TnpscTnpsc Current Affairs

13th & 14th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

13th & 14th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 13th & 14th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சிறார் திருமணத் தடை (திருத்தம்) மசோதாவை ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவில் எத்தனை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்?

அ) 01 

ஆ) 02

இ) 03

ஈ) 04

  • சிறார் திருமணத் தடை (திருத்தம்) மசோதாவை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட 31 பேர்கொண்ட நாடாளுமன்றக் குழுவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுஷ்மிதா தேவ் மட்டுமே பெண்மணியாவார்.
  • பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை 21ஆக உயர்த்த இம்மசோதா எண்ணுகிறது. தற்போது, ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21ஆகவும், பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது 18ஆகவும் உள்ளது. பெண்களின் திருமண வயதை உயர்த்தும் திட்டம் ஜெயா ஜெட்லி தலைமையிலான NITI ஆயோக் பணிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டது.

2. எந்த நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், ‘5ஆம் தலை முறை நுண்ணலை ஈர்ப்பிகளை’ உருவாக்கியுள்ளனர்?

அ) ஐஐடி மெட்ராஸ்

ஆ) ஐஐடி பாம்பே

இ) கேரள பல்கலைக்கழகம் 

ஈ) IISc, பெங்களூரு

  • கேரள பல்கலையின் இயற்பியல் துறை பேராசிரியர்களு -ம் ஆராய்ச்சி அறிஞர்களும் ஐந்தாம் தலைமுறை நுண் அலை ஈர்ப்பிகளை உருவாக்கியுள்ளனர். இது மின்காந்த கதிர்வீச்சுக்கு எதிராக ஒரு பயனுள்ள கவசமாக பயன்படுகிறது. மின்காந்த குறுக்கீடு உயிரினங்களின் நலத்திற்கு தீங்கானது என அறியப்படுகிறது.
  • இது உயர்தர மின்னணு சாதனங்களையும் பாதிக்கிறது. அதிக அதிர்வெண் உள்ள இடத்தில் நுண்ணலையை ஈர்க்க அவர்கள் ‘மேயனைட் எலெக்ட்ரைடு’ என்ற புதிய கவசப்பொருளைப் பயன்படுத்தினர்.

3. சிறப்புப் பாதுகாப்புக் குழுச் சட்டம், 1988 ஆனது எதற்கு/ யாருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இயற்றப்பட்டது?

அ) அணுமின் நிலையங்கள்

ஆ) பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்கள் 

இ) இந்தியாவின் நில எல்லைகள்

ஈ) இந்தியாவின் நீர் எல்லைகள்

  • முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு சிறப்புப் பாதுகாப்புக் குழு சட்டம், 1988 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது இந்தியப் பிரதமர் மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக ஒன்றியத்தின் ஆயுதப் படையை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், அனைத்து முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்பத்தினருக்கும் இது மேலும் விரிவுபடுத்தப்பட்டது.

4. ‘அபிலிம்பிக்ஸ்’ என்பது எந்தத் துறைசார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் போட்டிகளாகும்?

அ) விளையாட்டு

ஆ) குறியீட்டு முறை

இ) திறன் செயல் விளக்கம் 

ஈ) வியாபார நிர்வாகம்

  • தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) மூலம் இந்தியத் திறன்கள்-2021’க்கான தேசிய போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திறன் மேம்பாடு & தொழில்முனைவு அமைச்சகத்தின்கீழ் பணிபுரியும் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கான மைய முகமை NSDC ஆகும்.
  • இதில் மாற்றுத்திறனாளிகளின் திறன் செயல்விளக்கமான ‘அபிலிம்பிக்ஸ்’ இடம்பெற்றது. இந்தியத் திறன்கள் – 2021 ஆனது யோகா, ஷூ தயாரித்தல் (தோல்) மற்றும் ஆடை தயாரித்தல் (தோல் ஆகிய மூன்று புதிய திறன்களை அறிமுகப்படுத்தியது.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஹைதராபாத் அறிவிப்பு’டன் தொடர்புடையது எது?

