காந்தப்புலத்தைக் கணக்கிட ஆம்பியரின் சுற்று விதி பயன்படுகிறது.

128. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] வரிச்சுருளை மின்காந்தமாகவும் பயன்படுத்தலாம்.

2] ஒரு வலிமையான காந்தப்புலத்தை வரிச்சுருள் உருவாக்கும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: வரிச்சுருளை மின்காந்தமாகவும் பயன்படுத்தலாம். ஒரு வலிமையான காந்தப்புலத்தை வரிச்சுருள் உருவாக்கும்.

129. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] வரிச்சுருளை இயக்கவோ அல்லது நிறுத்தவோ முடியும்.

2] நிலையான காந்தத்தைப் பயன்படுத்தி இவ்வாறு நிகழ்த்த முடியும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: வரிச்சுருளை இயக்கவோ அல்லது நிறுத்தவோ முடியும். நிலையான காந்தத்தைப் பயன்படுத்தி இவ்வாறு நிகழ்த்த முடியாது.

130. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] வரிச்சுருளுக்கு வெளியேயும் காந்தப்புலம் சுழி.

2] ஒரு நிலையான மின்னோட்டத்திற்கு வரிச்சுருளின் உள்ளே ஏற்படும் காந்தப்புலமும் மாறிலியாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: வரிச்சுருளுக்கு வெளியேயும் காந்தப்புலம் சுழி. ஒரு நிலையான மின்னோட்டத்திற்கு வரிச்சுருளின் உள்ளே ஏற்படும் காந்தப்புலமும் மாறிலியாகும்.

131. கூற்று(A): வரிச்சுருளின் உள்ளே இரும்பு சட்டமொன்றை வைப்பதன் மூலம் காந்தப்புலத்தின் வலிமையை மேலும் அதிகரிக்கலாம்.

காரணம்(R): வரிச்சுருளினால் ஏற்பட்ட காந்தப்புலம் இரும்புச் சட்டத்தையும் காந்தமாக்கும். எனவே நிகர காந்தப்புலமானது வரிச்சுருளினால் ஏற்பட்ட காந்தப்புலம் மற்றும் இரும்பு சட்டம் காந்தமானதால் ஏற்பட்ட காந்தப்புலங்களின் கூடுதலாகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வரிச்சுருளின் உள்ளே இரும்பு சட்டமொன்றை வைப்பதன் மூலம் காந்தப்புலத்தின் வலிமையை மேலும் அதிகரிக்கலாம். எவ்வாறெனில், வரிச்சுருளினால் ஏற்பட்ட காந்தப்புலம் இரும்புச் சட்டத்தையும் காந்தமாக்கும். எனவே நிகர காந்தப்புலமானது வரிச்சுருளினால் ஏற்பட்ட காந்தப்புலம் மற்றும் இரும்பு சட்டம் காந்தமானதால் ஏற்பட்ட காந்தப்புலங்களின் கூடுதலாகும்.

132. லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு_________

A) qvb

B) QvB

C) qVB

D) qvB

விளக்கம்: லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு qvB.

133. லாரன்ஸ் விசைக்கும், மின்துகளின் திசைவேகத்திற்கும் உள்ளகோணம்_________

A) 80˚

B) 70˚

C) 60˚

D) 90˚

விளக்கம்: லாரன்ஸ் விசைக்கும், மின்துகளின் திசைவேகத்திற்கும் உள்ளகோணம் 90˚ ஆகும்.

134. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] லாரன்ஸ் விசையானது திசைவேகத்தின் திசையை மாற்றாது.

2] லாரன்ஸ் விசையானது திசைவேகத்தின் எண்மதிப்பை மாற்றும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: லாரன்ஸ் விசையானது திசைவேகத்தின் திசையை மட்டும் மாற்றும். ஆனால் திசைவேகத்தின் எண்மதிப்பை மாற்றாது.

135. சைக்ளோட்ரான் அலைவு நேரம் _________

A) T = 2πm/ qB

B) t = 2πm/ qB

C) T = 2πm/ qb

D) T = 2m/ qB

விளக்கம்: சைக்ளோட்ரான் அலைவு நேரம்: T = 2πm/ qB

136. சைக்ளோட்ரான் அதிர்வெண்_________ என்று அழைக்கலாம்.

A) சுழற்சி அதிர்வெண்

B) மீட்பு அதிர்வெண்

C) நிலையான அதிர்வெண்

D) சுழல் அதிர்வெண்

விளக்கம்: சைக்ளோட்ரான் அதிர்வெண் அல்லது சுழல் அதிர்வெண் என்று அழைக்கலாம்.

137. மருத்துவத்தில் சுவாச வாயுக்களின் அளவை அளந்தறிய_________ பயன்படுகிறது.

A) நிறமானி

B) நிறைமாலைமானி

C) ஐசோடோப்புகள்

D) ஐசோடோன்கள்

விளக்கம்: மருத்துவத்தில் சுவாச வாயுக்களின் அளவை அளந்தறியவும், உயிரியலில் ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சியில் ஏற்படும் எதிர்வினை இயக்கதத்தைக் கண்டறியவும் பயன்படுகிறது.

138. _________ ஐசோடோப்புகளைப் பிரித்தெடுக்க திசைவேகத் தேர்ந்தெடுப்பானின் தத்துவம் பெயின்பிரிட்ஜ் நிறைமாலைமானியில் பயன்படுத்தப்படுகிறது.

A) எலக்ட்ரான்

B) புரோட்டான்

C) ஐசோடோப்புகள்

D) ஐசோடோன்கள்

விளக்கம்: ஐசோடோப்புகளைப் பிரித்தெடுக்க திசைவேகத் தேர்ந்தெடுப்பானின் தத்துவம் பெயின்பிரிட்ஜ் நிறைமாலைமானியில் பயன்படுத்தப்படுகிறது.

139. கூற்று(A): முறையான மின்புலம் மற்றும் காந்தப்புலங்களை தேர்வு செய்வதன் மூலம் குறிப்பிட்ட வேகத்தில் செல்லும் மின்துகளை தேர்வு செய்ய இயலும்.

காரணம்(R): இதுபோன்ற புலங்களின் அமைப்பிற்கு திசைவேகத் தேர்ந்தெடுப்பான் என்று பெயர்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: முறையான மின்புலம் மற்றும் காந்தப்புலங்களை தேர்வு செய்வதன் மூலம் குறிப்பிட்ட வேகத்தில் செல்லும் மின்துகளை தேர்வு செய்ய இயலும். இதுபோன்ற புலங்களின் அமைப்பிற்கு திசைவேகத் தேர்ந்தெடுப்பான் என்று பெயர்.

140. கூற்று(A): மின்துகள்களை முடுக்குவித்து, அவை பெறும் இயக்க ஆற்றலைப் பயன்படுத்த கருவி உதவுகிறது.

காரணம்(R): இந்த கருவியே சைக்ளோட்ரான் ஆகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: மின்துகள்களை முடுக்குவித்து, அவை பெறும் இயக்க ஆற்றலைப் பயன்படுத்த உதவும் கருவியே சைக்ளோட்ரான் ஆகும்.

141. சைக்ளோட்ரானை_________ என்றும் அழைக்கலாம்.

A) குறைந்த ஆற்றல் முடுக்குவிப்பான்

B) நேர் ஆற்றல் முடுக்குவிப்பான்

C) உயர் ஆற்றல் முடுக்குவிப்பான்

D) எதிர் ஆற்றல் முடுக்குவிப்பான்

விளக்கம்: சைக்ளோட்ரானை உயர் ஆற்றல் முடுக்குவிப்பான் என்றும் அழைக்கலாம்.

142. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] சைக்ளோட்ரான் லாரன்ஸ் மற்றும் லிவிங்ஸ்டன் என்பவர்களால் உருவாக்கப்பட்டது.

2] சைக்ளோட்ரான் 1935 இல் உருவாக்கப்பட்டது. .

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: சைக்ளோட்ரான் லாரன்ஸ் மற்றும் லிவிங்ஸ்டன் என்பவர்களால் 1934 இல் உருவாக்கப்பட்டது.

143. கீழ்க்கண்டவற்றுள் சைக்ளோட்ரானின் வரம்புகள் சரியானவை எவை?

1] அயனியின் வேகம் வரம்புக்குட்பட்டது.

2] எலக்ட்ரானை முடுக்குவிக்க இயலாது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: சைக்ளோட்ரானின் வரம்புகள் (அ) அயனியின் வேகம் வரம்புக்குட்பட்டது. (ஆ) எலக்ட்ரானை முடுக்குவிக்க இயலாது. (இ) மின்னூட்டமற்ற துகள்களை முடுக்குவிக்க இயலாது.

144. ஒரு புரோட்டான் மற்றும் ஒரு நியூட்ரான் கொண்ட தொகுப்பு_________

A) மியூட்ரான்

B) டெட்ரான்

C) டியூட்ரான்

D) ஹெக்ட்ரான்

விளக்கம்: டியூட்ரான்களை (ஒரு புரோட்டான் மற்றும் ஒரு நியூட்ரான் கொண்ட தொகுப்பு)

145. கூற்று(A): டியூட்ரான்களை முடுக்கமுடியும்.

காரணம்(R): இதன் மின்னூட்டம், ஒரு புரோட்டானின் மின்னூட்டத்திற்குச் சமமானதாகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: டியூட்ரான்களை முடுக்கமுடியும். ஏனெனில், இதன் மின்னூட்டம், ஒரு புரோட்டானின் மின்னூட்டத்திற்குச் சமமானதாகும்.

146. _________சைக்ளோட்ரான் கொண்டு முடுக்க இயலாது.

A) மியூட்ரான்

B) டெட்ரான்

C) நியூட்ரான்

D) ஹெக்ட்ரான்

விளக்கம்: நியூட்ரானை (சுழி மின்னூட்டம் கொண்ட துகள்) சைக்ளோட்ரான் கொண்டு முடுக்க இயலாது.

147. _________ டியூட்ரான் கொண்டு மோதச் செய்யும்போது உயர் ஆற்றலுடைய நியூட்ரான் கற்றை வெளியேறும்.

A) டிரிடியம்

B) பெரிலியம்

C) குரோமியம்

D) மக்னிசியம்

விளக்கம்: பெரிலியத்தை, டியூட்ரான் கொண்டு மோதச் செய்யும்போது உயர் ஆற்றலுடைய நியூட்ரான் கற்றை வெளியேறும்.

148. கூற்று(A): நியூட்ரான் கற்றையை புற்றுநோய் தாக்கப்பட்ட பகுதியில் செலுத்தும்போது அது புற்றுநோய் செல்லின் DNA வைத்தாக்கி அழிக்கும்.

காரணம்(R): இதற்கு வேக – நியூட்ரான் புற்றுநோய் சிகிச்சை முறை என்று பெயர்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: நியூட்ரான் கற்றையை புற்றுநோய் தாக்கப்பட்ட பகுதியில் செலுத்தும்போது அது புற்றுநோய் செல்லின் DNA வைத்தாக்கி அழிக்கும். இதற்கு வேக – நியூட்ரான் புற்றுநோய் சிகிச்சை முறை (Fast – neutron cancer therapy) என்று பெயர்.

149. கூற்று(A): காந்தப்புலத்தின் திசைக்கு இணையாக மின்னோட்டம் பாயும் கடத்தியை வைக்கும்போது, இவற்றுக்கிடையேயான கோணம் θ = 0˚.

காரணம்(R): எனவே மின்னோட்டம் பாயும் கடத்தி உணரும் விசை சுழியாகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: காந்தப்புலத்தின் திசைக்கு இணையாக மின்னோட்டம் பாயும் கடத்தியை வைக்கும்போது, இவற்றுக்கிடையேயான கோணம் θ = 0˚. எனவே மின்னோட்டம் பாயும் கடத்தி உணரும் விசை சுழியாகும்.

150. கூற்று(A): காந்தப்புலத்தின் திசைக்கு செங்குத்தாக மின்னோட்டம் பாயும் கடத்தியைவைக்கும்போது, இவற்றுக்கிடையேயான கோணம் θ = 90˚.

காரணம்(R): எனவே, மின்னோட்டம் பாயும் கடத்தி சுழியாகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: காந்தப்புலத்தின் திசைக்கு செங்குத்தாக மின்னோட்டம் பாயும் கடத்தியைவைக்கும்போது, இவற்றுக்கிடையேயான கோணம் θ = 90˚. எனவே, மின்னோட்டம் பாயும் கடத்தி பெரும விசையை உணரும்.

151. உலோகத்தண்டு வழுக்காமல் நிலையாக சாய்தளத்தின்மீது நிற்க செலுத்த வேண்டிய மின்னோட்டம்_________

A) 9.9 A

B) -9.9 A

C) 9.8 A

D) -9.8 A

விளக்கம்: உலோகத்தண்டு வழுக்காமல் நிலையாக சாய்தளத்தின்மீது நிற்க செலுத்த வேண்டிய மின்னோட்டம் 9.8 A ஆகும்.

152. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] θ = 90° அல்லது வளையத்தின் தளம் காந்தப்புலத்திற்கு இணையாக உள்ளபோது, மின்னோட்ட வளையத்தின் மீதான திருப்புவிசை பெருமம் ஆகும்.

2] θ = 0°/180° அல்லது வளையத்தின் தளம் காந்தப்புலத்திற்கு செங்குத்தாக உள்ளபோது, மின்னோட்ட வளையத்தின் மீதான திருப்புவிசை சுழியாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: θ = 90° அல்லது வளையத்தின் தளம் காந்தப்புலத்திற்கு இணையாக உள்ளபோது, மின்னோட்ட வளையத்தின் மீதான திருப்புவிசை பெருமம் ஆகும். θ = 0°/180° அல்லது வளையத்தின் தளம் காந்தப்புலத்திற்கு செங்குத்தாக உள்ளபோது, மின்னோட்ட வளையத்தின் மீதான திருப்புவிசை சுழியாகும்.

153. ஒரு மின்சுற்றின் வழியே பாயும் மின்னோட்டத்தைக் கண்டறியப் பயன்படும் ஒரு கருவி_________

A) இயங்குசுருள் வோல்ட் மீட்டர்

B) இயங்குசுருள் அம்மீட்டர்

C) இயங்குசுருள் கால்வனோ மீட்டர்

D) இயங்குசுருள் மீட்டர்

விளக்கம்: ஒரு மின்சுற்றின் வழியே பாயும் மின்னோட்டத்தைக் கண்டறியப் பயன்படும் ஒரு கருவி, இயங்குசுருள் கால்வனோமீட்டராகும்.

154. கால்வனோமீட்டர் மாறிலி_________

A) G = K/ Nab

B) G = K/ NaB

C) G = K/ NAB

D) G = k/ NAB

விளக்கம்: G = K/ NAB என்பது கால்வனோமீட்டர் மாறிலி அல்லது கால்வனோமீட்டரின் மின்னோட்ட சுருக்கக் கூற்றெண் எனப்படும்.

155. நாம் பயன்படுத்தும் பெரும்பான்மையான கால்வனோமீட்டர்கள்_________ கால்வனோ மீட்டர்களாகும்.

A) நேர் முள் வகை

B) குறிமுள் வகை

C) எதிர் முள் வகை

D) பெருமம் முள் வகை

விளக்கம்: நாம் பயன்படுத்தும் பெரும்பான்மையான கால்வனோமீட்டர்கள் குறிமுள் வகை கால்வனோ மீட்டர்களாகும்.

156. _________ குறைந்த மின்தடை கொண்ட ஒரு கருவியாகும்.

A) வோல்ட் மீட்டர்

B) கால்வனோ மீட்டர்

C) அம்மீட்டர்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: அம்மீட்டர் குறைந்த மின்தடை கொண்ட ஒரு கருவியாகும்.

157. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] அம்மீட்டர் எப்போதும் மின்சுற்றில் தொடராகவே இணைக்க வேண்டும்.

2] அம்மீட்டர் ஓர் நல்லியல்பு அம்மீட்டர் சுழி மின்தடையைப் பெற்றிருக்கும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: எப்போதும் மின்சுற்றில் தொடராகவே இணைக்க வேண்டும். ஓர் நல்லியல்பு அம்மீட்டர் சுழி மின்தடையைப் பெற்றிருக்கும்.

158. மின்சுற்றில் ஏதேனும் இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டை அளவீடு செய்யப் பயன்படும் கருவி_________

A) வோல்ட் மீட்டர்

B) கால்வனோ மீட்டர்

C) அம்மீட்டர்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மின்சுற்றில் ஏதேனும் இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டை அளவீடு செய்யப் பயன்படும் கருவியே வோல்ட்மீட்டராகும்.

159. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] வோல்ட்மீட்டர் மின்சுற்றிலிருந்து எவ்விதமான மின்னோட்டத்தையும் பெறாது.

2] வோல்ட்மீட்டர் உயர்ந்த மின்தடையைப் பெற்றிருக்கும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: வோல்ட்மீட்டர் மின்சுற்றிலிருந்து எவ்விதமான மின்னோட்டத்தையும் பெறாது. வோல்ட்மீட்டர் உயர்ந்த மின்தடையைப் பெற்றிருக்கும்.

160. கூற்று(A): வோல்ட்மீட்டரின் மின்தடை மிக அதிகம்.

காரணம்(R): மின்சுற்றில் எந்த பகுதியின் மின்னழுத்த வேறுபாட்டைக் கண்டறிய வேண்டுமோ அதற்கு பக்க இணைப்பாக வோல்ட்மீட்டரை இணைக்க வேண்டும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வோல்ட்மீட்டரின் மின்தடை மிக அதிகம் என்பதால், மின்சுற்றில் எந்த பகுதியின் மின்னழுத்த வேறுபாட்டைக் கண்டறிய வேண்டுமோ அதற்கு பக்க இணைப்பாக வோல்ட்மீட்டரை இணைக்க வேண்டும்.

161. கூற்று(A): இரு காந்த முனைகளுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை அல்லது விலக்கு விசையானது, அவற்றின் முனைவலிமைகளின் பெருக்கல் பலனுக்கு நேர்த்தகவிலும், அக்காந்த முனைகளுக்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும்.

காரணம்(R): இதுவேகாந்தவியலின் கூலூம் விதிஆகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: காந்தவியலின் கூலூம் விதியின்படி இரு காந்த முனைகளுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை அல்லது விலக்கு விசையானது, அவற்றின் முனைவலிமைகளின் பெருக்கல் பலனுக்கு நேர்த்தகவிலும், அக்காந்த முனைகளுக்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். „ சீரான காந்தப்புலத்தில் உள்ள காந்த இருமுனை, திருப்புவிசையை உணரும்.

162. காந்தப்பொருட்களின் வகைகள் யாவை?

A) டயாகாந்தப்பொருட்கள்

B) பாரா காந்தப்பொருட்கள்

C) ஃபெர்ரோ காந்தப்பொருட்கள்

D) இவை அனைத்தும்

விளக்கம்: காந்தப்பொருட்கள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன அவை: டயாகாந்தப்பொருட்கள், பாரா காந்தப்பொருட்கள் மற்றும் ஃபெர்ரோ காந்தப்பொருட்கள் ஆகும்.

163. கூற்று(A): வலதுகை பெருவிரல் விதி: வலதுகையின்பெருவிரல் கடத்தியின்வழியே பாயும் மின்னோட்டத்தின் திசையைக் காட்டும் வகையில் பிடிக்கும் போது, கடத்தியை ச் சுற்றி பிடித்திருக்கும் மற்ற விரல்கள் கடத்தியைச் சுற்றி உருவாகும் காந்தப்புலக் கோடுகளின் திசையைக் காட்டும்.

காரணம்(R): இதுவே வலதுகை பெருவிரல் விதிஆகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வலதுகை பெருவிரல் விதி: வலதுகையின்பெருவிரல் கடத்தியின்வழியே பாயும் மின்னோட்டத்தின் திசையைக் காட்டும் வகையில் பிடிக்கும் போது, கடத்தியைச் சுற்றி பிடித்திருக்கும் மற்ற விரல்கள் கடத்தியைச் சுற்றி உருவாகும் காந்தப்புலக் கோடுகளின் திசையைக் காட்டும்.

164. கூற்று(A): வலதுகை திருகு ஒன்றினை திருகு சுழற்றியால் சுழற்றும்போது, திருகு முன்னேறும் திசையில் மின்னோட்டத்தின் திசையும், திருகு சுழலும் திசை கடத்தியைச் சுற்றி உருவாகும் காந்தப்புலத்தின் திசையையும் காட்டும்.

காரணம்(R): இதுவே மேக்ஸ்வெல்லின் வலதுகைதிருகு விதி ஆகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: மேக்ஸ்வெல்லின் வலதுகை திருகுவிதி: வலதுகை திருகு ஒன்றினை திருகு சுழற்றியால் சுழற்றும்போது, திருகு முன்னேறும் திசையில் மின்னோட்டத்தின் திசையும், திருகு சுழலும் திசை கடத்தியைச் சுற்றி உருவாகும் காந்தப்புலத்தின் திசையையும் காட்டும்.

165. கூற்று(A): இடதுகையின் ஆள்காட்டிவிரல், நடுவிரல் மற்றும் பெருவிரல் மூன்றையும் ஒன்றுக்கொன்று செங்குத்ததாக நீட்டும்போது, ஆள்காட்டிவிரல் காந்தப்புலத்தின் திசையையும், நடுவிரல் மின்னோட்டத்தின் திசையையும் காட்டினால் பெருவிரல் கடத்தியின் மீது செயல்படும் விசையின் திசையைக் காட்டும்.

காரணம்(R): இதுவே பிளெமிங்கின் இடதுகை விதி ஆகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: பிளெமிங்கின் இடதுகை விதி: இடதுகையின் ஆள்காட்டிவிரல், நடுவிரல் மற்றும் பெருவிரல் மூன்றையும் ஒன்றுக்கொன்று செங்குத்ததாக நீட்டும்போது, ஆள்காட்டிவிரல் காந்தப்புலத்தின் திசையையும், நடுவிரல் மின்னோட்டத்தின் திசையையும் காட்டினால் பெருவிரல் கடத்தியின் மீது செயல்படும் விசையின் திசையைக் காட்டும்.

166. கூற்று(A): வெற்றிடத்தில் ஒரு மீட்டர் இடைவெளியில் பிரித்து வைக்கப்பட்டுள்ள முடிவிலா நீளம் கொண்ட இரு இணைகடத்திகள் ஒவ்வொன்றின் வழியாகப்பாயும் மின்னோட்டத்தினால், ஒவ்வொரு கடத்தியும் ஓரலகு நீளத்திற்கு 2 × 10-7N விசையை உணர்கிறது.

காரணம்(R): ஒவ்வொரு கடத்தியின் வழியாகவும் பாயும் மின்னோட்டத்தின் அளவு ஒரு ஆம்பியராகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வெற்றிடத்தில் ஒரு மீட்டர் இடைவெளியில் பிரித்து வைக்கப்பட்டுள்ள முடிவிலா நீளம் கொண்ட இரு இணைகடத்திகள் ஒவ்வொன்றின் வழியாகப்பாயும் மின்னோட்டத்தினால், ஒவ்வொரு கடத்தியும் ஓரலகு நீளத்திற்கு 2 × 10-7N விசையை உணர்ந்தால், ஒவ்வொரு கடத்தியின் வழியாகவும் பாயும் மின்னோட்டத்தின் அளவு ஒரு ஆம்பியராகும்.

167. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்னோட்டம் பாயும் கம்பிச்சுருள் ஒன்றை சீரான காந்தப்புலத்தில் வைக்கும்போது அக்கம்பிச் சுருளின் மீது செயல்படும் நிகரவிசை சுழி.

2] நிகர திருப்புவிசை சுழியல்ல.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்னோட்டம் பாயும் கம்பிச்சுருள் ஒன்றை சீரான காந்தப்புலத்தில் வைக்கும்போது அக்கம்பிச் சுருளின் மீது செயல்படும் நிகரவிசை சுழி. ஆனால் நிகர திருப்புவிசை சுழியல்ல.

168. நிகரத்திருப்பு விசையின் எண்மதிப்பு____________

A) τ = NABI secθ

B) τ = NABI cosθ

C) τ = NABI tanθ

D) τ = NABI sinθ

விளக்கம்: நிகரத்திருப்பு விசையின் எண்மதிப்பு τ = NABI sinθ ஆகும்.

169. கூற்று(A): ஒரு கால்வனோ மீட்டரை தகுந்த நெடுக்கமுள்ள அம்மீட்டராக மாற்ற, கால்வனோ மீட்டருடன் பக்க இணைப்பில் குறைந்த மின்தடை S ஒன்றை அதன் நெடுக்கத்திற்கு ஏற்ப இணைக்க வேண்டும்.

காரணம்(R): இக்குறைந்த மின்தடைக்கு இணைதடம் என்று பெயர்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு கால்வனோ மீட்டரை தகுந்த நெடுக்கமுள்ள அம்மீட்டராக மாற்ற, கால்வனோ மீட்டருடன் பக்க இணைப்பில் குறைந்த மின்தடை S ஒன்றை அதன் நெடுக்கத்திற்கு ஏற்ப இணைக்க வேண்டும். இக்குறைந்த மின்தடைக்கு இணைதடம் என்று பெயர்.

170. சமநீளமுடைய மூன்று கம்பிகள் வளைக்கப்பட்டு சுற்றுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒன்று வட்ட வடிவிலும் மற்றொன்று அரை வட்ட வடிவிலும் மூன்றாவது சதுர வடிவிலும் உள்ளன. மூன்று சுற்றுகளின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் செலுத்தப்பட்டு சீரான காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன. மூன்று சுற்றுகளின் எந்த வடிவமைப்பில் உள்ள சுற்று பெரும திருப்பு விசையை உணரும் ?.

A) வட்ட வடிவம்

B) அரைவட்ட வடிவம்

C) சதுர வடிவம்

D) இவை அனைத்தும்

171. q மின்னூட்டமும், m நிறையும் மற்றும் r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று ω என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன

A) q/ m

B) 2q/ m

C) q/ 2m

D) q/ 4m

172. ஜீப்ராபின்ச் (Zebrafinch) என்ற பறவை, அதன் விழித்திரையில் உள்ள____________ என்ற புரதத்தைக் கொண்டு, புவிகாந்தப்புலத்தை உணர்ந்து அது பறக்கும் திசையை அறிந்துகொள்கிறது.

A) கிரிப்டோகுரோம்ஸ்

B) டெரிப்டோகுரோம்ஸ்

C) பெரிப்டோகுரோம்ஸ்

D) கெரிப்டோகுரோம்ஸ்

விளக்கம்: ஜீப்ராபின்ச் (Zebrafinch) என்ற பறவை, அதன் விழித்திரையில் உள்ள கிரிப்டோகுரோம்ஸ் (Protein Cryptochromes – Cry 4) என்ற புரதத்தைக் கொண்டு, புவிகாந்தப்புலத்தை உணர்ந்து அது பறக்கும் திசையை அறிந்துகொள்கிறது.

173. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] உயர்ந்த குறுக்குக்கோட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு வானில் பளிச்சிடும் வெளிர் நீல ஒளி தோன்றுவதை கண்டிருப்பார்கள்.

2] வானில் தோன்றும் இந்த ஆச்சரியமான காட்சிக்கு வடதுருவ ஒளித்தோற்றம் அல்லது தென்துருவ ஒளித்தோற்றம் என்று பெயர்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: உயர்ந்த குறுக்குக்கோட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் (ஆர்டிக் அல்லது அண்டார்டிக் பகுதிக்கு அருகில்) இரவு வானில் பளிச்சிடும் வெளிர் நீல ஒளி தோன்றுவதை கண்டிருப்பார்கள். வானில் தோன்றும் இந்த ஆச்சரியமான காட்சிக்கு வடதுருவ ஒளித்தோற்றம் அல்லது தென்துருவ ஒளித்தோற்றம் என்று பெயர். சில நேரங்களில் துருவ ஒளி என்றும் இதனை அழைப்பார்கள்.

174. கூற்று(A): ஓரிடத்தின் காந்தப்புலம் அதன் அருகிலுள்ள பகுதிகளின் காந்தப்புலத்திலிருந்து எந்த அளவில் மாறுபடுகிறது என்று அளவிடப்படுகிறது.

காரணம்(R): இம்முறைக்கு ‘காந்தமானி அளவியல்’ என்று பெயர்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஓரிடத்தின் காந்தப்புலம் அதன் அருகிலுள்ள பகுதிகளின் காந்தப்புலத்திலிருந்து எந்த அளவில் மாறுபடுகிறது என்று அளவிடப்படுகிறது. இம்முறைக்கு ‘காந்தமானி அளவியல்’ என்று பெயர்.

175. பழங்கால புதையுண்ட சுவர், மண்பானைகள், செங்கற்கள், கல்லறைகள், நினைவிடங்கள், வாழ்விடங்கள் உள்ளிட்ட பல தொல்லியல் பொருட்களில் காணப்படுவது____________

A) ஹேமடைட்

B) டோலுரைட்

C) சிட்ரைட்

D) மேக்னடைட்

விளக்கம்: பழங்கால புதையுண்ட சுவர், மண்பானைகள், செங்கற்கள், கல்லறைகள், நினைவிடங்கள், வாழ்விடங்கள் உள்ளிட்ட பல தொல்லியல் பொருட்களில் காணப்படும் மேக்னடைட் என்ற கனிமமும் அதனைச் சார்ந்த கனிமங்களுமே ஆகும்.

12th Science Lesson 9 Questions in Tamil

9] கதிர் ஒளியியல்

1. கூற்று (i): துகள் என்பது மிகப்பெரிய அளவிலான குவிக்கப்பட்ட பருப்பொருள் ஆகும்.

கூற்று (ii): அலை என்பது அகன்ற பரவலான ஆற்றலாகும்.

A) கூற்று i சரி, ii தவறு

B) கூற்று i தவறு, ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

விளக்கம்: துகள் என்பது மிகச்சிறிய அளவிலான குவிக்கப்பட்ட பருப்பொருள் ஆகும். அலை என்பது அகன்ற பரவலான ஆற்றலாகும். மேலும் இவை இரண்டும் ஆற்றல் மற்றும் உந்தத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் திறன் பெற்றவை.

2. மின்காந்த கதிர்கள் கீழ்க்கண்ட எந்த சூழ்நிலைகளில் அலைகளாகக் கருதப்படுகின்றன_______________

A) குறுக்கீட்டு விளைவு

B) விளிம்பு விளைவு

C) தள விளைவு

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: தகுந்து சூழ்நிலைகளில் குறுக்கீட்டு விளைவு, விளிம்பு விளைவு மற்றும் தள விளைவு ஆகிய அலைப்பண்புகளை வெளிப்படுத்துவதால் மின்காந்த கதிர்கள் ஆனது அலைகளாகக் கருதப்படுகின்றன.

3. மின்காந்த கதிர்கள் கீழ்க்கண்ட எந்த சூழ்நிலைகளில் துகள்களாகக் கருதப்படுகின்றன.

A) கரும்பொருள் கதிர்வீச்சு

B) ஒளிமின் விளைவு

C) விளம்பு விளைவு

D) A, B இரண்டும்

விளக்கம்: தகுந்து சூழ்நிலைகளில் குறுக்கீட்டு விளைவு, விளிம்பு விளைவு மற்றும் தள விளைவு ஆகிய அலைப்பண்புகளை வெளிப்படுத்துவதால் மின்காந்த கதிர்கள் ஆனது அலைகளாகக் கருதப்படுகின்றன. அதே போல கரும்பொருள் கதிர்வீச்சு, ஒளிமின் விளைவு ஆகிய வேறு சில சூழ்நிலைகளில் மின்காந்த கதிர்கள் ஆனது துகள்களாகக் கருதப்படுகின்றன.

4. குவாண்டம் இயந்திரவியல் உங்களுக்கு ஆழ்ந்த அதிர்ச்சியை தரவில்லையெனில், அதனை நீங்கள் முழுமையாக இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று கூறியவர்___________

A) ஐன்ஸ்டீன்

B) தாமஸ் ஆல்வா எடிசன்

C) நீல்ஸ் போர்

D) ரூதர்போர்டு

5. உலோகங்களின் வெளிக்கூட்டில் அணுக்கருக்களுடன் தளர்வாக பிணைக்கப்பட்டுள்ள துகள்_____________

A) எலக்ட்ரான்

B) புரோட்டான்

C) நீயூட்ரான்

D) பிளாஸ்மா

விளக்கம்: உலோகங்களின் வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான்கள் அணுக்கருக்களுடுன் தளர்வாக பிணைக்கப்பட்டுள்ளன. அறை வெப்பநிலைகளில் கூட, அதிக அளவிலான கட்டுறா எலக்ட்ரான்கள் உலோகத்தின் உள்ளே வெவ்வேறு திசைகளில் இயங்கிக் கொண்டுள்ளன. உலோகத்தினுள் இந்த எலக்ட்ரான்கள் கட்டுப்பாடின்றி இயங்கினாலும் உலோகத்தின் பரப்பை விட்டு வெளிவரமுடிவதில்லை.

6. உலோகத்தின் மேற்பரப்பிலிருந்து கட்டுறா எலக்ட்ரான்களை வெளியேறவிடாமல் தடுக்கும் மின்னழுத்த அரண்_________என அழைக்கப்படுகிறது.

A) பரப்பு அரண்

B) மின்னழுத்த அரண்

C) அழுத்த அரண்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: உலோகத்தின் மேற்பரப்பிலிருந்து கட்டுறா எலக்ட்ரான்களை வெளியேறவிடாமல் தடுக்கும் மின்னழுத்த அரண், பரப்பு அரண் என அழைக்கப்படுகிறது.

7. பொருளின் எந்தவொரு பரப்பிலிருந்தும் எலக்ட்ரான் வெளியேற்றப்படும் நிகழ்வு_______________எனப்படுகிறது.

A) எலக்ட்ரான் பிறழ்வு

B) எலக்ட்ரான் ஏற்பு

C) எலக்ட்ரான் உமிழ்வு

D) எலக்ட்ரான் சிதறல்

விளக்கம்: பொருளின் எந்தவொரு பரப்பிலிருந்தும் எலக்ட்ரான் வெளியேற்றப்படும் நிகழ்வு எலக்ட்ரான் உமிழ்வு எனப்படும்.

8. உலோகத்தின் பரப்பிலிருந்து எலக்ட்ரானை வெளியேற்றத் தேவைப்படும் சிறும ஆற்றல்____________எனப்படுகிறது.

A) எலக்ட்ரான் உமிழ்வு

B) உலோகத்தின் வெளியேற்று ஆற்றல்

C) உலோகத்தின் உள்ளேற்றும் ஆற்றல்

D) அலோகத்தின் வெளியேற்று ஆற்றல்

விளக்கம்: உலோகத்தின் பரப்பிலிருந்து எலக்ட்ரானை வெளியேற்றத் தேவைப்படும் சிறும ஆற்றல் உலோகத்தின் வெளியேற்று ஆற்றல் எனப்படும். இது ø0 என குறிக்கப்படுகிறது. வெளியேற்று ஆற்றலின் அலகு எலக்ட்ரான் வோல்ட் (eV) ஆகும்.

9. கீழ்க்கண்டக் கூற்றுக்களில் சரியானதைக் கண்டறி:

1) ஆற்றலின் SI அலகு ஜீல்.

2) அணு மற்றும் அணுக்கரு இயற்பியலில் ஆற்றல் ஆனது எலக்ட்ரான் வோல்ட் எனும் அலகினால் குறிக்கப்படுகிறது.

3) ஒரு எலக்ட்ரான் வோல்ட் என்பது 1 V மின்னழுத்த வேறுபாட்டினால் முடுக்கப்படும் போது புரோட்டான் பெறும் இயக்க ஆற்றலின் அளவாகும்.

A) 1, 2 மட்டும் சரி

B) 2, 3 மட்டும் சரி

C) 1, 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: ஆற்றலின் SI அலகு ஜீல் ஆகும். ஆனால் அணு மற்றும் அணுக்கரு இயற்பியலில் ஆற்றல் ஆனது எலக்ட்ரான் வோல்ட் எனும் அலகினால் குறிக்கப்படுகிறது. ஒரு எலக்ட்ரான் வோல்ட் என்பது 1 V மின்னழுத்த வேறுபாட்டினால் முடுக்கப்படும் போது எலக்ட்ரான் பெறும் இயக்க ஆற்றலின் அளவாகும்.

10. ஒரு எலக்ட்ரான் வோல்ட் என்பது____________

A) 1.602 × 10-19 J

B) 2.602 × 10-19 J

C) 3.602 × 10-19 J

D) 4.602 × 10-19 J

11. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

A) சீசியம் – 1.14

B) பொட்டாசியம் – 2.30

C) சோயம் – 3.75

D) கால்சியம் – 3.20

A) 1, 2, 3 மட்டும் சரி

B) 2, 3, 4 மட்டும் சரி

C) 1, 2, 4 மட்டும் சரி

D) 1, 3, 4 மட்டும் சரி

விளக்கம்:

A) சீசியம் – 1.14

B) பொட்டாசியம் – 2.30

C) சோயம் – 2.75

D) கால்சியம் – 3.20

12. பொருத்துக:

உலோகம் வெளியேற்று ஆற்றல்(eV)

A) மாலிப்டீனம் – 1. (4.49)

B) காரீயம் – 2. (4.28)

C) அலுமினியம் – 3. (4.17)

D) பாதரசம் – 4. (4.25)

A) 1 2 3 4

B) 2 3 4 1

C) 3 4 2 1

D) 4 3 2 1

விளக்கம்:

உலோகம் வெளியேற்று ஆற்றல்(eV)

A) மாலிப்டீனம் – 1. (4.17)

B) காரீயம் – 2. (4.25)

C) அலுமினியம் – 3. (4.28)

D) பாதரசம் – 4. (4.49)

13. பொருத்துக:

உலோகம் வெளியேற்று ஆற்றல் (eV)

A) தாமிரம் – 1. (5.65)

B) வெள்ளி – 2. (5.15)

C) நிக்கல் – 3. (4.70)

D) பிளாட்டினம் – 4. (4.65)

A) 1 2 3 4

B) 2 3 4 1

C) 3 4 2 1

D) 4 3 2 1

விளக்கம்:

உலோகம் வெளியேற்று ஆற்றல்(eV)

A) தாமிரம் – 1. (4.65)

B) வெள்ளி – 2. (4.70)

C) நிக்கல் – 3. (5.15)

D) பிளாட்டினம் – 4. (5.65)

14. ஒரு உலோகத்தை உயர் வெப்பநிலைக்குச் சூடேற்றும் போது, உலோகத்தின் பரப்பில் உள்ள கட்டுறா எலக்ட்ரான்கள் வெப்ப ஆற்றல் வடிவில் போதுமான ஆற்றலைப் பெற்று பரப்பிலிருந்து வெளியேறும் நிகழ்விற்கு___________என்று பெயர்.

A) வெப்ப உமிழ்வு

B) வெப்ப அயனி உமிழ்வு

C) புல உமிழ்வு

D) ஒளிமின் உமிழ்வு

விளக்கம்: ஒரு உலோகத்தை உயர் வெப்பநிலைக்குச் சூடேற்றும் போது, உலோகத்தின் பரப்பில் உள்ள கட்டுறா எலக்ட்ரான்கள் வெப்ப ஆற்றல் வடிவில் போதுமான ஆற்றலைப் பெற்று பரப்பிலிருந்து வெளியேறுகின்றன. இவ்வகை உமிழ்வு வெப்ப அயனி உமிழ்வு எனப்படும்.

15. எலக்ட்ரான் வெப்ப அயனி உமிழ்விற்கு சிறந்த எடுத்துக்காட்டு_________

A) கேத்தோடு கதிர் குழாய்கள்

B) எலக்ட்ரான் நுண்ணோக்கிகள்

C) X-கதிர் குழாய்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: வெப்ப அயனி உமிழ்வின் செறிவு ஆனது பயன்படுத்தப்படும் உலோகம் மற்றும் அதன் வெப்பநிலையைப் பொருத்தது. எ.கா. கேத்தோடு கதிர் குழாய்கள், எலக்ட்ரான் நுண்ணோக்கிகள், X-கதிர் குழாய்கள் போன்றவை.

16. மிக வலிமையான மின்புலத்தை உலோகத்தின் குறுக்கே அளிக்கும் போது___________ஏற்படுகிறது.

A) வெப்ப உமிழ்வு

B) வெப்ப அயனி உமிழ்வு

C) புல உமிழ்வு

D) ஒளிமின் உமிழ்வு

விளக்கம்: மிக வலிமையான மின்புலத்தை உலோகத்தின் குறுக்கே அளிக்கும் போது மின்புல உமிழ்வு ஏற்படுகிறது. இந்த வலிமையான மின்புலம் கட்டுறா எலக்ட்ரான்களை கவர்ந்திழுத்து, அவை பரப்பு மின்னழுத்த அரணைக் கடந்து வெளியேற உதவுகின்றது.

17. வரிக்கண்ணோட்ட எலக்ட்ரான் நுண்ணோக்கியில் உண்டாகும் உமிழ்வு__________

A) வெப்ப உமிழ்வு

B) வெப்ப அயனி உமிழ்வு

C) புல உமிழ்வு

D) ஒளிமின் உமிழ்வு

விளக்கம்: மிக வலிமையான மின்புலத்தை உலோகத்தின் குறுக்கே அளிக்கும் போது மின்புல உமிழ்வு ஏற்படுகிறது. இந்த வலிமையான மின்புலம் கட்டுறா எலக்ட்ரான்களை கவர்ந்திழுத்து, அவை பரப்பு மின்னழுத்த அரணைக் கடந்து வெளியேற உதவுகின்றது. எ.கா. புல உமிழ்வு வரிக்கண்ணோட்ட எலக்ட்ரான் நுண்ணோக்கிகள், புல உமிழ்வு காட்சிக் கருவி போன்றவை.

18. கீழ்க்கண்டவற்றுள் ஒளிமின் உமிழ்வு பற்றியக் கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.

1) குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட மின்காந்தக் கதிர்வீச்சு உலோகப் பரப்பின் மீது படும்போது, ஆற்றலானது கதிர்வீச்சில் இருந்து கட்டுறா எலக்ட்ரான்களுக்கு மாற்றப்படுகிறது.

2) கட்டுறா எலக்ட்ரான்கள் பரப்பு அரணைக் கடந்து வெளியேறுவதற்குப் போதுமான ஆற்றலைப் பெறுவதால் ஒளி மின் உமிழ்வு நடைபெறுகிறது.

3) உமிழப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையானது படுகதிர்வீச்சின் செறிவினைப் பொருத்து அமையாது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட மின்காந்தக் கதிர்வீச்சு உலோகப் பரப்பின் மீது படும்போது, ஆற்றலானது கதிர்வீச்சில் இருந்து கட்டுறா எலக்ட்ரான்களுக்கு மாற்றப்படுகிறது. கட்டுறா எலக்ட்ரான்கள் பரப்பு அரணைக் கடந்து வெளியேறுவதற்குப் போதுமான ஆற்றலைப் பெறுவதால் ஒளி மின் உமிழ்வு நடைபெறுகிறது. உமிழப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையானது படுகதிர்வீச்சின் செறிவினைப் பொருத்து அமையும்.

19. எலக்ட்ரான் ஒளிமின் உமிழ்வு வினைக்கு சிறந்த எடுத்துக்காட்டு__________

A) ஒளி டையோடுகள்

B) ஒளி மின்கலங்கள்

C) ஒளி மின்விளக்குகள்

D) A, B இரண்டும்

20. கூற்று (i): மிக வேகமாகச் செல்லும் எலக்ட்ரான் கற்றை உலோகத்தின் பரப்பின் மீது மோதும்போது அதன் இயக்க ஆற்றல் உலோகப் பரப்பிலுள்ள கட்டுறா எலக்ட்ரான்களுக்கு மாற்றப்படுகிறது.

கூற்று (ii): இதனால் கட்டுறா எலக்ட்ரான்கள் போதிய அளவு இயக்க ஆற்றலைப் பெறுவதால் இரண்டாம் நிலை எலக்ட்ரான் உமிழ்வு ஏற்படுகிறது.

A) கூற்று i சரி, ii தவறு

B) கூற்று i தவறு, ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

21. ஒளியானது மின்காந்த அலைகளே என முடிவு செய்த கொள்கை___________

A) ஹெர்ட்ஸ் கொள்கை

B) ஹால்வாக்ஸ் கொள்கை

C) லெனார்டு கொள்கை

D) மாக்ஸ்வெல் கொள்கை

விளக்கம்: மாக்ஸ்வெல்லின் மின்காந்தக் கொள்கையானது மின்காந்த அலைகளின் இருப்பைக் கணித்தது. மேலும் ஒளியானது மின்காந்த அலைகளே எனவும் அக்கொள்கை முடிவு செய்தது.

22. மின்காந்த அலைகளை முதன்முதலில் கண்டறிந்தவர்____________

A) ஹென்ரிச் ஹெர்ட்ஸ்

B) ஹால்வாக்ஸ்

C) லெனார்டு

D) மாக்ஸ்வெல்

விளக்கம்: 1887 இல் ஹென்ரிச் ஹெர்ட்ஸ் என்பவர் முதன்முதலில் மின்காந்த அலைகளை வெற்றிகரமாக உருவாக்கியும், கண்டறியவும் செய்தார். அவர் உயர் மின்னழுத்த தூண்டு சுருள்களின் முனைகளில் இரு உலோக கோளங்களை இணைத்து, அவற்றின் இடையே மின்னிறக்கத் தீப்பொறியை ஏற்படுத்தினார்.

