Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

13th & 14th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

13th & 14th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 13th & 14th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

13th & 14th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. BRICS உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் பங்கேற்ற நடப்பாண்டு (2021) கூட்டத்தை நடத்திய நாடு எது?

அ) பிரேசில்

ஆ) ரஷியா

இ) இந்தியா

ஈ) சீனா

  • அண்மையில் இந்தியா BRICS உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் பங்கேற்ற நடப்பாண்டு (2021) கூட்டத்தை நடத்தியது. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்தக் கூட்டத்தில், நிதியமைச்சர் புது தில்லியில் இருந்து மெய்நிகராக உரையாற்றினார்.
  • புதிய வளர்ச்சி வங்கி, சமூக உட்கட்டமைப்பு, பன்னாட்டுச் செலவாணி நிதிய சீர்திருத்தங்கள், SME’க்கான நிதியியல் தொழில்நுட்ப மற்றும் நிதி உள்ளடக்கம், சுங்க ஒத்துழைப்பு தொடர்பான பிரச்சனைகள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

2. PMAY-கிராமப்புற திட்டத்தின் முதல் கட்டத்தில் கட்டப்படவுள்ள வீடுகளின் எண்ணிக்கை எத்தனை?

அ) 1 கோடி

ஆ) 75 இலட்சம்

இ) 60 இலட்சம்

ஈ) 50 இலட்சம்

  • பிரதமர் ஆவாஸ் யோஜனா – கிராமப்புற (PMAY-G)’இன்கீழ், திட்டத்தின் முதல் கட்டத்தில் 92% இலக்கு எட்டப்பட்டுள்ளது. 2016-17 முதல் 2018-19 வரை திட்டத்தின் முதல் கட்டத்தில் 1 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2021-22ஆம் ஆண்டுக்குள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் 2.95 கோடி PMAY-G வீடுகளை நிர்மாணிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. அனைத்திந்திய நிதி நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி எந்த அளவுக்கு மறுநிதியளிப்பு உதவி வழங்கவுள்ளது?

அ) ரூ.5,000 கோடி

ஆ) ரூ.50,000 கோடி

இ) ரூ.5,00,000 கோடி

ஈ) ரூ.50,00,000 கோடி

  • அனைத்திந்திய நிதி நிறுவனங்களுக்கு அதாவது NABARD, SIDBI மற்றும் NHB ஆகிய நிறுவனங்களுக்கு `50,000 கோடி வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. NABARD’க்கு `25,000 கோடியும், SIDBI’க்கு `15,000 கோடியும், தேசிய வீட்டு வசதி வங்கிக்கு `10,000 கோடியும் மறுநிதியளிப்பு கடன் வசதி பெறும்.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “IH2A” என்றால் என்ன?

அ) COVID-19 தடுப்பூசி

ஆ) விண்கல்

இ) புதிய தாவர இனம்

ஈ) இந்தியா H2 கூட்டணி

  • ‘IH2A’ என்பது இந்தியா H2 கூட்டணியைக் குறிக்கிறது. எரிசக்தி மற்றும் தொழிற்துறையில் முக்கிய உலகளாவிய பங்காளர்கள் ஒன்றிணைந்து இந்தியா H2 கூட்டணி (IH2A) என்ற புதிய ஆற்றல் மாற்ற கூட்டணியை உருவாக்கினர். இந்தக் கூட்டணி இந்தியாவில் ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இது நிகர சுழிய கரியமில உமிழ்ப்பாளராக இந்தியாவை மாற்றும்.
  • இந்தியாவில் ஹைட்ரஜன் பொருளாதாரத்தையும் விநியோகச்சங்கிலியையும் உருவாக்க இந்தக் கூட்டணி செயல்படும்.

5. சமீபத்தில் காலமான நோபல் விருதாளர் இசாமு அகசாகி யார்?

அ) அறிவியலாளர்

ஆ) பாடலாசிரியர்

இ) நாவலாசிரியர்

ஈ) கவிஞர்

  • நீல ஒளிமுனைகளை (LED) கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்ட மூத்த ஜப்பானிய அறிவியலாளர் இசாமு அகசாகி அண்மையில் காலமானார். ஜப்பானிய நாட்டைச் சார்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான அகசாகி, இயற்பியலுக்கான 2014ஆம் ஆண்டின் நோபல் பரிசைப் பெற்றார்.
  • நவீன தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களை அங்கீகரிக்கும் ஜப்பானி -ன் மிகவுயர்ந்த கெளரவமான 2009ஆம் ஆண்டுக்கான கியோட்டோ பரிசையும் அவர் பெற்றார்.

