Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

13th & 14th November 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. (அடல் புத்தாக்க இயக்கம் (AIM)) AIM-சிரியஸ் புத்தாக்க திட்டமானது இந்தியா மற்றும் எந்த நாட்டின் மாணாக்கருக்காக தொடங்கப்பட்டது?

அ. சீனா

ஆ. இரஷ்யா

இ. தாய்லாந்து

ஈ. தென் கொரியா

  • இரஷ்யாவின் SIRIUS மற்றும் Atal Innovation Mission (AIM) ஆகியவை இணைந்து சமீபத்தில், ‘AIM – Sirius Innovation Program 3.0’ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்திய மற்றும் இரஷ்ய பள்ளி மாணாக்க -ருக்கான பதினான்கு நாள் திட்டமாகும். இது முதல் இந்தோ-இரஷ்ய இருதரப்பு இளையோர் புத்தாக்க முன்னெடுப்பாகும். இது, இரு நாடுகளுக்கும் தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

2. சாரநாத் ஒலி-ஒளி நிகழ்வினை எந்த மாநிலத்தில் பிரதமர் தொடங்கி வைத்தார்?

அ. மத்திய பிரதேசம்

ஆ. உத்தர பிரதேசம்

இ. மகாராஷ்டிரா

ஈ. பிகார்

  • பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நகரத்தில் காணொலிக் காட்சிமூலம் பல மேம்பாட்டு திட்டங்களை தொடங்கிவைத்தார். இம்மேம்பாட்டுத் திட்டங்களுள் சாரநாத் ஒலி-ஒளி நிகழ்வு, பசுக்களின் பாதுகாப்பிற்கான உட்கட்டமைப்பு வசதிகள், வாரணாசி நகர பொலிவுறு ஒளிவிளக்குப் பணிகள் ஆகியவை அடங்கும்.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பின் மாதிரி, எந்த நகரத்தில் திறக்கப்பட்டது?

அ. கொல்கத்தா

ஆ. புது தில்லி

இ. சென்னை

ஈ. பனாஜி

  • செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையின் மாதிரியை பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங், புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO பவனில் திறந்து வைத்தார்.
  • ‘மிஷன் சக்தி’ என்று அழைக்கப்படும் நாட்டின் முதல் செயற்கைகோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுக
    -ணையின் சோதனை கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி ஒடிசாவில் உள்ள Dr APJ அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. மிகவும் சவாலான இந்தச்சோதனையில் ‘மிஷன் சக்தி’ ஏவுகணை துல்லியமாக இலக்கை எட்டியதன்மூலம் விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள் -களைத் தாக்கி அழிப்பதில் உலக அளவில் நான்காவது நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சுஷா நகரம் அமைந்துள்ள நாடு எது?

அ. எத்தியோப்பியா

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ. அசர்பைஜான்

ஈ. நியூசிலாந்து

  • ‘சுஷா’ என்பது உத்திசார் முக்கியத்துவம்மிக்க ஒரு கலாச்சார நகரமாகும். இது, நாகோர்னோ-கராபாக் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இது, அசர்பைஜானின் ஒருபகுதியாகக் கருதப்படும் ஒரு மலைப் பாங்கான பகுதியாகும்; ஆனால், ஆர்மீனிய பூர்வகுடிகளின் கட்டுப்பாட்டில் இது உள்ளது. அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் தனது நாட்டின் படைகள் சுஷா நகரத்தைக் கைப்பற்றியதாக அண்மையில் அறிவித்தார். இது, நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தின் இரண்டாவது பெருநகராகும். நாகோர்னோ-கராபாக் சுற்றியுள்ள பகுதியில் நிகழ்ந்த சண்டையில் 1,000’க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

5. இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கொள்கை-2020 குறித்து அண்மையில் வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் கொள்கை ரீதியான ஆலோசனையை நடத்தியவர் யார்?

அ. நரேந்திர மோடி

ஆ. பியூஷ் கோயல்

இ. ஹர்ஷ் வர்தன்

ஈ. நரேந்திர சிங் தோமர்

  • இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக்கொள்கை-2020’க்கு தங்கள் பங்களிப்பை அளிக்கும் வழிகள்குறித்து, வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய அறிவியலாளர்களுடன், அறிவியல் தொழில்நுட்ப துறைக்கு பொறுப்பு வகிக்கும் சுகாதாரத்தறை அமைச்சர் Dr ஹர்ஷ் வர்தன், காணொலிக் காட்சிமூலம் ஆலோசனை நடத்தினார். இதுபோன்ற ஆலோசனைக் கூட்டத்தில் Dr ஹர்ஷ் வர்தன் பங்கேற்பது இதுவே முதல்முறை.