23. மின்காந்த அலைகளைக் கண்டறிவதற்கு பயன்படுத்தப்பட்ட உலோகம்____________

A) தாமிரம்

B) அலுமினியம்

C) வெள்ளி

D) டங்ஃஸ்டன்

24. ஒளியானது மின்காந்த அலைகள் என்பதை உறுதி செய்தவர்___________

A) ஹென்ரிச் ஹெர்ட்ஸ்

B) ஹால்வாக்ஸ்

C) லெனார்டு

D) மாக்ஸ்வெல்

விளக்கம்: ஒளியானது மின்காந்த அலைகள் என்பதை உறுதி செய்தது ஹெர்ட்ஸின் சோதனை. ஆனால் அதே சோதனைதான் ஒளியானது துகள் இயல்பும் கொண்டுள்ளது. என்பதற்கான முதல் ஆதாரத்தையும் கொடுத்துள்ளது.

25. கீழ்க்கண்டவற்றுள் ஹால்வாக்ஸ் சோதனை பற்றியக் கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:

A) மின்காப்புத் தூணின் மீது வைக்கப்பட்ட தூய்மையான வட்ட வடிவ தாமிரத் தட்டு ஒன்று தங்க இலை மின்னூட்டங்காட்டியுடன் ஒரு கம்பி மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

B) வில் விளக்கிலிருந்து வரும் புறஊதாக் கதிர்களை மின்னூட்டமற்ற துத்தநாகத் தட்டின் மீது படுமாறு செய்தால், தட்டானது நேர்மின்னூட்டத்தைப் பெறுகிறது. ஆகவே இலைகள் விலகல் அடைகின்றன.

C) எதிர் மின்னூட்டம் பெற்ற துத்தநாகத் தட்டின் மீது புற ஊதாக் கதிர்களைப் படுமாறு செய்தால், மின் துகள்கள் வேகமாக கசிவதால் இலைகள் மூடிக் கொள்கின்றன.

D) நேர் மின்னூட்டம் பெற்ற துத்தநாகத் தட்டின் புறஊதாக் கதிர்கள் படும்போது, அது மேலும் நேர்மின்னூட்டம் கொண்டதாக மாறுகிறது. அதனால் இலைகள் மேலும் திறந்து கொள்கின்றன.

விளக்கம்: மின்காப்புத் தூணின் மீது வைக்கப்பட்ட தூய்மையான வட்ட வடிவ துத்தநாகத் தட்டு ஒன்று தங்க இலை மின்னூட்டங்காட்டியுடன் ஒரு கம்பி மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

26. 1902 – ஆம் எலக்ட்ரான் உமிழ்வு நிகழ்வினை விரிவாகச் ஆய்வு செய்தவர்__________

A) ஹென்ரிச் ஹெர்ட்ஸ்

B) ஹால்வாக்ஸ்

C) லெனார்டு

D) மாக்ஸ்வெல்

விளக்கம்: 1902 – ஆம் ஆண்டில், லெனார்டு என்பவர் எலக்ட்ரான் உமிழ்வு நிகழ்வினை விரிவாகச் சோதனை செய்தார்.

27. உலோகத்தட்டு ஒன்றின் மீது ஒளி அல்லது தகுந்த அலைநீளம் கொண்ட மின்காந்தக் கதிர்வீச்சு படும்போது, அதிலிருந்து எலக்ட்ரான்கள் உமிழப்படும் நிகழ்விற்கு___________என்று பெயர்.

A) வெப்ப விளைவு

B) வெப்ப அயனி விளைவு

C) புல விளைவு

D) ஒளிமின் விளைவு

விளக்கம்: உலோகத்தட்டு ஒன்றின் மீது ஒளி அல்லது தகுந்த அலைநீளம் கொண்ட மின்காந்தக் கதிர்வீச்சு படும்போது, அதிலிருந்து எலக்ட்ரான்கள் உமிழப்படுகின்றன. இதுவே ஒளிமின் விளைவு எனப்படும்.

28. புறஊதாக் கதிர்களினால் ஒளிமின் உமிழ்வைத் தரும் உலோகங்கள்___________

A) காட்மியம்

B) துத்தநாகம்

C) மெக்னீசியம்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: காட்மியம், துத்தநாகம், மெக்னீசியம் போன்ற உலோகங்கள் புறஊதாக் கதிர்களினால் ஒளிமின் உமிழ்வைத் தருகின்றன. ஆனால் கார உலோகங்களான லித்தியம், சோடியம், சீசியம் போன்றவை நீண்ட அலைநீளம் கொண்ட அலைகளான கண்ணுறு ஒளியினால் கூட ஒளிமின் உமிழ்வைத் தருகின்றன.

29. கண்ணுறு ஒளியினால் ஒளிமின் உமிழ்வைத் தரும் கார உலோகங்கள்__________

A) லித்தியம்

B) சோடியம்

C) சீசியம்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: காட்மியம், துத்தநாகம், மெக்னீசியம் போன்ற உலோகங்கள் புறஊதாக் கதிர்களினால் ஒளிமின் உமிழ்வைத் தருகின்றன. ஆனால் கார உலோகங்களான லித்தியம், சோடியம், சீசியம் போன்றவை நீண்ட அலைநீளம் கொண்ட அலைகளான கண்ணுறு ஒளியினால் கூட ஒளிமின் உமிழ்வைத் தருகின்றன.

30. தகுந்த அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள் படுவதால் ஒளி எலக்ட்ரான்களை உமிழும் போருள்கள்_________என்றழைக்கப்படுகின்றன.

A) ஒலி உணர் பொருள்கள்

B) ஒளி உணர் பொருள்கள்

C) ஒலி ஏற்பு பொருள்கள்

D) ஒளி ஏற்பு பொருள்கள்

விளக்கம்: தகுந்த அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள் படுவதால் ஒளி எலக்ட்ரான்களை உமிழும் பொருள்களை ஒளி உணர் பொருள்கள் என்றழைக்கப்படுகின்றன.

31. கூற்று (i): ஒளிச்செறிவு என்பது அதன் பொலிவுத்தன்மையைக் குறிக்கும்.

கூற்று (ii): மங்கலான ஒளியை விட பொலிவான ஒளியானது அதிக செறிவினைக் கொண்டிருக்கும்.

A) கூற்று i சரி, ii தவறு

B) கூற்று i தவறு, ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

32. கீழ்க்கண்டவற்றுள் ஒளிமின் விளைவு விதிகளின் கூற்றுகளில் பொருந்தாததைக் கண்டறி:

1) கொடுக்கப்படும் படுகதிர் அதிர்வெண்ணுக்கு, உமிழப்படும் ஒளிஎலக்ட்ரான்களின் எண்ணிக்கையானது படுகதிரின் செறிவிற்கு நேர்த்தகவில் அமையும். மேலும் தெவிட்டு மின்னோட்டமும் ஒளிச்செறிவிற்கு நேர்த்தகவில் அமையும்.

2) ஒளிஎலக்ட்ரான்களின் பெரும இயக்க ஆற்றலானது படுகதிரின் ஒளிச்செறிவைப் பொருத்து அமையும்.

3) கொடுக்கப்படும் உலோகத்திற்கு, ஒளிஎலக்ட்ரான்களின் பெரும இயக்க ஆற்றலானது படுகதிரின் அதிர்வெண்ணிற்கு நேர்த்தகவில் அமையும்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: ஒளிஎலக்ட்ரான்களின் பெரும இயக்க ஆற்றலானது படுகதிரின் ஒளிச்செறிவைப் பொருத்து அமையாது.

33. கீழ்க்கண்டவற்றுள் ஒளிமின் விளைவு விதிகளின் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

1) கொடுக்கப்படும் உலோகப்பரப்பிற்கு, படுகதிரின் அதிர்வெண் ஒரு குறிப்பிட்ட சிறும அதிர்வெண்ணை விட அதிகமாக இருந்தால் மட்டுமே ஒளிஎலக்ட்ரான் உமிழ்வு ஏற்படும். இந்தச் சிறும அதிர்வெண் பயன்தொடக்க அதிர்வெண் எனப்படும்.

2) உலோகத்தின் மீது ஒளி படுவதற்கும் ஒளிஎலக்ட்ரான்கள் உமிழப்படுவதற்கும் இடையே காலதாமதம் இருக்கும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: கொடுக்கப்படும் உலோகப்பரப்பிற்கு, படுகதிரின் அதிர்வெண் ஒரு குறிப்பிட்ட சிறும அதிர்வெண்ணை விட அதிகமாக இருந்தால் மட்டுமே ஒளிஎலக்ட்ரான் உமிழ்வு ஏற்படும். இந்தச் சிறும அதிர்வெண் பயன்தொடக்க அதிர்வெண் எனப்படும். உலோகத்தின் மீது ஒளி படுவதற்கும் ஒளிஎலக்ட்ரான்கள் உமிழப்படுவதற்கும் இடையே காலதாமதம் இருக்காது.

34. மாக்ஸ்வெல்லின் கொள்கையிலிருந்து, ஒளி என்பது___________திசைவேகத்தில் செல்லக்கூடிய பிணைக்கப்பட்ட மின் மற்றும் காந்த அலைவுகளைக் கொண்டுள்ள மின்காந்த அலைகளால் ஆனது.

A) 3 × 108 ms-1

B) 2 × 108 ms-1

C) 4 × 108 ms-1

D) 3 × 1010 ms-1

விளக்கம்: மாக்ஸ்வெல்லின் கொள்கையிலிருந்து, ஒளி என்பது 3 × 108 ms-1 திசைவேகத்தில் செல்லக்கூடிய பிணைக்கப்பட்ட மின் மற்றும் காந்த அலைவுகளைக் கொண்டுள்ள மின்காந்த அலைகளால் ஆனது.

35. மேக்ஸ் பிளாங்க் என்பவர் கரும்பொருளிலிருந்து உமிழப்படும் வெப்பக் கதிர்வீச்சு மற்றும் அதன் கதிர்வீச்சு வரைபடங்களின் வடிவங்களை விவரிக்க குவாண்டம் கொள்கையை எடுத்துரைத்த ஆண்டு____________

A) 1900

B) 1901

C) 1902

D) 1903

விளக்கம்: 1900 இல் மேக்ஸ் பிளாங்க் என்பவர் கரும்பொருளிலிருந்து உமிழப்படும் வெப்பக் கதிர்வீச்சு மற்றும் அதன் கதிர்வீச்சு வரைபடங்களின் வடிவங்களை விவரிக்க குவாண்டம் கொள்கையை எடுத்துரைத்தார்.

36. கீழ்க்கண்ட எந்த கொள்கையின்படி ஒரு பொருளானது அதிக எண்ணிக்கையிலான வெவ்வேறு அதிர்வெண்ணில் அதிர்வடையும் துகள்களைக் கொண்டுள்ளதை விவரிக்கப்படுகிறது.

A) பிளாங்க் கொள்கை

B) ஹால்வாக்ஸ் கொள்கை

C) ஹெர்ட்ஸ் கொள்கை

D) லெனார்டு கொள்கை

விளக்கம்: பிளாங்க் கொள்கைப்படி, ஒரு பொருளானது அதிக எண்ணிக்கையிலான வெவ்வேறு அதிர்வெண்ணில் அதிர்வடையும் துகள்களைக் கொண்டிருக்கும்.

37. ஒளிமின் விளைவை விளக்குவதற்கு பிளாங்க் குவாண்டம் கொள்கையை விரிவாக்கியவர்____________

A) தாமஸ் ஆல்வா எடிசன்

B) சர்.சி.வி ராமன்

C) ஆல்பர்ட் ஐன்ஸ்டின்

D) ரூதர்போர்டு

38. கீழ்க்கண்டவற்றுள் ஃபோட்டானின் சிறப்பியல்புகளில் பொருந்தாதது எது.

1) ஃபோட்டானின் ஆற்றல் கதிர்வீச்சின் அதிர்வெண்ணால் தீர்மானிக்கப்படுகிறது. அதன் செறிவினைப் பொருத்து அமைவதில்லை. ஒளிச்செறிவிற்கும், ஒளிக்கற்றையில் உள்ள ஃபோட்டானின் ஆற்றலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

2) ஃபோட்டான்கள் மின் நடுநிலைத் தன்மையுடன் இருப்பதால், மின் மற்றும் காந்த புலங்களினால் விலகலடையும்.

3) ஃபோட்டான் பருப்பொருளுடன் வினைபுரியும் போது மொத்த ஆற்றல், மொத்த நேர்க்கோட்டு உந்தம் மற்றும் கோண உந்தம் ஆகியவற்றின் மதிப்புகள் மாறுவதில்லை.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: ஃபோட்டானின் ஆற்றல் கதிர்வீச்சின் அதிர்வெண்ணால் தீர்மானிக்கப்படுகிறது. அதன் செறிவினைப் பொருத்து அமைவதில்லை. ஒளிச்செறிவிற்கும், ஒளிக்கற்றையில் உள்ள ஃபோட்டானின் ஆற்றலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஃபோட்டான்கள் மின் நடுநிலைத் தன்மையுடன் இருப்பதால், மின் மற்றும் காந்த புலங்களினால் விலகலடையாது. ஃபோட்டான் பருப்பொருளுடன் வினைபுரியும் போது மொத்த ஆற்றல், மொத்த நேர்க்கோட்டு உந்தம் மற்றும் கோண உந்தம் ஆகியவற்றின் மதிப்புகள் மாறுவதில்லை.

39. கீழ்க்கண்டக் கூற்றுக்களை கவனி சரியானவற்றைத் தேர்ந்தெடு.

1) குவாண்டம் கருத்துப்படி, கொடுக்கப்பட்ட அலைநீளத்தில் ஒளிச்செறிவு என்பது ஓரலகு காலத்தில் ஓரலகு பரப்பின் மீது படும், சமமான ஆற்றலைப் கொண்டுள்ள, ஆற்றல் குவாண்டா அல்லது ஃபோட்டான்களின் எண்ணிக்கை ஆகும்.

2) இதன் அலகு Wm-2 ஆகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

40. ஐன்ஸ்டீனின் சமன்பாட்டினை சோதனை அடிப்படையில்__________என்பவர் சரிபார்த்தார்.

A) R.A. மில்லிகன்

B) தாமஸ் ஆல்வா எடிசன்

C) தாமஸ் எடிசன்

D) மேற்கண்ட எவருமில்லை

விளக்கம்: ஐன்ஸ்டீனின் சமன்பாட்டினை சோதனை அடிப்படையில் R.A மில்லிகள் என்பவர் சரிபார்த்தார். அவர் பல்வேறு உலோகங்களுக்கு மற்றும் v இடையே உள்ள வரைபடத்தை வரைந்தார்.

41. பிளாங்க் மாறிலியின் மதிப்பு__________

A) 7.626 × 10-34 Js

B) 4.626 × 10-34 Js

C) 5.626 × 10-34 Js

D) 6.626 × 10-34 Js

42. கீழ்க்கண்டவற்றுள் ஒளி மின்கலம் பற்றியக் கூற்றுக்களில் பொருந்தாததைக் கண்டறி:

1) ஒளி மின்கலம் என்பது ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் சாதனம் ஆகும்.

2) இது ஒளிமின் விளைவு எனும் தத்துவத்தின் படி செயல்படுகிறது.

3) ஒளியானது ஒளிஉணர் பொருள்களின் மீது படும்போது, பொருளின் மின் பண்புகளில் மாற்றம் ஏதும் ஏற்படுவதில்லை.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: ஒளி மின்கலம் என்பது ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் சாதனம் ஆகும். இது ஒளிமின் விளைவு எனும் தத்துவத்தின் படி செயல்படுகிறது. ஒளியானது ஒளிஉணர் பொருள்களின் மீது படும்போது, பொருளின் மின் பண்புகளில் மாற்றம் ஏற்படுகிறது.

43. ஒளி அல்லது பிற கதிர்வீச்சுகள் உலோகக் கேத்தோடின் மீது படுவதால், ஏற்படுவது__________

A) எலக்ட்ரான் உமிழ்வு

B) புரோட்டான் உமிழ்வு

C) நியூட்ரான் உமிழ்வு

D) X – கதிர் உமிழ்வு

விளக்கம்: ஒளி உமிழ்வு மின்கலம் – ஒளி அல்லது பிற கதிர்வீச்சுகள் உலோகக் கேத்தோடின் மீது படுவதால், எலக்ட்ரான் உமிழ்வு ஏற்படுகிறது. இதன் அடிப்படையில் ஒளி உமிழ்வு மின்கலம் செயல்படுகிறது.

44. கீழ்க்கண்ட எதன் அடிப்படையில் ஒளி உமிழ்வு மின்கலம் செயல்படுகிறது_______

A) புரோட்டான் உமிழ்வு

B) நியூட்ரான் உமிழ்வு

C) X – கதிர் உமிழ்வு

D) எலக்ட்ரான் உமிழ்வு

விளக்கம்: ஒளி உமிழ்வு மின்கலம் – ஒளி அல்லது பிற கதிர்வீச்சுகள் உலோகக் கேத்தோடின் மீது படுவதால், எலக்ட்ரான் உமிழ்வு ஏற்படுகிறது. இதன் அடிப்படையில் ஒளி உமிழ்வு மின்கலம் செயல்படுகிறது.

45. குறைகடத்தியினால் செய்யப்பட்ட ஒளிஉணர்வு மிக்க பொருள் கீழ்க்கண்ட எந்த மின்கலத்தில் பயன்படுத்தப்படுகிறது_______

A) ஒளி உமிழ்வு மின்கலம்

B) ஒளி வோல்டா மின்கலம்

C) ஒளி கடத்தும் மின்கலம்

D) ஒலி கடத்தும் மின்கலம்

விளக்கம்: குறைகடத்தியினால் செய்யப்பட்ட ஒளிஉணர்வு மிக்க பொருள் பயன்படுத்தப்படுகிறது. அது ஒளி அல்லது பிற கதிர்வீச்சு படும்போது, அவற்றின் செறிவிற்கு ஏற்ப மின்னழுத்த வேறுபாட்டை உருவாக்குகிறது.

46. குறைகடத்தியின் மின்தடையானது, அதன் மீது படும் கதிர்வீச்சு ஆற்றலுக்கு ஏற்ப மாறும் மின்கலம்___________

A) ஒளி உமிழ்வு மின்கலம்

B) ஒளி வோல்டா மின்கலம்

C) ஒளி கடத்தும் மின்கலம்

D) ஒலி கடத்தும் மின்கலம்

47. கீழ்க்கண்டவற்றுள் ஒளி மின்கலம் வேலை செய்யும் வீதம் பற்றியக் கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:

1) கேத்தோடின் மீது ஒளி படும்போது, அதிலிருந்து எலக்ட்ரான்கள் உமிழப்படுகின்றன.

2) இந்த எலக்ட்ரான்கள் ஆனோடினால் கவரப்படுவதால், மின்னோட்டம் உருவாகிறது.

3) இதனைக் அம்மீட்டர் மூலம் அளவிடலாம்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: கேத்தோடின் மீது ஒளி படும்போது, அதிலிருந்து எலக்ட்ரான்கள் உமிழப்படுகின்றன. இந்த எலக்ட்ரான்கள் ஆனோடினால் கவரப்படுவதால், மின்னோட்டம் உருவாகிறது. இதனைக் கால்வனாமீட்டர் மூலம் அளவிடலாம்.

48. கீழ்க்கண்ட எவற்றில் ஒளி மின்கலன்கள் பயன்படுத்தப்படுகிறது.

A) மின் இயக்கிகள்

B) தானாக ஒளிரும் மின் விளக்குகள்

C) தெரு விளக்குகள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: ஒளி மின்கலங்கள் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக, மின் இயக்கிகள் மற்றும் மின் உணர்விகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருள் நேரத்தில் தானாக ஒளிரும் மின் விளக்குகளில் ஒளி மின்கலங்கள் பயன்படுகின்றன. மேலும் தெருவிளக்குகள் இரவு அல்லது பகல் நேரங்களைப் பொருத்து ஒளிரவும் அணையவும் செய்யப்படுகின்றன.

49. திரைப்படங்களில் ஒலியினைத் திரும்பப் பெறுவதற்கு பயன்படும் மின்கலம்__________

A) ஒளி மின்கலம்

B) ஒலி மின்கலம்

C) வோல்டா மின்கலம்

D) காரீய மின்கலம்

விளக்கம்: திரைப்படங்களில் ஒலியினைத் திரும்பப் பெறுவதற்கு ஒளி மின்கலங்கள் பயன்படுகின்றன. மேலும் ஓட்டப்பந்தயங்களில் தடகள வீரர்களின் வேகத்தை அளவிடும் கடிகாரங்களில் பயன்படுகின்றன.

50. ஓட்டப்பந்தயங்களில் தடகள வீரர்களின் வேகத்தை அளவிடும் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலம்________

A) ஒலி மின்கலம்

B) வோல்டா மின்கலம்

C) ஒளி மின்கலம்

D) லெக்லாஞ்சி மின்கலம்

விளக்கம்: ஓட்டப்பந்தயங்களில் தடகள வீரர்களின் வேகத்தை அளவிடும் கடிகாரங்களில் பயன்படுகின்றன.

51. புகைப்படத்துறையில் ஒளிச் செறிவை அளவிட்டு, பின்பு புகைப்படக் கருவியில் ஒளி படுவதற்குத் தேவையான நேரத்தைக் கணக்கிடப் பயன்படும் மின்கலம்__________

A) ஒலி மின்கலம்

B) வோல்டா மின்கலம்

C) லெக்லாஞ்சி மின்கலம்

D) ஒளி மின்கலம்

விளக்கம்: புகைப்படத்துறையில் ஒளிச் செறிவை அளவிட்டு, பின்பு புகைப்படக் கருவியில் ஒளி படுவதற்குத் தேவையான நேரத்தைக் கணக்கிடப்பயன்படும் மின்கலம் ஒளி மின்கலம்.

52. எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் போன்ற அனைத்து பருப்பொருள் துகள்களும் அலைப்பண்பைப் பெற்றுள்ளன என விளக்கிக் கூறியவர்.

A) ஐன்ஸ்டீன்

B) லூயிஸ் டி ப்ராய்

C) தாமஸ் எடிசன்

D) சர்.சி.வி ராமன்

விளக்கம்: டி ப்ராயின் எடுகோளின் படி, இயக்கத்தில் உள்ள எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் போன்ற அனைத்து பருப்பொருள் துகள்களும் அலைப்பண்பைப் பெற்றுள்ளன. இந்த அலைகள் டி ப்ராய் அலைகள் அல்லது பருப்பொருள் அலைகள் எனப்படுகின்றன.

53. ஒரு நுண்ணோக்கியின் பகுதிறன் ஆனது உருப்பெருக்க வேண்டிய பொருளின் மீது படும் ஒளியின் அலைநீளத்திற்கு_________ல் அமையும்.

A) நேர்த்தகவில்

B) எதிர்தகவில்

C) சமமாக

D) சுழி

விளக்கம்: ஒரு நுண்ணோக்கியின் பகுதிறன் ஆனது உருப்பெருக்க வேண்டிய பொருளின் மீது படும் ஒளியின் அலைநீளத்திற்கு எதிர்தகவில் அமையும். எனவே குறைந்த அலைநீளம் கொண்ட அலைகளைப் பயன்படுத்தும்போது அதிக பகுதிறனும் அதிக உருப்பெருக்கமும் கிடைக்கின்றன.

54. ஒளியியல் நுண்ணோக்கி மற்றும் எலக்ட்ரான் நுண்ணோக்கி ஆகியவற்றில் எலக்ட்ரான் கற்றையைக் குவிப்பதற்கு பயன்படுத்தப்படும் லென்சுகள்____________

A) நிலைமின்புல லென்சு

B) காந்தப்புல லென்சு

C) குவி லென்சு

D) A, B இரண்டும்

விளக்கம்: ஒளியியல் நுண்ணோக்கி மற்றும் எலக்ட்ரான் நுண்ணோக்கி ஆகியவற்றின் அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதம் ஒரே மாதிரியாக அமையும். ஆனால் சிறு வேறுபாடு: எலக்ட்ரான் கற்றையைக் குவிப்பதற்கு நிலைமின்புல அல்லது காந்தப்புல லென்சுகள் பயன்படுத்தப்படுகின்றன.

55. உருப்பெருக்கப்பட்ட பிம்பம் திரையில் தோற்றுவிக்கப்பட பயன்படுத்தப்படும் லென்சு___________

A) காந்தப்பல பொருளருகு லென்சு

B) காந்தப்புல வீழ்த்தும் லென்சு

C) மின்காந்தப்புல லென்சு

D) A, B இரண்டும்

விளக்கம்: காந்தப்புல பொருளருகு லென்சு மற்றும் காந்தப்புல வீழ்த்தும் லென்சு அமைப்புகளின் உதவியுடன் உருப்பெருக்கப்பட்ட பிம்பம் திரையில் தோற்றுவிக்கப்படுகிறது.

56. பெரும்பாலும் அனைத்து அறிவியல் துறைகளிலிலும் பயன்படுத்தப்படும் நுண்ணோக்கி____________

A) எலக்ட்ரான் நுண்ணோக்கி

B) ஒளியியல் நுண்ணோக்கி

C) கூட்டு நுண்ணோக்கி

D) தொலைநோக்கி

விளக்கம்: எலக்ட்ரான் நுண்ணோக்கியானது பெரும்பாலும் அனைத்து அறிவியல் துறைகளிலும் பயன்படுகிறது.

57. வேகமாக இயங்கும் எலக்ட்ரான்கள் குறிப்பிட்ட சில பொருள்களின் மீது விழும்போது, அதிக ஊடுருவும் திறன் கொண்ட கதிர்வீச்சு வெளிப்படுவதை கண்டறிந்தவர்__________

A) ஐன்ஸ்டின்

B) லூயிஸ் டி ப்ராய்

C) வில்ஹெம் ராண்ட்ஜன்

D) சர்.வி. ராமன்

விளக்கம்: வேகமாக இயங்கும் எலக்ட்ரான்கள் குறிப்பிட்ட சில பொருள்களின் மீது விழும்போது. அதிக ஊடுருவும் திறன் கொண்ட கதிர்வீச்சு வெளிப்படுவதை வில்ஹெம் ராண்ட்ஜென் என்பவர் 1895 இல் கண்டறிந்தார்.

58. கதிர்வீச்சினை ராண்ட்ஜன் கண்டறிந்த ஆண்டு_________

A) 1894

B) 1895

C) 1897

D) 1898

விளக்கம்: வேகமாக இயங்கும் எலக்ட்ரான்கள் குறிப்பிட்ட சில பொருள்களின் மீது விழும்போது. அதிக ஊடுருவும் திறன் கொண்ட கதிர்வீச்சு வெளிப்படுவதை வில்ஹெம் ராண்ட்ஜென் என்பவர் 1895 இல் கண்டறிந்தார்.

59. X – கதிரின் அலைநீளம்____________

A) 10.1 Å முதல் 100 Å

B) 0.1 Å முதல் 100 Å

C) 0.1 Å முதல் 200 Å

D) 0.1 Å முதல் 300 Å

60. கீழ்க்கண்டவற்றுள் X – கதிர் பற்றியக் கருத்துகளில் தவறானதைக் கண்டறி:

A) X – கதிர்கள் ஒளியின் வேகத்தில் நேர்கோட்டில் பயணம் செய்யும்.

B) மின் மற்றும் காந்தப்புலங்களால் விலகலடையும்.

C) X – கதிர் ஃபோட்டான்கள் உயர் அதிர்வெண் அல்லது குறைந்த அலைநீளம் கொண்டுள்ளதால், அதிக அளவு ஆற்றல் கொண்டவை

D) கண்ணுறு ஒளி புகுந்து செல்ல இயலாத பொருள்களின் வழியாகக் கூட X – கதிர்கள் ஊடுருவிச் செல்லக்கூடியவை.

விளக்கம்: X – கதிர்கள் ஒளியின் வேகத்தில் நேர்கோட்டில் பயணம் செய்யும். மேலும் மின் மற்றும் காந்தப்புலங்களால் விலகலடையாது. X – கதிர் ஃபோட்டான்கள் உயர் அதிர்வெண் அல்லது குறைந்த அலைநீளம் கொண்டுள்ளதால், அதிக அளவு ஆற்றல் கொண்டவை. கண்ணுறு ஒளி புகுந்து செல்ல இயலாத பொருள்களின் வழியாகக் கூட X – கதிர்கள் ஊடுருவிச் செல்லக்கூடியவை.

61. X – கதிர்களின் தரமானது அதன்_________னைப் பொருத்து அளவிடப்படுகிறது.

A) எதிரொலிப்புத்திறன்

B) ஊடுறுவுத்திறன்

C) விலகல் திறன்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: X – கதிர்களின் தரமானது அதன் ஊடுருவுதிறனைப் பொருத்து அளவிடப்படுகிறது. இவற்றின் ஊடுருவுதிறனானது இலக்கு பொருள்களின் மீது மோதுகின்ற எலக்ட்ரான்களின் திசைவேகம் மற்றும் இலக்கு பொருள்களின் அணு எண் ஆகியவற்றைப் பொருத்து அமையும்.

62. X – கதிர்களின் செறிவானது இலக்கின் மீது மோதுவது_________ன் எண்ணிக்கையைப் பொருத்தது.

A) எலக்ட்ரான்

B) புரோட்டான்

C) நியூட்ரான்

D) ஒளியின் வேகம்

63. உலோக இலக்கின் மீது வேகமாகச் செல்லும் எலக்ட்ரான்கள் மோதுவதால்_________கதிர்கள் உருவாகின்றன.

A) புறஊதாக் கதிர்கள்

B) ரேடியோ கதிர்கள்

C) X – கதிர்கள்

D) அகச்சிவப்புக் கதிர்கள்

விளக்கம்: உலோக இலக்கின் மீது வேகமாகச் செல்லும் எலக்ட்ரான்கள் மோதுவதால் X – கதிர்கள் உருவாகின்றன. X – கதிர்களின் அலைநீளத்தைப் பொருத்து X – கதிர்களின் செறிவிற்கு வரையப்படும் வளைகோடு ஆனது X – கதிர் நிறமாலை எனப்படும்.

64. X – கதிர்களின் அலைநீளத்தைப் பொருத்து X – கதிர்களின் செறிவிற்கு வரையப்படும் வளைகோட்டிற்கு___________என்று பெயர்.

A) நிறமாலை

B) X – கதிர் நிறமாலை

C) முழு அகஎதிரொலிப்பு

D) ஒளி விலகள்

விளக்கம்: உலோக இலக்கின் மீது வேகமாகச் செல்லும் எலக்ட்ரான்கள் மோதுவதால் X – கதிர்கள் உருவாகின்றன. X – கதிர்களின் அலைநீளத்தைப் பொருத்து X – கதிர்களின் செறிவிற்கு வரையப்படும் வளைகோடு ஆனது X – கதிர் நிறமாலை எனப்படும். X – கதிர் நிறமாலை ஆனது தொடர்நிறமாலை மற்றும் அதன் மீது மேற்பொருந்தியுள்ள முகடுகள் எனும் ஒரு பகுதிகளைக் கொண்டது.

65. எதிர் முடுக்கம் அடைந்த எலக்ட்ரானால் தோற்றுவிக்கப்படும் கதிர்வீச்சிற்கு___________என்று பெயர்.

A) ப்ரம்ஸ்டிராலங் கதிர்வீச்சு

B) தடையுறு கதிர்வீச்சு

C) மாக்ஸ்வெல் கதிர்வீச்சு

D) A, B இரண்டும்

விளக்கம்: எதிர் முடுக்கம் அடைந்த எலக்ட்ரானால் தோற்றுவிக்கப்படும் கதிர்வீச்சு ப்ரம்ஸ்டிராலங் அல்லது தடையுறு கதிர்வீச்சு என்றழைக்கப்படுகிறது.

66. X – கதிர்கள் எலும்புகளை விட________யை எளிதாக ஊடுருவுகின்றன.

A) பற்கள்

B) தசைகள்

C) பிளாஸ்மா

D) இரத்த செல்கள்

விளக்கம்: X – கதிர்கள் எலும்புகளை விட தசைகளை எளிதாக ஊடுருவுகின்றன. அதனால் எலும்புகளின் ஆழமான நிழலும், தசைகளின் மேலோட்டமான நிழலும் கொண்ட X – கதிர்ப்படத்தைப் பெறமுடியும்.

67. X – கதிர் பாடமானது கீழ்க்கண்டவற்றுள் எதனைக் கண்டறியப் பயன்படுகிறது.

A) எலும்பு முறிவு

B) உடலின் உள்ளே உள்ள அந்நியப் பொருள்கள்

C) நோயினால் தாக்கப்பட்ட உடல் உறுப்புகள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: X – கதிர்கள் எலும்புகளை விட தசைகளை எளிதாக ஊடுருவுகின்றன. அதனால் எலும்புகளின் ஆழமான நிழலும், தசைகளின் மேலோட்டமான நிழலும் கொண்ட X – கதிர்ப்படத்தைப் பெறமுடியும். X – கதிர்ப்படமானது எலும்பு முறிவு, உடலின் உள்ளே உள்ள அந்நியப் பொருள்கள், நோயினால் தாக்கப்பட்ட உடல் உறுப்புகள் ஆகியவற்றைக் கண்டறியப் பயன்படுகிறது.

68. X – கதிர்கள் கீழ்க்கண்டவற்றுள் எவற்றை குணமாக்கப் பயன்படுகிறது.

A) தோல் நோய்கள்

B) புற்றுநோய் கட்டிகள்

C) சர்க்கரை வியாதிகள்

D) A, B இரண்டும்

விளக்கம்: நோயுற்ற திசுக்களை X – கதிர்கள் அழிக்கக் கூடியவை என்பதால், தோல் நோய்கள், புற்றுநோய் கட்டிகள் போன்றவற்றைக் குணமாக்குவதற்கு இவை பயன்படுகின்றன.

69. கீழ்க்கண்டவற்றுள் எவற்றைச் சோதனைச் செய்ய X – கதிர்கள் பயன்படுகிறது.

A) பற்ற வைக்கப்பட்ட இணைப்புகளில் உள்ள விரிசல்கள்

B) வாகன டயர்கள்

C) டென்னிஸ் பந்துகள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: பற்ற வைக்கப்பட்ட இணைப்புகளில் உள்ள விரிசல்கள், வாகன டயர்கள், டென்னிஸ் பந்துகள் மற்றும் மரங்கள் ஆகியவற்றைச் சோதனை செய்ய X – கதிர்கள் பயன்படுகின்றன.

70. சுங்கச் சாவடிகளில் தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கண்டுபிடிக்கப் பயன்படுவது.

A) ரேடியோ அலைகள்

B) மின்காந்த அலைகள்

C) X – கதிர்கள்

D) புறஊதாக் கதிர்கள்

விளக்கம்: பற்ற வைக்கப்பட்ட இணைப்புகளில் உள்ள விரிசல்கள், வாகன டயர்கள், டென்னிஸ் பந்துகள் மற்றும் மரங்கள் ஆகியவற்றைச் சோதனை செய்ய X – கதிர்கள் பயன்படுகின்றன. சுங்கச்சாவடிகளில் தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கண்டு பிடிப்பதற்கும் பயன்படுகின்றன.

71. படிகப் பொருள்களின் கட்டமைப்பை அதாவது, படிகங்களில் உள்ள அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் அமைவுகளை அறிவதற்கு________சிறந்த கருவியாக பயன்படுகிறது.

A) கூட்டு நுண்ணோக்கி

B) X – கதிர் விளிம்பு விளைவு

C) எளிய நுண்ணோக்கி

D) ஒளியியல் நுண்ணோக்கி

விளக்கம்: படிகப் பொருள்களின் கட்டமைப்பை அதாவது, படிகங்களில் உள்ள அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் அமைவுகளை அறிவதற்கு X – கதிர் விளிம்பு விளைவு சிறந்த கருவியாக உள்ளது.

72. 1927 இல் டி ப்ராயின் பருப்பொருள் அலைகள் பற்றிய எடுகோளை சோதனை வாயிலாக உறுதி செய்தவர்கள்.

A) கிளின்டன் டேவிசன்

B) லெஸ்ட் ஜெர்மர்

C) ஐன்ஸ்டின்

D) A, B இரண்டும்

விளக்கம்: 1927 இல் கிளின்டன் டேவிசன் மற்றும் லெஸ்ட் ஜெர்மர் ஆகியோர் டி ப்ராயின் பருப்பொருள் அலைகள் பற்றிய எடுகோளை சோதனை வாயிலாக உறுதி செய்துள்ளனர்.

73. இயக்கத்தில் உள்ள எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் போன்ற அனைத்து பருப்பொருள் துகள்களும் அலைப்பண்பைப் பெற்றுள்ளன இந்த அலைகள்_____________

A) டி ப்ராய் அலைகள்

B) ஐன்ஸ்டின் அலைகள்

C) பருப்பொருள் அலைகள்

D) A, C இரண்டும்

விளக்கம்: இயக்கத்தில் உள்ள எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் போன்ற அனைத்து பருப்பொருள் துகள்களும் அலைப்பண்பைப் பெற்றுள்ளன இந்த அலைகள் டி ப்ராய் அலைகள் அல்லது பருப்பொருள் அலைகள் எனப்படுகின்றன.

74. ஒளி மின்கலம் என்பவை ஒளி ஆற்றலை_________ஆற்றலாக மாற்றும் சாதனம் ஆகும்.

A) வெப்ப

B) மின்

C) வேதி

D) இயக்க

விளக்கம்: ஒளி மின்கலம் என்பவை ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் சாதனம் ஆகும்.

75. ஒளி பரவும் போது அலையாகவும், பொருள்களுடன் இடைவினை புரியும் போது________ஆகவும் செயல்படுகிறது.

A) அணுக்கள்

B) மூலக்கூறுகள்

C) துகள்கள்

D) அயணிகள்

விளக்கம்: ஒளி பரவும் போது அலையாகவும், பொருள்களுடன் இடைவினை புரியும் போது துகளாகவும் செயல்படுகிறது.

76. வரையறுக்கப்பட்ட ஆற்றல் மற்றும் உந்தத்தை பெற்ற ஒவ்வொரு ஒளி குவாண்டமும் துகள் பண்பைக் கொண்டிருக்கும் துகள்களாக செயல்படும் இந்த ஒளி____________எனப்படும்.

A) குவாண்டம் புரோட்டான்

B) குவாண்டம் எலக்ட்ரான்

C) குவாண்டம் ஃபோட்டான்

D) குவாண்டம் நியூட்ரான்

விளக்கம்: வரையறுக்கப்பட்ட ஆற்றல் மற்றும் உந்தத்தை பெற்ற ஒவ்வொரு ஒளி குவாண்டமும் துகள் பண்பைக் கொண்டிருக்கும் துகள்களாக செயல்படும் இந்த ஒளி குவாண்டம் ஃபோட்டான் எனப்படும்.

77. எலக்ட்ரான் நுண்ணோக்கியில் பயன்படும் எலக்ட்ரான்கள் 14 Kv மின்னழுத்த வேறுபாட்டினால் முடுக்கப்படுகின்றன. இந்த மின்னழுத்த வேறுபாடு 224 Kv ஆக அதிகரிக்கும்போது, எலக்ட்ரானின் டி ப்ராய் அலைநீளமானது.

A) 2 மடங்கு அதிகரிக்கும்

B) 2 மடங்கு குறையும்

C) 4 மடங்கு குறையும்

D) 4 மடங்கு அதிகரிக்கும்

78. 3 × 10-6 g நிறை கொண்ட துகளின் அலைநீளம் மற்றும் 6 × 106 m s-1 திசைவேகத்தில் நகரும் எலக்ட்ரானின் அலைநீளம் ஆகியவை சமமாக இருப்பின், துகளின் திசைவேகம்.

A) 1.82 × 10-18 m s-1

B) 9 × 10-2 m s-1

C) 3 × 10-31 m s-1

D) 1.82 × 10-15 m s-1

79. λ அலைநீளமுள்ள கதிர்வீச்சினால் ஒரு உலோகப் பரப்பு ஒளியூட்டப்படும் போது, அதன் நிறுத்து மின்னழுத்தம் V ஆகும். 2λ அலைநீளமுள்ள ஒளியினால் அதே பரப்பு ஒளியூட்டப்பட்டால், நிறுத்து மின்னழுத்தம் V/4 ஆகும். எனில் அந்த உலோகப்பரப்பிற்கான பயன்தொடக்க அலைநீளம்.

A) 4λ

B) 5λ

C) 5/2 λ

D) 3λ

80. 330 nm அலைநீளம் கொண்ட ஒளியானது 3.55 e V வெளியேற்று ஆற்றல் கொண்ட உலோகத்தின் மீது படும் போது, உமிழப்படும் எலக்ட்ரானின் அலைநீளமானது. (h = 6.6 × 10-34 Js

A) < 2.75 × 10-9 m

B) ≥ 2.75 × 10-9 m

C) ≤ 2.75 × 10-12 m

D) < 2.5 × 10-10 m

81. ஒளிஉணர் பரப்பு ஒன்று அடுத்தடுத்து λ மற்றும் λ/2 அலைநீளம் கொண்ட ஒற்றை நிற ஒளியினால் ஒளியூட்டப்படுகிறது. இரண்டாவது நேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றல் ஆனது முதல் நேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றலை விட 3 மடங்காக இருப்பின், உலோகப் பரப்பின் வெளியேற்று ஆற்றலானது.

A) hc/λ

B) 2hc/λ

C) hc/3λ

D) hc/2λ

82. 0.9 eV மற்றும் 3.3 eV ஃபோட்டான் ஆற்றல் கொண்ட இரண்டு கதிர்வீச்சுகள் ஒரு உலோகப்பரப்பின் மீது அடுத்தடுத்து விழுகின்றன. உலோகத்தின் வெளியேற்று ஆற்றல் 0.6 eV எனில். வெளிவிடப்படும் எலக்ட்ரான்களின் பெரும வேகங்களின் தகவு.

A) 1 : 4

B) 1 : 3

C) 1 : 1

D) 1 : 9

83. 520 nm அலைநீளம் கொண்ட ஒரு ஒளி மூலம் ஒரு வினாடிக்கு 1.04 × 1015 ஃபோட்டான்களை வெளிவிடுகிறது. 460 nm அலைநீளம் கொண்ட இரண்டாவது ஒளி மூலம் ஒரு வினாடிக்கு 1.38 × 1015 ஃபோட்டான்களை வெளிவிடுகிறது. இரண்டாவது மூலத்தின் திறனுக்கும் முதல் மூலத்தில் திறனுக்கும் இடையே உள்ள விகிதம்.

A) 1.00

B) 1.02

C) 1.5

D) 0.98

84. சூரிய ஒளியின் சராசரி அலைநீளம் 550 nm எனவும், அதன் சராசரி திறன் 3.8 × 1026 W எனவும் கொள்க. சூரிய ஒளியிலிருந்து ஒரு வினாடி நேரத்தில் மனிதனின் கண்கள் பெறக்கூடிய ஃபோட்டான்களின் தோராயமான எண்ணிக்கையானது.

A) 1045

B) 1042

C) 1054

D) 1051

85. ஒளிமின் வெளியேற்று ஆற்றல் 3.313 eV கொண்ட ஒரு உலோகப்பரப்பின் பயன் தொடக்க அலைநீளம்.

A) 4125 Å

B) 3750 Å

C) 6000 Å

D) 2062.5 Å

86. A, B மற்றும் C என்னும் உலோகங்களின் வெளியேற்று ஆற்றல்கள் முறையே 1.92 eV , 2.0 eV மற்றும் 5.0 eV ஆகும். 4100 Å அலைநீளம் கொண்ட ஒளி படும் போது, ஒளிஎலக்ட்ரான்களை உமிழும் உலோகம் l உலோகங்கள்.

A) A மட்டும்

B) A மற்றும் B

C) அனைத்தும் உமிழும்

D) ஏதுமில்லை

87. வெப்ப ஆற்றலை உட்கவர்வதால் எலக்ட்ரான்கள் உமிழப்படுவது_________உமிழ்வு எனப்படும்.

A) ஒளி மின்

B) புல

C) வெப்ப அயனி

D) இரண்டாம் நிலை

88. ஒளிமின் வெளியேற்று ஆற்றல் 1.235 eV கொண்ட ஒரு ஒளிஉணர்வு மிக்க உலோகத்தட்டின் மீது 500 nm அலைநீளம் கொண்ட ஒளி படுகிறது எனில், உமிழப்படும் ஒளிஎலக்ட்ரான்களின் இயக்க ஆற்றல் (h = 6.6 × 10-34 Js)

A) 0.58 eV

B) 2.48 eV

C) 1.24 eV

D) 1.16 eV

12th Science Lesson 10 Questions in Tamil

10] எலெக்ட்ரானியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள்

1. கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:

1) தந்தி – 1854

2) தொலைபேசி – 1867

3) வானொலி – 1878

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

1) தந்தி – 1844

2) தொலைபேசி – 1876

3) வானொலி – 1887

2. நல்ல தகவல் தொடர்பானது குழப்பத்திற்கும் தெளிவிற்கும் இடையே உள்ள பாலமாகும்.

A) ஆல்பர்ட் ஐன்ஸ்டின்

B) சர். சி. வி. ராமன்

C) சர் ஐசக் நியூட்டன்

D) நாட் டர்னர்

3. மனிதர்களின் செவியுணர் அதிர்வெண் நெடுக்கம்_________

A) 20 முதல் 2000 Hz

B) 40 முதல் 2000 Hz

C) 20 முதல் 20000 Hz

D) 40 முதல் 20000 Hz

விளக்கம்: செவியுணர் அதிர்வெண் (20 முதல் 20000 Hz), உலகம் முழுவதும் நீண்ட தொலைவுகளுக்கு பரப்பப்பட வேண்டுமாயின், தகவலை எந்த இழப்புமின்றி பரப்புவதற்கு சில நுட்பங்கள் தேவைப்படுகிறது.