6. கொழும்பு துறைமுகத்தில் அமையவுள்ள மேற்கு சரக்கு கையாளும் முனையத்தை, பின்வரும் எவ்விரு நாடுகளுடன் இணைந்து இலங்கை உருவாக்கவுள்ளது?

அ) இந்தியா மற்றும் ஜப்பான்

ஆ) சீனா மற்றும் இந்தோனேசியா

இ) மியான்மர் மற்றும் சிங்கப்பூர்

ஈ) இந்தியா மற்றும் சிங்கப்பூர்

  • இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் மேற்கு சரக்கு கையாளும் முனையத்தை இலங்கை உருவாக்கும். அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் ஆகியவற்றை இந்தியா இதற்காக பரிந்துரைத்துள்ளது. ஜப்பான் இன்னும் எதையும் பரிந்துரைக்கவில்லை. இந்தத் திட்டத்தில், இந்தியா மற்றும் ஜப்பான் 75% பங்குகளை கொண்டுள்ளன.

7. அடல் புத்தாக்க இயக்கத்தின் (AIM) இயக்குநராக நியமிக்கப்பட்டு -ள்ளவர் யார்?

அ) ராஜீவ் குமார்

ஆ) அமிதாப் காந்த்

இ) நரேந்திர மோடி

ஈ) சிந்தன் வைஷ்ணவ்

  • NITI ஆயோக்கின் முதன்மை முன்னெடுப்பான அடல் புத்தாக்க இயக்கத் -தின் (AIM) இயக்குநராக Dr சிந்தன் வைஷ்ணவ் நியமிக்கப்பட்டுள்ளார். 2017 ஜூன் முதல் AIM’ஐ அதன் முதல் திட்ட இயக்குநராக இருந்து வழிந -டத்தி வந்த இராமநாதன் இரமணனிடமிருந்து அவர் இந்தப் பொறுப்பை பேற்பார். சமூக தொழில்நுட்பவியலாளரான சிந்தன் வைஷ்ணவ், தற்போது அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (MIT) பணியாற்றி வருகிறார்.

8. கூட்டாக நீரியல் வரைவு அளக்கையை மேற்கொள்வதற்காக INS சர்வேக்ஷக் பயன்படுத்தப்பட்ட நாடு எது?

அ) மாலத்தீவு

ஆ) மொரீஷியஸ்

இ) ஜப்பான்

ஈ) வியட்நாம்

  • நீரியல் வரைவு அளக்கை கப்பலான INS சர்வேக்ஷக், மொரீஷிய கப்பல்க -ளுடன் இணைந்து கூட்டாக நீரியல் வரைவு அளக்கைகளை மேற்கொள்வதற்காக மொரீஷியசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் மொரீஷியஸின் லூயி துறைமுகத்துக்கு சென்று, ‘லூயி துறைமுகத்தின் ஆழ்கடல்பகுதி’ குறித்த நீரியல் வரைவளக்கையைத் தொடங்கியுள்ளது.
  • நவீன நீரியல் வரைவளக்கை உபகரணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து மொரிஷிய பணியாளர்களுக்கு பயிற்சியளிப்பதும் இந்த ஆய்வில் அடங்கும்.

9. SIDBI’இன் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக் -கப்பட்டுள்ளவர் யார்?

அ) ரஜ்னிஷ் குமார்

ஆ) S இராமன்

இ) அருந்ததி பட்டாச்சார்யா

ஈ) R காந்தி

  • சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) புதிய தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் S இராமனை அரசு நியமித்துள்ளது. இந்தப் பதவிக்கு அவரது பெயரை வங்கி வாரிய பணியகம் பரிந்துரைத்திருந்த -து. மூன்று ஆண்டு காலத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை அதிகாரியான இராமன், தற்போது தேசிய மின்னாளுகை சேவைகள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

10. கால்நடைத்துறையில் ஆயுர்வேதத்தை பயன்படுத்துவதற்கான ஒழுங்குமுறை பொறிமுறையை உருவாக்க, AYUSH அமைச்சகம் பின்வரும் எந்த அமைச்சகத்துடன் கையெழுத்திட்டுள்ளது?

