TnpscTnpsc Current Affairs

13th & 14th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

13th & 14th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 13th & 14th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சமீப செய்திகளில் இடம்பெற்ற, குரு காசிதாஸ் தேசிய பூங்கா & தமோர் பிங்லா வனவுயிரி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) மேற்கு வங்கம்

ஆ) ஒடிசா

இ) சத்தீஸ்கர் 

ஈ) பீகார்

  • சத்தீஸ்கர் மாநில அரசானது குரு காசிதாஸ் தேசிய பூங்கா & தமோர் பிங்லா வனவுயிரி சரணாலயம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதிகளை புலிகள் காப்பகமாக அறிவிக்கவுள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சத்தீஸ்கர் மாநில அரசின் இந்த முன்மொழிவை அங்கீகரித்துள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லையில், வடக்குப் பகுதியில் இந்தப் புதிய காப்பகம் அமைந்துள்ளது.

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற ஈர்ப்பிலாவெளி அணு கடிகாரத்துட -ன் தொடர்புடைய விண்வெளி ஆய்வு முகமை எது?

அ) இஸ்ரோ

ஆ) நாசா 

இ) வர்ஜின் கேலக்டிக்

ஈ) ஸ்பேஸ் எக்ஸ்

  • நாசாவின் ஈர்ப்பிலா விண்வெளி அணு கடிகாரமானது தனது பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது. இக்கடிகாரம் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வகத்தால் கட்டப்பட்டதாகும்.
  • ஈர்ப்பிலா விண்வெளி அணு கடிகாரம் என்பது மிகத்துல்லியமான பாதரச அயனி அணு கடிகாரமாகும். 2019 ஜூன் 25 அன்று பாதுகாப்புத் துறை விண்வெளி சோதனைத் திட்டம்-2 திட்டத்தில் இது தொடங்கப்பட்டது. புவி சுற்றுப்பாதையில் அதன் ஓராண்டு முதன்மைப் பணியை நிறைவு செய்த பின்னர், மேலும் தரவுகளைச் சேகரிப்பதற்காக, NASA இந்தப் பணியை விரிவுபடுத்தியது.

3. துறைமுகம் தொடர்பான தகவல்களில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய கப்பல் அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட செயலியின் பெயர் என்ன?

அ) AtmaNirbhar Port

ஆ) MyPort 

இ) Bharat Port

ஈ) Port in Hand

  • துறைமுக நடவடிக்கைகளை கண்காணிக்கும் ‘மை போர்ட்’ செயலியை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இச் செயலி, துறைமுக நடவடிக்கைகள் அனைத்தையும் டிஜிட்டல்மூலம் கண்காணிக்கிறது. வெளிப்படைத்தன்மையையும் மற்றும் தகவல்களை எளிதாக பெறுவதையும் இந்தச் செயலி ஊக்குவிக்கிறது. கப்பல் நிறுத்தம், கொள்கலன் நிலவரம், கட்டணம், துறைமுகத்தின் விடுமுறை நாட்கள் போன்ற தகவல்களையும் இந்தச்செயலியில் 24 ம. நேரமும் பெறலாம்.

4. அண்மையில் இந்தியாவுக்கு வந்த மெட்டே பிரடெரிக்சன், எந்த நாட்டின் பிரதமராவார்?

அ) பின்லாந்து

ஆ) டென்மார்க் 

இ) பிரான்ஸ்

ஈ) ஆஸ்திரேலியா

  • ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியும் டேனிஷ் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த பிரடெரிக்சன், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். முன்னதாக, பிரடெரிக்சன், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை சந்தித்தார். 200’ க்கும் மேற்பட்ட டேனிய நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன மற்றும் சுமார் 60 இந்திய நிறுவனங்கள் டென்மார்க்கில் உள்ளன.

5. அடல் பிரகதி வழித்தடம் என்பது எந்த இந்திய மாநிலம் / UT’இல் அமைக்கப்படவுள்ள ஒரு விரைவு சாலை திட்டமாகும்?