4. கூற்று (i): நெடுந்தொலைவு பரப்புகைக்கு அதிக அதிர்வெண் கொண்ட அடிக்கற்றை சைகையானது பண்பேற்றம் எனப்படும் செயல்முறைப்படி குறைந்த அதிர்வெண் கொண்ட ரேடியோ சைகையின் மீது மேற்பொருத்தப்படுகின்றது.

கூற்று (ii): எனவே பண்பேற்றச் செயல்முறையில், அடிக்கற்றை சைகையை சுமந்து செல்ல குறைந்த அதிர்வெண் சைகை கொண்ட ஊர்தி சைகை பயன்படுத்தப்படுகிறது.

A) கூற்று i சரி, ii தவறு

B) கூற்று i தவறு, ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

விளக்கம்: நெடுந்தொலைவு பரப்புகைக்கு குறைந்த அதிர்வெண் கொண்ட அடிக்கற்றை சைகையானது பண்பேற்றம் எனப்படும் செயல்முறைப்படி அதிக அதிர்வெண் கொண்ட ரேடியோ சைகையின் மீது மேற்பொருத்தப்படுகின்றது. எனவே பண்பேற்றச் செயல்முறையில், அடிக்கற்றை சைகையை சுமந்து செல்ல அதிக அதிர்வெண் சைகை கொண்ட ஊர்தி சைகை பயன்படுத்தப்படுகிறது.

5. கூற்று : ஊர்தி சைகையின் அதிர்வெண் மிகவும் அதிகமாதலால், அதனை குறைவான வலுவிழப்புடன் நெடுந்தொலைவுக்கு பரப்பலாம்.

காரணம் : ஊர்தி சைகையானது ஒரு சைன் அலை சைகையாகும். மேலும் ஊர்தி சைகையானது, வெளியைப் போன்ற தகவல்தொடர்பு ஊடகத்துடன் பொருந்தி அமைவதால், அதிக செயல்திறனுடன் பரப்ப இயலும்.

A) கூற்று காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

B) கூற்று காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

C) கூற்று சரி காரணம் தவறு

D) கூற்று தவறு காரணம் சரி

6. ஒரு சைன்வடிவ ஊர்தி அலையை________என குறிப்பிடலாம்.

A) ec = Ec sin (2πvc t + ø)

B) ec = Ec sin (2πvc t ÷ ø)

C) ec = Ec sin (2πvc t × ø)

D) ec = Ec sin (2πvc t > ø)

விளக்கம்: இரு சைன்வடிவ ஊர்தி அலையை ec = Ec sin (2πvc t + ø) என குறிப்பிடலாம். இங்கு Ec என்பது வீச்சு, Vc என்பது அதிர்வெண் மற்றும் ø ஆனது t என்ற கணநேரத்தில் ஊர்தி அலையின் தொடக்கக் கட்டம் ஆகும்.

7. அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்ப ஊர்தி சைகையின் வீச்சு மாற்றப்பட்டால் அது________பண்பேற்றம் எனப்படும்.

A) வீச்சு பண்பேற்றம்

B) அதிர்வெண் பண்பேற்றம்

C) கட்டப் பண்பேற்றம்

D) முடுக்க பண்பேற்றம்

விளக்கம்: அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்ப ஊர்தி சைகையின் வீச்சு மாற்றப்பட்டால் அது வீச்சுப் பண்பேற்றம் எனப்படும். இங்கு ஊர்தி சைகையின் அதிர்வெண் மற்றும் கட்டம் மாறாமல் உள்ளது.

8. வீச்சு பண்பேற்றமானது கீழ்க்கண்ட எந்த தகவல் தொடர்பு சாதனங்களில் பயன்படுகிறது.

A) வானொலி

B) தொலைக்காட்சி

C) தொலைபேசி

D) A B இரண்டும்

விளக்கம்: அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்ப ஊர்தி சைகையின் வீச்சு மாற்றப்பட்டால் அது வீச்சுப் பண்பேற்றம் எனப்படும். இங்கு ஊர்தி சைகையின் அதிர்வெண் மற்றும் கட்டம் மாறாமல் உள்ளது. வீச்சுப் பண்பேற்றமானது வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலிபரப்பில் பயன்படுகிறது.

9. வீச்சுப் பண்பேற்றத்தின் நன்மைகளுல் சரியானதைக் கண்டறி:

A) எளிதான பரப்புகை மற்றும் ஏற்பு

B) குறைவான பட்டை அகலத் தேவைகள்

C) குறைந்த விலை

D) மேற்கண்ட அனைத்தும்

10. வீச்சு பண்பேற்றத்தின் வரம்புகளுல் பொருந்தாததைக் கண்டறி:

A) இரைச்சல் அளவு அதிகம்

B) இரைச்சல் அளவு குறைவு

C) குறைந்த செயல்திறன்

D) குறைவான செயல் நெடுக்கம்

விளக்கம்:

இரைச்சல் அளவு அதிகம்

குறைந்த செயல்திறன்

குறைவான செயல் நெடுக்கம்

11. அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்றாற்போல் ஊர்தி சைகையின் அதிர்வெண் மாற்றப்படுவது_________

A) வீச்சு பண்பேற்றம்

B) அதிர்வெண் பண்பேற்றம்

C) கட்டப் பண்பேற்றம்

D) முடுக்க பண்பேற்றம்

விளக்கம்: அதிர்வெண் பண்பேற்றத்தில், அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்றாற்போல் ஊர்தி சைகையின் அதிர்வெண் மாற்றப்படுகிறது. இங்கு ஊர்தி சைகையின் வீச்சு மற்றும் கட்டம் மாறாமல் உள்ளன. அடிக்கற்றை சைகையின் மின்னழுத்தத்தில் ஏற்படும் உயர்வு, ஊர்தி சைகையின் அதிர்வெண்ணை அதிகரிக்கிறது.

12. கூற்று (i): பண்பேற்றப்பட்ட அலையின் அதிரவெண் நிறமாலையில் அமுக்கங்களையும் தளர்வுகளையும் ஏற்படுத்துகிறது.

கூற்று (ii): உரத்த சைகைகள் அமுக்கங்களையும், வலிமை குறைந்த சைகைகள் தளர்வுகளையும் உருவாக்குகின்றன.

A) கூற்று i சரி, ii தவறு

B) கூற்று i தவறு, ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

13. கீழ்க்கண்டவற்றுள் அதிர்வெண் பண்பேற்றம் பற்றியத் தகவல்களுல் சரியானதைக் கண்டறி:

1) அடிக்கற்றை சைகையின் மின்னழுத்தம் சுழியாக உள்ளபோது, பண்பேற்றப்பட்ட சைகையின் அதிர்வெண் ஊர்தி சைகையின் அதிர்வெண்ணிற்கு சமமாகும்.

2) அடிக்கற்றை சைகையின் மின்னழுத்தம் நேர்க்குறி திசையில் அதிகரிக்கும் போது பண்பேற்றப்பட்ட அலையின் அதிர்வெண் அதிகரிக்கிறது.

3) எதிர் அரைச்சுற்றில் மின்னழுத்தம் அதிகரிக்கும் போது, பண்பேற்றப்பட்ட அலையின் அதிர்வெண் குறைகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

14. கீழ்க்கண்டவற்றுள் அதிர்வெண் பண்பேற்றம் பற்றியத் தகவல்களுல் சரியானதைக் கண்டறி:

1) அடிக்கற்றை சைகையின் மின்னழுத்தம் சுழியாக உள்ளபோது ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றமில்லை. அதன் இயல்பான அதிர்வெண்ணில் உள்ளது.

2) இதனை மைய அதிர்வெண் அல்லது ஓய்வுநிலை அதிர்வெண் என அழைக்கப்படுகிறது.

3) நடைமுறையில் இதுவே AM பரப்பிக்கு ஒதுக்கப்பட்ட அதிர்வெண் ஆகும்.

A) 1 2 மட்டும் சரி

B) 2 3 மட்டும் சரி

C) 1 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: அடிக்கற்றை சைகையின் மின்னழுத்தம் சுழியாக உள்ளபோது ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றமில்லை. அதன் இயல்பான அதிர்வெண்ணில் உள்ளது. இதனை மைய அதிர்வெண் அல்லது ஓய்வுநிலை அதிர்வெண் என அழைக்கப்படுகிறது. நடைமுறையில் இதுவே FM பரப்பிக்கு ஒதுக்கப்பட்ட அதிர்வெண் ஆகும்.

15. FM ஒலிபரப்புகளில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிர்வெண் விலகல்_______

A) 55 kHz

B) 65 kHz

C) 75 kHz

D) 85 kHz

விளக்கம்: FM ஒலிபரப்புகளில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிர்வெண் விலகல் 75 kHz ஆகும்.

16. கீழ்க்கண்டவற்றுள் அதிர்வெண் பண்பேற்றத்தின் நன்மைகளுல் பொருந்தாதது எது.

A) இரைச்சல் மிகவும் அதிகம். இதனால் சைகை – இரைச்சல் விகிதம் குறைகிறது.

B) செயல்படும் நெடுக்கம் மிக அதிகம்.

C) பரப்பப்பட்ட திறன் முழுதும் பயன்படுவதால், பரப்புகை பயனுறுதிறன் மிகவும் அதிகம்.

D) FM பட்டை அகலமானது மனிதனால் கேட்கக்கூடிய அதிர்வெண் நெடுக்கம் முழுவதையும் உள்ளடக்குகிறது. இதனால் AM வானொலியுடன் ஒப்பிடும் போது, FM வானொலி சிறந்த தரத்தைக் கொண்டுள்ளது.

17. கீழ்க்கண்டவற்றுள் அதிர்வெண் பண்பேற்றத்தின் வரம்புகளுல் சரியானதைக் கண்டறி:

1) அதிர்வெண் பண்பேற்றத்திற்கு மிகவும் குருகலான அலைவரிசை தேவை.

2) FM பரப்பிகள் மற்றும் ஏற்பிகள் மிகவும் சிக்கலானவை மற்றும் விலை அதிகமானவை.

3) AM உடன் ஒப்பிடும்பொது, ஏற்கும் பரப்பு FM ஏற்பில் குறைவாகும்.

A) 1 2 மட்டும் சரி

B) 2 3 மட்டும் சரி

C) 1 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: அதிர்வெண் பண்பேற்றத்திற்கு மிகவும் அகலமான அலைவரிசை தேவை. AM பரப்பிகள் மற்றும் ஏற்பிகள் மிகவும் சிக்கலானவை மற்றும் விலை அதிகமானவை. FM உடன் ஒப்பிடும்பொது, ஏற்கும் பரப்பு AM ஏற்பில் குறைவாகும்.

18. அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சானது ஊர்தி சைகையின்_______யை மாற்றுகிறது.

A) வீச்சு

B) அதிர்வெண்

C) கட்டம்

D) முடுக்கம்

விளக்கம்: அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சானது ஊர்தி சைகையின் கட்டத்தை மாற்றுகிறது மற்றும் ஊர்தி அலையின் வீச்சு மற்றும் அதிர்வெண் மாறுவதில்லை.

19. அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சானது கீழ்க்கண்ட எந்த பண்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை.

A) வீச்சு

B) கட்டம்

C) அதிர்வெண்

D) A C இரண்டும்

விளக்கம்: அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சானது ஊர்தி சைகையின் கட்டத்தை மாற்றுகிறது மற்றும் ஊர்தி அலையின் வீச்சு மற்றும் அதிர்வெண் மாறுவதில்லை. இந்த பண்பேற்றம் அதிர்வெண் பண்பேற்றப்பட்ட சைகைகளை உருவாக்கப் பயன்படுகிறது.

20. கீழ்க்கண்டக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

1) சதுர வடிவ அலையானது அடிக்கற்றை சைகையாக பயன் படுத்தப்பட்டால், பண்பேற்றப்பட்ட சைகையில் கட்ட தலைகீழ்மாற்றம் ஏற்படுகிறது.

2) சதுர வடிவ பண்பேற்றம் சைகைக்கு, AM மற்றும் PM அலைகள் முழுவதும் மாறுபட்டதாக உள்ளன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

21. கீழ்க்கண்டவற்றுள் கட்டப் பண்பேற்றத்தின் நன்மைகளுல் பொருந்தாததைக் கண்டறி:

1) கட்டப் பண்பேற்றச் சைகையில் இருந்து உருவாக்கப்பட்ட AM சைகையானது மிகவும் நிலையற்றது.

2) ஓய்வு நிலை அதிர்வெண் எனப்படும் மைய அதிர்வெண் மிக அதிக நிலைத்தன்மை கொண்டது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: கட்டப் பண்பேற்றச் சைகையில் இருந்து உருவாக்கப்பட்ட AM சைகையானது மிகவும் நிலையானது. ஓய்வு நிலை அதிர்வெண் எனப்படும் மைய அதிர்வெண் மிக அதிக நிலைத்தன்மை கொண்டது.

22. கீழ்க்கண்டவற்றுள் AM மற்றும் PM பற்றியக் கருத்துகளுல் பொருந்தாததைக் கண்டறி:

1) PM அலையானது AM அலையைப் போன்றதே ஆகும்.

2) பொதுவாக AM, விட, PM சிறிய பட்டை அகலத்தைப் பயன்டுத்துகிறது.

3) கொடுக்கப்பட்ட பட்டை அகலத்தில் PM இல் மிக குறைந்த தகவலை அனுப்பலாம். எனவே கொடுக்கப்பட்ட பட்டை அகலத்திற்கு கட்டப் பண்பேற்றம் அதிக பரப்பும் வேகத்தை அளிக்கிறது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: கொடுக்கப்பட்ட பட்டை அகலத்தில் PM இல் மிக குறைந்த தகவலை அனுப்பலாம். எனவே கொடுக்கப்பட்ட பட்டை அகலத்திற்கு கட்டப் பண்பேற்றம் அதிக பரப்பும் வேகத்தை அளிக்கிறது.

23. எலக்ட்ரானிய தகவல்தொடர்பு என்பது கீழ்க்கண்ட எதனை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

A) ஒலி

B) உரை

C) படங்கள் அல்லது தரவைப் பரப்புதல்

D) மேற்கண்ட அனைத்தும்

24. தகவல் தொடர்பில் வழங்கப்படும் தகவலானது கீழ்க்கண்ட எந்த வடிவத்தில் அமைந்துள்ளது.

A) பேச்சு

B) இசை

C) படங்கள் அல்லது கணினித் தரவு

D) மேற்கண்ட அனைத்தும்

25. கூற்று (i): ஆற்றல் மாற்றி என்பது இயற்பியல் அளவுகளின் மாறுபாடுகளை அதற்குச் சமமான மின்சைகையாக மாற்றும் ஒரு சாதனம் மற்றும் அதன் மறுதலையாகும்.

கூற்று (ii): தகவல்தொடர்பு அமைப்பில், ஆற்றல் மாற்றியானது ஒலி, இசை, படங்கள் அல்லது கணினித்தரவு வடிவில் உள்ள தகவலை அதற்குரிய மின்சைகைகளாக மாற்றுகிறது.

A) கூற்று i சரி, ii தவறு

B) கூற்று i தவறு, ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

26. அசல் தகவலின் சமமான மின்சைகையானது_________எனப்படுகிறது.

A) அடிக்கற்றை சைகை

B) மேல்கற்றை சைகை

C) பரப்பி

D) அலையியற்றி

விளக்கம்: அசல் தகவலின் சமமான மின்சைகையானது அடிக்கற்றை சைகை எனப்படுகிறது. ஒலி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒலிவாங்கி ஆற்றல் மாற்றிக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

27. கீழ்க்கண்டவற்றுள் ஒலி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் கருவிக்கு எடுத்துக்காட்டு__________

A) ஒலி ஏற்பி

B) ஒலி பரப்பி

C) ஒலி பெருக்கி

D) ஒலி வாங்கி

விளக்கம்: அசல் தகவலின் சமமான மின்சைகையானது அடிக்கற்றை சைகை எனப்படுகிறது. ஒலி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒலிவாங்கி ஆற்றல் மாற்றிக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

28. ஆற்றல் மாற்றியில் இருந்து வரும் மின்சைகையை தகவல்தொடர்பு வழித்தடத்திற்கு அளிப்பது___________

A) பரப்பி

B) அலையியற்றி

C) பண்பேற்றி

D) பரப்பும் விண்ணலைக்கம்பி

விளக்கம்: பரப்பியானது ஆற்றல் மாற்றியில் இருந்து வரும் மின்சைகையை தகவல்தொடர்பு வழித்தடத்திற்கு அளிக்கிறது. இது பெருக்கி, அலையியற்றி, பண்பேற்றி மற்றும் திறன்பெருக்கி போன்ற சுற்றுகளைக் கொண்டுள்ளது. பரப்பியானது ஒலிபரப்பு நிலையத்தில் அமைந்துள்ளது.

29. கீழ்க்கண்டவற்றுள் பரப்பியில் இடம்பெற்றுள்ள சுற்றுகளைக் கண்டறி:

A) பெருக்கி

B) அலையியற்றி

C) பண்பேற்றி

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: பரப்பியானது ஆற்றல் மாற்றியில் இருந்து வரும் மின்சைகையை தகவல்தொடர்பு வழித்தடத்திற்கு அளிக்கிறது. இது பெருக்கி, அலையியற்றி, பண்பேற்றி மற்றும் திறன்பெருக்கி போன்ற சுற்றுகளைக் கொண்டுள்ளது. பரப்பியானது ஒலிபரப்பு நிலையத்தில் அமைந்துள்ளது.

30. வெளியில் நீண்ட தொலைவு பரப்புகைக்காக, உயர் அதிர்வெண் ஊர்தி அலைகளை உருவாக்குவது__________

A) பரப்பி

B) அலையியற்றி

C) பண்பேற்றி

D) திறன்பெருக்கி

விளக்கம்: வெளியில் நீண்ட தொலைவு பரப்புகைக்காக, உயர் அதிர்வெண் ஊர்தி அலைகளை இது உருவாக்குகிறது. அலையின் ஆற்றல் அதன் அதிர்வெண்ணிற்கு நேர்த்தகவில் உள்ளதால், ஊர்தி அலை மிக அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது.

31. கீழ்க்கண்டவற்றுள் அடிக்கற்றை சைகையை ஊர்தி சைகையின் மீது மேற்பொருத்தி, பண்பேற்றப்பட்ட சைகையை உருவாக்குவது________

A) பரப்பி

B) அலையியற்றி

C) பண்பேற்றி

D) திறன்பெருக்கி

விளக்கம்: பண்பேற்றி – இது அடிக்கற்றை சைகையை ஊர்தி சைகையின் மீது மேற்பொருத்தி, பண்பேற்றப்பட்ட சைகையை உருவாக்குகிறது.

32. கீழ்க்கண்டவற்றுள் நீண்ட தொலைவுக்கு செல்லும் வகையில் மின் சைகையின் திறன் அளவை அதிகரிப்பது__________

A) பரப்பி

B) அலையியற்றி

C) பண்பேற்றி

D) திறன்பெருக்கி

விளக்கம்: திறன்பெருக்கி – இது நீண்ட தொலைவுக்கு செல்லும் வகையில் மின் சைகையின் திறன் அளவை அதிகரிக்கிறது.

33. கீழ்க்கண்டவற்றுள் ரேடியோ சைகையை வெளியில் அனைத்து திசைகளிலும் பரப்புவது__________

A) பரப்பி

B) பரப்பும் விண்ணலைக்கம்பி

C) பண்பேற்றி

D) திறன்பெருக்கி

விளக்கம்: இது ரேடியோ சைகையை வெளியில் அனைத்து திசைகளிலும் பரப்புகிறது. அது மின்காந்த அலைகள் வடிவில், ஒளியின் திசைவேகத்தில் (3 × 108 ms-1) செல்கிறது.

34. ஒளியின் திசைவேகம்________

A) 2 × 108 ms-1

B) 3 × 108 ms-1

C) 4 × 108 ms-1

D) 5 × 108 ms-1

35. கீழ்க்கண்டவற்றுள் பரப்பியில் இருந்து ஏற்பிக்கு குறைந்த இரைச்சல் அல்லது அலைவுடன் மின் சைகைகளை பரப்புவதற்கு உதவுவது________

A) தகவல் தொடர்பு வழித்தடம்

B) தகவல் தொடர்பு பரப்பி

C) தகவல் தொடர்பு அலையியற்றி

D) தகவல் தொடர்பு ஈர்ப்பி

விளக்கம்: தகவல்தொடர்பு வழித்தடமானது பரப்பியில் இருந்து ஏற்பிக்கு குறைந்த இரைச்சல் அல்லது அலைவுடன் மின் சைகைகளை பரப்புவதற்கு உதவுகிறது. தகவல் தொடர்பு ஊடகமானது அடிப்படையில் இரு வகைப்படுகிறது. அவை கம்பிவழி தகவல்தொடர்பு மற்றும் கம்பியில்லா தகவல்தொடர்பு

36. கீழ்க்கண்டவற்றில் கம்பிவழி தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படும் ஊடகங்களுல் பொருந்தாததைக் கண்டறி:

A) கம்பிகள்

B) கம்பி வடங்கள்

C) ஒளி இழைகள்

D) மின்காந்த அலைகள்

விளக்கம்: கம்பிவழி தகவல்தொடர்பு (இருமுனைத் தகவல்தொடர்பு) கம்பிகள், கம்பி வடங்கள் மற்றும் ஒளிஇழைகள் போன்ற ஊடகங்களைப் பயன்படுத்துகிறது. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதால், அந்த அமைப்புகள் நீண்ட தொலைவு பரப்புகைக்கு பயன்படுத்த இயலாது.

37. கம்பிவழி தகவல்தொடர்புகளின் பயன்பாடுகளுல் சரியானதைக் கண்டறி:

A) தொலைபேசி

B) உள்இணைப்பு

C) கேபிள் தொலைக்காட்சி

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கம்பிவழி தகவல்தொடர்பு (இருமுனைத் தகவல்தொடர்பு) கம்பிகள், கம்பி வடங்கள் மற்றும் ஒளிஇழைகள் போன்ற ஊடகங்களைப் பயன்படுத்துகிறது. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதால், அந்த அமைப்புகள் நீண்ட தொலைவு பரப்புகைக்கு பயன்படுத்த இயலாது. தொலைபேசி, உள்இணைப்பு மற்றும் கேபிள் தொலைக்காட்சி ஆகியவை உதாரணங்களாகும்.

38. கம்பியில்லா தகவல்தொடர்பின் ஊடகமானது________

A) உள்ளீடு

B) வெளியீடு

C) பரப்பி

D) அலையியற்றி

விளக்கம்: கம்பியில்லா தகவல்தொடர்பானது வெளியை தகவல்தொடர்பு ஊடகமாகப் பயன்படுத்துகிறது. பரப்பும் விண்ணலைக்கம்பியின் உதவியால் சைகைகள் மின்காந்த அலைகள் வடிவில் பரப்பப்படுகின்றன. எனவே கம்பியில்லா தகவல்தொடர்பு நீண்ட தொலைவு பரப்புகைக்கு பயன்படுகிறது.

39. பரப்பும் விண்ணலைக்கம்பியின் உதவியால் சைகைகள்______வடிவில் பரப்பப்படுகிறது.

A) ரேடியோ அலைகள்

B) புறஊதாக் கதிர்கள்

C) மின்காந்த அலைகள்

D) X – கதிர்கள்

விளக்கம்: கம்பியில்லா தகவல்தொடர்பானது வெளியை தகவல்தொடர்பு ஊடகமாகப் பயன்படுத்துகிறது. பரப்பும் விண்ணலைக்கம்பியின் உதவியால் சைகைகள் மின்காந்த அலைகள் வடிவில் பரப்பப்படுகின்றன. எனவே கம்பியில்லா தகவல்தொடர்பு நீண்ட தொலைவு பரப்புகைக்கு பயன்படுகிறது.

40. கம்பியில்லா தகவல்தொடர்பு முறையில் செயல்படும் சாதனங்கள்_________

A) செல்லிடப்பேசி

B) வானொலி

C) தொலைக்காட்சி ஒலிப்பரப்பு

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கம்பியில்லா தகவல்தொடர்பானது வெளியை தகவல்தொடர்பு ஊடகமாகப் பயன்படுத்துகிறது. பரப்பும் விண்ணலைக்கம்பியின் உதவியால் சைகைகள் மின்காந்த அலைகள் வடிவில் பரப்பப்படுகின்றன. எனவே கம்பியில்லா தகவல்தொடர்பு நீண்ட தொலைவு பரப்புகைக்கு பயன்படுகிறது. செல்லிடப்பேசி, வானொலி அல்லது தொலைக்காட்சி ஒலிபரப்பு மற்றும் செயற்கைக்கோள் தகவல்தொடர்பு ஆகியவை உதாரணங்களாகும்.

41. கீழ்க்கண்டவற்றுள் பரப்பப்பட்ட சைகையை இடைமறிக்கும் விரும்பத்தகாத மின் சைகை__________

A) ஏற்பி

B) இரைச்சல்

C) மறுபரப்பிகள்

D) வலுவிழப்பு

விளக்கம்: இது பரப்பப்பட்ட சைகையை இடைமறிக்கும் விரும்பத்தகாத மின் சைகையாகும். இரைச்சலானது பரப்பப்பட்ட வகையின் தரத்தைக் குறைக்கிறது. இது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் (தானியங்கிகள், பற்றவைப்பு இயந்திரங்கள், மின்மோட்டார்கள் ஆகியவை) அல்லது இயற்கை நிகழ்வாக (மின்னல், சூரியன் மற்றும் விண்மீன்களில் இருந்து வரும் கதிர்வீச்சு மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகள் ஆகியவை) இருக்கலாம். இரைச்சலை முற்றிலுமாக நீக்க இயலாது.

42. கீழ்க்கண்டவற்றுள் மனிதனால் ஏற்படும் இறைச்சல்களுல் பொருந்தாதது எது?

A) தானியங்கிகள்

B) பற்றவைப்பு இயந்திரங்கள்

C) மின்மோட்டார்கள்

D) மின்னல்

விளக்கம்: இது பரப்பப்பட்ட சைகையை இடைமறிக்கும் விரும்பத்தகாத மின் சைகையாகும். இரைச்சலானது பரப்பப்பட்ட வகையின் தரத்தைக் குறைக்கிறது. இது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் (தானியங்கிகள், பற்றவைப்பு இயந்திரங்கள், மின்மோட்டார்கள் ஆகியவை) அல்லது இயற்கை நிகழ்வாக (மின்னல், சூரியன் மற்றும் விண்மீன்களில் இருந்து வரும் கதிர்வீச்சு மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகள் ஆகியவை) இருக்கலாம். இரைச்சலை முற்றிலுமாக நீக்க இயலாது.

43. கீழ்க்கண்டவற்றுள் இயற்கையினால் ஏற்படும் இரைச்சல்களுல் பொருந்தாததைக் காண்க?

A) மின்னலில் இருந்து வரும் கதிர்வீச்சு

B) சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சு

C) விண்மீன்களில் இருந்து வரும் கதிர்வீச்சு

D) தானியங்கிகள்

விளக்கம்: இது பரப்பப்பட்ட சைகையை இடைமறிக்கும் விரும்பத்தகாத மின் சைகையாகும். இரைச்சலானது பரப்பப்பட்ட வகையின் தரத்தைக் குறைக்கிறது. இது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் (தானியங்கிகள், பற்றவைப்பு இயந்திரங்கள், மின்மோட்டார்கள் ஆகியவை) அல்லது இயற்கை நிகழ்வாக (மின்னல், சூரியன் மற்றும் விண்மீன்களில் இருந்து வரும் கதிர்வீச்சு மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகள் ஆகியவை) இருக்கலாம். இரைச்சலை முற்றிலுமாக நீக்க இயலாது.

44. தகவல்தொடர்பு ஊடகத்தின் வழியாக பரப்பப்பட்ட சைகைகள் ஒரு ஏற்கும் விண்ணலைக்கம்பியால் ஏற்கப்பட்டு, மின்காந்த அலைகளை_______அதிர்வெண் சைகைகளாக மாற்றி, ஏற்பிக்கு அளிக்கப்படுகிறது.

A) ரேடியோ

B) புறஊதா

C) அகச்சிவப்பு

D) X – கதிர்

விளக்கம்: தகவல்தொடர்பு ஊடகத்தின் வழியாக பரப்பப்பட்ட சைகைகள் ஒரு ஏற்கும் விண்ணலைக்கம்பியால் ஏற்கப்பட்டு, மின்காந்த அலைகளை ரேடியோ அதிர்வெண் சைகைகளாக மாற்றி, ஏற்பிக்கு அளிக்கப்படுகிறது. ஏற்பியானது, பகுப்பான் ஆகிய எலக்ட்ரானியச் சுற்றுகளைக் கொண்டுள்ளது.

45. கீழக்கண்டவற்றுள் சைகைகள் அனுப்பப்படும் நெடுக்கம் அல்லது தொலைவை அதிகரிக்கப் பயன்படுவது________

A) ஏற்பி

B) மறுபரப்பிகள்

C) வலுவிழப்பு

D) நெடுக்கம்

விளக்கம்: மறுபரப்பிகள் சைகைகள் அனுப்பப்படும் நெடுக்கம் அல்லது தொலைவை அதிகரிக்கப் பயன்படுகின்றன. இது பரப்பி மற்றும் ஏற்பியின் தொகுப்பாகும். சைகைகள் ஏற்கப்பட்டு, பெருக்கப்பட்டு மற்றும் மாறுபட்ட அதிர்வெண் கொண்ட ஊர்தி சைகை மூலம் மறுபடியும் சேருமிடத்திற்கு அனுப்பப்படுகிறது. விண்வெளியில் உள்ள தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

46. கீழ்க்கண்டவற்றுள் மின் சைகையை மீண்டும் அதன் தொடக்க வடிவமான ஒலி, இசை, படங்கள் அல்லது தரவு ஆகியனவாக மாற்றுவது_______

A) மறுபரப்பிகள்

B) நெடுக்கம்

C) ஏற்பி

D) வெளியீடு ஆற்றல் மாற்றி

விளக்கம்: இது மின் சைகையை மீண்டும் அதன் தொடக்க வடிவமான ஒலி, இசை, படங்கள் அல்லது தரவு ஆகியனவாக மாற்றுகிறது. ஒலிப்பான்கள், படக்குழாய்கள், கணினித் திரை ஆகியன வெளியீடு ஆற்றல் மாற்றிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

47. கீழ்க்கண்டவற்றுள் வெளியீடு ஆற்றல் மாற்றியுடன் பொருந்தாதது எது.

A) விண்வெளி

B) ஒலிப்பான்கள்

C) படக்குழாய்கள்

D) கணினித் திரை

விளக்கம்: இது மின் சைகையை மீண்டும் அதன் தொடக்க வடிவமான ஒலி, இசை, படங்கள் அல்லது தரவு ஆகியனவாக மாற்றுகிறது. ஒலிப்பான்கள், படக்குழாய்கள், கணினித் திரை ஆகியன வெளியீடு ஆற்றல் மாற்றிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

48. ஒரு ஊடகத்தின் வழியே பரப்பப்படும்போது சைகையின் வலுவில் ஏற்படும் இழப்புக்கு_______என்று பெயர்.

A) நெடுக்கம்

B) முடுக்கம்

C) வலுவிழப்பு

D) பண்பேற்றம்

விளக்கம்: ஒரு ஊடகத்தின் வழியெ பரப்பப்படும்போது சைகையின் வலுவில் ஏற்படும் இழப்பு வலுவிழப்பு எனப்படும்.

49. குரல், இசை, படம் போன்ற அடிக்கற்றை சைகைகள் அல்லது தகவல் சைகைகளின் அதிர்வெண் நெடுக்கம்________எனப்படுகிறது.

A) பட்டை நீளம்

B) பட்டை அகலம்

C) பட்டை அரண்

D) பட்டை பருமன்

விளக்கம்: குரல், இசை, படம் போன்ற அடிக்கற்றை சைகைகள் அல்லது தகவல் சைகைகளின் அதிர்வெண் நெடுக்கம், பட்டை அகலம் எனப்படும். இந்த அடிக்கற்றை சைகைகள் ஒவ்வொன்றும் மாறுபட்ட அதிர்வெண்களைக் கொண்டுள்ளது.

50. ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில், குறிப்பிட்ட தகவல் பகுதியைப் பரப்புவதற்குத் தேவையான அதிர்வெண்களின் நெடுக்கமானது­­­­­­­­­­­­­­­­­­­­­_________எனப்படுகிறது.

A) அலைவரிசையின் பட்டை அகலம்

B) அலைவரிசையின் பட்டை நீளம்

C) பரப்பும் அமைப்பின் பட்டை அகலம்

D) A C இரண்டும்

விளக்கம்: ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில், குறிப்பிட்ட தகவல் பகுதியைப் பரப்புவதற்குத் தேவையான அதிர்வெண்களின் நெடுக்கமானது அலைவரிசையின் பட்டை அகலம் அல்லது பரப்பும் அமைப்பின் பட்டை அகலம் எனப்படும்.

51. வீச்சுப் பண்பேற்றத்தில் அலைவரிசையின் அகலம், சைகை அதிர்வெண்ணைப்போல்_________மடங்காகும்.

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

விளக்கம்: வீச்சுப் பண்பேற்றத்தில் அலைவரிசையின் அகலம், சைகை அதிர்வெண்ணைப்போல் இரு மடங்காகும். எனவே, இருக்கின்ற மின்காந்த நிறமாலை பகுதியில் அதிக எண்ணிக்கையிலான அலைவரிசைகளை உள்ளடக்குவதற்கு அலை வரிசையின் பட்டை அகலத்தைக் குறைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

52. கூற்று (i): விண்ணலைக்கம்பியானது பரப்பும் முனை மற்றும் ஏற்பு முனை இரண்டிலும் பயன்படுத்தப்படுகிறது.

கூற்று (ii): விண்ணலைக்கம்பியின் உயரம் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய பண்பளவாகும்.

A) கூற்று i சரி, ii தவறு

B) கூற்று i தவறு, ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

53. தகவல்களைக் கொண்ட சைகையானது ஊர்தி அலையுடன் பண்பேற்றப்பட்டு__________ஆல் பரப்பப்படுகிறது.

A) பரப்பி

B) அலையியற்றி

C) விண்ணலைக்கம்பி

D) பெருக்கி

விளக்கம்: தகவல்களைக் கொண்ட சைகையானது ஊர்தி அலையுடன் பண்பேற்றப்பட்டு ஒரு விண்ணலைக்கம்பியினால் பரப்பப்படுகிறது. அது வெளியில் பயணம் செய்து, மறுமுனையில் ஏற்கும் விண்ணலைக்கம்பியால் ஏற்கப்படுகிறது.

54. கம்பியில்லா தகவல்தொடர்பின் மூலமாக பரப்பப்படும் அதிர்வெண் அலைகள்_______

A) 22 kHz முதல் 200 kHz

B) 12 kHz முதல் 200 kHz

C) 2 kHz முதல் 400 kHz

D) 20 kHz முதல் 400 kHz

விளக்கம்: தகவல்களைக் கொண்ட சைகையானது ஊர்தி அலையுடன் பண்பேற்றப்பட்டு ஒரு விண்ணலைக்கம்பியினால் பரப்பப்படுகிறது. அது வெளியில் பயணம் செய்து, மறுமுனையில் ஏற்கும் விண்ணலைக்கம்பியால் ஏற்கப்படுகிறது. 2 kHz முதல் 400 kHz வரை அதிர்வெண் உள்ள அலைகள் கம்பியில்லா தகவல்தொடர்பின் மூலமாக பரப்பப்படுகின்றன.

55. பொருத்துக:

A) கம்பியில்லா தகவல் தொடர்பு – 1. (30 MHz முதல் 400 GHz)

B) தரை (அ) மேற்பரப்பு அலை பரவல் – 2. (3 MHz முதல் 30 MHz)

C) வான் (அ) அயனி மண்டலப் பரவல் – 3. (2 kHz முதல் 2 MHz)

D) வெளி அலைப் பரவல் – 4. (2 kHz முதல் 400 kHz)

A) 1 2 3 4

B) 4 3 2 1

C) 4 2 3 1

D) 1 2 4 3

விளக்கம்:

A) கம்பியில்லா தகவல் தொடர்பு – 1. (2 kHz முதல் 400 kHz)

B) தரை (அ) மேற்பரப்பு அலை பரவல் – 2. (2 kHz முதல் 2 MHz)

C) வான் (அ) அயனி மண்டலப் பரவல் – 3. (3 MHz முதல் 30 MHz)

D) வெளி அலைப் பரவல் – 4. (30 MHz முதல் 400 GHz)

56. கூற்று (i): பரப்பியினால் பரப்பப்பட்ட மின்காந்த அலைகள் ஏற்பியைச் சென்றடைய புவியின் தரையை கழுவிக்கொண்டு சென்றால், இந்தப் பரவல் தரை அலைப் பரவல் எனப்படும்.

கூற்று (ii): தொடர்புடைய அலைகளானது தரை அலைகள் அல்லது மேற்பரப்பு அலைகள் எனப்படுகின்றன.

A) கூற்று i சரி, ii தவறு

B) கூற்று i தவறு, ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

57. பரப்புகையின்போது மின் சைகைகள் நீண்ட தொலைவிற்கு செல்லும்போது வலுவிழக்கக் காரணம்________

A) அதிகரிக்கும் தொலைவு

B) புவியினால் ஆற்றல் உறிஞ்சப்படுதல்

C) அலை சாய்தல்

D) மேற்கண்ட அனைத்தும்

58. பரப்புகையின்போது தொலைவைப் பொருத்து, சைகையில் ஏற்படும் வலுவிழப்பானது கீழ்க்கண்ட எதனைப் பொருத்தது.

A) பரப்பியின் திறன்

B) பரப்பியின் அதிர்வெண்

C) புவிப்பரப்பின் நிலை

D) மேற்கண்ட அனைத்தும்

59. கீழ்க்கண்டவற்றுள் கசியும் மின்தேக்கியாக செயல்படுவது________

A) வளிமண்டலம்

B) புவி

C) மழை

D) மேகம்

விளக்கம்: மின்காந்த அலை வடிவில் உள்ள பரப்பப்படும் சைகையானது புவியைத் தொடும்போது, அது புவியில் ஒரு மின்னூட்டத்தைத் தூண்டி ஒரு மின்னோட்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் புவியானது ஒரு கசியும் மின்தேக்கியைப் போல் செயல்படுகிறது. அதனால் அலை வலுவிழக்கிறது.

60. கூற்று (i): மின்காந்த அலை வடிவில் உள்ள பரப்பப்படும் சைகையானது புவியைத் தொடும்போது, அது புவியில் ஒரு மின்னூட்டத்தைத் தூண்டி ஒரு மின்னோட்டத்தை ஏற்படுத்துகிறது.

கூற்று (ii): இதனால் வளிமண்டலமானது ஒரு கசியும் மின்தேக்கியைப் போல் செயல்படுகிறது. அதனால் அலை வலுவிழக்கிறது.

A) கூற்று i சரி, ii தவறு

B) கூற்று i தவறு, ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

விளக்கம்: மின்காந்த அலை வடிவில் உள்ள பரப்பப்படும் சைகையானது புவியைத் தொடும்போது, அது புவியில் ஒரு மின்னூட்டத்தைத் தூண்டி ஒரு மின்னோட்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் புவியானது ஒரு கசியும் மின்தேக்கியைப் போல் செயல்படுகிறது. அதனால் அலை வலுவிழக்கிறது.

61. விண்ணலைக்கம்பியிலிருந்து அதிக கோணத்தில் மேல்நோக்கி பரப்பப்பட்ட மின்காந்த அலைகள் மீண்டும் புவியை நோக்கி_________ஆல் எதிரொளிக்கின்றன.

A) வளிமண்டலம்

B) அயணிமண்டலம்

C) காற்றுமண்டலம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: விண்ணலைக்கம்பியிலிருந்து அதிக கோணத்தில் மேல்நோக்கி பரப்பப்பட்ட மின்காந்த அலைகள் மீண்டும் புவியை நோக்கி அயனிமண்டலத்தால் எதிரொளிக்கின்றன. இந்த வகையான பரப்புகை வான் அலை பரவல் அல்லது அயனி மண்டலப் பரவல் எனப்படுகிறது. தொடர்புடைய அலைகள் வான் அலைகள் எனப்படும்.

62. தரை அலை பரவலின் அதிர்வெண் பெரும்பாலும்_______யை விட குறைவாக இருக்கும்.

A) 2 MHz

B) 3 MHz

C) 4 MHz

D) 5 MHz

விளக்கம்: உயர் அதிர்வெண் அலைகளுக்கு புவியின் காற்று மண்டலத்தில் அதிக ஆற்றல் உறிஞ்சப்படுவதால், தரை அலைகளின் அதிர்வெண் பெரும்பாலும் 2 MHz, விட குறைவாக இருக்கும். பகல் நேரங்களில் ஏற்கப்படும் நடுத்தர அலை சைகைகள் மேற்பரப்பு அலைப் பரவலைப் பயன்படுத்துகிறது.

63. வான் அலை பரவலில் மின்காந்த அலைகளின் அதிர்வெண் நெடுக்கம்________ஆகும்.

A) 2 முதல் 60 MKz

B) 2 முதல் 30 MKz

C) 3 முதல் 30 MKz

D) 3 முதல் 300 MKz

விளக்கம்: வான் அலை பரவலில் மின்காந்த அலைகளின் அதிர்வெண் நெடுக்கம் 3 முதல் 30 MKz வரை ஆகும். 30 MHz, விட அதிக அதிர்வெண் கொண்ட மின்காந்த அலைகள் அயனிமண்டலத்தை எளிதாக ஊடுருவிச் சென்றுவிடுவதால், அவை எதிரொளிக்கப்படாது. இது சிற்றலை ஒலிபரப்பு சேவைகளுக்கு பயன்படுகிறது.

64. ஒரு முறை எதிரொளிக்கப்படும்போது ரேடியோ அலைகள் ஏறத்தாழ______km தொலைவுக்குப் பயணம் செய்ய இயலும்.

A) 40 km

B) 400 km

C) 4000 km

D) 450 km

65. கீழ்க்கண்டக்கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:

A) அயனிமண்டலம் ஒரு எதிரொளிக்கும் பரப்பாக செயல்படுகிறது.

B) அது தோராயமாக 50 km இல் ஆரம்பித்து புவிப்பரப்பிற்கு மேல் 400 km வரை பரவி உள்ளது.

C) புற ஊதாக் கதிர்கள், காஸ்மிக் கதிர் மற்றும் சூரியனிலிருந்து வரும் கதிர்களைப் போன்ற உயர் ஆற்றல் கதிர்வீச்சுகள் உட்கவரப்படுவதால், அயனிமண்டலத்தில் உள்ள காற்று மூலக்கூறுகள் அயனியாக்கப்படுகின்றன.

D) இது மின்னோட்டப்பட்ட அயனிகளை உருவாக்கி, அந்த அயனிகள் ரேடியோ அலைகள் அல்லது தகவல்தொடர்பு அலைகளை புவிக்கு திருப்பி எதிரொளிக்கும் ஊடகத்தை உண்டாக்குகிறது.

விளக்கம்: இது மின்னூட்டப்பட்ட அயனிகளை உருவாக்கி, அந்த அயனிகள் ரேடியோ அலைகள் அல்லது தகவல்தொடர்பு அலைகளை புவிக்கு திருப்பி எதிரொளிக்கும் ஊடகத்தை உண்டாக்குகிறது.

66. ரேடியோ அலைகள் புவிக்கு திரும்ப வளையும் நிகழ்வு________எனப்படுகிறது.

A) ஒளி விலகல்

B) நிறமாலை

C) முழு அக எதிரொளிப்பு

D) நிறப்பிரிகை

விளக்கம்: ரேடியோ அலைகள் புவிக்கு திரும்ப வளையும் நிகழ்வு முழு அக எதிரொளிப்பு ஆகும். மின்காந்த அலைகள் முழு அக எதிரொளிப்புக்கு உட்பட்டு, வெளிக்கு தப்பிச் செல்லாமல், தரையை வந்தடையுமாறு ஒரு குறிப்பிட்ட மாறுநிலைக் கோணத்தில் பரப்பப்படுவதற்கு இதுவே காரணமாகும்.

67. வான் அலை பரவலின் மேற்பரப்பின் மீது, பரப்பி மற்றும் வான் அலை ஏற்கும் புள்ளி இடையே உள்ள குறுகிய தொலைவு__________எனப்படுகிறது.

A) தாவு தொலைவு

B) தாவு மண்டலம்

C) தாவு பரப்பு

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: மேற்பரப்பின் மீது, பரப்பி மற்றும் வான் அலை ஏற்கும் புள்ளி இடையே உள்ள குறுகிய தொலைவு தாவு தொலைவு எனப்படும்.

68. தரை அலை அல்லது வான் அலை ஆகிய இரண்டு மின்காந்த அலைகளின் ஏற்பும் இல்லாத பகுதி__________என்றழைக்கப்படுகிறது.

A) தாவு மண்டலம்

B) தாவு தொலைவு

C) தாவுப் பரப்பு

D) A C இரண்டும்

விளக்கம்: தரை அலை அல்லது வான் அலை ஆகிய இரண்டு மின்காந்த அலைகளின் ஏற்பும் இல்லாத ஒரு பகுதி உள்ளது. இது தாவு மண்டலம் அல்லது தாவுப் பரப்பு என அழைக்கப்படுகிறது.

69. தகவல் சைகையை வெளியின் வழியே அனுப்பும் மற்றும் பெறும் செயல்முறைக்கு_________என்று பெயர்.