அ) பருவநிலை மாற்றம்

ஆ) மின்னாளுகை 

இ) பெண்கள் அதிகாரமளித்தல்

ஈ) COVID-19 நெறிமுறை

  • நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகள் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைதீர் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் மற்றும் மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை தெலுங்கானா அரசாங்கத்துடன் இணைந்து ஹைதராபாத்தில் 24ஆவது தேசிய மின் – ஆளுகை மாநாட்டை ஏற்பாடு செய்தன.
  • “India’s Techade: Digital Governance in a Post Pandemic World” என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும்.

6. சஞ்சை ஏரி என்பது எம்மாநிலம்/யூடியில் அமைந்துள்ள ஓர் ஈரநிலமாகும்?

அ) கர்நாடகா

ஆ) புது தில்லி 

இ) ஹிமாச்சல பிரதேசம்

ஈ) ஆந்திரப் பிரதேசம்

  • ஹஸ்தினாபூர் வனவுயிரி சரணாலயம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள தனௌரி மற்றும் சூரஜ்பூர் சதுப்பு நிலங்கள், தில்லி உயிரியல் பூங்கா மற்றும் சஞ்சை ஏரி, ஓக்லா பறவைகள் சரணாலயம், நஜப்கர் ஜீல் மற்றும் யமுனா ஆறு ஆகிய ஏழு ஈரநிலங்களில் ஆசிய நீர்ப் பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
  • இந்தக் கணக்கெடுப்பில் சஞ்சை ஏரியில் 13 இனங்கள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன. கடந்த 2019 – 2021 வரையிலும் மொத்தம் 17 இனங்கள் இருந்தன.

7. ‘சீ டிராகன் 22’ ராணுவப் பயிற்சியில் எந்த நாடுகளின் குழுமம் பங்கேற்கிறது?

அ) இந்தோ-பசிபிக் நாடுகள் 

ஆ) QUAD குழுமம்

இ) இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள்

ஈ) பால்கன் நாடுகள்

  • இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் மற்றும் தென் கொரிய கடற்படைகளுடன் இணைந்து ‘சீ டிராகன் 22’ பயிற்சி தொடங்கியதாக அமெரிக்க கடற்படை அறிவித்து உள்ளது. இது ஆறு இந்தோ-பசிபிக் நாடுகள் பங்கேற்கும் பசிபிக் பெருங்கடலில் நடக்கும் ஒரு பலதரப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர்ப்பயிற்சியாகும்.
  • இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ‘QUAD’ குழுவில் அங்கம் வகிக்கின்றன. அவை மலபார் பயிற்சியில் பங்கேற்கின்றன.

8. எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் பௌத்த சமூகம் லோசர் பண்டிகையை பாரம்பரிய புத்தாண்டு நாளாகக் கொண்டாடுகிறது?

அ) லடாக் 

ஆ) சிக்கிம்

இ) உத்தரகாண்ட்

ஈ) அருணாச்சல பிரதேசம்

  • லடாக், பாரம்பரிய புத்தாண்டான லோசரைக் கொண்டாடுகிறது. லோசர் பண்டிகையை இப்பகுதியில் உள்ள பௌத்த சமூகத்தினர் கொண்டாடி வருகின்றனர்.
  • ஜெ சோங்காபாவின் பிறப்பு மற்றும் முக்தி ஆண்டுவிழா ஆகியவற்றுடன் இந்தத்திருவிழா தொடங்கியது. மடங்கள், தூபிகள் மற்றும் பிற இடங்களில் மக்கள் திருவிழாவைக் கொண்டாடினர். திபெத்திய பௌத்தத்தில் பிப்ரவரி / மார்ச் மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

9. வரலாற்றுரீதியாக இந்தியாவின் ஒருபகுதியாக இருந்த குர்னாக் கோட்டை, தற்போது எந்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது?

அ) பாகிஸ்தான்

ஆ) சீனா 

இ) பங்களாதேஷ்

ஈ) ஆப்கானிஸ்தான்

  • வரலாற்று ரீதியாக இந்தியாவின் ஒருபகுதியாக இருந்த குர்னாக் கோட்டை, 1958 முதல் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோட்டைக்கு அருகில், சீனா புதிய பாலத்தை கட்டிவருகிறது. கிழக்கு லடாக்கில் உள்ள மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பாங்கோங் டிசோவில் இப்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

10. அணுவாயுதப் போரைத் தவிர்க்கும் நோக்கில் சமீபத்தில் அறிக்கையொன்றை வெளியிட்ட உலகளாவிய சங்கம் / அமைப்பு எது?