அ) குஜராத்

ஆ) மத்திய பிரதேசம் 

இ) உத்தரகண்ட்

ஈ) உத்தர பிரதேசம்

  • அடல் பிரகதி வழித்தடத்திற்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலத்திற்கு ஈடாக அரசு நிலம் வழங்கும் திட்டத்திற்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது பாரத்மாலா திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் 313 கிமீ நீள 4 வழித்தட விரைவு சாலை திட்டமாகும். முன்மொழியப்பட்டுள்ள இந்த அடல் பிரகதி பாதை, மத்திய பிரதேசத்தின் ஷியோபூர், மொரேனா மற்றும் பிந்த் மாவட்டங்கள் வழியாக செல்லும். இத்திட்டத்திற்காக, மபி மாநில அரசு நிலத்தை இலவசமாக வழங்குகிறது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஜிம் கார்பெட் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ) உத்தரகண்ட் 

ஆ) பீகார்

இ) மேற்கு வங்கம்

ஈ) ஆந்திர பிரதேசம்

  • ஜிம் கார்பெட் தேசிய பூங்காவானது உத்தரகண்டில் உள்ள உலகப்புகழ் பெற்ற புலிகள் காப்பகமாகும். மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஷ்வினி குமார் சௌபே, எதிர்காலத்தில் ராம்கங்கா தேசிய பூங்கா என இந்தத் தேசிய பூங்கா பெயர் மாற்றஞ்செய்யப்படலாம் என அறிவித்தார். இது இந்தியாவின் முதல் தேசிய பூங்காவாகும். சுமார் 521 கிமீ பரப்பளவில் இது பரவி அமைந்துள்ளது. இது வங்கப்புலிகள், சிறுத்தைகள் மற்றும் காட்டு யானைகளுக்கு பெயர் பெற்றதாகும்.

7. போர்ப்ஸ் செல்வந்தர்களின் பட்டியலில் தொடர்ந்து 14ஆவது ஆண்டாக முதலிடம் பிடித்த இந்தியர் யார்?

அ) கௌதம் அதானி

ஆ) முகேஷ் அம்பானி 

இ) இரஜினிகாந்த்

ஈ) உதயநிதி ஸ்டாலின்

  • ரிலையன்ஸ் தொழிற்துறைகளின் தலைவர் முகேஷ் அம்பானி, போர்ப்ஸ் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து 14ஆவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலின்படி, அவரின் மொத்த சொத்து மதிப்பு $92 பில்லியன் டாலர்களாகும். 2021ஆம் ஆண்டில் மட்டும் அவர் தனது நிகர சொத்து மதிப்பில் 4 பில்லியன் டாலர்களைச் சேர்த்துள்ளார்.
  • $74.8 பில்லியன் டாலர் செல்வத்துடன் கௌதம் அதானி, இந்தியாவின் 2ஆவது பணக்காரராக உள்ளார். HCL’இன் சிவ் நாடார் $31 பில்லியன் டாலர் செல்வத்துடன் இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவென்யூஸ் சூப்பர்-மார்ட் நிறுவனர் ராதாகிருஷ்ணன் டாமனி மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் சைரஸ் பூனாவல்லா நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளனர்.

8. ‘Shifting Gears: Digitization and Services-Led Development’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?

அ) IMF

ஆ) உலக வங்கி 

இ) NITI ஆயோக்

ஈ) UNEP

  • உலக வங்கியானது சமீபத்தில் ‘Shifting Gears: Digitization & Services-Led Development’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மெய்யான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 8.3% அளவுக்கு வளர்ச்சியுறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, வாஷிங்டனில் அடுத்த வாரம் தொடங்கும் உலக வங்கியின் ஆண்டுக்கூட்டங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட தெற்காசிய பொருளாதாரம் குறித்த அறிக்கையாகும்.

9. ரிசர்வ் வங்கியின் 4ஆம் ஒழுங்குமுறை பயிற்சிக்கூட்டமைப்பின் கருப்பொருள் என்ன?

அ) MSME கடனளித்தல்

ஆ) சில்லறை வணிக கடனளித்தல்

இ) பன்னாட்டு வங்கி

ஈ) நிதிசார் மோசடிகள் 

  • இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கியின் 4ஆவது ஒழுங்குமுறை பயிற்சிக்கூட்டமைப்பு, “நிதிசார் மோசடிகளில்” தனது கவனத்தைச் செலுத்தும் என்று அறிவித்துள்ளார். “மோசடிகள் நிகழ்வதற்கும் கண்டறிதலுக்கும் இடையிலான பின்னடைவைக் குறைத்தல்” & “நிர்வாக அமைப்பை வலுப்படுத்துதல்” ஆகியவற்றில் முக்கிய கவனஞ்செலுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

10. ஏர் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியில், எந்த இந்திய நிறுவனம் வெற்றிபெற்றது?