6. இலக்கியத்திற்கான நடப்பாண்டு (2020) JCB பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நூல் எது?

அ. Djinn Patrol on the Purple

ஆ. Chosen Spirits

இ. These, Our Bodies, Possessed by Light

ஈ. Moustache

  • மலையாள எழுத்தாளர் S ஹரீஷ் எழுதிய, ஜெயஸ்ரீ கலதிலால் ஆங்கில மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட, ‘Moustache’ என்ற நூல், நடப்பாண்டு (2020) இலக்கியத்திற்கான JCB பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • `25 இலட்சம் மதிப்புடைய இந்த JCB பரிசு, இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க இலக்கிய விருதுகளுள் ஒன்றாகும். 2020 இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற 5 நூல்களுள் இந்நூலுக்கு விருது கிடைத்துள்ளது.

7. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தேசிய தரவுத்தளத்தை உருவாக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ள நடுவண் அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இ. நிதி அமைச்சகம்

ஈ. சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்

  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான முதல் தேசிய தரவுத்தளத்தை உருவாக்குவதற்கு நடுவண் நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது, ஆதார் இணைக்கப்பட்ட தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்க -ளுக்கான தரவுத்தளமாகும். இத்தரவுத்தளம் அத்தகைய தொழிலாளர்களுக்கே உரித்தான குறிப்பிட்ட திட்டங்களை செயல்படுத்த அரசாங்கத்திற்கு ஒரு தளத்தை வழங்கும்.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘மெகாஸ்கோப்’ என்பதை தொடங்கிய அமைப்பு எது?

அ. NITI ஆயோக்

ஆ. IIT முன்னாள் மாணாக்கர் பேரவை

இ. இந்திய ரிசர்வ் வங்கி

ஈ. NABARD

  • IIT முன்னாள் மாணாக்கர் பேரவையானது ‘மெகாஸ்கோப்’ என்றவொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தொற்றுநோய்களைத் துல்லியமாகக் கண்டறிவதற்கான தரவு பகுப்பாய்வு, சோதனை மற்றும் மரபியல் ஆகியவை இதில் அடங்கும். தனிப்பயனாக்கப்பட்ட மருந்தை பரிந்துரைக்கவும் இது பயன்படுத்தப்படும். மெகாஸ்கோப், பரிசோதனையின் துல்லியத்தை மேம்படுத்துவதோடு நோயின் தீவிரத்தை கணிப்பதன் மூலமும் சிகிச்சையின் செயல்திறனை மேம்படுத்துகிறது.

9. சுவாமி விவேகானந்தரின் முழு உருவச்சிலையானது பிரதமரால் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ளது?

அ. மேற்கு வங்கம்

ஆ. உத்தர பிரதேசம்

இ. புது தில்லி

ஈ. மேகாலயா

  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி விவேகானந்தரின் முழுவுருவச்சிலையை நவ.12ஆம் தேதி அன்று புது தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் (JNU) திறந்து வைத்தார். இச்சிலையை அவர் காணொலிக்காட்சிமூலம் திறந்து வைத்தார். இந்தச் சிலையானது JNU முன்னாள் மாணவர்களின் ஆதரவுடன் JNU வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

10. ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநர், கீழ்க்காணும் எந்தக் கடவுளரின் பெயரில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வெளியிட்டுள்ளார்?

அ. சிவன்

ஆ. மாயோன்

இ. வைஷ்ணவ தேவி

ஈ. கொற்றவை

  • வைஷ்ணவ தேவி ஆலயத்தின் பெயரால் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெளியிட்டுள்ளார். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாணயத்தை ஜம்மு மற்றும் தில்லியில் விற்க வைஷ்ணவ தேவி கோவில் வாரியம் முடிவு செய்துள்ளது.

1. ‘(Atal Innovation Mission) AIM–Sirius Innovation Programme’ has been launched for the students of India and which country?

[A] China

[B] Russia

[C] Thailand

[D] South Korea

  • Russia’s SIRIUS and Atal Innovation Mission (AIM) has recently launched ‘AIM–Sirius Innovation Programme 3.0’. It is a 14–day virtual programme for Indian and Russian schoolchildren. It is also the first Indo–Russian bilateral youth innovation initiative, which envisages to develop technological solutions for both countries.