அ) வேளாண் அமைச்சகம்

ஆ) மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வள அமைச்சகம்

இ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ) பஞ்சாயத்து அமைச்சகம் இராஜ்

  • மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வள அமைச்சகமானது AYUSH அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது, ஆயுர்வேதத்தின் கருத்தையும் அதனுடன் தொடர்புடைய துறைக
    -ளையும் கால்நடை அறிவியலில் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கால்நடை மருந்துகளில் புதிய சூத்திரங்கள்குறித்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷீல் சந்திரா நியமனம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அடுத்த தலைமை தேர்தலாணையராக சுஷீல் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்.13 ஓய்வுபெறுகிறார். அதையடுத்து, தேர்தல் ஆணைய -ராக உள்ள சுஷீல் சந்திராவை அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2022 மே 14 வரை சுஷீல் சந்திரா அப்பொறுப்பில் நீடிப்பார். அவரது பதவிக்காலத்தில் கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப், உத்தர பிரதேச மாநிலங்களின் சட்டப்பேரவை -த்தேர்தல்கள் நடைபெறும்.

1980ஆம் ஆண்டு இந்திய வருவாய்ப் பணி அதிகாரியான சுஷீல் சந்திரா, 38 ஆண்டுகள் வருவாய்த்துறையில் பணியாற்றிய அனுபவமுள்ளவர். தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

2. அண்ணா பல்கலை. நிர்வகிக்க வழிகாட்டுதல் குழு நியமனம்

அண்ணா பல்கலையை நிர்வகிக்க மூவர்கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த சூரப்பா ஓய்வுபெற்றதை அடுத்து புதிய துணை வேந்தர் நியமனம் செய்யும் வரை பல்கலையை நிர்வகிக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த ஒருங்கிணைப்புக் குழுவில், பதிவாளர் கருணாமூர்த்தி, உயர்கல்வி செயலாளர் அபூர்வா மற்றும் பேராசிரியர் ரஞ்சனி பார்த்தசாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

3. இந்தியாவில் ஆண்டுக்கு 85 கோடி ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசிகள் உற்பத்தி

இந்தியாவில் ஆண்டுக்கு 85 கோடி ‘ஸ்புட்னிக்-வி’ கரோனா தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்து -ள்ளனர். இந்தியாவில் ‘ஸ்புட்னிக்-வி’ கரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ரஷியாவில் நடத்தப்பட்ட பரிசோதனைகள், இந்தி -யாவில் நடத்தப்பட்ட மூன்றாம்கட்ட பரிசோதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்தத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கட்டுப்பாட்டு இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளுடன் சேர்த்து ‘ஸ்புட்னிக்-வி’ கரோனா தடுப்பூசியும் மக்களுக்கு விரைவில் செலுத்தப்படவுள்ளது. இந்நிலையில், ரஷிய நேரடி முதலீட்டு நிதி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி அளித்த 60ஆவது நாடாக இந்தியா உள்ளது.

இந்தியாவில் அத்தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதோடு மட்டுமல்லாமல் உற்பத்தி செய்யப்படவும் உள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்காக கிளாண்ட் ஃபார்மா, ஹெட்ரோ பயோஃபார்மா, பனாசியா பயோடெக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷிய நேரடி முதலீட்டு நிதி அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் கூறுகையில், “ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது முக்கியமான மைல்கல்.

அத்தடுப்பூசியின் பரிசோதனையில் இந்தியாவும் ரஷியாவும் ஒன்றிணைந்து செயல்பட்டன. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் உற்பத்தியிலும் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளன. இந்தியாவில் ஆண்டுக்கு 85 கோடி எண்ணிக்கையிலான தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. தடுப்பூசிகள் உற்பத்தியில் உலகளவில் இந்தியா முன்னணி வகித்துவருகிறது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் கரோனா தடுப்பூசிகளானது, இந்தியாவில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது” என்றார்.

ஆர்ஜெண்டீனா, பொலிவியா, ஹங்கேரி, ஈரான், மெக்ஸிகோ, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகள் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளன.

