Tnpsc

13th August 2020 Current Affairs in Tamil & English

13th August 2020 Current Affairs in Tamil & English

13th August 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

13th August 2020 Current Affairs Pdf Tamil

13th August 2020 Current Affairs Pdf English

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. A new Railway Museum has been inaugurated at which city of Karnataka?

[A] Bengaluru

[B] Hubbali

[C] Davanagere

[D] Shivamogga

  • Minister of Railways Piyush Goyal and Minister of Coal & Mines Pralhad Joshi inaugurated a new Railway Museum at Hubbali, through video conferencing. Hubli or Hubbali is a city in North Karnataka and the museum is located near the Hubballi Railway Station on Gadag Road. It aims to preserve the heritage of branches of Railways and exhibit the evolution of advanced system in the Railways ecosystem.

2. Who won the ‘Asian College of Journalism’s Award for Investigative Journalism’?

[A] Nitin Sethi

[B] Siddharth Varadarajan

[C] Malini Parthasarathy

[D] Raghav Bahl

  • Indian Journalist Nitin Sethi has won the prestigious investigative journalism award, given by the Asian College of Journalism. He has been awarded for his coverage and investigative articles on Electoral Bonds, published on Huffington Post India. K. P. Narayana Kumar Memorial Award for Social Impact Journalism was awarded to the Hindu’s Shiv Sahay Singh.

3. Which is the first Indian city to have female symbols on traffic signals?

[A] New Delhi

[B] Mumbai

[C] Bengaluru

[D] Chennai

  • Mumbai has become the first Indian city to display women symbols on traffic signals. The project is headed by the Ministry of Tourism of the state. The Brihanmumbai Municipal Corporation (BMC) has installed traffic signals that display female icons with triangular frock. This is considered as a change from the default representation of male symbols that ensures gender equality.

4. The ‘Eat Right India’ movement that has won the ‘Food System Vision Prize’, is being implemented by which organisation?

[A] Food Safety and Standards Authority of India (FSSAI)

[B] Food Corporation of India (FCI)

[C] Bureau of Indian Standards (BIS)

[D] Central Drugs Standard Control Organisation (CDSCO)

  • India’s food safety regulator, the Food Safety and Standards Authority of India (FSSAI) on Sunday has been awarded the ‘Food System Vision Prize’ for its ‘Eat Right India’ movement’s vision. The award is presented by the Rockefeller Foundation, SecondMuse and OpenIDEO, for recognising the efforts of organisations across the globe for developing a nourishing and sustainable food system. Hyderabad–based NGO Naandi Foundation also won the Food Vision Prize.

5. What is the theme of the International Day of the World’s Indigenous Peoples (World Tribal Day)?

[A] COVID–19 and Indigenous Peoples’ Resilience

[B] Tribal is Treasure

[C] Indigenous Population at their best

[D] Development of Tribal Welfare

  • The International Day of the World’s Indigenous People or the World Tribal Day is celebrated on August 9 every year. It marks the date of the inaugural session of the Working Group on the Indigenous Populations at the United Nations in 1982. It aims to preserve and sensitise about the traditional knowledge and practices of the indigenous population. This year the theme of the day is ‘COVID–19 and indigenous peoples’ resilience’.

6. Which trade association organised the ‘National Public Procurement Conclave’, along with the GeM?

[A] ASSOCHAM

[B] NASSCOM

[C] CII

[D] FICCI

  • India’s leading trade association, the Confederation of Indian Industries (CII) has partnered with GeM to organise the ‘National Public Procurement Conclave’. The fourth edition of the conclave has been inaugurated by the Union Commerce& Industry Minister Piyush Goyal.
  • He also asked more buyers and sellers to join the Government–e–Marketplace (GeM). He also warned sellers from selling poor quality goods or charging hefty prices.

7. Which Indian organisation is celebrating ‘Cleanliness Week’ from August 10, to mark the Independence Day?

[A] Indian Railways

[B] Airport Authority of India

[C] Indian Space Research Organization

[D] National Highways Authority

  • Indian Railways is observing ‘Cleanliness Week’ from August 10, to commemorate the Independence Day. During the week, a special Cleanliness campaign will be launched and Cleaning of tracks, offices and other areas near Railway premises will be focussed. Collection of wastes with separate pool of plastic waste will also be done. Awareness drives will also be organised to keep the places clean.