A) தரை அலைப் பரவல்

B) வான் அலைப் பரவல்

C) வெளி அலைப் பரவல்

D) உள் அலைப் பரவல்

விளக்கம்: தகவல் சைகையை வெளியின் வழியே அனுப்பும் மற்றும் பெறும் செயல்முறை வெளி அலைப் பரவல் எனப்படும். 30 MHz மேல் மிக அதிகமான அதிர்வெண்களைக் கொண்ட மின்காந்த அலைகள் வெளி அலைகள் எனப்படும். இந்த அலைகள் பரப்பியிலிருந்து ஏற்பிக்கு நேர்க்கோட்டில் பயணம் செய்கிறது.

70. கீழ்க்கண்டவற்றுள் வெளி அலைப் பரவலைக் கொண்டு செயல்படும் கருவிகள்_________

A) தொலைக்காட்சி ஒளிப்பரப்பு

B) செயற்கைக்கோள் தகவல்தொடர்பு

C) ரேடார்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: தொலைக்காட்சி ஒளிபரப்பு, செயற்கைக்கோள் தகவல்தொடர்பு, மற்றும் ரேடார் போன்ற தகவல்தொடர்பு அமைப்புகள் வெளி அலை பரவலை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

71. சில நேரங்களில் ரேடியோ அலைகளுக்கு பதிலாக கீழ்க்கண்டவற்றுள் எந்த அலைகள் பயன்படுத்தப்படுகிறது.

A) X – கதிர்

B) மைக்ரோ அலைகள்

C) அகச்சிவப்பு

D) புறஊதா

விளக்கம்: சில நன்மைகள் காரணமாக, அதிக அதிர்வெண்கள் கொண்ட மைக்ரோ அலைகள், ரேடியோ அலைகளுக்கு பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. நன்மைகள் – அதிக பட்டை அகலம், உயர்வான தரவு விகிதங்கள், சிறப்பான திசை நெறிப்படுத்தும் திறன், சிறிய அளவான விண்ணலைக்கம்பி, குறைந்த திறன் நுகர்வு போன்றவை ஆகும்.

72. கீழ்க்கண்டவற்றுள் பயன்பாட்டின் அடிப்படையில் உள்ள செயற்கைகோளின் வகைகளைக் கண்டறி:

A) வானிலை செயற்கைக்கோள்கள்

B) தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள்

C) வழிநடத்தும் செயற்கைக்கோள்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

73. வானிலை செயற்கைக்கோளானது கீழ்க்கண்டவற்றுள் எதனைக் கண்டறியப் பயன்படுகிறது.

A) புவியின் வானிலை மற்றும் தட்பவெப்பநிலையைக் கண்டறிய

B) மேகங்களின் நிறையை அளக்க

C) மழை மற்றும் சூறாவளியினைக் கண்டறிய

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: இவை புவியின் வானிலை மற்றும் தட்பவெப்பநிலையைக் கண்காணிக்கப் பயன்படுகின்றன. மேகங்களின் நிறையை அளப்பதன் மூலம் மழை, அபாயகரமான சூறாவளி மற்றும் புயல்கள் ஆகியவற்றை முன்கணிப்பு செய்வதற்கு இந்தச் செயற்கைக்கோள்கள் நமக்கு உதவுகின்றன.

74. தொலைக்காட்சி, வானொலி, இணையச் சைகைகள் ஆகியவற்றை பரப்புவதற்கு பயன்படும் செயற்கைக்கோள்__________

A) வானிலை செயற்கைக்கோள்கள்

B) தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள்

C) வழிநடத்தும் செயற்கைக்கோள்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: இவை தொலைக்காட்சி, வானொலி இணையச் சைகைகள் ஆகியவற்றை பரப்புவதற்குப் பயன்படுகின்றன. நீண்ட தொலைவுகளுக்குப் பரப்ப, ஒன்றிற்கு மேற்பட்ட செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

75. கப்பல்கள், விமானங்கள் அல்லது வேறு எந்த பொருளின் புவிசார் அமைவிடத்தை கண்டறியப் பயன்படும் செயற்கைக்கோள்_______

A) வானிலை செயற்கைக்கோள்கள்

B) தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள்

C) வழிநடத்தும் செயற்கைக்கோள்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கப்பல்கள், விமானங்கள் அல்லது வேறு எந்த பொருளின் புவிசார் அமைவிடத்தை கண்டறியும் பணிகளில் இவை ஈடுபடுகின்றன.

76. கூற்று (i): ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஒளி இழையின் வழியாக, ஒளித்துடிப்புகளின் மூலம் தகவல்களைப் பரப்பும் முறை ஒளி இழைத் தகவல்தொடர்பு எனப்படுகிறது.

கூற்று (ii): இது முழு அக எதிரொளிப்புத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

A) கூற்று i சரி, ii தவறு

B) கூற்று i தவறு, ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

77. ஒளியானது கீழ்க்கண்ட எந்த அலைகளைவிட மிக அதிக அதிர்வெண்ணைக் கொண்டுள்ளது.

A) மைக்ரோ அலை

B) ரேடியோ அலை

C) X – கதிர்

D) A B இரண்டும்

விளக்கம்: ஒளியானது மைக்ரோ அலை மற்றும் ரேடியோ அலைகளை விட மிக அதிக அதிர்வெண்ணைக் கொண்டுள்ளது. சிலிக்கா கண்ணாடி அல்லது சிலிக்கன் டை ஆக்ஸைடால் ஒளி இழைகள் உருவாக்கப்படுகிறது. மேலும் இப்பொருள்கள் புவியில் அதிக அளவில் கிடைக்கிறது.

78. ஒளி இழைகள் கீழ்க்கண்ட எதனால் உருவாக்கப்படுகின்றது.

A) சிலிக்கா கண்ணாடி

B) சிலிக்கன் டை ஆக்ஸைடு

C) சிலிக்கன் பெராக்ஸைடு

D) A B இரண்டும்

விளக்கம்: ஒளியானது மைக்ரோ அலை மற்றும் ரேடியோ அலைகளை விட மிக அதிக அதிர்வெண்ணைக் கொண்டுள்ளது. சிலிக்கா கண்ணாடி அல்லது சிலிக்கன் டை ஆக்ஸைடால் ஒளி இழைகள் உருவாக்கப்படுகிறது. மேலும் இப்பொருள்கள் புவியில் அதிக அளவில் கிடைக்கிறது.

79. கீழ்க்கண்டவற்றுள் ஒளி இழைப் பற்றியக் கருத்துகளுல் தவறானதைக் கண்டறி:

A) ஒளியானது 400 THz முதல் 790 THz அதிர்வெண்களை கொண்டுள்ளது.

B) சிலிக்கா கண்ணாடி அல்லது சிலிக்கன் டை ஆக்ஸைடால் ஒளிஇழைகள் உருவாக்கப்படுகிறது.

C) அதிக அகச்சிவப்பு அலைநீளம் மற்றும் சிறந்த பரப்புகைத் திறன் காரணமாக, சால்கோஜெனைடு கண்ணாடிகள் மற்றும் புளுரோஅலுமினேட் படிகப் பொருட்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.

D) ஒளி இழைகள் மின் கடத்தும் பொருட்கள் என்பதால், ஒன்றிற்கு மேற்பட்ட அலைவரிசைகள் தேவைப்படும் இடங்கள், மின் மற்றும் மின்காந்த இடையூறுகளைத் தவிர்க்க வேண்டிய இடங்கள் ஆகியவற்றில் இவை பயன்படுத்தப் படுகின்றன.

விளக்கம்: ஒளி இழைகள் மின் கடத்தாப்பொருட்கள் என்பதால், ஒன்றிற்கு மேற்பட்ட அலைவரிசைகள் தேவைப்படும் இடங்கள், மின் மற்றும் மின்காந்த இடையூறுகளைத் தவிர்க்க வேண்டிய இடங்கள் ஆகியவற்றில் இவை பயன்படுத்தப் படுகின்றன.

80. ஒளி இழைகள் கீழ்க்கண்ட எவற்றில் பயன்படுகிறது.

A) தரவு இணைப்புகள்

B) ஆலை மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடு

C) இராணுவப் பயன்பாடுகள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: ஒளி இழை அமைப்பு பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. அவை சர்வதேச தகவல்தொடர்பு, நகரங்கள் இடையே தகவல்தொடர்பு, தரவு இணைப்புகள், ஆலை மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் இராணுவப் பயன்பாடுகள் ஆகியவை ஆகும்.

81. கீழ்க்கண்டவற்றுள் ஒளி இழைகளின் நன்மைகளுல் பொருந்தாதது எது.

A) ஒளி இழைகள் மிகவும் கடினமானது. தாமிர வடங்களை விட அதிகமான எடை கொண்டவை.

B) இந்த அமைப்பு மிக அதிக பட்டை அகலத்தைக் கொண்டுள்ளது. இதன் பொருள்: தகவல் சுமந்து செல்லும் திறன் அதிகம் என்பதாகும்.

C) ஒளி இழை அமைப்பு மின் இடையூறுகளால் பாதிக்கப்படுவதில்லை.

D) தாமிர வடங்களைவிட ஒளி இழை மலிவானது.

விளக்கம்: ஒளி இழைகள் மிகவும் மெலிதானது. தாமிர வடங்களை விட குறைவான எடை கொண்டவை.

82. கீழ்க்கண்டவற்றுள் ஒளி இழைகளின் குறைபாடுகளுல் தவறானதைக் கண்டறி:

1) தாமிரக்கம்பிகளுடன் ஒப்பிடும்போது ஒளி இழை வடங்கள் எளிதில் உடையக் கூடியவை.

2) இதன் தொழில்நுட்பம் விலைக்குறைந்தது ஆகும்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

விளக்கம்: தாமிரக்கம்பிகளுடன் ஒப்பிடும்போது ஒளி இழை வடங்கள் எளிதில் உடையக் கூடியவை. இதன் தொழில்நுட்பம் விலையுயர்ந்தது ஆகும்.

83. கீழ்க்கண்டவற்றுள் ஒளி இழைகள் பற்றிய கருத்துகளில் தவறானதைக் கண்டறி:

A) ஒளி இழை வடங்கள் வேறு எந்தவகை பரப்புகையைக் காட்டிலும் குறைவான பரப்புகை வீதத்தை அளிக்கின்றன.

B) இவை வீடுகளுக்கும், வணிக நிறுவனத்திற்கும் 1 Gbps தரவு வேகத்தை அளிக்க இயலும்.

C) மேலும் பல்வகை ஒளி இழைகளானது 10 Mbps வேகத்தில் செயல்படுகின்றன.

D) ஒளி இழைத் தகவல்தொடர்பில், சமீபகால வளர்ச்சிகள் 25 Gbps என்ற வீதத்தில் தரவு வேகத்தை தருகின்றன.

விளக்கம்: ஒளி இழை வடங்கள் வேறு எந்தவகை பரப்புகையைக் காட்டிலும் அதிவேக பரப்புகை வீதத்தை அளிக்கின்றன.

84. கீழ்க்கண்ட எந்த இரு நாடுகளுக்கிடையேயான தகவல் தொடர்பானது ஒளி இழைகளால் ஆனது.

A) அமெரிக்கா

B) ஐரோப்பா

C) ஆஸ்திரேலியா

D) A B இரண்டும்

விளக்கம்: அட்லாண்டிக் பெருங்கடலுக்குக் குறுக்கே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இடையேயான பெரும் பாலான தொலைத்தொடர்பு வடங்கள், ஒளி இழைகளே ஆகும்.

85 ரேடார் என்பதன் சரியான விரிவாக்கம் தருக.

A) Radio Detection And Ranging

B) Radar Detection And Ranging

C) Radio Detector And Ranging

D) Radar Detector And Ranging

விளக்கம்: ரேடார் (RADAR) என்பது Radio Detection And Ranging என்ற சொற்றொடரின் சுருக்கமாகும். இது தகவல்தொடர்பு அமைப்புகளின் பயன்பாடுகளில் முக்கியமான ஒன்றாகும்.

86. ரேடார் கருவியிணைப் பயன்படுத்தி கீழ்க்கண்ட எவற்றின் இருப்பிடத்தைக் கண்டறிய இயலும்.

A) வானூர்தி

B) கப்பல்கள்

C) விண்கலன்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: இது வானூர்தி, கப்பல்கள், விண்கலன் ஆகிய தொலைதூரப் பொருட்களை கண்டுணர்வதற்கு மற்றும் அவற்றின் இருப்பிடத்தை அறிவதற்குப் பயன்படுகிறது.

87. நமது கண்ணிற்குப் புலப்படாத பொருட்களின் கோணம், தொலைவு மற்றும் திசைவேகம் ஆகியவற்றை கண்டறியப் பயன்படுவது.

A) ரேடார்

B) சோனார்

C) புற ஊதாக் கதிர்

D) அகச்சிவப்புக் கதிர்

விளக்கம்: நமது கண்ணிற்குப் புலப்படாத பொருட்களின் கோணம், தொலைவு மற்றும் திசைவேகம் ஆகியவற்றை ரேடார் மூலம் கண்டறியலாம்.

88. ரேடார் ஆனது தகவல்தொடர்புக்கு________அலைகளைப் பயன்படுத்துகிறது.

A) ரேடியோ அலைகள்

B) மைக்ரோ அலைகள்

C) மின்காந்த அலைகள்

D) புற ஊதாக் கதிர்கள்

விளக்கம்: ரேடார் ஆனது தகவல்தொடர்புக்கு மின்காந்த அலைகளைப் பயன்படுத்துகிறது. முதலில் மின்காந்த சைகையானது விண்ணலைக்கம்பி மூலம் வெளியின் அனைத்து திசைகளிலும் பரப்பப்படுகிறது. குறிப்பிட்ட இலக்குப் பொருளின் மீது மோதும் சைகையானது எதிரொளிக்கப்பட்டு, எல்லா திசைகளிலும் மீண்டும் பரப்பப்படுகிறது. இந்த எதிரொளிக்கப்பட்ட சைகை ரேடார் விண்ணலைக்கம்பியால் பெறப்பட்டு ஏற்பிக்கு அளிக்கப்படுகிறது.

89. கீழ்க்கண்டவற்றுள் ரேடாரின் பயன்பாடுகளுல் சரியானதைக் காண்க:

A) இராணுவத்தில், இலக்குகளை இடம் காணவும், கண்டறியவும் பயன்படுகின்றன.

B) கப்பல் மூலம் பரப்பில் தேடுதல், வான் தேடுதல் மற்றும் ஏவுகணை வழிநடத்தும் அமைப்பு போன்ற வழிகாட்டும் அமைப்புகளில் பயன்படுகிறது.

C) மழைப்பொழிவு வீதம் மற்றும் காற்றின் வேகம் ஆகியவற்றை அளவிட்டு, வானிலை கண்காணிப்பில் பயன்படுகிறது.

D) அவசரகால சூழ்நிலைகளில், மக்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அவர்களை மீட்கும் பணியில் உதவுகிறது.

A) 1 2 மட்டும் சரி

B) 2 3 மட்டும் சரி

C) 3 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

90. செல்பேசி தகவல் தொடர்பு பற்றியக் கருத்துகளில் தவறானதைக் கண்டறி:

A) செல்பேசி தகவல் தொடர்பானது கம்பிகள் அல்லது கம்பிவடங்கள் போன்ற எந்த இணைப்புகளும் இன்றி வெவ்வேறு இடங்களில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது.

B) இது அதிகமான பரப்பிற்கு இணைப்பு இன்றியே பரப்புகையை அனுமதிக்கிறது.

C) வீடு, அலுவலகம் போன்ற குறிப்பிட்ட இடத்தில் இருந்து மட்டுமல்லாமல், எந்த இடத்திலிருந்தும் பிறருடன் தொடர்பு கொள்ள வழிசெய்கிறது.

D) தொலைதூர இடங்களுக்கு தகவல்தொடர்பு வசதியை ஏற்படுத்துவதில்லை.

விளக்கம்: தொலைதூர இடங்களுக்கு தகவல்தொடர்பு வசதியை ஏற்படுத்துகிறது.

91. செல்பேசி தகவல்தொடர்பின் பயன்களுல் தவறானதைக் கண்டறி:

A) இது தனிப்பட்ட தகவல்தொடர்புக்கு பயன்படுகிறது. மற்றும் செல்பேசிகளுக்கு குறைந்த வேகத்தில் குரல் மற்றும் தரவு இணைப்பை வழங்குகிறது.

B) உலகம் முழுவதும் ஒரு சில வினாடிக்குள் செய்திகளைப் பரப்பமுடியும்.

C) இணையத்தின் வழியே பொருட்களைப் பயன்படுத்தும் முறையில், ஒரு சாதனத்தின் மூலம் பல்வேறு சாதனங்களைக் கட்டுப்படுத்துவது சாத்தியமாகிறது. எ.கா. செல்பேசியைப் பயன்படுத்தி, வீட்டு உபயோகப்பொருட்கள் அனைத்தையும் இயக்கமுடியும்.

D) இது கல்வித்துறையில் நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், இணையதளத்தில் பாடம் தொடர்பான குறிப்புகள் கிடைப்பது, மாணவர்களின் செயல்பாடுகளை கவனித்தல் ஆகியவற்றில் பயன்படுகிறது.

விளக்கம்: இது தனிப்பட்ட தகவல்தொடர்புக்கு பயன்படுகிறது. மற்றும் செல்பேசிகளுக்கு அதிக வேகத்தில் குரல் மற்றும் தரவு இணைப்பை வழங்குகிறது.

92. கீழ்க்கண்டவற்றுள் தவறானதைக் கண்டறி:

A) சமீப காலமாக, செல்பேசி தகவல்தொடர்பு தொழில் நுட்பமானது 2G, 3G, 4G, 5G, மற்றும் இது போன்றவை என பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது.

B) இது தகவல்தொடர்பு வேகத்தையும், செயல்பாட்டு நெடுக்கத்தையும் குறைக்கச் செய்கிறது.

C) நம்பகமான மற்றும் பாதுகாப்பான இணைப்புகளால் இணைப்பு தொடர்பான சிக்கல்கள் குறைக்கப்பட்டுள்ளன.

D) GPS, GSM ஆகிய தொழில்நுட்பங்கள், செல்பேசி தகவல்தொடர்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

விளக்கம்: இது தகவல்தொடர்பு வேகத்தையும், செயல்பாட்டு நெடுக்கத்தையும் அதிகரிக்க உதவுகிறது.

93. கீழ்க்கண்டவற்றுள் செல்பேசி தகவல்தொடர்பு பற்றிய கருத்துகளுல் சரியானதைக் கண்டறி:

1) வலையமைப்பின் பட்டை அகலத்தைப் பயன்படுத்துதல், வலையமைப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல், பிழை கண்டறிதல் ஆகிய செயல்களை இது அதிகரிக்கின்றது.

2) இலக்கமுறை மாறுதல், போன்ற பல தகவல்தொடர்பு வகைகளின் செயல்பாட்டை எளிமையாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

94. தகவல்தொடர்பு அமைப்பில் பன்முகத்தன்மை கொண்ட கருவிகளுடன் வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பம்___________

A) இணையம்

B) மன் வணிகம்

C) தேடுபொறி

D) தகவல்தொடர்பு

விளக்கம்: இணையம் என்பது தகவல்தொடர்பு அமைப்பில் பன்முகத்தன்மை கொண்ட கருவிகளுடன் வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். அது மக்களுடன் தொடர்பு கொள்ள புதிய வழிமுறைகளை வழங்குகிறது. இணையம் என்பது இலட்சக்கணக்கான மக்களை கணினி வழியே இணைக்கும், உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மிகப்பெரும் கணினி வலை அமைப்பாகும்.

95. இணையத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் சேமிப்பதற்கு நமக்கு தேவைப்படவேண்டியது___________

A) 1 பில்லியன் DVD

B) 200 மில்லியன் புளு-ரே டிஸ்க்

C) 1 DVD

D) A B இரண்டும்

விளக்கம்: இணையத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் சேமிப்பதற்கு, உங்களுக்கு 1 பில்லியன் DVD அல்லது 200 மில்லியன் புளு-ரே டிஸ்க்குகளுக்கு மேல் தேவைப்படும்.

96. இணையத்திற்கு தேவைப்படும் முக்கிய சேவைபொறிகள்_______

A) தேடு பொறி

B) தகவல்தொடர்பு

C) மின்-வணிகம்

D) மேற்கண்ட அனைத்தும்

97. GPS என்பதன் விரிவாக்கம்_________

A) Global Positioning System

B) Globaler Positioning System

C) Global Positioning Systematic

D) Global Positioned System

98. கீழ்க்கண்டவற்றுள் வழி நடத்தும் செயற்கைக்கோள்களின் உலகளாவிய அமைப்பு________

A) GPS

B) GSM

C) ரேடார்

D) சோனார்

விளக்கம்: இது வழி நடத்தும் செயற்கைக்கோள்களின் உலகளாவிய அமைப்பு ஆகும். இதன்மூலம் புவிக்கு அருகிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ இருக்கும் பிற ஏற்பிக்கு, புவிசார் அமைவிடம் மற்றும் காலம் தொடர்பான தகவல்களை வழங்குகிறது.

99. உலகளாவிய நிலையறியும் அமைப்பின் பயன்பாடுகளில் சரியானதைக் கண்டறி:

A) இயங்கும் வாகன நிர்வாகம்

B) பொறியியல் துறை

C) வனவிலங்கு நிர்வாகம்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: உலகளாவிய நிலையறியும் அமைப்பு பல துறைகளில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அவையாவன: இயங்கும் வாகன நிர்வாகம் வனவிலங்கு நிர்வாகம் மற்றும் பொறியியல் துறை பாலங்கள் ஆகியவற்றில் பயன்படுகிறது.

100. தகவல்தொடர்புத் துறை கீழ்க்கண்ட எந்த துறைகளில் பயன்படுகிறது.

A) விவசாயத் துறை

B) மீன்வளத்துறை

C) சுரங்கத்துறை

D) மேற்கண்ட அனைத்தும்

101. விவசாயத்துறையில் தகவல்தொடர்புத் துறையினால் ஏற்படும் நன்மைகளுல் பொருந்தாததைக் கண்டறி:

1) உணவு உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் பண்ணை நிர்வாகம் ஆகியவற்றில் அதிகளவில் பயன்படுகிறது.

2) தண்ணீர், விதைகள் மற்றும் உரங்கள் ஆகியவற்றின் மேம்பட்ட பயன்பாட்டிற்கு உதவுகிறது.

3) ரோபோக்கள், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் உணர்விகள், வான்வழி படங்கள் மற்றும் GPS தொழில்நுட்பம் ஆகியவை உள்ளடங்கிய அதிநவீன தொழில்நுட்பங்களையும் இங்கு பயன்படுத்தலாம்.

4) புவிசார் தகவல் அமைப்புகள் ஆனது ஒரு குறிப்பிட்ட தாவரத்தை பயிரிடுவதற்கு தகுதியான இடத்தை முடிவு செய்வது.

A) 1 2 மட்டும் சரி

B) 2 3 மட்டும் சரி

C) 3 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

102. GIS என்பதன் விரிவாக்கம்_________

A) Geographic Information System

B) Geographic Informated System

C) Geographic Information Systemed

D) Geographical Informated System

103. மீன்வளத் துறையில் தகவல்தொடர்பு தொழில்நுட்பங்களின் பயன்பாட்டினைக் கண்டறி:

1) செயற்கைக்கோள் கண்காணிக்கும் அமைப்பானது மீன்பிடிப்பு பகுதியை அடையாளம் காண உதவுகிறது.

2) பார்கோடுகளை பயன்படுத்துவதன் மூலம் மீன் பிடிக்கப்பட்ட தேதி மற்றும் நேரம், மீன் வகையின் பெயர், மீனின் தரம் ஆகியவற்றை அடையாளம்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

104. சுரங்கத்துரையில் தகவல்தொடர்பு தொழில்நுட்பங்களின் பயன்பாடுகளுல் பொருந்தாததைக் கண்டறி:

1) சுரங்கத்துறையில், செயல்பாடு திறன் அதிகரிப்பு, தொலைதூர கண்காணிப்பு மற்றும் பேரிடர் நடைபெற்ற இடத்தை அறிதல் ஆகியவற்றில் ICT பயன்படுகிறது.

2) சுரங்கத்தில் சிக்கிக்கொள்ளும் தொழிலாளர்களுக்கு ஒலி-ஒளி எச்சரிக்கையை அளிக்கிறது.

3) தொலைதூரத்தில் உள்ள சுரங்கப்பணியிடங்களை பிரிக்க உதவுகிறது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: தொலைதூரத்தில் உள்ள சுரங்கப்பணியிடங்களை இணைக்க உதவுகிறது.

105. தகவல்தொடர்பு அமைப்பின், வெளியீடு திறன் மாற்றியானது ரேடியோ சைகையை______ஆக மாற்றுகிறது.

A) ஒலி

B) இயற்திர ஆற்றல்

C) இயக்க ஆற்றல்

D) இவற்றில் ஏதுமில்லை

106. ஒரு தகவல்தொடர்பு அமைப்பில், சைகையானது இரைச்சலால் பாதிக்கப்படுவது.

A) பரப்பியில்

B) பண்பேற்றியில்

C) வழித்தடத்தில்

D) ஏற்பியில்

107. பண்பேற்றும் சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்ப ஊர்தி அலையின் அதிர்வெண் மாற்றப்படுவது_______எனப்படும்

A) வீச்சுப் பண்பேற்றம்

B) அதிர்வெண் பண்பேற்றம்

C) கட்டப் பண்பேற்றம்

D) துடிப்பு அகல பண்பேற்றம்

108. FM ஒலிபரப்புகளில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிர்வெண் விலகல்

A) 75 kHz

B) 68 kHz

C) 80 kHz

D) 70 kHz

109. 3 MHz முதல் 30 MHz வரையிலான அதிர்வெண் நெடுக்கம் பயன்படுவது

A) தரை அலைப் பரவல்

B) வெளி அலைப் பரவல்

C) வான் அலைப் பரவல்

D) செயற்கைக்கோள் தகவல்தொடர்பு

12th Science Lesson 11 Questions in Tamil

11] பரிணாமம்

1. கூற்று (i): ஒரு இனக்கூட்டத்திலுள்ள ஒரு சிற்றினத்தின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பண்புகளில் ஏற்படும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படக்கூடிய மாற்றங்கள் பரிணாமம் எனப்படும்.

கூற்று (ii): இன்றைய மனித இனத்தின் நிலை மூன்று வகைப் பரிணாம நிகழ்வுகளால் தோன்றியிருக்கலாம். அவை-வேதிப்பரிணாமம், கரிமப் பரிணாமம் மற்றும் சமூக அல்லது பண்பாட்டுப் பரிணாமம்.

A) கூற்று i சரி ii தவறு

B) கூற்று i தவறு ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

2. சூரியக்குடும்பம் மற்றும் பூமியின் வயது முறையே________,_______

A) 4.5 – 4.6 பில்லியன்

B) 3.5 – 3.6 பில்லியன்

C) 5.3 – 5.6 பில்லியன்

D) 4.5 – 5.4 பில்லியன்

விளக்கம்: கதிரியக்க முறையில் விண்கற்களை ஆய்வு செய்ததில், சூரியக்குடும்பம் மற்றும் பூமியின் வயது சுமார் 4.5 – 4.6 பில்லியன் ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது.

3. உயிரினங்கள் யாவும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியினால் படைக்கப்பட்டவை எனக் குறிப்பிடும் கோட்பாடு________

A) தான் தோன்றல் கோட்பாடு

B) சிறப்பு படைத்தல் கோட்பாடு

C) பெருவெடிப்புக் கோட்பாடு

D) உயிர்வழித் தோற்றக் கோட்பாடு

விளக்கம்: சிறப்புப் படைத்தல் கோட்பாட்டின்படி உயிரினங்கள் யாவும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியினால் படைக்கப்பட்டவை என நம்பப்படுகிறது. அனைத்து மதங்களும் ‘கடவுள்தான்’ இந்த உலகத்தையும், தாவரங்கள் மற்றும் விலங்குகளையும் படைத்ததாக நம்புகின்றனர்.

4. பல மில்லியன் ஆண்டுகளாக உயிரற்ற பொருட்களான வேதிப்பொருட்கள் மற்றும் மூலக்கூறுகளில் படிப்படியாக நடைபெற்ற பரிணாமத்தால் உயிரினங்கள் தோன்றியதாக குறிப்பிடும் கோட்பாடு_______

A) தான் தோன்றல் கோட்பாடு

B) பெருவெடிப்புக் கோட்பாடு

C) உயிரின்றி உயிர் தோன்றல் கோட்பாடு

D) A C இரண்டும்

விளக்கம்: தான் தோன்றல் கோட்பாடு அல்லது உயிரின்றி உயிர் தோன்றல் கோட்பாட்டின்படி உயிரினங்கள் உயிரற்ற பொருட்களிலிருந்து தோன்றின. பல மில்லியன் ஆண்டுகளாக உயிரற்ற பொருட்களான வேதிப்பொருட்கள் மற்றும் மூலக்கூறுகளில் படிப்படியாக நடைபெற்ற பரிணாமத்தால் உயிரினங்கள் தோன்றின.

5. உயிரின்றி உயிர் தோன்றல் என்ற பதத்தை உருவாக்கியவர்___________

A) டி லாமார்க்

B) தாமஸ் ஹக்ஸ்லே

C) தாமஸ் பீட்டர்

D) ஹென்றி பாஸ்டியன்

6. சூரியனிலிருந்து வரும்________கதிர்கள் நீர் மூலக்கூறை ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் பிரிக்கிறது.

A) ரேடியோ கதிர்கள்

B) வெப்பக் கதிர்கள்

C) புறஊதாக் கதிர்கள்

D) அகச்சிவப்புக் கதிர்கள்

விளக்கம்: சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் நீர் மூலக்கூறை ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் பிரித்தது. படிப்படியாக வெப்பநிலை குறைந்து நீராவி மழைநீராக மாறியது. மழைநீர் பூமியின் தாழ்வான பகுதிகளில் தேங்கி நீர்நிலைகள் உருவாயின.

7. திரவ ஊடகத்திலிருந்து திரண்டு வரும் கூழ்மத் திரள்களுக்கு_______என்று பெயர்.

A) ஆர்டோவிசியன்

B) சைலூரியன்

C) கோசர்வேட்டுகள்

D) டிவோனியன்

8. உயிர்வேதியல் நிகழ்ச்சிகளால் உயிரினங்கள் உருவாக்கப்படுவது__________கோட்பாடாகும்.

A) தான் தோன்றல் கோட்பாடு

B) சிறப்பு படைத்தல் கோட்பாடு

C) பெருவெடிப்புக் கோட்பாடு

D) உயிர்வழித் தோற்றக் கோட்பாடு

விளக்கம்: உயிர்வழித் தோற்றக் கோட்பாட்டின் படி ஒரு உயிரினம் ஏற்கனவே உள்ள உயிரினத்திலிருந்து உருவானது ஆகும். இக்கோட்பாட்டின்படி உயிர்வேதியல் நிகழ்ச்சிகளால் உயிரினங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இச்சொல்லை உருவாக்கியவர் ஹென்றி பாஸ்டியன் ஆவார்.

9. உயிர்வழித் தோற்றக் கோட்பாடு என்ற சொல்லைக் உருவாக்கியவர்___________

A) டி லாமார்க்

B) தாமஸ் ஹக்ஸ்லே

C) தாமஸ் பீட்டர்

D) ஹென்றி பாஸ்டியன்

10. கரிமப் பொருட்கள் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு ஆட்பட்டு பெரிய மூலக்கூறுகளாக மாறியிருக்கக்கூடும் என்ற கூற்றினை முன்வைத்தவர்__________

A) ஒப்பாரின்

B) தாமஸ் ஹக்ஸ்லே

C) ஹென்றி பாஸ்டின்

D) ஹால்டேன்

விளக்கம்: வேதிப்பரிணாமக் கோட்பாட்டின்படி பூமியின் ஆரம்ப காலச் சூழலில் தொன்மையான உயிரினங்கள் கனிமப் பொருட்கள் மற்றும் இயற்பியல் காரணிகளான மின்னல், புறஊதாக் கதிர்கள், எரிமலை செயல்கள் மற்றும் பிறவற்றின் உதவியால் தானாகவே தோன்றியிருக்கலாம். ஒப்பாரின்(1924) என்பவர் கரிமப் பொருட்கள் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு ஆட்பட்டு பெரிய மூலக்கூறுகளாக மாறியிருக்கக்கூடும் என்றும் இம்மூலக்கூறுகள் திரவ ஊடகத்தில் கூழ்மத் திரள்களாக அல்லது கோசர்வேட்டுகளாக மாறியிருக்கலாம் என்றும் கூறுகிறார்.

11. ஆரம்ப கடல், சூரியஒளி ஆற்றலைப் பெற்று, மிகப்பெரிய வேதியியல் ஆய்வகமாக செயல்பட்டது என்றுக் கூறியவர்__________

A) ஒப்பாரின்

B) தாமஸ் ஹக்ஸ்லே

C) ஹால்டேன்

D) ஹென்றி பாஸ்டின்

விளக்கம்: ஹால்டேன் என்பவர் கூற்றுப்படி ஆரம்பகால கடல், சூரியஒளி ஆற்றலைப் பெற்று, மிகப்பெரிய வேதியியல் ஆய்வகமாக செயல்பட்டது.

12. “உயிரி முன்னோடிச்சாறு” என்ற சொல்லை உருவாக்கியவர்__________

A) ஒப்பாரின்

B) ஹால்டேன்

C) தாமஸ் ஹக்ஸ்லே

D) ஹென்றி பாஸ்டின்

விளக்கம்: ஹால்டேன் ‘உயிரி மூன்னோடிச்சாறு’ என்ற சொல்லை உருவாக்கினார். இதுவே உயிரினத் தோற்றத்தை விளக்கும் ஹால்டேன் ஒப்பாரின் கோட்பாட்டிற்கான அடையாளமாக மாறியது.

13. கீழ்க்கண்டவற்றுள் சரியான புவியின் வரலாற்றுக் காலத்தை குறிப்பிடுக.

A) பாலியோசோயிக்

B) மீசோசோயிக்

C) சீனோசோயிக்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: புவியின் வரலாற்றுக் காலத்தை பல பெருங்காலங்களாகப் பிரித்துள்ளனர். அவை, பாலியோசோனிக், மீசோசோயிக், சீனோசோயிக் பெருங்காலங்கள் ஆகும். சமீப பெருங்காலங்களை பல பருவங்களாகப் பிரித்துள்ளனர். இந்த பருவங்கள் பல சிறுகாலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

14. முதுகுநாணற்ற விலங்குகளின் புதைபடிவங்கள் அதிகம் கிடைத்துள்ள பெருங்காலம்_________

A) பாலியோசோயிக்

B) மீசோசோயிக்

C) சீனோசோயிக்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: பாலியோசோயிக் பெருங்காலத்தில் கடல்வாழ் முதுநாணற்ற விலங்குகளின் புதைபடிவங்கள் அதிகம் கிடைத்துள்ளன. அப்பெருங்காலத்தின் பின் பாதிப் பகுதியில் பறவைகள் மற்றும் பாலூட்டிகளைத் தவிர பிற முதுகு நாணுடையவை தோன்றின.

15. பாலியோசோயிக் பெருங்காலமானது_________பருவங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

A) ஐந்து

B) ஆறு

C) ஏழு

D) எட்டு

16. பொருத்துக: (பாலியோசோயிக் பெருங்காலம்)

A) கேம்ப்ரியன் – 1. மீன்களின் காலம்

B) ஆர்டோவிசியன் – 2. மீன்கள் தோற்றம்

C) சைலூரியன் – 3. மெல்லுடலிகள்

D) டிவோனியன் – 4. முதுகுநாணற்றவைகளின் காலம்

A) 1 2 3 4

B) 4 2 3 1

C) 4 1 2 3

D) 4 3 2 1

விளக்கம்:

A) கேம்ப்ரியன் – 1. முதுகுநாணற்றவைகளின் காலம்

B) ஆர்டோவிசியன் – 2. மெல்லுடலிகள்

C) சைலூரியன் – 3. மீன்கள் தோற்றம்

D) டிவோனியன் – 4. மீன்களின் காலம்

17. கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:

1) மிசிசிபியன் – பழமையான ஊர்வன

2) பென்சில்வேனியன் – பழமையான இருவாழ்விகள்

3) பெர்மியன் – பாலூட்டிகளைப் போன்ற ஊர்வன

A) 1 2 மட்டும் தவறு

B) 2 3 மட்டும் தவறு

C) 1 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

1) மிசிசிபியன் – பழமையான இருவாழ்விகள்

2) பென்சில்வேனியன் – பழமையான ஊர்வன

3) பெர்மியன் – பாலூட்டிகளைப் போன்ற ஊர்வன

18. ‘ஊர்வனவற்றின் பொற்காலம்’ என்றழைக்கப்படுவது___________

A) பாலியோசோயிக்

B) மீசோசோயிக்

C) சீனோசோயிக்

D) புரோப்பனோசோயிக்

விளக்கம்: மீசோசோயிக் பெருங்காலம்(ஊர்வனவற்றின் ஆதிக்கம்) ‘ஊர்வனவற்றின் பொற்காலம்’ என அழைப்படுகிறது. இப்பெருங்காலம் மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

19. கீழ்க்கண்டவற்றுள் ‘பாலூட்டிகளின் காலம்’ என்றழைக்கப்படுவது________

A) பாலியோசோயிக்

B) மீசோசோயிக்

C) சீனோசோயிக்

D) புரோப்பனோசோயிக்

விளக்கம்: இப்பெருங்காலம், பெர்ஷியரி மற்றும் குவார்டெர்னரி ஆகிய இரண்டு பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. டெர்ஷியரி பருவம் பாலூட்டிகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் பருவம் ஆகும்.

20. சீனோசோயிக் பெருங்காலத்தில் பாலூட்டிகள் அதிக காணப்படும் பருவம்__________

A) டெர்ஷியரி

B) குவார்டெர்னரி

C) மேற்கண்ட அனைத்தம்

D) மேற்கண்ட எவையுமில்லை

விளக்கம்: டெர்ஷியரி பருவம் பாலூட்டிகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் பருவம் ஆகும். இப்பருவம் ஐந்து சிறு காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

21. கீழ்க்கண்ட டெர்ஷியரி பருவத்தின் இணைகளுல் சரியானதைக் கண்டறி:

1) பாலியோசீன் – நஞ்சுக் கொடி பாலூட்டிகள்

2) இயோசீன் – மேம்பட்ட நஞ்சுக்கொடி பாலூட்டிகளின் தோற்றம்

3) ஆலிகோசீன் – வாத்து அலகு பிளாடிபஸ்

4) மையோசீன் – மனிதனைப் போன்ற மனிதக் குரங்குகள்

A) 1 2 மட்டும் சரி

B) 2 3 மட்டும் சரி

C) 3 4 மட்டும் சரி

D) 1 4 மட்டும் சரி

விளக்கம்:

1) பாலியோசீன் – நஞ்சுக் கொடி பாலூட்டிகள்

2) இயோசீன் – வாத்து அலகு பிளாடிபஸ்

3) ஆலிகோசீன் – மேம்பட்ட நஞ்சுக்கொடி பாலூட்டிகளின் தோற்றம்

4) மையோசீன் – மனிதனைப் போன்ற மனிதக் குரங்குகள்

22. கூற்று (i): ஒப்பீடு வயது கணக்கிடும் முறையில், புதைபடிவங்களின் வயது, புதைபடிவங்களை ஒத்த பாறைகள் அல்லது வயது தெரிந்த புதைபடிங்களோடு ஒப்பிட்டுக் கணக்கிடப்படுகிறது.

கூற்று (ii): முழுமையான வயது கணக்கிடும் முறையில், கதிரியக்க வயது கணக்கிடும் முறைப்படி, புதைபடிவங்களில் உள்ள ஐசோடோப்புகளின் சிதைவு அளவிடப்பட்டு புதைபடிவங்களின் வயது கணக்கிடப்படுகிறது.

A) கூற்று i சரி ii தவறு

B) கூற்று i தவறு ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

23. திரவத்தில் உள்ள லிப்பிடுகள், தாமே ஒன்று சேர்ந்து_________சவ்வு லிப்பிடுகளாக வடிவமைத்துக் கொள்கின்றன.

A) ஒற்றை

B) இரட்டை

C) மும்மை

D) நான்மய

விளக்கம்: திரவத்தில் உள்ள லிப்பிடுகள், தாமே ஒன்று சேர்ந்து இரட்டைச் சவ்வு லிப்பிடுகளாக வடிவமைத்துக் கொள்கின்றன. இவை ‘லிப்போசோம்கள்’ என அழைக்கப்படுகின்றன.

24. வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன், மீத்தேன் மற்றும் அம்மோனியாவுடன் இணைந்து_________யைத் தருகிறது.

A) கார்பன் டை ஆக்சைடு

B) ஹைட்ரஜன்

C) நைட்ரஜன்

D) A C இரண்டும்

விளக்கம்: வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன், மீத்தேன் மற்றும் அம்மோனியாவுடன் இணைந்து கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் தனித்த நைட்ரஜனை உருவாக்கியது. வளிமண்டலத்தில் காணப்பட்ட தனித்த O2 ஆல் காற்று சுவாச முறை பரிணாமம் ஏற்பட்டது.

25. கரிம மூலக்கூறுகள் எவ்வாறு உருவாகியிருக்கக் கூடும் என்றும் அவற்றிலிருந்து உயிரினங்கள் எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்பதையும் புரிந்துகொள்ள வழி ஏற்படுத்தியவர்______________

A) யூரே

B) மில்லர்

C) சிம்சன்

D) A B இரண்டும்

விளக்கம்: யூரே மற்றும் மில்லர்(1935) ஆகியோர் கரிம மூலக்கூறுகள் எவ்வாறு உருவாகியிருக்கக் கூடும் என்றும் அவற்றிலிருந்து உயிரினங்கள் எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்பதையும் புரிந்துகொள்ள வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

26. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:

1) தொல்லுயிரியல் என்பது புதைபடிவங்கள் மூலமாக வரலாற்றுக்கு பிந்தைய உயிரினங்களை ஆய்வு செய்வது ஆகும்.

2) பரிணாமத்தின் உண்மையான சாட்சிகள் அல்லது பரிணாமத்தின் பல்வேறு புவியியல் அடுக்குகளுக்கான ஆவணங்களாக புதைபடிவங்கள் கருதப்படுகின்றன.

3) பூமியின் படிவப் பாறைகளில் தாவரங்கள் அல்லது விலங்குகளின் எச்சங்கள் பாதுகாக்கப்படுதல் புதைபடிவமாக்கம் எனப்படும்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: தொல்லுயிரியல் என்பது புதைபடிவங்கள் மூலமாக வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்களை ஆய்வு செய்வது ஆகும்.

27. மாம்மூத் யானைகள்___________ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினமாகும்.

A) 20 ஆயிரம்

B) 22 ஆயிரம்

C) 24 ஆயிரம்

D) 26 ஆயிரம்

விளக்கம்: 22 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கம்பளி மாம்மூத் யானைகள் சைபீரியாவின் உறைந்த கடற்கரைப் பகுதியில் முழு உடலும் படிவமாக மாறி பாதுகாக்கப்பட்டிருந்தது.

28. கீழ்க்கண்டக் கூற்றுகளில் சரியானவற்றைக் காண்க:

1) விலங்குகள் இறந்த பின்னர் அவற்றின் உண்மையான உடல் பகுதிகளின் மூலக்கூறுகள், தாது உப்புகளின் மூலக்கூறுகளால் பதிலீடு செய்யப்படுகின்றன.

2) மேலும் அவற்றின் மூல உடல் பகுதிகள், சிறிது சிறிதாக அழிந்து விடுகின்றன.

3) இம்முறையிலான புதைபடிவமாக்கல் முறை கல்லாதல் எனப்படும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

29. கல்லாதல் புதைபடிவமாக்கல் முறையில் பணியாற்றும் முக்கிய தாது பொருட்கள்?

A) இரும்பு பைரைட்டுகள்

B) சிலிகா

C) கால்சியம் கார்பனேட்

D) மேற்கண்ட அனைத்தும்

30. கூற்று (i): இறந்த விலங்குகளின் உடல்கள் படிப்படியாக சிதைந்த பின்பும், அவற்றின் உடல் மென்மையான சேறு போன்ற பகுதியில் அழியாத பதிவை உருவாக்குகின்றன. இப்பதிவு பின்பு கடினமாகி கல்லாக மாறுகிறது இவ்வகைப் பதிவுகள் அச்சுகள் எனப்படும்.

கூற்று (ii): இந்த அச்சுகளின் உட்புறம் உள்ள குழிகள் தாது உப்புகளால் நிரப்பப்பட்டு படிவமாக மாறுகின்றன. இவை வார்ப்புகள் எனப்படும்.

A) கூற்று i சரி ii தவறு

B) கூற்று i தவறு ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

31. கோப்ரோலைட்டுகள் எனப்படுவது__________

A) விலங்குகளின் கடினமாக்கப்பட்ட மலப்பொருட்கள்

B) ஊர்வனங்களின் கடினமாக்கப்பட்ட மலப்பொருட்கள்

C) தாவரங்களின் கழிவுப்பொருட்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: விலங்குகளின் கடினமாக்கப்பட்ட மலப்பொருட்கள், கோப்ரோலைட்டுடகள் எனும் சிறு உருண்டைகளாக காணப்படுகின்றன. இந்த கோப்ரோலைட்டுகளை ஆய்வு செய்வதால் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த விலங்குகளின் உணவுப் பழக்கத்தினை அறிந்து கொள்ளலாம்.

32. புகழ்வாய்ந்த எழும்பூர் அருங்காட்சியகம்________ல் உள்ளது.

