Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

13th & 14th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

13th & 14th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 13th & 14th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

13th & 14th February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. நாட்டில் NGOS பெறும் அயல்நாட்டு மானியங்கள், கீழ்க்காணும் எந்தச் சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன?

அ) அயல்நாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம்

ஆ) அந்நியச்செலாவணி மேலாண்மைச் சட்டம்

இ) பணமோசடி தடுப்பு சட்டம்

ஈ) அரசு சாரா நிறுவனங்கள் சட்டம்

  • தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெறும் அயல்நாட்டு மானியங்கள் அனைத்தும் அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010 (அ) FCRAமூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.
  • உள்துறை அமைச்சகத்தில் பதிவுசெய்த பிறகு, தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு ஒரு தனித்துவமான FCRA பதிவெண் வழங்கப்படும்; அது ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்படும். சமீப அரசாங்க தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில், FCRA சட்டத்தின் விதிமுறைகளை மீறிய 20,600’க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் FCRA உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

2. சமீப CAG தரவுகளின்படி, 2018-19’இல் 247 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஈட்டிய லாபம் என்ன?

அ) 56,000 கோடி

ஆ) 98,000 கோடி

இ) 1.78 இலட்சம் கோடி

ஈ) 3.20 இலட்சம் கோடி

  • 2018-19’இல், 247 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் `1.78 இலட்சம் கோடி அளவுக்கு இலாபம் ஈட்டியதாக தலைமை கணக்குத் தனைக்கை -யாளர் அறிவித்துள்ளார்.
  • மொத்த இலாபத்தில், 73% இலாபத்தை பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளைச் சார்ந்த 63 நிறுவனங்கள் ஈட்டித்தந்துள்ளன. 2019 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, 189 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், `1.4 இலட்சம் கோடி அளவுக்கு இழப்பைச்சந்தித்துள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.

3. இந்திய மருந்துகள் மற்றும் மருந்துப்பொருட்கள் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) ஹைதராபாத்

ஆ) ஜெய்ப்பூர்

இ) குருகிராம்

ஈ) பெங்களூரு

  • இந்திய மருந்து & மருந்துப்பொருட்கள் நிறுவனம் என்பது குருகிராமை தலைமையிடமாகக்கொண்ட ஓர் அரசுக்கு சொந்தமான மருந்து, மொத்த மருந்துகள் உற்பத்தி மற்றும் மருந்துகள் கண்டுபிடிப்பு நிறுவனமாகும். அண்மையில், இந்திய மருந்து & மருந்துப்பொருட்கள் நிறுவனம் மற்றும் ராஜஸ்தான் மருந்து மற்றும் மருந்துப்பொருட்கள் நிறுவனம் ஆகியவை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
  • ஹிந்துஸ்தான் ஆண்டிபயாடிக்ஸ் நிறுவனம், பெங்கால் இரசாயனம் & மருந்துப்பொருட்கள் நிறுவனம் மற்றும் கர்நாடக ஆண்டிபயாடிக்ஸ் & மருந்துப்பொருட்கள் நிறுவனம் ஆகியவற்றில் உள்ள முதலீடுகளை திரும்பப் பெறவும் அரசு முடிவு செய்துள்ளது.

4. அதிகமான மக்கள்தொகைகொண்ட பின்வரும் எந்த நாடு, பதிவு செய்யப்பட்ட பிறப்புகளில், 15% சரிவைக்கண்டுள்ளது?

அ) இந்தியா

ஆ) சீனா

இ) பாகிஸ்தான்

ஈ) இந்தோனேசியா

  • கடந்த 2020’இல் பதிவுசெய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 10.04 மில்லியனாகும்; இது கடந்த ஆண்டின் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கையிலிருந்து 15 சதவீதத்திற்கும் குறைவாகும்.
  • தரவுகளின்படி, பிறப்பு வீதத்தில் சரிவை பதிவு செய்வது இது தொடர்ந்து நான்காவது ஆண்டாகும். விரைவான மக்கள்தொகை வளர்ச்சியைக் குறைப்பதற்காக 1970’களின் பிற்பகுதியில், ‘ஒரு குழந்தை திட்ட’த்தை சீனா அறிமுகப்படுத்தியது. 2016’இல் அத்திட்டம் கைவிடப்பட்டது.