8. Matheran hill station, where around 77 new species of butterflies have been found, is located in which Indian state?

[A] Tamil NaduTop of Form

JammJam

[B] Maharashtra

[C] Kerala

[D] Andhra Pradesh

  • According to the Bombay Natural History Society, as many as 77 new species of butterflies have been found in the ecologically sensitive forest of Matheran hill station. It is located about 80 km from Mumbai and is spread over an area of 214.73 sq km. With this, the total number of butterfly species in the Matheran forest has increased to 140. BNHS conducted the study over last eight years from 2011 to 2019.

9. The Indian Railways is to transport denim and dyes to which neighbouring country?

[A] Bangladesh

[B] Myanmar

[C] Thailand

[D] Nepal

  • The Western Railway Zone of the Indian Railways is set to run a parcel train from Ahmedabad division in Gujarat to Bangladesh. The train will depart the Kankariya Goods shed of Ahmedabad division after having loaded with denim and dyes. Earlier, the Western Railway zone had sent a goods train with onions to Bangladesh. This is expected to generate an approximate revenue of about Rs. 31 lakhs.

10. As per a recent study, Pathogens named as critical by the WHO is found in which river?

[A] River Ganges

[B] River Yamuna

[C] River Krishna

[D] River Cauvery

  • As per the research paper published by the Indian Institute of Technology, Delhi, pathogens named as critical by the World Health Organisation have been found in the river of Yamuna. The pathogens were named by the WHO in the year 2017. The multidrug–resistant bacteria that are found in Yamuna, were found due to the entry of Sewage into the river. Several major sewer drains and the Yamuna river across New Delhi were studied by the team.

நடப்பு நிகழ்வுகள்

1.கர்நாடக மாநிலத்தின் எந்த நகரத்தில், புதியதொரு இரயில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது?

அ. பெங்களூரு

ஆ. ஹூப்ளி

இ. தாவணகரே

ஈ. சிவமோகா

  • ஹூப்ளியில் அமைக்கப்பட்டுள்ள இரயில்வே அருங்காட்சியகத்தை மத்திய இரயில்வே, தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி & சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி ஆகியோர் காணொளிக்காட்சி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தனர். வட கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள முதல் ரயில் அருங்காட்சியகம் இதுதான். தென்மேற்கு ரயில்வே வட்டாரத்தில், மைசூருக்கு அடுத்தபடியாக ரயில் அருங்காட்சியகம் ஹூப்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஹுப்ளி என்பது வட கர்நாடகாவில் உள்ள ஒரு நகரமாகும். இந்த அருங்காட்சியகம் கடக் சாலையில் அமைந்துள்ள ஹுப்ளி இரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இரயில்வேயின் கிளைகளின் பாரம்பரியத்தை பாதுகாப்பதும், அதன் பரிணாமத்தை வெளிப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

2.ஆசிய இதழியல் கல்லூரியின் புலனாய்வு இதழியலுக்கான விருதை வென்றவர் யார்?

அ. நிதின் சேத்தி

ஆ. சித்தார்த் வரதராஜன்

இ. மாலினி பார்த்தசாரதி

ஈ. இராகவ் பாகல்

  • இந்திய இதழாளர் நிதின் சேத்தி அவர்கள், ஆசிய இதழியல் கல்லூரியால் வழங்கப்பெறும் மதிப்புமிக்க புலனாய்வு இதழியலுக்கான விருதை வென்றுள்ளார். ஹப்பிங்டன் போஸ்ட் இந்தியாவில் வெளியான தேர்தல் பத்திரங்கள் குறித்த அவரது இதழ் பணி மற்றும் விசாரணைக் கட்டுரைகளுக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. சமூகத்தில் இதழியல் ஏற்படுத்தும் தாக்கத்துக்கான, “K.P. நாராயண குமார் நினைவு விருது” தி ஹிந்துவின் சிவ் சகாய் சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது.

3.போக்குவரத்து சைகை விளக்குகளில் பெண்ணுருவங்களை அமைக்கவுள்ள முதல் இந்திய நகரம் எது?