அ) UNSC 

ஆ) BRICS

இ) G20

ஈ) G7

  • ஐநா பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்புநாடுகளான ரஷ்யா, பிரிட்டன், சீனா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் சமீபத்தில் ஓரறிக்கையை வெளியிட்டன.
  • அணுவாயுதங்கள் மேலும் பரவுவதையும், அணுவாயுதப் போரையும் தவிர்க்க வேண்டும் என நாடுகள் கருதுகின் -றன. அணுசக்தி நாடுகளுக்கு இடையிலான போரைத் தவிர்க்கவும் உத்திசார் இடர்களைக் குறைக்கவும் இந்த அறிக்கை எண்ணுகிறது. அணுவாயுதங்களை “முதலில் பயன்படுத்தக்கூடாது” என்ற கொள்கையை சீன நாடு கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமனம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் K சிவனின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து புதிய தலைவருக்கான ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில் சோமநாத் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் அடுத்த 3 ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

கேரளத்தைச் சேர்ந்த சோமநாத் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2. தமிழக மருத்துவக் கட்டமைப்புக்கு `3,000 கோடி

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளில் `3,000 கோடி நிதியுதவி வழங்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ரமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களில் `4,080 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளை தில்லியிலிருந்து காணொலி முறையில் பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்கவிருக்கிறது. நகர்ப்புற மருத்துவக் கட்டமைப்பு, மாவட்ட பொது சுகாதார ஆய்வகங்கள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் போன்றவற்றை அமைப்பதற்கு இது பேருதவியாக அமையும் என பிரதமர் அப்போது தெரிவித்தார்.

3. ககன்யான் திட்டம்: மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் எஞ்சின் பரிசோதனை வெற்றி

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் எஞ்சினை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் எஞ்சின் பரிசோதிக்கப்பட்டது. இந்தப் பரிசோதனையில் அனைத்து அம்சங்களையும் எஞ்சினின் செயல்திறன் பூர்த்தி செய்தது.

இப்பரிசோதனை வெற்றிபெற்றது ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்லாகும். அத்திட்டத்தின்படி, மனிதரை விண்வெளிக்கு சுமந்து செல்லும் விண்கலத்தில் இந்த எஞ்சினை இணைப்பதற்கான நம்பகத்தன்மை பரிசோதனைமூலம் உறுதியாகியுள்ளது.

இந்த எஞ்சின் மேலும் நான்கு பரிசோதனைகளுக்கு உள்படுத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டு ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு தெரிவித்தது. அமெரிக்கா, ரஷியா, சீனாவைத் தொடர்ந்து 4ஆவது நாடாக இத்திட்டத்தை இந்தியா செயல்படுத்த உள்ளது.

4. பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு குறைபாடு ஏற்பட்ட விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான குழு விசாரணை: உச்சநீதிமன்றம்

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்கு குறைபாடு ஏற்பட்ட விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான குழு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கடந்த ஐந்தாம் தேதி பிரதமர் மோடி விமானம் மூலம் பஞ்சாப் சென்றார். மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காரில் செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால், விவசாயிகள் போராட்டம் காரணமாக அவரது வாகன அணி வகுப்பு மேம்பாலத்தில் 15 நிமிடத்துக்கும் மேலாக நின்றது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் தனது பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்து பிரதமர் பாதி வழியிலேயே டெல்லி திரும்பினார். பிரதமரின் பாதுகாப்பில் மாநில அரசு அலட்சியமாக செயல்பட்டதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாஜகவினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் பஞ்சாப் அரசுகள் தனித்தனியாக விசாரணைக் குழு அமைத்தன. அதேநேரம் என்ஜிஓ வழக்கறிஞர் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கொண்டுச் செல்ல கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோலி ஆகியோர் அமர்வு விசாரித்தது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் விசாரணைக் குழுக்கள் இந்த வழக்கில் விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் நாங்களே ஒரு விசாரணை குழுவை அமைக்கிறோம் என தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா செயல்படுவார் என்றும், குழுவின் உறுப்பினர்களாக பஞ்சாப் காவல்துறை தலைவர் (பாதுகாப்பு), தேசிய புலனாய்வு முகமை இயக்குநர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் இடம் பெறுவர்கள் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

5. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.3%-ஆக இருக்கும்: உலக வங்கி கணிப்பு

பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக மீட்சி பெறாததால், ஏற்கனவே கணித்தபடி, நடப்பு நிதியாண்டில் (2021-22) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கூறியுள்ளது.