4. மறைமுக வரி வருவாய் 12% வளர்ச்சி

2020-21-ஆம் நிதியாண்டில் மறைமுக வரி (GST மற்றும் இதர வரிகள்) வசூல் 12.3 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2019-20ஆம் நிதியாண்டில் மறைமுக வரி வசூல் `9.54 இலட்சம் கோடியாக இருந்தது. இதைத்தொடர்ந்து, 2020-21ஆம் நிதியாண்டில் திருத்தப்பட்ட மறுமதிப்பீட்டின்படி, நிகர மறைமுக வரி `10.71 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 12 சதவீதம் அதிகமாகும்.

இதில், சுங்கவரி 21% அதிகரித்து `1.32 இலட்சம் கோடி வசூலாகியுள்ளது. முந்தைய 2019-20’இல் சுங்க வரி `1.09 இலட்சம் கோடி வசூலானது. இதேபோன்று மத்திய கலால், சேவை வரி வசூல் 59% அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கிடையே, இந்தச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த 2020-21ஆம் நிதியாண்டில் கலால் சேவை வரி `3.91 இலட்சம் கோடி வசூலானது. முந்தைய ஆண்டில் இது `2.45 லட்சம் கோடியாக இருந்தது.

மத்திய சரக்கு சேவை வரி (CGST), ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி (IGST) போன்றவை மூலம் 2021-21ஆம் நிதியாண்டில் `5.48 இலட்சம் கோடி வசூலாகியுள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக வரி வசூலில் 8% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் இது `5.99 லட்சம் கோடியாக இருந்தது. கரோனா பாதிப்பு காரணமாக முதல் அரையாண்டில் GST வரி வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால், அரசின் பல்வேறு முயற்சிகளினால் பிந்தைய அரையாண்டில் GST வரி வசூலில் `1 லட்சம் கோடியை தாண்டி முன்னேற்றம் ஏற்பட்டது.

இதற்கிடையே, கடந்த மார்ச் மாதம் GST வரி `1.24 இலட்சம் கோடி வசூலா -கியுள்ளது என்று நிதிமைச்சகம் தெரிவித்துள்ளது.

5. கடல் உணவுப்பொருள் விற்பனைக்காக ‘இ-சான்டா’ வலைதளம் தொடக்கம்

கடல் உணவுப்பொருள் விற்பனைக்கான ‘இ-சான்டா’ வலைதள பயன்பாட்டை வர்த்தக & தொழில்துறையின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கிவைத்தார். விவசாயிகளின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு ‘இ-சான்டா’ வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும். விவசாயிகள் தங்களது கடல் உணவுப்பொருள்களை இணைய வர்த்தக வலைதளத்தில் சந்தைப்படுத் -துவதன்மூலம் ஒரு சொடுக்கில் அவற்றை விற்பனை செய்ய முடியும்.

‘இ-சான்டா’ வலைதளம் விவசாயிகளுக்கு கடல் உணவுப்பொருள்களை ஒரே இடத்தில் பட்டியலிட உதவுவதுடன் அவற்றின் விற்பனையும் கணிச -மாக அதிகரிக்க உதவும். இந்த வலைதளம் விவசாயிகளுக்கு கூடுதல் சுதந்திரத்தை வழங்கும் என்பதுடன் மிகச்சிறந்த டிஜிட்டல் தீர்வுகளையும் அளிக்கும். இதன் வாயிலாக அவர்கள் வாழ்வு மேம்படும்.

தற்போதைய நிலையில், நாட்டின் கடல் உணவுப்பொருள்கள் ஏற்றுமதியி -ல் 18,000 விவசாயிகள் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் இறால் உற்பத்தியை தற்போதைய 40,000 டன்னிலிருந்து 6-7 இலட்சம் டன்னாக அதிகரிக்க முடியும். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், வங்காளம், தெலுங்கு, ஒடியா ஆகிய மொழிகளில் இந்த வலைதளம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. கூடிய விரைவில் இதர மொழிகளிலும் இந்த வலைதளத்தின் சேவை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

6. சேதி தெரியுமா?