அ. புது தில்லி

ஆ. மும்பை

இ. பெங்களூரு

ஈ. சென்னை

  • போக்குவரத்து சைகை விளக்குகளில் பெண்ணுருவங்களை காண்பிக்கும் முதல் இந்திய நகரமாக மும்பை திகழ்கிறது.
  • இத்திட்டத்திற்கு, மகாராஷ்டிர மாநில சுற்றுலா அமைச்சகம் தலைமை தாங்குகிறது. பிரிகன்மும்பை மாநகராட்சியானது முக்கோண வடிவில் நீண்ட மேற்சட்டை அணிந்த பெண்ணுருவங்களை காண்பி -க்கும் போக்குவரத்து சைகை விளக்குகளை நிறுவியுள்ளது. இது பாலின சமத்துவத்தை உறுதிசெய்வ -தோடு வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஆணுருவங்களுக்கு மாற்றாக கருதப்படுகிறது.

4. ‘Food System Vision’ பரிசை வென்ற ‘சரியானதை உண்ணு இந்தியா’ இயக்கத்தை செயல்படுத்துகிற அமைப்பு எது?

அ. இந்திய உணவுப்பாதுகாப்பு & தரநிர்ணய ஆணையம் (FSSAI)

ஆ. இந்திய உணவுக் கழகம் (FCI)

இ. இந்திய தரநிலைகள் ஆணையம் (BIS)

ஈ. மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO)

  • இந்தியாவின் உணவுப்பாதுகாப்பு ஒழுங்காற்றுநரான, இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI) அதன் ‘Eat Right India’ இயக்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்காக ‘Food System Vision’ பரிசைப் பெற்றுள்ளது.
  • ஊட்டத்துடன் கூடிய நிலையான உணவுமுறையை வளர்த்தெடுக்கும் பன்னாட்டு அமைப்புகளின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக இராக்பெல்லர் அறக்கட்டளை, SecondMuse & OpenIDEO ஆகியவை இவ்விருதை வழங்குகின்றன. ஹைதராபாத்தைச்சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான நாண்டி அறக்கட்டளையும், இந்த, ‘Food System Vision’ பரிசை வென்றுள்ளது.

5 பன்னாட்டு பழங்குடிகள் நாளின் (உலக பழங்குடியினர் நாள்) கருப்பொருள் என்ன?

அ. COVID–19 and Indigenous Peoples’ Resilience

ஆ. Tribal is Treasure

இ. Indigenous Population at their Best

ஈ. Development of Tribal Welfare

  • பன்னாட்டு பழங்குடிகள் நாள் அல்லது உலக பழங்குடியினர் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஆக.9 அன்று கொண்டாடப்படுகிறது. ஐநா பொதுச்சபை, கடந்த 1994ஆம் ஆண்டில் இந்நாளை அறிவித்தது. இது, கடந்த 1982ஆம் ஆண்டில், ஜெனீவாவில் நடந்த பழங்குடியினர் குறித்த ஐநா செயற்குழுவின் முதல் கூட்டம் நடந்த நாளைக் குறிக்கிறது. பழங்குடி மக்களின் உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் இந்நாள் முற்படுகிறது. “COVID–19 and Indigenous Peoples’ Resilience” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

6. GeM உடன் இணைந்து, ‘தேசிய அரசு கொள்முதல் மாநாட்டை’ ஏற்பாடு செய்த வர்த்தக சங்கம் எது?

அ. ASSOCHAM

ஆ. NASSCOM

இ. CII

ஈ. FICCI

  • அரசு மின்னணு சந்தை (GeM) ஏற்படுத்தப்பட்ட நாளையொட்டி, இந்திய தொழிற்துறை கூட்டமைப்புடன் இணைந்து, ‘GeM’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நான்காவது தேசிய அரசு கொள்முதல் மாநாட்டை, மத்திய வர்த்தகம் & தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கிவைத்தார்.
  • மேலும், வாங்குவோரும், விற்பனை செய்வோரும் ‘GeM’ அமைப்பில், இன்னும் அதிகளவில் இணைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில், தரமற்ற பொருள்களை விற்பனை செய்வது அல்லது மிக அதிகமான விலை நிர்ணயம் செய்யும் மோசடி வியாபாரிகள், இந்த அமைப்பின் பட்டியல் மட்டுமின்றி, ஒட்டுமொத்த அரசு நடவடிக்கைகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

7.விடுதலை நாளை முன்னிட்டு ஆக.10 முதல் ‘தூய்மை வாரத்தை’ கொண்டாடும் இந்திய அமைப்பு எது?