5. ‘புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தேசிய செயல்திட்ட’த்தை தயாரிப்பதற்கான துணைக்குழுவை அமைத்துள்ள அமைப்பு எது?

அ) NITI ஆயோக்

ஆ) RBI

இ) NABARD

ஈ) தொழிலாளர் நல அமைச்சகம்

  • மத்திய தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாரின் அண்மைய அறிவிப்பின்படி, ‘புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தேசிய செயல் திட்ட’த்தை தயாரிக்க NITI ஆயோக் ஒரு உபகுழுவை அமைத்துள்ளது.
  • இந்த உப-குழுவில் பல்வேறு அமைச்சகங்கள், நிபுணர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளின் உறுப்பினர்கள் உள்ளனர். மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழூள்ள தொழிலாளர் பணியகம், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து அகில இந்திய ஆய்வை நடத்தவுள்ளது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘சுவமித்வா’ திட்டம் என்பது எந்த மத்திய அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது?

அ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ) பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

இ) வீட்டு வசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஈ) சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்

  • ‘SVAMITVA’ என்பது 2020’இல் மத்திய பஞ்சாயத்து இராஜ் அமைச்சகத் -தின்கீழ் தொடங்கப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். இது சர்வே ஆப் இந்தி -யாவால் ஆளில்லா விமானத்தின்மூலம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் சொத்து உரிமையாளர்களுக்கு சொத்து அட்டைகளை வழங்குவ -தை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பஞ்சாயத்து இராஜ் அமைச்சகத்துக்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில், ‘SVAMITVA’ திட்டத்திற்கு `200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் சோதனைக் கட்டத்தை ஒன்பது மாநிலங்களில் செயல்படுத்த `79.65 கோடி பட்ஜெட் செலவினத்துடன் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

7. பன்னாட்டு எரிசக்தி முகமையின் சமீப அறிக்கையின்படி, எரிசக்தி நுகர்வுகளில் இந்தியா வகிக்கும் இடம் என்ன?

அ) முதலாவது

ஆ) நான்காவது

இ) எட்டாவது

ஈ) இரண்டாவது

  • பன்னாட்டு எரிசக்தி முகமையானது அண்மையில், ‘இந்திய எரிசக்தி நுகர்வு குறித்த கண்ணோட்டம் – 2021’ஐ வெளியிட்டது. அவ்வறிக்கை -யின்படி, அதிகம் எரிசக்தி நுகர்வைக்கொண்ட உலக நாடுகளின் பட்டி -யலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
  • 2030’க்குள் உலகின் மூன்றாவது மிகப்பெரிய எரிசக்தி நுகர்வு நாடாக இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்தை விஞ்சியிருக்கும். அடுத்த இருபதாண் -டுகளில், இந்தியாவின் எரிசக்தி தேவை வளர்ச்சி பங்கு அதிகபட்சமாக 25 சதவீதத்தை எட்டியிருக்கும். இந்தியாவின் எரிசக்தி நுகர்வு, 2040 ஆம் ஆன்டுக்குள் $8.6 டிரில்லியன் டாலர்களை எட்டும்.

8. 2020ஆம் ஆண்டு நிலவரப்படி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளின் பட்டியலில், முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) குஜராத்

ஈ) கர்நாடகா

  • சுகாதார அமைச்சகம் அளித்த தகவல்களின்படி, 2018 முதல் 24,56,291 பேர், `3,239.5 கோடி மதிப்பிலான சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பயனாளிகள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • இத்திட்டத்தின்கீழ், பிப்ரவரி.4ஆம் தேதி வரை 1.59 கோடி பேர், 24,321 மருத்துவமனைகளில் சேர்ந்து `19,714 கோடி மதிப்பிலான சிகிச்சை பெற்றுள்ளனர். இந்தத்திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டைத்தொடர்ந்து ஆந்திர பிரதேசமும் குஜராத்தும் உள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், ஒரு குடும்பத்துக்கு `5 இலட்சம் வரை மருத்துவக்காப்பீடு வழங்கப்படுகிறது.

9. சோயுஸ்-2 ஏந்தி ஏவூர்தியானது (carrier rocket) கீழ்க்காணும் எந்த நாட்டின் முதன்மை ஏவுகலமாகும்?