ஏப்.3: பல்லடுக்குகொண்ட முகக்கவசங்களை அணிவதால், நுண்துகள் பரவல் 96% குறையும் என்று அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்ப மையம் நடத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஏப்.4: இந்திய மகளிர் கால்பந்து அணியின் கேப்டனாகத் தமிழகத்தைச் சேர்ந்த இந்துமதி கதிரேசன் நியமிக்கப்பட்டார்.

ஏப்.5: ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்து இரண்டு முறை பதவியில் நீடிப்பதற்கான மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி தலா ஆறு ஆண்டுகள் என 2 முறை பதவியில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2036ஆம் ஆண்டு வரை புதின் அதிகாரத்தில் இருக்க முடியும்.

ஏப்.6: தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சராசரியாக 72.78 சதவீத வாக்குகள் பதிவாகின. புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 81.88% வாக்குகள் பதிவாகின.

ஏப்.7: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக N V ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவின் 48ஆவது தலைமை நீதிபதி. தற்போதைய தலைமை நீதிபதி S A போப்டேவின் பதவிக்காலம் ஏப். 23’இல் நிறைவடைகிறது.

ஏப்.7: தமிழ்நாடு கால்நடை மருத்துவப்பல்கலைக்கழக புதிய துணை வேந்தராகப் பேராசிரியர் K N செல்வகுமார் நியமிக்கப்பட்டார்.

ஏப்.8: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான 15 பேர்கொண்ட இந்திய துப்பாக்கிச்சுடுதல் அணி அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் இடம்பிடித்தார்.

ஏப்.10: கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவரும் நிலையில் தமிழ்நாட்டில் புதிய கரோனா பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைக்கு வந்தன.

7. துருக்கியில் நடைபெற உள்ள பாராலிம்பிக்ஸ் தகுதிச்சுற்றுக்கு தமிழகத்தின் மனோகரன் தேர்வு:

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (31). பார்வைக்குறைபாடுள்ள மனோகரன், ஜூடோ விளையாட்டு வீரர் ஆவார். இவர் பாராலிம்பிக்ஸ் போட்டிக்கான தகுதிச்சுற்றுக்குத் தேர்வாகி உள்ளார். பாராலிம்பிக்ஸ் போட்டிக்கான தகுதிச்சுற்று வரும் மே 23 அன்று, துருக்கி நாட்டில் உள்ள அந்தல்யா நகரத்தில் நடைபெற உள்ளது.

பாராலிம்பிக்ஸ் போட்டியானது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஆக.24 முதல் செப்.5 வரை நடைபெறவுள்ளது. அதற்கான தகுதிச்சுற்றுக்கு ஜூடோ பிரிவில் இந்திய அளவில் நால்வர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அதில் தமிழ்நாட்டிளிருந்து மனோகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள் -ளார்.

பிறவியிலேயே பார்வைக்குறைபாடு உடையவரான மனோகரன் தன்னுடைய இருபதாவது வயதிலிருந்து ஜூடோ விளையாடி வருகிறார். தேசிய அளவிலான போட்டிகளில் 7 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். 2014ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம், 2016ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற காமென்வெல்த் போட்டியில் வெண்கலப்பதக்க -ம், 2019ஆம் ஆண்டு இலண்டனில் நடந்த காமென்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

1. Which country has hosted the Meeting of BRICS Finance Ministers and Central Bank Governors 2021?

A) Brazil

B) Russia

C) India

D) China

  • India recently hosted the Meeting of BRICS Finance Ministers and Central Bank Governors 2021. It was co–chaired by Union Finance minister Nirmala Sitharaman and RBI governor Shaktikanta Das. Finance Minister addressed the meeting virtually from New Delhi.
  • Issues regarding New development bank, social infrastructure, IMF reforms, fintech for SME and financial inclusion, customs cooperation were discussed during the meeting.

2. What was the target for number of houses in the 1st phase of PMAY– Gramin?

A) 1 Crore

B) 75 Lakhs

C) 60 Lakhs

D) 50 Lakhs

  • Under the Pradhan Mantri Awas Yojana – Gramin (PMAY–G), 92% target of completion has been achieved in the 1st phase of the scheme. A target of 1 crore houses was set for completion in the 1st phase of the scheme– from 2016–17 to 2018–19. It aims constructing 2.95 crore PMAY–G houses with all basic amenities by the year 2021–22.