அ) டாடா சன்ஸ் 

ஆ) ரிலையன்ஸ் தொழிற்துறைகள் நிறுவனம்

இ) அதானி குழுமம்

ஈ) மஹிந்திரா குழுமம்

  • ஏர் இந்தியாவை நிறுவனத்தை கையாகப்படுத்தும் முயற்சியில் டாடா சன்ஸ் வெற்றிபெற்றுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள இந்திய அரசின் 100% பங்குகளையும் டாடா வாங்கியுள்ளது. இதில் `2,700 கோடி அரசுக்கு பணமாகக் கிடைக்கும். மீதமுள்ள `15,300 கோடி ஏர் இந்தியாவின் கடனுக்காக டாடா சன்ஸ் பொறுப்பேற்றுக் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவின் மொத்த கடன் `65,562 கோடியாக உள்ளது. கடந்த 1932ஆம் ஆண்டில் JRD டாடாவால் தொடங்கப்பட்ட நிறுவனத்தை 1953’இல் நாட்டுடைமையாக்கியது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள்: பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது

சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 பேரை புதிய நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியுடன் சேர்த்து மொத்தம் உள்ள நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 75. சமீபத்தில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணி யாற்றி வந்த நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்யா சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் சேர்த்து மொத்தம் 56 நீதிபதிகள் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பதவி வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றிவரும் மதி சுந்தரம், டி பரத சக்ரவர்த்தி, ஆர் விஜயகுமார், முகமது ஷபி ஆகிய நால்வரையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அதன்படி மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று இந்த நால்வரையும் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் 4 பேருக்கும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இவர்களுடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கெனவே கடந்தாண்டு டிசம்பரில் நீதிபதிகள் ஜி சந்திரசேகரன், ஏ ஏ நக்கீரன், வி சிவஞானம், ஜி இளங்கோவன், எஸ் ஆனந்தி, எஸ் கண்ணம்மாள், எஸ் சத்திகுமார் சுகுமார குரூப், கே முரளி சங்கர், ஆர் என் மஞ்சுளா, டி வி தமிழ்ச்செல்வி ஆகிய 10 பேர் ஒரே நேரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வழக்கறிஞராக பணியாற்றிவந்த ஸ்ரீமதி சுந்தரம் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், உயர்நீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

2. பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் அக்.12 அன்று தலைமைச் செயலகத்திலிருந்தும், காணொலிக்காட்சி வாயிலாக புது தில்லியில் இருந்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் ஜெனரல் வி கே சிங் ஆகியோர் முன்னிலையிலும், தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் National Highway Logistics Management Ltd., சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து, பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், திருவள்ளூர் மாவட்டம், மப்பேட்டில் `1,200 கோடி முதலீட்டில் ‘பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா’ தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகத்தில் அமையும் முதலாவது பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காவாக இது அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், 158 ஏக்கர் பரப்பளவில் `1,200 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.

3. மலபார் கூட்டு கடற்படை பயிற்சி: இரண்டாம் கட்டம் தொடக்கம்

க்வாட் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் மலபார் கூட்டு கடற் படை பயிற்சி தொடங்கியது. க்வாட் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளின் கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும் மலபார் கூட்டுப் பயிற்சியின் முதல் கட்டம் மேற்கு பசிபிக்கில் உள்ள குவாம் கடற்பகுதியில் ஆகஸ்ட் 26 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப்பயிற்சியின் இரண்டாம் கட்டம் வங்கக்கடல் பகுதியில் தொடங்கியது.

4 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ரன்விஜய், ஐஎன்எஸ் சத்புரா போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல், கடற்பகுதியில் நீண்டதூரம் ரோந்துப்பணிகளை மேற்கொள்ளும் பி81 விமானங்கள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா தரப்பில் அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கிக் கப்பல் USS கார்ல் வின்சன், ஏவுகணை தாங்கி USS லேக் சாம்லேன், யுஎஸ்எஸ் ஸ்டாக்டேல் போர்க்கப்பல்கள் பங்கேற்றுள்ளன. ஜப்பான் சார்பில் ஹெலிகாப்டர் தாங்கி ஜேஎஸ் காகா, ஜேஎஸ் முராசமே போர்க்கப்பல்கள், ஆஸ்திரேலியா தரப்பில் எச்எம்ஏஎஸ் பலாரட், எச்எம்ஏஎஸ் சிரியஸ் போர்க்கப்பல்கள் பங்கேற்றுள்ளன.