A) மும்பை

B) கொல்கத்தா

C) சென்னை

D) கோவா

33. உருவாக்கத்தில் ஒரே மாதிரியாக அமைந்து ஆனால் வெவ்வேறு செயல்களை செய்யக்கூடிய உறுப்புகள்__________எனப்படுகின்றன.

A) அமைப்பொத்த உறுப்புகள்

B) செயலொத்த உறுப்புகள்

C) எச்ச உறுப்புகள்

D) இணைப்பு உயிரிகள்

விளக்கம்: உருவாக்கத்தில் ஒரே மாதிரியாக அமைந்து ஆனால் வெவ்வேறு செயல்களை செய்யக்கூடிய உறுப்புகள் அமைப்பொத்த உறுப்புகள் எனப்படும். இவை விரி பரிமாணத்தை ஏற்படுத்தக்கூடியவை.

34. காகிதப் பூவில் முட்கள் அமைந்திருப்பதன் நோக்கம்__________

A) ஒளிச்சேர்க்கை செய்ய

B) சுவாசித்தலுக்காக

C) மேய்ச்சல் விலங்குகளிலிருந்து பாதுகாக்க

D) மகரந்தச்சேர்க்கை செய்ய

விளக்கம்: காகிதப் பூவில் உள்ள முட்கள் அவற்றை மேய்ச்சல் விலங்குகளிலிருந்து பாதுகாக்கின்றன. சுரை மற்றும் பட்டாணியில் உள்ள பற்றுக் கம்பிகள் பற்றிப் படர உதவுகின்றன.

35. அமைப்பு அடிப்படையில் வேறுபட்டிருந்தாலும் ஒரேவிதமான செயலைச் செய்யக் கூடிய உறுப்புகள்___________எனப்படுகின்றன.

A) அமைப்பொத்த உறுப்புகள்

B) செயலொத்த உறுப்புகள்

C) எச்ச உறுப்புகள்

D) இணைப்பு உயிரிகள்

விளக்கம்: அமைப்பு அடிப்படையில் வேறுபட்டிருந்தாலும் ஒரேவிதமான செயலைச் செய்யக் கூடிய உறுப்புகள், செயலொத்த உறுப்புகள் எனப்படும். எடுத்துக்காட்டாக பறவைகள் மற்றும் பூச்சிகளின் இறக்கைகள் வெவ்வேறு தோற்ற அமைப்பைப் பெற்றிருந்தாலும் அவை ‘பறத்தல்’ என்ற ஒரே செயலைச் செய்கின்றன. இது குவி பரிணாமத்திற்கு வழிகோலுகிறது.

36. உயிரிகளின் வாழ்க்கைக்கு தேவையற்ற உறுப்புகள்_________என்றழைக்கப்படுகின்றன.

A) அமைப்பொத்த உறுப்புகள்

B) செயலொத்த உறுப்புகள்

C) எச்ச உறுப்புகள்

D) இணைப்பு உயிரிகள்

விளக்கம்: ஒரு சில உறுப்புகளால் அவற்றைப் பெற்றுள்ள உயிரினங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. மேலும் உயிரிகளின் உயிர்வாழ்க்கைக்கும் அவை தேவையற்றவை. இவையே எச்ச உறுப்புகள் எனப்படும்.

37. மனிதனில் காணப்படும் எச்ச உறுப்புகளில் பொருந்தாதது__________

A) கல்லீரல்

B) அறிவுப்பற்கள்

C) வால் முள்ளெலும்பு

D) குடல்வால்

விளக்கம்: மனிதனின் குடல்வால், பெருங்குடல் பிதுக்கத்தின் எஞ்சிய பகுதி ஆகும். இவை முயல் போன்ற தாவர உண்ணிகளில் செயல்படும் உறுப்புகளாக உள்ளன. இவற்றின் பெருங்குடல் பிதுக்கப்பகுதியில் செல்லுலோஸ் செரித்தல் நிகழ்ச்சி நடைபெறும். மனித உணவில் செல்லுலோஸின் தேவை குறைந்ததால் பெருங்குடல் பிதுக்கம் செயலிழந்து அளவில் குன்றி புழுப்போன்ற குடல்வால் என்னும் எச்ச உறுப்பாக மாறியது. வால் முள்ளெலும்பு, அறிவுப்பற்கள், காதில் உள்ள தசைகள், உடல் உரோமங்கள், ஆண்களில் மார்பகம் மற்றும் கண்களில் உள்ள நிக்டிடேடிங் சவ்வு போன்றவை மனிதனில் காணப்படும் பிற எச்ச உறுப்புகளாகும்.

38. மனிதனில் காணப்படும் எச்ச உறுப்புகளில் பொருந்தாதது_____________

A) காதில் உள்ள தசைகள்

B) உடல் உரோமங்கள்

C) ஆண்களில் மார்பகம்

D) கணையம்

39. கீழ்க்கண்டவற்றுள் மனிதனில் காணப்படும் எச்ச உறுப்பு_________

A) கல்லீரல்

B) பித்தப்பை

C) கண்

D) கண்களில் உள்ள நிக்டிடேடிங் சவ்வு

40. இரண்டு மாறுபட்ட தொகுப்பைச் சேர்ந்த உயிரினங்களின் பண்புகளையும் ஒருங்கே பெற்றுள்ள உயிரினங்கள்__________என்றழைக்கப்படுகின்றன.

A) அமைப்பொத்த உறுப்புகள்

B) செயலொத்த உறுப்புகள்

C) எச்ச உறுப்புகள்

D) இணைப்பு உயிரிகள்

விளக்கம்: இரண்டு மாறுபட்ட தொகுப்பைச் சேர்ந்த உயிரினங்களின் பண்புகளையும் ஒருங்கே பெற்றுள்ள உயிரினங்கள் இணைப்பு உயிரிகள் எனப்படும். எ.கா. பெரிபேட்டஸ்

41. நன்கு பரிணாமம் பெற்ற உயிரினங்களில் திடீரென எச்ச உறுப்புகள் வெளித் தோன்றுவது___________என்றழைக்கப்படுகின்றன.

A) அமைப்பொத்த உறுப்புகள்

B) செயலொத்த உறுப்புகள்

C) எச்ச உறுப்புகள்

D) முது மரபு உறுப்புகள் மீட்சி

விளக்கம்: நன்கு பரிணாமம் பெற்ற உயிரினங்களில் திடீரென எச்ச உறுப்புகள் வெளித் தோன்றுவது முது மரபு உறுப்பு மீட்சி எனப்படும். எ.கா. மனிதனில் வளர்கருவில் வால் இருப்பது முது மரபு உறுப்பு மீட்சி ஆகும்.

42. கருமுட்டையிலிருந்து முழு உயிரினம் வளர்ச்சி அடைவதைப் படிக்கும் அறிவியல் பிரிவு___________

A) கருவியல்

B) கருத்தோற்றவியல்

C) மரபியல்

D) ஜீனாக்கவியல்

விளக்கம்: கருவியல் என்பது கருமுட்டையிலிருந்து முழு உயிரினம் வளர்ச்சி அடைவதைப் படிக்கும் அறிவியல் பிரிவு ஆகும். வெவ்வேறு உயிரினங்களின் கரு வளர்ச்சியை கவனமாக ஆராயும் போது, அவற்றுக்கிடையே கருவளர்ச்சி நிலைகளிலும், வடிவங்களிலும் ஒற்றுமை இருப்பது உணரப்படுகிறது.

43. வான் ஹேக்கல் உயிர்வழித் தோற்ற விதி (அ) தொகுத்துரைக்கோட்பாட்டை உருவாக்கியவர்__________

A) மெக்கலிட்ஜ்

B) காஸ்பர்டு பாஹின்

C) எர்னஸ்ட்

D) மேற்கண்ட எவருமில்லை

விளக்கம்: எர்னஸ்ட் வான் ஹேக்கல் உயிர்வழித் தோற்ற விதி(உயிர் மரபியல் விதி) அல்லது தொகுத்துரைக் கோட்பாட்டை உருவாக்கினார். இதன்படி ஒரு தனி உயிரினத்தின் வாழ்க்கை சுழற்சி அவ்வுயிரியின் இனவரலாற்றைத் தொகுத்துரைக்கிறது. இதனை ‘ஒரு தனி உயிரியின் கரு வளர்ச்சி அதன் இன வரலாற்றை தொகுத்துரைக்கிறது’ எனலாம்.

44. பாதுகாக்கப்பட்ட மூலக்கூறுகளில் காலப்போக்கில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றத்திற்கு________என்று பெயர்.

A) மரபியல் கடிகாரம்

B) ஜீன் கடிகாரம்

C) மூலக்கூறு கடிகாரம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: பாதுகாக்கப்பட்ட மூலக்கூறுகளில் காலப்போக்கில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் ‘மூலக்கூறு கடிகாரம்’ என அழைக்கப்படுகிறது. பரிணாமம் குறித்த ஆய்வுகளில் பயன்படும் மூலக்கூறுகள் சைட்டோகுரோம் – சி (சுவாச வழிப்பாதை) மற்றும் ரைபோசோம் ஆர்.என்.ஏ (புரதச் சேர்க்கை) ஆகியவை ஆகம்.

45. விலங்கியல் தத்துவம் என்ற நூலின் ஆசிரியர்___________

A) சார்லஸ் டார்வின்

B) ஜீன் பாப்டிஸ்ட் டி லாமார்க்

C) ஆகஸ்ட் வீஸ்மான்

D) ஹெப்போகிரேட்டஸ்

விளக்கம்: ஜீன் பாப்டிஸ்ட் டி லாமார்க் என்பவர் தான் முதன்முதலாக பரிணாமம் கோட்பாட்டினை தனது புகழ்வாய்ந்த விலங்கியல் தத்துவம்(1809) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

46. கீழ்க்கண்டவற்றுள் லாமார்க்குடன் தொடர்பில்லாதது எது.

A) பயன்படு மற்றும் பயன்படாக் கோட்பாடு

B) விலங்கியல் தத்துவம்

C) பெறப்பட்ட பண்புகள் மரபு கடத்தல் கோட்பாடு

D) இயற்கைத் தேர்வு கோட்பாடு

47. கீழ்க்கண்டவற்றுள் லாமார்க் பற்றிய கருத்துகளுல் பொருந்தாததைக் கண்டறி:

1) அடிக்கடிப் பயன்படுத்தப்படும் உறுப்புகள் அளவில் பெரிதாகின்றன. அதே வேளையில் பயன்படுத்தப்படாத உறுப்புகள் சிதைந்து அழிகின்றன.

2) ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து, பயன்படு விதிக்கும் மற்றும் பாம்புகளில் கால்கள் இல்லாத் தன்மை பயன்படா விதிக்கும் எ.கா. ஆகும்.

3) ஒரு உயிரினத்தின் வாழ்நாளின் போது உருவாக்கப்படும் பண்புகள், பெறப்பட்ட பண்புகள் எனப்படும். இப்பண்புகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: ஒரு உயிரினத்தின் வாழ்நாளின் போது உருவாக்கப்படும் பண்புகள், பெறப்பட்ட பண்புகள் எனப்படும். இப்பண்புகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன.

48. லமார்க்கின் பெற்ற பண்புகள் கடத்தப்படுதல் கோட்பாட்டினைத் தவறென்று நிரூபித்தவர்___________

A) சார்லஸ் டார்வின்

B) ஆகஸ்ட் வீஸ்மான்

C) பக்கார்ட்

D) ஸ்பென்சர்

விளக்கம்: ஆகஸ்ட் வீஸ்மான் என்பவர் லாமார்க்கின் பெற்ற பண்புகளை கடத்தப்படுதல் கோட்பாட்டினைத் தவறென்று நிரூபித்தார். இவர், தனது சோதனையில் தொடர்ந்து இருபது தலைமுறைகளாக சுண்டெலிகளின் வாலினைத் துண்டித்து பின்னர் இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தினார். முடிவில் அனைத்து சுண்டெலிகளும் முழுமையான வாலுடனே பிறந்தன.

49. லமார்க்கின் பெற்ற பண்புகள் கடத்தப்படுதல் கோட்பாட்டினைத் தவறென்று நிரூபிக்க ஆகஸ்ட் வீஸ்மான் தன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட உயிரினம்.

A) தவளை

B) பாம்பு

C) ஒட்டகம்

D) சுண்டெலி

50. ஆகஸ்ட் வீஸ்மான் கருத்துப்படி கீழ்க்கண்டவற்றுகளில் சரியானதைக் கண்டறி:

1) ஆகஸ்ட் வீஸ்மான் என்பவர் லாமார்க்கின் பெற்ற பண்புகள் கடத்தப்படுதல் கோட்பாட்டினைத் தவறென்று நிரூபித்தார்.

2) இதன் மூலம் உடல்செல்களில் ஏற்படும் மாற்றம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது என்றுக் கூறினார்.

3) மேலும் இனப்பெருக்க செல்களில் ஏற்படும் மாற்றங்கள் மரபுக் கடத்தலுக்கு உரியவை அன்று என்றும் நிரூபித்தார்.

A) 1 மட்டும் சரி

B) 1 2 மட்டும் சரி

C) 1 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: ஆகஸ்ட் வீஸ்மான் என்பவர் லாமார்க்கின் பெற்ற பண்புகள் கடத்தப்படுதல் கோட்பாட்டினைத் தவறென்று நிரூபித்தார். இவர், தனது சோதனையில் தொடர்ந்து இருபது தலைமுறைகளாக சுண்டெலிகளின் வாலினைத் துண்டித்து பின்னர் இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தினார். முடிவில் அனைத்து சுண்டெலிகளும் முழுமையான வாலுடனே பிறந்தன. இதன் மூலம் உடல் செல்களில் ஏற்படும் மாற்றம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படாது என்றும், இனப்பெருக்க செல்களில் ஏற்படும் மாற்றங்கள் மட்டுமே மரபுக்கடத்ததலுக்கு உரியன என்னும் வீஸ்மான் நிரூபித்தார்.

51. டி லாமார்க்கின் கோட்பாட்டை ஆதரித்தவர்களுல் பொருந்தாதவர் யார்.

A) ஆஸ்பர்ன்

B) பக்கார்ட்

C) ஸ்பென்சர்

D) ஆகஸ்ட் வீஸ்மான்

விளக்கம்: லாமார்க் கோட்பாட்டை ஆதரிக்கும் கோப், ஆஸ்பர்ன், பக்கார்ட் மற்றும் ஸ்பென்சர் போன்றோர் இக்கோட்பாட்டினை அறிவியல் அடிப்படையில் விளக்க முயன்றனர். அனைத்து உயிரினங்களும் சூழலுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்ளும் என்பது பொதுவானது எனக் கருதினர். சுற்றுச்சூழலில் மாற்றங்கள் ஏற்படும்போது அதற்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்வதற்காக புதிய பண்புகளை உயிரினங்கள் பெற்றுக் கொள்கின்றன.

52. இயற்கைத் தேர்வு வழி சிற்றினத் தோற்றம் என்ற நூலின் ஆசிரியர்___________

A) ஆஸ்பர்ன்

B) சார்லஸ் டார்வின்

C) டி லாமார்க்

D) ஸ்பென்சர்

விளக்கம்: சார்லஸ் டார்வின் தனது பரிணாமக் கோட்பாட்டை ‘இயற்கைத் தேர்வு வழி சிற்றினத் தோற்றம்’ என்ற நூலில் விளக்கியுள்ளார். இவர் உலகின் பலபகுதிகளில் பயணம் மேற்கொண்டு, தாவரங்கள் மற்றும் விலங்குகளைக் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

53. அனைத்து உயிரினங்களும் தன் இனக்கூட்டத்தை அதிக எண்ணிக்கையில் பெருக்கமடையச் செய்வது___________

A) மிகை இனப்பெருக்கம்

B) குறை இனப்பெருக்கம்

C) அளவற்ற பிறப்பித்தல் திறன்

D) A C இரண்டும்

54. சால்மன் மீன்கள் இனப்பெருக்க காலத்தில் சுமார்________முட்டைகளை இடுகின்றன.

A) 18 மில்லியன்

B) 28 மில்லியன்

C) 28 பில்லியன்

D) 38 மில்லியன்

விளக்கம்: சால்மன் மீன்கள் இனப்பெருக்க காலத்தில் சுமார் 28 மில்லியன் முட்டைகளை இடுகின்றன. அவற்றின் அனைத்து முட்டைகளும் பொரித்தால் சில தலைமுறைகளிலேயே கடல் முழுதும் சால்மன் மீன் நிறைந்து காணப்படும்.

55. யானை தனது வாழ்நாளில்________குட்டிகளை இடுகின்றன.

A) நான்கு

B) ஐந்து

C) ஆறு

D) ஏழு

விளக்கம்: மிகக்குறைவான இனப்பெருக்கத்திறன் உடைய யானை, தனது வாழ்நாளில் 6 குட்டிகளை மட்டுமே ஈனும், தடையேதும் ஏற்படாத நிலையில் ஏறத்தாழ 750 ஆண்டுகளில் 6 மில்லியன் வாரிசுகளை யானை உருவாக்கியிருக்கும்.

56. கீழ்க்கண்டவற்றுள் சார்லஸ் டார்வினுடன் பொருந்தாதது எது.

A) சிற்றனங்களுக்குள்ளான போராட்டம்

B) சிற்றினங்களுக்கிடையேயான போராட்டம்

C) சுற்றுச்சூழலுடன் போராட்டம்

D) பேரினங்களுக்கிடையேயான போராட்டம்

57. ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த உயிரினங்களுக்கிடையே உணவு, இருப்பிடம் மற்றும் இனப்பெருக்கத் துணைக்காக ஏற்படும் போராட்டம்_________

A) சிற்றனங்களுக்குள்ளான போராட்டம்

B) சிற்றினங்களுக்கிடையேயான போராட்டம்

C) சுற்றுச்சூழலுடன் போராட்டம்

D) பேரினங்களுக்கிடையேயான போராட்டம்

விளக்கம்: ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த உயிரினங்களுக்கிடையே உணவு, இருப்பிடம் மற்றும் இனப்பெருக்கத் துணைக்காக ஏற்படும் போராட்டம் சிற்றினங்களுக்குள்ளான போராட்டம் ஆகும்.

58. வெவ்வேறு சிற்றினங்களுக்கிடையே உணவு மற்றும் இருப்பிடத்திற்கான போராட்டம்__________

A) சிற்றனங்களுக்குள்ளான போராட்டம்

B) சிற்றினங்களுக்கிடையேயான போராட்டம்

C) சுற்றுச்சூழலுடன் போராட்டம்

D) பேரினங்களுக்கிடையேயான போராட்டம்

59. காலநிலை வேறுபாடு, வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி மற்றம் பல சூழல் காரணிகளுடன் இணக்கமாவதற்கான போராட்டம்__________

A) சிற்றனங்களுக்குள்ளான போராட்டம்

B) சிற்றினங்களுக்கிடையேயான போராட்டம்

C) சுற்றுச்சூழலுடன் போராட்டம்

D) பேரினங்களுக்கிடையேயான போராட்டம்

60. இயற்கையே மிகச் சிறந்த தேர்ந்தெடுக்கும் சக்தியாகும் என்பது கீழ்க்கண்ட யாருடைய கூற்றாகும்.

A) டி லாமார்க்

B) சார்லஸ் டார்வின்

C) ஸ்பென்சர்

D) மெக்கலட்ஜ்

விளக்கம்: டார்வினின் கூற்றுப்படி இயற்கையே மிகச் சிறந்த தேர்ந்தெடுக்கும் சக்தி ஆகும். சிறிய தனிமைப்படுத்தப்பட்ட குழு உயிரினங்களில், இயற்கைத் தேர்வு காரணமாக புதிய சிற்றினம் தோன்றுவதை டார்வின் ஒப்பிடுகிறார். வாழ்வதற்கான போராட்டமே, தகுதி வாய்ந்த உயிரினங்கள் தப்பிப் பிழைப்பதற்கான காரணம் என்று அவர் கருதினார்.

61. டார்வினியத்திற்கான எதிர்கருத்துக்களில் தவறானதைக் கண்டறி:

A) மாறுபாடுகள் தோன்றும் முறை குறித்து டார்வின் சரியாக விளக்கவில்லை.

B) தகுதியுடையன பிழைத்தல் என்பதை மட்டும் டார்வினியம் விளக்குகிறது. ஆனால் விலங்குகள் அத்தகுதியை எவ்வாறு பெறுகின்றன என்பதை விளக்கவில்லை.

C) பெரும்பாலும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும் சிறு மாறுபாடுகளை மட்டுமே டார்பின் கவனத்தில் கொண்டார்.

D) உடல் செல் மற்றும் இனப்பெருக்க செல்களில் ஏற்படும் மாற்றங்களை அவர் வேறுபடுத்தவில்லை.

விளக்கம்: பெரும்பாலும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படாத சிறு மாறுபாடுகளை மட்டுமே டார்பின் கவனத்தில் கொண்டார்.

62. புதிய டார்வினியம் குறித்தக் கோட்பாட்டினை ஆதரித்தவர்களுல் பொருந்தாதவர் யார்.

A) வால்ஸ்

B) ஹென்ரிச்

C) ஹேக்கல்

D) சிம்சன்

விளக்கம்: புதிய டார்வினியம் என்றக் கோட்பாட்டினை வால்ஸ், ஹென்ரிச், ஹேக்கல், வீஸ்மன் மற்றும் மெண்டல் ஆகியோர் ஆதரித்தனர். திடீர் மாற்றம், மாறுபாடுகள், தனிமைப்படுத்தல் மற்றும் இயற்கைத் தேர்வு காரணமாக ஒரு இனக் கூட்டத்தில் மரபணு நிகழ்வெண்களில் ஏற்படும் மாறுபாடுகளை இக்கோட்பாடு வலியுறுத்துகிறது.

63. ‘திடீர் மாற்றக் கோட்பாட்டை’ முன் வைத்தவர்___________

A) சார்லஸ் டார்வின்

B) டி லாமார்க்

C) ஹிகோ டி விரிஸ்

D) மேற்கண்ட அனைவரும்

விளக்கம்: திடீர் மாற்றக் கோட்பாட்டை முன் வைத்தவர் ஹிகோ டி விரிஸ் ஆவார். திடீர் மாற்றம் என்பது உயிரினங்களில் ஏற்படும் உடனடியான, சீரற்ற மற்றும் மரபு கடத்தலில் பங்கேற்காத மாற்றங்கள் ஆகும்.

64. ஹிகோ டி விரிஸ் தன்னுடைய திடீர் மாற்றக் கோட்பாட்டிற்கான ஆய்விற்காக எடுத்துக்கொண்ட தாவரம்__________

A) அந்தி மந்தாரை

B) ஆகாயத்தாமரை

C) ஈனோத்ரா லாமார்க்கியானா

D) A C இரண்டும்

விளக்கம்: ஹிகோ டி விரிஸ் அந்தி மந்தாரை(ஈனோத்ரா லாமார்க்கியானா) தாவரத்தில் ஆய்வு மேற்கொண்டு அதில் திடீர் மாற்றம் காரணமாக ஏற்பட்ட மாறுபாடுகளைக் கண்டறிந்தார்.

65. ஹிகோ டி விரிஸ் என்பாரின் கருத்துப்படி புதிய சிற்றினம் தோன்றுவதற்கு காரணம்___________

A) பெரிய மற்றும் உடனடியாக ஏற்படும் மாறுபாடுகள்

B) சிறிய மற்றும் உடனடியாக ஏற்படும் மாறுபாடுகள்

C) பெரிய மற்றும் மெதுவாக ஏற்படும் மாற்றங்கள்

D) சிறிய மற்றும் மெதுவாக ஏற்படும் மாற்றங்கள்

விளக்கம்: பெரிய மற்றும் உடனடியாக ஏற்படும் மாறுபாடுகள் மட்டுமே புதிய சிற்றினம் தோன்றுவதற்குக் காரணம் என்பது டி விரிஸ் கருத்தாகும். ஆனால் லாமார்க் மற்றும் டார்வின் ஆகியோர் உயிரினங்களில் ஏற்படும் படிப்படியான மாறுபாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து புதிய சிற்றினம் உருவாகக் காரணமாகிறது என்று நம்பினார்.

66. உயிரினங்களில் ஏற்படும் படிப்படியான மாறுபாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து புதிய சிற்றினம் உருவாகக் காரணமாகிறது என்று கூறிய அறிஞர்____________

A) லாமார்க்

B) டி விரிஸ்

C) டார்வின்

D) A C இரண்டும்

67. கீழ்க்கண்டவற்றுள் திடீர் மாற்றக் கோட்பாட்டின் சிறப்புப் பண்புகளுல் பொருந்தாதது எது.

A) திடீர் மாற்றம் அல்லது தொடர்ச்சியற்ற மாறுபாடுகள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும் தன்மை கொண்டது.

B) இயற்கையாக இனப்பெருக்கம் செய்யும் இனக்கூட்டத்தின் அவ்வப்போது திடீர் மாற்றங்கள் ஏற்படுவதில்லை.

C) திடீர் மாற்றம் முழுமையான நிகழ்வு ஆதலால் இடைப்பட்ட உயிரினங்கள் காணப்படாது.

D) திடீர் மாற்றம் இயற்கைத் தேர்வுக்கு உட்பட்டது ஆகும்.

விளக்கம்: இயற்கையாக இனப்பெருக்கம் செய்யும் இனக்கூட்டத்தின் அவ்வப்போது திடீர் மாற்றங்கள் ஏற்படும்.

68. டார்வினுக்குப் பிந்தைய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை விளக்கியவர்____________

A) சீவால் ரைட்

B) ஃபிஷ்ஷர்

C) மேயர்

D) மேற்கண்ட அனைவரும்

69. டார்வினுக்குப் பிந்தைய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை விளக்கியவர்____________

A) ஹக்ஸ்லே டோப்சான்சுகி

B) சிம்ஸ்சன்

C) ஹேக்கல்

D) மேற்கண்ட அனைவரும்

விளக்கம்: சீவால் ரைட், ஃபிஷ்ஷர், மேயர், ஹக்ஸ்லே டோப்சான்சுகி, சிம்ஸ்சன் மற்றும் ஹேக்கல் போன்றோர் டார்வினுக்குப் பிந்தைய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை விளக்கினர். இக்கோட்பாட்டின்படி மரபணு திடீர்மாற்றம், குரோமோசோம் பிறழ்சி, மரபணு மறுசேர்க்கை, இயற்கைத் தேர்வு மற்றும் இனப்பெருக்க ரீதியாக தனிமைப்படுத்துதல் ஆகிய ஐந்து அடிப்படை காரணிகள் கரிமப் பரிணாம நிகழ்வுகள் காரணமாகின்றன.

70. மரபணுக்களின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு__________என்று பெயர்.

A) மரபணு திடீர் மாற்றம்

B) புள்ளி திடீர் மாற்றம்

C) குரோமோசோம் திடீர் மாற்றம்

D) A B இரண்டும்

விளக்கம்: மரபணுக்களின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். இது மரபணு திடீர் மாற்றம் / புள்ளி திடீர் மாற்றம் என்றும் அழைக்கப்படும். இது உயிரினங்களின் புறத் தோற்றங்களை மாற்றியமைத்து அவற்றின் சேய் உயிரிகளில் மாறுபாடுகளை உருவாக்குகிறது.

71. குரோமோசோம் பிறழ்ச்சி என்பது குரோமோசோமின்__________ல் ஏற்படும் மாற்றம் ஆகும்.

A) இரட்டிப்பாக்கம்

B) தலைகீழாக்கம்

C) சேர்த்தல்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: குரோமோசோம் பிறழ்ச்சி என்பது நீக்கம், சேர்த்தல், இரட்டிப்பாக்கம், தலைகீழாக்கம் மற்றும் இடமாற்றம் காரணமாக குரோமோசோம் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். இவையும் உயிரினங்களின் புறத் தோற்றங்களை மாற்றியமைத்து அவற்றின் சேய் உயிரிகளில் மாறுபாடுகளை உருவாக்குகின்றன.

72. குன்றல் பிரிதலின்போது ஏற்படும் குறுக்கெதிர் மாற்றத்தால் நிகழ்வது________

A) மரபணு திடீர் மாற்றம்

B) குரோமோசோம் பிறழ்ச்சி

C) மரபணு மறுசேர்க்கை

D) இயற்கைத் தேர்வு

விளக்கம்: மரபணு மறுசேர்க்கை என்பது குன்றல் பிரிதலின் போது ஏற்படும் குறுக்கெதிர் மாற்றத்தால் நிகழ்கிறது. இவை ஒரு சிற்றினத்தைச் சேர்ந்த உயிரினங்களில் மரபணு மாற்றங்களை உருவாக்குகின்றன. இம்மாற்றங்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும்.

73. கூற்று A: இயற்கைத் தேர்வு எந்த வித மரபணு மாறுபாடுகளையும் தோற்றுவிப்பதில்லை.

காரணம் R: ஆனால் தேர்வு சக்தி சில மரபணு மாற்றங்களை மட்டுமே உயிரினங்களில் அனுமதிக்கிறது. மற்றவை நிராகரிக்கப்படுகின்றன.

A) கூற்று A காரணம் R சரி, மேலும் காரணம் R கூற்று A விற்கான சரியான விளக்கமாகும்.

B) கூற்று A காரணம் R சரி, மேலும் காரணம் R கூற்று A விற்கான சரியான விளக்கமல்ல.

C) கூற்று A சரி, காரணம் R தவறு

D) கூற்று A தவறு, காரணம் R சரி

74. கூற்று (i): இயற்கைத் தேர்வு நடைபெறுவதை ‘தொழிற்சாலை மெலானின் ஆக்கம்’ மூலம் தெளிவாக விளக்க முடியும்.

கூற்று (ii): கரும்புள்ளி அந்திப்பூச்சி(பிஸ்டன் பெட்டுலேரியா) யில் காணப்படும் தொழிற்சாலை மெலானின் ஆக்கம் இயற்கைத் தேர்வுக்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

A) கூற்று i சரி ii தவறு

B) கூற்று i தவறு ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

75. காடுகள், கடல்கள் மற்றும் மீன் வளங்களை மனிதன் மிகையாகப் பயன்படுத்துவது_________

A) இயற்கைத் தேர்வு

B) செயற்கைத் தேர்வு

C) மரபணுத் தேர்வு

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: செயற்கைத் தேர்வு என்பது காடுகள், கடல்கள் மற்றும் மீன் வளங்களை மனிதன் மிகையாகப் பயன்படுத்துவது, தீங்குயிர்க் கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் மருந்துகளைப் பயன்படுத்துவது ஆகிய நிகழ்வுகளின் பக்க விளைவாகும்.

76. கூற்று (i): ஒரு மூதாதை இனத்திலிருந்து புதிய சிற்றினங்கள், புதிய வாழிடங்களில் வாழ்வதற்கேற்ற தகவமைப்புகளுடன் தோன்றும் பரிணாம நிகழ்வு தகவமைப்புப்பரவல் எனப்படும்.

கூற்று (ii): டார்வினின் குருவிகள் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பைப்பாலூட்டிகள் ஆகியவை தகவமைப்புப் பரவலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.

A) கூற்று i சரி ii தவறு

B) கூற்று i தவறு ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

77. கூற்று (i): டார்வினின் குருவிகளின் மூதாதையர் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு காலபாகஸ் பகுதிக்கு வந்து சேர்ந்தவையாகும்.

கூற்று (ii): டார்வின் ஆய்வு மேற்கொண்ட போது, உடல் அளவு, அலகின் வடிவம் மற்றும் உணவுப் பழக்கம் ஆகிய பண்புகளால் வேறுபட்ட 14 சிற்றினங்களாகப் பரிணமித்திருந்தன.

A) கூற்று i சரி ii தவறு

B) கூற்று i தவறு ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

விளக்கம்: டார்வினின் குருவிகளின் மூதாதையர் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு காலபாகஸ் பகுதிக்கு வந்து சேர்ந்தவையாகும். டார்வின் ஆய்வு மேற்கொண்ட போது, உடல் அளவு, அலகின் வடிவம் மற்றும் உணவுப் பழக்கம் ஆகிய பண்புகளால் வேறுபட்ட 14 சிற்றினங்களாகப் பரிணமித்திருந்தன.

78. கீழ்க்கண்டவற்றுள் இயற்கைத் தேர்வு முறைகளுல் பொருந்தாததைத் தேர்ந்தெடு.

A) நிலைப்படுத்துதல் தேர்வு முறை

B) இலக்கு நோக்கிய தேர்வு முறை

C) உடைத்தல் முறை தேர்வு முறை

D) சார்புபடுத்துதல் தேர்வு முறை

79. பொருத்துக: (டார்வினின் குருவிகள்)

A) பெரிய தரைவாழ் குருவி – 1. ஜியோஸ்பைசா டிஃபிசிலிஸ்

B) தரைவாழ் நடுத்தரக் குருவி – 2. ஜியோஸ்பைசா ஃபியூலிஜினோசா

C) தரைவாழ் சிறிய குருவி – 3. ஜியோஸ்பைசா ஃபோர்டிஸ்

D) கூர் அலகு நிலவாழ் குருவி – 4. ஜியோஸ்பைசா மேக்னிராஸ்ட்ரிஸ்

A) 1 2 3 4

B) 4 2 3 1

C) 4 1 2 3

D) 4 3 2 1

விளக்கம்:

A) பெரிய தரைவாழ் குருவி – 1. ஜியோஸ்பைசா மேக்னிராஸ்ட்ரிஸ்

B) தரைவாழ் நடுத்தரக் குருவி – 2. ஜியோஸ்பைசா ஃபோர்டிஸ்

C) தரைவாழ் சிறிய குருவி – 3. ஜியோஸ்பைசா ஃபியூலிஜினோசா

D) கூர் அலகு நிலவாழ் குருவி – 4. ஜியோஸ்பைசா டிஃபிசிலிஸ்

80. பொருத்துக: (டார்வினின் குருவிகள்)

A) தரைவாழ் கள்ளியுண்ணி குருவி – 1. ஜியோஸ்பைசா ஸ்காண்டன்ஸ்

B) கதிர்க் குருவி – 2. செர்திடியா ஒலிவாசியா

C) மரங்கொத்திக் குருவி – 3. காமாரின்கஸ் பார்வுலஸ்

D) சிறிய பூச்சி உண்ணி – 4. காக்டோபிசா பல்லிடா

A) 1 2 4 3

B) 4 2 3 1

C) 4 1 2 3

D) 4 3 2 1

விளக்கம்:

A) தரைவாழ் கள்ளியுண்ணி குருவி – 1. ஜியோஸ்பைசா ஸ்காண்டன்ஸ்

B) கதிர்க் குருவி – 2. செர்திடியா ஒலிவாசியா

C) மரங்கொத்திக் குருவி – 3. காக்டோபிசா பல்லிடா

D) சிறிய பூச்சி உண்ணி – 4. காமாரின்கஸ் பார்வுலஸ்

81. டார்வினின் குருவிகளில் கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:

1) பெரிய பூச்சி உண்ணி மரவாழ் – பிளாடிஸ்பிசா கிராசிராஸ்ட்;ரிஸ்

2) தாவர உண்ணி மரவாழ் குருவி – காமாரின்கஸ் சிட்டாகுலா

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

விளக்கம்:

1) பெரிய பூச்சி உண்ணி மரவாழ் – காமாரின்கஸ் சிட்டாகுலா

2) தாவர உண்ணி மரவாழ் குருவி – பிளாடிஸ்பிசா கிராசிராஸ்ட்ரிஸ்

82. நிலையானச் சுற்றுச்சூழல் இருக்கும்போது உயிரினங்கள்______முறைக்கு உட்படுகிறது.

A) மைய விலக்குத் தேர்வு முறை

B) மைய நோக்குத் தேர்வு முறை

C) இலக்கு நோக்கிய தேர்வு முறை

D) உடைத்தல் முறைத் தேர்வு முறை

விளக்கம்: இவ்வகைத் தேர்வு முறை நிலையானச் சுற்றுச்சூழல் இருக்கும்போது செயல்படுகிறது. இம்முறையில் சராசரி புறத்தோற்றப் பண்புகள் உடைய உயிரினங்கள் தப்பிப் பிழைக்கும். ஆனால் இரு பக்கங்களிலும் உள்ள சூழலுக்கு ஒவ்வாத மிகை உயிரினத் தொகையிலிருந்து நீக்கப்படும். இங்கு புதிய சிற்றினமாக்கல் நிகழாது.

83. படிப்படியாக மாற்றம் பெறும் சுற்றுச்சூழல்__________முறைக்கு உட்படுத்தப்படுகிறது.

A) மைய விலக்குத் தேர்வு முறை

B) மைய நோக்குத் தேர்வு முறை

C) இலக்கு நோக்கிய தேர்வு முறை

D) உடைத்தல் முறைத் தேர்வு முறை

விளக்கம்: படிப்படியாக மாற்றம் பெறும் சுற்றுச்சூழல், இலக்கு நோக்கிய தேர்வு முறைக்கு உட்படுத்தப்படுகிறது. இவ்வகையான தேர்வு முறையில், புறத்தோற்றப் பண்புகள் பரவலின் ஒரு முனையிலிருந்து மறுமுனையை நோக்கி படிப்படியாக உயிரினங்கள் நீக்கப்படுகின்றன.

84. ஒரே விதமான சுற்றுச் சூழல், நிலைமாற்றம் பெற்று, பல்வகை சுற்றுச்சூழல் நிலைகளைக் கொண்டதாக மாறும்போது_________முறைக்கு உட்படுத்தப்படுகிறது.

A) நிலைப்படுத்துதல் தேர்வு முறை

B) மைய நோக்குத் தேர்வு முறை

C) இலக்கு நோக்கிய தேர்வு முறை

D) உடைத்தல் முறைத் தேர்வு முறை

விளக்கம்: ஒரே விதிமான சுற்றுச் சூழல், நிலைமாற்றம் பெற்று, பல்வகை சுற்றுச்சூழல் நிலைகளைக் கொண்டதாக மாறும்போது இவ்வகைத் தேர்வுமுறை செயல்படுகிறது. இம்முறையில் இருமுனைகளிலும் காணப்படும் புறத்தோற்றப் பண்புகளை உடைய உயிரினங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

85. இனச்செல்கள் வழியாக மரபணுக்கள் இடம்பெயர்தல்_______எனப்படுகிறது.

A) மரபணு நகர்வு

B) மரபணு ஓட்டம்

C) பரிமாண ஓட்டம்

D) மறுபணு மறுசேர்க்கை

விளக்கம்: இனச்செல்கள் வழியாக மரபணுக்கள் இடம்பெயர்தல் அல்லது ஒரு இனக்கூட்டத்தில் தனிப்பட்ட உயிரினங்களின் உள்ளேற்றம் அல்லது வெளியேற்றம் ஆகியவை மரபணு ஓட்டம் எனப்படும்.

86. வாய்ப்புகள் காரணமாக அடுத்தடுத்த தலைமுறைகளில் ஒரு இனக்கூட்டத்தின் அல்லீல் நிகழ்வெண்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் பரிணாம நிகழ்வு________எனப்படுகிறது.

A) மரபணு நகர்வு

B) மரபணு ஓட்டம்

C) மரபணு மறுசேர்க்கை

D) திடீர் மாற்றம்

விளக்கம்: வாய்ப்புகள் காரணமாக அடுத்தடுத்த தலைமுறைகளில் ஒரு இனக்கூட்டத்தின் அல்லீல் நிகழ்வெண்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் பரிணாம நிகழ்வே மரபியல் நகர்வு ஆகும். மரபியல் நகர்வு இனக்கூட்டத்தின் அனைத்து அளவுகளிலும் நடைபெறும். ஆனால் இதன் விளைவுகள் சிறிய இனக்கூட்டத்தில் வலிமை உடையதாக இருக்கும்.

87. கீழ்க்கண்டவற்றுள் ஹார்டி – வீன்பெர்க் சமன்பாட்டைக் கண்டறி.

A) (p + q)2 = p2 + 2pq + q2

B) (p – q)2 = p2 + 2pq + q2

C) (p + q)2 = p2 – 2pq + q2

D) (p + q)2 = p2 × 2pq + q2

88. பாலூட்டிகளின் பரிணாமம் ஜீராசிக் காலத்தின் தொடக்கத்தில்________மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்தது.

A) 150 மில்லியன்

B) 180 மில்லியன்

C) 200 மில்லியன்

D) 210 மில்லியன்

விளக்கம்: பாலுட்டிகளின் பரிணாமம் ஜீராசிக் காலத்தின் தொடக்கத்தில் சுமார் 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா பகுதியில் ஹோமினிட்களின் பரிணாமம் நிகழ்ந்தது. பொருட்களை உருவாக்கும் திறன் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் பிறவிலங்குகளை விட மனித இனம் மேம்பட்டது என்பதை ஹோமினிட்கள் மெய்ப்பித்தனர்.

89. பொருட்களை உருவாக்கும் திறன் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் பிறவிலங்குகளை விட மனித இனம் மேம்பட்டது என்பதை மெய்ப்பித்த இனம்_________

A) ஹோமோ எரக்டஸ்

B) நியான்டர்தால்

C) ஹோமோ செப்பியன்ஸ்

D) ஹோமினிட்கள்

90. ________மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராமாபித்திகஸ் மற்றும் சிவாபித்திகஸ் போன்ற வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் புதைபடிவங்கள் கிடைத்துள்ளன.

A) 5 மில்லியன்

B) 10 மில்லியன்

C) 14 மில்லியன்

D) 18 மில்லியன்

விளக்கம்: 14 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராமாபித்திகஸ் மற்றும் சிவாபித்திகஸ் போன்ற வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் புதைபடிவங்கள் கிடைத்துள்ளன. அவை மனிதக் குரங்கு போன்ற டிரையோபித்திகசிலிருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது.

91. உடல் முழுவதும் முடிகளைக் கொண்டு கொரில்லா மற்றும் சிம்பன்சிகளைப் போல நடந்த இனம்__________

A) டிரையோபித்திகஸ்

B) ராமாபித்திகஸ்

C) ஹோமினிட்கள்

D) A B இரண்டும்

விளக்கம்: டிரையோபித்திகஸ் மற்றும் ராமாபித்திகஸ் ஆகியவை உடல்முழுவதும் முடிகளைக் கொண்டு கொரில்லா மற்றும் சிம்பன்சிகளைப் போல நடந்தன. சுமார் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் கிழக்கு ஆப்பிரிக்கா புல்வெளிகளில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஆஸ்ட்ரலோபித்திகஸ் ‘ஆஸ்திரேலியக் குரங்கு மனிதன்’ என அழைக்கப்படுகிறது.

92. கீழ்க்கண்டவற்றுள் ‘ஆஸ்திரேலியக் குரங்கு மனிதன்’ என அழைக்கப்படுவது__________

A) டிரையோபித்திகஸ்

B) ராமாபித்திகஸ்

C) ஹோமினிட்கள்

D) ஆஸ்ட்ரலோபித்திகஸ்

93. கீழ்க்கண்டவற்றுள் “ஆஸ்திரேலியக் குரங்கு மனிதனின்” பண்புகளில் பொருந்தாததைக் கண்டறி:

A) இம்முன்னோடி மனிதன் 1.5 மீ உயரம் கொண்டு, இரண்டு கால்களால் நடக்கும் திறன் கொண்டவனாவான்.

B) அனைத்துண்ணிப் பண்பு, பாதி நிமிர்ந்த நிலை, குகை வாழ் தன்மை ஆகிய பண்புகளைப் பெற்றிருந்தான்.

C) உயர்ந்த நெற்றி, கண்களின் மேல் புருவ மேடுகள், குழிந்த நிலையில் உள்ள முகம், கன்னங்களுடனும் காணப்பட்டான்.

D) மனிதனைப் போன்ற பல்லமைப்பு, முதுகெலும்புத் தொடரில் இடுப்புப் பக்க வளைவு ஆகியவை இதன் சிறப்பு பண்புகளாகும்.

விளக்கம்: தாழ்ந்த நெற்றி, கண்களின் மேல் புரவ மேடுகள், துருத்திய நிலையில் உள்ள முகம், கன்னங்களற்ற தன்மை கொண்டு காணப்பட்டான்.

94. பொருத்துக:

இனம் மூளையின் அளவு

A) ஆஸ்ட்ரலோபித்திகஸ் – 1. 350 – 450 கனசெமீ

B) ஹோமோ ஹாபிலிஸ் – 2. 650 – 800 கனசெமீ

C) ஹோமோ எரக்டஸ் – 3. 900 கனசெமீ

D) நியாண்டர்தால் – 4. 1400 கனசெமீ

A) 1 2 3 4

B) 4 2 3 1

C) 4 1 2 3

D) 4 3 2 1

95. கீழ்க்கண்டவற்றுள் ஹோமோ ஹாபிலிஸ் இனத்தின் பண்புகளுல் தவறானதைக் கண்டறி:

A) ஹோமோ ஹாபிலிஸ் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது.

B) இதன் மூளையின் அளவு 350 – 450 கனசெமீ ஆகும்.

C) தாவர உண்ணிகளான இவை இரண்டு கால்களால் இடப்பெயர்ச்சி செய்வதுடன் செதுக்கப்பட்ட கற்களாலான கருவிகளை பயன்படுத்தும் திறனையும் பெற்றிருந்தன.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: இதன் மூளையின் அளவு 600 – 800 கனசெமீ ஆகும்.

96. கீழ்க்கண்டவற்றுள் முதன்முதலாக மனிதனைப்போலத் தோற்றமளித்த உயிரினம்___________

A) ஆஸ்ட்ரலோபித்திகஸ்

B) ஹோமோ ஹாபிலிஸ்

C) ஹோமோ எரக்டஸ்

D) ஹோமோ எர்காஸ்டர்

97. கீழ்க்கண்டவற்றுள் ஹோமோ எரக்டஸ் உயிரினம் பற்றியக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

1) இந்த உயிரினம் 1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

2) பார்வைக்கு மனிதனைப் போன்றே தோற்றமளிக்கிறது.