அ. இந்திய இரயில்வே

ஆ. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்

இ. இந்திய விண்வெளி ஆய்வு மையம்

ஈ. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்

  • விடுதலை நாளை நினைவுகூரும் வகையில், இந்திய இரயில்வே, ஆக.10 முதல் ‘தூய்மை வாரத்தை’ அனுசரிக்கிறது. இதன்சமயம், ஒரு சிறப்பு தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டு, இரயில்வே வளாகத்திற்கு அருகிலுள்ள தண்டவாளங்கள், அலுவலகங்கள் மற்றும் பிறபகுதிகளை சிறப்புற தூய்மைப்படுத்தப்படும். நெகிழிக் கழிவுகளை தனித்தனியாக சேகரிப்பதுடன்கூடிய கழிவுகள் சேகரிப்பு நிகழ்வும் அப்போது செய்யப்படும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழிப்புணர்வு இயக்கங்களும் அப்போது ஏற்பாடு செய்யப்படும்.

8.சுமார் 77 புதிய வகை பட்டாம்பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்ட, மாதரன் மலையகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மகாராஷ்டிரா

இ. கேரளா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் கூற்றுப்படி, மாதரன் மலையகத்தின் சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் மிக்க காட்டில், 77 புதிய வகையான வண்ணத்துப்பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 214.73 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ள இது, மும்பையிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன்மூலம், மாதரன் காட்டில் கண்டறியப்பட்ட மொத்த பட்டாம்பூச்சி இனங்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. 2011 முதல் 2019 வரையிலான கடந்த எட்டு ஆண்டுகளாக பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

9.முரட்டுப்பருத்தித்துணி மற்றும் சாயங்களை, எந்த அண்டை நாட்டிற்கு, இந்திய இரயில்வே கொண்டு செல்லவுள்ளது?

அ. வங்கதேசம்

ஆ. மியான்மர்

இ. தாய்லாந்து

ஈ. நேபாளம்

  • இந்திய இரயில்வேயின் மேற்கு இரயில்வே மண்டலமானது குஜராத்தின் அகமதாபாத் பிரிவிலிருந்து வங்கதேசத்துக்கு சரக்கு ரயிலொன்றை இயக்கவுள்ளது. இந்த இரயில் முரட்டுப்பருத்தித்துணி (denim) மற்றும் சாயங்களை ஏற்றிக்கொண்டு, அகமதாபாத் பிரிவின் கங்கரியா கிடங்கிலிருந்து புறப்படவுள்ளது. முன்னதாக, மேற்கு இரயில்வே மண்டலம், வெங்காயத்துடன் ஒரு சரக்கு இரயிலை வங்கதேசத்துக்கு அனுப்பியிருந்தது. இது, தோராயமாக `31 இலட்சத்தை வருவாயாக ஈட்டித்தரும்.

10.ஓர் அண்மைய ஆய்வின்படி, உலக சுகாதார அமைப்பால் (WHO) சிக்கலானவை என அறிவிக்கப்பட்ட நோய்க்கிருமிகள் காணப்படுகிற ஆறு எது?

அ. கங்கையாறு

ஆ. யமுனையாறு

இ. கிருஷ்ணா ஆறு

ஈ. காவிரியாறு

  • தில்லி IIT வெளியிட்டுள்ள ஓர் ஆய்வுக்கட்டுரையின்படி, உலக சுகாதார அமைப்பால் சிக்கலானவை என அறிவிக்கப்பட்ட நோய்க்கிருமிகள் யமுனாயாற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டில், WHO, இந்த நோய்க்கிருமிகளை அறிவித்தது. யமுனாவில் காணப்படும் இந்தப் பன்மருந்து-எதிர்ப்பு பாக்டீரியாக்கள், கழிவுநீர் ஆற்றில் கலப்பாதால் உருவாகின்றன. புது தில்லி முழுவதும் உள்ள பல பெரிய கழிவுநீர் வடிகால்கள், இந்தக் குழுவினரால் ஆய்வுசெய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!