மலபார் பயிற்சியின் இரண்டாம் கட்டத்தில் சிக்கலான பயிற்சிகள் மேற் கொள்ளப்படவுள்ளதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது ராணுவ ஆதிக்கத்தை சீனா அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மலபார் பயிற்சி நடைபெறுகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியம் சுதந்திரமாக இருப்பதை உறுதி செய்ய இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அவற்றுடன் ஒத்த கருத்துடைய நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

4. தமிழக அஞ்சல் துறை சார்பில் மூன்று சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

தமிழக அஞ்சல் துறை சார்பில், கரோனா தடுப்பூசி குறித்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் வரைந்த ஓவியங்களில் 2 சிறப்பு அஞ்சல் உறைகளும், சுதந்திரப் போராட்ட வீராங்கனை கேப்டன் லஷ்மி சாஹலை கெளரவிக்கும் வகையில், சிறப்பு அஞ்சல் உறையும் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு, அஞ்சல்துறை சிறப்பு தபால்தலை சேகரிப்பை பள்ளி மாணவர்கள் மத்தியில் ஊக்கப்படுத்தும் விதமாக, கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஓவியப் போட்டியை நடத்தியது. அதில் வெற்றி பெற்ற மாணவர்கள் வரைந்த ஓவியங்களில் இரண்டு சிறப்பு அஞ்சல் உறைகளும், சுதந்திரப் போராட்ட வீராங்கனை கேப்டன் லஷ்மி சாஹலை கெளரவிக்கும் வகையில், சிறப்பு அஞ்சல் உறையும் வெளியிடப்பட்டுள்ளது.

5. வருவாய்த் துறையின் திட்டங்களை அறிய பிரத்யேக இணையதளம்: முதல்வர் மு க ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

வருவாய்த் துறையின் திட்டங்கள், அரசாணைகள் உள்ளிட்டவற்றை அறிவதற்கான பிரத்யேக இணையதளத்தை முதல்வர் மு க ஸ்டாலின், தொடக்கி வைத்தார். மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள், துணை ஆட்சியர்கள் மாவட்ட மாறுதல் பெறுவதற்கென பிரத்யேக இணையதளத் -தை முதல்வர் முக ஸ்டாலின் தொடக்கி வைத்தார். மேலும், வருவாய் நிர்வாக ஆணையரகத்துக்கென பிரத்யேக இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

மாநில அரசால் அறிவிக்கப்படும் வருவாய்த் துறையின் சமூக பாதுகாப்பு திட்டங்கள், முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டங்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயன்படும் சான்றிதழ்கள் வழங்கும் திட்டங்கள் போன்றவை வருவாய் நிர்வாக ஆணையரகம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் பயன்கள் மக்களை மக்கள் எளிதில் தெரிந்துகொள்ள வருவாய் நிர்வாக ஆணையரகத்தால் பிரத்யேக இணையதளம் (www.cra.tn.gov.in) தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் வருவாய்த்துறை தொடர்பான அரசு திட்டங்களி -ன் விவரங்கள், அரசாணைகள், பொதுமக்களின் பயன்பாட்டுக்கென பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களது இருப் -பிடத்திலிருந்தபடியே அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் பயன்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். தமிழக அரசின் குடிமைப் பணியின்கீழ் பணிபுரியும் அலுவலர்களின் நிர்வாகதேவைகளை பூர்த்தி செய்ய துணை ஆட்சியர்களுக்கான பிரத்யேக (www.cra.tn.gov.in/tnscs) இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு விதிகள், சட்டங்கள், அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் உத்தரவுகள், வழிகாட்டு நெறிமுறைகள், சுற்றறிக்கைகள், பணிமாறுதல், பணி நியமனங்கள் குறித்த விவரங்கள் அறிந்துகொள்ளலாம்.

வருவாய்த் துறையின் திட்டங்களை கிராமங்கள்வரை கொண்டுசேர்க்க கூடிய பணியை செய்பவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள். அவர்களின் பணியிட மாறுதல்கள் தொடர்பான கோரிக்கைகளைப் பரிசீலித்து செயல்படுத்தும் வகையில் தனி இணையதளம் (www.cra.tn.gov.in/vaotransfer) உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாறுதல்களை தாமதம் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்த முடியும். இந்த மூன்று புதிய இணையதளங்களையும் முதல்வர் முக ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

1. Guru Ghasidas National Park and Tamor Pingla Wildlife Sanctuary, which were seen in the news recently, are located in which state?

A) West Bengal

B) Odisha

C) Chhattisgarh 

D) Bihar

  • The Chhattisgarh government is set to declare the combined areas of the Guru Ghasidas National Park and Tamor Pingla Wildlife Sanctuary as a Tiger Reserve. The National Tiger Conservation Authority approved the state government’s proposal. The new Reserve is located in the northern part of the state, bordering Madhya Pradesh and Jharkhand.