3) நவீன மனிதனைவிட தட்டையான, தடினமான மண்டை ஓடு 450 கனசெமீ அளவு கொண்ட மூளையைக் கொண்டது.

4) இறைச்சி உண்ணும் தன்மை ஆகிய பண்புகளைப் பெற்றிருந்தன.

A) 1 2 மட்டும் சரி

B) 2 4 மட்டும் சரி

C) 1 2 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: முதன்முதலாக மனிதனைப்போலத் தோற்றமளித்த ஹோமோ எரக்டஸ் 1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. பார்வைக்கு மனிதனைப் போன்றே தோற்றமளித்த ஹோமோ எரக்டஸ், நவீன மனிதனைவிட தட்டையான, தடினமான மண்டை ஓடு 900 கனசெமீ அளவு கொண்ட மூளை மற்றும் இறைச்சி உண்ணும் தன்மை ஆகிய பண்புகளைப் பெற்றிருந்தன.

98. கீழ்க்கண்டவற்றுள் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேரிய முதல் இனம்_________

A) ஹோமோ எரக்டஸ்

B) ஹோமோ எர்காஸ்டர்

C) ஹோமோ செப்பியன்ஸ்

D) A B இரண்டும்

விளக்கம்: ஹோமோ எர்காஸ்டர் மற்றும் ஹோமோ எரக்டஸ் ஆகியவை ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய முதல் இனங்களாகும்.

99. கீழ்க்கண்டவற்றுள் நியாண்டர்தால் இனம் பற்றியத் தகவல்களுல் தவறானதைக் கண்டறி:

A) சுமார் 34,000 – 1,00,000 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியின் நியாண்டர் பள்ளத்தாக்கில் வாழ்ந்த நியாண்டர்தால் மனிதனின் மூளை அளவு 400 கனசெமீ ஆகும்.

B) இவ்வகை மனிதன், பாதி நிமிர்ந்த நிலை தட்டையான மண்டை ஓடு, சாய்வான நெற்றி, மெலிதான பெரிய கண்குழிகள், கனமான கண்புருவ மேடுகள், துருத்திய தாடைகள் மற்றும் கன்னங்கள் அற்ற தன்மை ஆகிய பண்புகளால் நவீன மனிதனிடமிருந்து வேறுபடுகிறான்.

C) இவர்கள் விலங்கினங்களின் தோலைப் பயன்படுத்தி தங்கள் உடலைப் பாதுகாக்கவும், நெருப்பைப் பயன்படுத்தவும், இறந்தவர்களைப் புதைக்கவும் அறிந்திருந்தனர்.

D) வேளாண்மை, வீட்டு விலங்கு வளர்ப்பு போன்ற எதையும் அவர்கள் செய்யவில்லை.

விளக்கம்: சுமார் 34,000 – 1,00,000 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியின் நியாண்டர் பள்ளத்தாக்கில் வாழ்ந்த நியாண்டர்தால் மனிதனின் மூளை அளவு 1400 கனசெமீ ஆகும்.

100. கீழ்க்கண்டவர்களுல் நவீன ஐரோப்பியர்களின் மூதாதையர்கள் எனக்கருதப்படுபவர்கள்____________

A) ஹோமோ எரக்டஸ்

B) ஹோமோ எர்காஸ்டர்

C) ஹோமோ செப்பியன்ஸ்

D) குரோமேக்னன்

விளக்கம்: நவீன ஐரோப்பியர்களின் மூதாதையர்கள் எனக்கருதப்படும், குரோமேக்னன் பிரான்ஸ் நாட்டின் குரோமேக்னன் பாறைப் பகுதிகளில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. அவர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் வாழும் திறனைப் பெற்றிருந்ததோடு குகைகளிலும் தரைகளிலும், சுவர்களிலும் படங்கள் வரையும் பண்பினையும் பெற்றிருந்தனர்.

101. கீழ்க்கண்டவர்களுல் நவீன மனித இனமாகக் கருதப்படுபவர்கள்_________

A) ஹோமோ எரக்டஸ்

B) ஹோமோ செப்பியன்ஸ்

C) ஹோமோ செப்பியன்ஸ்

D) குரோமேக்னன்

விளக்கம்: ஹோமோ செப்பியன்ஸ் எனும் நவீன மனித இனம் சுமார் 25,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் தோன்றி மற்ற கண்டங்களுக்குப் பரவி, தனித்தனி வகை இனங்களாக வளர்ச்சியடைந்தது. அவர்களின் மூளை அளவு ஏறத்தாழ 1500 – 1600 கனசெமீ ஆகும். இவர்கள் பயிர்சாகுபடி செய்யத் தொடங்கியிருந்தனர் மேலும் வீட்டு விலங்குகளை வளர்த்தலிலும் ஈடுபட்டிருந்தனர்.

102. நவீன மனித இனமான ஹோமோ செப்பியன்சின் மூளை அளவு_________

A) 350 – 450 கனசெமீ

B) 650 – 800 கனசெமீ

C) 900 – 1000 கனசெமீ

D) 1500 – 1600 கனசெமீ

103. கீழ்க்கண்டவற்றுள் 25,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் தோன்றிய நவீன மனித இனம்_________

A) ஹோமோ எரக்டஸ்

B) ஹோமோ செப்பியன்ஸ்

C) குரோமேக்னன்

D) ஹோமோ செப்பியன்ஸ்

104. கீழ்க்கண்டவற்றுள் தனிமைப்படுத்துதல் குறித்தத் தகவல்களுல் தவறானதைக் கண்டறி:

A) தனிமைப் படுத்துதல் என்பது ஒரு இனக்கூட்டத்தில் உள்ள உயிரினங்களை துணை இனக்கூட்டங்களாகப் பிரிக்கும் முறை ஆகும்.

B) இதனால் துணை இனக்கூட்டத்தின் மரபியல் ஒருங்கமைவு பேணப்படுகிறது.

C) ஒரே பகுதியில் வசிக்கும் நெருங்கிய தொடர்புடைய சிற்றினங்கள் ஒன்றோடொன்று இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது.

D) ஏனெனில் அவை தனிமைப்படுத்துதலுக்கான தடைகளால் பிரிக்கப்பட்டுள்ளன.

விளக்கம்: ஒரே பகுதியில் வசிக்கும் நெருங்கிய தொடர்புடைய சிற்றினங்கள் ஒன்றோடொன்று இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.

105. பகல் நேரத்தில் பாலூட்டிகள் அல்லது ஆமைகள் தோண்டிய வளைகளில் வாழும் தவளையினம்___________

A) ரானா ஏரியோலேட்டா

B) ரானா கிரில்லியோ

C) பூபோ அமெரிக்கானஸ்

D) பூபோ ஃபௌலேரி

106. புற்கள் நிரம்பிய ஆழமற்ற குளங்களில் இனப்பெருக்கம் செய்யும் தவளையினம்__________

A) ரானா கிரில்லியோ

B) பூபோ அமெரிக்கானஸ்

C) பூபோ ஃபௌலேரி

D) ரானா ஏரியோலேட்டா

107. கீழ்க்கண்டவற்றுள் ஆழமான பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் தவளையினம்___________

A) ரானா ஏரியோலேட்டா

B) ரானா கிரில்லியோ

C) பூபோ அமெரிக்கானஸ்

D) மேற்கண்ட அனைத்தும்

108. கீழ்க்கண்டவற்றுள் வசந்தகாலத்திற்கு வெகு முன்னதாக இனப்பெருக்கம் செய்யும் தேரையினம்____________

A) ரானா கிரில்லியோ

B) பூபோ அமெரிக்கானஸ்

C) பூபோ ஃபௌலேரி

D) ரானா ஏரியோலேட்டா

109. கீழ்க்கண்டவற்றுள் வசந்தகாலத்திற்கு வெகு பின் இனப்பெருக்கம் செய்யும் தேரையினம்___________

A) ரானா கிரில்லியோ

B) பூபோ அமெரிக்கானஸ்

C) பூபோ ஃபௌலேரி

D) ரானா ஏரியோலேட்டா

110. கூற்று (i): ஒரு சிற்றினம் பரிணாம மாற்றம் பெற்று ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட, வேறுபட்ட சிற்றினங்களாக மாறுவது சிற்றினமாக்கம் எனப்படும்.

கூற்று (ii): எ.இ. வீன்பர்க் என்பவர் சிற்றினத்தை மரபு ரீதியாக தனித்துவம் வாய்ந்த, இனப்பெருக்கத் தனிமை பெற்ற, இயற்கையான இனக்கூட்டம் என்று வரையறை செய்கிறார்.

A) கூற்று i சரி ii தவறு

B) கூற்று i தவறு ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

விளக்கம்: எ.இ. எமர்சன் என்பவர் சிற்றினத்தை மரபு ரீதியாக தனித்துவம் வாய்ந்த, இனப்பெருக்கத் தனிமை பெற்ற, இயற்கையான இனக்கூட்டம் என்று வரையறை செய்கிறார்.

111. பரிணாமத்தின் அடிப்படை அலகு___________

A) குடும்பம்

B) பிரிவு

C) சிற்றினம்

D) பெரும்பிரிவு

112. ஒரே மரபு வழியாக, ஒரு சிற்றினம் பரிணாம மாற்றம் அடைவது______என அழைக்கப்படுகிறது.

A) மாறுதல்கள் இல்லாத

B) இனம் சார்ந்த சிற்றினமாக்கம்

C) மாறுதலுடன் கூடிய

D) A B இரண்டும்

113. ஒரு சிற்றினம் பிரிதல் அடைந்து இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட சிற்றினங்களாக மாறுவது_______எனப்படுகிறது.

A) கிளாடோஜெனிசிஸ்

B) கலப்பினம் உடைதல்

C) விரிபரிணாமம்

D) A C இரண்டும்

விளக்கம்: ஒரு சிற்றினம் பிரிதல் அடைந்து இரண்டு இல்லது இரண்டுக்கும் மேற்பட்ட சிற்றினங்களாக மாறுவது கிளாடோஜெனிசிஸ் அல்லது விரிபரிணாமம் எனப்படும்.

114. மிதவை உயிரினங்களில் பருவ நிலைகளுக்கேற்ப காணப்படும் புறத்தோற்ற நெகிழ்வுத் தன்மை_________எனப்படுகிறது.

A) சைக்ளோ மார்ஃபோசிஸ்

B) கிளாடோஜெனிசிஸ்

C) விரிபரிணாமம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: புறத்தோற்ற நெகிழ்வுத் தன்மை என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட புறத்தோற்றப் பண்புகளை உருவாக்கும் மரபணுவாக்கத்தின் திறன் ஆகும். மிதவை உயிரினங்களில் பருவ நிலைகளுக்கேற்ப காணப்படும் இந்நெகிழ்வுத் தன்மை ‘சைக்ளோ மார்ஃபோசிஸ்’ எனப்படும்.

115. சுற்றுச்சூழலில் ஏற்படும் நிகழ்வின் காரணமாகவும் அல்லது நோய் அல்லது உணவு பற்றாக்குறை போன்ற உயிரியல் காரணங்களாலும் ஒரு சிற்றினம் முழுமையாக நீக்கப்படுவது___________

A) பெருந்திரள் மரபற்றுப்போதல்

B) சிற்றினம் மரபற்றுப்போதல்

C) உலக அளவில் மரபற்றுப்போதல்

D) மேற்கண்ட எதுவுமில்லை

116. ஒரு நிலப்பரப்பு அல்லது சூழ்நிலை மண்டலத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் எரிமலை வெடிப்பு போன்ற காரணங்களால் ஒரே நேரத்தில் அழிந்து போவது_________என்றழைக்கப்படுகிறது.

A) பெருந்திரள் மரபற்றுப்போதல்

B) சிற்றினம் மரபற்றுப்போதல்

C) உலக அளவில் மரபற்றுப்போதல்

D) மேற்கண்ட எதுவுமில்லை

117. கீழ்கண்ட எந்த மரபற்றுப்போதல் நிகழ்வின் காரணமாக புதிய வாழிடங்கள் உருவாக்கப்படுகின்றன.

A) பெருந்திரள் மரபற்றுப்போதல்

B) சிற்றினம் மரபற்றுப்போதல்

C) உலக அளவில் மரபற்றுப்போதல்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: பெருமளவிலான சிற்றினங்கள் அல்லது பெரிய வகைப்பாட்டுக் குழுக்கள், கண்டங்கள் அளவில் அல்லது உலக அளவில் மரபற்றுப் போகின்றன. உறைபனி உலகம் அல்லது CO2 அளவு அதிகரித்ததன் காரணமாக நிகழ்ந்த மரபற்றுப்போதல் ஆகிய நிகழ்வுகள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

118. பூமியில் முதல் உயிரினங்கள் தோன்றியது__________

A) காற்றில்

B) நிலத்தில்

C) நீரில்

D) மலைப்பகுதியில்

119. கீழ்க்கண்டவற்றுள் எது ஹியூகோ டி விரிஸின் பங்களிப்பு?

A) திடீர் மாற்றத் தேர்வுக் கோட்பாடு

B) இயற்கைத் தேர்வுக் கோட்பாடு

C) முயன்று பெற்றபண்பு மரபுப்பண்பாதல் கோட்பாடு

D) வளர்கரு பிளாசக் கோட்பாடு

120. பறவைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

A) பரவல் முறை தகவமைப்பு

B) குவி பரிணாமம்

C) விரி பரிணாமம்

D) மாறுபாடுகள்

121. ‘தொழிற்சாலை மெலானினாக்கம்’ என்ற நிகழ்வு கீழ்க்கண்ட எதனை விளக்குகிறது.

A) இயற்கைத் தேர்வு

B) தூண்டப்பட்ட திடீர்மாற்றம்

C) இனப்பெருக்கத் தனிமைப்படுத்தல்

D) புவியியல தனிமைப்படுத்தல்

122. டார்வினின் குருவிகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டகள் ஆகும்?

A) இணைப்பு உயிரிகள்

B) பருவகால வலசைபோதல்

C) தகவமைப்பு பரவல்

D) ஒட்டுண்ணி வாழ்க்கை முறை

123. வளர்கரு பிளாசக் கோட்பாட்டைக் கூறியவர் யார்?

A) டார்வின்

B) ஆகஸ்ட் வீஸ்மேன்

C) லாமார்க்

D) ஆல்ஃப்ரட் வாலாஸ்

124. புதைபடிவங்களின் வயதைத் தீர்மானிக்க உதவுவது?

A) மின்னணு நுண்ணோக்கி

B) புதைபடிவங்களின் எடை

C) படிவங்களின் எலும்புகளை ஆராய்தல்

D) கார்பன் முறை வயது கண்டறிதல்

125. புதைபடிவங்கள் பொதுவாக எங்கே காணப்படுகிறது?

A) வெப்பப்பாறைகள்

B) உருமாறும் பாறைகள்

C) எரிமலைப் பாறைகள்

D) படிவுப் பாறைகள்

126. ஒரு உயிரினத்தின் பரிணாம வரலாறு எவ்வாறு அழைக்கப்படும்?

A) மூதாதைத் தன்மை

B) ஆன்ட்டோஜெனி

C) பைலோஜெனி (இன வரலாறு)

D) தொல்லுயிரியல்

127. நவீன மனித இனம் எந்த காலத்தைச் சேர்ந்தது?

A) குவார்டெர்னரி

B) கிரட்டேஷியஸ்

C) சைலூரியஸ்

D) கேம்ப்ரியன்

128. டார்வினின் கூற்றுப்படி கரிம பரிணாமத்திற்கான காரணம்

A) சிற்றினங்களுக்கு இடையே உள்ள போராட்டம்

B) ஒரே சிற்றினத்திற்குள் போராட்டம்

C) நெருங்கிய தொடர்புடைய சிற்றினங்களுக்குள் போட்டி

D) இடையூறு செய்யும் சிற்றினம் காரணமாக உணவு உண்ணும் திறன் குறைதல்

129. ஒரு இனக்கூட்டம் ஹார்டி வின்பெர்க் சமநிலையில் எப்போது இருக்காது?

A) உயிரினங்கள் தேர்வு செய்து கலவியில் ஈடுபடும்போது

B) திடீர்மாற்றம் இல்லாத நிலையில்

C) வலசை போதல் இல்லாத நிலையில்

D) இனக்கூட்டத்தின் அளவு பெரிதாக இருந்தால்

130. கீழ்க்கண்ட மனித இனத்தில் குகைகளிலும், தரைகளிலும் படங்கள் வரையும் பண்பினைக் கொண்டவர்கள்.

A) ஹோமோ எரக்டஸ்

B) நியாண்டர்தால்

C) ஹோமோ ஹாபிலிஸ்

D) குரோமேக்னன்

12th Science Lesson 12 Questions in Tamil

12] உயிரிகளின் இனப்பெருக்கம்

1. ____________ என்பது அனைத்து உயிரினங்களின் அடிப்படை பண்பாகும்.

A) வளர்ச்சி

B) பிறப்பு

C) இறப்பு

D) இனப்பெருக்கம்

விளக்கம்: இனப்பெருக்கம் என்பது அனைத்து உயிரினங்களின் அடிப்படை பண்பாகும்.

2. கீழ்க்கண்டவற்றுள் அனைத்து இனப்பெருக்க முறைகளிலும் காணப்படும் அடிப்படை பண்புகள் அல்லாதது எவை?

A) டி.என்.ஏ இரட்டிப்பாதல்

B) புரத உற்பத்தி

C) இனப்பருக்க அலகுகள்

D) ஆர். என்.ஏ பிரிதல்

விளக்கம்: அனைத்து இனப்பெருக்க முறைகளிலும், டி.என்.ஏ இரட்டிப்பாதல், ஆர். என்.ஏ உற்பத்தி, புரத உற்பத்தி, செல் பிரிதல், வளர்ச்சி, இனப்பருக்க அலகுகள் உருவாக்கம், அவை இணைந்து, கருவுறுதல் நடைபெற்று புதிய சேய் உயிரிகள் உருவாதல் போன்ற அடிப்படை பண்புகள் காணப்படுகின்றன.

3. கூற்று(A): தனியொரு பெற்றோரால் இனச்செல் உருவாக்கம் இன்றி இனப்பெருக்கம் நடைபெறுகிறது.

காரணம்(R): இந்த இனப்பெருக்கம் பாலிலி இனப்பெருக்கம் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: தனியொரு பெற்றோரால் இனச்செல் உருவாக்கம் இன்றி நடைபெறும் இனப்பெருக்கம் பாலிலி இனப்பெருக்கம் (Asexual reproduction) எனப்படும்.

4. கூற்று(A): உடல் செல்களில் நேரடி செல்பகுப்பு அல்லது மறைமுகச் செல்பகுப்பு முறைகளில் நடைபெறுகிறது.

காரணம்(R): பாலிலி இனப்பெருக்கம் உடலால் தோன்றும் இனப்பெருக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: உடல் செல்களில் நேரடி செல்பகுப்பு (Amitosis) அல்லது மறைமுகச் செல்பகுப்பு (Mitosis) முறைகளில் நடைபெறுவதால் பாலிலி இனப்பெருக்கம் உடலால் தோன்றும் இனப்பெருக்கம் (Somatogenic) அல்லது கருக்கோளத்தால் தோன்றும் இனப்பெருக்கம் (Blastogenic) என்று அழைக்கப்படுகிறது.

5. ____________ வழி உற்பத்தியாகும் சேய் உயிரினங்கள் மரபொத்தனவாக இருக்கும்.

A) பாலில்லா இனப்பெருக்கம்

B) நேரடி இனப்பெருக்கம்

C) மறைமுக இனப்பெருக்கம்

D) பாலிலி இனப்பெருக்கம்

விளக்கம்: பாலிலி இனப்பெருக்கம் வழி உற்பத்தியாகும் சேய் உயிரினங்கள் மரபொத்தனவாக இருக்கும்.

6. கூற்று(A): இனப்பெருக்க செயலில் இரு பெற்றோர் (ஆண், பெண்) ஈடுபட்டு இரண்டு வகை இனச்செல்கள் இணைந்து நடைபெறுகிறது.

காரணம்(R): இந்த இனப்பெருக்கம் பாலில்லா இனப்பெருக்கம் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: இனப்பெருக்க செயலில் இரு பெற்றோர் (ஆண், பெண்) ஈடுபட்டு இரண்டு வகை இனச்செல்கள் இணைந்து நடைபறும் இனப்பெருக்கம் பாலினப்பெருக்கம் (Sexual reproduction) எனப்படும்.

7. கீழ்க்கண்டவற்றுள் பாலிலி இனப்பெருக்கம் நடைபறும் உயிரிகள் அல்லாதது எது?

A) புரோட்டிஸ்டா

B) பாக்டீரியா

C) வைரஸ்

D) ஆர்க்கியா

விளக்கம்: புரோட்டிஸ்டா, பாக்டீரியா, ஆர்க்கியா மற்றும் எளிய கட்டமைப்பு கொண்ட பலசெல் உயிரிகளில் பாலிலி இனப்பெருக்கம் காணப்படுகின்றது.

8. கீழ்க்கண்டவற்றுள் விலங்குகளில் காணப்படும் பாலிலி இனப்பெருக்க முறைகள் அல்லாதது எது?

A) பிளவுறுதல்

B) முகிழ்த்தல்

C) ஜெம்யூல் ஆக்கம்

D) இழத்தல்

விளக்கம்: பிளவுறுதல் (Fission), ஸ்போர்கள் உருவாக்கம் (Sporulation), முகிழ்த்தல் (Budding), ஜெம்யூல் ஆக்கம் (Gemmule formation), துண்டாதல் (Fragmentation) மற்றும் இழப்பு மீட்டல் (Regeneration) ஆகிய பல்வேறு பாலிலி இனப்பெருக்க முறைகள் விலங்குகளில் காணப்படுகின்றன.

9. கீழ்க்கண்டவற்றுள் விலங்குகளில் காணப்படும் பிளவுறுதல் வகைகளில் அல்லாதது எது?

A) இரு சமப்பிளவு முறை

B) பல பிளவு முறை

C) ஸ்ட்ரோபிலா ஆக்கம்

D) ஒரு சமப்பிளவு முறை

விளக்கம்: இருசமப்பிளவு (Binary fission) முறை, பல பிளவு முறை (Multiple fission), ஸ்போர்கள் உருவாக்கம் (Sporulation) மற்றும் ஸ்ட்ரோபிலா ஆக்கம் (Strobilation) ஆகிய நான்கு வகை பிளவுறுதல் விலங்குகளில் காணப்படுகின்றன.

10. கூற்று(A): பெற்றோர் உயிரி இரு சம பகுதிகளாகப் பிரிந்து ஒவ்வொரு பகுதியும் ஒரு சேய் உயிரியாக மாற்றமடைகிறது.

காரணம்(R): இந்தமுறை பல பிளவு முறை எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: இருசமப்பிளவு முறையில் பெற்றோர் உயிரி இரு சம பகுதிகளாகப் பிரிந்து ஒவ்வொரு பகுதியும் ஒரு சேய் உயிரியாக மாற்றமடைகிறது.

11. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] பாலிலி இனப்பெருக்கம் மூலம் தோன்றும் சேய் உயிரிகள், மரபு மாறுபாடுகள் இன்றி “ஒற்றை பெற்றோர் மரபுப் பண்புகளைக்” கொண்டிருக்கின்றன.

2] பிளவுறுதல் முறையில் பெற்றோர் உடலானது இரண்டு அல்லது அதற்கும் அதிகமான அமைப்பொத்த சேய் உயிரிகளாகப் பிரிகின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பாலிலி இனப்பெருக்கம் மூலம் தோன்றும் சேய் உயிரிகள், மரபு மாறுபாடுகள் இன்றி “ஒற்றை பெற்றோர் மரபுப் பண்புகளைக்” கொண்டிருக்கின்றன. பிளவுறுதல் முறையில் பெற்றோர் உடலானது இரண்டு அல்லது அதற்கும் அதிகமான அமைப்பொத்த சேய் உயிரிகளாகப் பிரிகின்றன.

12. இருசமப்பிளவு முறையில் உட்கருவானது நேர்முக அல்லது மறைமுகப்பிரிவின் மூலம் பிரிவடைவது ____________

A) சைட்டோகைனெசிஸ்

B) கேரியோகைனெசிஸ்

C) மைட்டோகைனெசிஸ்

D) பைட்டோகைனெசிஸ்

விளக்கம்: முதலில் உட்கருவானது நேர்முக அல்லது மறைமுகப்பிரிவின் மூலம் பிரிவடைகிறது.(Karyokinesis) (கேரியோகைனெசிஸ்).

13. சைட்டோபிளாசம் பிரிவடைவது____________

A) சைட்டோகைனெசிஸ்

B) கேரியோகைனெசிஸ்

C) மைட்டோகைனெசிஸ்

D) பைட்டோகைனெசிஸ்

விளக்கம்: சைட்டோபிளாசம் பிரிவடைவது(சைட்டோகைனெசிஸ்) (Cytokinesis).

14. கீழ்க்கண்டவற்றுள் இரு சம பிளவு முறையின் வகைகள் அல்லாதது எது?

A) எளிய ஒழுங்கற்ற இருசமபிளவு முறை

B) கிடைமட்ட இருசமபிளவு முறை

C) நீள்மட்ட இருசமபிளவு

D) செங்குத்து மட்ட இருசமபிளவு முறை

விளக்கம்: பிளவு மட்டத்தைப் பொறுத்து இரு சம பிளவு முறையானது, அ) எளிய ஒழுங்கற்ற இருசமபிளவு முறை (Simple irregular binary fission) ஆ) கிடைமட்ட இருசமபிளவு முறை (Transverse binary fission) இ) நீள்மட்ட இருசமபிளவு முறை (Longitudinal binary fission) ஈ) சாய்வுமட்ட இருசமபிளவு முறை (Oblique binary fission) என வகைப்படுத்தப்படுகின்றன.

15. அமீபா போன்ற உயிரிகளில் நடைபெறும் பிளவுமுறை____________

A) எளிய ஒழுங்கற்ற இருசமபிளவு முறை

B) கிடைமட்ட இருசமபிளவு முறை

C) நீள்மட்ட இருசமபிளவு

D) செங்குத்து மட்ட இருசமபிளவு முறை

விளக்கம்: எளிய ஒழுங்கற்ற பிளவுறுதல் அமீபா போன்ற ஒழுங்கற்ற வடிவமுடைய உயிரிகளில் நடைபெறுகின்றது.

16. பாரமீசியம் போன்ற உயிரிகளில் நடைபெறும் பிளவுமுறை____________

A) எளிய ஒழுங்கற்ற இருசமபிளவு முறை

B) கிடைமட்ட இருசமபிளவு முறை

C) நீள்மட்ட இருசமபிளவு

D) செங்குத்து மட்ட இருசமபிளவு முறை

விளக்கம்: கிடைமட்ட இருசமபிளவுதல் பாரமீசியம் மற்றும் பிளனேரியா போன்ற உயிரிகளில் நடைபெறுகின்றது.

17. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] கிடைமட்ட இருசமபிளவுமுறை முறையில் பிளவு மட்டம் உயிரியின் கிடைமட்ட அச்சில் ஏற்படுகின்றது.

2] பாரமீசியத்தில் கிடைமட்ட இருசமபிளவு முறை பெரிய உட்கரு நேர்முகப் பிரிவு முறையிலும் சிறிய உட்கரு மறைமுகப்பிரிவு முறையிலும் பிரிவடைகின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: கிடைமட்ட இருசமபிளவுமுறை முறையில் பிளவு மட்டம் உயிரியின் கிடைமட்ட அச்சில் ஏற்படுகின்றது. பாரமீசியத்தில் கிடைமட்ட இருசமபிளவு முறை பெரிய உட்கரு நேர்முகப் பிரிவு முறையிலும் சிறிய உட்கரு மறைமுகப்பிரிவு முறையிலும் பிரிவடைகின்றன.

18. யூக்ளினா போன்ற உயிரிகளில் நடைபெறும் பிளவுமுறை____________

A) எளிய ஒழுங்கற்ற இருசமபிளவு முறை

B) கிடைமட்ட இருசமபிளவு முறை

C) நீள்மட்ட இருசமபிளவு

D) செங்குத்து மட்ட இருசமபிளவு முறை

விளக்கம்: நீள்மட்ட இருசமபிளவு முறை வோர்டிசெல்லா மற்றும் யூக்ளினா போன்ற உயிரிகளில் நடைபெறுகின்றது.

19. நீள்மட்ட இருசமபிளவு முறையில் உட்கரு மற்றும்____________ உயிரியின் நீள் அச்சில் பிரிவடைகின்றது.

A) குரோமோசோம்

B) மைட்டோகாண்ட்ரியா

C) வெளிக்கரு

D) சைட்டோபிளாசம்

விளக்கம்: நீள்மட்ட இருசமபிளவு முறையில் உட்கரு மற்றும் சைட்டோபிளாசம் உயிரியின் நீள் அச்சில் பிரிவடைகின்றது.

20. செராஷியம் போன்ற உயிரிகளில் நடைபெறும் பிளவுமுறை____________

A) எளிய ஒழுங்கற்ற இருசமபிளவு முறை

B) கிடைமட்ட இருசமபிளவு முறை

C) நீள்மட்ட இருசமபிளவு

D) சாய்வு மட்ட இருசமபிளவு முறை

விளக்கம்: சாய்வு மட்ட இருசமபிளவு முறை செராஷியம் போன்ற உயிரிகளில் நடைபெறுகின்றது.

21. ____________ ல் சாய்வு மட்ட இருசமபிளவு முறை பிளவுறுதல் காணப்படுகிறது.

A) பைனோஃபிளாஜெல்லேட்டுகல்

B) கைனோஃபிளாஜெல்லேட்டுகல்

C) மைனோஃபிளாஜெல்லேட்டுகல்

D) டைனோஃபிளாஜெல்லேட்டுகல்

விளக்கம்: டைனோஃபிளாஜெல்லேட்டுகளில் சாய்வு மட்ட இருசமபிளவு முறை பிளவுறுதல் காணப்படுகிறது.

22. ____________ பிளவு முறையில் மட்டத்தை கண்டறிதல் கடினமானதாகும்.

A) எளிய ஒழுங்கற்ற இருசமபிளவு முறை

B) கிடைமட்ட இருசமபிளவு முறை

C) நீள்மட்ட இருசமபிளவு

D) சாய்வு மட்ட இருசமபிளவு முறை

விளக்கம்: எளிய ஒழுங்கற்ற இருசமபிளவு முறையில் மட்டத்தை கண்டறிதல் கடினமானதாகும்.

23. வோர்டிசெல்லா போன்ற உயிரிகளில் நடைபெறும் பிளவுமுறை____________

A) எளிய ஒழுங்கற்ற இருசமபிளவு முறை

B) கிடைமட்ட இருசமபிளவு முறை

C) நீள்மட்ட இருசமபிளவு

D) பன்மடி பகுப்பு பிளவு முறை

விளக்கம்: பன்மடி பகுப்பு பிளவு முறை வோர்டிசெல்லா போன்ற உயிரிகளில் காணப்படுகிறது.

24. கூற்று(A): பிளவுறுதல் நிகழ்வு முழுமையடையும் வரை சேய் உயிரிகள் பிரிவதில்லை.

காரணம்(R): இத்தகு பிரிவிற்கு பன்மடி பகுப்பு (Repeated fission) என்று பெயர்,

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: பலபிளவுமுறையில் சமமான செல் பிரிதலினால் ஒரு உயிரியிலிருந்து நான்கு அல்லது பல சேய் உயிரிகள் தோன்றுகின்றன. மேலும்,பிளவுறுதல் நிகழ்வு முழுமையடையும் வரை சேய் உயிரிகள் பிரிவதில்லை. இத்தகு பிரிவிற்கு பன்மடி பகுப்பு (Repeated fission) என்று பெயர், எ.கா: வோர்டிசெல்லா.

25. பிளாஸ்மோடியத்தில்____________ நிலையில் பல பிளவுமுறை நடைபெறுகிறது.

A) சைஷாண்ட்

B) மைஷாண்ட்

C) பைஷாண்ட்

D) மீசைட்

விளக்கம்: பிளாஸ்மோடியத்தில் சைஷாண்ட் மற்றும் ஊசைட் நிலையில் பலபிளவுமுறை நடைபெறுகிறது .

26. கீழ்க்கண்டவற்றுள் எதன் சேய் உயிரிகள் ஸ்போரோசோயிட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன?

A) சைஷாண்ட்

B) ஊசைட்

C) பைஷாண்ட்

D) மீசைட்

விளக்கம்: ஊசைட் சேய் உயிரிகள் ஸ்போரோசோயிட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.

27. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] சைஷான்ட் நிலையில் பலபிளவு முறை நடைபெறுதலுக்கு சைஷோகனி என்று பெயர்.

2] இந்த சேய் உயிரிகள் ஸ்போரோசோயிட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: சைஷான்ட் நிலையில் பலபிளவு முறை நடைபெறுதலுக்கு சைஷோகனி என்று பெயர். இந்த சேய் உயிரிகள் மீரோசோயிட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.

28. கூற்று(A): சாதகமற்ற சூழலில் அமீபா போலிக்கால்களை உள்ளிழுத்துக் கொண்டு தன்னைச் சுற்றி கைட்டின் என்னும் பொருளால் ஆன மூன்று அடுக்கு சிஸ்ட் எனும் பாதுகாப்பு உறையைச் சுரந்து அதனுள் செயலற்று உறைகிறது.

காரணம்(R): இந்நிகழ்வுக்கு ‘உறையாக்கம்’ (encystment) என்று பெயர்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: சாதகமற்ற சூழலில் (வெப்பநிலை, அதிகரித்தல் அல்லது குறைதல் மற்றும் உணவுத் தட்டுப்பாடு) அமீபா போலிக்கால்களை உள்ளிழுத்துக் கொண்டு தன்னைச் சுற்றி கைட்டின் என்னும் பொருளால் ஆன மூன்று அடுக்கு சிஸ்ட் எனும் பாதுகாப்பு உறையைச் சுரந்து அதனுள் செயலற்று உறைகிறது. இந்நிகழ்வுக்கு ‘உறையாக்கம்’ (encystment) என்று பெயர்.

29. பலசெல் உயிரிகள் சிலவற்றில்____________ சிறப்பு வகை கிடைமட்டப்பிளவு நடைபெறுகின்றது

A) ஸ்ட்ரோபிலா ஆக்கம்

B) பைபிலா ஆக்கம்

C) மீயோபிலா ஆக்கம்

D) மையோபிலா ஆக்கம்

விளக்கம்: பலசெல் உயிரிகள் சிலவற்றில் ஸ்ட்ரோபிலா ஆக்கம் (Strobilation) எனும் சிறப்பு வகை கிடைமட்டப்பிளவு நடைபெறுகின்றது.

30. கூற்று(A): பல உட்கருக்களைக் கொண்ட பெற்றோர் உயிரியின் உட்கருக்கள் பிரிந்து பல உட்கருக்களைக் கொண்ட சேய் உயிரிகளை உருவாக்கும்.

காரணம்(R): இந்நிகழ்வு பிளாஸ்மோடோமி (Plasmotomy) எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: பல உட்கருக்களைக் கொண்ட பெற்றோர் உயிரியின் உட்கருக்கள் பிரிந்து பல உட்கருக்களைக் கொண்ட சேய் உயிரிகளை உருவாக்குதல் பிளாஸ்மோடோமி (Plasmotomy) எனப்படும்.

31. பிளாஸ்மோடோமி முறை காணப்படும் உயிரிகள் ____________

A) பாலிமிக்ஸா

B) பிலோலினா

C) ஒபாலினா

D) ஒலோமிக்ஸா

விளக்கம்: ஒபாலினா மற்றும் பிலோமிக்ஸா (இராட்சத அமீபாக்கள்) ஆகியனவற்றில் பிளாஸ்மோடோமி முறை காணப்படுகின்றது.

32. ஸ்ட்ரோபிலா ஆக்க நிகழ்வு_ காணப்படும் உயிரிகள் ___________

A) பாலிமிக்ஸா

B) பிலோலினா

C) ஆரிலியா

D) ஒலோமிக்ஸா

விளக்கம்: ஸ்ட்ரோபிலா ஆக்க நிகழ்வில் பல கிடைமட்டப் பிளவுகள் ஒரே நேரத்தில் நடைபெற்று தனித்துப் பிரியாத எண்ணற்ற உயிரிகளை உருவாக்குகின்றன.எ.கா: ஆரிலியா.

33. அமீபாக்கள், சாதகமற்ற சூழ்நிலைகளில்___________ முறையில் மேலுறையை உருவாக்காமல் எண்ணிக்கையில் பெருக்கமடைகின்றன.

A) ஸ்போர் இணைவு

B) ஸ்போர் வெளியேற்றம்

C) ஸ்போர் மீட்ருவாக்கம்

D) ஸ்போர் உருவாக்கம்

விளக்கம்: அமீபாக்கள், சாதகமற்ற சூழ்நிலைகளில் “ஸ்போர் உருவாக்கம் “ முறையில் மேலுறையை உருவாக்காமல் எண்ணிக்கையில் பெருக்கமடைகின்றன.

34. கூற்று(A): பெற்றோர் உயிரிகளின் உடலில் ஒன்று அல்லது பல மொட்டுகள் தோன்றி ஒவ்வொன்றும் ஒரு சேய் உயிரி ஆகின்றது.

காரணம்(R): இந்நிகழ்வு முகிழ்த்தல் (Budding) எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: முகிழ்த்தல் (Budding) முறையில் பெற்றோர் உயிரிகளின் உடலில் ஒன்று அல்லது பல மொட்டுகள் தோன்றி ஒவ்வொன்றும் ஒரு சேய் உயிரி ஆகின்றது.

35. முகிழ்த்தல் முறை காணப்படும் உயிரினம்____________

A) கடற் மீன்கள்

B) நைடீரியா

C) கடற் ஹைட்ரா

D) கடற் பஞ்சு

விளக்கம்: முகிழ்த்தல் முறைக்கு எடுத்துக்காட்டாக, கடற் பஞ்சுகளில் உருவாகும் மொட்டுகளின் அடிப்பகுதி குறுகி பெற்றோரை விட்டுப் பிரிந்து புதிய உயிரியாகின்றது.

36. பெற்றோர் உடலின் வெளிப்பகுதியில் மொட்டுகள் உருவானால்____________ என்று பெயர்.

A) அக முகிழ்தல்

B) புற முகிழ்தல்

C) நேர் முகிழ்தல்

D) எதிர் முகிழ்தல்

விளக்கம்: பெற்றோர் உடலின் வெளிப்பகுதியில் மொட்டுகள் உருவானால் அதற்கு புற முகிழ்த்தல் (Exogenous budding) என்று பெயர்.

37. புற முகிழ்த்தல் முறை காணப்படும் உயிரினம்____________

A) கடற் மீன்கள்

B) நைடீரியா

C) கடற் ஹைட்ரா

D) ஹைட்ரா

விளக்கம்: புற முகிழ்த்தல் முறைக்கு எடுத்துக்காட்டாக, ஹைட்ரா. ஹைட்ராவில் உணவு அதிகம் கிடைக்கும்போது புறப்படை செல்கள் பெருகி உடலின் மேற்பகுதியில் ஒரு புடைப்பை உருவாக்குகின்றது. புறப்படை மற்றும் அகப்படை வெளிநோக்கி தள்ளப்பட்டு மொட்டு உருவாகின்றது.

38. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] நாக்டிலூகா-வில் நூற்றுக்கணக்கான மொட்டுகள் சைட்டோபிளாசத்தினுள் உருவாகி பெற்றோர் உடலினுள்ளேயே இருக்கும்.

2] இந்நிலை அக முகிழ்த்தல் எனப்படும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: நாக்டிலூகா-வில் நூற்றுக்கணக்கான மொட்டுகள் சைட்டோபிளாசத்தினுள் உருவாகி பெற்றோர் உடலினுள்ளேயே இருக்கும் நிலை அக முகிழ்த்தல் (endogenous budding) எனப்படும்.

39. ____________ உட்பகுதியில் உணவுப்பொருள் தாங்கிய ஆர்க்கியோசைட்டுகள் காணப்படுகின்றன.

A) நன்னீர் பஞ்சுகள்

B) கடற் பஞ்சு

C) ஜெம்யூல்கள்

D) நாக்டிலூகா

விளக்கம்: ஜெம்மியூல் உட்பகுதியில் உணவுப்பொருள் தாங்கிய ஆர்க்கியோசைட்டுகள் காணப்படுகின்றன.

40. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] துண்டாதல் முறையில் பெற்றோர் உடலானது பல துண்டுகளாகப் பிரிகின்றது.

2] பிரிந்த ஒவ்வொரு துண்டும் புதிய உயிரியாக வளரும் திறனற்றது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: துண்டாதல் முறையில் (fragmentation) பெற்றோர் உடலானது பல துண்டுகளாகப் பிரிகின்றது. பிரிந்த ஒவ்வொரு துண்டும் புதிய உயிரியாக வளரும் திறனுடையது.

41. துண்டாதல் முறை இனப்பெருக்கம்____________ பேரினங்களில் நடைபெறுகின்றது.

A) கடல் தாமரை

B) கடல் ஹேபிஸ்க்ஸ்

C) கடல் சாமந்தி

D) கடல் பவளம்

விளக்கம்: துண்டாதல் அல்லது அடிப்பகுதி துண்டாதல் முறை இனப்பெருக்கம் கடல் சாமந்தியின் பல பேரினங்களில் நடைபெறுகின்றது.

42. நாடாப்புழுவின் அறிவியல் பெயர் ____________

A) டீனியா பேலியம்

B) டீனியா யாலியம்

C) டீனியா சோலியம்

D) டீனியா மாலியம்

விளக்கம்: நாடாப்புழு (டீனியா சோலியம்).

43. கூற்று(A): நாடாப்புழுக்களில் வயதான பழுத்த கண்டங்கள் உடற்பகுதியான ஸ்ட்ரோபிலாவின் பின்முனையில் உள்ளன. இத்தகு பழுத்த கண்டங்கள் தனியாகவோ அல்லது தொகுப்பாகவோ உடலில் இருந்து பிரியும்

காரணம்(R): இந்நிகழ்வு“அபோலைசிஸ்” எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: நாடாப்புழுக்களில் (டீனியா சோலியம்) (Taenia solium) வயதான பழுத்த கண்டங்கள் உடற்பகுதியான ஸ்ட்ரோபிலாவின் பின்முனையில் உள்ளன. இத்தகு பழுத்த கண்டங்கள் தனியாகவோ அல்லது தொகுப்பாகவோ உடலில் இருந்து பிரியும் செயலுக்கு “அபோலைசிஸ்” (தற்சிதைவு) (Apolysis) என்று பெயர்.

44. காயமடைந்த உடல் பகுதியிலிருந்து உடல் பாகங்கள் (அல்லது) திசுக்கள் மறுவளர்ச்சி அடைவது____________

A) இழப்பு திறன்

B) இழப்பு ஆற்றல்

C) இழப்பு மீட்ருவாக்கம்

D) இழப்பு மீட்டல்

விளக்கம்: காயமடைந்த உடல் பகுதியிலிருந்து உடல் பாகங்கள் (அல்லது) திசுக்கள் மறுவளர்ச்சி அடைவது ‘இழப்பு மீட்டல்’ (Regeneration) எனப்படும்.

45. ‘இழப்பு மீட்டல்’ குறித்து முதன் முதலில் ஆய்வு மேற்கொண்டவர் ____________

A) ஸ்டீபன் டிரம்ப்ளி

B) நீல்ஸ் டிரம்ப்ளி

C) ஆபிரகாம் டிரம்ப்ளி

D) ஜார்ஜ் டிரம்ப்ளி

விளக்கம்: 1740ல் ஆபிரகாம் டிரம்ப்ளி என்னும் அறிவியலாளர் ஹைட்ராவில் ‘இழப்பு மீட்டல்’ குறித்து முதன் முதலில் ஆய்வு மேற்கொண்டார்.

46. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] முழுஉருவ மீட்பில் உடலின் ஒரு சிறிய துண்டுப்பகுதியிலிருந்து முழு உடலும் மீண்டும் வளர்கிறது.

2] இந்த இழப்பு மீட்டலில் உறுப்புகள் தங்களது துருவத்தன்மையைத் தக்க வைத்துக்கொள்கின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: முழுஉருவ மீட்பில் உடலின் ஒரு சிறிய துண்டுப்பகுதியிலிருந்து முழு உடலும் மீண்டும் வளர்கிறது. இந்த இழப்பு மீட்டலில் உறுப்புகள் தங்களது துருவத்தன்மையைத் தக்க வைத்துக்கொள்கின்றன.

47. முழுஉருவ மீட்பிற்கு எடுத்துக்காட்டு ____________

A) நன்னீர் பஞ்சுகள்

B) ஹைட்ரா

C) ஜெம்யூல்கள்

D) நாக்டிலூகா

விளக்கம்: முழுஉருவ மீட்பிற்கு எடுத்துக்காட்டு ஹைட்ரா மற்றும் பிளனேரியா. ஹைட்ராவை பல துண்டுகளாக வெட்டினால் ஒவ்வொரு துண்டும் தனது இழந்த பகுதிகளை வளரச் செய்து ஒரு முழுமையான புதிய ஹைட்ராவை உருவாக்குகின்றது.

48. ____________ என்பது இழந்த உடல் உறுப்புகளை மட்டும் மீண்டும் உருவாக்கிக் கொள்ளும் திறன் ஆகும்.

A) உறுப்புதிறன்

B) உறுப்புஆற்றல்

C) உறுப்புமீட்டுருவாக்கம்

D) உறுப்பு மீட்பு

விளக்கம்: உறுப்பு மீட்பு என்பது இழந்த உடல் உறுப்புகளை மட்டும் மீண்டும் உருவாக்கிக் கொள்ளும் திறன் ஆகும்.