3. What amount of refinance assistance will be provided by RBI to All India Financial Institutions (AIFIs)?

A) Rs. 5000 Crore

B) Rs. 50,000 Crore

E) Rs. 5,00,000 Crore

D) Rs. 50,00,000 Crore

  • The Reserve Bank of India (RBI) has decided to provide a sum of Rs.50,000 crore to the All–India Financial Institutions (AIFIs) namely NABARD, SIDBI and NHB. NABARD would receive Rs.25,000 crore, SIDBI would receive Rs.15,000 crore and NHB would receive a sum of Rs.10,000 crore as refinance credit facility.

4. What is “IH2A” that has been seen in the news recently?

A) COVID 19 VACCINE

B) Meteor

C) New Plant Species

D) India H2 Alliance

  • “IH2A” stands for India H2 Alliance. Major global players in energy and industry have come together to form a new energy transition coalition, the India H2 Alliance (IH2A). This coalition is focused on commercialising hydrogen technologies in India to make it a net zero carbon emitter. It will work to build a hydrogen economy and supply chain in India.

5. Who was Isamu Akasaki, a Japanese Nobel Laureate who passed away recently?

A) Scientist

B) Lyricist

C) Novelist

D) Poet

  • Veteran Japanese scientist Isamu Akasaki, who shared a Nobel Prize in physics for the invention of blue light–emitting diodes (LEDs), passed away recently. Akasaki was one of three Japanese–born researchers who was awarded the 2014 Nobel Prize in physics.
  • He was also a recipient of 2009 Kyoto Prize, Japan’s highest honor, recognizing developments in advanced technology.

6. Sri Lanka will develop the West Container Terminal at the Colombo port along with which other two countries?

A) India and Japan

B) China and Indonesia

C) Myanmar and Singapore

D) India and Singapore

  • Sri Lanka will develop the West Container Terminal at the Colombo port along with India and Japan. India has nominated Adani Ports and Special Economic Zone Ltd. Japan has yet to nominate a party. India and Japan will have 75% stake in WCT project.

7. Who has been appointed as the Mission Director of Atal Innovation Mission (AIM)?

A) Rajiv Kumar

B) Amitabh Kant

C) Narendra Modi

D) Chintan Vaishnav

  • Dr Chintan Vaishnav has been appointed as the Mission director of Atal Innovation Mission (AIM), the flagship initiative under NITI Aayog. He will take over from Ramanathan Ramanan, who has been leading AIM as its first mission director since June 2017.
  • Chintan Vaishnav is a socio–technologist who is currently serving at the Massachusetts Institute of Technology (MIT), US.

8. INS Sarvekshak has been deployed in which country, for conducting joint hydrographic surveys?

A) Maldives

B) Mauritius

C) Japan

D) Vietnam

  • INS Sarvekshak is a hydrographic survey ship, is on a deployment to Mauritius for conducting joint hydrographic surveys along with their Mauritian counterparts. The ship visited Port Louis, Mauritius and has started the hydrographic survey of ‘Deep sea area of Port Louis’.
  • The survey will also include training of Mauritian personnel on advanced hydrographic equipment and practices.

9. Who has been appointed as the new Chairman and Managing Director of SIDBI?

A) Rajnish Kumar

B) S Raman

C) Arundhati Bhattacharya

D) R Gandhi

  • The Government has appointed S Raman as the new Chairman and Managing Director of Small Industries Development Bank of India (SIDBI). Banks Board Bureau had recommended his name for the post and the appointment is for a period of 3 years.
  • Ramann is an Indian Audit & Accounts Service officer, is currently the CEO of National e–governance Services Ltd.

10. AYUSH Ministry signed MoU with which Ministry to develop a regulatory mechanism for the use of Ayurveda in veterinary sector?

A) Ministry of Agriculture

B) Ministry of Fisheries, Animal Husbandry and Dairying

C) Ministry of Rural Development

D) Ministry of Panchayati Raj

  • Department of Animal Husbandry and Dairying (DAHD), Ministry of Fisheries, Animal Husbandry and Dairying signed an MoU with the Ministry of AYUSH. It aims to introduce the concept of Ayurveda and its allied disciplines into veterinary science. It also aims to promote research and development on new formulations in veterinary drugs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!