அ) சீனா

ஆ) இரஷ்யா

இ) இஸ்ரேல்

ஈ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

  • சோயுஸ்-2 என்பது இரஷ்யாவின் முதன்மை முந்நிலை ஏவுகலமாகும். அது செயற்கைக்கோள்களை தாழ்வட்டச்சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த உதவுகிறது. சோயுஸ் ஏவுகணையின் நவீன வடிவந்தான் இது. சோயுஸ் -2 ஏவுகலத்தைப் பயன்படுத்தி, 12’க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த சுமார் நாற்பது செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ இரஷ்ய நாடு திட்டமிட்டுள்ளது. இதில், தென் கொரியாவின் CAS500-1 (Compact Advanced Satellite 500) செயற்கைக்கோளும் அடங்கும்.

10. ‘லாலந்தர் (அ) ஷட்டூட் அணை’யைக் கட்டுவதற்காக பின்வரும் எந்நாட்டுடனான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?

அ) ஆப்கானிஸ்தான்

ஆ) தஜிகிஸ்தான்

இ) ஜப்பான்

ஈ) தென் கொரியா

  • ஆப்கானிஸ்தானில் லாலந்தர் (ஷட்டூட்) அணை கட்டுவதற்கான புரிந்து ணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் ஹனிப் ஆத்மர் ஆகியோர், பிரதமர் மோடி மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது அஷ்ரப் கனியின் முன்னிலையில் இதில் கையெழுத்திட்டனர்.
  • காபூல் மாநகரத்தின் பாதுகாப்பான குடிநீருக்கான தேவையைப் பூர்த்தி செய்வதோடு, அருகிலுள்ள பகுதிகளின் நீர்ப்பாசனத்திற்கும் லாலந்தர் அணை பங்காற்றும். இந்தியா – ஆப்கானிஸ்தான் நட்புறவு அணைக்கு (சல்மா அணை) பின்னர் ஆப்கானிஸ்தானில் இந்தியாவால் கட்டப்படவி -ருக்கும் இரண்டாவது முக்கிய அணை இதுவாகும்.

தமிழக நடப்பு நிகழ்வுகள்

  • தமிழ்நாடு அரசின் உதவியைப் பெறுவதற்காக ‘1100’ என்ற சேவை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் க பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்தச் சேவைமூலம், அனைத்து துறைகளும் முதலமைச்சர் அலுவலக உதவிமையம்மூலம் ஒருங்கிணைக்கப்படவுள்ளது. இந்த மையத்தை தொடர்புகொண்டு அளிக்கப்படும் புகார்களை உடனடியாக துறைகளுக் -குகொண்டுசென்று நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

1. The foreign grants received by NGOS in the country are regulated by which act?

A) Foreign Contribution Regulation Act (FCRA)

B) Foreign Exchange Management Act (FEMA)

C) Anti–money Laundering Act

D) Non–Government Organisations Act

  • Foreign grants received by NGOs are regulated by the Foreign Contribution (Regulation) Act, 2010 or FCRA.
  • After registering with the Home Affairs Ministry, the NGO would be provided a unique FCRA registration number, to be renewed every five years. As per the recent Government data, the FCRA licences of over 20,600 NGOs were cancelled in the last 10 years, on violation of the provisions of FCRA act.

2. As per the recent CAG data, what is the profit earned by 247 central public sector enterprises (CPSEs) during 2018–19?

A) Rs 56,000 crore

B) Rs 98,000 crore

C) Rs 1.78 lakh crore

D) Rs 3.20 lakh crore

  • The Comptroller Auditor General (CAG) announced that 247 central public sector enterprises (CPSEs) earned profit of Rs 1.78 lakh crore during 2018–19. Out of the total profit, 73% was contributed by 63 companies in the fields of petroleum, coal and lignite and power.
  • It also revealed that 189 CPSEs had suffered losses of Rs 1.4 lakh crore as on March 31, 2019.