தேசிய புள்ளியியல் அலுலகம், தேசிய வருவாய் கிடைத்த விவரங்களை சமீபத்தில் வெளியிட்டது. அதில், உற்பத்தி, சுரங்கம், வேளாண்மை ஆகிய துறைகள் கரோனாவுக்குப் பிறகு மீண்டுள்ளதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சமீபத்திய சர்வதேச பொருளாதார வாய்ப்புகள் குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கடந்த ஜூன் மாதம் கணித்திருந்தது. அதன் பிறகு பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக மீட்சி பெறவில்லை என்பதால் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பில் எந்த வித மாற்றமிருக்காது. அது, 8.3 சதவீதமாகவே இருக்கும்.

பல்வேறு துறைகளுக்கு வங்கிகள் கடனுதவி அளிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வலுப்பட வேண்டும். நிதியுதவியைக் குறைக்கக் கூடாது.

மேலும், நாட்டின் பொருளாதார வளா்ச்சி 2022-23’இல் 8.7 சதவீதமாகவும் 2023-24’இல் 6.8 சதவீதமாகவும் இருக்கும். தனியாரின் ஒத்துழைப்புடன் முதலீடுகள் அதிகரித்திருப்பதாலும், உற்பத்திசார் ஊக்குவிப்புத் திட்டங்களாலும் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. சில்லறை பணவீக்கம் 5.59%-ஆக அதிகரிப்பு

கடந்த டிசம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 5.59 சதவீதமாக அதிகரித்துள்ளது மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.

நுகர்வோர் விலைக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு சில்லறை பணவீக்கம் கணக்கிடப்படுகிறது.

இந்நிலையில் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, கடந்த நவம்பர் மாதம் சில்லறை பணவீக்கம் 4.91 சதவீதமாக இருந்தது. இது கடந்த டிசம்பரில் 5.59 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த நவம்பரில் உணவுப் பொருள்களின் பணவீக்கம் 1.87 சதவீதமாக இருந்தது. இது கடந்த டிசம்பரில் 4.05 சதவீதமாக அதிகரித்தது.

உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வால், கடந்த டிசம்பர் மாதம் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கி மதிப்பீட்டின்படி நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் மொத்த பணவீக்கம் உச்சத்தை எட்டி, பின்னர் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்ப -டுகிறது.

7. க. திருநாவுக்கரசுக்கு பெரியார் விருது, கே சந்துருவுக்கு அம்பேத்கர் விருது

தமிழக அரசின் 2021-ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது திராவிட இயக்க ஆய்வாளர் க திருநாவுக்கரசுக்கும், அம்பேத்கர் விருது ஓய்வுபெற்ற நீதிபதி கே சந்துருவுக்கும் வழங்க முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

தமிழக அரசு ஒவ்வோர் ஆண்டும், சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில், சமூக நீதிக்கான பெரியார் விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது.

அவ்வகையில், 2021ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான க திருநாவுக்கரசுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டுவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 2021ஆம் ஆண்டுக்கான Dr அம்பேத்கர் விருது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே சந்துருவுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

விருது தொகை உயர்வு: விருது பெற்றோருக்கு விருது தொகையாக தற்போது வழங்கப்பட்டு வரும் `1 இலட்சம் என்பதை `5 இலட்சமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். விருதுத் தொகையுடன், தங்கப் பதக்கமும் தகுதி உரையும் வழங்கப்படும்.

பெரியார் விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள க திருநாவுக்கரசு திராவிட இயக்கத்தின் நடமாடும் கலைக் களஞ்சியம் என தமிழ்ச் சமூகத்தால் போற்றப்படுபவர். திராவிட இயக்க வரலாறான நீதிக்கட்சி வரலாறு என்னும் நூலை, அந்த இயக்கம் 1916-இல் தொடங்கப்பட்டது முதல் 1944-இல் திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது வரை இரண்டு தொகுதிகளாகப் படைத்துள்ளார்.