2. Deep Space Atomic Clock, which was seen in the news recently, is associated with which space agency?

A) ISRO

B) NASA 

C) Virgin Galactic

D) SpaceX

  • NASA’s Deep Space Atomic Clock, has successfully ended its mission. The clock was built by NASA’s Jet Propulsion Laboratory in southern California. The Deep Space Atomic Clock is an ultra–precise, mercury–ion atomic clock. It was launched aboard the Department of Defense Space Test Programme 2 mission on June 25, 2019.
  • After the instrument completed its one–year primary mission in Earth orbit, NASA extended the mission to collect more data.

3. What is the name of the application launched by the Union Shipping Ministry to promote transparency in port–related information?

A) AtmaNirbhar Port

B) MyPort 

C) Bharat Port

D) Port in Hand

  • Union Minister for Ports, Shipping and Waterways Sarbananda Sonowal recently launched a port mobile application called ‘MyPortApp’ in Kolkata. The Application is aimed at promoting transparency and easy access to port–related information. The app includes all details digitally and monitors the operations of ports virtually.

4. Mette Frederiksen, who visited India recently, is the Prime Minister of which country?

A) Finland

B) Denmark 

C) France

D) Australia

  • Prime Minister Narendra Modi and his Danish counterpart Mette Frederiksen held bilateral talks at Hyderabad House. Frederiksen, who arrived on a three–day visit, will hold talks with President Ram Nath Kovind and Prime Minister Narendra Modi.
  • Earlier, Frederiksen met External Affairs Minister S Jaishankar. Over 200 Danish companies are present in India and around 60 Indian companies are present in Denmark.

5. Atal Pragati Path, is an expressway project, proposed to be set up in which Indian state/ UT?

A) Gujarat

B) Madhya Pradesh 

C) Uttarakhand

D) Uttar Pradesh

  • The Madhya Pradesh Cabinet has approved the proposal to provide government land in exchange for the private land being acquired for Atal Pragati Path. It is a 313–km four–lane expressway project implemented under the Bharatmala project.
  • The proposed Atal Pragati Path will pass through Sheopur, Morena and Bhind districts of Madhya Pradesh. The state government is providing land free for the project.

6. Jim Corbett National Park, which was seen in the news recently, is located in which state?

A) Uttarakhand 

B) Bihar

C) West Bengal

D) Andhra Pradesh

  • Jim Corbett National Park is a world–renowned tiger reserve in Uttarakhand. It was seen in the news recently, Union Minister of State for Forest and Environment Ashwini Kumar Choubey announced that it may be renamed as Ramganga National Park in the future. It is India’s first national park which is spread over an area of about 521 km. It’s known for its Bengal tigers, leopards and wild elephants.

7. Which Indian topped the Forbes Rich List for the 14th year in a row?

A) Gautam Adani

B) Mukesh Ambani 

C) Rajinikanth

D) Udhayanidhi Stalin

  • Mukesh Ambani, Chairman of Reliance Industries, topped the rich list for the 14th year in a row, as per Forbes Rich List, with a total wealth of $92 billion. He has added $4 billion to his net worth in the year 2021.
  • Gautam Adani, with a wealth of $74.8 billion, is the second richest in India. Shiv Nadar of HCL was number three in the list with a wealth of $31 billion. Radhakrishnan Damani, founder of Avenues Super–mart, and Cyrus Poonawalla, Chairman of Serum Institute, were placed fourth and fifth.

8. Which institution released a report titled ‘Shifting Gears: Digitization and Services–Led Development’?

A) IMF

B) World Bank 

C) NITI Aayog

D) UNEP

  • World Bank recently released the report titled ‘Shifting Gears: Digitization and Services–Led Development’. As per the report, India’s real Gross Domestic Product (GDP) in the current fiscal year is estimated to grow by 8.3%.
  • This is a South Asia economic focus report released ahead of its annual meetings which start next week in Washington.

9. What is the theme for RBI’s 4th regulatory sandbox cohort?

A) MSME Lending

B) Retail Lending

C) International Banking

D) Financial Frauds 

  • The RBI Governor – Shaktikanta Das has announced that the fourth regulatory sandbox cohort of the Reserve Bank would be on “Financial Frauds”. It has been stated that the main focus would be on “reduce the lag between the occurrence and detection of frauds” and to “strengthen the governance structure”.

10. Which India conglomerate has won the bid to acquire Air India?

A) Tata Sons 

B) Reliance Industries Limited

C) Adani Group

D) Mahindra Group

  • The Tata Sons has emerged as the winner in the bid to acquire Air India and will take over 100% Government of India’s stake in the carrier. Tata sons placed a bid of Rs 18,000 crore, of which Rs 2,700 crore would be paid in cash and the remaining would be absorbed Rs 65,562 crore debt of the airline. The Government of India in 1953 took control of Air India from the Tata Group.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!