3. Where is the headquarters of the Indian Drugs & Pharmaceuti –cals Ltd located?

A) Hyderabad

B) Jaipur

C) Gurgaon

D) Bengaluru

  • Indian Drugs and Pharmaceuticals Limited (IDPL) is a state–owned pharmaceutical, bulk drug manufacturing and drug discovery company headquartered in Gurgaon. Recently, it was announced that IDPL and Rajasthan Drugs & Pharmaceuticals Ltd (RDPL) would be closed.
  • The Government is to disinvest Hindustan Antibiotics Ltd (HAL), Bengal Chemicals & Pharmaceuticals Ltd (BCPL), and Karnataka Antibiotics & Pharmaceutical Ltd (KAPL).

4. Which top populous country recorded over 15% dip in registered births year on year?

A) India

B) China

C) Pakistan

D) Indonesia

  • The number of registered births in 2020 was 10.04 million, which is over 15 percent down from the number of registered births of the last year.
  • As per the data, this is the fourth consecutive year to register a decline in birth rate. China launched the one–child policy in the late 1970s to slow rapid population growth. It was reversed only in the year 2016.

5. Which body has set up a sub–group for preparing the ‘National Action Plan for Migrant Workers’?

A) NITI Aayog

B) RBI

C) NABARD

D) Ministry of Labour

  • The NITI Aayog has constituted a sub–group to prepare the ‘National Action Plan for Migrant Workers’, as per the recent announcement of Union Labour Minister Santosh Kumar Gangwar. The sub–group includes members from various ministries, experts, NGOs and other organisations. The Labour Bureau under the Labour Ministry will also begin to conduct an All–India Survey on Migrant workers.

6. ‘SVAMITVA’ scheme, which was making news recently, is implemented by which Union Ministry?

A) Ministry of Rural Development

B) Ministry of Panchayati Raj

C) Ministry of Housing & Urban Affairs

D) Ministry of Social Justice & Empowerment

  • ‘SVAMITVA’ is a new scheme launched under the Panchayati Raj Ministry in 2020. It aims to provide the property cards to the property owners through drone survey by Survey of India.
  • Out of the total budget allocation to the Ministry, a provision of Rs.200 crores has been made for the ‘SVAMITVA’ scheme. The pilot phase of the scheme was approved with Budget outlay of Rs.79.65 crore, to be implemented in 9 States.

7. As per the International Energy Agency’s (IEA) latest report, what is the position of India, in Energy consumption?

A) First

B) Fourth

C) Eighth

D) Second

  • The International Energy Agency (IEA) released the ‘India Energy Outlook 2021’ recently. As per the report, India is the world’s fourth–largest energy consuming country.
  • The report also highlighted that India will have the biggest share of energy demand growth at 25% over the next two decades. It will overtake EU as the third largest energy consumer by 2030. India’s energy consumption could touch USD 8.6 trillion by 2040.

8. Which Indian state has topped the list of beneficiaries of Ayushman Bharat Yojana, as of 2020?

A) Tamil Nadu

B) Kerala

C) Gujarat

D) Karnataka

  • As per the information provided by the Health Ministry, Tamil Nadu tops the beneficiaries list with around 25.56 lakh people getting treatment worth Rs 3,239.5 crore, since 2018.
  • Till Feb.4 this year, there were around 1.6 crore hospital admissions worth Rs 19, 714 crores under the scheme. Tamil Nadu is followed by Andhra Pradesh and Gujarat. The scheme aims to provide a health assurance cover of up to Rs 5 lakh per family per year to poor families.

9. Soyuz–2 carrier rocket is the flagship launch vehicle of which country?

A) China

B) Russia

C) Israel

D) United States

  • Soyuz–2 is a flagship 3 stage launch vehicle of Russia, which places satellites in the low Earth orbit. It is the modernised form of the Soyuz rocket. Recently, it was announced that the country has planned to launch around 40 satellites from over 12 countries using the Soyuz–2 rocket. It includes the CAS500–1 (Compact Advanced Satellite 500) of South Korea.

10. India signed a MoU with which country to build the ‘Lalandar or Shatoot dam’?

A) Afghanistan

B) Tajikistan

C) Japan

D) South Korea

  • India recently signed an agreement with Afghanistan for building Lalandar or Shatoot dam. The MoU was signed by Union External affairs minister S Jaishankar and his Afghan counterpart.
  • The dam is expected to provide water supply to almost two million people in Kabul city. The dam would also provide irrigation water to nearby areas. This is the second major dam being built by India in Afghanistan, after the ‘Friendship Dam’ or Salma dam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!