திராவிட இயக்க வேர்கள், திராவிட இயக்கத் தூண்கள் போன்ற பல்வேறு வரலாற்று நூல்களையும் எழுதி தமிழ்ச் சான்றோர்களின் பாராட்டுகளைப் பெற்றவர்.

டாக்டர் அம்பேத்கர் விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே சந்துரு தன்னுடைய பணிக்காலத்தில் 96,000 வழக்குகளுக்குத் தீர்வுகண்டு சாதனை படைத்தவர்.

‘அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்’, ‘என் வழக்கை கவனி!’, ‘தமிழ்நாட்டில் ஒரு பெண் நீதிமன்றத்தை அணுகும்போது’ ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.

8. 2 ஆண்டுகளில் இந்தியாவில் வனப்பரப்பு 2,261 சதுர கிமீ அதிகரிப்பு: ஆய்வறிக்கை தகவல்

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் 2261 சகிமீ அளவுக்கு வனப்பரப்பு அதிகரித்துள்ளதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனப்பரப்பு பற்றி ஆய்வை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய வனப்பரப்பு ஆய்வு அமைப்பு நடத்தி வருகிறது.

அந்த வகையில் 2021ஆம் ஆண்டுக்கான அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த இரு ஆண்டுகளில் 1540 சதுர கிமீ அளவுக்கு வனப்பரப்பும், 721 சகிமீ அளவுக்கு மரங்கள் அடந்த பகுதியும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் வனப்பரப்பு அதிகரித்திருப்பது திருப்திகரமாக உள்ளது.

நாட்டில் வனப்பரப்பை அதிகரிக்கச் செய்வதற்காக பல்வேறு முடிவுகளை மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் எடுத்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் வனப் பரப்பை அதிகரிக்க பசுமைத் திட்டம், நகர் வன யோஜனா ஆகிய திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ளது.

நாட்டின மொத்த பரப்பில் தற்போது 8.09 கோடி ஹெக்டேர் அளவுக்கு வனப்பகுதியாக உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,261 சதுர கிமீ அளவுக்கு அதிகரித்துள்ளது. அதில், ஆந்திரம் (647 சதுர கிமீ), தெலங்கானா (632 சதுர கிமீ), ஒடிஸா (537 சதுர கிமீ), கர்நாடகம் (155 சதுர கிமீ), ஜார்கண்ட் (110 சதுர கிமீ) ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.

இருப்பினும் அருணாசல பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வனப்பரப்பு 1,020 சதுர கிமீ அளவுக்கு குறைந்துள்ளது.

வனப்பகுதிகளில் கடந்த 2019 நவம்பர் முதல் 2020 ஜூன் வரையிலான காலகட்டத்தில் 1,46,920 தீ விபத்துகள் நடந்துள்ளன. இதேபோல், கடந்த 2020 நவம்பர் முதல் 2021 ஜூன் வரையிலான காலகட்டத்தில் 3,98,774 தீ விபத்துகள் நடந்துள்ளன என்று வனப்பரப்பு பற்றிய அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. How many women MPs are present in the Parliamentary panel, which was set up to examine the Prohibition of Child Marriage (Amendment) Bill?

A) 01 

B) 02

C) 03

D) 04

  • Trinamool Congress MP Sushmita Dev is the only woman in the 31–member parliamentary panel assigned to examine the Prohibition of Child Marriage (Amendment) Bill. The seeks to raise the legal age of marriage for women to 21.
  • At present, the minimum age of marriage for men is 21 and for women is 18. The proposal to increase the marriage age of women was recommended by the NITI Aayog.task force headed by Jaya Jaitley.

2.Researchers at which Institution has developed “5th generation microwave absorbers”?

A) IIT Madras

B) IIT Bombay

C) Kerala University 

D) IISc, Bengaluru

  • A Professor and Research Scholar Department of Physics at Kerala University, have developed fifth–generation (5G) microwave absorbers, which can be used as an effective shield against electromagnetic radiation. The electromagnetic interference (EMI) is known to be dangerous to the health of living organisms. It also affects the high–end electronic devices. They used new shielding material ‘mayenite electride’ for microwave absorption in high frequency region.