49. கூற்று(A): உடலில் சேதமுற்ற சில வகையான திசுக்கள் மட்டும் சரி செய்யப்படுகின்றன.

காரணம்(R): இது மீண்டும் உருவாக்குதல் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: சீராக்கல் இழப்பு மீட்டலில் உடலில் சேதமுற்ற சில வகையான திசுக்கள் மட்டும் சரி செய்யப்படுகின்றன.

50. கூற்று(A): உடல் இழந்த அல்லது வெட்டுண்ட பகுதியை முழுமையாக உருவாக்கும் திறனாகும்.

காரணம்(R): இது சீராக்கல் இழப்பு மீட்டல் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: மீண்டும் உருவாக்குதல் என்பது உடல் இழந்த அல்லது வெட்டுண்ட பகுதியை முழுமையாக உருவாக்கும் திறனாகும்.

51. மீண்டும் உருவாக்குதலுக்கு எடுத்துக்காட்டு ____________

A) கடற் ஆமை

B) நட்சத்திர மீன்

C) சுவர்ப்பல்லி இழந்த வால்

D) B மற்றும் C

விளக்கம்: மீண்டும் உருவாக்குதலுக்கு எடுத்துக்காட்டு: நட்சத்திர மீன் மற்றும் சுவர்ப்பல்லி இழந்த வால்.

52. செயற்கை முறை கடற்பஞ்சு வளர்ப்பில் பயன்படும் தொழில்நுட்பம்____________

A) இழப்பு திறன்

B) இழப்பு ஆற்றல்

C) இழப்பு மீட்ருவாக்கம்

D) இழப்பு மீட்டல் திறன்

விளக்கம்: இழப்பு மீட்டல் திறன் நுட்பம் செயற்கை முறை கடற்பஞ்சு வளர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது.

53. கூற்று(A): ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைவுற்று இருமய கருமுட்டையை உருவாக்கி அதிலிருந்து ஒரு புதிய உயிரியைத் தோற்றுவிக்கிறது.

காரணம்(R): இது பாலினப்பெருக்கம் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைவுற்று இருமய கருமுட்டையை (Diploid zygote) உருவாக்கி அதிலிருந்து ஒரு புதிய உயிரியைத் தோற்றுவிக்கும் முறையே பாலினப்பெருக்கம் ஆகும்.

54. ____________ முறைகளில் பாலினப் பெருக்கம் நடைபெறுகிறது.

A) மீட்டல் முறை இனப்பெருக்கம்

B) ஒருங்கிணைவு

C) இணைவு முறை இனப்பெருக்கம்

D) B மற்றும் C

விளக்கம்: ‘ஒருங்கிணைவு’ (Syngamy) மற்றும் ‘இணைவு முறை இனப்பெருக்கம்’ (Conjugation) என்னும் இருமுறைகளில் பாலினப் பெருக்கம் நடைபெறுகிறது.

55. கூற்று(A): இரு ஒற்றை மய இனச்செல்கள் (Haploid gametes) ஒன்றிணைந்து இரட்டைமய கருமுட்டை உருவாக்கப்படுகிறது.

காரணம்(R): இது ஒருங்கிணைவு முறை எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒருங்கிணைவு முறையில், இரு ஒற்றை மய இனச்செல்கள் (Haploid gametes) ஒன்றிணைந்து இரட்டைமய கருமுட்டை (Diploid zygote) உருவாக்கப்படுகிறது.

56. கூற்று(A): பெண் உயிரியின் உடலுக்கு வெளியில், ஆண், பெண் இனச்செல்கள் இணைந்தால் குறிப்பாக அவை வாழும் நீர் வாழிடத்தில் நிகழ்கிறது.

காரணம்(R): இது ‘உட்கருவுறுதல்’ எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: பெண் உயிரியின் உடலுக்கு வெளியில், ஆண், பெண் இனச்செல்கள் இணைந்தால் குறிப்பாக அவை வாழும் நீர் வாழிடத்தில் நிகழ்ந்தால் அவ்வகைக் கருவுறுதல் ‘வெளிக்கருவுறுதல்’ (External fertilization) எனப்படும்.

57. வெளிக்கருவுறுதலுக்கு எடுத்துகாட்டு____________

A) கடற்பஞ்சுகள்

B) மீன்கள்

C) இருவாழ்விகள்

D) இவை அனைத்தும்

விளக்கம்: வெளிக்கருவுறுதலுக்கு எ.கா: கடற்பஞ்சுகள், மீன்கள் மற்றும் இருவாழ்விகள்.

58. கூற்று(A): ஆண், பெண் இனச்செல்களின் இணைதலானது பெண் உயிரியின் உடலுக்குள்ளேயே நிகழ்கிறது.

காரணம்(R): இது ‘வெளிக்கருவுறுதல்’ எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஆண், பெண் இனச்செல்களின் இணைதலானது பெண் உயிரியின் உடலுக்குள்ளேயே நிகழ்ந்தால் அவ்வகைக் கருவுறுதல் ‘உட்கருவுறுதல்’ (Internal fertilization) என அழைக்கப்படும்.

59. உட்கருவுறுதக்கு எடுத்துகாட்டு____________

A) ஊர்வன

B) பறவைகள்

C) பாலூட்டிகள்

D) இவை அனைத்தும்

விளக்கம்: உட்கருவுறுதக்கு எ.கா: ஊர்வன, பறவைகள் மற்றும் பாலூட்டிகள்.

60. கூற்று(A): ஒரு செல்லிலிருந்தோ அல்லது ஒரே உயிரியிலிருந்தோ உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இன செல்கள் இணைந்து கருமுட்டையை உருவாக்குகின்றன.

காரணம்(R): இது ‘‘அயல்கருவுறுதலில்” எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ‘தன்கருவுறுதலில்’ (Autogamy) ஒரு செல்லிலிருந்தோ அல்லது ஒரே உயிரியிலிருந்தோ உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இன செல்கள் இணைந்து கருமுட்டையை உருவாக்குகின்றன.

61. கூற்று(A): ஆண் மற்றும் பெண் என்னும் இரு தனித்தனி பெற்றோர்களிலிருந்து உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் ஒன்றிணைந்து கருமுட்டை உருவாகிறது.

காரணம்(R): இது ‘தன்கருவுறுதல்’ எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ‘அயல்கருவுறுதலில்’ (exogamy) ஆண் மற்றும் பெண் என்னும் இரு தனித்தனி பெற்றோர்களிலிருந்து உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் ஒன்றிணைந்து கருமுட்டை உருவாகிறது.

62. தன்கருவுறுதலுக்கு எடுத்துக்காட்டு____________

A) டயோஷியஸ்

B) பாரமீசியம்

C) ஆக்டினோஸ்பேரியம்

D) B மற்றும் C

விளக்கம்: தன்கருவுறுதலுக்கு எடுத்துக்காட்டு: பாரமீசியம் மற்றும் ஆக்டினோஸ்பேரியம்.

63. அயல்கருவுறுதலுக்கு எடுத்துக்காட்டு____________

A) பாரமீசியம்

B) டயோஷியஸ்

C) ஒரு பால்-உயிரி

D) B மற்றும் C

விளக்கம்: அயல்கருவுறுதலுக்கு எடுத்துக்காட்டு: மனிதனில் ஆண் பெண் என்னும் இரு தனித்தனி உயிரிகள் காணப்படுதல். (டயோஷியஸ் அல்லது ஒரு பால்-உயிரி (Dioecious or Unisexual)

64. கூற்று(A): கீழ்நிலை உயிரிகளில், சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல், அவ்வயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கின்றன.

காரணம்(R): இது ‘முழுசேர்க்கை’ எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: கீழ்நிலை உயிரிகளில், சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல், அவ்வயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கின்றன. இது ‘முழுசேர்க்கை’ (Hologamy) எனப்படும்.

65. கூற்று(A): முதிர்ந்தபெற்றோர் செல்லிலிருந்து மறைமுகப்பிரிவு மூலம் உருவாகும் இரு இளம் சேய் செல்கள் இனச்செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரியைத் தோற்றுவிக்கிறது.

காரணம்(R): இது ‘இளம் செல் சேர்க்கை’ எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: முதிர்ந்தபெற்றோர் செல்லிலிருந்து மறைமுகப்பிரிவு மூலம் உருவாகும் இரு இளம் சேய் செல்கள் இனச்செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரியைத் தோற்றுவிக்கும் செயல் ‘இளம் செல் சேர்க்கை’ (Paedogamy) எனப்படும்.

66. டிரைக்கோநிம்ஃபா____________ க்கு எடுத்துக்காட்டு.

A) முழுசேர்க்கை

B) இளம் செல் சேர்க்கை

C) புற சேர்க்கை

D) அக சேர்க்கை

விளக்கம்: ‘முழுசேர்க்கை’ எடுத்துக்காட்டு : டிரைக்கோநிம்ஃபா.

67. இரு சிறிய இனச்செல்கள் ஒன்றிணையும் முறை இரு சிறிய இனச்செல்கள் ஒன்றிணையும் முறை____________

A) முழுசேர்க்கை

B) இளம் செல் சேர்க்கை

C) மாறுபட்ட செல்சேர்க்கை

D) அக சேர்க்கை

விளக்கம்: இரு சிறிய இனச்செல்கள் ஒன்றிணையும் முறை ‘மாறுபட்ட செல்சேர்க்கை’ (Merogamy) எனப்படும்.

68. அமைப்பிலும் செயலிலும் ஒரே மாதிரியான இரு இனச்செல்கள் ஒன்றிணைதல்____________

A) முழுசேர்க்கை

B) இளம் செல் சேர்க்கை

C) மாறுபட்ட செல்சேர்க்கை

D) ஒத்த செல் சேர்க்கை

விளக்கம்: அமைப்பிலும் செயலிலும் ஒரே மாதிரியான இரு இனச்செல்கள் ஒன்றிணைதல் ‘ஒத்த செல் சேர்க்கை’ (Isogamy) எனப்படும்.

69. ஒத்த செல் சேர்க்கைக்கு எடுத்துக்காட்டு ____________

A) மோனோசிஸ்டிஸ்.

B) பாரமீசியம்

C) ஆக்டினோஸ்பேரியம்

D) டயோஷியஸ்

விளக்கம்: ஒத்த செல் சேர்க்கைக்கு எடுத்துக்காட்டு: மோனோசிஸ்டிஸ்.

70. முற்றிலும் வேறுபட்ட இரு இனச் செல்கள் ஒன்றிணையும் முறை____________

A) முழுசேர்க்கை

B) இளம் செல் சேர்க்கை

C) மாறுபட்ட செல்சேர்க்கை

D) வேறுபட்ட செல்சேர்க்கை

விளக்கம்: முற்றிலும் வேறுபட்ட இரு இனச் செல்கள் ஒன்றிணையும் முறை ‘வேறுபட்ட செல்சேர்க்கை’ (anisogamy) (Gr. An without; iso-equal; gam- marriage) எனப்படும்.

71. உயர்வகை விலங்குகளில் நடைபெறுவது____________

A) முழுசேர்க்கை

B) இளம் செல் சேர்க்கை

C) மாறுபட்ட செல்சேர்க்கை

D) வேறுபட்ட செல்சேர்க்கை

விளக்கம்: வேறுபட்ட செல்சேர்க்கை இவ்வகைக் கருவுறுதல் உயர்வகை விலங்குகளில் நடைபெறுகிறது.

72. கூற்று(A): ஒரே சிற்றினத்தைச் சார்ந்த இரு உயிரிகள் தற்காலிகமாக இணைதல் நடைபெறுகிறது.

காரணம்(R): இது இணைவு முறை இனப்பெருக்கம் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ‘இணைவு முறை இனப்பெருக்கம்’ (Conjugation) என்னும் முறையில் ஒரே சிற்றினத்தைச் சார்ந்த இரு உயிரிகள் தற்காலிகமாக இணைதல் நடைபெறுகிறது.

73. ____________ முறை இனப்பெருக்கத்தில் ஈடுபடும் உயிரிகள் இணைவிகள் என்று அழைக்கப்படுகின்றன.

A) இணைவு முறை இனப்பெருக்கம்

B) இளம் செல் சேர்க்கை

C) மாறுபட்ட செல்சேர்க்கை

D) வேறுபட்ட செல்சேர்க்கை

விளக்கம்: இணைவு முறை இனப்பெருக்கத்தில் ஈடுபடும் உயிரிகள் இணைவிகள் (Conjugants) என்று அழைக்கப்படுகின்றன.

74. கீழ்க்கண்டவற்றுள் இணைவு முறை இனப்பெருக்க உயிரிகள் அல்லாதவை எவை?

A) பாரமீசியம்

B) வோர்ட்டிசெல்லா

C) பாக்டீரியா

D) பூஞ்சைகள்

விளக்கம்: இணைவு முறை இனப்பெருக்க உயிரிகளுக்கு பாரமீசியம், வோர்ட்டிசெல்லா மற்றும் பாக்டீரியா (புரோகேரியோட்டுகள்).

75. உயிரிகள் வாழ்க்கை சுழற்சியில் மூன்று நிலைகள் யாவை?

A) இளம் உயிரிநிலை

B) இனப்பெருக்க நிலை

C) முதுமை நிலை

D) இவை அனைத்தும்

விளக்கம்: உயிரிகள் தங்கள் வாழ்க்கை சுழற்சியில் மூன்று நிலைகளைக் (Phases) கொண்டுள்ளன. அவை, ‘இளம் உயிரிநிலை’/ ‘வளராக்க நிலை’ (Juvenile Phase/Vegetative Phase), ‘இனப்பெருக்க நிலை’ / ‘முதிர்ச்சி நிலை’ (Reproductive Phase/Maturity Phase) மற்றும் முதுமை நிலை (Senescent Phase).

76. ஒரு உயிரியின் பிறப்பிற்கும்இனப்பெருக்க முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட வளர்ச்சிக்காலம்____________

A) இளம் உயிரிநிலை

B) இனப்பெருக்க நிலை

C) முதுமை நிலை

D) முதிர்ச்சி நிலை

விளக்கம்: ஒரு உயிரியின் பிறப்பிற்கும்இனப்பெருக்க முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட வளர்ச்சிக்காலம் ‘இளம் உயிரி நிலை’ எனப்படும்.

77. ஒரு உயிரியானது இனப்பெருக்கம் செய்து வழித் தோன்றல்களை உருவாக்கும் செயல்களைச் செய்யும் காலம்____________

A) இளம் உயிரிநிலை

B) இனப்பெருக்க நிலை

C) முதுமை நிலை

D) வளராக்க நிலை

விளக்கம்: ஒரு உயிரியானது இனப்பெருக்கம் செய்து வழித் தோன்றல்களை உருவாக்கும் செயல்களைச் செய்யும் காலம் இனப்பெருக்க நிலை ஆகும்.

78. கூற்று(A): ஒரு ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் உயிரிகள் இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன.

காரணம்(R): இவை ‘தொடர்ச்சியான இனச்சேர்க்கையாளர்கள்’ எனப்படுகின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் ‘பருவ கால இனச்சேர்க்கையாளர்கள்’ எனப்படும்.

79. கூற்று(A): பால் முதிர்ச்சிக் காலம் முழுவதும் இனச்சேர்க்கையில் உயிரிகள் ஈடுபடுகின்றன.

காரணம்(R): இவை ‘பருவ கால இனச்சேர்க்கையாளர்கள்’ எனப்படுகின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: பால் முதிர்ச்சிக் காலம் முழுவதும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் ‘தொடர்ச்சியான இனச் சேர்க்கையாளர்கள்’ ஆகும்.

80. கீழ்க்கண்டவற்றுள் பருவ கால இனச்சேர்க்கையாளர்கள் அல்லாதது எது?

A) தவளைகள்

B) பல்லிகள்

C) பறவைகள்

D) தேனீக்கள்

விளக்கம்: பருவ கால இனச்சேர்க்கையாளர்களுக்கு எ.கா: தவளைகள், பல்லிகள், பெரும்பாலான பறவைகள், மான்கள் போன்றவை.

81. கீழ்க்கண்டவற்றுள் தொடர்ச்சியான இனச்சேர்க்கையாளர்கள் அல்லாதது எது?

A) தேனீக்கள்

B) வளர்ப்புப் பறவைகள்

C) முயல்கள்

D) மான்கள்

விளக்கம்: தொடர்ச்சியான இனச்சேர்க்கையாளர்களுக்கு எ.கா: தேனீக்கள், வளர்ப்புப் பறவைகள், முயல்கள் போன்றவை.

82. கூற்று(A): இனப்பெருக்க நிலை முடியும் காலத்தில் ஒரு உயிரியின் உடல் அமைப்பிலும் செயல்பாடுகளிலும் சிதைவு ஏற்படத் தொடங்கும்

காரணம்(R): இவை முதுமை நிலை எனப்படுகின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: இனப்பெருக்க நிலை முடியும் காலத்தில் ஒரு உயிரியின் உடல் அமைப்பிலும் செயல்பாடுகளிலும் சிதைவு ஏற்படத் தொடங்கும் நிலை முதுமை நிலை (Senescent phase) எனப்படும்.

83. கூற்று(A): அண்ட செல்லானது, கருவுறாமலேயே முழு உயிரியாக வளர்ச்சி அடையும்.

காரணம்(R): இவை ‘கன்னி இனப்பெருக்கம்’ எனப்படுகின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: அண்ட செல்லானது, கருவுறாமலேயே முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயலுக்கு ‘கன்னி இனப்பெருக்கம்’ என்று பெயர்.

84. கன்னி இனப்பெருக்கம்___________ என்பவரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது.

A) சார்லஸ் பானட்

B) ஸ்டீபன் ஹாங்கிங்

C) நீல்ஸ் பானட்

D) ஜார்ஜ் பானட்

விளக்கம்: கன்னி இனப்பெருக்கம் 1745ல் சார்லஸ் பானட் என்பவரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது.

85. கூற்று(A): சில விலங்குகளின் வாழ்க்கை சுழற்சியில் கன்னி இனப்பெருக்கம் தொடர்ச்சியாக, நிலையாக மற்றும் இயற்கையாக நடைபெறுகிறது.

காரணம்(R): இவை ‘இயற்கையான கன்னி இனப்பெருக்கம்’ எனப்படுகின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: சில விலங்குகளின் வாழ்க்கை சுழற்சியில் கன்னி இனப்பெருக்கம் தொடர்ச்சியாக, நிலையாக மற்றும் இயற்கையாக நடைபெறுகிறது. இது இயற்கையான கன்னி இனப்பெருக்கம் எனப்படும்.

86. முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம் நடைபெறும் சில விலங்குகளில், ____________ மற்றும் கன்னி இனப்பெருக்கம் இரண்டுமே நடைபெறுகின்றன.

A) பாலிலி இனப்பெருக்கம்

B) பாலில்லா இனப்பெருக்கம்

C) முழுமையான இனப்பெருக்கம்

D) பாலினப் பெருக்கம்

விளக்கம்: முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம் நடைபெறும் சில விலங்குகளில், பாலினப் பெருக்கம் மற்றும் கன்னி இனப்பெருக்கம் இரண்டுமே நடைபெறுகின்றன.

87. கூற்று(A): முழுமையற்ற கன்னி இனப்பெருக்கத்தில் தேனீக்களில், கருவுற்ற முட்டை இராணித் தேனீயாகவும் வேலைக்காரத் தேனீக்களாகவும் வளர்ச்சியுறுகின்றன.

காரணம்(R): இவை ‘முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம்’ எனப்படுகின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: முழுமையற்ற கன்னி இனப்பெருக்கத்தில் தேனீக்களில், கருவுற்ற முட்டை இராணித் தேனீயாகவும் வேலைக்காரத் தேனீக்களாகவும் வளர்ச்சியுறுகின்றன.

88. ____________ இனப்பெருக்கத்தில் இளவுயிரியே கன்னி இனப்பெருக்கத்தின் மூலம் புதிய தலைமுறை இளவுயிரிகளை உருவாக்குகிறது.

A) முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம்

B) முழுமையான கன்னி இனப்பெருக்கம்

C) முதிர்ந்த கன்னி இனப்பெருக்கம்

D) இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம்

விளக்கம்: ‘இளம் உயிரி கன்னி இனப்பெருக்கத்தில்’ (Paedogenetic parthenogenesis/ Paedogenesis) இளவுயிரியே (larvae) கன்னி இனப்பெருக்கத்தின் மூலம் புதிய தலைமுறை இளவுயிரிகளை உருவாக்குகிறது.

89. கல்லீரல் புழுவின் ஸ்போரோசிஸ்ட்டுகளில் நடைபெறும் இனப்பெருக்கம்____________

A) முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம்

B) முழுமையான கன்னி இனப்பெருக்கம்

C) முதிர்ந்த கன்னி இனப்பெருக்கம்

D) இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம்

விளக்கம்: கல்லீரல் புழுவின் ஸ்போரோசிஸ்ட்டுகள் மற்றும் ரீடியா லார்வாக்கள் இளம் உயிரி கன்னி இனப்பெருக்கத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன.

90. மொழுக்கு ஈயில் நடைபெறும் இனப்பெருக்கம்____________

A) முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம்

B) முழுமையான கன்னி இனப்பெருக்கம்

C) முதிர்ந்த கன்னி இனப்பெருக்கம்

D) இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம்

விளக்கம்: சிலவகைப் பூச்சிகளின் லார்வாக்களிலும் இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம் நடைபெறுகிறது. எ.கா. மொழுக்கு ஈ

91. கூற்று(A): கருவுறாத அண்டம் இயற்பிய அல்லது வேதிய தூண்டல்கள் மூலம் தூண்டப்பட்டு முழு உயிரியாக வளர்ச்சியடைகின்றன.

காரணம்(R): இவை ‘செயற்கை கன்னி இனப்பெருக்கம்’ எனப்படுகின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: செயற்கை கன்னி இனப்பெருக்கத்தில் கருவுறாத அண்டம் இயற்பிய அல்லது வேதிய தூண்டல்கள் மூலம் தூண்டப்பட்டு முழு உயிரியாக வளர்ச்சியடைகின்றன.

92. வளை தசைபுழுக்க களில் நடைபெறும் இனப்பெருக்கம்____________

A) முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம்

B) முழுமையான கன்னி இனப்பெருக்கம்

C) செயற்கை கன்னி இனப்பெருக்கம்

D) இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம்

விளக்கம்: செயற்கை கன்னி இனப்பெருக்கத்திற்கு எடுத்துக்காட்டு : வளை தசைபுழுக்கள் மற்றும் கடல் அர்ச்சின்.

93. எந்த இனப்பெருக்கத்தில் பெண் உயிரிகள் மட்டுமே உள்ளன?

A) முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம்

B) முழுமையான கன்னி இனப்பெருக்கம்

C) செயற்கை கன்னி இனப்பெருக்கம்

D) இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம்

விளக்கம்: சில விலங்குகளில், இரு பெற்றோர்களால் நிகழும் பாலினப் பெருக்கம் நடைபெறுவதில்லை. மாறாக, அவை முழுமையான கன்னி இனப்பெருக்கம் மூலம் மட்டுமே இனப்பெருக்கம் செய்கின்றன. இவ்விலங்குகளில் ஆண் உயிரிகளே காணப்படுவதில்லை. பெண் உயிரிகள் மட்டுமே உள்ளன.

94. இயற்கையான கன்னி இனப்பெருக்கத்தின் வகைகள் யாவை?

A) ஆம்ஃபிடோகி

B) அர்ரீனோடோகி

C) தெலிடோகி

D) இவை அனைத்தும்

விளக்கம்: இயற்கையான கன்னி இனப்பெருக்கம் பல வகைப்படும்: அ) அர்ரீனோடோகி, ஆ) தெலிடோகி, இ) ஆம்ஃபிடோகி

95. கூற்று(A): அண்ட செல் வளர்ச்சியுற்று ஆண் அல்லது பெண் உயிரியாக உருவாகின்றது.

காரணம்(R): இவை ‘ஆம்ஃபிடோகி கன்னி இனப்பெருக்கம்’ எனப்படுகின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஆம்ஃபிடோகி (Amphitoky): இவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் அண்ட செல் வளர்ச்சியுற்று ஆண் அல்லது பெண் உயிரியாக உருவாகின்றது.

96. எந்த இனப்பெருக்கத்தில் பெண் உயிரிகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன?

A) ஆம்ஃபிடோகி

B) அர்ரீனோடோகி

C) தெலிடோகி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: தெலிடோகி (Thelytoky): இவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் பெண் உயிரிகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன.

97. எந்த இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன?

A) ஆம்ஃபிடோகி

B) அர்ரீனோடோகி

C) தெலிடோகி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: அர்ரீனோடோகி (Arrhenotoky) : இவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன.

98. தேனீக்கள் எந்த இனப்பெருக்கத்திற்கு எடுத்துக்காட்டாகும்?

A) ஆம்ஃபிடோகி

B) அர்ரீனோடோகி

C) தெலிடோகி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: அர்ரீனோடோகி இனப்பெருக்கத்திற்கு எடுத்துக்காட்டு: தேனீக்கள்.

99. சொலனோபியா எந்த இனப்பெருக்கத்திற்கு எடுத்துக்காட்டாகும்?

A) ஆம்ஃபிடோகி

B) அர்ரீனோடோகி

C) தெலிடோகி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: தெலிடோகி இனப்பெருக்கத்திற்கு எடுத்துக்காட்டு: சொலனோபியா.

100. ஏஃபிஸ் எந்த இனப்பெருக்கத்திற்கு எடுத்துக்காட்டாகும்?

A) ஆம்ஃபிடோகி

B) அர்ரீனோடோகி

C) தெலிடோகி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: ஆம்ஃபிடோகி இனப்பெருக்கத்திற்கு எடுத்துக்காட்டு: ஏஃபிஸ்.

101. கூற்று(A): தேனீக்களின் சமூகத்தில் ஆண் தேனீக்களைத் தவிர மற்ற அனைத்தும் இருமயம் கொண்டவை

காரணம் (R): ஆண் தேனீக்கள் கன்னி இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: தேனீக்களின் சமூகத்தில் ஆண் தேனீக்களைத் தவிர மற்ற அனைத்தும் இருமயம் கொண்டவை. ஆண் தேனீக்கள் கன்னி இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

102. கூற்று(A): பாலிலா இனப்பெருக்கம் மூலம் உருவாகும் சேய்கள் பெற்றோரை ஒத்த மரபியல் பண்புகளைக் கொண்டிருக்கும்.

காரணம்(R): பாலிலா இனப்பெருக்கத்தில் மறைமுகப்பிரிவு மட்டுமே நடைபெறுகிறது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: பாலிலா இனப்பெருக்கம் மூலம் உருவாகும் சேய்கள் பெற்றோரை ஒத்த மரபியல் பண்புகளைக் கொண்டிருக்கும். பாலிலா இனப்பெருக்கத்தில் மறைமுகப்பிரிவு மட்டுமே நடைபெறுகிறது.

12th Science Lesson 13 Questions in Tamil

13] இனப்பெருக்க நலன்

1) கீழ்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) அமைப்பு மற்றும் செயல் ரீதியாக இயல்பாக செயல்படும் இனப்பெருக்க உறுப்புகளை பெற்றுள்ள மக்களைக் கொண்ட சமூகத்தை குறிப்பதே இனப்பெருக்க நலன் எனப்படும்.

ⅱ) ஆரோக்கியம் குறைந்த மக்கள் உடல்நலம் மிகுந்த குழந்தைகளைப் பெற்று குடும்பத்தை நன்முறையில் பாதுகாத்து சமூகத்திற்கும் சமுதாயத்திற்கும் தம் பங்களிப்பினை அதிகமாக தருகின்றனர்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: அமைப்பு மற்றும் செயல் ரீதியாக இயல்பாக செயல்படும் இனப்பெருக்க உறுப்புகளை பெற்றுள்ள மக்களைக் கொண்ட சமூகத்தை குறிப்பதே இனப்பெருக்க நலன் எனப்படும். ஆரோக்கியமான மக்கள் உடல்நலம் மிகுந்த குழந்தைகளைப் பெற்று குடும்பத்தை நன்முறையில் பாதுகாத்து சமூகத்திற்கும் சமுதாயத்திற்கும் தம் பங்களிப்பினை அதிகமாக தருகின்றனர். எனவே உடல் நலம் என்பது சமூகம் சார்ந்த பிரச்சனை ஆகும்.

2) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) இனப்பெருக்க மண்டலம் நரம்பு வேதி ஒருங்கிணைப்பு மண்டலங்களால் கட்டுப்படுத்தப்படாத ஒரு கூட்டமைப்பாகும்.

ⅱ) தொற்று நோய்கள் மற்றும் காயங்கள் ஏதுமின்றி இனப்பெருக்க உறுப்புகளை பாதுகாப்பது அவசியமாகும்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: இனப்பெருக்க மண்டலம் நரம்பு வேதி ஒருங்கிணைப்பு மண்டலங்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு கூட்டமைப்பாகும். எனவே தொற்று நோய்கள் மற்றும் காயங்கள் ஏதுமின்றி இனப்பெருக்க உறுப்புகளை பாதுகாப்பது அவசியமாகும்.

3) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது/ எவை?

ⅰ) உலக அளவில் தினமும் சுமார் 800 பெண்கள் கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு தொடர்பான தடுக்கக்கூடிய காரணங்களால் பாதிப்புற்று இறக்கின்றனர்.

ⅱ) இதில் 50 சதவீதம் பெண்கள் இந்தியர்கள் ஆவர்.

ⅲ) இந்தியாவில் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் ஆயிரம் பேரில் 44 ஆகும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: உலக அளவில் தினமும் சுமார் 800 பெண்கள் கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு தொடர்பான தடுக்கக்கூடிய காரணங்களால் பாதிப்புற்று இறக்கின்றனர். இதில் 20 சதவீதம் பெண்கள் இந்தியர்கள் ஆவர். அதேபோல் இந்தியாவில் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் ஆயிரம் பேரில் 44 ஆகும். இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருந்தாலும் தாய் இறப்பு வீதம் பிற வளரும் நாடுகளை ஒப்பிடும்போது இன்னும் அதிகமாகவே உள்ளது.

4) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) குடும்ப நலதிட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்திய சில நாடுகளில் நம் இந்திய நாடு முதன்மையானதாகும்.

ⅱ) 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்யப்படுகிறது.

ⅲ) இத்திட்டம் “ இனப்பெருக்க மற்றும் குழந்தை நல பாதுகாப்பு “ என்று அழைக்கப்படுகிறது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: இனப்பெருக்க நலனின் தேவை, பிரச்சனைகள் மற்றும் உத்திகள் :

குடும்ப நலதிட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்திய சில நாடுகளில் நம் இந்திய நாடு முதன்மையானதாகும். 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்யப்படுகிறது. இத்திட்டம் “ இனப்பெருக்க மற்றும் குழந்தை நல பாதுகாப்பு “ என்று அழைக்கப்படுகிறது.

5) கீழ்கண்டவற்றுள் இனப்பெருக்க மற்றும் குழந்தை நல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளைத் தேர்ந்தெடு.

ⅰ) உடல் நலம் மிக்க சமுதாயத்தை கட்டமைக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

ⅱ) விடலைப் பருவம் சார்பான மாற்றங்கள் தொடர்பான தகவல்களை தரும் பாலியல் கல்வியை பள்ளிகளில் கொண்டு வருதல்.

ⅲ) திருமண வயது அல்லாதவருக்கு குடும்ப கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் பிறப்பு கட்டுப்பாட்டு விதிகள் பற்றி அறிவுறுத்துதல்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்:

* உடல் நலம் மிக்க சமுதாயத்தை கட்டமைக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் மருத்துவ உதவி அளித்தல்.

* விடலைப் பருவம் மற்றும் விடலைப் பருவம் சார்பான மாற்றங்கள் தொடர்பான தகவல்களை தரும் பாலியல் கல்வியை பள்ளிகளில் கொண்டு வருதல்.

* தம்பதியர் மற்றும் திருமண வயதினருக்கு குடும்ப கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் பிறப்பு கட்டுப்பாட்டு விதிகள் பற்றி அறிவுறுத்துதல்.

6) இனப்பெருக்க மற்றும் குழந்தை நல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் அல்லாதவற்றைத் தேர்ந்தெடு.

ⅰ) பாலின விகிதம், பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசுக்கொலை போன்றவை சமுதாயத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை அளவிடுதல்

ⅱ) தாய் சேய் பாதுகாப்பு மற்றும் தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவம் போன்றவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) ⅰ), ⅱ) தவறு

விளக்கம்: * கர்ப்பமடைந்த பெண்கள் பாதுகாப்பு, மகப்பேற்றுக்குப் பிந்தைய தாய் சேய் பாதுகாப்பு மற்றும் தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவம் போன்றவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

* அரசு மற்றும் அரசு சாரா முகவாண்மைகளுக்கு ஆதரவளித்து இனப்பெருக்கம் சார்ந்த புதிய முறைகளை கண்டறிந்து நடைமுறையில் உள்ள குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை மேம்படுத்த ஊக்கம் அளித்தல்.

7) இனப்பெருக்க மற்றும் குழந்தை நல பாதுகாப்பு திட்டம் கீழ்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது?

ⅰ) குழந்தைகள் தடுப்பூசி திட்டம்

ⅱ) கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குதல்

ⅲ) ஜனனி சுரக்க்ஷா யோஜனா

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மாபெரும் குழந்தைகள் தடுப்பூசி திட்டம், கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குதல், ஜனனி சுரக்க்ஷா யோஜனா, ஜனனி சிசு சுரக்க்ஷா காரியகரம் ஒருங்கிணைந்த இனப்பெருக்க, தாய், சேய், வளர் குழந்தை மற்றும் பதின்பருவத்தினருக்கான ஒருங்கிணைந்த ஆரோக்கிய அணுகுமுறை, பிரதமரின் சுரக்க்ஷிட் மட்ரிட்வா அபியான் போன்றவை இந்திய அரசால் தேசிய அளவில் நடத்தப்பட்டு வரும் திட்டங்களாகும்.

8) பனிக்குட துளைப்பு தொடர்பான கீழ்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) அம்னியொசெண்டேசிஸ் எனப்படும் பனிக்குட துளைப்பு குழந்தை பிறப்புக்கு முன் செய்யப்படும் ஒரு தொழில்நுட்பமாகும்.

ⅱ) இத்தொழில்நுட்பம் மூலம் வளர் கருவின் குரோமோசோம் குறைபாடு களை கண்டறியலாம்.

ⅲ) இத்தொழில்நுட்ப முறையை தவறாக பயன்படுத்தி வளர் கருவின் மூளை வளர்ச்சி கண்டறியப்படுகிறது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ

விளக்கம்: பனிக்குட துளைப்பு: (அம்னியொசெண்டேசிஸ்) மற்றும் அதன் சட்டபூர்வமான தடை :

சிறு குடும்ப விதிகள் மற்றும் குடும்பத்தில் ஆண் குழந்தையை பெற்று கொள்ளும் விருப்பம் போன்ற காரணங்களால் மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை அபாயகரமான விகிதத்தில் குறைந்து வருகிறது. அம்னியொசெண்டேசிஸ் எனப்படும் பனிக்குட துளைப்பு குழந்தை பிறப்புக்கு முன் செய்யப்படும் ஒரு தொழில்நுட்பமாகும். இத்தொழில்நுட்பம் மூலம் வளர் கருவின் குரோமோசோம் குறைபாடு களை கண்டறியலாம். ஆனால் இத்தொழில்நுட்ப முறையை தவறாக பயன்படுத்தி வளர் கருவின் பால் தன்மை கண்டறியப்படுகிறது.

9) கூற்று: அம்னியொசெண்டேசிஸ் தொழில் நுட்பத்திற்கு சட்டபூர்வமான தடை அவசியமாகிறது.

காரணம்: குழந்தையின் பால் தெரிந்து விட்ட பிறகு பெண் கருக்கொலை செய்ய வாய்ப்பு இல்லை.

a) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

b) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விளக்கம்: குழந்தையின் பால் தெரிந்து விட்ட பிறகு பெண் கருக்கொலை செய்ய வாய்ப்புள்ளது.எனவே தொழில் நுட்பத்திற்கு சட்டபூர்வமான தடை அவசியமாகிறது.

10) பாலின விகிதம், பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசுக்கொலை போன்றவை சமுதாயத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களைத் தேர்ந்தெடு.

ⅰ) மக்கள் தொகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான விகிதம் பாலின விகிதம் எனப்படும்.

ⅱ) நம் நாட்டில் குழந்தைகளின் பாலின விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரம் ஆண்களுக்கு 927 பெண்கள் என்பதிலிருந்து 939 பெண்கள் என அதிகரித்துள்ளது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) ⅰ), ⅱ) தவறு

விளக்கம்: பாலின விகிதம், பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசுக்கொலை போன்றவை சமுதாயத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம்:

மக்கள் தொகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான விகிதம் பாலின விகிதம் எனப்படும். நம் இந்திய நாட்டில் குழந்தைகளின் பாலின விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரம் ஆண்களுக்கு 927 பெண்கள் என்பதிலிருந்து 919 பெண்கள் என குறைந்துள்ளது. இந்த விகிதத்தை சரி செய்ய மன நிலையிலும் மனப்பான்மையும் மாற்றத்தை ஏற்படுத்த குறிப்பாக இளைஞர்களிடம் இம் மாற்றத்தை கொண்டுவர நடவடிக்கைஅவசியமாகும்.

11) கீழ்க்கண்டவற்றில் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) நம் சமுதாயத்தில் பாலின பாகுபாடு நிலவுவதை பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசுக்கொலை ஆகியவை வெளிப்படையாக தெரிவிக்கின்றன.

ⅱ) தாயின் கருப்பையிலேயே பெண் சிசுவை கருக்கலைப்பு செய்வது பெண் கருக்கொலை எனப்படும்.

ⅲ) இவ்வாறு தேர்ந்தெடுத்து பெண் கருவை கருக்கலைப்பு செய்வதன் விளைவாக பாலின விகித சம நிலையில் பாதிப்பு ஏற்படுவதில்லை.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: நம் சமுதாயத்தில் பாலின பாகுபாடு நிலவுவதை பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசுக்கொலை ஆகியவை வெளிப்படையாக தெரிவிக்கின்றன.

தாயின் கருப்பையிலேயே பெண் சிசுவை கருக்கலைப்பு செய்வது பெண் கருக்கொலை எனப்படும். பிறந்தபின் பெண் பச்சிளம் குழந்தைகளை கொல்வது பெண் சிசுக்கொலை எனப்படும். இவ்வாறு தேர்ந்தெடுத்து பெண் கருவை கருக்கலைப்பு செய்வதன் விளைவாகபாலின விகித சம நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

12)கூற்று: UNDP’s G2 எனப்படும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட பாலின சமமின்மை குறியீடு (2018) பட்டியலிலுள்ள 177 நாடுகளில் நம் நாடு 135 ஆவது இடத்தில் உள்ளது

காரணம்: ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு கிடைக்கும் பொருளாதார வாய்ப்பு குறைவாக உள்ளது.

a) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

b) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விளக்கம்: ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு கிடைக்கும் பொருளாதார வாய்ப்பு குறைவாக இருப்பதால் UNDP’s G2 எனப்படும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட பாலின சமமின்மை குறியீடு (2018) பட்டியலிலுள்ள 177 நாடுகளில் நம் நாடு 135 ஆவது இடத்தில் உள்ளது.

13) பாலின விகித வேறுபாடு மற்றும் பெண் சிசு இறப்பு விகிதம் ஆகியவற்றைக் களைய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தேர்ந்தெடு.

ⅰ) பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசுக் கொலையை தடுக்கும் வகையில் குழந்தை பிறப்புக்கு முன் பாலினத்தை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டுள்ளது ⅱ) சிறந்த உணவு ஊட்டம்,கல்வி, பாதுகாப்பு மற்றும் அதிகாரம் போன்றவற்றை பெண்களுக்கு அளிப்பதன் மூலம் பாலின விகித வேறுபாடு மற்றும் பெண் சிசு இறப்பு விகிதம் ஆகியவற்றைக் களைய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) ⅰ), ⅱ) தவறு

விளக்கம்: பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசுக் கொலையை தடுக்கும் வகையில் குழந்தை பிறப்புக்கு முன் பாலினத்தை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்ப தடைச்சட்டம் 1994 போன்ற பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துள்ளது. இதன்படி பிறப்புக்கு முன் கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து தேர்ந்தெடுத்துகருக்கலைப்பு செய்யும் தொழில்நுட்பம் தடை செய்யப்பட்டுள்ளது.சிறந்த உணவு ஊட்டம்,கல்வி, பாதுகாப்பு மற்றும் அதிகாரம் போன்றவற்றை பெண்களுக்கு அளிப்பதன் மூலம் பாலின விகித வேறுபாடு மற்றும் பெண் சிசு இறப்பு விகிதம் ஆகியவற்றைக் களைய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

14) யாருடைய பரிந்துரைகளின் படி ஆண் பெண் இருபாலருக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு குற்றவியல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன?

a) வர்மா குழு

b) டங்கா குழு

c) ராஜன் குழு

d) சந்தானம் குழு

விளக்கம்: POSCO சட்டம்( பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை தடுத்தல்), பணிபுரியும் இடங்களில் பாலியல் தாக்குதல் விதி( தவிர்த்தல், தடுத்தல் மற்றும் நிவர்த்தி) மற்றும் நீதியரசர் வர்மா குழுவின் பரிந்துரைகளின்படி குற்றவியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் ஆகியவை ஆண் பெண் இருபாலருக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவதை நோக்கமாக கொண்டதாகும்.

15) மக்கள் தொகை பெருக்கம் மற்றும் பிறப்பு கட்டுப்பாடு தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு.

ⅰ) மருத்துவ வசதிகளின் மேம்பாடு மற்றும் வளம் நிறைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றால் மனித வாழ்நாள் உயர்ந்துள்ளது.

ⅱ) ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையின் இந்திய மக்கள் தொகை 2022 ஆம் ஆண்டில் சீனாவை விஞ்சி விடும் என கூறப்பட்டுள்ளது

ⅲ) மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த பிறப்பு கட்டுப்பாடு மட்டுமே தீர்வாக அமையாது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மக்கள் தொகை பெருக்கம் மற்றும் பிறப்பு கட்டுப்பாடு:

மருத்துவ வசதிகளின் மேம்பாடு மற்றும் வளம் நிறைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றால் மனித வாழ்நாள் உயர்ந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையின் இந்திய மக்கள் தொகை 2022 ஆம் ஆண்டில் சீனாவை விஞ்சி விடும் என கூறப்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த பிறப்பு கட்டுப்பாடு மட்டுமே தீர்வாகும்.

16) கீழ்க்கண்டவற்றுள் மக்கள்தொகையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தேர்ந்தெடு.

ⅰ) பல்வேறு கருத்தடை முறைகளை பயன்படுத்தி குடும்பத்தை சிறியதாக அமைத்துக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.

ⅱ) துண்டு பிரசுரங்கள் போன்றவை மூலம் மக்கள் தொகை பெருக்கம் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ⅲ) திருமண வயது பெண்களுக்கு 18 மற்றும் ஆண்களுக்கு 21 என உயர்த்தியது மற்றும் சிறு குடும்பம் கொண்ட தம்பதிகளுக்கு ஊக்கப் பரிசுகள் அளிப்பது ஆகியவை மக்கள்தொகையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட பிற நடவடிக்கைகள் ஆகும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: பல்வேறு கருத்தடை முறைகளை பயன்படுத்தி குடும்பத்தை சிறியதாக அமைத்துக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். அரசு ஊடகங்களில் தரும் விளம்பரங்களும், சுவரொட்டிகள், “ நாம் இருவர் நமக்கு இருவர்”, “ நாம் இருவர் நமக்கு ஒருவர்” போன்ற முழக்கங்களை கொண்ட துண்டு பிரசுரங்கள் போன்றவை மூலம் மக்கள் தொகை பெருக்கம் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நமது நாட்டில் சட்டப்படியான திருமண வயது பெண்களுக்கு 18 மற்றும் ஆண்களுக்கு 21 என உயர்த்தியது மற்றும் சிறு குடும்பம் கொண்ட தம்பதிகளுக்கு ஊக்கப் பரிசுகள் அளிப்பது ஆகியவை மக்கள்தொகையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட பிற நடவடிக்கைகள் ஆகும்.

17) சிறந்த கருத்தடை அமைப்பின் பண்பு

களைத் தேர்ந்தெடு.

ⅰ) பயனர் நட்பு

ⅱ) எளிதில் கிடைத்தல்

ⅲ) குறைந்த பட்ச பக்கவிளைவு

ⅳ) பாலுணர்வு உந்துதலை தடை செய்யாமை

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்:

கருத்தடை முறைகள்:

கருத்தடை முறைகளை தன்னிச்சை உடன் பயன்படுத்தி கருவுறுதலையோ அல்லது கருப்பையில் கரு பதித்தலையோ தடுத்தல் பொதுவாக குடும்பகட்டுபாடு எனப்படும். பயனர் நட்பு, எளிதில் கிடைத்தல், குறைந்த பட்ச பக்கவிளைவு மற்றும் பாலுணர்வு உந்துதலை தடை செய்யாமை ஆகியவை ஒரு சிறந்த கருத்தடை அமைப்பின் பண்புகளாகும்.

18) கீழ்க்கண்டவற்றுள் தற்காலிக கருத்தடை முறைகளைத் தேர்ந்தெடு.