2. Sarnath Light and Sound show has been inaugurated recently by the Prime Minister in which state?

[A] Madhya Pradesh

[B] Uttar Pradesh

[C] Maharashtra

[D] Bihar

  • Prime Minister Narendra Modi has recently inaugurated several development projects in the city of Varanasi, Uttar Pradesh, via video conferencing. The development projects include Sarnath Light and Sound show, infrastructure facilities for protection and conservation of cows, Varanasi city smart lighting work among others.

3. The model of anti–satellite missile system, that was seen in news, has been inaugurated in which city?

[A] Kolkata

[B] New Delhi

[C] Chennai

[D] Panaji

  • Union Defence Minister Rajnath Singh has recently inaugurated a model of the anti–satellite missile system. The model, which is seen as a symbol of national technological advancement, has been inaugurated at the Defence Research and Development Organisation (DRDO) headquarters in New Delhi. In 2019, DRDO conducted an Anti–Satellite (A–SAT) missile test ‘Mission Shakti’.

4. Susha, that was seen in news recently, is the city located in which country?

[A] Ethiopia

[B] United States of America

[C] Azerbaijan

[D] New Zealand

  • Shusha is a strategically important cultural city located near the Nagorno–Karabakh region, a mountainous enclave regarded as part of Azerbaijan but populated and controlled by ethnic Armenians. The President of Azerbaijan Ilham Aliyev has recently announced that his country’s forces had taken Shusha. It is also the second–largest city in the Nagorno–Karabakh enclave. Over 1,000 people have died in the fights around Nagorno–Karabakh.

5. Who has recently held a policy consultation with Indian diaspora regarding India’s Science Technology and Innovation Policy 2020?

[A] Narendra Modi

[B] Piyush Goyal

[C] Harsh Vardhan

[D] Narendra Singh Tomar

  • The Union Minister for Science and Technology Harsh Vardhan held a consultation with the Indian diaspora. This interaction was aimed at enabling them to make valuable contributions in India’s Science Technology and Innovation Policy (STIP) 2020. This interaction with Indian diaspora is seen as first of its kind.

6. Which book has been selected for 2020 JCB Prize for Literature?

[A] Djinn Patrol on the Purple

[B] Chosen Spirits

[C] These, Our Bodies, Possessed by Light

[D] Moustache

  • The Book named Moustache written by Malayalam writer S. Hareesh and translated to English by Jayasree Kalathil has been selected for the 2020 JCB Prize for Literature. The prize is worth Rs 25 lakh and is one of the most prestigious literary awards in India. The 2020 shortlist comprised five books, of which Moustache has been selected for the award.

7. Which Ministry has given approval for creation for National Database of Unorganised Workers?

[A] Ministry of Home Affairs

[B] Ministry of Labour and Employment

[C] Ministry of Finance

[D] Ministry of Social Justice

  • The Union Ministry of Finance has given an approval for creation of the first ever national database of migrant labour called the National Database of Unorganised Workers (NDUW), which would be seeded with Aadhaar. This database would provide a platform for the government to implement specific programmes for such labourers

8. Megascope, which was seen in news recently, has been launched by which organisation?

[A] NITI Aayog

[B] IIT Alumni Council

[C] Reserve Bank of India

[D] NABARD

  • The IIT Alumni Council has launched MegaScope, which includes data analysis, testing and genomics to diagnose infections accurately. It would also be used to prescribe personalised medicine. The MegaScope aims to improve accuracy of testing and predict the disease severity thereby enhancing treatment effectiveness.

9. A life–size statue of Swami Vivekananda is to be inaugurated by the Prime Minister in which state / UT?

[A] West Bengal

[B] Uttar Pradesh

[C] New Delhi

[D] Meghalaya

  • Prime Minister of India Narendra Modi is set to unveil a life size statue of Swami Vivekananda. The statue is being unveiled at the Jawaharlal Nehru University (JNU) campus at New Delhi on November 12th. The statue would be unveiled by the Prime Minister in a virtual mode. The statue has been installed in JNU campus with the support of the JNU alumni.

10. Lt. Governor of Jammu & Kashmir has released Gold and silver coins in the name of which God?

[A] Lord Shiva

[B] Lord Maayon

[C] Vaishno Devi

[D] Kotravai

  • Gold and silver coins in the name of the Vaishno Devi shrine have been released by the Lt. Governor of Jammu and Kashmir Manoj Sinha. The coins have been released ahead of Diwali festival. The Vaishno Devi shrine board has decided to make the coin available in Jammu as well as in Delhi.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!