3. The Special Protection Group Act, 1988 was passed to provide security to……….

A) Nuclear Power Plants

B) Prime Minister and former Prime Ministers 

C) India’s land borders

D) India’s water borders

  • The Special Protection Group Act, 1988 was passed by the parliament after the assassination of former Prime Minister Indira Gandhi. It aimed to provide for regulation of an armed force of the Union for providing security to the Prime Minister of India and the former Prime Ministers of India and members of their immediate families. It was extended to all former Prime Ministers and their immediate families after former Prime Minister Rajiv Gandhi was assassinated.

4. ‘’Abilympics” are the competitions held for Persons with Disabilities, in which field?

A) Sports

B) Coding

C) Skill Demonstration 

D) Business Administration

  • The National Competition of IndiaSkills 2021 has been organised by National Skill Development Corporation (NSDC). NSDC is the nodal agency for skill and entrepreneurship development, working under the Ministry of Skill Development and Entrepreneurship (MSDE).
  • The event included ‘Abilympics’, a Skill Demonstration by Persons with Disabilities. IndiaSkill 2021 also introduced three new skills – Yoga, Shoe Making (Leather) and Garment Making (Leather).

5. ‘Hyderabad declaration’, which was seen in the news, is associated with?

A) Climate Change

B) E–Governance 

C) Women Empowerment

D) Covid–19 Protocol

  • The Department of Administrative Reforms & Public Grievances (DAPRG), Ministry of Personnel, Public Grievances & Pensions and Ministry of Electronics & Information Technology (MeitY), in collaboration with the Government of Telangana organized the 24th National Conference on e–Governance at Hyderabad.
  • The theme of this Conference is “India’s Techade: Digital Governance in a Post Pandemic World”.

6. Sanjay Lake is a wetland located in which state/UT?

A) Karnataka

B) New Delhi 

C) Himachal Pradesh

D) Andhra Pradesh

  • The Asian Waterbird Census (AWC) is being carried out across seven wetlands in the NCR — Hastinapur Wildlife Sanctuary, Dhanauri and Surajpur wetlands in Greater Noida, Delhi Zoo and Sanjay Lake, Okhla Bird Sanctuary, Najafgarh Jheel and the Yamuna River.
  • The census recorded only 13 species in the Sanjay Lake, down from 17 species recorded from 2019 to 2021.

7. Which group of countries participate in ‘Sea Dragon 22’ Military Exercise?

A) Indo–Pacific countries 

B) QUAD Group

C) Indian Ocean Rim Countries

D) Balkan Countries

  • The US Navy announced that the Sea Dragon 22 exercise began along with the navies of India, Australia, Canada, Japan and South Korea. It is a multi–lateral anti–submarine warfare exercise in the Pacific Ocean, participated by six Indo–Pacific nations.
  • India, Japan, Australia and America are also part of the ‘QUAD’ group, and also participate in the Malabar exercise.

8. Which state/UTs Buddhist community celebrates Losar festival as the traditional New Year?

A) Ladakh 

B) Sikkim

C) Uttarakhand

D) Arunachal Pradesh

  • Ladakh is celebrating Losar, the traditional new year. Losar festival is being celebrated by Buddhist Community in the region. The festival began with the celebration of Birth and Nirvana Anniversary Je Tsongkhapa. People celebrated the festival at religious places like Monasteries, Stupas and other places. The festival is celebrated in Tibetan Buddhism in the month of February or March.

9. Khurnak Fort, which was historically a part of India, is under the control of which country, at present?

A) Pakistan

B) China 

C) Bangladesh

D) Afghanistan

  • Khurnak Fort, which was historically a part of India has been under Chinese control since 1958. Near to the Fort, China is building a new bridge. The bridge is being constructed on Pangong Tso, near the Line of Actual Control (LAC) in eastern Ladakh.

10. Which global association / body recently released a statement with a view to avoid nuclear war?

A) UNSC 

B) BRICS

C) G20

D) G7

  • The five permanent members of United Nations Security Council, namely Russia, Britain, China, the United States and France released a statement recently. The countries are of the view that a further spread of nuclear arms and a nuclear war should be avoided. The statement seeks to avoid war between the nuclear states and reduce strategic risks. China has a “no first use” policy on nuclear weapons.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!