ⅰ) ஹார்மோன் தடுப்பு முறை

ⅱ) வேதிப்பொருள் பயன்பாட்டு முறை

ⅲ) கருவிகள் பயன்பாட்டு முறை

ⅳ) விலகல் முறை

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: தற்காலிக முறை, நிரந்தர முறை என கருத்தடை முறைகள் இருவகைப்படும். இயற்கை கருத்தடை முறை, வேதிப்பொருள் பயன்பாட்டு முறை, கருவிகள் பயன்பாட்டு முறை மற்றும் ஹார்மோன் தடுப்பு முறை போன்றன தற்காலிக முறையில் அடங்கும்.

19) கீழ்க்கண்டவற்றுள் இயற்கை கருத்தடை முறைகளைத் தேர்ந்தெடு.

ⅰ) பாலூட்டும் கால மாதவிடாய் இன்மை

ⅱ) சீர் இயக்கமுறை

ⅲ) கருவிகள் பயன்பாட்டு முறை

ⅳ) விலகல் முறை

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d)ⅰ), ⅱ), ⅳ)

விளக்கம்: 1.இயற்கை கருத்தடை முறை: இம்முறையில் விந்து செல்களும் அண்ட செல்லும் சந்திப்பது தடுக்கப்படுகிறது. சீர் இயக்கமுறை ( பாதுகாப்பு காலம் ), விலகல் முறை, தொடர் தவிர்ப்பு மற்றும் பாலூட்டும் கால மாதவிடாய் இன்மை ஆகியன இயற்கை கருத்தடை முறைகள் ஆகும்.

20)சீர் இயக்கமுறை/ கால இடைவெளி முறை தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) மாதவிடாய் சுழற்சியின் பதினான்காம் நாள் வாக்கில் அண்ட செல் வெளியேற்றம் நடைபெறும்.

ⅱ) வெளியேறிய அண்ட செல் ஏறத்தாழ இரண்டு நாட்கள் உயிருடன் இருக்கும்.

ⅲ) விந்தணுக்கள், பெண்ணின் இனப்பாதையில் சுமார் 24 மணி நேரம் உயிருடன் இருக்கும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: அ) சீர் இயக்கமுறை/ கால இடைவெளி முறை( periodic abstinence rhythm method):மாதவிடாய் சுழற்சியின் பதினான்காம் நாள் வாக்கில் அண்ட செல் வெளியேற்றம் நடைபெறும்.வெளியேறிய அண்ட செல் ஏறத்தாழ இரண்டு நாட்கள் உயிருடன் இருக்கும். விந்தணுக்கள், பெண்ணின் இனப்பாதையில் சுமார் 72 மணி நேரம் உயிருடன் இருக்கும். இந்த காலத்தில் கலவியை தவிர்ப்பதன் மூலம் கருத்தரித்தலை தவிர்க்கலாம்.

21) பாலுணர்வு தொடர் தவிர்ப்பு முறை தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) இது மிகவும் எளிய நம்பகமான முறையாகும்.

ⅱ) கலவியை குறிப்பிட்ட காலத்திற்கு தவிர்ப்பதன் மூலம் கருத்தரித்தல் தடுக்கப்படுகிறது.

ⅲ) இம்முறையில் விந்தணுக்கள் கலவிக் கால்வாயை அடையாதபடி ஆண்கள் விந்து திரவ வெளியேற்றத்திற்கு முன் விலகிக் கொள்வர்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: ஆ) பாலுணர்வு தொடர் தவிர்ப்பு முறை (continuous abstinence ): இது மிகவும் எளிய நம்பகமான முறையாகும். கலவியை குறிப்பிட்ட காலத்திற்கு தவிர்ப்பதன் மூலம் கருத்தரித்தல் தடுக்கப்படுகிறது.

இ) விலகல் முறை கருத்தடை:

பழமையான இம்முறையில் விந்தணுக்கள் கலவிக் கால்வாயை அடையாதபடி ஆண்கள் விந்து திரவ வெளியேற்றத்திற்கு முன் விலகிக் கொள்வர்.

22) பாலூட்டும் கால மாதவிடாய் இன்மை தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) பொதுவாக பெண்களில் பிரசவத்திற்கு பின் 10 முதல் 12 வாரங்களில் மாதவிடாய் சுழற்சி மீண்டும் தொடங்குகிறது.

ⅱ) தாய்ப்பால் ஊட்டுவதால் இயல்பான அண்ட செல்லாக்க சுழற்சி மீண்டும் தொடங்க ஆறு மாதங்கள் வரை தாமதம் ஆகலாம்.

ⅲ) இது ஒரு இயற்கையான ஆனால் நம்பகத்தன்மையற்ற கருத்தடை முறையாகும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: பாலூட்டும் கால மாதவிடாய் இன்மை: பொதுவாக பெண்களில் பிரசவத்திற்கு பின் 6 முதல் 8 வாரங்களில் மாதவிடாய் சுழற்சி மீண்டும் தொடங்குகிறது. எனினும் தாய்ப்பால் ஊட்டுவதால் இயல்பான அண்ட செல்லாக்க சுழற்சி மீண்டும் தொடங்க ஆறு மாதங்கள் வரை தாமதம் ஆகலாம். இந்த தாமத நிலைக்கு “ பாலூட்டும் கால மாதவிடாயின்மை” என்று பெயர். இது ஒரு இயற்கையான ஆனால் நம்பகத்தன்மையற்ற கருத்தடை முறையாகும்.

23) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) குழந்தைகள் பால் உறிஞ்சுவதால் பிட்யூட்டரி சுரப்பி தூண்டப்பட்டு புரோலாக்டின் ஹார்மோன் உற்பத்தி அதிகரித்து பால் உற்பத்தி உயர்கின்றது.ⅱ) தாயின் ரத்தத்தில் ப்ரோலாக்டின் அளவு அதிகரிப்பதால் ஹார்மோன் உற்பத்தியும் தடுக்கப்படுகிறது.

ⅲ) இதன் விளைவாக மாதவிடாய் சுழற்சியும் தடுக்கப்படுகின்றது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: குழந்தைகள் பால் உறிஞ்சுவதால் பிட்யூட்டரி சுரப்பி தூண்டப்பட்டு புரோலாக்டின் ஹார்மோன் உற்பத்தி அதிகரித்து பால் உற்பத்தி உயர்கின்றது. தாயின் ரத்தத்தில் ப்ரோலாக்டின் அளவு அதிகரிப்பதால் ஹைபோதலாமஸ் சுரக்கின்ற ஹார்மோனும் கோனடோட்ரோபின் விடுவிக்கும் ஹார்மோன் உற்பத்தியும் பிட்யூட்டரி சுரக்கின்ற கோனடோட்ரோபின் ஹார்மோன் உற்பத்தியும் தடுக்கப்படுகிறது. இதன் விளைவாக மாதவிடாய் சுழற்சியும் தடுக்கப்படுகின்றது.

24) பின்வருவனவற்றுள் வேதிப் பொருள் தடுப்பு முறையில் பயன்படுத்தபடுவனவற்றை தேர்ந்தெடு.

ⅰ) நுரைக்கும் மாத்திரைகள்

ⅱ) உட் கரையும் மாத்திரைகள்

ⅲ) ஜெல்லிகள் மற்றும் களிம்புகள்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: தடுப்பு முறை: இம்முறையில் அண்ட செல் மற்றும் விந்துசெல் சந்திப்பு தடுக்கப்படுவதால் கருவுறுதல் நடைபெறுவது இல்லை.

அ ) வேதிப் பொருள் தடுப்பு:

நுரைக்கும் மாத்திரைகள், உட் கரையும் மாத்திரைகள், ஜெல்லிகள் மற்றும் களிம்புகள் ஆகியவை கலவிக் கால்வாயில் விந்தணுக்களை செயல் இழக்கச் செய்யும் சில வேதிப்பொருட்கள் ஆகும்.

25) இயக்க முறை தடுப்பு தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) கலவிக்கு முன் ஆண்களில் ஆண்குறி மற்றும் பெண்களின் கலவிக் கால்வாய் மற்றும் கருப்பை வாய் ஆகியவற்றை மூட பயன்படுத்தப்படும் மெல்லிய படல அமைப்பு கருத்தடை உறையாகும்.

ⅱ) இவற்றின் பயன்பாட்டால் கலவியின் போது வெளியேறும் விந்து திரவம் பெண் இனப்பெருக்க பாதையில் நுழைவது தடுக்கப்படுகின்றது.

ⅲ) கருத்தடை உறைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: ஆ) இயக்க முறை தடுப்பு:

கலவிக்கு முன் ஆண்களில் ஆண்குறி மற்றும் பெண்களின் கலவிக் கால்வாய் மற்றும் கருப்பை வாய் ஆகியவற்றை மூட பயன்படுத்தப்படும் மெல்லிய படல அமைப்பு கருத்தடை உறையாகும்.

இவற்றின் பயன்பாட்டால் கலவியின் போது வெளியேறும் விந்து திரவம் பெண் இனப்பெருக்க பாதையில் நுழைவது தடுக்கப்படுகின்றது. கருத்தடை உறைகள் ஒரு முறை பயன்பாட்டிற்கு மட்டுமே.

26)கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) கருத்தடை உறைகளின் பயன்பாடு எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றது.

ⅱ) பாலி யூரிதேன், ரப்பர், மற்றும் ஆட்டுத்தோல் பொருட்களைக் கொண்டு கருத்தடை உறைகள் தயாரிக்கப்படுகின்றன.

ⅲ) திரைச் சவ்வுகள்,கருப்பை வாய் மூடிகள், மறைப்பு திரைகள் மென்மையான ரப்பர் பொருளால் ஆன மேற்கூறிய பொருட்கள் பெண்களின் கலவிக்கால்வாயில் பொருத்தப் படுவதால் கலவியின்போது விந்து செல்கள் உள்நுழைவது தடுக்கப்படுகின்றது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: கருத்தடை உறைகளின் பயன்பாடு எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றது. பாலி யூரிதேன், ரப்பர், மற்றும் ஆட்டுத்தோல் பொருட்களைக் கொண்டு கருத்தடை உறைகள் தயாரிக்கப்படுகின்றன.

திரைச் சவ்வுகள்,கருப்பை வாய் மூடிகள், மறைப்பு திரைகள் மென்மையான ரப்பர் பொருளால் ஆன மேற்கூறிய பொருட்கள் பெண்களின் கலவிக்கால்வாயில் பொருத்தப் படுவதால் கலவியின்போது விந்து செல்கள் உள்நுழைவது தடுக்கப்படுகின்றது.

27) அண்டகத்திலிருந்து அண்ட செல்கள் விடுபடுதலை தடுப்பதுடன் கருப்பைவாய் திரவத்தை கெட்டியாக்கி விந்து செல்கள் அண்ட செல்லுடன் இணைவதைத் தடுக்கும் முறை எது?

a) இயக்க முறை தடுப்பு

b) ஹார்மோன் வழி தடுப்பு

c) வாய்வழி கருத்தடை மாத்திரைகள்

d)கருப்பை வாய் மூடிகள்

விளக்கம்: ஹார்மோன் வழி தடுப்பு :

இப்பொருட்கள் அண்டகத்திலிருந்து அண்ட செல்கள் விடுபடுதலை தடுப்பதுடன் கருப்பைவாய் திரவத்தை கெட்டியாக்கி விந்து செல்கள் அண்ட செல்லுடன் இணைவதைத் தடுக்கின்றது.

28) வாய்வழி கருத்தடை மாத்திரைகள் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) இவ்வகை மாத்திரைகளை பயன்படுத்துவதால் FSH மற்றும் LH ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு அண்ட செல் விடுபடுதல் தவிர்க்கப்படுகின்றது.

ⅱ) பொதுவாக கூட்டு மாத்திரைகள் பலராலும் கருத்தடை மாத்திரைகள் ஆக பயன்படுத்தப்படுகின்றன.

ⅲ) இதில் செயற்கை புரோஜெஸ்டிரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் உள்ளன.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: வாய்வழி கருத்தடை மாத்திரைகள்:

இவ்வகை மாத்திரைகளை பயன்படுத்துவதால் FSH மற்றும் LH ஹார்மோன்களின் உற்பத்தி தடுக்கப்பட்டு அண்ட செல் விடுபடுதல் தவிர்க்கப்படுகின்றது. பொதுவாக கூட்டு மாத்திரைகள் பலராலும் கருத்தடை மாத்திரைகள் ஆக பயன்படுத்தப்படுகின்றன. இதில் செயற்கை புரோஜெஸ்டிரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் உள்ளன.

29) கீழ்க்கண்டவற்றுள் கருத்தடை மாத்திரை எது?

a) சாகல்

b) ஈகோலை

c) சாஹெலி

d) லக்னவ்

விளக்கம்: லக்னோவில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் தயாரிப்பான சாஹெலி எனும் கருத்தடை மாத்திரையில் சென்ட்குரோமேன் எனும் ஸ்டீராய்டு அல்லாத பொருள் உள்ளது.

30) உள் கருப்பை சாதனங்கள் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) மருத்துவ நிபுணர்களால் பெண்களின் கலவை கால்வாய் வழியாக கருப்பையினுள் பொருத்தப்படும் கருவியாகும்.

ⅱ) இவை தாமிரம் வெளிவிடும் வகை, ஹார்மோன் வெளிவிடும் வகை மற்றும் மருந்தில்லா வகை என பல வகைகளில் கிடைக்கின்றன.

ⅲ) இக்கருவிகள் கருப்பையினுள் விந்து செல்கள் விழுங்கப் படுதலை அதிகரிக்கின்றன.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: உள் கருப்பை சாதனங்கள்:

இவை மருத்துவ நிபுணர்களால் பெண்களின் கலவை கால்வாய் வழியாக கருப்பையினுள் பொருத்தப்படும் கருவியாகும். இவை தாமிரம் வெளிவிடும் வகை, ஹார்மோன் வெளிவிடும் வகை மற்றும் மருந்தில்லா வகை என பல வகைகளில் கிடைக்கின்றன. இக்கருவிகள் கருப்பையினுள் விந்து செல்கள் விழுங்கப் படுதலை அதிகரிக்கின்றன.

31) கர்ப்பத்தைத் தள்ளிப்போட விரும்பும் பெண்களுக்கு சரியான தீர்வாக அமைவது எது?

a) விலகல் முறை

b) உள் கருப்பை சாதனங்கள்

c) வாய்வழி கருத்தடை மாத்திரைகள்

d) ஹார்மோன்கள் தடுப்பு முறை

விளக்கம்: கர்ப்பத்தைத் தள்ளிப்போட விரும்பும் பெண்களுக்கு உள் கருப்பை சாதனங்கள் சரியான தேர்வாகும். இந்தியாவின் பிரபலமான கருத்தடை முறையான இதன் வெற்றி வீதம் 95% முதல் 99 சதவீதம் ஆகும்.

32) தாமிரம் வெளிவிடும் உள் கருப்பை சாதனங்கள் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) தாமிரத்தின் அளவைப் பொறுத்து இவை ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன.

ⅱ) CuT – 380A, NovT CuT380Ag., multiload 375 போன்ற கருவிகள் கருப்பைக்குள் வெளியிடும் தனித்த தாமிரம் மற்றும் தாமிர உப்புகள் விந்து இயக்கத்தை தடை செய்கின்றன.

ⅲ) இதில் கருப்பையினுள் 2 முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கலாம்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: தாமிரம் வெளிவிடும் உள் கருப்பை சாதனங்கள் :

தாமிரத்தின் அளவைப் பொறுத்து இவை ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. CuT – 380A, NovT CuT380Ag., multiload 375 போன்ற கருவிகள் கருப்பைக்குள் வெளியிடும் தனித்த தாமிரம் மற்றும் தாமிர உப்புகள் விந்து இயக்கத்தை தடை செய்கின்றன. இதில் கருப்பையினுள் 5 முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கலாம்.

33) ஹார்மோன் வெளிவிடும் உள் கருப்பை சாதனங்கள் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) புரோஜஸ்டாசர்ட் மற்றும் LNG 20 என்பன சில ஹார்மோன் வெளியிடும் உள் கருப்பை சாதனங்களாகும்.

ⅱ) இதிலிருந்து வெளிப்படும் ஹார்மோன் கருப்பை வாய் சுரக்கும் கோழைப்பொருளின் வழவழப்புத் தன்மையை உயர்த்துகிறது.

ⅲ) இதனால் விந்து செல்கள் கருப்பை வாயின் உள் நுழைவதை தடை செய்கின்றன.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: ஹார்மோன் வெளிவிடும் உள் கருப்பை சாதனங்கள்:

புரோஜஸ்டாசர்ட் மற்றும் LNG 20 என்பன சில ஹார்மோன் வெளியிடும் உள் கருப்பை சாதனங்களாகும். இதிலிருந்து வெளிப்படும் ஹார்மோன் கருப்பை வாய் சுரக்கும் கோழைப்பொருளின் வழவழப்புத் தன்மையை உயர்த்தி விந்து செல்கள் கருப்பை வாயின் உள் நுழைவதை தடை செய்கின்றன.

34) மருந்தில்லா உள் கருப்பை சாதனங்கள் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) இவை துருப்பிடிக்காத இரும்பால் செய்யப்பட்டு உள்ளன.

ⅱ) லிப்பஸ் வளையம் என்பது இரட்டை எஸ் வடிவ நெகிழிக் கருவியாகும்

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) ⅰ), ⅱ) தவறு

விளக்கம்: மருந்தில்லா உள் கருப்பை சாதனங்கள்:

இவை நெகிழி அல்லது துருப்பிடிக்காத இரும்பால் செய்யப்பட்டு உள்ளன. லிப்பஸ் வளையம் என்பது இரட்டை எஸ் வடிவ நெகிழிக் கருவியாகும்.

35) மேலும் குழந்தைகள் வேண்டாம் என கருதும் மக்கள் பயன்படுத்தும் முறை எது?

a) மருந்தில்லா உள் கருப்பை சாதனங்கள்

b) நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகள்

c) விலகல் முறை

d) ஹார்மோன் தடுப்பு முறைகள்

விளக்கம்: நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகள் எனப்படுபவை மேலும் குழந்தைகள் வேண்டாம் என கருதும் மக்கள் பயன்படுத்தும் முறைகளாகும்.

36) அறுவை சிகிச்சை மூலம் இனப்பெருக்க ஆற்றலை நீக்குதல் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) இம்முறையானது மேலும் கருத்தரிப்பதை விரும்பாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அறிவுறுத்தப்படும் நிரந்தர கருத்தடை முறையாகும்.

ⅱ) இதன்மூலம் இனச் செல்களின் இயக்கம் மற்றும் கருத்தரித்தல் ஆகியவை தடுக்கப்படுகின்றது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) ⅰ), ⅱ) தவறு

விளக்கம்: அறுவை சிகிச்சை மூலம் இனப்பெருக்க ஆற்றலை நீக்குதல்: இம்முறையானது மேலும் கருத்தரிப்பதை விரும்பாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அறிவுறுத்தப்படும் நிரந்தர கருத்தடை முறையாகும். இதன்மூலம் இனச் செல்களின் இயக்கம் மற்றும் கருத்தரித்தல் ஆகியவை தடுக்கப்படுகின்றது.

37) கருக்குழல் தடை தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) இது அறுவை சிகிச்சை மூலம் கருத்தரித்தலை தடுக்கும் முறையாகும். ⅱ) இம்முறையில் பெண்களின் வயிற்றுப் பகுதியில் ஏற்படுத்தப்படும் சிறு வெட்டு மூலமாகவோ அல்லது கலவி கால்வாய் வழியாக இரு அண்ட நாளங்களும் வெட்டப்படுகின்றன.

ⅲ) பின்னர் இருவெட்டு முனைகளும் இணைத்து முடிச்சிட்டு கட்டப்படுகின்றன.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: கருக்குழல் தடை:

இது அறுவை சிகிச்சை மூலம் கருத்தரித்தலை தடுக்கும் முறையாகும். இம்முறையில் பெண்களின் வயிற்றுப் பகுதியில் ஏற்படுத்தப்படும் சிறு வெட்டு மூலமாகவோ அல்லது கலவி கால்வாய் வழியாக இரு அண்ட நாளங்களும் வெட்டப்படுகின்றன. பின்னர் இருவெட்டு முனைகளும் இணைத்து முடிச்சிட்டு கட்டப்படுகின்றன.

இதனால் கருவுறுதல் நிகழ்வதும் கருவுற்ற முட்டை கருப்பையை அடைவதும் தடுக்கப்படுகின்றது.

38) விந்து குழல் தடை தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) இம்முறை அறுவை சிகிச்சை மூலம் ஆண்களின் இனப்பெருக்கத் திறனை தடுக்கும் முறையாகும்.

ⅱ) இம்முறையில் ஆண்களின் விதைப்பையில் ஏற்படுத்தப்படும் ஒரு சிறு துளை வழியே விந்துக்கள் அகற்றப்படுகின்றன.

ⅲ) வெட்டப்பட்ட பகுதிகளை மீண்டும் இணைத்து முடிச்சிடப்படுகின்றன.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: விந்து குழல் தடை :

இம்முறை அறுவை சிகிச்சை மூலம் ஆண்களின் இனப்பெருக்கத் திறனை தடுக்கும் முறையாகும்.இம்முறையில் ஆண்களின் விதைப்பையில் ஏற்படுத்தப்படும் ஒரு சிறு துளை வழியே இரு விந்து நாளங்களும் வெட்டப்படுகின்றன. வெட்டப்பட்ட பகுதிகளை மீண்டும் இணைத்து முடிச்சிடப்படுகின்றன. இதனால் சிறுநீர் வடிகுழாயினுள் விந்தணுக்கள் நுழைய முடிவதில்லை. எனவே வெளிப்படும் விந்து திரவத்தில் விந்து செல்கள் காணப்படுவதில்லை.

39) மருத்துவ ரீதியான கருக்கலைப்பு தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) அறுவை சிகிச்சையோ கருவிகள் உள் நுழைத்தலோ இன்றி விருப்பத்துடனோ அல்லது வேண்டும் என்றோ, கரு வளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவரும் மருத்துவமுறை மருத்துவ ரீதியான கருக்கலைப்பு ஆகும்.

ⅱ) கரு வளர்ச்சியின் ஆரம்ப கட்டமான 12 வார காலத்திற்குள் கருக்கலைப்பு செய்வது மிகவும் பாதுகாப்பானதாகும்.

ⅲ) இதனால் பெண்ணின் இனப்பெருக்கத் திறன் பாதிக்கப்படுகிறது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மருத்துவ ரீதியான கருக்கலைப்பு:

அறுவை சிகிச்சையோ கருவிகள் உள் நுழைத்தலோ இன்றி விருப்பத்துடனோ அல்லது வேண்டும் என்றோ, கரு வளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவரும் மருத்துவமுறை மருத்துவ ரீதியான கருக்கலைப்பு ஆகும். கரு வளர்ச்சியின் ஆரம்ப கட்டமான 12 வார காலத்திற்குள் கருக்கலைப்பு செய்வது மிகவும் பாதுகாப்பானதாகும். இதனால் பெண்ணின் இனப்பெருக்கத் திறன் பாதிக்கப்படுவது இல்லை. இரண்டாம் மும்மாத கரு வளர்ச்சியின் போது வளர் கரு தாயின் உடல் திசுவில் நன்கு இணைந்துள்ளதால் கருக்கலைப்பு செய்வது அதிக ஆபத்தை விளைவிக்கும். எனவே மருத்துவரீதியான அவசியம் மற்றும் சில சமூக பயன்களையும் கருதி மத்திய அரசு 1971ஆம் ஆண்டு கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கியது. இச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் பாலின பாகுபாடு மற்றும் சட்டவிரோதமான பெண் சிசுக்கொலை போன்றவற்றை தடை செய்து சில கட்டுப்பாடுகளுடன் இச்சட்டம் இயற்றப்பட்டது.

40) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) தகுதியற்ற போலி மருத்துவர்களால் செய்யப்படும் சட்டவிரோதமான கருக்கலைப்பு பாதுகாப்பு அற்றது.

ⅱ) உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது.

ⅲ) குறிப்பாக முதல் கர்ப்பத்தை கருக்கலைப்பு செய்வது கடுமையான உளவியல் விளைவுகளை ஏற்படுத்தும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: தகுதியற்ற போலி மருத்துவர்களால் செய்யப்படும் சட்டவிரோதமான கருக்கலைப்பு பாதுகாப்பு அற்றது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. குறிப்பாக முதல் கர்ப்பத்தை கருக்கலைப்பு செய்வது கடுமையான உளவியல் விளைவுகளை ஏற்படுத்தும்.

41) பால்வினை நோய்கள் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) பால்வினை தொற்றுகள் என்பது பால்வினை நோய்கள் இனப்பெருக்க பாதை தொற்று அல்லது வெனிரல் நோய்கள் என்றும் முன்பு அழைக்கப்பட்டது

ⅱ) பால்வினை நோய் தொற்று உள்ளவருடன் மிக நெருக்கமான பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலம் இத்தொற்று பரவுகிறது.

ⅲ) கல்லீரல் புற்றுநோய் நோயாளி பயன்படுத்திய உட்செலுத்து ஊசிகள், அறுவை சிகிச்சை கருவிகள் போன்றவற்றை பகிர்வதன் மூலம் பரவுகின்றன.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: பால்வினை நோய்கள் :

பால்வினை தொற்றுகள் என்பது பால்வினை நோய்கள் இனப்பெருக்க பாதை தொற்று அல்லது வெனிரல் நோய்கள் என்றும் முன்பு அழைக்கப்பட்டது. பால்வினை நோய் தொற்று உள்ளவருடன் மிக நெருக்கமான பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலம் இத்தொற்று பரவுகிறது. கல்லீரல் அழற்சி -B மற்றும் ஹெச்ஐவி தொற்றுகள் பால் உறவினால் மட்டுமன்றி நோயாளி பயன்படுத்திய உட்செலுத்து ஊசிகள், அறுவை சிகிச்சை கருவிகள் போன்றவற்றை பகிர்வதன் மூலம் ரத்தம் செலுத்துதல் மற்றும் தொற்று கொண்ட தாயிடமிருந்து சேய்க்கும் பரவுகின்றன. 15 முதல் 24 வயதினருக்கு இத்தகு தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

42) கீழ்க்கண்டவற்றுள் பாக்டீரியா பால் வினைத் தொற்றுகளைத் தேர்ந்தெடு.

ⅰ) வெட்டை நோய்

ⅱ) கிரந்தி

ⅲ) டிரைக்கோ மோனியாசிஸ்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: வெட்டை நோய்( கொனேரியா ), கிரந்தி ( சிஃபிலிஸ் ), கான்க்ராய்ட் (மேகப்புண்), கிளாமிடியாசிஸ், லிம்போகிரானுலோமா வெனரியம் என்னும் அரையாப்பு கட்டி போன்றவை பாக்டீரியா பால்வினை தொற்று நோய்களாகும். கல்லீரல் அழற்சி பி பிறப்புறுப்பு அக்கி, பிறப்புறுப்பு மருக்கள், மற்றும் எய்ட்ஸ் போன்றன வைரஸ் பால்வினை தொற்று நோய்களாகும்.

43) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) டிரைக்கோ மோனியாசிஸ், ஒரு புரோட்டோசோவா பால்வினை தொற்று ஆகும்.

ⅱ) கேண்டிடியாசிஸ் ஒரு பூஞ்சை தொற்று ஆகும்.

ⅲ) பூஞ்சை, புரோட்டோசோவா, பாக்டீரியா, ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பால்வினை தொற்றுகளை உயிர் எதிர்ப்பொருட்கள் மற்றும் பிற மருந்துகளால் குணப்படுத்தலாம்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: டிரைக்கோ மோனியாசிஸ், ஒரு புரோட்டோசோவா பால்வினை தொற்று ஆகும். கேண்டிடியாசிஸ் ஒரு பூஞ்சை தொற்று ஆகும். பூஞ்சை, புரோட்டோசோவா, பாக்டீரியா, ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பால்வினை தொற்றுகளை உயிர் எதிர்ப்பொருட்கள் மற்றும் பிற மருந்துகளால் குணப்படுத்த லாம்.

44) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) வைரஸ்களால் ஏற்படும் பால்வினை தொற்றுக்களை குணப்படுத்த இயலும்.

ⅱ) ரப்பரால் ஆன கருத்தடை உறைகளை பயன்படுத்துவதால் பால்வினை தொற்று பரவும் ஆபத்தை பெருமளவு குறைக்கலாம்.

ⅲ) ஆனால் நோய் பரவும் ஆபத்தை முழுமையாக தவிர்க்க இயலாது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: வைரஸ்களால் ஏற்படும் பால்வினை தொற்றுக்களை குணப்படுத்த இயலாது எனினும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்தி நோயின் அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம். ரப்பரால் ஆன கருத்தடை உறைகளை பயன்படுத்துவதால் பால்வினை தொற்று பரவும் ஆபத்தை பெருமளவு குறைக்கலாம். ஆனால் நோய் பரவும் ஆபத்தை முழுமையாக தவிர்க்க இயலாது.

45) பால்வினை நோய்கள் குறித்த வருமுன் காத்தல் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) முன்பின் தெரியாதவர் உடன் அல்லது பலருடன் பாலுறவு கொள்வதை தவிர்த்தல்.

ⅱ) கருத்தடை உறைகளைப் பயன்படுத்துதல்.

ⅲ) சந்தேகம் இருக்கும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனையுடன் முழுமையான சிகிச்சை மேற்கொள்ளுதல்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: பால்வினை நோய்களை வருமுன் காத்தல்:

அ ) முன்பின் தெரியாதவர் உடன் அல்லது பலருடன் பாலுறவு கொள்வதை தவிர்த்தல்.

ஆ ) கருத்தடை உறைகளைப் பயன்படுத்துதல்.

இ ) சந்தேகம் இருக்கும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனையுடன் முழுமையான சிகிச்சை மேற்கொள்ளுதல்.

46) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) உலக சுகாதார நிறுவனத்தின் 2017 அறிக்கையின்படி உலக அளவில் ஒவ்வொரு நாளும் பால்வினை தொற்றால் ஒரு மில்லியன் மக்களுக்கு மேல் பாதிப்படைகின்றனர்.

ⅱ) 5.1 மில்லியன் எச்ஐவி தொற்று கொண்ட மக்களுடன் உலக அளவில் எச்ஐவி பாதிப்பு அதிகம் கொண்ட மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) ⅰ), ⅱ) தவறு

விளக்கம்: உலக சுகாதார நிறுவனத்தின் 2017 அறிக்கையின்படி உலக அளவில் ஒவ்வொரு நாளும் பால்வினை தொற்றால் ஒரு மில்லியன் மக்களுக்கு மேல் பாதிப்படைகின்றனர். 2.1 மில்லியன் எச்ஐவி தொற்று கொண்ட மக்களுடன் உலக அளவில் எச்ஐவி பாதிப்பு அதிகம் கொண்ட மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது.

47) கருப்பைவாய் புற்றுநோய் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) பால் வழி பரவும் வைரசான மனித பாப்பிலோமா வைரஸ் கருப்பை வாய் புற்று நோயைத் தோற்றுவிக்கிறது.

ⅱ) இதனால் கருப்பை வாய் செல்கள் கருப்பை வாய் பிறழ்வாக்கம் என்னும் இயல்புக்கு மாறான வளர்ச்சியை அடைகிறது.

ⅲ) காய்ச்சல், கடுமையான வயிற்றுப்போக்கு போன்றன கருப்பை வாய்ப்புற்று நோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: கருப்பைவாய் புற்றுநோய் :

பால் வழி பரவும் வைரசான மனித பாப்பிலோமா வைரஸ் கருப்பை வாய் புற்று நோயைத் தோற்றுவிக்கிறது. இதனால் கருப்பை வாய் செல்கள் கருப்பை வாய் பிறழ்வாக்கம் என்னும் இயல்புக்கு மாறான வளர்ச்சியை அடைகின்றன.

இடுப்பு வலி, கலவி கால்வாய் திரவ மிகை போக்கு, இயல்புக்கு மாறான ரத்தப்போக்கு போன்றன கருப்பை வாய்ப்புற்று நோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.

48) கீழ்க்கண்டவற்றுள் கருப்பை வாய் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளைத் தேர்ந்தெடு.

ⅰ) பலருடன் பாலியல் தொடர்பு

ⅱ) கருத்தடை மாத்திரைகளை நீண்ட நாட்களாக பயன்படுத்துதல்

ⅲ) விலகல் முறை

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் :

  1. பலருடன் பாலியல் தொடர்பு
  2. கருத்தடை மாத்திரைகளை நீண்ட நாட்களாக பயன்படுத்துதல்.

49) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) கருப்பை வாய் புற்றுநோயை எச்பிவி ஆய்வு மற்றும் பாப் பூச்சு சோதனை போன்ற கூட்டு சோதனைகள் மூலம் கண்டறியலாம்.

ⅱ) எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், MRI மற்றும் PET ஸ்கேன் போன்ற ஆய்வுகள் மூலம் இப்புற்றுநோயின் நிலைகளை அறியலாம்.

ⅲ) இதனை குணப்படுத்த கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் வேதி மருந்து சிகிச்சை பயன்படுகிறது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: கருப்பை வாய் புற்றுநோயை எச்பிவி ஆய்வு மற்றும் பாப் பூச்சு சோதனை போன்ற கூட்டு சோதனைகள் மூலம் கண்டறியலாம். எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், MRI மற்றும் PET ஸ்கேன் போன்ற ஆய்வுகள் மூலம் இப்புற்றுநோயின் நிலைகளை அறியலாம். இதனை குணப்படுத்த கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் வேதி மருந்து சிகிச்சை பயன்படுகிறது.

50) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கருப்பை வாய் புற்றுநோய் தாக்குவதற்கு முன் ஏற்படும் முந்தைய மாற்றங்களை கண்டறியலாம்.

ⅱ) 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

ⅲ) தடுப்பூசிகள் மூலம் கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கருப்பை வாய் புற்றுநோய் தாக்குவதற்கு முன் ஏற்படும் முந்தைய மாற்றங்களை கண்டறியலாம். எனவே 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. தடுப்பூசிகள் மூலம் கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

51) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) பால் பண்புகள் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே அதாவது 9 முதல் 13 வயது உடைய பெண்களுக்கு எச்பிவி தடுப்பூசி போடுவதன் மூலம் முதல் நிலை தடுப்பு தொடங்குகிறது.

ⅱ) வாழ்க்கை முறையில் மாற்றம் செய்வதும் கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

ⅲ) சத்தான உணவு, புகையிலை பயன்பாடு, இளம் வயது திருமணம், ஓரிணை இனப்பெருக்க முறை மற்றும் சீரான உடற்பயிற்சி போன்றன மூலம் கருப்பை வாய் புற்றுநோய் தோன்றும் வாய்ப்பை குறைக்கலாம்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: பால் பண்புகள் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே அதாவது 9 முதல் 13 வயது உடைய பெண்களுக்கு எச்பிவி தடுப்பூசி போடுவதன் மூலம் முதல் நிலை தடுப்பு தொடங்குகிறது. வாழ்க்கை முறையில் மாற்றம் செய்வதும் கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. சத்தான உணவு, புகையிலை பயன்பாடு தவிர்த்தல், இளம் வயது திருமணத்தை தவிர்த்தல், ஓரிணை இனப்பெருக்க முறை மற்றும் சீரான உடற்பயிற்சி போன்றன மூலம் கருப்பை வாய் புற்றுநோய் தோன்றும் வாய்ப்பை குறைக்கலாம்.

52) TNHSP – தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் அங்கமான தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம் பின்வரும் எந்த பரிசோதனைகளை இலவசமாக செய்கின்றது?

ⅰ) கருப்பைவாய் புற்றுநோய்

ⅱ) மார்பக புற்றுநோய்

ⅲ) மூளைப் புற்றுநோய்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: TNHSP – தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் அங்கமான தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் பரிசோதனைகளை இலவசமாக செய்கின்றன.

53) மலட்டுத்தன்மை தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) தடையற்ற பாலின இணை வாழ்விற்கு பிறகும் கருவுற இயலாமை அல்லது குழந்தையை உருவாக்க இயலாமை மலட்டுத் தன்மை எனப்படும் ⅱ) அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணின் அண்டத்தை கருவுறச் செய்யும் அளவிற்கு தரமான அல்லது போதுமான எண்ணிக்கையில் விந்து செல்களை உருவாக்க இயலாமை

ⅲ) ஒரு பெண்ணால் கருத்தரிக்க இயலாத தன்மை மலட்டுதன்மை எனப்படும்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மலட்டுத்தன்மை:

தடையற்ற பாலின இணை வாழ்விற்கு பிறகும் கருவுற இயலாமை அல்லது குழந்தையை உருவாக்க இயலாமை மலட்டுத் தன்மை எனப்படும். அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணின் அண்டத்தை கருவுறச் செய்யும் அளவிற்கு தரமான அல்லது போதுமான எண்ணிக்கையில் விந்து செல்களை உருவாக்க இயலாமை அல்லது ஒரு பெண்ணால் கருத்தரிக்க இயலாத தன்மை மலட்டுதன்மை எனப்படும்.

54) கீழ்க்கண்டவற்றுள் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான காரணங்களைத் தேர்ந்தெடு.

ⅰ) பிட்யூட்டரி சுரப்பி அல்லது இனப்பெருக்க உறுப்புகளில் கட்டிகள் உருவாதல்

ⅱ) இனப்பெருக்க ஹார்மோன்கள் உற்பத்திக்கு காரணமான மரபணுக்களில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்

ⅲ) கருப்பை வாய் மற்றும் அண்ட நாளங்களின் குறை வளர்ச்சி

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: பிட்யூட்டரி சுரப்பி அல்லது இனப்பெருக்க உறுப்புகளில் கட்டிகள் உருவாதல், இனப்பெருக்க ஹார்மோன்கள் உற்பத்திக்கு காரணமான மரபணுக்களில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், கருப்பை வாய் மற்றும் அண்ட நாளங்களின் குறை வளர்ச்சி, இளவயதில் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.

55) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) நீண்டகால மன அழுத்தத்தால் உடல் நலத்தின் பல்வேறு கூறுகளில் குறிப்பாக மாதவிடாய் சுழற்சியில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

ⅱ) காட்மியம் போன்ற கன உலோகங்கள் கொண்ட நச்சுப்பொருட்களை உட்கொள்ளல்.

ⅲ) புகையிலை, தீவிர குடிப்பழக்கம் மற்றும் போதைப் பொருள் பயன்பாடு

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: நீண்டகால மன அழுத்தத்தால் உடல் நலத்தின் பல்வேறு கூறுகளில் குறிப்பாக மாதவிடாய் சுழற்சியில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. காட்மியம் போன்ற கன உலோகங்கள் கொண்ட நச்சுப்பொருட்களை உட்கொள்ளல், புகையிலை, தீவிர குடிப்பழக்கம் மற்றும் போதைப் பொருள் பயன்பாடு இனச்செல் சுரப்பிகளின் பாதிப்பு மற்றும் அதிக வயது ஆகியவையும் மலட்டுத்தன்மைக்கு காரணம் ஆகின்றன.

56) கீழ்க்கண்டவற்றுள் மலட்டுத்தன்மைக்கான பிற காரணங்களைத் தேர்ந்தெடு.

ⅰ) இடுப்புக்குழி வீக்க நோய்

ⅱ) கருப்பை தசைநார் கட்டிகள்

ⅲ) கலவிக்கால்வாய் உட்படல வளர்ச்சி

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மலட்டுத்தன்மைக்கான பிற காரணங்கள் :

இடுப்புக்குழி வீக்க நோய், கருப்பை தசைநார் கட்டிகள், கருப்பை உட்படலம் வளர்ச்சி போன்றவை பெண்களின் மலட்டுத்தன்மைக்கான பொதுவான காரணங்கள் ஆகும்.

57) கீழ்க்கண்டவற்றுள் மலட்டுத் தன்மைக்கான காரணங்கள் அல்லாதவற்றைத் தேர்ந்தெடு.

ⅰ) பெண்களின் உடலில் கொழுப்பு அளவு அதிகரித்தல் அல்லது பசி இன்மை.

ⅱ) உடல் எடை கூடி விடுமோ என்ற அச்சத்தால் உணவு உண்பதில் ஏற்படும் உடல் நலக் கோளாறு.

ⅲ) ஆண்கள் இறுக்கமான உடைகளை அணிவதால் விந்தகத்தின் வெப்பநிலை உயர்ந்து விந்துசெல் உற்பத்தி பாதிக்கப்படுதல்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: பெண்களின் உடலில் கொழுப்பு அளவு குறைதல் அல்லது பசி இன்மை.அதாவது உடல் எடை கூடி விடுமோ என்ற அச்சத்தால் உணவு உண்பதில் ஏற்படும் மன நலக் கோளாறு. ஆண்கள் இறுக்கமான உடைகளை அணிவதால் விந்தகத்தின் வெப்பநிலை உயர்ந்து விந்துசெல் உற்பத்தி பாதிக்கப்படுதல்.

58) பின்வருவனவற்றுள் மலட்டுத் தன்மைக்கான காரணங்களைத் தேர்ந்தெடு.

ⅰ) நன்கு கீழ் இறங்காத விந்தகங்கள் மற்றும் வேரிகோசீல் எனப்படும் விதைப்பை சிறைகளின் வீக்கம்.

ⅱ) பெண்களின் தன் வாழ்க்கை துணைவரின் விந்து செல்களுக்கு எதிராக எதிர்ப்பு பொருள் உருவாதல்.

ⅲ) ஆண்களில் தங்கள் சொந்த விந்து செல்களுக்கு எதிராக சுய தடைகாப்பு விளைவு உருவாதல்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: நன்கு கீழ் இறங்காத விந்தகங்கள் மற்றும் வேரிகோசீல் எனப்படும் விதைப்பை சிறைகளின் வீக்கம். பெண்களின் தன் வாழ்க்கை துணைவரின் விந்து செல்களுக்கு எதிராக எதிர்ப்பு பொருள் உருவாதல். ஆண்களில் தங்கள் சொந்த விந்து செல்களுக்கு எதிராக சுய தடைகாப்பு விளைவு உருவாதல்.

59) மேயர் ரோகிடன்ஸ்கி நோய் குறைபாடு” தொடர்பான கீழ்க் கண்டவற்றில் தவறானவற்றைத் தேர்ந்தெடு.

ⅰ) அனைத்து பெண்களும் கருப்பையுடன் பிறக்கின்றனர்.

ⅱ) சிலருக்கு அண்டகங்கள் இருக்காது.

ⅲ) இந்நிலைக்கு “மேயர் ரோகிடன்ஸ்கி நோய் குறைபாடு” என்று பெயர்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: அனைத்து பெண்களும் அண்டகங்களுடன் பிறக்கின்றனர். ஆனால் சிலருக்கு கருப்பை இருக்காது. இந்நிலைக்கு “மேயர் ரோகிடன்ஸ்கி நோய் குறைபாடு” என்று பெயர்.

60) இனப்பெருக்க துணை தொழில்நுட்பங்கள் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) இன செல்கள் மற்றும் கருமுட்டைகளை உடலுக்கு வெளியில் கையாண்டு கர்ப்பமடைய செய்யும் செயல்முறை தொகுப்பு இனப்பெருக்க துணை தொழில்நுட்பம் எனப்படும்.

ⅱ) இது மலட்டுத் தன்மை உடைய தம்பதிகள் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) ⅰ), ⅱ) தவறு

விளக்கம்: இனப்பெருக்க துணை தொழில்நுட்பங்கள் : இன செல்கள் மற்றும் கருமுட்டைகளை உடலுக்கு வெளியில் கையாண்டு கர்ப்பமடைய செய்யும் செயல்முறை தொகுப்பு இனப்பெருக்க துணை தொழில்நுட்பம் எனப்படும்.

இது மலட்டுத் தன்மை உடைய தம்பதிகள் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

61) இனப்பெருக்கத் துணை தொழில்நுட்பம் கீழ்கண்டவற்றுள் எவற்றை உள்ளடக்கியது?

ⅰ) கருப்பையினுள் விந்தணுக்களை செலுத்துதல்

ⅱ) உடல் வெளி கருவுறுதல்

ⅲ) அண்ட நாளத்தின் உள் செலுத்துதல்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: இத்தொழில் நுட்பத்தில் கருப்பையினுள் விந்தணுக்களை செலுத்துதல், உடல் வெளி கருவுறுதல், கருமுட்டையை அண்ட நாளத்தின் உள் செலுத்துதல், இனச் செல்களை அண்ட நாளத்தின் உள் செலுத்துதல், கரு இடமாற்றம், அண்ட செல் சைட்டோபிளாசத்தினுள் விந்து செல்களை செலுத்துதல், கரு பதிவுக்கு முன்பே மரபியல் குறைகளை கண்டறிதல், அண்ட செல் மற்றும் விந்து செல்கள் தானம் மற்றும் வாடகைத்தாய்மை ஆகியன அடங்கும்.

62) கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) இச்செயல் முறை குறைந்த எண்ணிக்கையில் விந்து செல்களை உற்பத்தி செய்யும் ஆண்களுக்கு செய்யக்கூடிய சிகிச்சை முறையாகும்.

ⅱ) இம்முறையில் கணவர் அல்லது உடல் நலம் மிக்க விந்து கொடையாளர் இடமிருந்து விந்து திரவம் சேகரிக்கப்படுகிறது.

ⅲ) அண்டத்தை தூண்டி அதிக அண்ட செல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல் :

இச்செயல் முறை குறைந்த எண்ணிக்கையில் விந்து செல்களை உற்பத்தி செய்யும் ஆண்களுக்கு செய்யக்கூடிய சிகிச்சை முறையாகும். இம்முறையில் கணவர் அல்லத